Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் சிந்தனையில் தெளிவு ஏற்பட உங்களிடம் ஒரு கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, கிருபன் said:

புலம்பெயர் நாட்டில் பிறந்த பிள்ளைகளின் தாய்மொழி தமிழ் இல்லை. தாய்மொழி என்பது தாய் பேசும் மொழி இல்லை. அவர்களுக்கு இயல்பாக வரும் மொழி. உதாரணமாக உங்கள் கனவில் வரும் உரையாடல்களில் வரும் மொழி!

அந்த பிள்ளைகள் தாம் தமிழினத்தவர் என சொல்வதற்கு அருகதையற்றவர்கள்.

சும்மா தமிழ்மொழியை தொங்கிக்கொண்டிருப்பது ஒருவகை பிற்போக்குத்தனம் என ஒரு வசனம் தற்போது ஊடகங்களில் உலாவுகின்றது.

இதையே ஒரு பிரான்ஸ்காரனிடமோ ஆங்கிலேயனிடமோ ஜேர்மன்காரனிடமோ உன் மொழியை  தூக்கிப்பிடிப்பது பிற்போக்குத்தனம் என சொல்ல முடியுமா?

  • Replies 75
  • Views 6.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

அந்த பிள்ளைகள் தாம் தமிழினத்தவர் என சொல்வதற்கு அருகதையற்றவர்கள்.

அப்படிச் சொல்வதில்லையே. பிரித்தானியாவில் உள்ள நமது பிள்ளைகளிடம், என் பிள்ளைகளையும் சேர்த்துத்தான், தேசிய அடையாளத்தைக் கேட்டால் British என்றுதான் சொல்வார்கள்! ஆனால் ஆங்கிலேயரின் பிள்ளைகள் English என்பார்கள். இதில் ஐரோப்பாவில் இருப்பவர்களுக்கு சிக்கல் இருக்கலாம். எதற்கும் ஒரு அந்நியரைக்கொண்டு உங்களின் வளர்ந்த பிள்ளைகளிடம்  identity என்ன என்று கேட்டுப்பாருங்கள். தெரிந்துகொள்வீர்கள்! 

புலம்பெயர்ந்ததுடன் நாம் அடையாளத்தைத் தொலைத்துவிட்டோம் என்பதுதான் உண்மை. நான் என்னை இப்பொது British Tamil என்றுதான் அடையாளப்படுத்துவது. ஒருபோதும் Srilankan என்று சொல்வதில்லை. ஏதாவது கேள்விக்கொத்தில் Ethnic Identity ஐ கேட்டால் Tamil என்று கொடுப்பேன். ஆனால் என் பிள்ளைகள் எதிர்காலத்தில் Asian - Other என்று கொடுப்பார்கள் என நினைக்கின்றேன்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 23/6/2022 at 10:58, நன்னிச் சோழன் said:

இளையோர் தாமாக முன்வந்தால் உண்டு

நன்னி!!, தமிழ் தெரியாத இளைய தலைமுறை தமிழர்கள் தங்களது பிள்ளைகளை தமிழ் கற்க தனியாரிடமோ அல்லது தமிழ் பாடசாலைகளுக்கோ அனுப்புகிறார்கள் ஆனால் அவர்களுக்கு உதவிகள் இல்லாதமையால் இடைநடுவில் நிற்கிறார்கள். இப்படி ஒரு பகுதியினரும் இப்பொழுது இருக்கிறார்கள். 

எம்மைப்போன்றவர்களுக்கு தமிழ் முதல் மொழி, ஆகையால் தமிழை வளர்க்கவேண்டும் என அதற்காக உழைக்கிறோம். ஆனால் இங்கே பிறந்த தமிழ் பிள்ளைகளுக்கு தமிழ் இரண்டாவது மொழி என்பதை ஏற்றுக் கொள்ளவேண்டும். வீட்டில் தமிழ் கதைத்தால் மட்டும் தமிழ் எப்படி வளரும்? அவர்களால் ஒரு தமிழ் பத்திரிக்கையை வாசிக்க, ஒரு கட்டுரை எழுத முடியுமா? தனியே பேச்சுத் தமிழுடன் நின்றுவிடும், அது மட்டும் தமிழை வளர்க்க உதவுமா? 

முன்பே நான் கூறியது போல தமிழ் தெரியாத 2ம் தலைமுறையினரும் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழை, கலாச்சாரத்தை கற்றுக் கொடுக்க விரும்புகிறார்கள். அதே போல தங்களது பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாவிட்டாலும் தமிழை வளர்க்க வேறு விதங்களில் உதவுகிறார்கள். இந்த இரண்டு வகையினரையும் விளங்கி நடந்தால் நன்மை உண்டு

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப் பிழை

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

ஏதாவது கேள்விக்கொத்தில் Ethnic Identity ஐ கேட்டால் Tamil என்று கொடுப்பேன்.

other asian என்று கொடுங்கள்.

ethnicity,  Ethnic Identity   க்கு Eezham Tamil என்று அடையாளப்படுத்துங்கள்.

பிள்ளைகளுக்கும் சொல்லி கொடுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்+
9 hours ago, விளங்க நினைப்பவன் said:

இணையவன் அண்ணாவும் சொல்லி போட்டார் தமிழ் எழுத வாசிக்கத் தெரிந்தவர்கள் யாருமே தமிழர்கள் இல்லை என்று. தமிழ் ஆர்வலர்கள் என்று சொல்லபடும் பிரபல்யம் பெற்றவர்கள் பலரின் பிள்ளைகளுக்கு தமிழ் பேச வராது. என்ன செய்வது ☹️

மூக்குக்குள்ளாலை வயர் விடுறதத்தான் செய்ய வேணும். செஞ்சால் அடியொட்ட வெறுத்துப்போடுங்கள். 

8 hours ago, குமாரசாமி said:

யாழ்கள வீழ்ச்சிக்கும் தமிழ் மொழி பற்றாக்குறையும் ஒரு காரணம் என நான் நினைக்கின்றேன்.

நீங்கள் வெளிநாட்டைச் சொல்லுறியள். அப்ப ஊரில இருக்கிற ஆக்கள் சேரலாமெல்லோ? அவையேன் சேருவதில்லை? 

(அண்ணாக்களின்ட தளம் என்ட தோற்றப்பாடோ? )

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்+
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

//நன்னி!!, தமிழ் தெரியாத இளைய தலைமுறை தமிழர்கள் தங்களது பிள்ளைகளை தமிழ் கற்க தனியாரிடமோ அல்லது தமிழ் பாடசாலைகளுக்கோ அனுப்புகிறார்கள் ஆனால் அவர்களுக்கு உதவிகள் இல்லாதமையால் இடைநடுவில் நிற்கிறார்கள். இப்படி ஒரு பகுதியினரும் இப்பொழுது இருக்கிறார்கள். 

முன்பே நான் கூறியது போல தமிழ் தெரியாத 2ம் தலைமுறையினரும் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழை, கலாச்சாரத்தை கற்றுக் கொடுக்க விரும்புகிறார்கள். அதே போல தங்களது பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாவிட்டாலும் தமிழை வளர்க்க வேறு விதங்களில் உதவுகிறார்கள். இந்த இரண்டு வகையினரையும் விளங்கி நடந்தால் நன்மை உண்டு.//

இவையளை வடிவா நெறிப்படுத்தினால் நல்ல அறுவடை உண்டு, எதிர்காலத்தில். ஆனால் அதை எப்படி செய்ய இயலும்.

//எம்மைப்போன்றவர்களுக்கு தமிழ் முதல் மொழி, ஆகையால் தமிழை வளர்க்கவேண்டும் என அதற்காக உழைக்கிறோம். ஆனால் இங்கே பிறந்த தமிழ் பிள்ளைகளுக்கு தமிழ் இரண்டாவது மொழி என்பதை ஏற்றுக் கொள்ளவேண்டும். வீட்டில் தமிழ் கதைத்தால் மட்டும் தமிழ் எப்படி வளரும்?//

தமிழ் வளரும் என்டில்லை. ஆனால், அதுகள் கொஞ்சமேனும் கதைக்க தெரிவார்களெல்லோ. சைவரவிட ஒன்டு நல்லம்தானே? இல்லையோ? அப்படியே தொடர்ந்தால், ஆர்வம் பிடிபட, அது மேற்கொண்டு தன்னால வளரும்.

//அவர்களால் ஒரு தமிழ் பத்திரிக்கையை வாசிக்க, ஒரு கட்டுரை எழுத முடியுமா? தனியே பேச்சுத் தமிழுடன் நின்றுவிடும், அது மட்டும் தமிழை வளர்க்க உதவுமா? //

இல்லை.

ஆனால், முதல்ல விதையை நடுவம். பேந்து அதை எதில படர விடுறதென்டு யோசிப்பம். விதையை நடவே வழியில்லையாம், இதில கட்டுரைக்கு எங்க ஐயை போவது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 25/6/2022 at 18:53, கிருபன் said:

புலம்பெயர் நாடுகளில் தமிழ்மொழியை வைத்து ஒரு ஆணியும் பிடுங்கமுடியாது என்பதால் தமிழ்மொழி கட்டாயம் பிள்ளைகளுக்குத் தேவை இல்லை.

லண்டனில் எப்படி என தெரியாது ஆனால் இங்கே அனேகமான பெற்றோர்கள்/தமிழ் பாடசாலைகள் கூறும் காரணங்கள்..

- ATARற்கு உதவும்: இங்கே தமிழ் மொழியையும் HSCற்கு ஒரு பாடமாக எடுக்கலாம், ஒப்பீட்டளவில் அதி கூடிய புள்ளிகளையும்(band 6 or band 5) எடுக்கலாம் எனக்கூறுகிறார்கள். அதனால் எப்படியாவது தமிழை கற்றுக்கொடுக்க விரும்புகிறார்கள். HSCற்கு பின்பு தமிழிற்கு என்ன செய்கிறார்கள் என்பது பற்றி நான் கூறவிரும்பவில்லை. 

- ஆங்கிலத்தை விட இன்னொரு மொழி தெரிந்திருந்தால் அது சில வேலைகளுக்கு உதவுகிறது. தமிழும் அப்படித்தான். 

On 25/6/2022 at 18:42, கிருபன் said:
On 19/6/2022 at 22:56, ஈழப்பிரியன் said:

ஆம். பள்ளிக்கூடம் போய் தமிழ் படிக்கமுடியும் என்பது நாங்கள் ஊரில் ஆங்கிலம் படித்த மாதிரித்தான்! ஒரு அறுப்பும் விளங்காது!

இப்பொழுது இங்கே தமிழை பாடசாலைகளில் கற்பிக்கும் முகமாக பரீட்ச்சாத்த நடவடிக்கைகள் நடந்து வருகிறது. உயர் வகுப்பு பாடசாலைகளிலும் படிப்பிக்க சாத்தியங்கள் அதிகம் என்பதால் எதிர்காலத்தில் தமிழ்ப் பாடசாலைகள் எவ்வாறு இருக்குமென கூற முடியாது. 

18 hours ago, நன்னிச் சோழன் said:

இவையளை வடிவா நெறிப்படுத்தினால் நல்ல அறுவடை உண்டு, எதிர்காலத்தில். ஆனால் அதை எப்படி செய்ய இயலும்.

அதனால்தான் எனது கேள்வியையும் கேட்டேன்..  தமிழ் ஆர்வலர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை வைத்து எடைபோடுவது சரியா என்று. அவ்வளவுதான். அப்படி எடைபோடுவதால் யாருக்கு இழப்பு அதிகம் என விளங்கினால் போதும்..

நன்றி நன்னி!

  • கருத்துக்கள உறவுகள்
On 19/6/2022 at 16:18, goshan_che said:

இது நியாயமான நிலைப்பாடுதான்.

ஆனால் தனது பிள்ளை படிக்கவில்லை என்பதால் ஆசிரியர்கள் ஏனைய பிள்ளைகளுக்கும் படிபிக்க கூடாது என நாம் சொல்வதில்லையே?

இப்படி சொல்வதால் தனிழ் ஆர்வம் உள்ள அந்த பெற்றாரின் ஆர்வத்தையும், அவரிடம் படிக்கும் வாய்ப்புள்ள பிள்ளையின் வாய்ப்பையும் அல்லவா ஒருசேர மழுங்கடிக்கிறோம்?

இதன் முடிவு இரெண்டு தலைமுறையில் தமிழ் கற்கும் ஆர்வம் உள்ள இருவர் அடிபட்டு போவார்கள் - அது மட்டும்தானே?

இதைதான் பிரபா மேலே கேட்கிறார், இதனால் இழப்பு யாருக்கு? என்று.

தன்னார்வமான பிள்ளைகளுக்கு கண்டிப்பாக கற்பிப்பது கடமை.
ஆனால் எனது பிள்ளைகளுக்கு பாடசாலை பரீடசை, இதர வகுப்புகள் எல்லாம் இருக்கிறது என்று விதிவிலக்கு ஆனால் ஊரார் பிள்ளைகள் தமிழுக்கு முக்கியம் கொடுக்க வேண்டும், மற்றைய செயற்பாடுகளை போன்று தமிழுக்கும் நேரம் ஒதுக்கவேண்டும் என்று நிர்பந்திப்பது அல்லது  பெற்றோரை கடிவது எப்படி சரியாகும்.

தமிழ் மேல் ஆர்வம், தமிழ் தொடர்பான செயற்பாடுகள், தமிழ் கற்பித்தல் மட்டுமே அல்ல.  இதர தமிழார்வ செயற்பாடுகளில் ஈடுபடும் ஒரு பெற்றோரின் பிள்ளைகளுக்கு அந்த ஆர்வம் இல்லை என்றால் அதில் தவறேதும் இல்லை என்பது எனது கருத்து.

கற்பிப்பது மட்டும் தான் சற்று இடிக்கும் விடையம்.  அதுவும் இங்கு வியாபாரமாக ஒரு பரீடசைக்கு 50-100  டாலர் வாங்கி சான்றிதழ் கொடுப்பதில் எப்படி தமிழ் வளர்கிறது என்பது எனக்கு புரியவில்லை.  பிள்ளைகளுக்கு அர்த்தமே தெரியாத சொற்பிரயோகங்களை மனபபடமாக்கி ஒப்புவிப்பதற்கு 100$ எதற்கென்றே விருப்பமில்லாமல் எமக்காக கடமைக்கு போய் வந்த பிள்ளைகளை மேற்கொண்டு போக கட்டாயப்படுத்தாமல் விட்டுவிட்டோம்.

பல இடங்களில் (நிறுவங்கள்) தமிழ் கற்பிப்பது ஒரு பெரிய வியாபாரம். 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎25‎-‎06‎-‎2022 at 09:53, கிருபன் said:

எல்லாம் தேவையைப் பொறுத்து. கல்வி எதிர்காலம் வளமாக இருக்கத்தேவை. புலம்பெயர் நாடுகளில் தமிழ்மொழியை வைத்து ஒரு ஆணியும் பிடுங்கமுடியாது என்பதால் தமிழ்மொழி கட்டாயம் பிள்ளைகளுக்குத் தேவை இல்லை. பெற்றோர் தமிழைப் பேச, படிக்க வைக்க சிறுவயதில் முனையலாம். ஆனால் நிர்ப்பந்திக்கமுடியாது.

ஆர்வம் இருப்பவர்கள் கவின்கலைகளில் ஈடுபடுவதுபோல, அவர்களுக்கு விருப்பம் இருந்தால் கற்றுக்கொள்வார்கள். தமிழில் பேச பல பிள்ளைகளால் முடிந்தாலும், தமிழ்ப் படங்களைப் பார்த்து புரிந்துகொண்டாலும், தமிழில் ஒரு கட்டுரை, கதை எழுதுவது விரல்விட்டு எண்ணக்கூடியவர்களால்தான் முடியும்.

நீங்கள் என்ன எழுதுகிறீர்கள் என்று உங்களுக்கே விளங்கவில்லை அல்லது எனக்கு புரியவில்லை:unsure: ...மொழியை படிப்பது கதை ,கட்டுரை எழுதுவதற்கு அல்ல என்று நான் நினைக்கிறேன்.
பிரபா சொல்லி இருக்கிறார் பிள்ளைகள் தமிழ் கதைக்கா விட்டால் பெற்றோரை குறை சொல்ல கூடாது என்று ஆனால்  உங்கள் பிள்ளைகள் தமிழ் படிப்பக்கவில்லை என்று உங்களை குறை சொன்னதாக நீங்களே மேலே எழுதி இருக்கிறீர்கள்.
புலம் பெயர்ந்த 3ம் ,4ம் தலைமுறை வட இந்தியர்களால்  எப்படி இன்னும் அவர்களது மொழி பேச முடிகிறது?
பிள்ளைகளுக்கு ஒன்றை சொல்லிகொடுப்பது /பழக்கப்படுத்துவது  என்பது அவர்கள் குழந்தைக்காய் இருக்கும் போதே செய்ய வேண்டியது ..நீங்கள் மேலே எழுதியது போல தமிழை  சொல்லிக் கொடுத்து என்னவாக போகிறது என்று விட்டு இருந்தால், இப்படியானவர்கலால்  எந்த அடிப்படியில் மற்றவர்களுக்கு தமிழ் தாய் மொழி என்று பாடம் எடுக்க முடியுது?
யாருக்குமே எதையுமே  திணிக்க கூடாது என்று தான் எனது கொள்கையும் ஆனால் சிறு வயதில் இருந்து ஊட்டி வளர்த்திருக்கலாம் ...அது திணிப்பு இல்லை . அதை விட்டு விட்டு தங்கட பிள்ளைகள் தமிழை படித்து என்னத்தை கிழிக்க போகுறார்கள் என்று விட்டு விட்டு ஊரான் பிள்ளைகளிடம் தமிழை ஊட்டி வளர்க்க போகுறார்கள் ."ஊருக்குத் தான் உபதேசம் உனக்கில்லையடி கண்ணே".😂
பி;கு  மேலே உங்களுக்கு விழுந்த பச்சை உங்கள் கருத்திற்கு விழுந்ததல்ல ...ரதிக்கு எதிராய் எழுதியதால் விழுந்தது. அப்ப  நான் வரட்டா:LOL:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ரதி said:

புலம் பெயர்ந்த 3ம் ,4ம் தலைமுறை வட இந்தியர்களால்  எப்படி இன்னும் அவர்களது மொழி பேச முடிகிறது?
பிள்ளைகளுக்கு ஒன்றை சொல்லிகொடுப்பது /பழக்கப்படுத்துவது  என்பது அவர்கள் குழந்தைக்காய் இருக்கும் போதே செய்ய வேண்டியது ..நீங்கள் மேலே எழுதியது போல தமிழை  சொல்லிக் கொடுத்து என்னவாக போகிறது என்று விட்டு இருந்தால், இப்படியானவர்கலால்  எந்த அடிப்படியில் மற்றவர்களுக்கு தமிழ் தாய் மொழி என்று பாடம் எடுக்க முடியுது?

நேர்/நேர்மை கொண்ட பார்வை.👍🏾
உலகில் தமிழர்களை தவிர வேறு எந்த இனமும் தம் மொழியை விட்டுக்கொடுப்பதுமில்லை. தாழ்த்தி கதைப்பதுமில்லை. நிலைமை இப்படியிருக்கும் போது  புலம்பெயர் நாடுகளில் தமிழ் அறிவிப்பு பலகைகளை கண்டால் நாம் நமிழர் என்ற புளகாங்கிதத்திற்கு எல்லையில்லை.😁

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

நேர்/நேர்மை கொண்ட பார்வை.👍🏾
உலகில் தமிழர்களை தவிர வேறு எந்த இனமும் தம் மொழியை விட்டுக்கொடுப்பதுமில்லை. தாழ்த்தி கதைப்பதுமில்லை. நிலைமை இப்படியிருக்கும் போது  புலம்பெயர் நாடுகளில் தமிழ் அறிவிப்பு பலகைகளை கண்டால் நாம் நமிழர் என்ற புளகாங்கிதத்திற்கு எல்லையில்லை.😁

ஆனால்... 
வெங்காயத்தை.... ஆனியன் என்போம்,
உப்பை... சால்ட்டு,
அரிசியை... றைஸ் 
தேசிக்காயை... லெமன், என்றெல்லாம் தமிழை கொலை செய்வோம்.  

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

நீங்கள் என்ன எழுதுகிறீர்கள் என்று உங்களுக்கே விளங்கவில்லை அல்லது எனக்கு புரியவில்லை:unsure: ...மொழியை படிப்பது கதை ,கட்டுரை எழுதுவதற்கு அல்ல என்று நான் நினைக்கிறேன்.

தமிழ் தெரிந்தும் உங்களுக்கு நான் எழுதியது புரியவும் இல்லை, விளங்கவும் இல்லை! 

நான் என்னைக் குறை சொல்வதாக நினைக்கவும் இல்லை. எனது பிள்ளைகள் தமிழை தெரியாமல் இருக்க மற்றையவர்களின் பிள்ளைகள் படிக்கவேண்டும் என்று வகுப்பு எடுக்கவும் இல்லை!

பிள்ளைகளுக்கு தமிழை ஊட்டி வளர்க்க நேரமும், சூழ்நிலையும் இருக்கவில்லை. தமிழ் எப்போதும் இரண்டாம் மொழியாகவே அவர்களுக்கு இருக்கும் என்பதால் அவர்களுக்கு  விருப்பம் இல்லாததை திணிக்கவும் முயலவில்லை. பிள்ளைகள் தமிழ்ப் பள்ளிக்கூடம் போனார்கள், எழுதப் பழகினார்கள். யானை என்று எழுதுவார்கள் ஆனால் அது என்னவென்றால் தெரியாது. 

எந்த மொழியையும் படிக்கவேண்டும் என்றால் அதில் பிரதானமானமான  விடயங்கள் இருக்கின்றன.

பேசுதல்

கேட்டல் (கிரகிப்போடு)

வாசித்தல் (கிரகிப்போடு)

எழுதுதல்

இதில் வாசித்தல், எழுதுதலைத் தவிர்க்கவேண்டும் என்றால் பாடசாலைக்குப் போகாமல் வீட்டில் இருக்கும் தமிழ் தெரிந்தவர்களுடன் பேசினாலே போதும். ஆனால் மொழியைக் கற்பது பேசவும், கேட்கவும் மாத்திரம் இல்லை.

புலம்பெயர் நாடுகளின் தமிழில் சாதாரண தரம், உயர் தரம் என்பவற்றில் மொழிபெயர்ப்பு முக்கியமான ஒரு விடயம்.  @மெசொபொத்தேமியா சுமேரியர் இதைப் பற்றி தெளிவாகச் சொல்லக்கூடும். 

ஆகவே, ஏன் தமிழ் வேண்டும் என்று கேட்டால் தமிழை அன்றாடம் பாவிக்கவேண்டியவர்களுக்கு தமிழ் வேண்டும். பாட்டன், பூட்டியோடு பேச மட்டும்தான் தமிழ் தேவை என்று நினைக்கும் பழசுகள் மற்றைய மொழிகளை படிப்பது நல்லது!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

நீங்கள் என்ன எழுதுகிறீர்கள் என்று உங்களுக்கே விளங்கவில்லை அல்லது எனக்கு புரியவில்லை:unsure: ...மொழியை படிப்பது கதை ,கட்டுரை எழுதுவதற்கு அல்ல என்று நான் நினைக்கிறேன்.
பிரபா சொல்லி இருக்கிறார் பிள்ளைகள் தமிழ் கதைக்கா விட்டால் பெற்றோரை குறை சொல்ல கூடாது என்று ஆனால்  உங்கள் பிள்ளைகள் தமிழ் படிப்பக்கவில்லை என்று உங்களை குறை சொன்னதாக நீங்களே மேலே எழுதி இருக்கிறீர்கள்.
புலம் பெயர்ந்த 3ம் ,4ம் தலைமுறை வட இந்தியர்களால்  எப்படி இன்னும் அவர்களது மொழி பேச முடிகிறது?
பிள்ளைகளுக்கு ஒன்றை சொல்லிகொடுப்பது /பழக்கப்படுத்துவது  என்பது அவர்கள் குழந்தைக்காய் இருக்கும் போதே செய்ய வேண்டியது ..நீங்கள் மேலே எழுதியது போல தமிழை  சொல்லிக் கொடுத்து என்னவாக போகிறது என்று விட்டு இருந்தால், இப்படியானவர்கலால்  எந்த அடிப்படியில் மற்றவர்களுக்கு தமிழ் தாய் மொழி என்று பாடம் எடுக்க முடியுது?
யாருக்குமே எதையுமே  திணிக்க கூடாது என்று தான் எனது கொள்கையும் ஆனால் சிறு வயதில் இருந்து ஊட்டி வளர்த்திருக்கலாம் ...அது திணிப்பு இல்லை . அதை விட்டு விட்டு தங்கட பிள்ளைகள் தமிழை படித்து என்னத்தை கிழிக்க போகுறார்கள் என்று விட்டு விட்டு ஊரான் பிள்ளைகளிடம் தமிழை ஊட்டி வளர்க்க போகுறார்கள் ."ஊருக்குத் தான் உபதேசம் உனக்கில்லையடி கண்ணே
".😂
பி;கு  மேலே உங்களுக்கு விழுந்த பச்சை உங்கள் கருத்திற்கு விழுந்ததல்ல ...ரதிக்கு எதிராய் எழுதியதால் விழுந்தது. அப்ப  நான் வரட்டா:LOL:

ஆயிரத்தில் ஒரு சொல் 👍

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில் எங்கேயாவது இந்திய தமிழர்களின் பிள்ளைகள் தமிழ் பேசத்தெரியாமல் இருப்பதை பார்த்திருக்கிறீர்களா? அதுதான் மொழிப்பற்று!! எம்மவர்களுக்குத்தான் பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுக்க கஷ்டமாயிருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Eppothum Thamizhan said:

வெளிநாட்டில் எங்கேயாவது இந்திய தமிழர்களின் பிள்ளைகள் தமிழ் பேசத்தெரியாமல் இருப்பதை பார்த்திருக்கிறீர்களா? அதுதான் மொழிப்பற்று!! எம்மவர்களுக்குத்தான் பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுக்க கஷ்டமாயிருக்கு!

நீங்கள் சொல்வது உண்மை தான்.அதற்காக பல காரணங்கள் உண்டு.

ஒவ்வொரு விடுமுறைக்கும் பிள்ளைகளுடன் ஊர் போய் வருகிறார்கள்.

நாங்கள் உள்ள காணிபூமியை விற்கிறோம்.ஆனால் அவர்களோ புதிதுபுதிதாக வாங்குகிறார்கள்.
பெற்றோர்கள் இல்லாமலேயே பிள்ளைகளை அனுப்புகிறார்கள்.

மொத்தத்தில் அவர்களுக்கென்று ஒரு நாடு உள்ளதாக எண்ணுகிறார்கள்.

நுhற்றுக்கு 90 வீதமானோர் இரட்டைப் பிரஜாஉரிமை பெற்றிருக்கிறார்கள்.

எமக்கு அங்கு யார் இருக்கிறார்கள் என்றால் யாரைச் சொல்வதென்று முழிப்போம்.

அவர்களுக்கு முழு குடும்பமே அங்கே இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

விக்கிரம் படம் பார்க்க பல இளையவர்கள் வந்திருந்தார்கள்.ஏதாவது விழங்கியிரக்கும் தானே.

  • கருத்துக்கள உறவுகள்
On 18/6/2022 at 16:32, பிரபா சிதம்பரநாதன் said:

நான் தமிழ் மொழியில் உள்ள பற்று ஆர்வம் காரணமாக தொடர்பான கருத்தரங்குகளில் பேசுகிறேன், எழுதுகிறேன். ஆனால் என் குடும்பத்தில் எனக்கு மட்டுமே இந்த ஆர்வம், எனது துணைக்கு ஆர்வம் இல்லை.

இதுபற்றி என் துணைவியிடம் கேட்டேன்,,,, 

காலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்து உடைமாற்றிச் சாமி கும்பிட்டு காலை உணவையும் முடித்தபின் நீங்கள் கணனியில் உட்கார்ந்தால், எனக்கும் நீங்கள் பார்க்கும் பதிவுகளைப் பார்க்கவும், அதற்காக எழுதும் கருத்துக்களை நோக்கவும், நேரத்துடன் ஆர்வமும் தானாக வரும். கண்ட நேரமெல்லாம் கணனியைக் கட்டிப்பிடித்து இருந்தால் வெறுப்புத்தான் வருகிறது என்றார்.😩  

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Eppothum Thamizhan said:

வெளிநாட்டில் எங்கேயாவது இந்திய தமிழர்களின் பிள்ளைகள் தமிழ் பேசத்தெரியாமல் இருப்பதை பார்த்திருக்கிறீர்களா?

இந்திய தமிழர்களை பற்றி எனக்கு தெரியாது. இந்தியர்கள் மற்ற மொழிகள் பேசுபவாகள் தங்கள் சொந்த மொழியை தாராளமாக பேசுகிறார்கள் தான்.அவர்கள் தங்களது மொழியை மிகவும் விரும்புகிறார்கள். தமிழ் மிகவும் பழமைவாய்ந்த மொழியானாலும் இலங்கையில் இருந்து வந்தவர்களால் அது அவ்வளவாக விரும்பபடவில்லை ☹️

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

எனது பிள்ளைகள் தமிழை தெரியாமல் இருக்க மற்றையவர்களின் பிள்ளைகள் படிக்கவேண்டும் என்று வகுப்பு எடுக்கவும் இல்லை!

👍

நீங்கள் அப்படிபட்டவராக இருக்க மாட்டீர்கள் என்று நான் உங்கள் எழுத்தை வைத்து முதலே நம்பினேன்.
ஊருக்கு மட்டுமே உபதேசம் அது எங்களுக்கு தேவை இல்லை என்று பலர் உள்ளனர் அது தான் தவறு.அங்கே இருந்து தான் மோசமான அரசியல்வாதிகளும் உருவாகுகிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 30/6/2022 at 21:37, கிருபன் said:

தமிழ் தெரிந்தும் உங்களுக்கு நான் எழுதியது புரியவும் இல்லை, விளங்கவும் இல்லை! 

நான் என்னைக் குறை சொல்வதாக நினைக்கவும் இல்லை. எனது பிள்ளைகள் தமிழை தெரியாமல் இருக்க மற்றையவர்களின் பிள்ளைகள் படிக்கவேண்டும் என்று வகுப்பு எடுக்கவும் இல்லை!

பிள்ளைகளுக்கு தமிழை ஊட்டி வளர்க்க நேரமும், சூழ்நிலையும் இருக்கவில்லை. தமிழ் எப்போதும் இரண்டாம் மொழியாகவே அவர்களுக்கு இருக்கும் என்பதால் அவர்களுக்கு  விருப்பம் இல்லாததை திணிக்கவும் முயலவில்லை. பிள்ளைகள் தமிழ்ப் பள்ளிக்கூடம் போனார்கள், எழுதப் பழகினார்கள். யானை என்று எழுதுவார்கள் ஆனால் அது என்னவென்றால் தெரியாது. 

எந்த மொழியையும் படிக்கவேண்டும் என்றால் அதில் பிரதானமானமான  விடயங்கள் இருக்கின்றன.

பேசுதல்

கேட்டல் (கிரகிப்போடு)

வாசித்தல் (கிரகிப்போடு)

எழுதுதல்

இதில் வாசித்தல், எழுதுதலைத் தவிர்க்கவேண்டும் என்றால் பாடசாலைக்குப் போகாமல் வீட்டில் இருக்கும் தமிழ் தெரிந்தவர்களுடன் பேசினாலே போதும். ஆனால் மொழியைக் கற்பது பேசவும், கேட்கவும் மாத்திரம் இல்லை.

புலம்பெயர் நாடுகளின் தமிழில் சாதாரண தரம், உயர் தரம் என்பவற்றில் மொழிபெயர்ப்பு முக்கியமான ஒரு விடயம்.  @மெசொபொத்தேமியா சுமேரியர் இதைப் பற்றி தெளிவாகச் சொல்லக்கூடும். 

ஆகவே, ஏன் தமிழ் வேண்டும் என்று கேட்டால் தமிழை அன்றாடம் பாவிக்கவேண்டியவர்களுக்கு தமிழ் வேண்டும். பாட்டன், பூட்டியோடு பேச மட்டும்தான் தமிழ் தேவை என்று நினைக்கும் பழசுகள் மற்றைய மொழிகளை படிப்பது நல்லது!

@கிருபன்.. மிக்க நன்றி.. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 28/6/2022 at 01:15, Sabesh said:

தமிழ் மேல் ஆர்வம், தமிழ் தொடர்பான செயற்பாடுகள், தமிழ் கற்பித்தல் மட்டுமே அல்ல.  இதர தமிழார்வ செயற்பாடுகளில் ஈடுபடும் ஒரு பெற்றோரின் பிள்ளைகளுக்கு அந்த ஆர்வம் இல்லை என்றால் அதில் தவறேதும் இல்லை என்பது எனது கருத்து

உண்மை. மிக்க நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

@விளங்க நினைப்பவன், உங்களது கருத்துக்களுக்கு நன்றி.. 

நீங்கள் எழுதியிருந்தீர்கள் ஊருக்குதான் உபதேசம் ஆனால் எங்களுக்கு இல்லை என 

ஒரு விஷயத்தை கூறலாம் என நினைக்கிறேன், தமிழ் மொழி தனியே வீட்டில் பேசுவதால் மட்டும் வளரப்போவதில்லை. கிருபன் அதனைப்பற்றி கூறியுள்ளார். அதனால் மேலும் விளங்கப்படுத்த வேண்டிய அவசியமில்லை என நம்புகிறேன். நீங்களும் அதனை ஒத்துக்கொள்வீர்கள் என நினைக்கிறேன். பெற்றோரையும் நான் குறை கூற மாட்டேன்.. ஏனெனில் கட்டாயப்படுத்தி ஒன்றை திணிக்க முடியாது என்பதையும் இங்கே ஒத்துக்கொண்டுள்ளனர்.

அதே போல நான் குறிப்பிடும் தமிழ் ஆர்வலர்கள் இன்னொருவரிடம் போய் எதையும் கட்டாயப்படுத்தப் போவதில்லை. தமிழில் உள்ள பற்று காரணமாக வேறு வழிகளில் சமூகத்திற்கு உதவுகிறார்கள் அதற்குள் கற்பித்தலும் ஒரு வழி, அவ்வளவுதான்..

இந்த பதிவில் உங்களது பல கருத்துக்களை கவனித்துவிட்டே இதைக்கூற விரும்பினேன். குறை நினைக்க வேண்டாம்

————————————————

@தமிழ் சிறிஅண்ணா, @Paanchஅங்கிள், @Eppothum Thamizhanஅண்ணா மற்றும் @ரதி உங்கள் அனைவரது கருத்துக்களுக்கும் மிக்க நன்றி..

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் சேர்க்கப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்
On ‎30‎-‎06‎-‎2022 at 12:37, கிருபன் said:

தமிழ் தெரிந்தும் உங்களுக்கு நான் எழுதியது புரியவும் இல்லை, விளங்கவும் இல்லை! 

நான் என்னைக் குறை சொல்வதாக நினைக்கவும் இல்லை. எனது பிள்ளைகள் தமிழை தெரியாமல் இருக்க மற்றையவர்களின் பிள்ளைகள் படிக்கவேண்டும் என்று வகுப்பு எடுக்கவும் இல்லை!

பிள்ளைகளுக்கு தமிழை ஊட்டி வளர்க்க நேரமும், சூழ்நிலையும் இருக்கவில்லை. தமிழ் எப்போதும் இரண்டாம் மொழியாகவே அவர்களுக்கு இருக்கும் என்பதால் அவர்களுக்கு  விருப்பம் இல்லாததை திணிக்கவும் முயலவில்லை. பிள்ளைகள் தமிழ்ப் பள்ளிக்கூடம் போனார்கள், எழுதப் பழகினார்கள். யானை என்று எழுதுவார்கள் ஆனால் அது என்னவென்றால் தெரியாது. 

எந்த மொழியையும் படிக்கவேண்டும் என்றால் அதில் பிரதானமானமான  விடயங்கள் இருக்கின்றன.

பேசுதல்

கேட்டல் (கிரகிப்போடு)

வாசித்தல் (கிரகிப்போடு)

எழுதுதல்

இதில் வாசித்தல், எழுதுதலைத் தவிர்க்கவேண்டும் என்றால் பாடசாலைக்குப் போகாமல் வீட்டில் இருக்கும் தமிழ் தெரிந்தவர்களுடன் பேசினாலே போதும். ஆனால் மொழியைக் கற்பது பேசவும், கேட்கவும் மாத்திரம் இல்லை.

புலம்பெயர் நாடுகளின் தமிழில் சாதாரண தரம், உயர் தரம் என்பவற்றில் மொழிபெயர்ப்பு முக்கியமான ஒரு விடயம்.  @மெசொபொத்தேமியா சுமேரியர் இதைப் பற்றி தெளிவாகச் சொல்லக்கூடும். 

ஆகவே, ஏன் தமிழ் வேண்டும் என்று கேட்டால் தமிழை அன்றாடம் பாவிக்கவேண்டியவர்களுக்கு தமிழ் வேண்டும். பாட்டன், பூட்டியோடு பேச மட்டும்தான் தமிழ் தேவை என்று நினைக்கும் பழசுகள் மற்றைய மொழிகளை படிப்பது நல்லது!

கிருபன் , இது உங்களுக்கு மட்டும் எழுதப்படடதல்ல....இந்த தலைப்பையும் ,அதனோடு சேர்ந்த எழுதப்படட கருத்துக்களையும் முதலில் வாசியுங்கள்...உங்கள் பிள்ளைகளுக்கு 2ம் மொழியாய்  தமிழ் படிப்பித்தாலும் சரி ,பிரென்ஞ்  படிப்பித்தாலும் சரி அது உங்கள் விருப்பம் 
உங்களிடம் ஒரு கேள்வி பிழைப்பிற்காய் நாட்டை விட்டு  வந்த நாங்கள் இங்குள்ள நாடுகளில் பேசப்படும் மொழிகளை நீங்கள் மேலே சொன்ன முறைப்படியா கற்று பாவிக்கிறோம் ?

4 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

@விளங்க நினைப்பவன், உங்களது கருத்துக்களுக்கு நன்றி.. 

நீங்கள் எழுதியிருந்தீர்கள் ஊருக்குதான் உபதேசம் ஆனால் எங்களுக்கு இல்லை என 

ஒரு விஷயத்தை கூறலாம் என நினைக்கிறேன், தமிழ் மொழி தனியே வீட்டில் பேசுவதால் மட்டும் வளரப்போவதில்லை. கிருபன் அதனைப்பற்றி கூறியுள்ளார். அதனால் மேலும் விளங்கப்படுத்த வேண்டிய அவசியமில்லை என நம்புகிறேன். நீங்களும் அதனை ஒத்துக்கொள்வீர்கள் என நினைக்கிறேன். பெற்றோரையும் நான் குறை கூற மாட்டேன்.. ஏனெனில் கட்டாயப்படுத்தி ஒன்றை திணிக்க முடியாது என்பதையும் இங்கே ஒத்துக்கொண்டுள்ளனர்.

அதே போல நான் குறிப்பிடும் தமிழ் ஆர்வலர்கள் இன்னொருவரிடம் போய் எதையும் கட்டாயப்படுத்தப் போவதில்லை. தமிழில் உள்ள பற்று காரணமாக வேறு வழிகளில் சமூகத்திற்கு உதவுகிறார்கள் அதற்குள் கற்பித்தலும் ஒரு வழி, அவ்வளவுதான்..

இந்த பதிவில் உங்களது பல கருத்துக்களை கவனித்துவிட்டே இதைக்கூற விரும்பினேன். குறை நினைக்க வேண்டாம்

————————————————

@தமிழ் சிறிஅண்ணா, @Paanchஅங்கிள், @Eppothum Thamizhanஅண்ணா மற்றும் @ரதி உங்கள் அனைவரது கருத்துக்களுக்கும் மிக்க நன்றி..

வீட்டில தமிழ் கதைக்கிற பிள்ளைகள் அட்லீஸ்ட் தமிழர்கள் கூடும் விழாக்கள் , பொது 
இடங்களிலாவது தமிழை கதைக்க முயற்சிப்பார்கள் /கதைப்பார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

கட்டாயப்படுத்தி திணிக்க முடியாது தான் . ஆனால் குழந்தையாய் இருக்கும் போதே நாங்கள் கதைத்து வந்தால் பிள்ளையும் இயல்பாய் கதைக்கும் 
 
4 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

@விளங்க நினைப்பவன், உங்களது கருத்துக்களுக்கு நன்றி.. 

நீங்கள் எழுதியிருந்தீர்கள் ஊருக்குதான் உபதேசம் ஆனால் எங்களுக்கு இல்லை என 

ஒரு விஷயத்தை கூறலாம் என நினைக்கிறேன், தமிழ் மொழி தனியே வீட்டில் பேசுவதால் மட்டும் வளரப்போவதில்லை. கிருபன் அதனைப்பற்றி கூறியுள்ளார். அதனால் மேலும் விளங்கப்படுத்த வேண்டிய அவசியமில்லை என நம்புகிறேன். நீங்களும் அதனை ஒத்துக்கொள்வீர்கள் என நினைக்கிறேன். பெற்றோரையும் நான் குறை கூற மாட்டேன்.. ஏனெனில் கட்டாயப்படுத்தி ஒன்றை திணிக்க முடியாது என்பதையும் இங்கே ஒத்துக்கொண்டுள்ளனர்.

அதே போல நான் குறிப்பிடும் தமிழ் ஆர்வலர்கள் இன்னொருவரிடம் போய் எதையும் கட்டாயப்படுத்தப் போவதில்லை. தமிழில் உள்ள பற்று காரணமாக வேறு வழிகளில் சமூகத்திற்கு உதவுகிறார்கள் அதற்குள் கற்பித்தலும் ஒரு வழி, அவ்வளவுதான்..

இந்த பதிவில் உங்களது பல கருத்துக்களை கவனித்துவிட்டே இதைக்கூற விரும்பினேன். குறை நினைக்க வேண்டாம்

————————————————

@தமிழ் சிறிஅண்ணா, @Paanchஅங்கிள், @Eppothum Thamizhanஅண்ணா மற்றும் @ரதி உங்கள் அனைவரது கருத்துக்களுக்கும் மிக்க நன்றி..

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நான் குறிப்பிடும் தமிழ் ஆர்வலர்கள் இன்னொருவரிடம் போய் எதையும் கட்டாயப்படுத்தப் போவதில்லை.

மிகவும் நல்லது.

நான் உங்களை குறைநினைக்கவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.