Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் .இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் .இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது தாக்குதல்

யாழ்.மருதடி வீதியில் உள்ள யாழ்.இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது நேற்றிரவு இனம் தெரியாத நபர்களினால் கண்ணாடி போத்தலால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது,

நேற்று இரவு யாழ் .இந்திய துணை தூதரக அலுவலகத்திற்கு முன்னால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்று யாழ் இந்திய துணை தூதுவரினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது யாழ். பொலிசார் மற்றும் தடவியல் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

https://athavannews.com/2022/1309907

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது போத்தல் தாக்குதல்

By VISHNU

10 NOV, 2022 | 05:22 PM
image

யாழ்ப்பாணம் - மருதடி வீதியில் உள்ள யாழ். இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது 9 ஆம் திகதி புதன்கிழமை இனம் தெரியாத நபர்களினால் போத்தல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

IMG-20221110-WA0071-1-696x522.jpg

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்று (10) காலை யாழ். இந்திய துணை தூதுவரினால் யாழ்ப்பாண பொலிசாருக்கு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

20221110_160515-696x313.jpg

இந்நிலையில் யாழ்ப்பாண பொலிசார் மற்றும் தடயவியல் பொலிசார் விரைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/139665

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிரிப்பு வருது எனக்கு மட்டும்தானா🤗🤗🤭

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அரசாங்க உயர் மட்ட அதிகாரிகள் அண்மையில் தமிழ் ஜனநாயகப் போராளிகள் கட்சி மற்றும்  இன்னோரன்ன புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளை இந்தியாவுக்கு வரவழைத்து ஈழத் தமிழருக்கான  தீர்வுத்திட்டம் குறித்து பேசியதாக அண்மையில் ஒரு செய்தி வந்ததே. அந்த செய்தி உண்மையானால் தமிழ் தரப்புக்கு எதிரான தீய சக்திகளின் தூதரகம் மீதான இதுபோன்ற தாக்குதலால் இந்திய அரசை சீண்டி விடவும்  இந்திய அரசுக்கும் தமிழ் தரப்புக்கும் இடையிலான நல்லுறவை பாதிக்கும்  வகையிலும் யாரோ சில விசமிகள் செய்த திட்டமிட்ட சதியாகவும் இதைக்கருதலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, vanangaamudi said:

ஈழத் தமிழருக்கான  தீர்வுத்திட்டம் குறித்து பேசியதாக அண்மையில் ஒரு செய்தி வந்ததே.

சூடம் கொழுத்தி, அதன்மேல் அடித்துச் சத்தியம் செய்யுங்கோ, இந்தியா இப்படிச் செய்யும் என்று உண்மையாக நீங்கள் நம்புகின்றீர்களா ? 

😀

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

ஒரு சிரிப்பு வருது எனக்கு மட்டும்தானா🤗🤗🤭

சிரிப்பு எங்கோயிருந்து வருகிறது. முன்பக்கத்தில் இருந்தா அல்லது...

எனக்கு ......

🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனுதாபம் தேட, இவங்களே தங்களுக்கு… வெறும் போத்தலை எடுத்து அடிச்சிருப்பாங்கள். 😂
அப்படிப் பட்ட,  யம காதகன்கள்.🤣

முதலாவது படத்தில் 2 பேர் மதிலின் அகலத்தை அளப்பதைப் பார்த்தால் பலத்த சந்தேகமாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிற்கு அடிக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடே. ஆனால் தற்போது அடித்திருப்பது இலங்கை இராணுவமாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். 

😉

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்தியாவுக்கு 1987 இலேயே போதிய அளவு பாடம் கற்பித்துவிட்டார்கள் தமிழர்கள். இந்தப் போத்தல் எல்லாம் அடிக்க வேண்டிய தேவையில்லை. இது யாரோ ஏதோ தேவைக்காக அடித்திருக்கிறார்கள். மாவீரர் நாளை குழப்ப ஒரு சேதி தேவையாக இருக்குது போல. 

  • கருத்துக்கள உறவுகள்

போத்தல் எறிதல் , கல்லெறிதல் என்பன இந்திய பாங்கான விளையாட்டுக்கள்.🤣

  • கருத்துக்கள உறவுகள்

இதனை எமது மக்கள் செய்திருக்கமாட்டார்கள் என்பதில் எனக்கு துளியலவில் கூட சந்தேகமில்லை, இதனை இலங்கை அரசே திட்டமிட்டு மேற்கொண்டிருக்கலாம்.

விடுதலை புலிகள் காலத்திலேயே பல இந்திய உளவாளிகள் மன்னார்ரினை மையமாக கொண்டு செயற்பட்டிருந்ததாக கேள்விபட்டிருந்தேன், அவர்களது தொடர்பாடல் சங்கேத கடித பரிமாற்றம் மூலம் தபால் சேவையின்றி நேரடியாக மேற்கொள்ளப்பட்டதாக கேள்விபட்டுள்ளேன்.

இப்போது இந்திய துணை தூதரகம் யாழ்குடாநாட்டில் இருப்பதன் முக்கியமான நோக்கம் இந்தியாவின் உளவு நடவடிக்க்கைக்காகவே என கருதுகிறேன், இலங்கை அரசியலில் தொடர்ந்து கும்மியடிக்கும் இந்தியாவினை தட்டி வைக்க கால காலமாக இலங்கை அரசு பல செயல்களை செய்துள்ளது, அதன் தொடர்ச்சியாக இது இருந்திருக்கலாம், ஆனால் சாதாரணமாக போத்தல்களையா எறியவேண்டும்? எனும் விடயம்தான் விளங்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு, இலங்கையிலிருக்கும் சீனாக்காரர் மேற்தான் சந்தேகமாம்!

3 hours ago, vasee said:

எமது மக்கள் செய்திருக்கமாட்டார்கள் என்பதில் எனக்கு துளியலவில் கூட சந்தேகமில்லை, இதனை இலங்கை அரசே திட்டமிட்டு மேற்கொண்டிருக்கலாம்.

பயத்தில கனவிலே எழும்பி இவர்களே அடிச்சிருப்பார்கள். பொறுங்கோ கேலிச்சித்திரம் வரும், உடைந்த போத்தலை வைச்சு இண்டைக்கே ஆளை கண்டுபிடிச்சிடும் இலங்கை காவற்துறை!

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரகம் மீதான போத்தல் தாக்குதல் ; 3 பேர் கைது

By T. SARANYA

11 NOV, 2022 | 12:14 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

யாழ்ப்பாணம் – மருதடி வீதியில் அமைந்துள்ள இலங்கைக்கான இந்திய துணை தூதரகம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கண்ணாடி போத்தலினால் இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக, இந்திய துணை தூதரக அதிகாரி ஒருவர் யாழ். பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகத்தினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.

இந்நிலையில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள யாழ். பொலிஸார், 3 பேரை  கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அவர்கள் பயணித்த காரினையும் பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.

வாகனம் ஒன்றில் பயணித்த ஒருவர் மது போதையில்  கண்ணாடி க்ளாஸ் ஒன்றை தவறுதலாக வீசியமை விசாரணையில் தெரியவந்ததாக  பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

https://www.virakesari.lk/article/139722

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ஏராளன் said:

அட…. வெறிக் குட்டிகள் செய்த வேலை.
நானும் ஏதோ… சீனாக்காரன், இந்திய தூதரகத்துக்குள் தாக்குதல் நடத்தியுள்ளான் என சந்தோசப் பட்டேன். 😂

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, தமிழ் சிறி said:

அட…. வெறிக் குட்டிகள் செய்த வேலை.
நானும் ஏதோ… சீனாக்காரன், இந்திய தூதரகத்துக்குள் தாக்குதல் நடத்தியுள்ளான் என சந்தோசப் பட்டேன். 😂

சீனா என்று கேட்டாலே வெலவெலக்குது இந்தியாவுக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா என்னத்துக்கோ நூல் விட்டு பாக்குது எண்டு நான் நினைக்கிறன்.😁

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

இந்தியா என்னத்துக்கோ நூல் விட்டு பாக்குது எண்டு நான் நினைக்கிறன்.😁

புலிப்பல்லவி பாடி மாவீரர் நாளை குழப்ப தன்பங்குக்கு அடியெடுத்து கொடுக்குது சிங்களத்துக்கு. செய்தவினை குத்திக்கொண்டே இருக்குதெல்லே. மாவீரரின் ஆன்மாக்கள்  அவர்களை நிம்மதியாக தூங்க விடாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். இந்திய துணை தூதுவர் அலுவலகம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு சி.வி.கே.சிவஞானம் கண்டனம்!

யாழ். இந்திய துணை தூதுவர் அலுவலகம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு சி.வி.கே.சிவஞானம் கண்டனம்!

யாழ்ப்பணத்தில் உள்ள இந்திய துணை தூதுவர் அலுவலகம் மீது கண்ணாடி போத்தலினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதுவர் அலுவகம் மீது நேற்று இரவு காரில் வந்த இனம் தெரியாத நபர் கண்ணாடி போத்தலினால் தாக்கி விட்டு சென்றதாக தெரிவிக்கப்டுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.குறித்த சம்பவம் சிறிய சம்பவமாக காணப்பட்டாலும் இதன் பின்புலம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும்.

எங்களை பொறுத்த வரையில் இந்திய தூதுரகம் யாழ்ப்பாண மக்களுடன் மிகவும் அன்னியோன்னியமாக பழகிவரும் வரும் நிலையில் குறித்த தாக்குதல் சம்பவம் கவலைக்குரியதும் கண்டிக்கத்தக்கதுமாகும் .

https://athavannews.com/2022/1310011

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:

எங்களை பொறுத்த வரையில் இந்திய தூதுரகம் யாழ்ப்பாண மக்களுடன் மிகவும் அன்னியோன்னியமாக பழகிவரும் வரும் நிலையில் குறித்த தாக்குதல் சம்பவம் கவலைக்குரியதும் கண்டிக்கத்தக்கதுமாகும் .

4 hours ago, ஏராளன் said:

வாகனம் ஒன்றில் பயணித்த ஒருவர் மது போதையில்  கண்ணாடி க்ளாஸ் ஒன்றை தவறுதலாக வீசியமை விசாரணையில் தெரியவந்ததாக  பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ குறிப்பிட்டார்

அதுதான் மிக தெளிவாக குடிபோதையில் வந்தவர்கள் தவறுதலாக கண்ணாடி குவளையை இந்திய தூதரகம் பக்கமாக வீசிவிட்டனர் என்று சிங்கள நிர்வாகமே சொன்ன பின்னரும், 

என்னமோ இந்திய தூதரகம்மீது யாழ்ப்பாண தமிழர்கள்  திட்டமிட்டு பெற்றோல் குண்டு  வீசிவிட்டனர்  என்பது போன்ற தோற்றப்பாட்டை கொடுக்கும் தமிழர் நிர்வாக பகுதி சிவஞானம் சிங்களவனைவிட தமிழர்கள் கெட்டவர்கள் என்று இந்தியாவுக்கு காட்ட முனைகிறாரா? 

இலங்கை வரலாற்றில் தமிழர்களின் எதிரிகள் எப்போதுமே எமக்கு வெளியில் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, valavan said:

ஐயாவுக்கு முதலமைச்சர் பதவியில் ஒரு கண்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, valavan said:

அதுதான் மிக தெளிவாக குடிபோதையில் வந்தவர்கள் தவறுதலாக கண்ணாடி குவளையை இந்திய தூதரகம் பக்கமாக வீசிவிட்டனர் என்று சிங்கள நிர்வாகமே சொன்ன பின்னரும், 

என்னமோ இந்திய தூதரகம்மீது யாழ்ப்பாண தமிழர்கள்  திட்டமிட்டு பெற்றோல் குண்டு  வீசிவிட்டனர்  என்பது போன்ற தோற்றப்பாட்டை கொடுக்கும் தமிழர் நிர்வாக பகுதி சிவஞானம் சிங்களவனைவிட தமிழர்கள் கெட்டவர்கள் என்று இந்தியாவுக்கு காட்ட முனைகிறாரா? 

இலங்கை வரலாற்றில் தமிழர்களின் எதிரிகள் எப்போதுமே எமக்கு வெளியில் இல்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருப்பவர்களுக்கு அரசியல் அறிவு, சுத்தமாக இல்லை.
எந்த இடத்தில், எதை கதைக்க வேண்டும் என்ற விவஸ்தை அற்றவர்கள். 
எல்லாம்... முழு முட்டாள் பயலுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

அதேன் அங்க அடிக்க இங்க வலிக்குது? தனது இனம் கொத்து கொத்தாக விழும்போதுகூட இப்படி துடிக்கவில்லை இவர்? இனம் இனத்தைச்சாரும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.