Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உக்ரைனிய துருப்புகளால் கைப்பற்றப்பட்ட கெர்சனுக்குள் மக்கள் கொண்டாட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, கிருபன் said:

1) உங்களுக்கு எல்லாமே மாறித்தான் விளங்கும் என்பது வழமைதானே.

2) மக்களின் அழிவுகளைப் பார்த்து கிஞ்சித்தும் இரக்கம் காட்டாமல் ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு முண்டுகொடுப்பதுதான் உங்கள் வாடிக்கை. 

கிருபன்,

1) புத்தகங்களின் அட்டையை மட்டுமே வாசித்தால் இப்படித்தான் புரிந்துகொள்வீர்கள். புத்தகத்திற்கு உள்ளேயும் வாசித்துக் கிரகித்துக்கொள்ள வேண்டும். 

உலகம் தட்டையானது என நம்புபவர்கள் பலர்  இப்போதும் இருக்கிறார்கள் எனக் கூறியது உங்களுக்குத்தான். 

2) மக்களின் அழிவைவிட NATO வெல்ல வேண்டும் என விரும்பியது நீங்களே. 

தொப்பியை பிரட்டிப் பழகினால் அது வாழ்நாள் பழக்கமாகிவிடும். ஜாக்கிறதை. 

🤣

20 minutes ago, விளங்க நினைப்பவன் said:

உக்ரைனின் பிரதேசங்களை புரின் வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்து கொண்டாடிய இந்த விடியோவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து இரசித்தேன்.
Russia! Russia! Russia!  🤣

எப்பவுமே late தானா 🤣

  • Replies 103
  • Views 6.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

உலகம் தட்டையானது என நம்புபவர்கள் பலர்  இப்போதும் இருக்கிறார்கள் எனக் கூறியது உங்களுக்குத்தான். 

ஆரம்பத்தில் இருந்தே ரஷ்யாவின் இந்த ஆக்கிரமிப்பினால் வரும் மக்களின் அழிவுகளை யார் ரசித்துக்கொண்டிருக்கின்றார்கள் இந்த யாழ் களத்தில் வாசகர்களாக இருப்பவர்களுக்குத் தெரியும். 

ரஷ்யாவின் மூளைச் சலவைக்குள் உள்ளானவர்களும், அவர்களின் சம்பளப் பட்டியலில் இருந்துகொண்டு பிரச்சாரம் செய்பவர்களும் உலகம் உருண்டை என்றுதான் நம்புகின்றார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

நெடுக்கர் வேறு இன்னோர் திரியில் பிரான்ஸின் இருந்து யாழில் போய் 15 வயதுச் சிறுமியை திருமணம் முடிக்க முயன்றவர் பிரான்ஸில் மலிஞ்சிருக்கும் உக்கிரேன் பெட்டையளைப் போயிருக்கலாம் என்று வகுப்பெடுத்தவர். இப்படித்தான் மனிதாபிமானம் பொங்குபவர்கள் இருக்கின்றார்கள்!

அடைக்கலம் கொடுத்த இடத்தில்.. வெள்ளையை கூட்டிக்கொண்டு ஓடினதும்.. அதே உக்ரைன் காரிகள் தான்.

எங்கள் மக்கள் மீது கூலி வாங்கிக் கொண்டு குண்டுகளை கொட்டியவனும் இதே உக்ரைன்காரன் தான்.

விழுந்த ஆன்டனோவ் விமானங்களை ஓட்டியது.. எம் ஐ 24 ஓட்டியதும் இதே உக்ரைன்காரன் தான்.

எம் மக்கள் மீதே குண்டு வீசியவன் மீது நீங்கள் காட்டும் மனிதாபிமானம் என்பது..??!

நேட்டோ விரிவாக்கத்திற்கும்.. இராணுவ மேலாதிக்கத்திற்கும் இடமளிப்பதன் மூலம் முழு உலகையே பதட்டத்துக்குள் தள்ள நினைக்கும் உக்ரைனின் சமகால அதிபரும் அவரின் ஆதவாளர்களும் முழு உலக அமைதிக்கும் ஆபத்தானவர்களே. இதில் ரஷ்சியாவின் விசேட இராணுவ நடவடிக்கை என்பது உலகின் இராணுவ சமபல நிலையை நிலை நிறுத்த உதவினால்.. உலக அமைதிக்கு நன்மை உண்டாகும். அதன் மூலம் நீண்ட கால ஒழுங்கில் கூடிய மனித உயிரிகளும் மனித உரிமைகளும் பாதுகாக்கப்படலாம். 

உக்ரைனில் ரஷ்சியாவின் இந்த யுத்தத்தில் மக்களின் இழப்பு வெறும் 10,000 க்குள் தான். அதிலும் உக்ரைனின் ஏவுகணைகள் தாக்கி இறந்தவர்கள் உள்ளடங்க. ஆனால்.. உக்ரைனால்... டான்பஸ் பிராந்தியத்தில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை இதை விட அதிகம். அங்கு எங்கே போனது உங்கள் மனிதாபிமானமும்... மேற்குலகின் பக்கச்சார்ப்பு பச்சாதாபமும். 

விடுங்கண்ணே.. உந்த உக்ரைனுக்கான சப்பைக்கட்டை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரஷ்யா இடத்தில் அமெரிக்கா இருந்திருந்தால் உக்ரேன் இப்ப சாம்பலாகி இருக்கும்.
அமெரிக்கா கால் வைச்ச நாடு எது இப்ப ஒழுங்காய் இருக்கு? எல்லாம் பர நாசம்.
பிஸ்கட் பெட்டிக்குள்ளேயே வெடிகுண்டுகளை வைத்து மக்கள் மீது வீசியவர்கள் இந்த அமெரிக்கர்கள். நிலத்தில் விழுந்த பிஸ்கட் பெட்டியை திறக்க அது வெடிக்குமாம்.

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேனிய மக்களின் பொருளாதார, சிவிலியன் கட்டுமானங்களை ரஸ்ஸியா  திட்டமிட்டு அழித்துவருவது கண்கூடு. உக்ரேனின் ராணுவ பலத்தையும், நேட்டொ விரிவாக்கத்தையும் அழிப்பதே ரஸ்ஸியாவின் நோக்கம் என்றால் வைத்தியசாலைகளும், பாடசாலைகளும், விவசாயத்திற்கு நீர்வழங்கும் அணைக்கட்டுக்களும், மக்களின் தெருக்களும், பாலங்களும், எரிபொருள் தாங்கிகளும், மின்சார விநியோகக் கட்டுமானங்களும் திட்டமிட்டு அழிக்கப்படுவது ஏன்? உக்ரேன் தன்னிடம் மண்டியிட வேண்டும் என்ப்தற்காகத்தான் ரஸ்ஸியா இவற்றையெல்லாம் செய்கிறது என்பதைத்தவிர இதற்கு வேறு விளக்கம் இருக்க முடியாது.

இந்தப் போரில் ரஸ்ஸியா தோற்கமுடியாது என்பது எவ்வளவு உண்மையோ, அதேயளவிற்கு உக்ரேனில் ரஸ்ஸியா செய்வது ஆக்கிரமிப்பு அழித்தொழிப்பு யுத்தம் என்பதும் உண்மை. எம்மில் பலர் இதனை ரஸ்ஸியா உக்ரேன் மக்களுக்காகச் செய்யும் ஒரு மனிதாபிமான விசேட மீட்பு நடவடிக்கை என்று கூறிக்கொண்டாலும்கூட, அவர்களுக்கே இது எவ்வகையான யுத்தம் என்பது நிச்சயம் தெரிந்தே இருக்கிறது. 

இந்த யுத்தம் தொடர்பான எனது மனநிலை ரஸ்ஸியாவின் நடவடிக்கைகளால் இன்னும் இன்னும் உறுதியடைந்தே வருகிறது. உக்ரேனில் ரஸ்ஸியா செய்துவருவதும் இன்றுவரை ஈழத்தில் இலங்கை செய்துவருவதும் அச்சொட்டான ஆக்கிரமிப்பு, வல்வளைப்பு, அழித்தொழிப்பு நடவடிக்கைகளே! ரஸ்ஸியாவின் இந்த ஆக்கிரமிப்பிற்கெதிரான உக்ரேனிய மக்களின் எதிர்ப்போராட்டத்திற்கு எனது தார்மீக  ஆதரவு என்றும் இருக்கும். என்னால் முடிந்தவரையில் உக்ரேனிய மக்களின் எழுச்சிமிகு போராட்டத்திற்கான நியாயப்பாடுகளை சமூக வலைத்தளங்களில்  எழுதிவருகிறேன், தொடர்ந்தும் எழுதுவேன்.

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ரஞ்சித் said:

ரஸ்ஸியாவின் இந்த ஆக்கிரமிப்பிற்கெதிரான உக்ரேனிய மக்களின் எதிர்ப்போராட்டத்திற்கு எனது தார்மீக  ஆதரவு என்றும் இருக்கும். என்னால் முடிந்தவரையில் உக்ரேனிய மக்களின் எழுச்சிமிகு போராட்டத்திற்கான நியாயப்பாடுகளை சமூக வலைத்தளங்களில்  எழுதிவருகிறேன், தொடர்ந்தும் எழுதுவேன்.

சிறப்பு  👍
தமிழில் தான் இதன் தேவை அதிகமாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

ஆமாம்🤪

இலங்கையில் தமிழரின் பூர்வீக வாழிடங்களை சிங்கள மயமாக்கி சிங்கள மாவட்டங்களுடன் இணைத்துவருவதற்கும், அங்கே வாக்கெடுப்புகளை நடத்தி, பெரும்பான்மையினரின் வாக்குகளை அப்பிரதேச மக்களின் விருப்பாகக் காட்டி ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதற்கும், இங்கே உக்ரேனிய மக்களின் பூர்வீக தாயகத்தை ஆக்கிரமித்து நின்று, சோடிக்கப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பு முடுவுகளை காரணம் காட்டி ரஸ்ஸியாவுடன் வலுக்கட்டாயமாக புட்டின் இணைத்துக்கொள்வதற்கும் இடையே வேறுபாட்டினை என்னால் காண முடியவில்லையே ? 

1990 இல் இந்திய ஆக்கிரமிப்பு படையினர் யாழ்ப்பாணத்தை விட்டு விலகிய பின் புலிகள் படிப்படியாக யாழ்ப்பாணத்தை மீண்டும் தமது ஆதிக்கத்திற்கு கொண்டு வந்த போது நான் உட்பட தமிழ் மக்கள் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை. பாலியல் வல்லுறவு, கொலை, சித்திரவதை, ஆட்கடத்தல் என்று மிக மோசமாக இருந்த காலகட்டம் மறைந்தது என்று குதூகளித்தோம்.

பின் கிளிநொச்சியை விடுதலைப்புலிகள் ஆனையிறவு படைத்தளத்தை கைப்பற்றி விடுவித்த பின் கிளிநொச்சி மக்கள் அடைந்த சந்தோசமும் அளவில்லாதது.

அதேபோன்று இன்று உக்ரேனிய மக்களும் சந்தோஷத்தில் குதூகலிக்கின்றனர். இந்திய இலங்கை ராணுவங்கள் செய்த பாலியல் வல்லுறவு படுகொலைகள் போற்றவற்றுக்கு சற்றும் மிகை இல்லாமல் ரஷ்ய படைகள் அங்கு செய்த அநியாயம் அளவற்றது. இன்று அந்த கொடூர ராணுவம் அகன்ற பின் யுக்ரேனிய மக்கள் அடையும் மகிழ்ச்சி உடன் நானும் கலந்து கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப்புலிகளை அழிக்க உதவிய நாடுகளும் ஊடகங்களுமே இன்று உக்ரேனின் ஒரு சிறுபகுதி மக்களின் மகிழ்சியை கொண்டாடுகின்றன. அதனுடன் சேர்ந்து நம்மவர்களும்......

ஆனால் தற்சமயம் உக்ரேன் போர் முடிவுக்கு வந்தால் உடனடியாக மேற்குலக நாடுகள்  பாதிக்கப்பட்ட இடங்களை உடனடியாக அபிவிருத்தி செய்து அந்த மக்களுக்கும் நல்ல வாழ்வாதாரங்களை அளித்து முன்னேற்றி விடுவார்கள்.
 
ஈழத்தின் 2009 பாரிய அழிவுக்கு பின் ....அந்த அழிவிற்கு உதவிய நாடுகள் அனைத்தும் இன்றுவரை ஈழ மக்களுக்கு அவர்களின் அரசியல் பிரச்சனைகளை தீர்க்க முனைந்ததா? அல்லது தீர்த்து வைத்தார்களா?

புலம்பெயர்தமிழனுக்கு தேவை கொண்டாட்டம். அதில் உக்ரேனையும் சேர்த்து கொண்டாடுவோம்.கதை கவிதை கட்டுரைகள் எழுதி கொண்டாடுவோம்
 
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

அப்ப, இரஸ்ஸியா தமிழீழம் சார்பு கொள்கையா வைத்திருந்து தமிழரை காப்பாற்ற முயற்சித்தது. ஐநாவில் சிங்களத்தை ukrainஆ veto பாவித்து பகாப்மாற்றியது?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ragaa said:

அப்ப, இரஸ்ஸியா தமிழீழம் சார்பு கொள்கையா வைத்திருந்து தமிழரை காப்பாற்ற முயற்சித்தது. ஐநாவில் சிங்களத்தை ukrainஆ veto பாவித்து பகாப்மாற்றியது?

நேட்டோ ஆயுதத்தை சிங்களத்துக்கு கொடுத்து தமிழரை கொன்றது. வி. புலிகளை பயங்கரவாதிகளாக இன்றும் வைத்திருப்பவர்கள் நேட்டோ நாடுகளே.
 
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, nunavilan said:

நேட்டோ ஆயுதத்தை சிங்களத்துக்கு கொடுத்து தமிழரை கொன்றது. வி. புலிகளை பயங்கரவாதிகளாக இன்றும் வைத்திருப்பவர்கள் நேட்டோ நாடுகளே.
 
பேசித்தீர்க்கலாம்  என்றொரு பகுதி
இவர்கள் தீண்டத்தகாதவர்கள்  என்றொரு  பகுதி
இதில் எதை  தமிழர்கள்  தேர்வு  செய்யலாம்  சகோ...

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, nunavilan said:

நேட்டோ ஆயுதத்தை சிங்களத்துக்கு கொடுத்து தமிழரை கொன்றது. வி. புலிகளை பயங்கரவாதிகளாக இன்றும் வைத்திருப்பவர்கள் நேட்டோ நாடுகளே.

அப்ப ரஷ்யாவும் அதன் கூட்டாளிகளும் (சீனா, இந்தியா, இரான், வடகொரியா) புலிகளை இன்றும் பயங்கரவாதிகளாக வைத்திருக்கவில்லை! நல்லது!😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ragaa said:

அப்ப, இரஸ்ஸியா தமிழீழம் சார்பு கொள்கையா வைத்திருந்து தமிழரை காப்பாற்ற முயற்சித்தது. ஐநாவில் சிங்களத்தை ukrainஆ veto பாவித்து பகாப்மாற்றியது?

 சர்வதேசத்தை பொறுத்தவரையில் தமிழீழத்தை யாருமே காப்பாற்றவில்லை. இப்படியிருக்க ரஷ்யா மீது மட்டும் இவ்வளவு காண்டு ஏன்?

எம் கண் முன்னே அமெரிக்காவும் ஐரோப்பாவும் வேறு நாடுகளுக்கு செய்யாத அத்து மீறல்களா அடாவடித்தனங்களா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

அப்ப ரஷ்யாவும் அதன் கூட்டாளிகளும் (சீனா, இந்தியா, இரான், வடகொரியா) புலிகளை இன்றும் பயங்கரவாதிகளாக வைத்திருக்கவில்லை! நல்லது!😂

இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை. 

😀

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாலி said:

அப்ப ரஷ்யாவும் அதன் கூட்டாளிகளும் (சீனா, இந்தியா, இரான், வடகொரியா) புலிகளை இன்றும் பயங்கரவாதிகளாக வைத்திருக்கவில்லை! நல்லது!😂

எமது மிக்ப்பெரிய எதிரிகளை எப்படி ஆதரிக்க முடிகிறது?

வடகொரியா பேச்சுவார்த்தைக்கு நடுவர் என்று வந்து பயங்கரவாதிகளை அமெரிக்காவுக்குள் அனுமதிக்க முடியாது என்று புலிகளை பார்த்து கூறினர். ஆனால் தலபானுடன் பேசாத நாடு  உண்டோ?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

பேசித்தீர்க்கலாம்  என்றொரு பகுதி
இவர்கள் தீண்டத்தகாதவர்கள்  என்றொரு  பகுதி
இதில் எதை  தமிழர்கள்  தேர்வு  செய்யலாம்  சகோ...

3 hours ago, வாலி said:

அப்ப ரஷ்யாவும் அதன் கூட்டாளிகளும் (சீனா, இந்தியா, இரான், வடகொரியா) புலிகளை இன்றும் பயங்கரவாதிகளாக வைத்திருக்கவில்லை! நல்லது!😂

வடகொரியா , ஈரான் அமெரிக்காவை அல்லவா பயங்கரவாதிகள் என்கிறார்கள்.🤣
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

வடகொரியா , ஈரான் அமெரிக்காவை அல்லவா பயங்கரவாதிகள் என்கிறார்கள்.🤣
 
அவர்களது அரசியல் குடும்பிப்பிடிக்குள் நாம் போகவேண்டியதில்லை. நமக்கு துரும்பாவது கிடைக்கும் இடம் எது??

இது எனது பார்வை மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, விசுகு said:

அவர்களது அரசியல் குடும்பிப்பிடிக்குள் நாம் போகவேண்டியதில்லை. நமக்கு துரும்பாவது கிடைக்கும் இடம் எது??

இது எனது பார்வை மட்டுமே.

எங்கள் கைகளில் இருந்த துடுப்பைப் பறித்தவர்கள் யார்? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அவர்களது அரசியல் குடும்பிப்பிடிக்குள் நாம் போகவேண்டியதில்லை. நமக்கு துரும்பாவது கிடைக்கும் இடம் எது??

இது எனது பார்வை மட்டுமே.

எரியும் வீட்டில் கொள்ளி  எடுக்க தற்போது சிறிலங்காவுக்கு கும்பலாக வந்துள்ளார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
35 minutes ago, Kapithan said:

எங்கள் கைகளில் இருந்த துடுப்பைப் பறித்தவர்கள் யார்? 

பறித்தவர்களைத்தான் இப்போது பாராட்டி புகழ்ந்து கொண்டிருக்கின்றோம் 😁

அல்லது  இருக்க விட்டதற்கான நன்றி விசுவாசம் எனலாம் 😎

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேன் தனிநாடு ...சுதந்திரமான நாடு.....உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும்.  ஒரு சுதந்திரமான நாடு என்று எற்றுக்கொண்டுள்ளன.  ஐக்கிய நாணய சபையில் அங்கம் வகிக்கிறது     உக்ரேனில் வாழ்வோர். உக்கிரேனியர். என அழைக்கப்படுகிறார்கள்.  தமிழ் ஈழம் என்ற நாடு தற்சமயம் இல்ல....தமிழ் ஈழம்.....சுதந்திரமான நாடு இல்லை.....உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் ஒரு சுதந்திரமான நாடு என்று எற்றுக்கொள்ளப்படவில்லை....குறிப்பாக ரஷ்யா  உறுதியாக எற்கவில்லை இலங்கையர் என்று மட்டுமே அழக்கப்படுகிறார்கள்.  இந்தநிலையில்.  உக்கிரேனுடன்.  எப்படி ஒப்பிடமுடியும். ?.     ஒரு நாட்டுக்கு இன்னொரு நாடு ஆதரவு வழங்க முடியும்  .....இல்லையா?.  கண்டிப்பாக வழங்க முடியும்    ஆகவே உக்ரேன் என்ற நாட்டுக்கு  ஐரோப்பா நாடுகளும் அமெரிக்காவும்.  பணம்..பொருள்கள் ஆயுதங்கள்.  வழங்குவதில்.  எதுவித தப்புமில்லை.  அது ஒரு மிக சரியான நடவடிக்கை…  ஆனால் சுதந்திரம் அடைந்த 1948 ஆம் ஆண்டிலிருந்து பல காலம்  இலங்கை என்ற ஒற்றை ஆட்சியில் இருந்து விட்டு   இடையில்  போராட தொடங்கி   எமக்குள்ளேயோ போராடிய நாங்கள்  ஐரோப்பா அமெரிக்கா  இடமிருந்து உதவி பெற தகுதியற்றவர்கள்.  ஏனெனில் நாங்கள் ஒரு சுதந்திரமான நாட்டவர் இல்லை .....எங்களுக்கு தரும் உதவி எல்லாம் இலங்கை என்ற நாட்டினுடாகத் தான் தர முடியும்    இது எனது விருப்பம் இல்லை.....இது தான்   இன்றைய உலகில் யதார்த்தம்   ....இப்படி தான் நடந்து வருகிறது  .....எவர் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி.  இந்த நடவடிக்கை தொடரும் ஆக்கிரமிப்பை ஆதரித்தால்.  .....எம்மை ஆதரிக்கதாவனை ஆதரித்தால்.  ....எமது எதிரியை ஆதரிப்பவனை ஆதரித்தால்.   மேலே  சொல்லப்பட்ட  விடயங்களை ஆதரித்து ஆக. கருத முடியும்… 😁

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக சொன்னீர்கள் கந்தையா அண்ணா.
இங்கே இப்போ கதை போகும் போக்கை பார்த்தால் ரஷ்யா தான் இலங்கை தமிழர்களை காப்பாற்ற எல்லா முயற்சிகளையும் முன்னுக்கு நின்று செய்தது போலவும், ஆனால் இந்த தீய மேற்குலக நாடுகளும் உக்ரைனும் சேர்ந்து தான் veto எல்லாம் பாவித்து இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்டு தமிழர்களை கீழே தள்ளியது போலவும் கதை போகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

உக்ரேனுக்கு ஆயுதங்களை மேற்கு கொடுப்பது போல் சிறிலங்காவுக்கும்  மேற்கு ஆயுதங்களை கொடுத்து தமிழரை அழி என் சொன்னது, செய்தது.

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

நன்றாக சொன்னீர்கள் கந்தையா அண்ணா.
இங்கே இப்போ கதை போகும் போக்கை பார்த்தால் ரஷ்யா தான் இலங்கை தமிழர்களை காப்பாற்ற எல்லா முயற்சிகளையும் முன்னுக்கு நின்று செய்தது போலவும், ஆனால் இந்த தீய மேற்குலக நாடுகளும் உக்ரைனும் சேர்ந்து தான் veto எல்லாம் பாவித்து இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்டு தமிழர்களை கீழே தள்ளியது போலவும் கதை போகிறது.

உங்களின் விளக்க பிழைக்கு நாம் பொறுப்பாளிகள் அல்ல.🙂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.