Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

5 தமிழ்க் கட்சிகளின் பங்கேற்பில் புதிய கூட்டணி : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிமையை கோரவும் முஸ்தீபு

10 JAN, 2023 | 09:13 PM
image

(ஆர்.ராம்)

தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள ஐந்து கட்சிகள் கூட்டிணைவதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளதாக அக்கட்சிகளின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ, சித்தார்த்தன் தலைமையிலான புளொட், சுரேஷ் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப். சிறிகாந்தா தலைமையிலான தமிழ்த் தேசியக் கட்சி ஆகியனவே இவ்வாறு ஒன்றிணைந்து புதிய கூட்டணியை அமைக்கவுள்ளன.

அத்துடன், இத்தரப்புக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற உரிமையை தம்வசம் கோருவதற்கும் முயற்சிகளை எடுக்கவுள்ளதாகவும் நம்பகரமான வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இந்த விடயம் சம்பந்தமாக, கொழும்பில் உள்ள ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரத்தின் இல்லத்தில் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களின் சந்திப்பொன்று இன்று நண்பகலில் நடைபெற்றிருந்தது.

இந்தச் சந்திப்பில், செல்வம் அடைக்கலநாதன், ஆர்.ராகவன், சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம், கோவிந்தன் கருணாகரம் எம்.பி. ரெலோ பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன், ஹென்றி மகேந்திரன், விந்தன் கனகரட்னம் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது, சம்பந்தனின் இல்லத்தில் நடைபெற்றிருந்த சந்திப்பு மற்றும் தமிழரசுக்கட்சியின் வெளிப்பாடுகள் தொடர்பில் முதலில் கருத்துக்கள் பரிமாற்றப்பட்டன.

அதனைத்தொடர்ந்துரூபவ் ஏற்கனவே ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் ஒன்றிணைந்து பணியாற்றிய தரப்புக்களாக காணப்படுகின்ற நிலையில் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலினையும் ஒன்றிணைந்து முகங்கொடுப்பது பற்றி ஆராயப்பட்டது. அதற்கு அமைவாக பங்கேற்ற தலைவர்கள் இடையே இணக்கப்பாடு எட்டப்பட்டது.

அதற்கமைவாக, அடுத்துவரும் நாட்களில் ஐந்து கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்கும் முக்கிய கூட்டமொன்று யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. 

இதன்போது, உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை முகங்கொடுப்பது, தொகுதிப்பகிர்வு, சின்னம், கூட்டமைப்பின் பெயரைப் பயன்படுத்துவது தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று சென்னையில் இருந்து திரும்பிய சி.வி.விக்னேஸ்வரனுக்கும் ரெலோ ஊடகப்பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/145454

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சரியான கூட்டணி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இவர்களிடம் கொடுத்து விடவேண்டும். இதுதான் சரியான நேரம். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, வாலி said:

சரியான கூட்டணி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இவர்களிடம் கொடுத்து விடவேண்டும். இதுதான் சரியான நேரம். 

பொருத்தமானதொரு நகர்வாகப்பார்க்கலாம். கூட்டமைப்பு இன்று கூட்டுடைந்த அமைப்பு .  அந்தத் தகமையை இழந்து பல ஆண்டுகள். பலகட்சிகள் கூட்டாக நிற்றலே கூட்டமைப்பு. அதிக கட்சிகளின் கூட்டினை உருவாக்கும் அணிக்கே கூட்டமைப்பு என்ற பெயர்  பொருந்தும். ஆனால் குழப்பங்காசியார் விடுவாரா?
பதிவு செய்யாத நிலையிருப்பதால் பெயரை உரிமைகோர முடியாதென்றில்லைத்தானே. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, வாலி said:

சரியான கூட்டணி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இவர்களிடம் கொடுத்து விடவேண்டும். இதுதான் சரியான நேரம். 

4 minutes ago, nochchi said:

பொருத்தமானதொரு நகர்வாகப்பார்க்கலாம். கூட்டமைப்பு இன்று கூட்டுடைந்த அமைப்பு .  அந்தத் தகமையை இழந்து பல ஆண்டுகள். பலகட்சிகள் கூட்டாக நிற்றலே கூட்டமைப்பு. அதிக கட்சிகளின் கூட்டினை உருவாக்கும் அணிக்கே கூட்டமைப்பு என்ற பெயர்  பொருந்தும். ஆனால் குழப்பங்காசியார் விடுவாரா?
பதிவு செய்யாத நிலையிருப்பதால் பெயரை உரிமைகோர முடியாதென்றில்லைத்தானே. 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயரை பயன் படுத்தக் கூடாது என்று….
ஆபிரகாம் சுமந்திரன் தெரிவித்துள்ளார். 
 
Posted

தமிழ்தேசிய கூட்டமைப்பு தன்னுடைய  பெயரில் உள்ளதாக ஆனந்தசங்கரி சொன்ன நினைவு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
34 minutes ago, nochchi said:

நானும் அவ்வாறே பார்க்கிறேன்

இனி மாவையும் சம்பந்தரும்  கம்பெடுத்து ஆடுவதைப்பார்க்க  ஆவல்?

Posted

தமிழரசு கட்சி ஏனைய கட்சிகளை ஓரம் கட்டுவது முதலே திட்டமிடப்பட்டது போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, nunavilan said:

தமிழ்தேசிய கூட்டமைப்பு தன்னுடைய  பெயரில் உள்ளதாக ஆனந்தசங்கரி சொன்ன நினைவு.

அது த.வி.கூ என நினைக்கிறேன்.

த. தே. கூ கட்சியும் இல்லை, PA, UNF போல பதிவு செய்யப்பட்ட கூட்டணியும் இல்லை என்றால் - யாருக்கும் உரிமை இராதே?

ஆனால் சும் வழக்கு போட்டு இழுத்தடிப்பார்.

3 hours ago, வாலி said:

சரியான கூட்டணி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இவர்களிடம் கொடுத்து விடவேண்டும். இதுதான் சரியான நேரம். 

ஜனநாயக போராளிகள், மணி, ஈரோஸ் லொட்டு, லொசுக்கு எல்லாத்தையும் சேக்கலாம்.

ஆனால் ஒரு சுரேஸ், சிறீகாந்தா, சிவாஜி எண்டு லிஸ்ட கொஞ்சம் உத்து பார்த்தா…வவுத்த கலக்குதே வாலி🤣

4 hours ago, ஏராளன் said:

ஆர்.ராகவன்,

இவர், அவரா?

அப்படி எண்டால் இந்த ஆணிய புடுங்கவே வேண்டாம்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, goshan_che said:

ஜனநாயக போராளிகள், மணி, ஈரோஸ் லொட்டு, லொசுக்கு எல்லாத்தையும் சேக்கலாம்.

ஆனால் ஒரு சுரேஸ், சிறீகாந்தா, சிவாஜி எண்டு லிஸ்ட கொஞ்சம் உத்து பார்த்தா…வவுத்த கலக்குதே வாலி🤣

உள்ளூராட்சி தேர்தலை விடுங்க, எல்லோரினதும் அவா பாராளுமன்றக் கதிரை. ஆனால் இருப்பதோ 7 கதிரைகள் தான் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில். இவர்களில் பெரும்பான்மையானோர் யாழ்ப்பாண மாவட்டக்காரர். கட்டாயம் ஒரு கதிரை ஈபிடிபிக்கு போகும். மிகுதி 6 கதிரைகளுக்கு அடிபடுவதைப் பார்க்க இப்பவே ஆவலாயுள்ளேன்!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, தமிழ் சிறி said:

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயரை பயன் படுத்தக் கூடாது என்று….
ஆபிரகாம் சுமந்திரன் தெரிவித்துள்ளார். 
 
இந்தக் கூட்டுகள் இதையும் எதிர்பார்த்திருப்பர் என்றே நினைக்கின்றேன்.

4 hours ago, விசுகு said:

நானும் அவ்வாறே பார்க்கிறேன்

இனி மாவையும் சம்பந்தரும்  கம்பெடுத்து ஆடுவதைப்பார்க்க  ஆவல்?

சம்மும் சாணக்கியமும் கதைத்துப் பேசி நகர்கின்றனர். இலக்கு உள்ளூராட்சித் தேர்தலல்ல. தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவி. துணை உறுதியாகிவிட்ட சூழலில் தலைமையை சும் உறுதிசெய்ய இந்த உடைப்புகளும் பிதற்றல்களும் தேவை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, goshan_che said:

இவர், அவரா?

அப்படி எண்டால் இந்த ஆணிய புடுங்கவே வேண்டாம்.

ஆர்.ராகவன் இவர் புளொட் அமைப்பின் உறுப்பினர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, விசுகு said:

இனி மாவையும் சம்பந்தரும்  கம்பெடுத்து ஆடுவதைப்பார்க்க  ஆவல்?

விசுகருக்கு குசும்பு கூட. இவர்கள் கம்பெடுத்தாடுவது? தடக்கி தலைகீழாய் விழ. இவ்வளவுகாலமும் ஆண்ட கட்சியை இடையனால கெட்டேன் மடையன் நான் என்று புலம்ப வேண்டியான். எப்போ எடுத்தாலும் தமிழ் அரசு, தமிழ்த்தேசியம் என்றால் சிங்களம் வெறுக்கிறதாம் என்று சொல்வார் சுமந்திரன். கழுதை தேய்ந்து கட் டெறும்பான கதை ஆக்கிப்போட்டாரே!  அக்காச்சி சொன்னது இவ்வளவு விரைவாய் நடந்தேறுது.

12 hours ago, nunavilan said:

தமிழ்தேசிய கூட்டமைப்பு தன்னுடைய  பெயரில் உள்ளதாக ஆனந்தசங்கரி சொன்ன நினைவு.

அது தமிழர் விடுதலை கூட்டணி உதய சூரியன் சின்னம்.

12 hours ago, தமிழ் சிறி said:

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயரை பயன் படுத்தக் கூடாது என்று….
ஆபிரகாம் சுமந்திரன் தெரிவித்துள்ளார். 
 
த. தே. கூட்டமைப்பு புலிகளால் ஏற்படுத்தப்பட்டது. ஆயுதப்போராட்டத்தை வெறுக்கிறேன் என்றவர், அதைவிட புலிகளின் பெயரை பயன்படுத்தி தான் வாக்கு கேட்கவில்லை என்று ஒரு தேர்தலின் பின் கூறியவர், ஆனால் புலிகளால் உருவாக்கப்பட்ட கட்சியிலேயே களமிறங்கியவர். இவருக்கு என்ன உரிமை இருக்கிறது  த. தே. கூட்டமைப்பின் பெயரை தனதாக்கி தன்வசம் வைத்திருக்கவும் மற்றவர்களை தடுக்கவும்? வேண்டுமென்றால் தமிழரசுக்கட்சியை கட்டிப்பிடித்திருக்கட்டும். அழிவு; ஆரவாரத்தோடும் அகந்தையோடும் வரும். அந்த அறிகுறி தென்படுகிறது.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ஏராளன் said:

ஆர்.ராகவன் இவர் புளொட் அமைப்பின் உறுப்பினர்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுமந்திரனுக்கும் கூட்டமைப்பின் இரண்டாவது சிலீப்பர் செல்லாகிய சாணாக்கியனுக்கும் உள்ளூராட்சித் தேர்தலில் யார் வெல்வது என்பது முக்கியமில்லை. இந்தத் தேர்தலைப் பயன்படுத்தி கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் ஏனைய கட்சிகளது பலத்தை இல்லாதொழிக்க அவர்களை வெளியேற்றி அதன்பின்பு சம்பந்தனுக்குப் பின்பாக தானே தானைத்தலைவர் என முடிசூட்டுவது தெய்யத்தக்கா என சேர்ந்து கூத்தாட சாணாக்கியன் இருக்கிறார். 

ஐந்து தமிழ்க்கட்சிகளும் ஒன்றாகச் சேர்ந்து கூட்டமைப்புக்கு உரிமை கோரினால் வழக்குப்போட்டு தனது பொறுக்கித்தனமான செயலை முன்னிறுத்துவார். சிங்களத்துக்கு இப்படியான சூழல்தான் தமிழ் அரசியலில் தேவை என்பதால்  சிங்கள நீதி நிர்வாகம் வழக்கைக் கிடப்பில் போடும்.

ஏற்கனவே தந்தை செல்வாவால் உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியும் அதன் சின்னமாகிய உதயசூரியனும் சங்கரியரால் முடக்கப்பட்டு கிடப்பில் வழக்கு இருக்கு.

  • Like 1
Posted
14 hours ago, goshan_che said:

அது த.வி.கூ என நினைக்கிறேன்.

த. தே. கூ கட்சியும் இல்லை, PA, UNF போல பதிவு செய்யப்பட்ட கூட்டணியும் இல்லை என்றால் - யாருக்கும் உரிமை இராதே?

ஆனால் சும் வழக்கு போட்டு இழுத்தடிப்பார்.

ஜனநாயக போராளிகள், மணி, ஈரோஸ் லொட்டு, லொசுக்கு எல்லாத்தையும் சேக்கலாம்.

ஆனால் ஒரு சுரேஸ், சிறீகாந்தா, சிவாஜி எண்டு லிஸ்ட கொஞ்சம் உத்து பார்த்தா…வவுத்த கலக்குதே வாலி🤣

இவர், அவரா?

அப்படி எண்டால் இந்த ஆணிய புடுங்கவே வேண்டாம்.

4 hours ago, satan said:

விசுகருக்கு குசும்பு கூட. இவர்கள் கம்பெடுத்தாடுவது? தடக்கி தலைகீழாய் விழ. இவ்வளவுகாலமும் ஆண்ட கட்சியை இடையனால கெட்டேன் மடையன் நான் என்று புலம்ப வேண்டியான். எப்போ எடுத்தாலும் தமிழ் அரசு, தமிழ்த்தேசியம் என்றால் சிங்களம் வெறுக்கிறதாம் என்று சொல்வார் சுமந்திரன். கழுதை தேய்ந்து கட் டெறும்பான கதை ஆக்கிப்போட்டாரே!  அக்காச்சி சொன்னது இவ்வளவு விரைவாய் நடந்தேறுது.

அது தமிழர் விடுதலை கூட்டணி உதய சூரியன் சின்னம்.

த. தே. கூட்டமைப்பு புலிகளால் ஏற்படுத்தப்பட்டது. ஆயுதப்போராட்டத்தை வெறுக்கிறேன் என்றவர், அதைவிட புலிகளின் பெயரை பயன்படுத்தி தான் வாக்கு கேட்கவில்லை என்று ஒரு தேர்தலின் பின் கூறியவர், ஆனால் புலிகளால் உருவாக்கப்பட்ட கட்சியிலேயே களமிறங்கியவர். இவருக்கு என்ன உரிமை இருக்கிறது  த. தே. கூட்டமைப்பின் பெயரை தனதாக்கி தன்வசம் வைத்திருக்கவும் மற்றவர்களை தடுக்கவும்? வேண்டுமென்றால் தமிழரசுக்கட்சியை கட்டிப்பிடித்திருக்கட்டும். அழிவு; ஆரவாரத்தோடும் அகந்தையோடும் வரும். அந்த அறிகுறி தென்படுகிறது.

நன்றி கோசான், சாத்தான். கூட்டமைப்பு.கூட்டணி சிறு  பெயர் குழப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ்த் தேசியக் கட்சிகள் உள்ளிட்ட தரப்புகள் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கூட்டணி தொடர்பில் கலந்துரையாடல்

By VISHNU

12 JAN, 2023 | 07:29 PM
image

(எம்.நியூட்டன்)

தமிழ்த் தேசியக் கட்சிகள் உள்ளிட்ட தரப்புகள் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கூட்டணியொன்றை அமைக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், ஸ்ரீகாந்தா,  எம்.கே.சிவாஜிலிங்கம், பா.கஜதீபன், வி.மணிவண்ணன், க.சர்வேஸ்வரன், குருசாமி சுரேந்திரன், விந்தன் கனகரட்ணம், சபா.குகதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டதுடன் உள்ளூராட்சிமன்றங்களின் பிரதிநிதிகள் அடங்கிய 25 பேர் வரையானோர் குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.

பல்வேறுபட்ட தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றாக கூட்டணி அமைத்து எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் களமிறங்க தீர்மானித்துள்ளது.

க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), த.சித்தார்த்தன் தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்), சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்), என்.சிறிகாந்தா தலைமையிலான தமிழ் தேசிய கட்சி என்பனவே புதிய கூட்டணியாக உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்ளவுள்ளன.

மேலும் யாழ் மாநகர முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் தலைமையிலான அணி உள்ளிட்ட மேலும் சில தரப்புகள் ஒன்றாக போட்டியிட இணக்கம் கண்டுள்ளதாக தெரியவருகிறது.

ஆனாலும் கட்சிகளுக்கிடையே பல்வேறு சின்னங்கள் பற்றி ஆராயப்பட்டாலும் பொதுச் சின்னம் ஒன்றை கொண்டு வந்து உடன்பாட்டை ஏற்படுவதில் உள்ள தாமதம் காரணமாக கூட்டணி அறிவிப்பு தாமதமாகி வருகின்றன. 

https://www.virakesari.lk/article/145663

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஏராளன் said:

ஆனாலும் கட்சிகளுக்கிடையே பல்வேறு சின்னங்கள் பற்றி ஆராயப்பட்டாலும் பொதுச் சின்னம் ஒன்றை கொண்டு வந்து உடன்பாட்டை ஏற்படுவதில் உள்ள தாமதம் காரணமாக கூட்டணி அறிவிப்பு தாமதமாகி வருகின்றன. 

88 இல் ஈரோஸ் என்ன சின்னத்தில் நின்றது என யாருக்கும் நினைவிருக்கா? வெளிச்சவீடா? அது இப்போ டெலோவிடம் என நினைக்கிறேன். அதில் கேட்கலாம் ?

பெயர் ? அசல் தமிழ் தேசிய கூட்டமைப்பு (Real IRA மாரி 🤣). 

Posted

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பல காலமாக சட்ட ரீதியாக பதியப்படாமல் ஏதோ ஒரு காரணத்துக்காக இழுத்தடிப்புச் செய்து வந்ததாக ஞாபகம். சரியா ?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, இணையவன் said:

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பல காலமாக சட்ட ரீதியாக பதியப்படாமல் ஏதோ ஒரு காரணத்துக்காக இழுத்தடிப்புச் செய்து வந்ததாக ஞாபகம். சரியா ?

ஓம்

Posted
5 minutes ago, goshan_che said:

ஓம்

அப்படியானால் இன்னொரு கட்சி இல் பெயரைப் புதிய கட்சியாகப் பதியலாம். ஆனால் ஏதாவது ஒரு சட்ட நுணுக்கத்தால் சட்டம் தெரிந்தவர்களால் அக் கட்சியை இறுதி நேரத்தில் தேர்தலில் போட்டியிட முடியாதவாறு முடக்கச் சந்தர்ப்பம் கிடைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
41 minutes ago, goshan_che said:

88 இல் ஈரோஸ் என்ன சின்னத்தில் நின்றது என யாருக்கும் நினைவிருக்கா? வெளிச்சவீடா? அது இப்போ டெலோவிடம் என நினைக்கிறேன். அதில் கேட்கலாம் ?

பெயர் ? அசல் தமிழ் தேசிய கூட்டமைப்பு (Real IRA மாரி 🤣). 

ஆம் வெளிச்ச வீடு.

வெளிச்ச வீட்டிற்கா போட்டீர்கள்…. உங்களுக்கு வெளிச்சம் காட்டுறம் என்று இந்திய இராணுவமும் ஒட்டுக் குழுக்களும் ஆடிய கோரத்தாண்டவம் மறக்க முடியாதது.

ஆம் தமிழ் தேசிய கூட்டமைப்பை உரிமை கோர இவர்களுக்கு உரிமை உண்டு. அதிகளவான கூட்டமைப்பிலிருந்து பிரிந்த கட்சிகள் என்ற வகையில்.

ஆனால் இவர்களையும் நம்பலாமா????

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயர் எவருக்கும் கிடைக்காது. பிரிந்து செல்ல விரும்பும் கட்சிகள் பிரிந்து செல்லலாம். அதனால் தான் சாணக்கியமாக😂 (தந்திரமாக) தமிழரசுக் கட்சி இன்னும் கூட்டமைப்பில் தாம் இருக்கின்றோம் எனக் கூறி வருகின்றது.  முடிவாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை முடக்கி விடலாம். அதுதான் தமிழரசுக் கட்சியின் நிகழ்ச்சி நிரல். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்போ பலர் கூடலாம், பேசலாம், கலையலாம், நாளைக்கு சிலர்  இன்னொன்றையும் உருவாக்கலாம் எதுவும் நடக்கலாம். ஆனால் ஒன்று! இவர்களின் இணைவு வெறும் பதவியையும், பழிவாங்கலையும் நோக்கமாக கொண்டுள்ளதாக இருக்கக்கூடாது, மக்களுக்கு "பணி செய் பலனை எதிர்பாராதே" என்கிற கோட்பாட்டுடன் விட்டுக்கொடுப்புடன்  செயற்பட்டால் எல்லாம் தானாகவே தேடி வரும். இது சுலபமானதல்ல பல பொய்களை கூறுவார்கள், கேள்வி கேட்பார்கள், சேறடிப்பார்கள், நாறடிப்பார்கள்,  ஓரங்கட்டுவார்கள், தன்மானத்தை சோதிப்பார்கள். வலி, வெறுப்பு, அவமானம், இழப்பு என பலதை கடந்தாலே அதை பெறமுடியும். இதை பலர் சும்மா கதிரையில் இருந்து தட்டிக்கொண்டுபோய் விடுவார்கள். வெறும் சந்தர்ப்பம், உணர்ச்சி என்பவற்றை கொண்டு கட்டியெழுப்பினால் அது நிலைத்து நிற்காது கேலிக்குரியதாகும். யார் பிரித்து விட்டார்களோ அவர்களே சிரிக்கவும் அவர்கள் காலடியில் விழவும் செய்துவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, இணையவன் said:

அப்படியானால் இன்னொரு கட்சி இல் பெயரைப் புதிய கட்சியாகப் பதியலாம். ஆனால் ஏதாவது ஒரு சட்ட நுணுக்கத்தால் சட்டம் தெரிந்தவர்களால் அக் கட்சியை இறுதி நேரத்தில் தேர்தலில் போட்டியிட முடியாதவாறு முடக்கச் சந்தர்ப்பம் கிடைக்கலாம்.

அப்படி என்றுதான் நினைக்கிறேன்.

ஆனால் வழக்கு போட்டு தேர்தல்வரையாவது இழுக்க முடியும்.

3 hours ago, MEERA said:

ஆம் வெளிச்ச வீடு.

வெளிச்ச வீட்டிற்கா போட்டீர்கள்…. உங்களுக்கு வெளிச்சம் காட்டுறம் என்று இந்திய இராணுவமும் ஒட்டுக் குழுக்களும் ஆடிய கோரத்தாண்டவம் மறக்க முடியாதது.

ஆம் தமிழ் தேசிய கூட்டமைப்பை உரிமை கோர இவர்களுக்கு உரிமை உண்டு. அதிகளவான கூட்டமைப்பிலிருந்து பிரிந்த கட்சிகள் என்ற வகையில்.

ஆனால் இவர்களையும் நம்பலாமா????

ஓம் எனக்கு நல்ல இப்ப நியாபகம் வருகிறது. கறுப்பு வெள்ளை தாளில் வெளிச்ச வீடு படத்துடன் தேர்தலுக்கு முதல் நாள், இரவோடிரவாக “பெடியள் ஈரோசுக்கு போடட்டாம்” என்ற தகவல் பரவியது.

மறுநாள் அம்மம்மா கிழவி ஈறாக அனைவரும் திரண்டு போய் வாக்குப்போட்டதும், அடுத்தநாள் ஈபி காரர் உம் என்று மூஞ்சையோடு சென்றியில் கெடுபிடி செய்ததும்.

இவர்களை நம்பலாமா? இல்லை. ஆனால் எம்பி ஆக வேண்டும் என்றால் இனி ஒழுங்காக நடந்தால் மட்டுமே முடியும் என்ற நிலையை உருவாக்கினால் - வேறு வழி இல்லாமல் வழிக்கு வரக்கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, வாலி said:

தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயர் எவருக்கும் கிடைக்காது. பிரிந்து செல்ல விரும்பும் கட்சிகள் பிரிந்து செல்லலாம். அதனால் தான் சாணக்கியமாக😂 (தந்திரமாக) தமிழரசுக் கட்சி இன்னும் கூட்டமைப்பில் தாம் இருக்கின்றோம் எனக் கூறி வருகின்றது.  முடிவாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை முடக்கி விடலாம். அதுதான் தமிழரசுக் கட்சியின் நிகழ்ச்சி நிரல். 

ஓம். 

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.