Jump to content

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தக் கூடாது - 4 பௌத்த மகா பீடங்களும் ஜனாதிபதியிடம் நேரடியாக வலியுறுத்தல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
image

(எம்.மனோசித்ரா)

நாட்டின் இறையான்மைக்கும், சுயாதீனத்தன்மைக்கும், தேசிய பாதுகாப்பிற்கும் பாரதூரமான அச்சுறுத்தலாக அமையும் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முழுமையாக நடைமுறைப்படுத்தக் கூடாது என்று நான்கு பௌத்த மகா பீடங்களும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரடியாக வலியுறுத்தியுள்ளன.

329039480_911181336571969_22878084983837

கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (02) வியாழக்கிழமை மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டார்.

இதன் போதே மல்வத்து பீட மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர், அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர், அமரபுர பீடத்தின் மகாநாயக்க தொடம்பான ஸ்ரீ சந்திரசிறி தேரர் மற்றும் ராமாஞ்ஞ பீடத்தின் மகாநாயக்க மல்குலாவே ஸ்ரீ விமல தேரர் ஆகியோரால் கையெழுத்திடப்பட்ட கடிதம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நிறைவேற்றதிகாரி என்ற ரீதியில் நீங்கள் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ள கருத்து நாட்டுக்குள் பெரும் பதற்றமான சூழல் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள், மரபு ரீதியானதும் வரலாற்று சிறப்பு மிக்கதுமான ஸ்தலங்கள் தொடர்பான அறிக்கைகள் மற்றும் மத ரீதியான அமைப்புக்களை ஒழுங்குபடுத்தல் உள்ளிட்ட அதிகாரங்களை செயற்படுத்த மாகாணசபைகளுக்கு வாய்ப்பளிக்கப்படுகின்றமையானது நாட்டில் பிரிவினைவாதம் செயல்பட வழிவகுக்கும்.

இதற்கு முன்னர் யுத்தம் பதவி வகித்த நிறைவேற்றதிகார ஜனாதிபதிகளால் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை முழுமையாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காமைக்கான காரணம் நாட்டுக்குள் பதற்றமான நிலைமை உருவாகி விடக் கூடா என்பதனாலாகும் என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள்.

மக்களின் இறையான்மையைப் பாதுகாப்பதற்காக முன்னின்று செயற்படும் நிறைவேற்றதிகார ஜனாதிபதியொருவர், மத்திய அரசாங்கத்தின் சுயாதீனத்தன்மை வீழ்ச்சியடைவதற்கு காரணமாக அமையும் இவ்வாறான அரசியலமைப்பு திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கின்றமையானது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தும்.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் பிராந்திய மற்றும் உலகலாவிய சக்திகளின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்காக சில நிபந்தனைகளுக்கு இணக்கப்பாட்டை எட்ட வேண்டிய அழுத்தம் ஏற்படுகின்றது. நாட்டின் இறையான்மை மற்றும் சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இவ்வாறான யோசனைகள் நிராகரிக்கப்பட வேண்டும் என்பதை மகா சங்கத்தினர் என்ற ரீதியில் நாம் வலியுறுத்துகின்றோம்.

75 ஆவது சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாடும் நாம் இலங்கையர்கள் என்ற ரீதியில் இனம், மத பேதமின்றி நாட்டின் பாதுகாப்பு மற்றும் அமைதிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டமைக்கான சான்றுகள் எமது வரலாற்றில் காணப்படுகின்றன.

3 தாசாப்தங்களுக்கும் அதிக காலம் பாரதூரமான உள்நாட்டு யுத்தத்தினை எதிர்கொண்டுள்ளோம். இதன் காரணமாக பாரியளவில் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றது. வடக்கிலுள்ள அரசியல்வாதிகளுக்கு அமைச்சரவையில் அங்கத்துவம் வகிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான ஒத்துழைப்புக்களும் வழங்கப்பட்டுள்ளன.

எவ்வாறிருப்பினும் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தி , அதன் ஊடாக காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் உள்ளிட்டவற்றை மாகாண சபைகளுக்கு வழங்குவதானது அரச நிர்வாகத்தை சீர்குலைப்பதாகவே அமையும்.

இதன் மூலம் நாட்டின் ஸ்திரத்தன்மை, இறையான்மை மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாரதூரமான பிரச்சினைகள் ஏற்படக் கூடும்.

எனவே 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நடைமுறைப்படுத்தக் கூடாது என்பதை மகா சங்கத்தினர் என்ற ரீதியில் வலியுறுத்துகின்றோம்.' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தக் கூடாது - 4 பௌத்த மகா பீடங்களும் ஜனாதிபதியிடம் நேரடியாக வலியுறுத்தல் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
Posted

4ம் திகதி ஊர்வலம் போகினம் ..இடையிலை மறித்து அடியுங்கோ....அப்ப சரிவரும் ..தாமதிக்கக்கூடாது...

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஒருத்தனிலும் பிழையில்லை, இந்த 13 நம்பரிலதான் பிரச்சனை. 

🤣

Edited by Kapithan
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
44 minutes ago, Kapithan said:

ஒருத்தனிலும் பிழையி, இந்த 13 நம்பரிலதான் பிரச்சனை. 

🤣

ஆகவே நம்பரை மாத்தினாப் போச்சு..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவை ஏற்கச் சொன்னாலும்.. தமிழ் மக்கள் வடக்குக் கிழக்கு இணைந்த பூர்வீக தாயகத்தில் அவர்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட கூட்டாட்சிக்கு மாற்றீடாக 13 யோ.. 13 + யோ.. 13 ஏ யையோ ஏற்கத் தயாரில்லை.

எனவே தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு விரோதமான வகையில் செயற்பட்டு.. சொறீலங்கா அரசுக்கு எல்லா  இராணுவ வழிமுறைகளிலும் உதவி செய்து தமிழ் மக்களின் தேச அரசியல் சமூக பொருண்மிய விடுதலைக்கு முட்டுக்கட்டையிட்ட மேற்குலகும்.. ஹிந்தியாவும்.. அடங்கிய சர்வதேசம் தான்.. இப்போ தீர்வைப் பெற்றுக் கொடுத்தாகனும். அவர்களுக்குள்ள கடப்பாட்டை எனியும் சாக்குப் போக்குச் சொல்லி தட்டிக்கழிக்க முடியாது. 

ஏனெனில்.. விடுதலைப் புலிகளை அழிப்பதனூடாகவே தான் 13 + அமுல்படுத்த நாம் உதவுவோம் என்ற உறுதிமொழியை சிங்களத் தலைமைகள் ஹிந்தியாவுக்கும் சர்வதேசத்திற்கும் அளித்திருந்த நிலையில்.. அதையே மீறும் வகையில் அவர்கள் செயற்படும் நிலையில்.. தமிழ் மக்களின் விருப்பத் தீர்வை பெற்றுக் கொடுப்பதை தவிர சர்வதேசத்திற்கு மாற்று வழிக்கு இடமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, nedukkalapoovan said:

ஏனெனில்.. விடுதலைப் புலிகளை அழிப்பதனூடாகவே தான் 13 + அமுல்படுத்த நாம் உதவுவோம் என்ற உறுதிமொழியை சிங்களத் தலைமைகள் ஹிந்தியாவுக்கும் சர்வதேசத்திற்கும் அளித்திருந்த நிலையில்.. அதையே மீறும் வகையில் அவர்கள் செயற்படும் நிலையில்.. தமிழ் மக்களின் விருப்பத் தீர்வை பெற்றுக் கொடுப்பதை தவிர சர்வதேசத்திற்கு மாற்று வழிக்கு இடமில்லை.

இது முக்கியமான விடயம்  👆

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, nedukkalapoovan said:

ஏனெனில்.. விடுதலைப் புலிகளை அழிப்பதனூடாகவே தான் 13 + அமுல்படுத்த நாம் உதவுவோம் என்ற உறுதிமொழியை சிங்களத் தலைமைகள் ஹிந்தியாவுக்கும் சர்வதேசத்திற்கும் அளித்திருந்த நிலையில்.. அதையே மீறும் வகையில் அவர்கள் செயற்படும் நிலையில்.. தமிழ் மக்களின் விருப்பத் தீர்வை பெற்றுக் கொடுப்பதை தவிர சர்வதேசத்திற்கு மாற்று வழிக்கு இடமில்லை.

 

17 minutes ago, Kapithan said:

இது முக்கியமான விடயம்  👆

இதனைத்தான் நேற்று சொன்னேன்.

இவர்கள் செய்யும் வேலை எமக்கு உதவும். சுஜ நிர்ணய தேர்தலை நடத்துவதையே நியாயம் என்று உலகு புரிந்து கொள்ளும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Nathamuni said:

இவர்கள் செய்யும் வேலை எமக்கு உதவும். சுஜ நிர்ணய தேர்தலை நடத்துவதையே நியாயம் என்று உலகு புரிந்து கொள்ளும். 

அது 13 ஐ தராமல் விட்டால்.

ஆனால் காணி, பொலிஸ் அதிகாரத்தை மத்தியின் கையில் வைத்திருக்கும் ஆணை குழுவை அமைத்து விட்டு, லெட்டர்பேட்டில் மட்டும் மாகாண காணி அமைச்சர், மாகாண பொலிஸ் அமைச்சர் என்ற பெயர்களை உடைய அலங்கார பதவிகளை கொடுத்து, அதை “பொதி” என சம்+சும் உம் ஏற்று கொண்டால்?

அதாவது 13 மைனஸ், மைனஸ். ஆனால் பெயர் 13.

அப்போ இந்தியாவுக்கும் திருப்தி.

மேற்கும் தாம் தமிழருக்கு எதையோ கொடுத்து விட்டதாக பீத்தி கொள்ளலாம்.

தமிழரை தவிர மிச்சம் எல்லாருக்கும் win-win solution. 
 

தமிழருக்கு வழமைபோல் சுத்தமான மாத்தறை தொதோல் அல்லது இந்தியன் அல்வா 🤣

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Nathamuni said:

 

இதனைத்தான் நேற்று சொன்னேன்.

இவர்கள் செய்யும் வேலை எமக்கு உதவும். சுஜ நிர்ணய தேர்தலை நடத்துவதையே நியாயம் என்று உலகு புரிந்து கொள்ளும். 

வடக்கு கிழக்கை தனி அலகாகக் கொள்வதற்கான வேலைகள் நடந்துகொண்டிருப்பதாக நம்புகிறேன். 

http://slguardian.org/vatican-urges-to-have-separate-cardinal-for-north-east-of-sri-lanka/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

13 ஆவது திருத்தத்திற்கு எதிராக ஒட்டுமொத்த மக்களும் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் - விமல் வீரவன்ச

By DIGITAL DESK 5

03 FEB, 2023 | 11:33 AM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் சாதிய அடிப்படையில் முரண்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் தோற்றம் பெறும்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கு எதிராக ஒட்டுமொத்த மக்களும் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள பௌத்த கேந்திர மத்திய நிலையத்தில் வியாழக்கிழமை (02) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நாட்டின் பொருளாதாரத்தை திட்டமிட்டு பலவீனப்படுத்தினாரா என்ற சந்தேகம் காணப்படுகிறது. தவறு என்று தெரிந்தும் தவறான தீர்மானங்களை அவர் செயற்படுத்தினார்.

பொருளாதார பாதிப்பை முன்னிலைப்படுத்தி தற்போது நாட்டுக்கு எதிராக பல தீய சக்திகள் அரச ஆதரவுடன் செயற்படுகின்றன.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் தீர்க்கமான பேச்சுவார்த்தைகளில் ஈடுப்பட்டுள்ளார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் இந்தியாவினால் பலவந்தமாக இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தினால் இலங்கை இயல்பாகவே சமஷ்டி முறையிலான நாடாக அங்கிகரிக்கப்படும்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் இலங்கை மீது கட்டப்பட்ட கூர்மையான கத்திகளை போல் உள்ளது,இந்த கத்திகள் அரசியலமைப்பு திருத்தம் என்ற கயிற்றால் கட்டப்பட்டுள்ளதாக 13 ஆவது திருத்தம் தொடர்பில் தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளார்கள்.

நாட்டின் சுயாதீனத்திற்கு பாதிப்பு ஏற்பட கூடாது என்பதற்காகவே அரசியலமைப்பின் ஊடாக ஒருசில தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த தடைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தகர்க்க முயற்சிக்கிறார்.13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சாதிய அடிப்படையில் தமிழ் மக்கள் மத்தியில் முரண்பாடுகள் தோற்றம் பெறும்.

வடக்கு மற்றும் கிழக்கில் வெள்ளாளர் சாதியினர் பொலிஸ் அதிகாரத்தை முழுமையாக ஆக்கிரமித்து கீழ் சாதியினரை அடிமைபோல் செயற்படுத்துவார்கள்.வடக்கு மாகாணத்தில் இன்றும் சாதி அடிப்படையிலான வேறுப்பாடுகள் புரையோடி போயுள்ளன.

13 ஆவது திருத்தம் ஊடாக நாட்டில் இல்லாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உயிர் கொடுக்க முயற்சிக்கிறார்.

1987 ஆம் ஆண்டு முதல் மக்களாணையுடன் ஆட்சிக்கு வந்த அரச தலைவர்கள் எவரும் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை.

ஆனால் மக்களாணை இல்லாமல் மக்களால் வெறுக்கப்படும் 134 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த முயற்சிக்கிறார்.

நாட்டுக்கு எதிரான இவரது செயற்பாடுகளுக்கு மகாசங்கத்தினர் ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது.நாட்டின் சுயாதீனத்தை பாதுகாக்க நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக போராட வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/147309

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, ஏராளன் said:

.13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சாதிய அடிப்படையில் தமிழ் மக்கள் மத்தியில் முரண்பாடுகள் தோற்றம் பெறும்.

எப்படியெல்லாம் தமிழரை பிரித்து அடிபட விட்டார்கள் என்பதற்கு இவரின் கூற்று நல்ல சான்று. இனி வெளிப்படையாக சாதி, சமயம், பிரதேசம், தமிழன், முஸ்லிம் என்று களை கட்டி பதின்மூன்றை இவர்களை வைத்தே இல்லாமற் செய்யப்போகிறார்கள்.

17 hours ago, ஏராளன் said:

வடக்கு மற்றும் கிழக்கில் வெள்ளாளர் சாதியினர் பொலிஸ் அதிகாரத்தை முழுமையாக ஆக்கிரமித்து கீழ் சாதியினரை அடிமைபோல் செயற்படுத்துவார்கள்.

நீங்கள் அதிகாரத்தை வைத்து தமிழரை எப்படி நடத்தினீர்கள்? அது நமது பிரச்சனை, அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஆடு நனையுதென்று அழுததாம் ஓநாயொன்று. இந்த கள்ளனுக்கு கொஞ்சம் புத்தி வேலை செய்யுது. இனக்கலவரம், இரத்த ஆறு என்று எச்சரித்து மாட்டுப்படாமல் மாத்தி வாசிக்கிறான். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 4/2/2023 at 02:15, ஏராளன் said:

வடக்கு மற்றும் கிழக்கில் வெள்ளாளர் சாதியினர் பொலிஸ் அதிகாரத்தை முழுமையாக ஆக்கிரமித்து கீழ் சாதியினரை அடிமைபோல் செயற்படுத்துவார்கள்.வடக்கு மாகாணத்தில் இன்றும் சாதி அடிப்படையிலான வேறுப்பாடுக

ஏன் சிங்களவங்களுக்குள் சாதிய முறை பிரச்சனை இல்லயே? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவர்களுக்குள்ளும் இருக்கு, நம்மைப்போல் தீவிரமில்லை. இல்லாதிருந்தால் இவ்வளவு யதார்த்தமாக தக்க சமயத்தில் தங்களது அடக்குமுறைக்கு நிகராக  இவரால் இந்த காரணத்தை கையிலெடுக்க முடிந்திருக்காது. ஆனால் சமகால களநிலை அவர்சொல்வதுபோல் இல்லை நம்மிடை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தமது ஊத்தைகள் தெரியாத மாதிரி, அடுத்தவர்கள் விடயமாக அழுகுது ஓநாய்.  சிங்களத்திலும் சாதிய வேறுபாடு தாராளம்.

சஜித் ஜதேக யில் இருந்து வெளியே போய் தனிக்கட்சி ஆரம்பித்த காரணம் சாதீயம்.

ஜேஆர் இடமிருந்து, காமினி, லலித் வசம் ஜதேக கைமாறாமல் இருக்க, சஜித் தகப்பன் பிரேமதாச பட்டபாடு வேறு கதை.

கிரிக்கட் சனத் ஜெயசூரியா, தலைமத்துவத்துக்கு வர முடியாது போனதும் சாதியம்.

கண்டிச்சிங்கள சிறிமாவோ மகள் சந்திரிகா கட்டியது, குறைவான, நடிகர் விஜயகுமாரதுங்கவை என்று சகோதரர் அனுர ஒதுக்கி வைத்து இருந்தார்.

வின்ஸ்ரன் சேர்சில், இந்தியாவுக்கு ஏன் சுதந்திரம் தரக்கூடாதென சொன்ன நொண்டிசாக்கு போல, இந்த இனவாதியின் கதை இருக்குது.

இனத்துக்குள், சாதியம், புரையோடிப் போய் இருப்பதால், இனமே, சிங்களத்துக்கு அடிமைகளாக இருக்கவேண்டும்.

பலே வெள்ளையத்தேவா.... 🥹😊

1 hour ago, ragaa said:

ஏன் சிங்களவங்களுக்குள் சாதிய முறை பிரச்சனை இல்லயே? 

 

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, satan said:

அவர்களுக்குள்ளும் இருக்கு, நம்மைப்போல் தீவிரமில்லை. 

இதுதான் உண்மை.

அண்மையில் திண்ணையில் இங்கிலாந்து, ஜேர்மன் மக்கள் தமக்கிடையே பிரதேசவாதம் பார்ப்பதை பற்றி பலரும் கதைத்திருந்தோம். 

அதில் கூட…ஒரு அளவுக்கு மேல் இந்த மக்கள் இந்த பிரிவினைகளை இறுக்கி பிடிக்கமாட்டார்கள் என கதைத்தோம்.

சிங்களவரின் மேல்/கீழ் நாட்டு சிங்களவர், சாதிய பிரிவினைகளும் இப்படித்தான்.

குறிப்பாக அநகாரிக தர்மபாலவின் வருகையின் பின் அவர்கள் மத்தியில் இந்த பிரிவினைகள் எம்மளவுக்கு தீவிரமில்லை என்பதே உண்மை.

எம்மிடையே 83-2009 வரை தணிந்திருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, satan said:

தக்க சமயத்தில் தங்களது அடக்குமுறைக்கு நிகராக  இவரால் இந்த காரணத்தை கையிலெடுக்க முடிந்திருக்காது

2009 க்கு பின்னாக தமிழர் இடையே சாதி வாதங்களும், மதவாதங்களும் உருவேற்றி வளர்க்கப்பட்டமை ஒன்றும் தற்செயலானதும் அல்ல, விபத்தும் அல்ல.

இப்படி ஒரு கட்டம் வரும் போது …

இதை காரணம் காட்டி பொலிஸ், காணி அதிகாரங்களை தருவதை தவிர்க்கலாம் என்பது பேரினவாதிகளின் நீண்ட காலத்திட்டம்.

கிழக்கில்…அதிகாரங்களை பகிர்வது தமிழ்-முஸ்லீம் கலவரத்தை தூண்டும்.

வடக்கில்…அது சாதி கலவரத்தை தூண்டும்.

இப்படித்தான் இந்தியா, மேற்க்குக்கு சொல்லி, 13 ஐ யானை தின்ற விளாம்பழம் ஆக்க போகிறார் நரி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனமுரண்பாடு, இனக்கலவரம், இனப்படுகொலை, இரத்த ஆறு, என்கிற எச்சரிக்கை சுருதி மாறி  சாதிய முரண்பாடு, சமயமுரண்பாடு, பிரதேசவாத முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் என்று இழுப்பார்கள் அவர்கள், அதற்கு நம்மவர் சிலரும் ஒத்தூதுவார்கள். நரியார் பதவிக்கு வந்ததும் வராததுமாக அவசர அவசரமாக தட்டு வைத்து அழைத்தவர்களைப்பார்க்க அது புரிகிறது. தான் போடுற திட்டத்தை இம்மியளவேனும் பிசகாமல் நிறைவேற்றுபவர்களை சிங்களம் நன்றாகவே அறிந்து தக்க நேரத்தில் கையாளுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாதீய தொல்லையால் யேசுவின் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறிய தமிழர்களும்  இனக்கலவரங்களிலும், இனவாத குண்டு வெடிப்புகளிலும் பலியானார்கள்.உலக கிறிஸ்தவர்கள் யாராவது குரல் கொடுத்தார்களா? இதற்கு ஆண்டவர் வந்து பதில் சொல்ல வேண்டாம். உயிர்ப்புடன் இருக்கும் வத்திக்கானாவது வந்து பதில் சொல்லுமா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, குமாரசாமி said:

சாதீய தொல்லையால் யேசுவின் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறிய தமிழர்களும்  இனக்கலவரங்களிலும், இனவாத குண்டு வெடிப்புகளிலும் பலியானார்கள்.உலக கிறிஸ்தவர்கள் யாராவது குரல் கொடுத்தார்களா? இதற்கு ஆண்டவர் வந்து பதில் சொல்ல வேண்டாம். உயிர்ப்புடன் இருக்கும் வத்திக்கானாவது வந்து பதில் சொல்லுமா?

வத்திக்கானை நீங்கள் என்ன யேசுவின் போதனை படி நடக்கும் அமைப்பு என்றா நினைக்கிறீர்கள்.

இந்து மடாலயங்கள், சைவ ஆதீனங்கள் போல் வத்திகானும் ஒரு அதிகார மையமே.

அது வரலாறில் தானாகவே முன்னின்று நடாத்திய அநியாயங்களும், கண்டுகொள்ளாமல் விட்ட அநியாயங்களும் ஏராளம்.

நிற்க - இது இந்து, சைவ, பெளத்த, யூத, எல்லா மடாலயங்களுக்கும் மேல் வைக்கப்பட கூடிய குற்றச்சாட்டுத்தான்.

வத்திக்கான் எமக்கு குரல் கொடுக்க வேண்டுமாயின், நமது கத்தோலிக்கர்கள் கொழும்பின் பிடியில் இருக்கும் சிங்கள கர்தினாலிடம் இருந்து விலகி, நமக்கென ஒரு தமிழ் கருதினாலை பெற்று கொள்ள வேண்டும். 

அப்போது நமது சொல்லும் வத்திகானில் அம்பலம் ஏறும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, goshan_che said:

வத்திக்கான் எமக்கு குரல் கொடுக்க வேண்டுமாயின், நமது கத்தோலிக்கர்கள் கொழும்பின் பிடியில் இருக்கும் சிங்கள கர்தினாலிடம் இருந்து விலகி, நமக்கென ஒரு தமிழ் கருதினாலை பெற்று கொள்ள வேண்டும். 

ஓ....மதத்திலும் இனவாதம் மிஞ்சி நிற்கின்றதோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முழுமையாக அமுல்படுத்தத் தீர்மானித்த 13ஏ சட்டத்தை அமுல்படுத்துவது மற்றுமொரு சீர்குலைந்த அரசியல் பிரச்சினையாகும். இந்த வார தொடக்கத்தில் மல்வத்தை பீடத்தின் மகாநாயக்கர்களுடனும் (பெரும் வணக்கத்திற்குரிய திபொட்டுவாவே ஸ்ரீ சித்தாராத சுமங்கல தேரர்) அஸ்கிரிய பீடத்துடனும் (பெரும் வணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர்) இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 13ஏவை முழுமையாக அமுல்படுத்துவதற்கு அவர்கள் இருவரும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்ததுடன், முன்னைய ஜனாதிபதிகள் எவரும் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சட்டங்கள் அமுல்படுத்தப்படுவதைப் பார்ப்பது அரச தலைவர் என்ற ரீதியிலும் அரசாங்கத் தலைவர் என்ற ரீதியிலும் தனது பொறுப்பு என ஜனாதிபதி விக்கிரமசிங்க விளக்கமளித்திருந்தார். 13ஏ பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட பின்னரும் பல வருடங்களாக அரசியலமைப்பில் நிலைத்திருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார். அது பொருந்தவில்லை என்றால், திருத்தங்கள் மூலம் அரசியலமைப்பில் இருந்து நீக்கப்பட்டிருக்க வேண்டும். இது செய்யப்படவில்லை.

இரண்டு பீடாதிபதிகளும் மற்ற இரண்டு நிக்காயேகளின் (பிரிவுகள்) தலைவர்களும் ஜனாதிபதி விக்கிரமசிங்கவிற்கு 13A ஐ அமுல்படுத்த வேண்டாம் என்று வலியுறுத்தி விரிவான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். 13ஏவை முழுமையாக அமுல்படுத்துவதாக பெப்ரவரி 8ஆம் திகதி தனது கொள்கை அறிக்கையில் உறுதிமொழி வழங்கவுள்ளதாக ஜனாதிபதி விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.#

sundytimes.lk

  • கருத்துக்கள உறவுகள்
Posted
29 minutes ago, குமாரசாமி said:

சாதீய தொல்லையால் யேசுவின் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறிய தமிழர்களும்  இனக்கலவரங்களிலும், இனவாத குண்டு வெடிப்புகளிலும் பலியானார்கள்.

 

உண்மையான கிறிஸ்தவ வாழ்வு என்பது இதுதான் சாமியார்! அதை அவர்கள் யாரையும் குறை கூறாமல்,  விட்டோடாமல்  தாங்குகிறார்கள். 

36 minutes ago, குமாரசாமி said:

உலக கிறிஸ்தவர்கள் யாராவது குரல் கொடுத்தார்களா?

பெயர்க் கிறிஸ்தவர்களுக்கும் அதாவது போதனைக்கும் வாழ்வுக்கும் இடையில் நிறைய வித்தியாசமுண்டு. போதனையை வாழ்வாக்குவதே உண்மையான சாதனை!

38 minutes ago, குமாரசாமி said:

உயிர்ப்புடன் இருக்கும் வத்திக்கானாவது வந்து பதில் சொல்லுமா?

மனித நேயம் என்று கூவும் தாபனங்கள் தங்கள் கடமையைச் செய்கின்றனவா? பிறகு எதற்கு வீணான  விளம்பரம் இவர்களுக்கு?

9 minutes ago, குமாரசாமி said:

ஓ....மதத்திலும் இனவாதம் மிஞ்சி நிற்கின்றதோ?

ஓம்! இல்லையென்றால் தமிழர்கள் கொத்துக்கொத்தாக மத ஆலயங்களில் கொன்று குவிக்கப்படும்போது ஏன் அது மவுனம் காத்தது? எப்போதாவது தனது பிரதிநிதியை அழைத்து விளக்கம் கேட்டதா? அறிக்கை விட்டதா? பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொன்னதா?  இன்று தமிழ் ஆயர்கள் தங்களுக்கு தனியொரு பிரதிநிதியை நியமிக்குமாறு கேட்க்கிறார்கள். அவர்கள் கேட்பதற்கு முன்னால் பாப்பாண்டவர் அதை செய்திருக்க வேண்டும், ஏன் செய்யவில்லை? சிங்கள படுகொலையாளர் அவரை சந்திக்க சென்றபோது மறுப்பாவது தெரிவித்தாரா? முன்னாள் பாப்பானவர் ஒருவர் மறுத்ததாக அறிந்தேன் உண்மை தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, குமாரசாமி said:

ஓ....மதத்திலும் இனவாதம் மிஞ்சி நிற்கின்றதோ?

நிச்சயமாக. 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காரணம் இந்த சிங்கள பிரதிநிதியின் பொய்களை நம்பியுள்ளனர். அதனாலேயே கொழும்பில் குண்டுவெடிப்பில் இறந்த மக்களுக்கு சிறு தொகையாயினும் இழப்பீடு கொடுக்கப்பட்டது ஆனால் வடக்கில் இறந்தவர்களுக்கு எதுவுமில்லை. காரணம் கர்தினாலின் சந்தர்ப்பவாத குரல்! அதனாலேயே தங்கள் இழப்புகளை வெளிப்படுத்த தமிழ் ஆயர்கள் தங்களுக்கென ஒரு பிரதிநிதியை தெரிவு செய்ய வேண்டுமென்று கேட்க்கிறார்கள். இதுவும் தமிழருக்கு பதின்மூன்றை கொடுப்பதுபோல் சிங்களம் கூவும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாருக்கு எண் கணித சாத்திரத்தில் நம்பிக்கை  உண்டு? மேலைநாடுகளில் 13தவிர்க்கப்படும் ஒரு எண். சில வேளைகளில் 13ல் கூறப்படும் மேற்கண்ட சட்ட சரத்துக்கள் வேறோர் இலக்கத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டால் ஏதும் விமோசனம் கிடைக்குமோ? 13என எழுதாமல் மேற்கண்ட செய்தியை வேறு எப்படி தலைப்பிட முடியும்?

சும்மா ஒரு மாற்று யோசனை தான் யாழ் கருத்துக்களத்தின் விஞ்ஞானிகள், பகுத்தறிவாளர்கள் கோபிக்க வேண்டாம் 😝



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூடுதலான மொழியறிவு எம்மை மேம்படுத்த உதவும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். சூரிய நிறுவகத்தின் ஏற்பாட்டில், இரண்டாம் மொழி சிங்கள கற்கைநெறியை பூர்த்தி செய்த யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அத்துடன், இன ஐக்கியத்துக்காகவும், தேசிய ஒருமைப்பாட்டுக்காகவும், சிங்கள மக்கள் தமிழ் மொழியையும், தமிழ் மக்கள் சிங்கள மொழியையும் கற்கும் வகையில் இலவசமாக வகுப்புக்களை நடத்திவரும் சூரிய நிறுவகத்தையும், அதன் நிறுவுனர் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவையும் ஆளுநர் பாராட்டியுள்ளார். இரண்டாம் மொழி இங்கு சிங்கள மொழியை இரண்டாம் மொழியாக கற்பது இந்த நாட்டில் எங்கும் சென்று சேவையாற்றக் கூடிய வாய்பை உருவாக்கும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.   மேலும், எமது திறன் மற்றும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள இன்னொரு மொழியைக் கற்பது அவசியமானது என ஆளுநர் வலியுறுத்தியுள்ளார். இந்த நிகழ்வில் மாணவர்களுக்கு சான்றிதழ்கள்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. சிங்கள மொழி கற்கை குறித்து வடக்கு ஆளுநரின் கருத்து! - ஐபிசி தமிழ்
    • படு மோசமான கொலைகளுக்கும் அதை செய்த கொலைகாரர்களுக்கும்   கூட வக்காலத்து  வாங்கி அதை நி யாயப்படுத்துவது தான் அந்த அரிசிக்கஞ்சி. 
    • முடியும்  ஆனால் குள்ளநரிகளால் அது முடியாது. நேர்மையற்றவர்களிலாலும் பிழைகளை  மட்டுமே தேடுபவர்களாலும் அது சாத்தியமே இல்லை..
    • யாழ்ப்பாணத்தில் உள்ள காரைநகர் கடலில் நீரில் மூழ்கிய இருவர் பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினர் மற்றும் கடற்படையினால் காப்பாற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச் சம்பவம் நேற்றையதினம் (14-12-2024) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கசூரினா கடற்கரைக்கு வருகை தந்த யுவதி ஒருவரும், இளைஞர் ஒருவரும் கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். சம்பவம் தொடர்பில் தகவலறிந்து விரைந்து செயற்பட்ட பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினரும், கடற்படையினரும் நீரில் அடித்துச் செல்லப்பட்ட இருவரையும் காப்பாற்றியுள்ளனர். காப்பாற்றப்பட்ட யுவதிக்கு பாதிப்புகள் இல்லாத நிலையில் அவர் வீடு சென்றுள்ளார்.   இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தகுந்த நேரத்தில் விரைந்து செயற்பட்டு 2 உயிர்களையும் காப்பாற்றிய, உயிர்காக்கும் பொலிஸ் பிரிவினருக்கும், கடற்படையினருக்கும் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். யாழில் கடலில் மூழ்கிய இளைஞன், யுவதி தொடர்பில் வெளியான முக்கிய தகவல்! - ஜே.வி.பி நியூஸ்
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.