Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, தமிழ் சிறி said:

வேலைக்கு போக முதல்… விபத்தை ஏற்படுத்தியவனுடன்
சாதாரணமாக கதைக்கலாம் என்ற மன உணர்வுடன்தான் சென்றேன்.
ஆனால்… அவன் என்னை கண்டு ஒளித்த போது,
அவனை கூப்பிட்டு கதைக்க வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை.

இன்றுடன் மூன்று நாட்களாகி விட்டது.
தவறு செய்தவன் தானே… என்னிடம் வந்து கதைக்க வேண்டும்.
நானாக போய் கதைப்பது… சரியல்ல என்பது எனது அபிப்பிராயம். 
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என அறிய ஆவல். 🙂
 
உங்கள் எண்ணம் எதுவோ தெரியவில்லை.

அவரது இடத்தில் யாராக இருந்தாலும் இப்படித் தான் செய்வார்கள்.

உங்கள் இடத்தில் நான் இருந்தால் முதல்நாள் கண்டவுடனேயே கூப்பிட்டு கதைத்திருப்பேன்.

நீண்ட நாட்களின் பின் உங்களைக் கண்டதும் நீங்கள் கதைக்காததும் அவனுக்கு இன்னும் மன உழைச்சலாக இருக்கும்.

இதனாலேயே மீண்டும் மீண்டும் விபத்துக்களும் நேரலாம்.

நீங்கள் அழைத்து கதைத்தால் அழுவார் என எண்ணுகிறேன்.

  • Like 2
  • Replies 89
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 13/2/2023 at 23:41, ஈழப்பிரியன் said:

10 கிலோ என்பது மிகவும் அதிகம்.

நாளாக நாளாக முழங்கால் வலிகள் ஏற்படலாம்.

உங்களுக்கு வீட்டிலேயே டாக்ரர் உள்ளதால் நாங்கள் எழுத தேவையில்லை.

இருந்தும் ஏதோ எழுத வேண்டும் போல இருந்தது.

ஏன் தம்பி காலில் நகம் இல்லையா?

நிறை கூடிய பின்…
ஆசையாக தேடித் தேடி வாங்கிய கால் சட்டைகள் எதுவுமே அளவில்லை.
நிறை குறையும் என்ற நம்பிக்கையில், அதனை பத்திரப் படுத்தி வைத்துள்ளேன்.
இப்போ வேலைக்குப் போடுவதற்காக… புதிய கால் சட்டைகள்,
ஜக்கெற் போன்றவை வாங்க வேண்டி வந்தது. 🙂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 14/2/2023 at 03:07, nunavilan said:

தமிழ் சிறி மீண்டும் வேலைக்கு போனதை இட்டு மகிழ்ச்சி.  வேலைக்கு போனால் உடலுக்கும் மனதுக்கும் நல்லது தான். உங்களுக்கு தான் உங்களின் நிலை தெரியும்.  உடலின் எடை கூடினால் கால்களுக்கு தான் (முழங்காலுக்கு) அழுத்தம் கூட. ஆகவே முயற்சி செய்து எடையை குறைக்க முயலுங்கள். 

நன்றி நுணாவிலான்.
நீங்கள் சொல்வது  நூறு வீதம் உண்மை.
வேலைக்குப் போவதால்… மனம், உடலில் பெரிய மாற்றம் தெரிகின்றது. 👍🏽

On 14/2/2023 at 04:44, ராசவன்னியன் said:

ரொம்ப மகிழ்ச்சி தமிழ் சிறி.👌

வயசு போன காலத்தில், "அங்கே ..இங்கே"ன்னு பராக்கு பார்க்காமல், சிரத்தையுடன் அலுவலக அறைக்குள் வேலையில் கவனம் செலுத்தவும். 😜

நன்றி ராஜவன்னியன். 🙂
வேலைக்குப் போறதே… பாதி நேரம் பராக்குப் பார்க்கவும், விடுப்பு கதைக்கவும்தானே… 🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 14/2/2023 at 08:18, தனிக்காட்டு ராஜா said:

ஒரு போட்டோவ இணைச்சா குறைஞ்சா போவியள்😍😍 நாங்களும் பார்த்து ரசிப்புத தானே தவிர 

வரவிற்கும், கருத்திற்கும்… நன்றி முனிவர் ஜீ. 🙂

On 14/2/2023 at 08:34, முதல்வன் said:

மகிழ்ச்சி சிறி அண்ணை. எழுதுங்கள்.

நன்றி முதல்வன். 🙏

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
24 minutes ago, தமிழ் சிறி said:

நிறை கூடிய பின்…
ஆசையாக தேடித் தேடி வாங்கிய கால் சட்டைகள் எதுவுமே அளவில்லை.
நிறை குறையும் என்ற நம்பிக்கையில், அதனை பத்திரப் படுத்தி வைத்துள்ளேன்.
இப்போ வேலைக்குப் போடுவதற்காக… புதிய கால் சட்டைகள்,
ஜக்கெற் போன்றவை வாங்க வேண்டி வந்தது. 🙂

நிறை கூடுனால் திரும்பவும் இறக்குவது மிகவும் சிரமம்.

உங்கள் வீட்டிலேயே டாக்ரர் உள்ளபடியால் இதைப் பற்றி அதிகம் எழுத விரும்பவில்லை.

நீங்கள் நலமாக இருக்க வேண்டும்.அவ்வளவே.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 14/2/2023 at 09:08, விசுகு said:

மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் உங்களுக்கு தான் தெரியும் இது எவ்வளவு கடினமான நாட்கள் என்று.

தொடர்ந்து எழுதுங்கள். நன்றி மீண்டும் எழுந்து நின்று காட்டியதற்கு 

நன்றி விசுகர். 
உண்மைதான். நடந்த  சில சம்பவங்களை மீண்டும் நினைக்கும் போது
பெரிய அச்ச உணர்வும், விரக்தியும் ஏற்படும்.
ஏதோ… மருத்துவ மனையிலும், Reha விலும் கிடைத்த ஆறுதல் வார்த்தைகளும்,
ஊக்கமான செயல் பாடுகளும் அதிலிருந்து பெருமளவு மீட்டுத் தந்தது.
கடந்த 15 மாதங்களாக…  எனக்கு 300 பேருக்கு மேல் தெரப்பி செய்திருப்பார்கள்.
அத்தனை பேரும்… வித்தியாசமான அணுகு முறையை கொண்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது. 🙂

Edited by தமிழ் சிறி
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 14/2/2023 at 09:38, புங்கையூரன் said:

இவ்வளவு தூரம் நீங்கள் வந்ததை ஒரு பெரும் சாதனையாகவே நான் பார்க்கிறேன்! தொடர்ந்தும் கவனமாக இருக்கவும்…!

நன்றி புங்கையூரான். 
வேலை இடத்திலும்…. விபத்து நடந்ததை நேரில் பார்த்தவர்கள்.. என்னை பலசாலி எனவும்
மீண்டும் திரும்ப நடப்பேன் என்று எதிர் பார்க்கவில்லை என்றும் சொன்னார்கள்.
வைத்தியர்களுக்கும், நேர்ஸ் மாருக்கும், தெரப்பி செய்தவர்களுக்கும், எனக்காக பிரார்த்தித்தவர்களுக்கும், அந்த இறைவனுக்கும் நன்றியை தெரிவிக்கின்றேன். 🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்களை இடித்தவன்  வேணுமென்று செய்திருக்க மாடடான் எதோ அவதானபிழைபோல ...யாரிடமாவது தூது விடுங்கள் அவனை மன்னித்து விட்ட்தாக. அவனுக்கும் அச்ச உணர்வு இருக்கும் தானே. . 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 14/2/2023 at 18:20, alvayan said:

மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

 உங்களுக்கு தான் தெரியும் இது எவ்வளவு கடினமான நாட்கள் என்று.

 தொடர்ந்தும் கவனமாக இருக்கவும்…!

ரொம்ப மகிழ்ச்சி தமிழ் சிறி

வரவிற்கும், அக்கறையான கருத்து பகிர்விற்கும்  மிக்க நன்றி அல்வாயன். 🙂

22 hours ago, நந்தன் said:

சந்தோசம் சிறியர் 

நன்றி நந்தன். 🙏

20 hours ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் மறபடியும் வேலைக்கு திரும்பி சென்றதில் மகிழ்ச்சி.
வாழ்த்துக்கள்.

மிக்க  நன்றி விளங்க நினைப்பவன். 🙏

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, யாயினி said:

மீண்டும் வழமைக்கு திரும்புவதையிட்டு மிகவும் சந்தோசம் சிறியண்ண..என்ன றீகாப்பிலயா காலுக்கு நிறம் தீட்டப் பழக்கி விட்டவே.✍.அப்பிடியான இடங்களில் நேரத்தை போக்காட்ட ஏதாவது பழக்கு வீனம்.👋😆

வரவுக்கு நன்றி யாயினி.
ஐயோ… அது என்ரை கால் இல்லை. கூகிளில் எடுத்த படம்.
றீகாப்பில்…. சில கைவினைப் பொருட்கள் செய்ய பழக்கினார்கள்.
நான் பாண் வைக்கும் கூடையும், தோட்டத்தில் வைக்க மரத்தால் ஆன குருவிக் கூடும் செய்தேன். 🙂
சத்தியமாக… காலுக்கு நிறம் தீட்ட, பழக்கவே இல்லை. 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, தமிழ் சிறி said:

சத்தியமாக… காலுக்கு நிறம் தீட்ட, பழக்கவே இல்லை.

அப்ப கையுகு?

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, ஈழப்பிரியன் said:

அப்ப கையுகு?

மீண்டும் கடுப்பு ஏத்துகிறார்கள். 😂 🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

உங்கள் எண்ணம் எதுவோ தெரியவில்லை.

அவரது இடத்தில் யாராக இருந்தாலும் இப்படித் தான் செய்வார்கள்.

உங்கள் இடத்தில் நான் இருந்தால் முதல்நாள் கண்டவுடனேயே கூப்பிட்டு கதைத்திருப்பேன்.

நீண்ட நாட்களின் பின் உங்களைக் கண்டதும் நீங்கள் கதைக்காததும் அவனுக்கு இன்னும் மன உழைச்சலாக இருக்கும்.

இதனாலேயே மீண்டும் மீண்டும் விபத்துக்களும் நேரலாம்.

நீங்கள் அழைத்து கதைத்தால் அழுவார் என எண்ணுகிறேன்.

47 minutes ago, நிலாமதி said:

உங்களை இடித்தவன்  வேணுமென்று செய்திருக்க மாடடான் எதோ அவதானபிழைபோல ...யாரிடமாவது தூது விடுங்கள் அவனை மன்னித்து விட்ட்தாக. அவனுக்கும் அச்ச உணர்வு இருக்கும் தானே. . 

நீங்கள் சொல்வதும் சரிதான்.
அவர் வேறு பகுதியில் வேலை செய்வதால்… அடிக்கடி சந்திக்கும் சந்தர்ப்பங்கள் குறைவு.
அடுத்த முறை… நேரில் சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால் கதைக்கின்றேன். 🙂

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
57 minutes ago, தமிழ் சிறி said:

வரவுக்கு நன்றி யாயினி.
ஐயோ… அது என்ரை கால் இல்லை. கூகிளில் எடுத்த படம்.
றீகாப்பில்…. சில கைவினைப் பொருட்கள் செய்ய பழக்கினார்கள்.
நான் பாண் வைக்கும் கூடையும், தோட்டத்தில் வைக்க மரத்தால் ஆன குருவிக் கூடும் செய்தேன். 🙂
சத்தியமாக… காலுக்கு நிறம் தீட்ட, பழக்கவே இல்லை. 😂 🤣

சரி இதுக்கு போய் சத்தியம் எல்லாம் வேணாம்.எனக்கு தெரியும் றீகாப்பில் முக்கியமாக மேலும் உடல் உறுப்புக்கள் இயங்குவதற்கு ஏற்றால் போல் சிலவற்றைப் பழக்குவார்கள்..மறுபடியும் சக பணியாளரோடு பேசிக்கொள்வது நல்லது..யாரும் தெரிந்து கொண்டு எந்த தவறும் விடுவதில்லை தானே.

பேசி பார்த்தால் தொடர்ந்து பேச விருப்பப்டுபவர் போன்று இருந்தால் பேசுங்கள் இல்லையேல் தவிர்த்து விடுங்கள்.👋

.உங்கள் அவதானக்குறைவும் விபத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம் இல்லயா.✍.கோவிக்க வேணாம்.சொல்ல வேண்டும் போல் இருந்தது.😆👋

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, தமிழ் சிறி said:

அவர் வேறு பகுதியில் வேலை செய்வதால்… அடிக்கடி சந்திக்கும் சந்தர்ப்பங்கள் குறைவு.
அடுத்த முறை… நேரில் சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால் கதைக்கின்றேன்.

15 மாதத்தின் பின் வளமைக்கு திரும்பியுள்ளீர்கள் சந்தோசம்.

சில நேரங்களில் நீங்கள் எதிர்பார்ப்பது போல அவரது தவறினை உணர்ந்து கொண்டிருப்பார் என்றில்லை, எதற்கும் கவனத்துடன் அணுகவும்.

மனித மனம் வித்தியாசமானது, மனதில் ஏற்படும் வலிகளை உணராதிருக்க முயற்சி செய்யும்

1.உளப்பூர்வமாக தான் தவறே செய்திருந்தாலும் தவறு தனது பக்கமல்ல  என நினைத்து அதனால் ஏற்படும் வலியினை கடக்க முற்படும்.

2.சம்பவத்தினை அப்படியே மறந்து விட்டு விடும்.

ஒன்றரை வருடங்களுக்கு முன்பு இரு வழி பாதை கொண்ட வீதியால் வேலை முடித்து அதிகாலை வீடு திரும்பிக்கொண்டிருந்தேன், மழை இருட்டு வேறு; ஒரு வீதி சிக்னலில் எதிர் தரப்பில் வந்த கார்கள் இரண்டு விபத்துகுள்ளாகியிருந்தது.

வார இறுதி என்பதால் பெரிதாக வாகனங்கள் வீதியில் இல்லை, அதனால் எதிர் தரப்பில் வந்த 3 வாகனங்கள், விபத்து வாகனங்களை தவிர்ப்பதற்காக நான் செல்லும் பாதையினூடாக வந்தன.

அதனை அவதானித்தமையால் எனது வாகனத்தினை சிறிது தொலைவிலேயே நிறுத்திவிட்டேன்.

கடைசி வாகனம் கடந்த பின் எனது வாகனத்தினை எடுக்க தயாரான போது எங்கிருந்தோ(அதுவரையிலும் எனது பாதையில் ஒரு காரும் வரவில்லை) வந்த கார் எனது காரின் பின் மோதியது.

காரினை பக்கத்தில் இருந்த பாதுகாப்பான இடத்தில் நிறுத்தினேன், என்னை பின் தொடர்ந்த அந்த காரும் எனது காரின் பின் நிறுத்தினார், காரில் இருந்து இறங்கி அந்த காரின் உரிமையாளரினை பார்த்து கேட்டேன் உனக்கு ஒரு பிரச்சினையுமில்லையா?

அவர் அதிர்ச்சியில் இருந்தார், ஆனாலும் இல்லை எனக்கு எந்த பிரச்சினையுமில்லை, உனக்கு எதுவும் பிரச்சினையா எனக்கேட்டார்.

ஆனாலும் அவரது பதட்டத்தினை பார்த்து சொன்னேன் விபத்தினால் இருவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. பாதிப்பு வாகனத்திற்குதான், உன்னிடம் காப்புறுதி உள்ளதல்லவா எனக்கேட்டேன், 

ஆம் என்றார்.

அதனால் பிரச்சினை இல்லை என கூறிவிட்டு எனது விபரங்களை அவரிடம் கொடுத்து விட்டு அவரது விபரங்களை கோரினேன்.

அதுவரை என்ன  நடந்தது என தெரியாத அவர் என்னிடம் என்ன நடந்தது எனக்கேட்டார், நடந்தவற்றை கூறினேன் அதில் அவருக்கு திருப்தியில்லை, எதற்காக வாகனத்தினை நிறுத்தி வைத்திருந்தாய் என கேள்வியினை திரும்ப திரும்ப கேட்டார், பின்னர் புரிந்து கொண்டேன் அவர் தவறு எனது என்பதாக நிறுவ முயல்கிறார்.

நீண்டநேர வேலை நித்திரையும் இல்லை, மீண்டும் வேலை ஆரம்பிப்பதற்கு 6 மணித்தியாலமளவில்தான் நேரம் இருந்தமையால், எனக்கு நேரம் இல்லை நான் போகிறேன் என கூறிவிட்டு வந்து விட்டேன், அத்துடன் அவர் பதற்றம் எல்லாம் நீங்கி தன்னை தற்காத்து கொள்ளும் அளவில் நல்ல தெளிவில் இருந்தார்.

வீட்டிற்கு வந்து குளித்து விட்டு இணையத்தில் வாகன விபத்தினை பதிவு செய்ய தயாராகி கொண்டிருக்கும் போது அவர் தொலைபேசியில் அழைத்தார்.

நல்ல வேளை உனது காரில் மோதினேன், இல்லாவிட்டால் ஏற்கனவே மற்ற இரண்டு கார் விபத்தினை வீதியின் ஓரமாக பார்த்து கொண்டிருந்த மக்கள் மேல் மோதியிருப்பேன் என்றார்(அவர் எனது காரினை மோதுவதை தவிர்ப்பதற்காக காரினை வீதியின் ஓரமாக திருப்பியிருந்தார்).

இந்த தகவலை அவர் அங்கிருந்த மக்களிடம் கேட்டறிந்து கொண்டுள்ளார்(தவறு யார் பக்கம் என அறியும் அவரது முயற்சியில்).

  • Like 2
  • Thanks 1
Posted
3 hours ago, தமிழ் சிறி said:

நன்றி நிழலி.
முதலே சொன்ன பின்பும்.. கடுப்பேத்துறார், மை லாட். 😂

..இல்லாவிடின் எப்படி எனக்கு சாப்பாடு செமிக்கும்? 😁

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 15/2/2023 at 20:17, யாயினி said:

சரி இதுக்கு போய் சத்தியம் எல்லாம் வேணாம்.எனக்கு தெரியும் றீகாப்பில் முக்கியமாக மேலும் உடல் உறுப்புக்கள் இயங்குவதற்கு ஏற்றால் போல் சிலவற்றைப் பழக்குவார்கள்..மறுபடியும் சக பணியாளரோடு பேசிக்கொள்வது நல்லது..யாரும் தெரிந்து கொண்டு எந்த தவறும் விடுவதில்லை தானே.

பேசி பார்த்தால் தொடர்ந்து பேச விருப்பப்டுபவர் போன்று இருந்தால் பேசுங்கள் இல்லையேல் தவிர்த்து விடுங்கள்.👋

.உங்கள் அவதானக்குறைவும் விபத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம் இல்லயா.✍.கோவிக்க வேணாம்.சொல்ல வேண்டும் போல் இருந்தது.😆👋

வவுனியாவில் மாணவர்களின் கையில் கற்பூரம் கொழுத்திய ஆசிரியர்!! – வவுனியா நெற் 

யாயினி... என்னை, சத்தியம் பண்ண  வேண்டாம் என்று சொல்லிவிட்டு...
திரும்பவும் என்னை சத்தியம் பண்ண தூண்டுகிறீர்கள். 😁

இந்த விபத்து, மற்றவரின் அவதானாக் குறைவால் நடந்தது.  🙂
இது... சத்தியம், சத்தியம், சத்தியம். 🙂
வேணுமென்றால்...  கையில்,  கற்பூரம் கொழுத்தி  சத்தியம் பண்ணுகிறேன். 🤣

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதே வெள்ளையள் என்றால் கோட் கேசென்று போய் மில்லியன் கணக்கில் வாங்கிக் கொண்டு செற்றில் ஆகிடுவாங்கள்.

நாம தமிழராச்சே.. விசுவாச மடையர்கள். அடுத்தவனுக்கு உழைத்தே தேய்வது நம்ம ஜீன். வாழ்த்துக்கள் சிறியர். உடம்பு ஒத்துழைத்தால் மட்டும் கூடிய நேரம் வேலை செய்ய ஒத்துக்கொள்ளுங்கள். உடம்பை வருத்தி ஒத்துழைக்கச் செய்ய வேண்டாம். 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

மீண்டும் முருக்க மரம் எறியதுக்கு வாழ்த்துக்கள்.

அந்த ஒளிந்து கொண்ட, ஆளை தேடிப் பிடித்து, என்னப்பா, அடுத்து யாரு எண்டு கேட்டு வையுங்கோ.

இந்த 15 மாதமும் உங்கள் மனதை உற்சாகமாக வைத்திருந்த கள உறவுகளுக்கு நன்றிகள். 

29 minutes ago, nedukkalapoovan said:

இதே வெள்ளையள் என்றால் கோட் கேசென்று போய் மில்லியன் கணக்கில் வாங்கிக் கொண்டு செற்றில் ஆகிடுவாங்கள்.

நாம தமிழராச்சே.. விசுவாச மடையர்கள். அடுத்தவனுக்கு உழைத்தே தேய்வது நம்ம ஜீன். வாழ்த்துக்கள் சிறியர். உடம்பு ஒத்துழைத்தால் மட்டும் கூடிய நேரம் வேலை செய்ய ஒத்துக்கொள்ளுங்கள். உடம்பை வருத்தி ஒத்துழைக்கச் செய்ய வேண்டாம். 

சிறியர் விசுவாச மடையர் இல்லை. 😁

வீட்டில் இராமல், சும்மா பம்பலுக்கு போய் இருக்கிறார். 😜

இதனிடையே, போனவருசம், ஏப்ரல் முதலாம் திகதி இந்திய, இலங்கை அரசுகளையே விழி பிதுங்க வைத்தார்.🤣

Edited by Nathamuni
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 15/2/2023 at 20:31, vasee said:

15 மாதத்தின் பின் வளமைக்கு திரும்பியுள்ளீர்கள் சந்தோசம்.

சில நேரங்களில் நீங்கள் எதிர்பார்ப்பது போல அவரது தவறினை உணர்ந்து கொண்டிருப்பார் என்றில்லை, எதற்கும் கவனத்துடன் அணுகவும்.

மனித மனம் வித்தியாசமானது, மனதில் ஏற்படும் வலிகளை உணராதிருக்க முயற்சி செய்யும்

1.உளப்பூர்வமாக தான் தவறே செய்திருந்தாலும் தவறு தனது பக்கமல்ல  என நினைத்து அதனால் ஏற்படும் வலியினை கடக்க முற்படும்.

2.சம்பவத்தினை அப்படியே மறந்து விட்டு விடும்.

ஒன்றரை வருடங்களுக்கு முன்பு இரு வழி பாதை கொண்ட வீதியால் வேலை முடித்து அதிகாலை வீடு திரும்பிக்கொண்டிருந்தேன், மழை இருட்டு வேறு; ஒரு வீதி சிக்னலில் எதிர் தரப்பில் வந்த கார்கள் இரண்டு விபத்துகுள்ளாகியிருந்தது.

வார இறுதி என்பதால் பெரிதாக வாகனங்கள் வீதியில் இல்லை, அதனால் எதிர் தரப்பில் வந்த 3 வாகனங்கள், விபத்து வாகனங்களை தவிர்ப்பதற்காக நான் செல்லும் பாதையினூடாக வந்தன.

அதனை அவதானித்தமையால் எனது வாகனத்தினை சிறிது தொலைவிலேயே நிறுத்திவிட்டேன்.

கடைசி வாகனம் கடந்த பின் எனது வாகனத்தினை எடுக்க தயாரான போது எங்கிருந்தோ(அதுவரையிலும் எனது பாதையில் ஒரு காரும் வரவில்லை) வந்த கார் எனது காரின் பின் மோதியது.

காரினை பக்கத்தில் இருந்த பாதுகாப்பான இடத்தில் நிறுத்தினேன், என்னை பின் தொடர்ந்த அந்த காரும் எனது காரின் பின் நிறுத்தினார், காரில் இருந்து இறங்கி அந்த காரின் உரிமையாளரினை பார்த்து கேட்டேன் உனக்கு ஒரு பிரச்சினையுமில்லையா?

அவர் அதிர்ச்சியில் இருந்தார், ஆனாலும் இல்லை எனக்கு எந்த பிரச்சினையுமில்லை, உனக்கு எதுவும் பிரச்சினையா எனக்கேட்டார்.

ஆனாலும் அவரது பதட்டத்தினை பார்த்து சொன்னேன் விபத்தினால் இருவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. பாதிப்பு வாகனத்திற்குதான், உன்னிடம் காப்புறுதி உள்ளதல்லவா எனக்கேட்டேன், 

ஆம் என்றார்.

அதனால் பிரச்சினை இல்லை என கூறிவிட்டு எனது விபரங்களை அவரிடம் கொடுத்து விட்டு அவரது விபரங்களை கோரினேன்.

அதுவரை என்ன  நடந்தது என தெரியாத அவர் என்னிடம் என்ன நடந்தது எனக்கேட்டார், நடந்தவற்றை கூறினேன் அதில் அவருக்கு திருப்தியில்லை, எதற்காக வாகனத்தினை நிறுத்தி வைத்திருந்தாய் என கேள்வியினை திரும்ப திரும்ப கேட்டார், பின்னர் புரிந்து கொண்டேன் அவர் தவறு எனது என்பதாக நிறுவ முயல்கிறார்.

நீண்டநேர வேலை நித்திரையும் இல்லை, மீண்டும் வேலை ஆரம்பிப்பதற்கு 6 மணித்தியாலமளவில்தான் நேரம் இருந்தமையால், எனக்கு நேரம் இல்லை நான் போகிறேன் என கூறிவிட்டு வந்து விட்டேன், அத்துடன் அவர் பதற்றம் எல்லாம் நீங்கி தன்னை தற்காத்து கொள்ளும் அளவில் நல்ல தெளிவில் இருந்தார்.

வீட்டிற்கு வந்து குளித்து விட்டு இணையத்தில் வாகன விபத்தினை பதிவு செய்ய தயாராகி கொண்டிருக்கும் போது அவர் தொலைபேசியில் அழைத்தார்.

நல்ல வேளை உனது காரில் மோதினேன், இல்லாவிட்டால் ஏற்கனவே மற்ற இரண்டு கார் விபத்தினை வீதியின் ஓரமாக பார்த்து கொண்டிருந்த மக்கள் மேல் மோதியிருப்பேன் என்றார்(அவர் எனது காரினை மோதுவதை தவிர்ப்பதற்காக காரினை வீதியின் ஓரமாக திருப்பியிருந்தார்).

இந்த தகவலை அவர் அங்கிருந்த மக்களிடம் கேட்டறிந்து கொண்டுள்ளார்(தவறு யார் பக்கம் என அறியும் அவரது முயற்சியில்).

Thumbs Up.gif | Trouble Free Pool

நன்றி வசி. நீங்கள் நடந்த சம்பவத்தையும், மனித மனத்தையும்...
வித்தியாசமான முறையில் ஆழமாக ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள். 

//மனித மனம் வித்தியாசமானது, மனதில் ஏற்படும் வலிகளை உணராதிருக்க முயற்சி செய்யும்

1.உளப்பூர்வமாக தான் தவறே செய்திருந்தாலும் தவறு தனது பக்கமல்ல  என நினைத்து அதனால் ஏற்படும் வலியினை கடக்க முற்படும்.

2.சம்பவத்தினை அப்படியே மறந்து விட்டு விடும்.//

நீங்கள், கூறியற்றவைத்தான்  விபத்தை ஏற்படுத்தியவரும் 
மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்கின்றார் என நினைக்கின்றேன். 🙂

சென்ற... திங்களிலிருந்து வெள்ளி வரை தினமும் மூன்று மணித்தியாலம் வரை 
வேலை செய்துள்ளேன். அவன் என்னைத் தேடி வந்து கதைக்க முயற்சிக்கவில்லை என்பது 
மிகுந்த ஏமாற்றத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்துகின்றது. 🙁

animiertes-telefon-bild-0002.gif                       animiertes-telefon-bild-0105.gif

கடந்த 15 மாதத்தில்... வேலையிடத்தில் உள்ள வேலையாட்களும், மனேஜரும் 
பல தடவைகள் தொடர்பு  கொண்டு நலம் விசாரித்துக் கொண்டிருந்த போதும்... 
இவன்  ஒரே ஒரு தடவை மட்டும்.. அதுகும் ஒரு நிமிடம் மட்டுமே கதைத்தான்.
அதிலிருந்தே அவனின் போக்கு எனக்கு பிடிக்கவில்லை. 😎

animiertes-polizei-bild-0004.gif

இவ்வளவிற்கும் விபத்து நடந்து நான் வைத்திய சாலையில் இருந்த போதும்,
Reha´வில் இருந்த போதும்... அந்த விபத்தை கையாண்ட பொலிஸ்காரர் இருவர்  
நேரே நான் சிகிச்சை பெறும் இடத்திற்கே  வந்து...  

animiertes-richter-bild-0050.gif   

அவன் மீது, வழக்கு தொடுக்கப் போகின்றேனா என்று கேட்டு..
தாங்களே, அரசு சார்பில் வழக்கை கொண்டு நடத்துவதாகவும்... ஆம் என்றால், 
ஒரு மாதத்துக்குள் பதில் தர வேண்டும் என்றும் சொன்னார்கள்.

animiertes-richter-bild-0041.gif

நான்.... வீட்டிலும் மனைவி, பிள்ளைகளிடம், இது பற்றி கதைத்த போது...
அவன் தவறுதலாக செய்தற்கு... எதற்கு வழக்கு போட்டு தண்டிக்க வேண்டும் என்றும்,
அத்துடன் அவன் சிறு பிள்ளைகளின் தந்தை என்றும்... 
ஏன் அவனை சிரமப் படுத்துவான் என்றும் சொன்னார்கள்.

நானும், அவர்கள் சொல்வேதே சரி என்று... 
காவல்துறையினரிடம் வழக்குப் போடவில்லை என்று சொல்லி விட்டேன்.
அவர்களும் எழுதி வாங்கிக் கொண்டு போய் விட்டார்கள்.

இப்போ... இவனின் செயலைப் பார்க்க, வழக்கு போட்டு 
"சிப்பிலி"  ஆட்டி விட்டிருக்கலாமோ என யோசிக்கின்றேன். 🙂

  • Like 4
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, தமிழ் சிறி said:

எனக்கு சட்டம் தெரியாது, ஆனால் இது ஒரு பாரதூரமான குற்றம் என நினைக்கிறேன் (crime negligence).

அவர் மீது வழக்கு தாக்கல் செய்யாமல் விட்டு விட்டமையால் அவர் தப்பித்தார் என நினைக்கிறேன், நீங்கள் மிகவும் நல்ல மனிதராக இருக்கிறீர்கள், உங்களது குடும்பத்தினரும் தான். உங்களுக்கு வேலையிலிருந்து நட்ட ஈடு கிடைக்கவில்லையா?(சரியாக தெரியவில்லை எனது கருத்து தவறாக இருக்கலாம்), 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிறியண்ணை  மீண்டும் வேலைக்கு போவது மிகவும் மகிழ்வான விடயம் ...உங்களுக்கு தாக்குதல் எற்படுத்தியவனும்.   நீங்களும் முன்பு ஒரே பகுதியில் வேலை செய்தீர்கள். ...இப்போது மாத்தி விட்டார்களா   ? அதுவும் நல்லது தான்  சிலசமயம். நீங்கள் அவனுக்கு சாத்தவும்.  கூடும்   🤣 அவனுக்கும். கூட அந்த பயம் இருக்கலாம்  ...மனிதாபிமானம் வேண்டும் தான்...அது ஏற்கனவே வழக்கு போடமால் விட்டதில். காட்டப்பட்டுள்ளது..இனி நீங்கள் வழியப்போய். கதைப்பது அழகு இல்லை   ஏனெனில் உங்களில் பிழை என்று ஒரு விம்பம். எற்பட வாய்ப்புகள் உண்டு”  ஆனால் அவன் மன்னிப்பு கேட்டு கதைத்தால். தொடர்ந்தும். பழைய மாதிரி  பாழாகி கொள்ளலாம்...எனது தனிப்பட்ட கருத்துகள் மட்டும்  

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதில்லை, தொடருங்கள்!  மன்னிப்பு கேட்பது பெருந்தன்மை, மன்னிப்பது மகா மகா பெருந்தன்மை. சிலர் தம் தவறை மற்றவர்மேல் போட்டு தப்பித்துவிடுவார் இது பெரும்பாலும் பலரில் காணலாம் தற்போது, அல்லது அதற்கொரு விளக்கம் கொடுப்பார். இன்னும் சிலர் குற்ற உணர்விலிருந்து மீள முடியாமல் தம்மையே வருத்திக்கொண்டும், தவித்துக்கொண்டும் எப்படி அதிலிருந்து விடுபடுவது என்று தெரியாமலும் ஒதுங்கியிருப்பர். சிலநேரம் அது மிகவும் இலகுவானது ஆனால் பயம் விடாது அல்லது இப்படி ஒரு வழி இருக்கிறது என்பது புரியாமல் அவர்கள் பழிவாங்கி விடுவார்கள், மன்னிக்க மாட்டார்கள் என்கிற உணர்வு. சிலநேரம் ஈகோ. ஒவ்வொருவரின் மனநிலை, ஏற்றுக்கொள்ளும் தன்மையிலுள்ளது. இந்த சம்பவத்துக்கு முன் அவர் குணஇயல்பு எப்படிப்பட்டது என்பதை தாங்கள் அறியத்தரவில்லை.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, தமிழ் சிறி said:

Thumbs Up.gif | Trouble Free Pool

நன்றி வசி. நீங்கள் நடந்த சம்பவத்தையும், மனித மனத்தையும்...
வித்தியாசமான முறையில் ஆழமாக ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள். 

//மனித மனம் வித்தியாசமானது, மனதில் ஏற்படும் வலிகளை உணராதிருக்க முயற்சி செய்யும்

1.உளப்பூர்வமாக தான் தவறே செய்திருந்தாலும் தவறு தனது பக்கமல்ல  என நினைத்து அதனால் ஏற்படும் வலியினை கடக்க முற்படும்.

2.சம்பவத்தினை அப்படியே மறந்து விட்டு விடும்.//

நீங்கள், கூறியற்றவைத்தான்  விபத்தை ஏற்படுத்தியவரும் 
மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்கின்றார் என நினைக்கின்றேன். 🙂

சென்ற... திங்களிலிருந்து வெள்ளி வரை தினமும் மூன்று மணித்தியாலம் வரை 
வேலை செய்துள்ளேன். அவன் என்னைத் தேடி வந்து கதைக்க முயற்சிக்கவில்லை என்பது 
மிகுந்த ஏமாற்றத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்துகின்றது. 🙁

animiertes-telefon-bild-0002.gif                       animiertes-telefon-bild-0105.gif

கடந்த 15 மாதத்தில்... வேலையிடத்தில் உள்ள வேலையாட்களும், மனேஜரும் 
பல தடவைகள் தொடர்பு  கொண்டு நலம் விசாரித்துக் கொண்டிருந்த போதும்... 
இவன்  ஒரே ஒரு தடவை மட்டும்.. அதுகும் ஒரு நிமிடம் மட்டுமே கதைத்தான்.
அதிலிருந்தே அவனின் போக்கு எனக்கு பிடிக்கவில்லை. 😎

animiertes-polizei-bild-0004.gif

இவ்வளவிற்கும் விபத்து நடந்து நான் வைத்திய சாலையில் இருந்த போதும்,
Reha´வில் இருந்த போதும்... அந்த விபத்தை கையாண்ட பொலிஸ்காரர் இருவர்  
நேரே நான் சிகிச்சை பெறும் இடத்திற்கே  வந்து...  

animiertes-richter-bild-0050.gif   

அவன் மீது, வழக்கு தொடுக்கப் போகின்றேனா என்று கேட்டு..
தாங்களே, அரசு சார்பில் வழக்கை கொண்டு நடத்துவதாகவும்... ஆம் என்றால், 
ஒரு மாதத்துக்குள் பதில் தர வேண்டும் என்றும் சொன்னார்கள்.

animiertes-richter-bild-0041.gif

நான்.... வீட்டிலும் மனைவி, பிள்ளைகளிடம், இது பற்றி கதைத்த போது...
அவன் தவறுதலாக செய்தற்கு... எதற்கு வழக்கு போட்டு தண்டிக்க வேண்டும் என்றும்,
அத்துடன் அவன் சிறு பிள்ளைகளின் தந்தை என்றும்... 
ஏன் அவனை சிரமப் படுத்துவான் என்றும் சொன்னார்கள்.

நானும், அவர்கள் சொல்வேதே சரி என்று... 
காவல்துறையினரிடம் வழக்குப் போடவில்லை என்று சொல்லி விட்டேன்.
அவர்களும் எழுதி வாங்கிக் கொண்டு போய் விட்டார்கள்.

இப்போ... இவனின் செயலைப் பார்க்க, வழக்கு போட்டு 
"சிப்பிலி"  ஆட்டி விட்டிருக்கலாமோ என யோசிக்கின்றேன். 🙂

வேண்டாம் தமிழ்சிறி..!

நாய் கடிக்கிறது..! அது அதன் சுபாவம்! நீங்களும் நாயின் தரத்துக்கு இறங்க வேண்டாம்!

அவனது மனச் சாட்சியே அவனது தீர்ப்பை எழுதட்டும்..!

  • Thanks 1

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.