Jump to content

புலம்பெயர் முன்னணித் தமிழ் தொழிலதிபருக்கு புலனாய்வுத் துறையால் நெருக்கடி! முதலீட்டாளர்கள் அச்சம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் முன்னணித் தமிழ் தொழிலதிபருக்கு புலனாய்வுத் துறையால் நெருக்கடி! முதலீட்டாளர்கள் அச்சம்

புதிய இணைப்பு

சர்வதேச தொழிலதிபர் பாஸ்கரன் கந்தையா பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருப்பது முதலீட்டாளர்களிடையே அச்சத்தை தோற்றுவிக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் தற்போதைய நெருக்கடியான காலகட்டத்தில், இலங்கை அரசாங்கம் புலம்பெயர்ந்து இருக்கும் முதலீட்டாளர்களை இலங்கைக்கு வருமாறும் முதலீடு செய்யுமாறும் அழைப்பு விடுத்திருக்கின்றது. 

இப்படியான சூழலில், புலம்பெயர் நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்து முதலீடு செய்யும் தொழிலதிபர்களையும் அவர்களது ஊழியர்களையும் அதிருப்திக்கு உள்ளாக்கும் வகையில் புலனாய்வாளர்களின் செயற்பாடு இருப்பதன் காரணமாக இலங்கையில் முதலீடு செய்ய எதிர்பார்க்கும் புலம்பெயர் தொழிலதிபர்கள் தயக்கம் காட்டக் கூடும் என்று குறிப்பிடப்படுகின்றது. 

புலனாய்வாளர்கள் மற்றும் அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடு புலம்பெயர் நாடுகளில் உள்ள, குறிப்பாக ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாட்டில் இருந்து இலங்கையில் முதலீடு செய்ய இருப்பவர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.

முதலாம் இணைப்பு

பிரபல சர்வதேச தொழிலதிபர் பாஸ்கரன் கந்தையா பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இந்த அழைப்பு  தொடர்பான அறிவிப்பு இன்றைய தினம் (23.02.2023) வழங்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணைக்கான அழைப்பை கிளிநொச்சி, பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் விடுத்துள்ளனர்.

 

வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளதாக அழைப்புச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்படி அவரை நாளைய தினம் (24.02.2023) காலை ஒன்பது மணிக்கு பூநகரி வீதி, குமரபுரம் - பரந்தனில் இருக்கும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு நிலையப் பொறுப்பதிகாரியை சந்திக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

புலம்பெயர் முன்னணித் தமிழ் தொழிலதிபருக்கு புலனாய்வுத் துறையால் நெருக்கடி! முதலீட்டாளர்கள் அச்சம் | Terrorism Prevention And Investigation Department

Gallery

https://tamilwin.com/article/terrorism-prevention-and-investigation-department-1677133861

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

பிரபல சர்வதேச தொழிலதிபர்

யாரப்பா இந்தாள் ….

எனக்குத்தான் பொது அறிவு பத்தவில்லையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

யாரப்பா இந்தாள் ….

எனக்குத்தான் பொது அறிவு பத்தவில்லையோ?

பார்வைக்கு மினுமினுப்பாக உள்ளார்.

ஆனபடியால் தொழிலதிபராகத் தான் இருப்பார்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

யாரப்பா இந்தாள் ….

எனக்குத்தான் பொது அறிவு பத்தவில்லையோ?

இனிமேல் வரப்போகிறாரோ?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முட்டாள் தமிழர்கள் என்பது.

இந்த சட்டத்தை வைத்து, தமிழர் இப்படித்தான் வாழ வேண்டும் என்கிறது சிங்களம்.

பயங்கரவாத சட்டம் அடிப்படை உரிமைகளை மீறுவது மேற்கின் கண்களுக்கு?  சொறி சிங்கள லங்கா ஜனநாயகம் 

14 minutes ago, ஈழப்பிரியன் said:

பார்வைக்கு மினுமினுப்பாக உள்ளார்.

அனால் அமெரிக்காவில் அப்படி இல்லை என்கிறது இந்த நூல் 

https://www.amazon.co.uk/Millionaire-Next-Door-Surprising-Americas/dp/0743517822

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ஏராளன் said:

இவர் தொலைக்காட்சியில் பத்து வருடங்களுக்கு மேலாக நிகழ்ச்சிகள் நடத்துபவர். உறவுப்பாலம் என்னும் நிகழ்ச்சி மூலமாக நிறைய காணொளிகளை பார்த்திருக்கிறேன்.. நெதர்லாந்தில் லிபரா தொலைபேசி கொம்பனி நடத்துகிறவர்

Edited by nilmini
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, ஈழப்பிரியன் said:

பார்வைக்கு மினுமினுப்பாக உள்ளார்.

ஆனபடியால் தொழிலதிபராகத் தான் இருப்பார்.

 

46 minutes ago, ஏராளன் said:

இனிமேல் வரப்போகிறாரோ?!

 

7 minutes ago, nilmini said:

இவர் தொலைக்காட்சியில் பத்து வருடங்களுக்கு மேலாக நிகழ்ச்சிகள் நடத்துபவர். உறவுப்பாலம் என்னும் நிகழ்ச்சி மூலமாக நிறைய காணொளிகளை பார்த்திருக்கிறேன்.. நெதர்லாந்தில் லிபரா தொலைபேசி கொம்பனி நடத்துகிறவர்

ஓம் இவர் லிபாராவின் 3 நிறுவனர்களில் ஒருவராம். நான் ரதீசன் என்பவர் மட்டும்தான் என நினைத்தேன். கொஞ்ச நாள் முதல் அதை விற்று விட்டார்கள் (ஆளுக்கு நூறு மில்லியன் லாபம்?).

தகவல்களுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

 

 

ஓம் இவர் லிபாராவின் 3 நிறுவனர்களில் ஒருவராம். நான் ரதீசன் என்பவர் மட்டும்தான் என நினைத்தேன். கொஞ்ச நாள் முதல் அதை விற்று விட்டார்கள் (ஆளுக்கு நூறு மில்லியன் லாபம்?).

தகவல்களுக்கு நன்றி.

Lebara வில் நடுவில் இரண்டு  எழுத்துகளும்  இவரது தான்.  லியோன், பாஸ்கரன், ரதீஸ்  = LEBARA 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

யாரப்பா இந்தாள் ….

எனக்குத்தான் பொது அறிவு பத்தவில்லையோ?

 

என்ன சகோ  இவரைத்தெரியவில்லையா?

பாவம் தொடர்ந்து சம்பாதிக்க முயலாமல்

எம்மக்களுக்காக ஊர்  போன நல்ல மனிதர்

பல  நல்ல  காரியங்களை  செய்தார்

போராளிக்குடும்பங்களை  சந்தித்து

புலத்தில் தனக்கிருக்கும் செல்வாக்கை  பயன்படுத்தி பலருடனும் தொடர்புகளை எடுத்து

அந்த  குடும்பங்களுக்கு  மாதாமாதம்  உதவிக்கொண்டிருந்தார்.

சிங்களத்துக்கு இது  பொறுக்குமா???

1 hour ago, nilmini said:

இவர் தொலைக்காட்சியில் பத்து வருடங்களுக்கு மேலாக நிகழ்ச்சிகள் நடத்துபவர். உறவுப்பாலம் என்னும் நிகழ்ச்சி மூலமாக நிறைய காணொளிகளை பார்த்திருக்கிறேன்.. நெதர்லாந்தில் லிபரா தொலைபேசி கொம்பனி நடத்துகிறவர்

நெதர்லாந்து  மட்டுமல்ல

ஐரோப்பா முழுவதும் ஏன் கனடாவிலும்  என்று  நினைக்கின்றேன்?

Edited by விசுகு
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

 

என்ன சகோ  இவரைத்தெரியவில்லையா?

பாவம் தொடர்ந்து சம்பாதிக்க முயலாமல்

எம்மக்களுக்காக ஊர்  போன நல்ல மனிதர்

பல  நல்ல  காரியங்களை  செய்தார்

போராளிக்குடும்பங்களை  சந்தித்து

புலத்தில் தனக்கிருக்கும் செல்வாக்கை  பயன்படுத்தி பலருடனும் தொடர்புகளை எடுத்து

அந்த  குடும்பங்களுக்கு  மாதாமாதம்  உதவிக்கொண்டிருந்தார்.

சிங்களத்துக்கு இது  பொறுக்குமா???

நெதர்லாந்து  மட்டுமல்ல

ஐரோப்பா முழுவதும் ஏன் கனடாவிலும்  என்று  நினைக்கின்றேன்?

2018 இல் கம்பெனியை விற்றுவிட்டார்கள். இப்போ என்ன செய்கிறார் என தெரியவில்லை.

———-

தெரியவில்லை அண்ணா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

2018 இல் கம்பெனியை விற்றுவிட்டார்கள். இப்போ என்ன செய்கிறார் என தெரியவில்லை.

அதன்பின்

ஐபிசியை எடுத்துக்கொண்டு தாயகத்தில் தான்  நிற்கிறார்

லைக்காவுக்கும் லிபராவுக்குமான  வித்தியாசம் இது தான்

Edited by விசுகு
  • Like 2
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

பல  நல்ல  காரியங்களை  செய்தார்

போராளிக்குடும்பங்களை  சந்தித்து

புலத்தில் தனக்கிருக்கும் செல்வாக்கை  பயன்படுத்தி பலருடனும் தொடர்புகளை எடுத்து

அந்த  குடும்பங்களுக்கு  மாதாமாதம்  உதவிக்கொண்டிருந்தார்.

அருமையான மனிதராக இருக்கிறார். 

7 minutes ago, விசுகு said:

சிங்களத்துக்கு இது  பொறுக்குமா???

நிச்சயம் பொறுக்காது. ஊடக சுதந்திர மறுப்பு + முதலீட்டாளர் தொந்தரவு என இதை பெரிய அளவில் கொண்டு போவார் என எதிர்பார்க்கிறேன்.

  • Like 1
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராளிக்குடும்பங்களுக்கு உதவுவதால் கரவு வந்துள்ளது போல.... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொறீலங்கா சிங்கள இராணுவ மயமாக்கத்துக்குள் இருக்கும் வரை.. அது பிச்சை எடுப்பது தவிர்க்க முடியாதது. ரணில்.. கோத்தாவின் இன்னொரு வடிவம். சிங்கள பெளத்த இராணுவ மயமாக்கலை ரணில் வரவேற்கும் ஒரு நபர். 

ஐ எம் எவ் போன்ற நிறுவனங்கள் மனித உரிமைகள் குறித்து பீற்றியடிக்கும்..மேற்கு நாடுகள்.. இப்படியான இராணுவ மயமாக்கல்களை கட்டுகொள்ளாமை தான்.. இந்த நிலை தொடரக் காரணமாகும். 

இந்த நிலையில்.. சொறீலங்காவில்.. கொட்டப்பட்டும் பணம்.. மீளாது. 

Edited by nedukkalapoovan
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

புலம்பெயர் முன்னணித் தமிழ் தொழிலதிபருக்கு புலனாய்வுத் துறையால் நெருக்கடி! முதலீட்டாளர்கள் அச்சம்

சிங்களத்திற்கு புலிகள் காலத்தை விட இப்போதுதான் அச்சம் அதிகமாக இருக்கும். அடிபட்ட புலி ஆபத்தானது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அந்த எண்ணத்தோடு தமிழர்கள் எது செய்தாலும் சந்தேக கண்ணுடனேயே பார்ப்பார்கள். அதை விட ஈழத்தமிழர்கள் இன்னொரு ஆயுதத்தை தூக்கினால் தங்களால் தாக்குபிடிக்க முடியாது என்பதும் சிங்களத்திற்கு நன்றாகவே தெரியும்.

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, nedukkalapoovan said:

இந்த நிலையில்.. சொறீலங்காவில்.. கொட்டப்பட்டும் பணம்.. மீளாது. 

Sri Lanka's key inflation rate eased for the fourth straight month to 54.2 percent in January of 2023, the lowest since May of 2022, compared to 57.2 percent in December of 2022. Core inflation, which excludes volatile items, dropped to 45.6 percent from 47.7 percent in the previous month.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரச வங்கிகளில் 25 வீதம் வட்டி கொடுக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த செய்தியை எங்க வாசித்தாலும் அந்த செய்தியின் உண்மை தன்மையை காண்பது அறிவு!

4 hours ago, goshan_che said:

அருமையான மனிதராக இருக்கிறார். 

நிச்சயம் பொறுக்காது. ஊடக சுதந்திர மறுப்பு + முதலீட்டாளர் தொந்தரவு என இதை பெரிய அளவில் கொண்டு போவார் என எதிர்பார்க்கிறேன்.

 

கட்டாயம் பெரிய அளவில் கொண்டு செல்வார். அவரை விசாரணைக்கு வரச் சொன்னால் அவர் உங்களையும் உதவிக்கு வர கேட்கக்கூடும். எனவே ஆயத்தம் ஆகுங்கள். 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

 

எந்த செய்தியை எங்க வாசித்தாலும் அந்த செய்தியின் உண்மை தன்மையை காண்பது அறிவு!

 

உங்கட அறிவை எங்களிடமும் பகிர்ந்தால் செய்தி உண்மை பொய் பற்றி அறிவிலிகள் நாமும் அறியலாமே?

  • Haha 1
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.