Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலர்...........(11).

                                       

                                                                           சுமார் மூன்று வருடங்களின் பின் ஒருநாள் ஆச்சி நிர்மலாவிடம் பிள்ளை முன்பு நாங்கள் வருசம் தவறாமல் மடுக்கோயிலுக்கு போய் வருகிறனாங்கள். முகிலனின் அம்மா தவறியதில் இருந்து சில வருடங்களாக அங்கு போகவில்லை. இந்தமுறை மாதாவின் திருவிழா வந்திருக்கு. நாளைக்கு நாங்கள் அங்கு போகிறோம். நீ அதற்கு வேண்டிய ஆயத்தங்களை செய் பிள்ளை. இப்ப நீ அதிகம் பாரங்கள் துக்காதையனை வயித்துப் பிள்ளைக்காரி கவனம். தேவையென்றால் அப்புவைக் கூப்பிடு. சரி அம்மா என்று சொல்லிவிட்டு அவள் அதற்கான ஆயத்தங்களை செய்கிறாள்.அவளை வேலை செய்ய விடாமல் சரவணன் குழப்படி செய்கிறான். அவனுக்கு இப்ப இரண்டு வயதாகின்றது. அப்போது அப்பு வந்து அவனைத் தூக்கிக் கொண்டு போகிறார். பின்னால் சிவாங்கியும் போக முகிலன் அவளுடன் நின்று உதவிகள் செய்கிறான். அவன் இப்போது அவளது தோள் மட்டத்துக்கு வளர்ந்திருந்தான். அவளது நினைவுகள் பின்னோக்கி பார்க்கின்றன. இப்ப எண்ட மாதிரி இருக்கு, தான் சங்கரின் வீட்டை விட்டு வந்ததும், பின் கதிரவனை கலியாணம் செய்ததும், அந்த வருஷமே சரவணன் உண்டாகி அடுத்த வருசம் அவன் பிறந்ததும், முருகன் கோயிலில் தாங்கள் எல்லோருமாய் சென்று மாவிளக்கு போட்டு நேர்த்திக் கடனை நிறைவு செய்து விட்டு வந்ததும் அதன்பின் இப்ப மீண்டும் அவனருளால் தான் ஆறுமாத கர்ப்பமாகி இருப்பதையும் நெகிழ்ச்சியுடன் நினைக்கிறாள். அதே நேரத்தில் சங்கருக்கும் பிள்ளைகள் பிறந்திருக்கலாம் எப்படியோ அவர்களும் நல்லா இருக்க வேண்டும் என்றும் நினைத்துக் கொள்கிறாள்.

                                                             "மடுமாதா திருக்கோயில்" பெரும்பாலானோருக்கு நன்றாகத் தெரிந்த ஒரு கத்தோலிக்க தேவாலயம். (our lady of madu). வவுனியாவில் இருந்து மன்னார் போகும் வீதியில் பாதி வழியில் இருபத்தைந்து கி.மீ இருக்கலாம் ஒரு கிளை வீதி இந்தத் திருக்கோயிலுக்கு செல்கிறது. இந்தத் தேவாலயத்தின் பெருநாட்கள் ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் நடைபெறும். அந்த நாட்களில் உலகெங்கிலும் இருந்து ஏராளமானவர்கள் கோயிலுக்கு வருவார்கள். அதற்காக விசேடமாய் பேரூந்துகள் புகையிரதங்கள் எல்லாம் சேவையில் ஈடுபடுத்தப் படும். அதை சுற்றி இருக்கும் ஊர்களில் இருந்தெல்லாம் கார்கள், வான்கள், லொறிகளில் எல்லாம் மக்கள் இன மத வேறுபாடின்றி வருகை புரிவார்கள்.  அக்கோயிலைச்சுற்றி பாலம்பிட்டி, சின்ன பண்டிவிரிச்சான், பெரிய பண்டிவிரிச்சான்  என்று சில கிராமங்கள் இருக்கின்றன. இங்கு விசேடமாக கருங்காலி மரக் காடுகள் விளாத்தி மரக் காடுகள் பல இருக்கின்றன. மான்,மரை, யானை போன்ற விலங்குகளுடன் சருகுப் புலிகளும் பெரிய பெரிய வெங்கிநாந்திப் பாம்புகளும், குளங்களில் கபரக்கொய்யா என்ற முதலை போன்ற இனங்களும் இருக்கின்றன.

                                                                மின்சார விளக்குகளால் அலங்கரிக்கப் பட்ட கூடுபோன்ற அமைப்புள்ள இரதத்தில் கன்னி மரியாள் கையில் பாலகன் யேசுவுடன் கோயிலை சுற்றி வீதி வலம் வருவது வழக்கம். அதை பல லட்ஷம் மக்கள் கையில் மெழுகு வார்த்தியுடன் நின்று சுலோகங்கள் பாடித் தரிசிப்பார்கள். மேலும் அங்குள்ள விசேசம் யாதெனில் தேவையான  அளவு காட்டு மிருகங்களின் இறைச்சி வகைகள் கிடைக்கும். அரச மரக் கூட்டுத்தாபனம் அங்கு கடை விரித்து மக்கள் சமைப்பதற்கும் சிறு குடில் அமைப்பதற்கும் தேவையான தடிகள், கிடுகுகள், விறகுகள் எல்லாம் விற்பனை செய்வார்கள். மக்களும் வீதியோரங்களில் குடிலுகள் அமைத்து தமக்கு விருப்பமானவற்றை வாங்கி சமைத்து உண்பார்கள்.

மலரும்.......!  🌻

  • Replies 71
  • Views 4.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • மலர்..........(3).                                                         நிர்மலாவும் தான் இனி என்ன செய்யவேண்டும் என்று மனதுக்குள் நினைத்து கொள்கிறாள். தொடர்ந்து இங்கே இருப்பதா அம்மா வீட்ட சென்ற

  • மலர்............(5).                                                                                            வவுனியாவில் நிர்மலா நடந்து செல்லும் அந்த வீதியில் அநேகமானோர் பலதரப்பட்ட வாகனங்

  • மலர்.................(2).                                                                                                                    சங்கரும் நிர்மலாவும் எல்லா வைத்தியர்களையும் போய்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலர்............(12).

                                  

                                                                              நிர்மலாவின் குடும்பத்தினரும் அங்கு வந்து ஒரு இடத்தைப் பிடித்து பந்தல் எல்லாம் போட்டு சாமான்களை இறக்கி வைத்து அப்புவை காவலுக்கு வைத்து விட்டு மாதாவின் ஊர்வலம் பார்க்கப் போயிருந்தார்கள். பின் தரிசனம் முடிந்து அவர்கள் வந்து சமைக்கத் தொடங்கியதும் அப்பு கோயில் பார்க்கப் போகிறார். கதிரவனும் முகிலனும் விளையாட்டு சாமான்கள் வாங்குவதற்கு கடைகள் இருக்கும் பக்கமாகப் போகிறார்கள். சிவாங்கியும் சரவணனும் சிறுவர்களாதலால் தாயோடும் பேத்தியாரோடும் இருக்கிறார்கள். கொஞ்ச நேரத்தில் ஆச்சியும் நிர்மலாவும் சமையல் வேலைகளை முடித்து விட்டிருந்தார்கள். இனி எல்லோரும் வந்து சாப்பிட்ட பின் ஊருக்கு கிளம்பு வேண்டியதுதான். ஆச்சி அங்கிருக்க நிர்மலாவும் பிள்ளைகளுக்கு பிராக்கு காட்ட இருவரையும் கையில் பிடித்துக் கொண்டு மூவருமாய் வீதியில் நடக்கிறார்கள். அப்போது ஒரு பந்தலுக்குள் இருந்த அம்மா அவளைக் கூர்ந்து பார்த்து விட்டு பிள்ளை நிர்மலா என்று சத்தமாய்  கூப்பிடுகிறாள். உடனே நிர்மலாவும் திரும்பிப் பார்க்க அங்கு இராசம்மா ஒரு சிறிய கதிரையில் இருந்து எழும்ப முயற்சித்தபடி இவர்களை அழைக்கிறாள். ஓம் ...அம்மா நான் நிர்மலாதான், நீங்கள் இருங்கோ நான் அங்கு வாறன் என்று சொல்லி பிள்ளைகளுடன் அங்கே செல்கிறாள். அவளைக் கண்டதும் இராசம்மாவுக்கு மிகுந்த மகிழ்ச்சியாகி விட்டது. கண்களில் நீர் சொரிய அவளின் கைகளைப் பிடித்துக் கொள்கிறாள்.

--- நிர்மலா எப்பிடியடி இருக்கிறாய். இவர்கள் உன் பிள்ளைகளோ என்று வினவுகிறாள்.

---ஓம் அம்மா நான் நல்லா இருக்கிறன். இவன் என் மகன் சரவணன். இவள் என் புருசனின் மூத்த தாரத்து மகள் சிவாங்கி. இவ பிறக்கும்போது அவ தவறிட்டா.

--- அப்ப நீ இரண்டாம்தாரமாகவோ அவரைக் கட்டியிருக்கிறாய். அவருக்கு வேறு பிள்ளைகளும் இருக்கோ என்று கேட்கிறாள்.

--- ஓம் அம்மா இவளுக்கு மூத்த சகோதரன் முகிலன் என்றொரு மகனும் இருக்கிறார். பின் இராசம்மாவும் அவள் வயிற்றைப் பார்த்து விட்டு கண்ணாலேயே விசாரிக்க அவளும் ம்....என்று சொல்கிறாள்.

--- எத்தனையாவது மாசம் என்று கேட்க நிர்மலாவும் ஆறுமாசமாகுது என்கிறாள்.

--- பிள்ளை அன்று நீ போனதில் இருந்து நாங்கள் உன்னைத் தேடாத இடமில்லை. உன்ர அப்பா அம்மாவுடன் கதைக்கிறனியே.

--- இல்லையம்மா, இனிமேல்தான் அவையளோட தொடர்பு கொள்ள வேணும்.

--- கெதியா அவையளோட கதை பிள்ளை.அவையிலும் கலங்கிப்போய் இருக்கினம். நாங்கள்தான் உன்னை ஏதோ செய்து போட்டம் என்று சண்டை பிடித்து விட்டு போனவை. பிறகு ஒரு தொடர்பும் இல்லை. அதுசரி உன்ர புருசனும் அவை வீட்டுக்காரரும் உன்னை நல்லபடியா வைத்திருக்கினமோ.

--- ஓம் அம்மா. அவர் மட்டுமன்றி அப்பு ஆச்சியும் என்மேல் நல்ல பாசமாய்தான் இருக்கினம்.

--- எனக்குத் தெரியும் பிள்ளை, நீ உன்ர குணத்துக்கு எங்கிருந்தாலும் நல்லா இருப்பாய் என்று சொல்லி சரவணனை தூக்கி மடியில் வைத்துக் கொள்கிறாள்.

--- நான் அங்கு போகும்போது அவருக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தன. நான் அவையளது வீட்டில் வாடகைக்குத்தான் இருந்தனான். பின் அவரைத் திருமணம் செய்துதான் கடவுள் அருளால் எனக்கு இந்தப் பிள்ளைகள் கிடைத்தன. அது சரி அம்மா உங்களுக்கு பேரன் பேத்தி இருக்கினமோ.

--- இராசம்மாவுக்கு கண்களில் நீர் கோர்த்து விட்டது. அவள் மூக்கை சிந்தி அங்கால வரப்பில் எறிந்து விட்டு, அதை என் பிள்ளை கேட்கிறாய், ஜோதியை கலியாணம் செய்து கொண்டு வந்து இப்ப நாலைந்து வருடமாகி விட்டது. இன்னும் கடவுள் கண் திறக்கேல்ல. நானும் கையடுத்துக் கும்பிடாத தெய்வமில்லை, செய்யாத பரிகாரமுமில்லை, இனி இந்த மாதாவாவது கண் திறக்க வேணும் குரல் கம்முகிறது.

--- அழாதையுங்கோ அம்மா. எல்லாம் நல்லபடியா நடக்கும். எனக்குத் தெரிந்தவரையில அவருக்கு ஒரு குறையும் இருந்ததில்லை. நான் செய்த இந்தத் திருமணம் கூட நானே எனக்கு செய்து கொண்ட ஒரு சுயபரிசோதனைதான். ஒருவேளை இந்தப் பிள்ளைகள் கிடைக்காதிருந்தாலும்கூட  நான் வளர்க்க அவர் மூலமா இரண்டு பிள்ளைகள் இருக்கு என்னும் மனநிறைவுதான்.

                          --- நீ சொல்லுறதும் சரியாத்தான் இருக்கு. ஆனால் என்ன செய்வது எல்லாம் விதிப்படிதான் நடக்கும்.

--- நிர்மலா தனக்குள் நினைக்கிறாள் "ஒருவேளை சங்கரும் யாராவது ஓரிரு பிள்ளையுடன் இருக்கும் பெண்ணைத் திருமணம் செய்திருந்தால் அவருக்கும் பிள்ளைகள் பிறந்திருக்கக் கூடுமோ என்று.

--- அதே எண்ணம் இராசம்மாவுக்கும் அதேநேரத்தில் தோன்றுகிறது.

--- பின்பு நிர்மலாவும் சரியம்மா அவர்கள் வரும் நேரமாச்சுது, என்னையும் பிள்ளைகளையும் தேடுவார்கள். நாங்கள் போகிறோம் என்று சொல்லி பிள்ளையை அவளிடம் இருந்து வாங்கும் போது எதிர்பாராமல் இராசம்மாவும் தனது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை கழட்டி பிள்ளையின் கழுத்தில் போடப்போக நிர்மலா அதைத் தடுத்து வேண்டாம் அம்மா இது சிலநேரம் வீட்டில் பிரச்சினையாகி விடும், ஏதாவது இனிப்போ பலகாரமோ குடுங்கள் போதும் என்று சொல்ல இராசம்மாவும் ம்.....அதுவும் சரிதான் என்றுவிட்டு பைக்குள் இருந்து கொஞ்சம் சொக்கிலேட்டுகள் எடுத்து பிள்ளைகளிடம் கொடுக்கிறாள்.

                            நிர்மலாவும் சரியென்று சொல்லி விட்டு பிள்ளைகளுடன் போவதையே அவள் பார்த்துக் கொண்டிருக்க கோயில் மணியும் ஒலிக்கிறது. அவர்களின்தலைக்கு மேலால் மாதாவின் கோயில் தெரிகிறது. அவளையறியாமல் கைகள் கோயிலைப் பார்த்து கும்பிடுகின்றன.

                                          அதேநேரம் யாழ்ப்பாணத்தில் நல்லூர் முருகன் ஆலயத்தில் ஒரு பெண்ணும் சிறு பையனும் வந்து அங்கிருந்த கடலை விக்கிற பெண்ணின் அருகில் பாதணிகளை கழட்டி வைத்து விட்டு கால் கை முகம் கழுவி பையனுக்கும் முகத்தை நீரால் துடைத்துவிட்டு அர்ச்சனைத் தட்டுடன் உள்ளே செல்கிறார்கள். அங்கு ஒருரூபாய் அர்ச்சனை சீட்டு பத்து வாங்கிக் அர்ச்சனைத் தட்டில் வைத்துக் கொண்டு தண்டாயுதபாணி சந்நிதிக்கு வந்து அய்யரிடம் தருகிறாள்.

--- ஐயா இன்று இவருக்கு பிறந்தநாள்.ஒரு அர்ச்சனை செய்ய வேண்டும்.

--- அதுக்கென்ன செய்திடலாம். துண்டில பையனின் பெயர் நட்ஷத்திரம் மற்றும் பெற்றோரின் பெயர்களையும் எழுதிவிடுங்கோ. அது சரி ஏனம்மா பிள்ளைக்கு பிறந்தநாள் என்று சொல்கிறாய், முன்னுக்கு மூலவர்,உற்சவர், ஆறுமுகசாமி எல்லாம் கல்யாண கோலத்தில் இருக்க இந்தப் பழனியாண்டியிடம் வந்திருக்கிறாய்.

--- அது வந்து ஐயா இந்த சாமிதான் தந்தையின் வீடும் வேண்டாம் சொத்து பத்து எதுவும் வேண்டாம் என்று தனியாக வந்து தனக்கென ஒரு இடம் பிடித்து கம்பீரமாய் எழுந்தருளிக் கொண்டு இருக்கிறார் அதுதான்.

--- அதுவும் சரிதான், அர்ச்சனைத் தட்டை வாங்கிக் கொண்டுபோய் முருகனுக்கு முன்னால் ஜெய்சங்கர் மூலநட்ஷத்திரம் சங்கர் தாயம்மாவின் ஏகபுத்திரன் என்று பெயர் சொல்லி தூபதீபம் காட்டி அர்ச்சனை செய்கிறார். பின் தட்டோடு வந்து அவனின் நெற்றியில் வீபூதி இட்டு சந்தனப் பொட்டும் வைத்து விட்டு தீர்த்தம் குடுக்கும்போது அவன் கையை கவனிக்கிறார் அதில் ஆறு விரல்கள் இருக்கின்றன. நீ ராஜாடா, நன்றாக வாழ்வாய், "ஆண் மூலம் அரசாளும்" என்று சொல்லி விட்டு போகிறார்.

                                                                          சுபம்.......!  🌺

 

யாவும் கற்பனை......! 

யாழ் இணையம் 25 வது அகவைக்காக

அன்புடன் சுவி.....!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சந்தோசமான முடிவு, சுவியர்…! உங்கள் எழுத்து நடை வாசிக்க மிகவும் இலகுவானது. கதைக்கு மிக்க நன்றியும், வாழ்த்துக்களும்…!

  • கருத்துக்கள உறவுகள்

 "மலருக்கு தென்றல் பகையானால் மலர்ந்திட கதிரவன் துணையுண்டு" .  கடவுளின் சன்னிதானம் எல்லோரையும் ஒன்றிணைத்து எல்லாம் சுபமே முடிந்தது. அனுபவ அறிவை ,   நிஜ  சம்பவங்களை  கோர்த்து அழகான ஒரு கதையாக   உருவாக்கிய சுவி அண்ணருக்கு  என் நன்றிகள் பாராட்டுக்கள். 
சுவி என்று யாழ்கள உறவு இருந்தார் என்று நாளைய சமுதாயதுக்கு விட்டு செல்லும் பதிவுகளாக  இருக்கிறது உங்கள் கதை தொகுப்புக்கள். யாழ் இணையத் திற்கு   கிடைத்த    சுவி அண்ணர் (சுவை ) ஒரு அறிவுக் களஞ்சியம். 

குறிப்பு . :  ஒரு இந்து மதத்தவராய்   இருந்து மடுத்தலத்தை பற்றி இவ்வ்ளவும் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். போகுமிட குறிப்புகள் வழிப்பாதை எல்லாம் தெரிந்து இருக்கிறது. அப்பகுதியில் வேலை செய்தீர்களா ? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

@suvy

On 3/4/2023 at 10:08, suvy said:

சுபம்.......!  🌺

 

யாவும் கற்பனை......! 

யாழ் இணையம் 25 வது அகவைக்காக

அன்புடன் சுவி.....!

ஓசியிலை ஒரு கதைப்புத்தகம் வாசிச்ச திருப்தி. :folded_hands:

மாதம் ஒரு கதையாவது யாழ்களத்திற்காக எழுதுங்கள். திறமை உள்ளவர்களைத்தான் கேட்க முடியும். :499:

  • கருத்துக்கள உறவுகள்
On 29/3/2023 at 02:24, suvy said:

மலரும்.

இப்ப தான் கிணற்றடியில் நிக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 1/4/2023 at 10:20, suvy said:

"கரைதேடி நுரையோடு வரும் பேரலையொன்று கற்பாறையில் மோதி மேலெழுந்து குடையாய் விரித்தபடி ஒரு கணம் அசைவற்று அப்படியே நிண்றதுபோல்" இடைக்கும் முழங்காலுக்கும் இடையில் பொங்கித் தளும்பும் பேரழகு மனசை அலைக்கழிக்க, அவனது பார்வை போகும் இடமெல்லாம் தன் அகக்கண்களால் உணர்ந்தவள்போல் அவள் சிறிது நெளிந்து கொள்கிறாள்.

காட்சிகளை நன்றாக விபரமாக எழுதியிருக்கிறீர்கள். ஆனால் அதிக வர்ணனைகளுடன் நீங்கள் எழுதியது என்னவோ மலர் 10இல்தன். அந்த வர்ணைகளுக்குப் பிறகு வந்த அடுத்த (11)மலரை சின்னதாக முடித்திருந்தீர்கள். களைப்பு மிகுதியோ தெரியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kavi arunasalam said:

காட்சிகளை நன்றாக விபரமாக எழுதியிருக்கிறீர்கள். ஆனால் அதிக வர்ணனைகளுடன் நீங்கள் எழுதியது என்னவோ மலர் 10இல்தன். அந்த வர்ணைகளுக்குப் பிறகு வந்த அடுத்த (11)மலரை சின்னதாக முடித்திருந்தீர்கள். களைப்பு மிகுதியோ தெரியவில்லை.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கவி அருணாசலம்.  நான் 11 ம், 12 ம் ஒரே பகுதியாகத்தான் எழுதியிருந்தேன் பின் நீளம் கருதி கொஞ்சம் பிரித்து பதிவிட்டிருந்தேன்.......நன்றி நண்பரே.....!  🙏

இந்தப் பகுதியிலேயே "தையல்கடை" என்னும் கதை இருக்கு.நேரமிருந்தால் வாசித்து கருத்திடவும்........! 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நிலாமதி said:

 "மலருக்கு தென்றல் பகையானால் மலர்ந்திட கதிரவன் துணையுண்டு" .  கடவுளின் சன்னிதானம் எல்லோரையும் ஒன்றிணைத்து எல்லாம் சுபமே முடிந்தது. அனுபவ அறிவை ,   நிஜ  சம்பவங்களை  கோர்த்து அழகான ஒரு கதையாக   உருவாக்கிய சுவி அண்ணருக்கு  என் நன்றிகள் பாராட்டுக்கள். 
சுவி என்று யாழ்கள உறவு இருந்தார் என்று நாளைய சமுதாயதுக்கு விட்டு செல்லும் பதிவுகளாக  இருக்கிறது உங்கள் கதை தொகுப்புக்கள். யாழ் இணையத் திற்கு   கிடைத்த    சுவி அண்ணர் (சுவை ) ஒரு அறிவுக் களஞ்சியம். 

குறிப்பு . :  ஒரு இந்து மதத்தவராய்   இருந்து மடுத்தலத்தை பற்றி இவ்வ்ளவும் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். போகுமிட குறிப்புகள் வழிப்பாதை எல்லாம் தெரிந்து இருக்கிறது. அப்பகுதியில் வேலை செய்தீர்களா ? 

மடு மாதா தலத்திற்கு எல்லா மதத்தவரும் செல்கிறார்கள் அக்கா.
சுவி அண்ணாவின் கதையில் உண்மைச் சம்பவங்களும் கலந்திருக்கலாம். நன்றி சுவி அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

சா... என்ன ஒரு எழுத்து சுவி அண்ணா....👌

முதல் பகுதியை பார்த்தது நீளமாக இருக்கு, இது நமக்கு சரி வராதென்று நினைத்த படியே வாசிக்க ஆரம்பித்து, 12  பகுதிகளையும் ஒரே மூச்சில் வசித்தது விட்டேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள்.  ஒரு படம் பார்த்தது போன்ற உணர்வைத் தந்து விட்டீர்கள்.
இயல்பிலேயே பழிவாங்கும் (revenge) மனஇயல்போ என்னமோ இறுதி முடிவு பிடிக்கவில்லை. 

இறுதியில் பாவப்பட்டது தாயம்மா தான் 😒

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள இளசுகளுக்கு ஏற்றமாதிரி நல்ல கிழுகிழுப்பாகக் கதையை நகர்த்தி நன்றாக நிறைவு செய்திருக்கிறீர்கள் அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்
On 3/4/2023 at 01:08, suvy said:

    சுபம்.......!  🌺

 

சுவி இன்று தான் முழுமையாக வாசிக்க முடிந்தது.

நிர்மலாவின்மேல் ஒரு பாசம் வர வைத்துவிட்டீர்கள்.அதே மாதிரி எல்லோரும் எதிர்பார்த்த மாதிரி கதையை நகர்த்தி அவளுக்கு வாழ்வும் கொடுத்துள்ளீர்கள்.
ஆனாலும் இராசம்மாவுடன் ஒட்டி உறவாடுவது ஏனோ நெருடலாக இருந்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 1/4/2023 at 11:43, குமாரசாமி said:

வழமை போல இந்தமுறையும் எழுத்து நடை பின்னியெடுக்குது. அதிலையும் இந்த முறை அனுபவிச்சு எழுதி இருக்கிறியள். வேற லெவல்  :pokal:

 

On 1/4/2023 at 12:25, ஏராளன் said:

வர்ணனைகள் நன்றாக இருந்தது. வாழ்த்துகள் சுவி அண்ணை, தொடருங்கள்.

நீங்கள் படித்து ரசித்து எழுதிய கருத்துக்களுக்கு நன்றி நண்பர்களே......!  😁

  • கருத்துக்கள உறவுகள்
On 23/3/2023 at 11:19, suvy said:

 

                                                                   மலருக்கு தென்றல் பகையானால் .......!

மலர்ந்திட கதிரவன் துணையுண்டு.

ஒரேமூச்சில் படித்துமுடித்தேன். சிறப்பு. ஒவ்வொரு கட்டத்தையும் அதனுள் வாழ்ந்து செல்வதுபோல் எழுதியமையைப் பார்க்கும்போது கற்பனை என்று சொல்லமுடியாத அளவுக்கு நகர்கிறது. நிர்மலா கதிரவனது கூடலை வடித்தமை அந்தக்காலகட்டத்தைக் கடந்த 50 – 60ஐக் கடந்தோருக்கு கற்பனைக் குதிரைகளைப் பின்னோக்கிப் ஓடவிட்டு இரசிக்கும் வகையாகும். ஒரு பெரும் நாவலுக்கு நிகரான கனதியைத் தொட்டுநிற்கிறது
உங்கள் ஆக்கங்கள் தொடரட்டும். நேரம்கிடைக்கும்போது நிச்சயம் வாசிப்பேன்.கதைகள் மனிதர்களை மட்டுமல்ல காலத்தையும் மீட்கின்றன


வாழ்த்தும் பாராட்டும் உரித்தாகுக.

 


நன்றி 

On 26/3/2023 at 01:53, Kavi arunasalam said:

 

கொடிகாமம்,சாவகச்சேரி, வவுனியா  எல்லாம் வருகிறதை கவனிக்கவில்லையா நிழலி?

நீங்கள் ஒன்றைக் கவனிக்கவில்லை என நினைக்கின்றேன், நான் பதில் எழுதிய போது, சுவி அண்ணா 4 ஆவது பகுதியை எழுதியிருக்கவில்லை. என் பதிலின் பின் தான் 4 ஆம் பகுதியை எழுதியிருக்கின்றார். அதில் தான் சாவகச்சேரி, கொடிகாமம் எல்லாம் வருகின்றது. 

Edited by நிழலி
நீக்கம்

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நிழலி said:

நீங்கள் ஒன்றைக் கவனிக்கவில்லை என நினைக்கின்றேன், நான் பதில் எழுதிய போது, சுவி அண்ணா 4 ஆவது பகுதியை எழுதியிருக்கவில்லை.

ஒத்துக்கொள்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
On 27/3/2023 at 10:01, suvy said:

உங்களுக்கு விருப்பம் என்றால் வீட்டின் பின்பக்கம் ஒரு அறை இருக்கு அதைத் தருகிறேன். பின் விறாந்தையில் வைத்து நீங்கள் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் குடுக்கலாம். பக்கத்தில கிணத்தடியோடு குளியலறை மற்றும் டாய்லெட் எல்லாம் சேர்ந்தே இருக்கு அதை நீங்கள் பாவிக்கலாம். நீங்கள் சமைக்க ஒரு பத்தி இறக்கித் தாறன். ஒரு எண்ணாயிரம் ரூபாய் தந்தால் போதும். இரண்டு மாத வாடகை முன்பணமாகத் தரவேண்டும்.

சுவியர், இது என்ன... அநியாயமாக இருக்கு.
வவுனியாவில், அதுகும் உள்ளுக்கு உள்ள ஒரு கிராமத்தில்...
ஒரு அறை, குசினியும் இல்லாமல்.. மாத வாடகை எட்டாயிராம் ரூபாயா.
கதை என்றாலும்... வாடகையை கொஞ்சம் குறைத்து சொல்லக் கூடாதோ... 😂

அருமையான வர்ணணையுடன் கூடிய கதை நல்ல சுவராசியமாக போகுது.  
அடுத்த பகுதிகளையும் விரைவில் வாசிப்பேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 3/4/2023 at 11:08, புங்கையூரன் said:

நல்ல சந்தோசமான முடிவு, சுவியர்…! உங்கள் எழுத்து நடை வாசிக்க மிகவும் இலகுவானது. கதைக்கு மிக்க நன்றியும், வாழ்த்துக்களும்…!

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புங்கை .......!   😁

On 4/4/2023 at 20:28, நிலாமதி said:

 "மலருக்கு தென்றல் பகையானால் மலர்ந்திட கதிரவன் துணையுண்டு" .  கடவுளின் சன்னிதானம் எல்லோரையும் ஒன்றிணைத்து எல்லாம் சுபமே முடிந்தது. அனுபவ அறிவை ,   நிஜ  சம்பவங்களை  கோர்த்து அழகான ஒரு கதையாக   உருவாக்கிய சுவி அண்ணருக்கு  என் நன்றிகள் பாராட்டுக்கள். 
சுவி என்று யாழ்கள உறவு இருந்தார் என்று நாளைய சமுதாயதுக்கு விட்டு செல்லும் பதிவுகளாக  இருக்கிறது உங்கள் கதை தொகுப்புக்கள். யாழ் இணையத் திற்கு   கிடைத்த    சுவி அண்ணர் (சுவை ) ஒரு அறிவுக் களஞ்சியம். 

குறிப்பு . :  ஒரு இந்து மதத்தவராய்   இருந்து மடுத்தலத்தை பற்றி இவ்வ்ளவும் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். போகுமிட குறிப்புகள் வழிப்பாதை எல்லாம் தெரிந்து இருக்கிறது. அப்பகுதியில் வேலை செய்தீர்களா ? 

எனது மாமனார் அரசமரக்கூட்டுத்தாபன ஒப்பந்தக்காரராய் இருந்தபோது நான் அந்த மடுக்காடுகளில் சுமார் ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக சுற்றித் திரிந்திருக்கிறேன். தினமும் அந்த மடுக்கோயில் கிணற்றில் இருந்துதான் வாடிக்கு குடிதண்ணீர் எடுத்து வாறது வழக்கம். அதேபோல் வவுனியாவிலும் தேக்கங் காட்டில் 8/9 மாதங்கள் வேலை செய்திருக்கிறேன்.( வவுனியாவில் உள்ள ஒரு குளத்தில்தான் எனது தந்தையும் மரணமானார். 1951ல்). அங்கு நிறைய உறவினர்களும் இருக்கின்றனர்......!  😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 5/4/2023 at 00:17, குமாரசாமி said:

@suvy

ஓசியிலை ஒரு கதைப்புத்தகம் வாசிச்ச திருப்தி. :folded_hands:

மாதம் ஒரு கதையாவது யாழ்களத்திற்காக எழுதுங்கள். திறமை உள்ளவர்களைத்தான் கேட்க முடியும். :499:

உங்களின் நம்பிக்கைக்கு நன்றி கு.சா.......நேரம் கிடைக்கும்போது எழுதலாம்......!  😁

On 5/4/2023 at 12:11, ஏராளன் said:

மடு மாதா தலத்திற்கு எல்லா மதத்தவரும் செல்கிறார்கள் அக்கா.
சுவி அண்ணாவின் கதையில் உண்மைச் சம்பவங்களும் கலந்திருக்கலாம். நன்றி சுவி அண்ணா.

இதில் இடங்கள்தான் நிஜம்......மற்றவை எல்லாம் கற்பனைதான்......!

நான் இந்தக் கதையில் வரும் ஆச்சியின் கனவைப் பற்றி யாரும் எழுதுவார்கள் என்று எதிர்பார்த்தேன் யாரும் அதை படிக்க வில்லையையோ தெரியாது.......அதுக்குத்தான் நிறைய மினக்கெட்டிருந்தேன்.........!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே......!  😁

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

உங்களின் நம்பிக்கைக்கு நன்றி கு.சா.......நேரம் கிடைக்கும்போது எழுதலாம்......!  😁

இதில் இடங்கள்தான் நிஜம்......மற்றவை எல்லாம் கற்பனைதான்......!

நான் இந்தக் கதையில் வரும் ஆச்சியின் கனவைப் பற்றி யாரும் எழுதுவார்கள் என்று எதிர்பார்த்தேன் யாரும் அதை படிக்க வில்லையையோ தெரியாது.......அதுக்குத்தான் நிறைய மினக்கெட்டிருந்தேன்.........!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே......!  😁

ஆசிரியரை ஏமாற்றிய வாசகர்கள்!
மிக்க நன்றி சுவி அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்
On 21/4/2023 at 04:47, suvy said:

உங்களின் நம்பிக்கைக்கு நன்றி கு.சா.......நேரம் கிடைக்கும்போது எழுதலாம்......!  😁

இதில் இடங்கள்தான் நிஜம்......மற்றவை எல்லாம் கற்பனைதான்......!

நான் இந்தக் கதையில் வரும் ஆச்சியின் கனவைப் பற்றி யாரும் எழுதுவார்கள் என்று எதிர்பார்த்தேன் யாரும் அதை படிக்க வில்லையையோ தெரியாது.......அதுக்குத்தான் நிறைய மினக்கெட்டிருந்தேன்.........!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே......!  😁

ஆச்சிமார் ஒரே கனவு காண்பது இயல்பு தானே, அது தான் வாசகர்களும் விட்டுட்டு நகர்ந்து விட்டமாக்கும்..

On 21/4/2023 at 11:39, ஏராளன் said:

ஆசிரியரை ஏமாற்றிய வாசகர்கள்!
மிக்க நன்றி சுவி அண்ணா.

 

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

சுவியர் இப்ப தான் முழுசா வாசித்து முடித்தேன்.அந்த மாதிரி.

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.