Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அப்ப அந்த ஆட்டிறச்சிக்கு என்னாச்சு.எமக்கு சோறு முக்கியம்.😆

  • Like 1
  • Replies 378
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

மெசொபொத்தேமியா சுமேரியர்

இலங்கையில் ஆறு மாதங்கள்    நீண்ட நாட்களாகவே எம்மூரில் சென்று வாழவேண்டும் என்ற ஆசை என்னை அலைக்கழித்தபடியே இருந்ததுதான். அதிலும் ஆறு மாதங்களாவது நின்மதியாய் கணவர் பிள்ளைகளின் தொல்லைகள் இன்றி ந

மெசொபொத்தேமியா சுமேரியர்

இரண்டு   என் நண்பியும் நானும் அடிக்கடி பலதையும் திட்டமிட்டுக்கொண்டோம். தான் கிட்டத்தட்ட 6000 டொலர் சேர்த்து விட்டதாகவும் போவதற்கிடையில் 10000 டொலர் சேர்த்துவிடுவேன் என்றும் யாரும் யாரிடமும்

மெசொபொத்தேமியா சுமேரியர்

பன்னிரண்டு    முதன் முதல் கீரிமலைக் கடற்கரைக்கு குளிப்பதற்கு என்று போனால் கடற்கரை முழுதும் பழுப்பு நிறமாக ஊத்தையாக இருக்க” உந்தக் கடலுக்கை சரியான கல்லு, நீங்கள் கேணீக்கை தான் குளிக்கவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Kavi arunasalam said:

5-F8-C4-C78-5-A64-482-D-BE37-2-A8-F181-F

சா.....அன்ரியின் கதையில்தான் உங்களின் ஓவியமும் கற்பனையும் சிறகடித்துப் பறக்கிறது கவி........சூப்பர் .......!  💐

2 hours ago, சுவைப்பிரியன் said:

அப்ப அந்த ஆட்டிறச்சிக்கு என்னாச்சு.எமக்கு சோறு முக்கியம்.😆

வேலை செய்திட்டு பார்த்திருப்பவர்களுக்கு இன்று பானும் சம்பலும்தான்......!  😂

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, Kavi arunasalam said:

5-F8-C4-C78-5-A64-482-D-BE37-2-A8-F181-F

அந்த றேஞ்சில தான் தண்டவாளத்தில போய் இருக்கிறா போலும்...அவ்வைசண்முகி புறம் யூகே.😆

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 5/5/2023 at 08:31, ஏராளன் said:

புழுதி பறந்தது என்று சொன்னது நீங்கள் விழுந்ததையா? இங்க ஒழுங்கையளுக்கையே 50-60ல போறாங்கள். குழந்தையள் உள்ள வீட்டுச் சனம் படலையை பூட்டி வைச்சிருக்கினம்.

😂😂

On 5/5/2023 at 09:36, suvy said:

"சண்டை என்றால் சட்டை கிழியத்தான் செய்யும்"  வேலையாட்களுக்கு சாப்பாடு போய் சேர்ந்திச்சுதா இல்லையா......!  😁

"முயற்சி திருவினையாக்கும்" தொடருங்கோ......!

சேர்க்காமல் விடுவமா ???

23 hours ago, யாயினி said:

தண்டவாளத்தில புழுதி கிளப்பியாச்சு...சும்மா பகிடியாக எழுத அக்கா உண்மையாவே செய்துட்டா............✍️.🤭

😃😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 5/5/2023 at 15:29, Sabesh said:

இவ்வளவு சோதனையா... அங்கு போக முதல் ஓடுவது என்று போய், அங்கை நிலைமையை பார்த்து விட்டு ஒரு போதும் ஓடியதில்லை. நல்ல வேளை ஐந்து இலட்ச்சத்துக்கு அவ்வளவு சேதம் இல்லை.

அந்த ஸ்கூட்டி பாரம் என்றபடியால்தான் கனதூரம் போய் சேதப்படாமல் கீறலுடன் நின்றுவிட்டது. நான் இப்பதான் ஏன் உவவளவு பணத்தை அதில் முடக்கினேன் என்று கவலைப்படுறன். ஆனாலும் வாங்காது இருந்திருந்தாலும் வாங்கி ஓடியிருக்கலாம் என்று மனம் அலைபாய்ந்திருக்கும். 

14 hours ago, Kavi arunasalam said:

5-F8-C4-C78-5-A64-482-D-BE37-2-A8-F181-F

என் பயணக் கட்டுரைக்கு அழகுசேர்ப்பதே உங்கள் ஓவியங்கள் தான். மிக்கநன்றி அண்ணா.

13 hours ago, நந்தன் said:

அப்ப ஸ்கூட்டிக்கு மாலை போட்டிருவமா😪

மாலை போடாமலே இத்தனை நாள் ஓடினது. குடுத்த விலைக்கு அசரவில்லை அது. 

13 hours ago, சுவைப்பிரியன் said:

அப்ப அந்த ஆட்டிறச்சிக்கு என்னாச்சு.எமக்கு சோறு முக்கியம்.😆

உங்களுக்குக் கொஞ்சம் கூட பொறுமை இல்லை 😀

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அந்த ஸ்கூட்டி பாரம் என்றபடியால்தான் கனதூரம் போய் சேதப்படாமல் கீறலுடன் நின்றுவிட்டது. நான் இப்பதான் ஏன் உவவளவு பணத்தை அதில் முடக்கினேன் என்று கவலைப்படுறன். ஆனாலும் வாங்காது இருந்திருந்தாலும் வாங்கி ஓடியிருக்கலாம் என்று மனம் அலைபாய்ந்திருக்கும். 

அக்கா உங்கள் தேவைக்கு நீங்களே மோட்டார் சைக்கிள் ஓடுவது நேரம் மிச்சம், காசும் மிச்சம், இன்னொருவருக்கு கடமைப்பட தேவையில்லை.

7 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என பயனாக கட்டுரைக்கு அழகுசேர்ப்பதே உங்கள் ஓவியங்கள் தான். மிக்கநன்றி அண்ணா.

என் பயணக் கட்டுரை தானே?! திருத்தி விடுங்கோ அக்கா.
 
Posted

கட்டுரைக்கு நன்றி அக்கா.

நேரமின்மையால் முழுவதுமாக வாசிக்க முடியவில்லை. மேலோட்டமாகத்தான் வாசித்தேன். ஆறுதலாக வாசிக்க வேண்டும்.

நீங்கள் 6 மாதம் நின்றுள்ளீர்கள், நான் 6 நாட்கள். உங்கள் அனுபவங்கள் என்போன்ற பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்களுக்குக் கொஞ்சம் கூட பொறுமை இல்லை 😀

நீங்கள் நத்தை வேகத்தில் வந்தால்...🐌

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, ஏராளன் said:

அக்கா உங்கள் தேவைக்கு நீங்களே மோட்டார் சைக்கிள் ஓடுவது நேரம் மிச்சம், காசும் மிச்சம், இன்னொருவருக்கு கடமைப்பட தேவையில்லை.

என் பயணக் கட்டுரை தானே?! திருத்தி விடுங்கோ அக்கா.
 
ஆனாலும் ஓட்டோவில் சாய்ந்து காயாகப் போவதுபோல் வருமா?? நினைத்த இடத்தில் இறங்கலாம் ஏறலாம். அது ஒரு தனி சுகம்.

1 minute ago, யாயினி said:

நீங்கள் நத்தை வேகத்தில் வந்தால்...🐌

ம்க்கும்

20 minutes ago, இணையவன் said:

கட்டுரைக்கு நன்றி அக்கா.

நேரமின்மையால் முழுவதுமாக வாசிக்க முடியவில்லை. மேலோட்டமாகத்தான் வாசித்தேன். ஆறுதலாக வாசிக்க வேண்டும்.

நீங்கள் 6 மாதம் நின்றுள்ளீர்கள், நான் 6 நாட்கள். உங்கள் அனுபவங்கள் என்போன்ற பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆனாலும் ஓட்டோவில் சாய்ந்து காயாகப் போவதுபோல் வருமா?? நினைத்த இடத்தில் இறங்கலாம் ஏறலாம். அது ஒரு தனி சுகம்.

 பட்ஜெட் அனுமதித்தால்.  அடுத்த முறை போகும்போது ஒரு ஆட்டொ வாங்கி விடுங்க  தூரம் அதிகமான இடங்களுக்கும் போகலாம்.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 5/5/2023 at 09:09, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மிகச் சுவையாக இறைச்சி, கத்தரிக்காய் பால்கறி, பருப்பு, வெங்காயமும் தக்காளிப்பழமும் தயிரும் போட்ட சம்பல் என்று செய்து லண்டனில் இருந்து கொண்டுபோன உணவுகள் கொண்டுசெல்லும் பிளாஸ்டிக் பெட்டிகளில் போட்டு,பாஸ்மதி அரிசி இரண்டு கிலோ வாங்கி அதைச் சமைக்காது அங்கு கொண்டுசென்று சுடச்சுட அரிசியைச் சமைத்து அந்த வீட்டில் உள்ள இருவருக்கும் கொடுத்து உண்ணலாம் என்ற எண்ணத்தில் கறிகளை ஸ்கூட்டியில் பொருட்கள் வைக்க இருக்கும் இடத்தில் வைத்து மூடி சரியாக ஒன்பது மணிக்கு ஸ்கூட்டியில் ஏறி அமர்ந்தாச்சு. ஆறேழு வளைவுகளில் வளைந்து நிமிர்ந்து தொடருந்துத் தடத்துக்கு அருகே செல்லும் வீதியால் சென்று பிரதான வீதிக்கு ஏறமுதல் இருபக்கமும் பார்த்துக்கொண்டிருக்க வாகனங்கள் வந்தபடி இருக்கின்றன.

சாதாரணமாக நான் வலது பக்கம் திரும்பவேண்டும். இறங்கி உருட்டிக்கொண்டு போய் மற்றப்பக்கம் நின்று ஏறுவதுதான் வழமை. மற்றவர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை என்றாலும் ஒரு மாதமாக ஓடுகிறேன். இன்று ஒருக்கா உருட்டாமல் அதில் நின்று அப்படியே திருப்புவோம் என எண்ணி இருபக்கமும் பார்க்க தூரத்தில் ஒரு வாகனத்தைத் தவிர வேறு வாகனங்களைக் காணவில்லை. இதுதான் சரியான நேரம் என எண்ணி அக்சிலேற்றரைத் திருப்பியவுடன் ஸ்கூட்டி பாய்கிறது. நான் தண்டவாளத்தில் தூக்கி எறியப்பட என்முகம் கற்களில் தேய்ந்தபடி செல்வது தெரிய, அந்த நிலையிலும் நிவேதாவுக்கு இனி முகம் இலை என்று மனம் எண்ணுகிறது. 

இவ்வளவு ரகளைகள் நடந்திருக்கா? :beaming_face_with_smiling_eyes:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, நிலாமதி said:

 பட்ஜெட் அனுமதித்தால்.  அடுத்த முறை போகும்போது ஒரு ஆட்டொ வாங்கி விடுங்க  தூரம் அதிகமான இடங்களுக்கும் போகலாம்.  

என்னாது ஆட்டோவோ??????? 

நான் சொந்த பிளைட் வாங்கிறன்..
அத்தாரும் நானும் பலாலியிலை போய் இறங்கிறம்....
நாங்கள் ஆரெண்டு காட்டுறம்..:cool:

Neelambari Ramya Krishnan Ramyakrishnan GIF - Neelambari Ramya Krishnan  Ramyakrishnan Ramya - Discover & Share GIFs

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆனாலும் ஓட்டோவில் சாய்ந்து காயாகப் போவதுபோல் வருமா?? நினைத்த இடத்தில் இறங்கலாம் ஏறலாம். அது ஒரு தனி சுகம்.

அது சரி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, நிலாமதி said:

ஆனாலும் ஓட்டோவில் சாய்ந்து காயாகப் போவதுபோல் வருமா?? நினைத்த இடத்தில் இறங்கலாம் ஏறலாம். அது ஒரு தனி சுகம்.

 பட்ஜெட் அனுமதித்தால்.  அடுத்த முறை போகும்போது ஒரு ஆட்டொ வாங்கி விடுங்க  தூரம் அதிகமான இடங்களுக்கும் போகலாம்.  

May be an image of car and text that says 'VENUE Hyundai Venue LKR 1,253,000 View Details'

May be an image of scooter, golf cart, segway and text that says 'Bajaj RE Bajaj RE is the leading and basic model for the three-wheele three- highly compact, easy to parkand and maneuver on any terrain, whilst carrying three passengers and. Price LKR 931,200.00 po Request Quotation'

சின்னக் காரே வாங்கி ஓடலாம். அதுதான் அதிக பாதுகாப்பு.

13 hours ago, குமாரசாமி said:

என்னாது ஆட்டோவோ??????? 

நான் சொந்த பிளைட் வாங்கிறன்..
அத்தாரும் நானும் பலாலியிலை போய் இறங்கிறம்....
நாங்கள் ஆரெண்டு காட்டுறம்..:cool:

சொந்த பிளைட் வாங்கிற வசதி இருந்தால் பிறகேன் ஒரு இடத்தில போய் இருக்கவேணும் ????😃

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

பதினெட்டு 

ஒரு பத்து நிமிடங்களில் எனது சித்தியையும் கூட்டிக்கொண்டு வந்துவிட சித்தி வழமையாக நான் அழைக்கும் ஓட்டோக்காரருக்கு போன் செய்ய அவரும் உடனேயே வந்துவிடுகிறார். நான் கண்ணைத் திறந்து பார்க்கிறேன். இன்னமுமே எதுவும் தெரியவில்லை. சித்தியை அழைத்துவந்த உறவினரின் வீடு அருகிலேயே இருப்பதனால் அவர் ஸ்கூட்டியை தன் வீட்டில் கொண்டுபோய் விடுகிறேன் என்று கூற நான் தலையாட்டுகிறேன். 

அவரிடம் ஸ்கூட்டியில் வேலை செய்பவர்களுக்கான உணவு இருக்கு. தயவுசெய்து அவர்களுக்கு அதைக் கொண்டு சென்று கொடுக்க முடியுமா என்று கேட்க ஓமக்கா நான் கட்டாயம் கொண்டுபோய் குடுக்கிறன் என்கிறார். உது இப்ப முக்கியமோ என்கிறா சித்தி. சரியில்லை சித்தி அவர்களுக்காகச் சமைத்தது. உங்களுக்கு என்ன பிரச்சனை என்கிறேன். அதன்பின் அவர் ஒன்றும் கூறாமல் வாயை மூடிக்கொள்ள நான் கண்களைத் திறக்காமலேயே இவ்வளவும் கதைக்கிறேன்.  எங்கே கொண்டுபோறது என ஓட்டோக்காரர் கேட்க பெரியாசுபத்திரி என்கிறா. அங்க சரியான சனமாய் இருக்கும்.  தெல்லிப்பளைக்கே கொண்டுபோவம் என்று அவர் சொல்ல ஓட்டோ நகர்கிறது. 

ஓட்டோவுக்குள் இருக்க இருக்க முழங்கால் நோவெடுக்கிறது. எவ்வளவு நேரம் எடுத்தது என்று தெரியவில்லை. மருத்துவமனை வந்துவிட நீங்கள் இருங்கோ. நான் போய் அவையைக் கூட்டிக்கொண்டு வாறன் என்று சொல்லிவிட்டு போக, நான் கண்ணைத் திறக்கிறேன். கண் கண் கொஞ்சம் மங்கலாகத் தெரிகிறது. சக்கரநாற்காலியுடன் ஒருவர் வர ஓட்டோக்காரர் பக்கத்தில் வருகிறார். இறங்கி இதில இருங்கோவென்று சொல்ல நான் ஒருவாறு இறங்கி இருக்கையில் அமர, அவர் என்னைத் தள்ளிக்கொண்டு செல்ல சித்தியும் ஓட்டோக்காரரும் வருகிறார்கள். இடது முழங்காலும் வலது பாதமும் விண் விண் என்று தெறிப்பதுபோல் இருக்கு. 

அங்கு மூன்று மருத்துவத் தாதியரும் இரு மருத்துவர்களும் நிற்கின்றனர். அன்று பெரிதாக ஆட்களும் இல்லைப்போல. ஒரு பெரிய கோல் போன்ற பகுதியில் ஒரு இருபது கட்டில்கள் இருக்கின்றன. ஒரு சிறுவனும் தாயும் மற்றும் ஒரு வயதுபோன பெண்ணும் மட்டுமே இருக்கின்றனர். என் பெயர் விபரம் எல்லாம் பதிந்து என்ன நடந்தது என்று கேட்டு எழுதிவிட்டு இருங்கோ வைத்தியர் வந்து பார்ப்பார் என்று கூறிவிட்டு அந்தப்பக்கம் உள்ள அறை ஒன்றுக்குள் எல்லோரும் சென்று கதைத்து சிரித்து ஏதோ அதுக்கே வந்ததுபோல் இருக்கின்றனர். ஒரு தாதி மருத்துவர் ஒருவரைப் பார்த்து கிரிபத்தும் இருக்கு சாப்பிடுங்கோ என்றுவிட்டு அப்பால் செல்கிறார். 

நான் அந்த வாங்கிலேயே இருக்கிறேன். வாங்கில் தொடர்ந்து பலகையை அடிக்காது அதிக இடைவெளி விட்டு அடித்திருக்க அதுவேறு பயங்கர நோவை ஏற்படுத்துகிறது. வைத்தியர் வந்து சும்மா வாயால் கேட்டுவிட்டு ஒரு ஏற்பூசி போட்டுவிடுங்கோ. நாளைக்குத்தான் எக்ஸ்றே எடுக்கலாம் என்கிறார். நாளை வரை எக்ஸ்ரே எடுக்காமல் இருக்க ஏலாது எனக்குச் சரியான நோவா இருக்கு என்கிறேன். இண்டைக்கு புது வருடம் எண்டதால எக்ஸ்றே எடுக்கிறவர் வரமாட்டார் என்றவுடன் நான் அப்ப வேறு மருத்துவமனைக்குப் போறன் என்கிறேன். உடனே அவர் இல்லை இல்லை நான் எதுக்கும் வேறை யாரையும் வரச் சொல்லுறன். பொறுங்கோ என்றுவிட்டுப் போக தாதி ஊசியைக் கொண்டுவந்து போடுறா. 

அதன்பின் மீண்டும் எல்லோரும் அந்த அறைக்குள் சென்று கதைத்துச் சிரிப்பதும் உண்பதுமாக இருக்க, இன்னொரு தாதி வர எத்தனை மணிக்கு எக்ஸ்றே எடுப்பார்கள் என்கிறேன். ஒண்டரைக்குத்தான் அவர் வருவார் என்றுவிட்டு அவ செல்ல நான் சித்தியை தேவையில்லாமல் ஏன் நிற்பான். போங்கோ. எக்ஸ்றே முடிந்ததும் நான் ஓட்டோவுக்குப் போன் செய்கிறேன். எனக்கு தண்ணீர் போத்தல்  மட்டும் வாங்கித் தந்துவிட்டுச் செல்லுமாறு கேட்க ஓட்டோக்காரர் சென்று வாங்கி வருகிறார். 

அவர்கள் சென்றபின் மேலும் அரை மணிநேரம் யாரும் தாதிமார் வருவார்கள் என்று பார்த்தால் யாரையும் காணவில்லை. யாரும் இருக்கிறீர்களா என்று மூன்று தரம் பெலத்துக் கூப்பிட்டபின் ஒருதாதி வெளியே வந்து என்ன இடைஞ்சல் தருகிறாய் என்பதுபோல் பார்த்துவிட்டு சிங்களத்தில் ஏதோ சொல்கிறா. எனக்கு சிங்களம் தெரியாது என்று தமிழில் சொல்ல அவ உள்ளே சென்று இன்னொருவரை அனுப்புகிறா. 

என்னால் தொடர்ந்து இப்பிடி இருக்க முடியவில்லை. உடலெல்லாம் நோவாக இருக்கு. நான் படுக்கவேண்டும் என்கிறேன். எட்டாம் நம்பர் பெட்டுக்குப் போங்கோ என்கிறா. நான் எழுந்து நொண்டி நொண்டி அந்தக் கட்டிலைத் தேடிப் போக என்ன நம்பர் என்று அந்த வார்டில் பிள்ளையுடன் இருந்த பெண் கேட்கிறா. நான் 8 என்றதும் அந்த அம்மாவுக்குப் பக்கத்தில என்கிறா. நான் நடந்து சென்று கட்டிலை அண்மிக்கிறேன். கட்டிலில் ஒரு விரிப்புக்கூட இல்லை. ஏன் கட்டிலுக்கு ஒன்றும் விரிக்காமல் இருக்கினம் என்று கேட்க எனக்குப் பக்கத்துக் கட்டிலில் இருக்கும் முதிய பெண் நீங்கள் தான் பிள்ளை எல்லாம் கொண்டுவரவேணும். உங்களுக்குத் தெரியாதோ என்கிறா. 

நான் சித்திக்குப் போன் செய்து உணவும் படுக்கை விரிப்பும் ஓட்டோக்காரரிடம் கொடுத்துவிடுமாறு சொல்கிறேன். என்னால் இருக்கவே முடியவில்லை. நான் எப்போதும் ஒரு shawl- சால்வையையும் கழுத்தில் சுற்றிக்கொண்டுதான் போவது. அதனால் அதை எடுத்து கட்டிலில் விரித்துவிட்டு ஒரு பக்கமாக தலைக்கு கையைக் கொடுத்துக்கொண்டு படுத்ததுதான் தூங்கியும் விட்டேன். 

அக்கா எழும்புங்கோ என்று கூப்பிடுவதுபோல் கேட்க ஓட்டோக்காரர் இரு பைகளுடன் நிற்கிறார். எக்ஸ்றே எடுத்தாச்சோ என்று கேட்க இல்லை என்று தலையாட்டுகிறேன். நான் ஒருவாறு எழுந்து கட்டிலுக்கு விரிப்பை விரித்துவிட்டு மீண்டும் அமர அவர் உணவுக்கான பையைத் தந்துவிட்டு தாதிமார் நிற்குமிடம் சென்று எப்போது எக்ஸ்றே எடுப்பினம் என்று கேட்க இன்னும் ஒன்றரை மணித்தியாலம் செல்லும் என்று கூற அவர் வந்து என்னிடம் விடையத்தைச் சொல்லி அக்கா நீங்கள் சாப்பிட்டுவிட்டு இருங்கள். எல்லாம் முடிந்ததும் போன் செய்யுங்கோ என்றுவிட்டுப் போக வளவில் வேலை செய்பவரிடம் இருந்து போன் வருகிறது. 

அக்கா இப்பதான் அண்ணை சாப்பாடு கொண்டுவந்து தந்ததிட்டுப் போறார். மோட்டசயிக்கிளோட விழுந்து அடிபட்டிட்டுது எண்டு சொன்னவர். இப்ப உங்களுக்கு ஓகேயோ என்கிறார். ஓம் இன்னும் எல்லாம் முடியேல்லை என்றுவிட்டு அவர்களின் வேலை பற்றிக் கேட்க,  அக்கா நன்றி அக்கா உதுக்குள்ளையும் சாப்பாட்டைக் கொண்டுபோய் குடுக்கச் சொல்லியிருக்கிறியள். நாங்கள் பாண் வாங்கிச் சாப்பிட்டிருப்பம் தானே என்று நெகிழ்ந்துபோய் சொல்கிறார். அதனால் என்ன வடிவாச்  சாப்பிட்டுவிட்டு வேலையைச் செய்யுங்கோ என்கிறேன்.  

அதன்பின் நான் எனது உணவை எடுக்கிறேன். பக்கத்தில் இருக்கும் முதியவரை சாப்பிட்டிட்டீங்களோ என்று கேட்க இல்லைப் பிள்ளை. என்ர மகள் வாறன் எண்டவள். இன்னும் காணேல்லை என்றவுடன் கொஞ்சம் தாறன் நீங்களும் சாப்பிடுங்கோ என்றபடி அவரின் பதிலை எதிர்பாராது அவரிடம் ஒரு பெட்டியைக் கொடுக்க எந்த மறுப்பும் கூறாது வாங்கி உண்கிறார். அதன்பின் தூங்காது கட்டிலில் சாய்ந்து அமர்ந்து எப்போது என்னை அழைப்பார்கள் என்று பார்த்துக்கொண்டிருக்க, ஒருவர் சக்கர நாற்காலியுடன் வந்து என்னை அழைத்துப்போய் மீண்டும் கொண்டுவந்து விடுகிறார்.  

மேலும் இரண்டுமணிநேரம் சென்றபின்னும் என் எக்ஸ்றே ரிசல்ற் வந்தபாடில்லை. அதில் ஒரு பெண் நிலத்தைச் சுத்தம் செய்துகொண்டிருக்க ஒருக்கா தாதி ஒருவரைக் கூப்பிட முடியுமா என்று கேட்க அவ அங்கு சென்று சொல்லியபின்னும் யாரும் வருவதாய்க் காணவில்லை.ஒருக்கா சிறுநீர் கழித்துவிட்டு வருவோம் என்று சென்றால் நாற்றம் எதுவும் பெரிதாக இல்லை என்றாலும் நிலமெங்கும் தண்ணீராக இருக்கு. 

மீண்டும் சென்று கட்டிலில் அமர்ந்தபின்னும் எவரையும் காணவில்லை.  கணவர் இப்ப நித்திரையால் எழுந்திருப்பார் என்று எண்ணிக்கொண்டு  போனை எடுத்தால் போனில் 2 % தான் பற்றறி இருக்கு என்று சிவப்பில் காட்டுது. கட்டிலுக்கு மேலே சார்ச் செய்வதற்கான இடம் இருப்பினும் எந்த வயரும் என்னிடம் இல்லை. நான் எங்கு சென்றாலும் power bank ஐ கொண்டுதான் செல்வேன். இன்று அது ஸ்கூட்டியுடன் போய்விட்டது. ஓட்டோக்காரருக்கு போன் செய்தால் தான் வேறு ஒரு சவாரியில் இருப்பதாகவும் உங்களுக்கு வேறு ஒருவரை அனுப்பிவிடவா என்று கேட்கிறார். வேண்டாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்றுவிட்டு மெதுவாக நொண்டியபடி தாதிமார் இருக்கும் இடத்துக்கு செல்கிறேன். 

அவர்களின் இடத்தில் ஒரு எல்லாம் போடக்கூடிய போன் வயர்  இருக்க, எனது போனுக்கு சார்ச் இறங்கிவிட்டது. எனக்கு ஒருக்கா தரமுடியுமா என்கிறேன். அது தமது பாவனைக்குரியது அங்கு நாம் சாச் செய்ய முடியாது என்கிறார். கணவனுக்கு போன் செய்யவேண்டும்.  நீங்கள் சார்ச் செய்து தாருங்கள். வேண்டுமானால் நான் பணம் தருகிறேன் என்றவுடன் ஒரு நக்கல் சிரிப்புச் சிரித்துவிட்டு அப்படி எல்லாம் செய்ய முடியாது. இது ஒன்றும் தனியார் மருத்துவமனை இல்லை என்றுவிட்டு தன்பாட்டில் இருக்க இது தனியார் மருத்துவமனை இல்லையா என்கிறேன். அதனால் என்ன? நீங்கள் ஒரு உதவி செய்ய மாட்டேன் என்கிறீர்கள் என்று சிறிது பெரிதாகக் கேட்க அந்த நேரம் பார்த்து ஒரு இளம் வைத்தியர் வந்து அவவிடம் என்ன என்று கேட்க அவ சிங்களத்தில் அவருடன் கதைக்கிறா. 

உடனே நான் எனக்கு சிங்களம் தெரியாது அதனால் நீங்கள் என்  பிரச்சனைதான் கதைக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். தமிழில் எனக்கும் புரியும்படி கதையுங்கள் என்று சொல்கிறேன். அவவுக்கு தமிழ் வடிவாத் தெரியாது என்கிறார் வைத்தியர். அப்ப என்னுடன் தமிழில் தானே கதைத்தவ என்கிறேன். ஓகே இப்ப உங்கள் பிச்சனை என்ன என்கிறார். நான் போன்சார்ச் பற்றிச் சொல்ல, நீங்கள் கோவிக்கவேண்டாம். இதில சார்ச் செய்ய அனுமதி இல்லை என்றவுடன் நான் வெளியே செல்ல எனக்கே செல்கிறீர்கள் என்கிறார். நான் யாரையும் பிடித்து ஒரு சாச்சர் வாங்கப்போகிறேன் என்றபடி அவரின் அனுமதிக்குக் காத்திருக்காமல் மெதுவாக நொண்டியபடி நடக்க வெளிநாடுகளில் மருத்துவர்களும் தாதியர்களும் எத்தனை பண்பாக நடப்பார்கள் என எண்ணிப் பெருமூச்சு வருகிறது. நான் அன்றுதான் அந்த மருத்துவமனைக்கு முதன் முதலில் வந்ததாலும் சிறுவயதில் வெளிநாடு வந்துவிட்டதாலும் யாழ் மருத்துவமனைதான் அரசாங்க மருத்துவமனை என்று எண்ணியிருந்தேன். சித்தியும் யும் ஓட்டோக்காரர் சொன்னவுடன் எதுவும் பேசாததால் இங்கு வந்து மாட்டுப்பட்டாச்சே என எண்ணியபடிநடக்கிறேன்.

நடந்தது சரியான நோவெடுக்க அதில் இருந்த ஒரு இருக்கையில் யாராவது வருக்கிறார்களா என்று பார்த்தபடி இருக்க மருத்துவமனையில் வேலை செய்யும் ஒருவர் என்னைக் கடந்து செல்ல தம்பி எனக்கு ஒரு உதவி செய்கிறீர்களா என்று கேட்க, போனவர் நின்று என்ன என்கிறார். நான் விடயத்தைக் கூற பக்கத்தில ஒரு கடையும் இல்லை. ஒரு ஐந்து நிமிடம் போனால்தான் ஒரு கடை இருக்கு. பொறுங்கோ நான் என மோட்டார் சயிக்கிளைக் கொண்டுவாறன் என்றுவிட்டு எடுத்துக்கொண்டுவர நான் இரண்டாயிரம் ரூபாய்களை எடுத்துக் கொடுக்க அவர் சென்று வாங்கி வருகிறார். அவருக்கு 1000 ரூபாய்களைக் கொடுத்து  தம்பி உங்கள் பெற்ரோல் காசுக்கு வைத்துக்கொள்ளுங்கோ என்று கூற வாங்கிக் கொள்கிறார்.

அவருக்கு நன்றி கூறிவிட்டு உள்ளே செல்ல இரண்டு வைத்தியர்கள் நிற்க என் ரிசல்ட் வந்துவிட்டதா என்கிறேன். அது நாளைக்குத்தான் வரும் என்கின்றனர். எனக்கு உடனே வெளிநாடு நினைவில் வர, எக்ஸ்றே எடுத்தது வர நாளையாகுமா என்கிறேன். இல்லை எக்ஸ்றேயை யாழ் மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கு. நாளை தான் பார்த்துச் சொல்வார்கள் என்கிறார். உதை முதலே சொன்னால் நான் அப்போதே வீட்டுக்கு சென்றிருப்பேனே என்றுகூற உங்களுக்கு இங்கு பதிவு போட்டாச்சு. நாளை பெரிய மருத்துவர் வரும்வரை நீங்கள் போக முடியாது என்கிறார். 

நான் இன்று இரவு இங்கு தங்க முடியாது.  போய்விட்டு நாளை காலை வருகிறேன் என்று பெரிய மருத்துவர் வந்துதான் உங்களை டிஸ்சார்ச் செய்யமுடியும் என்றுவிட்டு அவர் சென்றுவிட நான் சென்று போனை சார்சில் போடுகிறேன். அந்த நேரம் அங்கு வந்த தாதி நீங்கள் எட்டுமணிக்குப் பிறகுதான் சார்ச் போடலாம் என்கிறா. ஏன் இப்ப போட்டால் என்ன என்று கேட்க கரண்ட் காசு கூட வரும் என்கிறா. நானோ அதைக் கழற்றாமல் எனக்குக் கட்டாயம் போன் செய்ய வேணும் என்றுவிட்டு இருக்க, அவர் கோபமாக வேகமாகச் செல்கிறார். அவருடன் சேர்ந்து இன்னொரு தாதியும் வந்து இப்ப போடக் கூடாது என்கிறா. எனக்கு இத்தனை நேரம் அடக்கிவைத்த கோபம் மேலெள நீங்கள் மனிதர்களா?? ஒரு மனிதாபிமான உதவிகூட செய்யாமல் இப்பிடி காட்டு மிராண்டிகள் போல நடக்கிறீர்கள். நான் இங்கு நிற்க முடியாது என்கிறேன். நீங்கள் இன்று போக முடியாது என்று கூறிவிட்டு இருவரும் செல்கின்றனர். நான் போனை எடுத்துப் பார்க்க சிறிது சார்ச் ஏறியிருக்க, என் தங்கையின் கணவனுக்கு போன் செய்து விடயத்தைக் கூற அக்கா ஒரு மணித்தியாலம் பொறுங்கோ வாறன் என்று கூறிவிட்டு போனை வைக்க நானும் மனதுள்  கறுவியபடி எதுவும் செய்ய முடியாது காத்திருக்க என் தங்கையின் கணவர் இரண்டு மணி நேரத்தில் பின் வர இருட்டியும் விடுகிறது. 

அவர் வந்து நான் கதைச்சுப் பார்க்கிறன் அக்கா என்றுவிட்டு அங்கு நின்ற வைத்தியாரிடம் வீட்டுக்குப் போவதைப் பற்றிக் கூற அவரும் மறுத்துவிட நான் அவர்களிடம் சொல்லாமலே போவம் செய்வதைச் செய்யட்டும் என்கிறேன். அவர் என் பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வர நானும் அவருடன் வந்து தாதிமார் இருக்கும் இடத்தடிக்கு வர போன் சார்ச் போட வேண்டாம் என்று சொன்ன தாதி நிற்க, நான் வீட்டுக்குப் போகிறேன் என்று கூறிவிட்டு அவர் ஏதோ சொல்ல அதைக் காதில் வாங்காது வெளியே வருகிறேன். 

அதில் நின்ற ஓட்டோவில் என்னை ஏறச் சொல்லிவிட்டு அவர் பின்னே வர வீடு வந்து அடுத்தநாள் மாலைவரை காத்திருந்து தனியார் மருத்துவமனைக்குச் சென்று ஒரு அரைமணிநேரக் காத்திருப்புக்குப் பின் எக்ஸ்றே எடுத்து அடுத்த பத்து நிமிடத்தில் காலில் முறிவு ஒன்றும் இல்லை என்று மருத்துவர் கூறி பாண்டேச் போடும்படி கூறி மருந்தும் எழுதித் தர ஆக 2800 ரூபாய்கள் தான். அடுத்தநாள் முழங்காலுக்கும் பாதத்துக்கும் பாண்டேச் 10000 ரூபாய்களுக்கு வாங்கி அணிந்து இரண்டு நாட்களின் பின் மீண்டும் ஓட்டோவில் வளவுக்குச் சென்று வந்து ஒருமாதம் முடிந்தபின் தான் மீண்டும் ஸ்கூட்டியை எடுத்து ஓட ஆரம்பித்தது.      

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
  • Like 8
  • கருத்துக்கள உறவுகள்
Posted

@மெசொபொத்தேமியா சுமேரியர்

 பல விடயங்களை நேரம் எடுத்து எழுதுகின்றீர்கள். வாழ்த்துகள்.

ஊர்வலம் சென்றது போல் இருக்கின்றது.
தொடருங்கள். வாசிக்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பொதுவாகத் தமிழர்கள் தான் வேலையில் விளையாட்டில் காட்டுவார்கள் என்றால், சிங்களவர்கள் படு சோம்பேறிகள் போல கிடக்குது..! எல்லோராலும் காசு கொடுக்க முடியாது தானே..! சனம் மிகவும் கஷ்டப் படுகுது போல கிடக்கு..!ஆபிரிக்க நாடுகளில் கூட, ஆஸ்பத்திரிகள் இவ்வளவு மோசமில்லையே..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாங்களும் உங்களுடன்  பக்கத்தில் இருந்து கேட்பதுபோல இருக்கிறது . தொடருங்கள் உங்களனுபவம் பலருக்கு அனுபவ பாடமாக  இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அக்கா எழுதும் விடையஙகளைப் பார்க்கும் போது அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒருக்கா ஊர் போய் வர வேணும் என்ற எண்ணமே இல்லாது போய் விடுகிறது..பொதுவாக மல சல; கூட வசதிகள் அற்ற இடங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் ஏற்படும் இடையுறுகளை நினைக்கும் போது ஏன் வீணாக சிரமப்படுவான் என்று தோணுது..பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏதோ ஒரு கண்டத்தில் இருந்து மீண்டு விட்டீர்கள்......அந்த நிலைமையிலும் வேலையாட்களுக்கு சாப்பாடு அனுப்பி வைத்த மனசு இருக்கே அதுதான் கடவுள்.......!  😁 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அரச மருத்துவமனைகள் எல்லாவற்றிலும் காத்திருப்பு, அலைக்கழிப்பு, நேரமுகாமைத்துவம் இன்மை என பல குறைபாடுகள். ஆனாலும் பெரும்பாலான மக்கள் அவற்றையே நாடுகின்றனர்.
இப்ப வசதி உள்ளவர்கள் தனியார் வைத்தியசாலைகளையே நாடுகின்றனர். அங்கே சிறந்த வைத்திய நிபுணர்களை இலகுவில் சந்தித்து வைத்தியம் செய்யலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, Kavi arunasalam said:

FA7485-E2-C940-4-BCD-82-BA-B34-EB49-C36-

பத்து கே பார்வையாளர்களை தொட்டதும் கால் வழைந்துட்டு ..😆👋

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, குமாரசாமி said:

@மெசொபொத்தேமியா சுமேரியர்

 பல விடயங்களை நேரம் எடுத்து எழுதுகின்றீர்கள். வாழ்த்துகள்.

ஊர்வலம் சென்றது போல் இருக்கின்றது.
தொடருங்கள். வாசிக்கின்றோம்.

நான் எழுதிக் களைத்துவிட்டேன். இன்னும் ஓரிரு பகுதிகளுடன் நிறுத்தப்போகிறேன்.

13 hours ago, புங்கையூரன் said:

பொதுவாகத் தமிழர்கள் தான் வேலையில் விளையாட்டில் காட்டுவார்கள் என்றால், சிங்களவர்கள் படு சோம்பேறிகள் போல கிடக்குது..! எல்லோராலும் காசு கொடுக்க முடியாது தானே..! சனம் மிகவும் கஷ்டப் படுகுது போல கிடக்கு..!ஆபிரிக்க நாடுகளில் கூட, ஆஸ்பத்திரிகள் இவ்வளவு மோசமில்லையே..!

என்னையே இவர்கள் இந்த ஆடு ஆட்டுகிறார்கள் என்றால் கொஞ்சம் வாய் பேசத் தெரியாத சனங்களை என்ன செய்வார்கள் என்று யோசித்தேன். தமிழர் வாழும் பகுதிகளில் தமிள வைத்தியர் இல்லை என்றால் எப்படி சரியான சிகிச்சை கொடுக்கமுடியும் என்று கேட்டதற்கு உங்கள் ஆட்கள் எல்லாம் நல்ல சம்பளம் வேண்டும் என்று வெளிநாடு போனால் வேறு யாரை அனுப்பமுடியும் என்றார் ஒருவர்.

12 hours ago, நிலாமதி said:

நாங்களும் உங்களுடன்  பக்கத்தில் இருந்து கேட்பதுபோல இருக்கிறது . தொடருங்கள் உங்களனுபவம் பலருக்கு அனுபவ பாடமாக  இருக்கும். 

நன்றி அக்கா

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, யாயினி said:

அக்கா எழுதும் விடையஙகளைப் பார்க்கும் போது அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒருக்கா ஊர் போய் வர வேணும் என்ற எண்ணமே இல்லாது போய் விடுகிறது..பொதுவாக மல சல; கூட வசதிகள் அற்ற இடங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் ஏற்படும் இடையுறுகளை நினைக்கும் போது ஏன் வீணாக சிரமப்படுவான் என்று தோணுது..பார்க்கலாம்.

எனக்கு ஏற்பட்டதுதான் உங்களுக்கும் என்று இல்லை. யாழ்ப்பாணத்தில் கார்கில்ஸ் இல் மிகவும் சுத்தமாக வைத்துள்ளனர். நான் எங்காவது செல்லும்போது டாய்லெட் டிசு கொண்டுதான் திரிந்தேன். என் எழுத்தைப் பார்த்துப் போகாது விடாமல் நீக்கள் போய் உங்கள் அனுபவங்களையும் இங்கு வந்து எழுதுங்கள்.

8 hours ago, Kavi arunasalam said:

FA7485-E2-C940-4-BCD-82-BA-B34-EB49-C36-

இந்தப் படம் எனக்கு நல்லாப் பிடிச்சிருக்கு அண்ணா. நன்றி

6 hours ago, ஏராளன் said:

அரச மருத்துவமனைகள் எல்லாவற்றிலும் காத்திருப்பு, அலைக்கழிப்பு, நேரமுகாமைத்துவம் இன்மை என பல குறைபாடுகள். ஆனாலும் பெரும்பாலான மக்கள் அவற்றையே நாடுகின்றனர்.
இப்ப வசதி உள்ளவர்கள் தனியார் வைத்தியசாலைகளையே நாடுகின்றனர். அங்கே சிறந்த வைத்திய நிபுணர்களை இலகுவில் சந்தித்து வைத்தியம் செய்யலாம்.

எங்கள் வீட்டுக்கு முன்னால் ஒரு குடும்பம் அன்றுதொட்டு வறுமை. ஆனாலும் அவர்கள் கூட தனியார் மருத்துவமனையை நாடுகின்றனர். வீண் பண விரயம் தானே என்றதற்கு காசு போனாலும் கெதியாப் பாத்துப்போடுவினை என்றார். அவருக்கு சித்தி மாதாமாதம் 3000 ரூபாய்கள் கொடுக்கிறார். 

7 hours ago, suvy said:

ஏதோ ஒரு கண்டத்தில் இருந்து மீண்டு விட்டீர்கள்......அந்த நிலைமையிலும் வேலையாட்களுக்கு சாப்பாடு அனுப்பி வைத்த மனசு இருக்கே அதுதான் கடவுள்.......!  😁 

உண்மைதான் அண்ணா விழுந்த விழுகைக்கு நடக்கவே முடியாமல் இருக்கப்போகிறேன் என்றுதான் எண்ணினேன். கடவுள்தான் காத்தது.

  • Like 1

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.