Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆண்கள் எப்பவும் பக்கத்தில் இருப்பதுதான் எமக்கு பலம். அல்லது நாங்களே எல்லாத்துக்கும் முறியவேணும்.😀

நல்ல மனம் வாழ்க, நாடு போற்ற வாழ்க.......!

இவ்வளவு காலமும் மனிசி என்னில அன்பிலதான் அத்தான் என்று அழைக்குது என்று இருந்தேன் ...... இன்றுதான் கண் திறந்தது.......!  😂

  • Replies 378
  • Views 31.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • மெசொபொத்தேமியா சுமேரியர்
    மெசொபொத்தேமியா சுமேரியர்

    இரண்டு   என் நண்பியும் நானும் அடிக்கடி பலதையும் திட்டமிட்டுக்கொண்டோம். தான் கிட்டத்தட்ட 6000 டொலர் சேர்த்து விட்டதாகவும் போவதற்கிடையில் 10000 டொலர் சேர்த்துவிடுவேன் என்றும் யாரும் யாரிடமும்

  • மெசொபொத்தேமியா சுமேரியர்
    மெசொபொத்தேமியா சுமேரியர்

    பன்னிரண்டு    முதன் முதல் கீரிமலைக் கடற்கரைக்கு குளிப்பதற்கு என்று போனால் கடற்கரை முழுதும் பழுப்பு நிறமாக ஊத்தையாக இருக்க” உந்தக் கடலுக்கை சரியான கல்லு, நீங்கள் கேணீக்கை தான் குளிக்கவேண்டும்

  • மெசொபொத்தேமியா சுமேரியர்
    மெசொபொத்தேமியா சுமேரியர்

    பத்தொன்பது    எனது முகநூல் மெசெஞ்சரில் நீங்கள் இன்னும் ஊரில் தான் நிற்கிறீர்களா என்ற செய்தி வந்திருந்தது. பார்த்தால் சகாரா. தானும் அங்கு வருவதாக கூறியிருந்தாலும் வேலைகள் தொடர்ந்து காணியில் ந

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 minutes ago, suvy said:

நல்ல மனம் வாழ்க, நாடு போற்ற வாழ்க.......!

இவ்வளவு காலமும் மனிசி என்னில அன்பிலதான் அத்தான் என்று அழைக்குது என்று இருந்தேன் ...... இன்றுதான் கண் திறந்தது.......!  😂

நானும் வாசிச்சுப்போட்டு.....வீட்டிலை எடுபுடி வேலைக்குத்தான் வைச்சிருக்கினம் எண்டது உண்மைதான்  என என்னை நானே நொந்து கொண்டேன் :grinning_face_with_smiling_eyes:

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

நானும் வாசிச்சுப்போட்டு.....வீட்டிலை எடுபுடி வேலைக்குத்தான் வைச்சிருக்கினம் எண்டது உண்மைதான்  என என்னை நானே நொந்து கொண்டேன் :grinning_face_with_smiling_eyes:

தப்பு கு.சா......தேற்றிக் கொண்டேன் என்று வர வேண்டும்......!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, suvy said:

தப்பு கு.சா......தேற்றிக் கொண்டேன் என்று வர வேண்டும்......!

புளிஞ்ச தேங்காய்ப் பூவும் சோறும் தராத வரைக்கும் சந்தோசம் :face_with_tears_of_joy:

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என் கணவரின் காணியை இப்போதே விற்போம் என்று நானும் கணவரும் எண்ணுகிறோம். ஆனால் பிள்ளைகள் வேண்டாம் என்கின்றனர். நாம் இருக்கும்போதே எத்தனை பேராசைப்படுகிறார்கள் உறவினர்கள். எம் பிள்ளைகளை எப்படி ஏமாற்றி காணியை அபகரிக்கலாம் என்றுதான் எண்ணுவார்கள். கச்சேரியில் பணம் கட்டினால் காணி உறுதியை இலகுவாக எடுக்கலாம். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

யாழ்ப்பாணம் கச்சேரிக்குள்  சிலர் கள்ள வேலை செய்து கொடுப்பற்கே இயங்கிக் கொண்டு இருக்கிறார்கள்..கடந்தகிழமை எனக்கு கிடைத்த தகவல் ஒன்று எனது தந்தையாரின் ஓய்வூதியத்தில் சின்ன சிக்கல் ஏற்பட்டுள்ளதால் கச்சேரியில் சகோதரர் போய் கதைத்தும் சரி வராத நிலையில் அறிந்த விடையம் கச்சேரிக்குள் பணி புரியும் பெண் ஒருவருக்கு 2லட்சம் கொடுத்தால் ஓய்வூதியத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனையை செய்து தருவாவாம்..ஏன் இதை சொல்ல வாறன் என்றால் இப்டியாகத் தான் ஊரில் உள்ளவர்கள் காசை குடுத்து ஊர்க் காணிகளையும் தமதாக்கி கொள்கிறார்கள்.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

நிவேதா அக்கா ஊர் ,நமது நாடு பற்றி மிக விபரமாக எழுதியுள்ளார். எனது அலுவலகத்தில் அவசரதேவைக்காக ஆட்கள் வருவதுண்டு அதற்கு பொறுப்பான பெண்மணி காக்க வைத்திருப்பார் சில நேரம் எனக்கு வேலை குறைவாக இருக்கும் நேரத்தில் அலுவலக பக்கம் போகும் போது கண்ணில் பட்டால் வினவுவேன்   நேற்று வந்த தம்பி, இன்றைக்கு வர சொன்னார்கள் தம்பி காலையில் வந்த தம்பி,இப்பவரைக்கும் இருக்கிறன் உடனே அவர்கள் வேலையை முடிந்து கொடுப்பேன்.  மிகப்பெரிய  உதவி என்று சொல்லி நன்றி கூறிப் போவார்கள். இது தமிழர்கள் பகுதிகளில் அதிகம் ஆனால் தனிச்சிங்களப்பகுதிகளில் நடப்பது குறைவு லஞ்சம்,முதல் சார்பு வேலை வரை பழக்கியவர்களில் நம்மவர்கள் முதலிடம்.

6 hours ago, குமாரசாமி said:

புளிஞ்ச தேங்காய்ப் பூவும் சோறும் தராத வரைக்கும் சந்தோசம் :face_with_tears_of_joy:

நீங்க எப்ப வந்து ஊர் கட்டுரை எழுதுவது சாமி🤔🤔🤔

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

நல்ல மனம் வாழ்க, நாடு போற்ற வாழ்க.......!

இவ்வளவு காலமும் மனிசி என்னில அன்பிலதான் அத்தான் என்று அழைக்குது என்று இருந்தேன் ...... இன்றுதான் கண் திறந்தது.......!  😂

அப்படி   திடீர் முடிவுக்கு வரவேண்டாம்’....அ.     த்       தா.      ன்  என்று இழுத்து சொல்லுவாராகில்.      உங்களில் நிறையவே அன்பு உண்டு     பிள்ளைகள் கூட அப்படி தான்      

குறிப்பு....பரிசோதித்து உங்கள் முடிவுகளை எழுதுங்கள்    😁

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என் கணவரின் காணியை இப்போதே விற்போம் என்று நானும் கணவரும் எண்ணுகிறோம். ஆனால் பிள்ளைகள் வேண்டாம் என்கின்றனர். நாம் இருக்கும்போதே எத்தனை பேராசைப்படுகிறார்கள் உறவினர்கள். எம் பிள்ளைகளை எப்படி ஏமாற்றி காணியை அபகரிக்கலாம் என்றுதான் எண்ணுவார்கள். கச்சேரியில் பணம் கட்டினால் காணி உறுதியை இலகுவாக எடுக்கலாம். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

விற்று விட்டு   கார் ஒன்று வேண்டி விடலாம்....நம்பிக்கையான. ஓட்டுநர் கிடைத்தால்   வாடகைக்கு காரை விடலாம்    லண்டனிலிருந்து நிர்வாகம் செய்யவும் முடியும்....கடினம் எனில்  காரஸ்சில்.  பூட்டி விடுவது போகும் நேரங்களில் பயன்படுத்தலாம்.....வாடகை பணம் செலவு செய்ய வேண்டியதில்லை  ...ஓட்டோகாரருடன்....500 ரூபாய் எல்லாம் அடிபடவேண்டிய தேவையுமிருக்காது. 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

ஓம்....நல்ல விசயம்.வித்தியாசமாய் இருக்கும். இசையும் கதையும் மாதிரி இருந்தால் விசேசம். :face_with_tears_of_joy:

😂

11 hours ago, suvy said:

நல்ல மனம் வாழ்க, நாடு போற்ற வாழ்க.......!

இவ்வளவு காலமும் மனிசி என்னில அன்பிலதான் அத்தான் என்று அழைக்குது என்று இருந்தேன் ...... இன்றுதான் கண் திறந்தது.......!  😂

இப்பவாவது கண் திறந்திதே.😃

11 hours ago, குமாரசாமி said:

நானும் வாசிச்சுப்போட்டு.....வீட்டிலை எடுபுடி வேலைக்குத்தான் வைச்சிருக்கினம் எண்டது உண்மைதான்  என என்னை நானே நொந்து கொண்டேன் :grinning_face_with_smiling_eyes:

உதுக்கெல்லாமா கவலைப்படுறது.??? கொஞ்சம் எண்டாலும் அன்பு இருக்கிறபடியால் தானே சமைச்சாவது தரீனம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, suvy said:

தப்பு கு.சா......தேற்றிக் கொண்டேன் என்று வர வேண்டும்......!

நீங்கள் தேறீட்டியள் அண்ணா 😂

8 hours ago, யாயினி said:

யாழ்ப்பாணம் கச்சேரிக்குள்  சிலர் கள்ள வேலை செய்து கொடுப்பற்கே இயங்கிக் கொண்டு இருக்கிறார்கள்..கடந்தகிழமை எனக்கு கிடைத்த தகவல் ஒன்று எனது தந்தையாரின் ஓய்வூதியத்தில் சின்ன சிக்கல் ஏற்பட்டுள்ளதால் கச்சேரியில் சகோதரர் போய் கதைத்தும் சரி வராத நிலையில் அறிந்த விடையம் கச்சேரிக்குள் பணி புரியும் பெண் ஒருவருக்கு 2லட்சம் கொடுத்தால் ஓய்வூதியத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனையை செய்து தருவாவாம்..ஏன் இதை சொல்ல வாறன் என்றால் இப்டியாகத் தான் ஊரில் உள்ளவர்கள் காசை குடுத்து ஊர்க் காணிகளையும் தமதாக்கி கொள்கிறார்கள்.

உண்மைதான்

  • கருத்துக்கள உறவுகள்

அவசரப்படாமல் தொடர்ந்து எழுதுங்கள்  சுமோ…

 உங்கள் காணி தெல்லிப்பழையிலா உள்ளது? 

சிறீலங்காவில் வசிப்பது என்றால் நிச்சயம் வைத்தியசாலை , பிரதேச செயலகம், பொலீஸ் என்பவற்றில் தெரிந்த நபர்களை வைத்திருப்பது நல்லது. 

மேலும் கிராம அலுவலருடன் நல்ல உறவை வைத்திருக்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நிவேதா அக்கா ஊர் ,நமது நாடு பற்றி மிக விபரமாக எழுதியுள்ளார். எனது அலுவலகத்தில் அவசரதேவைக்காக ஆட்கள் வருவதுண்டு அதற்கு பொறுப்பான பெண்மணி காக்க வைத்திருப்பார் சில நேரம் எனக்கு வேலை குறைவாக இருக்கும் நேரத்தில் அலுவலக பக்கம் போகும் போது கண்ணில் பட்டால் வினவுவேன்   நேற்று வந்த தம்பி, இன்றைக்கு வர சொன்னார்கள் தம்பி காலையில் வந்த தம்பி,இப்பவரைக்கும் இருக்கிறன் உடனே அவர்கள் வேலையை முடிந்து கொடுப்பேன்.  மிகப்பெரிய  உதவி என்று சொல்லி நன்றி கூறிப் போவார்கள். இது தமிழர்கள் பகுதிகளில் அதிகம் ஆனால் தனிச்சிங்களப்பகுதிகளில் நடப்பது குறைவு லஞ்சம்,முதல் சார்பு வேலை வரை பழக்கியவர்களில் நம்மவர்கள் முதலிடம்.

இப்பவரை என காணிக்கு சோலை வரி கட்ட பெயர் மாற்றித் தரவில்லை. வெளிநாட்டுக் காரர் இழுத்தடிச்சால் காசு தந்து செய்வினம் எண்டுதான் வச்சிரிக்கினம் என்றார் ஒருவர்.

1 hour ago, Kandiah57 said:

விற்று விட்டு   கார் ஒன்று வேண்டி விடலாம்....நம்பிக்கையான. ஓட்டுநர் கிடைத்தால்   வாடகைக்கு காரை விடலாம்    லண்டனிலிருந்து நிர்வாகம் செய்யவும் முடியும்....கடினம் எனில்  காரஸ்சில்.  பூட்டி விடுவது போகும் நேரங்களில் பயன்படுத்தலாம்.....வாடகை பணம் செலவு செய்ய வேண்டியதில்லை  ...ஓட்டோகாரருடன்....500 ரூபாய் எல்லாம் அடிபடவேண்டிய தேவையுமிருக்காது. 🤣

இது சிறந்த ஐடியாவா இருக்கே. 😃

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நீங்க எப்ப வந்து ஊர் கட்டுரை எழுதுவது சாமி🤔🤔🤔

வரேக்கை சொல்லுவன் தானே:beaming_face_with_smiling_eyes:

சொந்த ஊரை விட மட்டக்களப்பு எனக்கு முக்கியம் :cool:

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

வரேக்கை சொல்லுவன் தானே:beaming_face_with_smiling_eyes:

சொந்த ஊரை விட மட்டக்களப்பு எனக்கு முக்கியம் :cool:

அதுதானே பார்த்தன் வந்து போங்கள் 👌👌

19 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இப்பவரை என காணிக்கு சோலை வரி கட்ட பெயர் மாற்றித் தரவில்லை. வெளிநாட்டுக் காரர் இழுத்தடிச்சால் காசு தந்து செய்வினம் எண்டுதான் வச்சிரிக்கினம் என்றார் ஒருவர்.

உரியவர் தான் வேண்டுமென நினைக்கலாம் 

அல்லது உயரதிகாரிக்கு விபரத்தை தெரிவியுங்கள் 

அக்கா அந்த நடைமுறைகள் கொஞ்ச காலம் எடுக்கும், உறுதியில் பிரச்சனைகள் இல்லையா என்பதை பிரதேச சபையின் சட்டத்தரணி ஆராய்ந்து தான் பெயர் மாற்ற அனுமதி தருவார்கள். தோம்பு எல்லாம் சரி பார்த்திருப்பார்களே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஏராளன் said:

அக்கா அந்த நடைமுறைகள் கொஞ்ச காலம் எடுக்கும், உறுதியில் பிரச்சனைகள் இல்லையா என்பதை பிரதேச சபையின் சட்டத்தரணி ஆராய்ந்து தான் பெயர் மாற்ற அனுமதி தருவார்கள். தோம்பு எல்லாம் சரி பார்த்திருப்பார்களே?

உறுதி, தோம்பு எல்லாம் போட்டோ கொப்பி பண்ணி கொண்டுபோய் குடுத்தது.

14 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அதுதானே பார்த்தன் வந்து போங்கள் 👌👌

உரியவர் தான் வேண்டுமென நினைக்கலாம் 

அல்லது உயரதிகாரிக்கு விபரத்தை தெரிவியுங்கள் 

இனி வரும்போதுதான் பார்க்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 11/5/2023 at 21:39, MEERA said:

அவசரப்படாமல் தொடர்ந்து எழுதுங்கள்  சுமோ…

 உங்கள் காணி தெல்லிப்பழையிலா உள்ளது? 

சிறீலங்காவில் வசிப்பது என்றால் நிச்சயம் வைத்தியசாலை , பிரதேச செயலகம், பொலீஸ் என்பவற்றில் தெரிந்த நபர்களை வைத்திருப்பது நல்லது. 

மேலும் கிராம அலுவலருடன் நல்ல உறவை வைத்திருக்க வேண்டும்.

ஊரெழுவில் உள்ளது. தாவடியில் ஒரு நல்ல பெண் வைத்தியர் இருக்கிறார். பிரதேச செயலகத்துக்குப் போனால் கடுப்புத்தான் வரும் . இருந்தாலும் அடிக்கிக்கொண்டு வருவது. ஒருமுறை நான் போய் இருக்கிறேன். வேலை ஆரம்பிப்பது 9.00 மணிக்கு. நான் 8.50 இக்குப் போய்ப் பார்த்தால் ஒரே ஒரு முதியவரும் இரு இளம் ஆணும் தான் வந்திருந்தனர். பத்து நிமிடம் ஆகியும் அங்கே மாறி இங்கே மாறித் திரிக்கின்றனர். அதன் பின் நான்கு இளம் பெண்கள் வருகிறார்கள். பசிக்குது என்ன சாப்பிடுவம் என்று ஆளையாள் பார்த்துக் கேட்க எனக்கும் வாய் சும்மாஇருக்குமா? வேலைக்கு வரும்போது வீட்டில் சாப்பிடாமலா வருவீர்கள் என்கிறேன். அவர்கள் என்னைப் பார்த்து அசட்டுச் சிரிப்புச் சிரித்துவிட்டு இருக்க அந்த முதியவர் அவர்களைப்பார்த்து அசடு வழிந்துகொண்டு இருக்கிறார்.

21 hours ago, சுவைப்பிரியன் said:

எங்கை ஆளைக் கானோம்.

சமையல் செய்யிறன். இன்னும் முடியவில்லை. 😃

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இருபது 

ஆரம்பத்தில் நான் யாழ்ப்பாணம் செல்லும்போது பெரும்பாலும் பஸ்சில் தான் போய் வந்தேன். முன்புபோல பேருந்துச் சேவைகளோ அன்றி மினிபஸ்களோ கூட இல்லை. ஒரு மணித்தியாலத்துக்கு இரண்டு தான் செல்கின்றன. எல்லோர் வீட்டிலும் ஸ்கூட்டியும் மோட்டார் சயிக்கிலும் இருப்பதுதான் அதற்குக் காரணம். பஸ்சில் பெரிதாக ஆட்களே இருப்பதில்லை. அதிலும் அரசாங்க பஸ் சிவப்பு நிறத்திலும், தனியார் பஸ் பச்சை நிறத்திலும் ஓடுகிறது. 

சிலவேளைகளில் மட்டுமே மினிபஸ் ஆட்கள் நிறையாது வரும். மற்றப்படி ஆட்டுப்பட்டிகளை அடைப்பதுபோல் அடைந்தபடிதான் வருவார்கள். பின்னுக்குப் போ பின்னுக்குப் போ என்று அவர்கள் கத்தும்போது ஆட்களும் எதுவும் பேசாது இடித்தபடி பின்னால் நகர நான் மட்டுமே பின்னால எங்கே தம்பி போறது என்று கேட்டு நகராமல் நிற்பேன். 

ஆனால் எதுவும் பேசாது ஆட்கள் இடித்துக்கொண்டு நெருக்கியடித்து நிற்பார்கள். அதற்குள் பலத்த சத்தத்துடன் பாட்டுகளைப் போட்டு யாரும் கதைக்கக்கூட முடியாதபடி சத்தத்துடன் இருக்கும். அதற்கும் எவருமே எதுவும் சொல்வதில்லை. 

தோழில் பைகளைக் கொண்டு வருபவர்கள் கேட்டுக்கக்கேள்வியின்றி இருப்பவரின் மடியில் தமது பைகளை வைத்துவிட்டு நிற்பார்கள். ஒரு மரியாதைக்காவது “இதை ஒருக்கா வைத்திருக்கிறீர்களா” என்று கேட்பதில்லை. முன்னர் பள்ளிக்கூட பஸ்சில் தான் மாணவர்கள் ஏறவேண்டும். இப்போது மினிபஸ்சிலும் நெரிபட்டுக்கொண்டு வருகிறார்கள். “இப்போது பள்ளிக்கூட பஸ் வருவதில்லையா” என்று கேட்டதற்கு “அது வரும்வரை நிற்கேலாது” என்கின்றனர். 

ஆட்கள் மினிபஸ்சில் குறைவு என்றால் எங்காவது தரிப்பில் நிறுத்தி ஒரு மூன்று நான்குபேர் ஏறுமட்டும் ஒரு பத்து நிமிடமாவது நிறுத்திவைத்துவிடுவார்கள். யாரும் ஏன் நிக்கிறாய் போ என்று சொல்வதில்லை. ஒருதடவை தட்டாதெருவில் 15 நிமிடம்வரை நிக்க, “ஏன் தம்பி நிக்குது?” என்று நான் கேட்க யாரோ தமக்குத் தெரிந்தவர் வரவேண்டும் என்கிறான் அந்தப் பெடியன். “உங்களுக்குத் தெரிந்தவர் வரும்வரை இத்தனை பேரும் காத்திருக்கவேண்டுமா” என்று நான் கேட்க “விருப்பம் இல்லாட்டில் அவவை இறங்கி ஓட்டோவில போகச் சொல்லு” என்கிறான் சாரதி. “எண்ணண்டு அப்பிடி நீர் சொல்லுவீர். என்னை ஓசியிலா ஏற்றிக்கொண்டு செல்கிறீர். இறங்கச் சொல்ல உமக்கு எந்த றைற்றும் இல்லை” என்றுவிட்டு அவர்கள் இருவரையும் படம் எடுக்க பக்கத்தில நிண்ட மனிசி “பிள்ளை உவங்களோட கதைச்சா பிரச்சனை. வெட்டிக்கிட்டிப் போடுவாங்கள். அதுதான் நாங்கள் கதைக்கிறேல்லை” என்கிறா. இன்னும் இரண்டுபேர் என்னிடம் “உவங்களோட கதைக்கேலாது” என்று மற்றவர்களுக்குக் கேட்காதவாறு சொல்கின்றனர். 

ஒருநாள் யாழ்ப்பாணம் சென்று மீசாலையில் இருக்கும் ஒரு நட்பைப் பாரக்கச் செல்கிறேன். எந்த பஸ்சில் ஏறுவது என்று தெரியவில்லை. ஒருவர் முன்னால நிக்கிற பஸ் என்று காட்ட, போய் ஏறுவதற்கு போக 

சாவகச்சேரி, மிருசுவில், கொடிக்காம்.. கொடிக்காம் .... 

தம்பி இது மீசாலைக்குப் போகுமோ?

ஓம் ஏறுங்கோ கெதியா. 

கொடிக்காம் என்று ஒரு ஊர் இருக்கோ தம்பி? 

கொடிகாமம் எந்ததைச் சுருக்கிச் சொல்லுறன் அம்மா.

தம்பி உங்களுக்கு என்ன பெயர்?   

சங்கீதன் அம்மா. 

உங்களை சதன் எண்டு கூப்பிடால் நல்லாவா இருக்கும்?

சீற்றில ஏறி இருங்கோ அம்மா முதல்ல 

சாவகச்சேரி, மிருசுவில்,  கொடிக்காம் கொடிக்காம் ........

ஒருதடவை யாழ்ப்பாணம் செல்லும்போது மினிபஸ்சில் சனம் இல்லை. கடைசி இருக்கையில் நடுவே நான்குபேர் இருக்கும் இருக்கையில் ஒரு இடம் காலியாக இருக்க சென்று அமர்கிறேன். எனக்கு ஒருபுறம் இருவர்.  மறுபுறம் இன்னொருவர். ஒருபுறம் பெண் என்பதால் நான் அவருடன் நெருங்கி அமர்கிறேன். மறுபுறம் இருப்பவர் அடக்க ஒடுக்கமாய் இருக்காது கால்களை அகட்டி வைத்தபடி இருக்கிறார். போதாததற்கு கால்களை அப்பப்ப ஆட்டியபடியும் இருக்க, அவர் ஆட்டும்போது எனக்குப் பட்டுவிடும்போல் இருக்க அவரை ஒருதடவை திரும்பி முறைத்துப் பார்த்தபின்னும் அவர் நிறுத்தவில்லை. 

நான் : அண்ணா கால் ஆட்டாதைங்கோ

அவர் : ஏன்? என்ர கால் நான் ஆட்டுறன்.  

நான் : எனக்கு முட்டுற மாதிரி இருக்கு. . 

அவர் : ஏன் முட்டினதே? இல்லையே. 

நான் : முட்டாமல் இருக்கத்தான் முதலே சொல்லுறன். காலை ஒடுக்கிக்கொண்டு இருங்கோ.   

கடைசியில என் குரல் உயர்ந்து மற்றவர்கள் திரும்பிப் பார்க்க, தன் காலை ஒடுக்கிக்கொண்டு இருக்கிறார். 

நானாட்டானில் இருந்து மன்னார் மன்னார் வரும்போதும் எனக்கு கடைசி இருக்கை தான். அரச பேருந்து அதிவேகமாகச் செல்லும். எனக்கு முன்னால் பிடிப்பதற்குக் கூட எதுவும் இல்லை.அது ஐந்துபேர் இருக்கக்கூடிய இருக்கை. நாம் நாங்கு பேர்தான். ஒரு ஐம்பது மதிக்கத்தக்க ஒருவர் என்னருகில். பிரேக் பிடித்தால் நான் விழுந்துவிடுவேன் என்ற பயத்தில் முன் இருக்கையின் கம்பியை இறுக்கிப் பிடித்தபடி இருக்க, நித்திரை தூங்கியபடி என் கைகளில் தலையைக் கொண்டுவந்து சாய்ப்பதும் நான் கையை எடுப்பதுமாக இருக்க, அவர் வேண்டுமென்றே செய்கிறாரா அல்லது தற்செயலானதா என்று புரியாவிட்டாலும் கூட இதுக்கு மிஞ்சி சகிக்க முடியாது எனறு எண்ணி என் பலம் கொண்ட மட்டும் அவர் தலையை கைகளால் தள்ள திடுக்கிட்டு விழித்தவர்போல் என்னைப் பார்க்க, அண்ணா என்ர கையில படுக்காதேங்கோ. நித்திரை வந்தால் பின்னால சாய்ந்து படுங்கோ என்றபின் மன்னார் வரும்வரை அவர் நித்திரையே கொள்ளேல்லை. 

அரச பஸ்சில் ஏறினால் டிக்கட் கொடுப்பதற்கு மிஷின் இருக்கு. ஆனாலும் நாம் மாற்றிய காசு கொண்டு செல்வதுதான் நல்லது. மிச்சக்காசை இறங்கும்போது நாம்தான் கேட்டு வாங்கவேண்டும்.  மினிபஸ்சில் என்னைப் பார்த்ததும் எப்படித்தான் அவர்களுக்குத் தெரிக்கிறதோ இருபது ரூபாய்கள் அதிகமாகவே வாங்குவார்கள். சரி போகட்டும் என்று விட்டுவிடுவது.  

நாம் எப்படித்தான் சாதாரணமாக வெளிக்கிட்டுப் போனாலும் எம்மை எப்படித்தான் வெளிநாட்டவர் என்று அறிகிறார்களோ தெரியவில்லை.

மண்ணெண்ணை தட்டுப்பாடு இருந்து எந்தக் கடைகளிலும் இல்லை. அடுத்தநாள் கொடுக்கிறார்களாம் என்று கதை அடிபட நானும் சித்தியின் அட்டையைக் கொண்டுசென்று வாங்குவோம் என முடிவெடுத்து 1000 ரூபாய்க்கு ஒரு பிளாஸ்டிக் கானும் வாங்கி வைத்தாச்சு. ஓட்டோவில் போகவர மண்ணெண்ணை வந்திட்டுதா என்று கேட்டு கடைசியில் மாலை நான்கு மணிக்கு மருதனார்மட பெற்ரோல்  நிரப்பு நிலையத்தில் கொடுக்கிறார்களாம் என்று என் ஓட்டோக்காரர் கூற உடனேயே அவருடன் புறப்பட்டு வந்தாச்சு. நாம் வரும்போது வரிசையில் எமக்கு முன்னால் இருபதுபேர். 

சிறிது நேரத்தில் திபுதிபு என ஆட்கள் கூட எமக்கு முன்னால் சிலர் இடையே புகுகிறார்கள். தம்பி பின்னுக்கு வாங்கோ. நாங்களும் மண்ணெண்ணைக்குத்தான் நிக்கிறம் என்று நான் மட்டும்தான் சொல்லிக்கொண்டு நிக்கிறன். மற்றவர்கள் வாயே திறக்கவில்லை. ஓரிடத்தில் அட்டையைக் கொடுத்து பதிந்தபின் மற்ற இடத்தில் மீண்டும் வரிசையில் நின்று எண்ணையை வாங்க வேண்டும். பெடியள் எல்லாம் இரட்டு அட்டைகளைக் கொண்டுவந்து இடையில் புகுந்து அல்லது தமக்குத் தெரிந்தவரிடம் கொடுத்து வாங்குகின்றனர். யாரும் எதுவும் பேசவில்லை. எனக்குத் தெரிந்த ஒருவர் வருகிறார். எனக்கு முன்னார் நிற்பதற்கு முயல நான் விடாது “அண்ணா இத்தனைபேர் இவ்வளவுநேரம் காத்துக்கொண்டு இருக்கினம். நீங்கள் இப்ப வந்திட்டு இடையில நிக்க வாறியள். போய் வரிசையில நில்லுங்கோ” என்று சொல்ல,ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு முன்னால் போனவர் பத்து நிமிடத்தில் எண்ணையை வாங்கிக்கொண்டு வந்து எனக்குக் காட்டிப்போட்டுப் போறார். எனக்கு கடும் கோபம்வர பொறுங்கோ நான் போய் கேட்டுட்டு வாறன் என்று கிளம்ப, “அயலில இருக்கிறவை அக்கா. ஏனக்கா தேவையிலாத பிரச்சனை. பேசாமல் விடுங்கோ” என்கிறார் இன்னொருவர்.கடைசியில் எதுவும் பேசாது பார்த்துக்கொண்டுநின்று மண்ணெண்ணை வாங்கிவர இரண்டு மணித்தியாலம். எனக்கு ஏன் மண்ணெண்ணை என்றுதானே கேட்கிறீர்கள். என் வளவில் இருக்கும் கறையான் புற்றுக்களுக்கு விடுவதற்கு வாங்கியதுதான். 

திரும்பி லண்டன் வரும்போதும் நான் நிண்ட கோட்டலில் முதல் நாளே எனக்கு விமான நிலையம் செல்வதற்கு ஊபர் ஒழுங்கு செய்து தாருங்கள் என்றேன். நீங்கள் தயாராகிக் கீழே வந்தவுடன் சொல்லுங்கள். ஊபர் இருக்கிறது மலிவாக இருக்கும் என்றனர். என் போனில் போட அது ஏதோ சில்லெடுத்தபடி இருக்க அங்கு நின்றவரிடம் கூறினேன். ஒரு இருபது நிமிடமாக இருவர் போனை வைத்துக்கொண்டு அங்குமாறி இங்குமாறித் திரிய எனக்கோ நேரம் ஆகிறதே என்ற பதட்டம். தங்கச்சி ஊபர் விமான நிலையத்துக்கு வருதில்லை. தூரமாம். பெற்றோல் விலை என்பதனால் வர மறுக்கிறார்கள் என்கின்றனர் இருவரும் சொல்லிவைத்ததுபோல். பிரைவேட் கார் ஒழுங்கு செய்து தரட்டா என்று கேட்க நானும் என்ன என்றாலும் வரட்டும் என்று கூற, தங்கச்சி 9000 ரூபாய்கள் கேட்கின்றார். என்ன சொல்ல என்கிறார். சரி வரச் சொல்லுங்கள் என்கிறேன். விமான நிலையம் வந்து செக்கின் முடிய கணவருக்கு போன் செய்ய, நாம் வரும்போது ஊபருக்கு 3000 ரூபாய்தான் கொடுத்தோம். கோட்டலில் உள்ளவர்கள் உன்னை நன்றாக ஏமாற்றிவிட்டனர் என்கிறார். 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஜான்சிராணி யாழில் இருப்பது எமக்குப் பெருமையாக இருக்கின்றது........!  😂

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது உள்ள காலம்  நாம் வாழ்ந்த காலம் இல்லை. எல்லாமே   மாறிவிடட து   .ஊரோடு ஒத்து ஓடவேண்டியதாயிருக்கிறது.  தொடடதற்கும் வாளும் பொல்லும் கத்தியும்பேசுகிற காலம். போதை யால் சீரழிகிறார்கள்.   

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பின்னுக்குப் போ பின்னுக்குப் போ என்று அவர்கள் கத்தும்போது ஆட்களும் எதுவும் பேசாது இடித்தபடி பின்னால் நகர நான் மட்டுமே பின்னால எங்கே தம்பி போறது என்று கேட்டு நகராமல் நிற்பேன். 

IMG-4049.jpg

  • கருத்துக்கள உறவுகள்

சுமேரியர், வேதநாயகம் தபேந்திரன் புலத்தில் உள்ளவர்களுக்கு ஏதோ சொல்ல வருகிறார் கவனித்தீர்களா? குறிப்பாக 09,10,11 என்று இலக்கங்களில்  உள்ள  வரிகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஊர் நாடு என்பனவற்றின் நிலை விலாவாரியாக எழுதப்பட்டுள்ளது. @மெசொபொத்தேமியா சுமேரியர் அப்படியே, மண்ணெண்ணெய்,சிலிண்டர் வாயு,பெற்றோல் இந்த வரிசையில் நின்ற சம்பவங்கள் எழுதினால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது நேரத்தை செலவு செய்து, மிகவும் நேர்த்தியாக பல விடையங்களை நாங்கள் அறியும் படியாக விளக்கமாகவும் சுவாரசியமாகவும் எழுதியததற்கு மனமார்ந்த நன்றி சுமே.

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.