Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

large.8481DA4A-5D8A-4207-B20F-D9141208443E.jpeg.52461d700bfea66a896e3640c55f3769.jpeg

  • கருத்துக்கள உறவுகள்
Posted
29 minutes ago, goshan_che said:

large.8481DA4A-5D8A-4207-B20F-D9141208443E.jpeg.52461d700bfea66a896e3640c55f3769.jpeg

நீங்கள் வருவியளே? அங்கை சந்திப்போம்! 😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
"தலைவரா நடிக்கணும்ன்னு சொன்னதும் பயந்துட்டேன்!"
"போலீஸ் சொல்ல முடியாத அளவுக்கு பிரச்னை பண்ணுவாங்க!" - 'மேதகு' நடிகர் குட்டி மணி! …
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, Nathamuni said:

நீங்கள் வருவியளே? அங்கை சந்திப்போம்! 😁

எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted


மேதகு படக்குழுவின் உறுப்பினரும், அதில் வரும் பாடல் ஒன்றை எழுதியவருமான கவிஞர் திருக்குமரனின் பேட்டி.

படம், பாடல்கள் உருவாகிய விதம், புதுவை ஐயாவின் முதல் சினிமா பாடல் என பல சுவாரசியாமான தகவல்கள் உள்ளன.

5000 பேருக்கு சாப்பாடு கொடுக்க முடியாமல் தமிழாராய்சி மகாநாட்டு காட்சியை மினிமைஸ் பண்ணிணோம் எனும் போது இந்த படத்தின் மீதான, அதன் பின்னாலுள்ள உழைப்பின் மீது மேலும் மதிப்பு உயர்கிறது.

பின்பாதியில் மிக தெளிவாக தமிழ் நாட்டின் நடப்பு அரசியலை அதன் போக்கை விளக்குகிறார்.

இவர் யாழ் கள உறவு என்பதில் நாமும் கொஞ்சம் கர்வம் அடைவோம்😎

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இணைப்புக்கு நன்றி கோசான்.

தெரியாத மனதுக்கு கஸ்டமான பல விடயங்களை உரையாடுகிறார்.

இவர்கள் பட்ட கஸ்டம் உரையாடலில் தெரிகிறது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted


ஓடிடி உலகம்: திரும்பிப் பார்க்கவைத்த 2 படங்கள்
 

இதர மொழிகளோடு ஒப்பிடுகையில் ஓடிடி தளங்களில் வெளியாகும் தரமான தமிழ் படங்கள் மிகவும் குறைவு. இந்த ஆதங்கத்தை நேர் செய்யும் வகையில் அண்மையில் இரண்டு திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஈர்த்திருக்கின்றன. ஈழத்தமிழர் போராட்டம் பற்றிய பொதுப்புத்தியின் அலட்சியத்தை உலுக்கிய ’மேதகு’, ஆதிக்க வெறியர்களைச் சாடும் ‘மாடத்தி’ என, கனமான உள்ளடக்கத்துடன் வெளியாகி, விவாதங்களையும் பற்ற வைத்திருக்கின்றன.

மேதகு: ஒரு தலைவன் உருவான கதை

‘ஃபேமிலிமேன்’ வலைத்தொடரின் இரண்டாம் சீஸன், ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் என அண்மையில் ஓடிடியில் வெளியான இரண்டு படங்களிலும் ஈழப்போராட்டம் குறித்த கருத்தாக்கம் பொறுப்பின்றி கையாளப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. நிஜத்தில், ஈழத்தில் நடந்தது என்ன? ஈழ மக்களின் தரப்பு நியாயங்கள் எவை என்பது பற்றிய புரிதலில் தற்போதைய தமிழ்நாட்டு தலைமுறைக்கும் பிற இந்திய மாநிலத்தினருக்கும் நிறையவே போதாமைகள் உண்டு. அவற்றுக்கு விடை தரும் முயற்சியாக மேதகுதிரைப்படம் அமைந்திருக்கிறது.

சிங்களர் - தமிழர் இடையிலான இனவாத மோதலில், திருப்புமுனையான ஒரு முக்கியப் போராளி இயக்கத்தின் விதை எப்போது விழுந்தது, வேலுப்பிள்ளை பிரபாகரன் என்கிற போராளி எப்படி உதயமானார், அறவழியிலிருந்த தமிழர்களின் போராட்டம் எந்தப் புள்ளியில் ஆயுதமேந்திய மறவழிக்கு மடைமாறியது என்பதையெல்லாம் ஆழமான விவரணைகளோடு ஓர் உயிர்ப்புமிக்கத் திரைப்படத்துக்குரிய எளிய மொழியில் சொல்லியிருக்கிறது ‘மேதகு’.

பிரபாகரன் பிறந்ததில் தொடங்கி, கையில் ’துவக்கு’ ஏந்தி அவர் களமாடிய முதல் சம்பவம் வரையாக ‘மேதகு’ முதல் பாகம் விவரிக்கிறது. பிரபாகரன், யாழ்ப்பாண மேயர் துரையப்பா, இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயகா என முக்கிய கதாபாத்திரங்களுக்கான நடிகர் தேர்வு சிறப்பாகவும் தோற்றப் பொருத்தத்துடனும் அமைந்துள்ளது. அதிலும் இளவயது பிரபாகரனாக தோன்றும் குட்டி மணியின் ஆழமான பார்வையும் உடல்மொழியும் அபாரம்!

ஏராளமான விவரிப்புகள், சம்பவங்கள் நிறைந்த கால் நூற்றாண்டுக் கதையை சுருங்கச் சொல்வதற்கு மதுரை தெருக்கூத்து உத்தியை உபயோகித்திருப்பது ரசிக்க வைக்கிறது. அழிவின் விளிம்பிலிருக்கும் கூத்துக் கலை ‘மேதகு’ மூலம் மீண்டும் ஆக்சிஜன் பெறவும் வாய்ப்பாகலாம். திரைப்படம் பேசும் அரசியலுக்கு அப்பால், கலை வடிவிலும் மேதகு பாய்ச்சல் காட்டியுள்ளது. சுமார் அறுபது லட்சம் பட்ஜெட்டில் சவால்கள் மிக்க கதையை, பெரிதாய் குறை காண முடியாத வகையில் சினிமாவாக உருவாக்கியிருப்பது வரவேற்புக்குரியது. அவ்வகையில் கதைகளைச் சுமந்துகொண்டிருக்கும் ஏராளமான இளைஞர்களுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறார் ‘மேதகு’ படத்தின் இயக்குநர் கிட்டு. ரியாஸின் ஒளிப்பதிவு, பிரவீன் குமாரின் இசை இரண்டும் திரைப்படத்தின் தூண்கள். பறையொலிப் பின்னணியில் ’தமிழுக்கு அமுதென்று பேர்..’ எனும் பாவேந்தரின் பாடல் காதுகளில் இன்னமும் ரீங்கரிக்கிறது.

படத்தின் பட்ஜெட் காரணமாக ஆவணப் படத்தின் சாயல் சில இடங்களில் துருத்தலாகத் தெரிவதை சிறு குறையாகச் சொல்லலாம். ஆனால் ஈழ மக்களின் வலியையும் மொழியையும் திருத்தமாக சொன்ன அரசியல் பார்வையில், எளிமையும் செறிவுமான திரைக்கலையில் நிகழ்த்திக் காட்டியிருக்கும் முன்மாதிரிப் பாய்ச்சல் என ’மேதகு’ படத்தைப் பாராட்டலாம். கூடவே அண்மைக்கால அரைகுறை சித்தரிப்புகளுக்கு முத்திரை வசனத்தின் பாணியிலே ‘திருப்பி அடி’த்திருக்கிறார்கள்.

பிகு

கவனச்சிதறலை தடுக்கும் எண்ணத்தில் மாடத்தி பற்றிய பகுதியை இணைக்கவில்லை. கீழே இணைப்பில் உண்டு.

https://www.hindutamil.in/news/todays-paper/subfront/688473-.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஈழத்து போராட்டத்தை எம் வாழ்நாளில் பதிவாக்கி  அதனை காவியமாக்குவோம் என்று அடிக்கடி கூவிய இந்திய திரை பிரபலங்கள் இரண்டுபேர்...

ஒன்று பாரதிராஜா..

இரண்டு வைரமுத்து..

மேலே உள்ள இரண்டுபேரும் திரையுலகின் ஜாம்பவான்கள்...

ஆனால் சொன்னதை செய்ததே இல்லை...

இயக்குனர் கிட்டு திரையுலக ஜாம்பவான் இல்லை,... ஆனால் சொல்லிக்கொண்டிருக்காமல் செய்தேவிட்டார்.

மேதகு...

இப்போது சொல்லி பார்க்கும்போது சக மனிதர்களுக்கு இந்த தலைப்பு சாதாரணமாக தெரியலாம்,  ஈழ தமிழர் சம்பந்தமான ஒரு படைப்பை தயாரிக்கும்போது இந்த பெயர் தாங்கியவரை எம் இனம் எவ்வளவு தூரம் நேசித்தது என்பதை புரிந்து கொண்டே பெயரிட்டிருக்கிறார் இயக்குனர் கிட்டு.

காலம் நமக்கு சதி செய்தது போலவே கொரோனாவும் சதி செய்கிறது, இல்லையென்றால் புலம்பெயர் நாடுகளில் உள்ள திரையரங்கங்களில் வெளியிடப்பட்டு மேதகு  இயக்குனர் கிட்டுவிற்கும் தயாரிப்பு குழுவும் இப்போ உள்ளதைவிட மிக பெரும் பொருளாதார பலம் பெற்றிருக்கும்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 2/7/2021 at 12:25, அன்புத்தம்பி said:
"தலைவரா நடிக்கணும்ன்னு சொன்னதும் பயந்துட்டேன்!"
"போலீஸ் சொல்ல முடியாத அளவுக்கு பிரச்னை பண்ணுவாங்க!" - 'மேதகு' நடிகர் குட்டி மணி! …
 

குட்டிமணி என்ற மணிகண்டனின் இயல்பும் சேவையுள்ளமே என்பதை அறிந்து மகிழ்ந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, valavan said:

ஈழத்து போராட்டத்தை எம் வாழ்நாளில் பதிவாக்கி  அதனை காவியமாக்குவோம் என்று அடிக்கடி கூவிய இந்திய திரை பிரபலங்கள் இரண்டுபேர்...

ஒன்று பாரதிராஜா..

இரண்டு வைரமுத்து..

மேலே உள்ள இரண்டுபேரும் திரையுலகின் ஜாம்பவான்கள்...

ஆனால் சொன்னதை செய்ததே இல்லை...

இயக்குனர் கிட்டு திரையுலக ஜாம்பவான் இல்லை,... ஆனால் சொல்லிக்கொண்டிருக்காமல் செய்தேவிட்டார்.

மேதகு...

இப்போது சொல்லி பார்க்கும்போது சக மனிதர்களுக்கு இந்த தலைப்பு சாதாரணமாக தெரியலாம்,  ஈழ தமிழர் சம்பந்தமான ஒரு படைப்பை தயாரிக்கும்போது இந்த பெயர் தாங்கியவரை எம் இனம் எவ்வளவு தூரம் நேசித்தது என்பதை புரிந்து கொண்டே பெயரிட்டிருக்கிறார் இயக்குனர் கிட்டு.

காலம் நமக்கு சதி செய்தது போலவே கொரோனாவும் சதி செய்கிறது, இல்லையென்றால் புலம்பெயர் நாடுகளில் உள்ள திரையரங்கங்களில் வெளியிடப்பட்டு மேதகு  இயக்குனர் கிட்டுவிற்கும் தயாரிப்பு குழுவும் இப்போ உள்ளதைவிட மிக பெரும் பொருளாதார பலம் பெற்றிருக்கும்.

கொரோனா முடிந்ததும் சிறப்பு காட்சிகள் போட்டாலும் மீண்டும் ஒரு தடவை நாம் போய் பார்ப்போம். 

குறைந்தது லண்டன், பாரிஸ், டொரெண்டோவிலாவது செய்ய வேண்டும்.

தயாரிப்பாளர்கள் பரிசீலிக்க வேண்டும்.

40 minutes ago, ஏராளன் said:

குட்டிமணி என்ற மணிகண்டனின் இயல்பும் சேவையுள்ளமே என்பதை அறிந்து மகிழ்ந்தேன்.

17 வயதில் அறக்கட்டளை! செயலும் தலைவரை போலவே இருக்கிறார்.

தமிழ் திரை உலகில் உச்ச நட்சத்திரமாக வர வேண்டும்🙏🏾

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வெள்ளித்திரையில் மேதகு

 

large.92A9BD63-6CE6-4BAD-A52E-8E446CA517B6.jpeg.8590e7c46f9bb0347bbdbb85bf6534c4.jpeglarge.5351279B-E780-4754-B0D4-78817F8EE5E0.jpeg.f4e8ae35357117346586e4b490f6db5b.jpeglarge.6CF05D0E-8AE0-40C1-B478-633BEEFFFCE0.jpeg.81bb1f21477293dcb23b505f763eeef1.jpeglarge.F412CF85-D4FC-4CAD-9C18-DE47C0A23D83.jpeg.f068a2fdf59395776848108d1e80da76.jpeg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மேதகு என்ற பெயரே அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது. நாட்டுப்புறக் கலைகளுக்கு முன்னுரிமை  கொடுத்து படம் முழுவதும் வரலாற்றை காட்சிப்படுத்திய விதம் அருமை. நடிகர்கள் மிக அருமையாக பாத்திரப் படைப்புக்கேற்ற விதத்தில் தெரிவுசெய்யப்பட்டிருப்பது மிகச் சிறப்பு. பாடல் காட்சிகள் மிக அருமையாக காட்சிப்படுத்தி உள்ளனர். படக் குழுவினருக்கு பாராட்டுக்கள். நாம் கொடுக்கும் ஒரு சிறுதுளி பெரு வெள்ளமாக தொடர்ந்தும் வரலாற்றை ஆவணமாக்க உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் அனைவரும் செயற்படுவோம். தமிழுக்கும் அமுதென்று பேர் என்ற பாடலும் காட்சிகளும் மனதை விட்டு அகலவில்லை. 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

முக்கியமான சில விடயங்களை இந்த பேட்டியில் கோடிட்டு காட்டுகிறார்..சாட்டுகிறார்.

ஆனால் காலம் கடந்த நிலை..! 😌

 

 

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ராசவன்னியன் said:

முக்கியமான சில விடயங்களை இந்த பேட்டியில் கோடிட்டு காட்டுகிறார்..சாட்டுகிறார்.

ஆனால் காலம் கடந்த நிலை..! 😌

 

 

அருமையான கருத்தாடல்.

இவருக்கிருக்கும் சிந்தனை இன்னும் நம்மவர் நிறைய பேருக்கில்லை.

இணைப்புக்கு நன்றி வன்னியன்.

Posted

இலங்கை புத்த பிட்சுக்களின் உண்மை முகம் இதான்! உறைய வைக்கும் சம்பவம் சொல்லும் மேதகு DIRECTOR பேட்டி

 

 

  • Thanks 1
Posted

 

 

“யாரைக்கேட்டு மேதகு படம் எடுத்தீர்கள்”. புலம்பெயர் தமிழரின் புலம்பல்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
43 minutes ago, nunavilan said:

 

 

“யாரைக்கேட்டு மேதகு படம் எடுத்தீர்கள்”. புலம்பெயர் தமிழரின் புலம்பல்

" புலம்பல்  "..

வீட்டில் மனைவி விரும்பாததை   சொல்லி விட்டால் அது புலம்பல் ..
நாட்டில் மனதுக்கொவ்வாத கருத்தை எவரும் சொல்லி விட்டால் அதுவும்  புலம்பல் 
சுற்றி வளைத்து கட்டி வைத்து  கும் கும் என்று கும்மி விடும் போது வருவதும் புலம்பல் 
இதில் எந்தப்  புலம்பல்  உண்மைப் புலம்பல் கச்சியேகம்பனே ....

 

 

 

Edited by சாமானியன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நேற்று இதை பார்க்க நேர்ந்தது..

பட விமர்சனங்களுக்கு அப்பால், கருத்தாடல் யதார்த்தமாக இருந்தது..

 

 

Posted
8 hours ago, சாமானியன் said:

 

காணொளியை பார்க்கவில்லை என்பது புரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரான்சில் அரங்கு நிறைந்த மக்களோடு திரையிடப்பட்ட “மேதகு”

AdminJuly 12, 2021

தமிழீழத் தேசியத்தலைவரின் வரலாற்றைச் சொல்லும் மேதகு திரைப்படம் நேற்று 11/07/2021 இரவு 20.00மணிக்கு திரையரங்கம் நிறைந்த மக்களோடு திரையிடப்பட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதில் இளையவர்களின் ஈடுபாடு அதிகமாக இருந்ததைக்காணக் கூடியதாக இருந்தது.

mythaku1.jpg?resize=477%2C266

பிரான்சு ஈழத் தமிழர் திரைப்படச் சங்கத்துடன், பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினர் இணைந்து இந்த வரலாற்றுப் பணியை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் எப்போது திரையிடுவீர்கள் எனப் பலரும் கேட்டுவருகின்றமை குறித்த திரைப்படத்தின் நெறிப்படுத்தலை வெளிக்காட்டி நிற்கிறது.

. 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

வெள்ளையளும் மதிப்புரை கொடுத்திருக்கினம்

7/10

 

 

  • Like 1
  • 3 weeks later...
Posted

 

 

சுவீடன் நாட்டில் இருந்து வருடந்தோறும் வழங்கப்படும் லூலியோ (Luleå - LIFF Sweden) சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், நமது “மேதகு” திரைப்படம் இறுதிச்சுற்றுக்கு (Best International feature film - finalist) தேர்ந்தெடுக்கப்படுள்ளது… ❤️

  • Like 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 14 DEC, 2024 | 09:28 AM (எம்.மனோசித்ரா) சபாநாயகர் அசோக சப்புமல் ரன்வல மாத்திரமின்றி பிரதி சபாநாயகர் ரிஷ்வி சாலி, நகர அபிவிருத்தி அமைச்சர் அநுர கருணாதிலக, மின்சக்தி அமைச்சர் புண்ணியஸ்ரீ குமார ஜயக்கொடி, ஹர்ஷண சூரியப்பெரும, அனில் கயந்த, பிமல் ரத்நாயக்க மற்றும் எரங்க குணசேகர உள்ளிட்டோரது கல்வி தகைமைகள் பட்டங்கள் உண்மையானவையாய என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாம் சி தொலவத்த தெரிவித்தார். வெள்ளிக்கிழமை (13) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், முந்தைய பாராளுமன்றத்தில் சாதாரண தரத்தில் கூட சித்தி பெறாதவர்கள் இருந்த போதிலும், அவர்கள் அதனை மறைக்கவில்லை. தமது கல்வி தகைமைகள் தொடர்பில் மக்களிடம் பொய் கூறவில்லை. பாராளுமன்றத்தின் இறையான்மையை கேள்விக்குள்ளாக்கும் வகையில் சபாநாயகர் இல்லாத கலாநிதி பட்டத்தை இருப்பதாகக் கூறி மக்களை ஏமாற்றியிருக்கின்றார். சபாநாயகர் மாத்திரமின்றி இவ்வாறு மக்களை மேலும் பலர் ஏமாற்றியிருக்கின்றனர். பிரதி சபாநாயகர் ரிஷ்வி சாலி தன்னை விசேட வைத்திய நிபுணர் எனக் குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால் அவர் சாதாரண வைத்தியரொருவர் மாத்திரமே. அதேபோன்று நகர அபிவிருத்தி அமைச்சர் அநுர கருணாதிலகவுக்கும் கலாநிதி பட்டம் இல்லை எனக் கூறப்படுகிறது. மின்சக்தி அமைச்சர் புண்ணியஸ்ரீ குமார ஜயக்கொடிக்கும் உயர் கல்வி தகைமை பட்டம் எதுவும் இல்லை எனக் கூறப்படுகிறது. இவ்வாறு பொய் கூறிய ஒவ்வொருவரதும் பட்டங்கள் பாராளுமன்ற இணைய தளத்திலிருந்து நீக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஹர்ஷண சூரியப்பெரும, அனில் கயந்த, பிமல் ரத்நாயக்க மற்றும் எரங்க குணசேகர போன்றோரும் இந்த நிலைமையிலா இருக்கின்றனர் என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது. இங்குள்ளது தனிப்பட்ட நபர்கள் குறித்த பிரச்சினையல்ல. ஆனால் இவர்கள் ஏன் மக்களுக்கு பொய் கூறினார்கள். அமைச்சரவை பேச்சாளரிடம் இது தொடர்பில் கூறிய போது நாம் இதனை பெரிதாக எண்ணவில்லை என்று கூறுகின்றார். மக்கள் நேரடியாக கேள்வியெழுப்பும் இவ்வாறான விடயங்களை அரசாங்கத்தால் உதாசீனப்படுத்த முடியாது. அரசியலில் கல்வி தகைமையை ஒரு பிரச்சினையாகக் காண்பித்த தேசிய மக்கள் சக்தி இதற்கு நிச்சயம் பதிலளித்தே ஆக வேண்டும் என்றார்.  https://www.virakesari.lk/article/201179
    • 13 DEC, 2024 | 09:11 PM பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் மன்றம் இலங்கையில் முன்னெடுக்கும் சேவைகளை விரிவுபடுத்துவது குறித்து அவதானம் செலுத்தியுள்ளது.  அதன்படி, போஷாக்குத் திட்டம், பாடசாலை மாணவர்களுக்கு பகல் உணவு வழங்கும் வேலைத்திட்டம், விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் கால்நடை அபிவிருத்தி வேலைத்திட்டம் என்பவற்றை இலங்கைக்குள் முன்னெடுக்க நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கவும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் மன்றம் இணக்கம் தெரிவித்துள்ளது.  தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோவின் தலைமையில் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் மன்றத்தின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் வெள்ளிக்கிழமை (13) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  புதிய அரசாங்கத்தின் முதன்மைத் தேவைகளை அறிந்துகொண்டு அதற்கு தேவையான உதவிகளை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பெற்றுக்கொடுக்க பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் மன்றம் விருப்பம் தெரிவித்துள்ளது.  நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரொஷான் கமகே, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய, பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் மன்றத்தின் தென்கிழக்காசிய கொள்கைகள் மற்றும் அரசாங்க உறவுகளுக்கான வலயப் பிரதிநிதி கலாநிதி ஜமால் கான், (Dr Jamal Khan), டிஜிட்டல் பொதுமக்கள் உட்கட்டமைப்பு வசதிகள் பணிப்பாளர் சஞ்சய் ஜெயின் (Sanjay Jain) உள்ளிட்டவர்கள் இதன்போது கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/201222
    • இந்தியாவிடமிருந்து நன்கொடையாக பெறப்பட்ட புகையிரத இன்ஜின்கள் குறித்து புகையிரத பொது முகாமையாளர் .S. S. முதலிகே விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார். குறித்த அறிக்கை பின்வருமாறு... இந்தியாவிடமிருந்து நன்கொடையாக பெறப்பட்ட புகையிரத இன்ஜின்கள் குறித்து. குறித்த விடயம் தொடர்பாக. இந்திய அரசு நன்கொடையாக வழங்கிய புகையிரத இன்ஜின்கள் குறித்து பல்வேறு ஊடகங்களில் பல்வேறு தவறான கருத்துகள் வெளியாகி வருவதாகவும், இதனை சரி செய்ய போக்குவரத்து அமைச்சரின் அறிவுறுத்தலின்படி கீழ்கண்ட செய்திக்குறிப்பை வெளியிடுகிறேன்.  எனவே, இது குறித்து ஊடகங்கள் சரியான செய்தியை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 1. இந்திய அரசின் நன்கொடையாக 22 புகையிரத இன்ஜின்களை இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு வழங்க இந்தியா ஒப்புக்கொண்டதையடுத்து, அறிக்கை சமர்ப்பிபதற்காக இலங்கை புகையிரத திணைக்களத்தின் தொழில்நுட்ப வல்லுனர்கள் குழு ஒன்று இந்தியா சென்று இது குறித்து ஆய்வு செய்துள்ளது, தற்போது அந்த இன்ஜின்கள் ஏற்கனவே 2012/13 இல் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட M-10 வகை இன்ஜின்களை ஒத்த அல்லது அதற்கு பிந்தைய இன்ஜின்களாகும். அதிகளவான புகையிரத பெட்டிகளை கொண்டு நீண்ட தூரம் ஓட்டும் திறன் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2. தற்போது, புகையிரத திணைக்களத்திடம் இதே வகையான புகையிரத என்ஜின்கள் ஒன்பது பயன்பாட்டில் உள்ளதுடன் இவற்றை இயக்க மற்றும் பராமரிக்க எமது ஊழியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதால், பணிகளை எளிதாக மேற்கொள்ள முடியும். 3. அதிக பயணிகள் திறன் கொண்ட நீண்ட தூர ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்களுக்கு இந்தப் புதிய புகையிரத என்ஜின்களைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. இந்த நன்கொடையானது புகையிரத திணைக்களத்திற்கு பத்து கனரக மற்றும் நீண்ட தூர என்ஜின்கள் பற்றாக்குறையாக உள்ள நேரத்தில் மிகவும் பயனுள்ளதாகும், மேலும் இந்த என்ஜின்கள் கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எனக்குத் தெரிவிக்கப்படுகிறது. 4. அதற்கிணங்க, ஊடகங்கள் இதைப் பற்றி பரவிவரும் தவறான கருத்துகளை சரி செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். S. S. முதலிகே புகையிரத பொது முகாமையாளர் https://tamil.adaderana.lk/news.php?nid=197260
    • டெலோ புலிகள் சண்டை உக்கிரமாக நடந்த இடத்தின் (கட்டைபிராய் டெலோ இன் முக்கிய இயங்கு தளம் ) அயலில் உள்ள இடத்தில். இது தான்  நான் அறிந்தது.  அனால், அது நடந்தது புளொட் என்ற சந்தேகத்தில் (டெலோ ஐ  தொடர்ந்து புளொட் தடைசெய்யப்பட்டது, குறுகிய காலத்தில்). குடும்பம் என்று சொல்லியது - தந்தை, சகோதரம் - கிட்டத்தட்ட பிணையாக அவர்களாகவே வந்து ஒப்படைக்கும் வரையும். (ஆயினும் அவர்களை ஏன் போட்டு தள்ள  வேண்டிய அவசியம் என்பது இப்போதும் நான் யோசிப்பது உண்டு. அவர்கள், எதோ நோட்டீஸ் பதிப்பித்து கொடுத்தவர்கள் என்பதே வெளியில் சொல்லப்டடது. அதாவது கைது செய்ய வந்தவர்கள் சொன்னதாக. ஆயினும், ஏன் பூதவுடல்கள்  கொடுக்கப்படவில்லை? சித்திரவதையில் சிதைந்து விட்டது என்றே சந்தேகம். இவர்கள் இளம் குடும்பஸ்தர்கள் அனா நேரத்தில்.) அனால், இது நடந்தது ஓர் பகிரங்க இடத்தில (இங்கே கேட்கிறீர்கள், அதாவது அந்த இடத்தில இருந்த குறித்த சிலரை தவிர  எவருக்கும் இது தெரியாது). அதனால் இப்படியான சம்பவங்கள் வேறு ஒதுக்கு புறத்திலும் நடந்து இருக்கலாம்.  ----------------------------------------------------------------------------------------------------------------------------------- அனால், இதை விட கொடுராமானது, தமிழ் நாடில்  புலிகள் செய்ததாக நான் அறிந்தது.
    • உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு குறிவைத்து 3ஆவது டெஸ்டை எதிகொள்ளும் இந்தியா - அவுஸ்திரேலியா Published By: VISHNU 13 DEC, 2024 | 11:24 PM (நெவில் அன்தனி) இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான 5 போடடிகள் கொண்ட போர்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரின் 3ஆவது போட்டி பிறிஸ்பேன் கபா விளையாட்டரங்கில் சனிக்கிழமை (14) ஆரம்பமாகவுள்ளது. பேர்த் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது போட்டியில் இந்தியா 295 ஓட்டங்களாலும் அடிலெய்ட் விளையாட்டரங்கில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலியா 10 விக்கெட்களாலும் வெற்றி பெற்றதை அடுத்து தொடர் 1 - 1 என சம நிலையில் இருக்கிறது. இரண்டு அணிகளும் 3ஆவது டெஸ்ட் போட்டியில் ஒன்றையொன்று வீழ்த்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் விளையாடும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனெனில், போர்டர் - காவஸ்கர் தொடருக்கும் அப்பால், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற வேண்டும் என்பதை குறிவைத்து இரண்டு அணிகளும் விளையாடும் என்பது உறுதி. இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தால் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை நோக்கிய பயணம் பாதிக்கும் என்பதை இரண்டு அணிகளும் நன்கு அறிந்த நிலையிலேயே இந்த டெஸ்ட் போட்டியை எதிர்கொள்கின்றன. இதன் காரணமாக இந்த டெஸ்ட் போட்டி மற்றொரு பரபரப்பான போட்டியாக அமையும் என்பது நிச்சயம். எவ்வாறாயினும் இரண்டு அணிகளிலும் ஓரிரு துடுப்பாட்ட வீரர்களே பிரகாசித்துள்ளதுடன் சிரேஷ்ட வீரர்கள் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டுள்ளதைக் கடந்த போட்டிகளில் காணமுடிந்தது. அவுஸ்திரேலிய அணியில் ட்ரவிஸ் ஹெட் மாத்திரமே துடுப்பாட்டத்தில் பிரகாசித்துள்ளதுடன் இந்திய அணியில் நிட்டிஷ் குமார் ரெட்டி, யஷஸ்வி ஜய்ஸ்வால் ஆகிய இருவரும் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். விராத் கோஹ்லி, கே. எல். ராகுல் ஆகியோரும் தொடர்ச்சியாக திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். ரோஹித் ஷார்மா 2ஆவது போட்டியின் மூலம் தொடரில் இணைந்துகொண்ட போதிலும் மத்திய வரிசையில் துடுப்பெடுத்தாடிய அவரால் கணிசமான ஓட்டங்களைப் பெற முடியாமல் போனது. அவர் மீண்டும் ஆரம்ப வீரராக களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சைப் பொறுத்த மட்டில் இரண்டு அணிகளிலும் வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயற்பட்டுள்ளதை அவர்களது பந்துவீச்சுப் பெறுதிகள் எடுத்துக்காட்டுகின்றன. மிச்செல் ஸ்டார்க் 11 விக்கெட்களையும் பெட் கமின்ஸ் 10 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர். இந்திய பந்துவீச்சிலும் வேகப்பந்துவீச்சாளர்களான ஜஸ்ப்ரிட் பும்ரா (12), மொஹமத் சிராஜ் (9) ஆகிய இருவரே முன்னிலையில் இருக்கின்றனர். அவுஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், மானுஸ் லபுஷேன் ஆகியோரும் இந்திய அணியில் விராத் கோஹ்லி, ரோஹித் ஷர்மா, ஷுப்மான் கில் ஆகியோரும் துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். பிறிஸ்பேன் கபா விளையாடரங்கில் அவுஸ்திரேலியா விளையாடியுள்ள 66 டெஸ்ட் போட்டிகளில் 42இல் வெற்றிபெற்றுள்ளதுடன் 10இல் மாத்திரமே தோல்வி அடைந்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இந்த மைதானத்தில் இந்தியா விளையாடிய 7 போட்டிகளில் ஒன்றில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளது. 5 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. எவ்வாறாயினும் இரண்டு அணிகளுக்கும் இடையில் இந்த மைதானத்தில் கடைசியாக 2021இல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா 3 விக்கெட்களால் வெற்றிபெற்றிருந்தது. அணிகள் இந்தியா: யஷஸ்வி ஜய்ஸ்வால், ரோஹித் ஷர்மா (தலைவர்), ஷுப்மான் கில், விராத் கோஹ்லி, ரிஷாப் பான்ட், கே.எல். ராகுல், நிட்டிஷ் குமார் ரெட்டி, வொஷிங்டன் சுந்தர் அல்லது ரவிச்சந்திரன் அஷ்வின், ஆகாஷ் தீப், மொஹமத் சிராஜ், ஜஸ்ப்ரிட் பும்ரா. அவுஸ்திரேலியா: உஸ்மான் கவாஜா, நேதன் மெக்ஸ்வீனி, மானுஸ் லபுஷேன், ஸ்டீவன் ஸ்மித், ட்ரவிஸ் ஹெட், மிச்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பெட் கமின்ஸ் (தலைவர்), மிச்செல் ஸ்டார்க், நேதன் லயன், ஜொஷ் ஹேஸ்ல்வூட். https://www.virakesari.lk/article/201224
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.