Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

துருக்கி மாநாட்டில் ரஷ்ய, உக்ரேனிய எம்.பிகள் கைகலப்பு

Published By: Sethu

05 May, 2023 | 11:04 AM
image

துருக்கியில் நடைபெற்ற சர்வதேச மாநாடொன்றில் ரஷ்ய மற்றும் உக்ரேனிய பிரதிநிதிகள் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

கருங்கடல் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் (PABSEC) பாராளுமன்றப் பிரதிநிதிகள் மாநாட்டில் இச்சம்பவம் இச்சம்பவம் இடம்பெற்றது. 

இம்மாநாட்டின் ஆரம்ப நாளான நேற்று, ரஷ்ய பாராளுமன்ற உறுப்பினரான ஒல்கா திமோபீவா நேர்காணல் ஒன்றில் பங்குபற்றியபோது, அவருக்குப் பின்னால் உக்ரேனிய பாராளுமன்ற உறுப்பினர் ஒலெக்ஸாண்டர் மரிகோவிஸ்கி, உக்ரேனிய தேசியக் கொடியை விரித்துப் பிடித்தார்.

அதையடுத்து ஒலெக்ஸாண்டர் மரிகோவிஸ்கியின் கையிலிருந்து உக்ரேனிய கொடியை மற்றொரு ரஷ்ய எம்பியான வெலேறி ஸ்டாவிட்ஸ்கி பறித்தார். அதன்பின் இவ்விரு எம்.பிகளுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது.

பின்னர் இவ்விருவரையும் அங்கிருந்தவர்கள் பிரித்தனர்.

ரஷ்ய எம்பி ஸ்டாவிட்ஸ்கி, மருத்துவ சோதனைக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

https://www.virakesari.lk/article/154546

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, கிருபன் said:

ரஷ்ய பாராளுமன்ற உறுப்பினரான ஒல்கா திமோபீவா நேர்காணல் ஒன்றில் பங்குபற்றியபோது, அவருக்குப் பின்னால் உக்ரேனிய பாராளுமன்ற உறுப்பினர் ஒலெக்ஸாண்டர் மரிகோவிஸ்கி, உக்ரேனிய தேசியக் கொடியை விரித்துப் பிடித்தார்.

உக்ரைனியர்கள்  விடும், குரங்கு சேட்டைகளுக்கு... இதுவும் ஒரு எடுத்துக் காட்டு.
மாநாடு நடப்பது அந்நிய நாட்டில்....   
அங்கு ரஷ்ய பாரளுமன்ற உறுப்பினர் பேட்டி கொடுக்கின்றார்.
பிறகு என்ன இழவுக்கு... உக்ரேன் கொடியை பின்னால் போய் நின்று காட்டுகிறார்கள். 
சபை நாகரீகம் தெரியாத காட்டுமிராண்டிகள் தான்,   உக்ரேனியர்கள்.

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, தமிழ் சிறி said:

உக்ரைனியர்கள்  விடும், குரங்கு சேட்டைகளுக்கு... இதுவும் ஒரு எடுத்துக் காட்டு.
மாநாடு நடப்பது அந்நிய நாட்டில்....   
அங்கு ரஷ்ய பாரளுமன்ற உறுப்பினர் பேட்டி கொடுக்கின்றார்.
பிறகு என்ன இழவுக்கு... உக்ரேன் கொடியை பின்னால் போய் நின்று காட்டுகிறார்கள். 
சபை நாகரீகம் தெரியாத காட்டுமிராண்டிகள் தான்,   உக்ரேனியர்கள்.

உக்கிரேனிய பாராளுமன்ற உறுப்பினரின் வருத்தம் புரிகிறது, உக்கிரேனை இரஸ்சியா எவ்வளவு மோசமான அழிவினை ஏற்படுத்திக்கொண்டுள்ளது, அதனால் அவர் கொஞ்சம் தரக்குறைவாக நடந்து கொண்டுள்ளார், ஆனால் அதற்காக அவரை தள்ளி வன்முறையிலீடுபடும் இரஸ்சிய அமைச்சரின் செயல் மோசமானது மட்டுமல்ல அந்த அமைச்சரின் ஆதிக்க மனப்பான்மை தெளிவாக தெரிகிறது, இது பொதுவான ஆக்கிரமிப்பாளரின் மனப்பான்மை, பார்க்கவே நல்லாகவே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
38 minutes ago, தமிழ் சிறி said:

உக்ரைனியர்கள்  விடும், குரங்கு சேட்டைகளுக்கு... இதுவும் ஒரு எடுத்துக் காட்டு.
மாநாடு நடப்பது அந்நிய நாட்டில்....   
அங்கு ரஷ்ய பாரளுமன்ற உறுப்பினர் பேட்டி கொடுக்கின்றார்.
பிறகு என்ன இழவுக்கு... உக்ரேன் கொடியை பின்னால் போய் நின்று காட்டுகிறார்கள். 
சபை நாகரீகம் தெரியாத காட்டுமிராண்டிகள் தான்,   உக்ரேனியர்கள்.

இதுக்கும் சேர்த்து வட்டிகுட்டியோட வாங்கப்போயினம். :rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, vasee said:

உக்கிரேனிய பாராளுமன்ற உறுப்பினரின் வருத்தம் புரிகிறது, உக்கிரேனை இரஸ்சியா எவ்வளவு மோசமான அழிவினை ஏற்படுத்திக்கொண்டுள்ளது, அதனால் அவர் கொஞ்சம் தரக்குறைவாக நடந்து கொண்டுள்ளார், ஆனால் அதற்காக அவரை தள்ளி வன்முறையிலீடுபடும் இரஸ்சிய அமைச்சரின் செயல் மோசமானது மட்டுமல்ல அந்த அமைச்சரின் ஆதிக்க மனப்பான்மை தெளிவாக தெரிகிறது, இது பொதுவான ஆக்கிரமிப்பாளரின் மனப்பான்மை, பார்க்கவே நல்லாகவே இல்லை.

இங்கு உள்ள செய்தியில்..
ரஷ்ய பாராளுமன்ற உறுப்பினர் பேசும் போது, பின்னால் நின்று கொடி காட்டுபவர் உக்ரைன் எம்.பி.
அந்த கொடியை மற்றைய ரஷ்ய எம்.பி.   பறித்துக் கொண்டு செல்லும் போது.. 
பின்னால் வந்து ரஷ்ய எம்.பி.யை தாக்கியவர்   கொடி காட்டிய உக்ரைன் எம்.பி.

இப்போது… உங்கள் மொழியில்… வன்முறையிலும், தரக்குறைவாகவும் நடந்து கொண்டது யார் என்பதை.. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, தமிழ் சிறி said:

மன்னிக்கவும் எனது தவறு, நீங்கள் கூறுவது போல நடந்திருந்தால் உக்கிரேன் மிக கேவலமாக நடந்துள்ளது.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
53 minutes ago, குமாரசாமி said:

இதுக்கும் சேர்த்து வட்டிகுட்டியோட வாங்கப்போயினம். :rolling_on_the_floor_laughing:

நிச்சயமாக... ஒரு கிழமையில் அடுத்தடுத்து நடந்த,  
கிரெம்ளின் தாக்குதலுக்கும், துருக்கியில் நடந்த இந்த சம்பவத்தை பார்க்கும் 
எமக்கே.... இரத்தம் கொதிக்கும் போது...
ரஷ்ய அதிபர் புட்டினுக்கு எப்படி இருக்கும். 😎

வட்டிக்கு வட்டி, குட்டிக்கு குட்டி என்ற கணக்கில்...
மொத்தமாகவும், சில்லறையாகவும் திருப்பி கொடுக்கப் படும். 😂
இந்தக் கணக்கை... முடிக்காமல் ரஷ்யா ஓயாது என்பது நூறு வீதம்  உண்மை. 👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, vasee said:

உக்கிரேனிய பாராளுமன்ற உறுப்பினரின் வருத்தம் புரிகிறது, உக்கிரேனை இரஸ்சியா எவ்வளவு மோசமான அழிவினை ஏற்படுத்திக்கொண்டுள்ளது,

அதனால் அவர் கொஞ்சம் தரக்குறைவாக நடந்து கொண்டுள்ளார்,

ஆனால் அதற்காக அவரை தள்ளி வன்முறையிலீடுபடும் இரஸ்சிய அமைச்சரின் செயல் மோசமானது

மட்டுமல்ல அந்த அமைச்சரின் ஆதிக்க மனப்பான்மை தெளிவாக தெரிகிறது, இது பொதுவான ஆக்கிரமிப்பாளரின் மனப்பான்மை, பார்க்கவே நல்லாகவே இல்லை.

கொடியைப் பிடித்தது உக்ரேன்  

கொடியைப் பறித்தது ரஸ்யா

பறித்தவரைத் தள்ளி அடித்தது உக்ரேன். 

இறுதியில், வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படுவது ரஸ்ய அமைச்சர்...🤣

மேற்குலக ஊடகங்களை மட்டும் தொடர்ந்து படிதது, கேட்டு வந்தால் இப்படித்தான் எல்லாவற்றையும் நேரெதிராக யோசிக்கத் தோன்றும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[இரஸ்சிய அமைச்சரின் செயல் மோசமானது மட்டுமல்ல அந்த அமைச்சரின் ஆதிக்க மனப்பான்மை தெளிவாக தெரிகிறது, இது பொதுவான ஆக்கிரமிப்பாளரின் மனப்பான்மை, பார்க்கவே நல்லாகவே இல்லை.]

Vasee எவ்வளவு நேர்மையாக சொல்கிறார் என்று பெருமைபட்டேன் அடுத்த நிமிடம் அவர் குத்துகரணம் அடிந்து ☹️

2 hours ago, vasee said:

மன்னிக்கவும் எனது தவறு, நீங்கள் கூறுவது போல நடந்திருந்தால் உக்கிரேன் மிக கேவலமாக நடந்துள்ளது.

🙆‍♂️

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

[இரஸ்சிய அமைச்சரின் செயல் மோசமானது மட்டுமல்ல அந்த அமைச்சரின் ஆதிக்க மனப்பான்மை தெளிவாக தெரிகிறது, இது பொதுவான ஆக்கிரமிப்பாளரின் மனப்பான்மை, பார்க்கவே நல்லாகவே இல்லை.]

Vasee எவ்வளவு நேர்மையாக சொல்கிறார் என்று பெருமைபட்டேன் அடுத்த நிமிடம் அவர் குத்துகரணம் அடிந்து ☹️

🙆‍♂️

ஐயா…. விளங்க நினைப்பவரே…. 😂
துருக்கியில் நடந்த சம்பவங்கள் இங்கு, சுத்தத் தமிழிலும்….
ஈஸ்ட்மென் கலரிலும், அழகிய வண்ண நிறத்தில் காணொளியாக இருக்கும் போது…
உக்ரைனுக்கு முரட்டு முட்டு கொடுக்க சொல்வது அதிகமாக தெரியவில்லையா. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

[இரஸ்சிய அமைச்சரின் செயல் மோசமானது மட்டுமல்ல அந்த அமைச்சரின் ஆதிக்க மனப்பான்மை தெளிவாக தெரிகிறது, இது பொதுவான ஆக்கிரமிப்பாளரின் மனப்பான்மை, பார்க்கவே நல்லாகவே இல்லை.]

Vasee எவ்வளவு நேர்மையாக சொல்கிறார் என்று பெருமைபட்டேன் அடுத்த நிமிடம் அவர் குத்துகரணம் அடிந்து ☹️

🙆‍♂️

நானும் என்னை ஒருமுறை கிள்ளிப்பார்த்துக்கொண்டேன்

கனவா  என?☺️

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கை அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில்  நாங்களும் இப்படி சிங்கக்கொடியை இழுத்து பறிச்சி இருக்கிறம், அவங்களும் புலிக்கொடியை பிடுங்கி வீசி இருக்காங்கள்.
யுத்தம் நடக்கும் நாட்டு மக்களுக்கிடையில் இதெல்லாம் நடக்கும். சும்மா கண்ணீர் விட்டு, பந்தலிலே பாவக்கா ரக ஒப்பாரி வைக்க கூடாது.    

  • Thanks 1
Posted

மேலுள்ள செய்தியைத் தவறாக வாசித்ததால் வேறொரு வீடியோவுடன் எனது பதிவை இட்டபின் தவறென்று தெரிந்து நீக்கிவிட்டேன். அதற்குள் தமிழ்சிறி மேற்கோள் காட்டி எழுதிய பதிவையும் நீக்கியுள்ளேன். நன்றி.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
28 minutes ago, Sasi_varnam said:

இலங்கை அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில்  நாங்களும் இப்படி சிங்கக்கொடியை இழுத்து பறிச்சி இருக்கிறம், அவங்களும் புலிக்கொடியை பிடுங்கி வீசி இருக்காங்கள்.
யுத்தம் நடக்கும் நாட்டு மக்களுக்கிடையில் இதெல்லாம் நடக்கும். சும்மா கண்ணீர் விட்டு, பந்தலிலே பாவக்கா ரக ஒப்பாரி வைக்க கூடாது.    

உண்மை  தான்

இவை  நடந்திருக்கின்றன

ஆனால்  தேவையற்ற  இடங்களில்  ஒரு  நாட்டின்  தேசியக்கொடியை  பிடித்தலும் தவறு

பிடுங்கி  வீசுவதும் தவறு..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தேசிய கொடியை பறித்த ரஷ்ய பிரதிநிதி – ஆக்ரோஷமாக தாக்கிய உக்ரைன் எம்பி – வைரலாகும் வீடியோ!

உக்ரைன் நாட்டு எம்பியிடம் இருந்து அந்நாட்டு கொடியை பறிக்க முயன்ற ரஷ்ய பிரதிநிதியால் சர்வதேச மாநாட்டில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கருங்கடல் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 61 ஆவது சர்வதேச மாநாடு துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெற்றது. இதில் ரஷ்யா, உக்ரைன் மட்டுமின்றி அல்பேனியா, அர்மேனியா, அசர்பஜைன் உட்பட உறுப்பு நாடுகள் பங்கேற்றன.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஷ்ய பயங்கரவாதமும் பாசிசமும் வெகுவிரைவில் அடக்கப்படவேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
25 minutes ago, வாலி said:

ரஷ்ய பயங்கரவாதமும் பாசிசமும் வெகுவிரைவில் அடக்கப்படவேண்டும்!

ஒரு வருசத்துக்கு மேல் நடந்து வரும் இந்த ஆக்கிரமிப்பு யுத்தத்தில் கொல்லப்பட்ட அப்பாவிகள் தொகை ?????. காயமடைந்தவர்கள் சுமார் ??,000, அகதி ஆகி நாட்டை விட்டு வெளியேறியோர் 8.1 மில்லியன் (விட அதிகம்). இதற்கெல்லாம் களங்காத இதயங்கள்; கொடியை தூக்கி காட்டிய பிரச்சினையில் இரண்டு பேர் தள்ளு முள்ளுபட வெகுண்டெழுந்து குரல் கொடுப்பது சற்றே வேடிக்கையாய் உள்ளது. 🤔 

பி.கு 
ஒவொரு இணையதளமும் இறந்தவர்கள் குறித்த வித்தியாசமான தகவல்களை வழங்கி உள்ளன 

The FSB's reported calculation of almost 110,000 casualties by February is still far lower than numbers this week in previously leaked US documents, which estimated Russian losses at between 189,500 and 223,000 casualties, with 35,500-43,000 men killed in action. 

https://www.bbc.com/news/world-europe-65260672 

Edited by Sasi_varnam
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, விசுகு said:

நானும் என்னை ஒருமுறை கிள்ளிப்பார்த்துக்கொண்டேன்

கனவா  என?☺️

வீணான நம்பிக்கை ☹️
அய்யா நீஙகள் முன்பு இநத சித்தாந்தத்திற்குள் சிக்கியிருந்து பின்பு விழித்தெழுந்து வந்தீர்கள் 👍
ஆக்கிரமிப்பு அழிவுக்கார  ரஷ்யா புடின் மீதான வெறித்தனமான ஆதரவு என்பது  இப்படிதான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, Kapithan said:

கொடியைப் பிடித்தது உக்ரேன்  

கொடியைப் பறித்தது ரஸ்யா

பறித்தவரைத் தள்ளி அடித்தது உக்ரேன். 

இறுதியில், வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படுவது ரஸ்ய அமைச்சர்...🤣

மேற்குலக ஊடகங்களை மட்டும் தொடர்ந்து படிதது, கேட்டு வந்தால் இப்படித்தான் எல்லாவற்றையும் நேரெதிராக யோசிக்கத் தோன்றும். 

ஊடகங்களில் தவறல்ல நான் தவறாக காணொளியினை புரிந்து கொண்டேன்.

11 hours ago, விளங்க நினைப்பவன் said:

[இரஸ்சிய அமைச்சரின் செயல் மோசமானது மட்டுமல்ல அந்த அமைச்சரின் ஆதிக்க மனப்பான்மை தெளிவாக தெரிகிறது, இது பொதுவான ஆக்கிரமிப்பாளரின் மனப்பான்மை, பார்க்கவே நல்லாகவே இல்லை.]

Vasee எவ்வளவு நேர்மையாக சொல்கிறார் என்று பெருமைபட்டேன் அடுத்த நிமிடம் அவர் குத்துகரணம் அடிந்து ☹️

🙆‍♂️

7 hours ago, விசுகு said:

நானும் என்னை ஒருமுறை கிள்ளிப்பார்த்துக்கொண்டேன்

கனவா  என?☺️

2 hours ago, விளங்க நினைப்பவன் said:

வீணான நம்பிக்கை ☹️
அய்யா நீஙகள் முன்பு இநத சித்தாந்தத்திற்குள் சிக்கியிருந்து பின்பு விழித்தெழுந்து வந்தீர்கள் 👍
ஆக்கிரமிப்பு அழிவுக்கார  ரஷ்யா புடின் மீதான வெறித்தனமான ஆதரவு என்பது  இப்படிதான்.

Confirmation bias

Confirmation Bias: Why You Should Seek Out Disconfirming Evidence

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
59 minutes ago, vasee said:

ஊடகங்களில் தவறல்ல நான் தவறாக காணொளியினை புரிந்து கொண்டேன்.

Confirmation bias

Confirmation Bias: Why You Should Seek Out Disconfirming Evidence

இதைவிட அழகாக விளக்க முடியாது😃😃

3 hours ago, விளங்க நினைப்பவன் said:

வீணான நம்பிக்கை ☹️
அய்யா நீஙகள் முன்பு இநத சித்தாந்தத்திற்குள் சிக்கியிருந்து பின்பு விழித்தெழுந்து வந்தீர்கள் 👍
ஆக்கிரமிப்பு அ

சொத்த புத்தியின்றி பல காலம் மயங்கி இருந்திருக்கின்றாரென்று வெளிப்படையாக சொல்கின்றீர்கள்🤔

8 hours ago, இணையவன் said:

மேலுள்ள செய்தியைத் தவறாக வாசித்ததால் வேறொரு வீடியோவுடன் எனது பதிவை இட்டபின் தவறென்று தெரிந்து நீக்கிவிட்டேன். அதற்குள் தமிழ்சிறி மேற்கோள் காட்டி எழுதிய பதிவையும் நீக்கியுள்ளேன். நன்றி.

இனிமேல் நீங்களும் நுனிப்புல் மேய வேண்டாம் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, vasee said:

ஊடகங்களில் தவறல்ல நான் தவறாக காணொளியினை புரிந்து கொண்டேன்.

Confirmation bias

Confirmation Bias: Why You Should Seek Out Disconfirming Evidence

மன்னிக்கவும் வசி.

உங்கள் இரண்டாம் பதிவைப் பார்த்தபின்னர் எனது பதிவை நீக்க முயற்சித்தேன். முடியவில்லை. நான் அலைபேசியைப் பாவிப்பதால் இந்தப் பிரச்சனை இருக்குமோ தெரியாது. 

நிர்வாகம்; முடிந்தால் எனது முதலாவது பதிவை நீக்கிவிடவும். 

நன்றி. 

ஆனால் விளங்க நினைப்பவரது பதிவு 😤

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
7 hours ago, vasee said:

ஊடகங்களில் தவறல்ல நான் தவறாக காணொளியினை புரிந்து கொண்டேன்.

Confirmation bias

Confirmation Bias: Why You Should Seek Out Disconfirming Evidence

நம்பத்தானே வேண்டும் ஏனெனில் நீங்கள் ஆங்கிலத்தில் அல்லவா விளக்கம் தந்துள்ளீர்கள் 😷

9 hours ago, விளங்க நினைப்பவன் said:

வீணான நம்பிக்கை ☹️
அய்யா நீஙகள் முன்பு இநத சித்தாந்தத்திற்குள் சிக்கியிருந்து பின்பு விழித்தெழுந்து வந்தீர்கள் 👍
ஆக்கிரமிப்பு அழிவுக்கார  ரஷ்யா புடின் மீதான வெறித்தனமான ஆதரவு என்பது  இப்படிதான்.

அனுபவம் பாடங்களை தரும்

பாடங்கள் முதிர்ச்சியை தரும் 

அதனை ஏற்று நடக்க சுயபரிசோதனை அவசியம் 

அதனால் தான் வரலாறே வழி காட்டி என்றார் தலைவர். நன்றி 

Edited by விசுகு
பிழை திருத்தம்
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, உடையார் said:

சொத்த புத்தியின்றி பல காலம் மயங்கி இருந்திருக்கின்றாரென்று வெளிப்படையாக சொல்கின்றீர்கள்🤔

சித்தாந்த மயக்கத்தில் இருந்து அவர் விழிப்புற்று மற்ற தமிழர்களையும் விழிப்படைய வைக்கின்றார் 👌
இலவசமாக இலங்கையில் தமிழில் வெளியிடபட்ட ரஷ்ய சீன புத்தகங்களால் மூளை களுவபட்ட தமிழர்களுக்கு செய்யும் பெரும் உதவி இது. ஆனால் சிலர் தாங்கள் வழிப்புற்று தங்களுக்கு மட்டும் சிறந்த வாழ்கை பாதுகாப்பான இடத்தில் அமைத்து என்யோய் பண்ணி கொண்டு மற்றவர்களுக்கு நரகத்திற்கு வழிகாட்டுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இணையவன் அண்ணா  எதை இணைத்து பின்பு நீக்கினார் என்று தெரியவில்லை. இந்த தள்ளுபடிகள்,  அடிதடிகளை நானும் வெறுக்கிறேன். உக்ரேன் எம்பி தனது நாட்டு கொடியை கையில் வைத்திருந்தை பொறுக்க முடியாமல் அதை வந்து பறித்த ரஷ்ய பிரதிநிதியின் மோசமான ஆக்கிமிப்பு சிந்தனை,புரின் சிந்தனை ஏற்று கொள்ளவே முடியாதது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
41 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சித்தாந்த மயக்கத்தில் இருந்து அவர் விழிப்புற்று மற்ற தமிழர்களையும் விழிப்படைய வைக்கின்றார் 👌
 
சரியாக சொன்னீர்கள், தொடர்க உங்கள் சேவை, உண்மைகளை புட்டு புட்டு வைக்கின்றீர்கள் 😃😁

  • Like 1

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இளங்கோவன் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய சீமான். 😎 . . . . ஸ்ரார்ட் மியூசிக். 😂 🤣
    • அப்போ யாரைத்தான் தூக்கிப்பிடிப்பது என்று சொல்லித்தான் தொலைக்கிறது. மஹிந்தா? ரணில்? மைத்திரி? கோத்தா? சந்திரிகா?   அந்தப்பிரதேச மக்களின் பிரதிநிதி சாணக்கியன் .   சாணக்கியனை கேளுங்கள் என்றால்; அனுராவை கேட்கவேணுமென்கிறீர்கள். சரி... அனுராவை கேட்ப்போமென்றால் அதற்கும் வலிக்கிறது. இந்த வியாதிக்கு களத்தில் மருந்தில்லை சாமி ஆளை விடுங்கோ! 
    • மன்னார் மறை மாவட்ட ஆயராக அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் adminDecember 14, 2024 மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராக மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ளார். -மன்னார் மறைமாவட்ட ஆயராக மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் திருத்தந்தையால் நியமிக்கப்பட்டு,அச் செய்தியை திருத்தந்தையின் இலங்கைக்கான பிரதிநிதி ஊடாக மன்னார் மறைமாவட்ட ஆயர்  இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை க்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை (14) மாலை 4.15 மணியளவில் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையினால் மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராக மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் திருத்தந்தையால் நியமிக்கப்பட்ட அறிவிப்பை அறிவித்தார்.இதன் பேராலயத்தின் மணியோசை எழுப்பப்பட்டது.இதன் போது மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர்,மறைமாவட்ட அருட்தந்தையினர், அருட்சகோதரிகள் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டிருந்தனர். -மன்னார் மறைமாவட்டம் உருவாகி 43 வருடங்களை கடக்கும் நிலையில் மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த முதல் ஆயராக அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ளார். மன்னார் மறை மாவட்டத்தின் தற்போதைய ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தனது 75 வது வயதில் ஓய்வு பெற்றுச் செல்ல உள்ள நிலையில் மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராக அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   https://globaltamilnews.net/2024/209278/
    • மேம்பட்ட பல வசதிகளுடன் காங்கேசன்துறை நாகை படகுசேவை ஜனவரியில் மீள ஆரம்பம்! adminDecember 15, 2024 காங்கேசன்துறைக்கும் நாகைப்பட்டினத்துக்கும் இடையிலான படகுசேவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் வாரத்துக்கு ஆறுநாட்கள் மேம்பட்ட வசதிகளுடன் ஆரம்பமாகவுள்ளதாக சுபம் குழுமத்தின் தலைவரும், காங்கேசன்துறை, நாகைப்பட்டனம் படகுசேவை முதலீட்டாளருமான பொன்னுசாமி சுந்தர்ராஜ் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (15.12.24)  நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில், “எமது பிறதொரு நிறுவமான சுபம் நிறுவனம் காங்கேசன்துறை, நாகைப்பட்டினத்துக்கு இடையிலான படகுசேவையில் முதலீடுகளைச் செய்துள்ளது. இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த படகுசேவை ஆரம்பிக்கப்பட்டிருந்தபோதும் காலநிலை முன்னெச்சரிக்கையின் காரணமாக தற்காலிகமாக சேவை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இம்மாதம் 23ஆம் திகதி வங்களா விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக்குவதற்கான நிலைமைகளும் உள்ளன. இதனால் 19ஆம் திகதி மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஏற்பாடாகியிருந்த படகு சேவையை சிறிய காலத்திற்கு ஒத்திவைத்துள்ளோம். இந்நிலையில் எதிர்வரும் ஜனவரியில் மீண்டும் காங்கேசன்துறைக்கும் நாகைப்பட்டனத்துக்கும் இடையிலான படகுசேவை ஆரம்பிக்கப்படவுள்ளதோடு இதனை சுபம் நிறுவனமே நேரடியாக கையாளப்போகின்றது. நாங்கள் படகுசேவையை கடந்த மூன்று மாதகாலத்தில் முன்னெடுத்த போது சிறுசிறு சறுக்கல்களும் காணப்பட்டுள்ளன. எனினும் அனைத்து தரப்பினரினதும் ஒத்துழைப்புக்களுடன் சிறப்பாக எமது சேவையை கடந்த காலத்தில் முன்னெடுக்க முடிந்திருந்தது. மீள படகுசேவை ஆரம்பிக்கப்படும்போது, சில மேம்பட்ட வசதிகளை முன்னெடுத்துள்ளோம். முக்கியமாக சுற்றுலாப்பயணிகளை அதிகரிக்கும் நோக்கத்தில் பயணக்கட்டணங்களை மாற்றியமைத்துள்ளோம். தற்போது இருவழிக் கட்டணமாக 9700 இந்திய ரூபா அறவிடப்படுகின்றது. அதனை நாம் 8500இந்திய ரூபாவாக மாற்றியமைப்பதோடு பத்து கிலோகிராம் எடையுடைய பொதியையும் இலவசமாகக் கொண்டுவர முடியும். மேலதிகமாக அதிக எடையுடைய பொதிகளை கொண்டுசெல்வதாக இருந்தால் அதற்கான மேலதிக கட்டணங்களை செலுத்த வேண்டியுள்ளது. அதற்கான தொகைகள் எமது உத்தியோகபூர்வமான இணைதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. பயணப்பொதிகளுக்கான முற்பதிவுகளை இணையத்தின் ஊடாக மட்டுமே மேற்கொள்ள முடியும் அதேநேரம், நாகைப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் பயணிகள் அதிகாலையிலேயே வருகை தருவதாலும், அதேபோன்று காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் பயணிகள் முற்பகலில் பயணத்தை ஆரம்பிப்பதாலும் அவர்களுக்கான உணவுத்தேவையை பூர்த்திசெய்வதில் நெருக்கடிகள் இருந்தன. இதனால் நாம் காலையில் இட்லி, பொங்கல், போன்ற உணவுகளையும் நண்பகலில் மரக்கறி புரியாணி போன்ற மாறுபட்ட உணவுகளையும் பயணக்கட்டணத்துக்கு உட்பட்டதாகவே வழங்கவுள்ளோம். அதேபோன்று, நேரடியாக வருவிக்கப்பட்ட பசும்பாலை பயன்படுத்தி தேநீர் மற்றும் கோப்பி ஆகியவற்றையும் குளிர்பாணங்களையும் இலவசமாக வழங்கவுள்ளோம். மேலும், வரிச்சலுகையுடன் பொருட்கள் விற்பனை நிலையமொன்றையும் நாம் படகில் நிறுவுவதற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தினை அடைந்துள்ளது. சுபம் நிறுவனம் நேரடியாகவே படகுசேவையை கையாளுவதன் காரணமாக பயணச்சீட்டுக்கள் மற்றும் குறுகிய பயணத்திட்டங்களை மையப்படுத்திய புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. sailsubham.com என்ற இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த இணையத்தளத்தில் குறுகிய பயணத்திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. உதாரணமாக, இரண்டு இரவு மூன்று பகல் தங்குமிட மற்றும் உள்ளக போக்குவரத்து வசதிகளுடன் காணப்படுகின்றது. இதற்கான தொகை இந்திய ரூபாவில் 15ஆயிரமாக காணப்படுவதோடு இலங்கை ரூபாவில் 50ஆயிரம் வரையில் இருக்கின்றது. இவ்விதமான திட்டங்கள் நடுத்தர பயணிகளை மையப்படுத்தியதாகவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கு மாகாணம் இயற்கை வளங்கள் நிறைந்ததாக காணப்படுகின்றது. பிரசித்திபெற்ற சமயத்தலங்கள், வரலாற்று இடங்கள், கலாசார முக்கியத்துவ பகுதிகள் உள்ளிட்ட பலதரப்பட்ட சிறப்புக்களை கொண்டிருக்கின்றன. சுற்றுலாப்பயணிகளை இந்தப்பகுதிகள் மிகவும் கவர்ந்தவையாக இருக்கின்றன என்பதை எம்மால் உறுதியாகக்கூற முடிகின்றது. ஆகவே குறைந்த செலவில் சுற்றுலாப்பயணிகள் பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களை நாங்கள் ஏற்பாடு செய்துள்ளதோடு தொடர்ச்சியான படகுசேவையை முன்னெடுப்பதற்கும் தீர்மானித்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.   https://globaltamilnews.net/2024/209293/
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.