Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, விசுகு said:

உண்மையில் உங்களுக்கு எழுதுவது நேரவிரயம் 

விசுகர்!
இந்த நேர விரயம்,நேரம் பொன்னானது,முதலே சொல்லிவிட்டோம் என்ற சொற்பதங்கள்  பதில் இல்லை என்பதையே சுட்டிக்காட்டுகின்றது. இந்த நோய் உங்கள் அருமை   நண்பர் ஜஸ்ரினிடமும் இருக்கின்றது....  @Justin :beaming_face_with_smiling_eyes:

ஒருவர் கேள்வி கேட்டால் உரிய பதிலை ஒரு வரியில் கூட சொல்லிவிட்டு போகலாம். :cool:

  • Like 1
  • Replies 65
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

உக்ரேன் மீதான ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்புப் போர் ஆரம்பித்த காலத்திலிருந்து யாழ் இணையத்தில் மிகத்தெளிவான இரு பிரிவினர் இருக்கின்றனர் என்பது உறுதியாகிறது.  ஒன்று, இந்த ஆக்கிரமிப்புப் போரினை எம்மீதான ச

விசுகு

சீ சீ அது நம்ம வசதிக்கேற்ப மாறும் மாற்றிக்கலாம் இப்போ கனடிய பூர்வீக மக்களை விரட்டி விட்டு அந்த இடத்தில் நீங்கள் உங்கள் வாழ்வாதாரங்களை செய்து இருக்கும் போது பூர்வீகம் சார்ந்த விடயங்களில் முட்

Sasi_varnam

புட்டின் அம்மா அப்பா கல்லறையில்; ஒரு மூதாட்டி காகிதத்தில் எழுதி வைத்த நோட்டுக் குறிப்பை நீங்கள் ஓவர் சென்டிமென்டாய் அணுகுகிறீர்கள் என்பது புரிகிறது.  அந்த கல்லறைகள் ஒன்றும் ஈழதேச விடுதலைக்காய் இள

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, குமாரசாமி said:

விசுகர்!
இந்த நேர விரயம்,நேரம் பொன்னானது,முதலே சொல்லிவிட்டோம் என்ற சொற்பதங்கள்  பதில் இல்லை என்பதையே சுட்டிக்காட்டுகின்றது. இந்த நோய் உங்கள் அருமை   நண்பர் ஜஸ்ரினிடமும் இருக்கின்றது....  @Justin :beaming_face_with_smiling_eyes:

ஒருவர் கேள்வி கேட்டால் உரிய பதிலை ஒரு வரியில் கூட சொல்லிவிட்டு போகலாம். :cool:

ஐனநாயகம் என்பதே சரியானதல்ல என்றால் எனக்கு எழுத ஒன்றும் இல்லை. இது கருத்துக்களம் பள்ளிக் கூடம் அல்லவே. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, விசுகு said:

ஐனநாயகம் என்பதே சரியானதல்ல என்றால் எனக்கு எழுத ஒன்றும் இல்லை. இது கருத்துக்களம் பள்ளிக் கூடம் அல்லவே. 

நில்லுங்கள் விசுகர்!

நீங்களோ நானோ ஜனநாயகத்தை முதற்கண்ணாக நினைப்பவர்கள். ஆனால் ஜனநாயக வழியில் தேர்தல் நடத்தி வெற்றி பெற்றுவிட்டு...... ஒரு சர்வாதிகாரி செய்யும் வேலையை தேர்தல் மூலம் வெற்றி பெற்றவரும் செய்தால் என்ன வித்தியாசம் விசுகர்?

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
30 minutes ago, விசுகு said:

1) உண்மையில் உங்களுக்கு எழுதுவது நேரவிரயம் 

2)ஐனநாயக கோட்பாட்டை அறியாதவர் அல்ல நீங்கள். உங்களுக்கு தேவையானபோது அதன் ஓட்டைகளை மட்டும் தேடுகிறீர்கள். 

3) ஆனால் அது சிறந்த வழி அதன் ஓட்டைகள் திருத்தப்பட்டணும் என்றே நன்மக்கள் விரும்புவர் 

1) (😀 மூத்தவர் நீங்கள் கூறும் எதனையும் நான் கடுமையானதாகக் கொள்வதில்லை)

2) ஓட்டைகளைத் தேடவில்லை.

 நீங்கள் இதைத்தான் உண்ண வேண்டும், இப்படித்தான் உடுக்க வேண்டும் எனக் கூறும் தகுதி எனக்கு இல்லை என்கிறேன். 

3)  அதுவூம் ஒப்பீட்டளவில், தற்போதுள்ள  வழிமுறைகளில் ஓரளவு நன்மையான ஒன்று . அதில் உள்ள ஓட்டைகளும் அடைக்கப்படவேண்டும்.

Edited by Kapithan
  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
45 minutes ago, விளங்க நினைப்பவன் said:

உக்ரைன் மீதான ரஷ்ய அக்கிரமிப்பை கண்டித்து நடத்தபட்ட பேரணிகளில் கலந்து கொண்ட ரஷ்ய வம்சாவளியினரும் புரின் சார்வாதிகாரியின் ஆட்சி முடிவையே வேண்டுகின்றனர். மற்றும் படி யாழ்களத்தில் இவர்கள் சுதந்திரமான ஐனநாயகநாடுகளில் வாழ்ந்து உச்சகட்ட சுதந்திர வாழ்வை அனுபவித்தபடி சர்வாதிகாரத்தை ஆதரித்து எழுதுவது எல்லாம் ஒரு நகைச்சுவை பொழுது போக்கிற்காக

புடினின் ஆட்சி முடிவுக்கு வரவேண்டும்/தொடரவேண்டும் என ரஸ்யர்கள் எதை விரும்பினாலும் அது அவர்கள் தெரிவு செய்ய வேண்டும்.

அதுதான் சனநாயகம்.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த பெண்மணியின் செயல் கேவலமானது, கல்லறையில் போய் அவமரியாதை செய்வது கேவலமான செயல்பாடு. இவரது வெறுப்பை வேறு வழியில் காட்டியிருக்கலாம்.

இதனை பாராட்டும் சமூகமாக நாங்கள் மாறிகொண்டிருப்பது வேதனைக்குரியது.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, vasee said:

இந்த பெண்மணியின் செயல் கேவலமானது, கல்லறையில் போய் அவமரியாதை செய்வது கேவலமான செயல்பாடு. இவரது வெறுப்பை வேறு வழியில் காட்டியிருக்கலாம்.

இதனை பாராட்டும் சமூகமாக நாங்கள் மாறிகொண்டிருப்பது வேதனைக்குரியது.

எங்கள் வீட்டுக்  கல்லறைகளில் இப்படி எழுதி வைத்தால் எப்படியிருக்கும் எனச் சிந்தித்தால் இந்தச் செயலின் கனம் புரியும். 

Posted
38 minutes ago, vasee said:

இந்த பெண்மணியின் செயல் கேவலமானது, கல்லறையில் போய் அவமரியாதை செய்வது கேவலமான செயல்பாடு. இவரது வெறுப்பை வேறு வழியில் காட்டியிருக்கலாம்.

இதனை பாராட்டும் சமூகமாக நாங்கள் மாறிகொண்டிருப்பது வேதனைக்குரியது.

நிச்சயமாக. கல்லறையை அவமதித்தது கேவலமானது.

ஆனால் இந்தப் பெண்ணின் நோக்கம் கல்லறையை அவமதிப்பதாக என்க்குத் தோன்றவில்லை. அப்படியானால் யாருக்கும் தெரியாமல் கல்லறையில் கிறுக்கியிருக்கலாம். சுதந்திரமான பேச்சுரிமை மறுக்கப்படும் நாட்டில் தைரியமாக முன்வந்து தான் சொல்லவேண்டியதை உலகிற்குத் தலைநிமிர்ந்து கூறிவிட்டார். ரஸ்யாவில் பலர் மௌனமாக தமக்குள்ளேயே இவரைப் பாராட்டியிருப்பார்கள்.

  • Like 3
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
32 minutes ago, இணையவன் said:

நிச்சயமாக. கல்லறையை அவமதித்தது கேவலமானது.

ஆனால் இந்தப் பெண்ணின் நோக்கம் கல்லறையை அவமதிப்பதாக என்க்குத் தோன்றவில்லை. அப்படியானால் யாருக்கும் தெரியாமல் கல்லறையில் கிறுக்கியிருக்கலாம். சுதந்திரமான பேச்சுரிமை மறுக்கப்படும் நாட்டில் தைரியமாக முன்வந்து தான் சொல்லவேண்டியதை உலகிற்குத் தலைநிமிர்ந்து கூறிவிட்டார். ரஸ்யாவில் பலர் மௌனமாக தமக்குள்ளேயே இவரைப் பாராட்டியிருப்பார்கள்.

இணையவன் ஒரு மனித குலத்துக்கு எதிரான பயங்கரவாதியின் பெற்றோரின் கல்லறைக்கு மக்கள் பூச்செண்டு கொண்டுவந்து வைப்பார்களா என்ன!

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
57 minutes ago, வாலி said:

இணையவன் ஒரு மனித குலத்துக்கு எதிரான பயங்கரவாதியின் பெற்றோரின் கல்லறைக்கு மக்கள் பூச்செண்டு கொண்டுவந்து வைப்பார்களா என்ன!

கைப்Gபறகைப்பற்றப்பட்ட ரஸ்ய டாங்கியில் பூக்கள் வைத்து அஞ்சலி செலுத்தும் ஜேர்மனியர்கள். 

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
12 hours ago, விசுகு said:

இல்லை தம்பி

எனக்கு ஐனநாயக வழியில் மட்டுமே நம்பிக்கை உண்டு. என்னை மீண்டும் 18ம் நூற்றாண்டுக்கு வழி காட்டவேண்டாம். நன்றி 

அதிகம் வேண்டாம்.. இந்தா தைப்பொங்கலுக்கும் தீபாவளிக்கும் தமிழீழம் அமையுது என்ற வாக்குச் சர்வாதிகாரிகளுக்கு வாக்களித்து ஏமாந்து தான் ஏக தலைமைத்துவம்.. ஏக பிரதிநிதித்துவத்தின் பின் நின்று.. தமிழரின் பெருவிருப்புக்குரிய அரசின்.. நிழல் அரசை அமைத்து நின்றோம். இறுதியில் அதனையும்.. ஏகாதபத்திய வாக்குச் சர்வாதிகாரத்தின்.. ''பயங்கரவாத்திற்கு எதிரான போர்''.. என்ற போலிக் கோசத்துக்கு பலியிட்டுவிட்டு.. இன்று.. பெளத்த சிங்கள பேரினவாதச் சர்வாதிகாரத்தின்.. முன் அடிமைப்பட்டுக் கிடக்கிறோம்.

இந்த நிலை சோவியத்தை இழந்து ரஷ்சியாவாக நிற்கும்.. மக்களுக்கும்.. அமெரிக்க வாக்கு சர்வாதிகார ஏகாதபத்தியத்தின்.. மோசமான சர்வாதிகார சிந்தனையால்.. நிகழாமல் இருக்க.. வேண்டுவோமாக.

இன்றைய அமெரிக்க வாக்குச் சர்வாதிகார ஏகாதபத்தியத்திற்கு எம் இனத்தின் விடுதலையை.. நிலத்தை பறிகொடுத்த.. நாம்.. ரஷ்சியாவின் சிதைவை மையப்படுத்தி.. நிகழ்த்தப்படும்.. உக்ரேனிய.. யூத தலைமையின் கீழான.. அமெரிக்க ஏகாதபத்திய சர்வாதிகாரத்தின் நடவடிக்கைகளுக்கும்.. அதன் மேற்கு ஐரோப்பிய வால்பிடிகளுக்கும்.. அவர்களின் தேசத்தில் வாழ்கிறோம் என்ற ஒற்றைக்காரணத்திற்காக.. அவர்களின் தவறான போலித்தனமான வாக்குச் சர்வாதிகார சித்தாந்தங்களை எல்லாம் ஏற்றுக் கொண்டு மந்தைகளாக வாழனுன்னு அவசியம் கிடையாது. 

Edited by nedukkalapoovan
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, இணையவன் said:

இந்தப் பெண்ணின் நோக்கம் கல்லறையை அவமதிப்பதாக என்க்குத் தோன்றவில்லை. அப்படியானால் யாருக்கும் தெரியாமல் கல்லறையில் கிறுக்கியிருக்கலாம். சுதந்திரமான பேச்சுரிமை மறுக்கப்படும் நாட்டில் தைரியமாக முன்வந்து தான் சொல்லவேண்டியதை உலகிற்குத் தலைநிமிர்ந்து கூறிவிட்டார். ரஸ்யாவில் பலர் மௌனமாக தமக்குள்ளேயே இவரைப் பாராட்டியிருப்பார்கள்.

உண்மை.

சுதந்திரமான ஜனநாயக நாட்டில் சுதந்திரமாக  வாழ்வதால் அது மாதிரியே நினைத்துவிடுகிறார்கள். சர்வாதிகார ரஷ்யா கம்யுனிச நாடுகளின் நிலையை  இவர்கள் உணருவதில்லை.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, Kapithan said:

1) (😀

3)  அதுவூம் ஒப்பீட்டளவில், தற்போதுள்ள  வழிமுறைகளில் ஓரளவு நன்மையான ஒன்று . அதில் உள்ள ஓட்டைகளும் அடைக்கப்படவேண்டும்.

இதை ஒத்துக் கொள்ள இத்தனை தரம் மூக்கை சுத்தணும் என்று இருக்கு?😭

1 hour ago, nedukkalapoovan said:

அதிகம் வேண்டாம்.. இந்தா தைப்பொங்கலுக்கும் தீபாவளிக்கும் தமிழீழம் அமையுது என்ற வாக்குச் சர்வாதிகாரிகளுக்கு வாக்களித்து ஏமாந்து தான் ஏக தலைமைத்துவம்.. ஏக பிரதிநிதித்துவத்தின் பின் நின்று.. தமிழரின் பெருவிருப்புக்குரிய அரசின்.. நிழல் அரசை அமைத்து நின்றோம். இறுதியில் அதனையும்.. ஏகாதபத்திய வாக்குச் சர்வாதிகாரத்தின்.. ''பயங்கரவாத்திற்கு எதிரான போர்''.. என்ற போலிக் கோசத்துக்கு பலியிட்டுவிட்டு.. இன்று.. பெளத்த சிங்கள பேரினவாதச் சர்வாதிகாரத்தின்.. முன் அடிமைப்பட்டுக் கிடக்கிறோம்.

இந்த நிலை சோவியத்தை இழந்து ரஷ்சியாவாக நிற்கும்.. மக்களுக்கும்.. அமெரிக்க வாக்கு சர்வாதிகார ஏகாதபத்தியத்தின்.. மோசமான சர்வாதிகார சிந்தனையால்.. நிகழாமல் இருக்க.. வேண்டுவோமாக.

இன்றைய அமெரிக்க வாக்குச் சர்வாதிகார ஏகாதபத்தியத்திற்கு எம் இனத்தின் விடுதலையை.. நிலத்தை பறிகொடுத்த.. நாம்.. ரஷ்சியாவின் சிதைவை மையப்படுத்தி.. நிகழ்த்தப்படும்.. உக்ரேனிய.. யூத தலைமையின் கீழான.. அமெரிக்க ஏகாதபத்திய சர்வாதிகாரத்தின் நடவடிக்கைகளுக்கும்.. அதன் மேற்கு ஐரோப்பிய வால்பிடிகளுக்கும்.. அவர்களின் தேசத்தில் வாழ்கிறோம் என்ற ஒற்றைக்காரணத்திற்காக.. அவர்களின் தவறான போலித்தனமான வாக்குச் சர்வாதிகார சித்தாந்தங்களை எல்லாம் ஏற்றுக் கொண்டு மந்தைகளாக வாழனுன்னு அவசியம் கிடையாது. 

இல்லை

பிழையான ஒன்றை நிறுவ சரியான ஒன்றை அழித்தல் தகாது. நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, குமாரசாமி said:

நில்லுங்கள் விசுகர்!

நீங்களோ நானோ ஜனநாயகத்தை முதற்கண்ணாக நினைப்பவர்கள். ஆனால் ஜனநாயக வழியில் தேர்தல் நடத்தி வெற்றி பெற்றுவிட்டு...... ஒரு சர்வாதிகாரி செய்யும் வேலையை தேர்தல் மூலம் வெற்றி பெற்றவரும் செய்தால் என்ன வித்தியாசம் விசுகர்?

அதுக்கு தான் உங்களிடம் 5 வருடத்துக்கு ஒரு முறை வருகிறார்களே?? அதையும் தாண்டி நீதி சட்டம் சிறை என்று இருக்கே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, விசுகு said:

அதுக்கு தான் உங்களிடம் 5 வருடத்துக்கு ஒரு முறை வருகிறார்களே?? அதையும் தாண்டி நீதி சட்டம் சிறை என்று இருக்கே.

அப்படியா.. அப்போ..நீங்கள் நம்பும் அமெரிக்காவினதோ.. பிரான்சினதோ.. வாக்குச் சர்வாதிகாரத்தின் கீழ்.. மகிந்தா.. கோத்தா.. சந்திரிக்கா.. ரணில் என்ற தமிழினப் படுகொலைகளின் நேரடிப் பங்காளிகளை சிறைக்கு அனுப்புங்கள் பார்க்கலாம்..?! கொல்லப்பட்டது உங்கள் உடன்பிறப்புக்கள் தானே.. உக்ரைனுக்கு வழிஞ்சால்.. இரத்தம்.. உங்கள் உடன்பிறப்புகளுக்கு.. இதே மாதத்தில்.. 14 ஆண்டுகளுக்கு முன் வழிந்தது என்ன தக்காளி சட்னியா..???!

52 minutes ago, விசுகு said:

இதை ஒத்துக் கொள்ள இத்தனை தரம் மூக்கை சுத்தணும் என்று இருக்கு?😭

இல்லை

பிழையான ஒன்றை நிறுவ சரியான ஒன்றை அழித்தல் தகாது. நன்றி 

நீங்கள் உக்ரைன் மூலம்.. ஏகாதபத்திய வாக்கு சர்வாதிகள்.. சாதிக்க நினைப்பதற்கு.. துணை நிற்பதை அழித்துத்தான் ஆக வேண்டும். ஏனெனில்.. அமெரிக்க ஏகாதபத்திய சர்வாதிகாரம்.. எம்மை அடிமைப்படுத்தி எமது நிலத்தை சிங்கள பெளத்த பேரினவாத சர்வாதிகாரத்திடம் கையளித்திருப்பது சாதாரணமான ஒன்றல்ல. ஒரு இனத்தின் அழிவை முற்றுமுழுதாக்கக் கூடியது. உக்ரைனுக்குக் கூட இந்தளவு ஆபத்தில்லை. டான்பஸ் பிராந்தியம் உக்ரைன் இன அழிப்பில் இருந்து விடுதலையானால்.. அந்த மக்களுக்கு.. ஈழத் தமிழ் மக்களின் கண்ணீர் புரியும். 

ஆனால் உக்ரைனுக்குப் புரியாது.. ஏனெனில்.. அது ஏகாதபத்திய வாக்குச் சர்வாதிகாரத்தின் ஏஜென்டு. அதுவே எம்மை அழித்தது அடிமைப்படுத்தியதும் கூட. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, வாலி said:

இணையவன் ஒரு மனித குலத்துக்கு எதிரான பயங்கரவாதியின் பெற்றோரின் கல்லறைக்கு மக்கள் பூச்செண்டு கொண்டுவந்து வைப்பார்களா என்ன!

ஆமாம் சரியான கேள்வி.....உயிர் உள்ள மனிதர்களை கொத்து கொத்தாக....கொன்று குவிப்பதை.....அதற்கான நீதியை   உயிர் உள்ளவர்களிடம்.  போய் கேட்க முடியவில்லையென்றாலும்..இறந்தவர்களிடம்.  கூட  போய் முறையிட முடியவில்லை....பாவம் அந்த பெண்   ....அவள் செய்தது பிழையுமில்லை     குற்றமுமில்லை   ஆனால்    சிறைப்படுத்தியுள்ளார்கள்.   உண்மையை தான்  சொல்லி உள்ளார்   ....

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, Kandiah57 said:

சிறைப்படுத்துபவரை பெருமைப்படுத்தியபடி பாதிக்கப்பட்டு ஒப்பாரி வைத்தவரை சிறைப்படுத்தும் கொடுமையை ஆதரிக்கிறது எவ்வளவு கொடுமையானது. ???

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தங்கால்லையில் அமைந்திருந்த மகிந்தராஜபக்ஷே சகோதரர்களின் மாளிகையின் முன்னே இருந்த அவர்களின் பெற்றோர்கள் நினைவு தூபியும் இடித்து அடித்து நொறுக்கப்பட்டதே. யாரால் ? எதற்கு?
ஆயிரக்கணக்கான அப்பாவி ரசிய மக்களின் அழிவுக்கு காரணமானவன் புட்டின், அவனை விமர்சிக்க துப்பு இல்லை. அவனை தூக்கி தலையில் வைத்து கொண்டாடும் அசட்டுத்தனங்கள்!!

இப்போ நான் எழுதிய பதிவுக்கு முத்திரிக்காய் மாதிரி 2 பேர் வந்து கருத்து எழுதுவார்கள், அப்போ அமெரிக்க புஷ், ஒபாமா செய்தேதெல்லாம் என்ன? அதற்க்கு நீங்கள் என்ன எதிர்வினை செய்தீர்கள்? What do I tell you 🤣

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, விசுகு said:

அதுக்கு தான் உங்களிடம் 5 வருடத்துக்கு ஒரு முறை வருகிறார்களே?? அதையும் தாண்டி நீதி சட்டம் சிறை என்று இருக்கே.

அமெரிக்காவில் தற்போது ஆட்சியில் இருக்கும் கட்சி சண்டை பிடிக்கும் கட்சி அல்ல என்றார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்ததும் முதல் செய்த வேலை சண்டையை ஆரம்பித்ததுதான்....
மக்கள் என்ன செய்வார்கள்????

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, குமாரசாமி said:

அமெரிக்காவில் தற்போது ஆட்சியில் இருக்கும் கட்சி சண்டை பிடிக்கும் கட்சி அல்ல என்றார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்ததும் முதல் செய்த வேலை சண்டையை ஆரம்பித்ததுதான்....
மக்கள் என்ன செய்வார்கள்????

அமெரிக்கா எங்கே அண்ணா சண்டையை ஆரம்பித்தது?? 

சில பொறுப்புகளை சுமப்பதால் எல்லாவற்றையும் அமெரிக்காவின் தலையில் போட்டு விடுகிறோம். ஆனால் உப்பில்லாவிட்டால் தெரியும் அருமை போல???

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, விசுகு said:

அமெரிக்கா எங்கே அண்ணா சண்டையை ஆரம்பித்தது?? 

யுத்தத்திற்கு முதலே ஏன் அமெரிக்கா உக்ரேனுக்கு இராணுவ உதவிகள் கொடுத்துக்கொண்டிருந்தது?
பைடன் பதவிக்கு வந்தவுடன் முதல் வானொலி பேட்டியில் புட்டின் ஒரு கொலையாளி என ஏன் கூறவேண்டும்? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, குமாரசாமி said:

யுத்தத்திற்கு முதலே ஏன் அமெரிக்கா உக்ரேனுக்கு இராணுவ உதவிகள் கொடுத்துக்கொண்டிருந்தது?
பைடன் பதவிக்கு வந்தவுடன் முதல் வானொலி பேட்டியில் புட்டின் ஒரு கொலையாளி என ஏன் கூறவேண்டும்? 

எந்த நாடு உதவி கேட்டாலும் அமெரிக்கா தருவது வழக்கம் தானே. உக்ரைன் எதுக்கு அமெரிக்காவிடம் உதவி கேட்டது? யார் பயப்படுத்தியது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, விசுகு said:

எந்த நாடு உதவி கேட்டாலும் அமெரிக்கா தருவது வழக்கம் தானே. உக்ரைன் எதுக்கு அமெரிக்காவிடம் உதவி கேட்டது? யார் பயப்படுத்தியது?

சிறிலங்காவிற்கும் கொடுத்தது சரி என்கிறீர்கள்?
வல்லமை வாய்ந்த ஐரோப்பிய நாடுகள் இருக்கும் போது உக்ரேன் அமெரிக்காவிடம் கையேந்தியதன் சூட்சுமம் விளங்கவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, குமாரசாமி said:

சிறிலங்காவிற்கும் கொடுத்தது சரி என்கிறீர்கள்?
வல்லமை வாய்ந்த ஐரோப்பிய நாடுகள் இருக்கும் போது உக்ரேன் அமெரிக்காவிடம் கையேந்தியதன் சூட்சுமம் விளங்கவில்லையா?

அந்த வகையில் தானே சிறிலங்காவுக்கும் கொடுத்தது?

இது நடந்தது தானே??

ஐரோப்பிய நாடுகள் வேறு அமெரிக்கா வேறு என்று நான் நினைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, விசுகு said:

அந்த வகையில் தானே சிறிலங்காவுக்கும் கொடுத்தது?

விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டது சரி என நிறுவுகின்றீர்கள்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.