Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியைச் சேர்க்க வேண்டும் – டயனா கமகே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை உள்ளடக்குவது இன்றியமையாதது என இராஜாங்க அமைச்சர் டயனா கமகே இன்று முன்மொழிந்துள்ளார்.

“இன்றைய குழந்தைகளுக்கு பாலியல் பற்றிய உண்மையான உண்மைகள் தெரியாது. இதனால் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர். சில பாடசாலை மாணவர்களுக்கு சமூக நோய் என்றால் என்ன என தெரியாது. சில குழந்தைகள் இந்த நோய்களைப் பற்றி அறியாததால் அவர்களுக்குத் தெரியாமல் பல்வேறு சமூக நோய்களால் பாதிக்கப்படலாம். இந்த நோய்களின் அறிகுறிகள் கூட அவர்களுக்குத் தெரியாது, ”என தெரிவித்துள்ளார்.

“பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும், மேலும் அவர்களுடன் அதிக நேரத்தை செலவிடுமாறு பெற்றோரிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்,” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/257640

  • Replies 54
  • Views 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

டயானா சிங்கள புரட்சிகர பெண்ணாக தன்னை காட்டிக்கொள்கிறார். 

  • கருத்துக்கள உறவுகள்

People's mentality, a hindrance to promote tourism - Diana Gamage | Sunday  Observer

புத்த பிக்குகளுக்கு பிடித்த பாடம்...  பாலியல் கல்வி  என்ற படியால்...
டயானாவுக்கு...  எந்த எதிர்ப்பும் இராது.
டயானா காட்டில், அடை மழைதான்.

பாலியல் கல்வியை பாடமாக்குவதை பெரும்பாலான இஸ்லாமியர்கள் வெறுப்பர். கணவனிடம் இருந்து மட்டுமே பாலியல் அறிவை பெற வேண்டும் என்பதும், திருமணத்தின் பின் தான் பாலியல் பற்றி அறிய முடியும் என்பதும் இஸ்லாத்தின் நிபந்தனையாக்கப்பட்டுள்ளதால் இதனை அவர்களும் எதிர்ப்பர்.

அடிப்படைவாத கத்தோலிக்கர்கள் மற்றும் அடிப்படைவாத கிறிஸ்தவர்களும் இதே காரணங்களுக்காக இதை வெறுப்பர். ஆனால் இவர்களின் குரல்களுக்கு இலங்கையில் பெரிய அளவில் மதிப்பில்லை என்பதால் மெளனமாக வேடிக்கை பார்ப்பார்கள்.
 
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

சைவர்கள்…. இந்தப் பாடத் திட்டத்தை எதிர்ப்பார்களா, வரவேற்பார்களா சார். 😜

  • கருத்துக்கள உறவுகள்

Waiting GIFs | Tenor

இப்படியான திரிகளில்... கருத்து எழுதும், animiertes-computer-smilies-bild-0080.gif
யாழ்.களத்தின் முக்கிய பங்காளிகளை இன்னும் காணவில்லை. 😂
animiertes-computer-smilies-bild-0076.gif  ஐயாம் வெயிட்டிங். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

சைவர்கள்…. இந்தப் பாடத் திட்டத்தை எதிர்ப்பார்களா, வரவேற்பார்களா சார். 😜

இப்ப உள்ள மாணவர்கள் போணில் சகலத்தையும் அறிந்துள்ளதால் அவர்கள் பிரக்டிக்கலுக்கே முன்னுரிமை கொடுக்க நினைக்கிறார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இப்ப உள்ள மாணவர்கள் போணில் சகலத்தையும் அறிந்துள்ளதால் அவர்கள் பிரக்டிக்கலுக்கே முன்னுரிமை கொடுக்க நினைக்கிறார்கள் 

என்ன இருந்தாலும்.... சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்பார்கள்.
இப்படியான பாடத்துக்கு, கட்டாயம் ஒரு குருஜீ  தேவை. 😂

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

என்ன இருந்தாலும்.... சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்பார்கள்.
இப்படியான பாடத்துக்கு, கட்டாயம் ஒரு குருஜீ  தேவை. 😂

எந்த குருஜியை நம்புறது குருஜீ குத்துகரணம் அடித்துவிட்டால் ??

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தனிக்காட்டு ராஜா said:

எந்த குருஜியை நம்புறது குருஜீ குத்துகரணம் அடித்துவிட்டால் ??

Nityananda Swamy Gif - Smile Laugh Haha Donga - Kulfy

குருஜீ... குத்துக்கரணம் அடிக்காமல் இருக்க,
அவரின் "வீக் பாயின்டை"  கைத்தொலை பேசியில் படம் எடுத்து வைத்திருக்க வேணும். 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் கல்வி மிக மிக அவசியமான ஒன்று.
பாலியல் உறவால் ஏற்படும் தொற்று நோய்கள் பற்றிய அறிவு மிகக் குறைவு. எச்ஐவி பற்றி மட்டும் மக்கள் அறிந்துள்ளனர். ஆனால் உயிராபத்துகளை ஏற்படுத்தக் கூடிய பல தொற்று நோய்கள் உள்ளன. மருத்துவத் துறை சார்ந்தோர் எழுதினால் இன்னும் விளக்கமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

Nityananda Swamy Gif - Smile Laugh Haha Donga - Kulfy

குருஜீ... குத்துக்கரணம் அடிக்காமல் இருக்க,
அவரின் "வீக் பாயின்டை"  கைத்தொலை பேசியில் படம் எடுத்து வைத்திருக்க வேணும். 😂

இப்பெல்லாம் பல குருஜிக்கள் நெருப்புக்க பெற்றொலே கடத்துறாங்கள் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் கைது செய்யப்பட்ட பாலியல் தொழிலாளர்கள் 7 பேருக்கு தொற்று நோய் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நிழலி said:

அடிப்படைவாத கத்தோலிக்கர்கள் மற்றும் அடிப்படைவாத கிறிஸ்தவர்களும் இதே காரணங்களுக்காக இதை வெறுப்பர்.

எனக்குத் தெரிந்தவரை கத்தோலிக்கர் மற்றும் ஏனைய கிறிஸ்தவர்களுக்கு   உலக அறிவு, இது போன்ற கல்விக்களுக்கான தேவையை புரியும் தன்மை, புதியவற்றை வரவேற்கும் பாங்கு ஆகியவை மற்றய மத மக்களை விட மிக அதிகம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சைவர் மற்றும் இந்துக்களுக்கு  பாலியல் பாடம் எல்லாம் எடுக்கத்தேவையில்லை.
கோவில் கும்பிட போகேக்கை கோபுரத்தை அண்ணார்ந்து பார்த்தாலே போதும்... தலை உச்சியிலை இருந்து அடி நாதம் வரைக்கும் அமிர்தம் வழிந்தோடும்....

படங்கள் இணைக்க முடியாமைக்கு மிக வருந்துகின்றேன். :beaming_face_with_smiling_eyes:

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nunavilan said:

டயானா சிங்கள புரட்சிகர பெண்ணாக தன்னை காட்டிக்கொள்கிறார். 

அவ தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தக்க வைப்பதற்காக, புரட்சிகரமாக சிந்தித்து தற்போது இளம் சந்ததியினரை கவரும்  கருத்துக்களை முன்வைக்கிறா. 

8 hours ago, நிழலி said:

அடிப்படைவாத கத்தோலிக்கர்கள் மற்றும் அடிப்படைவாத கிறிஸ்தவர்களும் இதே காரணங்களுக்காக இதை வெறுப்பர். ஆனால் இவர்களின் குரல்களுக்கு இலங்கையில் பெரிய அளவில் மதிப்பில்லை என்பதால் மெளனமாக வேடிக்கை பார்ப்பார்கள்.

எதை? யார் வேடிக்கை பார்ப்பார்கள்? கிறிஸ்தவர்கள் எங்கேயாவது இதற்கு தமது வெறுப்பை தெரிவித்திருந்தார்களா? அப்போ ஏன் இதுவரை தங்கள் பாடத்திட்டத்தில் சேர்க்காமல் இருக்கிறார்கள்?   

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

சைவர்கள்…. இந்தப் பாடத் திட்டத்தை எதிர்ப்பார்களா, வரவேற்பார்களா சார். 😜

நாங்கள்..இராசகோபுரத்திலும் ..தேரிலும் இந்தப்பாடங்களை சொல்லிக்கொடுக்கிறனாங்கள் கண்டியளோ.....எனவே நாங்கள்  எதிர்க்க மாட்டோம்....🤣

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nunavilan said:

டயானா சிங்கள புரட்சிகர பெண்ணாக தன்னை காட்டிக்கொள்கிறார். 

முதலில் கஞ்ச வளர்க்க வேண்டும் என்கிறார். அதை நிறைவேற்றி விடடார்.

பின்னர் இரவு விடுதிகளை திறக்க கூறினார். அதுவும் நடைமுறையில் வந்துவிட்ட்து.

இப்போது பாலியில் கல்வி பற்றி பேசுகின்றார். அதில் நல்ல விடயங்கள் இருந்தாலும் சில வேளைகளில் கலாச்சாரம் என்று சில தடைகள் வரலாம். நாளடைவில் அது வருவதட்கான சந்தர்ப்பம் உண்டு.

இவருக்கு எதிரான வழக்கு ஒரு பக்கம் இருந்தாலும், தனது எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்ளுவதில் அவர் பின்நிற்கவில்லை. இலங்கைக்கும் பணம் தேவை படுவதால் அதனை நடைமுறை படுத்துகிறார்கள். 

10 hours ago, நிழலி said:

பாலியல் கல்வியை பாடமாக்குவதை பெரும்பாலான இஸ்லாமியர்கள் வெறுப்பர். கணவனிடம் இருந்து மட்டுமே பாலியல் அறிவை பெற வேண்டும் என்பதும், திருமணத்தின் பின் தான் பாலியல் பற்றி அறிய முடியும் என்பதும் இஸ்லாத்தின் நிபந்தனையாக்கப்பட்டுள்ளதால் இதனை அவர்களும் எதிர்ப்பர்.

அடிப்படைவாத கத்தோலிக்கர்கள் மற்றும் அடிப்படைவாத கிறிஸ்தவர்களும் இதே காரணங்களுக்காக இதை வெறுப்பர். ஆனால் இவர்களின் குரல்களுக்கு இலங்கையில் பெரிய அளவில் மதிப்பில்லை என்பதால் மெளனமாக வேடிக்கை பார்ப்பார்கள்.
 
அப்படி எல்லாம் ஒன்றுமில்லை. மதராஸாக்களில் பாலியல்கல்வியும் சேர்த்துதான் ஊடடபடுகின்றது. பாலியலில் நீங்கள் நான்றாக ஈடு பட வேண்டும் என்றும், ஆனால் முஸ்லீம் ஆண்களை மட்டும் அதில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் நன்றாகவே சொல்லிக்கொடுக்கிறார்கள். அதில் ஒன்றுக்கும் அவர்களுக்கு வேறாக சொல்லிக்கொடுக்க தேவை இல்லை. இலங்கையை பொறுத்த வரையில் முஸ்லீம் பெண்கள் பாலியல் கல்வியில் நன்றாக முன்னேற்றமடைந்திருக்கிறார்கள்.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் கல்வி பாடத்திட்டத்துக்குள் உள்வாங்கப்பட வேண்டும் - டயனா கமகே கோரிக்கை

Published By: DIGITAL DESK 3

10 JUN, 2023 | 09:20 AM
image
 
(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

பாலியல் மற்றும் பாலியல் நோய் தொடர்பில் போதிய தெளிவு இல்லாத காரணத்தால் பெரும்பாலான சிறுவர்கள், இளைஞர்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளார்கள். பாலியல் நோய் என்றால் என்ன? என்பது கூட பெரும்பாலான தரப்பினருக்கு தெரியாது. ஆகவே நாட்டின் கல்வி முறைமையில் பாலியல் மற்றும் பாலியல் நோய் தொடர்பான கற்கை பாடத்திட்டத்துக்குள் உள்வாங்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் டயனா கமகே சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற  பிள்ளைகளின் ஆரோக்கியம் மற்றும் கல்வி முறைமை தொடர்பான   தனிநபர் பிரேரணை மீதான   விவாதத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பொருளாதாரப் பாதிப்பு மற்றும் ஏனைய காரணிகளினால் பிள்ளைகளின் மந்தபோசனை வீதம் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆகவே இது நாட்டின் எதிர்காலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். பிள்ளைகளின் சுகாதாரம் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டியது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும்.

மாணவர் பருவத்தில் உள்ள சிறுவர்களில் 11 சதவீதமானோர் குடும்ப வறுமை காரணமாக பாடசாலை கல்வியில் இருந்து இடை விலகியுள்ளார்கள். ஆகவே மாணவர்களின் கல்வியை தீர்மானிக்கும் ஒரு காரணியாக ஏழ்மை காணப்படுகிறது. ஆகவே இவ்விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

மாணவர்களின் சுகாதாரத்துடன்,பாலியல் கல்வி முறைமை தொடர்பில் நடப்பு நிலவரத்துக்கு ஏற்ப புதிய கொள்கைகள் வகுக்க வேண்டும். பாலியல் தொடர்பில் போதிய விளக்கம் மற்றும் தெளிவு இல்லாத காரணத்தால் பிள்ளைகள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளார்கள். கடந்த காலங்களில் இவ்வாறான பல சம்பவங்கள் நாட்டில் பதிவாகியுள்ளன.

2019 ஆம் ஆண்டு நாட்டில் எய்ட்ஸ் நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. 19 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் தான் அதிகளவில் பாலியல் நோய் தொற்றுக்குள்ளாகியுள்ளாகியுள்ளார்கள். நாட்டில் பெரும்பாலானோருக்கு பாலியல் நோய் தொடர்பில் எவ்வித தெளிவும் கிடையாது. ஆகவே பாலியல் மற்றும் பாலியல் நோய் தொடர்பான விடயங்கள்  கல்வி பாடத்திட்டத்துக்குள் உள்வாங்கப்பட வேண்டும்.

நாட்டின் கல்வி முறைமையில் கட்டாயம் பாலியல் தொடர்பான தெளிவுப்படுத்தல் விடயங்கள் உள்வாங்கப்பட வேண்டும். பாலியல் நோய் தொடர்பில் பெரும்பாலான பிள்ளைகளுக்கு எவ்வித தெளிவும் கிடையாது. இதன் பாரதூரதன்மை அவர்களுக்கு தெரியாது. ஆகவே இதனை மாணவர்களுக்கு நிச்சயம் கற்பிக்க வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/157382

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நிழலி said:

பாலியல் கல்வியை பாடமாக்குவதை பெரும்பாலான இஸ்லாமியர்கள் வெறுப்பர். கணவனிடம் இருந்து மட்டுமே பாலியல் அறிவை பெற வேண்டும் என்பதும், திருமணத்தின் பின் தான் பாலியல் பற்றி அறிய முடியும் என்பதும் இஸ்லாத்தின் நிபந்தனையாக்கப்பட்டுள்ளதால் இதனை அவர்களும் எதிர்ப்பர்.
 
அல்லாட காவல். அனுபவமில்லாத கணவருக்கு யாரு சொல்லிக் கொடுத்தார்களாம்?

அந்தக்காலம் வேற...

இந்தக்காலத்தில கண்ட, கண்ட கருமாந்திரங்களைப் பார்த்து அது தான் சரியெண்டால் என்ன செய்யிறது அப்பாவிப் பெண்கள். இதுக்காக தான் கல்வி வேண்டும் என்கிறார்கள்.

அண்மையில் ஒரு பாலிவூட் நடிகை, இயற்கைகாகு மாறான உறவுக்கு வற்புறுத்துகிறார் என கலியாணம் செய்த மறுவாரமே பிரிந்தார்.

13 hours ago, தமிழ் சிறி said:

Waiting GIFs | Tenor

இப்படியான திரிகளில்... கருத்து எழுதும், animiertes-computer-smilies-bild-0080.gif
யாழ்.களத்தின் முக்கிய பங்காளிகளை இன்னும் காணவில்லை. 😂
animiertes-computer-smilies-bild-0076.gif  ஐயாம் வெயிட்டிங். 🤣

இந்த அம்மணிக்கு பாலியல் கல்வி கிடைத்திருக்குமோ எண்டு யோசித்துக் கொண்டிருக்கிறன். 🤔

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இந்த அம்மணிக்கு பாலியல் கல்வி கிடைத்திருக்குமோ எண்டு யோசித்துக் கொண்டிருக்கிறன். 🤔

இங்கிலாந்து குடியுரிமை உள்ளவருக்கு... 
பாலியல் கல்வி கிடைத்திருக்கும் என நினைக்கின்றேன்.
"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற பரந்த கொள்கை உடையவர் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, தமிழ் சிறி said:

"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற பரந்த கொள்கை உடையவர் போலுள்ளது.

அளவுக்கதிகமாக பெற்றிருப்பா போல. மற்றவர்களுக்கும் பகிர.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

அளவுக்கதிகமாக பெற்றிருப்பா போல. மற்றவர்களுக்கும் பகிர.

துணிந்த பெண். 
நல்லதோ, கெட்டதோ... பிரச்சினைக்குரிய  விடயங்களை
பொது வெளியில்... பேசி, அதனை நடை முறைக்கு கொண்டு வருவதற்கும் துணிவு வேண்டும்.
இவர் ஒரு வியாபார நிறுவனம் நடத்துபவர் என எங்கோ வாசித்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தமிழ் சிறி said:

Waiting GIFs | Tenor

இப்படியான திரிகளில்... கருத்து எழுதும், animiertes-computer-smilies-bild-0080.gif
யாழ்.களத்தின் முக்கிய பங்காளிகளை இன்னும் காணவில்லை. 😂
animiertes-computer-smilies-bild-0076.gif  ஐயாம் வெயிட்டிங். 🤣

@ஈழப்பிரியன்@விசுகு, @suvy , @Kandiah57 ஆகியோர் இந்தப் பக்கம் வர
கூச்சப் படுகிறார்கள் போலுள்ளது. 🤣
பயப்பிடாமல் வாங்கோ… நாங்கள் கூச்சத்தை எடுத்து விடுறம். 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

@ஈழப்பிரியன்@விசுகு, @suvy , @Kandiah57 ஆகியோர் இந்தப் பக்கம் வர
கூச்சப் படுகிறார்கள் போலுள்ளது. 🤣
பயப்பிடாமல் வாங்கோ… நாங்கள் கூச்சத்தை எடுத்து விடுறம். 😂

எனக்கு இன்னமும் இந்த கல்வி கிடைக்கவில்லை.

எங்கே எப்படி படிப்பது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.