Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவுக்கு போக ஒரு வழி ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடாக் காய்ச்சல் ஊரிலை அதிதீரமாகப் பரவிவிட்டது..கொரானா ஊசிமாதிரி ஏதாவது கண்டுபிடித்து அடக்கினால் சரி...இல்லையோ காது கிழியும்...அதாவது போன் தொல்லையால் கனடாவாசியின் செவிப்பறை கிழிந்துவிடும் ..நேரம் காலம் கிடையாது..எதுவோ நம்ம சனத்துக்குதான் இந்தவிதி போட்டதுபோல..உடனை எடு எண்டு நிக்குது சனம்..நாமே ரூடோவை வருசத்துக்கு ஒருமுறைதான் காணுறம்..அதுவும் கொத்துரொட்டி அடிக்கையிக்கை..அல்லது நுங்கு சாப்பிடயிக்கை ..

Edited by alvayan

  • Replies 77
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 5/7/2023 at 22:53, Kandiah57 said:

ஒரு விடயத்தை பற்றி  கருத்துகள் எழுதும் போது   இலங்கையிலிருந்து எழுதும் போது சரியாகவும். அதே கருத்துகள் வெளிநாட்டிலிருந்து  எழுதும் போது  பிழையாகவும். எப்படி இருக்க முடியும்   ?? கருத்துகள் சும்மா எழுத முடியாது  .குறிப்பிட்ட விடயம் பற்றி ஆழ்ந்த சிந்தனைகள்  எண்ணங்கள்   இருத்தல் மட்டுமே சாத்தியமாகும்  ...நாங்கள் இங்கு பார்த்து எழுதவில்லை  🤣..எனவே… சாமனியன்   கருத்துகள் வரவேற்க வேண்டியவை 

.வெளிநாட்டில் உள்ளவர்களிடம்

1..பணம்  கேட்கலாம் 

2...காணியை. தா எனக் கேட்கலாம் 

3...ஊருக்கு வாருங்கள்… என்று அழைக்கலாம் 

4..திருமணம் செய்யலாம்....ஆனால்   ஆலோசனை சொல்லக்கூடாது   🤣😂.  புரியவில்லை     விளக்கம் தேவை   

என்னை  பெறுத்தவரையில்.   நாங்கள் இங்கே  இரவு பகல்   சனி ஞாயிறு   எனப் பார்க்கமால்     அனைத்து வேலைகளையும். பாரபட்சமின்றி  செய்வதால்    தான்  மகிழ்ச்சியாக இருக்கிறோம்...இந்த விடையத்தை   ஊரில் உள்ள  எமது உறவுகளுக்கு   சொல்லி விளக்கப்படுத்தவேண்டும்.    அவர்களும். நல்லாகவும். மகிழ்ச்சியாகவும். எம்மை போல் வாழ முடியும்   😎

கந்தையர் .ஓணான்டி சொன்னது வணங்காமுடி சொன்ன கருத்துக்கு.அவர் என்ன சொன்னவர் என்டு ஒருக்கா வடிவாய் பாருங்கோ.அவர் சொன்னதின் சாரம்சம்.நாட்டில் உள்ளவர்கள் வெளியேறக்கூடாது என்ற அடிப்படையில்.அதுக்குத்தான் ஓன்னான்டியர் வெளி நாட்டில் வசித்துக் கொன்டு ஊரில் இருப்பவர்களை வெளிகிட வேண்டாம் என்று சொன்னால் தவறாக விழங்கப்படும் என்று.

  • கருத்துக்கள உறவுகள்
On 10/7/2023 at 01:40, alvayan said:

கனடாக் காய்ச்சல் ஊரிலை அதிதீரமாகப் பரவிவிட்டது..கொரானா ஊசிமாதிரி ஏதாவது கண்டுபிடித்து அடக்கினால் சரி...இல்லையோ காது கிழியும்...அதாவது போன் தொல்லையால் கனடாவாசியின் செவிப்பறை கிழிந்துவிடும் ..நேரம் காலம் கிடையாது..எதுவோ நம்ம சனத்துக்குதான் இந்தவிதி போட்டதுபோல..உடனை எடு எண்டு நிக்குது சனம்..நாமே ரூடோவை வருசத்துக்கு ஒருமுறைதான் காணுறம்..அதுவும் கொத்துரொட்டி அடிக்கையிக்கை..அல்லது நுங்கு சாப்பிடயிக்கை ..

எங்க பார்த்தாலும் ஏஜென்சிக்காரன் சொல்லுறதா சொல்லுறாங்கள் கோடிக்கணக்கில் அவன் உழைக்க போறான் சில நேரம் தகடும் விழும் போல

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

எங்க பார்த்தாலும் ஏஜென்சிக்காரன் சொல்லுறதா சொல்லுறாங்கள் கோடிக்கணக்கில் அவன் உழைக்க போறான் சில நேரம் தகடும் விழும் போல

நேர்மையாக ஒழுங்கு முறைப்படி  கணணித் தேடுதல் , மூலம்  கனேடிய வெப் சைடு மூலம்  பத்திரம் நிரப்பி விண்ணப்பித்து அணுக வேண்டியதுக்கு ஏன் ஏஜெண்சி ? கனடா   ஏஜெண்சியையா?  நியமித்து இருக்கிறது.  ஏஜென்சியை நம்ப வேண்டாம் , கனடாவில் வாழும் படித்த அனுபவமுள்ள குடிவரவு பற்றி அறிந்த கற்ற்வர்கள் மூலம் அணுகவும் என்பது    என் நேர்மையான வேண்டுகோள். 

1 hour ago, நிலாமதி said:

இதைச் சொன்னால், ஒன்றில் "தாம் அங்கு வருவது இவருக்கு பிடிக்கவில்லை..பொறாமை' என்பர், அல்லது 'இதைச் செய்ய நேரம் எடுக்கும், நான் உடனே அங்கு வர வேண்டும்' என்பர். 

இதனால் தான் ஓணாண்டியின் திரியில் கூட ஒன்றும் எழுத மனம் வரவில்லை. 

இங்கு விசிட்டர் விசாவில் வந்து, இரண்டு வருடங்களுக்குள், மீண்டும் திரும்பிச் செல்ல அவசியம் இன்றி, தகுந்த வேலை ஒன்று எடுக்து  Work Permit க்கு விண்ணப்பிக்க முடியும் என்று இந்த ஆண்டில் இருந்து அரசு அறிவித்து உள்ளது. இங்குள்ள தொழிளாளர் பற்றாக்குறையை குறைக்க இப்படி ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள். எனக்கு தெரிந்து இதனை நன்கு புரிந்து கொண்டு இரண்டு சிங்கள நண்பர்கள் இங்கு வந்து இப்ப வேலையும் எடுத்து விட்டார்கள்.

மேலதிக தகவல்களுக்கு:

https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/news/notices/visit-to-work.html

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, நிழலி said:

நன்றி தகவலுக்கு .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

எங்க பார்த்தாலும் ஏஜென்சிக்காரன் சொல்லுறதா சொல்லுறாங்கள் கோடிக்கணக்கில் அவன் உழைக்க போறான் சில நேரம் தகடும் விழும் போல

மன்னிக்கவும். வாழ்க்கை செலவு காரணமாக நாட்டை விட்டு வெளியேற வேண்டுமா? இல்லையேல் ஒட்டு மொத்தமாகவே அரசியல் சூழ்நிலை காரணமாக புலம்பெயர நினைக்கின்றீர்களா?

21 minutes ago, குமாரசாமி said:

மன்னிக்கவும். வாழ்க்கை செலவு காரணமாக நாட்டை விட்டு வெளியேற வேண்டுமா? இல்லையேல் ஒட்டு மொத்தமாகவே அரசியல் சூழ்நிலை காரணமாக புலம்பெயர நினைக்கின்றீர்களா?

நீங்கள் கேட்டது இலங்கையில் இருக்கும் தனியிடம் என்றாலும், இதுக்கு நானும் பதில் கொடுக்க விரும்புகின்றேன். என் பதில், ஒரு சிங்கள நண்பரிடம் இருந்தும், சிங்களப் பெண்ணைக் கட்டிய தமிழ் நண்பரிடம் இருந்தும் பெற்றதன் சாரம்சம்.

ரணில் அரசு, உலக நாடுகளிடம் வாங்கிய கடனையும், வட்டியையும் திருப்பி செலுத்துவதை நிறுத்தி வைத்திருக்கின்றது. இதனால், டொலர் கையிருப்பு தற்போது ஓரளவுக்கு சமாளிக்க கூடிய அளவில் உள்ளது. ஆனால் இதனை தொடர்ந்து செய்ய முடியாது. இவ் வருட முடிவிலோ, அல்லது அடுத்த ஆண்டோ, கடனுக்காக வட்டியையாவது திருப்பிச் செலுத்த வேண்டிய நிலை வரும். இவ்வாறு வந்தவுடன், பொருளாதாரம் கடந்த ஆண்டைவிட மோசமாக போகும் சாத்தியம் உள்ளது. இதனால் தான் எவரும் புதிய தொழில்களில் முதலீடு செய்வதை நிறுத்தி உள்ளனர். பலர் தாம் செய்யும் வணிகத்தை நிறுத்தி, வெளி நாடு செல்ல எத்தனிக்கின்றனர். 

இந்த நிலை ஏற்படும் முன். சிங்களவர்கள் உட்பட, முடிந்தோர் தப்பிச் செல்ல முனைகின்றனர். கனடாவுக்கு பெருவாரியான சிங்களவர்களும் வந்து கொண்டு இருக்கின்றனர். தமிழர்களை விட சிங்கள மாணவர்கள் அதிகமாக இந்த 6 மாதங்களில் வந்துள்ளனர். 

நாட்டில் அரசியல் பிரச்சனை, தமிழர்களுக்கும் உட்பட  "ஓடித் தப்பிக்கும் " நிலையில் இல்லை. ஆனால், பொருளாதாரம், "எடுடா வண்டியை" என்ற நிலையில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கின்றது.

கனடா விசா தொடர்பான இந்தக் காணொளி, ஓரளவுக்கு பொறுப்புணர்வுடன் தயாரிக்கப்பட்டு உள்ளது. சில தகவல்கள் உள்ளன. பின்னூட்டங்களையும் வாசிக்கவும்.

இதில் சொல்லப்படாத விடயம்: விசிட்டர் வீசாவில் வந்த பின் எவ்வாறு வேலை எடுக்க முடியும் என்பது.
 
  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, நிழலி said:

உண்மை 

நன்றி நிழலி 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
49 minutes ago, நிழலி said:

நீங்கள் கேட்டது இலங்கையில் இருக்கும் தனியிடம் என்றாலும், இதுக்கு நானும் பதில் கொடுக்க விரும்புகின்றேன்.

நன்றி நிழலி உங்கள் பதிலுக்கும் நேரத்திற்கும்...

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிலாமதி said:

நேர்மையாக ஒழுங்கு முறைப்படி  கணணித் தேடுதல் , மூலம்  கனேடிய வெப் சைடு மூலம்  பத்திரம் நிரப்பி விண்ணப்பித்து அணுக வேண்டியதுக்கு ஏன் ஏஜெண்சி ? கனடா   ஏஜெண்சியையா?  நியமித்து இருக்கிறது.  ஏஜென்சியை நம்ப வேண்டாம் , கனடாவில் வாழும் படித்த அனுபவமுள்ள குடிவரவு பற்றி அறிந்த கற்ற்வர்கள் மூலம் அணுகவும் என்பது    என் நேர்மையான வேண்டுகோள். 

சிறப்பான அறிவுரை.

[கனேடிய வெப் சைடு மூலம்  பத்திரம் நிரப்பி விண்ணப்பித்து அணுக வேண்டியதுக்கு ஏன் ஏஜெண்சி ? கனடா   ஏஜெண்சியையா?  நியமித்து இருக்கிறது.]

👍

அநியாயமாக எதற்கு ஏஜெண்சியை பிடிக்கிறார்கள் பணம் கொடுத்து ஏமாறுகிறார்கள் என்று நினக்கும் போது தலையே வெடிக்கும் போலிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவுக்கு பெருவாரியான சிங்களவர்களும் வந்து கொண்டு இருக்கின்றனர். தமிழர்களை விட சிங்கள மாணவர்கள் அதிகமாக இந்த 6 மாதங்களில் வந்துள்ளனர். 

போதாக்குறைக்கு சிங்கள அன்பர் ஒருவருக்கு 30 மில்லியனும் கொட்டியிரிக்குது...இனி முழுச்சிங்களச் சனமும் வந்தாலும் வந்துவிடும்....இசுலாமிய சைட்டிலையும்  அவையிட ஏரியாக் காணியெல்லாம் தாறூ மாறா  விலைப்படுகுது..அவையும் லைனிலை நிக்கினம்...  விரைவில் இலங்கனடாதான் போலைகிடக்கு🙃

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
27 minutes ago, alvayan said:

கனடாவுக்கு பெருவாரியான சிங்களவர்களும் வந்து கொண்டு இருக்கின்றனர். தமிழர்களை விட சிங்கள மாணவர்கள் அதிகமாக இந்த 6 மாதங்களில் வந்துள்ளனர். 

போதாக்குறைக்கு சிங்கள அன்பர் ஒருவருக்கு 30 மில்லியனும் கொட்டியிரிக்குது...இனி முழுச்சிங்களச் சனமும் வந்தாலும் வந்துவிடும்....இசுலாமிய சைட்டிலையும்  அவையிட ஏரியாக் காணியெல்லாம் தாறூ மாறா  விலைப்படுகுது..அவையும் லைனிலை நிக்கினம்...  விரைவில் இலங்கனடாதான் போலைகிடக்கு🙃

இலங்கையை  பொறுத்தவரை தமிழர்களுக்கு பேர் போன கனடா சிங்கள ஆதிக்கம் கூடி விடும் என்கிறீர்கள்?  சிங்களத்தின் திட்டமிடல் பலே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

கனடா விசா தொடர்பான இந்தக் காணொளி, ஓரளவுக்கு பொறுப்புணர்வுடன் தயாரிக்கப்பட்டு உள்ளது. சில தகவல்கள் உள்ளன. பின்னூட்டங்களையும் வாசிக்கவும்.

இதில் சொல்லப்படாத விடயம்: விசிட்டர் வீசாவில் வந்த பின் எவ்வாறு வேலை எடுக்க முடியும் என்பது.
 
நிழலி நான் ஏற்கனவே 6 ம் திகதி பதிந்துள்ளேன் என தெரிவிக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

நோ சாமியர்...எங்கடை ஆட்களின் கதறலைப் பார்த்தால்..இந்த சட்டம் நம்ம யாழ்ப்பாணச் சனத்துக்கு மட்டும்தான் என்ற நினைப்பு..வீட்டுகு 3 ...4 ...ஊரவருக்கு ஆளுக்கு ஒன்றாம்...இதனைவிட இடைச்செருகல் ..பல வுண்டாம்...விசாகிடச்சவுடன் அவையை கூட்டிவர் சனம் ரிக்கற்றும் போட்டு வைச்சிருக்குது...அப்ப எந்த சனத்தொகை

இலங்கையை  பொறுத்தவரை தமிழர்களுக்கு பேர் போன கனடா சிங்கள ஆதிக்கம் கூடி விடும் என்கிறீர்கள்?  சிங்களத்தின் திட்டமிடல் பலே.கூடுமென்று எதிர் பார்க்கிறியள்..

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

மன்னிக்கவும். வாழ்க்கை செலவு காரணமாக நாட்டை விட்டு வெளியேற வேண்டுமா? இல்லையேல் ஒட்டு மொத்தமாகவே அரசியல் சூழ்நிலை காரணமாக புலம்பெயர நினைக்கின்றீர்களா?

இரண்டு காரணங்களும் தான் இலங்கையின் பொருளாதார நிலையை சொல்ல முடியாது மீண்டும் டொலர்  கூடுகிறது  அரசியலால் தமிழர்களுக்கு ஒன்றுமே கிடைக்கப்போவதில்லை வரும் கால சந்ததியாவது எங்கோ ஓர் நாட்டில் பிரச்சினைகள் இல்லாமல் அமைதியாக வாழ வேண்டும் என்ற நினைப்புத்தான் சாமியார் யுத்தம் நிறைவடைந்த காலம் தொடக்கம் தமிழர்கள் வாழ்வில் என்ன நடந்திருக்கிறது அதே பிரச்சினை இன்னும் அதிகமாகவே வந்து வாசல் வரைக்கும் ஏறுகிறது 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

இலங்கையை  பொறுத்தவரை தமிழர்களுக்கு பேர் போன கனடா சிங்கள ஆதிக்கம் கூடி விடும் என்கிறீர்கள்?  சிங்களத்தின் திட்டமிடல் பலே.

நிச்சயம்   அவுஸ்திரேலிய போல் வந்து விடும்   ...அவர்கள் பாராளுமன்றத்திலும்.  பத்து பதினைந்து பேர்  வந்து விடுவார்கள் தமிழர்கள்   வாக்கு போட்டும். அனுப்பினாலும். ஆச்சர்யமில்லை 🤣😂

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை 124 பேர் வரை ஏமாந்த செய்தி பரவுகிறது  கனடா ஆசையில் பல கோடி பணம்

வன்னியில்தான் @நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவுக்கு குடும்பத்தோடு வர 2 கோடி போகுதாம்.. எப்படி செய்கிறார்கள் எந்த வழியில் என்று எதுவும் தெரியவில்லை.

சிங்களவர்கள் நேர்மையான வழியில் வருகிறார்கள்,  தமிழர்களோ கப்பல் ஏறி வந்து இங்குள்ள வெள்ளை இன மக்களின் எதிர்ப்பை சாம்பாதிக்கப் போகிறார்கள்.அது கடைசியில் இங்கு எமக்கு உள்ள தார்மீக ஆதரவையும் இல்லாமல் செய்து விடும்.

இப்படிப்பட்ட களவாக ஆட்களை இங்கே கடத்தும் ஆட்களை நாம் பிடித்துக்கொடுக்கா விட்டால் அது நீண்ட கால நோக்கில் தமிழ் சமூகத்துக்கு சாபத்தையே வரவழைக்கும்.

50 லட்ஷம் இருந்தால், ஆங்கிலம் கற்று தேற திறமை இருந்தால் எந்த வேலையும் செய்யம் மனப்பாங்கு இருந்தால் இங்கே நேர்மையாக வந்து குடும்பத்தையும் பின்னர் பெற்றோரையும் கூப்பிட முடியும்.  ஆனால் இப்படி படிப்படியாக நேர்மையாக போக விருப்பம் இல்லாதவர்களுக்கு சொல்லிப் பிரயோசனம் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

இதை அறிய வேணும் என்பதற்காக சொல்கிறேன்...விசிட்டர் போம் நிரப்ப ஒரு ஆளுக்கு $885 ...நேற்ரு $&700 போனதாம்..இண்டைக்கு போனவர் சொன்னவர்..விசிடர் விசாவில் வந்த குடும்பம் ஒன்று ..இன்று அங்கு நின்றதாம்... நிரப்ப முன்னம் சில தரவுகள்  கேட்டு காயிதங்களூம் குடுத்தவை...அங்கு போட்டு வந்தவரின் கதையக் கேட்டால் விசிட்டர் நாளைக்கே வந்துவிடுவார் மாதிரி...இனிச் சொல்லுங்கோ இதை நம்புறதோ ..விடுறதோ... போறபோக்கிலை இந்தமுறை தெருக்கூத்து ப் பார்க்க10 லட்சம் தமிழ்ச் சனம்  நிற்பினம்

போலை..

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, alvayan said:

யாழ்ப்பாணத்துல முட்டி மோதுறாங்களாம்  ஆனால் யாரோ ஒருத்தன் கோடிக்கணக்கில் அடிச்சுட்டு கிளம்பி இருக்கான் 30 லட்சம் , 15லட்சம் கொடுத்த கடிதங்கள் பிரசுரமாகிறது முகநூலில் 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, alvayan said:

 இந்தமுறை தெருக்கூத்து ப் பார்க்க10 லட்சம் தமிழ்ச் சனம்  நிற்பினம்

போலை..

வழிகள் பிழை, யாரவது ஏமாற்றுகிறார்கள் அல்லது நல்ல தகவல்கள் அப்படிப்பட்டவற்றைன்சொல்லுங்கள்.. அதவிட்டிட்டு எதுக்கு பதிவுக்கு பதிவு வந்து கனடாவுக்கு வந்து குவிந்துவிடுவார்கள்.. கனடாவும் சிறிலங்கா ஆகிவிடும்… இஞ்ச எதுக்கு வாறாங்கள் ஊரில கிடக்கிறதுக்கு எண்டமாதிரி எதுக்கு வகிறு எரிஞ்சு எழுதுறியள்.. என்ன கனடா என்ன உங்கட அப்பன் ஆத்தாவீட்டு சொத்தா..? இல்லா கனடா முன்னம் வந்த ஆக்களுக்குதான் இனி வாறாக்களுக்கு இல்லை எண்டு அரசாங்கம் சொல்லி இருக்கோ..? யூறோப்பில தமிழ் ஆக்களுக்கு ஒரு பெரிய எண்ணம் இருக்கு.. அதாவது 83 க்கு முன்னம் படிக்க வந்து செட்டில் ஆன ஆக்கள் 83 க்கு பிறகு அகதியா வந்து செட்டில் ஆன ஆக்களை தாழ்த்தப்பட்ட ஆக்கள் போல பாக்குறது.. 83 க்கு பிறகு அகதியா வந்து புள்ளைகுட்டி பெத்து செட்டில் ஆன ஆக்கள் இப்ப ஸ்டுரண்டா வாற ஆக்களை ஏதோ தாழ்த்தப்பட்ட ஆக்கள மாதிரி நினைக்கிறது.. இப்பிடி ஏதோ ஒரு வியாதி உங்கள மாதிரி இந்த திரிகளில் இப்ப என்னத்துக்கு வெளிநாடு வாறாங்கள் கனடா வாறாங்கள் எண்டு கனடால இருந்து கொண்டே எழுதுற ஆக்களுக்கு இருக்கு..

இங்க தமிழர்கள் களவாக வருகிறார்கள் பிடித்து குடுக்கவேணும் என்று சொல்லும் பலரும் தாங்கள் எப்புடி கனடாவுக்கோ வேறுநாட்டுக்கோ வந்தார்கள் என்பதை மறந்து எழுதுகிறார்கள்..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
On 11/7/2023 at 09:31, சுவைப்பிரியன் said:

கந்தையர் .ஓணான்டி சொன்னது வணங்காமுடி சொன்ன கருத்துக்கு.அவர் என்ன சொன்னவர் என்டு ஒருக்கா வடிவாய் பாருங்கோ.அவர் சொன்னதின் சாரம்சம்.நாட்டில் உள்ளவர்கள் வெளியேறக்கூடாது என்ற அடிப்படையில்.அதுக்குத்தான் ஓன்னான்டியர் வெளி நாட்டில் வசித்துக் கொன்டு ஊரில் இருப்பவர்களை வெளிகிட வேண்டாம் என்று சொன்னால் தவறாக விழங்கப்படும் என்று.

நான் என்ன எழுதி இருக்கிறேன் என்பது அவருக்கு புரியவில்லை என்று நான் நினைக்கிறேன்.. புரிந்திருந்தால் அவரது மறுப்பு வேறு ஏதாவது விதமாக இருந்திருக்கும்.. ஒரு பந்தி பதில் எழுதி இருக்கிறார்.. அதை படித்தபோது புரிந்துவிட்டது அவர் நான் என்ன சொல்லவருகிறேன் என்பதை உள்வாங்கவில்லை என்று.. அதனால்தான் நான் பதில் எழுதவில்லை…

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

யூறோப்பில தமிழ் ஆக்களுக்கு ஒரு பெரிய எண்ணம் இருக்கு.. அதாவது 83 க்கு முன்னம் படிக்க வந்து செட்டில் ஆன ஆக்கள் 83 க்கு பிறகு அகதியா வந்து செட்டில் ஆன ஆக்களை தாழ்த்தப்பட்ட ஆக்கள் போல பாக்குறது.. 83 க்கு பிறகு அகதியா வந்து புள்ளைகுட்டி பெத்து செட்டில் ஆன ஆக்கள் இப்ப ஸ்டுரண்டா வாற ஆக்களை ஏதோ தாழ்த்தப்பட்ட ஆக்கள மாதிரி நினைக்கிறது.. இப்பிடி ஏதோ ஒரு வியாதி

இப்படியான மனநிலை தான் முற்காலத்தில் சாதி பார்த்து சகமனிதர்களை தாழ்த்துகின்ற சாதி முறையும் தமிழர்களிடயே தோன்றியிருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.