Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுழிபுரம் முருகன் கோவிலும் பௌத்த மயமாகும் அபாயம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுழிபுரம் முருகன் கோவிலும் பௌத்த மயமாகும் அபாயம்!

adminAugust 3, 2023
Sulipuram-paralai.jpg?fit=600%2C400&ssl=

யாழ்ப்பாணம் சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த அரச மரம் சங்கமித்தையுடன் தொடர்புடைய அரச மரம் என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த அரச மரம் தொல்பொருள் சின்னமாக அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் அரச மரத்தை தொல்பொருள் திணைக்களத்தினர் ஆக்கிரமித்து புத்தர் சிலைகளை நிறுவி , முருகன் ஆலயத்தை ஆக்கிரமித்து விடுவார்களோ எனும் அச்சம் அப்பகுதி மக்களிடம் எழுந்துள்ளது.

அதேவேளை கடந்த வருடம் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி பிக்குகள் சிலர் ஆலயத்திற்கு வந்து சென்ற நிலையில் , ஆலய அரச மரத்தின் கீழ் புத்தர் சிலையை வைத்து பிரித் ஓத முனைப்பு காட்டி இருந்தனர். அதற்கு ஆலய பக்தர்கள் மற்றும் ஊரவர்கள் எதிர்ப்பு காட்டியதால் , பிக்குகள் அங்கிருந்து வெளியேறி இருந்தனர். இந்நிலையிலையே தற்போது குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

https://globaltamilnews.net/2023/193615/

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் - சுழிபுரம், பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை வந்து இறங்கிய பின் அவருடன் தொடர்புபட்ட மரமாக சித்திரித்து வர்த்தமானி வெளியிட்டமை கலாசார அழிப்பு என வட மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

அத்துடன் வெள்ளரசு மரம் உள்ள இடமெல்லாம் தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறதா எனவும் கேள்வி எழுப்பினார்.

யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

வர்த்தமானி

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் வெளியான வர்த்தமானியில் பல இடங்கள் தொல்லியல் துறைக்குரியதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

யாழ். சுழிபுரம் முருகன் ஆலயத்தில் அரச மரம்..! வெடித்தது புதிய சர்ச்சை | Jaffna Sulipuram Paralai Murugan Temple Pipal Tree

இதன்போது சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை வந்து இறங்கிய பின்னர் அவருடன் தொடர்புபட்ட மரமாக சித்திரித்து வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டுள்ளது.

சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்திற்கும் சங்கமித்தை வருகைக்கும் எந்த தொடர்பும் இல்லை. வெள்ளரசு மரம் உள்ள இடம் எல்லாவற்றையும் தொல்லியல் திணைக்களம் கையகப்படுத்த முயற்சிக்கிறதா?

குறித்த தொல்லியல் திணைக்களத்தின் வர்த்தமானியை மீளப்பெறுவதற்கு யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

சங்கமித்தாவின் அரச மரம்

யாழ். சுழிபுரம் - பறாளாய் முருகன் ஆலய வளாகத்தில் உள்ள அரச மரமானது இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகைதந்த சங்கமித்தாவின் அரச மரம் என வர்ணிக்கப்பட்டு அரச வர்த்தமானி வெளியிடப்பட்டிருக்கின்றது.

யாழ். சுழிபுரம் முருகன் ஆலயத்தில் அரச மரம்..! வெடித்தது புதிய சர்ச்சை | Jaffna Sulipuram Paralai Murugan Temple Pipal Tree

இந்த நிலையில் குறித்த அரச மரத்தை தொல்பொருள் சின்னமாக அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் அரச மரத்தை தொல்பொருள் திணைக்களத்தினர் ஆக்கிரமித்து, புத்தர் சிலைகளை நிறுவி, முருகன் ஆலயத்தை ஆக்கிரமித்து விடுவார்களோ எனும் அச்சம் அப்பகுதி மக்களிடம் எழுந்தாக தெரியவருகிறது.

அதேவேளை கடந்த வருடம் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி தேரர்கள் சிலர் ஆலயத்திற்கு வந்து சென்ற நிலையில், ஆலய அரச மரத்தின் கீழ் புத்தர் சிலையை வைத்து பிரித் ஓத முனைப்பு காட்டி இருந்த போது இதற்கு பக்தர்கள் மற்றும் ஊரவர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்ததால், தேரர்கள் அங்கிருந்து வெளியேறி இருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

https://tamilwin.com/article/jaffna-sulipuram-paralai-murugan-temple-pipal-tree-1691054085

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

நாதன் ஜயாவுக்கு தேவையில்லா தலையிடியாக இது வந்திருக்கே😪

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, உடையார் said:

நாதன் ஜயாவுக்கு தேவையில்லா தலையிடியாக இது வந்திருக்கே😪

ஓமண்ணை.
வழமையாக முக்கியமான போயா தினங்களில் பௌத்தர்கள் வந்து அரச மரத்தை வழிபடுவதுண்டு.
இனி அதனை நிரந்தர வழிபாட்டிடமாக்க தொல்பொருள் திணைக்களம் உதவப்போகுது என எண்ணுகிறேன்.
ஆனாலும் சட்டப் போராட்டங்களை முன்னெடுக்க இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அத்தோடு நம்மட அரைகுறை வரலாறு தெரிந்த தமிழர்களே இது சங்கமித்தை வைத்த அரசமரம் (பெருமையாக) என கூறுகிறார்கள்.

1700 வருடமா இந்த மரத்தின் வயது என்று ஒருத்தரும் சிந்திப்பதில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

1700 வருடமா இந்த மரத்தின் வயது என்று ஒருத்தரும் சிந்திப்பதில்லை!

சங்கமித்தை வந்து இறங்கினாள் என்பதற்கே சுயாதீனமான வரலாற்றுச் சாட்சியில்லை (அவங்க சொல்றாங்க நாங்க நம்பிகிட்டிருக்கிறம்) என்றிருக்கும்போது  அரசமரத்துக்கு எத்தினை வயது  இருக்கும் என்பதுக்கும் மேலால் நாங்க காலாதி காலமா வாழுற நிலங்கள்ள வந்து ஆணிய புடுங்கவேணாமென்று சிங்களவன திருப்பி அனுப்ப ஏதாவது செய்யறதுக்கும்  நம்ப தலைமைக்கு தில்லில்ல. செவ்விந்தியன் வந்து கேட்கிறான் என்பதற்காக அமெரிக்காவை வெள்ளையன் திருப்பி கொடுத்திடுவானா, லாஜிக்கா பார்த்தா வெறும் 500 வருடம் தானே வெள்ளையன் அங்க வாழ்ந்திருக்கிறான்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட வளவுக்கிளையும் ஒரு அரசமரம் இருக்குது. அதை மெல்லமாய் தறிச்சு விடவேண்டும் இல்லாவிடின், சங்கமித்தை குழுவினர் ஒண்டுக்கு போன இடம் என்று சொல்லி ஆக்கிரமிச்சு போடுவாங்கள்…

  • கருத்துக்கள உறவுகள்

நாம் இந்த அரசமரங்களைத் தறிக்காதவரை இந்த நிலை தொடரத்தான் போகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

2ஆம் மாதமே(பெப்ரவரி) வெளியான வர்த்தமானியாம்! இப்ப தான் கண்டுபிடித்துள்ளார்கள்!

ஒவ்வொரு மாவட்டம்(அந்தந்த மாவட்டத்தில் வசிப்போராக இருக்கவேண்டும்) தோறும் சில செய்தியாளர்களை வர்த்தமானியை தொடர்ச்சியாக வாசித்து கண்காணிக்குமாறு செய்யவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரஞ்சித் said:

நாம் இந்த அரசமரங்களைத் தறிக்காதவரை இந்த நிலை தொடரத்தான் போகிறது. 

ஒட்டு மொத்த தமிழர்களையும் பௌத்தர்கள் என்று எழுதி எடுக்காத வரைக்கும் ஓகே அதுவரை கேள்விக்குறியே

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஒட்டு மொத்த தமிழர்களையும் பௌத்தர்கள் என்று எழுதி எடுக்காத வரைக்கும் ஓகே அதுவரை கேள்விக்குறியே

அவர்கள் இதனை நிறுத்தப்போவதில்லை தனி. யுத்த வெற்றி மமதை தலைக்கேறி நிற்கிறார்கள். எமது தாயகம் கூறுபோடப்பட்டுக் கபளீகரம் செய்யப்படுவதை தடுக்கவியலாத கையறு நிலையில் இருக்கிறோம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

அவர்கள் இதனை நிறுத்தப்போவதில்லை தனி. யுத்த வெற்றி மமதை தலைக்கேறி நிற்கிறார்கள். எமது தாயகம் கூறுபோடப்பட்டுக் கபளீகரம் செய்யப்படுவதை தடுக்கவியலாத கையறு நிலையில் இருக்கிறோம். 

ம் ரகு அண்ண தினந்தோறும் நடக்கும் சம்பவங்களை வைத்தே சொன்னேன்  நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலையை. 

ஒட்டு மொத்த இலங்கையையும்  பெளத்தமயமாக்கலிலே முன் நிற்கிறார்கள் பிரச்சனைகளுக்கான தீர்வை காணாமல் அதாவது இழுத்தடிப்பு ஒரு புறம் நிலப்பிடிப்பு

கடந்த சில நாட்களில் இலங்கையில்  நடைபெற்ற சம்பவங்கள்!!!

திருகோணமலை பெரியகுளம் உச்சிபிள்ளையார் மலையில்  விகாரை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. அங்கிருந்த நாகதம்பிரான்சிலை தகர்த்து எறியப்பட்டிருக்கிறது .

மட்டக்களப்பு மாதவனை மயிலத்தமடு பகுதியில் மீண்டும் புத்தர்சிலை வைக்கப்பட்டு இருக்கின்றது.

மட்டக்களப்பு குடும்பிமலை (தொப்பிகல) சூழலிலும் புதிய புத்தர் குடியமர்த்தப்பட்டு இருக்கின்றார். 

யாழ்ப்பாணம் பறாளாய் முருகன் ஆலய சூழலிலுள்ள அரச மரம் பௌத்த மதத்திற்குரிய அடையாளம் என வர்த்தமானி மூலம்  அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.

வவுனியா  வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய மீள் நிறுவல் பெளத்த மக்களுக்கெதிரான மனித உரிமை மீறல் எனத் தெரிவித்து கச்சல்சமளங்குளத்தில் அடாத்து விகாரை அமைத்து வருகின்ற கல்கமுவ சந்தபோதி பிக்குவும், ஓய்வுபெற்ற இராணுவ கேணல் ஒருவரும் உச்சநீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளார்கள்.

உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் தொல்லியல் திணைக்களம் ஆய்வு பணிகளை நடாத்தி இருக்கின்றது.

குருந்தூர் மலையில் பொங்கல் வழிபாடு நடத்த சென்ற பொதுமக்கள் நீதிமன்ற உத்தரவை கூட மீறி  பொலிசார் கண்முன்னேயே தாக்கப்பட்டு இருக்கின்றார்கள் .

திருகோணமலையில்  6,000 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள பானமுர திலகவன்ச என்கிற  பிக்கு தென்னமரவாடி மற்றும் சிங்கபுர பகுதி  மக்களின் 162 ஏக்கர் காணியை அபகரிக்க முயற்சிக்கின்றார்.

அதே போல சங்கமலை பகுதியிலும் காணிகளை அபகரிக்க முயற்சிக்கின்றனர்.  
இராணுவத்தினருக்காக  செம்பியன்ப்பற்று, கட்டைக்காடு, முள்ளியான் உட்பட  வடமராட்சி கிழக்கு எங்கும் தொடர்ச்சியாக காணிகளை அபகரிக்க முயலுகின்றார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அக்கரைவெளியில் தமிழ்  மக்களுக்கு சொந்தமான 1,500 ஏக்கர் நிலத்தை சுவீகரிக்க மகாவலி அதிகாரசபை முயற்சிக்க தொடங்கி இருக்கின்றது .

இந்த பகுதியில் மட்டும்  11 சிங்கள மக்களுக்கு தலா 25 ஏக்கர் படி காணி வழங்கப்பட்டு இருக்கின்றது
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் வனவள திணைக்கள அதிகாரிகள் முன்னாள் போராளி உள்ளிட்டவர்களின் வீடுகளை உடைத்தெறிந்து அடாவடியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

வவுனியாவடக்கு நயினாமடுவில் சீன நிறுவனம் ஒன்று சீனி தொழிற்சாலையமைக்க சுமார் 7500ஏக்கர் காணி வழங்க  ஏற்பாடு நடக்கிறது.

யாழ்ப்பாண தீவக நிலப்பரப்பை  மத்தியரசின் அதிகார சபை கட்டமைப்புக்குள் கொண்டுவர தேவையான அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டிருகின்றது .

யாழ்ப்பாணத்தில் 2,500 ஏக்கர் காணியை  வனவள திணைக்கள கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான வரைபடம் மாவட்ட செயலகத்திற்கு அனுப்பப்பட்டு இருக்கின்றது .

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி் விடயம், கண்டும் காணாது விடப்பட்டுள்ளது.

திரு ரணில் விக்ரமசிங்க அவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகின்ற சம நேரத்தில் மேற்படி சம்பவங்கள்  நடைபெற்று வருகின்றன. 

தமிழ் தரப்புடன் பேச்சுவார்த்தை நடாத்துவது போன்ற பாசாங்கைத் தொடர்ச்சியாக வைத்திருப்பதானது தனது நலன்களுக்கு அவசியமானதாக திரு ரணில் விக்ரமசிங்கே நினைக்கிறார்.

இதை எங்கள் பெரும்பாலான பிரதிநிதிகள் புரிந்து கொள்ளவில்லை .

குறைந்த பட்சம் ஆக்கிரமிப்புகள் மற்றும் அத்துமீறல்களை கூட தடுக்க முடியாத வெற்று பேச்சுக்களால் என்ன பயன் என்பதையாவது சொல்ல வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ragaa said:

எங்கட வளவுக்கிளையும் ஒரு அரசமரம் இருக்குது. அதை மெல்லமாய் தறிச்சு விடவேண்டும்

இந்தச் செய்தியை வாசித்தவுடன் எனக்கும்  மனதில் உந்த யோசனைதான் தோன்றியது. ஆனால் இனிமேல் தறிக்கவும் முடியாது, வளர்க்கவும் முடியாது. அதற்கு வேறு ஒரு நடவடிக்கை எடுப்பார்கள். ஒரு விகாரையை தடுத்திருந்தால் இந்தளவுக்கு வந்திராது. இதில் சச்சியரின் முழு ஆதரவு உண்டு என நான் முழுமையாக நம்புகிறேன். கட்டியிருந்த  வேட்டியை களட்டிக்  குடுத்து மதத்தை காட்டிகொடுத்திருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ரஞ்சித் said:

நாம் இந்த அரசமரங்களைத் தறிக்காதவரை இந்த நிலை தொடரத்தான் போகிறது. 

இதற்கும் உள்ளூர் சபைகளின் அனுமதி வேண்டும். வேரில் சின்னதா ஒரு வெட்டுப்போட்டு - எண்ணை ஊத்தலாம்.

எமது வீடு கொஞ்சம் பழங்கால வீடு - விட்டால் சங்கமித்தை சமைந்த இடம் எண்டு சொல்லி போடுவாங்கள் - எல்லா அரசங்கண்டையும் அலேக்கா தூக்கியாச்சு.

3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ம் ரகு அண்ண தினந்தோறும் நடக்கும் சம்பவங்களை வைத்தே சொன்னேன்  நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலையை. 

ஒட்டு மொத்த இலங்கையையும்  பெளத்தமயமாக்கலிலே முன் நிற்கிறார்கள் பிரச்சனைகளுக்கான தீர்வை காணாமல் அதாவது இழுத்தடிப்பு ஒரு புறம் நிலப்பிடிப்பு

கடந்த சில நாட்களில் இலங்கையில்  நடைபெற்ற சம்பவங்கள்!!!

திருகோணமலை பெரியகுளம் உச்சிபிள்ளையார் மலையில்  விகாரை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. அங்கிருந்த நாகதம்பிரான்சிலை தகர்த்து எறியப்பட்டிருக்கிறது .

மட்டக்களப்பு மாதவனை மயிலத்தமடு பகுதியில் மீண்டும் புத்தர்சிலை வைக்கப்பட்டு இருக்கின்றது.

மட்டக்களப்பு குடும்பிமலை (தொப்பிகல) சூழலிலும் புதிய புத்தர் குடியமர்த்தப்பட்டு இருக்கின்றார். 

யாழ்ப்பாணம் பறாளாய் முருகன் ஆலய சூழலிலுள்ள அரச மரம் பௌத்த மதத்திற்குரிய அடையாளம் என வர்த்தமானி மூலம்  அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.

வவுனியா  வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய மீள் நிறுவல் பெளத்த மக்களுக்கெதிரான மனித உரிமை மீறல் எனத் தெரிவித்து கச்சல்சமளங்குளத்தில் அடாத்து விகாரை அமைத்து வருகின்ற கல்கமுவ சந்தபோதி பிக்குவும், ஓய்வுபெற்ற இராணுவ கேணல் ஒருவரும் உச்சநீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளார்கள்.

உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் தொல்லியல் திணைக்களம் ஆய்வு பணிகளை நடாத்தி இருக்கின்றது.

குருந்தூர் மலையில் பொங்கல் வழிபாடு நடத்த சென்ற பொதுமக்கள் நீதிமன்ற உத்தரவை கூட மீறி  பொலிசார் கண்முன்னேயே தாக்கப்பட்டு இருக்கின்றார்கள் .

திருகோணமலையில்  6,000 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள பானமுர திலகவன்ச என்கிற  பிக்கு தென்னமரவாடி மற்றும் சிங்கபுர பகுதி  மக்களின் 162 ஏக்கர் காணியை அபகரிக்க முயற்சிக்கின்றார்.

அதே போல சங்கமலை பகுதியிலும் காணிகளை அபகரிக்க முயற்சிக்கின்றனர்.  
இராணுவத்தினருக்காக  செம்பியன்ப்பற்று, கட்டைக்காடு, முள்ளியான் உட்பட  வடமராட்சி கிழக்கு எங்கும் தொடர்ச்சியாக காணிகளை அபகரிக்க முயலுகின்றார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அக்கரைவெளியில் தமிழ்  மக்களுக்கு சொந்தமான 1,500 ஏக்கர் நிலத்தை சுவீகரிக்க மகாவலி அதிகாரசபை முயற்சிக்க தொடங்கி இருக்கின்றது .

இந்த பகுதியில் மட்டும்  11 சிங்கள மக்களுக்கு தலா 25 ஏக்கர் படி காணி வழங்கப்பட்டு இருக்கின்றது
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் வனவள திணைக்கள அதிகாரிகள் முன்னாள் போராளி உள்ளிட்டவர்களின் வீடுகளை உடைத்தெறிந்து அடாவடியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

வவுனியாவடக்கு நயினாமடுவில் சீன நிறுவனம் ஒன்று சீனி தொழிற்சாலையமைக்க சுமார் 7500ஏக்கர் காணி வழங்க  ஏற்பாடு நடக்கிறது.

யாழ்ப்பாண தீவக நிலப்பரப்பை  மத்தியரசின் அதிகார சபை கட்டமைப்புக்குள் கொண்டுவர தேவையான அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டிருகின்றது .

யாழ்ப்பாணத்தில் 2,500 ஏக்கர் காணியை  வனவள திணைக்கள கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான வரைபடம் மாவட்ட செயலகத்திற்கு அனுப்பப்பட்டு இருக்கின்றது .

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி் விடயம், கண்டும் காணாது விடப்பட்டுள்ளது.

திரு ரணில் விக்ரமசிங்க அவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகின்ற சம நேரத்தில் மேற்படி சம்பவங்கள்  நடைபெற்று வருகின்றன. 

தமிழ் தரப்புடன் பேச்சுவார்த்தை நடாத்துவது போன்ற பாசாங்கைத் தொடர்ச்சியாக வைத்திருப்பதானது தனது நலன்களுக்கு அவசியமானதாக திரு ரணில் விக்ரமசிங்கே நினைக்கிறார்.

இதை எங்கள் பெரும்பாலான பிரதிநிதிகள் புரிந்து கொள்ளவில்லை .

குறைந்த பட்சம் ஆக்கிரமிப்புகள் மற்றும் அத்துமீறல்களை கூட தடுக்க முடியாத வெற்று பேச்சுக்களால் என்ன பயன் என்பதையாவது சொல்ல வேண்டும்?

☹️ 100% யதார்த்தம். இப்படி நடக்கும் என இங்கே பலமுறை கடந்த 10 வருடத்தில் எழுதியாகி விட்டது.

இனி இதை தடுத்த நிறுத்த முடியும் போல தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரை வன்முறைக்குள் இழுத்து முழுக்க அழிக்கும் திட்டம் சிங்களத்திடம் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
On 3/8/2023 at 13:26, ஏராளன் said:

அத்தோடு நம்மட அரைகுறை வரலாறு தெரிந்த தமிழர்களே இது சங்கமித்தை வைத்த அரசமரம் (பெருமையாக) என கூறுகிறார்கள்.

1700 வருடமா இந்த மரத்தின் வயது என்று ஒருத்தரும் சிந்திப்பதில்லை!

உங்கள் ஊர்  இல்லையா?    ஏதோ புத்தரை  வைத்து...வழிபாடட்டும்🙏.    போய தினங்களில் வழிபாட்டு உள்ளார்கள் அப்ப  பிறகு என்ன   இனி தொடர்ந்து வழிபாடட்டும 🤣

  • கருத்துக்கள உறவுகள்

எமது தமிழ்த் தலைமைகள், தமிழ் அரசியல் கட்சிகள்  அனைத்தும் ஒன்றுபட்டு சிங்களவனின் எதிர்கால திட்டங்களை அரசியல் சாணக்கியத்துடன்  புரிந்துகொண்டு  இதயசுத்தியோடு உழைக்காதவரை எமது இனத்துக்கு விடிவில்லை.

தேசிய தலைவர் இருந்தபோது வெறும்  பம்மாத்துக்கு உள்ளார  விரும்பாமலே   இணைந்து ஒன்றாக இருந்தபோதே எமது அரசியல் கட்சிகள் எப்போது அண்ணன் சாவான் திண்ணை எப்போது காலியாகும் என்று மனதுக்குள் பொருமிக்கொண்டே இருந்திருக்கிறார்கள் என்பது அவர்களின் இன்றைய நடவடிகைகளில் இருந்து நாங்கள் புரிந்துகொள்ளலாம்.

தமிழ் அரசியல் தலைமைக்கு எமது தலைவரின் வழிகாட்டல் அவர் இருந்தாலும் மறைந்தாலும் செல்லுபடியாகும் என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

உங்கள் ஊர்  இல்லையா?    ஏதோ புத்தரை  வைத்து...வழிபாடட்டும்🙏.    போய தினங்களில் வழிபாட்டு உள்ளார்கள் அப்ப  பிறகு என்ன   இனி தொடர்ந்து வழிபாடட்டும 🤣

ஓம் ஐயா.

பக்கத்து கோயில் ஐயா தான் வலிந்து அழைப்பதாகவும்(இங்கு வந்து வழிபாடு செய்ய), அவரே தனது கோயில் சுவர்களில் சமாதான அரங்கு என எழுதி முக்கிய இலங்கைத் தலைவர்களின்(சந்திரிகா அம்மையார், மகிந்த ராஜபக்க்ஷ) படங்களை வரைந்தும் வைத்துள்ளார்.

இவர் இரு கோவில்களையும் தான் கைப்பற்ற முயல்வதாகவும் உள்ளூரில் கதைக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

திடீரென பௌத்த வாதம் கிளம்பி, இடங்களை பிடிப்பதுக்கு பின்னால், சீனா இருப்பது தெரிகிறது. பௌத்த தூபிகள் ஊடாக, இந்தியா வேவு பார்க்கப்படுகின்றது போல சந்தேகம் உண்டாகிறது.

இது இந்தியாவுக்கு தெரியுமா அல்லது வழக்கம் போல, தலைக்கு மேலே வெள்ளம் போன பின்னர், குய்யோ, முறையோ என்று கிளம்ப போகிறதா? 🤦‍♂️

  • கருத்துக்கள உறவுகள்
On 3/8/2023 at 08:22, கிருபன் said:

யாழ்ப்பாணம் சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த அரச மரம் சங்கமித்தையுடன் தொடர்புடைய அரச மரம் என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

IMG-4328.jpg

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kavi arunasalam said:

IMG-4328.jpg

என்ன இது முருகனுக்கு வந்த சோதனை?! 
கோவித்துக் கொண்டு போக பக்கத்தில மலையும் இல்லை.

இத் திரியில் உள்ள செய்திகளின் படி  இரண்டு விதமாக பௌத்த ஆக்கிரமிப்பை முன்னெடுத்துள்ளனர்.

முதலாவது வர்த்தமானி அறிவித்தல் மூலமாக சட்ட ரீதியாக உரிமை கொண்டாட முயல்கிறார்கள். இதனைச் சட்ட ரீரியாகவே முறியடிக்க வேண்டியது தமிழர் தரப்பு நிர்வாக/அரசியல் வாதிகளின் கடமை. இதன் மூலம் வரும் காலங்களில் ஆக்கிரமிப்பினை முளையிலேயே கிள்ள முடியும்.

இரண்டாவது புத்தர் சிலை வைத்தல். இது பிக்குகளுக்கு சட்டங்களுக்கு மேலான உரிமை உண்டு என்ற இறுமாப்பில் செய்யும் அராஜகம். இலங்கை அரசியல் அமைப்பில் இந்த அதியுயர் உரிமை பிக்குகளுக்கு இருக்கலாம். சட்டங்களில் எங்காவது இது உள்ளதா ? ஒவ்வொரு சட்ட வரைபுகளிலும் பிக்குகளுக்கு விதிவிலக்கு என்று குறிப்பிடப்பட்டுள்ளதா ? இதனையும் சட்ட ரீதியாக அணுகினால் பிக்குகளை வெளியேற்ற அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் அதே காவல்துறையை நிர்ப்பந்திக்கலாம் அல்லவா ?

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ம் ரகு அண்ண தினந்தோறும் நடக்கும் சம்பவங்களை வைத்தே சொன்னேன்  நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலையை. 

ஒட்டு மொத்த இலங்கையையும்  பெளத்தமயமாக்கலிலே முன் நிற்கிறார்கள் பிரச்சனைகளுக்கான தீர்வை காணாமல் அதாவது இழுத்தடிப்பு ஒரு புறம் நிலப்பிடிப்பு

கடந்த சில நாட்களில் இலங்கையில்  நடைபெற்ற சம்பவங்கள்!!!

திருகோணமலை பெரியகுளம் உச்சிபிள்ளையார் மலையில்  விகாரை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. அங்கிருந்த நாகதம்பிரான்சிலை தகர்த்து எறியப்பட்டிருக்கிறது .

மட்டக்களப்பு மாதவனை மயிலத்தமடு பகுதியில் மீண்டும் புத்தர்சிலை வைக்கப்பட்டு இருக்கின்றது.

மட்டக்களப்பு குடும்பிமலை (தொப்பிகல) சூழலிலும் புதிய புத்தர் குடியமர்த்தப்பட்டு இருக்கின்றார். 

யாழ்ப்பாணம் பறாளாய் முருகன் ஆலய சூழலிலுள்ள அரச மரம் பௌத்த மதத்திற்குரிய அடையாளம் என வர்த்தமானி மூலம்  அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.

வவுனியா  வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய மீள் நிறுவல் பெளத்த மக்களுக்கெதிரான மனித உரிமை மீறல் எனத் தெரிவித்து கச்சல்சமளங்குளத்தில் அடாத்து விகாரை அமைத்து வருகின்ற கல்கமுவ சந்தபோதி பிக்குவும், ஓய்வுபெற்ற இராணுவ கேணல் ஒருவரும் உச்சநீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளார்கள்.

உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் தொல்லியல் திணைக்களம் ஆய்வு பணிகளை நடாத்தி இருக்கின்றது.

குருந்தூர் மலையில் பொங்கல் வழிபாடு நடத்த சென்ற பொதுமக்கள் நீதிமன்ற உத்தரவை கூட மீறி  பொலிசார் கண்முன்னேயே தாக்கப்பட்டு இருக்கின்றார்கள் .

திருகோணமலையில்  6,000 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள பானமுர திலகவன்ச என்கிற  பிக்கு தென்னமரவாடி மற்றும் சிங்கபுர பகுதி  மக்களின் 162 ஏக்கர் காணியை அபகரிக்க முயற்சிக்கின்றார்.

அதே போல சங்கமலை பகுதியிலும் காணிகளை அபகரிக்க முயற்சிக்கின்றனர்.  
இராணுவத்தினருக்காக  செம்பியன்ப்பற்று, கட்டைக்காடு, முள்ளியான் உட்பட  வடமராட்சி கிழக்கு எங்கும் தொடர்ச்சியாக காணிகளை அபகரிக்க முயலுகின்றார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அக்கரைவெளியில் தமிழ்  மக்களுக்கு சொந்தமான 1,500 ஏக்கர் நிலத்தை சுவீகரிக்க மகாவலி அதிகாரசபை முயற்சிக்க தொடங்கி இருக்கின்றது .

இந்த பகுதியில் மட்டும்  11 சிங்கள மக்களுக்கு தலா 25 ஏக்கர் படி காணி வழங்கப்பட்டு இருக்கின்றது
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் வனவள திணைக்கள அதிகாரிகள் முன்னாள் போராளி உள்ளிட்டவர்களின் வீடுகளை உடைத்தெறிந்து அடாவடியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

வவுனியாவடக்கு நயினாமடுவில் சீன நிறுவனம் ஒன்று சீனி தொழிற்சாலையமைக்க சுமார் 7500ஏக்கர் காணி வழங்க  ஏற்பாடு நடக்கிறது.

யாழ்ப்பாண தீவக நிலப்பரப்பை  மத்தியரசின் அதிகார சபை கட்டமைப்புக்குள் கொண்டுவர தேவையான அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டிருகின்றது .

யாழ்ப்பாணத்தில் 2,500 ஏக்கர் காணியை  வனவள திணைக்கள கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான வரைபடம் மாவட்ட செயலகத்திற்கு அனுப்பப்பட்டு இருக்கின்றது .

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி் விடயம், கண்டும் காணாது விடப்பட்டுள்ளது.

திரு ரணில் விக்ரமசிங்க அவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகின்ற சம நேரத்தில் மேற்படி சம்பவங்கள்  நடைபெற்று வருகின்றன. 

தமிழ் தரப்புடன் பேச்சுவார்த்தை நடாத்துவது போன்ற பாசாங்கைத் தொடர்ச்சியாக வைத்திருப்பதானது தனது நலன்களுக்கு அவசியமானதாக திரு ரணில் விக்ரமசிங்கே நினைக்கிறார்.

இதை எங்கள் பெரும்பாலான பிரதிநிதிகள் புரிந்து கொள்ளவில்லை .

குறைந்த பட்சம் ஆக்கிரமிப்புகள் மற்றும் அத்துமீறல்களை கூட தடுக்க முடியாத வெற்று பேச்சுக்களால் என்ன பயன் என்பதையாவது சொல்ல வேண்டும்?

நன்றி தனி,

இதனைப் படிக்கவே மனது வலிக்கிறது. எம்மைச் சிறிது சிறிதாக ஆக்கிரமித்து ஈற்றில் முற்றாக எமது இருப்பையே அடையாளம் இல்லாது ஆக்குவதுதான் அவர்களின் திட்டம். எமது மக்களின் மனங்கள் தோற்றுவிட்டோம், இனிமேல் எதையும் எம்மால் செய்யமுடியாது எனும் இயலாமையினை முற்றாக உருவாக்கியதே அவன் பெற்ற முதல் வெற்றி. இன்று ஒரு சிலரைத் தவிர ஏனையவர்கள் இதுகுறித்துக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. சிலர் கவலைப்பட்டாலும், எமக்கேன் தேவையில்லாத வேலை என்று தம் பாட்டில் இருந்துவிடுகிறார்கள். 

இதனைத் தடுப்பதற்கு ஒன்றுபட்ட முயற்சி தேவை. அரசியலுக்கப்பால் தமிழர்கள் இனமாக ஒன்றிணைந்து போராட வேண்டும். 

ஆக்கிரமிப்பு நடக்கும் இடங்களில் கஜேந்திரக்குமாரின் கட்சியினரைத்தவிர வேறு ஒருவரையும் காண முடிவதில்லை. சுமந்திரன், சம்பந்தன், மாவை, சாணக்கியன், சுரேஷ், விக்கி, செல்வம், சித்தார்த்தன் போன்றோர் இதுபற்றி அக்கறைப்படப்போவதில்லை. ஒரு அடையாளத்திற்காகவாவது இவர்கள் அனைவரும் இப்பகுதிகளுக்குச் சென்று பத்திரிக்கையாளர் சந்திப்புக்களை ந‌டத்தி தமிழ் மக்களின் குரலாக இதனை வெளியே கொண்டுவரலாம். ஆனால் செய்யப்போவதில்லை. கொழும்பிலிருக்கும் வெளிநாட்டுத் தூதுவர்களுடன் இதுகுறித்துப் பேசலாம், ஆனால் செய்யப்போவதில்லை. 

சிங்களவர்கள் தமது மத அடையாளங்கள் என்று கோரும் அனைத்தையும் நாம் அழிக்க வேண்டும். எமது இருப்பை அழிக்க அவன் பொய்களைப் புனையும்போது, அந்தப் பொய்களை அழிப்பதைத்தவிர எமக்கு வேறு வழியில்லை. 

10 minutes ago, இணையவன் said:

இத் திரியில் உள்ள செய்திகளின் படி  இரண்டு விதமாக பௌத்த ஆக்கிரமிப்பை முன்னெடுத்துள்ளனர்.

முதலாவது வர்த்தமானி அறிவித்தல் மூலமாக சட்ட ரீதியாக உரிமை கொண்டாட முயல்கிறார்கள். இதனைச் சட்ட ரீரியாகவே முறியடிக்க வேண்டியது தமிழர் தரப்பு நிர்வாக/அரசியல் வாதிகளின் கடமை. இதன் மூலம் வரும் காலங்களில் ஆக்கிரமிப்பினை முளையிலேயே கிள்ள முடியும்.

இரண்டாவது புத்தர் சிலை வைத்தல். இது பிக்குகளுக்கு சட்டங்களுக்கு மேலான உரிமை உண்டு என்ற இறுமாப்பில் செய்யும் அராஜகம். இலங்கை அரசியல் அமைப்பில் இந்த அதியுயர் உரிமை பிக்குகளுக்கு இருக்கலாம். சட்டங்களில் எங்காவது இது உள்ளதா ? ஒவ்வொரு சட்ட வரைபுகளிலும் பிக்குகளுக்கு விதிவிலக்கு என்று குறிப்பிடப்பட்டுள்ளதா ? இதனையும் சட்ட ரீதியாக அணுகினால் பிக்குகளை வெளியேற்ற அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் அதே காவல்துறையை நிர்ப்பந்திக்கலாம் அல்லவா ?

உண்மை இணையவன்.

தமிழ் அரசியல்வாதிகளில் சட்டம் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். அரசியலில் இல்லாத சட்டவாளர்களும் இருக்கிறார்கள். இவர்கள் தான் இதனை ஆராய்ந்து முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். ஆனால், அவர்கள் செய்யப்போவதில்லை. அரசாங்கத்துடன் ஒரே படுக்கையில் படுக்கும் இவர்கள் தமது இலாபங்களுக்காகவே அரசியலில் இருக்கிறார்கள். தமது இலாபங்களுக்காக எமது இருப்பையும் இவர்கள் அடகுவைக்கத் தயங்கப்போவதில்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.