Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், நதீன் யூசிஃப்
  • பதவி, பிபிசி நியூஸ், கனடா
  • 28 நிமிடங்களுக்கு முன்னர்

கனடாவுக்கும் இந்தியாவுக்குமான உறவில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

கனடாவைச் சேர்ந்த சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இந்திய தூதரக அதிகாரியையும் கனடா வெளியேற்றியுள்ளது.

கனடாவின் குற்றச்சாட்டை இந்திய அரசு மறுத்துள்ளது.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில், கடந்த ஜூன் 18ஆம் தேதியன்று சீக்கிய குருத்வாராவுக்கு வெளியே நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவரது மரணத்திற்கும் இந்திய அரசுக்கும் இடையே ஒரு "நம்பகமான" தொடர்பு இருப்பதை கனடா உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது என்று ட்ரூடோ கூறினார்.

ஜஸ்டின் ட்ரூடோ பேசியது என்ன?

அண்மையில் இந்தியாவின் தலைநகர் புதுதில்லியில் நடந்த ஜி-20 மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோதியிடம் இந்த விவகாரத்தை எழுப்பியதாக கனடா பிரதமர் ட்ரூடோ கூறினார்.

"கனடா மண்ணில் ஒரு கனடா குடிமகன் கொல்லப்பட்டதன் பின்னணியில் எந்தவொரு வெளிநாட்டு அரசாங்கத்தின் தலையீடும் இருப்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது என்றும் அது தங்கள் நாட்டின் இறையாண்மையை மீறுவது," என ஜஸ்டின் ட்ரூடோ திங்கள் கிழமையன்று ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் கூறினார்.

"இது சுதந்திரமான, வெளிப்படையான மற்றும் ஜனநாயக சமூகங்களின் அடிப்படை விதிகளுக்கு முரணானது."

நிஜ்ஜார் கொலையில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று இந்தியா முன்பு மறுத்திருந்தது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

பட மூலாதாரம்,SIKH PA

படக்குறிப்பு,

கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதியன்று முகமூடி அணிந்த இரண்டு பேர் துப்பாக்கிகளை கொண்டு சுட்டதில், காரிலிருந்த நிஜ்ஜார் இறந்தார்

இந்திய தூதரக அதிகாரி வெளியேற்றம்

ட்ரூடோவின் கருத்தைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக இந்திய தூதரக அதிகாரி பவன் குமார் ராய், கனடாவிலிருந்து திங்களன்று வெளியேற்றப்பட்டதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இது குறித்து கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு பிபிசி கருத்து கேட்டுள்ளது..

நிஜ்ஜார் மரணம் குறித்து விசாரணை நடந்து வருவதன் காரணமாக, அதிக விவரங்களை வெளியே பகிரமுடியாது என மெலனி ஜோலி கூறினார்.

நிஜ்ஜார் மரணம் தொடர்பான வழக்கை விசாரித்த புலனாய்வு அதிகாரிகள் இந்த மரணத்தை ‘இலக்கு வைத்து தாக்கப்பட்டதாக’ வகைப்படுத்தியுள்ளனர்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பாக உலகின் பல பகுதிகளும் சீக்கியர்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர்

இந்தியா மறுப்பு

கனடா பிரதமரின் குற்றச்சாட்டை இந்திய வெளியுறவுத் துறை மறுத்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "கனடா பிரதமர் நாடாளுமன்றத்தில் கூறியதையும், அவர்களின் வெளிவிவகார அமைச்சரின் அறிக்கையையும் நாங்கள் நிராகரிக்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

"கனடாவில் எந்த ஒரு வன்முறைச் செயலிலும் இந்திய அரசின் தலையீடு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அபத்தமானது, உள்நோக்கம் கொண்டது. இதே போன்ற குற்றச்சாட்டுகளை கனடா பிரதமர் நமது (இந்திய) பிரதமரிடம் முன்வைத்தார். அவை முற்றிலும் நிராகரிக்கப்பட்டன."

"கனடாவில் கொலைகள், மனித கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இடம் கொடுக்கப்பட்டிருப்பது புதிதல்ல. இதுபோன்ற செயல்களுடன் இந்தியாவை தொடர்புபடுத்தும் எந்த முயற்சியையும் நாங்கள் நிராகரிக்கிறோம்."

"தங்கள் மண்ணில் இருந்து செயல்படும் அனைத்து இந்திய விரோதக் கூறுகளுக்கும் எதிராக விரைவான மற்றும் பயனுள்ள சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கனடா அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்." என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நிஜ்ஜார் கொலை வழக்கு

கனடாவின் வான்கூவர் நகருக்கு கிழக்கே 30 கி.மீ தொலைவில் உள்ள சர்ரே என்ற ஊரிலுள்ள குருநானக் சீக்கிய குருத்வாராவின் பரபரப்பான கார் பார்க்கிங்கில் வைத்து கடந்த ஜூன் மாதத்தில் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார்.

முகமூடி அணிந்த இரண்டு பேர் துப்பாக்கிகளை கொண்டு சுட்டதில், காரிலிருந்த நிஜ்ஜார் இறந்தார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் மேற்கு மாகாணத்தில் ஒரு முக்கிய சீக்கியத் தலைவராக இருந்த அவர், காலிஸ்தான் அமைய வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் தீவிர பரப்புரைகளை மேற்கொண்டிருந்தார்.

இவரது செயல்பாடு காரணமாக கடந்த காலங்களில் அச்சுறுத்தல்களுக்கு ஆளானதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரிவினைவாத போராளிக் குழுவுக்கு தலைமை தாங்கிய ஒரு பயங்கரவாதி என்று நிஜ்ஜார் குறித்து இந்தியா முன்பு விவரித்திருந்திருந்தது. ஆனால் அவரது ஆதரவாளர்கள், இந்தியாவின் குற்றச்சாட்டுகள் "ஆதாரமற்றது" என்று அழைக்கின்றனர்.

‘இந்தியா ஒத்துழைக்க வேண்டும்’

நிஜ்ஜார் மரணம் குறித்து கனடா தனது கவலைகளை இந்தியாவில் உள்ள உயர்மட்ட பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்புகளிடம் தெரிவித்துள்ளதாக ட்ரூடோ கூறினார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆகியோரிடமும் அவர் இது குறித்து எடுத்துரைத்தார்.

"இந்த வழக்கில் உண்மை நிலையை வெளிச்சம் போட்டுக் காட்ட இந்திய அரசு, கனடாவுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று நான் உறுதியாக கேட்டுக் கொள்கிறேன்," என்று ட்ரூடோ கூறினார்.

"நிஜ்ஜார் கொல்லப்பட்ட சம்பவம் கனடா மக்களை கோபமடையச் செய்துள்ளது, சிலர் தங்கள் பாதுகாப்பு குறித்து அச்சமடைந்துள்ளனர்" என்று ட்ரூடோ கூறினார்.

உலக சீக்கிய அமைப்பு உட்பட கனடாவில் உள்ள சில சீக்கிய குழுக்கள் பிரதமரின் அறிக்கையை வரவேற்றுள்ளன.

சீக்கிய சமூகத்தினர் மத்தியில் ஏற்கெனவே பரவலாக நம்பப்பட்டதை ட்ரூடோ உறுதிப்படுத்தினார் என்று அந்த அமைப்புகள் கூறியுள்ளனர்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

பட மூலாதாரம்,JUSTIN TRUDEAU

படக்குறிப்பு,

ஜி-20 கூட்டத்தின் போது இரு தலைவர்களும் சங்கடமாக காணப்பட்டனர்

இந்தியா - கனடா உறவு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கியர்கள், கனடாவில் 14 லட்சம் முதல் 18 லட்சம் வரையிலான எண்ணிக்கையில் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திற்கு வெளியே சீக்கியர்கள் அதிக எண்ணிக்கையில் கனடாவில் உள்ளனர்.

கடந்த வாரம் இந்தியாவில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டின் போது மோதியுடனான பதற்றமான சந்திப்புக்குப் பிறகு நேற்று ட்ரூடோ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மோதி - ட்ரூடோ சந்திப்பின் போது, கனடா நாட்டில் இயங்கும் சீக்கிய பிரிவினைவாத இயக்கத்தை குறிப்பிட்டு, "பயங்கரவாத சக்திகளின் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை" அடக்க கனடா போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று மோதி குற்றம் சாட்டினார், என ஜி20 மாநாட்டின் போது இந்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தியாவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளையும் கனடா சமீபத்தில் நிறுத்தியது.

அது ஏன் என்பது குறித்த சில விவரங்களைக் கனடா தெரிவித்தது. ஆனால் இந்த விவகாரத்தில் "சில அரசியல் நிகழ்வுகளை" இந்திய தரப்பு மேற்கோள் காட்டியிருந்தது.

சமீபத்திய மாதங்களில் எதிர்பாராத விதமாக இறந்த மூன்றாவது முக்கிய சீக்கியர் நிஜ்ஜார் ஆவார்.

பிரிட்டனில், காலிஸ்தான் விடுதலைப் படையின் தலைவர் என்று கூறப்பட்ட அவதார் சிங் கண்டா, ஜூன் மாதம் பர்மிங்காமில் மர்மமான முறையில் இறந்தார்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரான லாகூரில் இந்தியாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட பரம்ஜித் சிங் பஞ்ச்வார் கடந்த மே மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

https://www.bbc.com/tamil/articles/cyd9zgrjymqo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கனடாவில் சீக்கிய மததலைவர் சுட்டுக்கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்திய அரசாங்கம் - கனடா பரபரப்பு குற்றச்சாட்டு- நம்பத்தகுந்த ஆதாரங்கள் உள்ளதாக தெரிவிப்பு-இந்திய இராஜதந்திரியையும் வெளியேற்றியது

Published By: RAJEEBAN

19 SEP, 2023 | 06:24 AM
image
 

கனடாவில் சீக்கிய மதத்தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் சுட்டுக்கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்திய அரசாங்கமே உள்ளது என்பதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் உள்ளதாக  கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ குற்றம்சாட்டியுள்ளார்.

ஜூன் மாதம் 18ம் திகதி நிஜார் பிரிட்டிஸ் கொலம்பியாவில் சீக்கிய ஆலயத்திற்கு வெளியே சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த கொலைக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்புள்ளதை புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடித்துள்ளன என கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஜி20 உச்சிமாநாட்டின் போது இந்த விடயம் குறித்து இந்திய பிரதமருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாக கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.

கனடாவில் கனடா பிரஜையின் கொலையில் வெளிநாட்டு அரசாங்கத்திற்கு தொடர்புள்ளதை ஏற்றுக்கொள்ளமுடியாது இது எங்கள் இறைமையை மீறும் செயல் என கனடா பிரதமர் பொதுச்சபையில் தெரிவித்துள்ளார்.

இது சுதந்திரமான வெளிப்படையான ஜனநாய சமூகங்கள் செயற்படும் விதத்திற்கு முரணானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில வாரங்களாக கனடா பிரஜையான ஹர்தீப் சிங் நிஜார் சுட்டுக்கொல்லப்பட்டமைக்கும் இந்திய முகவர்களுக்கும் தொடர்புள்ளதாக கிடைத்த நம்பதகுந்த குற்றச்சாட்டுகளை கனடாவின் பாதுகாப்பு தரப்பினர் ஆராய்ந்துவருகின்றனர்-எங்கள் அரசாங்கம் குற்றவாளிகளை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகயையும் எடுக்கும் எனவும் கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த குற்றச்சாட்டுகளை அடிப்படையாக வைத்து இந்தியாவின் சிரேஸ்ட இராஜதந்திரியொருவரை கனடா தனது நாட்டிலிருந்து வெளியேற்றியது.

கனடா வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜொலி இதனை உறுதி செய்துள்ளார்.

கனடாவிலிருந்து வெளியேற்றப்பட்ட இந்திய இராஜதந்திரி அங்குள்ள இந்திய புலனாய்வு பிரிவின் தலைவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/164904

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்லது   நடக்கட்டும்” முடிவுகளை ஆவலுடன் எதிர்பாரக்கிறேன். 

பிரதமர் மோடி  மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கி பிரச்சனைகளுக்கு முடிவு காண வேண்டும் 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மரியாதையும் கண்ணியமும் நிறைந்த வாழ்வை  மாநிலங்களுக்கு பிரதமர் மோடி வழங்கி பிரச்சனைகளுக்கு முடிவு காண வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் யார்? அவரது கொலையால் இந்தியா - கனடா உறவில் விரிசல் ஏன்?

ஹர்தீப் சிங் நிஜ்ஜார்

பட மூலாதாரம்,SIKH PA

கட்டுரை தகவல்
  • எழுதியவர், நாடின் யூசிஃப்
  • பதவி, பிபிசி நியூஸ், டொரோண்டோ
  • 19 செப்டெம்பர் 2023, 06:59 GMT
    புதுப்பிக்கப்பட்டது 2 நிமிடங்களுக்கு முன்னர்

கடந்த ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு குருத்வாராவுக்கு வெளியே சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

இந்த மரணம் அவரது ஆதரவாளர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சீக்கிய பிரிவினைவாதிகளுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையே உலகளாவிய பதற்றத்தையும் ஏற்படுத்தியது.

சர்ரே நகரில் உள்ள குருநானக் சீக்கிய குருத்வாராவின் பரபரப்பான வாகன நிறுத்துமிடத்தில், ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை முகமூடி அணிந்த இரண்டு பேர் அவரது டிரக்கில் வைத்து சுட்டுக் கொன்றனர்.

பல மாதங்கள் ஆகியும் இந்தக் கொலையில் ஈடுபட்டவர்களைக் கண்டறிய முடியவில்லை. இந்தப் புதிரான கொலை கனடாவிலும், சர்வதேச அளவிலும் எதிரொலிக்கிறது. நூற்றுக்கணக்கான சீக்கிய பிரிவினைவாதிகள் டொராண்டோவிலும் லண்டன், மெல்போர்ன் மற்றும் சான் பிரான்சிஸ்கோ போன்ற நகரங்களிலும் ஜூலை தொடக்கத்தில், இந்திய அரசை எதிர்த்து போராட்டங்களை நடத்தினர். இந்த அரசுதான் நிஜ்ஜாரின் கொலைக்கு காரணம் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

இப்போது நிஜ்ஜாரின் மரணத்துக்குப் பின்னணியில் இந்தியா இருப்பதாக ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியுள்ளார். நிஜ்ஜாரின் மரணத்திற்கும் இந்திய அரசின் ஏஜென்ட்களுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக "நம்பகமான அம்சங்களை" கனடா உளவுத்துறை அடையாளம் கண்டுள்ளது என்று அவர் கூறினார்.

 
கனடா பிரதமர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆனால் இந்த கொலையில் எந்த தொடர்பும் இல்லை என்று இந்திய அரசு மறுத்துள்ளது.

45 வயதான நிஜ்ஜாரின் கொலையைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் கொந்தளிப்பு காரணமாக, இந்தியாவின் மக்கள்தொகையில் சுமார் 2% இருக்கும் மத சிறுபான்மையினரான சீக்கியர்களுக்கு தனி நாடு வேண்டும் என சில குழுக்கள் கோரி வருவது மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

1980 களில் பஞ்சாப் மாநிலத்தில் பிரிவினை கோரிக்கை உச்சத்தில் இருந்தது. இதனால் பல வன்முறை தாக்குதல்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.. ஆயுதப் படைகள் இதற்கு எதிராக சிறப்பு நடவடிக்கைகளை நடத்திய பின்னர் அது நீர்த்துப் போனது. ஆனால் புலம்பெயர் சமூகத்தில் உள்ள ஆதரவாளர்கள் தனி நாடுக்கான கோரிக்கைகளைத் தொடர்ந்து எழுப்பி வந்தனர். இது சமீபத்திய ஆண்டுகளில் தீவிரமடைந்துள்ளது.

காலிஸ்தான் தனிநாடு கோரிக்கைக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பஞ்சாப் உள்பட நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளும் வன்முறை மற்றும் பிரிவினைவாதத்தை கண்டித்துள்ளன.

 
காலிஸ்தான் போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

யார் இந்த நிஜ்ஜார்?

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் ஒரு முக்கிய சீக்கிய பிரமுகர் நிஜ்ஜார். தனி காலிஸ்தான் வேண்டும் எனக் குரல் கொடுத்தவர். அவரது செயற்பாட்டினால் கடந்த காலங்களில் அவருக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர் ஒரு பயங்கரவாதி என்றும், தீவிரவாத பிரிவினைவாதக் குழுவை வழிநடத்தினார் என்றும் இந்தியா கூறியது. ஆனால் அவரது ஆதரவாளர்கள் அந்தக் குற்றச்சாட்டுகளை "ஆதாரமற்றது" என்று கூறுகின்றனர்.

கனடா புலனாய்வாளர்கள் நிஜ்ஜாரின் கொலைக்கான நோக்கம் என்ன என்று இன்னும் கண்டறியவில்லை. சந்தேக நபர்களையும் அடையாளம் காணவில்லை. ஆனால் இந்தக் கொலை “குறிவைக்கப்பட் சம்பவம்” என்று அவர் கூறுகின்றனர்.

ராயல் கனடியன் காவல்துறையினர் இந்தக் கொலை தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

 
கனடா பிரதமர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

பஞ்சாப் மாநிலத்திற்கு வெளியே அதிக எண்ணிக்கையில் சீக்கியர்கள் வசிப்பது கனடாவில்தான்.

பஞ்சாப் மாநிலத்திற்கு வெளியே அதிக எண்ணிக்கையில் சீக்கியர்கள் வசிப்பது கனடாவில்தான். கடந்த ஜூலை 8 அன்று, நூற்றுக்கணக்கானோர் நிஜ்ஜாரின் கொலையைக் கண்டித்து டோராண்டோவில் இந்தியாவின் துணைத் தூதரக கட்டடத்துக்கு வெளியே போராட்டம் நடத்தினர். இந்திய அரசுக்கு ஆதரவாகவும் சிறிய அளவில் போராட்டம் நடந்தது.

இரு தரப்பினரும் பல மணி நேரம் ஒருவரையொருவர் எதிர்த்துக் கூச்சலிட்டனர். தடுப்பை உடைக்க முயன்ற ஒரு காலிஸ்தான் சார்பு ஆர்ப்பாட்டக்காரர் கைது செய்யப்பட்டார்.

இந்தப் போராட்டத்தின் போது சில சுவரொட்டிகளில் "கில் இந்தியா" என்ற வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன. கனடாவில் உள்ள இந்திய தூதர்களை "கொலையாளிகள்" என்று கூறியது. இதனால் கோபமடைந்த இந்திய அரசு கனடா தூதரை வரவழைத்துக் கண்டித்தது.

கனடாவின் உலக சீக்கிய அமைப்பின் செய்தித் தொடர்பாளரான பல்ப்ரீத் சிங், காலிஸ்தான் இயக்கம் சமீபத்திய தசாப்தங்களில் செயலற்றதாகவும், அமைதியானதாகவும் இருக்கிறது என தாம் நம்புவதாகக் கூறினார். .

ஆனால் இந்த புதுவேகம் ஏற்பட்டாலும் கூட, பஞ்சாப் மக்கள் சீக்கியர்களுக்கு தனி நாடு என்ற எண்ணத்தில் இருந்து "நகர்ந்து விட்டனர்" என்று முன்பு நிஜ்ஜாரை பேட்டி கண்ட பத்திரிகையாளரும் வானொலி தொகுப்பாளருமான குர்ப்ரீத் சிங் கூறினார்.

கனடா சீக்கியர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கனடாவுக்கு வெளியே சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் நாடு கனடா.

"கனடாவில் நாம் பார்ப்பது காலிஸ்தானை ஆதரிக்கும் சீக்கிய சமூகத்தின் சிறுபான்மைக் குரல்" என்று அவர் கூறினார்.

சமீபத்திய மாதங்களில் எதிர்பாராத விதமாக இறந்த மூன்றாவது சீக்கியர் நிஜ்ஜார்.

பிரிட்டனில் காலிஸ்தான் விடுதலைப் படையின் தலைவர் என்று கூறப்பட்ட அவதார் சிங் கந்தா கடந்த ஜூன் மாதம் பர்மிங்காமில் இறந்தார். இது "மர்மமானது" என்று கூறப்பட்டது. அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று சிலர் நம்புகின்றனர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் தலைநகர் லாகூரில் மே மாதம் பயங்கரவாதியாக இந்தியாவால் அறிவிக்கப்பட்ட பரம்ஜித் சிங் பஞ்வார் சுட்டுக் கொல்லப்பட்டார்.

காலிஸ்தான் அமைப்பதில் ஒருமித்த கருத்தை அளவிடும் நோக்கில், உலகளாவிய தொடர் வாக்குகளின் ஒரு பகுதியாக சர்ரேயில் செப்டம்பர் மாதம் வாக்கெடுப்பு ஒன்றை நடத்த நிஜ்ஜார் திட்டமிட்டதாக பல்பிரீத் சிங் கூறினார்.

கடந்த ஆண்டு 160,000 சீக்கியர்கள் வசிக்கும் ஒன்டாரியோவின் பிராம்ப்டன் நகரில் கடந்த ஆண்டு இதேபோன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

வாக்கெடுப்பின் முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை, ஆனால் வாக்களித்த சுமார் 100,000 பேர் இந்திய அரசாங்கத்தின் கோபத்துக்கு ஆளானதாக அவர் கூறினார்.

வாக்கெடுப்பைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவு அமைச்சகம், "கனடாவில் வெறுப்புக் குற்றங்கள், மதவெறி வன்முறை, இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் ஆகியவை அதிகரித்திருக்கின்றன" என எச்சரித்தது. இருப்பினும் வாக்கெடுப்பு பற்றி அதில் குறிப்பிடவில்லை.

 
கனடா பிரதமர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

காலிஸ்தான் இயக்கம் மற்றும் நிஜ்ஜார் போன்ற காலிஸ்தான் ஆதரவாளர்களின் மரணம் குறித்து வெவ்வேறு கதைகள் உள்ளன.

சில இந்திய விமர்சகர்கள் நிஜ்ஜாரின் மரணத்திற்குக் காரணம் கனடாவில் உள்ள சீக்கிய அமைப்புகளுக்கு இடையே உள்ள உள் போட்டிகள்தான் என்று குறிப்பிடுகின்றனர்.

கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் "இந்திய எதிர்ப்பு" விளம்பரங்கள் மூலம் இந்து கோவில்களை சேதப்படுத்தியதாகவும், மார்ச் மாதம் நடந்த போராட்டத்தின் போது ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரக அலுவலகங்களை தாக்கியதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆனால் இந்திய அரசு சீக்கிய சமூகத்தையும் தனி காலிஸ்தான் ஆதரவாளர்களையும் இழிவுபடுத்துவதற்காக ஊடகங்கள் மூலம் தவறான தகவல்களை பரப்புவதாக காலிஸ்தான் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை இந்தியா மறுத்துள்ளது.

இந்தியா - கனடா உறவில் விரிசல்

இரு நாடுகளும் நீண்டகால ராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ளன, இருப்பினும் சமீபத்திய மாதங்களில் உறவுகளில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.

செப்டம்பரில் இந்தியாவுடனான ஒரு முக்கிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுக்களை நிறுத்தி வைத்துள்ளதாக கனடா அறிவித்தது. மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான G20 கூட்டத்தில், கனடா மண்ணில் "இந்திய எதிர்ப்பு" உணர்வுகளைத் தணிக்க கனடா போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று பிரதமர் நரேந்திர மோதி குற்றம் சாட்டினார்.

https://www.bbc.com/tamil/articles/cy0gzg1n3z4o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சீக்கிய இனத்தவரின் வாக்குகளை முன்வைத்து ஜஸ்ட்டின் இதனைச் செய்திருந்தாலும், சீக்கியரின் விடுதலைக்காக அவரது அரசு கொடுத்துவரும் தார்மீக ஆதரவினை நான் வவேற்கிறேன். பஞ்சாப்பின் விடுதலை ஈழத்தமிழினம் உட்பட பல சிறுபான்மையினங்களுக்கு விடுதலைக்கான பாதையினைத் திறக்கும். 

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கனடா தூதர் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு: காலிஸ்தான் சர்ச்சையில் இந்தியா பதிலடி

19 SEP, 2023 | 03:42 PM
image
 

புதுடெல்லி: காலிஸ்தான் குழு தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியத் தூதரக அதிகாரியை கனடா வெளியேறும்படி உத்தரவிட்டுள்ள நிலையில் அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவுக்கான கனடா தூதரக அதிகாரியை 5 நாட்களுக்குள் நாட்டைவிட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான கனடா துணை தூதரை அழைத்த வெளியுறவு அமைச்சகம், இந்தியாவில் உள்ள கனடா தூதரை வெளியேற்றும் முடிவைப் பகிர்ந்தது.

சர்ச்சையின் பின்னணி: இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என காலிஸ்தான் பயங்கரவாதிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதனை வலியுறுத்தி கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிரான செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். கனடாவில் உள்ள இந்திய தூதரகம் முன்பு, கடந்த மார்ச் மாதம் அவர்கள் போராட்டம் நடத்தினர்.

காலிஸ்தான் பயங்கரவாதிகளின் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனடா அரசிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் கனடாவில் காலிஸ்தான் டைகர் படைப்பிரிவின் தலைவரும், தீவிரவாதியுமான ஹர்தீப் சிங் நிஜார் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் கனடாவில் உள்ள இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் டொரான்டோவில் உள்ள துணைத் தூதர் அபூர்வா வஸ்த்தவா ஆகியோர் முக்கிய பங்காற்றியுள்ளனர் என அவர்களின் போட்டோக்களுடன் கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டினர்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, "இந்திய அரசாங்க முகவர்களுக்கும் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கொலைக்கும் தொடர்பு இருப்பதற்கான நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் உள்ளன" என்று கூறினார். இதனை இந்தியா அபத்தமானது என்றும் உள்நோக்கம் கொண்டது என்றும் தெரிவித்துள்ளது. இந்தியாவின் மூத்த தூதரக அதிகாரியை கனடா வெளியேற்றிய நிலையில் அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவுக்கான கனடா தூதரை வெளியேறும்படி இந்தியா கூறியுள்ளது.

https://www.virakesari.lk/article/164952

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சீக்கிய காலிஸ்தான் ஆதரவாளரை கனடாவரை சென்று போட்டுத்தள்ளும் றோ….

பிரதமரை கொன்றதாக இந்திய நீதிமன்று கூறும் தமிழ் பிரிவினைவாதியின் பெயரை, படத்தை தமிழ் நாட்டில் பட்டி தொட்டி எங்கும் கொண்டு செல்ல புகழ்பாட அனுமதிக்கிறதே!

ரோவுக்குத்தான் தமிழர் மீது எத்துணை பாசம், பரிவு🤣.

Posted

இந்தியாவின் எல்லை தாண்டிய பயங்கரவாத செயற்பாடுகளில் இதுவும் ஒன்று. 

பம்பாய் குண்டு வெடிப்புகளின் (1993) சூத்திரதாரி, தாவூட் இப்ராகிம் பக்கத்து நாடான பாகிஸ்தானில் எல்லா வளங்களுடன் சொகுசாக வாழ்கின்றார், அவரை பாகிஸ்தான் சென்று பிடிக்கவோ தண்டிக்கவோ துப்பில்லாத இந்திய அரசு, அமைதியான நாடான கனடவில்  வந்து தன் கைவரிசையைக் காட்டுகின்றது. ருடோ போன்ற முதுகெலும்பில்லாத ஒருவர் ஆட்சி செய்தால் இப்படித்தான் நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, goshan_che said:

சீக்கிய காலிஸ்தான் ஆதரவாளரை கனடாவரை சென்று போட்டுத்தள்ளும் றோ….

பிரதமரை கொன்றதாக இந்திய நீதிமன்று கூறும் தமிழ் பிரிவினைவாதியின் பெயரை, படத்தை தமிழ் நாட்டில் பட்டி தொட்டி எங்கும் கொண்டு செல்ல புகழ்பாட அனுமதிக்கிறதே!

ரோவுக்குத்தான் தமிழர் மீது எத்துணை பாசம், பரிவு🤣.

திரிக்கு திரிக்கு திரி நீங்கள் தமிழ்நாட்டின் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியையும் அதன் ஆதரவாளர்களையும் தனிப்பட்ட வன்மத்துடன் காவிவந்து குறிவைத்து தாக்குவதுபோல் தெரிகிறது தலை.. உங்களுக்கு அந்த கட்சியின் ஈழ ஆதரவாளர்கள் பிரச்சினை என்றால் அதில் ஒரு நியாயம் இருக்கு.. அவர்கள் குறித்து நீங்கள் விமர்சிக்கலாம்.. அது தவறில்லை..

ஆனால் வேண்டுமென்றே ஈழத்தமிழர்களுக்கும் அந்தகட்சியின் லட்சக்கணக்கான தமிழ்நாட்டு ஆதரவாளர்களுக்கும் இடையில் சிண்டுமுடிய வெளியே இணையத்தளங்களில் வேண்டுமென்றே வம்பெழுதும் கருங்காலி தமிழர் விரோத விசப்பாம்புகள் செயல்படுவதுபோல் யாழ் இணையத்திலும் செயல்படுவதை யாழ் இணையம் அனுமதிப்பது சரியா என்று தெரியவில்லை.. ஆகக்குறைந்தது குறித்த கட்சி குறித்த பொய்யான கற்பனைகளை சந்தேகம் என்று சொல்லாமல் உண்மை என்று எழுதுபவற்றை ஆவது தணிக்கை செய்யலாம் நிர்வாகம்.. இதனால் 

இவர்களுக்கும் திமுகாவை ஈழத்தமிழருடன் கோத்துவிட்ட நாம்தமிழர் கட்சியின் ஈழ ஆதரவாளர்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம்..?

 

 

29 minutes ago, நிழலி said:

இந்தியாவின் எல்லை தாண்டிய பயங்கரவாத செயற்பாடுகளில் இதுவும் ஒன்று. 

பம்பாய் குண்டு வெடிப்புகளின் (1993) சூத்திரதாரி, தாவூட் இப்ராகிம் பக்கத்து நாடான பாகிஸ்தானில் எல்லா வளங்களுடன் சொகுசாக வாழ்கின்றார், அவரை பாகிஸ்தான் சென்று பிடிக்கவோ தண்டிக்கவோ துப்பில்லாத இந்திய அரசு, அமைதியான நாடான கனடவில்  வந்து தன் கைவரிசையைக் காட்டுகின்றது. ருடோ போன்ற முதுகெலும்பில்லாத ஒருவர் ஆட்சி செய்தால் இப்படித்தான் நடக்கும்.

இதை இஸ்ரேல் ஈரானில் லெபனானில் செய்தபோது உலகமே கண்களை மூடி இருந்தது..

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • Like 1
  • Thanks 1
Posted
4 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

 

 

 

இதை இஸ்ரேல் ஈரானில் லெபனானில் செய்தபோது உலகமே கண்களை மூடி இருந்தது..

இதை இலங்கை பிரான்சில் செய்த போதும், கண்களை மூடிக் கொண்டு தான் இருந்தது

https://www.tamilguardian.com/content/assassination-tamils-paris-remains-unsolved?fbclid=IwAR1xpbf6flig47gJoTou3MQUfV3JhYBWjYN6MVqTl_nBfByTMdZvOkGP0Js#:~:text=Reacting to the killings%2C the,also hopes to stop the

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

திரிக்கு திரிக்கு திரி நீங்கள் தமிழ்நாட்டின் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியையும் அதன் ஆதரவாளர்களையும் தனிப்பட்ட வன்மத்துடன் காவிவந்து குறிவைத்து தாக்குவதுபோல் தெரிகிறது தலை.. உங்களுக்கு அந்த கட்சியின் ஈழ ஆதரவாளர்கள் பிரச்சினை என்றால் அதில் ஒரு நியாயம் இருக்கு.. அவர்கள் குறித்து நீங்கள் விமர்சிக்கலாம்.. அது தவறில்லை..

ஆனால் வேண்டுமென்றே ஈழத்தமிழர்களுக்கும் அந்தகட்சியின் லட்சக்கணக்கான தமிழ்நாட்டு ஆதரவாளர்களுக்கும் இடையில் சிண்டுமுடிய வெளியே இணையத்தளங்களில் வேண்டுமென்றே வம்பெழுதும் கருங்காலி தமிழர் விரோத விசப்பாம்புகள் செயல்படுவதுபோல் யாழ் இணையத்திலும் செயல்படுவதை யாழ் இணையம் அனுமதிப்பது சரியா என்று தெரியவில்லை.. ஆகக்குறைந்த குறித்த கட்சி குறித்த பொய்யான கற்பனைகளை சந்தேகம் என்று சொல்லாமல் உண்மை என்று எழுதுபவற்றை ஆவது தணிக்கை செய்யலாம் நிர்வாகம்.. இதனால்

இவர்களுக்கும் திமுகாவை ஈழத்தமிழருடன் கோத்துவிட்ட நாம்தமிழர் கட்சியின் ஈழ ஆதரவாளர்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம்..?

இதுக்கு விளக்கம் இன்னொரு திரியில் கொடுத்துள்ளேனே?

அந்த திரியில் இப்படி செய்வது “பெருமை அல்ல கடமை” என்று எழுதிய உங்களை கோட் செய்து எழுதிய பதிலை வாசிக்கவும்.

Posted
5 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

 

 

 

இதை இஸ்ரேல் ஈரானில் லெபனானில் செய்தபோது உலகமே கண்களை மூடி இருந்தது..

இவற்றை விட, இப்படியான செயல்களுக்கு அமெரிக்கா தான் முன்னனி வகிக்கின்றது. CIA  யும் KGB / இப்ப இது FSB) யும் இவற்றில் முன்னிலை வகிக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியா தேடிய நபர்களை கனடா, பாகிஸ்தானில் சுட்டுக் கொன்றது யார்? எப்படி?

ஹர்தீப் சிங் நிஜ்ஜார்

பட மூலாதாரம்,FB/VIRSA SINGH VALTOHA

படக்குறிப்பு,

சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜுன் மாதம் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், அன்ஷுல் சிங்
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 19 செப்டெம்பர் 2023, 12:26 GMT
    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கடந்த ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு குருத்துவராவுக்கு வெளியே சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

சர்ரே நகரில் உள்ள குருநானக் சீக்கிய குருத்வாரா சாஹிப் வாகனம் நிறுத்தும் இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த கொலையை உறுதி செய்த போலீசார், அடையாளம் தெரியாத இரண்டு பேர் நிஜ்ஜாரை சுட்டுக் கொன்றதாகத் தெரிவித்தனர்.

நிஜ்ஜார் சர்ரேயில் உள்ள குரு நானக் சீக்கிய குருத்வாரா சாஹிப்பின் தலைவராகப் பதவி வகித்தார். அவர் இந்திய அரசால் தேடப்படும் நபர்களின் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்.

இந்த கொலைக்கு சிரோமணி அகாலிதளத்தின் முன்னாள் எம்எல்ஏவும் அக் கட்சியின் செய்தி தொடர்பாளருமான விர்சா சிங் வால்டோஹா உள்பட பலர் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

அவர் தனது ஃபேஸ்புக் பதிவில், "நிஜ்ஜார் ஒரு சமூகத்தின் மத உறுப்பினராகவும், குருத்வாராவின் தலைவராகவும் இருந்தார். இந்த சம்பவம் எப்படி, ஏன் நடந்தது என்பதை கண்டறிய ஆதாரங்களை சேகரித்து வருகிறோம்," எனத்தெரிவித்துள்ளார்.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார்

பட மூலாதாரம்,BBC/PARDEEP SHARMA

படக்குறிப்பு,

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள பார் சிங் புரா கிராமத்தில் உள்ள இந்த வீட்டில் தான் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் பெற்றோர்கள் வசித்து வருகின்றனர்.

யார் இந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார்?

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள பார் சிங் புரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர்.

இந்திய அரசு இப்படித் தான் அவரைப் பற்றிச் சொல்கிறது:

நிஜ்ஜார் காலிஸ்தான் புலிப் படையில் உறுப்பினராக இருந்தார். காலிஸ்தான் புலிப்படையினர் எப்படிச் செயல்படுவது என்பது குறித்தும் நெட்வொர்க்கிங் குறித்தும் பயிற்சி அளிப்பது மற்றும் நிதி உதவி அளிப்பதில் அவர் தீவிரமாக ஈடுபட்டார்.

பஞ்சாப் மாநில அரசு என்ன சொல்கிறது?

நிஜ்ஜாரின் சொந்த கிராமமான பார் சிங் புராவில் உள்ள நிலங்கள் தேசிய புலனாய்வு முகமையால் (என்ஐஏ) கைப்பற்றப்பட்டன. 2020ல் தனி காலிஸ்தான் தேசத்திற்கான 'சீக்கிய வாக்கெடுப்பு 2020' என்ற ஆன்லைன் பிரச்சாரத்தில் நிஜ்ஜார் ஈடுபட்டார். இந்த பிரச்சாரத்தை இந்தியாவில் தடைசெய்யப்பட்ட 'ஜஸ்டிஸ் ஃபார் சிக்ஸ்' (சீக்கியர்களுக்கு நீதி வேண்டும்) என்ற அமைப்பு நடத்தியது.

நிஜ்ஜார் 1997 இல் கனடாவை அடைந்தார். அங்கு தனது தொடக்க காலத்தில் அவர் பிளம்பர் ஆக வேலை பார்த்தார்.

கொரோனா லாக்டவுனுக்கு முன்பு அவரது பெற்றோர் சொந்த கிராமத்திற்கு திரும்பினர்.

இந்திய புலனாய்வு அமைப்பான என்ஐஏவின் கூற்றின்படி, நிஜ்ஜார் 2013-14ல் பாகிஸ்தானுக்குச் சென்றார் என்பதுடன் அங்கு அவர் காலிஸ்தான் புலிப்படைத் தலைவர் ஜகத் சிங் தாராவைச் சந்தித்தார் என்று தெரியவருகிறது.

இதற்கிடையில், அவர் தொடர்ந்து இந்திய அரசின் கண்காணிப்பில் இருந்து வந்தார். ஹர்தீப் சிங் நிஜ்ஜார், இந்தியாவின் தேடப்படும் நபர்கள் பட்டியலில் வெளிநாட்டில் கொலை செய்யப்பட்ட முதல் நபர் அல்ல.

நிஜ்ஜார் முதல் ஜாகூர் மிஸ்திரி வரை இப்படிப்பட்டவர்களின் பட்டியல் நீளமானது.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த பலரும் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.

ஜூலை 2020 இல், இந்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

இந்த அறிவிப்பில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் ஒன்பது 'பயங்கரவாதிகள்' பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அந்த அறிவிப்பில் இடம்பெற்றுள்ள ஒருவர் பஞ்ச்வாட் என்கிற பரம்ஜித் சிங் பஞ்ச்வாட்.

பஞ்சாபின் டார்ன் தரனில் பிறந்த பரம்ஜித் சிங், இந்திய அரசால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான 'காலிஸ்தான் கமாண்டோ படை'யின் முக்கியத் தலைவராக இருந்தார்.

பரம்ஜித் சிங் மற்றும் காலிஸ்தான் கமாண்டோ படைகள் இந்த 'பயங்கரவாத தாக்குதல்களில்' ஈடுபட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜூன், 1988ல் சில அரசியல்வாதிகளின் கொலை.

ஃபிரோஸ்பூரில் 10 ராய் சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.

1988 மற்றும் 1999 ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்புகள்.

லாகூரில் நடந்த படுகொலை

இந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தானின் லாகூரில் பரம்ஜித் சிங் பஞ்ச்வாட் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மே மாதம் ஒரு நாள் காலை நேரத்தில், பஞ்ச்வாட் நடைபயிற்சிக்கு சென்றபோது அடையாளம் தெரியாத ஆசாமிகளால் சுடப்பட்டார்.

பாகிஸ்தானின் பஞ்சாப் காவல்துறையின் கூற்றுப்படி, "பரம்ஜித் சிங் பஞ்ச்வாட் ஒரு துப்பாக்கி ஏந்திய நபரால் தலையில் சுடப்பட்டார். மேலும் அவர் மருத்துவமனைக்குச் சென்றதும் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்," என்று தெரியவருகிறது.

இந்த தாக்குதலில் அவரது காவலரும் காயமடைந்து பின்னர் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார்
படக்குறிப்பு,

கடந்த மே மாதம் பரம்ஜித் சிங் பஞ்ச்வாட் வீட்டு வாசலில் நடந்த தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.

அல் பாதர் முஜாகிதீன் என்ற தீவிரவாத அமைப்பின் தலைவரும், இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் பல்வேறு தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டுவந்தவருமான சையத் காலித் ரஜா, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் படுகொலை செய்யப்பட்டார்.

கராச்சி நகரைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஃபைசுல்லா கானின் கருத்துப்படி, சையத் காலித் ரஜா கராச்சியில் வாழும் பிஹாரி சமூகத்தைச் சேர்ந்தவர்.

"90 களின் முற்பகுதியில், ஆஃப்கானிஸ்தானில் அல் பாதர் அமைப்பின் பயிற்சி முகாம்களில் பயிற்சி பெற்று, இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் இந்திய வீரர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் செயல்களில் காலித் ரஜா ஈடுபட்டார். ஆனால் 1993 இல் பாகிஸ்தானுக்குத் திரும்பிய பிறகு, அவர் பெஷாவருக்கு அனுப்பிவைக்கப்பட்டார். பின்னர் அந்த அமைப்பின் முக்கிய பதவியில் நியமிக்கப்பட்டார்," என ஃபைசுல்லா கான் கூறுகிறார்.

அல் பாதர் முஜாஹிதீன் என்ற அமைப்பு, ஜமாத்-இ-இஸ்லாமியின் ஆயுதப் பிரிவாக செயல்பட்டு, 80களின் முற்பகுதியில் இருந்து ஆப்கானிஸ்தானிலும் பின்னர் இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரிலும் இயங்கி வருகிறது.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

அல் பாதர் முஜாஹிதீன் என்ற அமைப்பு, ஜமாத்-இ-இஸ்லாமியின் ஆயுதப் பிரிவாக செயல்பட்டு, 80களின் முற்பகுதியில் இருந்து ஆப்கானிஸ்தானிலும் பின்னர் இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரிலும் இயங்கி வருகிறது.

சில கருத்து வேறுபாடுகள் காரணமாக, அல் பாதர் முஜாஹிதீன் அமைப்பு ஜமாத்-இ-இஸ்லாமியிலிருந்து 90களின் பிற்பகுதியில் பிரிந்து தனி இயக்கமாக உருவெடுத்தது.

ஃபைசுல்லா கானின் கூற்றுப்படி, 90 களின் பிற்பகுதியில் சையத் காலித் ரஜா கராச்சி பிரிவுக்கான அல் பாதரின் தலைவராக அறிவிக்கப்பட்டபோது, அவர் முழு மாநிலத்திலும் அந்த அமைப்பின் முக்கிய தலைவராக இருந்தார்.

9/11 தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானில் ஜிஹாதி அமைப்புகள் தடைசெய்யப்பட்டு நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் சையத் காலித் ரஜாவும் ஒருவராக இருந்தார். இதையடுத்து, சில ஆண்டுகள் சிறையில் இருந்த பின், தீவிரவாத செயல்களில் இருந்து ஒதுங்கி, கல்வித்துறையில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார்.

கல்வித் துறையில் அவர் பணியாற்றி கொண்டிருந்த போது, 2023 பிப்ரவரி 26 அன்று கராச்சியின் கிழக்கு மாவட்டமான குலிஸ்தான் ஈ ஜோஹரில் அவர் வீட்டில் இருந்தபோது வீட்டு வாசலில் நடந்த பயங்கர தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.

முன்னாள் காஷ்மீர் ஜிகாதி கமாண்டரான சையத் காலித் ரஜாவின் (55) வாழ்க்கை அன்று முடிவுக்கு வந்தது.

அவருடைய கொலைக்கான பொறுப்பை, பாகிஸ்தான் அரசுக்கு எதிரான, பிரிவினைவாத ஆயுத அமைப்பான சிந்து தேஷ் ராணுவம் ஏற்றுக்கொண்டது.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஹிஸ்புல் முஜாகிதீனின் காஷ்மீர் கமாண்டர் பஷீர் அகமது பீர் என்ற இம்தியாஸ் ஆலம் பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி மாதம் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதி, ஹிஸ்புல் முஜாகிதீனின் காஷ்மீர் கமாண்டர் பஷீர் அகமது பீர் என்ற இம்தியாஸ் ஆலம், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை ஒட்டியுள்ள ராவல்பிண்டி நகரில் மக்ரிப் (சூரிய அஸ்தமனம்) தொழுகைக்குப் பிறகு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இந்த சம்பவத்தில் அவர் உயிரிழந்தார்.

60 வயதான பஷீர் அகமது, இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் 80களின் பிற்பகுதியில் இருந்து காஷ்மீரி ஜிகாதி அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதீனுடன் இணைந்து செயல்பட்டு வந்தார்.

90 களின் முற்பகுதியில், பஷீர் தனது குடும்பத்தினருடன் பாகிஸ்தானில் குடியேறினார். காலப்போக்கில் அவர் ஹிஸ்புல் முஜாஹிதீனின் செல்வாக்கு மிக்க தளபதியாக ஆனார்.

இந்திய அரசு சார்பில் இம்தியாஸ் ஆலம் என்கிற பஷீர் அகமது பீர், உபா (UAPA) சட்டத்தின் கீழ் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டிருந்தார்.

இது தொடர்பான அறிவிப்பை 2022 அக்டோபரில் இந்திய அரசு வெளியிட்டது.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

1985 ஆம் ஆண்டு ஏர் இந்தியா குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ரிபுதமன் சிங் மாலிக் கடந்த ஆண்டு கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1985 ஆம் ஆண்டு ஏர் இந்தியா குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ரிபுதமன் சிங் மாலிக் கடந்த ஆண்டு கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

2022 ஆம் ஆண்டில், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரே நகரில் காருக்குள் ரிபுதமன் சிங் சுடப்பட்டார்.

அந்த இடத்தில் எரிந்த நிலையில் இருந்த வாகனத்தையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

1985 ஆம் ஆண்டு கனிஷ்கா விமான குண்டுவெடிப்பில் மாலிக் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.

இருப்பினும், ரிபுதமன் சிங் மாலிக், தனக்கு இந்த தாக்குதலில் எந்த தொடர்பும் இல்லை என்று தொடர்ந்து மறுத்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 2005 ஆம் ஆண்டில், மாலிக்கும், மற்றொரு குற்றம் சாட்டப்பட்ட நபரான அஜய்ப் சிங் பக்ரியும் விடுவிக்கப்பட்டனர்.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜுன் மாதம் கனடாவில் கொலை செய்யப்பட்டது சீக்கியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஜூன் 23, 1985 அன்று, காலிஸ்தானி பிரிவினைவாதிகள் மாண்ட்ரீலில் இருந்து மும்பைக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானமான கனிஷ்காவில் டைம் பாம் வைத்தனர்.

இதையடுத்து, அயர்லாந்து கடற்கரை அருகே பறந்துகொண்டிருந்த விமானம் வெடித்து சிதறியதில் 329 பேர் உயிரிழந்தனர்.

ரிபுதமன் சிங் மாலிக் இந்தியாவை விட்டு வெளியேறி 1972 இல் கனடாவை அடைந்து ஓட்டுநராகப் பணியாற்றத் தொடங்கினார்.

இதற்குப் பிறகு, மாலிக் ஒரு பெரிய தொழிலதிபரானார். பின்னர் வான்கூவரின் 'கல்சா கிரெடிட் யூனியன்' என்ற அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ரிபுதாமனின் பெயர் 'பிளாக் லிஸ்ட்டில்' இருந்தது.

2019 செப்டம்பரில், மோதி அரசு 35 ஆண்டுகால பிளாக் லிஸ்ட்டில் இருந்து வெளிநாடுகளில் வசிக்கும் 312 சீக்கியர்களின் பெயர்களை நீக்கியது.

இதற்குப் பிறகு, 2019 டிசம்பரில், ரிபுதமன் சிங் மாலிக் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்தார்.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜெய்ஷ்-இ-முகமது என்ற ஜிகாதி அமைப்பைச் சேர்ந்த ஜாகூர் மிஸ்திரி பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்டார்.

1999 ஆம் ஆண்டு நேபாளத்தில் இருந்து காபூலுக்கு இந்திய விமானத்தைக் கடத்திச் சென்ற சம்பவத்தில் ஜாகூர் மிஸ்திரி இப்ராகிம் ஈடுபட்டார்.

கடத்தல்காரர்கள் ஜெய்ஷ்-இ-முகமதுவின் நிறுவனத் தலைவர் மௌலானா மசூத் மற்றும் இந்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த முஷ்டாக் சர்கார் மற்றும் உமர் சயீத் ஷேக் ஆகிய இரு தளபதிகளுடன் விடுவிக்கப்பட்டனர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜெய்ஷ்-இ-முகமது என்ற ஜிகாதி அமைப்பைச் சேர்ந்த ஜாகூர் மிஸ்திரி படுகொலை செய்யப்பட்டார்.

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள அக்தர் காலனியில் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேரால் அவர் சுடப்பட்டார்.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஒரு நாட்டில் தேடப்படுபவர்களாக அறிவிக்கப்படுபவர்கள் வேறு ஒரு நாட்டில் தொடர்ந்து கொலை செய்யப்படும் போது அது பேசுபொருளாகிறது.

உள்ளூர் காவல்துறை, "நான்கு பேர் பர்னிச்சர் கடைக்குள் நுழைந்து, ஒரு தொழில் அதிபர் மீது நான்கு அல்லது ஐந்து முறை துப்பாக்கியால் சுட்டனர். உயிரிழந்தவர், 44 வயதான ஜாஹிட் என அடையாளம் காணப்பட்டார்," எனக்கூறுகிறது.

ஆனால், கொல்லப்பட்ட தொழிலதிபர் இப்ராஹிம் தான் என்றும், அவர் பல ஆண்டுகளாக ஜாஹித் அகுன்ட் என்ற மாற்று அடையாளத்துடன் வாழ்ந்து வந்ததாகவும் இந்திய அதிகாரிகள் உறுதியாகத் தெரிவிக்கின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/c895v52r2wlo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 நிஜ்ஜாரின் கொலைக்கு ஆதரவு வழங்குவோர் சீக்கியர்களின் வரலாறை தேடி  படிப்பது நல்லது வெறுமனே ஓட்டு அரசியலால் தாண்டிய  கனடாவின் ஆதரவு சீக்கியர் களுக்கு உண்டு.1985 ல் எயர் இந்தியா விமான குண்டு வெடிப்பில் இறந்தவர்களில் 2௦௦ க்கு மேற்பட்டவர் கனடியர்கள் குண்டு வைத்தவர்கள் காலிச்த்தான்சீக்கியர்கள் அப்போது கூட சீக்கியர்கள் பக்கமே   கனடா இருந்தது.காரணம் சீக்கியர்களின் உழைப்பும் நேர்மையும் இன்றுவரை சீக்கிய இனத்தில் ஒரு பிச்சை காரரை காண்பது அரிது எம்மைப்போலவே பல ஆயிரம் வருட வரலாற்று ஆதாரங்களை உள்ளடக்கிய சீக்கிய  நூலகத்தை  இந்திய அரசு தனது எதிர்கால நலனுக்காக எரித்து வன்முறை ஆடியது கண்டு ஒவ்வொரு சீக்கியர்களின் அடிமனதில் வன்மம் உண்டு . ஒரு நாடும் வலிந்து சொல்லாத இலங்கையில் தமிழர்களுக்கு நடந்தது இனபடுகொலையே என்று சொல்ல கனடாவை வைத்ததும் அதில் ஒரு அங்கமே .வெளிச்சமே இல்லாத இருட்டில் இருபவர்க்கு ஒளி கிடைத்தும் அதை உபயோகிக்க தெரியாமல் இருக்கிறம் .

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)
4 hours ago, நிழலி said:

இதை இலங்கை பிரான்சில் செய்த போதும், கண்களை மூடிக் கொண்டு தான் இருந்தது

https://www.tamilguardian.com/content/assassination-tamils-paris-remains-unsolved?fbclid=IwAR1xpbf6flig47gJoTou3MQUfV3JhYBWjYN6MVqTl_nBfByTMdZvOkGP0Js#:~:text=Reacting to the killings%2C the,also hopes to stop the

ஆனால், அதை சிங்கள அரசு முற்றாக மறுத்ததுடன் இதுபோன்று செய்ய தமக்கு வலிமை இல்லையென்றும், அப்படிச் செய்யும் அளவுக்கு வலிமை இருந்தால் இன்று வெளிநாட்டில் புலிகளின் முக்கிய ஆதரவாளர்களை இல்லாமல் செய்திருப்போம் என்ற தொனிபடத் தெரிவித்திருந்ததும் நினைவுகூரத்தக்கது.

----> இவர்களின் கொலை நடந்த காலத்தில் வெளிவந்த உதயன் நாளேட்டில் வந்த செய்திகளின் தொகுப்பு.

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

திலீபனையே கொலை செய்த ஹிந்தியாவுக்கு.. ஈழத்தமிழனத்தையே படுகொலை செய்த ஹிந்தியாவுக்கு.. சீக்கிய காலிஸ்தான் போராளியைக் கொல்வது பெரிய வேலை இல்லை.

கனடா பிரதமரின் குற்றச்சாட்டு..சகட்டுமேனிக்கானதல்ல. கனடிய.. புலனாய்வு பிரிவின் விசாரணைக்குப் பின் தான்.. இது வந்திருக்க முடியும்.

ஹிந்தியா விடுதலைப் போராளிகளைக் கொல்வது புதிதல்ல. குமரப்பா புலோந்திரன் திலீபன் கிட்டு உட்பட பலரை சமாதானம் பேசிக் கொன்றது.. மறக்க முடியாத பெரும் துரோகங்களாகும். அப்படிப்பட்ட ஹிந்தியாவுக்கு.. கனடாவில் வைச்சு சீக்கிய காலிஸ்தான் சுதந்திர தேசப் போராளிகளைக் கொல்வது பெரிய விடயமோ.. புதிசோ அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, ரஞ்சித் said:

சீக்கிய இனத்தவரின் வாக்குகளை முன்வைத்து ஜஸ்ட்டின் இதனைச் செய்திருந்தாலும், சீக்கியரின் விடுதலைக்காக அவரது அரசு கொடுத்துவரும் தார்மீக ஆதரவினை நான் வவேற்கிறேன்.

👍

8 hours ago, ரஞ்சித் said:

பஞ்சாப்பின் விடுதலை

நடைபெறாது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, பெருமாள் said:

 நிஜ்ஜாரின் கொலைக்கு ஆதரவு வழங்குவோர் சீக்கியர்களின் வரலாறை தேடி  படிப்பது நல்லது வெறுமனே ஓட்டு அரசியலால் தாண்டிய  கனடாவின் ஆதரவு சீக்கியர் களுக்கு உண்டு.1985 ல் எயர் இந்தியா விமான குண்டு வெடிப்பில் இறந்தவர்களில் 2௦௦ க்கு மேற்பட்டவர் கனடியர்கள் குண்டு வைத்தவர்கள் காலிச்த்தான்சீக்கியர்கள் அப்போது கூட சீக்கியர்கள் பக்கமே   கனடா இருந்தது.காரணம் சீக்கியர்களின் உழைப்பும் நேர்மையும் இன்றுவரை சீக்கிய இனத்தில் ஒரு பிச்சை காரரை காண்பது அரிது எம்மைப்போலவே பல ஆயிரம் வருட வரலாற்று ஆதாரங்களை உள்ளடக்கிய சீக்கிய  நூலகத்தை  இந்திய அரசு தனது எதிர்கால நலனுக்காக எரித்து வன்முறை ஆடியது கண்டு ஒவ்வொரு சீக்கியர்களின் அடிமனதில் வன்மம் உண்டு . ஒரு நாடும் வலிந்து சொல்லாத இலங்கையில் தமிழர்களுக்கு நடந்தது இனபடுகொலையே என்று சொல்ல கனடாவை வைத்ததும் அதில் ஒரு அங்கமே .வெளிச்சமே இல்லாத இருட்டில் இருபவர்க்கு ஒளி கிடைத்தும் அதை உபயோகிக்க தெரியாமல் இருக்கிறம் .

உண்மை. உண்மை. உண்மை.

புலம்பெயர் தலைவர்கள் சீக்கியர்களிடம் டியூசன் போயாவது சிலதை படித்து கொள்ள வேண்டும்.

பிகு

இண்டைக்கு LBC யில் உங்கள் அம்மையார் 1 மணி நேர கலந்துரையாடலில் கலந்து கொண்டார். 

11 hours ago, nedukkalapoovan said:

திலீபனையே கொலை செய்த ஹிந்தியாவுக்கு.. ஈழத்தமிழனத்தையே படுகொலை செய்த ஹிந்தியாவுக்கு.. சீக்கிய காலிஸ்தான் போராளியைக் கொல்வது பெரிய வேலை இல்லை.

கனடா பிரதமரின் குற்றச்சாட்டு..சகட்டுமேனிக்கானதல்ல. கனடிய.. புலனாய்வு பிரிவின் விசாரணைக்குப் பின் தான்.. இது வந்திருக்க முடியும்.

ஹிந்தியா விடுதலைப் போராளிகளைக் கொல்வது புதிதல்ல. குமரப்பா புலோந்திரன் திலீபன் கிட்டு உட்பட பலரை சமாதானம் பேசிக் கொன்றது.. மறக்க முடியாத பெரும் துரோகங்களாகும். அப்படிப்பட்ட ஹிந்தியாவுக்கு.. கனடாவில் வைச்சு சீக்கிய காலிஸ்தான் சுதந்திர தேசப் போராளிகளைக் கொல்வது பெரிய விடயமோ.. புதிசோ அல்ல. 

நிச்சயமாக இதை இந்தியாதான் செய்திருக்கிறது. 

இப்போ குட்டு வெளித்ததும் ருடோ மீது பழியை போடுகிறது.

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
6 minutes ago, goshan_che said:

நிச்சயமாக இதை இந்தியாதான் செய்திருக்கிறது. 

இப்போ குட்டு வெளித்ததும் ருடோ மீது பழியை போடுகிறது.

இதே காலப் பகுதியில்.. முக்கிய காலிஸ்தான் போராளி இங்கிலாந்திலும் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். பாகிஸ்தானில் வைச்சும் கொல்லப்பட்டிருக்கினம்.

இங்கிலாந்து கனடாவிடம்... இச்சம்பங்கள் தொடர்பிலும்.. அவற்றின் பின்னணியில் இருக்கக் கூடிய ஒற்றுமைகள் தொடர்பிலும்.. தகவல் சேகரிக்க உள்ளதாக செய்திகள் சொல்லின.

இது ஹிந்தியாவின் திட்டமிட்ட சர்வதேசப் பயங்கரவாதத்தின் நீட்சி எனலாம். ஈழத்தில் சிங்களவனையும் தமிழ் துரோகிகளையும் கைக்குள் வைச்சுக் கொண்டு செய்ததை இப்போ மேற்கு நோக்கி விரிவாக்கி இருக்குது. 

நம்மவர்கள் இந்தச் சூழலை சும்மா கடந்து போகாமல்.. ஹிந்தியா ஈழத்தில் செய்த இனப்படுகொலைகள்.. மற்றும் இனப்படுகொலைக்கு செய்த உதவிகளை எல்லாம்.. சர்வதேசத்துக்கு தெளிவாகச் சொல்ல வேண்டும்.

ஏனெனில்.. எமது விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாக்கி அழித்ததில்.. இனப்படுகொலைக்கு கொண்டு சென்றதில்.. ஹிந்தியாவின் பங்களிப்பு மன்னிக்கப்படக் கூடிய ஒன்றல்ல. அதற்காக அந்த நாடு தண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. 

Edited by nedukkalapoovan
  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வேறு ஒரு நாட்டின் பிரஜையைஅந்த நாட்டில் வைத்து  கொன்ற இந்தியா ஒரு பயங்கரவாதநாட. அதனை உலகநாடுகள் தடைசெய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
4 hours ago, nedukkalapoovan said:

இதே காலப் பகுதியில்.. முக்கிய காலிஸ்தான் போராளி இங்கிலாந்திலும் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். பாகிஸ்தானில் வைச்சும் கொல்லப்பட்டிருக்கினம்.

இங்கிலாந்து கனடாவிடம்... இச்சம்பங்கள் தொடர்பிலும்.. அவற்றின் பின்னணியில் இருக்கக் கூடிய ஒற்றுமைகள் தொடர்பிலும்.. தகவல் சேகரிக்க உள்ளதாக செய்திகள் சொல்லின.

இது ஹிந்தியாவின் திட்டமிட்ட சர்வதேசப் பயங்கரவாதத்தின் நீட்சி எனலாம். ஈழத்தில் சிங்களவனையும் தமிழ் துரோகிகளையும் கைக்குள் வைச்சுக் கொண்டு செய்ததை இப்போ மேற்கு நோக்கி விரிவாக்கி இருக்குது. 

நம்மவர்கள் இந்தச் சூழலை சும்மா கடந்து போகாமல்.. ஹிந்தியா ஈழத்தில் செய்த இனப்படுகொலைகள்.. மற்றும் இனப்படுகொலைக்கு செய்த உதவிகளை எல்லாம்.. சர்வதேசத்துக்கு தெளிவாகச் சொல்ல வேண்டும்.

ஏனெனில்.. எமது விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாக்கி அழித்ததில்.. இனப்படுகொலைக்கு கொண்டு சென்றதில்.. ஹிந்தியாவின் பங்களிப்பு மன்னிக்கப்படக் கூடிய ஒன்றல்ல. அதற்காக அந்த நாடு தண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. 

மிக சரியான கருத்து. 

அண்மையில் ஒரு கிளாஸ்கோ வாழ் சீக்கியரை இந்தியா சிறையில் அடைத்துள்ளது.

இதை G20 யில் சுனக் மெதுவாக பேசியதோடு சரி.

இவ்வாறன விடயங்களில் இந்தியாவை அம்பலப்படுத்தும் ஒரு லாபியாக நாம் வளரும் பட்சத்தில், எம்மையும் கனம் பண்ண வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு ஏற்படும்.

3 hours ago, Nathamuni said:

 

 

 

Edited by நிழலி
நீக்கம்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியா – கனடா பதற்றம்: தமிழர்கள் சந்திக்கப் போகும் சிக்கல்கள் என்ன?

இந்தியா – கனடா பதற்றம்: தமிழர்கள் சந்திக்கப் போகும் சிக்கல்கள் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ச பிரசாந்த்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பான பிரச்னையால், இந்தியா – கனடா இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழர்களுக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்படும்? கனடா வாழ் தமிழர்கள், தமிழ்நாட்டின் பலதுறை வல்லுநர்கள் சொல்வது என்ன?

கனடாவைச் சேர்ந்த சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளதுடன், இந்திய தூதரக அதிகாரியையும் கனடா வெளியேற்றியுள்ளது.

கனடாவின் குற்றச்சாட்டை மறுத்துள்ள இந்திய அரசு கனடா தூதரகத்தின் அதிகாரி நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தால், கனடா – இந்தியா உறவுக்கிடையில் விரிசல் ஏற்பட்டு, பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதனால், கனடாவில் உள்ள தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பதை அறிந்துகொள்ள பிபிசி தமிழ் கனடா வாழ் தமிழர்கள் மற்றும் இங்குள்ள வல்லுநர்களிடம் பேசியது.

 

கனடாவுக்கும் தமிழர்களுக்கும் என்ன தொடர்பு?

இந்தியா – கனடா பதற்றச் சூழல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கனடா அரசின் அதிகாரப்பூர்வ தகவலின் படி, இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து சென்ற 3.1 லட்சம் தமிழர்கள் கனடாவில் குடியுரிமை பெற்று வசிக்கின்றனர்.

ஆண்டுதோறும் தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக கனடா செல்கின்றனர். மேலும், இந்தியாவில் இருந்து ஆடைகள், காய்கறி, இறைச்சி, ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள், தென்னை நார் பொருட்கள் எனப் பலவகை பொருட்கள் கனடாவுக்கு ஏற்றுமதியாகிறது. கனடாவில் இருந்து நிலக்கரி சம்பந்தமான பொருட்கள் மற்றும் உரம் ஆகியவற்றை இந்தியா இறக்குமதி செய்கிறது.

இந்தியா – கனடா துணைத் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, இந்தியாவில் இருந்து கனடாவுக்கு ஆண்டுக்கு 370 கோடி ரூபாய் வர்த்தகமும், கனடாவில் இருந்து இந்தியாவுக்கு 277 கோடி ரூபாய் மதிப்பிலான இறக்குமதி வர்த்தகமும் நடக்கிறது. இதில் கனடாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் வணிகரீதியாக தொடர்புகள் உள்ளன.

இந்தியாவில் இருந்து கனடாவுக்கு ஆண்டுக்கு, 55 கோடி ரூபாய்க்கு மேல் பருத்தி, பட்டு போன்ற ஜவுளிப் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன. இதில், 70% திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டங்களில் இருந்துதான் அனுப்பப்படுகின்றன.

அதேபோல், இந்தியாவில் இருந்து ஆண்டுக்கு 90 கோடி ரூபாய்க்கு அனுப்பப்படும் தென்னை நார் கட்டிகள், கயிறு, தென்னை நார் சம்பந்தமான பொருட்களிலும், 90% தமிழகத்தின் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்படுகின்றன.

இது தவிர, இரும்பு, எஃகு பொருட்கள், மருத்துவ பொருட்கள், காய்கறிகள், பதப்படுத்தப்பட்ட மீன், கோழி உள்ளிட்ட இறைச்சிகளும் தமிழ்நாட்டில் இருந்து கனடாவுக்கு ஏற்றுமதியாகின்றன.

 
இந்தியா – கனடா பதற்றச் சூழல்

பட மூலாதாரம்,NATARAJ SRIRAM

படக்குறிப்பு,

கனடாவின் ஆண்டாரியோ நகரில் வசித்து வரும் வழக்கறிஞரும் CANext Immigration நிறுவன தலைமை செயல் அலுவலருமான நடராஜ் ஸ்ரீராம்.

தமிழர்களுக்கு பாதிப்பு இருக்காது

இந்தியா – கனடாவிற்கு இடையே ஏற்பட்ட பிரச்னையால், குடியேற்றம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பாதிப்புகள் ஏற்படாது என பிபிசி தமிழிடம் விளக்கினார், கனடாவின் ஆண்டாரியோ நகரில் வசித்து வரும் வழக்கறிஞரும் CANext Immigration நிறுவன தலைமை செயல் அலுவலருமான நடராஜ் ஸ்ரீராம்.

“கனடா வந்தோரை வாழ வைக்கும் மனநிலை கொண்ட நாடு. மற்ற நாடுகளில் குடியுரிமை வழங்க, அங்கு தங்கியிருக்கும் ஒவ்வொரு நாட்டினரையும் ஒவ்வொரு வகையாகப் பிரித்துப் பார்த்து, ஒவ்வொரு நாட்டினருக்கும் ஒவ்வொரு வகையான கட்டுப்பாடுகளை விதித்துதான் குடியுரிமை வழங்கப்படுகிறது.

ஆனால், கனடாவில் அத்தகைய பாரபட்சம் எதுவும் கிடையாது. எந்த நாட்டினராக இருந்தாலும், குடியுரிமை சட்டத்தின்கீழ் அனைவருக்கும் சமமாக குடியுரிமை வழங்கப்படுகிறது,” என்கிறார் ஸ்ரீராம்.

மேலும், “கனடாவில் குடியுரிமை வழங்குவதற்கான ஆணையம் தன்னாட்சி அதிகாரம் பெற்றது. இது அரசியல் ரீதியாகச் செயல்படுவது இல்லை என்பதால், தற்போது இந்தியா – கனடாவுக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்னை எந்த வகையிலும், தமிழர்கள், இந்தியர்கள் கனடாவுக்கு கல்வி, வேலைவாய்ப்புக்காக வருவதிலும், குடியுரிமை பெறுவதிலும், விசா வாங்குவதிலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்கிறார் நடராஜ் ஸ்ரீராம்.

இதற்குச் சான்றாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கனடா, சீனாவுக்கு இடையே ஏற்பட்ட அரசியல் பிரச்னையைக் குறிப்பிட்டார். அப்போதும்கூட, எந்தப் பாதிப்பையும் அது ஏற்படுத்தவில்லை என்று ஸ்ரீராம் விளக்கினார்.

 

கனடாவில் அதிகரிக்கும் தமிழர்கள்

மேலும் பேசிய வழக்கறிஞர் நடராஜ் ஸ்ரீராம், கனடா அரசின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, இந்தியாவில் இருந்து, 2022இல் மட்டுமே கனடாவுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, குடியேற்றத்துக்காக, 3 லட்சம் பேர் வந்துள்ளதாகத் தெரிவித்தார். கனடாவுக்கு கல்வி, வேலைவாய்ப்புக்காக வருவோரில், 90% இந்தியர்கள்தான் என்றும் இதில், தமிழர்கள் மிக அதிகம் என்றும் கூறுகிறார் அவர்.

“முன்பு கனடாவில் தமிழர்கள் என்றாலே, இலங்கைத் தமிழர்கள் என்ற நிலைதான் இருந்தது. ஆனால், 2001க்குப் பின் தமிழ்நாட்டில் இருந்து அதிகப்படியான தமிழர்கள் இங்கு வருகின்றனர்.

ஆண்டுக்கு குறைந்தபட்சமாக, 50,000 ஆயிரம் பேராவது தமிழ்நாட்டில் இருந்து கனடா வருகின்றனர். கனடா நாட்டினரைவிட, 3 – 4 மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்தி இந்திய மாணவர்கள் இங்கு படிப்பதால், கனடாவின் பொருளாதாரத்துக்கு இந்தியா மிக முக்கியப் பங்காற்றுகிறது.

இதன் காரணமாக இந்தியர்கள் இங்கு வருவதை கனடா ஒருபோதும் தடுக்காது. அந்த வகையில் தமிழர்களுக்குப் பாதிப்பிருக்காது,” என்றார்.

சீக்கியத் தலைவர் கொலைக்குப் பிறகு கனடாவில் இந்தியர்கள் நிலை என்ன என்ற கேள்வியை நாம் முன்வைத்தபோது விளக்கமளித்த நடராஜ் ஸ்ரீராம், “சீக்கியத் தலைவர் கொலைக்கு முன் இங்கு எப்படியான சூழல் நிலவியதோ, தற்போதும் அதேபோன்ற சாதாரண நிலைதான்," என்றார்.

"இந்தக் கொலை சம்பவத்துக்குப் பிறகு எந்த மாற்றமும் இல்லை. இந்தியர்கள், சீக்கியர்கள் என அனைவரும் சாதாரணமாகத்தான் உள்ளனர். அரசியல்வாதிகள் இந்தக் கொலையைப் பேசுகிறார்களே தவிர, மக்கள் மத்தியில் எந்த மாற்றமும் இல்லை,” என்றார்.

 
இந்தியா – கனடா பதற்றச் சூழல்

பட மூலாதாரம்,SURESH KUMAR

படக்குறிப்பு,

கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக இந்தியர்கள் ஏன் கனடாவை தேர்வு செய்கின்றனர் என்பது குறித்து பிபிசி தமிழிடம் விளக்கினார், வெளிநாட்டுக் கல்விக்கு பயிற்சியளிக்கும் ‘ட்ரூ மேடிக்ஸ்’ பயிற்சி மையத்தின் தலைவர் சுரேஷ்குமார்.

விசா பெறுவதில் சிக்கல் ஏற்படலாம்

கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக இந்தியர்கள் ஏன் கனடாவை தேர்வு செய்கின்றனர் என்பது குறித்து பிபிசி தமிழிடம் விளக்கினார், வெளிநாட்டுக் கல்விக்கு பயிற்சியளிக்கும் ‘ட்ரூ மேடிக்ஸ்’ பயிற்சி மையத்தின் தலைவர் சுரேஷ்குமார்.

“உலக நாடுகளில் கனடாவில் மட்டுமே, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அங்கு தங்கிப் படித்து, வேலை பார்த்தால் அந்நாட்டின் நிரந்தர குடியுரிமையைப் பெறும் வாய்ப்புள்ளது. இதுவே அமெரிக்காவில் 15 ஆண்டுகளாகவும், பிரிட்டனில் 5 ஆண்டுகளாகவும் உள்ளது.

இந்த காரணத்தால், இந்தியாவில் இருந்து அதிகப்படியானோர் கனடாவை தேர்வு செய்கின்றனர். கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக மட்டுமே, தமிழ்நாட்டில் இருந்து ஆண்டுக்கு, 40 ஆயிரம் பேருக்கு மேல் கனடா செல்கின்றனர்,” என்கிறார்.

இந்நிலையில், இந்தியா – கனடா பிரச்னையால், புதிதாக கனடா செல்லும் மாணவர்கள், பணிக்காக செல்வோருக்கு பாதிப்புகள் ஏற்படும் என்கிறார் சுரேஷ்குமார்.

“இந்தியா – கனடா பிரச்னை தீவிரமடைந்து அந்த நாடு இதைப் பெரிதுபடுத்தினால், இந்தியாவில் உள்ளோருக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒருவேளை அங்கு இந்தியர்களுக்கு விசா தொடர்பான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் பாதிப்புகள் ஏற்படும்,” என்கிறார் அவர்.

மேலும் பேசிய அவர், “ஜனவரி மற்றும் மே மாதம் என ஆண்டுக்கு இருமுறை, தமிழ்நாட்டில் இருந்து மாணவர்கள் மேற்படிப்புக்காக கனடா செல்கின்றனர்.

ஜனவரியில் கனடா செல்ல தயாராகவுள்ள, 90% மாணவர்கள் தற்போது விசா பெற்றிருப்பார்கள். ஆனால், இரு நாடுகளின் பிரச்னை வலுப்பெற்றால் மே மாதம் செல்லவிருப்போர், விசா பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டு, பல மாணவர்கள் கனடா செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

மாணவர்கள் மட்டுமின்றி, அங்கு பணிக்குச் செல்ல விரும்புவோரும் கடும் பாதிப்பை சந்திப்பார்கள். கனடாவில் கட்டுப்பாடுகள் அதிகரித்தால், மாணவர்களும், வேலைவாய்ப்புக்காக செல்வோரும் பிரிட்டன் நாட்டைத் தேர்வு செய்ய நேரிடும்,” என்றார்.

 
இந்தியா – கனடா பதற்றச் சூழல்

பட மூலாதாரம்,VENKATESH ATHREYA

படக்குறிப்பு,

கனடா போன்ற நாடுகளுடன் இந்தியாவுக்கான வணிகத் தொடர்பு மிகக்குறைவுதான் என்று கூறுகிறார் பொருளாதார வல்லுநருமான வெங்கடேஷ் ஆத்ரேயா.

இருநாட்டு ஒப்பந்தம் தாமதமாகும்

இந்தியா – கனடா பிரச்னையால் தமிழகத்துக்குப் பொருளாதார ரீதியில் பாதிப்புகள் குறைவாகத்தான் இருக்கும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்களும், தொழில்துறையினரும்.

பிபிசி தமிழிடம் பேசிய பேராசிரியரும் பொருளாதார வல்லுநருமான வெங்கடேஷ் ஆத்ரேயா, கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியா, அமெரிக்காவுடன்தான் பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் மிக நெருக்கமாக உள்ளது என்றும் கனடா போன்ற நாடுகளுடன் இந்தியாவுக்கான வணிகத் தொடர்பு மிகக்குறைவுதான் என்றும் கூறினார்.

“இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நடக்கும் ஏற்றுமதியும், இறக்குமதியும் மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் மிகக்குறைவுதான். தற்போது, ஏற்பட்டுள்ள இருநாடுகளின் பிரச்னையால் பொருளாதார ரீதியிலும், வணிக ரீதியிலும் மிகச்சிறிய தற்காலிக பாதிப்பு மட்டுமே ஏற்படும், பெரிய அளவிலான பாதிப்புகள் இருக்காது.

இந்தியா – கனடா இடையே தொழில் மேம்பாட்டுக்கான கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தாவது போன்ற நிலை இருந்தது. பத்தாண்டுகளாக நடக்காத இந்த முயற்சி, இந்தப் பிரச்னையால் மேலும் தாமதமாகக்கூடும்,” என்றார்.

 
இந்தியா – கனடா பதற்றச் சூழல்

பட மூலாதாரம்,CONSULATE GENERAL OF INDIA

வர்த்தக பாதிப்புகள் இல்லை

பிபிசி தமிழிடம் பேசிய தென்னிந்திய பொறியியல் (Engineering) இயந்திரங்கள் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் விக்னேஷ், தமிழகத்தில் உற்பத்தியாகும் பொறியியல் சார்ந்த இயந்திரங்கள் மற்றும் பொருட்கள், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளுக்குத்தான் அதிக அளவில் அனுப்பப்படுகின்றன என்றும், கனடாவுக்கு சொல்லும்படியாக பெரிய அளவில் வர்த்தகம் இல்லை என்றும் கூறினார்.

“இதனால், இந்தியா – கனடா பிரச்னையால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏதும் இல்லை,’’ என்கிறார் அவர்.

இதேபோல், திருப்பூர் ஆடைகள் ஏற்றுமதியாளரான குமார் துரைசாமி, “தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் மொத்த பருத்தி ஆடை பொருட்களில், 4% என்ற குறைவான அளவுதான் கனடாவுக்கு ஏற்றுமதியாகிறது. இருநாட்டு பிரச்னையால் ஆடைத் தொழில் ரீதியில் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பு இருக்காது,” என்று தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/cglekkn8mjgo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கனடா பிரதமரின் பகிரங்க குற்றச்சாட்டு: இந்தியா பதிலடி!

Sep 19, 2023 11:55AM
india gave strong counter attack

இந்திய அரசாங்கத்திற்கும் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் நஜ்ஜர் கொல்லப்பட்டதற்கும் இடையே தொடர்பு இருப்பதாக கூறிய கனடா பிரதமரின் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவுக்கான அந்நாட்டின் தூதரை அடுத்த 5 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு கோவிலுக்கு வெளியே கனடாவில் வசித்து வந்த இந்தியா வம்சாவளியும், காலிஸ்தான் ஆதரவாளருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டார்.

இது இந்தியாவில் காலிஸ்தான் என்ற தனிநாடு கேட்டு போராடி வரும்  சீக்கிய பிரிவினைவாதிகளுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையே பதட்டத்தை அதிகரித்து வந்தது.

WhatsApp-Image-2023-09-19-at-12.39.54-PM

கனடா பிரதமர் குற்றச்சாட்டு!

இந்த நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதற்கும், இந்தியாவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டி உள்ளார்.

அந்நாட்டு பாராளுமன்றத்தில் நேற்று (செப்டம்பர் 18) பேசிய ஜஸ்டின் ட்ரூடோ “ இந்திய அரசின் உயர்மட்ட உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கனடா தனது ஆழ்ந்த கவலைகளை அறிவித்துள்ளது” என்று தெரிவித்தார்.

கனடா மண்ணில் ஒரு கனேடிய குடிமகன் கொல்லப்படுவது என்பது வெளிநாட்டு அரசாங்கத்தின் எந்தவொரு ஈடுபாடும் நமது இறையாண்மையை ஏற்றுக்கொள்ள முடியாத மீறலாகும்” என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.

மேலும் கடந்த வாரம் ஜி20 உச்சிமாநாட்டிற்காக டெல்லி சென்றிருந்த நிலையில் பிரதமர் மோடியிடம் இதுகுறித்த தனது கவலைகளை நேரடியாகவும் தெரிவித்ததாக ஜஸ்டின் ட்ரூடோ கூறினார்.

இதற்கிடையே கனடாவின் வெளியுறவு அமைச்சர் மெலானி ஜோலி, இந்தியாவின் உளவுத்துறையின் தலைவர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டதை  உறுதி செய்தார்.

எனினும் கனடா தலைநகர் ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகம் இதுகுறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இந்தியா மறுப்பு!

அதே வேளையில் கனடாவின் குற்றச்சாட்டை இந்தியா நிராகரித்துள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், “கனட பிரதமர் பாராளுமன்றத்தில் கூறியதையும், அவர்களின் வெளிவிவகார அமைச்சரின் அறிக்கையையும் நாங்கள் நிராகரிக்கிறோம்.
கனடாவில் எந்தவொரு வன்முறைச் செயலிலும் இந்திய அரசாங்கத்தின் தொடர்பு பற்றிய குற்றச்சாட்டுகள் அபத்தமானது.

இதே போன்ற குற்றச்சாட்டுகளை கனடா பிரதமர் முன்பு நமது பிரதமரிடம் முன்வைத்தபோது, அவை முற்றிலும் நிராகரிக்கப்பட்டன.

நாங்கள் சட்டத்தின் ஆட்சிக்கு வலுவான அர்ப்பணிப்புடன் கூடிய ஜனநாயக அரசியலை முன்னெடுத்து வருகிறோம்.

கனடாவில் கொலைகள், மனித கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் நடைபெறுவது ஒன்றும் புதிதல்ல.

இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மூலம் காலிஸ்தான் பயங்கரவாதிகள் மீதான கவனத்தை திசை திருப்ப முயற்சிகள் நடைபெறுகிறது.

இந்த நிலையில் தற்போது காலிஸ்தான் கனடா அரசியல் பிரமுகர்கள் இத்தகைய கூறுகளுக்கு வெளிப்படையாக அனுதாபத்தை வெளிப்படுத்தியிருப்பது கவலை அளிக்கிறது.

காலிஸ்தான் பிரிவினைவாதிகள் கொல்லப்பட்ட விஷயத்தில் இந்திய அரசாங்கத்தை இணைக்கும் அனைத்து குற்றச்சாட்டையும் நாங்கள் நிராகரிக்கிறோம்.

மேலும் அங்கு செயல்படும் அனைத்து இந்திய விரோத நடவடிக்கைகளுக்கும் எதிராக விரைவான மற்றும் பயனுள்ள சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கனடா அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் பதிலடி!

மேலும் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டை தொடர்ந்து கனடாவில் உள்ள இந்திய உளவுத்துறை தலைவரை நாட்டை விட்டு வெளியேற்றியதற்கு இந்திய அரசு தற்போது பதிலடி கொடுத்துள்ளது.

அதன்படி இன்று காலை இந்தியா நாட்டின் கனடா தூதரான கேமரூன் மேக்கேயை  நேரில் அழைத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது.

மேலும் அவரை அடுத்த ஐந்து நாட்களுக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

 

 

https://minnambalam.com/political-news/india-gave-strong-counter-attack-on-canada-pm-remark/

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சீக்கிய உரிமைச் செயற்பாட்டாளர் படுகொலை சூத்திரதாரிகள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் - கண்டன அறிக்கையில் ரோய் சமாதானம்

20 SEP, 2023 | 02:39 PM
image
 

சீக்கிய உரிமைச் செயற்பாட்டாளரான ஹார்டீப் சிங் நிஜ்ஜாரின் படுகொலைச் சூத்திரதாரிகள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்று கனடாவின் டொரன்டோவை தளமாகக் கொண்டு செயற்படும் அரசியல் செயற்பாட்டாளரான ரோய் சமாதானம் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

வெளிநாடுகளில் தமது இன மக்கள் சார்ந்து செயற்படுகின்ற உரிமைச் செயற்பாட்டாளர்கள் திடீரென படுகொலை செய்யப்படுவது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகிறது.

அண்மைக் காலத்தில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக செயற்பட்டுக்கொண்டிருந்த பரிதி பிரான்சில் இனந்தெரியாதவர்களால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்திருந்தார்.

அந்தக் கொலையின் பின்னணி இன்னமும் வெளிப்படவில்லை. சூத்திரதாரிகள் சட்டத்தின் முன்நிறுத்தப்படவில்லை.

இந்நிலையில், தற்போது கனடிய பிரஜையாக இருக்கும் 45 வயதான ஹார்டீப் சிங் நிஜ்ஜார் சீக்கிய மக்களின் உரிமைகளுக்காக தொடர்ச்சியாக செயற்பட்டு வருகிறார். அவர் பிரிட்டிஷ் கொலம்பியாவில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தினை மக்களின் உரிமைகளுக்காக செயற்படும் சக செயற்பாட்டாளர் என்ற வகையில் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

இவ்வாறான நிலையில், குறித்த சம்பவத்தின் சூத்திரதாரிகள் யார் என்பதை பகிரங்கப்படுத்தி, அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதோடு, மக்களின் உரிமைகளுக்காக செயற்படும் செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல்கள் மீள நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும் என்று அனைத்து நாடுகளின் அரசாங்கங்களிடத்திலும் வலியுறுத்துகிறேன் என்றார்.

https://www.virakesari.lk/article/165003



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது சுமந்திர டீல்...அதாவது எம்.பி யாக்கும் டீல்...தெருக்கூத்து நடத்தும்தமிழ் அமைப்பு பெரும் விலை கொடுக்கவும் தயாராக் இருக்கிறது..இதனை விட இன்னுமொமொரு புது அமைப்பும்தொடங்கப்பட்டிருக்கிறது...இன்னும் சுமன் ஆதரவுப் பெரும் தலைகளும் காத்திருகின் றனர்..கூட வாறவரும் சுமன் விசுவாசி...பாவம் சிறீ .. போகும்போது கோவணத்துடன் 50 பொறின் சரக்கு போத்திலையும் கொண்டுபோய்..  பாரில் போட்டு விற்க வேண்டியதுதான்😎
    • கோஷான், இவர் தலைவரையும் புலிகளையும் கொச்சைப்படுத்த இத்திரியைத் தேர்ந்தெடுக்க இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதலாவது ஆசாத்திற்கும், பின்புலத்தில் நிற்கும் புட்டினுக்கும் வெள்ளையடிக்க முயல்வது. இரண்டாவது புலிகள் மீதிருக்கும் தனது வக்கிரத்தைக் இத்திரியூடாக வெளியே கொண்டுவருவது.  இவரது பிதற்றல்கள் குறித்து உங்களுக்குத் தெரியாத விடயங்களை நான் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 
    • புலிகளையும் அசாத்தையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கவோ அல்லது தலைவர் பிரபாகரனுக்கு அச்சுருத்தலாக இருந்ததால்த்தான் மாற்று இயக்க உறுப்பினர்களைப் புலிகள் கொன்றார்கள் என்று கூறுவதோ எல்லாம் ஒரே நோக்கத்திற்காகத்தான். இதில் வேடிக்கை என்னவென்றால் இதுவரை காலமும் தன்னைத் தமிழ்த் தேசியவாதியாகக் காட்டிக்கொண்டிருந்தவரின் உண்மை முகம் இதன் மூலம் வெளியே தெரிந்திருக்கிறது. சிரியாவின் முன்னாள் கொடுங்கோலனிற்கு புட்டினின் ஆதரவு இல்லாதிருந்தாலோ அல்லது அக்கொடுங்கோலன் மேற்குலகின் நண்பனாக இருந்திருந்தாலோ இந்தப் போலித்தேசியவாதி ஒருபோதுமே ஆசாத் எனும் கொடுங்கோலனை ஆதரித்தோ அல்லது அவனைத் தலைவருடன் ஒரே தராசில் வைத்தோ பார்த்திருக்க மாட்டார் என்பது திண்ணம். ஆக, அவர் ஆசாத்தை ஆதரிப்பதன் ஒரே காரணம் அவன் புட்டினின் நண்பன் என்பது மட்டும்தான். தீவிர மேற்குலக எதிர்ப்புடன் அதே மேற்குலகில் வாழ்ந்துகொண்டு சர்வாதிகாரி புட்டினை வழிபடும் இவர் போன்றவர்களிடமிருந்து இதனைத்தவிர வேறு எதனை எதிர்பார்க்க முடியும்?  புலிகளால் தண்டிக்கப்பட்ட ஏனைய அமைப்புக்களின் செயற்பாடுகள் இவரைப் பொறுத்தவரையில் நியாயமாகப் படுகின்றதா? அல்லது அந்த அமைப்புக்களின் செயற்பாடுகள் புலிகளின் தலைமையின் பாதுகாப்பிற்கு அச்சசுருத்தலாக இருந்தது என்று இவரே நம்பும் சதிக்கோட்பாட்டிற்கு அப்பால் அவ்வமைப்புக்களின் செயற்பாடுகள் தமிழர்களின் நலனுக்கும் அவர்களின் இருப்பிற்கும் அச்சுருத்தலாக இருந்தன என்பதை இவர் அறிவாரா? இந்தியாவின் பின்புலத்திலிருந்து கொண்டு தமிழ்த்தேசியத்திற்கு எதிராகவும், அதனை முன்னெடுத்த புலிகளுக்கெதிராகவும் நாசகார சதிகளில் ஈடுபட்ட மாற்று இயக்கத்தவர்களை புலிகள் கொன்றார்கள். இனத்தின் விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்த‌ இவ்வமைப்புக்கள் இந்திய ஆக்கிரமிப்புப் படையோடு இணைந்து செயலாற்றியதே அவர்களின் தண்டனைகளுக்குக் காரணமாக இருந்தன என்பதை இவர் அறியாரா? இந்தியப் படைகளின் வருகைக்கு முன்னரான காலத்திலேயே புலிகளைப் பலவீனப்படுத்த இந்திய உளவுத்துறையுடன் டெலொ இணைந்து இயங்கியதே?  டெலோ அமைப்பின் போராளிகளைப் புலிகள் இயக்க மோதல்களில் கொன்றது உண்மை. ஆனால் குடும்பங்களை இழுத்துச் சென்றார்கள், படுகொலை செய்தார்கள் என்பது இந்தப் போலித்தேசியவாதியின் கற்பனை. சரி, ஆசாத்துடன் தலைவரை ஒப்பிட‌வேண்டிய தேவை என்ன? இந்திய உளவுத்துறையுடனும், இலங்கை அரசுடனும் சேர்ந்தியங்கிய மாற்று இயக்கங்களைப் புலிகள் த‌ண்டித்தார்கள், போராளிகளைக் கொன்றார்கள். இவை எல்லாமே தமிழர்களின் போராட்டம் பலவீனப்படுத்தப்படக் கூடாது என்பதற்காக மட்டுமே நடத்தப்பட்டவை. தமிழ் மக்களின் நலன்களுக்கெதிராகவும், இருப்பிற்கெதிராகவும் எதிரிகளுடன் சேர்ந்து அவர்கள் செயற்பட்டபோது புலிகளுக்கும் வேறு தெரிவுகள் இருந்திருக்கவில்லை என்பதே எனது நிலைப்பாடு. இதற்குத் தலைவரின் பாதுகாப்பு அச்சுருத்தலே காரணம் என்று இவர் பிதற்றுவது முழுக்க முழுக்க ஆசாத்தையும், பின்னால் நிற்கும் புட்டினையும் நியாயப்படுத்தத்தான் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை. ஏனென்றால் இன்று புட்டினும் ஆசாத்தும் செய்வது தமது அதிகாரத்திற்கும், பலத்திற்கும், அரசியல் எதிர்காலத்திற்கும், நலன்களுக்கும் எதிராக இருப்பார்கள் என்று தாம் எண்ணுவோரை வகை தொகையின்றி அழிப்பதுதான். இதில் பொதுமக்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்று எவருமே விதிவிலக்கில்லை.   தமிழ் மக்களை புலிகள் அடிமைகளாக ஒருபோதும் நடத்தியதில்லை. தமிழர்களின் விடுதலைக்காகப் போராடிய புலிகளுக்குத் தமிழ் மக்களை அடிமைகளாக நடத்தவேண்டிய தேவை எங்கிருந்து வந்தது என்பதை இந்தச் சதிக்கோட்பாட்டு கற்பனைவாதிதான் விளக்க வேண்டும். ஆனால் ஆசாத் ஒரு சர்வாதிகாரி, தனது இருப்பிற்காக தனது நாட்டு மக்களையே இரசாயணக் குண்டு உட்பட பல கனர ஆயுதங்களைக் கொண்டு கொன்றவன். இவனது ஆட்சிக்காலத்தில் மட்டுமே கொல்லப்பட்ட அப்பாவிச் சிரியர்களின் எண்ணிக்கை ஐந்து இலட்சம். இவனது கொலைகளுக்கு தொடர்ச்சியாக உறுதுணை வழங்கி வந்தது இன்னொரு சர்வாதிகாரியான புட்டின். ஆக இச்சர்வாதிகரிகளோடு தலைவரை ஒப்பிட்டு இவர் பேசுவதன் ஒரே நோக்கம், தலைவர் மீதும், புலிகள் மீது கறை பூசுவது அல்லது ஆசாத்தைற்கும், புட்டினுக்கும் வெள்ளை அடிக்க முனைவது. இச்சதிக்கோட்பாட்டு கற்பனைவாதியின் கருத்திற்குப் பச்சை குத்தியவர் பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. ஆனால் ஒரு விடயம், இப்பச்சை குத்தலுக்கான ஒரே காரணம் ஆசாத்திற்கும் புட்டினுக்கும் இடையே இருக்கும் நட்புத்தான். இத்தளத்தில் ரஸ்ஸியா ‍- உக்ரேன் மோதல் குறித்த முன்பொரு பதிவில் புலிகளை இந்தியா அழித்தது சரிதான் என்று தனது ரஸ்ஸிய சார்பு நிலைப்பாட்டிற்கு வலுச்சேர்க்க இங்கு பச்சை குத்தியவர் வெளிப்படையாகவே எழுதினார். அதாவது இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புலிகளை இந்தியா அழித்தது சரியானதுதான் என்று கூறியிருந்தார்.  இவர்கள் போன்றோரின் உண்மை முகம் அவப்போது வெளியே வருகிறது. இதைத்தவிர சொல்வதற்கு ஒன்றுமில்லை. 
    • அந்தக் கஞ்சி பழங்கஞ்சியா அல்லது புதுக் கஞ்சியா? உந்தக் க்ஞ்சியில் வெளுத்த  உடுப்பு போட்டு நீற்றாக அயன் செய்ய முடியுமா?  😁
    • பலரை நம்பி ஏமாந்த அனுபவத்தைப் போல சிலரை நம்பாமல் ஏமாறும் சந்தர்ப்பங்ளும் எதிர்காலத்தில் வரலாம். சீமான் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் தலைவர் என்ற வகையில் சம்பிரதாயத்திற்கு அதைத் செய்திருக்கலாம்.அவரது ஆதரவாளர்களும் தம்பிமார்களும் இதை விருமபமாட்டார்கள் என்பது உண்மை. இளங்கோவனுக்கு சம்பிரதாயத்துக்கு கூட சீமான் அஞ்சி செலுத்தாமல் விட்டிருந்தால்  எதிர்க்கட்சிகள் விமர்சிக்கலாம்.ஆதரவாளர்களும் கட்சிக்காரர்களும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்.மற்றும் வயறு முத்துவின் கவிதையைப்பற்றி அலட்டிக்கொள்ள அவசியமில்லை.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.