Jump to content

ராஜனி திராணகம: நெருக்கடிக்கு மத்தியில் அறிவும் செயற்பாடும்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ரதி said:

புலிகள் தான் செய்தார்கள் என்பதற்கு முறிந்த பனை காரணத்தை விட வேறு பல காரணங்கள் இருக்கு.,,மேலே ரஞ்சித் கேட்டு இருந்தார் ஏன் நிர்மலா இந்தளவிற்கு புலிகளை எதிர்க்கிறார் என்று அவர்கள் புலிகளோடு ஆரம்ப காலத்தில் இருந்து பயணித்தவர்கள் ...அவர்களே தங்கள் சகோதரியை கொலை செய்யும் போது தாங்க முடியாமற் தான் இருக்கும்..இவர்களது இயக்கத்துடனான பிரிவும் கூட  சகோதரியை கொலை செய்வதற்கு ஒரு காரணமாய் இருக்கலாம்

இருக்கலாம்.

ஆனால் நிர்மலாவுக்காக ரஜனியை கொன்றிருப்பார்கள் என நான் நினைக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • Replies 100
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

யாரிந்தத் தரப்புக்கள்? 2009 உடன் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டார்களே? அப்படியிருக்க, நீங்கள் நம்புவதன்படி புலிகளே இதனைச் செய்திருக்கிறார்கள் என்றால், இன்றும் உயிர்வாழும் அவர்களை நீங்கள் அடையாளம்

ரஞ்சித்

புலிகள் இன்று இல்லாமையினால் ஒவ்வொருவரும் தமக்குச் சரியென்கிற பார்வையில் தமது நியாயங்களை முன்வைத்து, அவற்றினைப் பின்பற்றாமமையினாலேயே புலிகள் அழிக்கப்பட்டனர் என்று சொல்வது வாடிக்கையாகிவிட்டது. புலிகளுக்

Justin

திராணகம, ராஜன் ஹூல், தயா சோமசுந்தரம் ...இப்படி பலர் சேர்ந்து எழுதிய முறிந்த பனை அந்தக் காலப்பகுதியின் எங்களுடைய "மக்கள் வரலாறு" என்பது என் அபிப்பிராயம். மக்கள் வரலாற்றிற்கும் "வரலாற்றிற்கும்: என்ன வேற

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

இருக்கலாம்.

ஆனால் நிர்மலாவுக்காக ரஜனியை கொன்றிருப்பார்கள் என நான் நினைக்கவில்லை.

நிர்மலா இயக்கத்தை விட்டு போயிட்டார் என்று அவரேயே சுட்டால்  நிர்மலாவிற்கு அதன் வலி தெரியாது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

  எனக்கு தனி மடலில் அனுப்புங்கள் 
 
இந்த சிதம்பர ரகசியம் ஆண் விரிவுரையாளர்கள் ஒரு சிலரின் மாணவிகளுடனான பாலியல் சேட்டைகள்/சில்மிசங்கள் என நினைக்கின்றேன். 

இந்த பிரச்சனை எல்லா காலத்திலும் உள்ளது. எந்தவித பீடமும் விதிவிலக்கில்லை. புகழ்பூத்த பேராசிரியர்களே மாணவிகளின் கைகளை பற்றி அன்பாக உரையாடல் செய்வது யாழ் பல்கலைக்கழகம் உட்பட எல்லா இடங்களிலும் நடைபெறும் ஒரு விடயம். 

இந்த விடயத்தில் புலிகள் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் விளங்கிய காலத்திலும்  பல பிரச்சனைகள் நடந்தன. இது பலருக்கும் தெரியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/9/2023 at 10:46, Justin said:

😂

இந்த hoole குடும்பம், நாகநாதன் குடும்பம், கதிர்காமர் குடும்பம், ஆர்னோல்ட் குடும்பம், Ashbury குடும்பம், Richard குடும்பம் மற்றும் இவர்களை சேர்ந்தவர்களுக்கு என்று ஒரு Agenda ( நிகழ்ச்சி நிரல்) உண்டு. ( except few individuals)  அது இலங்கைத் தமிழர்கள் ஒரு தேசமாக திரளக் கூடாது என்பது. (அதன் பொருள் அவர்கள் தமிழர் விரோத மனப்பான்மை கொண்டவர்கள் என்பது அல்ல)

இதற்கு காரணம் மதம். சைவ தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வட கிழக்கில் Protestant கிருஸ்தவர்களான இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக போய்விடும் என்கிற பயமே இவர்களின் இந்த குழு மனப்பான்மைக்குக் காரணம். சைவர்கள் தம்மை இந்துக்கள் அல்ல தாம் சைவர்களே என்று முழங்கினாலும் மேற்படி நபர்களுக்கு சைவம் என்பது இந்து மதத்தின் ஒரு கிளை என்பது தான் உள்ளார்ந்த எண்ணம். தவிர Brahminical   patriarchy செல்வாக்குச் செலுத்தும் இந்தியா அருகில் இருப்பதால் இயல்பாகவே உள்ள சைவ/ இந்து தமிழர்களுக்கு இடையிலான இணைப்பு தமது எதிர்கால நிலைத்திருப்புக்கு பங்கம் விளைவித்து விடும் என்று அஞ்சுகின்றார்கள்.

பிற்காலத்தைய யாழ் அரச பரம்பரை என்கிற மதிப்பும், படிப்பு மற்றும் சாதிசமயம் காரணமாக கொண்டுள்ள பதவிகளுக்கும், உறுதியாகக் கடமைக்கப்பட்ட  தமது கிறிஸ்தவ விசுவாசத்துக்கும் தமிழர் ஒரு தேசமாக உருவாகி விடுவது பாதகத்தை ஏற்படுத்தி விடும் என்று மனதார நம்புகின்றார்கள். இவ்வாறு இவர்கள் உணரவும் அதன் தொடர்ச்சியாக அவர்களுக்குள் உருவாகும் குழு மணப்பான்மையை மென்மேலும் வளர்க்கவும் சைவ தமிழர்கள் தெரிந்தும் தெரியாமலும் பங்களிக்கிறர்கள்

நன்கு படித்து இருப்பதும், பன்மொழித் திறனும், மேற்கத்தைய நாகரிகத்துடானான இரண்டு மூன்று ஒரு நூற்றாண்டுகளுக்கு மேற்பட்ட பிணைப்பும், கிறிஸ்தவ வேதகாமத்தின் பால் உள்ள நம்பிக்கையும் அதனால் இயல்பாகவே ஏற்பட்ட வாதத் திறமையும் ஏனைய தமிழ் சைவர்களை தம்மை விட ஒரு படி குறைத்து மதிப்பிட இவர்களை அனுமதிக்கிறது. அதனால்த்தானோ என்னவோ இவர்களுக்கு தடித்த வெள்ளாளர் என்கிற பட்டமும் கிடைத்து இருக்கின்றது

இவர்களுக்கு இந்தியாவில் பிடிப்பு இல்லை, அதேசமயம் தமிழ் தமிழ் என்று மார் தட்டும் தமிழர் மேலும் ஓரளவுக்கு மேல் பற்றும் இல்லை.

மனித உரிமைகளை நசுக்கி உருவாக்கப்பட்ட மேற்கத்தய நாடுகளில் லீபரல் நிலையை எடுக்கும் இவர்கள் அதே தாராளவாதக் கொள்கையை நாடே அடையாத தமிழரிடம் சமர்ப்பிப்பார்கள்

தமிழர்களுக்கு என்று ஒரு நாடு தேவையா என்று இவர்களிடமும் பெரும்பான்மை இந்திய பிராமணர்களிடமும் கேட்டுப்பாருங்கள், இருவரிடமும் இருந்தும் கிட்டத்தட்ட ஒரே பதில் தான் வரும்

உள்ளூர தமிழர்களாக இவர்கள் உணருவதால் இலங்கையின் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தால் இவர்களும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனாலும் தமிழர் ஒரு தேசமாக ஒன்றுப்படுவதால் ஏற்படும் சாதக பாதகங்களைக் கருத்தில் கொண்டு  ஒன்றுப்பட்ட இலங்கைக்குள் மத்திய அரசு அதிக அதிகாரங்களைக் கொண்டிருக்கும் ஒரு தீர்வை, அதே சமயம் தமிழர்கள் அதிக அதிகாரங்கள் இன்றி ஆனால் நிம்மதியாக நடமாடித்திரியத் தக்கனவாறு ஒரு தீர்வை விரும்புகின்றார்கள். அப்பொழுது தான் 1980 கள் வரைக்கும் இருந்த தமது அசைக்க முடியாத நிலையை இன்னமும் தக்க வைக்க முடியும் என்று நம்புகின்றார்கள்.

இதனால்த் தான்  தமிழர்களிடம் உள்ள  உள்ளார்ந்த பிரச்சனைகளை பொதுவெளியில் பேசியும் எழுதியும் கிண்டியும் கிளறியும் மறுவாசிப்புச் செய்கிறார்கள். பிழையுள்ள உய்யவே முடியாத சமூகம் தமிழ் சமூகம் என்கின்ற மாயையை உருவாகுகின்றார்கள். நடுநிலை பேணுவதாக நம்பவைத்துக்கொண்டு அடக்கப்படும் இனத்தின் மீதே தமது துப்பாக்கியை நீட்டுகின்றார்கள் 

அதனாலதான் தமிழர்கள் தமக்கேன ஒரு தேசத்தை அமைத்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கும் இந்தியாவும், மேற்கு நாடுகளும்  இவர்களின் தாளத்துக்கு பக்கவாத்தியம் பாடுகின்றார்கள், பொதுச் சபைகளில் முன்னிலைப் படுத்தப்படுகிறார்கள்.

Rajan Hoole,Ratnajeevan Hoole, DBS jeyaraj ஆகியோர் எழுதிய எல்லாக் கட்டுரைளையும் ஒருவர் ஒரு case - study ஆகச் செய்தால் அவர் மேற்படி முடிவுக்குத் தான் வர முடியும்

Ratnajeevan Hoole ஆறுமுகநாவலரைப் பற்றி கீழ்த்தரமாக எழுதிவரக் காரணம் ஆறுமுகனாவலர் செய்த சில பல விரும்பத்தகாத செயல்களை வெறுமனே விமர்சிப்பதை மட்டும் நோக்கமாகக் கொண்டில்லை, மாறாக அவர் யாழ்ப்பாணத்தில் இவர்களின் நிலையை அசைக்கப் பார்த்தார் என்பது தான்.

The Broken Palmyra நூலை முழுதாக எவரேனும் படித்து இருந்தால் அதன் முழுக் கருப்பொருளும் IPKF வடக்கில் அரங்கிற்றிய அத்தனை அட்டூழியங்களுக்கும் காரணமே LTTE அவர்களை வெறுப்பேற்றியது என்பது ஆகத் தான் இருக்கும் 

மேலோட்டமாகப் பார்த்தால் UTHR ( JB) reports அரசு மற்றும் புலிகள் இரு தரப்பயுமே சில இடங்களில் பாராட்டி இருக்கும். ஆனால் The good deeds of two sides reported Lopsidedly. போர் நடந்தபொழுது புலிகள் எப்படி தம்மோடு இருந்த மக்களுக்கு உதவினர் என்று எதுவுமே சொல்லாத அவர்களின் அறிக்கையோ War criminal ஜானகப் பெரேராவை புகழ்ந்து இருக்கும்

சர்வதேச அமைப்புக்கள் ஒரு சாட்டுக்கேனும் இலங்கை அரசு மீது மனித உரிமை மீறப்படுதுவதாக குற்றம் சுமந்தும் பொழுது இலங்கை அரசுக்கு UTHR ( JB) யின் அறிக்கைகள் உதவி செய்கின்றது

"UTHR was very appreciative of the fact with few exceptions "

இதை சொன்னது செம்மணி படுகொலையை செய்த அரசின் அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா

இப்படி எல்லாப் பக்கமும் தமிழர்களின் எதிரிகளுக்கே இவர்கள் வாள் எடுத்துக் கொடுக்கிறார்கள்

அனைத்து தமிழர்களும் கிறிஸ்தவர்களாக மாறும் பட்சத்தில் இவர்கள் தனித் தமிழ் ஈழம் கருதி தமது உடல் பொருள் ஆவி அனைத்தையும் தந்து ஆவன செய்வர் அல்லது அப்படி ஒன்று நடக்க விடாமல் இருக்க தமது உடல் பொருள் ஆவி அனைத்தையும் கொடுப்பர்

இவர்கள் ஒருவகையில் தமிழ்நாட்டில் இயங்கும் குருமூர்த்தி சோ நிலையை ஒத்தவர்கள்.

ஏமக்காகப் போராடிய பிரபாகரன் அவரோடு போராடி இறந்த பல்லாயிரம் மாவீரர் எல்லோருமே ராஜனி திரணகமவைப்போல் தமிழர்கள் தான். ராஜினிக்காக துடிக்கும் இதயம் தமிழர்களுக்கு என்று நாடு கேட்டுப் போராடிய மேற்படி மாவீர்களுக்காக துடித்து இருக்காது.

  • Like 2
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/9/2023 at 01:26, island said:

இங்கு நடைபெறும் சம்பாசனைகளில் தெரியவருவது என்ன?

மொத்தத்தில் துரோகிகள், களையெடுப்பு நடவடிக்கைகள் போட்டி போட்டுக் கொண்டு  பெரும்பாலான சந்தர்பங்களில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவே உணர்கிறேன். காழ்புணர்வு, சகிப்புத்தன்மையீனம், உணர்சசி வசப்பட்டதால் புத்தி பேதலித்தமை ஆகிய இன்னாரென்ன காரணிகளே இதற்கு காரணமாக அமைந்தது ஆனால்,   இவை எல்லாமாக சேர்ந்து எதிரிக்கு பலம் சேர்தது எமது ஒட்டு மொத்த போராட்டத்தையும் பின்னோக்கி செலுத்தியதை உணராமலேயே நீண்ட காலத்தை நாம் கழித்தோம். இயக்க/ கட்சி  வேறுபாடு இன்றி அனைவரும் இதற்கு பொறுப்பு. 

இவற்றை பாடமாக எடுத்து எல்லோரும் ஒருங்கிணைந்து புதிய புதிய உத்திகளை பாவித்து எமது இனத்தின் இருப்பை தக்க வைப்பதே தற்போது சிந்திக்க வேண்டிய முதன்மைப் பணி. 

அது சரி இந்த “முறிந்த பனை” புத்தகத்தை எங்கு வாங்கலாம்? 

எல்லா விடுதலை போராட்ட அமைப்புக்களும் தமிழ் மக்கள் வாழ்வினை வளப்படுத்தும் நோக்குடனேயே உருவாக்கப்பட்டன. தமிழீழ என்ற சொல்லை அவை தமது பெயரில் இணைத்தன. கடைசில் தமிழ் மக்களை, தமது சொந்த இனத்தையே தமது வசதிக்கு கொலை செய்தும், அவலத்துக்கு உள்ளாக்கியும் சீரழித்தன. 

கொலை செய்வது என்பது அது ஒரு குற்றச்செயலே அல்ல எனும்படியான மனநிலை ஏற்பட்டு சொந்த இனத்தின் குருதியை உருசி பார்க்கப்பட்டது. 

மக்கள் கொலை செய்யப்பட்டபோது சில சமயங்களில் வெளிப்படையாக யார் செய்தார்கள்  என தெரிவிக்கப்பட்டது. சில சமயங்களில் ஆளையாள் இவன் செய்தான் அவன் செய்தான் என்று கூறி ஒருவர்மேல் ஒருவர் பழி சொல்லப்பட்டது. சில சமயங்களில் பெரும் மெளனம் காக்கப்பட்டது. யார் கொன்றார்கள் என விசயம் தெரிந்தவர்களும் பயத்தில் அமைதி ஆகிவிட்டார்கள். பலர் ஊகம் செய்ய தொடங்கினார்கள். 

அண்மையில் திண்ணை பகுதியில் ஒரு யூரியூப் தொடுப்பு பார்த்தேன். அதில் ஒருத்தன் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மிகவும் சாதாரணமாக வாளை உருவி அங்கு வேலை செய்யும் ஒருவரை வெட்டுகின்றான். 

இங்கே கவனிக்க வேண்டிய விடயம் என்ன என்றால்...

ஆளாளுக்கு நீதிபதியாகி, நீதி மன்றமாகி அடுத்தவரின்  உயிரை எடுக்கும் அளவுக்கு தமது சொந்த இனத்தில் உரிமை எடுத்துக்கொண்டார்கள். அது இப்போதும் தொடர்கின்றது. 

சொந்த இனத்தில் செய்யப்படும் கொலைகளை நியாயப்படுத்தவும் பெரியதொரு ரசிகர்கூட்டம் எமது சமூகத்தில் உள்ளது. 

கொலை செய்வது தவறு எனும் பயம் இல்லாதுபோனால் அந்த சமூகம் உருப்படுமா? 

கொலை செய்யப்பட்டவர்கள் நினைவுகூறப்படும் இவ்வாறான சமயங்களில் இப்படியான தவறை நான் செய்யக்கூடாது, ஊக்குவிக்ககூடாது என ஒவ்வொருவரும் நினைத்தால் அதுவே எமது உரையாடலுக்கு கிடைக்கும் ஒரு வெற்றி. 

  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பகிடி said:

இந்த hoole குடும்பம், நாகநாதன் குடும்பம், கதிர்காமர் குடும்பம், ஆர்னோல்ட் குடும்பம், Ashbury குடும்பம், Richard குடும்பம் மற்றும் இவர்களை சேர்ந்தவர்களுக்கு என்று ஒரு Agenda ( நிகழ்ச்சி நிரல்) உண்டு. ( except few individuals)  அது இலங்கைத் தமிழர்கள் ஒரு தேசமாக திரளக் கூடாது என்பது. (அதன் பொருள் அவர்கள் தமிழர் விரோத மனப்பான்மை கொண்டவர்கள் என்பது அல்ல)

இதற்கு காரணம் மதம். சைவ தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வட கிழக்கில் Protestant கிருஸ்தவர்களான இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக போய்விடும் என்கிற பயமே இவர்களின் இந்த குழு மனப்பான்மைக்குக் காரணம். சைவர்கள் தம்மை இந்துக்கள் அல்ல தாம் சைவர்களே என்று முழங்கினாலும் மேற்படி நபர்களுக்கு சைவம் என்பது இந்து மதத்தின் ஒரு கிளை என்பது தான் உள்ளார்ந்த எண்ணம். தவிர Brahminical   patriarchy செல்வாக்குச் செலுத்தும் இந்தியா அருகில் இருப்பதால் இயல்பாகவே உள்ள சைவ/ இந்து தமிழர்களுக்கு இடையிலான இணைப்பு தமது எதிர்கால நிலைத்திருப்புக்கு பங்கம் விளைவித்து விடும் என்று அஞ்சுகின்றார்கள்.

பிற்காலத்தைய யாழ் அரச பரம்பரை என்கிற மதிப்பும், படிப்பு மற்றும் சாதிசமயம் காரணமாக கொண்டுள்ள பதவிகளுக்கும், உறுதியாகக் கடமைக்கப்பட்ட  தமது கிறிஸ்தவ விசுவாசத்துக்கும் தமிழர் ஒரு தேசமாக உருவாகி விடுவது பாதகத்தை ஏற்படுத்தி விடும் என்று மனதார நம்புகின்றார்கள். இவ்வாறு இவர்கள் உணரவும் அதன் தொடர்ச்சியாக அவர்களுக்குள் உருவாகும் குழு மணப்பான்மையை மென்மேலும் வளர்க்கவும் சைவ தமிழர்கள் தெரிந்தும் தெரியாமலும் பங்களிக்கிறர்கள்

நன்கு படித்து இருப்பதும், பன்மொழித் திறனும், மேற்கத்தைய நாகரிகத்துடானான இரண்டு மூன்று ஒரு நூற்றாண்டுகளுக்கு மேற்பட்ட பிணைப்பும், கிறிஸ்தவ வேதகாமத்தின் பால் உள்ள நம்பிக்கையும் அதனால் இயல்பாகவே ஏற்பட்ட வாதத் திறமையும் ஏனைய தமிழ் சைவர்களை தம்மை விட ஒரு படி குறைத்து மதிப்பிட இவர்களை அனுமதிக்கிறது. அதனால்த்தானோ என்னவோ இவர்களுக்கு தடித்த வெள்ளாளர் என்கிற பட்டமும் கிடைத்து இருக்கின்றது

இவர்களுக்கு இந்தியாவில் பிடிப்பு இல்லை, அதேசமயம் தமிழ் தமிழ் என்று மார் தட்டும் தமிழர் மேலும் ஓரளவுக்கு மேல் பற்றும் இல்லை.

மனித உரிமைகளை நசுக்கி உருவாக்கப்பட்ட மேற்கத்தய நாடுகளில் லீபரல் நிலையை எடுக்கும் இவர்கள் அதே தாராளவாதக் கொள்கையை நாடே அடையாத தமிழரிடம் சமர்ப்பிப்பார்கள்

தமிழர்களுக்கு என்று ஒரு நாடு தேவையா என்று இவர்களிடமும் பெரும்பான்மை இந்திய பிராமணர்களிடமும் கேட்டுப்பாருங்கள், இருவரிடமும் இருந்தும் கிட்டத்தட்ட ஒரே பதில் தான் வரும்

உள்ளூர தமிழர்களாக இவர்கள் உணருவதால் இலங்கையின் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தால் இவர்களும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனாலும் தமிழர் ஒரு தேசமாக ஒன்றுப்படுவதால் ஏற்படும் சாதக பாதகங்களைக் கருத்தில் கொண்டு  ஒன்றுப்பட்ட இலங்கைக்குள் மத்திய அரசு அதிக அதிகாரங்களைக் கொண்டிருக்கும் ஒரு தீர்வை, அதே சமயம் தமிழர்கள் அதிக அதிகாரங்கள் இன்றி ஆனால் நிம்மதியாக நடமாடித்திரியத் தக்கனவாறு ஒரு தீர்வை விரும்புகின்றார்கள். அப்பொழுது தான் 1980 கள் வரைக்கும் இருந்த தமது அசைக்க முடியாத நிலையை இன்னமும் தக்க வைக்க முடியும் என்று நம்புகின்றார்கள்.

இதனால்த் தான்  தமிழர்களிடம் உள்ள  உள்ளார்ந்த பிரச்சனைகளை பொதுவெளியில் பேசியும் எழுதியும் கிண்டியும் கிளறியும் மறுவாசிப்புச் செய்கிறார்கள். பிழையுள்ள உய்யவே முடியாத சமூகம் தமிழ் சமூகம் என்கின்ற மாயையை உருவாகுகின்றார்கள். நடுநிலை பேணுவதாக நம்பவைத்துக்கொண்டு அடக்கப்படும் இனத்தின் மீதே தமது துப்பாக்கியை நீட்டுகின்றார்கள் 

அதனாலதான் தமிழர்கள் தமக்கேன ஒரு தேசத்தை அமைத்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கும் இந்தியாவும், மேற்கு நாடுகளும்  இவர்களின் தாளத்துக்கு பக்கவாத்தியம் பாடுகின்றார்கள், பொதுச் சபைகளில் முன்னிலைப் படுத்தப்படுகிறார்கள்.

Rajan Hoole,Ratnajeevan Hoole, DBS jeyaraj ஆகியோர் எழுதிய எல்லாக் கட்டுரைளையும் ஒருவர் ஒரு case - study ஆகச் செய்தால் அவர் மேற்படி முடிவுக்குத் தான் வர முடியும்

Ratnajeevan Hoole ஆறுமுகநாவலரைப் பற்றி கீழ்த்தரமாக எழுதிவரக் காரணம் ஆறுமுகனாவலர் செய்த சில பல விரும்பத்தகாத செயல்களை வெறுமனே விமர்சிப்பதை மட்டும் நோக்கமாகக் கொண்டில்லை, மாறாக அவர் யாழ்ப்பாணத்தில் இவர்களின் நிலையை அசைக்கப் பார்த்தார் என்பது தான்.

The Broken Palmyra நூலை முழுதாக எவரேனும் படித்து இருந்தால் அதன் முழுக் கருப்பொருளும் IPKF வடக்கில் அரங்கிற்றிய அத்தனை அட்டூழியங்களுக்கும் காரணமே LTTE அவர்களை வெறுப்பேற்றியது என்பது ஆகத் தான் இருக்கும் 

மேலோட்டமாகப் பார்த்தால் UTHR ( JB) reports அரசு மற்றும் புலிகள் இரு தரப்பயுமே சில இடங்களில் பாராட்டி இருக்கும். ஆனால் The good deeds of two sides reported Lopsidedly. போர் நடந்தபொழுது புலிகள் எப்படி தம்மோடு இருந்த மக்களுக்கு உதவினர் என்று எதுவுமே சொல்லாத அவர்களின் அறிக்கையோ War criminal ஜானகப் பெரேராவை புகழ்ந்து இருக்கும்

சர்வதேச அமைப்புக்கள் ஒரு சாட்டுக்கேனும் இலங்கை அரசு மீது மனித உரிமை மீறப்படுதுவதாக குற்றம் சுமந்தும் பொழுது இலங்கை அரசுக்கு UTHR ( JB) யின் அறிக்கைகள் உதவி செய்கின்றது

"UTHR was very appreciative of the fact with few exceptions "

இதை சொன்னது செம்மணி படுகொலையை செய்த அரசின் அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா

இப்படி எல்லாப் பக்கமும் தமிழர்களின் எதிரிகளுக்கே இவர்கள் வாள் எடுத்துக் கொடுக்கிறார்கள்

அனைத்து தமிழர்களும் கிறிஸ்தவர்களாக மாறும் பட்சத்தில் இவர்கள் தனித் தமிழ் ஈழம் கருதி தமது உடல் பொருள் ஆவி அனைத்தையும் தந்து ஆவன செய்வர் அல்லது அப்படி ஒன்று நடக்க விடாமல் இருக்க தமது உடல் பொருள் ஆவி அனைத்தையும் கொடுப்பர்

இவர்கள் ஒருவகையில் தமிழ்நாட்டில் இயங்கும் குருமூர்த்தி சோ நிலையை ஒத்தவர்கள்.

ஏமக்காகப் போராடிய பிரபாகரன் அவரோடு போராடி இறந்த பல்லாயிரம் மாவீரர் எல்லோருமே ராஜனி திரணகமவைப்போல் தமிழர்கள் தான். ராஜினிக்காக துடிக்கும் இதயம் தமிழர்களுக்கு என்று நாடு கேட்டுப் போராடிய மேற்படி மாவீர்களுக்காக துடித்து இருக்காது.

இவர்களது UTHR செயற்பாடுகள் தொடர்பாக, நானும் ஏறக்குறைய இதே விதமான கருத்தையே கொண்டிருக்கிறேன். 

ஒரே நோக்கத்தைக் கொண்ட போராளிகளின் தியாகங்களை மதிக்காது, தம்க்கு விரும்பிய ஒருசிலரிற்காக மட்டும் கண்ணீர் வடிப்பது நியாயத்தின்பாற் பட்டதல்ல, சுயநலத்தின்பாற்பட்டதே. 

  • Thanks 1
  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

ஆயிரக்கணக்கான கொலைகள் நிகழ்த்தப்பட்டன. ஆனால் இந்தக்கொலை அவ்வளவு சீக்கிரமாக மறக்கப்படக்கூடியது அல்ல. அடுத்த வருடமும், இன்னும் தொடர்ந்தும் கட்டுரைகள், நினைவுபகிர்வுகள் வரத்தான் போகின்றன. தேவை ஏற்பட்டால் நீதி விசாரணையும் மேற்கொள்ளப்படலாம். அதை தடுப்பதற்கான உரிமை எவருக்கும் இல்லை. 

என்னய்யா நான் எழுதினதையே எனக்கு திருப்பி எழுதுறீங்கள் 
வாசிச்சுதான் எழுதுறீங்களா? 

நீதி விசாரணை வேண்டும் 
அனால் அதை செய்வதுக்கு சிங்களவன் 
தமிழனை போல சுயநலவாதி இல்லை என்று நானே எழுதி இருக்கிறேனே.

யாருக்கும் உரிமை இல்லை என்று கொஞ்சம் கனதியா எழுதுறீங்கள் 
நீங்கள் ஏதும் நீதிமன்று கட்டி விசாரிக்க போறீங்களா?
எனது முன் கூட்டிய வாழ்த்துக்கள்.
நீங்கள் விசாரித்தால் நீதியும் நேர்மையும் ஏன் உண்மையும் எந்த கலப்படமும் இல்லாது இருக்கும் 
என்பது எனது நம்பிக்கை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரதி said:

உங்கள் அம்மாவை,சகோதரியை, மகளை நடு ரோட்டில் வைத்து இப்படி தேவையில்லாமல்  கொலை செய்து  இருந்தால் உங்கள் நிலைப்பாடு எப்படி இருக்கும்?...உங்களிடமிருந்தோ ,நெடுக்கரிடமிருந்தோ  அவ சாக வேண்டியவ தான் என்ட கருத்தும் ,பழசை  ஏன் திரும்ப,திரும்ப தூக்கி பிடிக்கிறார்கள் என்ட  கருத்தும் தான் தென்படுகிறது...இன்னும் 10 வருசத்தின் பின் மு.வாய்க்காலில் இறந்த மக்களுக்காய் போராடினால் இதைத் தான் சொல்வீர்களா?...கொஞ்சசமாவது மனசாட்சி  உள்ள மனிதராய் நடந்து கொள்ளுங்கள் 

அக்கா வணக்கம்!
கன நாள் கடந்து காண்பதில் மகிழ்ச்சி நலமாக இருக்கிறீர்களா?
வந்த அவசரத்தில் எதையாவது கொட்டிவிட்டு போகலாம் என்று கொட்டியமாதிரி இருக்கு 
கொஞ்சம் வாசித்துவிட்டு பதில் எழுத முடியாதா? ஏதும் நேரமினமை அல்லது வேறு பிரச்சனைகள் ஏதும் இருப்பின் ... அவைகள் முடிந்த பின்பு எழுதும் கருத்தை வாசித்துவிட்டு பதில் எழுதினால் 
கொஞ்சம் சம்மந்தமாக இருக்கும் அல்லவா? 

அவ சாகவேண்டும் என்று எங்கு எழுதி இருக்கு? 
முதலில் உண்மைகளை அறிந்துகொள்ளுங்கள் பின்பு உங்கள் வார்த்தைகளை கொட்டுங்கள் 
அல்லது எழுதிய கருத்துக்கு பதில் எழுதுங்கள். 
ரஜனியே புலிகளின் ஆதரவாளர்தான் ...ரஜனி இறந்தது என்பது புலிகளுக்குதான் பெரும் இழப்பு முக்கியமாக ராஜதந்திர ரீதியில் புலிகள் எமது விடுதலை போராட்டம் சந்தித்த எவ்ளவோ இழப்புகளை சீர் செய்திருக்க கூடிய ஒருவர் ரஜனி. அதற்கு காரணம் எதற்காகவும் உண்மைக்கு புறம்பாக வளையதாவர் ரஜனி.முறிந்த பனை எழுதிக்கொண்டு இருக்கும்போது அதில் இந்திய இராணுவ அடடூழியங்களை எழுத்துவத்துக்கு மற்றவர்கள் மறுத்து இருந்தார்கள் ( இதை நான் சொல்லவில்லை அவர்களே சொல்லி இருக்கிறார்கள்) அவர்கள் அதை எழுதியதன் நோக்கம் வேறு ரஜனி எழுதிய நோக்கம் வேறு 

ரஜனி மற்றவர்கள்போல இந்திய ராவுக்கு விலை போக கூடியவராக இருக்கவில்லை தவிர அப்போது யாழ் பல்கலைக்கழக  UTHR  தலைமைத்துவம் வேறு ரஜனியிடமே இருந்தது. ரஜனியை போட்டுத்தள்ளுவதன் மூலம் இந்தியா  ஒரு கல்லில் இரு மாங்காய் வீழ்த்தியது. ஒன்று புலிகள் சார்பான ஒருவரை அதில் இருந்து நீக்குவது  இரண்டாவது  செல்வி போன்ற எந்த துரோகத்துக்கும் துணைபோக கூடிய புலி எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்து  செல்ல கூடியவர்களிடம் UTHR தலைமையத்தை கொடுப்பது. 

இந்திய இராணுவம் வெளியேறு முன்னர் அவசரமாக செய்ய வேண்டிய காரியமாக ராவின் குறியாக அது இருந்தது.  மற்றைய UTHR  கும்பல் கொழும்பில் இருந்துகொண்டு பின்னாளில் என்ன செய்தது என்பது எல்லோருக்கும் (ஈழ தமிழர்களுக்கு) தெரிந்தது. அவர்களால் மண்டை கழுவிய கொஞ்ச கூட்டம் இப்போது இங்கு அமெரிக்காவில்தான்  வாழ்கிறது. அவர்களை நொந்து பயன் இல்லை படித்தவர்கள் என்ற மமதை தவிர்த்து  தாம் மூளைச்சலவை செய்யப்படடோம் என்பது தெரியாமல் வாழுகிறார்கள் ஒரு சிலர் பின்னாளில் கொஞ்சம்  புரிய தொடங்கி இருந்தாலும் அவர்கள் ஈகோ வெளிவர விடுவதில்லை என்று எண்ணுகிறேன் இருவர்  இங்கு அரசியலிலும் ஈடுபடுகிறார்கள் .... ஈழத்தமிழனுக்கு ஒரு சல்லி லாபம் இல்லை. 

( இன்னொரு தகவல் நீங்கள் காரசாரமாக எழுதியதால் எழுதுகிறேன்.... இங்கு கருத்து எழுதுபவர்களில் புலிகளால் ஆயுதமுனையில் கொண்டுசெல்ல பட்டது நான் ஒருவன்தான். தாஸ் குரூப் என்பதால் தப்பி வந்தோம் இல்லை என்றால் எப்போ மண்ணாகி இருப்போம். எனது மாமா இருவருவரை புலிகள்தான் கொன்றார்கள் ஒருவரை சூசையே நேரடியாக செய்திருந்தார். அவரே பின்பு வந்து மன்னிப்பு கேட்டுவிட்டு போனார் விசாரணைக்குத்தான் அடித்தோம் அடி தவறுதலாக மண்டையில் பட்டு இறந்துவிட்டார் என்று சொன்னார். அவரின் மகள் பெருசாகி இருந்தபோது சூசை அதுக்குதான் முதன் முதலில் 90இல் தன மனைவியுடன் வந்திருந்தார் 20 ஆயிரம் ரூபா காசும் கொடுத்தார் அவர்கள் வாங்கவில்லை. அவர்களும் உங்களைபோலதான் இடைக்கிடை புலிவாந்தி எடுப்பதும் ( நான் நினைக்கிறன் அது ஒரு ட்ரெண்ட் என்று) பின்பு எல்லோரும் எங்கள் பெடியள்தானே என்பதுமாக வாழ்கிறார்கள்) 

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

உங்கள் அம்மாவை,சகோதரியை, மகளை நடு ரோட்டில் வைத்து இப்படி தேவையில்லாமல்  கொலை செய்து  இருந்தால் உங்கள் நிலைப்பாடு எப்படி இருக்கும்?...

இப்படியேதான் இருக்கும் 
இன விடுதலை என்னும் மகத்தான போருக்குள் 
என் வீட்டு பிரச்னை சொந்த பிரச்சனையை புகுத்தி புலிவாந்தி எடுக்கும் கீழான நிலைக்கு 
ஒருநாளும் போயிருக்க மாட்டேன் 

  • Like 4
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரதி said:

உங்கள் அம்மாவை,சகோதரியை, மகளை நடு ரோட்டில் வைத்து இப்படி தேவையில்லாமல்  கொலை செய்து  இருந்தால் உங்கள் நிலைப்பாடு எப்படி இருக்கும்?...உங்களிடமிருந்தோ ,நெடுக்கரிடமிருந்தோ  அவ சாக வேண்டியவ தான் என்ட கருத்தும் ,பழசை  ஏன் திரும்ப,திரும்ப தூக்கி பிடிக்கிறார்கள் என்ட  கருத்தும் தான் தென்படுகிறது...இன்னும் 10 வருசத்தின் பின் மு.வாய்க்காலில் இறந்த மக்களுக்காய் போராடினால் இதைத் தான் சொல்வீர்களா?...கொஞ்சசமாவது மனசாட்சி  உள்ள மனிதராய் நடந்து கொள்ளுங்கள் 

உங்கள் கேள்விக்கான பதில்கள் ஏலவே தரப்பட்டுள்ளன. வழமை போல்.. வாசிக்கவில்லைப் போலும்.

On 25/9/2023 at 11:55, nedukkalapoovan said:

ஒரு கல்வியாளராக.. ரஜனி திரணகம பாரட்டுக்குரியவர். ஒரு இடர்கால சமூகத்தின் வெளிப்பாடாக அவர் சொல்ல வந்த சில விடயங்களை முறிந்த பனை காவி வந்திருக்கிறது.

அதற்காக.. ஒரு இனப்படுகொலையை.. சொந்த நில ஆக்கிரமிப்பை.. சொந்த மக்களின் சுதந்திரத்தை.. உரிமையை எதிரிக்கு பறிக்கொடுக்க வக்காளத்து வாங்கி நின்ற யாழ் பல்கலைக்கழக விரிபுரையாளர்கள் மனித உரிமைகள் அமைப்பு என்பது.. இன்று வரை வெளிச் சொல்ல தவறவிட்ட மனித உரிமை மீறல் விடயங்கள்.... சொந்த இன அழிப்புப் பற்றிய அக்கறையின்மை என்பது அவர்களின் உண்மை முகத்திரையை எப்போதோ கிழித்தெறிந்துவிட்டது.

நவாலியில் எம் உறவுகள் குண்டு வீசிக் கொல்லப்பட்ட போதும்.. நாகர்கோவிலில்.. பள்ளிக்குழந்தைகள் மீது குண்டு வீசிக் கொன்ற போதும்.. இதே ரஜனி திரணகம வழிவந்த யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்.. மனித உரிமை அமைப்பு விட்ட அறிக்கைகளை வாசியுங்கள். யாருக்கு மனச்சாட்சி இல்லை.. எவ்வளவு ஆழமாக... தேசம் போன்ற ஊடகங்கள்.. சதா கக்கும்.. புலி எதிர்ப்பு வாந்திகளை வாசித்ததன் கொடூர விளைவுகள் தங்கள் மனங்களில்.. குடிகொண்டிருக்குது என்பது விளங்கலாம். 

13 hours ago, ரதி said:

ஒரு  மாதிரி நெடுக்கரோடு சேர்ந்து திரியை ...யாய்ச்சு...உண்மையிலேயே தெரியாமல் தான் கேட்க்கிறேன் எந்த இயக்கம் இவரை கொன்றோம் என்று உரிமை கோரியது....அற்புதனா?...அவர் தனது பத்திரிகையில் எழுதிய அனைத்தும் உண்மையா ?...நேரடியாய் பதில் தருவீர்கள் என நம்புகிறேன்.

On 25/9/2023 at 20:49, nedukkalapoovan said:

அற்புதன் கொழும்பு நகரில்.. வசதியாக வாழ்ந்து கொண்டு.. ஈபிடிபி பத்திரியையின் விற்பனை உயர்ச்சிடைய எழுதிய எழுத்துக்களை மற்றவர்களும் ஆதரிக்கக்கூடும். ஆனால்.. எல்லாம் உண்மை என்று சொல்லிக் கொள்ள வேண்டியதில்லை. ஆனால் அவர்களே உண்மைக்கான சாட்சியங்களை விட்டுச் சென்றிருக்க வாய்ப்புள்ளது. அதனால் தான் அற்புதனை போட்டுத் தள்ளிட்டார்கள். அதற்கும் ரஜனி திரணகமவின் பிள்ளைகளின் முயற்சியே காரணம் என்று காரணம் கண்டுபிடிக்கமாட்டீர்கள் என்று நம்புவோமாக. 

  அற்புதன் யாருக்காக உழைத்தாரோ அவையே அற்புதனை கொல்ல வேண்டியது ஏனோ..??!

Edited by nedukkalapoovan
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரதி said:

நிர்மலா இயக்கத்தை விட்டு போயிட்டார் என்று அவரேயே சுட்டால்  நிர்மலாவிற்கு அதன் வலி தெரியாது 

அட அக்கா அண்ணனைமாதிரியே யோசிக்கிறா!! இருக்காதா பின்ன, ஒரே ரத்தமாச்சே!!!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

எல்லா விடுதலை போராட்ட அமைப்புக்களும் தமிழ் மக்கள் வாழ்வினை வளப்படுத்தும் நோக்குடனேயே உருவாக்கப்பட்டன. தமிழீழ என்ற சொல்லை அவை தமது பெயரில் இணைத்தன. கடைசில் தமிழ் மக்களை, தமது சொந்த இனத்தையே தமது வசதிக்கு கொலை செய்தும், அவலத்துக்கு உள்ளாக்கியும் சீரழித்தன. 

கொலை செய்வது என்பது அது ஒரு குற்றச்செயலே அல்ல எனும்படியான மனநிலை ஏற்பட்டு சொந்த இனத்தின் குருதியை உருசி பார்க்கப்பட்டது. 

மக்கள் கொலை செய்யப்பட்டபோது சில சமயங்களில் வெளிப்படையாக யார் செய்தார்கள்  என தெரிவிக்கப்பட்டது. சில சமயங்களில் ஆளையாள் இவன் செய்தான் அவன் செய்தான் என்று கூறி ஒருவர்மேல் ஒருவர் பழி சொல்லப்பட்டது. சில சமயங்களில் பெரும் மெளனம் காக்கப்பட்டது. யார் கொன்றார்கள் என விசயம் தெரிந்தவர்களும் பயத்தில் அமைதி ஆகிவிட்டார்கள். பலர் ஊகம் செய்ய தொடங்கினார்கள். 

அண்மையில் திண்ணை பகுதியில் ஒரு யூரியூப் தொடுப்பு பார்த்தேன். அதில் ஒருத்தன் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மிகவும் சாதாரணமாக வாளை உருவி அங்கு வேலை செய்யும் ஒருவரை வெட்டுகின்றான். 

இங்கே கவனிக்க வேண்டிய விடயம் என்ன என்றால்...

ஆளாளுக்கு நீதிபதியாகி, நீதி மன்றமாகி அடுத்தவரின்  உயிரை எடுக்கும் அளவுக்கு தமது சொந்த இனத்தில் உரிமை எடுத்துக்கொண்டார்கள். அது இப்போதும் தொடர்கின்றது. 

சொந்த இனத்தில் செய்யப்படும் கொலைகளை நியாயப்படுத்தவும் பெரியதொரு ரசிகர்கூட்டம் எமது சமூகத்தில் உள்ளது. 

கொலை செய்வது தவறு எனும் பயம் இல்லாதுபோனால் அந்த சமூகம் உருப்படுமா? 

கொலை செய்யப்பட்டவர்கள் நினைவுகூறப்படும் இவ்வாறான சமயங்களில் இப்படியான தவறை நான் செய்யக்கூடாது, ஊக்குவிக்ககூடாது என ஒவ்வொருவரும் நினைத்தால் அதுவே எமது உரையாடலுக்கு கிடைக்கும் ஒரு வெற்றி. 

நல்லதொரு கருத்து.

10 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

கொலை செய்யப்பட்டவர்கள் நினைவுகூறப்படும் இவ்வாறான சமயங்களில் இப்படியான தவறை நான் செய்யக்கூடாது,

யாழ்களத்து கனம்பொருந்திய உறுப்பினர்கள் கொலை செய்வது என்ற கொடுமையான குற்றச்செயலை செய்ய கூடியவர்கள் இல்லை என்பது எனது நம்பிக்கை.

10 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

ஊக்குவிக்ககூடாது என ஒவ்வொருவரும் நினைத்தால் அதுவே எமது உரையாடலுக்கு கிடைக்கும் ஒரு வெற்றி. 

👌

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/9/2023 at 02:40, Maruthankerny said:

அக்கா வணக்கம்!
கன நாள் கடந்து காண்பதில் மகிழ்ச்சி நலமாக இருக்கிறீர்களா?
வந்த அவசரத்தில் எதையாவது கொட்டிவிட்டு போகலாம் என்று கொட்டியமாதிரி இருக்கு 
கொஞ்சம் வாசித்துவிட்டு பதில் எழுத முடியாதா? ஏதும் நேரமினமை அல்லது வேறு பிரச்சனைகள் ஏதும் இருப்பின் ... அவைகள் முடிந்த பின்பு எழுதும் கருத்தை வாசித்துவிட்டு பதில் எழுதினால் 
கொஞ்சம் சம்மந்தமாக இருக்கும் அல்லவா? 

அவ சாகவேண்டும் என்று எங்கு எழுதி இருக்கு? 
முதலில் உண்மைகளை அறிந்துகொள்ளுங்கள் பின்பு உங்கள் வார்த்தைகளை கொட்டுங்கள் 
அல்லது எழுதிய கருத்துக்கு பதில் எழுதுங்கள். 
ரஜனியே புலிகளின் ஆதரவாளர்தான் ...ரஜனி இறந்தது என்பது புலிகளுக்குதான் பெரும் இழப்பு முக்கியமாக ராஜதந்திர ரீதியில் புலிகள் எமது விடுதலை போராட்டம் சந்தித்த எவ்ளவோ இழப்புகளை சீர் செய்திருக்க கூடிய ஒருவர் ரஜனி. அதற்கு காரணம் எதற்காகவும் உண்மைக்கு புறம்பாக வளையதாவர் ரஜனி.முறிந்த பனை எழுதிக்கொண்டு இருக்கும்போது அதில் இந்திய இராணுவ அடடூழியங்களை எழுத்துவத்துக்கு மற்றவர்கள் மறுத்து இருந்தார்கள் ( இதை நான் சொல்லவில்லை அவர்களே சொல்லி இருக்கிறார்கள்) அவர்கள் அதை எழுதியதன் நோக்கம் வேறு ரஜனி எழுதிய நோக்கம் வேறு 

ரஜனி மற்றவர்கள்போல இந்திய ராவுக்கு விலை போக கூடியவராக இருக்கவில்லை தவிர அப்போது யாழ் பல்கலைக்கழக  UTHR  தலைமைத்துவம் வேறு ரஜனியிடமே இருந்தது. ரஜனியை போட்டுத்தள்ளுவதன் மூலம் இந்தியா  ஒரு கல்லில் இரு மாங்காய் வீழ்த்தியது. ஒன்று புலிகள் சார்பான ஒருவரை அதில் இருந்து நீக்குவது  இரண்டாவது  செல்வி போன்ற எந்த துரோகத்துக்கும் துணைபோக கூடிய புலி எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்து  செல்ல கூடியவர்களிடம் UTHR தலைமையத்தை கொடுப்பது. 

இந்திய இராணுவம் வெளியேறு முன்னர் அவசரமாக செய்ய வேண்டிய காரியமாக ராவின் குறியாக அது இருந்தது.  மற்றைய UTHR  கும்பல் கொழும்பில் இருந்துகொண்டு பின்னாளில் என்ன செய்தது என்பது எல்லோருக்கும் (ஈழ தமிழர்களுக்கு) தெரிந்தது. அவர்களால் மண்டை கழுவிய கொஞ்ச கூட்டம் இப்போது இங்கு அமெரிக்காவில்தான்  வாழ்கிறது. அவர்களை நொந்து பயன் இல்லை படித்தவர்கள் என்ற மமதை தவிர்த்து  தாம் மூளைச்சலவை செய்யப்படடோம் என்பது தெரியாமல் வாழுகிறார்கள் ஒரு சிலர் பின்னாளில் கொஞ்சம்  புரிய தொடங்கி இருந்தாலும் அவர்கள் ஈகோ வெளிவர விடுவதில்லை என்று எண்ணுகிறேன் இருவர்  இங்கு அரசியலிலும் ஈடுபடுகிறார்கள் .... ஈழத்தமிழனுக்கு ஒரு சல்லி லாபம் இல்லை. 

( இன்னொரு தகவல் நீங்கள் காரசாரமாக எழுதியதால் எழுதுகிறேன்.... இங்கு கருத்து எழுதுபவர்களில் புலிகளால் ஆயுதமுனையில் கொண்டுசெல்ல பட்டது நான் ஒருவன்தான். தாஸ் குரூப் என்பதால் தப்பி வந்தோம் இல்லை என்றால் எப்போ மண்ணாகி இருப்போம். எனது மாமா இருவருவரை புலிகள்தான் கொன்றார்கள் ஒருவரை சூசையே நேரடியாக செய்திருந்தார். அவரே பின்பு வந்து மன்னிப்பு கேட்டுவிட்டு போனார் விசாரணைக்குத்தான் அடித்தோம் அடி தவறுதலாக மண்டையில் பட்டு இறந்துவிட்டார் என்று சொன்னார். அவரின் மகள் பெருசாகி இருந்தபோது சூசை அதுக்குதான் முதன் முதலில் 90இல் தன மனைவியுடன் வந்திருந்தார் 20 ஆயிரம் ரூபா காசும் கொடுத்தார் அவர்கள் வாங்கவில்லை. அவர்களும் உங்களைபோலதான் இடைக்கிடை புலிவாந்தி எடுப்பதும் ( நான் நினைக்கிறன் அது ஒரு ட்ரெண்ட் என்று) பின்பு எல்லோரும் எங்கள் பெடியள்தானே என்பதுமாக வாழ்கிறார்கள்) 

ரஜனி,நிர்மலா ஒரு காலத்தில் புலிகளின் ஆதரவாளர்களாய் இருந்தார்கள் என்பது உண்மை தான்.
தங்கள் ஆதரவை கொஞ்சம்,கொஞ்சமாய் விலக்கும் போது தான்  அவரை போட வேண்டி வந்தது.
சூசை, உங்கள் மாமா குடும்பத்திடம் போய் மன்னிப்பு கேட்டு இருக்கார்[அவர்கள் தெரிந்து /தெரியாமல் கொண்டார்களோ  எனக்கு தெரியாது]...செய்த பிழையை ஏற்றுக் கொண்டு மன்னிப்பு கேட்டதே பெரிய விடயம் 
செல்வியின் இறப்பிற்கும் புலிகள் தான் காரணம் என்பதை ஏற்றுக் கொண்டதற்கு நன்றிகள் 
ரஜனியை மாதிரி மற்றவர்களும் தைரியசாலிகளாய் இருக்க வேண்டுமென எதிர் பார்க்க முடியாது ...அவவின் இறப்பிற்கு பின்னரும் அவர்கள்(UTHR) புலிகளுக்கு ஆதரவு கொடுப்பார்கள் என எப்படி எதிர்பார்ப்பீர்கள்?....இதை வைத்து கொண்டு நான் UTHRக்கு  ஆதரவு என்று நினைக்க வேண்டாம்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/9/2023 at 05:13, Maruthankerny said:

இப்படியேதான் இருக்கும் 
இன விடுதலை என்னும் மகத்தான போருக்குள் 
என் வீட்டு பிரச்னை சொந்த பிரச்சனையை புகுத்தி புலிவாந்தி எடுக்கும் கீழான நிலைக்கு 
ஒருநாளும் போயிருக்க மாட்டேன் 

!தலையிடியும்,காய்ச்சலும் தனக்கு வந்தால் தான்தெரியும்" என்று எமது பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்...இலகுவாய் சொல்லலாம் நான் அப்படி இருப்பேன் ,இப்படி செய்வேன் என்று முடியாமலோடி வந்து விட்டு வீராப்பு பேசும் கூட்டம் அல்லவா நாங்கள் 🙂
 
On 27/9/2023 at 06:18, nedukkalapoovan said:

உங்கள் கேள்விக்கான பதில்கள் ஏலவே தரப்பட்டுள்ளன. வழமை போல்.. வாசிக்கவில்லைப் போலும்.

நவாலியில் எம் உறவுகள் குண்டு வீசிக் கொல்லப்பட்ட போதும்.. நாகர்கோவிலில்.. பள்ளிக்குழந்தைகள் மீது குண்டு வீசிக் கொன்ற போதும்.. இதே ரஜனி திரணகம வழிவந்த யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்.. மனித உரிமை அமைப்பு விட்ட அறிக்கைகளை வாசியுங்கள். யாருக்கு மனச்சாட்சி இல்லை.. எவ்வளவு ஆழமாக... தேசம் போன்ற ஊடகங்கள்.. சதா கக்கும்.. புலி எதிர்ப்பு வாந்திகளை வாசித்ததன் கொடூர விளைவுகள் தங்கள் மனங்களில்.. குடிகொண்டிருக்குது என்பது விளங்கலாம். 

  அற்புதன் யாருக்காக உழைத்தாரோ அவையே அற்புதனை கொல்ல வேண்டியது ஏனோ..??!

அற்புதனை போட்டு தள்ளினால் உங்களுக்கு ஏன் வலிக்குது .அது பற்றி டக்கியிடம் நியாயம் கேளுங்கோ ...நான் ரஜனியின் கொலையை பற்றி கேட்டால் அற்புதனை பற்றியும், ரஜனியின் கொலைக்கு பின்னரான UTHRயை பற்றியும் எழுதுகிறீர்கள்...என்ன எழுதுகிறோம் என தெரிந்து எழுதுங்கோ 

On 27/9/2023 at 06:27, Eppothum Thamizhan said:

அட அக்கா அண்ணனைமாதிரியே யோசிக்கிறா!! இருக்காதா பின்ன, ஒரே ரத்தமாச்சே!!!

என்ட அண்ணருக்கு இப்படி எல்லாம் யோசிக்க  சொல்லி கொடுத்தது  யார் என்று உங்களுக்கு அடிக்கடி மறந்து போயிடுது   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரதி said:

அற்புதனை போட்டு தள்ளினால் உங்களுக்கு ஏன் வலிக்குது .அது பற்றி டக்கியிடம் நியாயம் கேளுங்கோ ...நான் ரஜனியின் கொலையை பற்றி கேட்டால் அற்புதனை பற்றியும், ரஜனியின் கொலைக்கு பின்னரான UTHRயை பற்றியும் எழுதுகிறீர்கள்...என்ன எழுதுகிறோம் என தெரிந்து எழுதுங்கோ 

மாற்றுக்கருத்து என்று சொல்லி புலி எதிர்ப்பு வாந்திகளை வாசிக்கும் தங்களிடம் வேறு எதனை எதிர்ப்பார்க்க முடியும். இது தான் தங்களின் வழமையான பதில் என்பது தெரிந்ததே. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, nedukkalapoovan said:

மாற்றுக்கருத்து என்று சொல்லி புலி எதிர்ப்பு வாந்திகளை வாசிக்கும் தங்களிடம் வேறு எதனை எதிர்ப்பார்க்க முடியும். இது தான் தங்களின் வழமையான பதில் என்பது தெரிந்ததே. 🤣

இவ்வாறான  தமிழ் இயக்கங்களால் நிகழ்த்தப் பட்ட  அநீதியான கொலைகள் பற்றிய விவாதங்கள் ஒரு கட்டத்துக்கு மேல் நகராது. ஒன்றில் புலி செய்யது எல்லாம் தவறு என்று புலிகள் மீது சேற்றை வாரியிறைக்கும் கும்பலின் புலியெதிர்ப்பில் போய்  நிற்கும் அல்லது,  அதற்கு எதிர் தரப்பான புலி செய்த எல்லாவற்றிற்கும் விழுந்து விழுந்து வக்காலத்துவாங்கும் கும்பலின்  வாதங்களுக்குள் போய் ஒரு முட்டு சந்தியில் நிற்கும்.

தமிழின படு கொலைகளுக்கு எப்படி ஒரு நியாயமான விசாரணை வராதோ அதே போல் இயக்கங்கள்  இடையிலும்  காழ்புணர்வாலும்  கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களின் கொலைகளுக்கும்  உண்மையான நேர்மையான பதில்கள் எந்த தரப்பில் இருந்தும் கிடைக்கப்போவதில்லை.  

இதன் விளைவு தான் எமது போராட்டத்தின் இன்றைய முடக்க நிலை.  

கள உறவு @முதல்வன் 

போன்ற திறந்த மனதைடன்  சிந்திக்க கூடிய  ஜதார்தத அறிவியல்  சிந்தனை வளர்சசியுடன் எதிர்கால அரசியலை முன்னெடுப்பவர்களின் தொகை அதிகரித்தால் மட்டுமே  ஈழத்தமிழினத்துக்கு விடிவு கிடைக்கும்.  அதையே ராஜனியும் பல ஆண்டுகளுக்கு முன்பே கூறி இருந்தார் என்பதை அவர் தொடர்பான பதிவுகளை வாசித்ததில் இருந்தும் @கிருபன் இணைத்த இணைப்பில் இருந்து புத்தகத்தை மேலோட்டமாக வாசித்ததில் இருந்தும் அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. 

அவர் அதை துணிச்சலுடன் அன்று கூறியது அவரது அறிவுரையை சகித்து கொள்ள முடியாமல் கொலைகாரர்கள்  அவரைக் கொலை செய்தனர். 

அவரது  அறிவுரை  செவிடன் காதில் ஊதிய சங்காகவே இன்றும் உள்ளது என்பதே நிதர்சனம். 

Edited by island
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, island said:

போன்ற திறந்த மனதைடன்  சிந்திக்க கூடிய  ஜதார்தத அறிவியல்  சிந்தனை வளர்சசியுடன் எதிர்கால அரசியலை முன்னெடுப்பவர்களின் தொகை அதிகரித்தால் மட்டுமே  ஈழத்தமிழினத்துக்கு விடிவு கிடைக்கும்.

இல்லாத புலிகள்.. இயங்காத இயக்கங்களின் தவறுகளை அலசி ஆராய்வது.. இல்லாத பொய்களை இட்டு அறிக்கைவிட்டு பதவிகளைப் பெற்றதோடு அடங்கிவிடும்.. யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்.. மனித உரிமை அமைப்புக்கள்.. இவையா... ஈழத்தமிழனத்துக்கான விடிவின் காரணிகள்..???!

ஒரு இனத்தை திட்டமிட்டு இன அழிப்புச் செய்யும் சிங்கள பெளத்த விரிவுரையாளர்கள் யாராவது.. மனித உரிமை அதுஇதென்று.. சிங்கள பெளத்த ஆளும் வர்க்கத்தை.. இனப்படுகொலை இராணுவத்தை கண்டித்து ஒரு அறிக்கை விட்டிருக்கிறார்களா..???! சிங்கள.. அரச இயந்திரத்தின் தமிழ் மக்களுக்கு எதிரான.. தவறான செயற்பாடுகளை எந்த சிங்கள மனித உரிமை அமைப்பாவது கண்டிச்சிருக்குதா..??! விமர்ச்சிருக்குதா..????!

பெயரளவில்.. சொறீலங்கா.. சனநாயக சோசலிசக் குடியரசு என்று வைச்சுக் கொண்டிருக்கும் ஒரு அரசின் மனித இன விரோதச் செயல்களை தட்டிக்கேட்க வக்கற்றிருக்கும் உள்ளூர் சர்வதேசச் சூழலில்.. நாம் மட்டும் எமது பற் சூத்தைகளை நோண்டிக் கொண்டு.. சுகந்து கொண்டிருப்பதன் நன்மை..?! தமிழின விடிவு...??! சாத்தியமே இல்லை ராஜா.

காலத்துக்கு காலம்.. ரஜனிகளும்.. டக்கிளசுகளும்.. சிறிதரன்களும்.. கருணாக்களும்.. பிள்ளையான்களும் தோன்றி.. தங்கள் பிழைப்பையும்.. செல்வாக்கையும் அதிகரிச்சுச் செல்வார்களே அன்றி.. தமிழினத்துக்கு விடிவென்பது.. இதன் மூலம்.. சாத்தியமாகாது.. ஏனெனில்.. இதனை ஒரு உறுதியான தேவையான கருத்துக்களாக உள்வாங்க யாரும் இல்லை. அவரவர் தமக்கு தெரிந்ததை வைச்சு.. ஊதிப் பெருப்பிச்சுட்டு போகினமே தவிர.. தவறு செய்கிற எல்லா தரப்பையும்.. தவறை திருத்தச் சொல்ல.. செய்யாதிருக்கச் சொல்ல.. இவர்கள் எவரும் முனையவில்லை.. முனைவதில்லை. ஏனெனில்.. அது அல்ல இவர்களின் உண்மையான நோக்கம். சுய விளம்பரம்... சுய ஆதாயம்.. தமக்கு நெருக்கமானவர்களை பாதுகாப்பது.. இதுதான் முதன்மை. அது சிங்களவர் ஆயினும் சரி.. தமிழர் ஆயினும் சரி.. சர்வதேசம் ஆயினும் சரி.. ஹிந்தியா ஆகினும் சரி. இதுவே தமிழர்களுக்கு விடிவு கிடைக்காமைக்கு முக்கிய காரணம். 

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

இல்லாத புலிகள்.. இயங்காத இயக்கங்களின் தவறுகளை அலசி ஆராய்வது.. இல்லாத பொய்களை இட்டு அறிக்கைவிட்டு பதவிகளைப் பெற்றதோடு அடங்கிவிடும்..

இருக்கும் போது தவறுகளை அலசி ஆரய்ந்து அறிவுரை கூறியதால் தான் ராஜனி கொலையுண்டார்.  😂

2 hours ago, nedukkalapoovan said:

ரஜனிகளும்.. டக்கிளசுகளும்.. சிறிதரன்களும்.. கருணாக்களும்.. பிள்ளையான்களு

ராஜனியை டக்ளசுடன், கருணா பிள்ளையானுடன்   ஒப்பிடும் அளவுக்கு உங்களுக்கு வன்மம் ஏன்?   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, island said:

இருக்கும் போது தவறுகளை அலசி ஆரய்ந்து அறிவுரை கூறியதால் தான் ராஜனி கொலையுண்டார்.

தவறுகளை அலசி ஆராய்ந்து நடுநிலையாகச் சொல்லவில்லை.. தவறுகளை அலசி தமது தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொண்டது தான் முறிந்த பனைகள். முறிந்த பனைகள் முக்கிய பங்காளி (விரிவுரையாளர் கிருஷ்ண....... (அவரின் சுயம் பாதுக்காக்கப்படும் வகையில் முழுப்பெயர் ஒளிக்கப்பட்டிருக்கிறது.) ஒருவரிடம் இது குறித்து பேசிய போது அவரே ஒத்துக்கொண்டது... ரஜனி உட்பட அதில் பங்களித்தோர் விட்ட தவறு... சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளின் ஊடாக இதன் நியாயம் சோதிக்கப்பட்டிருக்க வேண்டும்.. இந்த நூலை சிலரின் ஆக்கம் போல்..  வெளியிட முதல் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளின் அங்கீகாரத்துக்கு அனுப்பி அதனூடாக வெளியிட்டிருப்பதே.. கூடிய தாக்கமானதாக இருந்திருக்கும் என்பது.  ஏனெனில்.. ஹிந்தியப் படைகளின் ஈழத்து மனித உரிமை மீறல்களை முதலில்.. வெளிக்கொண்டர்ந்தது ஜேர்மனி மனித உரிமை அமைப்புக்களும் அதன் ஊடகங்களுமாகும். ரஜனி திரணகமவோ அவர் சார்ந்தவர்களோ அல்ல. ரஜனி இதனை தமக்குள் (தான் சார்ந்த குலாமிடம் மட்டும்) பேசி வெளியிட்டதில்.. உள்நோகமும் தமக்கான சில தரப்புக்களுக்கு வெள்ளையடிப்பதும் நோக்கமாக இருந்துள்ளது. மக்களின் நலனை விட.

5 hours ago, island said:

ராஜனியை டக்ளசுடன், கருணா பிள்ளையானுடன்   ஒப்பிடும் அளவுக்கு உங்களுக்கு வன்மம் ஏன்?

ராஜனியும் சுய விளம்பரம் தான் தேடினா.. மற்றவங்களும் சுய விளம்பரமும்.. ஆதாயமும் தான் தேடிச்சினம்.. தேடினம். இனம் பற்றிய எந்த அக்கறையும் கருசணையும் உண்மையில் இவர்களிடம் கிடையாது. இருந்திருந்தால்.. இவர்களின் அணுகுமுறைகள் வேறு மாதிரி இருந்திருக்க வேண்டும்.  

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, nedukkalapoovan said:

தவறுகளை அலசி ஆராய்ந்து நடுநிலையாகச் சொல்லவில்லை.. தவறுகளை அலசி தமது தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொண்டது தான் முறிந்த பனைகள். முறிந்த பனைகள் முக்கிய பங்காளி (விரிவுரையாளர் கிருஷ்ண....... (அவரின் சுயம் பாதுக்காக்கப்படும் வகையில் முழுப்பெயர் ஒளிக்கப்பட்டிருக்கிறது.) ஒருவரிடம் இது குறித்து பேசிய போது அவரே ஒத்துக்கொண்டது... ரஜனி உட்பட அதில் பங்களித்தோர் விட்ட தவறு... சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளின் ஊடாக இதன் நியாயம் சோதிக்கப்பட்டிருக்க வேண்டும்.. இந்த நூலை சிலரின் ஆக்கம் போல்..  வெளியிட முதல் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளின் அங்கீகாரத்துக்கு அனுப்பி அதனூடாக வெளியிட்டிருப்பதே.. கூடிய தாக்கமானதாக இருந்திருக்கும் என்பது.  ஏனெனில்.. ஹிந்தியப் படைகளின் ஈழத்து மனித உரிமை மீறல்களை முதலில்.. வெளிக்கொண்டர்ந்தது ஜேர்மனி மனித உரிமை அமைப்புக்களும் அதன் ஊடகங்களுமாகும். ரஜனி திரணகமவோ அவர் சார்ந்தவர்களோ அல்ல. ரஜனி இதனை தமக்குள் (தான் சார்ந்த குலாமிடம் மட்டும்) பேசி வெளியிட்டதில்.. உள்நோகமும் தமக்கான சில தரப்புக்களுக்கு வெள்ளையடிப்பதும் நோக்கமாக இருந்துள்ளது. மக்களின் நலனை விட.

ராஜனியும் சுய விளம்பரம் தான் தேடினா.. மற்றவங்களும் சுய விளம்பரமும்.. ஆதாயமும் தான் தேடிச்சினம்.. தேடினம். இனம் பற்றிய எந்த அக்கறையும் கருசணையும் உண்மையில் இவர்களிடம் கிடையாது. இருந்திருந்தால்.. இவர்களின் அணுகுமுறைகள் வேறு மாதிரி இருந்திருக்க வேண்டும்.  

இறுதியில்,  புத்தகம் வெளியிட்ட மன்னிக்க முடியாத குற்றத்துக்காக ராஜனி சுட்டு கொலை செய்யப்பட்டது நியாயம் என்ற குற்றவாளிகளுக்கு  ஆதரவான  உங்கள் வெள்ளையடிப்புடன் இந்த விவாதம் இனிதே நிறைவேறியது.  

  • Like 2
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜனி திரணகமவை சுட்டது புலிகள் தான். 

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nedukkalapoovan said:

மாற்றுக்கருத்து என்று சொல்லி புலி எதிர்ப்பு வாந்திகளை வாசிக்கும் தங்களிடம் வேறு எதனை எதிர்ப்பார்க்க முடியும். இது தான் தங்களின் வழமையான பதில் என்பது தெரிந்ததே. 🤣

1 hour ago, nedukkalapoovan said:

தவறுகளை அலசி ஆராய்ந்து நடுநிலையாகச் சொல்லவில்லை.. தவறுகளை அலசி தமது தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொண்டது தான் முறிந்த பனைகள். முறிந்த பனைகள் முக்கிய பங்காளி (விரிவுரையாளர் கிருஷ்ண....... (அவரின் சுயம் பாதுக்காக்கப்படும் வகையில் முழுப்பெயர் ஒளிக்கப்பட்டிருக்கிறது.) ஒருவரிடம் இது குறித்து பேசிய போது அவரே ஒத்துக்கொண்டது... ரஜனி உட்பட அதில் பங்களித்தோர் விட்ட தவறு... சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளின் ஊடாக இதன் நியாயம் சோதிக்கப்பட்டிருக்க வேண்டும்.. இந்த நூலை சிலரின் ஆக்கம் போல்..  வெளியிட முதல் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளின் அங்கீகாரத்துக்கு அனுப்பி அதனூடாக வெளியிட்டிருப்பதே.. கூடிய தாக்கமானதாக இருந்திருக்கும் என்பது.  ஏனெனில்.. ஹிந்தியப் படைகளின் ஈழத்து மனித உரிமை மீறல்களை முதலில்.. வெளிக்கொண்டர்ந்தது ஜேர்மனி மனித உரிமை அமைப்புக்களும் அதன் ஊடகங்களுமாகும். ரஜனி திரணகமவோ அவர் சார்ந்தவர்களோ அல்ல. ரஜனி இதனை தமக்குள் (தான் சார்ந்த குலாமிடம் மட்டும்) பேசி வெளியிட்டதில்.. உள்நோகமும் தமக்கான சில தரப்புக்களுக்கு வெள்ளையடிப்பதும் நோக்கமாக இருந்துள்ளது. மக்களின் நலனை விட.

ராஜனியும் சுய விளம்பரம் தான் தேடினா.. மற்றவங்களும் சுய விளம்பரமும்.. ஆதாயமும் தான் தேடிச்சினம்.. தேடினம். இனம் பற்றிய எந்த அக்கறையும் கருசணையும் உண்மையில் இவர்களிடம் கிடையாது. இருந்திருந்தால்.. இவர்களின் அணுகுமுறைகள் வேறு மாதிரி இருந்திருக்க வேண்டும்.  

இதையெல்லாம் வாசிக்க வேண்டும் என்பது என் தலை எழுத்து 

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

இறுதியில்,  புத்தகம் வெளியிட்ட மன்னிக்க முடியாத குற்றத்துக்காக ராஜனி சுட்டு கொலை செய்யப்பட்டது நியாயம் என்ற குற்றவாளிகளுக்கு  ஆதரவான  உங்கள் வெள்ளையடிப்புடன் இந்த விவாதம் இனிதே நிறைவேறியது.

நீங்கள் வழமை போல்.. சிலரைப் போல்.. முடிவுரையை உங்களுக்கு ஏற்றமாதிரி எழுதிக் கொள்கிறீர்கள்.

முறிந்த பனைகள்.. படுகொலைக்குரிய ஆக்கமல்ல. ஆனால்.. முறிந்த பனைகள்.. தமிழ் மக்களுக்கான.. நீதிக்கான நடுநிலைத் தேடலும் அல்ல. இது தான் முடிவுரை. ரஜனி திரணகம.. விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரும் அல்ல. அவரும் தவறுகளை விட்டிருக்கிறார். ஆனால்.. அது படுகொலையால் பதிலளிக்கப்பட வேண்டிய ஒன்றல்ல. தவறுகள் வேறு வழிகளில் உணர்த்தப்பட்டிருக்கலாம். அவரின் படுகொலையை.. நியாயப்படுத்தப்படுவதற்கு முறிந்த பனை முழுக் காரணமாக இருக்க முடியாது. 

1 hour ago, ரதி said:

இதையெல்லாம் வாசிக்க வேண்டும் என்பது என் தலை எழுத்து 

தேசம் இப்போது இயங்குவதில்லை.. போலும். உங்கள் தலை எழுத்துக்கு சிறந்த எழுத்துக்கள் அப்படியானவற்றில் தான் இருக்கும் வழமை போல் தேடிப் பாருங்கள்.. கிடைக்கும். 

Edited by nedukkalapoovan
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, island said:

இறுதியில்,  புத்தகம் வெளியிட்ட மன்னிக்க முடியாத குற்றத்துக்காக ராஜனி சுட்டு கொலை செய்யப்பட்டது நியாயம் என்ற குற்றவாளிகளுக்கு  ஆதரவான  உங்கள் வெள்ளையடிப்புடன் இந்த விவாதம் இனிதே நிறைவேறியது.  

யார் குற்றவாளி??

அதற்கான ஆதாரம் ,???

இதைத் தான் கேட்கிறோம்

எனது அண்ணன் தம்பி மீது ஆதாரமற்ற சுட்டு விரல் நீட்டினால் என் கோபத்தை காட்டுவேன். காட்டுவேன். காட்டுவேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

யார் குற்றவாளி??

அதற்கான ஆதாரம் ,???

இதைத் தான் கேட்கிறோம்

எனது அண்ணன் தம்பி மீது ஆதாரமற்ற சுட்டு விரல் நீட்டினால் என் கோபத்தை காட்டுவேன். காட்டுவேன். காட்டுவேன். 

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு. பெரும்பான்மையான தீமைகளுக்கு ஆணிவேர் கோபம் தான்.
அடிக்கடி கோபப்படுபவர் உடலில் கோபப்படும் போது அட்ரீனல் சுரப்பியிலிருந்து 'அட்ரீனலின்' என்ற 'ஹார்மோன்' அதிகம் சுரக்கும். அது ரத்தத்தில் கலந்து ரத்த குழாய்களை சுருங்க செய்யும், மாரடைப்பு ஏற்படுத்தும். கோபம் வரும் போது சிந்திக்கும் திறன் போய்விடும். 

கோபம் எதிரில் இருப்பவர்களை விட கோபத்தை காட்டும் நபரையே அதிகம் பாதிக்கும். 

Edited by island
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரம்ப். இன்.   முதல் கையெழுத்தால் லட்சக்கணக்கான இந்தியார்கள்.  பாதிக்கப்படுவார்கள்  என்று     செய்திகள் சொல்கின்றன     உங்கள் பொன்னான கருத்துகள் எதிர்பார்கப்படுகிறது 🤣
    • ஒம். உண்மை தான் ஆனால்  ஜேர்மனியன்.  ஆள்வான்    ஆளப் போகிறாரன். 🤣😂
    • இங்க இப்படி நடந்து கொள்வது பாகிஸ்தானிகள். அண்ணன், தம்பி, மச்சான், மாப்பிள்ளை, மகன் என கூட்டாக சேர்ந்து அரசின் பராமரிப்பில் இருக்கும் 12-19 வயது சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பல சம்பவங்கள் இப்போதான் கொஞ்சம் கொஞ்சமாக விசாரிக்க படுகிறது. ஏனைய கலாச்சார பெண்கள் என்றால் போக பொருட்கள் என சொல்லி கொடுக்கும் மதம், கலாச்சாரம், சமூகம்தான் காரணம். நீங்கள் ஆறரை அடி உயரத்தில், எம் ஜி ஆர் கலரில் தக தக என மின்னுவதால் உங்களை ஆப்கானி என நினைக்கிறார்கள் போலும்🤣. 
    • இல்லை நுணாவிலான் வீடியோவில் 4:40 லிருந்து, போதியளவு பொலிஸ் இல்லையாம் மூன்றே மூன்று கார்கள் மட்டும்தான் நின்றிருக்கின்றன, இல்லையென்றால் எல்லோரையுமே விலங்கடிச்சு ஏத்தியிருப்பான். இதில் உலகின் பெரும் நகரமொன்றின் பாதுகாப்பு குறைபாடும் வெளிச்சத்துக்கு வந்திருக்கு. நான் நினைக்கிறேன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை சத்தமில்லாமல் அடையாளம் காணும் வேலையில் பொலிஸ் இப்போது இறங்கியிருக்கலாம். அப்படியே விடமாட்டாங்கள். குமாரசாமியண்ணை,  ஜேர்மனி மட்டுமல்ல ஐரோப்பா அமெரிக்கா கனடா அவுஸ்திரேலியா உட்பட  உலகின்  அனைத்து பகுதிகளிலும் வேலைவாய்ப்பு விசா, மாணவர்கள் விசா ,அகதி அந்தஸ்து கோருவோர் அனைவருக்கும் பெரும் நெருக்கடி நெருங்கி வந்துவிட்டது, இனிவரும் காலங்கள் இவர்களுக்கு அவ்வளவு இலகுவானதாக இருக்காது என்றே நினைக்கிறேன்.
    • இரெண்டு வருடத்தில் இனி போட்டி இல்லை என சொல்லி இருந்தால், கவின் நீயூசம் அல்லது இன்னுமொரு வெள்ளை ஆண் போட்டியிட முடிந்திருக்கும். அவரால் டிரம்பை வெல்லவும் முடிந்திருக்க கூடும். ஒரு அதிபராக டிரம்ப் எப்படி தகவல்களை ரஸ்ய உளவாளிகளுக்கு அவரின் கோல்ப் ரிசார்ட்டில் வைத்து கொடுத்தார் என்பதை இதை விட கடுமையான ஆதாரங்களை பைடன் அறிந்திருப்பார். இருந்தும் கமலா போல சோப்பிளாங்கியை அதுவும் அமெரிக்கர்கள் ஹிலரி போன்ற இயலுமை மிக்க பெண்ணையே நிராகரித்த பின், வேறு தெரிவின்றி வேட்பாளர் ஆக்கும் வரைக்கும் காலம் தாழ்த்திய பதவி வெறியர் பைடன். டிரம்பை விட மோசமான சுயநலமி பைடன். ஓபாமா கூப்பிட்டு சொல்லி இராவிட்டால், அந்த மொக்கேனப்பட்ட டிபேட்டுக்கு பின்னும் போட்டியில் இருந்து விலகி இருக்க மாட்டார். அமெரிக்காவின் மைத்திரிபால சிறிசேனதான் பைடன். அநேகமாக மகனை பொது மன்னிப்பில் விடுவார் என்றே நான் நினைக்கிறேன்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.