Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

விநாயகர் சதுஸ்டி அன்று மும்பை கடலில் பிள்ளையார் சிலைகளை கரைக்க ஊர்வலமாக எடுத்து வந்தனர். கூட்டத்தில் இரு சிறுவர்களும் இருந்தார்கள்.

தாம் கொண்டு வந்த பிள்ளையாரை தள்ளிக்கொண்டு சென்ற கூட்டத்துடன் இவர்களும் சேர்ந்து சென்று விட்டார்கள். பிள்ளையாரை பிடித்துக் கொண்டே சென்றதால், கால்கள் நிலத்தில் படாத நிலையில், கடலிலினுள் ஆழம் கூடிய பகுதி வரை சென்றதை கவனிக்கவில்லை. பெரியவர்கள் திருப்ப, மறுபக்கம் பிடித்துக்கொண்டு நின்ற சிறுவர்கள் இருவரையும் கவனிக்கவில்லை.

கரையில் எங்கே சிறுவர்கள் என்றும் அவர்களுடன் வந்தவர்கள் தேடத்தொடங்கிய போது, இருவரும் கரை வரவில்லை என்று புரிய, தேட தொடங்கினர். 

சிறிது நேரத்தில், அலையுடன், மயங்கிய நிலையில் ஒரு சிறுவன் கரை ஒதுங்கினான்.

அடுத்த சிறுவன் எங்கே என்று, இரவு நேரம் முழுவதுமாக, கரையில் பலர் கவலையுடன் காத்து இருந்தனர்.

அவர்களுடன், அங்கே செய்தி கேட்டு ஓடி வந்த, தகப்பன் பதறியபடியே இருந்தார். ஆனாலும் மகன் வருவான், வருவான் என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.

விடியும் போது, பலர் நம்பிக்கை இல்லாமல் நகர்ந்து போய், விட்டனர். கடலை வெறித்த படியே, தகப்பன் காத்திருந்தார்.

தூரத்தில் ஒரு சிறு படகு. மீன் பிடி படகு. இரவு மீன் பிடிக்க சென்று கரை திரும்பும் படகு. அதனை பார்த்து விட்டு, அக்கறை இல்லாமல் வேறு பக்கமாக பார்த்தனர் எல்லோரும்.

ஆனால் தீடீரென, படகில் இருந்து சிறுவன் கையசைக்க, தகப்பன் துள்ளி எழும்பி கடலுக்குள் ஓடி, படகை நெருங்கி, மகனை தூக்கி, உச்சி முகர்கிறார்.

கரைக்கு, வந்து, விநாயகருடன் போனவன், எப்படியும், விநாயகர் அருளால் வருவான் என்று நம்பிக்கொண்டிருந்தேன். நம்பிக்கை வீண் போகவில்லை என்றார்,

பிள்ளையாரை பிடித்து கொண்டிருந்த சிறுவன், பிள்ளையாரின் ஒவ்வொரு பகுதியாக கரைய, கடைசியாக மிதந்து கொண்டிருந்த ஒரு காலை மட்டுமே பிடித்து கொண்டு இருந்திருக்கிறான். 

அப்போது, விடிந்து விட்டதால், கரை திரும்பிக் கொண்டிருந்த படகு, தத்தளிக்கும் சிறுவனை கண்டு, மீட்டு இருக்கிறது.

சிறுவன் படகில் ஏறிய சிறிது நேரத்தில், அதுவரை அந்த நோக்கத்துக்காக காத்திருந்தது போலவே, அந்த காலும், கடலில் மூழ்கிப் போனது.

விநாயகர் சதுஸ்டி அன்று, விநாயகரினால் காக்கப்பட்ட சிறுவன், இன்று ஏரியா ஹீரோ.

5 Financial Lessons to Learn From Lord Ganesha

  • Like 3
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மயிரிழையில் உயர் தப்புவது என்று சொல்வார்களே ...அது இது தான் இருப்பினும் கடவுள் அருள் இல்லாமலில்லை .
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, நிலாமதி said:

மயிரிழையில் உயர் தப்புவது என்று சொல்வார்களே ...அது இது தான் இருப்பினும் கடவுள் அருள் இல்லாமலில்லை .
 
மிதந்த காலும்... வந்த படகும்..... 🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வருடா வருடம் விநாயகர் ஊர்வலம் என்ற தெய்வபக்தியை துஷ்பிரயோகம் செய்து  வெறுப்பு அரசியலை தூண்டி கலவரங்களை உருவாக்கும் மதவாத சக்திகளிடம் இருந்தும்,  இராயனப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட  பல ஆயிரக்கணக்கான  விநாயகர் சிலைகளை கரைத்து கடற்கரையோரங்களையும் சுற்று புற சூழலையும் அசுத்தம் அடைய செய்வதில் இருந்தும் மக்களைக்  காப்பாற்றுவதே விநாயகர் செய்ய வேண்டிய முதன்மைப்பணி. 

  • Like 2
  • Confused 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கல் என்றால் அது கல்தான் தெய்வம் என்றால் அது தெய்வமேதான்........!  🙏

நன்றி நாதம்ஸ் .........!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, Nathamuni said:

கரைக்கு, வந்து, விநாயகருடன் போனவன், எப்படியும், விநாயகர் அருளால் வருவான் என்று நம்பிக்கொண்டிருந்தேன். நம்பிக்கை வீண் போகவில்லை என்றார்,

விநாயகருக்கு இவ்வளவு சிரமமும் எதுக்காக? பேசாமல் சிறுவனை தானே கரைக்கு கொண்டு வந்து விட்டிருக்கலாம்.

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, Kavi arunasalam said:

விநாயகருக்கு இவ்வளவு சிரமமும் எதுக்காக? பேசாமல் சிறுவனை தானே கரைக்கு கொண்டு வந்து விட்டிருக்கலாம்.

அவருக்கு அவசரமான வேலைகள் இருந்ததால் வள்ளத்தில் ஏற்றி அனுப்பியுள்ளார்.

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

கடவுளின் செயலா இல்லையா தெரியாது, ஆனால், மேலே இருக்கும் மூலக்கதை போல சம்பவம் நடக்கவில்லையென இந்தியன் எக்ஸ்பிறஸ் செய்தியில் தெரிகிறது. குடும்பத்தினர் இறந்த உடல் தான்  கரை சேருமெனக் காத்திருந்திருக்கின்றனர் சூரத் நகரில். பின்னர் கடற் காவல்துறை தான் மகன் மீட்கப் பட்ட செய்தியைச் சொல்லி உறவினர்களை வரவழைத்திருக்கிறது.

செய்தி கீழே: https://indianexpress.com/article/cities/surat/a-fisherman-ganesh-idol-plank-and-a-boy-found-alive-at-sea-26-hours-later-8965782/

"...According to his family, the boy, Lakhan Devipujak, was playing at the beach with his younger brother Karan (12) and sister Anjali (8), and their grandmother Sevantaben Devipujak, on the afternoon of September 29 when the waves dragged the two boys in."

அதற்கு ஒரு நாள் முன்னர்..

Vijay, the boy’s uncle, said: “Ganesh Visarjan took place on September 28, and large idols were immersed into the Dumas sea. The wooden plank (on which a statue was erected) drifted close to Lakhan during the night, and he climbed on top of it. Ganpati saved my nephew’s life.”

தகப்பன் சொன்னது..

The boy’s father, Vikash Devipujak, told The Indian Express: “We had lost hope of finding him alive. We continued looking for his body to perform the last rites."

Edited by Justin
  • Like 2
  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, Justin said:

கடவுளின் செயலா இல்லையா தெரியாது, ஆனால், மேலே இருக்கும் மூலக்கதை போல சம்பவம் நடக்கவில்லையென இந்தியன் எக்ஸ்பிறஸ் செய்தியில் தெரிகிறது.

Hello @Nathamuni உடனடியாக மேடைக்கு வரவும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
47 minutes ago, Justin said:

கடவுளின் செயலா இல்லையா தெரியாது, ஆனால், மேலே இருக்கும் மூலக்கதை போல சம்பவம் நடக்கவில்லையென இந்தியன் எக்ஸ்பிறஸ் செய்தியில் தெரிகிறது. குடும்பத்தினர் இறந்த உடல் தான்  கரை சேருமெனக் காத்திருந்திருக்கின்றனர் சூரத் நகரில். பின்னர் கடற் காவல்துறை தான் மகன் மீட்கப் பட்ட செய்தியைச் சொல்லி உறவினர்களை வரவழைத்திருக்கிறது.

செய்தி கீழே: https://indianexpress.com/article/cities/surat/a-fisherman-ganesh-idol-plank-and-a-boy-found-alive-at-sea-26-hours-later-8965782/

"...According to his family, the boy, Lakhan Devipujak, was playing at the beach with his younger brother Karan (12) and sister Anjali (8), and their grandmother Sevantaben Devipujak, on the afternoon of September 29 when the waves dragged the two boys in."

அதற்கு ஒரு நாள் முன்னர்..

Vijay, the boy’s uncle, said: “Ganesh Visarjan took place on September 28, and large idols were immersed into the Dumas sea. The wooden plank (on which a statue was erected) drifted close to Lakhan during the night, and he climbed on top of it. Ganpati saved my nephew’s life.”

தகப்பன் சொன்னது..

The boy’s father, Vikash Devipujak, told The Indian Express: “We had lost hope of finding him alive. We continued looking for his body to perform the last rites."

கதை,

திரைக்கதை,

வசனம்,

எக்ஸ்ரா எபெக்ட்,

ஐட்டம் டான்ஸ்,

@Nathamuni

பிகு

ஏற்கனவே “ஜஸ்டின்” என்ற பெயரோடு சமய விடயங்களில்  எழுதுவதில் நாதம் கடுப்பாகிறவர். இப்ப இது வேற🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kavi arunasalam said:

விநாயகருக்கு இவ்வளவு சிரமமும் எதுக்காக? பேசாமல் சிறுவனை தானே கரைக்கு கொண்டு வந்து விட்டிருக்கலாம்.

அடுத்த முறை அப்படியே  கதை எழுதலாம். எதற்கும் கதைக்கு கொப்பி ரைட்ஸ் எடுத்து வையுங்கோ.  தான் எழுதியது போல் உங்கள் ஐடியாவை செய்தி போல்  மூலம் போடாமல் கதை  எழுத போறாங்க. 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, goshan_che said:

கதை,

திரைக்கதை,

வசனம்,

எக்ஸ்ரா எபெக்ட்,

ஐட்டம் டான்ஸ்,

@Nathamuni

பிகு

ஏற்கனவே “ஜஸ்டின்” என்ற பெயரோடு சமய விடயங்களில்  எழுதுவதில் நாதம் கடுப்பாகிறவர். இப்ப இது வேற🤣

உண்மைதானே.

இவருக்கேன் உந்த வேலை. செய்யிறதையும் வடிவா எல்லோ செய்யவேணும்.🤣

பிள்ளையார் எண்டோன்ன, ஒரு சேட்டை போல தான்...😅

இயேசு ரட்சிக்கிறார் என்று சுத்துமாத்து ஆட்களின் வீடியோ போட்டால், தலையே காட்டார்.🤣😁

உந்த லிங்கில என்ன சொல்லுது எண்டு பாருங்கோவன். 

https://www.timesnownews.com/ahmedabad/immersed-ganpati-idol-saves-gujarat-teen-after-being-swept-away-in-high-tide-miraculously-survives-article-104131985

https://timesofindia.indiatimes.com/city/surat/miracle-boy-from-surat-who-swept-away-in-high-tide-found-alive-in-sea-after-24-hours/articleshow/104078902.cms?from=mdr

https://www.latestly.com/india/news/ganpati-saves-surat-boy-14-year-old-lakhan-devipujak-who-drowned-in-arabian-sea-miraculously-survives-found-alive-floating-on-immersed-ganesh-idol-platform-5456223.html

முக்கியமா இதைப் பாருங்கோ...

அப்புறம், விடுங்கோ, பிள்ளையார் பார்த்துக்குவார்... 😎

3 hours ago, ஈழப்பிரியன் said:

Hello @Nathamuni உடனடியாக மேடைக்கு வரவும்.

எனது மூலம் ஒன் இந்தியா தமிழ்... தேடினேன், கிடைக்கவில்லை. மினக்கெட நேரமில்லை. கிடைத்தால் இணைப்பேன்.

மேலே உள்ள லிங்குகளில் ஒவொன்றும் ஒவொரு கதை. அதுக்கு பிள்ளையார் பொறுப்பு எடுக்க ஏலாது பாருங்கோ.

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted
28 minutes ago, Nathamuni said:

😂படபடப்பு ஏன் நாதம்? இயேசு இரட்சிக்கிறார் வீடியோவை யாரும் போட்டு நான் தலைகாட்டாமல் கடந்து போனால் அல்லவா இந்த படபடப்பு வர வேணும்?

அது சரி, அந்தப் "பிள்ளையாரின் கால் கரைந்தது", தகப்பன் நம்பிக் கரையில் இருந்தது எல்லாம் சுவைக்காகச் சேர்த்த உப்புப் புளியா?

இந்தியன் எக்ஸ்பிரசில் சம்பந்தப் பட்ட ஆட்களையே மேற்கோள் காட்டியிருக்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள். இப்படித் தான் செய்திகள் முறைப்படி பிரசுரிக்கப் படுகின்றன. கதைகள் பின்னுவது பொறுப்பான செய்தி ஊடகங்களின் வேலையல்ல!

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
23 minutes ago, Justin said:

நான் படபடக்கவில்லை, சும்மா பகிடிக்கு என்று, ஸ்மைலி ஐகோன் போட்டேன். அதாலை நீங்கள் படபடக்காதீங்கோ.

நான் ஏன் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையை நம்பவேணும்?

விடீயோவில சொல்லி இருக்கே தெளிவா...

நான் தெளிவாக சொல்லி விட்டேன்... எனது மூலம் தமிழ் செய்திகள் தான். ஒவ்வொன்றும், ஒவ்வொரு விதமாக சொல்கின்றன. 

அது சரி. உங்கள் அதீத ஆர்வம்... ஏன் என்று யோசிக்க வைக்கிறது.

இது ஒரு நம்பிக்கை. அவ்வளவுதான். நீங்கள் நம்பவேண்டும் என்று நான் எதிர்பார்க்க முடியுமா, என்ன?

எது வித்தியாசமாக அல்லது தவறாக சொல்லி இருக்கோ, அதனை மட்டுமே கொண்டு வந்து ஒட்டி, வேறு மதத்தவர் நம்பிக்கையினை புண்படுத்துவது சரியானதா, படித்த மனிதரே?

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலகம் 2024 யை எதிர் பார்த்த படி....

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, விசுகு said:

உலகம் 2024 யை எதிர் பார்த்த படி....

🤣 அட திரியை சிரிப்போம் சிறப்போம் பகுதிக்கு மாத்துங்கப்பா🙏

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, Nathamuni said:

சிறுவன் படகில் ஏறிய சிறிது நேரத்தில், அதுவரை அந்த நோக்கத்துக்காக காத்திருந்தது போலவே, அந்த காலும், கடலில் மூழ்கிப் போனது.

பிள்ளையாரின் கால் ஆக்கிமிடிக்ஸ் தத்துவத்துக்கு உட்பட்டது. கால் கிடையாக இருக்கும் போது கூடிய கடலுடனான தொடுபரப்பு.. மேலுதைப்பு நிறையை விட அதிகமாவதால்.. மிதக்கவும்.. கால் நிலைகுத்தாகவோ.. சரிவாகவோ ஆனால்.. தொடுபரப்பு குறைந்து.. மேலுதைப்பு...நிறையை விட குறைவதால்..மூழ்கவும் செய்கிறது.

அதிஷ்டவசமாக சிறுவன் தெரிந்தோ தெரியாமலோ.. போதிய மேலுதைப்பு பெறத்தக்க வகையில் பிள்ளையாரைப் பிடித்திருந்ததால்.. மிதந்து உயிர் தப்பினார்.

பிள்ளையாரை கரையக் கூடிய.. மிதக்கக் கூடிய இயற்கைக்கு ஆபத்தற்ற வகையில் செய்து கடலில் கலக்க விடுவது தவறல்ல. அதேபோல்.. கடல் உயிரினங்களுக்கு ஆபத்தல்லாத உணவு வகைகளை படையலாக கலந்து விடுவதும் தவறல்ல. ஜீவகாருணியமாகும். 

சைவமோ.. இந்தோ.. பிற உயிர்களை தன் உயிர் போல் நேசிக்கவே கற்றுக்கொடுக்கின்றன. அப்படி செயலாற்றினால்.. எல்லாருக்கும் சிறப்பே.

எனிமேலாவது.. சிறுவர்களை கடலுக்குள் இறக்காமல் இருக்க வகை செய்ய வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, Nathamuni said:

நான் படபடக்கவில்லை, சும்மா பகிடிக்கு என்று, ஸ்மைலி ஐகோன் போட்டேன். அதாலை நீங்கள் படபடக்காதீங்கோ.

நான் ஏன் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையை நம்பவேணும்?

விடீயோவில சொல்லி இருக்கே தெளிவா...

நான் தெளிவாக சொல்லி விட்டேன்... எனது மூலம் தமிழ் செய்திகள் தான். ஒவ்வொன்றும், ஒவ்வொரு விதமாக சொல்கின்றன. 

அது சரி. உங்கள் அதீத ஆர்வம்... ஏன் என்று யோசிக்க வைக்கிறது.

இது ஒரு நம்பிக்கை. அவ்வளவுதான். நீங்கள் நம்பவேண்டும் என்று நான் எதிர்பார்க்க முடியுமா, என்ன?

எது வித்தியாசமாக அல்லது தவறாக சொல்லி இருக்கோ, அதனை மட்டுமே கொண்டு வந்து ஒட்டி, வேறு மதத்தவர் நம்பிக்கையினை புண்படுத்துவது சரியானதா, படித்த மனிதரே?

இதில கனக்க யோசிக்காதேயுங்கோ😂

ஒரு நடந்த செய்தி, அதற்கு கதை வசனம் எழுதி கதையாக்கி இருக்கிறீர்கள் - ஆனால் "கதை கதையாம்" இல் இணைக்கவில்லை. அதை பிள்ளையார் செய்தாரா அல்லா செய்தாரா (காப்பாற்றியவர் பெயரைக் கவனியுங்கள்) என்பதைப் பற்றி நான் "தெரியாது" என்று மட்டுமே சொல்லியிருக்கிறேன்!

"தெரியாது" என்று சொல்வதே புண்படுத்தியிருந்தால் ரொம்பவும் இளகிய மனசு தான் உங்களுக்கு! இனி ஏதாவது நீங்கள் எழுதினால், இதற்கேற்ப என் பதிலைத் தருகிறேன், புண்படுத்தாமல்😎!

  • Haha 2
  • Confused 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்பெல்லாம் கடவுள் இருந்தால் நல்லது என்று யோசிக்க தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
8 hours ago, Justin said:

இதில கனக்க யோசிக்காதேயுங்கோ😂

ஒரு நடந்த செய்தி, அதற்கு கதை வசனம் எழுதி கதையாக்கி இருக்கிறீர்கள் - ஆனால் "கதை கதையாம்" இல் இணைக்கவில்லை. அதை பிள்ளையார் செய்தாரா அல்லா செய்தாரா (காப்பாற்றியவர் பெயரைக் கவனியுங்கள்) என்பதைப் பற்றி நான் "தெரியாது" என்று மட்டுமே சொல்லியிருக்கிறேன்!

"தெரியாது" என்று சொல்வதே புண்படுத்தியிருந்தால் ரொம்பவும் இளகிய மனசு தான் உங்களுக்கு! இனி ஏதாவது நீங்கள் எழுதினால், இதற்கேற்ப என் பதிலைத் தருகிறேன், புண்படுத்தாமல்😎!

அலம்பறை???

அடுத்தவர் நம்பிக்கைக்குள் உடுக்கடிக்க மும்மரமா இருக்கும் அறப்படித்த உங்களுடன் தொடர்ந்து பேசுவதில் அர்த்தமில்லை.

கிரந்த, நக்கல், நளின கதைகளை இறந்து புதைத்து மூன்றாம் நாள் எழும்பினவர் குறித்தும் சொல்லி 'புண்படுத்த' ஏலும்.

விட்டால், மனித உடலுக்கு எப்படி ஆணைத் தல? கப்சா தானே எண்டுவியல் போல கிடக்குது.

👇 இதீல உங்கட கருத்து, ஏதாவது?

ஒன்றுமே இல்லை. ஆனா, உங்க மட்டும்???

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
12 hours ago, nedukkalapoovan said:

பிள்ளையாரின் கால் ஆக்கிமிடிக்ஸ் தத்துவத்துக்கு உட்பட்டது. கால் கிடையாக இருக்கும் போது கூடிய கடலுடனான தொடுபரப்பு.. மேலுதைப்பு நிறையை விட அதிகமாவதால்.. மிதக்கவும்.. கால் நிலைகுத்தாகவோ.. சரிவாகவோ ஆனால்.. தொடுபரப்பு குறைந்து.. மேலுதைப்பு...நிறையை விட குறைவதால்..மூழ்கவும் செய்கிறது.

அதிஷ்டவசமாக சிறுவன் தெரிந்தோ தெரியாமலோ.. போதிய மேலுதைப்பு பெறத்தக்க வகையில் பிள்ளையாரைப் பிடித்திருந்ததால்.. மிதந்து உயிர் தப்பினார்.

பிள்ளையாரை கரையக் கூடிய.. மிதக்கக் கூடிய இயற்கைக்கு ஆபத்தற்ற வகையில் செய்து கடலில் கலக்க விடுவது தவறல்ல. அதேபோல்.. கடல் உயிரினங்களுக்கு ஆபத்தல்லாத உணவு வகைகளை படையலாக கலந்து விடுவதும் தவறல்ல. ஜீவகாருணியமாகும். 

சைவமோ.. இந்தோ.. பிற உயிர்களை தன் உயிர் போல் நேசிக்கவே கற்றுக்கொடுக்கின்றன. அப்படி செயலாற்றினால்.. எல்லாருக்கும் சிறப்பே.

எனிமேலாவது.. சிறுவர்களை கடலுக்குள் இறக்காமல் இருக்க வகை செய்ய வேண்டும். 

மூல தமிழ் இணைப்பில் மரக்கதையே இல்லை. பக்திப் பரவசமாக எழுதியிருந்தார்கள்.

கடலில் முழுவதுமாக கரைப்பதால் மரம் இணைப்பதில்லை.

justify பண்ண பின்னர் மரக்கதை வந்திருக்கலாம், தெரியாது.

அதை சாதாரணமாண செய்தியா நம்ம ஸ்ரைலில எழுத, பென்ரிகோஸ் கோஸ்டிகளுக்கு பிடிக்கல்ல போல!!

தந்தி வீடியோ செய்தி இணைத்தும், இல்ல, நான் வாசிச்சது தான் சரி அடம் பிடிக்கினம்.

Edited by Nathamuni
Posted

புனைவுக் கதைகள் மூலம் கடவுளை நிறுவ வேண்டிய வழக்கமான நிலையிலுள்ள ஆன்மீகச் சிந்தனையும் பகுத்தறிவின் உண்மைத் தேடலையும் இந்தத் திரி விளக்கி நிற்கிறது.

இந்தியாவில் 5 வயதுக்கு மேற்பட்ட 80 லட்சம் சிறுவர்கள் வருத்தி வேலை செய்ய வைக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் இறக்கிறார்கள். இவையெல்லாம் பிள்ளையாரின் செயல் இல்லை. லட்சத்தில் ஒரு சிறுவன் எதோற்சையாகத் தப்பிப் பிழைத்தால் கடவுள் உரிமை கோருகிறார். உலகம் முழுவதும் கடவுளின் சக்தி இப்படித்தான் அளவிடப்படுகிறது.

  • Like 3
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, இணையவன் said:

1) லட்சத்தில் ஒரு சிறுவன் எதோற்சையாகத் தப்பிப் பிழைத்தால் கடவுள் உரிமை கோருகிறார்.
 
2) உலகம் முழுவதும் கடவுளின் சக்தி இப்படித்தான் அளவிடப்படுகிறது.

👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, இணையவன் said:

புனைவுக் கதைகள் மூலம் கடவுளை நிறுவ வேண்டிய வழக்கமான நிலையிலுள்ள ஆன்மீகச் சிந்தனையும் பகுத்தறிவின் உண்மைத் தேடலையும் இந்தத் திரி விளக்கி நிற்கிறது.

இந்தியாவில் 5 வயதுக்கு மேற்பட்ட 80 லட்சம் சிறுவர்கள் வருத்தி வேலை செய்ய வைக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் இறக்கிறார்கள். இவையெல்லாம் பிள்ளையாரின் செயல் இல்லை. லட்சத்தில் ஒரு சிறுவன் எதோற்சையாகத் தப்பிப் பிழைத்தால் கடவுள் உரிமை கோருகிறார். உலகம் முழுவதும் கடவுளின் சக்தி இப்படித்தான் அளவிடப்படுகிறது.

கடவுள் உரிமை கோரவில்லை இணையவன்.

விநாயகர் சிலையை பிடித்து உயிர் தப்பினார், அவ்வளவு தான் சாராம்சம்.

இறை நம்பிக்கை உள்ளோர் அதை கடவுள் செயல் என்பர்.

இல்லாதோர் பகுத்தறிவு பேசுவர்.

அவ்வளவுதான்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த கதையை இறை நம்பிக்கை உள்ளோர் எல்லோரும் கூட கடவுள் அருளால் தான் நடைபெற்றது என்று நம்பமாட்டார்கள். ஏனென்றால் இறை நம்பிக்கை உடையோரிலும் அறிவுடன் சிந்திக்கும் தன்மையுடன் எளிதில் ஏமாறாத   மக்கள் பெருமளவில் உள்ளார்கள். 

இவ்வாறாக மயிரழையில் உயிர் தப்பும்  சம்பவங்கள் உலகம் முழுவதும் நடை பெற்றிருக்கின்றன. இவை இயல்பாக நடைபெறுபவை.  

 இவ்வாறான சம்பவங்கள் நடக்கும் போது அந்த நபர்களின் மிக நெருங்கிய உறவினர்கள் அவர்களின் மகிழ்ச்சி  மற்றும் சென்றிமென்ரால் ஏற்படும் மனிதப்  பலவீனத்தால் அப்படி நம்பலாம்.  ஏனையவர்கள் இவ்வாறான கதையாடல்களை நம்புவதில்லை. அவ்வாறு நம்ப அவர்களின் அறிவு இடம் கொடுப்பதில்லை. 

மிகச் சொற்ப எண்ணிக்கையில் உள்ள,  எந்த அடிமுட்டாள் கதையை தெருவில் போகும் எவன் சொன்னாலும் நம்பும் ஏமாளிகள் மட்டும்  இதை நம்பும் சாத்தியப்பாடு உள்ளது. இந்த கதையும் அப்படிப்பட்ட ஏமாளிகளைக் குறிவைத்து எழுதப்பட்டதே.  ஏற்கனவே இந்திய  பத்திரிகைகளில் திரித்து எழுதப்பட்ட செய்தி யாழ் இணையத்தில் மேலும் புளுகுகளைச் சேர்த்து எழுதப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. 

  • Confused 1

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.