Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேரே சந்தித்தேன். அவர்கள் தான் எந்த சந்தேகமும் இல்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

வீடியோ பார்க்கவில்லை.

ஆனால், "இதோ வெளிவருகிறார்" என்று இன்பராசா சொன்ன கால எல்லை கடந்து விட்டதென நினைக்கிறேன். 

எனவே இதைக் கிடப்பில் போட்டு விட்டு நாம் நம் சோலிகளைப் பார்க்கலாம் என்பது என் கருத்து.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Justin said:

வீடியோ பார்க்கவில்லை.

ஆனால், "இதோ வெளிவருகிறார்" என்று இன்பராசா சொன்ன கால எல்லை கடந்து விட்டதென நினைக்கிறேன். 

எனவே இதைக் கிடப்பில் போட்டு விட்டு நாம் நம் சோலிகளைப் பார்க்கலாம் என்பது என் கருத்து.

இதில் என்னுடைய கருத்தோ என்னுடைய நிலைப்பாடு என்று எதுவும் இல்லை. 

அவருடைய நேரடி ஒலிபரப்பு மற்றும் கருத்து.

பார்க்கலாம். கனநாளைக்கு எவரும் ஏமாற்றவும் முடியாது. ஏமாற்றவும் முடியாது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த பேட்டியை  எடுப்பவர்களின் நம்பகத்தன்மை பற்றி  அறிந்தவர்கள் தெரியத்தந்தால் நன்று

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரின் கடைசி மகன் பாலச்சந்திரனை கூட்டிச்சென்றவர் என்று சொல்லப்படும் மருத்துவ போராளி ரேகாவின் மனைவியின் முகநூல் இது.. இங்கு அவர் இவை குறித்து பொதுவெளியில் நிறைய எழுதி இருக்கிறார்.. வாசித்துப்பாருங்கள்.. ஊரை அடித்து யார் உலையில் போட திட்டமிடுகிறார்கள்..? காலம் பதில் சொல்லும்..

 

———————-

நாம் இன்று ஒரு முடிக்கு வந்திருக்கிறோம்.   Australia இன்பத்தமிழ் வானொலியில் அருணா அக்கா இன்று  நேரடியாக கதைக்கிறா. நேர்காணலில் பார்த்தோம் .    . .யாராவது ஏமாற்றுகிறார்கள் என்றால் உண்மையை சொல்லி காப்பாற்ற வேண்டும்.   அதனால் தான் நான் தொடர்ந்து கதைத்தபடி இருந்தேன் .பாலாவை அழைத்து வந்தவர் ரேகா என அருணா அக்கா இன்றும் சொல்கிறா.ரேகாவுடன் குழந்தை வரவில்லை. இதற்கு ஆயிரக்கணக்கான மக்கள், போராளிகள் ,வைத்தியர்கள் சாட்சி.  இவ்வாறு யார் அவர்களை சொல்லி நம்பவைக்கின்றனரோ தெரியவில்லை. யாராவது போலிகளாக இருந்தால் இப்படி ஏமாற்றுவற்கு  நல்ல தண்டனை கொடுக்கவேண்டும் .. எனினும் எனது கணவரையும் அவர்களையும் தெரிந்த ஒருவர் மனோச் அண்ணா எனது கணவரின் ஆத்மாவுக்காக கேட்கிறேன். அவர்கள் யாராலும் ஏமாற்றுப்படமுடியாது. ரேகாவுடன் குழந்தை வரவில்லை என்ற உண்மையை எங்காவது அருணா அக்காவை கண்டுபிடித்து சொல்லிவிடுங்கள்.    பாலா செத்துக்கிடக்கும் புகைப்படம் பார்ததேன். சுற்றிவர சில போராளிகளும் தான் சுடப்பட்டு இறந்திருக்கின்றனர். அநேகமாக அவர்கள் தான் பாலாவை அழைத்துவந்தவர்களாக இருக்கலாம்  ரேகாவுடன் குழந்தை வந்திருந்தாலும் அதனை மறுக்கும் தேவை எமக்கு இல்லை. ஏனெனில் இருவரையும் ஒரேயடியாக சுட்டுவிட்டார்கள் என நினைத்திருப்போம். ஆனால் இது பொய்யான தகவலாக இருப்பதால் இவர்களை யாராவது ஏமாற்றகின்றனரா என்பதே எமது அச்சம் ..துவாரகா மதிவதனி உயிருடன் இருந்தால்   துவாரகா மதிவதனி இப்படி சொல்கிறார்களெனின் தாம் தமது மகனை யாரிடமோ கொடுத்துச்செல்லவில்லை ரேகாவுடன் தான் கொடுத்து சென்றோம் என மனஆற்றுப்படுத்தலுக்காக   அப்படி நினைக்கலாம்.அப்படி  மனநிலை...... மகனை இழந்த குழப்பமோ தடுமாற்றமோ என  என நினைக்கும் போது கதைக்கும் போது நானும் பிள்ளைகளும் அழுதுவிட்டோம் . எந்த தாயிற்கும் தன் குழந்தையை இழத்தல் கொடுரமானது. மதிவதனியின் பிரசவத்திலும் அருகிருந்தவர் ரேகா. அவனை முதலில் தூக்கினார். அவை மனப்பதிவுகளாக இருக்கலாம்  பாலாவின் இறப்பு இணையத்தளசெய்திகளை பார்த்தே அறிந்தேன். எனது வைத்தியராக இருக்கும் சிறியதாயிடம் தான் தொலைபேசி அழைப்பை எடுத்து சொல்லி அழுது முடித்தேன். நான் பாலாவை என் வயிற்றில் பெறவில்லை. எனக்கே பாலாவை இழந்துவிட்டோம் என்பதிலிருந்து மீளும் மனநிலை இல்லை. எனவே பெற்ற தாய்க்கு அது கொடுரமானது.  . . .     மதிவதனிஉண்மையில் உயிருடன் இருந்து இப்படி சொல்கிறாவாக இருந்தால்   அவர்களின் மனதை உளவியல் ரீதியாக ஆற்றுப்படுத்தும் உயரிய நோக்குடன் மௌனிக்கிறேன்.  அக்காவின் மனம் ரேகாவுடன் குழந்தை என ஆற்றுப்படுத்தப்படுகிறது என்றால் அப்படியே விட்டுவிடுகிறேன். இதனைவிட வேறு எந்த ஆற்றுப்படுத்தலையும் எனக்கு கொடுக்கமுடியாது. என் பிள்ளைகளும் நானும் இறுதிமுடிக்கு வந்திருந்தோம்.  அப்படி நினைத்தே அவர்கள் அனைவரும் மனதை தேற்றி கொள்ளட்டும் என முடிவெடுத்துள்ளோம்.  .  உண்மையில் விண்ணுலகில் அப்பாவுடன் தான் அண்ணா வாழ்கிறார். .இழப்புக்கள் என்பது ஆற்றுப்படுத்த முடியாத வலி. அதனை நாம் நன்றாக உணர்ந்திருக்கிறோம். எம்மால் எவரையும் அருகிருந்து ஆற்றுப்படுத்தமுடியாது. அப்பா வாழும் போது மட்டுமல்ல இறந்த பின்னரும் ஆற்றுப்படுத்தும் கடவுளாக இருப்பின் அது கடவுளின் வரம் தான் மௌனித்துவிடுவோம் அம்மா என பிள்ளைகள் சொன்னார்கள்.

https://www.facebook.com/arivu.amuthu.5

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

17.10.2023 ....வெளிநாட்டிலும் இங்குமுள்ள  தமிழ் தேசியத்தை நேசிக்கும் சிலர் என்னிடம் மதிவதனி குடும்பத்தின் எவருடனும் உங்களுக்கு தொடர்பில்லையா? கதையுங்கோ.. இது அறியாமையின் வெளிப்பாடாக இருக்கலாம் . இது எம் தமிழ் இனத்தின் வரலாறு அழியவோ அழிக்கவோ விடமுடியாது என கேட்கின்றனர். . எனவே இவ்விடயம் சமுகத்திற்கு தெரியட்டும். இந்தமண்ணில் பிறப்பதுவும் மடிவதுவும் என்றோ ஒருநாள் எனவே எவருக்கும் பயமின்றி உண்மையுடன் மட்டும் வாழ்ந்துவிட்டு செல்வோம். சிறி அண்ணா எனது முகப்புத்தகத்தில் பல வருடமாக இருக்கார். எல்லாம் வாசிக்கினம். பார்க்கினம். தெரிந்து கொண்டு தான் இதனை செய்கின்றனர். தெரிந்து கொண்டு செய்கிறார்களென்றால் உண்மையாக தான் இருக்கவேண்டும் என்று ஆரம்பத்தில் துவாரகா மதிவதனி இருப்பது உண்மையாக இருக்கலாம் என நான் நினைத்தேன்.எமக்கு தெரியாமல் எல்லோரும் சாவதாக திசைதிருப்புவதற்காக சொல்லிவிட்டு பெண்கள் இருவரும்  மாறுவேடத்தில் இராணுக்கட்டுபாட்டுக்குள் வந்து வெளிநாடு சென்றிருப்பார்களோ என நினைத்தேன் .  துவாரகாவோ மதிவதனியோ இருந்தால்  விளக்காவது   கொளுத்துவார்கள். உண்மை சொல்வர்கள். என நினைத்தேன்.ஆனால் பிறகு அருணா அக்காவுடன் கதைத்து பலர் எனக்கு குரல் பதிவை அனுப்பி ஒவ்வொரு உண்மை தன்மையையும் என்னிடம் ஆராய முற்பட்டனர். அதன் பிறகு அதில் தான் 150 பேர் கப்பலில் பிரபாகரனும் தப்பிவிட்டார் என அருணா அக்கா திரைகதை பேசுகிறா. அதுமட்டுமல்ல. பாலாவை ரேகாவிடம் கொடுத்துவிட்டு  பிரபாகரன தப்பியதாக கதை புனைகின்றா.இப்படி பல கதை புனைதலாக இருந்தது.இது செவி வழி கதையில்ல. அவவின் குரல்பதிவு.  இது எனக்கு அவவின் உண்மை தன்மையற்றவிதத்தை காட்டியது..யாராவது போலியாக அவவிற்கு சொல்லியிருந்தாலும் சிறி அண்ணாவிடமோ அல்லது அவரது மனைவியிடமோ கேட்டு உண்மை தன்மையை என்னிடம் கேட்டிருக்கலாம். கேட்கப்படவில்லை. ஆகவே நான் நினைத்தேன். சிறி அண்ணாவும் அருணா அக்காவும் கதைப்பதில்லையாக்கும் என எண்ணினேன். அது தொடர்பாக சிறி அண்ணா மௌனித்தே வந்தார். ஆனால் தறபோது 3 நாட்களின் முன் தங்கையை கொச்சைப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட சேரமான் முகப்புத்தக பதிவுகளை பிரபாகரனுக்கு சார்பானவர்களோ பிடிக்காதவர்களே பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். ஏனெனில் அது ஒழுங்கான முகப்புத்தகமில்லை. ஆனால் சிறி அண்ணா பகிர்ந்தார். அதனால் நான் விழித்துக்கொண்டேன். எமக்கு மிக நெருங்கியவர்களோ நண்பர்களோ எவராயினும் பிழையாக திசைதிருப்பப்படும்போது விழிப்புணர்வு கொடுக்க வேண்டும்..அது கடமை. எமக்கு எந்தளவுக்கு நெருங்கியவர்களாயினும் உண்மைக்கு புறம்பாக நியாயமற்ற வகையில் சென்றால் தூக்கி எறிய தயங்கமுடியாது. தவறை சுட்டிக்காட்ட தயங்கமுடியாது..சொல்லப்போனால் அந்தக்குடும்பத்திடம் நான் கடமைப்படவில்லை. ஆனால் அவர்கள் எம் குடும்பத்திடம் கடமைப்பட்டுள்ளனர். இந்த 14 வருடங்கள் கொடுத்த தனிமையான வாழ்வியல் துன்பங்களிலேனும் நாம் அந்தக்குடும்பத்திடம் கடமைபடவில்லை. எனவே நான் துணிந்தே இந்தக்கருத்தை பதிவு செய்தேன். ஏனெனில் நாம் தோற்றுப்போனவர்கள். வரலாறு உண்மையின் வடிவில் வாழட்டும் என 14 வருடமாக இன்னல்களை சுமந்து வருகிறேன். எனவே எவரினதும் பொய்யான கதைகளுக்குள் எம்மை இழுக்கமுடியாது. நான் கடவுளுடன் வாழும் போது அங்கே நியாயமற்ற வேலைகளோ பொய்களுக்கோ இடமில்லை. அதனை அனுமதிக்கவும் முடியாது.. ஆனால் மாறாக அருணா அக்கா தனது குரல்பதிவுகள் எனக்கு வராது என நினைத்து அடுக்கடுக்காக பிரபாகரன் இருக்கிறார் குழந்தை ரேகாவுடன் என்றதும் பொய்யை உணர்ந்து அவர்களை போலியாக உணர்கிறேன். யாரோ பிழையானவர்களால் மனநிலை சலவையோ வழிநடத்தலோ ஏதோ ஒன்று நடைபெறுகிறது. எனவே அனைவரும் அவர்கள் அறியாமையினால் தான் இதனை செய்கிறார்கள் என நினைக்காதீர்கள். ஏதாவது ஒரு நல்லவிடயதுக்காக சில பொய்கள் சொன்னால் அவை ஏற்றுககொள்ளப்படும். நானும் மௌனிக்கமுடியும. ஆனால் அந்தப் பொய்யினால் எவரும் பாதிப்படைய முடியாது. .நன்மை மட்டும் நடக்கவேண்டும்.  ஆனால் இங்கே தியாகம் கொச்சைப்படுத்தபடும்போது என்னால் மௌனிக்கமுடியாது. எனது உயிரைவிட மேலானது மனுநீதிகண்ட சோழ தியாகங்கள் .அடுத்ததாக என் கணவரின் வலிசுமந்த அத்தியாயம்.

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0WZcu3n8eGsPzfUQ8KtZJfuKsEpNME3t2Dk4H7uyaE12tX7zpiXT9vMn3vPrwqjuql&id=100003319169256

 

 

 

————//////———-

Dr Sujo ,பொதுவெளியில் உங்களிடம் ஒரு வேண்டுகோள். உண்மை தெரிந்து பலர் மௌனித்த விளைவு இன்று நிலைமை இந்தளவுக்கு மாறிவிட்டது. உண்மையை சொன்னால் உங்களையும் துரோகி என்றுவிடுவார்கள் என பயப்படுகிறீர்கள் . ஆனால் இதனைவிட  எப்போது நீங்கள் அனைவரும் உண்மையை சொல்லமுடியும் தியாகங்கள் அர்ப்பணிப்புகள் அனைத்தும் முழுமையாக அழிக்கப்பட்டதன் பின்னரா ? நீங்கள் அவருடன் நந்திக்கடலினூடாக தப்பி காட்டுக்குள் செல்வதற்கே ஒரு படகில் ஏறி கடக்க முடியாத நிலையில் இறுதியில் இருந்தீர்கள் என்ற உண்மையை சொல்லிவிடுங்கள் . பலரும் ஒவ்வொரு காரணம் சொல்லி அவருடன் காட்டுக்கு செல்லமுடியாது என மறுத்த போது ஒரு வைத்தியராக கடமை செய்ய அவருடன் செல்வதற்காக சென்றீர்கள் என்ற நன்மதிப்பு எனக்கு உண்டு. ஆனால் படகிலேயே தப்பமுடியாமல் முல்லைத்தீவு காட்டுக்குள்ளேயே செல்லமுடியாமல் திரும்பினீர்கள். இறுதிநாள் பயணம் எப்படி 150 பேருடன் அவர் தனது மனைவி மகளை அழைத்துக்கொண்டு கப்பலில் தப்பினார் என  கேளுங்கள். நான் 14 வருடமாக எனது நாட்டில் பயமென மௌனித்திருந்தாலும் மௌனித்தை கலைத்து உண்மை வாழட்டும் என நினைத்தேன். நீங்கள் வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டும் எம் இனத்தின் வசைச்சொல்லிற்காக பயப்படுகிறீர்கள் போல இருக்கிறது. எந்த இடததிலும்  துவாரகாவோ மதிவதனியோ தப்பி செல்லமுடியுமாக இருந்திருந்தால் அநேகமாக இராணுவ கட்டுப்பாட்டுபகுதியினாலாகும். அல்லது இராணுவ உதவியின்றி தப்ப முடியாது என்பது அனைவரும் அறிந்த உண்மை.. .அல்லது மாறுவேடத்திலாகும்.அதனைவிட வேறு வழியில்லை. அப்படி கப்பலில் அனுப்பி வைப்பதாயின்  இராணுவம் அனுமதித்தால் மட்டுமே முடியும் .வேறுவழியில் முடியாது.  இது மட்டுமே சந்தர்ப்பம்.ஏற்கனவே தனியாக தப்பவழியிருந்த போது அப்படி தப்ப மறுத்திருந்தார் என்ற உண்மை பலருக்கும் தெரியட்டும். என் கணவர்  கொல்லப்பட்டுவிட்டார். உங்கள் அருகிருந்தவர் என் கணவர் என்றவகையில் என் கணவருடைய ஆத்மாவுக்காக இந்த உண்மையை இனியாவது பலருக்கும் சொல்லிவிடுங்கள். இனி யாருக்காகவும் எந்த இரகசியமும் தேவையில்லை. உங்கள் அனுமதியின்றி உங்கள் தொடர்பான உண்மையை வெளியிடுவது தவறாக இருக்கலாம். ஆனால் இதுவே இறுதிவழி. ஒரு மாயையிலும் சதிவலையிலும் சிக்க வைக்கப்பட்டுவிட்டார்கள் அவர்களை மீட்கவே முடியாது மனநிலை சலவை செய்யப்பட்டுவிட்டது போல தெரிகிறது. அதனால் பொதுவெளியில் சொல்கிறேன் . மன்னித்துவிடுங்கள்.

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0jU9Qns5wKTYdvGzraN8rtqxNnawySgABHWsyTL67vztjkXZR6u8uPrcXdVnHrq9Fl&id=100003319169256

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

அருணா அக்காவிற்கான பதிவு இது. துவாரகா இது தொடர்ந்த பேசு பொருள். இருந்தால் பேசு பொருள் இல்லையேல் ஏமாற்று பொருள். துவாரகா மதிவதனி இருவரின் இறப்பையும் யாரும் கண்ணால் காணவில்லை. அதனால் யார் சொன்னாலும் அது துவாரகா தான் .அவவின் பெயரை புனை பெயராக்கி கட்டுரை கவிதை எழுதினேன்.  இப்பொழுதெல்லாம் அப்படி எழுதுவதில்லை. அந்தளவுக்கு பெயேரே கொச்சைபடுத்தப்பட்டுவிட்டது.   மதிவதனி துவாரகா இருவரையும் மட்டும் சொல்லியிருப்பின் நாமும் தான் ஆரம்பத்தில் நம்பினோம்.  அவர்கள் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக சொல்வது தான் நம்ப முடியாத விடயம். அததுடன் பாலாவை எனது கணவரிடம் மதிவதனி அவர்கள் கொடுத்தனுப்பிவிட்டு கப்பலில் ஓடியது என மதிவதனியே சொல்வதாக அருணா அக்கா சொல்வது வதந்தியாகும். அவ்வாறாயின் ஆயிரக்கணக்கானவர்களின் கண்களை கட்டிவிட்டுதான் ரேகா பாலாவை கொண்டுவநதிருக்கவேண்டும். அப்படிகொண்டுவந்திருப்பினும் குழந்தை என்னுடன் தான் என் குழந்தைகளுடன் குழந்தையாக வந்திருக்கவேண்டும். அது நடக்கவில்லை. எது எப்படியோ உண்மையை சொல்ல ரேகாவும் இல்லை . எம் முதல் மகனும் இல்லை..அதன் வேதனை கொடுரமானது..ஆனால் அருணா அவர்களிடம் கேட்பது ,தனது முதல் குழந்தையை தனது கைகளால் தூக்கியதாக எண்ணி மகிழ்ந்த ரேகா விண்ணுலகில் இருந்தபடியும் தன்னால் காப்பாற்ற முடியாமல் போன தன் மகன் என எண்ணி கவலை கொள்வார். என் கணவர் இறந்துவிட்டாலும் அவரின் ஆத்மா காயப்பட நாம் விரும்புவதில்லை. தயவுடன் அருணா அக்காவிடம் வேண்டுகோள். அவசரப்பட்டு தொடர்ந்தும் ஏமாந்து வரலாற்றை அழித்துவிடாதீர்கள். மனோச் அண்ணா லண்டனில் இருக்கிறார்.  எனது கணவர் அண்ணையை சந்தித்தபின்னர் அவரையும் இன்னும் சிலரையும்  சந்தித்து உரையாடியதுடன் இருவரும் இன்னும்  பலரும் சரணடைந்து ஒரே இடத்தில் வைக்கப்பட்டிருந்தனர். குழந்தை என் கணவருடன் இருந்தானா எனக்கேட்டு உறுதிப்படுத்திவிட்டு மிகுதி விடயங்களின் உண்மையை அலசுங்கள்.  அக்கா குழந்தையை இழந்த மனகுழப்பத்தில் ரேகாவுடன் குழந்தை என நினைத்தாலும் தங்கைச்சி உயிருடனிருப்பின் தெளிவாகவல்லவா இருக்கவேண்டும். எங்கோ பிழை நடக்கிறது. தெரிந்தும் நான் மௌனிப்பது    தவறு. மதிவதனி துவாரகா பற்றி எதுவேண்டுமானாலும் கதையுங்கள். ஆனால் அனைவருக்கும் பொதுவான பிரபாகரனை கதைத்து  எம் மக்களைவிட்டு ஓடி உயிருடன் இருக்கிறார் என சொல்லும் மாயவலைக்குள் தொடர்ந்தும் அகப்பட்டு  வரலாற்றை அழிக்காதீர்கள்.எனது இயல்பு நான் மிக நேசிப்பவர்களாயினும் என்று தமது தனித்துவத்தை இழக்கிறார்களோ அன்று அவர்களை தூக்கி எறிய தயங்கியில்லை. ஏனெனில் எனது தனித்துவத்துக்காக அவர்களுடைய தியாகத்தை மதித்து நான் பல இன்னல்களை அடைந்துள்ளேன்.

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid03GWXuuVedWYptd9jcSt24GzanjwHAoREw7pVA24hFk27AFnA55bT9KY4E8ML1kxKl&id=100003319169256

  • கருத்துக்கள உறவுகள்

அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடக்கும்!

தமிழர்கள் விசுக்கோத்துக்கள் என மெய்யாகவே நம்பும் ஒரு கூட்டம் இருக்கு. இந்தக் கூட்டம் நம்புவது போல நாங்களும் விசுக்கோத்துகள்தானா என்ற சந்தேகமும் வருகின்றது. 

தலைவரின் பெயர் இன்னும் 100 வருடங்களுக்குப் பின்னர் என்னமாதிரி திரிக்கப்படும் என்று இப்போதே தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

வீடியோவைப் பார்த்தேன். தங்கச்சியையும், தங்கச்சி மகளையும் பார்த்தேன், கூட இருந்தேன் என்று சொல்கிறார். முன்னைய வீடியோவில் அவரும் இருக்கிறார். கூட 150 பேரும் இருக்கின்றனர் என்ற சொன்னதாக ஞாபகம். ஆனால் இந்த வீடியோவில் அப்படி எதுவும் சொல்லவில்லை. கேள்வி கேட்டவரும் கடந்துவிட்டார். 

ஆக 27 நவம்பர் அன்று தமிழர்களின் அரசியலை தலைமை தாங்க ஒருவர் வருகின்றார். இதனால் கிலி கொள்ளப்போகின்றவர்கள் இலங்கை தமிழ் அரசியல்வாதிகள்தான்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கார்த்திகை 27க்கு பின்னர் பார்க்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

கார்த்திகை 27க்கு பின்னர் பார்க்கலாம்.

அதே...

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் தினத்திற்குப் பின்னர் எதையும் செய்யட்டும், மாவீரர் தினமான நவம்பர் 27 அன்று ஒன்றும் செய்யாமல் இருக்கட்டும்!

இந்த முறை பிள்ளையையும் கூட்டிக் கொண்டு மாவீரர் தின நிகழ்விற்குச் செல்ல ஆயத்தமாகிறேன். இந்த "இல்லையா இருக்காரா" என்ற கூத்தாக அது மாறும் என ஏதும் அசுமாத்தம் தெரிந்தால், வீட்டிலிருந்தே அஞ்சலி செய்து விட்டுப் போவதெனத் தீர்மானித்திருக்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த ஒரு வருடமாக மிகவும் திட்டமிட்ட ஒரு படம் தயாராகி வருகிறது.

அந்தப்படம் வெளிவருமா?இல்லையா?

அதுவரை பொறுத்திருக்க வேண்டியது தான்.

28 minutes ago, Justin said:

மாவீரர் தினத்திற்குப் பின்னர் எதையும் செய்யட்டும், மாவீரர் தினமான நவம்பர் 27 அன்று ஒன்றும் செய்யாமல் இருக்கட்டும்!

இந்த முறை பிள்ளையையும் கூட்டிக் கொண்டு மாவீரர் தின நிகழ்விற்குச் செல்ல ஆயத்தமாகிறேன். இந்த "இல்லையா இருக்காரா" என்ற கூத்தாக அது மாறும் என ஏதும் அசுமாத்தம் தெரிந்தால், வீட்டிலிருந்தே அஞ்சலி செய்து விட்டுப் போவதெனத் தீர்மானித்திருக்கிறேன்!

நவம்பர் 27 அன்று தலைவரின் குரலில் மாவீரர் உரை ஒன்று இடம்பெறலாம் என சில தகவல்கள் கசிகின்றன. இன்றிருக்கும் தொழில்நுட்ப வசதியின் படி இதுவும் சாத்தியமாகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாழாப்போன நுண்ணறிவை வைத்து என்னென்னவெல்லாம் செய்யப்போகிறார்களோ கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவேளை அவர்கள் உயிருடன் இருந்தால்தான் இவர்களின் பிரச்சனை என்ன?  இங்குதான் அவர்கள் இருக்கிறார்கள் என்று காட்டி கொடுக்க விரும்புகிறார்களா?

அன்றாட பொழுதில் மூக்குமுட்ட தின்றுவிட்டு ஏப்பம் விட கஷ்டம் என்றால் இயக்க கதைகள்தான் இவர்களுக்கு இஞ்சி மொரப்பாவா?

அநாமதேய உறுதிப்படுத்தபடாத, போராட்ட ஆன்மாக்களை பற்றிய ஆதாரமற்ற விமர்சனங்கள் தொடர்பான செய்திகளுக்கு தடையும் கறுப்பு பட்டியலும் இடும் கள நிர்வாகம், மதிவதனி துவாரகா பற்றிய ஆய்வுகள் களத்தில் உலா வருவதற்கு கட்டுப்பாடுகள் அல்லது தடை விதிப்பதைபற்றி ஆராயலாமே.

இருந்தாலும் இறந்தாலும் மனதின் ஆறாத காயமாய் இருக்கும் ஆத்மாக்களை குத்து மதிப்பாய் விவரணங்கள் செய்து பொழுதுபோக்க எந்த தனிமனிதனுக்கும் உரிமையில்லை, அவர்கள் தேசிய சொத்து இந்த சில்லறை பயல்களின் வீட்டு சொத்து அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, valavan said:

ஒருவேளை அவர்கள் உயிருடன் இருந்தால்தான் இவர்களின் பிரச்சனை என்ன?  இங்குதான் அவர்கள் இருக்கிறார்கள் என்று காட்டி கொடுக்க விரும்புகிறார்களா?

அன்றாட பொழுதில் மூக்குமுட்ட தின்றுவிட்டு ஏப்பம் விட கஷ்டம் என்றால் இயக்க கதைகள்தான் இவர்களுக்கு இஞ்சி மொரப்பாவா?

அநாமதேய உறுதிப்படுத்தபடாத, போராட்ட ஆன்மாக்களை பற்றிய ஆதாரமற்ற விமர்சனங்கள் தொடர்பான செய்திகளுக்கு தடையும் கறுப்பு பட்டியலும் இடும் கள நிர்வாகம், மதிவதனி துவாரகா பற்றிய ஆய்வுகள் களத்தில் உலா வருவதற்கு கட்டுப்பாடுகள் அல்லது தடை விதிப்பதைபற்றி ஆராயலாமே.

இருந்தாலும் இறந்தாலும் மனதின் ஆறாத காயமாய் இருக்கும் ஆத்மாக்களை குத்து மதிப்பாய் விவரணங்கள் செய்து பொழுதுபோக்க எந்த தனிமனிதனுக்கும் உரிமையில்லை, அவர்கள் தேசிய சொத்து இந்த சில்லறை பயல்களின் வீட்டு சொத்து அல்ல.

ஆணி அடிச்ச மாதிரி 
நான்கு வரிகள் 
நன்றி! 

  • கருத்துக்கள உறவுகள்
On 18/10/2023 at 17:55, விசுகு said:

இந்த பேட்டியை  எடுப்பவர்களின் நம்பகத்தன்மை பற்றி  அறிந்தவர்கள் தெரியத்தந்தால் நன்று

நம்பகத்தன்மை என்பது நிமிடத்திற்கு நிமிடம் மாறக் கூடியது...இப்ப எல்லாமே பிழைப்பு ,பணம் என்றாகி விட்டது ...இவையெல்லாவற்றையும் விட்டு, விட்டு சுயநலமாய் இருங்கள் அண்ணா 
பி;கு ; காசு அதிகமாய் வைத்திருந்தால் இங்கால இந்த தங்கசிக்கு தட்டி விடுங்கோtw_lol:😂  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரதி said:

நம்பகத்தன்மை என்பது நிமிடத்திற்கு நிமிடம் மாறக் கூடியது...இப்ப எல்லாமே பிழைப்பு ,பணம் என்றாகி விட்டது ...இவையெல்லாவற்றையும் விட்டு, விட்டு சுயநலமாய் இருங்கள் அண்ணா 
பி;கு ; காசு அதிகமாய் வைத்திருந்தால் இங்கால இந்த தங்கசிக்கு தட்டி விடுங்கோtw_lol:😂  

நானும் முயற்ச்சிக்காமல் இல்லை சகோதரி. இந்த விடயத்தில் தோற்றுக்கொண்டே இருக்கிறேன் 😭

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, கிருபன் said:

 

நல்லதொரு ஆய்வு. நன்றி கிருபன். 

  • கருத்துக்கள உறவுகள்

ஆக மொத்தத்தில் இந்த செய்திகளுக்கு பின்னால் இந்தியா இல்லை.அப்படித்தானே குணா கவியழகன்.இந்த ஆய்வாளர் ஒரு இந்திய அபிமானி ஆகவே அந்தக் கோணத்தில் ஆய்வைச் செய்யாமல் வேண்டுமென்றே தவிர்த்திருக்கிறார்.இந்தச் செய்தி முதலில் தமிழ்நாட்டில் நெடுமாறன் ஐயா. காசி ஆனந்தன் மூலமாக வெளியே விடப்பட்டது. சாதாரண காலங்களில் இப்படியான செய்திகள் வெளிவரும்போது அவர்களை இந்தியப் புலனாய்வுத்துறை சும்மாவிடாது. விசாரைணகள் நடத்தப்பட்டிருக்கும் அப்படி எதுவும் நடைபெற வில்லை.மக்களும் அந்தச் செய்தியை பெரிதுபடுத்தவில்லை.அடுத்ததாக தலைவரின் மனைவியின் தமைக்கையாரின் காணொளி வந்தது. அதைத்தொடர்ந்து பிரா;சில் உள்ள மனித உரிமை செயற்பாட்டாளர் ஒரு பேட்டியில் யைh நெடுமாறன் தெரிவித்த செய்தியை தானும் உறுதிபடுத்துவதாகச் சொன்னார். அவர் ஒரு இந்திய விசுவாசி அவரின் பேட்டியின் பின்னர் இந்தச் செய்தியை மக்கள் நம்பத்தயாராக இல்லை. ஆனால் இந்தியப்புலனாய்வுத்துறைக்கு இதில் தொடர்பிருப்பதற்கான சந்தேகத்தைக் கொடுக்கூடிய காரணிகள் இவை.இந்தியாவுக்கு இந்தச் செய்தியைப்பரப்புவதில்  பல நன்மைகள் இருக்கின்றன. அதனை சிறிலங்காவும் ஏனையோரும் பயன் படுத்துகிறார்கள்.தலைவர் இருந்தால் தலைவன் இல்லாவிட்டால் இறைவன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

 

வருகிறா ள்?

அடிப்படை சபை/பேச்சு நாகரீகம் கூட இல்லாத ஒரு வாய்வாளர் @Kuna kaviyalahan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.