Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விசுகு said:

அவரிடம் அவரது தனிப்பட்ட குடும்பம் சார்ந்த கேள்விகளை அது சார்ந்தவர்களின் முன் கேட்கக்கூடாது. கேட்டால் பாவம் அவர் வட் கி டூ? 🤪

பாலியல் குற்றம் சம்பந்தமான விசாரணைக்கு பொலிஸ் ஸ்டேசன் போகும் போது மனையிவை ஏதோ கவசம் போல் எடுத்து/கூட்டி வந்திருக்க கூடாது.

அப்படியே கூட்டி வந்தாலும் மனைவியை பேட்டி கொடுக்க வைத்திருக்க கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Justin said:

"இந்த மூஞ்சையை நான் ஏறெடுத்தும் பார்த்திருக்க மாட்டேன்!" என்று ஜீன் கரோலைப் பற்றி ட்ரம்ப் சொன்னதைப் போலவேயல்லவா

இதே போல் இங்கே அண்மையில் இருவர் வேலையில் இருந்து தூக்கி அடிக்கப்பட்டனர். ஒருவர் ஒரு தோத்துபோன ஆக்டர். முன்னாள் இலண்டன் மேயர் வேட்பாளர். இன்னொருவர் கடுமையான வலதுசாரி.

ஒரு பெண் ஊடகரை பற்றி இதே போல் நான் அந்த மொகரையை எல்லாம் தொடக்கூட மாட்டேன் என ஆக்டர் கூற, மற்றவர் சிரித்து கொண்டே கேட்டார்.

இவர்களை வேலையை விட்டு தூக்கியது ஒரு மிக மோசமான வலதுசாரி தொலைக்காட்சி.

இங்கே ஒரு வலதுசாரி தொலைக்காட்சிக்கு உள்ள தார்மீக அக்கறை கூட தமிழ் சமூகத்தில் இல்லை என்பது கவலைக்குரிய விடயம்.

கட்டுரையை இணைத்தமைக்கே என்னா அடி🤣.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
25 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

யாழ்கள ஆண்களின் சப்போட்டை எதிர்பாக்கிரேன்.. 😄🤜🤛

சங்கம் ஏற்கனவே இருக்குது😂!

நீங்கள் நெடுக்கரிட்ட அங்கத்துவ விண்ணப்பத்தை நிரப்பிக் கொடுத்து விட்டு, சந்தாப் பணத்தை இங்கால அனுப்பி விடுங்கோ!

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஓர் ஆணின் மனத்தில் உள்ள கேவலத்தைச் சுட்டிக்காட்ட எங்கள் செந்தமிழன் சீமான் அண்ணாவா கிடைத்தார்? 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
46 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

யாழ்கள ஆண்களின் சப்போட்டை எதிர்பாக்கிரேன்.. 😄🤜🤛

வந்திட்டேன் 😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

விஜயலட்சுமியின் குற்றச்சாட்டின் உண்மையான நோக்கம் தொடர்பாக கட்டுரையை எழுதியவருக்கு சந்தேகம் வரவில்லை.

ஆனால்  சீமானின் பதிலில் அவருக்குக் கோபம் வருகிறதென்றால், கட்டுரையாளரின் உண்மையான நோக்கம் என்ன? 

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, Kapithan said:

விஜயலட்சுமியின் குற்றச்சாட்டின் உண்மையான நோக்கம் தொடர்பாக கட்டுரையை எழுதியவருக்கு சந்தேகம் வரவில்லை.

ஆனால்  சீமானின் பதிலில் அவருக்குக் கோபம் வருகிறதென்றால், கட்டுரையாளரின் உண்மையான நோக்கம் என்ன? 

இதில் என்ன சந்தேகம். வழமை போல்.. சீமான் மீதான அரசியல் காழ்புணர்வின் வழியான சேறடித்தல் தான். ஹிந்திய நடுவன் அரசுகளின் ஏவல் ஹிந்து அதை தானே செய்யும். அதுவும் ஹிந்துத்துவா ஆட்சியில்.

மேலும் ஒரு அண்ணர் சொல்லுறார்.. வந்த இடம்.. எழுதின பேர்வழியை பார்க்காதேங்கோ.. கட்டுரையை அலசுங்கோன்னு. அலச வேண்டிய அவசியமற்ற ஒன்றை எதுக்கு அலசனம். மலசல கூடத்தில் இருந்து.. என்ன வைரம் வைடூரியமா வெளிவரும்...??!

அண்ணரின் சீமான் தொடர்பான பார்வைகளை தான் இங்கு நாம் நன்கு பார்க்கிறமே.. அதில.. இது வேற. துர்நாற்றமடிக்கும்.. ஹிந்துவிடம் இருந்து.. ரோஜாப் பூ வாசம் வருகிறது என்று அண்ணர் சத்தியம் செய்யாத குறையாச் சொல்லிக்கிட்டு இருக்கார். பாவம்.. அவர் நிலைமை அப்படியாகிவிட்டது. 

Edited by nedukkalapoovan
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடந்து போவதை குறிக்க ஒரு பட்டன் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்🤣.

பிகு

கள்ளாடு விரித்த வலையில் வீழ்ந்தது வெள்ளாடு🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

இதே போல் இங்கே அண்மையில் இருவர் வேலையில் இருந்து தூக்கி அடிக்கப்பட்டனர். ஒருவர் ஒரு தோத்துபோன ஆக்டர். முன்னாள் இலண்டன் மேயர் வேட்பாளர். இன்னொருவர் கடுமையான வலதுசாரி.

ஒரு பெண் ஊடகரை பற்றி இதே போல் நான் அந்த மொகரையை எல்லாம் தொடக்கூட மாட்டேன் என ஆக்டர் கூற, மற்றவர் சிரித்து கொண்டே கேட்டார்.

இவர்களை வேலையை விட்டு தூக்கியது ஒரு மிக மோசமான வலதுசாரி தொலைக்காட்சி.

இங்கே ஒரு வலதுசாரி தொலைக்காட்சிக்கு உள்ள தார்மீக அக்கறை கூட தமிழ் சமூகத்தில் இல்லை என்பது கவலைக்குரிய விடயம்.

கட்டுரையை இணைத்தமைக்கே என்னா அடி🤣.

இதில தமிழ் சமூகம் அக்கறைப்பட என்ன இருக்கு.. ஆண்கள் பெண்களைப்பற்றி கோசிப் கதைப்பதும் அதைவிட நாலு மடங்கு பெண்கள் பெண்களைப்பற்றியும் ஆண்களைப்பற்றியும் கோசிப் கதைப்பதும் சமூகத்தில் நடப்பதுதானே... கோசிப் கதைப்பதை எல்லாம் குற்றம் என்றால் எங்கட ஊரில் ஒரு பொம்பிளையும் வீட்டில இருக்கேல.. பூரா ஜெயில்லதான் இருக்கணும்.. நீங்கள் ரோபோக்களால் ஆன சமூகத்தை எதிர்பார்த்தால் அது நடைமுறைக்கு சாத்தியமாகாது.. கனவு மட்டும் காணாலாம்.. கட்டுரை எழுத இன்னும் நல்லா இருக்கும்.. ஆனால் நிஜத்தில இதுதான் சமூகம்..இதில்தான் நாம் வாழ்கிறம்.. வெள்ளைக்காரன் ரிசுப்பேப்பரால் துடைக்கிறனான் கீழைத்தேய நடுகளில் கழுவுகிறார்கள்... வெள்ளைக்கார்ன் செய்வதை நாம் செய்யவேணும் எண்டு எந்த அவசியுமும் இல்லத்தான.. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
34 minutes ago, nedukkalapoovan said:

மேலும் ஒரு அண்ணர் சொல்லுறார்.. வந்த இடம்.. எழுதின பேர்வழியை பார்க்காதேங்கோ.. கட்டுரையை அலசுங்கோன்னு. அலச வேண்டிய அவசியமற்ற ஒன்றை எதுக்கு அலசனம். மலசல கூடத்தில் இருந்து.. என்ன வைரம் வைடூரியமா வெளிவரும்...??!

அண்ணரின் சீமான் தொடர்பான பார்வைகளை தான் இங்கு நாம் நன்கு பார்க்கிறமே.. அதில.. இது வேற. துர்நாற்றமடிக்கும்.. ஹிந்துவிடம் இருந்து.. ரோஜாப் பூ வாசம் வருகிறது என்று அண்ணர் சத்தியம் செய்யாத குறையாச் சொல்லிக்கிட்டு இருக்கார். பாவம்.. அவர் நிலைமை அப்படியாகிவிட்டது. 

👆 இது ஆமோதிக்கத் தக்க கருத்து!

தூ. துரைமுருகன் போன்ற நாகரீகமான நோக்கர்களின் குரலில் சீமான் விவகாரங்களைக் கேட்டு வளர்ந்த எமக்கு, இது போன்ற நாகரீகமற்ற எழுத்துக்களுக்குப் பழக்கமில்லாமல் போய் விட்டது😎

5 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இதில தமிழ் சமூகம் அக்கறைப்பட என்ன இருக்கு.. ஆண்கள் பெண்களைப்பற்றி கோசிப் கதைப்பதும் அதைவிட நாலு மடங்கு பெண்கள் பெண்களைப்பற்றியும் ஆண்களைப்பற்றியும் கோசிப் கதைப்பதும் சமூகத்தில் நடப்பதுதானே... கோசிப் கதைப்பதை எல்லாம் குற்றம் என்றால் எங்கட ஊரில் ஒரு பொம்பிளையும் வீட்டில இருக்கேல.. பூரா ஜெயில்லதான் இருக்கணும்.. நீங்கள் ரோபோக்களால் ஆன சமூகத்தை எதிர்பார்த்தால் அது நடைமுறைக்கு சாத்தியமாகாது.. கனவு மட்டும் காணாலாம்.. கட்டுரை எழுத இன்னும் நல்லா இருக்கும்.. ஆனால் நிஜத்தில இதுதான் சமூகம்..இதில்தான் நாம் வாழ்கிறம்.. வெள்ளைக்காரன் ரிசுப்பேப்பரால் துடைக்கிறனான் கீழைத்தேய நடுகளில் கழுவுகிறார்கள்... வெள்ளைக்கார்ன் செய்வதை நாம் செய்யவேணும் எண்டு எந்த அவசியுமும் இல்லத்தான.. 

ஓணாண்டியார், இந்த கேஸ் மறைவில் நடந்த கொசிப் அல்ல, ஸ்ரூடியோவில் நிகழ்ச்சியின் போது அல்லது நிகழ்ச்சி முடிந்த உடனேயே நடந்த உரையாடல், பதிவில் வந்து விட்டது.

ஒரு சீனப் பழமொழி இருக்கிறது: "மறைத்துச் செய்கிற காரியத்தை செய்யாமலே இருப்பது நல்லது" - இதன் மறுதலையாக எனக்கு விளங்குவது, "மைக்கில் சொல்ல முடியாத விடயத்தை, மூடிய அறையிலும் சொல்லாமல் தவிர்க்க வேண்டும்". 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, goshan_che said:

‘இவ்வளவு பெண்கள் இருக்க கொள்ளயில உனக்குப் பழகுவதற்கு ஒரு பொம்பளை பிடிச்சிருக்க பாரு’ என்று தன் மனைவி கயல்விழி தன்னைக் கடிந்துகொண்டதாகச் சிரித்தபடியே ஊடகத்தினர் மத்தியில் சீமான் பேசினார். இதைப் பேசுகிறபோது அவரது உடல்மொழியில் அவ்வளவு அலட்சியமும் திமிரும் வெளிப்பட்டன.

இங்கே அலட்சியமும் திமிரும் அறவே இல்லை.
சினிமா தொழிற்சாலையில் மது மாது அனைத்தும் சகஜம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சீமான்  -  இதைப் பேசுகிறபோது அவரது உடல்மொழியில் அவ்வளவு அலட்சியமும் திமிரும் வெளிப்பட்டன.
பெண் ஒருவரைப் பொதுவெளியில் கீழ்த்தரமாகப் பேசுகிறோம் என்கிற உணர்வு சிறிதுமின்றி நாட்டுக்காகப் போராடி சிறை சென்று திரும்பிய தியாகி போன்ற தொனியில் அவர் பேசினார். வெடித்துச் சிரித்தபடி சீமான் இதைச் சொன்னபோது சுற்றியிருந்த அனைவரும் சிரித்தனர். சீமானின் இந்த இழிசெயலைக் கேட்டுச் சிரிக்க ஆட்டு மந்தைகள்கூடக் கொஞ்சம் யோசித்திருக்கும். ]

இவர் தான் தமிழ் இனத்திற்கு தலைவராம் தமிழ்நாட்டிற்கு முதல்வராக வரபோகிறாராம்🙆‍♂️

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, Kapithan said:

விஜயலட்சுமியின் குற்றச்சாட்டின் உண்மையான நோக்கம் தொடர்பாக கட்டுரையை எழுதியவருக்கு சந்தேகம் வரவில்லை.

ஆனால்  சீமானின் பதிலில் அவருக்குக் கோபம் வருகிறதென்றால், கட்டுரையாளரின் உண்மையான நோக்கம் என்ன? 

காசு பணம் துட்டு மணிமணி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இதில தமிழ் சமூகம் அக்கறைப்பட என்ன இருக்கு.. ஆண்கள் பெண்களைப்பற்றி கோசிப் கதைப்பதும் அதைவிட நாலு மடங்கு பெண்கள் பெண்களைப்பற்றியும் ஆண்களைப்பற்றியும் கோசிப் கதைப்பதும் சமூகத்தில் நடப்பதுதானே... கோசிப் கதைப்பதை எல்லாம் குற்றம் என்றால் எங்கட ஊரில் ஒரு பொம்பிளையும் வீட்டில இருக்கேல.. பூரா ஜெயில்லதான் இருக்கணும்.. நீங்கள் ரோபோக்களால் ஆன சமூகத்தை எதிர்பார்த்தால் அது நடைமுறைக்கு சாத்தியமாகாது.. கனவு மட்டும் காணாலாம்.. கட்டுரை எழுத இன்னும் நல்லா இருக்கும்.. ஆனால் நிஜத்தில இதுதான் சமூகம்..இதில்தான் நாம் வாழ்கிறம்.. வெள்ளைக்காரன் ரிசுப்பேப்பரால் துடைக்கிறனான் கீழைத்தேய நடுகளில் கழுவுகிறார்கள்... வெள்ளைக்கார்ன் செய்வதை நாம் செய்யவேணும் எண்டு எந்த அவசியுமும் இல்லத்தான.. 

ப்ரோ,

உண்மையிலேயே உங்களுக்கு விளங்கவில்லையா? அல்லது என்னை வாருகிறீர்களா?

நானும் நீங்களும் கொசி கதைப்பதை போல் அல்ல சீமான் கதைத்ததும், டிரம்ப் கதைத்ததும் மேலே லாரன்ஸ் ஃபாக்ஸ்சும், டான் வூட்டனும் கதைத்ததும்.

எந்த சமூகத்திலும், அது கழுவும் அல்லது துடைக்கும் எந்த சமூகமானாலும் தனி மனிதர் கொசிப்கதைப்பதை எதுவும் செய்வதில்லை.

ஆனால் பொதுவெளியில், public profile உள்ள ஆட்கள். அதிலும் அரசியல் சம்பந்தபட்டோர் கதைத்தால் அது விமர்சனத்துக்கு உள்ளாகும்.

அரசியலில் உள்ளோரை பலர் பின்பற்றுவார்கள். அவர்கள் பலருக்கு ஒரு role model. நீங்களும் நானும் அப்படி அல்ல.

ஆகவே எமது சமூகத்தில், இளையோரை ஈர்க்கும் இயலுமை உள்ளவர்கள், பொதுவெளியில் பேசுவதை பற்றி தமிழ் சமூகம் அக்கறைப்பட்டே ஆக வேண்டும்.

இதில் அக்கறைப்பட என்ன இருக்கிறது என்ற உங்கள் கேள்வியே, பிரச்சனை எவ்வளவு ஆழமானது என்பதை காட்டி நிற்கிறது.

2 hours ago, Justin said:

ஸ்ரூடியோவில் நிகழ்ச்சியின் போது

ஆம் நிகழ்ச்சியின் போதுதான்.

நேரலையில்.

1 hour ago, குமாரசாமி said:

சினிமா தொழிற்சாலையில் மது மாது அனைத்தும் சகஜம்.

இதனால் அந்த தொழிலில் இருந்து வரும் ஆண்களுக்கு, பெண்கள் என்றாலே போகப்பொருட்கள், கிள்ளுகீரைகள் என்ற நினைப்பு வந்திருக்கலாம் அல்லவா?

அதன்பால் அலட்சியம் வந்திருக்கலாம் அல்லவா.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, goshan_che said:

ஆகவே எமது சமூகத்தில், இளையோரை ஈர்க்கும் இயலுமை உள்ளவர்கள், பொதுவெளியில் பேசுவதை பற்றி தமிழ் சமூகம் அக்கறைப்பட்டே ஆக வேண்டும்.

இதில் அக்கறைப்பட என்ன இருக்கிறது என்ற உங்கள் கேள்வியே, பிரச்சனை எவ்வளவு ஆழமானது என்பதை காட்டி நிற்கிறது.

உடான்சர், உங்களுக்கு பொழுது போகவில்லை எண்டால், எங்கையாவது துலாவி, எதையாவது கொண்டு வந்து ஓட்டுவது மட்டுமல்லாமல், ஆழமாக கவலை வேற படுகிறீர்கள்.

அட போங்க சாமியாரே, ஜோக் அடிக்காம...

பெரியார் நம்ம ஊரு வந்தாரு, மணியம்மையை பார்த்தார், தூக்கிக்கொண்டு போயி, கண்ணாலம் கட்டிக்கிட்டாரு என்கிறார், அமைச்சர் துரைமுருகன்.

கருணாநிதி, ஒன்றல்ல, இரண்டு... மனைவி, துணைவி. அதுக்கும் மேலே, கண்ணதாசனின் வனவாசம் மிச்ச கதையின் உதாரணம் சொல்லும்.

எம்ஜிஆர், திரை உலகில் அடித்த கூத்து, கடைசியில் ரஜனியை அடிக்கும் அளவுக்கு போனது.

ஜெயலலிதா, காதல், தொடர்புகள், எம்ஜிஆர், ஜெய்சங்கர், சோபன்பாபு என்று நீள்கிறது.

ஸ்டாலினுக்கு ஒரு பாத்திமா பாபு. அடுத்த முதல்வர் மகனுக்கு ஒரு நயன்தாரா, சிறீ ரெட்டி. 

நீங்க வேற, இந்த தமிழகத்து தலைவர்களிடம் எதையோ எதிர்பார்த்து சீரியஸ் ஜோக் அடித்துக்கொண்டு....

உதுக்குள்ள, உங்கள் ஜோக் புரியுமா, ஒரு அய்யா சீரியஸ் ஆக டபார் என்று வந்து நிற்பார்.

பாம்பின்கால், பாம்பறியும். உங்கள் உளநோக்கம் யான் அறியும், உடான்சரே 😁🤣 

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்கே எழுதும் பலர் மேற்கத்தேய அரசியல் கலாச்சாரத்தை இந்திய அரசியலுடன் ஒப்பிட்டுப் பேசுவது  கொஞ்சம் ஓவராகத் தெரியவில்லையா? 

🤨

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, Kapithan said:

இங்கே எழுதும் பலர் மேற்கத்தேய அரசியல் கலாச்சாரத்தை இந்திய அரசியலுடன் ஒப்பிட்டுப் பேசுவது  கொஞ்சம் ஓவராகத் தெரியவில்லையா? 

🤨

அதுதான் விசயம்....

எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று தெரிந்தும், குப்பைக்குள், குண்டுமணியை தேடுவதாக, ஜோக் அடிக்கிறார்கள்.  😁🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Nathamuni said:

உடான்சர், உங்களுக்கு பொழுது போகவில்லை எண்டால், எங்கையாவது துலாவி, எதையாவது கொண்டு வந்து ஓட்டுவது மட்டுமல்லாமல், ஆழமாக கவலை வேற படுகிறீர்கள்.

அட போங்க சாமியாரே, ஜோக் அடிக்காம...

பெரியார் நம்ம ஊரு வந்தாரு, மணியம்மையை பார்த்தார், தூக்கிக்கொண்டு போயி, கண்ணாலம் கட்டிக்கிட்டாரு என்கிறார், அமைச்சர் துரைமுருகன்.

கருணாநிதி, ஒன்றல்ல, இரண்டு... மனைவி, துணைவி. அதுக்கும் மேலே, கண்ணதாசனின் வனவாசம் மிச்ச கதையின் உதாரணம் சொல்லும்.

எம்ஜிஆர், திரை உலகில் அடித்த கூத்து, கடைசியில் ரஜனியை அடிக்கும் அளவுக்கு போனது.

ஜெயலலிதா, காதல், தொடர்புகள், எம்ஜிஆர், ஜெய்சங்கர், சோபன்பாபு என்று நீள்கிறது.

ஸ்டாலினுக்கு ஒரு பாத்திமா பாபு. அடுத்த முதல்வர் மகனுக்கு ஒரு நயன்தாரா, சிறீ ரெட்டி. 

நீங்க வேற, இந்த தமிழகத்து தலைவர்களிடம் எதையோ எதிர்பார்த்து சீரியஸ் ஜோக் அடித்துக்கொண்டு....

உதுக்குள்ள, உங்கள் ஜோக் புரியுமா, ஒரு அய்யா சீரியஸ் ஆக டபார் என்று வந்து நிற்பார்.

பாம்பின்கால், பாம்பறியும். உங்கள் உளநோக்கம் யான் அறியும், உடான்சரே 😁🤣 

நீங்கள் இரெண்டு விடயத்தை போட்டு குழப்பி கொள்கிறீர்கள்.

1. தனி மனித ஒழுக்கம்

2. பெண்களை கிள்ளுகீரையாக, போக பொருளாக நடத்துவது.

மேலே நீங்கள் குறிப்பிட்டது, லிஸ்ட் போட்டது எல்லாம் தனிமனித ஒழுக்கம் சார்ந்தது. அதில் எல்லா தமிழக அரசியல்வாதிகளும், ஏனையோரை விட தான் வேறுபட்ட உத்தமன் என சொல்லிய சீமான் உட்பட, மோசம் என்பதை நானும் ஏற்கிறேன்.

ஆனால் இந்த கட்டுரை அதை பற்றி அல்ல (கட்டுரை வாசித்தீர்களா). இது சீமானின் ஒழுக்க தவறை பற்றி அல்ல, மாறாக பொதுவெளியில் அவரும், மனைவியும் அவர் அள்ளு சொல்லைகளும் நடந்து கொண்ட விதம் பற்றியது.

39 minutes ago, Nathamuni said:

எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று தெரிந்தும், குப்பைக்குள், குண்டுமணியை தேடுவதாக, ஜோக் அடிக்கிறார்கள்.

ஏன்? மேலைதேயர் மட்டும் எம்மை விட மேலானோரா?

தமிழர் நாம் என்ன விழுமியங்கள் அற்ற காட்டுமிராண்டிகளா?

சந்திரிக்கா - எம்மை இனப்படுகொலை செய்தவர் - அவரை பற்றி மோசமாக எழுதி கனடாவில் இருந்து வந்த பாடலை தலைவர் “என்ன இருந்தாலும் ஒரு பொம்பிளை” என சொல்லி தடை செய்தார் தெரியுமா?

பொதுவெளியில் நாகரீகம் பேணுவது தமிழர் கலாச்சாரத்தில் ஒரு கூறுதான்.

குறிப்பாக பிரபாகரனின் பிள்ளைகள் என சொல்வோர் அதை கடைபிடித்தே ஆதல் வேண்டும்.

மேலும் இங்கே கட்டுரை எழுதியவர் ஒரு தமிழகத்தை சேர்ந்தவர். தமது அரசியலும் மேற்கு நாட்டு அரசியல் போல், பொதுவெளியில் ஆண் ஆதிக்கத்தை வெளிப்படுத்தா அரசியலாக இருக்க வேண்டும் என அவர் நினைப்பதில் என்ன தப்பு?

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
16 minutes ago, goshan_che said:

நீங்கள் இரெண்டு விடயத்தை போட்டு குழப்பி கொள்கிறீர்கள்.

1. தனி மனித ஒழுக்கம்

2. பெண்களை கிள்ளுகீரையாக, போக பொருளாக நடத்துவது.

மேலே நீங்கள் குறிப்பிட்டது, லிஸ்ட் போட்டது எல்லாம் தனிமனித ஒழுக்கம் சார்ந்தது. அதில் எல்லா தமிழக அரசியல்வாதிகளும், ஏனையோரை விட தான் வேறுபட்ட உத்தமன் என சொல்லிய சீமான் உட்பட, மோசம் என்பதை நானும் ஏற்கிறேன்.

ஆனால் இந்த கட்டுரை அதை பற்றி அல்ல (கட்டுரை வாசித்தீர்களா). இது சீமானின் ஒழுக்க தவறை பற்றி அல்ல, மாறாக பொதுவெளியில் அவரும், மனைவியும் அவர் அள்ளு சொல்லைகளும் நடந்து கொண்ட விதம் பற்றியது.

அதைத்தான் பெரியாரும், அவரது திராவிட போதனைகளும் தமிழகத்துக்கு செய்தன.

பேச்சுக்கே இந்த குதி, குதிக்கிறீர்கள்.

வேறு பல விடயங்கள் இருந்தாலும், போலீஸ்கார பெண்கள் இருவரை பாலியல் ரீதியில் சீண்டி, அழுத்தத்தினை பிரயோகித்து, கடந்த வாரம், கேஸ் கோர்ட்டுக்கு வருகிறது என்றவுடன், ஸ்டேஷன் வந்து, பயமுறுத்தினாரே, திமுக ஏரியா பிஸ்தா.

அது குறித்து, இந்த பத்திரிக்கை யாளர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். அப்படித்தானே.

திமுக, ஊடகங்களை விலைக்கு வாங்கி, தாம் விரும்பியதை சொல்ல வைக்கிறது. ஆனால், அதனையே ஸ்டாலின் நம்புவதே, அவருக்கு எதிர்காலத்தில் அரசியல் ரீதியில் பெரும் பிரச்சனைகளை கொடுக்கப்போகிறது.

*****

சில நேரம், உங்கள் ஜோக்குகளையே, சீரியஸ் ஆக நினைத்து, பக்கம், பக்கமாக கருத்து எழுதுகிறீர்கள்.

நாம் தமிழக வாக்காளர்கள் அல்ல, இந்தளவுக்கு அக்கறை கொள்ள. 

பார்த்தமா, சிரித்தமா... போய்கிட்டே இருப்போம். அதுக்குள்ள போய், வேலை இல்லாத ஆட்கள் போல மினக்கடுவதை, தமிழகத்தில் உள்ளவர்கள் பார்த்தால், சிரிப்பார்கள்.

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, Nathamuni said:

அதைத்தான் பெரியாரும், அவரது திராவிட போதனைகளும் தமிழகத்துக்கு செய்தன.

பேச்சுக்கே இந்த குதி, குதிக்கிறீர்கள்.

வேறு பல விடயங்கள் இருந்தாலும், போலீஸ்கார பெண்கள் இருவரை பாலியல் ரீதியில் சீண்டி, அழுத்தத்தினை பிரயோகித்து, கடந்த வாரம், கேஸ் கோர்ட்டுக்கு வருகிறது என்றவுடன், ஸ்டேஷன் வந்து, பயமுறுத்தினாரே, திமுக ஏரியா பிஸ்தா.

அது குறித்து, இந்த பத்திரிக்கை யாளர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். அப்படித்தானே.

திமுக, ஊடகங்களை விலைக்கு வாங்கி, தாம் விரும்பியதை சொல்ல வைக்கிறது. ஆனால், அதனையே ஸ்டாலின் நம்புவதே, அவருக்கு எதிர்காலத்தில் அரசியல் ரீதியில் பெரும் பிரச்சனைகளை கொடுக்கப்போகிறது.

இதென்ன நாயகன் பாணியில் அவனை நிறுத்த சொல்லு, நான் நிறுத்துகிறேன் என கலாய்க்கிறீர்கள்.

நீங்கள் சொன்னது போல நடந்து என்றால் அது மிகபெரிய தவறு. அதை வெளிகொணராமல் ஊடகங்கள் இருந்தால் - அவை வெட்கி தலைகுனிய வேண்டும்.

திமுக அடிப்பொடி இப்படி செய்கிறது என்பதனால் சீமான் செய்தது சரி என்றாகாதே?

அதுவும் சீமான் யார்? இந்த கேடுகெட்ட அரசியல் கலாச்சாரத்தை விரட்டி விட்டு, “தூய அரசியல்” செய்யும் எளிய பிள்ளை அல்லவா?

அவரிடம் நாம் நாகரீகமான பொது வெளி பேச்சை எதிர்பார்பது தவறா?

நீங்கள் சொல்வது போல், திமுக, அதிமுக குட்டையில் ஊறிய இன்னும் ஒரு சொத்தைதான் நாதக என்றால் ? அவர்கள் மாற்று இல்லை. புதிய மொந்தையில் அதே பழைய நாறிப்போன கள்ளு என்பது சரிதானே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
20 minutes ago, goshan_che said:

அதுதான் சொல்கிறேனே, நீங்கள் குப்பைக்குள் குண்டுமணியை தேடுகிறீர்கள்.

அது தமிழக அரசியலில் சாத்தியமில்லை என்ற புரிதலுடன்.... நகர்வோம்.

எமது, பார்வைக்கு கலாசாரம் சிறிது வித்தியாசமானது. தமிழகத்தில் பார்வை மிகவும் வித்தியாசமானது. அதுக்கு முக்கிய காரணம் சினிமா.

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரும் கூட்டத்தினிடையே, என்னதான் எதிர்பார்க்கிறீர்கள். 

ஒரு போலீஸ் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை. அதன் பிறகு என்ன, பெண் உரிமை பேசி எழுதுகிறார்கள்? இவர்கள் பணத்தினை வாங்கிக் கொண்டு, அரசியல் நோக்கத்துடன் எழுதுவார்கள். ஜெயலலிதாவை, சேலையை உருவி அடித்து திரத்தியவர், துரைமுருகன். பெரியகருப்பன், வீடியோ வந்த பின்னும், முன்னர் கிடைக்காத பெரும்பான்மையுடன் வென்றார். அதுதான் தமிழகமும் வாக்காளர்களும்.

சில நேரங்களில் யோசிக்கும் போது, பெரும் சனத்தொகையும், அங்கே நடக்கும், வளங்களை பகிர நடக்கும் தனிமனித பெரும் போட்டி காரணமாக மனிதாபிமானம் இல்லை என்று தோன்றுகிறது. இதில் பெண்ணுரிமை இப்போதைக்கு சாத்தியமில்லை.

ஆகவே, ரிலாக்ஸ். குட் நைட்.

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, Nathamuni said:

ரிலாக்ஸ் - நான் ஸ்டிரெஸ்ட் என்று எங்கே சொன்னேன் (பாம்பின் கால் அறியல்லையோ🤣).

ஆனால் இது சீரியசான விடயம்.  இப்படி பொதுவெளியில் அநாகரீகமாக, ஆணாதிக்கமாக பேசுவது கருணாநிதியும், சீமானும்தான்.

பெரியார், அண்ணா, காமராஜர், எம்ஜிஆர், ஜெ - தனி மனித ஒழுக்கம் எப்படி இருந்தாலும் பொதுவெளியில் கொஞ்சம் மரியாதையாக நடப்பார்கள்.

இது அலசப்பட வேண்டியதே.

இது வேறு யாரும் செய்தால் கடந்து போகலாம்.

ஒரு கண்ணியமான அரசியல் விடுதலை அமைப்பின் natural successors என தம்மை தாமே சொல்லிகொள்வோர் செய்யும் போது நிச்சயம் கண்டிக்கபட வேண்டும்.

இல்லாவிடில் “இவனே இப்படி, இவன் தலைவனும் இப்படித்தான் இருந்திருப்பான்” என்ற விம்பம் உருவாகி விடும்.

குட்நைட். ஸ்வீட் டிரீம்ஸ்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
43 minutes ago, Nathamuni said:

அதுதான் சொல்கிறேனே, நீங்கள் குப்பைக்குள் குண்டுமணியை தேடுகிறீர்கள்.

அது தமிழக அரசியலில் சாத்தியமில்லை என்ற புரிதலுடன்.... நகர்வோம்.

எமது, பார்வைக்கு கலாசாரம் சிறிது வித்தியாசமானது. தமிழகத்தில் பார்வை மிகவும் வித்தியாசமானது. அதுக்கு முக்கிய காரணம் சினிமா.

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரும் கூட்டத்தினிடையே, என்னதான் எதிர்பார்க்கிறீர்கள். 

ஒரு போலீஸ் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை. அதன் பிறகு என்ன, பெண் உரிமை பேசி எழுதுகிறார்கள்? இவர்கள் பணத்தினை வாங்கிக் கொண்டு, அரசியல் நோக்கத்துடன் எழுதுவார்கள். ஜெயலலிதாவை, சேலையை உருவி அடித்து திரத்தியவர், துரைமுருகன். பெரியகருப்பன், வீடியோ வந்த பின்னும், முன்னர் கிடைக்காத பெரும்பான்மையுடன் வென்றார். அதுதான் தமிழகமும் வாக்காளர்களும்.

சில நேரங்களில் யோசிக்கும் போது, பெரும் சனத்தொகையும், அங்கே நடக்கும், வளங்களை பகிர நடக்கும் தனிமனித பெரும் போட்டி காரணமாக மனிதாபிமானம் இல்லை என்று தோன்றுகிறது. இதில் பெண்ணுரிமை இப்போதைக்கு சாத்தியமில்லை.

ஆகவே, ரிலாக்ஸ். குட் நைட்.

தமிழக அரசியல் கட்சியினர் எல்லோருடனும் நாங்கள் பாரபட்சமற்ற உறவை வைத்துக்கொள்வதோடு அவர்களது அரசியலில் தலையீடு செய்யாமல் விலகியிருந்து உறவை வளர்ப்பதே எமக்கு நன்மையானது என வக்காலத்து வாங்குவோர், சீமான் என்றவுடன் மட்டும் எம்பிக் குதிப்பது முரண்நகை 🤨

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
8 hours ago, Kapithan said:

தமிழக அரசியல் கட்சியினர் எல்லோருடனும் நாங்கள் பாரபட்சமற்ற உறவை வைத்துக்கொள்வதோடு அவர்களது அரசியலில் தலையீடு செய்யாமல் விலகியிருந்து உறவை வளர்ப்பதே எமக்கு நன்மையானது என வக்காலத்து வாங்குவோர், சீமான் என்றவுடன் மட்டும் எம்பிக் குதிப்பது முரண்நகை 🤨

இவர்கள் அப்படி எல்லாம் வாழைப்பழத்தில் ஊசி ஏத்துவதுபோல் நைசாக பேசுவார்கள்..

ஆனா சனி கூட ஒரு ராசில இருந்து இன்னொரு ராசிக்கு போக இரண்டரை வருசமாகும்.. சீமான் என்ற பேரை கேட்டதுமே இவர்கள் எல்லாம் உடனும் வெறைப்பான மூடுக்கு வந்துடுவார்கள்..😂

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
16 hours ago, Kapithan said:

, கட்டுரையாளரின் உண்மையான நோக்கம் என்ன? 
 
வாடன்னா அடிக்கணும்..

Edited by பாலபத்ர ஓணாண்டி

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.