Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

எமக்காக வாழ்ந்து எமது நாட்டுக்காகப் போரிட்டுத் தம் இன்னுயிர்களையீந்த மாவீரர்களுக்கு எமது தலைதாழ்ந்த அஞ்சலிகளைத் தெரிவிக்கிறோம்.

தேசியத்தலைவரும் அவரது எஞ்சிய குடும்பத்தினரும் இவ்வளவு காலமும் ஏன் தங்களை வெளிப்படுத்தவில்லையென்ற கேள்வியைப் பலரும் கேட்கிறார்கள்.  ஒருவர் அடைக்கலம் தேடி நாடொன்றில் தஞ்சம் புகுந்தால் அதற்கான பெறுபேறுகள் கிடைக்க பத்திலிருந்து பதினைந்து வருடங்கள் எடுக்கலாம்.  அதிலும் தேசியத்தலைவரைப் போன்றவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் இந்தக்கால வரையறை அதிலும்  அதிகமாகவேயிருக்கும்.  1951 ஜெனிவா ஒப்பந்தப் பிரகாரம் கையெழுத்திட்ட அகதி அந்தஸ்தை வழங்கும் நாடுகள்  இந்த விவகாரங்களை எந்தவொரு நாட்டிடமோஅல்லது ஏஜென்சிகளிடமோ வெளிப்படுத்தாது மிகவும் இரகசியமாகவே பேணிப் பாதுகாக்கும்.  தேசியத்தவைரும் இதற்கு விதிவிலக்கல்ல அந்த வகையில் அவரும் அவரது குடும்பமும் அவர்கள் தஞ்சமடைந்த நாட்டின் குடியுரிமை விதிகளுக்குட்பட்டுத் தற்போதுதான் வெளிப்பட முடிந்திருக்கின்றது.  தாமதத்திற்கான முக்கிய காரணிகளில் இது மிகப்பிரதானமானதாகும்.  அதைக் கருத்திலெடுத்து நோக்கும் போது இந்தத் தாமதம் நியாயமானதாகவே படுகின்றது.  இதுபற்றிய விளக்கங்கள் இன்னும் சில நாட்களில் முழுதாகத் தெரியவரலாம் அதுவரை மக்கள் அதீத அவசரம் காட்டாது இவ்விடயத்தில் பொறுமையோடிருப்பதே சிறந்தது.  

  • Thanks 2
  • Haha 1
  • Confused 1
  • Downvote 16
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிகவும் பொறுப்பற்ற கருத்து.

தலைவர் உட்பட்ட அவரது குடும்பத்தவர்கள் எவருக்கும் எந்தநாடும் அடைக்கலமோ குடியுரிமையோ வழங்காது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீங்கள் சர்க்காரிசமாக நக்கலுக்கு எழுதி இருந்தாலும் இதையும் நம்பக்கூடிய மூளை வளர்ச்சி குன்றிய ஆக்கள் எங்கள் இனத்தில் இருப்பதால் தயவு செய்து பகிடிக்குதன்னும் இப்படி எழுதாதீர்கள்..🙏

இப்படி மூளை வளர்ச்சி குன்றிய ஆக்களை நம்பித்தான் அவர்கள் எப்படியும் தன்கதையையும் நம்புவார்கள் என்ற துணிச்சலில்தான் தலைவர் மனைவியின் சகோதரியும் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியோ வெட்கமோ இன்றி துவாரகாவை பற்றி பேசமுடிகிறது..

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
51 minutes ago, MEERA said:

மிகவும் பொறுப்பற்ற கருத்து.

தலைவர் உட்பட்ட அவரது குடும்பத்தவர்கள் எவருக்கும் எந்தநாடும் அடைக்கலமோ குடியுரிமையோ வழங்காது.

தலைவருக்கு குடியுரிமை நாடுகள் வழங்குகின்றனவோ இல்லையோ,

இது மிகவும் பொறுப்பற்ற கருத்து என்பது மட்ட்ம் உண்மை. 

16 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நீங்கள் சர்க்காரிசமாக நக்கலுக்கு எழுதி இருந்தாலும் இதையும் நம்பக்கூடிய மூளை வளர்ச்சி குன்றிய ஆக்கள் எங்கள் இனத்தில் இருப்பதால் தயவு செய்து பகிடிக்குதன்னும் இப்படி எழுதாதீர்கள்..🙏

இப்படி மூளை வளர்ச்சி குன்றிய ஆக்களை நம்பித்தான் அவர்கள் எப்படியும் தன்கதையையும் நம்புவார்கள் என்ற துணிச்சலில்தான் தலைவர் மனைவியின் சகோதரியும் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியோ வெட்கமோ இன்றி துவாரகாவை பற்றி பேசமுடிகிறது..

பெரியவரின் குடும்பத்தார் தொடர்பான கருத்துகள் பெரும்பாலும் இந்திய மத நிறுவனங்கள் (ஜக்கி, பிரேமானந்தா, பங்காரு அடிகள்,...........) ஊடாகவே அவரின் குடும்பத்தாரை நம்ப வைத்து, வெளியே பரப்பப்படுகிறதாக கூறப்படுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஒருவரின் கருத்துக்கு இவ்வளவு -1 இன்றுதான் பார்க்கக்கூடியதாக இருக்கிறது.

உங்களிடம் ஒரு கேள்வி @karu

தலைவர் குடும்பம் வெளியேறியது என்றால் பாலச்சந்திரனுக்கு ஏன் முடியவில்லை என்ற கேள்வி எழுமே.

தலைவரோ, குடும்ப உறுப்பினரோ இன்று வந்தாலும், ஆரவாரம் அடங்கியபின் எழும் முதல் கேள்வி: இவ்வளவு உயிர்களை பலி கொடுத்து நீங்கள் மட்டும் சுயநலத்துடன்  தப்பித்தீர்களா?

மேலும் வந்தால் கூட வயது மற்றும், சிங்கள புலனாய்வு வலையமைப்பு காரணமாக முன்னர் போல் கட்டி எழுப்ப முடியாதே!

ஆகவே அவர்கள் பெரும் தியாகத்துக்கு நன்றி. முடிந்த கதை முடிந்ததாகஇருக்கட்டுமே. யாராவது மிஞ்சியிருந்தால் நிம்மதியாக வாழட்டும்.

காலம் மாறும், நமது விடுதலைக்கு வழியும் வரும் 🙏

Edited by Nathamuni
  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தலைவரின் இருப்பையோ அவரது புதல்வி துவாரகா மற்றும் மனைவியார் மதிவதனி, பொட்டம்மான் போன்றோரின் இருப்பையோ கேள்விக்குள்ளாக்கி அவர்களின் இருப்பை நம்புபவர்களை நகைப்புக்கிடமாக்குபவர்கள் இவ்வளவு காலமும் எங்கேயிருந்தார்கள் என்று தெரியவில்லை.  எங்கள் கண்முன்னால் அவர்கள் மரணித்து வீழ்ந்ததை நிதர்சனமாகக் கண்டோமென்று யாராவது கூறி நானறியவில்லை.  அன்றிலிருந்து இன்றுவரை  தலைவர் இருக்கிறாரென்று கூறியவர்கள் அதனை உண்மையென்று நம்பி விரைவில் அவர் வெளிப்படுவார் என்கிறார்கள்.   தலைவருக்கு ஏதோ ஒருநாடு புகலிடமளித்திருக்கிறது  என்று கூறுவது எப்படிப் பொறுப்பற்ற செயலாகும்.   அன்றிலிருந்து இன்றுவரை நான் சீமானை ஆதரிக்கிறேன் ஆனால் சீமான் சொல்வது போல அவர் பாலச்சந்திரனை விட்டுவிட்டுக் கோழையாகப் போயிருக்கமாட்டார் என்பதை ஏற்க முடியாது.  ஏனெனினில் தலைவர் தன் குடும்பத்துக்காக மட்டும் உயிர் வாழவில்லை.  அவர் முழுத் தமிழ்த் தேசிய இனத்திற்காகவும் வாழ்ந்தார்.  அனைவரையும் கைவிட்டுத் தன்னுயிரையும் அவர் நீத்திருந்தால் அதுவே பொறுப்பற்ற தன்மை.   உயிர் தப்பியிருந்தால் மட்டுமே தமிழினத்தின் மகத்தான தலைவன்.   காலம் மிகவிரைவில் பதில்சொல்லப் போகிறது.  தலைவர் தனது வாரிசையவது விட்டுச் சென்றாரென்ற மதிப்பில் அந்த வாரிசைப் பின்தொடர்வோம்.  வாழ்க மாவீரர் புகழ்.

  • Like 1
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, karu said:

தயவாக கேட்கிறேன்.

உங்கள் பொருப்பற்ற கருத்துக்கு வலுச்சேர்க்க அண்ணன் சீமானை இதில் வலுகட்டியாக இழுத்து விட வேண்டாம்.

தலைவர், குடும்பம் காவியமாகி விட்டார்கள். அண்ணன் சீமான் இதை தெளிவுபடுத்தி உள்ளார்.

அண்ணன் சீமானிற்கு அறியத்யரமால் தலைவர் இருக்கிறார் என நம்பவா முடிகிறது?

அவர் காட்டிய வழியில் உலக தமிழினத்தை அண்ணன் சீமான் செயல்திறனாக தலைமை ஏற்று வழி நடத்துகிறார்.

வைகோ, திருமுருகன், இன்னும் பல மேல்நாட்டு துரோகிகளின் பேச்சை நம்பாமல் அண்ணன் பின்னால் திரளுங்கள்.

  • Downvote 5
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, தமிழகன் said:

நண்பரே!  இன்றுவரை சீமானே தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்துச் செல்லும் ஒப்பற்ற தலைவன் என்பதை ஏற்கிறேன்.  அவருக்காகக்கவிதை பாடியும் அவரைச் சென்று சந்தித்தும் வந்திருக்கிறேன்.  ஆனால் தேசியத் தலைவர் விடயத்தில் அவரது நிலைப்பாட்டை ஏற்கமுடியவில்லை.  தேசியத்தலைவரின் தியாக வாழ்வை அவரது மகன் பாலச்சந்திரனை முன்னிறுத்தி குறைத்து மதிப்பிடும் சீமானின் கருத்து நியாயமற்றது. அவர் ஒருபாலச்சந்திரனுக்காக மட்டும் வாழவில்லை.  முழுத்தமிழ்த் தேசிய இனத்திற்காகவும் வாழ்ந்தார்.  இயக்கத்தைக் கைவிட்டும் தமிழினத்தை நட்டாற்றில்விட்டும் அவர் போயிருந்தால் அது தியாக வாழ்வாகாது.  முதுகில் வேல்பாய்ந்து என்மகன் இறந்திருந்தால் அவனுக்குப் பால்கொடுத்த எனது   முலைகளை அறுத்தெறிவேன் என்று வீரச்சபதமெடுத்துப் போர்க்களத்தில் இறந்து கிடந்த தனது மகனைப் பார்க்கச்சென்ற வீராத்தாயின் இனத்தில் பிறந்த தேசியத்தலைவன் ஒருநாளும் தன் இனத்தைக் கைவிட்டுத் தன் உயிரைப் போக்கியிருக்கமாட்டான்.  எதுவரினும் இயக்கம் அழியாதிருக்க வேண்டுமென்ற ஓர்மம் அவனுக்கு இல்லாமற் போயிருக்காது.   ஆனைக்கும் அடிசறுக்கும் என்பதைப்போல சீமானுக்கும் சற்று நாக்குப் பிசகிவிட்டது.  அதனைச்சரிசெய்து சுதாரித்துக்கொண்டு சீமான் தமிழின விடுதலையை நோக்கித்  தன் தம்பிகளுடன் தொடரட்டும்.  செல்வி துவாரகா வந்ததும் இணைந்து செயலாற்றட்டும்.   வைகோ, திருமுருகன் காந்தி போன்ற தமிழ்த்தேசிய ஆர்வலர்களும் இணைவார்கள்.  காலம் நல்ல வழி காட்டும்.

  • Thanks 1
Posted
29 minutes ago, karu said:

இவ்வளவற்றையும் சொன்ன நீங்கள் ஒன்றைத் சொல்ல தவற விட்டு விட்டீர்களே..

அது, இந்தியா இவர்களுடன் சேர்ந்து ஈழத் தமிழர்களுக்கு தமிழ் ஈழத்தை பெற்றுக் கொடுக்கும் என்பதை..

இதனையும் சொன்னால்தான் எம்மால் நீங்கள் சொல்வதை முற்றாக, அப்படியே எந்த கேள்வியும் இன்றி நம்ப முடியும்... ஏனெனில் இந்தியா எங்கள் மீது எப்பொழுதும் அக்கறை கொண்ட நாடல்லவா...!

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, நிழலி said:

 இந்தியா எங்கள் மீது எப்பொழுதும் அக்கறை கொண்ட நாடல்லவா...!

முக‌ நூலில் த‌லைவ‌ரின் ப‌ட‌ம் போட‌ விட‌க் கூடாது என்று பேஸ்வுக் நிறுவ‌ன‌த்துக்கு முத‌ல் அறிவித்த‌தே இந்திய‌ ம‌த்திய‌ அர‌சு.............யாழ்பாண‌த்தில் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு உத‌வி செய்யும் பெடிய‌ன் மாவீர‌ நாளுக்கு தாய‌க‌ பாட‌லை போட்ட‌துக்கு அவ‌ரின் யூடுப்ச‌ண‌ல் முட‌க்க‌ப் ப‌ட்டு விட்ட‌து................இந்தியாக்கு த‌மிழ‌ர்க‌ள் அர‌சிய‌ல் ரீதியா எப்ப‌ த‌லைக்கு மேல் அடி கொடுக்கின‌மோ அப்ப‌ தான் இந்தியா இற‌ங்கி வ‌ரும் இல்லையேன் எங்க‌ட‌ போராட்ட‌த்தை மெது வாய் ந‌சுக்க‌ பார்க்கும்............எங்க‌ட‌ போராட்ட‌ம் த‌லைவ‌ர் ப‌ற்றிய‌ புரித‌ல‌ அடுத்த‌ த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கும் க‌ட‌த்தி விட்டோம் அவ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளின் பிள்ளைக‌ளுக்கு புரிய‌ வைச்சா த‌லைவ‌ரின் 150தாவ‌து பிற‌ந்த‌ நாளும் கொண்டாட‌ ப‌டும்...........அது ம‌ட்டும் இந்த‌ உல‌க‌ வ‌ரை ப‌ட‌த்தில் இந்தியா என்ர‌ நாடு இருப்ப‌து ச‌ந்தேக‌மே😏............

  • கருத்துக்கள உறவுகள்
Posted
46 minutes ago, karu said:

நண்பரே!  இன்றுவரை சீமானே தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்துச் செல்லும் ஒப்பற்ற தலைவன் என்பதை ஏற்கிறேன்.  அவருக்காகக்கவிதை பாடியும் அவரைச் சென்று சந்தித்தும் வந்திருக்கிறேன்.  ஆனால் தேசியத் தலைவர் விடயத்தில் அவரது நிலைப்பாட்டை ஏற்கமுடியவில்லை.  தேசியத்தலைவரின் தியாக வாழ்வை அவரது மகன் பாலச்சந்திரனை முன்னிறுத்தி குறைத்து மதிப்பிடும் சீமானின் கருத்து நியாயமற்றது. அவர் ஒருபாலச்சந்திரனுக்காக மட்டும் வாழவில்லை.  முழுத்தமிழ்த் தேசிய இனத்திற்காகவும் வாழ்ந்தார்.  இயக்கத்தைக் கைவிட்டும் தமிழினத்தை நட்டாற்றில்விட்டும் அவர் போயிருந்தால் அது தியாக வாழ்வாகாது.  முதுகில் வேல்பாய்ந்து என்மகன் இறந்திருந்தால் அவனுக்குப் பால்கொடுத்த எனது   முலைகளை அறுத்தெறிவேன் என்று வீரச்சபதமெடுத்துப் போர்க்களத்தில் இறந்து கிடந்த தனது மகனைப் பார்க்கச்சென்ற வீராத்தாயின் இனத்தில் பிறந்த தேசியத்தலைவன் ஒருநாளும் தன் இனத்தைக் கைவிட்டுத் தன் உயிரைப் போக்கியிருக்கமாட்டான்.  எதுவரினும் இயக்கம் அழியாதிருக்க வேண்டுமென்ற ஓர்மம் அவனுக்கு இல்லாமற் போயிருக்காது.   ஆனைக்கும் அடிசறுக்கும் என்பதைப்போல சீமானுக்கும் சற்று நாக்குப் பிசகிவிட்டது.  அதனைச்சரிசெய்து சுதாரித்துக்கொண்டு சீமான் தமிழின விடுதலையை நோக்கித்  தன் தம்பிகளுடன் தொடரட்டும்.  செல்வி துவாரகா வந்ததும் இணைந்து செயலாற்றட்டும்.   வைகோ, திருமுருகன் காந்தி போன்ற தமிழ்த்தேசிய ஆர்வலர்களும் இணைவார்கள்.  காலம் நல்ல வழி காட்டும்.

நீங்கள் சீமானை தலைவருடன் ஒப்பிட்டு எழுதிய முன்னைய கருத்து ஒன்றை மறுதலித்து இருந்தேன். அது தவறு என்றும் சுட்டிக்காட்டி இருந்தேன்.

பழைய கருத்தாளராகிய உங்கள் கருத்தை மதிக்கிறேன். அதேநேரம் உங்கள் இன்றைய இந்தக்கருத்துக்கு ஆயுள் மிக மிக குறைவு. நாளை பலரது கேள்விக்கும் விடை கிடைக்கணும். இல்லை இது முடிவுக்கு வரணும் வரும். 

எனக்கு பொறுமையும் பொறுப்பும் அதிகம். நாளை ஒரு நாள் தானே. வாழ்க வளமுடன். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

நாளைக்கு பெருசா ஒரு அதிசயமும் நிகழ போறது இல்லை............இது அந்த‌ க‌ட‌வுள்க‌ளுக்கே தெரிந்த‌ ஒன்று 

தொழில்நுட்ப‌ம் வ‌ள‌ந்த‌ இந்த‌ கால‌த்தில் ப‌ல‌ கோளாறுக‌ள் செய்ய‌லாம்...........ஆனால் அது உண்மை ஆகி விடாது ம‌க்க‌ள்  விழிப்புண‌ர்வுட‌ன் இருக்க‌னும்  .............வ‌ய‌தில் குறைந்த‌  பிள்ளைக‌ள் சொல்ல‌ விரும்புவ‌து இது தான்......... எம் இன‌த்துக்காக‌ த‌ன் குடும்ப‌த்தையே இழ‌ந்த‌ த‌லைவ‌ர்........த‌லைவ‌ர் குடும்ப‌ம் த‌மிழ் இன‌த்துக்காக‌ செய்த‌ தியாக‌த்தை கொச்சை ப‌டுத்த‌ வேண்டாம்🙏🙈🙊🙉.............

Edited by பையன்26
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

பாலர் பாடசாலையா இல்லை பைத்தியக்கார விடுதியான்னு தெரியேல்ல..

இதுக்குமேல் இந்த திரியை வாசித்தால் ஸ்டாலின் சட்டசபையில் சட்டைய கிழித்துக்கொண்டு ஓடியதுபோல் நானே எனது சட்டையை கிழித்துக்கொண்டு ஓடவேண்டி இருக்கும்...🙏

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

பாலர் பாடசாலையா இல்லை பைத்தியக்கார விடுதியான்னு தெரியேல்ல..

இதுக்குமேல் இந்த திரியை வாசித்தால் ஸ்டாலின் சட்டசபையில் சட்டைய கிழித்துக்கொண்டு ஓடியதுபோல் நானே எனது சட்டையை கிழித்துக்கொண்டு ஓடவேண்டி இருக்கும்...🙏

இது ஒன்றும் 2009 இல்லை ச‌கோ
இந்த‌ விம்ப‌ம் ஒரு சில‌ நாளில் உடைந்து காணாம‌ல் போய் விடும்...........ரென்ச‌ன் ஆகாம‌ இரு ச‌கோ.........

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, பையன்26 said:

எங்க‌ட‌ போராட்ட‌ம் த‌லைவ‌ர் ப‌ற்றிய‌ புரித‌ல‌ அடுத்த‌ த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கும் க‌ட‌த்தி விட்டோம் அவ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளின் பிள்ளைக‌ளுக்கு புரிய‌ வைச்சா த‌லைவ‌ரின் 150தாவ‌து பிற‌ந்த‌ நாளும் கொண்டாட‌ ப‌டும்...........அது ம‌ட்டும் இந்த‌ உல‌க‌ வ‌ரை ப‌ட‌த்தில் இந்தியா என்ர‌ நாடு இருப்ப‌து ச‌ந்தேக‌மே😏............

உங்கள் அந்த மேலான எண்ணம் ஈடேற அந்த அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன். யா அல்லா அவனுக்கு சுவனத்தை கொடுப்பாயாக. இந்தியாவையும் காப்பாற்றுவாயாக. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
26 minutes ago, Cruso said:

உங்கள் அந்த மேலான எண்ணம் ஈடேற அந்த அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன். யா அல்லா அவனுக்கு சுவனத்தை கொடுப்பாயாக. இந்தியாவையும் காப்பாற்றுவாயாக. 

பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்ட‌ வேண்டாம்.........என‌க்கு இந்தியாவை பிடிக்காது அதுக்கு கார‌ண‌ம் ப‌ல‌ உண்டு..........நீங்க‌ள் இந்தியாவை ஆத‌ரிப்ப‌வ‌ரா😁...........

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, பையன்26 said:

பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்ட‌ வேண்டாம்.........என‌க்கு இந்தியாவை பிடிக்காது அதுக்கு கார‌ண‌ம் ப‌ல‌ உண்டு..........நீங்க‌ள் இந்தியாவை ஆத‌ரிப்ப‌வ‌ரா😁...........

இந்தியாவில் உள்ள ஒரு பிரிவினரை ஆதரிப்பேன். அதாவது தமிழர்களை , தமிழ் நாடடை ஆதரிப்பேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, karu said:

ஒருவர் அடைக்கலம் தேடி நாடொன்றில் தஞ்சம் புகுந்தால் அதற்கான பெறுபேறுகள் கிடைக்க பத்திலிருந்து பதினைந்து வருடங்கள் எடுக்கலாம்.  அதிலும் தேசியத்தலைவரைப் போன்றவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் இந்தக்கால வரையறை அதிலும்  அதிகமாகவேயிருக்கும்.  1951 ஜெனிவா ஒப்பந்தப் பிரகாரம் கையெழுத்திட்ட அகதி அந்தஸ்தை வழங்கும் நாடுகள்  இந்த விவகாரங்களை எந்தவொரு நாட்டிடமோஅல்லது ஏஜென்சிகளிடமோ வெளிப்படுத்தாது மிகவும் இரகசியமாகவே பேணிப் பாதுகாக்கும்.  தேசியத்தவைரும் இதற்கு விதிவிலக்கல்ல அந்த வகையில் அவரும் அவரது குடும்பமும் அவர்கள் தஞ்சமடைந்த நாட்டின் குடியுரிமை விதிகளுக்குட்பட்டுத் தற்போதுதான் வெளிப்பட முடிந்திருக்கின்றது. 

இன்றைய புனிதநாளில் இப்படிப் பல கொச்சைப்படுத்தல்ளைக் காணவேண்டும் என்பது தமிழரின் விதியாக இருக்கின்றது.😡

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

நீக்கபட வேண்டியது இன்னமும் நீண்டு கொண்டிருக்கின்றது.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். 

Edited by MEERA
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

நகைச்சுவைக்காக ஒரு வெளியே அதிகம் தெரியாத விசயம்.

1983ல் பிரபாகரன் மணைவி, மதிவதனி வேறு மாணவர்களுடன் யாழ் பல்கலைக்கழகத்தில் உண்ணாவிரதம் இருந்தார்.

அவருடன் பல்கழைக்கழகத்தில் சேர்ந்து படித்த முருகானந்தம் என்பவர் அவோவை சுழட்டிக் கொண்டு லைன் அடித்துக் கொண்டு இருந்தார்.

மதிவதனி உண்ணாவிரதம் இருப்பதால், முருகானந்தம் மும்மரமாக அங்கே இருந்தார். உண்ணாவிரதம் முடிந்ததும் காதலை சொல்லலாம் என்று இருந்தார்.

உண்ணாவிரதத்தை சிங்கள அரசு கண்டு கொள்ளாது என்ற நிலையில், அதை செய்து கொண்டிருந்த அணைவரும், புலிகளால் அப்புறுத்தப்படும் நோக்கில் கடத்திக் கொண்டு செல்லப்பட்டனர்.

அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட மதிவதனி, பிரபாகரன் காதல், கலியாணம் வரலாறு.

யாழ் இந்து பழைய மாணவரான முருகானந்தம் பின்னர் இலண்டண் வந்து விட்டார்.

நண்பர்கள் அவருக்கு, உனது வில்லன் பிரபாகரன் தானே என்றால் சிரிப்பார். காதல் வந்தால் டபாரெண்டு சொல்லீர வேண்டும். இல்லையெண்டால் வில்லங்கம் தான் என்று நக்கல் அடிப்பார்கள்.

உனது விசயத்தில சொல்லாமல் இருந்தது நல்லது தான் என்பார்கள்.

அட, கொண்டு போன ஆள் லவ் அடிப்பார் எண்டு எனக்கு எப்படி தெரியும், இரண்டு நாளில ஆள் வரும் தானே என்று நிணைத்தேன்,எண்டுவாராம் முருகு. 🤣😂

Edited by Nathamuni
  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

பாலர் பாடசாலையா இல்லை பைத்தியக்கார விடுதியான்னு தெரியேல்ல..

இதுக்குமேல் இந்த திரியை வாசித்தால் ஸ்டாலின் சட்டசபையில் சட்டைய கிழித்துக்கொண்டு ஓடியதுபோல் நானே எனது சட்டையை கிழித்துக்கொண்டு ஓடவேண்டி இருக்கும்...🙏

சிரிப்பு புள்ளி முடிந்து விட்டது ஓணான்டியார் .

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.