Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • Replies 131
  • Views 11.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • எனது கருத்து, 1. இந்த பிரகடனம் பற்றி எனக்கு இந்த திரி வரும் வரை தெரியவில்லை.  எனக்கு மட்டும் இல்லை புலவர் உட்பட பலருக்கு தெரியவில்லை. இது எமது பிழையா? அல்லது இப்படி ஒன்றை தனியே தமிழ் காடியனில் மட

  • குமாரசாமி
    குமாரசாமி

    எழுதுங்கள். ஒரு சில இடங்களில் பிரச்சனைகள் வந்தால் அது ஒட்டுமொத்த பிரச்சனையாகாது.   ஒரு சில பல இடங்களில்  நீங்களும் நானும் முரண்பட்டாலும் உங்கள் எழுத்தின் வாசகன் நான்.

  • ரணிலின் தந்திரங்களை தமிழர்கள் இன்னும் உணராமல் இருக்கிறார்களே? எனக்கு ஏதோ பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஜனாதிபதி செயட்படுவது போலத்தான் தெரிகின்றது. தமிழர்களுக்கு ஏதாவது தீர்வு கிடைக்குமா இரு

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இமாலய பிரகடனம் பற்றிய விடயம் யஸ்ரின் ஒருவரைத்தவிர இங்கே கருத்தெழுதிய யாருக்கும் இந்தித்திரி உருவாகும் வரை தெரிந்திருக்கவில்லை. இது தமிழர்களுக்கான தீர்வு முயற்சி என்றால் சம்பந்தப்பட்வர்களுக்கு வெளிப்படையாக அறிவிப்பதற்கு என்ன தயக்கம்?ஏன் ஒரு தமிழ்பத்திரிகையிலோ இணயத்தளத்திலோ இன்று வரை இதூன் இமாலயப் பிரகடனம் என்று குறிப்பிடக்கூடிய அளவில் செய்திகள் வரவில்லை.பிரிஎவ் அமைப்பே தங்களுக்கு இதுபற்றித் தெரிந்திருக்கவில்லை என்று அறிக்கை விட்டிருக்கிறது.உலகத்தமிழர் அமைப்பால் ஒரு 50 பேர்  கொண்ட கூட்டத்தையாவது கூட்டி விடயத்தைத் தெரிவிக்க முடியாத கையறு நிலையில்தான் காணப்படுகிறது.இது போலித்துவாரகாவின் மாவீரர்நாள் உரை போல இந்த இமாலயப் பிரகடனும் பிசுபிசுத்துப் போகப் போகின்றது.இப்படி ஒரு பிரகடனத்திற்கு புத்த பிக்குகள் எ பிரதான எதிர்கட்சிகள் ஆதவளிப்பதில் இருந்தே சந்தேகம் மேலும் வலுக்கிறது. இந்த பிரகடனத்தை அமுல்படுத்தி தமிழர்களுக்கு தீர்வு வழங்கி விட்தாகக் கூறி அடுத்த ஜனாதிபதித் தேர்தலைக் கறிவைத்து ரணில் போடும் குள்ளநரித்திட்டம்தான் இது.

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, புலவர் said:

இந்த இமாலய பிரகடனம் பற்றிய விடயம் யஸ்ரின் ஒருவரைத்தவிர இங்கே கருத்தெழுதிய யாருக்கும் இந்தித்திரி உருவாகும் வரை தெரிந்திருக்கவில்லை

புலவர் 

ஜஸ்ரினும் கூகிளில் தேடியே இணைத்திருப்பார் என எண்ணுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ரெலோவின் பேச்சாளர் சுரேன் குருசாமி- உலகத் தமிழர் பேரவை என்ற அமைப்பைச் சேர்ந்த ஒரு சிலர் பிக்குகளுடன் சேர்ந்து  முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். இதை சொன்ன ரெலோ யார் என்று பார்த்தால் விஜித்தாவை வன்புணர்ச்சி செய்து படுகொலை செய்த ரெலோ. தமிழர்கள் பிரதேசங்களில் நன்மை தரக்கூடிய சீனாவின் முதலீடுகளை இந்தியாவுக்காக அனுமதிக்க முடியாது என்று சொன்னவரும் இதே ரெலோவின் தலைவர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இமாலய பிரகடனமா? எங்களிற்கு எதுவும் தெரியாது ; எந்த தொடர்பும் இல்லை - பௌத்தசாசன அமைச்சு தெரிவிப்பு

Published By: RAJEEBAN    14 DEC, 2023 | 12:08 PM

image
 
உலகதமிழர் பேரவையும் பௌத்தமதகுருமார்களும இணைந்து தயாரித்துள்ள பன்முகத்தன்மையை வலியுறுத்தும் இமாலய பிரகடனம் குறித்து  தங்களிற்கு எதுவும் தெரியாது என பௌத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்தவாரம் பன்முகதன்மையை முன்னிலைப்படுத்தும் இமாலய பிரகடனத்தை உலக தமிழர் பேரவையின் பிரதிநிதிகளும் பௌத்த மதகுருமாரும் ஜனாதிபதியிடம் கையளித்தனர்.

இந்நிலையில் இந்த பிரகடனத்தில் கைச்சாத்திட்ட தரப்பினருடன் தங்களிற்கு எந்த தொடர்பும் இல்லை என பௌத்தசாசன அமைச்சின் செயலாளர் சோமரட்ண விதானபத்திரன மோர்னிங்கிற்கு தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட பிரகடனம்  குறித்த முழுமையான விபரங்கள் அமைச்சிற்கு இன்னமும் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்

இதன் காரணமாக இந்த பிரகடனத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரகடனத்தை முழுமையாக ஆராய்ந்த பின்னரே அதனை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராயமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/171692

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

இமாலய பிரகடனமா? எங்களிற்கு எதுவும் தெரியாது ; எந்த தொடர்பும் இல்லை - பௌத்தசாசன அமைச்சு தெரிவிப்பு

என்னையா இது?பெளத்த சாசன அமைச்சுக்கே ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட இமாலயப் பிரகடனம் பற்றி ஒன்றுமே தெரியாதாம்!!!!!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்தவிடம் இமாலய பிரகடனத்தை சமர்ப்பித்த உலகத் தமிழ் பேரவை

Published By: DIGITAL DESK 3   14 DEC, 2023 | 02:00 PM

image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் உலகத் தமிழ் பேரவை இமாலய பிரகடனத்தை சமர்ப்பித்துள்ளது.

உலகத் தமிழ் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் உள்ளிட்ட பௌத்த பிக்குகள் அடங்கிய குழுவினர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினர்.

இதன் பின்னர் இமாலய பிரகடனத்தை குறித்த குழுவினர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தனர்.

இந்த சந்திப்பு உலகத் தமிழ் பேரவையின் வேண்டுகோளுக்கு இணங்க முன்னெடுக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

406643324_921065289360455_70556256115028

406111845_728692995447416_85698192167297

https://www.virakesari.lk/article/171699

  • கருத்துக்கள உறவுகள்
On 12/12/2023 at 15:58, தமிழ் சிறி said:

spacer.png

தீபாவளிக்கு முன் தீர்வு வரும் போல தெரிகிறது பாவம் தலைவர்  அவர் அடிக்கடி சொன்னது அவரது வாழ்வில் உண்மையாக நடக்கும் போல் உள்ளது   இமயமலை பிரகடனத்தை  சம்பந்தன்  கடைசியா பெற்ற பரம் கூடிய ஆவணம் ஆகும் 🤣

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சின்னக்குழுவின் முயற்சியால் 
சில வேளை  சில சிறிய நன்மைகளாவது  தயகத்தில் வாழும் வந்து விடுமோ என்று பலரும் பதட்டப்படுவது தெரிகிறது.

எவரும் பதட்டப்பட வேண்டாம் இந்த தீர்மானங்கள் முயற்சிகள் எந்த பலனையும் தரப்போவதில்லை.  எமது அபிமான  அரசியல் தலைவர்கள்  தாயகத்தில்  அரசியல் தீர்வு என்றும் இரு தேசம் ஒரு நாடு என று  பம்மாத்து விட்டபடி தமது வாழ்நாள் முழுவதும்   அரசியல் நடத்தலாம்.  

அவரவர் அபிமானத்துக்குரிய புலம் பெயர் அரசியல் செயற்பாட்டாளர்கள், நண்பர்கள்  அவர்களது வாழ்நாள் முழுவதும் தமது ஈழ வியாபாரத்தை  தொடரலாம்.  

நாமும் இங்கே அடிக்கடி வந்து ஒப்பாரி வைக்கலாம்.

இவ்வாறான எமது ஆசைகள் தொடந்து எமது வாழ்நாள் முழுவதும் இருக்கும் என்ற சூழ்நிலை பிரகாசமாக இருக்கும் போது ஏனப்பா இந்த பதட்டம். 

உலக தமிழர் பேரவை என ற இந்த சிறிய அமைப்பு எங்கள் ஆசைகளை சின்னாபின்ன படுத்தும் சக்தி அற்றது என்ற உணமையை உணருங்கள்

 அதை விட, வெற்றி வாதத்தில் திளைக்கும் சிங்கள இனவாதிகள் இருக்கும் போது நாம் ஏன் பதட்டப்பட வேண்டும். அவர்கள் தானே எமது சொத்துக்கள். 

எமது கவலைகளை அவர்கள் பார்ததுக் கொள்வார்கள். 

Don’t worry. Be happy. 

  • கருத்துக்கள உறவுகள்

இந்நாடு சிங்கள நாடல்ல, தமிழ்நாடுமல்ல

இந்நாடு சிங்கள நாடல்ல, தமிழ்நாடுமல்ல

இலங்கை என்ற எம் தாய்நாடு, ஒரு “சிங்கள பௌத்த நாடு” என்ற தமக்கு மட்டுமே என்ற சிந்தனை மறைய வேண்டும். இந்நாட்டின் இன்னொரு பிரதேசத்தில் இது தமிழருக்கு மட்டுமேயான “தனித் தமிழ்நாடு” என்ற சிந்தனையும் மறைய வேண்டும். 

சகலருக்கும் சொந்தமான, இலங்கை ஒரு பன்மைத்துவ நாடு என்ற அடிப்படையே உங்கள் நடவடிக்கைக்கு ஆரம்ப புள்ளியாக இருக்க வேண்டும் என பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற, சிறந்த இலங்கைக்கான சங்க (பெளத்த) மன்றம், உலகத் தமிழர் பேரவை ஆகிய அமைப்புகளுடனான சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான ரவுப் ஹக்கீம், பெளசி, திகாம்பரம், வேலுகுமார், உதயகுமார், தவ்பிக் ஆகியோரும் கலந்துக்கொண்ட இந்நிகழ்வு பற்றி ஊடகங்களுடன் உரையாடிய பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

சிங்கள - பெளத்த நாடு என்ற சிந்தனை, இலங்கையில் நிரந்தர அமைதி, வளர்ச்சி, மகிழ்ச்சி ஏற்பட தடையாக இருக்கிறது என சந்திப்பில் கலந்துக் கொண்ட தேரர்களை நோக்கி சிங்கள மொழியில் கூறினேன். 

அதேவேளை இந்நாட்டின் இன்னொரு பிரதேசத்தில் இது தமிழருக்கு மட்டுமேயான தனித் தமிழ்நாடு என்ற சிந்தனையும் மறைய வேண்டும் என சந்திப்பில் கலந்துக் கொண்ட உலகத் தமிழர் பேரவை அங்கத்தவர்களை நோக்கி தமிழிலும், ஆங்கிலத்திலும் கூறினேன்.

உங்களது இந்த முயற்சியை நாம் வரவேற்கிறோம். அரசியல்வாதிகளை, அரசியல் கட்சிகளை விலத்தி வைத்து விட்டு நேரடியாக நீங்கள் இந்த முயற்சி செய்வதும் இந்த முதற்கட்டத்தில் சரிதான். 

முதல் கட்டத்தை வெற்றிகரமாக கடந்து விட்டால், அடுத்த கட்டத்தில் அது அரசியல் கட்சிகளிடம்தான் வரவேண்டும். பாராளுமன்றத்தில்தான்  இன்றைய சட்டங்கள் திருத்தப்பட முடியும். புதிய சட்டங்கள் உருவாக்கப்பட முடியும். ஆகவே அது  வரும்போது வரட்டும்.

ஆனால், இலங்கை ஒரு பன்மைத்துவ நாடு என்ற அடிப்படையே உங்கள் நடவடிக்கைக்கு ஆரம்ப புள்ளியாக இருக்க வேண்டும். இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு என்ற தமக்கு மட்டுமே என்ற சிந்தனை மறைய வேண்டும். 

இந்நாட்டின் இன்னொரு பிரதேசத்தில் இது தமிழருக்கு மட்டுமேயான தனித் தமிழ்நாடு என்ற சிந்தனையும் மறைய வேண்டும். இந்த அடிப்படை  ஆரம்ப புள்ளியாக ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால் இந்த முயற்சிபயனற்றதாகி விடும்.

“76 விகிதம் சீனர்களை கொண்ட சிங்கப்பூர், அரசியல் சட்டப்படி தம்நாட்டு பன்மைத்துவத்தை கொண்டாட முடியும் என்றால், ஏன் இலங்கையில் எம்மால் அதை கொண்டாட முடியாது?” என்ற கேள்வியை முயற்சியில் ஈடுபடும் தேரர்களை நோக்கி நான் எழுப்பவில்லை. 

ஏனெனில் இம்முயற்சி வெற்றி பெறுவது பெருமளவில் அவர்கள் தரப்பில்தான் உள்ளது என்பது எனது அபிப்பிராயம். முதலிலேயே அவர்களை தளர்வடையச்செய்ய நான் விரும்பவில்லை. ஆனால், அடுத்த முறை இதை நான் கேட்பேன். இத்தகைய கேள்விகளை ஏற்கனவே பாராளுமன்றத்திலும், உள்நாட்டு மேடைகளிலும் நான் பலமுறை எழுப்பியுள்ளேன் என தெரிவித்தார்.  

https://tamil.adaderana.lk/news.php?nid=181386

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

ஏனெனில் இம்முயற்சி வெற்றி பெறுவது பெருமளவில் அவர்கள் தரப்பில்தான் உள்ளது என்பது எனது அபிப்பிராயம். முதலிலேயே அவர்களை தளர்வடையச்செய்ய நான் விரும்பவில்லை. ஆனால், அடுத்த முறை இதை நான் கேட்பேன். இத்தகைய கேள்விகளை ஏற்கனவே பாராளுமன்றத்திலும், உள்நாட்டு மேடைகளிலும் நான் பலமுறை எழுப்பியுள்ளேன் என தெரிவித்தார்.  

நாய்வாலை நிமிர்த்த முயற்சி செய்யுங்கள்.

 இது ஒரு பன்முகநாடு என்று புத்த பிக்குகள் ஒப்புக் கொண்டாலும் சரத் வீரசேகர கூட்டம் ஒப்புக் கொள்ளுமோ?

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, island said:

இந்த சின்னக்குழுவின் முயற்சியால் 
சில வேளை  சில சிறிய நன்மைகளாவது  தயகத்தில் வாழும் வந்து விடுமோ என்று பலரும் பதட்டப்படுவது தெரிகிறது.

எவரும் பதட்டப்பட வேண்டாம் இந்த தீர்மானங்கள் முயற்சிகள் எந்த பலனையும் தரப்போவதில்லை.  எமது அபிமான  அரசியல் தலைவர்கள்  தாயகத்தில்  அரசியல் தீர்வு என்றும் இரு தேசம் ஒரு நாடு என று  பம்மாத்து விட்டபடி தமது வாழ்நாள் முழுவதும்   அரசியல் நடத்தலாம்.  

அவரவர் அபிமானத்துக்குரிய புலம் பெயர் அரசியல் செயற்பாட்டாளர்கள், நண்பர்கள்  அவர்களது வாழ்நாள் முழுவதும் தமது ஈழ வியாபாரத்தை  தொடரலாம்.  

நாமும் இங்கே அடிக்கடி வந்து ஒப்பாரி வைக்கலாம்.

இவ்வாறான எமது ஆசைகள் தொடந்து எமது வாழ்நாள் முழுவதும் இருக்கும் என்ற சூழ்நிலை பிரகாசமாக இருக்கும் போது ஏனப்பா இந்த பதட்டம். 

உலக தமிழர் பேரவை என ற இந்த சிறிய அமைப்பு எங்கள் ஆசைகளை சின்னாபின்ன படுத்தும் சக்தி அற்றது என்ற உணமையை உணருங்கள்

 அதை விட, வெற்றி வாதத்தில் திளைக்கும் சிங்கள இனவாதிகள் இருக்கும் போது நாம் ஏன் பதட்டப்பட வேண்டும். அவர்கள் தானே எமது சொத்துக்கள். 

எமது கவலைகளை அவர்கள் பார்ததுக் கொள்வார்கள். 

Don’t worry. Be happy. 

சிறப்பு😂
இனி பார்ட்டியும் கொண்டாட்டமும் தான்

  • கருத்துக்கள உறவுகள்+

GBWxhNLWkAA7h2r?format=jpg&name=large

காலைத்கதிர்

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, நன்னிச் சோழன் said:

GBWxhNLWkAA7h2r?format=jpg&name=large

காலைத்கதிர்

ஏதாவது பிரச்சனை வந்தால் தப்புவதற்காக இப்பவே பிள்ளையார் சுழி போட்டுள்ளாரோ?

  • கருத்துக்கள உறவுகள்+
8 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏதாவது பிரச்சனை வந்தால் தப்புவதற்காக இப்பவே பிள்ளையார் சுழி போட்டுள்ளாரோ?

தெரியவில்லை, பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

யார் குற்றி அரிசியானால் சரி. 

வந்தா மலை போனால் உரோமம்....

இது தான் என் நிலை 

  • கருத்துக்கள உறவுகள்

https://www.google.com/url?sa=i&url=https%3A%2F%2Ftenor.com%2Fview%2Fvadivel-memes-gif-20634850&psig=AOvVaw0dkYowK-LvTdEZ3L6g_PQ7&ust=1702754157837000&source=images&cd=vfe&opi=89978449&ved=0CBEQjRxqFwoTCPj6-euTkoMDFQAAAAAdAAAAABAD

உனக்குத் தொடர்பில்லை ஓக்கே....ரணிலுக்கும் தொடர்பில்லை என்று சொன்னா பாரு!!!

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் "தொடர்பில்லை" என்று சொன்னதில் என்ன தவறு இருக்கிறதென்று விளக்குங்கள் யாராவது?

சுமந்திரனோ, வெளிப்படையாக ரணிலோ அதில் கையொப்பமும் வைக்கவில்லை, அதில் இருப்பவற்றை எழுதவும் இல்லை.அப்படியானால் தொடர்பில்லை என்பது சரியான விபரிப்புத் தானே?

இங்கே புலவர் உட்பட சிலருக்கு இருக்கும் பிரச்சினை விளக்கக் குறைவு: இது முன்னர் வந்த ஏனைய பிரகடனங்கள் போல சிங்கள ஆட்சியாளருக்கும், தமிழரின் ஏக பிரதிநிதிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வுப் பிரகடனம் அல்ல!

இரு தரப்பிலும் இருந்து சில அமைப்புகளின் பிரதிநிதிகள் aspirational document ஆக உருவாக்கி இப்போது இரு தரப்பிலும் இருக்கும் அரசியல் தலைமைகளுக்கு இதனைச் சமர்ப்பிக்கிறார்கள் அவ்வளவு தான்.

இப்பிரகடனம் வேலைக்காகுமா, ஆகாதா என்பது வேறு விடயம். ஆனால், அது பற்றிய உங்கள் விளக்கக் குறைபாட்டை, தேடியறியும் வசதியோ அல்லது விருப்போ இல்லாத மக்களுக்குக் கடத்துவது ஏன்? "செத்த வீட்டிலும் கூட நான் தான் பொடியாக இருக்க வேண்டும்!" என்று துடிக்கும் "தமிழ் தேசிய" உந்துதலா😂?   

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Justin said:

இது ஒரு தமிழர்களுக்கான தீர்வாக கூறப்படுகிறது, ஆனால் இது இலங்கையில் நிலவும் சமூக பிரச்சினைக்கான தீர்வாகவே நான் கருதுகிறேன், ஆனால் ஓரளவிற்கு தற்போதுள்ள நிலையினை விட ஒரு முக்கிய முன்னேற்றமான விடயமாக அமையும் என கருதுகிறேன்.

இது ஒரு ஆரம்பம் மட்டுமே, இங்கு சிறுபான்மை மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை சில இன ரீதியாக பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்கள் தமது இன ஆளுநர், அரசியல்வாதிகள் என்பவற்றின் ஊடாக ஏற்படுத்தப்படும் சட்டங்கள் மூலம் அங்கு வாழும் பிற இன மக்களுக்கு சாதகமற்ற  நிலமை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என கருதுகிறேன்.

இந்த முயற்சி வெற்றி அத்தியாவசியமான மற்றும் அடிப்படை உரிமை சார்ந்த ஒன்றாக கருதுகிறேன், இது இலங்கையில் நிலவும் பிரச்சினைக்கான ஏகோபித்த தீர்வாக அமையாது அதற்கான முயற்சியினை தொடர வேண்டும் என கருதுகிறேன்.

இத்திட்டம் தொடர்பான உங்கள் அபிப்பிராயம் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்+

‘இமயமலைப் பிரகடனத்துக்கும் எமக்கும், ஜனாதிபதிக்கும் தொடர்பு எதுவுமில்லை’  

இமயமலைப் பிரகடனத்துக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலோ அல்லது அப்பிரகடனத்துக்கும் தமக்கும் இடையிலோ எவ்விதத் தொடர்பும்

இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

ஒவ்வொரு தனிநபரும் சமாதானமாகவும், கௌரவத்துடனும், நம்பிக்கையுடனும், எவ்வித பயமும் சந்தேகப்படுதலுமின்றி சமமான உரிமைகளை அனுபவித்து வாழக்கூடிய ஒரு இலங்கை உருவாக்கப்பட வேண்டும் என்ற தொனிப்பொருளை மையப்படுத்திய 'இமயமலைப் பிரகடனம்' உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கடந்த வாரம் கையளிக்கப்பட்டது.

அப்பிரகடனத்தை முற்றாக நிராகரித்தும், உலகத் தமிழர் பேரவையின் செயற்பாட்டைக் கண்டித்தும் கருத்து வெளியிட்டிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், 'அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

அதில் இதுவரை காணாத பாரிய சரிவொன்றைச் சந்திக்க நேரும் என்பதால் தமது வாக்கு வங்கியைப் பாதுகாத்துக்கொள்ளும் அதேவேளை, தமது உதிரிகளான உலகத் தமிழர் பேரவையின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அங்கீகாரத்தை வழங்கும் மறைமுக நடவடிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டிருக்கின்றது' என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் வினவியபோதே எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு பதிலளித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-

“இந்தப் பிரகடனத்துக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அதேபோல் இதில் எமக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. உலகத் தமிழர் பேரவையும், பௌத்த பிக்குகளும் இணைந்து நடத்திய பேச்சுகளின் நீட்சியாக, அதனை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டதொரு செயற்றிட்டமே இந்தப் பிரகடனமாகும்.

“இதில் அதிகாரப் பகிர்வு மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய விடயங்கள் மிக முக்கியமாக வலியுறுத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக 'ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப்பகிர்வு' என்ற சொற்பதம் பௌத்த பிக்குகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.

“அதேபோன்று பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. இதுபற்றி மகாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடப்பட்டிருப்பதுடன் அவர்களும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.

“எனவே, அடுத்தகட்டமாக இப்பிரகடனம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பதிலேயே அதன் செயற்றிறன் தங்கியுள்ளது. அதேவேளை, உலகத் தமிழர் பேரவை எம்முடன் நடத்திய சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தப் பிரகடனத்தை வரவேற்று எமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியிருந்தார். இவற்றுக்கு அப்பால் எமக்கு இதில் எவ்வித தொடர்பும் இல்லை.' - என்றார்.

(காலைமுரசு)

https://tamilleader.lk/news/10088-2023-12-15-03-52-59

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, vasee said:

ஓரளவிற்கு தற்போதுள்ள நிலையினை விட ஒரு முக்கிய முன்னேற்றமான விடயமாக அமையும் என கருதுகிறேன்.

ஓம் அதற்கே அதுவே சரிவந்துவிடுமோ என்று எவ்வளவு பதட்டமடைகிறார்கள் 😄

  • கருத்துக்கள உறவுகள்+

சுமந்திரனுக்கு முட்டுக் கொடுத்தோரே .... கொஞ்சம் நில்லுங்கள்.

இவர் சிங்கப்பூரில் தமிழர் என்ற இனத்தை இலங்கையர் என்று மாற்றும் திட்டத்தை ...... காது கொடுத்துக் கேளுங்கள்...

Time from: 5:00

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
On 15/12/2023 at 15:25, Justin said:

சுமந்திரன் "தொடர்பில்லை" என்று சொன்னதில் என்ன தவறு இருக்கிறதென்று விளக்குங்கள் யாராவது?

சுமந்திரனோ, வெளிப்படையாக ரணிலோ அதில் கையொப்பமும் வைக்கவில்லை, அதில் இருப்பவற்றை எழுதவும் இல்லை.அப்படியானால் தொடர்பில்லை என்பது சரியான விபரிப்புத் தானே?

இந்த பேச்சுவார்த்தைகள் நடந்த பொழுது சுமந்திரனும் இதில் ஒராளாக இருந்ததாகவே கூறுகிறார்கள்.

இவர்களை சம்பந்தனிடம் கொண்டுபோய் சேர்த்ததே சுமந்திரன் என்கிறார்கள்.

பொறுத்திருந்து பார்ப்போம்.

இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருகிறது.

On 15/12/2023 at 15:45, vasee said:

இது ஒரு தமிழர்களுக்கான தீர்வாக கூறப்படுகிறது, ஆனால் இது இலங்கையில் நிலவும் சமூக பிரச்சினைக்கான தீர்வாகவே நான் கருதுகிறேன், ஆனால் ஓரளவிற்கு தற்போதுள்ள நிலையினை விட ஒரு முக்கிய முன்னேற்றமான விடயமாக அமையும் என கருதுகிறேன்.

இப்போது உள்ள நிலையைவிட இன்னும் கேவலமான நிலைக்கே தமிழர்களை தள்ளும் என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ஈழப்பிரியன் said:

இந்த பேச்சுவார்த்தைகள் நடந்த பொழுது சுமந்திரனும் இதில் ஒராளாக இருந்ததாகவே கூறுகிறார்கள்.

இவர்களை சம்பந்தனிடம் கொண்டுபோய் சேர்த்ததே சுமந்திரன் என்கிறார்கள்.

பொறுத்திருந்து பார்ப்போம்.

இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருகிறது.

இப்போது உள்ள நிலையைவிட இன்னும் கேவலமான நிலைக்கே தமிழர்களை தள்ளும் என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

கடந்த காலங்களில் செய்திகள் சொன்னது போல சுமந்திரன் எல்லா இடத்திலும் இருந்திருப்பது போல (வாக்கு எண்ணும் அறைக்குள், கஞ்சா கடத்திய இடத்தில் , இப்படி பல..) இங்கேயும் இருந்திருப்பார் என நினைக்கிறேன்😎.

சுமந்திரனை, சம்பந்தரைக் காய்த்துத்த் தொங்கப் போடப் பல ஆதாரமுள்ள விடயங்கள் இருக்கும் போது இணைய வெளியில் வந்தார் வரத்தார் எல்லாம் சொல்லும் தகவல்களைப்  தொடர்வது சுமந்திரனுக்குத் தான் நன்மை தரும்! 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

சுமந்திரனை, சம்பந்தரைக் காய்த்துத்த் தொங்கப் போடப் பல ஆதாரமுள்ள விடயங்கள் இருக்கும் போது இணைய வெளியில் வந்தார் வரத்தார் எல்லாம் சொல்லும் தகவல்களைப்  தொடர்வது சுமந்திரனுக்குத் தான் நன்மை தரும்! 

இனி என்ன அடுத்த மாதத்திலிருந்து அவர் தானெ எங்க தலைவர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.