Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

vijayakanth-fe-900.jpg?resize=657,375&ss

புரட்சிக் கலைஞர் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கில் திரண்ட மக்கள்!

நேற்றைய தினம் இறையடி சேர்ந்த தேமுதிக தலைவரும், நடிகருமாக விஜயகாந்த் அவர்களின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நண்பகல் 1 மணிக்குப் பின்னர்  பூந்தமல்லி சாலை வழியாக அவரது உடல் கொண்டு செல்லப்பட்டு, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை லட்சக்கணக்கான மக்கள் அன்னாரது பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Ate5Jw7LJPc3BUzuBubW.webp?resize=600,314

https://athavannews.com/2023/1364484

  • Replies 69
  • Views 6.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • 1. இந்த வீடியோவில் விஜயகாந்த் எப்படி பட்ட தமிழ் உணர்வாளராய் இருந்தார் என மிக அழகாக கூறப்பட்டுள்ளது. இந்த விஜயகாந்தைத்தான், அவரின் கடைசிகாலங்களில் தெலுங்கன், தமிழை தமில் என உச்சரிப்பவர் என சிலர் விமர்ச

  • குமாரசாமி
    குமாரசாமி

    தமிழ் நாட்டு இதர நடிகர்கள் அச்சமடையுமளவிற்கு மனித நேயமிக்கவர் என கூறுகின்றார்கள். ஏனைய நடிகர்களை திட்டுவது போல் விஜய்காந்த் அவர்களை திட்டியதை நான் எங்கும் காணவில்லை.

  • இது  என்றும்  பலருக்கு புரியப்போவதில்லை  அவர்கள் தமிழர்கள் எனினும் இந்தியார்கள் ..  ஆழ்ந்த கண்ணீரஞ்சலிகள் 

  • கருத்துக்கள உறவுகள்

 

 
 
[1986இல் விஜய்காந்த் கொடுத்த ஒரு பேட்டியிலிருந்து]
 
இங்கிலீஷ்ல ‘இன்சல்ட்'னு சொல்வாங்களே அதுதான். சினிமா இண்டஸ்ட்ரியில ரொம்ப அதிகமான அவமானங்களைத் தாங்கிக்கிட்டவங்களில் ஒருத்தன் நான். சென்னை வந்து போய்க்கிட்டிருந்த நான், பாண்டி பஜார் ரோஹிணி லாட்ஜ்ல இருபதாம் நம்பர் ரூம்ல வந்து தங்கினேன். அந்த லாட்ஜ்ல சினிமா லட்சியத்தோடு பல இளைஞர்கள் இருந்தாங்க. பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன் இவங்களாம் அந்த லாட்ஜுலதான் இருந்தாங்க. முதல்ல, டைரக்டர் எம்.ஏ.காஜா, ‘இனிக்கும் இளமை' படத்தில் அறிமுகப்படுத்தினார். அப்ப விளம்பரங்கள்ல என் நிஜப் பெயரான ‘விஜயராஜ்' தான் இருந்தது. அப்புறம்தான் வேறு நடிகர் விஜயராஜ்ங்கிற பேர்ல வந்துகிட்டிருக்கார்னு தெரிய வர, காஜாதான் உடனே விஜயகாந்த்னு பேர் வெச்சார்.
முதல் நாள் ஷூட்டிங், அடையாறு மேனன் பங்களாவில் நடந்தது. இந்த சினிமாவுலகிலே புது நடிகன்னா யாரும் மதிக்கக்கூட மாட்டாங்க. தீண்டத்தகாதவன் மாதிரி புதுமுகங்களுக்கு சாப்பாடு போடுவாங்க. அப்ப சுதாகர், மீரா, ராதிகாவெல்லாம் ஏற்கெனவே பாப்புலர். அவங்களுக்கெல்லாம் ஏக உபசரிப்புகள்! நான் ஒரு மூலையிலே நின்னுக்கிட்டிருப்பேன்.
ஆனா, ‘இனிக்கும் இளமை' படம் வெளிவந்ததும், என் பெயர் கொஞ்சம் வெளியே தெரிய வந்தது. அதை வைத்து விடாம பல இயக்குநர்களைச் சந்தித்தேன். பார்க்கிறவர்கள் எல்லாருமே, ‘அதுதான் ஒரு ரஜினிகாந்த் இருக்காரே, நீ எதுக்கு ஒரு விஜயகாந்த்‘னு சொல்லுவாங்க. அன்னிக்கு அப்படிக் கேட்ட பலருடைய படத்துல இப்ப நான் ஹீரோ. நினைச்சுப் பார்த்தா தமாஷாத்தான் இருக்கு!
‘அகல் விளக்கு' படத்துக்கு எனக்கு சான்ஸ் வந்தது. இந்தப் படத்துல தான் நிறைய அவமானங்கள். அப்போ ஷோபா ரொம்ப பாப்புலர். பிஸி ஆர்ட்டிஸ்ட். ‘அகல் விளக்கு' படப்பிடிப்பு அன்னிக்குக் காலையிலேருந்து மத்தியானம் சாப்பாட்டு வேளை வரைக்கும் ஷோபா வரலை. எனக்கு நல்ல பசி. பசி பொறுக்காம கடைசியிலே மதியம் சாப்பிட உட்கார்ந்தேன். உடனே ஷோபா வந்துட்டாங்கனு சொல்லி, சாப்பிடக்கூட விடாம பாதியிலேயே எழுப்பி இழுத்துக்கிட்டுப் போனாங்க. ஒரு நிமிஷம் மனசு கலங்கிட்டேன். இதையெல்லாம் மீறி தட்டுத்தடுமாறி முன்னுக்கு வந்துக்கிட்டிருந்தேங்கறது உண்மை!
டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர், ‘சட்டம் ஒரு இருட்டறை' படத்துக்கு என்னை புக் பண்ணினார். ‘ஒருதலை ராகம்' படம் அப்போ நல்லா ஓடிக்கிட்டிருந்தது. அதில் நடிச்ச ஒரு நடிகர் தனக்குத்தான் அந்த ரோலைத் தரணும்னு டைரக்டர்கிட்ட பிரஷர் கொடுத்தாரு. ஆனால், தயாரிப்பாளர் சிதம்பரம் ‘நான் படம் பண்ண வந்திருக்கேன். என் இஷ்டப்படிதான் படம் பண்ணுவேன். என் படத்திலே ஒரு தமிழன் தான் நடிக்கனும்’னு சொல்லிட்டார்.
‘சட்டம் ஒரு இருட்டறை' ரிலீஸாச்சு. படம் நல்ல ஹிட். பல மொழிகள்ல அந்தப் படத்தை எடுத்தாங்க. அதுக்குள்ள ரோஹிணி லாட்ஜுலேருந்து பக்கத்துக் கட்டடத்துல ஒரு ரூமுக்கு மாறியிருந்தோம். அதிலதான் நானும் என் நண்பன் இப்ராஹிமும் இருப்போம். நான் ஷூட்டிங் போயிட்டா இப்ராஹிம்தான் என் பேன்ட், ஷர்ட்டெல்லாம் ‘வாஷ்' பண்ணுவான். என்னைப் பார்க்க யார் வந்தாலும், அவன் டீ, காபி வாங்கிக்கிட்டு வருவான். ரூம்ல நானும் அவனும் மட்டும் இருப்போம். ‘சட்டம் ஒரு இருட்டறை' ரிலீஸானதும், ரூம்ல ஏகக் கூட்டம். ஆனால், பல மாதங்கள் சினிமாக்காரங்க பின்னால் அலைஞ்சதனால் நல்லவங்க யாரு, கெட்டவங்க யாருன்னு எங்களால் புரிஞ்சுக்க முடிஞ்சது. ஆட்களைத் தேர்ந்தெடுத்துப் படம் ஒப்புக்கிட்டோம். அதுக்கப்புறம் சில படங்கள். எல்லாமே ஃபெயிலியர்.
மறுபடியும் ரூம்ல நானும் இப்ராஹிமும் மட்டும்தான்! ஒரு வருஷம் சும்மா இருந்தோம். அதுக்கப்புறம்தான் பி.எஸ்.வி. பிக்சர்ஸ் ‘சாட்சி' படம் வந்தது. ஹிட் ஆச்சு. ஒரு வழியா நின்னேன்!‘‘
‘‘இந்த அவமான கட்டங்களைத் தாண்டிய பிறகு மட்டும் என்ன வாழ்ந்தது? அடுக்கடுக்காகத் திரைமறைவு சூழ்ச்சிகள் நடந்துக்கிட்டே இருந்தன. ‘பார்வையின் மறுபக்கம்' படம் ஊட்டியில் ஷூட்டிங். எனக்கு ஜோடி ஸ்ரீப்ரியா. ஊட்டி போய்க் காத்துக் கிடந்தோம். அவங்க வரலை. விசாரிச்சா, என்னோடெல்லாம் அவங்க நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்களாம். இதை அவங்ககிட்டேயே கேட்டேன். அதே மாதிரி சரிதாவும் என்னோட நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. எனக்குக் காரணமே புரியலை. ‘நான் அவங்ககூட நடிக்க விரும்பலை’ன்னு சொன்னதாக யாரோ சரிதாகிட்டே சொன்னாங்களாம். இந்த மாதிரி பிரச்னைகளை வளரவிடக் கூடாதுன்னு முடிவு பண்ணி, நானே நேரே சரிதா வீட்டுக்குப் போனேன். அவங்க அம்மாவும் தங்கையும் இருந்தாங்க. ‘இதப் பாருங்க... நான் உங்க பொண்ணுகூட நடிக்கமாட்டேன்னு சொல்லலை. யாராவது சொன்னதை நம்பாதீங்க. உங்க பொண்ணுகூட நடிச்சாத்தான் எனக்கு வாழ்க்கைங்கறதுக்காக நான் நேரா உங்க வீட்டுக்கே வந்து கேட்கிறேன்னு நினைக்க வேண்டாம். கலைஞர்களுக்குள்ள உட்பூசல் இருக்கக்கூடாது. அதுக்காகத்தான் வந்தேன்‘னு பளிச்சுனு சொல்லிட்டு வந்துட்டேன். அதேமாதிரிதான் ராதிகாவும் என்னோட நடிக்க விருப்பப்படலை!
இன்னிக்கு இவங்கள்லாம் என்னோட நடிக்கிறாங்க. அதுக்குப் பிறகு ராதிகாவும் நானும் நிறைய படங்கள்ல நடிச்சோம், நடிச்சிக்கிட்டிருக்கோம். ஆரம்பத்தில் இவங்க, ‘நடிக்கமாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சாங்க'னு சொல்றதை விட, என் பக்கம் திரும்பாம ஒதுங்கிக்கிட்டாங்க என்பதுதான் உண்மை. தப்பு இவங்க பேர்ல இல்லை. இவங்களுக்குப் பின்னால் பெரிய சக்திகள் இயங்கிக்கிட்டிருந்தது. ‘இவனோடெல்லாம் நடிச்சா, உங்க இமேஜ் கெட்டுடும்' என்கிற பயமுறுத்தல் நிறைய இருந்தது. சாதாரண பெண்களுக்கே ‘தங்களுக்குப் பாதுகாப்பில்லை'னு எப்பவும் மனசுல ஒரு பயம் இருக்கும். சினிமாவில் இருக்கிற பெண்களுக்குக் கேட்க வேண்டுமா..? எப்பவும் Insecured-ஆ நினைப்பாங்க. இந்த ஃபீலிங், சம்பந்தப்பட்ட இந்த நடிகைகளுக்கும் இருந்ததில் வியப்பென்ன..? பின்னால் இந்த நடிகைகள் என்னோட நடிக்க ஆரம்பிச்ச பிறகுதான் அவங்க மனசுல களங்கமில்லேனு புரிஞ்சுக்கிட்டேன். எய்தவங்க யாரோ, அம்பை நொந்து என்ன பயன்..?’’
‘‘தங்கள் படங்கள்ல ஒரு நாளாவது என்னை நடிக்க வெச்சு, அதுக்குப் பிறகு அந்தப் படத்தையே கேன்ஸல் பண்ணிட்டு, ‘விஜயகாந்துக்கு நடிக்க வரலை. அதனாலதான் அந்தப் படத்தை எடுக்கலை’னு பத்திரிகைகளுக்கு அறிக்கை கொடுக்கணும்னு இன்னிக்கும் ஆசைப்படற பெரிய மனிதர்கள் இருக்காங்க தெரியுமா? அதே சமயம் இவங்களே பினாமி மூலம் கால்ஷீட் கேட்கறதும் உண்டு. அவங்க மேலேயே நான் கோபப்படலை, நடிகைகள் மேலா கோபப்படப் போறேன்..?
இன்னிக்குச் சொல்றேன், எழுதி வெச்சுக்குங்க. தன்மானத்தையும், சுயகௌரவத்தையும் இழந்து நடிச்சிக்கிட்டே இருக்கணும்கிற அவசியம் எனக்கில்லை. அப்படிச் செய்யவும் மாட்டேன். அதே சமயம், அடுத்தவங்க தன்மானத்தைக் குறைக்கிற மாதிரி நான் நடந்துக்கவும் மாட்டேன். இது நிச்சயம். என்னோட பழகினவங்களுக்கு தெரியும். அவமானத்தில் வளர்ந்தவங்களுக்கு மனசுல ஒருவிதமான கோபம் படிஞ்சு போயிடும். நாம பட்ட வேதனைகளை அடுத்தவனும் படனும்னு மத்தவங்களை அவமானப்படுத்துவாங்க. ஆனால், கடவுள் புண்ணியத்துல என் மனசுல அந்த மாதிரி எண்ணங்கள் வளரலை.
"நாம பட்ட கஷ்டங்கள் மத்தவங்க படக்கூடாதுன்னு நினைக்கிறேன். நல்ல நடிகன்கிறதைவிட, நல்ல மனுஷன்னு பேர் எடுக்கிறதுதான் என் லட்சியம். இன்னிக்கு ஓரளவுக்கு அந்தப் பெயர் வாங்கியிருக்கேன். என் காம்பவுண்டுக்குள்ளே வந்து யாரும் அவமானப்படக்கூடாது. அதேமாதிரி பசியோட யாரும் திரும்பிப் போகக் கூடாது. தினமும் முப்பது, நாற்பது பேருக்காவது இங்க சாப்பாடு இருக்கும்.’’
‘‘இது ஒருவிதமான ‘பப்ளிசிட்டி ஸ்டன்ட்’னு சொல்வாங்களே..?ன்னு கேட்டா அடுத்தவங்க சொல்றதைப் பத்தி எனக்குக் கவலையில்லை. தமிழ்நாடு முழுக்க ரைஸ் மில் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டுப் போராட்டம் நடத்தினப்போ, எங்க மில்லில் மட்டும் ‘ஸ்டிரைக்' கிடையாது. எங்க மில்லில் கூலியும் அதிகம். அவங்க வயிறு வாட விடவும் மாட்டேன். இதெல்லாம் நான் நடிகனாகறதுக்கு முன்னாடியே! நான் சாப்பாடு போடறதை விளம்பரம் பண்ணியா போடறேன்..? அதேமாதிரி என் சொந்தப் படமான ‘உழவன் மகன்' ஷூட்டிங்கின்போது எனக்கு என்ன சாப்பாடோ, அதுதான் எல்லா தொழிலாளர்களுக்கும். சோத்துல வேறுபாடு காண்பிச்சா உருப்படவே முடியாது. கடவுள் உண்டுன்னு நான் நம்புகிற மாதிரி இதுவும் என் அடிப்படை நம்பிக்கை...’’
 
May be an image of 1 person, smiling and phone
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

விஜயகாந்த் பற்றிய ஒரு வரலாற்று நிகழ்வு

வருடம் திகதி சரியாக ஞாபகம் இல்லை (ராஜீவ்காந்தி கொலை நடந்து சில மாதங்களுக்கு பின்னர்)

விஜயகாந்த் பாரீஸ் நகரில் ஓட்டலில் தங்கி இருந்தார். அவரை சந்திக்க தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினர்கள் சென்றனர். நாங்கள் எல்லோரும் மிகுந்த ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்துவிட்டு வெளியில் காத்திருந்தோம். 

ஆனால் சந்திப்பு முடிந்து சந்தித்தவர்கள் வந்து சொன்ன செய்தி மிகவும் அதிர்ச்சியாகவும் அதேநேரம் தமிழகத்தின் உண்மை நிலையையும் உரைப்பதாக இருந்தது.

அவர் சொன்னது இது தான்.

எனது மகனுக்கு பிரபாகரன் என்று பெயர் வைத்த நான், ராஜீவ்காந்தியின் கொலைக்கு பின்னர் பிறந்த எனது சகோதரியின் பிள்ளைக்கு ராஜீவ்காந்தி என்று தான் பெயர் வைத்தேன். நாங்கள் அப்படித் தான். இந்தியா எமது நாடு. எனவே தயவு செய்து எம்மை நம்பியோ அல்லது எம் பின்னால் நின்றோ உங்கள் போராட்டத்தை முன்னெடுக்காதீர்கள். 

இது நடந்து 30 வருடங்களுக்கு மேலாகிவிட்டபோதும் அன்று ஏற்பது கடினமாக இருந்தாலும் எவ்வளவு தூர நோக்குப்பார்வை. 

ஆத்ம சாந்தி வேண்டி பிரார்த்தனைகள் கப்டன். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

எனது மகனுக்கு பிரபாகரன் என்று பெயர் வைத்த நான், ராஜீவ்காந்தியின் கொலைக்கு பின்னர் பிறந்த எனது சகோதரியின் பிள்ளைக்கு ராஜீவ்காந்தி என்று தான் பெயர் வைத்தேன். நாங்கள் அப்படித் தான். இந்தியா எமது நாடு

இது  என்றும்  பலருக்கு புரியப்போவதில்லை  அவர்கள் தமிழர்கள் எனினும் இந்தியார்கள் .. 

ஆழ்ந்த கண்ணீரஞ்சலிகள் 

  • கருத்துக்கள உறவுகள்

போகும் போது என்ன எடுத்துட்டு போக போறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் 🙏🙏🙏

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதிலை அஞ்சலிக்கு வைச்சிருக்கிற படங்களிலை ஒராளின்ர படம் மிஸ்ஸிங்......ஆர்ரை படமெண்டு சொல்லுங்கோ பாப்பம்? 🤣

 

  • கருத்துக்கள உறவுகள்

கேட்டுப் பாருங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

நா உங்கிட்ட சுக்கு காபி கேட்டேனா !

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

இதிலை அஞ்சலிக்கு வைச்சிருக்கிற படங்களிலை ஒராளின்ர படம் மிஸ்ஸிங்......ஆர்ரை படமெண்டு சொல்லுங்கோ பாப்பம்? 🤣

 

சரியாய் சொல்லுறவர்களுக்கு என்ன பரிசு என்று அறிவிக்க மறந்துட்டியளே.... புரட்சித்தலைவி, அம்மா!

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

 

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

 

spacer.png

 

spacer.png

 

spacer.png  spacer.png

 

spacer.png

 

டிக்கெட் எடுத்து சென்னை வந்து, 
சொந்த உழைப்பில் வாங்கிய இடத்தில்.. உறங்குகிறார் கேப்டன் விஜயகாந்த்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்


அவர்கள் தமிழர்கள் ஆனால் இந்தியர்கள்  என்பதை இன்னொரு திரியில் நன்றாக விளங்கபடுத்தியிருந்தீர்கள்.

On 30/12/2023 at 15:45, Kandiah57 said:

இது  என்றும்  பலருக்கு புரியப்போவதில்லை  அவர்கள் தமிழர்கள் எனினும் இந்தியார்கள் ..

ஒரு கற்பனை மயக்கம்  வீணான ஆசையை கற்பனை செய்து மகிழ்ச்சி அடைகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, குமாரசாமி said:

இதிலை அஞ்சலிக்கு வைச்சிருக்கிற படங்களிலை ஒராளின்ர படம் மிஸ்ஸிங்......ஆர்ரை படமெண்டு சொல்லுங்கோ பாப்பம்? 🤣

 

கருணாநிதி..

ஜெ….

அமிர்….

தலைவர்……

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
25 minutes ago, goshan_che said:

கருணாநிதி..

ஜெ…

இவர்கள் இருவரும்  ஈழத்தமிழர் பிரச்சனைகளை உணராதவர்கள் அல்லது உணர மறுத்தவர்கள்.எனவே தேவையில்லாத ஆணிகள்.

25 minutes ago, goshan_che said:

அமிர்….

ஈழத்தமிழினத்தின் இன்றைய பிரச்சனை வரைக்கும் காரண கர்த்தாவான இவரும் ஒரு தேவையில்லாத ஆணிதான்.

25 minutes ago, goshan_che said:

தலைவர்……

இருந்தால் எவ்வளவது நல்லாய் இருந்திருக்கும் என்ற மனப்பான்மையால் பலர் தவிர்க்கின்றார்கள் என நினைக்கின்றேன். அதை விட ஈழம் என்ற சொல்லை கூட உச்சரிக்க முடியாத நாட்டில்......???????

Edited by குமாரசாமி
தவறவிட்ட எழுத்து இணைப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

இருந்தால் எவ்வளவது நல்லாய் இருந்திருக்கும் என்ற மனப்பான்மையால் பலர் தவிர்க்கின்றார்கள் என நினைக்கின்றேன். அதை விட ஈழம் என்ற சொல்லை கூட உச்சரிக்க முடியாத நாட்டில்......???????

உண்மை….

ஆனால் ஆறுமுகம் தொண்டமானோடு அவரை வைக்காமல் விட்டதும் சரிதான்.

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

இன்று... கேப்டன் விஜயகாந்த் நினைவிடம்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

விஜயகாந்த் நினைவிடத்திலும் வயிறார உணவு!

Digital News Team

vija-1.jpg

விஜயகாந்த் மறைவின்போது அவருடைய உதவிகள் பற்றியெல்லாம் பலரும் நினைவுகூர்ந்து கண்ணீர் விட்டனர். ஆனாலும், அவருடைய உதவிகளிலேயே பேருதவியாக, பெரிய விஷயமாகப் பேசப்பட்டது அவருடைய உணவு உபசரிப்புதான்.

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியாக உணவு விஷயத்தில் சிறப்பிடத்தைப் பெற்றவர் விஜயகாந்த் என்பதை அவருடைய மறைவுக் கால நினைவுகள் உறுதிப்படுத்தின. விஜயகாந்த் மறைவுக்குப் பிறகும் உணவும் உபசரிப்பும் தொடருகிறது.

எங்கோ மதுரையில் பிறந்தவர் திரையுலகில் வளர்ச்சி அடையத் தொடங்கிய காலத்திலேயே மக்களுக்கு நல உதவிகள், உணவு வழங்குதல், கல்வி உதவிகள் என்று உதவிக்கரம் நீட்டினார். 2004-இல் அவர் தேமுதிகவைத் தொடங்கி, ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தாலும் எதிர்க்கட்சித் தலைவர் வரை உயர்ந்தார்.

உடல்நலம் குன்றியிருந்த விஜயகாந்த் மறைவின்போது ஜாதி, மத, அரசியல் பாகுபாடின்றி அனைவரும் நேரிலும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் தங்களின் வேதனைகளை வெளிப்படுத்தினர். இறுதி ஊர்வலத்திலும் அஞ்சலி நிகழ்வுகளிலும் மறைந்த தலைவர்கள் பலருக்கு இணையாக மக்கள் திரண்டனர்.

விஜயகாந்த் உடல் அவருடைய இல்லம், தேமுதிக அலுவலகம், தீவுத்திடல் என மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இறுதி ஊர்வலத்துக்குப் பிறகு, விஜயகாந்த்தின் திருமண மண்டபமாக இருந்த தேமுதிக அலுவலக வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது.

இப்போது நாள்தோறும் விஜயகாந்த் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காகத் தொடர்ந்து எண்ணற்ற மக்கள் வந்து கொண்டேயிருக்கின்றனர். மக்கள் வந்து செல்லும் வகையில் தனி வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. நாள்தோறும் விஜயகாந்த் சமாதியில் மலர் அலங்காரம் செய்யப்படுகிறது.

நினைவிடம் அருகே தேமுதிக நிர்வாகிகள் நின்றுகொண்டு, மூட்டையில் வைக்கப்பட்ட ரோஜாக்களிலிருந்து மக்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்துவதற்காகப் பூக்களை அளிக்கின்றனர்.

வளாகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. நினைவிடத்தில் விஜயகாந்த் என்றதுமே நினைவுக்கு வருகிற உணவும் உபசரிப்பும் தொடருகிறது.

வருவோருக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான மதிய உணவு சுடச்சுடத் தடையின்றி வழங்கப்படுகிறது. குடிநீர் பாட்டில்களும் வழங்கப்படுகின்றன. மக்களும் வரிசையில் நின்று உணவு பெறுகின்றனர். வீணாக்க வேண்டாம், சாப்பிட்டுவிட்டு எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள் என்று அங்கிருக்கும் தேமுதிக நிர்வாகிகள் கேட்டுக்கொள்கின்றனர்.

தீவிர ரசிகர்கள் சிலர் முடி காணிக்கை செலுத்தி, தங்களின் அபரிமிதமான பற்றை வெளிப்படுத்திக் கொள்கின்றனர். இதற்காகத் தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்கள் வரிசையாக நின்று சென்று நினைவிடத்தைப் பார்வையிடுவதை ஒழுங்குபடுத்த ஊழியர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். போலிஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இருந்தாலும் இறந்தாலும் ‘கேப்டன்’ பெயர் சொல்லும் இடத்தில் தொடருகிறது உணவும் உபசரிப்பும்!

https://thinakkural.lk/article/287659

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.