Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

உண்மையில் அந்தப் பிள்ளையை நினைக்கப் பாவமாக இருக்கிறது. 

வாசகர்சாலை, ஊர்ச் சங்கங்கள், அந்தப் பிள்ளையின் பாடசாலை போன்றவற்றில் பாராட்டு விழாக்களை ஏற்பாடு செய்திருந்தால் அது பலருக்கும் முன்மாதிரியான செயற்பாடாக இருந்திருக்கும். 

இந்தக் கொண்டாட்டங்கள் பிள்ளையைப் பப்பாளி மரத்தில் ஏற்றிவிடும் செயற்பாடாக இருக்கப்போகிறது. 

☹️

  • Replies 56
  • Views 5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    ஒரு சாதாரண TV போட்டி ஒன்றின் வெற்றியை தலை மேல் வைத்து கொண்டாடி அந்த பிள்ளையின் எதிர்கால வளர்ச்சியை நாசமாக்க போகின்றனர்.  

  • அவருடைய வெற்றி யின் பின்னால் உள்ள  அவரது கடும் உழைப்பும் + இந்திய அரசின் அரசியல் நகர்வும் (ஈழத் தமிழரை தனது  வட்டத்திற்குள் கொண்டுவரும்)  இருக்கிறதாக பார்க்கிறேன்.  அவரது வெற்றியை நிதானமாகக் கொண்

  • குமாரசாமி
    குமாரசாமி

    தமிழினத்தின் கலாச்சாரத்தை,மொழியை,பண்பாடுகளை,இருப்பிடத்தை,உரிமைகளை வேரோடு அழிக்க எதிரி கங்கணம் கட்டிக்கொண்டு திரிகின்றான். நாமோ ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் யாதும் ஊரே யாவரும் கேளிர் என பாடிக்கொண்டு திரி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, Kapithan said:

உண்மையில் அந்தப் பிள்ளையை நினைக்கப் பாவமாக இருக்கிறது. 

வாசகர்சாலை, ஊர்ச் சங்கங்கள், அந்தப் பிள்ளையின் பாடசாலை போன்றவற்றில் பாராட்டு விழாக்களை ஏற்பாடு செய்திருந்தால் அது பலருக்கும் முன்மாதிரியான செயற்பாடாக இருந்திருக்கும். 

இந்தக் கொண்டாட்டங்கள் பிள்ளையைப் பப்பாளி மரத்தில் ஏற்றிவிடும் செயற்பாடாக இருக்கப்போகிறது. 

☹️

அதுதான் முதலே சொல்லி விட்டேன். திறமைசாலிகளுக்கு பாராட்டும் வாழ்த்துக்களும் அவசியம். ஆனால் அதற்கும் ஒரு எல்லையுண்டு. அதை விட இன்றைய நாட்டு நிலவரத்தில்  எது வெள்ளை எது கறுப்பு என்ற நிலை யாருக்குமே தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, குமாரசாமி said:

அதுதான் முதலே சொல்லி விட்டேன். திறமைசாலிகளுக்கு பாராட்டும் வாழ்த்துக்களும் அவசியம். ஆனால் அதற்கும் ஒரு எல்லையுண்டு. அதை விட இன்றைய நாட்டு நிலவரத்தில்  எது வெள்ளை எது கறுப்பு என்ற நிலை யாருக்குமே தெரியாது.

100%

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செண்டை மேளம் அடி நல்லாத்தானே இருக்கு!

புதியவற்றை  வரவேற்க யாழ்ப்பாணத்தார் எப்பவும் பின்னடிப்பினம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
31 minutes ago, கிருபன் said:

புதியவற்றை  வரவேற்க யாழ்ப்பாணத்தார் எப்பவும் பின்னடிப்பினம்!

யாழ்ப்பாணத்தார் எப்பவும் ஊருக்கு உபதேசம் உனக்கில்லையடி மகளே கொள்கைக்காரர் எல்லோ? தங்கடை பொம்புளை பிள்ளையளை பனைமர உயரத்துக்கு வேலி அடைச்சு பொத்தி பொத்தி வளர்ப்பினம்....ஆனால் ஊரான் வீட்டு பிள்ளையள் எண்டால்.......சொல்லவே வேண்டாம் :cool:

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பிள்ளைக்கு ஒன்றும் செய்யாமல் விட்டாலும் ஒரு பெரிய போட்டியில் பங்குபற்றி பரிசுடன் வந்த பிள்ளைக்கு ஒரு பூச்செண்டாவது குடுத்து வரவேற்க வக்கில்லை என்று நாலுபேர் நாலுவிதமாய் கதைக்கத்தான் செய்வினம்.......இது இப்ப ஊர்கூடித் தேர் இழுக்குது .....ஏதோ ஒரு வகையில் இது நமக்கும் பெருமைதானே .......நடக்கட்டும் ......!   👍

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

யாழ்ப்பாணத்தார் எப்பவும் ஊருக்கு உபதேசம் உனக்கில்லையடி மகளே கொள்கைக்காரர் எல்லோ? தங்கடை பொம்புளை பிள்ளையளை பனைமர உயரத்துக்கு வேலி அடைச்சு பொத்தி பொத்தி வளர்ப்பினம்....ஆனால் ஊரான் வீட்டு பிள்ளையள் எண்டால்.......சொல்லவே வேண்டாம் :cool:

செண்டை மேளத்திற்குப் பதிலாக பறை மேளமோ அல்லது றபாணமோ அடித்து  அல்லது கண்டிய நடனமோ ஆடியிருக்கலாமே  ? 

சிங்களம் மட்டும்தான் பிரச்சனையோ ? 

  • கருத்துக்கள உறவுகள்

செண்டை என்பது பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு தாள இசைக்கருவியாகும். இக்கருவி பரவலாகக் கேரளம், கருநாடக மாநிலத்தின் துளு நாடு பகுதி மற்றும் தமிழகத்தில் பயன்படுத்தப்படுகிறது. துளு நாட்டில் இது செண்டே என்று அழைக்கப்படுகிறது.

300px-ChendaPlayingGroup.jpg செண்டை வாசிக்கும் கலைஞர்கள்

செண்டை மேளம்

பண்டைய தமிழ் இசை தோற்கருவி "கொடுகொட்டி" என்பதன்

பரிணாம வளர்ச்சியே ஆகும். செண்டை 18ம் நூற்றாண்டில் முழுமையான தற்கால வடிவம் பெற்றது.

https://ta.m.wikipedia.org/wiki/செண்டை

பிகு

எடுத்து அடிடா பாட்டன் பறையை….

தூக்கி அடிடா முப்பாட்டன் செண்டையை…

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழினத்தின் கலாச்சாரத்தை,மொழியை,பண்பாடுகளை,இருப்பிடத்தை,உரிமைகளை வேரோடு அழிக்க எதிரி கங்கணம் கட்டிக்கொண்டு திரிகின்றான். நாமோ ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் யாதும் ஊரே யாவரும் கேளிர் என பாடிக்கொண்டு திரிவோம்.

இன்பமே சூழ்க
எல்லோரும் வாழ்க.

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, குமாரசாமி said:

தமிழினத்தின் கலாச்சாரத்தை,மொழியை,பண்பாடுகளை,இருப்பிடத்தை,உரிமைகளை வேரோடு அழிக்க எதிரி கங்கணம் கட்டிக்கொண்டு திரிகின்றான். நாமோ ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் யாதும் ஊரே யாவரும் கேளிர் என பாடிக்கொண்டு திரிவோம்.

இன்பமே சூழ்க
எல்லோரும் வாழ்க.

ஈழத்தில் தற்போது இந்தியாவின் பண்பாட்டுப் படையெடுப்பு அதி தீவிரமாக  நிகழ்ந்து வருவதன் ஒரு குறியீடாக இந்தச் செண்டை மேளத்தைப் பார்க்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

பல வருடங்களுக்கு முன்பே இதை ஒட்டி றோ செய்த ஒரு வேலைத்திட்டத்தின் ஆதாரத்தை உங்களுக்கு சமர்பிக்கிறேன் 🤣.

இனி எண்ட மதர் டங் மலையாளம்….

எண்ட ஸ்டேட் கேரளா….

எண்ட சீப் மினிஸ்டர் பின்னராயி விஜயன்….

எண்ட பீடி மலபார் பீடி….

எண்ட நாதம் செண்டை…..

எண்ட நடனம் கதகளி……

  • கருத்துக்கள உறவுகள்
On 29/12/2023 at 10:29, Kapithan said:

இதுவும் கொஞ்சம் அதிகமாகத் தோன்றுகிறது. 

☹️

On 29/12/2023 at 10:48, நிழலி said:

கல்வி பின்புலத்துக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 

கில்மிஷாவின் திறமை இந்த ஆடம்பர வரவேற்பாலும் மீடியாக்களின் அதீத கவனிப்பாலும் குன்றிவிடக்கூடாது எனும் அக்கறை எமக்கு இருப்பது போல், அவரது பெற்றோர்களுக்கும் இருக்கும் என நம்புகின்றேன்.

நான் "படித்த நல்ல பின்புலம் " என்று சொன்னது தவறாக புரிந்துகொள்ளப்பட அதிக வாய்ப்பு இருப்பதை அப்படி எழுதும் பொழுது உணர தவறி விட்டேன்.

எங்களுக்கு இருக்கும் அக்கறை ஏன் இந்தப் பிள்ளையை பெற்ற பெற்றோருக்கு இல்லை என்று யோசித்த பொழுது அந்தப் பெற்றோருக்கு பக்குவமோ, தெளிவான தூர நோக்குடனான சிந்தனையோ ஏன் இல்லாமல் போனது என்ற கேள்வி வந்ததால் அப்படி சொல்லி விட்டேன்.

"எப்பொழுதுமே பெற்றோரின் நல்ல கல்விப் பின்புலம்  என்பது மட்டுமே பிள்ளைகளின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்வதில் செல்வாக்கு செலுத்தும் காரணி" என்னும் கூற்று தவறுதான். தவறுக்கு மனதார வருந்துகிறேன். குறிப்பிட்டு காட்டிய @Kapithan @விளங்க நினைப்பவன்  @நிழலி ஆகியோருக்கு நன்றி 

Edited by பகிடி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, Kapithan said:

ஈழத்தில் தற்போது இந்தியாவின் பண்பாட்டுப் படையெடுப்பு அதி தீவிரமாக  நிகழ்ந்து வருவதன் ஒரு குறியீடாக இந்தச் செண்டை மேளத்தைப் பார்க்கலாம். 

தைப்பொங்கலாவது தமிழருக்கு மிஞ்சுமா?

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

செண்டை மேளம் அடி நல்லாத்தானே இருக்கு!

ஓம் நல்லாக தான் உள்ளது. இலங்கை நாயகிக்கு இவ்வளவு பெரிய விழா நடக்கும்  என்று முதலே தெரிந்து இருந்தால் நானும் விழா பார்க்க ரிக்கெற் எடுத்து கொண்டு சென்றிருப்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, குமாரசாமி said:

தைப்பொங்கலாவது தமிழருக்கு மிஞ்சுமா?

 Lohri, Lal Loi, Maghe Sankranti, Magh Bihu, Tusu Festival

சோனமுத்தா போச்சா!

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

 Lohri, Lal Loi, Maghe Sankranti, Magh Bihu, Tusu Festival

சோனமுத்தா போச்சா!

Facebook இல் கனடா தமிழ் இந்துக்கள் என்னும் ஒரு group உண்டு. அது மஹா சங்கராந்தியை தை பொங்கலோடு சேர்த்து வைத்து வாழ்த்துக்கள் சொல்கிறது.

Group நடத்துப்பவர்கள் ஈழத்து சைவர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

கில்மிசா வரவேற்பின் முடிவில் இசை நிகழ்வில் கலந்து கொண்டு பாடியுள்ளார்.

அத்தோடு சூரியன் எவ் எம் முக்கு வழங்கிய பேட்டியில் தான் ஒரு மருத்துவராக வேண்டும் என்ற இலக்கு நோக்கிப் பயணிப்பதாகவும்.. இசையையும் தொடர்ந்து இசைத்து சிறந்த பின்னணிப் பாடகியாக வரவேண்டும் என்று ஆசைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளதோடு..

தனக்கு தந்த வரவேற்பை எதிர்பார்க்கவில்லை என்றும் பெருமை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவியான இவர் கல்வியிலும் இசையிலும் சிறந்து விளங்க சிறுமி கில்மிசாவுக்கு வாழ்த்துக்கள்.

இவரின் கையில்.. தயவு செய்து சொறீலங்கா கொடியை திணிக்காதீர்கள்... தன் சொந்த முயற்சியால் சாதித்த இந்த சின்னச் சிறுமி மீது.. தமிழ் சமூகத்துக்கு எந்த வகையிலும் உதவாத... சாதிய கருத்துக்களை வீசி.. வெறுப்புக் கக்குபவர்களையும் கண்டிப்பது கட்டாயம். 

கில்மிசாவிடம் ஒரு வேண்டுகோள்.. ஒரு சினிமா பாடலை பாடினால்.. அந்த பாடலுக்கு சொந்தமான குரலுக்குரியவர்களையும் இசையமைப்பாளருக்கும் நன்றி செல்லிச் சொல்வதை வழக்கமாக மாற்றிக் கொள்வது.. அவர்களை கெளரவிப்பற்கு.. ஈடாகும். ஒரு பாடகியாக. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவானின் நல்ல கருத்து.
காழ்புணர்வு கொண்டதல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, nedukkalapoovan said:

கில்மிசா வரவேற்பின் முடிவில் இசை நிகழ்வில் கலந்து கொண்டு பாடியுள்ளார்.

அத்தோடு சூரியன் எவ் எம் முக்கு வழங்கிய பேட்டியில் தான் ஒரு மருத்துவராக வேண்டும் என்ற இலக்கு நோக்கிப் பயணிப்பதாகவும்.. இசையையும் தொடர்ந்து இசைத்து சிறந்த பின்னணிப் பாடகியாக வரவேண்டும் என்று ஆசைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளதோடு..

தனக்கு தந்த வரவேற்பை எதிர்பார்க்கவில்லை என்றும் பெருமை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவியான இவர் கல்வியிலும் இசையிலும் சிறந்து விளங்க சிறுமி கில்மிசாவுக்கு வாழ்த்துக்கள்.

இவரின் கையில்.. தயவு செய்து சொறீலங்கா கொடியை திணிக்காதீர்கள்... தன் சொந்த முயற்சியால் சாதித்த இந்த சின்னச் சிறுமி மீது.. தமிழ் சமூகத்துக்கு எந்த வகையிலும் உதவாத... சாதிய கருத்துக்களை வீசி.. வெறுப்புக் கக்குபவர்களையும் கண்டிப்பது கட்டாயம். 

கில்மிசாவிடம் ஒரு வேண்டுகோள்.. ஒரு சினிமா பாடலை பாடினால்.. அந்த பாடலுக்கு சொந்தமான குரலுக்குரியவர்களையும் இசையமைப்பாளருக்கும் நன்றி செல்லிச் சொல்வதை வழக்கமாக மாற்றிக் கொள்வது.. அவர்களை கெளரவிப்பற்கு.. ஈடாகும். ஒரு பாடகியாக. 

மிக நல்ல கருத்து....படிப்பில் அதீத கெட்டிக்காரி என்பதையும் அறிந்துள்ளேன்...அவருடைய விருப்பம் நிறைவேற ..இறை ஆசி கிடைக்கட்டும்..வரவேற்பில் நடந்த ஆடம்பரம் விருப்புக்குரியதல்ல...அதும் அந்தக்குழந்தைக்கு அடிக்கப்பட்ட சாயம் ..ச்கிக்க முடியவில்லை....பிள்ளை  மீதான தாக்குதல்களுக்கு  நிகழ்வு ஏற்பாட்டளர்கள் மீதான காழ்ப்புணற்சியும் ஒரு காரணமாக இருக்கலாம்..அதனைவிட இந்த யூரியூபர்களின்  அலப்பறைகளூ ம் ஒரு காரணம்...தாங்கவே முடியவில்லை...சாதீய கருத்துக்கள் ௐஊரிப்பிட்ட ஒரு சிலரால் மட்டுமஏழுதப்படுகிறது....எல்லாம் கடந்து அவர் தன் துறையில் பிரகாசிக்க வேண்டும்..

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பகிடி said:

Facebook இல் கனடா தமிழ் இந்துக்கள் என்னும் ஒரு group உண்டு. அது மஹா சங்கராந்தியை தை பொங்கலோடு சேர்த்து வைத்து வாழ்த்துக்கள் சொல்கிறது.

Group நடத்துப்பவர்கள் ஈழத்து சைவர்கள் 

இந்திய தீபகற்பத்தின் கிழக்குக்கரையில், வட-கிழக்கு பருவமழையை நம்பி பயிர் செய்யும் பல்வேறு பட்ட மக்கட் கூட்டங்களுக்கு ஒரே சமயத்தில் விளைச்சல் திருவிழா harvest festival வருவது அத்துணை ஆச்சரியமான விடயம் அல்லவே. அத்தோடு வானசாஸ்திரப்படியும் சூரியன் இடம்மாறும் நாள் இது.

பல்வேறு ஐரோப்பிய குடிகள்கூட, summer solstice, winter solstice, harvest festival ஐ ஒன்றாக கொண்டாடுவதை காணலாம்.

மனித குலத்தின், கலாச்சாரத்தின், பண்பாட்டின் வரலாறு மிக சிக்கலானது.

காலத்தின் படி மாறககூடியது. தொடர்பு வெளி, உள் ஆளுமைகளால் பாதிக்கப்பட்டு கொண்டே இருக்கும்.

களப்பிரர் காலத்துக்கு முந்திய தமிழர் பண்பாடு இப்போ இல்லை.

அதை இப்போ கொண்டு வந்தால் யாழின் கலாச்சார காவலர்களுக்கு ஜன்னி கண்டு விடும்🤣.

அதேபோல் இன்று எதை நாம் தமிழர் கலாச்சாரம் என கருதுகிறோமோ அது நாளை அப்படியே இருக்காது.

எமது செண்டையை நாமே தொலைத்து விட்டு, இப்போ அது அந்நிய பண்பாடு என மாரடிக்க்கிறோம் - இதுவும் மேலே சொன்ன மாற்றத்தின் அங்கம்தான்.

இதை சொல்லியும் விளங்காவிடில் ஒரு விவேக் ஜோக்கை போட்டு கடந்து போகவேண்டியதே.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழருக்கும் இந்தியத் தமிழருக்கும் இடையே  கலாசார ரீதியில்  பல்வேறு ஒற்றுமைகள், வேற்றுமைகள்  இருந்த போதும் ஈழத் தமிழர் தனித்துவமானவர்கள் என்பதை பலர் தமது வசதிக்கேற்ப மறந்துவிடுகின்றனர். 

🤣

  • கருத்துக்கள உறவுகள்

இனி இவர் படிப்பில் கவனம் செலுத்துவது கடினம். 

இதுவரை தமிழக தொலைக்காட்சியின் பொம்மையாக இருக்கவேண்டிய நிலை. இனி படிப்பா பாடகியா என்ற ஒற்றை முடிவே சரியானது. இவருக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம் மிக மிக பெரியது. அதன் கனத்தை இவர் மதிக்கவேண்டும். எத்தனையோ கோடிக்கணக்கானவர்களுக்கு கிடைக்காத பாக்கியம் இது. தமிழகத் திரைப்படத்துறை இவரை தூக்கி வைத்து கொண்டாட முனைகிறது. அதை தற்போது பாவிக்காமல் விட்டால் மீண்டும் திரும்பி ஒரு போதும் வராது. 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

களப்பிரர் காலத்துக்கு முந்திய தமிழர் பண்பாடு இப்போ இல்லை.

அதை இப்போ கொண்டு வந்தால் யாழின் கலாச்சார காவலர்களுக்கு ஜன்னி கண்டு விடும்🤣.

அதேபோல் இன்று எதை நாம் தமிழர் கலாச்சாரம் என கருதுகிறோமோ அது நாளை அப்படியே இருக்காது.

சில வாரங்களுக்கு முன்பு தமிழ் திருமணத்திற்கு அழைத்து சென்றேன்.திருமண ஆணும் பெண்ணும் ஹிந்தி உடையில் நின்றனர்.ஆனால் யாழ்பாணத்தில் மட்டும் என்ன மேளம் என்று பண்பாடு கலாச்சாரம் தேடுகின்றனர்.

-----------------------------

7 hours ago, விசுகு said:

இனி படிப்பா பாடகியா என்ற ஒற்றை முடிவே சரியானது.

நானும் அப்படி தான் நினைக்கிறேன்.அவா தான் டொக்டராக வர வேண்டும் என்று பேட்டி கொடுத்ததாக நெடுக்காலபோவான் சொன்ன போதே நினைத்தேன் அது அப்பா அம்மா சொல்லி சொன்னதா அல்லது சொந்தமான விருப்பமா யாழ்பாணத்தில் படித்து கொண்டிருக்கும் பலர் இதே மாதிரி தானே டொக்டர் என்று சொல்கின்றனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 hours ago, goshan_che said:

 Lohri, Lal Loi, Maghe Sankranti, Magh Bihu, Tusu Festival

சோனமுத்தா போச்சா!

உலகில் வாழும் ஒவ்வொரு மனித இனங்களும் தமக்குரிய இன மத கலாச்சாரங்களுடனேயே வாழ்கின்றன. பெரிய பிரித்தானிய மக்கள் தங்களுக்குரிய கலாச்சாரங்களுடனேயே வாழ்கின்றார்கள். இதே போல் பிரான்ஸ் நாட்டை பற்றி  சொல்லவே தேவையில்லை. உணவில் கூட கண்ணியமான கலாச்சாரம் வைத்திருப்பார்கள். இத்தாலியும் கலை கலாச்சாரங்களை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.இதே போல் ஜேர்மனி,போலந்து ரஷ்ய மக்கள் என தங்களை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.இதனால் தான் தாம் தம் மக்கள் கலாச்சாரம் என விட்டுக்கொடுக்காமல் வாழ்கின்றார்கள்.

உங்களைப்போன்ற கருத்தாளர்களால்  ஏற்கனவே நடுத்தெருவில் நிற்கும் தமிழினம் நடுத்தெருவே இல்லாமல் காணாமல் போகும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

சில வாரங்களுக்கு முன்பு தமிழ் திருமணத்திற்கு அழைத்து சென்றேன்.திருமண ஆணும் பெண்ணும் ஹிந்தி உடையில் நின்றனர்.ஆனால் யாழ்பாணத்தில் மட்டும் என்ன மேளம் என்று பண்பாடு கலாச்சாரம் தேடுகின்றனர்.

🤣 ஒருமுறை @அக்னியஷ்த்ரா எழுதினார். இப்பவே புலம்பெயர்ந்த பலரின் பிள்ளைகள் கலப்பினத்திருமணம். இன்னும் இரெண்டு சந்ததி போக புலம்பெயர் தமிழ் சமூகம், ஒரு கலவை கலரில், கலவை பண்பாட்டுடன், செம்பாட்டு தலையுடன் நிக்கும் என்று.

அது உண்மை. அதில் தப்பும் இல்லை. இதுதான் காலம் எனும் காட்டாறின் நியதி.

தாங்கள் வெள்ளைகாரன் நாட்டில் அவன் பாணியில் வாழலாம். அங்க செண்டை அடிச்சாத்தான் தப்பு🤣

நாகரும், இயக்கரும், வேடரும், இப்போ மலையாளிகளாய் போய் விட்ட சேரரும், சோழரும், பாண்டியரும், இப்படி பலரும் கலந்த சாம்பாருதான் ஈழத்தமிழர். 

இனங்களுக்கு தனிதுவம் இருக்கிறது. ஆனால் எந்த இனமும் இந்த உலகில் தனியாக, சுயம்பாக, கலப்பில்லாமல் இருந்ததில்லை. இனகுழுக்கள் ஒன்றில் இருந்து ஒன்று பண்பாட்டு கூறுகளை கடன் வாங்கி கொண்டே இருக்கும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.