Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைவராக வர யார் பொருத்தமானவர்? 16 members have voted

  1. 1. தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைவராக வர யார் பொருத்தமானவர்?

    • சுமந்திரன்
      4
    • சிறிதரன்
      0
    • யோகேஸ்வரன்
      0
    • சம்பந்தன்
      0
    • சாணக்கியன்
      1
    • வேறு ஒருவர்
      6

This poll is closed to new votes

Poll closed on 01/21/24 at 23:59

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியமும் தமிழரசுக் கட்சியின் தலைமையும்

லக்ஸ்மன்

தமிழ்த் தேசிய அரசியலானது தமிழர்களுடைய  அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காகவேயன்றி, ஒரு அரசியல் கட்சியின், தனிப்பட்ட அரசியல்வாதிகளின் நலன் பேணுவதற்கானல்ல என்பதுடன் அவ்வாறானதாக இருக்கக்கூடாது  என்பது அடிப்படை.

தேர்தல்கள் வரும்போதும் ஆண்டுகள் பிறக்கும்போதும் வாக்குறுதிகள் பறக்க விடப்படுவதும் உறுதிகள் வழங்கப்படுவதும் தேசிய அரசியலிலும், தமிழர்களுடைய அரசியலிலும் புதிய விடயமல்ல. ஆனாலும், இந்த 2024இல் தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான சுயநிர்ணய போராட்டத்திற்குச் சிறப்பானதொரு முடிவினை தருகின்ற ஆண்டாக இருக்கவேண்டும் என்று மாத்திரமே எதிர்பார்க்க முடிகிறது.

ஏனெனில் எதிர்பார்ப்புகளுடனேயே வருடங்களைக் கடக்க வேண்டியதாகிப்போனது.

வடக்கு, கிழக்கு தமிழர்களின் அரசியல் உரிமைக்கான போராட்ட வரலாறு ஆயுதப் போராட்டத்துடன் முடிவுக்கு வந்துவிட்டதா என்று எல்லோரும் சந்தேகம் கொள்ளும் அளவுக்கான செயற்பாடுகளே அரசியல் கட்சிகளால் முன்னெடுக்கப்படுகின்றன.

ஜனநாயக உரிமையைப் பெற்றுக் கொள்வதில் காலத்துக்குக் காலம் முன்னெடுக்கப்பட்ட போராட்ட முறைகள் மாற்றம் பெற்று ஜனநாயக வழி சாத்தியமற்றது என்ற முடிவின் பலனாகவே ஆயுதப் போராட்ட இயக்கங்கள் தோற்றம் பெற்றன.

இந்தியாவினுடைய உள் வருகையுடன் நடைபெற்ற திம்பு பேச்சுவார்த்தை, இதனையடுத்து, ஏற்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தம் காரணமாகப் போராட்ட இயக்கங்கள் பல அரசியல் கட்சிகளாக மாறிப் போயின.

ஆனால், தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதப் போராட்டத்தைக் கைவிடாக் கொள்கையை தொடர்ந்தும் கடைப்பிடித்தனர். ஆனாலும், 2009 மே மாதம் அதனையும் மௌனிக்கச் செய்த மாதமாகப் போனது.

தமிழர்களுடைய அரசியல் உரிமைக்கான பிரச்சினை இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து இதுவரையில் தீர்வை எட்டுவதற்கு முடியாததாகவே தொடர்கிறது.  இலங்கை அரசியலமைப்பின் 22 திருத்தங்களில் எதுவும் தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷையை நிறைவேற்றவில்லை.

அவற்றில் 13ஆவது திருத்தம் தவிர ஏனையவை இனப்பிரச்சினை கூர்மையடையவே வழி செய்திருக்கின்றன. 

1987 இந்திய - இலங்கை அரசாங்கங்களுக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தம் நாட்டின் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டிருந்தாலும் அது இதுவரையில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வாக இல்லாது விட்டாலும் ஒரு ஆரம்பப்புள்ளியாக எடுத்துக் கொள்ளப்பட்டு நிரந்தரத் தீர்வுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று தற்போதும் கோரிக்கைகள் விடுக்கப்பட்ட வண்ணமுள்ளன. ஆனாலும், அதற்கு எதிராகச் செயற்படுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

13ஆவது திருத்தச் சட்டம் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலமாக ஏற்பட்டிருந்தாலும் அதனைக்கூட இலங்கையின் ஆளும் அரசாங்கங்கள் மற்றும் பெரும்பான்மைச் சமூகம் முழுமையாக அமுல்படுத்துவதற்கான மனநிலையற்றவர்களாகவே இருக்கின்றனர்.

பல்வேறு கருத்துக்கள் காணப்பட்டாலும்  கடந்த கால கசப்புணர்வுகள், முரண்பாடுகளை மறந்து தமிழ் மக்களின் அரசியலை முன்னெடுப்பதற்காகத் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரால் 2001ஆம் ஆண்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. தமிழர்களின் ஏகோபித்த அரசியல் தரப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே  அம்முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

தமிழ் மக்களுடைய அரசியல் நிலைப்பாடுகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்கொண்டு செல்லும் என்ற நம்பிக்கை அக்காலத்தில் அனைத்துத் தரப்பினரிடமும் பலமாக இருந்தது.

ஆனால், கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக 2009 மே 18க்குப் பின்னர் ஒவ்வொரு கட்சியாகக் கழன்று இப்போது சின்னத்தை வழங்கியிருந்த தமிழரசுக்கட்சி கடந்த வருடத்தில் தனித்துச் செயற்படும் முடிவை எடுத்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டு முதல் தேர்தலின் பின்னர் தமிழர் விடுதலைக்கூட்டணியின் உதய சூரியன் சின்னம் இல்லை என்றானது.

அதன் பின்னர், கடந்த வருடத்தில் தமிழரசுக்கட்சியின் வீட்டுச் சின்னம் எடுத்துச் செல்லப்பட்டதால், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் குத்துவிளக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சின்னமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இருந்தாலும் இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பென்ற ஒன்று இருக்கிறதா என்று வினவ வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

தந்தை செல்வாவினால் தமிழரசுக் கட்சி கிடப்பில் போடப்பட்டே தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கப்பட்டது. அதன்படி, இயக்கமின்றி இருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சின்னமாக்கப்பட்டது என்பதே உண்மை. 

அது தமிழர்களின் அரசியல் சின்னமாக இருக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் அரசியல் கட்சியாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்த போதிலும், தமிழரசுக் கட்சியின் ஏகாதிபத்திய, மேட்டுக்குடி நிலைப்பாடு காரணமாகக் கூட்டாக இருந்த கட்சிகள் பல வெளியேறும் நிலை ஏற்பட்டிருந்தது.

இதனை யாரும் மறுப்பதற்கில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் பயனற்றுப்போனதும் அதற்குக் காரணம் எனலாம்.
தமிழர்களின் அரசியலைப் பலவேறு கட்சிகளாகி, தனித்து நின்று மேற்கொள்ள முடியாது என்பதனைப் புரிந்து கொண்டமையினால் உருவான கூட்டமைப்பு  சிதைந்து போயிருக்கின்றது. ஆனாலும், தமிழ்த் தேசிய நலனைக் கருத்தில் கொள்ளாத அரசியலை நடத்துவதில் பயன் ஏதும் விளையாதென்பது புரிந்து கொள்ளப்படவில்லை. இருந்தாலும்,  தமிழ்த் தேசிய நலனும், அதன் நிலைப்பாடும் மாற்றமுறா வகையில் அரசியல் பயணம் தேவையாக இருக்கிறது என்ற கோரிக்கை இருந்து கொண்டே இருக்கிறது.

வடக்கு, கிழக்கு தமிழர்களுடைய அரசியல் வரலாறென்பது கொள்ளை ரீதியாகவும், கோட்பாடு மற்றும் நிலைப்பாடு ரீதியாகவும் சீராகக் கட்டமைக்கப்பட்டது. அவ்வாறே இதுவரை காலமும் முன்கொண்டு செல்லப்பட்டிருக்கிறது எனக் கொண்டால் அதனை வழிப்படுத்துவதற்கான அரசியல் சரியான முறையில் இனிவரும் காலங்களிலும் செய்யப்பட்டாக வேண்டும்.

அந்த ஒழுங்கில்தான், தமிழர்களுடைய உரிமைகளுக்கான, அவர்களுடைய கோரிக்கைகளுக்கான அரசியலை தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் செய்கின்றனவா என்ற கேள்வி தோன்றும். அவ்வாறில்லையானால், தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் தங்களை இந்த வரன் முறைகளுடன் முன் நகர்த்த வேண்டியது காலத்தில் கட்டாயமாகும்.

தமிழ் மக்களின் இன முரண்பாட்டுச் சிக்கல் தோற்றம் பெற்றமை முதல் பேரினவாதிகளுடன் கொள்கை ரீதியான பல விடயங்களில் உடன்பாடுகள், இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருந்தாலும் ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகளின் ஊடாக இதுவரையில் சீர்படுத்தப்படவில்லை என்பதே வரலாறு. ஆனால், தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டதும், ஏமாந்ததும் காலங்காலமாக நடைபெற்று வந்திருக்கிறது.

ஆயுத யுத்தம் மௌனிக்கச் செய்யப்பட்டுவிட்டது. அதனால் தமிழர்கள் தங்கள் போராட்டத்தை இராஜதந்திர ரீதியில் முன் நகர்த்தவேண்டிய கட்டாயத்துக்குப்படுத்தப்பட்டனர். ஆனால், அதனை யார் சரியாகச் செய்கிறார்கள் மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்களா என்பது சந்தேகம்.

ஏனெனில் அரசியலைத் தமிழ் மக்கள் வெறுக்கும் அல்லது வேறு நிலைப்பாடுகளுக்குள் உள்வாங்கப்படுகின்ற நிலைமை உருவாகி வருகிறது. இதற்கு தமிழர்களின் அரசியல் தரப்பினரே பொறுப்பாகவேண்டும்.

தமிழ் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழரசுக்கட்சி என மிதவாத அரசியலுடனும், ரெலோ, புளொட், ஈரோஸ், ஈ.பி.ஆர்எல்எவ், ஈ.என்.டி.எல்.எவ். என ஆயுத அரசியலுடனும்  என தொடர்ந்த தமிழர்களுடைய விடுதலைக்கான முயற்சிகள் பலனற்றுப் போனதாகவே இருக்கின்றன என்றே சொல்லவேண்டும்.

இந்த இடத்தில்தான் தமிழர்களுடைய அரசியலை மக்களது அரசியலுரிமைக்கான அரசியலை யார் முன்கொண்டு செல்வது. சுயநலன்களுக்கு அப்பால், மக்களை அரசியல் மயப்படுத்துவதன் ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற செயற்திட்டம் முன்னிற்கிறது. பூனைக் கண்ணை மூடிக்கொண்டிருப்பது பயனற்றதே.

அந்தவகையில், தமிழர் அரசியலில் வெறுப்பு அரசியலை மேற்கொள்ளும் நிலைப்பாட்டிலிருந்து தமிழர் அரசியல் தரப்பினர் விடுபட்டு ஒன்றிணைந்த தமிழ்த் தேசிய அரசியல் உருவாவதற்கான வழிவகைகள் ஏற்படுத்த வேண்டும்.

அதன் ஒரு படியாக, தமிழரசுக்கட்சியின் புதிய தலைவர் தெரிவு வெறுமனே, சர்வதேச தொடர்புகளைக் கொண்ட, மொழி அறிவு என்பவைகளுக்கப்பால், தமிழ் மக்களின் அரசியலுரிமைகளை வென்றெடுப்பதற்காகச் சுயநலம் மறந்து  ஒன்றிணைந்த அரசியலுக்கான, தமிழர்களை ஒன்றிணைப்பதாகத் தமிழ்த் தேசியத்தின் பாற்பட்டதாக இருக்கவேண்டும்.

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழ்த்-தேசியமும்-தமிழரசுக்-கட்சியின்-தலைமையும்/91-331602

Edited by கிருபன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு கட்சியின் தலைவர் தேர்தலும் தமிழர் அரசியலின் எதிர்காலப் போக்கும்

தமிழரசு கட்சியின் தலைவர் தேர்தலும் தமிழர் அரசியலின் எதிர்காலப் போக்கும் 

— வீரகத்தி தனபாலசிங்கம் —

    தென்னிலங்கையில் அரசியல் கட்சிகள் அனேகமாக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தலுக்கு தங்களைத் தயார்படுத்துவதில் இறங்கியிருக்கும் நிலையில் தமிழர் அரசியலில் ஒரு கட்சியின் தலைவர் தெரிவு முன்னென்றும் இல்லாத கவனத்துக் குரியதாகியிருக்கிறது.

  திருகோணமலையில் இம்மாத இறுதியில் இலங்கை தமிழரசு கட்சியின் மகாநாட்டுக்கு முன்னதாக அடுத்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 21) நடைபெறவிருக்கும் தலைவர் தேர்தலே அதுவாகும். 

  தமிழரசு கட்சியின் 75 வருடகால வரலாற்றில் இதுவரையில் ஏகமனதாகவே தலைவர் தெரிவு இடம்பெற்றுவந்திருக்கிறது. அதன் தாபகத் தலைவர் தந்தை செல்வா விரும்பியிருந்தால் தனது ஆயுட்காலம் வரைக்கும் கட்சியின் தலைவராக பதவி வகித்திருக்கமுடியும்.  ஆனால், அவர் அரசியல் கண்ணியத்துடன் ஒரு தடவை மாத்திரம் தலைவராக இருந்துவிட்டு வடமாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் சேர்ந்த அரசியல்வாதிகள் மாறி மாறி கட்சியின் தலைவர்களாகவும் செயலாளர்களாகவும் வரக்கூடியதாக ஒரு ஏற்பாட்டை வகுத்தார். 

  வடக்கைச் சேர்ந்தவர் தலைவராக தெரிவானால் கிழக்கைச்  சேர்ந்தவர் பொதுச் செயலாளராக வருவார். கிழக்கைச் சேரந்தவர் தலைவராகும்போது வடக்கைச் சேர்ந்தவர் பொதுச் செயலாளராவார். இந்த தெரிவுகள் எப்போதுமே பொதுச்சபையில் கருத்தொருமிப்பின் அடிப்படையில் இடம்பெறுவதை தமிழரசு கட்சி  பாரம்பரியமாகப் பேணி வந்திருக்கிறது.

  ஒரு தடவை மாத்திரம் அதாவது 1973 ஆம் ஆண்டில்  முன்னாள் வட்டுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கமும் அன்றைய மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்  செல்லையா இராசதுரையும் தலைவர்களாக வருவதற்கு போட்டி போடுகின்ற ஒரு நிலை தோன்றியபோது தந்தை செல்வா இராசதுரையை விட்டுக்கொடுக்க இணங்கவைத்ததாக கூறப்பட்டது.

  அந்த கட்டத்தில் கட்சியின் தலைவராக அமிர்தலிங்கம் வருவதையே தந்தை செல்வா விருப்பியதாக நம்பப்பட்டபோதிலும், இராசதுரைக்கு ஒரு   வாய்ப்பைக் கொடுப்பதற்கு விரும்பியிருந்தாலும் கூட  விட்டுக்கொடுக்குமாறு அமிர்தலிங்கத்தை  இணங்கவைக்க அவரால் இயலுமாக இருந்திருக்குமா என்பது சந்தேகமே. 

  1970 களில் பல்வேறு தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி உருவாக்கப்பட்ட பிறகு 1976 வட்டுக்கோட்டைத் தீர்மானம்,1977 ஜூலை பொதுத்தேர்தல், 1983 கறுப்பு ஜூலை, ஆயுதப்போராட்டம்  ஆகியவற்றைத் தொடர்ந்து வந்த கொந்தளிப்பான சூழ்நிலைகளில்  தமிழரசு கட்சி பற்றி எவரும் பேசவில்லை. 

   உள்நாட்டுப் போரின் மத்தியிலான  கணிசமான காலகட்டத்திலும் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியே முக்கியத்துவம் குறைந்துபோன நிலையிலும் கூட  தமிழரின் மிதவாத அரசியல் முகமாக தொடர்ந்து விளங்கியது.

  இந்த நூற்றாண்டின்  தொடக்கத்தில் பல்வேறு தமிழ் கட்சிகளை மீண்டும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு முதன் முதலாக எதிர்நோக்கிய 2001 டிசம்பர் பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது.

  பிறகு கூட்டணியின் தற்போதைய தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வீரசிங்கம் ஆனந்தசங்கரியுடன் ஏற்பட்ட வேறுபாடுகளை அடுத்து உதயசூரியன் சின்னம் தொடர்பில் மூண்ட சர்ச்சை காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழரசு கட்சியின் வீடு சின்னத்தில் 2004 ஏப்ரில் பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டியேற்பட்டது. அதைத் தொடர்ந்து வந்த சகல பொதுத்  தேர்தல்களையும் கூட்டமைப்பு  வீடு சின்னத்திலேயே சந்தித்தது.

   தமிழரசு கட்சியே தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் பழமையானதாகவும்  வடக்கிலும் கிழக்கிலும்  ஆதரவைக் கொண்ட  பெரிய தமிழ்க்  கட்சியாகவும் இருந்த காரணத்தாலும் தொடர்ச்சியாக தேர்தல்களில் கூட்டமைப்பு  வீடு சின்னத்தில் போட்டியிட்டு வந்ததாலும் அந்த கட்சிக்கு மீண்டும் ஒரு தன்முனைப்பான  வகிபாகம் கிடைக்கக்கூடியதாக இருந்தது.

  கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் குறிப்பாக ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு ஜனநாயக அரசியலுக்கு வந்த இயக்கங்களின் தலைவர்கள் தமிழரசு கட்சி ஆதிக்கம்  செலுத்தும் போக்குடன் நடந்துகொள்வதாக அதிருப்தியை வெளிப்படுத்தத் தொடங்கினார்கள். கூட்டமைப்பை தனியான  சின்னத்தின் கீழ் தேர்தல் ஆணைக்குழுவில் பதிவுசெய்யவேண்டும் என்று அவர்கள் இடையறாது விடுத்துவந்த வேண்டுகோளை தமிழரசு தலைவர் இரா. சம்பந்தன் (அவரே கூட்டமைப்பின் தலைவராக இருந்தபோதிலும் கூட) ஒருபோதும் கருத்தில் எடுக்கவில்லை.  அதனுடன்  சேர்த்து வேறு முரண்பாடுகளும் நாளடைவில் கூட்டமைப்பில் விரிசலை ஏற்படுத்தின.

  தங்களுடன் இணைந்து தேர்தல்களில் போட்டியிடாவிட்டால் ஏனைய கட்சிகளினால் ஆசனங்களைப் பெறமுடியாது என்ற எண்ணத்தை தமிழரசு தலைவர்கள் வளர்த்துக் கொண்டார்கள் என்றுதான் கூறவேண்டும். கடந்த வருடம் முற்பகுதியில் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த உள்ளூராட்சி தேர்தல்களில் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்டு முடிவுகள் வெளியான பிறகு  கிடைக்கும் ஆசனங்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு  வடக்கு, கிழக்கில் உள்ளுராட்சி சபைகளை அமைப்பதற்கு கூட்டுச் சேரலாம் என்று ஒரு யோசனையையும் சில  தமிழரசு தலைவர்கள் முன்வைத்தனர். மற்றைய அங்கத்துவக் கட்சிகள் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி தனியான கூட்டணியாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்தன. 

 தமிழ் மக்கள் மத்தியில் தங்களுக்கு இருக்கக்கூடிய செல்வாக்கை அறிந்துகொள்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக அந்த உள்ளூராட்சி தேர்தல்களை அந்த  கட்சிகள் மாத்திரமல்ல தமிழரசும் கூட எதிர்பார்த்தது. ஆனால் தேர்தல்கள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டதால் அதற்கு வாய்ப்பு இருக்கவில்லை.

  இன்று தமிழ் அரசியல் சமுதாயம் சிதறிக்கிடக்கிறது. பல கட்சிகள். பல தலைவர்கள். தங்களுக்கு பின்னால் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள்  என்று அவர்களுக்கே தெரியாது. தமிழரசு கட்சியிலும் ஐக்கியம், கட்டுக்கோப்பு என்று எதுவும் இருப்பதாக கூறமுடியாது. அதன் முக்கியஸ்தர்கள் தங்களுக்கென்று உருவாக்கிக்கொண்ட வெவ்வேறு கூடாரங்களின்  ஒரு முகாமாகவே  அது விளங்குகிறது.

   இவ்வாறான ஒரு பின்புலத்திலேயே தமிழரசு கட்சியின் தலைவர் தேர்தல் பற்றிய இன்றைய  பரபரப்பை நோக்கவேண்டியிருக்கிறது.

   சம்பந்தன் அவர்களை அடுத்து 2014 ஆம் ஆண்டில் தமிழரசு கட்சியின் தலைவராக ஏகமனதாக தெரிவான மூத்த அரசியல்வாதி மாவை சேனாதிராஜா கடந்த பத்து வருடங்களாக அந்த பதவியில் இருந்துவருகிறார். அவரின் தலைமையின் கீழ் கட்சியின் மகாநாடு நீண்டகாலமாகக் கூட்டப்படவில்லை. அவரின் இடத்துக்கு ஒருவரை கருத்தொருமிப்பின் அடிப்படையில் தெரிவு செய்யமுடியாத காரணத்தினாலேயே  மகாநாட்டுக்கு முன்னதாக அடுத்த வாரம் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தமிழரசு கட்சியின் வரலாற்றில் இதுவே தலைவர் பதவிக்கான முதன் முதலான தேர்தல். அதில்  பொதுச்சபையின் 275  உறுப்பினர்களே வாக்காளர்கள்.

  பாராளுமன்ற உறுப்பினர்களான மதியாபரணம் ஆபிரஹாம் சுமந்திரனும் சிவஞானம் சிறீதரனும் சீனித்தம்பி யோகேஸ்வரனும் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.

  இவர்களில் சுமந்திரனும் சிறீதரனும் ஒரே காலத்தில் பாராளுமன்றப் பிரவேசம் செய்தவர்கள். ஜனாதிபதி சட்டத்தரணியான சுமந்திரன் 2010 ஏப்ரில் பொதுத்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் மூலமாக பாராளுமன்றம் வந்து பிறகு 2015 ஆகஸ்ட், 2020 ஆகஸ்ட் பொதுத் தேர்தல்களில் கூட்டமைப்பின் வேட்பாளராக யாழப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு மீண்டும் பாராளுமன்றத்துக்கு தெரிவானார். கடந்த 14 வருடங்களாக அவர்  பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.

    கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின்  முன்னாள் அதிபரான சிறீதரன் 2010, 2015, 2020 பொதுத் தேர்தல்களில் யாழ்ப்பாண மாவட்டத்தில்  கூட்டமைப்பின் வேட்பாளராக போட்டியிட்டு தொடர்ச்சியாக  பாராளுமன்றத்துக்கு தெரிவானார். அவருக்கும் 14 வருட பாராளுமன்ற அனுபவம்.

  யோகேஸ்வரன் 2010, 2015 பொதுத்தேர்தல்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில்  கூட்டமைப்பின் வேட்பாளராக போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தெரிவாகி பத்து வருடங்கள் உறுப்பினராக இருந்தார்.

  தமிழரசு கட்சியின் பாரம்பரியத்தின் பிரகாரம் ஏகமனதாக தலைவரை தெரிவு செய்வதற்கு இந்த மூவருக்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்த முடியாவிட்டால் கட்சியின் வேறு ஒரு மூத்த முக்கியஸ்தரை தலைவராக ஏகமனதாக தெரிவுசெய்ய முயற்சிப்பதே கட்சியின் நலன்களுக்கு உகந்தது என்ற யோசனை சில தரப்பினரால் முன்வைக்கப்பட்டது.

  சுமந்திரன் மூன்று வாரகால வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு தமிழரசு கட்சியின் செயற்குழுவின் கூட்டம் கடந்த வாரம்  சம்பந்தன் அவர்களின் கொழும்பு இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  தினத்துக்கு முதல் நாளே நாடு திரும்பினார்.

  தேர்தலில் வெற்றி பெறுபவருடன் மற்றவர் கட்சியின் நலன்களைக் கருத்திற்கொண்டு ஒத்துழைத்துச் செயற்பட உறுதி பூண்டிருப்பதாக சுமந்திரனும் சிறீதரனும் முன்கூட்டியே அறிவித்திருந்தார்கள். கட்சியைப்  பிளவுபடுத்தக்கூடிய எந்த நடவடிக்கையிலும் இறங்கப்போவதில்லை என்று அவர்கள் கூறினார்கள்.

  கட்சி உறுப்பினர்களின் சில கூட்டங்களில் ஏற்கெனவே உரையாற்றிய சுமந்திரன் கிழக்கில் காரைதீவில்   கூட்டமொன்றில் வைத்து தனக்கு இவ்வருடம் 60  வயதாகிறது என்றும் 65 வயதானதும் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிடப் போவதாகவும் கூறினார்.

   அதேவேளை கிழக்கில் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் தனக்கு ஆதரவுதேடச் சென்ற சீறீதரன் ஆங்கில அறிவும் சட்ட அறிவும் மாத்திரம்  தலைவராகுவதற்கு போதுமான தகுதிகள் அல்ல, அந்த இரு துறைகளிலும் புலமை இல்லாத பலர் சிறந்த அரசியல் தலைவர்களாக திகழ்ந்து மக்களுக்கு பெருஞ்சேவை செய்ததை வரலாற்றில் கண்டிருக்கிறோம்  என்று செய்தியாளர்கள் மகாநாட்டில் கூறினார். காமராஜர்,  கருணாநிதி,எம்.ஜி.ஆர். பிரேமதாச என்று உதாரணங்களையும் அடுக்கினார்.

  ஆங்கில அறிவும் சட்ட அறிவும் கொண்ட சேர்.பொன் இராமநாதன், ஜீ.ஜீ. பொன்னம்பலம், தந்தை செல்வா, அமிர்தலிங்கம் ஆகியோரின் காலத்தில் தமிழ் மக்களுக்கு விடுதலை கிடைக்கவில்லையே என்றும் அவர் கூறினார்.

 அதற்கு முன்னதாக, யாழ்ப்பாணத்தில் தனியார் தொலைக்காட்சி சேவையொன்றுக்கு பேட்டியொன்றை அளித்த  வட மாகாணத்தின்  முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய யாழ்ப்பாண மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் சுமந்திரனையும் விட தமிழரசு கட்சியின் தலைவராகுவதற்கு சிறீதரன் தகுதி வாய்ந்தவர் என்றும் அவருக்கு ஆங்கில அறிவு குறைவாக இருந்தாலும் ஆற்றல்வாய்ந்த  மொழி பெயர்ப்பாளர்களை வைத்துக்கொண்டு சிறப்பாக செயற்பட முடியும் என்றும் கூறினார். 

  சுமந்திரன் சட்டக்கல்லூரியில் நீதியரசரின் மாணவன். தனது மாணவன்  தமிழரசின் தலைவராக வருவதை தான்  விரும்பவில்லை என்பதை வெளிப்படையாகவே அவர் காட்டிக்கொண்டார். 

 அதுபோக, உண்மையில் சிறீதரன் ஆங்கில, சட்ட அறிவு குறித்து அவ்வாறு  கருத்தை வெளியிட்டிருக்கவேண்டிய தேவையில்லை. அவருக்கு ஆங்கில அறிவு குறைவு என்பதால் தமிழரசு கட்சியின் தலைவராக வரமுடியாது என்று யாரும் பகிரங்கமாக கூறியதில்லை. அவர் விரும்பினால் இப்போது கூட சட்டக்கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு எந்த தடையும் கிடையாது.

 இது இவ்வாறிருக்க, நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த செவ்வாய்கிழமை பாராளுமன்றம் வந்த சம்பந்தன் அவர்களை சிறீதரன் சந்தித்துப் பேசினார். திருகோணமலை தமிழரசு கட்சிக்கிளை உறுப்பினர்கள் தெரிவில் தனது ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டிய சம்பந்தன் அந்த குறைபாடு சீர்செய்யப் படும்வரை கட்சியின் மகாநாட்டை ஒத்தி வைப்பதற்கு முயற்சிக்கிறார் என்ற ஒரு சந்தேகம் நிலவிய பின்னணியில் அவர் மகாநாடு திட்டமிட்டபடி நடைபெறவேண்டும் என்றும் தலைவர் தெரிவில் கட்சியின் பாரம்பரியம் பாதுகாக்கப்படவேண்டும் என்றும் சிறிதரனிடம் கூறினார்.

    பொதுச்சபையில் கருத்தொருமிப்புடன் தலைவர்  தெரிவாகக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும் அரசியல் வலிமை சம்பந்தனிடம் தற்போது இல்லை.

  மறுநாள் புதன்கிழமை அவரின் வாசஸ்தலத்தில் கட்சியின் செயற்குழுக் கூட்டத்திலும் ஏகமனதாக தலைவரைத் தெரிவு செய்வதற்கு மூன்று வேட்பாளர்களையும் இணங்க வைக்க முடியவில்லை. இறுதியில் சுமந்திரன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மூவரும் கலந்துபேசி ஒரு முடிவுக்கு வருவதற்கு ஒரு நாள் அவகாசம் வழங்கப்பட்டது.

   ஆனால், மூவரும் மறுநாள் பாராளுமன்றத்துக்கு அண்மையாக மாதிவெலவில் சிறீதரனின் உத்தியோகபூர்வ இல்லத்தில்  சந்தித்தபோதிலும் இணக்கப்பாட்டுக்கு வரமுடியவில்லை. அதனால் தலைவரைத் தெரிவுசெய்வதற்கு தேர்தல் நிச்சயம் என்றாகிவிட்டது.

 சிறீதரனை ஆதரிக்கப்போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்த யோகேஸ்வரன் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப் போவதில்லை என்றும் பொதுச்சபையில் வைத்து  தனது ஆதரவாளர்களிடம்  சிறீதரனுக்கு வாக்களிக்குமாறு  கேட்கப்போவதாகவும் யோகேஸ்வரன் கூறியதாக இந்த கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருந்த தருணத்தில் அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.

   எதிர்காலப் போக்கு :

  இந்த இருவரில் எவர் தமிழரசு கட்சியின் தலைவராக வந்தாலும், தற்போதைய உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் சூழ்நிலைகளில் தமிழர் அரசியலை வழிநடத்தும் கூட்டுப் பொறுப்புக்கு எவ்வாறு பங்களிப்பை வழங்கப்போகிறார்கள்  என்பதே முக்கியமான கேள்வி.

  தமிழர் அரசியலின் செல்நெறியைத் தீர்மானிப்பதில் தமிழரசு கட்சிக்கே தனியான  பங்கு இருப்பதாக கூறமுடியாவிட்டாலும், அதற்கு மற்றைய தமிழ்க் கட்சிகளை விடவும் கூடுதலான பாத்திரம் இருக்கிறது. உள்நாட்டு்ப் போரின் முடிவுக்கு பின்னரான கடந்த 15 வருட காலத்திலும் அந்த பாத்திரத்தை எந்தளவுக்கு பயனுறுதியுடையதாக அந்த கட்சி கையாண்டிருக்கிறது என்பதை இச்சந்தர்ப்பத்தில் ஒரு தடவை நாம் திரும்பிப் பார்க்கவேண்டும்.

  போரின் முடிவுக்குப் பிறகு வடக்கு,கிழக்கு தமிழர்கள் மத்தியில் கட்டுறுதியான அரசியல் சமுதாயம் ஒன்று இருக்காத நிலையில் அவர்களுக்கு தலைமை தாங்கும் பாத்திரம் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் தானாகவே வந்துசேர்ந்தது. கூட்டமைப்பின் பிரதான அங்கத்துவக் கட்சி என்ற முறையில் அதில் கூடுதல் பொறுப்பு தமிழரசு கட்சிக்கும் அதன் அன்றைய தலைவர் சம்பந்தனுக்குமே  இருந்தது.

 உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலைவரங்களுக்கு ஏற்றமுறையில்  தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்கான வரலாற்று முக்கியத்துவ பாத்திரம் அவர்களுக்குரியதாகவே இருந்தது.

  ஆனால் அந்தப் பாத்திரத்தை அவர்கள் சரியாகக் கையாளவில்லை. இலங்கை தமிழர்கள் அவர்களது அரசியல் வரலாற்றில் முன்னென்றும் இல்லாத வகையில்  ஒரு இக்கட்டான நிலையில் இருக்கிறார்கள்.

  சர்வதேச சமூகத்தின் தலையீடுகளினால்  கூட இலங்கை அரசாங்கத்தை வழிக்கு கொண்டுவர முடியவில்லை. தமிழ் அரசியல்வாதிகளும் சில  அவதானிகளும் புவிசார் அரசியல் நிலைவரங்கள் தமிழர்களுக்கு  வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தபோதிலும் நிலைமை தலைகீழாகவே மாறியது. 

  1987 ஜூலை சமாதான உடன்படிக்கையின் மூலமாக மாகாணசபைகள் அறிமுகம் செய்யப்படுவதற்கு உதவிய இந்தியாவினால் கூட அந்த நோக்கத்துக்காக 36 வருடங்களுக்கு  முன்னர் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை இலங்கை அரசாங்கங்கள் நடைமுறைப்படுத்துவதை இன்றுவரை உறுதிசெய்யமுடியவில்லை. 

   உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்கான சாத்தியங்களைக் காணவில்லை. ஆனால் தமிழ் அரசியல்வாதிகள் தொடர்ந்தும் சர்வதேச சமூகத்தையே நம்பிக்கொண்டிருக்கிறார்கள். 

  தென்னிலங்கை சிங்கள அரசியல் சமுதாயத்தை பொறுத்தவரை இனப்பிரச்சினைக்கு சிறுபான்மை இனத்தவர்களின் நியாயபூர்வமான குறைந்தபட்ச  அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய ஒரு அரசியல் தீர்வைக் கூட  காணவேண்டிய தேவை இருப்பதாக கருதுவதாக இல்லை.

  தீர்வைக் காண்பதற்கு தென்னிலங்கையை நிர்ப்பந்திக்கக்கூடிய நெருக்குதலைக் கொடுப்பதற்கான வழிமுறை எதுவும் தமிழ் அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவர்களை நம்பி போராட்டங்களில் இறங்குவதற்கும் தமிழ் மக்கள் தயாரில்லை. பல தமிழ்த்  தலைவர்கள் கடந்த காலத்தில் தமிழர்களை வாழவைப்பதிலேயே நாட்டம் காட்டுகிறார்கள். அவர்கள் ஆயுதமேந்தப் போவதில்லை என்றபோதிலும் கடந்த கால ஆயுதப்போராட்டம் குறித்து பேசிக்கொண்டேயிருக்கிறார்கள். 

   புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகத்தில் உள்ள தீவிரவாத நிலைப்பாடுகளைக் கொண்ட குழுக்களின் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஒத்துழைப்பவர்களாகவே பல தமிழ் தலைவர்கள் நடந்துகொள்கிறார்கள். வெளிநாடுகளினாலும் கையாளப்படக்கூடியவர்களாக அவர்கள் இருப்பது ஒன்றும் இரகசியமானதல்ல.

 நடைமுறை யதார்த்தங்களை உணராதவர்களாக தமிழ்த்தேசிய அரசியலை வெறுமனே உணர்ச்சிமயமான கற்பிதங்களுடன் பேசிக்கொண்டிருக்கும் அவர்கள்  கடந்தகால போராட்டங்களை காவியம் போன்று புகழ்பாடுவதில் திருப்தி காண்கிறார்கள்.

  இவற்றை விடுத்து கடந்தகால கசப்பான அனுபவங்களில் இருந்து  பெறக்கூடியதாக இருக்கும் படிப்பினைகளை அடிப்படையாகக் கொண்டு நடைமுறைச் சாத்தியமான பாதையை வகுக்கக்கூடிய ஆற்றல்களை இதுவரையில் வெளிப்படுத்த முடியாதவர்களாக தமிழ் அரசியல்வாதிகள் விளங்குகிறார்கள். ஒரு கட்சியின் நிலைப்பாட்டுக்கு மற்றைய கட்சி எதிர்வினையைக் காட்டுவதிலேயே காலம் கடந்துகொண்டிருக்கிறது.

  இவை தமிழரசு கட்சியின் புதிய தலைவர் சிந்தித்துப் பார்க்கவேண்டிய முக்கியமான விடயங்கள். பழைய தமிழரசின் அரசியலுக்கு புதிய தலைவர் தேவையில்லை.

  இறுதியாக தமிழரசு கட்சியின் தலைவர் தேர்தலில் யார் வெற்றிபெறவேண்டும்  என்பதில் ஏனைய தமிழ்க்கட்சிகள் உன்னிப்பான அக்கறையுடன் இருப்பது சுவாரஸ்யமான ஒரு  அம்சமாகும். அதற்கான காரணத்தை புரிந்துகொள்வதில்  தமிழர் அரசியலை உன்னிப்பாக அவதானித்துவரும் எவருக்கு சிரமம் இல்லை.

 ( ஈழநாடு )

https://arangamnews.com/?p=10364

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாட்ஸப்பில் கண்டது…..

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக சுமந்திரனும்  செயலாளராக சிறியதரனும் பொறுப்பேற்று செயற்பட்டால்  அதிக பட்சமாக 4-6 MPக்களை வடங்கு- கிழக்கில் பெற்று அந்த கட்சி இலக்கம் 1 தமிழ் அரசியல் கட்சியாக தொடர இயலும்.

சிறிதரன் தலைவரானால் அந்த கட்சி கஜேந்திகளின் கட்சி போன்று யாழ் தேர்தல் மாவட்டத்துக்குள் மட்டுப்படுத்தப்பட்டு தேசிய பட்டியல் உட்பட 1-2MPக்களை மட்டுமே பெறும் கட்சியாக சுருங்கி விடும். மட்டகளபபில்  சாணக்கியன் தனிப்பட்ட ரீதியான வெற்றியை பெறலாம். இதன் மூலம்  இந்த கட்சி  தேசிய பட்டியல் உட்பட 4 MPக்களை பெற்றுக்கொள்ளலாம்

யோகேஸ்வரன் தலைவரானால் அந்த கட்சி அழிந்து விடும். வடக்கில் சிறிதரனும்   கிழக்கில் சாணக்கியனும் தனிப்பட்ட செல்வாக்கில் வெற்றி பெறுவார்கள். 

அந்த கட்சி தன்னை காப்பாற்றி தேர்தல் அரசியலில் தொடர்ந்து வெற்றியை பெற வேண்டுமானால்

  • தலைவர்- சுமந்திரன்
  • செயலாளர்- சிறிதரன்
  • பொருளாளர்- யோகேஸ்வரன்
  • இளைஞர் அணி தலைவர் - சாணக்கியன் 

என்று நியமித்துக்கொண்டு பயணிப்பதே சிறந்த ஏற்பாடாக இருக்கும்.

இந்த ஏற்பாட்டை ஈழதமிழ் அரசியலை தீர்மானிக்கும் யாழ் மேட்டுகுடி +கற்றசமூகம், மன்னார் பவர் சென்றர் ( அமெரிக்கா+இந்தியா)  இலங்கை அரசாங்கம், கொழும்பில் உள்ள வெளிநாட்டு ராஜதந்திர வட்டாரம் போன்றவை ஏற்றுக்கொள்ளும். அந்த கட்சியும் தனது இருப்பை  தக்க வைத்துக்கொள்ள இயலும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள உறுப்பினர்கள் அடுத்த தலைவராக யாரை விரும்புகின்றார்கள் என்பதை திரியின் மேலே உள்ள கருத்துக்கணிப்பின் மூலம் தெரிவிக்கலாம்😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

தமிழ்த் தேசிய அரசியலானது தமிழர்களுடைய  அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காகவேயன்றி, ஒரு அரசியல் கட்சியின், தனிப்பட்ட அரசியல்வாதிகளின் நலன் பேணுவதற்கானல்ல என்பதுடன் அவ்வாறானதாக இருக்கக்கூடாது  என்பது அடிப்படை.

IMG-5703.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தரும் இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரதி said:

ஒருத்தரும் இல்லை 

அந்த‌ வ‌ட்டினை தான் நானும் தெரிவு செய்த‌ நான்..............எல்லாம் க‌ள்ள‌க் கூட்ட‌ம்............
 
  • கருத்துக்கள உறவுகள்

வேறு ஒருவர் என்பதையே நான் தெரிவு செய்தேன். கடந்த பொதுத் தேர்தலில் சுமத்திரனும் சிறிதரனும் கூட்டுச் சேர்ந்து ஆடிய ஆட்டம் கொஞச நஞ்சமிலை;லை. சிதிதரனின் ஆதரவாளர்களின் வாக்கினாலேய சுமத்திரன் வென்றதும் மாவை தோற்றதும் நடந்தது. இரண்டு பேரும் சேர்ந்து கட்சித் தலைமைக்கு ஆப்படித்தார்கள்.  தேசியப்பட்டியல் விடயத்தில் கூட 2 பேரும் கட்சித்தலைவர் மாலவக்குத் தெரியாமல் சம்பந்தரைச் சந்தித்து ஒருதலைப்பட்சமாக தெரிவு செய்தார்கள். அம்பாறைக்கு பிரதிநிதித்துவம் தேவை என்பது நியாயமானதுதான். அதைக் கட்சியைக் கூட்டி ஏகமனதாக அறிவித்திருக்க வேண்டும். பின்னர் சுமத்திரன் சிறதரனைக் கழட்டி விட்டு சாணக்கியனோடு ஒட்டத் தொடங்கினார். இதுவே இவர்களுக்கான போட்டியை உருவாக்கியது.தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை சிதைத்தலில் சுமத்திரனுக்கு பெரும்பங்கு உண்டு..இப்பொழுது சுமத்திரன் சிறிதரன் என்ற நிலை மட்டுமே இருப்பதால் இந்தநிலையில் சிறிதரன் தலைவராக வருவதையே விரும்புகிறேன். சிறிதரன் தமிழத்தேசிய அரசியலை விட்டு நகர முடியாது. ஆனால் சுமத்திரனுக்கு தமித்தேசியம் கருவேப்பிலை மட்டுமே. அவருடைய சகா சாணக்கியன் முன்னாள் மகிநதவின் கட்சியில் தேர்தலில் நின்றவர். அவர்கள் இருவருக்கும் தமிழ்த்தேசியம் என்றால் என்னவென்றே தெரியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுவாரஸ்யமடையும் தேர்தல் களம்! சுமந்திரன் ஆதரவாளர்களின் முடிவில் திடீர் மாற்றம்

10-14.jpg

தமிழ்த்தேசியத்தில் உறுதிக்கொண்ட தலைவர் ஒருவரை நியமிப்பதில் சுமந்திரன் ஆதரவாளர்களின் முடிவில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை பிரதேசத்தில் இருக்கக்கூடிய இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளை தலைவர் தவராசா சர்ஜீன் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்தேசியத்தின் பால் உள்ள பற்றுறுதியை கொண்டு செயற்படும் ஒருவரை நியமிப்பதில் உறுப்பினர்கள் தீவிரமாக உள்ளனர்.

தமிழ் தேசிய பற்றுள்ள தலைவர்

அந்த வகையில், வாக்கெடுப்பிற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களை பொறுத்தமட்டில் தமிழ்தேசியத்தின் பால் உள்ள பற்றுறுதியை கொண்டு செயற்படும் சிறீதரன் அவர்களையே தெரிவு செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர்.

கட்சி மீதான பல திட்டங்களை மையப்படுத்தியே தற்போது வாக்குகளை வழங்க தீர்மானித்துள்ளதுடன், சிறீதரன் அவர்களே சிறந்தவர் எனவும் உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர். அதிபர் சட்டத்தரணியாக சட்டத்துறையில் சிறந்து விளங்குபவர் சுமந்திரன்.

ஆனால் தற்போது அவர் தலைமை பதவிக்கு வருகின்றார் என்ற போது பல முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. சர்வதேச சார்ந்த விடயங்களில் சுமந்திரன் அவர்கள் பல விடயங்களை கையாண்டு வந்துள்ளதுடன், அவருக்கு கட்சியில் உள்ள முக்கிய பதவிகளை வழங்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

https://akkinikkunchu.com/?p=266078

  • கருத்துக்கள உறவுகள்
On 17/1/2024 at 16:37, கிருபன் said:

யாழ்கள உறுப்பினர்கள் அடுத்த தலைவராக யாரை விரும்புகின்றார்கள் என்பதை திரியின் மேலே உள்ள கருத்துக்கணிப்பின் மூலம் தெரிவிக்கலாம்😁

கிருபண்ணை உங்களது கருத்துக்கணிப்பில் அம்பிகா அன்றி சேர்க்கப்படாமையை வன்மையாக கண்டிக்கிறேன் 
என்னுடைய தெரிவு ஒன் அன்ட் ஒன்லி அம்பிகா அன்றி  

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, அக்னியஷ்த்ரா said:

கிருபண்ணை உங்களது கருத்துக்கணிப்பில் அம்பிகா அன்றி சேர்க்கப்படாமையை வன்மையாக கண்டிக்கிறேன் 
என்னுடைய தெரிவு ஒன் அன்ட் ஒன்லி அம்பிகா அன்றி  

அன்றி என்று சொல்வதை நான்  வன்மையாகக் கண்டிக்கிறேன். 😁

  • கருத்துக்கள உறவுகள்
On 17/1/2024 at 03:37, கிருபன் said:

யாழ்கள உறுப்பினர்கள் அடுத்த தலைவராக யாரை விரும்புகின்றார்கள் என்பதை திரியின் மேலே உள்ள கருத்துக்கணிப்பின் மூலம் தெரிவிக்கலாம்😁

வேறு ஒருவர்

எனது தெரிவு.

திருமதி ரவிராஜ் அவர்களின் வெற்றியைப் பறித்ததில் இருந்து இந்த இருவர் மீதும் வெறுப்பாக உள்ளது.

ஆனாலும் இப்போது சிறிதரனுக்கு ஆதரவு பெருகி வருவதால் 

கடைசி நேரத்தில் சுமந்திரன் போட்டியிலிருந்து விலகிக் கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Kapithan said:

அன்றி என்று சொல்வதை நான்  வன்மையாகக் கண்டிக்கிறேன். 😁

அது சொல்லுபவரின். வயதை பெறுத்து. இருக்கிறது   நீங்கள் அன்றி என்று சொல்ல கூடாது தான் 🤣😂

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kandiah57 said:

அது சொல்லுபவரின். வயதை பெறுத்து. இருக்கிறது   நீங்கள் அன்றி என்று சொல்ல கூடாது தான் 🤣😂

மகள் என்று சொல்லலாம் என்கிறீர்கள்? 🤣

நான் இன்னும் வயசுக்கு வரவில்லை 😁

I mean நான்  மகள் என்று கூப்பிடும்  அந்த வயசுக்கு வரவில்லை. நீங்கள் கூப்பிடலாம் 🤣

  • கருத்துக்கள உறவுகள்

ரம்பா வை. தெரிவு செய்தால் என்ன ?? 

இளம் தலைவர் 

முதல் முறையாக பெண் தலைவர்  

கோடீஸ்வரர் கூட 

கொள்ளை அடிக்க மாட்டார்கள் 

அவர் வைக்கும் தீர்வை சிங்களத்தலைவர்கள். எற்ப்பார்கள்  

சிலநேரம்  மேலதிகமாக அதிகாரங்களை தரலாம்

எதற்கும் நன்கு யோசித்து முடிவு செய்யவும் 🤣🤣

3 minutes ago, Kapithan said:

நான் இன்னும் வயசுக்கு வரவில்லை 😁

உங்கள் எழுத்தை பார்க்க தெரிகிறது    🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

ரம்பா வை. தெரிவு செய்தால் என்ன ?? 

இளம் தலைவர் 

முதல் முறையாக பெண் தலைவர்  

கோடீஸ்வரர் கூட 

கொள்ளை அடிக்க மாட்டார்கள் 

அவர் வைக்கும் தீர்வை சிங்களத்தலைவர்கள். எற்ப்பார்கள்  

சிலநேரம்  மேலதிகமாக அதிகாரங்களை தரலாம்

எதற்கும் நன்கு யோசித்து முடிவு செய்யவும் 🤣🤣

உங்கள் எழுத்தை பார்க்க தெரிகிறது    🤣

நல்ல யோசனை. 

இதை அக்னியாத்ராவிடம் கூறுங்கள் அவர்தான் அம்பிகா ராதா சகோதரிகளின் அபிமானி. 

🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, அக்னியஷ்த்ரா said:

கிருபண்ணை உங்களது கருத்துக்கணிப்பில் அம்பிகா அன்றி சேர்க்கப்படாமையை வன்மையாக கண்டிக்கிறேன் 
என்னுடைய தெரிவு ஒன் அன்ட் ஒன்லி அம்பிகா அன்றி  

அம்பிகா அக்கா தமிழரசுக் கட்சியின் உறுப்பினராக இருக்கின்றாரா என்று தெரியவில்லை! அவர் மனிதாபிமானப் பணிகளில் மிகவும் தீவிரமாக ஈடுபடுகின்றார். இப்போது சிறிலங்காவின் யுக்திய நடவடிக்கைக்கு எதிராக தினமும் X (ருவிற்றரில்) பொங்கிக்கொண்டு இருக்கின்றார்.!

அம்பிகா அக்கா தமிழரசுக் கட்சியின் தலைவராக வரும்போது நானும் வேலையில் இருந்து நீண்ட விடுப்பு எடுத்துக்கொண்டு தமிழர் பகுதிகளில் போஸ்ரர் ஒட்டுகின்ற வேலையாவது செய்வேன்😃

  • கருத்துக்கள உறவுகள்
On 18/1/2024 at 15:22, புலவர் said:

வேறு ஒருவர் என்பதையே நான் தெரிவு செய்தேன். கடந்த பொதுத் தேர்தலில் சுமத்திரனும் சிறிதரனும் கூட்டுச் சேர்ந்து ஆடிய ஆட்டம் கொஞச நஞ்சமிலை;லை. சிதிதரனின் ஆதரவாளர்களின் வாக்கினாலேய சுமத்திரன் வென்றதும் மாவை தோற்றதும் நடந்தது. இரண்டு பேரும் சேர்ந்து கட்சித் தலைமைக்கு ஆப்படித்தார்கள்.  தேசியப்பட்டியல் விடயத்தில் கூட 2 பேரும் கட்சித்தலைவர் மாலவக்குத் தெரியாமல் சம்பந்தரைச் சந்தித்து ஒருதலைப்பட்சமாக தெரிவு செய்தார்கள். அம்பாறைக்கு பிரதிநிதித்துவம் தேவை என்பது நியாயமானதுதான். அதைக் கட்சியைக் கூட்டி ஏகமனதாக அறிவித்திருக்க வேண்டும். பின்னர் சுமத்திரன் சிறதரனைக் கழட்டி விட்டு சாணக்கியனோடு ஒட்டத் தொடங்கினார். இதுவே இவர்களுக்கான போட்டியை உருவாக்கியது.தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை சிதைத்தலில் சுமத்திரனுக்கு பெரும்பங்கு உண்டு..இப்பொழுது சுமத்திரன் சிறிதரன் என்ற நிலை மட்டுமே இருப்பதால் இந்தநிலையில் சிறிதரன் தலைவராக வருவதையே விரும்புகிறேன். சிறிதரன் தமிழத்தேசிய அரசியலை விட்டு நகர முடியாது. ஆனால் சுமத்திரனுக்கு தமித்தேசியம் கருவேப்பிலை மட்டுமே. அவருடைய சகா சாணக்கியன் முன்னாள் மகிநதவின் கட்சியில் தேர்தலில் நின்றவர். அவர்கள் இருவருக்கும் தமிழ்த்தேசியம் என்றால் என்னவென்றே தெரியாது.

ஸ்ரீதரன் வெற்றி பெறலாம் என்று ஒரு தோற்றம் உண்டு, அதை மறுப்பதற்கு இல்லை.

ஆனால் சுமந்திரன் தமிழர் அரசியலை அதன் அதி தீவிரத்தன்மையை அகற்றி மிதவாத அரசியலை முன்னெடுப்பதே இலங்கைத் தீவில் தமிழர்கள் இன்னும் சில தசாப்தங்களுக்கு ஓரளவுக்கேனும் நிம்மதியாக வாழ உதவும் என்னும் கருத்து உள்ளவர் என்பது ஏனது கணிப்பு

ஸ்ரீதரனும் சுமந்திரனும் இணைத்தே செயல்படுகின்றார்கள் என்றே கருத்துகின்றேன். யோகேஸ்வரன், விக்கி, உதயன் பேப்பர் சரவணபவன் போன்ற இந்திய எடுபிடிகளோ அல்லது அருந்தவப்பாலன், ஆனந்தி, திருமதி ரவீராஜ் போன்ற தீவிர தமிழ் தேசியர்களோ இலங்கை தமிழர் அரசியலில் இருந்து அகற்றப்பட சுமத்திரனும் ஸ்ரீதரனும் இணைந்தே செயல்பட்டனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக்கட்சியின் தலைமைக்காக போட்டியிடும் மூன்று வேட்பாளர்களுக்கும் ஒரு திறந்த மடல்

Vhg ஜனவரி 20, 2024
24-65ab0e71da0d0-md.webp.webp

தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிடும் மூன்று வேட்பாளர்களுக்கும் ஒரு திறந்த கடிதம் எனும் தலைப்பில் சமூக செயற்பாட்டாளர் ம.செல்வின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையினைத் தெரிவு செய்யும் தேர்தல் நாளை ஞாயிற்றுக்கிழமை (21-01-2024) திருகோணமலையில் இடம்பெறவுள்ளது.

இந்தநிலையில் குறித்த அறிக்கையானது  வெளியிடப்பட்டுள்ளது.

அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையினைத் தெரிவு செய்யும் போட்டியில் குதித்துள்ள மதிப்பிற்கும் அன்புக்குமுரிய மூவருக்கும் அன்புடனும் நட்பார்ந்த உரிமையுடனும் நெருக்கடிமிகு தருணத்தில் தமிழர் தேசத்திற்கான கடமையாகவும் எண்ணி இந்த திறந்த கடிதத்தை வரைகின்றேன்.

இதனை ஒரு ஆலோசனையாகவும் வேண்டுகோளாகவும் தேசமக்கள் மனநிலையாகவும் நீங்கள் கொள்வீர்கள் என நானும் என்னையொத்த கருத்துடையவர்களும் முழுமையாக நம்புகின்றோம்.

ஈழத்தமிழரின் இறைமையுடன் கூடிய அரசியல் விடுதலைக்கான பயணத்தை கால்கோளிட்டு தொடங்கியது தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக்கட்சி என்ற இயக்கம் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்கமுடியாது. 

இலங்கையின் அரசியல் செயன்முறைக்குள் தன்னை முழுமையாகவும் சனநாயக வழியிலும் அர்ப்பணிப்பதற்காக இலங்கையின் தேர்தல் சட்டங்களுக்கமைய ஒரு தேர்தல் கட்சியாகவும் பதிந்துகொண்ட தமிழரசுக்கட்சி தனது தேர்தல் அபிலாசைகளுக்கும் அப்பால் ஈழத்தமிழர்களின் அரசியல் வேட்கைகளை வென்றெடுக்க பல்வேறு வழிமுறைகளையும் காலத்திற்கு காலம் முன்னெடுத்து அதனூடாக பல சாதகமான விளைவுகளை தமிழ்மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது.

இங்கு நான் தமிழரசுக்கட்சியின் வரலாற்றினையோ ஈழத்தமிழ்மக்களின் போராட்டங்களை வீரியம் மிக்கதாக மாற்றிய பல்வேறு தேசிய விடுதலை அமைப்புக்களின் வரலாற்றையோ பேச முனையவில்லை.

ஈழத்தமிழரின் தேசிய விடுதலைப்போராட்டத்தின் வரலாற்றுத் தொடர்ச்சிக்கு ஜனநாயக பண்புகளும் அறிவும் புலமையும் மக்கள் மீதான பற்றும் கொண்ட தலைமைத்துவங்களால் தமிழரசுக்கட்சி ஆற்றிய பங்கும் தொடர்ச்சியும் இருப்பும் என்றும் முதன்மையானதாக அமைகின்றது. 

இத்தகைய சூழ்நிலையில் மிக நீண்டகால தேக்கநிலைக்குப்பின் தமிழரசுக்கட்சி தனக்குரிய தலைமைத்துவத்தினை தேடுவதும் அதனை தொலைநோக்குடன் கையாளுவதும் மிகவும் முக்கியமாக உள்ளது.

இதனை வெறுமனே ஒரு அரசியற் கட்சியின் உள்ளகப் பிரச்சனையாகவோ தாயகத்திலும் புலத்திலும் வாழும் சுமார் இருபத்தைந்து இலட்சம் மக்களில் வெறுமனே ஒரு நான்காயிரம் பேரினை அங்கத்தவர்களைக் கொண்ட ஒரு சிறு அரசியல் குழுவினரின் தனியுரிமையான விடயமாகவோ கருதி ஈழத்தமிழ்ச்சமூகத்தின் அரசியல் விடுதலையிலும் பொருண்மிய மேம்பாட்டிலும் பண்பாட்டுச்செழுமையிலும் இச்சமூகத்தை பூகோளத்தின் முதன்மைச் சமூகங்களில் ஒன்றாக நிலைநிறுத்த பேரவாக்கொண்ட எவரும் ஒதுங்கி நின்றுவிடமுடியாது என்பது எனது உறுதியான கருத்து. 

எனினும் இந்த நெருக்கடியான நிலைமையில் யாரையும் விமர்சிப்பதற்குரிய தருணமாக இதனை மாற்றுவது மிகவும் அபத்தமானதாகவே இருக்கும்.

தற்போது உங்கள் மூவருக்கிடையில் உக்கிரமடைந்துள்ள போட்டியும் அதன்காரணங்களினால் முனைப்படைந்துள்ள பிரச்சார முயற்சிகளும் கருத்துப்பரவல்களும் மிகவும் ஆபத்தான கீழ்நிலை நோக்கி கட்சியினை இழுத்துச் செல்வதனை தெளிவாக என்னால் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

இது உங்களுடைய தலைமைத்துவத்தை வேண்டிநிற்கும் ஆதரவுச்சிந்தனை கொண்ட கட்சியின் அங்கத்தவர்களிடையே நிரந்தரமான பிளவினையும் கூர்மையான முரண்பாடுகளையும் உருவாக்கி வருகின்றது என்பதனை நீங்களும் கூட முழுமையாக அறிவீர்கள். 

ஆக்கபூர்வமான முயற்சி

அத்துடன் இத்தகைய நிலைமையில் கட்டற்ற சுதந்திரத்துடனும் பொறுப்புக்கூறல் கடப்பாடுகள் ஏதுமற்ற இலத்திரனியல் சமூக ஊடகங்களில் நிரம்பியுள்ள வக்கிரமான சிந்தனைகொண்டவர்களுக்கும் ஈழத்தமிழரின் அரசியல் வேட்கையினை குறைத்து மதிப்பிடுபவர்களுக்கும் உங்களுக்கிடையிலான போட்டியின் உக்கிரம் 'வெறும் வாய்க்கு அவலாக' மாறியுள்ளது. இவற்றினால் ஏற்படும் சேதத்தைக் கட்டுப்படுத்துவதற்கு ஈழத்தமிழ் சமூகம் தனது சக்தியை பெருமளவில் விரயமாக்கவேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ளது. 

ஈழத்தமிழர்களாகிய நாங்கள் அனைவரும் அகத்திலும் புலத்திலும் இந்த நெருக்கடியை மிகவும் சாதுரியமாக கடந்து செல்லவேண்டியுள்ளது.

அதனை ஈழத்தமிழர்கள் எவ்வாறு கடந்து செல்லப் போகின்றார்கள் என்பதனை எம்மவர்கள் மட்டுமல்ல எம்மில் அக்கறை கொண்ட சர்வதேச சமூகமும் எம்மைப் பலவீனப்படுத்தி அழிக்கநினைக்கும் சக்திகளும் துல்லியமாக அவதானித்துக்கொண்டிருக்கின்றன. 

இத்தகைய நிலைமையில் தான் நான் ஒரு திறந்த கடிதம் ஒன்றை தங்களுக்கு வரைந்து பின்வரும் விடயங்களில் தங்களது ஆக்கபூர்வமான முயற்சியை கோருகின்றேன்.

நான் இக்கடிதத்தில் உங்கள் மூவரின் பெயரினை குறிப்பிடும்போது இருக்கக்கூடிய ஒழுங்கும் கூட சிலவேளையில் தவறான ஊகத்திற்கு வித்திடலாம் என்ற அச்சத்தின் காரணமாகவே போட்டியிடும் மூவர் என உங்களை விளித்துள்ளேன்.

1. இந்த வருடத்திலும் (2024) அடுத்த வருடம் 2025 இலும் கூட சிறீலங்காவின் அரசியலில் தமிழ்மக்களின் அரசியல் கோரிக்கைகளுக்கு தீர்வுதரக்கூடிய எந்தவொரு அரசியல் முனைப்பும் உருவாகப்போவதில்லை என்பது கண்கூடு.

2. இத்தகைய தேக்கநிலை அடுத்த ஒரு தசாப்தத்திற்காவது நிச்சயமாக தொடரும் வாய்ப்புகள் இருப்பதாக சர்வதேச அவதானிப்புகள் தொடர்ச்சியாக பதிவுசெய்து வருகின்றன. அவர்களது கவனம் முழுவதும் சிறீலங்காவினை பொருளாதர நெருக்கடிக்குள்ளிருந்து மீட்பது தொடர்டபாகவே அமைந்துள்ளது. 

3. இந்தியாவும் கூட புதிதாக எழுந்துள்ள மாலைதீவு - சீன கூட்டுறவின் தாக்கமும் படிப்பினைகளினதும் காரணமாக சிறீலங்காவினையும் மிகவும் அவதானமாக கையாளும் மென்போக்கு இராசதந்திர முயற்சிகளில் தான் தன் கவனத்தை செலுத்தும். அத்துடன் இவ்வாண்டு (2024) இந்தியாவின் தேசிய அரசியக்கான தேர்தல் ஆண்டாகவும் உள்ளது.

4. இத்தகைய தேக்க நிலை சிறீலங்காவிலும் இந்தியாவிலும் சர்வதேசத்திலும் தொடர்நதாலும் தமிழின அழிப்புக்கான கட்டமைக்கப்பட்ட முயற்சிகள் எவ்வித தளர்வுமில்லாமல் மறைகரங்களாக ஒரு நூற்றாண்டிற்கு மேலாக இயங்கும் சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனாவாதிகளினால் விரைவுபட்டதாக தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

5. மேற்கூறிய நிலைமையில் 2024 - 2025 ஆண்டுகள் ஈழத்தமிழ்மக்களுக்கு மிகவும் முக்கியமானமாக இருக்கின்றது. அரசியல் வேட்கைகளை மாற்றங்களின் நியதிகளுக்கு இசைவாக மீளுருவாக்கத்திற்கு உட்படுத்தி தேசநிர்மாணத்தை முன்னெடுக்கக்குகூடிய நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக எம்மக்களை ஒன்றிணைக்கவேண்டியுள்ளது காலத்தின் தேவையாக உள்ளது.

6. இந்தச் சூழ்நிலையில் தமிழரின் விடுதலையின் வரலாற்றுத் தொடர்ச்சியை சனநாயக அரசியல் வழிமுறைகள் ஊடாக தொடரும் தமிழரசுக்கடசியினை சிதைக்கும் முயற்சிகளும் உள்ளக முரண்பாடுகளும் தொடர் தேக்கநிலையும் அனுமதிக்கப்படமுடியாதது.

மலையக தலைவர்களை நேரில் சந்தித்து பேசிய இந்திய தூதுவர்

திறந்த வேண்டுகோள்

இக்காரணங்களால் தங்கள் மூவரிடமும் ஒரு திறந்த வேண்டுகோளினை சமர்ப்பிக்கின்றேன்.

அ) தற்போது தமிழரசுக்கட்சியும் தமிழ்மக்களும் அனுபவிக்கும் கட்சியின் தலைமைத்துவ தேக்கநிலை உடனடியாக உடைக்கப்படவேண்டும். அதனைத் தொடரவோ அல்லது அதன் நிகழ்ச்சி நிரலின் தொடர்ச்சியாக செயற்படவோ அனுமதிக்ககூடாது.

ஆ) தவிர்க்க முடியாமல் தமிழரசுக்கட்சியின் யாப்பின்படி புதிய தலைவர் தெரிவுக்கான போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் அதனை இடைநிறுத்துவதோ அல்லது மீள்பரிசீலனைக்கு உட்படுத்துவது என்ற பெயரில் தற்போதைய தலைமை தொடர வாய்ப்பளிப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இ) அதேவேளையில் தலைமைப்பதவிக்கான போட்டியில் வெல்வதற்காக கட்சியின் பெறுமதியான அங்கத்தவர்கள் தங்களுக்குள் சேறுவாருவதும் ஆதரவாளர்கள் குழுநிலையாக பிரிவதும் சகிக்கப்படமுடியாத விடயங்கள்.

ஈ) உங்கள் தேர்தல் போட்டியின் முடிவுகளின் பின் ஒருவரின் கையோக்குவதாகவோ மற்றவர்கள் புறக்கணிக்கப்படுவதாகவோ ஒதுக்கப்படுவதாகவோ நிலைமைகள் காணப்படாது என்று போட்டியாளர்களாகிய நீங்கள் வாக்குறுதியளித்தாலும் ஊமைக்காயங்கள் ஆழமானதாகவும் பின் விளைவுகள் கட்சியின் வாக்கு வங்கியிலும் தமிழரசுக்கட்சியின் எதிர்கால பங்களிப்பிலும் கடுமையான தாக்கத்தை செலுத்துவதுடன் ஈழத்தமிழர்களின் அரசியல் தலைமையில் ஏற்பட்டுள்ள தலைமைத்துவ இடைவெளி பாரியதாக மாற்றமடையும் என்பதனையும் நீங்கள் மறுக்கமாட்டீர்கள்.

இத்தகைய நிலைமையில் உங்களுக்குள்ள தெரிவுகளில் ஒன்று யாதெனில் நீங்கள் மூவரும் ஒரு கனவான் உடன்பாட்டிற்கு வருவதுதான் மிகப்பொருத்தமானது. அந்த உடன்பாட்டின்படி பின்வரும் விடயங்களை செய்யலாம்.

1. தற்போதைய நிலையில் தமிழரசுக்கட்சியை மீள் கட்டமைப்புக்குள் கொண்டுவரவேண்டியுள்ளது. கடசியின் அங்கத்தவர்களின் எண்ணிக்கையினை திட்டமிட்டு அதிகரித்து பலம்பெறச் செய்யவும் கிளைகளைப் புனரமைத்ததில் கடந்த காலத்தில் ஏற்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும் அவசியமும் கால அவகாசமும் தேவையாக உள்ளது. தற்போதுள்ள தலைமைத்துவத்தின் கீழ் அது சாத்தியமில்லை என்பது வெளிப்படை. ஆகவே ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு (ஒரு வருடம்) தற்காலிக தலைவர் ஒருவரின் கீழ் கட்சியை முழுமையாக கட்டமைக்கவேண்டும்.

2. தேர்தலில் கூர்மையடைந்துள்ள போட்டி இருமுனைப் போட்டியாக வெளிப்பட்டுள்ள நிலையில் நீங்கள் இருவரும் உங்கள் போட்டி நிலையிலிருந்து பின்னிறங்கி கிழக்கு மாகாண போட்டியாளரை தலைவராக வாக்களிக்கும்படி உங்கள் ஆதரவாளர்களை கோருவதன் ஊடாக தற்காலிக தலைவராக யோகேசுவரன் தெரிவுசெய்யப்படுவதனை உறுதிசெய்து கட்சியின் ஏனைய போறுப்பான பதவிகளான செயலாளர், சர்வதேச தொடர்பாளர் ஆகிய பொறுப்புக்களை நீங்கள் இருவரும் பொறுப்பேற்பதன் மூலம் கட்சியை இணைந்து பலப்படுத்தலாம்.

3. நீங்கள் இருவரும் கூர்வாட்களாக தொடர்ந்து இருந்தால் கட்சி என்னும் ஒரு உறையுள் இரண்டு வாட்களையும் வைத்திருக்கமுடியாது. ஆனால் இரண்டு கம்பீரமான குதிரைகளாக நீங்கள் கட்சியையும் தமிழர்தேசத்தின் செல்நெறியையும் முன்நோக்கி விரைந்து இழுத்துச்செல்லலாம்.

4. ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டு 14வருடங்கள் கடந்த நிலையில் ஏற்பட்டுள்ள ஏமாற்றங்களும் தடுமாற்றங்களும் நிறைந்த இச் சூழ்நிலையில் உங்கள் இருவரினதும் ஆளுமையினையும் ஆற்றல்களையும் செயலாற்றல் திறன்களையும் குறைத்து மதிப்பிடுவதோ அல்லது தமிழினம் இழந்து போவதோ மிகவும் பாரதூரமானது. அவ் இடைவெளியை நிரப்புவதும் குறுங்காலத்தில் சாத்தியமற்றது.

5. குறித்த ஒரு வருடத்தினுள் தமிழரசுக்கட்சி தன்னை முழுமையாக சீரமைத்து வலுப்படுத்தியபின்பு உங்களுக்குரிய பொறுப்புக்களை பரஸ்பரம் தீர்மானித்து தலைமைத்துவத்தினை கூட்டுப்பொறுப்புக்களுடன் தொடரமுடியும்.

இந்த வேண்டுகோளும் ஆலோசனையும் காலத்தின் தேவை கருதியும் ஈழத்தமிழ்ச்சமூகத்தின் எதிர்காலம் கருதியும் தங்களிடம் முன்வைக்கப்படுகின்றது என்பதனை அன்புடனும் நட்புடனும் உரிமையுடனும் தெரிவித்துக்கொள்கின்றேன் ”என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.battinatham.com/2024/01/blog-post_388.html

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

பிரதான போட்டியாளர்களில் வெற்றி குறித்து சந்தேகம் டெைந்துள்ள வேட்பாளரின் ஆதரவாளரால் தோல்வியை வெற்றியாக மாற்றுவதற்கு எழுதப்பட்ட மறைமுகமான மடலாகவே கருதவேண்டியுள்ளது.தமிழர்களின் அரசியல் தலைவிதியை தமிழரசுக்கட்சிதான் வென்றெடுக்கும் என்பது போன்ற மாயை உருவாக்கப்பட்டு இந்த மடல் எழுதப்பட்டுள்ளது.தமிழரசுக்கட்டியின் செயலற்ற தன்மையால் அந்தக்கட்சி அரசியல் அரங்கிலிருந்து கிடப்பில்  போடப்பட்டது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பொழுது கூடதமிழரசுக்கட்சியோ அதன் சின்னமோ உள்வாங்கப்படவில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆனந்தசங்கரி உதயசூரியன் சின்னத்தை முடக்கிய காரணத்தினாலேயே தமழரசுக்கட்சியையும் அதன் சின்னத்தையும் தூசுதட்டி 4கட்சிகளில் ஒன்றாக இணைக்கப்பட்டு பாவிக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் மகூட்டமைப்பின் தலைவராக தமிழசுக் கட்சியின் தலைவரே வயதிலும் அனுபவத்திலும் மூத்தவரான சம்பந்தர் நியமிக்கப்பட்டார்..2009 வரை அடக்கி வாசித்த தமிழசுக்கட்சி 2009 இன் பின்னர் பிற கட்சிகளை ஒதுக்க ஆரம்பித்தது.அதன் விளைவே தமித்தேசியக் கூட்டமைப்பின் உடைவும் தமிழரசுக்கட்சியின் சிதைவும் அதனாலேயே எற்பட்டடு. தமிழசுக்கட்சிதான் தமிழர்களுக்கு உரிமையைப் பெற்றுத்தரும் என்று மாயையை விட்டு அனைத்துத் தமிழ்கட்சிகளோடும் இணக்கப்பாட்டை ஏற்படுத்ததக் கூடிய தலமையே தமிழலசுக்கட்சிக்குத்தேவை.

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு தமிழர்களின் பெரும் பான்மை  அடுத்த தலைவராக வேறு ஒருவர் என்று வாக்களித்துள்ளனர் யார் அந்த வேறு ஒருவர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாட்ஸப்பில்  வந்த தமிழரசுக்கட்சியின் தேர்தல் முடிவுகள்!

1. சிவஞானம் சிறிதரன்: 184
2. எம்.ஏ.சுமந்திரன்:137
3. சீ.யோகேஷ்வரன்:00

நிராகரிக்கப்பட்ட வாக்குகள்:42

தலைவராக சிவஞானம் சிறிதரன் தெரிவானார்!

மாவையர் நடு நிலமை. வாக்களிக்கவில்லை.

யாழ்கள கருத்த்துக்கணிப்பில் எவருமே சிறிதரனை தெரிவு செய்யவில்லை! இதுவே புலம்பெயர் டயஸ்பொறா தமிழர்களுக்கும் தாயகத் தமிழர்களுக்கும் அரசியல் ரீதியில் பாரிய சிந்தனைவேறுபாடு உள்ளது என்பதற்கான ஒரு சாம்பிள்!

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, கிருபன் said:

புலம்பெயர் தமிழர்கள் மாற்றத்தை எதிர் பார்ப்பவர்களாகவும் தாயக தமிழர்கள் தற்போதைக்கு அதை பின் போடுபவர்களாகவும் இருப்பது பலமுறை தெரிந்தது தான். 

இது இன்றைய எனது முகநூல் பதிவு:

மீண்டும் தாயகம் 25 வருடங்கள் அசையாது ஊழல் மோசடி வாக்குக்கு பணம் என தமிழகஅரசியல் பழக்கப்பட்டு விடும். மீண்டு வர பலதலைமுறையாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொரு முகநூல் பதிவு: 

தமிழரசு கட்சியின் தலைவர் தெரிவு கூர்மையாக அவதானிக்கப்பட்டதுஇ யார் வெல்லவேண்டும் என்பதற்காகவல்ல மாறாக யார் வெல்லக்கூடாது என்பதற்காக!

தமிழ்தேசியம் தற்போதைக்கு தப்பிப்பிழைத்துள்ளது அவ்வள

வே!

https://www.facebook.com/100000587714856/posts/pfbid02YipufD7nhbVTeF1KPYNQMxWafabHNKKQdDAp9DGWyidWLKjqSd6DFH27nhbu1prwl/

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

புலம்பெயர் தமிழர்கள் மாற்றத்தை எதிர் பார்ப்பவர்களாகவும் தாயக தமிழர்கள் தற்போதைக்கு அதை பின் போடுபவர்களாகவும் இருப்பது பலமுறை தெரிந்தது தான். 

இது இன்றைய எனது முகநூல் பதிவு:

மீண்டும் தாயகம் 25 வருடங்கள் அசையாது ஊழல் மோசடி வாக்குக்கு பணம் என தமிழகஅரசியல் பழக்கப்பட்டு விடும். மீண்டு வர பலதலைமுறையாகும்.

தாயக தமிழர்கள் மிக அவதானமாகவே நடந்து கொள்ள வேண்டும். அவர்களது வாழ்வு அங்கே தான் உள்ளது. அவர்களது பிள்ளைகளின் பாதுகாப்பு, கல்வி, வாழ்ககை தொடர்பாக அக்கறை தேவை. (ஏற்கனவே பட்டறிவு உள்ளது) 

புலம் பெயர் தமிழர்களை பொறுத்தவரை மாற்றதை புரட்சியை எதிர்பார்ரப்பார்கள். ஏனென்றால் அவர்களது பிள்ளைகளை கல்வியை முடிக்க பாதுகாப்பாக வாழ அவர்கள் வாழும் நாடுகளில் உத்தரவாதம் உள்ளது.  அவர்கள் எதிர்பார்ககும் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஏதாவது விரும்ப தகாத சம்பவங்கள் நடைபெற்றாலும் ஒரு சில நாட்கள் செய்தியுடன், தமது வீரா வேசங்களை முகநூல் போன்ற இணையங்களில் கொட்டி விட்டு  தமது குடும்பங்களை கவனிக்க சென்றுவிடலாம்.   

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.