Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, கிருபன் said:

 

 நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர்


 

https://akkinikkunchu.com/?p=274079

மீண்டும் மீண்டும் இந்த 5% வந்து கிலியைக் கிளப்புகிறதே😂?

  • Replies 437
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

வைரவன்

நாம் தமிழர் கச்சி மெய்யாலுமே புத்தி கூடிய கச்சி தான் எல்லா கட்சிகளும் தேர்தலில் தோற்ற பின் தான், எல்லாவற்றிலும் பழி போடும். ஆனால் நாம் தமிழர் கச்சி தோற்கப் போகிறோம் எல்லா இடங்களிலு

ரசோதரன்

Quora இல் இந்த அர்த்தம் இருந்தது. இவர்கள் சொல்வது எல்லாம் சரியா அல்லது தப்பா என்று சொல்லும் அளவிற்கு எனக்கு தெளிவு கிடையாது... திராவிடம் என்றால் என்ன? திராவிடம் என்ற சொல் தமிழின் சமக்கிருத த

நிழலி

மேலே எழுதியும் இணைத்தும் உள்ளன்.  அங்கீகரிக்கப்படாத கட்சி எனில் ஒவ்வொரு தேர்தலிலும் சின்னம் ஒன்றை கேட்டுப் / விண்ணப்பித்து பெற வேண்டும். நா.க. அவ்வாறு விண்ணப்பிக்க முன், இன்னொரு கட்சி அதே வி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

BJPயின் வாக்கு வங்கி, பாமக வுடன் சேர்ந்து  18% ஆக வளர்ந்து வருவது தமிழகத்தின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. அதிமுகவின் வாக்கு வங்கி இப்பிடி குறைந்து கொண்டு போவதும் நல்லதல்ல. சீமான் வேறு யாருடனும் கூட்டு சேராமல் வாக்கு வங்கியை வளர்க்கமுடியாது, ஏதாவது ஒரு பதவியில் இருந்து கொண்டு, மக்களிடம் நிரூபிக்காவிட்டால், இப்பிடியே 5 தொடக்கம் 8 சதவீதம் வரையில், அவரின் தீவிர ஆதரவாளர்களின் அளவின் வரைக்கும் வாக்கு வங்கி இருக்கும். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்னப்பா றோக்கன் குடுக்கினம்..

xyz.png

ஜெயித்துவிட்டால் றோக்கனை குடுத்து பணத்தினை பெற்று கொள்ள வேணுமாம் ( ! ) .. இதல்லாம் நம்புற மாதிரியா இருக்கு..?

டிஸ்கி :
..பிம்பிளேக்கி பிலெப்பி..

images?q=tbn:ANd9GcQ5TP1OzFSCq2_Yl4n0hJv

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இரவோடு இரவாக பட்டுவாடா...போட்டி போடும் DMK- ADMK-BJP! தேர்தல் திகில்..! 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, Justin said:

மீண்டும் மீண்டும் இந்த 5% வந்து கிலியைக் கிளப்புகிறதே😂?

இது க‌ருத்து க‌ணிப்பு கிடையாது க‌ருத்து தினிப்பு

6.60 கோடி வாக்காள‌ர் இருக்கும் த‌மிழ் நாட்டில் சும்மா ஒரு சில‌ தொகுதியில் போய் ம‌க்க‌ளை ச‌ந்திச்சு விட்டு இவ‌ர்க‌ள் க‌ண்ட‌ மேனிக்கு த‌ந்தி தொலைக் காட்சி அடிச்சு விடும்.......................இந்த‌ க‌ருத்து தினிப்பு யூன் 4ம் திக‌தி தெரியும்  எவ‌ள‌வு பொய்யான‌து என்று

ம‌க்க‌ளை குழ‌ப்பி த‌ங்க‌ளுக்கு பிடிச்ச‌ க‌ட்சிக‌ளுக்கு ஆதார‌வாய் போடுவ‌து தான் இவ‌ர்க‌ளின் வேலை வேண்டின‌ காசுக்கு ந‌ல்லா கூவ‌த்தானே வேணும் அதை இவ‌ர்க‌ள் ந‌ல்லா செய்யின‌ம்...................
இந்த‌ க‌ருத்து க‌ணிப்பு எல்லா தேர்த‌லும் பொய்த்து போன‌து
இதை தெரியாம‌ நீங்க‌ள் ச‌ந்தோஷ‌ ப‌டுவ‌தை பார்க்க‌ சிரிப்பு வ‌ருது😁

இவ‌ர்க‌ள் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் ந‌ட‌ந்த‌ தேர்த‌ல்க‌ளில்  வெளியிட்ட‌ க‌ருத்து க‌ணிப்புக‌ளில் ஏதாவ‌து ஒன்று ச‌ரி வ‌ந்த‌தை உங்க‌ளால் காட்ட‌ முடியுமா........................

இள‌ம்த‌லைமுறை பிள்ளைக‌ள் க‌ழுவி க‌ழுவி ஊத்துதுக‌ள் இந்த‌ க‌ருத்து க‌ணிப்பை பார்த்து😂😁🤣....................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

5 ஓ….

8 ஓ….

10 ஓ…..

சும்மா வாய்க்கு வந்தபடி அண்ணைனை ஏசுவதில் எனக்கும் உடன்பாடில்லை.

அவர் தன் குறிக்கோளில் தெளிவாக இருக்கிறார்……

முடிந்தளவு, அதிமுக+, திமுக+ வாக்குகளை பிரித்து…..அமித்ஷாவின் 5 டார்கெட் தொகுதிகளிலாவது பிஜேபி யை வெல்ல வைப்பது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, goshan_che said:

5 ஓ….

8 ஓ….

10 ஓ…..

சும்மா வாய்க்கு வந்தபடி அண்ணைனை ஏசுவதில் எனக்கும் உடன்பாடில்லை.

அவர் தன் குறிக்கோளில் தெளிவாக இருக்கிறார்……

முடிந்தளவு, அதிமுக+, திமுக+ வாக்குகளை பிரித்து…..அமித்ஷாவின் 5 டார்கெட் தொகுதிகளிலாவது பிஜேபி யை வெல்ல வைப்பது.

அதுக்கு நன்றி கடனாக சின்னத்தை முடக்கி மாற்றாக கேட்ட சின்னங்களையும் தேர்தலில் போட்டியிடாத சுயேட்சைகளுக்கு ஒதுக்கி தனது புலனாய்வுப்பிரிவை வீட்டுக்கு அனுப்பி  வாக்கு எந்திரத்தில் சின்னத்தை மங்கலாக்கி மைக் சின்னத்துக்கு மேலையே விவசாயி சின்னத்தை வைத்து தாம் கொஞ்சம் மெருகேற்றி வரைந்து கேட்ட விவசாயி சின்னத்தை போனவாட்டி சமதிக்காமல் இந்த வாட்டி போட்டியிடாத சுயேட்சைக்கு அதே வரைந்த சின்னத்தை அப்படியே கொடுத்து நன்றிக்கடனை சீமானுக்கு பிஜேபி செய்துள்ளது.... அடேங்கப்பா எவ்வளா ஒரு அன்பு பிஜேபிக்கு...

  • Like 2
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, நீர்வேலியான் said:

BJPயின் வாக்கு வங்கி, பாமக வுடன் சேர்ந்து  18% ஆக வளர்ந்து வருவது தமிழகத்தின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. அதிமுகவின் வாக்கு வங்கி இப்பிடி குறைந்து கொண்டு போவதும் நல்லதல்ல. சீமான் வேறு யாருடனும் கூட்டு சேராமல் வாக்கு வங்கியை வளர்க்கமுடியாது, ஏதாவது ஒரு பதவியில் இருந்து கொண்டு, மக்களிடம் நிரூபிக்காவிட்டால், இப்பிடியே 5 தொடக்கம் 8 சதவீதம் வரையில், அவரின் தீவிர ஆதரவாளர்களின் அளவின் வரைக்கும் வாக்கு வங்கி இருக்கும். 

நீங்க‌ள் சொல்லுவ‌து புரியுது அண்ணா
இந்த‌ திரியில் நேற்றே நான் எழுதி விட்டேன் பிஜேப்பி த‌மிழ் நாட்டில் வ‌ள‌ந்தால் அது ஒட்டு மொத்த‌ த‌மிழ் நாட்டுக்கே ஆப‌த்து என்று

த‌மிழ் நாட்டின் விச‌ச் செடி பிஜேப்பி..................இவ‌ர்க‌ள் ஊழ‌ல காட்டி மிர‌ட்டி தான் பாம‌காவை கூட்ட‌ணியில் சேர்த்த‌வை...............ம‌ருத்துவ‌ர் ஜ‌யா ராம‌தாஸ் போன‌ வ‌ருட‌ம் சொன்னார் த‌மிழ் நாட்டில் பிஜேப்பிக்கு   பூச்சிய‌த்துக்கு கீழ‌ என்று 
அதாவ‌து த‌மிழ் நாட்டில் பிஜேப்பிக்கு ம‌க்க‌ள் ஆத‌ர‌வு இல்லை என்று...........

ப‌ல‌ வ‌ருட‌மாய் நோட்டாவுக்கு கீழ‌ நின்று கொண்டு இருந்த‌ பிஜேப்பி த‌மிழ் நாட்டில் ம‌ற்ற‌ க‌ட்சிக‌ளை உடைச்சு முன்னுக்கு வ‌ருவ‌து த‌மிழ் நாட்டுக்கு ஆப‌த்து

கோவையில் வ‌ட‌ நாட்டானின் ஆதிக்க‌ம்  அதிக‌ம் த‌மிழ‌ன் மாத‌ம் 18ஆயிர‌ம் ரூபாய்க்கு வேலை செய்த‌ இட‌த்தில் வ‌ட‌க்க‌னின் வ‌ருகைக்கு பிற‌க்கு த‌மிழ‌ர்க‌ளுக்கு வேலை இல்லை

வ‌ட‌க்க‌ன் மாத‌ம் 9ஆயிர‌த்துக்கு  வேலை செய்வான் 

த‌மிழ‌னே த‌மிழ‌னை நீக்கி விட்டு வ‌ட‌க்க‌னை வேலைக்கு அம‌த்தின‌ம் கார‌ண‌ம் வ‌ட‌க்க‌ன் குறைந்த‌ ச‌ம்ப‌ல‌த்துக்கு வேலை செய்வான்............................வ‌ட‌ நாட்டில் வேலை இல்லாம‌ தான் ஹிந்தி கார‌ங்க‌ள் அதிக‌ம் த‌மிழ் நாட்டுக்கு ப‌டை எடுத்து வ‌ருகின‌ம்😮

ஆனால் ஹிந்தி ப‌டிச்சா வேலை கிடைக்கும் என்று பிஜேப்பி கூட்ட‌ம் பொய் ப‌ர‌ப்புரைய‌ த‌மிழ் நாட்டில் அவுட்டு விட்ட‌வை 5வ‌ருட‌த்துக்கு முத‌ல்.........................த‌மிழ‌ர் அல்லாத‌வ‌ர்க‌ள் த‌மிழ் நாட்டில் ஒரு கோடி பேர் வாழுகின‌ம்
அதில் அதிக‌ம் வ‌ட‌க்க‌ன் இதுவும் த‌மிழ‌ர்க‌ளுக்கு ஆவ‌த்தில் போய் முடியும்.....................

சீமானுக்கு அர‌சிய‌லில் எதிர் கால‌ம் இருக்கு ப‌ய‌ணிக்க‌ நீண்ட‌ தூர‌ம் இருக்கு அண்ணா

சீமான் கூட்ட‌னி வைச்சா க‌ட‌சியில் விஜ‌ய‌காந்துக்கு ந‌ட‌ந்த‌து தான் ந‌ட‌க்கும்.......................ச‌ம‌ர‌ச‌ம் செய்யாம‌ எவ‌ள‌வு கால‌ம் தேர்த‌ல‌ ச‌ந்திக்கிறாரோ அவ‌ள‌வ‌த்துக்கு சீமானுக்கும் க‌ட்சிக்கும் ந‌ல்ல‌ம்........................சீமான் போட்ட‌ விதையை அவ‌ரின் த‌ம்பிக‌ள் ச‌ரி செய்வார்க‌ள் .....................

என‌து க‌ணிப்பு நாம் த‌மிழ‌ர் க‌ட்சி இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் 7/9 ச‌த‌வீத‌ம்  பெற‌ அதிக‌ வாய்ப்பு.....................

ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் போட்டியிட்ட‌ தொகுதியில் ஒரு ஆளுக்கு 2000ரூபாய் ஆளும் அர‌சு கொடுக்குது அப்ப‌டி வீஜேப்பி ஆதிமுக்கா என்று இந்த‌ மூன்று க‌ட்சியும் ஓட்டுக்கு காசு கொடுக்கின‌ம்

காசு கொடுக்காம‌ தேர்த‌ல‌ ச‌ந்திக்கும் ஒரே க‌ட்சி நாம் த‌மிழ‌ர் க‌ட்சிம‌ட்டும் தான் 🙏🥰......................................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அதுக்கு நன்றி கடனாக சின்னத்தை முடக்கி மாற்றாக கேட்ட சின்னங்களையும் தேர்தலில் போட்டியிடாத சுயேட்சைகளுக்கு ஒதுக்கி தனது புலனாய்வுப்பிரிவை வீட்டுக்கு அனுப்பி  வாக்கு எந்திரத்தில் சின்னத்தை மங்கலாக்கி மைக் சின்னத்துக்கு மேலையே விவசாயி சின்னத்தை வைத்து தாம் கொஞ்சம் மெருகேற்றி வரைந்து கேட்ட விவசாயி சின்னத்தை போனவாட்டி சமதிக்காமல் இந்த வாட்டி போட்டியிடாத சுயேட்சைக்கு அதே வரைந்த சின்னத்தை அப்படியே கொடுத்து நன்றிக்கடனை சீமானுக்கு பிஜேபி செய்துள்ளது.... அடேங்கப்பா எவ்வளா ஒரு அன்பு பிஜேபிக்கு...

தம்பிகள் தோற்க கொடுக்கும் அட்வான்ஸ் காரணங்கள் இவை.

இவை பல தடவை இங்கே விவாதிக்கப்பட்டுள்ளன - டாக்டர் காந்தராஜ் பேட்டியை கூட இணைத்தேன் 57இல் திமுக வுக்கு உதயசூரியன் கிடைக்காமல் சுயேற்சைக்கு கிடைத்தது.

முதலில் கேட்பவருக்கே சின்னம் எனும் போது நாதக முதலில் கேட்காமல் - குறட்டை விட்டு விட்டு தேர்தல் ஆணையம் மீது பழி போடுகிறார்கள்.

வாங்கு எந்திரத்தில் அப்படி ஒரு சின்னமும் மங்கலாக தெரியவில்லை என என் நண்பர்கள் பலர் இன்று சொன்னார்கள். இதுவும் தேர்தல் நாளுக்கு முதலே நாதக கட்டி விட்ட புரளி.

 

  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அதுக்கு நன்றி கடனாக சின்னத்தை முடக்கி மாற்றாக கேட்ட சின்னங்களையும் தேர்தலில் போட்டியிடாத சுயேட்சைகளுக்கு ஒதுக்கி தனது புலனாய்வுப்பிரிவை வீட்டுக்கு அனுப்பி  வாக்கு எந்திரத்தில் சின்னத்தை மங்கலாக்கி மைக் சின்னத்துக்கு மேலையே விவசாயி சின்னத்தை வைத்து தாம் கொஞ்சம் மெருகேற்றி வரைந்து கேட்ட விவசாயி சின்னத்தை போனவாட்டி சமதிக்காமல் இந்த வாட்டி போட்டியிடாத சுயேட்சைக்கு அதே வரைந்த சின்னத்தை அப்படியே கொடுத்து நன்றிக்கடனை சீமானுக்கு பிஜேபி செய்துள்ளது.... அடேங்கப்பா எவ்வளா ஒரு அன்பு பிஜேபிக்கு...

கோஷான் த‌ன்னை தானே கோமாளி என்று ப‌ல‌ இட‌த்தில் நிரூபித்து காட்டி விட்டார்

நீங்க‌ள் ச‌ரியா சொன்னீங்க‌ள் ஓணாண்டி இத‌ற்கு கோஷானிட‌ம் இருந்து ப‌தில் வ‌ராது.........................கோஷான் தேர்த‌ல் க‌ணிப்பு ச‌ரியா க‌ணிப்பார் என்று யாழிக் சிறு கூட்ட‌ம் இருக்கு...................பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌ல் ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌ல்க‌ள் வ‌ரும் போது இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் ஓட்டு போடும் உரிமை அவைக்கு கிடைச்சிடும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் சீமானுக்கு தான் ஓட்டு போடுவின‌ம் என்று க‌ட‌ந்த‌ ஜ‌ந்து வ‌ருட‌மாய் எதிர் க‌ட்சி ஆட்க‌ளே வெளிப்ப‌டையாய் சொல்லுகின‌ம்....................
அதோட‌ அவ‌ர்க‌ளின் பெற்றோர‌ கூட‌ நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு ஓட்டு போட‌ வைக்கின‌ம்.....................இந்த‌ 20 நாளில் அண்ண‌ன் சீமானின் தொண்டை  கிழிஞ்சு போச்சு குர‌லை கேட்க்க‌ முடிய‌ வில்லை தொண்டை எல்லாம் அடைச்சு க‌டும் வெய்யிலுக்கு ம‌த்தியில் ப‌ர‌ப்புர‌ செய்து ச‌ரியா க‌ஸ்ர‌ப் ப‌ட்டு விடார்............................இன்றுட‌ன் சிறிது கால‌ம் ஓய்வெடுக்க‌ட்டும்🙏🥰......................................................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, goshan_che said:

தம்பிகள் தோற்க கொடுக்கும் அட்வான்ஸ் காரணங்கள் இவை.

இவை பல தடவை இங்கே விவாதிக்கப்பட்டுள்ளன - டாக்டர் காந்தராஜ் பேட்டியை கூட இணைத்தேன் 57இல் திமுக வுக்கு உதயசூரியன் கிடைக்காமல் சுயேற்சைக்கு கிடைத்தது.

முதலில் கேட்பவருக்கே சின்னம் எனும் போது நாதக முதலில் கேட்காமல் - குறட்டை விட்டு விட்டு தேர்தல் ஆணையம் மீது பழி போடுகிறார்கள்.

வாங்கு எந்திரத்தில் அப்படி ஒரு சின்னமும் மங்கலாக தெரியவில்லை என என் நண்பர்கள் பலர் இன்று சொன்னார்கள். இதுவும் தேர்தல் நாளுக்கு முதலே நாதக கட்டி விட்ட புரளி.

 

ஓம் ஓம் நீங்க‌ள் அவுட்டு விடும் புர‌ளி ஒரு போதும் உண்மை ஆகி விடாது
தேர்த‌ல் ஆனைய‌ம் ந‌டு நிலையா தானே செய‌ல் ப‌டுகின‌ம்

அண்ண‌ன் சீமான் மைக் சின்ன‌ம் வேண்டாம் ப‌ட‌கு சின்ன‌ம் கேட்க்க‌ மேல‌ இருந்து எங்க‌ளுக்கு அழுத்த‌ம் வ‌ருது உங்க‌ளுக்கு வேறு சின்ன‌ம் கொடுக்க‌ கூடாது என்று 😡

இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ தேர்த‌ல் ஆணைய‌ம் யார் க‌ட்டு பாட்டில் இருக்கு என்று

விவ‌சாயி சின்ன‌ம் ப‌றி போன‌தில் பிஜேப்பியின்  குள‌று ப‌டிக‌ள் உள் குத்து வேலைக‌ள் நிறைய‌ இருக்கு....................இப்ப‌டியே போனால் உங்க‌ளுக்கும் 200ரூபாய் கொத்த‌டிமைக‌ளுக்கும் வித்தியாச‌ம் இல்லாம‌ போய் விடும் யாழில் உங்க‌ளுக்கு இருக்குல் ந‌ட் பெய‌ரை நீங்க‌ளாக‌வே கெடுக்க‌ வேண்டாம்.....................உள்ள‌தை க‌ண்ட‌ அறிய‌ என‌க்கும் தமிழ் நாட்டில் ஆட்க‌ள் இருக்கின‌ம்.............

ந‌டுநிலையான‌ விம‌ர்ச‌க‌ர்க‌ள் எத்த‌னையோ பேர் இப்ப‌வும் இருக்கின‌ம் விலை போகாம‌ய்...........................அவ‌ர்க‌ள் உண்மைய‌ உண்மை என்றே சொல்லுவின‌ம் அதுக்குள் போலி க‌ட்டுக் க‌தை இருக்காது சொல்வ‌தெல்லாம் உண்மை😏.......................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, பையன்26 said:

ஓம் ஓம் நீங்க‌ள் அவுட்டு விடும் புர‌ளி ஒரு போதும் உண்மை ஆகி விடாது
தேர்த‌ல் ஆனைய‌ம் ந‌டு நிலையா தானே செய‌ல் ப‌டுகின‌ம்

அண்ண‌ன் சீமான் மைக் சின்ன‌ம் வேண்டாம் ப‌ட‌கு சின்ன‌ம் கேட்க்க‌ மேல‌ இருந்து எங்க‌ளுக்கு அழுத்த‌ம் வ‌ருது உங்க‌ளுக்கு வேறு சின்ன‌ம் கொடுக்க‌ கூடாது என்று 😡

இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ தேர்த‌ல் ஆணைய‌ம் யார் க‌ட்டு பாட்டில் இருக்கு என்று

விவ‌சாயி சின்ன‌ம் ப‌றி போன‌தில் பிஜேப்பியின்  குள‌று ப‌டிக‌ள் உள் குத்து வேலைக‌ள் நிறைய‌ இருக்கு....................இப்ப‌டியே போனால் உங்க‌ளுக்கும் 200ரூபாய் கொத்த‌டிமைக‌ளுக்கும் வித்தியாச‌ம் இல்லாம‌ போய் விடும் யாழில் உங்க‌ளுக்கு இருக்குல் ந‌ட் பெய‌ரை நீங்க‌ளாக‌வே கெடுக்க‌ வேண்டாம்.....................உள்ள‌தை க‌ண்ட‌ அறிய‌ என‌க்கும் தமிழ் நாட்டில் ஆட்க‌ள் இருக்கின‌ம்.............

ந‌டுநிலையான‌ விம‌ர்ச‌க‌ர்க‌ள் எத்த‌னையோ பேர் இப்ப‌வும் இருக்கின‌ம் விலை போகாம‌ய்...........................அவ‌ர்க‌ள் உண்மைய‌ உண்மை என்றே சொல்லுவின‌ம் அதுக்குள் போலி க‌ட்டுக் க‌தை இருக்காது சொல்வ‌தெல்லாம் உண்மை😏.......................

கஜேந்திரன் கட்சி கட்டுகாசை இழக்குமென்று சொன்ன பெரும்தகைகளில் ஒருவர்.😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
46 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அதுக்கு நன்றி கடனாக சின்னத்தை முடக்கி மாற்றாக கேட்ட சின்னங்களையும் தேர்தலில் போட்டியிடாத சுயேட்சைகளுக்கு ஒதுக்கி தனது புலனாய்வுப்பிரிவை வீட்டுக்கு அனுப்பி  வாக்கு எந்திரத்தில் சின்னத்தை மங்கலாக்கி மைக் சின்னத்துக்கு மேலையே விவசாயி சின்னத்தை வைத்து தாம் கொஞ்சம் மெருகேற்றி வரைந்து கேட்ட விவசாயி சின்னத்தை போனவாட்டி சமதிக்காமல் இந்த வாட்டி போட்டியிடாத சுயேட்சைக்கு அதே வரைந்த சின்னத்தை அப்படியே கொடுத்து நன்றிக்கடனை சீமானுக்கு பிஜேபி செய்துள்ளது.... அடேங்கப்பா எவ்வளா ஒரு அன்பு பிஜேபிக்கு...

 

28 minutes ago, goshan_che said:

தம்பிகள் தோற்க கொடுக்கும் அட்வான்ஸ் காரணங்கள் இவை.

இவை பல தடவை இங்கே விவாதிக்கப்பட்டுள்ளன - டாக்டர் காந்தராஜ் பேட்டியை கூட இணைத்தேன் 57இல் திமுக வுக்கு உதயசூரியன் கிடைக்காமல் சுயேற்சைக்கு கிடைத்தது.

முதலில் கேட்பவருக்கே சின்னம் எனும் போது நாதக முதலில் கேட்காமல் - குறட்டை விட்டு விட்டு தேர்தல் ஆணையம் மீது பழி போடுகிறார்கள்.

வாங்கு எந்திரத்தில் அப்படி ஒரு சின்னமும் மங்கலாக தெரியவில்லை என என் நண்பர்கள் பலர் இன்று சொன்னார்கள். இதுவும் தேர்தல் நாளுக்கு முதலே நாதக கட்டி விட்ட புரளி.

 

 

ஈவிம் மிசின் குள‌று ப‌டிக‌ள்😏.............................

Edited by பையன்26
  • கருத்துக்கள உறவுகள்
Posted
31 minutes ago, பையன்26 said:

நீங்க‌ள் ச‌ரியா சொன்னீங்க‌ள் ஓணாண்டி இத‌ற்கு கோஷானிட‌ம் இருந்து ப‌தில் வ‌ராது.

உங்களுக்கு மேலே இருப்பது என் பதில்.

இப்போ யார் கோமாளி🤣

22 minutes ago, பையன்26 said:

அண்ண‌ன் சீமான் மைக் சின்ன‌ம் வேண்டாம் ப‌ட‌கு சின்ன‌ம் கேட்க்க‌ மேல‌ இருந்து எங்க‌ளுக்கு அழுத்த‌ம் வ‌ருது உங்க‌ளுக்கு வேறு சின்ன‌ம் கொடுக்க‌ கூடாது என்று 😡

இதுவும் சீமான் ப்ரோ விட்டா இன்னொரு அவிட்டா.

இல்லை என்றால் இப்படி தேர்தல் ஆணையம் சொன்ன ஆதாரம் எங்கே?

அண்ணன் சொல்வதை எல்லாம் மொக்கு தம்பிகள் நம்பலாம். எல்லாரும் நம்ப தேவையில்லை.

24 minutes ago, பையன்26 said:

இப்ப‌டியே போனால் உங்க‌ளுக்கும் 200ரூபாய் கொத்த‌டிமைக‌ளுக்கும் வித்தியாச‌ம் இல்லாம‌ போய் விடும் யாழில் உங்க‌ளுக்கு இருக்குல் ந‌ட் பெய‌ரை நீங்க‌ளாக‌வே கெடுக்க‌ வேண்டாம்.

நீங்கள் ஏலவே என்னை 200 உபி என பல இடங்களில் எழுதிவிட்டீர்களே.

எனக்கு ஒரு நற்பெயர் மீதும் ஆர்வம் இல்லை. அப்படி புற இருக்கோ இல்லையோ இ டோண்ட் கேர்.

இருந்தாலும் - சீமான் முகத்திரையை கிழிக்காமல் அந்த பெயரை தக்கவைப்பதிலும் பார்க்க கெட்ட பெயரே மேல்🤣

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, பையன்26 said:

ஈவிம் மிசின் குள‌று ப‌டிக‌ள்😏............................

இதுவரை பல தரம் கேட்டும் நீங்கள் பதில் சொல்லாத கேள்வி- 

இவ்வளவு மோசமான தேர்தல் முறையில், எப்படியும் தோற்கடிப்பார்கள் என தெரிந்து, அதுவும் தனியே ஏன் 2016 இல் இருந்து போட்டியிட்டு மண்ணை கவ்வுகிறார்?

பேசாமல் தேர்தலுக்கு அப்பால் இயக்கம் நடத்தலாமே?

24 minutes ago, kalyani said:

கஜேந்திரன் கட்சி கட்டுகாசை இழக்குமென்று சொன்ன பெரும்தகைகளில் ஒருவர்.😎

வாங்கோ என்னை வசைபாட எனவே வாழும் அகலிகை….சாரி யாழுக்கு வரும் கல்யாண்.

நான் கஜேஸ் கட்டுகாசு இழப்பார் என கூறவில்லை. நான் வெல்லமாட்டார்கள் என கூறிய அத்தனை தேர்தல்களிலும் அவர்கள் வெல்லவில்லை.

கடந்த முறை சொன்னது போலவே யாழில் ஒரு சீட்டை எடுத்தார் பொன்னர்.

அம்பாறை மக்களை ஏமாற்றி அடுத்த சீட்டை 100 வாக்கு வித்தியாசத்தில் எடுத்தார் குதிரை கஜே.

 

நேற்று வைரவர் பூசை பலமோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, goshan_che said:

உங்களுக்கு மேலே இருப்பது என் பதில்.

இப்போ யார் கோமாளி🤣

இதுவும் சீமான் ப்ரோ விட்டா இன்னொரு அவிட்டா.

இல்லை என்றால் இப்படி தேர்தல் ஆணையம் சொன்ன ஆதாரம் எங்கே?

அண்ணன் சொல்வதை எல்லாம் மொக்கு தம்பிகள் நம்பலாம். எல்லாரும் நம்ப தேவையில்லை.

சீமான் பேசுவ‌தை உள‌வுத்துறை தொட்டு ப‌ல‌ர் கேட்ப‌து உண்டு
சீமான் தேர்த‌ல் ஆணைய‌த்தை ப‌ற்றி அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று வ‌ழ‌க்கு தொடுக்க‌ வேண்டிய‌து தானே

நீங்க‌ள் சொல்லுவ‌து ம‌ட்டும் உண்மை என்று எத‌ன் அடிப்ப‌டையில் ந‌ம்புவ‌து இத‌ற்க்கு உங்க‌ளால் ப‌தில் அளிக்க‌ முடியுமா.....................நேர்மையான‌வ‌ர்க‌ள் என்றால் நேர்மையின் ப‌டி தான் ந‌ட‌ப்பின‌ம் 2009க்கு முத‌ல் ஒரு முக‌ம் 2009க்கு பின் இன்னொரு முக‌ம்

இதில் சீனானை ப‌ற்றி விம‌ர்சிப்ப‌து வெக்க‌க் கேடு....................

சீமான் ஊட‌க‌த்துக்கு கொடுத்த‌ பேட்டி அப்ப‌டியே இருக்கு அதை ப‌ல‌ ல‌ச்ச‌ம் பேர் பார்த்து இருக்கின‌ம் தேர்த‌ல் ஆணைய‌த்துக்கு சீமான் பேசின‌து தெரியாம‌ போகுமா அல்ல‌து உள‌வுத்துறை இப்ப‌டியான‌ விடைய‌த்தில் தூங்கி கொண்டு இருக்குமா

ஜ‌ன‌நாய‌க‌ நாட்டின் தேர்த‌ல் ஆணைய‌த்தை சீமான் தேவை இல்லாம‌ அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று சீமானை கைது செய்து இருக்க‌லாமே அல்ல‌து சீமான் பிர‌ச்சார‌ம் செய்ய‌க் கூடாது என்று த‌டை விதித்து இருக்க‌லாமே தேர்த‌ல் ஆனைய‌ம்........................பொல்லை கொடுத்து அடி வேண்ட‌ வேண்டாம்😁........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

நான் எப்போதும் என்னை தேர்தல் விற்பனர் என்றோ - என் கணிப்புகள் திறம் என்றோ சொன்னதில்லை. 

நான் என்ன லயலா கொலிஜா அல்லது இந்தியா டுடேயா? சர்வே எடுக்க.

அல்லது சாத்திரக்காரனா🤣

நான் கணிக்கிறேன் என நீங்கள் எழுதுவதே சுத்த பைத்தியக்காரத்தனம்.

எல்லாரையும் போல் நான் என் கருத்தை எதிர்வுகூறலாக எழுதுகிறேன். அது என் கருத்து மட்டுமே. Pure speculation. அது சரி வரும், பிழைக்கும் - I don’t give a monkey’s.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
10 minutes ago, பையன்26 said:

நேர்மையான‌வ‌ர்க‌ள் என்றால் நேர்மையின் ப‌டி தான் ந‌ட‌ப்பின‌ம் 2009க்கு முத‌ல் ஒரு முக‌ம் 2009க்கு பின் இன்னொரு முக‌ம்

நான் யாழில் எழுத தொடங்கியது 2013.

10 minutes ago, பையன்26 said:

சீமான் தேர்த‌ல் ஆணைய‌த்தை ப‌ற்றி அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று வ‌ழ‌க்கு தொடுக்க‌ வேண்டிய‌து தானே

அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே?

அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை?

10 minutes ago, பையன்26 said:

நீங்க‌ள் சொல்லுவ‌து ம‌ட்டும் உண்மை என்று எத‌ன் அடிப்ப‌டையில் ந‌ம்புவ‌து இத‌ற்க்கு உங்க‌ளால் ப‌தில் அளிக்க‌ முடியுமா....................

நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது.

ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது.

எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா?

மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில்.

சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும். 

போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை.

43 minutes ago, kalyani said:

கஜேந்திரன் கட்சி கட்டுகாசை இழக்குமென்று சொன்ன பெரும்தகைகளில் ஒருவர்.😎

இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது.

🤣🤣🙏

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
29 minutes ago, goshan_che said:

இதுவரை பல தரம் கேட்டும் நீங்கள் பதில் சொல்லாத கேள்வி- 

இவ்வளவு மோசமான தேர்தல் முறையில், எப்படியும் தோற்கடிப்பார்கள் என தெரிந்து, அதுவும் தனியே ஏன் 2016 இல் இருந்து போட்டியிட்டு மண்ணை கவ்வுகிறார்?

 

உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள்

அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை

இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................

2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................

 

ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை 

நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................

18 minutes ago, goshan_che said:

 

நான் எப்போதும் என்னை தேர்தல் விற்பனர் என்றோ - என் கணிப்புகள் திறம் என்றோ சொன்னதில்லை. 

நான் என்ன லயலா கொலிஜா அல்லது இந்தியா டுடேயா? சர்வே எடுக்க.

அல்லது சாத்திரக்காரனா🤣

நான் கணிக்கிறேன் என நீங்கள் எழுதுவதே சுத்த பைத்தியக்காரத்தனம்.

எல்லாரையும் போல் நான் என் கருத்தை எதிர்வுகூறலாக எழுதுகிறேன். அது என் கருத்து மட்டுமே. Pure speculation. அது சரி வரும், பிழைக்கும் - I don’t give a monkey’s.

ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................

Edited by பையன்26
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, பையன்26 said:

அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை

அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது?

👆🏼👇

3 minutes ago, பையன்26 said:

இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................

2016 இல் இறங்கினார் சரி. 

2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்?

The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome.

அண்ணன் என்ன லூசா?

அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா?

8 minutes ago, பையன்26 said:

2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம்

நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்?

உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்?

10 minutes ago, பையன்26 said:

நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌வ‌ர்.

மாற்றுக்கருத்து ஏதும் இல்லை.

11 minutes ago, பையன்26 said:

என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................

நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள்.

12 minutes ago, பையன்26 said:

ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை 

நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏

நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, goshan_che said:

அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது?

👆🏼👇

2016 இல் இறங்கினார் சரி. 

2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்?

The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome.

அண்ணன் என்ன லூசா?

அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா?

நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்?

உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்?

மாற்றுக்கருத்து ஏதும் இல்லை.

நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள்.

நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.

2016 , 2019 , 2021 இந்த‌ மூன்று தேர்த‌ல்க‌ளை விட‌ இந்த‌ தேர்த‌லில் மோடியின் க‌ட்டு பாட்டில் இய‌ங்கும் தேர்த‌ல் ஆணைய‌த்தின் செய‌ல் பாடு ப‌டு கேவ‌ல‌ம்...............

2019க‌ளில் விவ‌சாயி சின்ன‌ம் கிடைச்ச‌ போது ஈவிம் மிசினில் விவ‌சாயி சின்ன‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று ப‌ல‌ருக்கு தெரிந்து 

திராவிட‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளே அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வு தெரிவித்த‌வை சின்ன‌ விடைய‌த்தில் 2019தில் 

2024 விவ‌சாயி சின்ன‌ம் ஈவிம் மிசினில் குளிய‌ரா தெரியுது

ஆனால் மைக் சின்ன‌த்தை வேறு மாதிதி க‌ருப்பு க‌ல‌ர் ம‌ற்றும் சின்ன‌த்தை ஈவிம் மிசினில் வேறு மாதிரி தெரியுது

2019 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போதும் விவ‌சாயி சின்ன‌ம் கிளிய‌ர் இல்லாம‌ இருந்த‌து

 

ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்த‌ போது அவ‌ர்க‌ள் 40தொகுதிக‌ளிலும் போட்டியிடுகிறோம் என்று சொல்லி விட்டு இப்போது 19 தொகுதில‌ தான் போட்டியிடுகின‌ம்

மீதி தொகுதிக்கு விவ‌சாயி சின்ன‌த்தை சுய‌ற்ச்சி முறையில் போட்டியிட‌ மோடியின் தேர்த‌ல் ஆணைய‌ம் விட்டு இருக்கு

 

ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்தும் அவ‌ர்க‌ள் தேர்த‌ல் பிர‌ச்சார‌ம் செய்த‌தாக‌ ஒரு தொலைக் காட்சியிலும் காட்ட‌ வில்லை

அவ‌ர்க‌ள் பிஜேப்பி பெத்து போட்ட‌ க‌ள்ள‌ குழ‌ந்தைக‌ள் இப்ப‌டி ஒவ்வொரு  மானில‌த்திலும் ப‌ல‌ர் இருக்கின‌ம்

இந்தியாவை அழிக்க‌ சீன‌னோ பாக்கிஸ்தானோ தேவை இல்லை மோடிட்ட‌ இன்னும் 10 ஆண்டு ஆட்சி செய்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் அடி ப‌ட்டு பிழ‌வு ப‌டுவார்க‌ள்🤣😁😂.................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாக்குப்பதிவு எந்திரங்கள்.. வலுக்கும் சர்ச்சைகள்

 

ஒரு தடவை அழுத்தினால் இருதடவை பிஜேபிக்கு வாக்கு விழுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மைக் சின்னத்துக்கான லைற் எரியவில்லை?

புதிய தலைமுறை காணொளி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் மதியம் 3 மணிவரை 51.41% வாக்குப்பதிவு

மக்களவைத் தேர்தல்
19 ஏப்ரல் 2024, 01:31 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் மதியம் 3:00 மணிவரை மொத்தம் சராசரியாக 51.41% வாக்குகள் பதிவாகிருக்கின்றன.

தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட வாக்காளர்கள் தங்களது ஆவணங்களோடு, தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று மாலை 6 மணி வரை வாக்கு செலுத்தலாம்.

இந்தத் தேர்தலில் பொதுமக்களுடன், முக்கியத் தலைவர்களும் பிரபலங்களும் வாக்களித்து வருகிறார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எஸ்.ஐ.டி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்தினருடன் நடந்தே சென்று வாக்கு செலுத்தினார்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி வாக்கு சாவடியில் அண்ணாமலை வாக்களித்தார்.

தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார்.

சேலம் சிலுவம்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிதம்பரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம், சென்னை சாலிகிராமத்தில் பா.ஜ.க தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்தனர்.

தருமபுரியில் பாமக வேட்பாளர் சௌம்யா அன்புமணியும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் வாக்களித்தனர்.

 
மக்களவைத் தேர்தல்

தமிழகத்தில் 51.41% வாக்குப்பதிவு

தமிழகத்தில் மதியம் 3:00 மணியின் வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆனையம் வெளியிட்டிருக்கிறது.

தமிழகத்தில் மொத்தம் 51.41% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.

அதிகபட்சமாக தர்மபுரியில் 57.86% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.

அதைத்தொடர்ந்து இரண்டாமிடத்தில் 57.67% வாக்குகளுடன் நாமக்கல்லும், 57.34% வாக்குகளுடன் கள்ளக்குறிச்சியும் இருக்கின்றன.

மாநிலத்திலேயே ஆகக்குறைவாக மத்திய சென்னை தொகுதியில் 41.47% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.

முன்னர் செய்தியாளர்களிடம் பேசியிருந்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, வெயில் அதிகமாக இருப்பதும் சென்னையில் குறைந்த அளவே வாக்குகள் பதிவானதற்கு காரணமாக இருக்கலாம் என்றார். அதற்காக வாக்குச்சாவடிகளில் பந்தல், இருக்கைகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தல்
படக்குறிப்பு,வெறிச்சோடிக் காணப்பட்ட பரந்தூர் வாக்குச்சாவடி

தேர்தலைப் புறக்கணித்த தமிழக கிராமங்கள்

பரந்தூர் கிராமம், காஞ்சிபுரம்:

சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்து 600 நாட்களுக்கும் மேலாக பரந்தூர் நடத்தும் போராட்டத்தின் ஒரு பகுதியாக தேர்தலைப் புறக்கணித்துள்ளதாக பரந்தூர் மக்கள் கூறுகின்றனர்.

மொத்தம் 1,375 வாக்குகள் உள்ள இந்தக் கிராமத்தின் மக்களை வாக்களிக்க வலியுறுத்தி வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் கிராம மக்கள் யாரும் வாக்களிக்க போவதில்லை என்றும் அம்மக்கள் பிபிசி தமிழிடம் கூறினர்.

திருமங்கலம் தொகுதியில் 5 கிராமங்கள்:

விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 5 கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து வருகின்றனர். அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் கோழிக் கழிவு மூலம் உற்பத்தி செய்யப்படும் கெமிக்கல் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னம்பட்டி, ஓடைப்பட்டி, சோளம்பட்டி, பேக்குளம், உன்னிப்பட்டி ஆகிய கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு பதிவு முன்னிட்டு புறக்கணித்து வருகின்றனர்.

மக்களவைத் தேர்தல்
படக்குறிப்பு,தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் உள்ள வாக்குசாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது

ஜோதிஅள்ளி கிராமம், தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் ரயில்வே தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்காததால் நாடாளுமன்ற ஒட்டுமொத்த கிராம மக்களும் தேர்தலை புறக்கணித்திருக்கின்றனர்.

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிம் பாலக்கோடு சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஜோதிஹள்ளி கிராமத்தில் நீண்ட நாட்களாக ரயில்வே தரைபாலம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கையை முன்வைத்து வந்தனர்.

இதுவரை எந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தவராததால் ஒட்டுமொத்த கிராம மக்களும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

இக்கிராமத்தில் 1,436 வாக்குகள் உள்ளன. இதுவரை ஒருவாக்கு கூட பதிவாகவில்லை.

பொட்டலூரணி, தூத்துக்குடி:

தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி கிராம மக்கள் அப்பகுதியிலுள்ள மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பொட்டலூரணி கிராமத்தில் ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையில் பணியாற்றுபவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்தக் கிராமத்தைச் சுற்றி மூன்று தனியார் மீன் கழிவு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் இரவு நேரங்களில் வெளியேறும் நச்சுப் புகை காரணமாக அந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள், நோயாளிகள், பொதுமக்கள் ஆகியோர் மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வருவதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர்.

இந்த மீன் கழிவு ஆலைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மூட வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக பொட்டலூரணி கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதுவரை இந்த பிரச்சனைக்கு தீர்வு காண எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி கிராம மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து வீடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் கருப்பு கொடிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தக் கிராமத்தில் மொத்தம் உள்ள 931 வாக்குகளில் இதுவரை 15 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

மக்களவைத் தேர்தல், வேங்கைவயல்
படக்குறிப்பு,தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுள்ள வேங்கைவயல் கிராம மக்கள்

வேங்கைவயல், புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் வாக்களிக்க வராமல் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளனர்.

கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி ஒரு பிரிவினர் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த விவகாரத்தில் ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை சிபிசிஐடி போலீசாரால் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. இது தொடர்பாக 139 நபர்களிடம் வாக்குமூலம் பெற்று அதில் 31 நபர்களிடம் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனையும் இரண்டு பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் செய்யப்பட்டது. டிஎன்ஏ மாதிரி பரிசோதனை ஒருவருக்கு கூட ஒத்து போகாததால் சிபிசி விசாரணை பின்னடைவை சந்தித்துள்ளது.

குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடிக்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக வேங்கை வயல் கிராம மக்கள் அறிவித்திருந்தனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்று அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறியுள்ளனர். பொதுமக்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த்

பட மூலாதாரம்,UGC

சென்னையில் வாக்களித்த திரைப்பிரபலங்கள்

சென்னையில் உள்ள வாக்குச்சாவடிகளில் தமிழ் திரைப்படப் பிரபலங்கள் வாக்களித்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார். அதேபோல்

நடிகர் தனுஷ்-உம் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலுள்ள வாக்குச்சாவடியில் தனது வக்கைச் செலுத்தின்னார்.

தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். முதல் நபராக வரிசையின் நின்று தனது வாக்கை அவர் பதிவு செய்தார்.

நடிகர் தனுஷ்

நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அப்போது பேசிய அவர், “புல்லட்டை விட வலிமையானது வாக்கு, வாக்களித்தால் தான் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க முடியும்,” என்றார். அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

சென்னை விருகம்பாக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன் வரிசையில் நின்று காலையிலேயே தனது வாக்கைச் செலுத்தினார்.

சென்னை தி.நகரில் நடிகர் பிரபு தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இன்று விடுமுறை என்று கருதி வீட்டில் இருக்க வேண்டாம். வாக்களிப்பது ஜனநாயக உரிமை. உங்கள் விருப்பப்படி அனைவரும் வாக்களியுங்கள்," என்றார்.

நடிகர் பிரபு

பட மூலாதாரம்,UGC

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா

இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 96 கோடியே 88 லட்சத்து 21 ஆயிரத்து 926 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 49,72,31,994 ஆண் வாக்காளர்களும், 47,15,41,888 பெண் வாக்காளர்களும், 48,044 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தமாக 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3.06 கோடி ஆண்கள், 3.17 கோடி பெண்கள் மற்றும் 8,467 மூன்றாம் பாலினத்தவர்கள் அடங்குவர். தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம்.

மேலும் தமிழ்நாட்டில், நூறு வயதை எட்டிய 8,765 வாக்காளர்கள் உள்ளனர். 18-19 வயதுக்கு உட்பட்ட, முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம். இதே இந்தியா முழுவதும் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 2,38,791. 18-19 வயதுக்குட்பட்ட முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 1,84,81,610 ஆகும்.

18வது மக்களவைத் தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும்.

யாரெல்லாம் வாக்கு செலுத்தலாம்?

இந்திய தேர்தல் தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் என அங்கீகரிக்கப்பட்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் வாக்கு செலுத்த முடியும். ஆனால், அதற்கு அந்த நபர் குறிப்பிட்ட தொகுதிக்குள் வரையறுக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும்.

இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் வாக்கு செலுத்த முடியாது. அதே போல் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சிறைவாசிகள் வாக்கு செலுத்த முடியாது.

 
18வது மக்களவைத் தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,உங்கள் வாக்குச்சாவடி மற்றும் வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை அறிந்துக் கொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

உங்கள் வாக்குச்சாவடியை அறிவது எப்படி?

உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறதா என்பதை அறிய அதற்காக தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள இணையதளத்திற்கு ( https://electoralsearch.eci.gov.in/ ) சென்று உங்களது விவரங்களை உள்ளிட்டு தேடிப் பார்க்கலாம்.

அதே தளத்தில் உங்களது வாக்குச்சாவடி குறித்த விவரங்களும் இடம்பெற்றிருக்கும்.

மேலும், voters.eci.gov.in என்ற இணையதளத்திலும் இந்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இதற்கு உங்களுடைய வாக்காளர் எண் தெரிந்திருக்க வேண்டும்.

இல்லாவிட்டால் 1950 என்ற எண்ணை அழைத்தோ அல்லது ECI என்று டைப் செய்து, ஓர் இடைவெளி விட்டு, உங்களின் EPIC எண்ணைப் (வாக்காளர் எண்) பதிவிட்டு குறுஞ்செய்தி அனுப்பியோ விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம்.

பொதுவாக வாக்குச் சாவடிகள் உங்களது வீட்டிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திற்குள் இருக்கும் வகையில் தான் அமைக்கப்பட்டிருக்கும்.

 
18வது மக்களவைத் தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாக உங்கள் தொகுதியின் வேட்பாளர் யார் என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

உங்கள் தொகுதி வேட்பாளர்களைப் பற்றி தெரிந்துகொள்வது எப்படி?

தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இதற்காக வழங்கப்பட்டுள்ள பக்கத்திற்கு (https://affidavit.eci.gov.in/CandidateCustomFilter) சென்று, எந்த மாநிலத்தில் எந்தத் தொகுதி எனத் தேர்வுசெய்தால், அந்தத் தொகுதியில் போட்டியிட அனுமதிக்கப்பட்ட வேட்பாளர்கள், அவர்களது சொத்து விவரங்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.

வாக்குச் சாவடியிலும் வேட்பாளர்களின் பட்டியல் மற்றும் அவர்களது சின்னங்கள் ஒட்டப்பட்டிருக்கும்.

வாக்குச்சாவடிக்கு என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்?

ஒவ்வொரு வாக்காளருக்கும் அவரது தொகுதியின் அடிப்படையில் அவர்களது பகுதியிலேயே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கும். அந்த வாக்காளர் அவருக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தான் வாக்கு செலுத்த முடியும்.

அப்படி வாக்கு செலுத்த போகும்போது, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்.

 
18வது மக்களவைத் தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,வாக்குச்சாவடிக்கு செல்லும்போது அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை எடுத்து செல்ல வேண்டும்.

தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள அடையாள அட்டைகள் என்னென்ன?

  • வாக்காளர் அடையாள அட்டை
  • ஆதார் அட்டை
  • பான் அட்டை
  • மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை
  • வங்கி அல்லது தபால் நிலையத்தில் அளிக்கப்படும் புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்குப் புத்தகம்
  • தொழிலாளர் நல அமைச்சகம் வழங்கியுள்ள உடல்நலக் காப்பீட்டு அட்டை
  • ஓட்டுநர் உரிமம்
  • பாஸ்போர்ட்
  • புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை
  • மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்திற்கான அட்டை
  • மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை
 
18வது மக்களவைத் தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும்.

வாக்குச் சாவடியில் என்ன நடக்கும்?

வாக்காளர்கள் வாக்குப்பதிவுக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டும். அங்குள்ள அதிகாரி ஒருவர், வாக்காளர் பட்டியலில் உள்ள உங்கள் பெயரையும் உங்கள் அடையாள அட்டையையும் சரிபார்த்து, சத்தமாக அதனை அறிவிப்பார்.

அதற்குப் பிறகு மற்றொரு தேர்தல் அலுவலர் உங்களது இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மையை வைத்து, ஒரு ஸ்லிப்பை அளிப்பார். பின்னர் படிவம் 17 இல் கையெழுத்திட வேண்டும். இதற்கு அடுத்த அதிகாரியிடம் நம்மிடம் உள்ள ஸ்லிப்பை கொடுத்தால், அவர் நம்மை வாக்களிக்கும் இயந்திரத்தில் வாக்களிக்க அனுமதிப்பார்.

வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். பீப் என்ற ஒலி ஏற்பட்டால், உங்கள் வாக்கு பதிவாகிவிட்டதாக அர்த்தம்.

அருகில் உள்ள VVPAT (வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை) எந்திரத்தில் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்களோ அவர்களது பெயர், சின்னம் ஆகியவை ஒரு காகிதத்தில் அச்சிடப்பட்டு 7 விநாடிகளுக்குத் தெரியும். இத்துடன் வாக்களிப்பது நிறைவடையும்.

பீப் சத்தம் வராவிட்டாலோ, விவிபாட் இயந்திரத்தில் எதுவும் தெரியாவிட்டாலோ, தேர்தல் அலுவலரை அணுக வேண்டும்.

உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்தி விட்டால் என்ன செய்வது?

உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்திவிட்டதாக நீங்கள் கண்டறிந்தால் நீங்கள் பதற்ற படவோ, திரும்பி வந்து விடவோ வேண்டாம்.

அங்கேயே உங்களது வாக்கை நீங்களே பதிவு செய்ய முடியும். அதற்கு வாக்குச் சாவடியின் தலைமை அதிகாரியிடம் புகார் அளித்து, அதற்கென உள்ள கோரிப் பெறப்பட்ட வாக்குச் சீட்டுகளில் (Tendered Ballot Paper) வாக்களிக்கலாம். இது தனியாக ஒரு உறையில் வைக்கப்படும்.

 
18வது மக்களவைத் தேர்தல்

பட மூலாதாரம்,DIPR

படக்குறிப்பு,தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார்.

தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் என்ன?

தமிழ்நாட்டில் இன்று தொடங்கியுள்ள வாக்குபதிவில், 3.32 லட்சம் தேர்தல் அலுவலர்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரும் தேர்தல் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார்.

மேலும் தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 8,050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகவும், 181 வாக்குச் சாவடிகள் மிகப் பதற்றமானவையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சான்றிதழ் வைத்துள்ள மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிக்கு வருவதற்கு மாநில அரசின் பேருந்துகளைப் பயன்படுத்தினால், கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

தேவைப்பட்டால், 1950 என்ற எண்ணை அழுத்தி, வாகன வசதிகளையும் ஏற்பாடு செய்துகொள்ளலாம். மேலும் அவர்களுக்கு வாக்குச் சாவடிகளில் முன்னுரிமை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 
18வது மக்களவைத் தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,50000த்திற்கு அதிகமான பணம் எடுத்து செல்ல வாக்குப்பதிவு முடியும் வரை கட்டுப்பாடுகள் உண்டு.

பணம் எடுத்து செல்வதற்கான கட்டுப்பாடுகள்

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் முடியும் வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் 50,000த்திற்கும் மேல் பணம் எடுத்து செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது.

இந்நிலையில் இன்று வாக்குப் பதிவு நிறைவடையும் வரை அதே விதி நீடிக்கும். ஆனால், உரிய ஆவணங்கள் இருந்தால், அந்தப் பணத்தையோ, பொருட்களையோ பறிமுதல் செய்ய வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகள்

இந்தியா முழுவதும் 18வது மக்களவைத் தேர்தல் இன்று (ஏப்ரல் 19) தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த ஒட்டுமொத்த தேர்தல்களுக்கான முடிவுகள் ஜூன் 4 2024 அன்று வெளியிடப்படும்.

https://www.bbc.com/tamil/articles/cd13q41gzl7o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

`உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்!

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

 

ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது.

இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.

 
 
 
வாக்குப்பதிவு மையம்
 
வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி
 
வாக்குச்சாவடி
 
வாக்குச்சாவடி உ.பாண்டி

வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார்.

`உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.