Jump to content

வட்டுக்கோட்டையில் இளம் குடும்பஸ்தர் கடத்தப்பட்டு வாளால் வெட்டிக் கொலை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

                           வட்டுக்கோட்டையில் வீதியால் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவரை நேற்று கும்பல் ஒன்று கடத்திச் சென்று வாளால் வெட்டிக் கொலை செய்துள்ளது.

 

                        இச்சம்பவத்தில் வட்டுக்கோட்டை - மாவடி பகுதியை சேர்ந்த தவச்செல்வம் பவித்திரன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த குடும்பஸ்தரும் அவரது மனைவியும் காரைநகரில் இருந்து வட்டுக்கோட்டை - மாவடியில் உள்ள வீட்டுக்கு சென்று கொண்டிருந்த வேளை பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகாமையில் இரண்டு கார்களில் ஆயுதங்களுடன் நின்ற சிலர் அவர்களை வழி மறித்தனர்.

இதன்போது இருவரும் தப்பித்து கடற்படை முகாமுக்குள் உள்நுழைந்தனர். இந்நிலையில் கடற்படையினர் அவர்களை வெளியே விரட்டினர். இதனால் அவர்கள் வெளியே வந்தவேளை, ஒரு காரில் மனைவியையும், அடுத்த காரில் குறித்த நபரையும் ஏற்றிக்கொண்டு குறித்த குழு அங்கிருந்து சென்றது.

பின்னர் மனைவியை சித்தங்கேணி சந்தியில் இறக்கி விட்டனர். அதன்பின்னர் மனைவி வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்வதற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் குறித்த நபரை கடத்திச் சென்றவர்கள் அவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்ட பின்னர் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையினுள் காரில் சென்று, வைத்தியசாலையில் உள்ள மாமரத்துக்கு கீழே அவரை தூக்கி வீசிவிட்டு சென்றனர்.

இந்நிலையில் வைத்தியசாலையில் இருந்த சுகாதார பணியாளர்கள் இது குறித்து வைத்தியருக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தினர். அவ்விடத்திற்கு வந்த வைத்தியர் நோயாளர் காவுவண்டி மூலம் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை சில நிமிடங்களில் அவர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

https://seithy.com/breifNews.php?newsID=314582&category=TamilNews&language=tamil

இந்தக் கொலையை கவனமாக பார்த்தால் கடற்படையினருக்கும் இந்தக் கொலைக்கும் நெருங்கிய தொடர்புள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் பலி

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பகுதியில் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த வாள்வெட்டு சம்பவம் நேற்று(11.03.2024) இடம்பெற்றுள்ளது.

இதன்போது வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 23 வயதான தவச்செல்வம் பவிதரன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வாள்வெட்டு தாக்குதல்

உயிரிழந்த இளைஞன் காரைநகருக்கு சென்று விட்டு வட்டுக்கோட்டை திரும்பும்போதே குறித்த வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

காயமடைந்தவர் வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழில் வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் பலி | One Person Was Killed In A Sword Attack In Jaffna

அத்துடன் முன்னர் நடந்த வாள்வெட்டு சம்பவத்திற்கு பழிதீர்க்கும் வகையில் குறித்த வாள்வெட்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

https://tamilwin.com/article/one-person-was-killed-in-a-sword-attack-in-jaffna-1710192255

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இளம் குடும்பஸ்தர் படுகொலை ; சந்தேகநபர்கள் மூவர் அடையாளம்

Published By: DIGITAL DESK 3

12 MAR, 2024 | 03:22 PM
image
 

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில்  இளம் குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 23 வயதான இளம் குடும்பஸ்தர் தனது மனைவியுடன் காரைநகர் பகுதிக்கு நேற்று திங்கட்கிழமை சென்று விட்டு, வட்டுக்கோட்டை நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த வேளையில் , பொன்னாலை பாலத்திற்கு அருகில் இரண்டு வாகனங்களில் காத்திருந்த சுமார் 15 பேர் கொண்ட குழுவினர் கணவன் மனைவி இருவரையும் வாகனத்தில் கடத்தி சென்றனர். 

கணவனை ஒரு வாகனத்திலும், மற்றைய வாகனத்தில் மனைவியையும் கடத்தி சென்ற வன்முறை கும்பல், மாணவியை அராலி பகுதியில் இறக்கி விட்டுள்ளனர். 

கணவனை கடத்தி சென்றவர்கள், வாகனத்தினுள் வைத்து சரமாரியாக தாக்குதல் மேற்கொன்டதுடன், வாள் வெட்டு தாக்குதலையும் மேற்கொண்டு விட்டு, வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள வைத்தியசாலை ஒன்றின் முன்பாக படுகாயங்களுடன் இளைஞனை வீசி விட்டு தப்பி சென்றுள்ளனர். 

இளைஞனை மீட்ட வைத்தியசாலை பணியாளர்கள், நோயாளர் காவு வண்டி ஊடாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி  இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். 

அதேவேளை அராலி பகுதியில் இறக்கி விடப்பட்ட மனைவி அங்கிருந்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு சென்று தன்னையும் , தனது கணவரையும் இரு வாகனங்களில் கடத்தி சென்றனர் என முறைப்பாடு செய்துள்ளார். 

முறைப்பாட்டின் பிரகாரம் கடத்தல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள வட்டுக்கோட்டை பொலிஸார் , கடத்தலில் ஈடுபட்ட மூவரை அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

இதேவேளை கொலை சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

ஆலயம் ஒன்றில் கடந்த வருடம் இடம்பெற்ற வன்முறை சம்பவம் ஒன்றில் இரு இளைஞர்கள் காயமடைந்திருந்தனர். படுகொலை செய்யப்பட்ட இளம் குடுபஸ்தரே அவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் , அதற்கு பழி தீர்க்கும் வகையில் குறித்த கொலை சம்பவம் இடம்பெற்று இருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 

யாழில் இளம் குடும்பஸ்தர் படுகொலை ; சந்தேகநபர்கள் மூவர் அடையாளம் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இளம் குடும்பஸ்தர் படுகொலை; கிளிநொச்சியில் வைத்து நால்வர் கைது!

Published By: DIGITAL DESK 3   12 MAR, 2024 | 04:39 PM

image

யாழ்ப்பாணத்தில்  திங்கட்கிழமை (11) இளம் குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த குடும்பஸ்தரும் அவரது மனைவியும் காரைநகரில் இருந்து வட்டுக்கோட்டை - மாவடியில் உள்ள வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தவேளை பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகாமையில் இரண்டு கார்களில் ஆயுதங்களுடன் நின்ற சிலர் அவர்களை வழி மறித்தனர்.

இதன்போது இருவரும் தப்பித்து கடற்படை முகாமுக்குள் உள்நுழைந்தனர். இந்நிலையில் கடற்படையினர் அவர்களை வெளியே விரட்டினர். இதனால் அவர்கள் வெளியே வந்தவேளை, ஒரு காரில் மனைவியையும், அடுத்த காரில் குறித்த நபரையும் ஏற்றிக்கொண்டு குறித்த குழு அங்கிருந்து சென்றது.

பின்னர் மனைவியை சித்தங்கேணி சந்தியில் இறக்கி விட்டனர். அதன்பின்னர் மனைவி வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்வதற்கு சென்றுள்ளார். இந்நிலையில் குறித்த நபரை கடத்திச் சென்றவர்கள் அவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்ட பின்னர் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையினுள் காரில் சென்று, வைத்தியசாலையில் உள்ள மாமரத்துக்கு கீழே அவரை தூக்கி வீசிவிட்டு சென்றனர்.

இந்நிலையில் வைத்தியசாலையில் இருந்த சுகாதார பணியாளர்கள் இது குறித்து வைத்தியருக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தினர். அவ்விடத்திற்கு வந்த வைத்தியர் நோயாளர் காவுவண்டி மூலம் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை சில நிமிடங்களில் அவர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

வட்டுக்கோட்டை - மாவடி பகுதியைச் சேர்ந்த தவச்செல்வம் பவித்திரன் (வயது 23) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடற்படை முகாமுக்கு இன்றையதினம் சென்ற தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில் கிளிநொச்சி பகுதியில் வைத்து நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அராலி மத்தி மற்றும் அராலி மேற்கு பகுதிகளைச் சேர்ந்த 25, 37, 32 மற்றும் 22 வயதுடைய நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/178543

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிழம்பு said:

ஆலயம் ஒன்றில் கடந்த வருடம் இடம்பெற்ற வன்முறை சம்பவம் ஒன்றில் இரு இளைஞர்கள் காயமடைந்திருந்தனர். படுகொலை செய்யப்பட்ட இளம் குடுபஸ்தரே அவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் , அதற்கு பழி தீர்க்கும் வகையில் குறித்த கொலை சம்பவம் இடம்பெற்று இருக்கலாம்

பக்தி படுகொலை...பழிதீர்ப்பு...23 வயது குடும்பஸ்தன்....
சாமி கும்பிடும் பொழுது கோபம் வந்தால் பெட்டிஷன்  அடியுங்கோ ஆண்டவ்னுக்கு அல்லது கோவில் நிர்வாகத்துக்கு.. அதை விட்டிடு நியாயம் கேட் கிறேன் என அடிதடிக்கு போகதையுங்கோ ....

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, putthan said:

பக்தி படுகொலை...பழிதீர்ப்பு...23 வயது குடும்பஸ்தன்....
சாமி கும்பிடும் பொழுது கோபம் வந்தால் பெட்டிஷன்  அடியுங்கோ ஆண்டவ்னுக்கு அல்லது கோவில் நிர்வாகத்துக்கு.. அதை விட்டிடு நியாயம் கேட் கிறேன் என அடிதடிக்கு போகதையுங்கோ ....

 

 

கடற்படையினரிடம் உதவிக்கு போனவர்களை துரத்த விட்டுள்ளனர்.

செங்கடலுக்கு போனால்த் தான் பாதுகாப்பு கொடுப்பார்களோ?

3 hours ago, ஏராளன் said:

இதன்போது இருவரும் தப்பித்து கடற்படை முகாமுக்குள் உள்நுழைந்தனர். இந்நிலையில் கடற்படையினர் அவர்களை வெளியே விரட்டினர். இதனால் அவர்கள் வெளியே வந்தவேளை, ஒரு காரில் மனைவியையும், அடுத்த காரில் குறித்த நபரையும் ஏற்றிக்கொண்டு குறித்த குழு அங்கிருந்து சென்றது.

 

இந்த கொலையில் கடற்படையினரையும் ஒரு தரப்பாக சேர்க்கணும் யுவர் ஆனர்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஈழப்பிரியன் said:

கடற்படையினரிடம் உதவிக்கு போனவர்களை துரத்த விட்டுள்ளனர்.

செங்கடலுக்கு போனால்த் தான் பாதுகாப்பு கொடுப்பார்களோ?

 

இந்த கொலையில் கடற்படையினரையும் ஒரு தரப்பாக சேர்க்கணும் யுவர் ஆனர்.

கடற்படை ....கடலில் வாள்வெட்டு நடந்தால் மட்டுமே பாதுகாப்பு அளிப்பார்கள் ...தரையில் வாள்வெட்டை தடுப்பதற்கு அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படவில்லை ...

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

கடற்படை ....கடலில் வாள்வெட்டு நடந்தால் மட்டுமே பாதுகாப்பு அளிப்பார்கள் ...தரையில் வாள்வெட்டை தடுப்பதற்கு அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படவில்லை ...

 

ஓஓஓ

அது தான் கோத்தபையன் தலைவராக இருந்த போது பக்கத்தில் கடற்படை முகாம் இருந்தும் 

தரையில்த் தானே நடக்கிறது என்று காலைவாரி விட்டார்களோ?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஈழப்பிரியன் said:

 

ஓஓஓ

அது தான் கோத்தபையன் தலைவராக இருந்த போது பக்கத்தில் கடற்படை முகாம் இருந்தும் 

தரையில்த் தானே நடக்கிறது என்று காலைவாரி விட்டார்களோ?

இருக்கும் இருக்கும்....ஆனால் கோத்தா சொல்லி திரிகின்றாராம் புலம் பெயர் டமிழ்ஸ் தான் தன்னை கவிழ்த்தவையள் என்று...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%

வட்டுக்கோட்டை  வாள் வெட்டுப் படுகொலை: 4 பேர் கைது!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞரொருவர் கடத்தப்பட்டு வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சிப் பகுதியில் பதுங்கியிருந்த நிலையில் நால்வரும் யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வட்டுக்கோட்டை அராலி பகுதியைச் சேர்ந்த 37, 32,25, 22 வயதானவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதுடன், சந்தேக நபர்களிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

காரைநகருக்கு சென்று விட்டு வட்டுக்கோட்டை திரும்பும்போது நேற்று இளைஞன் ஒருவர் கடத்தப்பட்டு வாள்வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 23 வயதான தவச்செல்வம் பவிதரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1373271

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

கடற்படையினரிடம் உதவிக்கு போனவர்களை துரத்த விட்டுள்ளனர்.

செங்கடலுக்கு போனால்த் தான் பாதுகாப்பு கொடுப்பார்களோ?

இந்த கொலையில் கடற்படையினரையும் ஒரு தரப்பாக சேர்க்கணும் யுவர் ஆனர்.

எனது கணவரின் சாவுக்கு காரைநகர் கடற்படையும் ஒரு காரணம் - யாழில் கடத்திக் கொல்லப்பட்டவரின் மனைவி குற்றச்சாட்டு

13 MAR, 2024 | 11:48 AM
image

எனது கணவரின் சாவுக்கு காரைநகர் கடற்படையும் ஒரு காரணம் என யாழ்ப்பாணத்தில் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட இளம் குடும்பஸ்தரின் மனைவி குற்றம் சாட்டியுள்ளார். 

காரைநகர் பகுதிக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்த கணவன், மனைவி  இருவரையும் வழியில் கடத்திச் சென்ற வன்முறை கும்பல் கணவனை படுகொலை செய்தது. 

5.JPG

இது தொடர்பாக உயிரிழந்தவரின் மனைவி தெரிவிக்கையில், 

காரைநகருக்கு சென்றுவிட்டு, மோட்டார் சைக்கிளில் நானும் எனது கணவரும் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளையில், பொன்னாலை பாலத்துக்கு அருகில் எம்மை வழிமறித்த கும்பல் வாகனத்தில் எம்மை கடத்த முயற்சித்தனர். 

அவ்வேளை, நானும் கணவரும் அவர்களிடம் இருந்து தப்பித்து அருகில் இருந்த கடற்படை முகாமுக்குள் தஞ்சம் புகுந்தோம். கடற்படையினர் எம்மை அங்கிருந்து விரட்டினார்கள். 

"எங்களை கடத்த போறாங்க, எங்களை காப்பாற்றுங்க" என கடற்படையிடம் மன்றாடினோம். ஆனால், அவர்கள் எங்களை முகாமில் இருந்து துரத்தினார்கள். 

அவ்வேளையிலே எம்மை அவர்கள் வாகனத்தில் கடத்திச் சென்றனர். 

2.JPG

கடற்படையினர் மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டு, எமக்கு அடைக்கலம் கொடுத்திருந்தால், எனது கணவரின் உயிர் பிரிந்திருக்காது. எனது கணவரின் சாவுக்கு கடற்படையும் ஒரு விதத்தில் காரணம் என தெரிவித்தார். 

உயிரிழந்தவரின் உறவினர்கள் கூறுகையில்,

கடற்படையினர் அடைக்கலம் கொடுக்காமல் இருந்தாலும், தமது முகாமுக்கு அருகில் வாகனத்துடன் நின்ற கும்பலை துரத்திவிட்டு, இவர்களை அனுப்பி வைத்திருக்கலாம். அல்லது வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருக்கலாம். 

கடற்படையின் கண் முன் இருவரை வாகனத்தில் வந்தவர்கள் கடத்திச் சென்றபோதும், கடற்படையினர் அதனை தடுக்காமலும், கடத்தல் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்காமலும் இருந்ததால், கடற்படை மீதும் எங்களுக்கு சந்தேகம் வருகிறது என தெரிவித்தனர். 

https://www.virakesari.lk/article/178600

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூரிய ஆயுதங்களால் சித்திரவதை செய்யப்பட்டே யாழில் இளம் குடும்பஸ்தர் படுகொலை : உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் தகவல்

13 MAR, 2024 | 12:06 PM
image

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் கடத்தப்பட்டு, உயிரிழந்த இளம் குடும்பஸ்தரை சித்திரவதைக்கு உட்படுத்தியே படுகொலை செய்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. 

காரைநகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று, வீடு திரும்பிக்கொண்டிருந்த கணவன், மனைவி இருவரையும் பொன்னாலை பாலத்துக்கு அருகில் இரண்டு வாகனங்களில் காத்திருந்த வன்முறை கும்பல் கடத்திச் சென்றுள்ளனர். 

கடத்திச் சென்றவர்கள் கணவனை தாக்கி படுகாயங்களை ஏற்படுத்திய நிலையில் வைத்தியசாலைக்கு முன்பாக வீசிச் சென்றிருந்தனர். மனைவியை சித்தங்கேணி பகுதியில் வீதியில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றிருந்தனர். 

படுகாயங்களுடன் விட்டுச் செல்லப்பட்ட கணவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

இந்நிலையில், உயிரிழந்தவரின் உடற்கூற்று பரிசோதனைகள் நேற்றைய தினம்  செவ்வாய்க்கிழமை (12) யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது. 

இதன்போது, உயிரிழந்த நபரின் உடல்களில் வெட்டுக்காயங்கள், கூரிய ஆயுதங்களால் குத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கிய காயங்கள் ஏற்பட்டதாலும், மூச்சுக் குழாய்க்குள் இரத்தம் சென்றதாலுமே மரணம் நேர்ந்துள்ளது என உடற்கூற்று பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. 

உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/178605

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இளம் குடும்பஸ்தரின் கொலைக்கு பயன்படுத்திய கார் மீட்பு!

Published By: DIGITAL DESK 3    13 MAR, 2024 | 02:48 PM

image

யாழ்ப்பாணம் பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகில் இருந்து திங்கட்கிழமை 23 வயதுடைய தவச்செல்வம் பவித்திரன் என்ற குடும்பஸ்தர் கடத்தப்பட்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கொலை குற்றச்சாட்டின் கீழ் ஐந்து சந்தேகநபர்கள் செவ்வாய்க்கிழமை (12), யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பொலிஸாரால் கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் கொலை செய்வதற்கு பயன்படுத்திய கார் அராலி மேற்கு நொச்சிக்காட்டு பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் இருந்து, யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. அவ்விடத்திற்கு விரைந்த தடயவியல் பொலிஸாரும் தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

குறித்த குடும்பஸ்தர் மீது, காரில் வைத்தே தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பாவனையற்ற வீடு ஒன்றிற்கு முன்னால் இருந்து இந்த கார் மீட்கப்பட்டுள்ளது. குறித்த காரானது நீண்ட காலம் பாவனை இல்லாமல் இருந்தது போல் தூசிபடிந்தவாறு காணப்படுவதுடன், காரின் உள்ளே இரத்தக்கறையும், கொட்டன்களும் காணப்படுகிறது.

https://www.virakesari.lk/article/178622

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் தாக்குதல் எதற்காக இவர் செய்தார்.. ??

(முன்னர் நடந்த வாள்வெட்டு சம்பவத்திற்கு பழிதீர்க்கும் வகையில் குறித்த வாள்வெட்டுத் தாக்குதல்)

  • Confused 1
Link to comment
Share on other sites

7 hours ago, ஏராளன் said:

எனது கணவரின் சாவுக்கு காரைநகர் கடற்படையும் ஒரு காரணம் - யாழில் கடத்திக் கொல்லப்பட்டவரின் மனைவி குற்றச்சாட்டு

13 MAR, 2024 | 11:48 AM
image

எனது கணவரின் சாவுக்கு காரைநகர் கடற்படையும் ஒரு காரணம் என யாழ்ப்பாணத்தில் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட இளம் குடும்பஸ்தரின் மனைவி குற்றம் சாட்டியுள்ளார். 

காரைநகர் பகுதிக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்த கணவன், மனைவி  இருவரையும் வழியில் கடத்திச் சென்ற வன்முறை கும்பல் கணவனை படுகொலை செய்தது. 

5.JPG

இது தொடர்பாக உயிரிழந்தவரின் மனைவி தெரிவிக்கையில், 

காரைநகருக்கு சென்றுவிட்டு, மோட்டார் சைக்கிளில் நானும் எனது கணவரும் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளையில், பொன்னாலை பாலத்துக்கு அருகில் எம்மை வழிமறித்த கும்பல் வாகனத்தில் எம்மை கடத்த முயற்சித்தனர். 

அவ்வேளை, நானும் கணவரும் அவர்களிடம் இருந்து தப்பித்து அருகில் இருந்த கடற்படை முகாமுக்குள் தஞ்சம் புகுந்தோம். கடற்படையினர் எம்மை அங்கிருந்து விரட்டினார்கள். 

"எங்களை கடத்த போறாங்க, எங்களை காப்பாற்றுங்க" என கடற்படையிடம் மன்றாடினோம். ஆனால், அவர்கள் எங்களை முகாமில் இருந்து துரத்தினார்கள். 

அவ்வேளையிலே எம்மை அவர்கள் வாகனத்தில் கடத்திச் சென்றனர். 

2.JPG

கடற்படையினர் மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டு, எமக்கு அடைக்கலம் கொடுத்திருந்தால், எனது கணவரின் உயிர் பிரிந்திருக்காது. எனது கணவரின் சாவுக்கு கடற்படையும் ஒரு விதத்தில் காரணம் என தெரிவித்தார். 

உயிரிழந்தவரின் உறவினர்கள் கூறுகையில்,

கடற்படையினர் அடைக்கலம் கொடுக்காமல் இருந்தாலும், தமது முகாமுக்கு அருகில் வாகனத்துடன் நின்ற கும்பலை துரத்திவிட்டு, இவர்களை அனுப்பி வைத்திருக்கலாம். அல்லது வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருக்கலாம். 

கடற்படையின் கண் முன் இருவரை வாகனத்தில் வந்தவர்கள் கடத்திச் சென்றபோதும், கடற்படையினர் அதனை தடுக்காமலும், கடத்தல் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்காமலும் இருந்ததால், கடற்படை மீதும் எங்களுக்கு சந்தேகம் வருகிறது என தெரிவித்தனர். 

https://www.virakesari.lk/article/178600

கடற்படையினருக்கு நாலு போத்தல் சாராயம் வாங்கிக் கொடுத்து இருப்பினம் அந்தக் கும்பல். 

இலங்கை இராணுவத்தினர் / கடற்படையினர் லீவு காலத்தில் தங்கள் சொந்த கிராமங்களுக்கு சென்று செய்யும் வக்கிரமான செயல்கள் பற்றி சிங்கள ஊடகங்களும், சில தமிழ் சமூகவலைத்தளத்தில் இயங்குகின்றவர்களும் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். அவற்றில் பல, யாழில் பகிரக் கூசும் அளவுக்கான விடயங்கள்.

Link to comment
Share on other sites

8 hours ago, ஏராளன் said:

"எங்களை கடத்த போறாங்க, எங்களை காப்பாற்றுங்க" என கடற்படையிடம் மன்றாடினோம். ஆனால், அவர்கள் எங்களை முகாமில் இருந்து துரத்தினார்கள். 

அவ்வேளையிலே எம்மை அவர்கள் வாகனத்தில் கடத்திச் சென்றனர். 

தமிழ் அரசியல் வாதிகள் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும். இது ஒரு பாரதூரமான நிகழ்வு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, பிழம்பு said:

ஆலயம் ஒன்றில் கடந்த வருடம் இடம்பெற்ற வன்முறை சம்பவம் ஒன்றில் இரு இளைஞர்கள் காயமடைந்திருந்தனர். படுகொலை செய்யப்பட்ட இளம் குடுபஸ்தரே அவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக

மனைவி பாவம்தான் ஆனாலும் இறந்தவர் ஒன்றும் பரிதாபத்துக்குரியவர் அல்ல.

குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் கூடுமிடம் என்றுகூட பார்க்காது ஒரு ஆலய வளாகத்தில் வாள்வெட்டு நடத்தி யாழின் அமைதியை முதலில் குலைத்தது அவர்,

அவர்மீது தாக்குதல் நடத்தி யாழின் அமைதியை இரண்டாவது தடவையாக குலைத்தது  இவர்கள். கடற்படை இவரை காப்பாற்றியிருந்தாலும் யாழ்நகரில் வாழும்வரை கண்டிப்பாக இவர் தொடர்ந்து குறிவைக்கப்பட்டுக்கொண்டே இருந்திருப்பார்.

ஏனென்றால் இவரும் இவர் எதிரிகளும் வெட்டினால்தான் எதிரிக்கு பயத்தை ஏற்படுத்தலாம் தமக்கு கெளரவம் என்று வாழ்கிறவர்கள்.

இரு கூட்டம் மீதும் கவலையில்லை, பொதுமக்களுக்கு இடைஞ்சல் இல்லாதது மெது மெதுவாக அழியலாம் தப்பில்லை.

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை; சந்தேகநபர்களை பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி

Published By: DIGITAL DESK 3   14 MAR, 2024 | 10:06 AM

image

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதான ஐவரையும் 24 மணி நேரம் பொலிஸ் தடுப்பு காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்க மல்லாகம் நீதவான் நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது. 

காரைநகர் பகுதிக்கு சென்று விட்டு, வீடு திரும்பிக்கொண்டிருந்த கணவன் மனைவியை பொன்னாலை பாலத்திற்கு அருகில் வைத்து இரு வாகனத்தில் வன்முறை கும்பல் கடத்தி சென்று கணவனை தாக்கி படுகாயம் ஏற்படுத்திய நிலையில் கணவன்  வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், கிளிநொச்சி பகுதியில் தலைமறைவாக இருந்த அராலி பகுதியை சேர்ந்த நான்கு சந்தேக நபர்களை கைது செய்தனர். 

அதேவேளை வட்டுக்கோட்டை பகுதியில் வைத்தும் ஒரு சந்தேகநபரை கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அராலி பகுதியில் ஆட்களற்ற வீடொன்றில் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பொலிஸார் மீட்டனர். 

காரினுள் இரத்த கறைகள் காணப்பபட்டதுடன், கொட்டான்கள், இரும்பு கம்பி என்பவையும் காணப்பட்டுள்ளன. 

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 05 சந்தேக நபர்களையும், மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய பொலிஸார், பிரதான சந்தேக நபரை கைது செய்யவில்லை எனவும், கொலை சம்பவம் தொடர்பிலும், கொலை தொடர்பிலான சான்று ஆதாரங்களை பெற வேண்டிய தேவைகளும் உள்ளதனால், ஐந்து சந்தேக நபர்களையும் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்ய மன்றில் அனுமதி கோரினர். 

அதனை அடுத்து ஐந்து சந்தேகநபர்களையும் பொலிஸ் காவலில் வைத்து 24 மணி நேரம் விசாரணைகளை முன்னெடுக்க மன்று அனுமதி அளித்தது. 

https://www.virakesari.lk/article/178680

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வட்டு. இளைஞனை கடத்த கடற்படையினர் உதவி ; காணொளி வெளியீடு

வட்டுக்கோட்டை இளைஞனை கடத்தி கொலை செய்வதற்கு கடற்படையினரும் ஒரு வகையில் காரணம் என கொலை செய்யப்பட்டவரின் மனைவி குற்றம் சாட்டியுள்ள நிலையில், இளைஞனை கடத்துவதற்கு கடற்படையினர் உதவும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. 

தனது மனைவியுடன் காரைநகர் பகுதிக்கு திங்கட்கிழமை (11)  மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு , தனது வீடு நோக்கி திரும்பிக்கொண்டிருந்த இளைஞனையும் , அவரது மனைவியையும் பொன்னாலை பால பகுதியில் உள்ள கடற்படை முகாமிற்கு அருகில் வைத்து , வன்முறை கும்பல் ஒன்றினால் வாகனத்தில் கடத்தி செல்லப்பட்டு , இளைஞன் மிக மோசமான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு , படுகொலை செய்யப்பட்டார். 

கடத்தி சென்ற இளைஞனின் மனைவியை சித்தன்கேணி பகுதியில் இறக்கி விட்டு வன்முறை கும்பல் தப்பி சென்று இருந்தது. 

வன்முறை கும்பல் தம்மை வழிமறித்து ,தாக்கி கடத்த முற்பட்ட வேளை , தாம் உதவி கோரி கடற்படை முகாமிற்கு சென்ற வேளை அங்கிருந்த கடற்படையினர் தம்மை தாக்கி விரட்டினர் எனவும் , தனது கணவரின் படுகொலைக்கு கடற்படையினரும் காரணம் என படுகொலை செய்யப்பட்ட இளைஞனின் மனைவி தெரிவித்து இருந்தார். 

இந்நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் , கடற்படை முகாமில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமரா காணொளிகளை புலனாய்வாளர்கள் பெற்று விசாரணைகளை முன்னெடுத்தனர். 

காணொளியில் , இளைஞனும் மனைவியும் தஞ்சம் கோரி முகாமுக்கு ஓடி வருவதும் , அங்கு கடற்படையினர் அவர்களை தாக்குவதும் , வன்முறை கும்பல் கடற்படையின் கண் முன்னே முகாம் பகுதியில் வைத்தே கணவன் மனைவியை கடத்தி செல்வதும் பதிவாகியுள்ளது. 

கடற்படையினர் துப்பாக்கிகளுடன் கடத்தல் காரர்களுக்கு உதவி செய்வது காணொளியில் தெளிவாக பதிவாகியுள்ள நிலையில் கடத்தலுக்கு கடற்படையினர் உதவினார்கள் என மனைவியின் குற்றச்சாட்டுக்கு காணொளி வலு சேர்ந்துள்ளது.

எம்.றொசாந்த் 

image_256f523a58.jpg

 

https://www.tamilmirror.lk/செய்திகள்/வட்டு-இளைஞனை-கடத்த-கடற்படையினர்-உதவி-காணொளி-வெளியீடு/175-334659

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/3/2024 at 20:56, ஈழப்பிரியன் said:

கடற்படையினரிடம் உதவிக்கு போனவர்களை துரத்த விட்டுள்ளனர்.

செங்கடலுக்கு போனால்த் தான் பாதுகாப்பு கொடுப்பார்களோ?

இந்த கொலையில் கடற்படையினரையும் ஒரு தரப்பாக சேர்க்கணும் யுவர் ஆனர்.

CCTV-750x375.jpg

வட்டுக்கோட்டை இளைஞனின் மரணத்துடன் கடற்படையினருக்கு தொடர்பு?

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இளைஞனின் மரணத்துடன் கடற்படையினருக்கும் தொடர்பு இருப்பதாக கொலை செய்யப்பட்டவரின் மனைவி குற்றம் சுமத்தியிருந்த நிலையில், கடற்படையினரின் முன்நிலையில் இளைஞன் தாக்கப்பட்டு கடத்தப்படுகின்ற CCTV காணொளிக் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

இளைஞனை கடத்தி கொலை செய்வதற்கு கடற்படையினர் உதவி செய்திருந்தாக கொலை செய்யப்பட்டவரின் மனைவி தொடர்ந்து குற்றம் சுமத்தியிருந்தார். தற்போது வெளியாகியுள்ள வீடியோ காட்சியில் பல அதிர்ச்சி தரும் விடயங்கள் பதிவாகியுள்ளன.

கடந்த 11 ஆம் திகதி கொலை செய்யப்பட்ட இணைஞன் தனது மனைவியுடன் காரைநகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற பின்னர் வீடு திரும்பும்போது வானத்தில் வந்த குழுவினரால் கடத்தப்பட்டிருந்தார்.
பொன்னாலை பால பகுதியில் உள்ள கடற்படை முகாமிற்கு அருகில் வைத்து கடத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எனினும் குறித்த வன்முறைக் கும்பல், கொலை செய்யப்பட்ட இளைஞனின் மனைவியை சித்தன்கேணி பகுதியில் இறக்கி விட்டு தப்பிச் சென்றிருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்முறை கும்பல் தம்மை வழிமறித்து, தாக்கி கடத்த முற்பட்ட வேளை, தாம் உதவி கோரி கடற்படை முகாமிற்கு சென்றிருந்தாக கொலை செய்யப்பட்ட இளைஞனின் மனைவி குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அங்கிருந்த கடற்படையினர் தம்மை தாக்கி விரட்டியிருந்தாகவும் இளைஞனின் மனைவி தெரிவித்துள்ளார். இந்நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், கடற்படை முகாமில் பொருத்தப்பட்டிருந்த CCTV காணொளிகளை புலனாய்வாளர்கள் பெற்று தற்போது விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

காணொளியில், இளைஞனும் மனைவியும் தஞ்சம் கோரி முகாமுக்கு ஓடி வருவதும், அங்கு கடற்படையினர் அவர்களை தாக்குவதும், வன்முறை கும்பல் கடற்படையின் முன்நிலையில் கணவன் மற்றும் மனைவியை கடத்தி செல்வதும் பதிவாகியுள்ளது.

கடற்படையினர் துப்பாக்கிகளுடன் கடத்தல் காரர்களுக்கு உதவி செய்வது காணொளியில் தெளிவாக பதிவாகியுள்ள நிலையில் கடத்தலுக்கு கடற்படையினர் உதவினார்கள் என மனைவியின் குற்றச்சாட்டுக்கு காணொளி வலு சேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1373483

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்திக் கொலை: குற்றச்சாட்டில் கைதான நால்வருக்கு 28ஆம் திகதி வரை விளக்கமறியல்

Published By: VISHNU   15 MAR, 2024 | 06:13 PM

image

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி படுகொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் நால்வரை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை தனது மனைவியுடன் காரைநகருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீடு திரும்பியவர்களை பொன்னாலை பால பகுதியில் உள்ள கடற்படையின் முகாம் முன்பாக வைத்து வன்முறை கும்பல் கடத்தி சென்றது.

கணவனை ஒரு வாகனத்திலும், மனைவியை ஒரு வாகனத்திலும் கடத்திய வன்முறை கும்பல், மனைவியை சித்தங்கேணி பகுதியில் இறக்கி விட்டு சென்றது. கணவனை கடத்தி சென்றவர்கள் கணவனை கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகாயங்களுடன் வட்டுக்கோட்டை வைத்திய சாலை முன்பாக வீசி சென்றனர்.

படுகாயத்துடன் காணப்பட்டவரை வைத்தியசாலை பணியாளர்கள் மீட்டு யாழ். போதனாவில் அனுமதித்த நிலையில் உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் வட்டுக்கோட்டையில் ஒரு இளைஞனை கைது செய்தனர். அதேவேளை கிளிநொச்சியில் பதுங்கியிருந்த அராலி பகுதியை சேர்ந்த நான்கு பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை கடந்த புதன்கிழமை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தி, கிளிநொச்சியில் கைதான நால்வரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். ஆகவே அவர்களை 48 மணிநேரம் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என மன்றில் விண்ணப்பம் செய்தனர்.

பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற, மன்று நால்வரையும் 48 மணிநேரம் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது. மற்றைய சந்தேக நபரை எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டது. அத்தோடு அன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கும் கட்டளையிட்டது.

அந்நிலையில் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்ட நால்வரையும்  வெள்ளிக்கிழமை (15) மன்றில் முற்படுத்திய வேளை அவர்களை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை இளைஞன் கடத்தப்படும் போது கடற்படை முகாமில் இருந்த நான்கு கடற்படையினரிடம் பொலிஸார் வாக்குமூலங்களை பெற்றுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வன்முறை கும்பல் தம்மை கடத்த முற்பட்ட வேளை கடற்படை முகாமினுள் தஞ்சம் கோரி தாம் சென்ற வேளை, கடற்படையினர் அடைக்கலம் கொடுக்காது, தம்மை அடித்து விரட்டி, கடத்தலுக்கு ஒரு வகையில் உதவி இருந்தனர் என உயிரிழந்தவரின் மனைவி குற்றம் சாட்டி வரும் நிலையில், கடற்படை முகாம் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவில் கடற்படையினர் தஞ்சம் கோரி வந்தவர்களை, விரட்டுவதும், கடற்படையின் அருகில் வைத்தே, வன்முறை கும்பல் தம்பதியினரை கடத்தி செல்லும் காட்சி நேற்றைய தினம் வியாழக்கிழமை ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/178819

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/3/2024 at 09:05, விசுகு said:

முதல் தாக்குதல் எதற்காக இவர் செய்தார்.. ??

(முன்னர் நடந்த வாள்வெட்டு சம்பவத்திற்கு பழிதீர்க்கும் வகையில் குறித்த வாள்வெட்டுத் தாக்குதல்)

இவர் முன்னர் இருவர் மீது வாள்வெட்டு நடாத்தியதாக போலீசார் கூறுகின்றார்கள் என வீரகேசரி சொல்கின்றது.

மேற்படி தகவல்கள் உண்மை எனில்,

வாள்வெட்டு நடாத்திய இவரை முன்னமே இனம் கண்டு சட்ட நடவடிக்கை எடுத்தார்களோ தெரியாது. அப்படி சட்ட நடவடிக்கை எடுத்து இருந்தால் இந்த கொலை நடைபெறாமல் போயிருக்க வாய்ப்பு உள்ளது.

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயம் said:

இவர் முன்னர் இருவர் மீது வாள்வெட்டு நடாத்தியதாக போலீசார் கூறுகின்றார்கள் என வீரகேசரி சொல்கின்றது.

மேற்படி தகவல்கள் உண்மை எனில்,

வாள்வெட்டு நடாத்திய இவரை முன்னமே இனம் கண்டு சட்ட நடவடிக்கை எடுத்தார்களோ தெரியாது. அப்படி சட்ட நடவடிக்கை எடுத்து இருந்தால் இந்த கொலை நடைபெறாமல் போயிருக்க வாய்ப்பு உள்ளது.

 இறந்த நபர் முதலில் சாதிய பிரச்சனை காரணமாக வாள் வெட்டு நடத்தியதாக சில தகவல்கள் கூறுகின்றது ....அதன் தொடர்சி தான் இது ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நியாயம் said:

இவர் முன்னர் இருவர் மீது வாள்வெட்டு நடாத்தியதாக போலீசார் கூறுகின்றார்கள் என வீரகேசரி சொல்கின்றது.

மேற்படி தகவல்கள் உண்மை எனில்,

வாள்வெட்டு நடாத்திய இவரை முன்னமே இனம் கண்டு சட்ட நடவடிக்கை எடுத்தார்களோ தெரியாது. அப்படி சட்ட நடவடிக்கை எடுத்து இருந்தால் இந்த கொலை நடைபெறாமல் போயிருக்க வாய்ப்பு உள்ளது.

ஊர்களில் சட்ட பூர்வமாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிக்கு தண்டனை வழங்கினாலும்.... 
சம்பந்தப்பட்டவர்களுக்குள் பழிக்கு பழி எனும் இன்னொரு நடவடிக்கை என்று உள்ளது. அது 20,30 வருடங்கள் காத்திருந்தும் பழிக்குப்பழி  நிறைவேற்றப்பட்டே தீரும். :cool:

  • Like 2
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 👍....... முன் அனுபவம் தேவையில்லை என்று சில வேலைக்கான விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும். அப்படித்தான் இங்கேயும் நினைத்து உள்ளே வருகின்றார்கள். ஒரு துறையில் சிறப்புத் தேர்ச்சியும், திறமையும், ஆளுமையும் இருப்பவர்கள் எல்லா துறைகளிலும் அப்படியே சிறப்பாக வருவார்கள், செய்வார்கள் என்று கருதுவது முதிர்ச்சி அடையாத ஜனநாயகத்தின் ஒரு இயல்பு என்று சமீபத்தில் ஒரு இடத்தில் வாசித்திருந்தேன். அப்படியே பொருந்துகின்றது.
    • என் நேர்மையான பதில் இது: புலிகளை நான் நேரடியாகவும், நாசூக்காகவும் தாக்குவதில்லை. ஆனால், புலிகள் செய்த தவறுகள் என்று நான் கருதுபவற்றை நான் நேரடியாகவே எழுதி "இது முட்டாள் தனம், இது தூர நோக்கில்லாத செயல், இது தவறு" என்று எழுதியிருக்கிறேன். இதை, சில வருடங்கள் முன்பு வரை உரிய திரிகளில் எழுதி வந்திருக்கிறேன். யாழ் நிர்வாகம் பகிரங்கமாக "புலிகளை குறை சொல்வது தேசியத்தை நலிவுறச் செய்யும்" என்று இதற்கு மறைமுகத் தடை விதித்த பின்னர் - அந்தக் கருத்தோடு உடன்பாடில்லா விட்டாலும் - தீவிரமாக புலிகளின் செயல்களை பற்றி நானாக எதுவும் எழுதவில்லை. ஆனால், புலிகள் பற்றி எழுத வேண்டிய தேவையை தமிழ் மக்களின் தற்போதைய நிலைக்கு காரணமாக 196 நாடுகளையும், சம்பந்தரையும்  இன்ன பிற தரப்புகளையும் மட்டும் குற்றம் சாட்டும் "மடை மாற்றும்" உறவுகள் ஏற்படுத்துகிறார்கள். நேர்மை பற்றிப் பேசுகிறீர்கள், இதே நேர்மையை அந்த மடை மாற்றும் கள உறவுகளிடமும் எதிர்பாருங்கள், விளக்கம் கேளுங்கள். உதாரணமாக, இங்கே சம்பந்தன் செய்தது (இந்தியாவில் போய் நின்றது) வன்னி மக்களின் உயிரைப் பறித்ததா அல்லது தடுத்து வைக்கப் பட்டதும், அவர்கள் மேல் சிங்களவன் குண்டு போட்டதும் உயிரைப் பறித்ததா? இது ஒரு எளிமையான காரண காரியக் கேள்வி. இதற்கு நேரடியாகப் பதில் சொல்ல முடியாமல் , "சம்பந்தன் ஆயுதங்களை விட அழிவு செய்தார்"என்று எழுதும் விசுகரிடம், இதே நேர்மையான பதிலை எதிர்பாருங்கள். கிடைக்கிறதா என்று பாருங்கள். என்னுடைய அபிப்பிராயம்: புலிகளின் legacy இனை அடுத்த சந்ததிக்கு அப்படியே கடத்த வேண்டியதில்லை. அப்படிச் செய்வது முட்டாள் தனம். புலிகளின் தியாகம், நிர்வாகம், போர் ஓர்மம் எல்லாம் கடத்தப் பட வேண்டிய நல்ல விடயங்கள். தூர நோக்க அரசியல் உணர்வின்மை, ஒரு பிரச்சினைக்கு ஒற்றைப் படைத் தன்மையான தீர்வை மட்டும் நாடல், ஆகிய விடயங்கள் கடத்தப் படக் கூடாது. பி.கு: இந்தப் பதில் நீங்களும் ஏனைய சில புலிகளின் பக்தியாளர்களும் விரும்பிய மாதிரி இல்லாமல் இருந்தால் மன்னியுங்கள். ஏனெனில், அவர்களைப் பொறுத்த வரை "முன்னாள் மாற்று இயக்கக் காரர், புலிகளிடம் தண்டனை பெற்றவர்கள், இந்திய/சிறிலங்கன் தரப்பிடம் கூலி வாங்குவோர்" ஆக நான் இருந்தால் அவர்களுக்கு திருப்தியாக இருக்கும்😎.
    • வடமாகாணசபையின் உத்தியோகபூர்வ இணையத் தளத்தில் இந்த இல்லங்களை மூடும் உத்தரவு தெளிவாக தெரிவிக்கப்டட நிலையில் இதை பொய்செய்தி என்று  கூற ஏன்  இப்படி கஷ்டப்பட வேண்டும்.  வட்சப் தகவல்களும் முகநூல் தகவல்களும் நம்பக தன்மை அற்றவை.  https://np.gov.lk/ta/யாழ்ப்பாணம்-தெல்லிப்பள-4/
    • ஈழத் தமிழர் அரசியலின் சீர்கேட்டுக்கு முக்கிய காரணகர்த்தாக்கள் அறம் பிறழ்ந்த ஊடகவியலாளர்கள். 1961 சத்தியாகிரகத்தின் போது ஈழநாடு பத்திரிகை ஆரம்பிக்கப்பட்ட போது,  யோகர் சுவாமிகள் ஆசி வழங்கி பேசும் போது சொன்னாராம், ஏசுவார்கள் எரிப்பார்கள் “ உண்மையை “ எழுதுங்கள், “உண்மையாய் “ எழுதுங்கள் என …. பெரும்பாலான ஊடகவியலாளர்கள் “உண்மையாய் “ எழுதுவதில்லை என்பதற்கு இது ஓர் மிகசிறந்த உதாரணம்.   Yoga Valavan Thiya 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 0 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.