Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

அண்மைய நாட்களில் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக, போக்குவரத்து மற்றும் உணவுப் பெற்றுக்கொள்ளுதல் போன்றவற்றில் பாரிய சிரமங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் முகம்கொடுத்து வருகின்றனர்.

குறுந்தூர பயணங்களுக்கு வாகன சாரதிகள் அதிக பணம் அறவிடுதல், உடமைகளைக் கொள்ளையடித்தல் சேவைக் கட்டணங்கள் மற்றும் விலைகளை அதிகரித்தல் போன்ற முகம் சுழிக்க வைக்கும் செயற்பாடுகளை சுற்றுலாப் பயணிகள் எதிர்கொள்கின்றனர்.

அண்மையில், சைவ உணவகம் ஒன்றுக்குச் சென்ற ஜேர்மனிய பிரஜைக்கு ஒரு வடை 800 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.

இது தொடர்பில் குறித்த பயணி காணொளி மூலமாக தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், இது போன்ற மீண்டும் ஒரு இது போன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கு வருகைத் தந்துள்ள ஒரு பயணி உணவு உண்பதற்காக வீதியோரக் கடை ஒன்றில் விலை விசாரித்த போது அங்கு சொல்லப்பட்ட விலையைக் கேட்டு அதே இடத்தில் வெளிப்படையாகவே தனது அதிர்ச்சியை வெளியிட்டுள்ளார்.

ஒரு கொத்து ரொட்டியின் விலை 1900 ரூபா என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கேட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணி விலையைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நிலையில், குறித்த கடையின் உரிமையாளர் விரும்பினால் வாங்குங்கள் இல்லை என்றால் சென்று விடுங்கள் என்று கடும் தொணியில் தெரிவித்துள்ளார்.

இவற்றை காணொளியாக பதிவு செய்துள்ள அந்த பயணி தன்னுடைய ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக, பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவித்த இலங்கை மீளெழுவதற்கான பிரதான இலக்கு அண்ணியசெலாவணியை ஈட்டுவதாகும்.

சுற்றுலாப் பயணிகள் மூலமாக அதிகமான வெளிநாட்டு வருமானம் கிடைக்கின்ற நிலையில், இவ்வாறான முகம் சுழிக்க வைக்கும், சுற்றுலாப் பயணிகளை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் விடயங்கள் எமது நாட்டின் வருமானத்தையும் பாதிக்கின்றது.

அத்துடன், இப்போதைய டிஜிட்டல் மயமான காலத்தில் நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களது சமூக வலைத்தளங்களில் தங்களது சுற்றுலா அனுபவங்களை நேரலையாக பகிர்ந்து கொள்ளும் போது இது போன்ற மோசடி நடவடிக்கைகள் நம் நாட்டின் மீதான நன் மதிப்பையும் பாதிக்கின்றன.

சுற்றுலாவுக்காக நமது நாட்டை நோக்கி வருகின்றவர்கள், எமது கலாசாரத்தையும், உணவு பழக்க வழக்கங்களையும், எமது பண்பாடையும் கற்றுக் கொள்ளவும், அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளவும் வருகின்றார்களேத் தவிர இவ்வாறான இக்கட்டான சூழ்நிலைகளை அல்ல...  

https://tamilwin.com/article/sri-lanka-tourism-1713179824?itm_source=parsely-detail

Edited by பெருமாள்
  • Like 2
  • Replies 138
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, ooravan said:

இதுதான் நம்ம ஆட்களின் சொர்க்கபுரி சிறீலங்காவா?

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

spacer.png

images?q=tbn:ANd9GcQHu2c5ptbSfe9yaFinKa3

அளுத்கடையில் இடியாப்பம் கொத்து ஒன்றின் விலை அதிகரிப்பை கேட்ட 
சுற்றுலா பயணியை விரட்டிய கடைக்காரர்.

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, alvayan said:

இதுதான் நம்ம ஆட்களின் சொர்க்கபுரி சிறீலங்காவா?

இல்லையண்ணை படிப்பறிவு இல்லாத தமிழ் ஒழுங்கா வாசிக்க தெரியாத பெருமாள் இந்த இணைப்பை இணைத்து இருக்கிறார் எதுக்கும் ஒருக்கா இந்த செய்தியை fact check  செய்து பார்த்து விட்டு சொல்றன் .😀

இடியாப்ப கொத்து 1800 ரூபா முழு பொய் அந்த வெள்ளை தனக்கு நிறைய யூடுப்  subscribers வேணுமென்பதற்காக விட்ட  புளுகு பொய் .😀

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
19 hours ago, ooravan said:

நீங்கள் பூலோக சொர்க்கம் இலண்டன் வந்ததில்லையா?

https://www.swlondoner.co.uk/life/14082023-five-bizarre-london-scams-that-you-need-to-know-about
 
https://theculturetrip.com/europe/united-kingdom/england/london/articles/13-scams-all-tourists-should-avoid-in-london

கனடாவில் ஒவ்வொரு மனிதனும் யேசு, புத்தர்தான் போலும்?

சுய அனுபவம்.

இலண்டனில், பரிசில் ஒரு கணிசமான விலையுள்ள பொருளை, பையை கண்ணுக்கு புலப்படும் வகையில் காரில் விட்டு நாம் யாரும் காரை பார்க் செய்வதில்லை. ஒன்றில் கையோடு எடுத்துப்போவோம் அல்லது டிக்கியில் பூட்டுவோம்.

கொழும்பில் சர்வசாதாரணமாக காரில் இவற்றை விட்டு போகிறார்கள்.

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதே போல் அளுத்கடையில் 1000 ரூபா கொத்தை 1900 ரூபாய்க்கு விற்றவர் கைது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, பெருமாள் said:

இல்லையண்ணை படிப்பறிவு இல்லாத தமிழ் ஒழுங்கா வாசிக்க தெரியாத பெருமாள் இந்த இணைப்பை இணைத்து இருக்கிறார் எதுக்கும் ஒருக்கா இந்த செய்தியை fact check  செய்து பார்த்து விட்டு சொல்றன் .😀

இடியாப்ப கொத்து 1800 ரூபா முழு பொய் அந்த வெள்ளை தனக்கு நிறைய யூடுப்  subscribers வேணுமென்பதற்காக விட்ட  புளுகு பொய் .😀

இதுக்கெல்லாம் ஏன் இப்படி வளைஞ்சு முட்டு கொடுக்க வேண்டும்.

உலகில் எந்த நாட்டில் தான் களவு இல்லை. அதுவும் டூரிஸ்ட் போகும் நாடுகளில் - இலண்டனில் இல்லாத களவா?

திப்பு சுல்தானின் வாளை களவெடுத்து, அதை பார்க்க டிக்கெட் போட்டு காசு பார்க்கும் இராஜ குடும்பத்துக்கு வாழ்க்கை பூரா விசுவாசமாய் இருப்பேன் என சத்தியம் செய்து பிராஜா உரிமை பெற்ற நாம், 1000 ரூபா கொத்தை 1900 ரூபாவுக்கு வித்தமைக்கு ஏன் இவ்வளவு கடுப்பாகிறோம்?

நடந்தது இலங்கை என்பதால் மட்டும்? 🤣. இலங்கை மேல் உள்ள ஆத்திரத்தில்.

இது உங்களுக்கு ஒரு மன நிம்மதியை தராலாம் - வேறு எதுவும் ஆகாது.

சிறிலங்லாவை, சொறிலங்கா, இந்தியாவை, ஹிந்தியா என அழைப்பது போல் உங்கள் போன்றோரின் நியாயமான கோவத்தின், சிறுபிள்ளைத்தனமான வெளிப்பாடு இது என்பது வாசிப்போர் அனைவருக்கும் தெரியும்.

ஆனால் சிங்களவன் கெட்டிக்காரன் - அளுத்கடே நானா மீது வழக்கு பாய்ந்து விட்டது. களுத்தற ஆள் காசை திரும்பி கொடுத்தபடியால் தப்ப கூடும்.

இதை வைத்தே தாம் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பில் கவனம் என பலத்த பிராசாரம் ஆரம்பமாகி விட்டது.

புறக்கணி சிறிலங்கா என கூவி விட்டு கள்ளமாய் நெக்டோ இறக்கிய வியாபாரிகள் அல்லவா நாம்?

சிறுபிள்ளைதனமாக எழுத, கோவிக்க, கைகை பிசைய சக தமிழன் மீது சேறடிக்க மட்டுமே எம்மால் முடியும்.

உலகின் மிக மோசமான விஷம். ஆற்றாமையால், கையாலாகதனத்தால் வரும் குரோதப்புத்தி.

இந்த விஷம் எவரையும் எதுவும் செய்யாது. வைத்திருப்பவரை சிறு, சிறுக சாகடித்து விடும்.

அரசியல் செய்யலாம். இலங்கையை மூர்கமாக எதிர்க்கலாம். எமது மக்கள் உரிமைக்காக போராடலாம்.

லாம் இல்லை. செய்ய வேண்டும்.

ஆனால் குரோதம் - அதன் பால் வரும் சிறுபிள்ளைத்தனம் நல்லதல்ல.

அட்வைஸ் என எடுக்க வேண்டாம், பழகிய தோஷத்துகாக சொல்கிறேன். இதே அட்டிடியூட்டுடன் எந்த விசயத்தில் இருக்கும் எவருக்கும்.

Edited by goshan_che
  • Like 3
  • Thanks 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பெல்ஜியத்தை சேர்ந்த Tim tense  என்ற  இந்த யூருப்பர் கடந்த வருடமும் இலங்கை சென்று பல வீடியோக்களை தனது யூருயூப்பில் வெளியிட்டிருந்தார். இவ்வருடமும் சென்றுருந்தார். பெரும்பாலான வீடியோக்களில் ஶ்ரீலங்காவையும் அந்நாட்டு மக்களின் hospitality யையும் புகழ்ந்தே உள்ளார்.  ஶ்ரீலங்கா சுற்றுலாவை மேற்குலகில் பிரபல்யப்படுத்தியே உள்ளார்.    இந்த வர்த்தகர் தொடர்பான விடியோவைக் கூட Avoid this man in Kaluthura என்ற தலைப்பில் சுற்றுலாப் பயணிகளுக்கான விழிப்புணர்வு பதிவாகவே வெளியிட்டுள்ளார். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

இதுக்கெல்லாம் ஏன் இப்படி வளைஞ்சு முட்டு கொடுக்க வேண்டும்.

உலகில் எந்த நாட்டில் தான் களவு இல்லை. அதுவும் டூரிஸ்ட் போகும் நாடுகளில் - இலண்டனில் இல்லாத களவா?

திப்பு சுல்தானின் வாளை களவெடுத்து, அதை பார்க்க டிக்கெட் போட்டு காசு பார்க்கும் இராஜ குடும்பத்துக்கு வாழ்க்கை பூரா விசுவாசமாய் இருப்பேன் என சத்தியம் செய்து பிராஜா உரிமை பெற்ற நாம், 1000 ரூபா கொத்தை 1900 ரூபாவுக்கு வித்தமைக்கு ஏன் இவ்வளவு கடுப்பாகிறோம்?

நடந்தது இலங்கை என்பதால் மட்டும்? 🤣. இலங்கை மேல் உள்ள ஆத்திரத்தில்.

இது உங்களுக்கு ஒரு மன நிம்மதியை தராலாம் - வேறு எதுவும் ஆகாது.

சிறிலங்லாவை, சொறிலங்கா, இந்தியாவை, ஹிந்தியா என அழைப்பது போல் உங்கள் போன்றோரின் நியாயமான கோவத்தின், சிறுபிள்ளைத்தனமான வெளிப்பாடு இது என்பது வாசிப்போர் அனைவருக்கும் தெரியும்.

ஆனால் சிங்களவன் கெட்டிக்காரன் - அளுத்கடே நானா மீது வழக்கு பாய்ந்து விட்டது. களுத்தற ஆள் காசை திரும்பி கொடுத்தபடியால் தப்ப கூடும்.

இதை வைத்தே தாம் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பில் கவனம் என பலத்த பிராசாரம் ஆரம்பமாகி விட்டது.

புறக்கணி சிறிலங்கா என கூவி விட்டு கள்ளமாய் நெக்டோ இறக்கிய வியாபாரிகள் அல்லவா நாம்?

சிறுபிள்ளைதனமாக எழுத, கோவிக்க, கைகை பிசைய சக தமிழன் மீது சேறடிக்க மட்டுமே எம்மால் முடியும்.

உலகின் மிக மோசமான விஷம். ஆற்றாமையால், கையாலாகதனத்தால் வரும் குரோதப்புத்தி.

இந்த விஷம் எவரையும் எதுவும் செய்யாது. வைத்திருப்பவரை சிறு, சிறுக சாகடித்து விடும்.

அரசியல் செய்யலாம். இலங்கையை மூர்கமாக எதிர்க்கலாம். எமது மக்கள் உரிமைக்காக போராடலாம்.

லாம் இல்லை. செய்ய வேண்டும்.

ஆனால் குரோதம் - அதன் பால் வரும் சிறுபிள்ளைத்தனம் நல்லதல்ல.

அட்வைஸ் என எடுக்க வேண்டாம், பழகிய தோஷத்துகாக சொல்கிறேன். இதே அட்டிடியூட்டுடன் எந்த விசயத்தில் இருக்கும் எவருக்கும்.

இந்த விடயத்தில் எனக்காகவும் சேர்த்தே அறிவுரை சொல்லியிருக்கிறீர்கள் என்பதால் நன்றிக் குறி போட்டிருக்கிறேன்!

பி.கு: நீங்களும் இனி பப்புக்குப் போய் டயற் பெப்சி குடிப்பதை க் கைவிட வேண்டும்😎. அப்படி ஒரு வெண்டிங் மெசின் கூட இல்லையா லண்டனில் டயற் பெப்சி எடுக்க?

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
22 minutes ago, Justin said:

இந்த விடயத்தில் எனக்காகவும் சேர்த்தே அறிவுரை சொல்லியிருக்கிறீர்கள் என்பதால் நன்றிக் குறி போட்டிருக்கிறேன்!

பி.கு: நீங்களும் இனி பப்புக்குப் போய் டயற் பெப்சி குடிப்பதை க் கைவிட வேண்டும்😎. அப்படி ஒரு வெண்டிங் மெசின் கூட இல்லையா லண்டனில் டயற் பெப்சி எடுக்க?

சுவீட்னர் நியாபகத்தை பாதிக்குமாம் - நான் ஏற்கனவே கண்ணாடியை கட்டிலுக்கு கீழே வைத்து விட்டு, பிரிஜ்ஜுக்குள் தேடுற ஆள்🤣.

அதனால் இப்போ எல்லாம் பப்பாயா ஜூஸ் வித் அவுட் சுகர்தான். 

சொர்கம் அண்ணா இலங்கை - எங்க போனாலும் கிடைக்கும். இந்த நாட்டில் போய் பப்பாயா ஜூஸ் எண்டு கேட்டா ஒண்டு ஏதோ கெட்ட வார்த்தை மாதிரி பாக்கிறார்கள் அல்லது பப்பாளி தோட்டத்தின் விலை சொல்கிறார்கள்.

(சில கொச்சிகாய்களை தூவி விட்டுளேன் - உங்களுக்கு அல்ல, விலக்கி விட்டு குடிக்கவும்🤣).

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

இதுக்கெல்லாம் ஏன் இப்படி வளைஞ்சு முட்டு கொடுக்க வேண்டும்.

உலகில் எந்த நாட்டில் தான் களவு இல்லை. அதுவும் டூரிஸ்ட் போகும் நாடுகளில் - இலண்டனில் இல்லாத களவா?

திப்பு சுல்தானின் வாளை களவெடுத்து, அதை பார்க்க டிக்கெட் போட்டு காசு பார்க்கும் இராஜ குடும்பத்துக்கு வாழ்க்கை பூரா விசுவாசமாய் இருப்பேன் என சத்தியம் செய்து பிராஜா உரிமை பெற்ற நாம், 1000 ரூபா கொத்தை 1900 ரூபாவுக்கு வித்தமைக்கு ஏன் இவ்வளவு கடுப்பாகிறோம்?

நடந்தது இலங்கை என்பதால் மட்டும்? 🤣. இலங்கை மேல் உள்ள ஆத்திரத்தில்.

இது உங்களுக்கு ஒரு மன நிம்மதியை தராலாம் - வேறு எதுவும் ஆகாது.

சிறிலங்லாவை, சொறிலங்கா, இந்தியாவை, ஹிந்தியா என அழைப்பது போல் உங்கள் போன்றோரின் நியாயமான கோவத்தின், சிறுபிள்ளைத்தனமான வெளிப்பாடு இது என்பது வாசிப்போர் அனைவருக்கும் தெரியும்.

ஆனால் சிங்களவன் கெட்டிக்காரன் - அளுத்கடே நானா மீது வழக்கு பாய்ந்து விட்டது. களுத்தற ஆள் காசை திரும்பி கொடுத்தபடியால் தப்ப கூடும்.

இதை வைத்தே தாம் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பில் கவனம் என பலத்த பிராசாரம் ஆரம்பமாகி விட்டது.

புறக்கணி சிறிலங்கா என கூவி விட்டு கள்ளமாய் நெக்டோ இறக்கிய வியாபாரிகள் அல்லவா நாம்?

சிறுபிள்ளைதனமாக எழுத, கோவிக்க, கைகை பிசைய சக தமிழன் மீது சேறடிக்க மட்டுமே எம்மால் முடியும்.

உலகின் மிக மோசமான விஷம். ஆற்றாமையால், கையாலாகதனத்தால் வரும் குரோதப்புத்தி.

இந்த விஷம் எவரையும் எதுவும் செய்யாது. வைத்திருப்பவரை சிறு, சிறுக சாகடித்து விடும்.

அரசியல் செய்யலாம். இலங்கையை மூர்கமாக எதிர்க்கலாம். எமது மக்கள் உரிமைக்காக போராடலாம்.

லாம் இல்லை. செய்ய வேண்டும்.

ஆனால் குரோதம் - அதன் பால் வரும் சிறுபிள்ளைத்தனம் நல்லதல்ல.

அட்வைஸ் என எடுக்க வேண்டாம், பழகிய தோஷத்துகாக சொல்கிறேன். இதே அட்டிடியூட்டுடன் எந்த விசயத்தில் இருக்கும் எவருக்கும்.

நேற்று நம்ம ஈழத்து எம்.ஜி.ஆர் ஒர் யூ டியுப்பில் கதைக்கும் பொழுது, நீங்கள் மேற்கூறிய கருத்துப்பட கூறியிருந்தார்....தமிழ் மக்கள் பொங்கி ஏழ வேண்டும் ஆனால் அதிகமாக பொங்கி எழக்கூடாதாம் ..அதன் விளைவு பலாலிக்குள் நாங்கள் இப்ப போக முடியாமைக்கு காரணமாம்...

நல்ல சகுணமாம் வெடிச்சத்தம் கேட்கின்றமையால் என கண் சிமிட்டுதிறார்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, putthan said:

ஈழத்து எம்.ஜி.ஆர் ஒர் யூ டியுப்பில் கதைக்கும் பொழுது, நீங்கள் மேற்கூறிய கருத்துப்பட கூறியிருந்தார்....

இல்லை அண்ணா,

இவர் கூறுவது போராடும் ஓர்மம், வழிமுறைகள் பற்றி. இவர் கூறுவது எனக்கு துளியும் உடன்பாடில்லை.

நான் சொல்லுவது குரோதம் காரணமாக நமக்கு நாமே இலங்கை நாசாமாய் போய்விட்டது, என பொய்சொல்லி சந்தோசம் அடைந்து விட்டு, குப்புற படுப்பதை.

நாளைக்கு எழும்பி பார்த்தால் இலங்கை அப்படியேதான் இருக்கும். பழைய படி டிப்ரெசன் ஆகி - மீண்டும் வந்து ஐயோ இலங்கையில் கொள்ளை, கொள்ளை என எழுதவேண்டும்.

இப்படியான நச்சு சுழற்சி அவர்களுக்கும் நல்லது இல்லை, சமூகத்துக்கும் நல்லது இல்லை.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, goshan_che said:

இதுக்கெல்லாம் ஏன் இப்படி வளைஞ்சு முட்டு கொடுக்க வேண்டும்.

உலகில் எந்த நாட்டில் தான் களவு இல்லை. அதுவும் டூரிஸ்ட் போகும் நாடுகளில் - இலண்டனில் இல்லாத களவா?

திப்பு சுல்தானின் வாளை களவெடுத்து, அதை பார்க்க டிக்கெட் போட்டு காசு பார்க்கும் இராஜ குடும்பத்துக்கு வாழ்க்கை பூரா விசுவாசமாய் இருப்பேன் என சத்தியம் செய்து பிராஜா உரிமை பெற்ற நாம், 1000 ரூபா கொத்தை 1900 ரூபாவுக்கு வித்தமைக்கு ஏன் இவ்வளவு கடுப்பாகிறோம்?

நடந்தது இலங்கை என்பதால் மட்டும்? 🤣. இலங்கை மேல் உள்ள ஆத்திரத்தில்.

இது உங்களுக்கு ஒரு மன நிம்மதியை தராலாம் - வேறு எதுவும் ஆகாது.

அதுதானே உலகத்திலை இல்லாத பிரச்சனையா சிலோனிலை இருக்குது?
மிண்டு கொடுத்து வாழ்பவர்களுக்கு சகலதும் சகஜம்.😂

இலங்கையில் எவ்வித பிரச்சனையுமே இல்லை என நிறுவ ஒரு கூட்டம் யாழ் இணையத்தில் உள்ளது யாவரும் அறிந்ததே.🤣

Bild

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
7 minutes ago, குமாரசாமி said:

அதுதானே உலகத்திலை இல்லாத பிரச்சனையா சிலோனிலை இருக்குது?
மிண்டு கொடுத்து வாழ்பவர்களுக்கு சகலதும் சகஜம்.😂

இலங்கையில் எவ்வித பிரச்சனையுமே இல்லை என நிறுவ ஒரு கூட்டம் யாழ் இணையத்தில் உள்ளது யாவரும் அறிந்ததே.🤣

Bild

சரி விடுங்கோ…இலங்கையில் போய் இறங்கின உடன என்னை எல்லாத்தையும் உருவி போட்டு அம்மணாய் ஓட விட்டார்கள்…

யாரும் போக வேணாம் ….போகவே வேணாம்….

ஆயிரகணக்கில் போகும் வெள்ளைகள் எல்லாம் அங்க அம்மணமா அலையுதுகள்…

போதும்தானே🤣

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, goshan_che said:

சரி விடுங்கோ…இலங்கையில் போய் இறங்கின உடன என்னை எல்லாத்தையும் உருவி போட்டு அம்மணாய் ஓட விட்டார்கள்…

யாரும் போக வேணாம் ….போகவே வேணாம்….

ஆயிரகணக்கில் போகும் எல்லைகள் எல்லாம் அங்க அம்மணமா அலையுதுகள்…

போதும்தானே🤣

மற்ற நாடுகளில் இருப்பதால் இலங்கையிலும் அது இருக்கலாம் எண்டிறியள்?
சரி...ஒகே 😂

WNwr0x.gif

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, goshan_che said:

ஆயிரகணக்கில் போகும் வெள்ளைகள் எல்லாம் அங்க அம்மணமா அலையுதுகள்…

எல்லாவற்றையும் இலங்கையில் பறிகொடுத்ததினால் தானே அலைகின்றார்கள் அதையும் தெளிவாக குறிபப்பிட வேண்டும்

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, விளங்க நினைப்பவன் said:

எல்லாவற்றையும் இலங்கையில் பறிகொடுத்ததினால் தானே அலைகின்றார்கள் அதையும் தெளிவாக குறிபப்பிட வேண்டும்

உடுப்பில்லாமல் நாடு திரும்ப வெட்கப்பட்டு பல ரஸ்யர்களும் உக்ரேனியர்களும் அங்கேயே நீண்ட விசாவில் அல்லது ஓவர் ஸ்டேயில் தங்கி - சொந்தமாக ஓட்டல், உணவகங்கள் கூட நடத்துகிறார்கள் 🤣.

*அண்மையில் ஒரு பீச்சில் whites only பார்ட்டி ஏற்பாடு செய்து சர்ச்சையாகியது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, குமாரசாமி said:

மற்ற நாடுகளில் இருப்பதால் இலங்கையிலும் அது இருக்கலாம் எண்டிறியள்?
சரி...ஒகே 😂

WNwr0x.gif

களவை கள்ளன் மட்டுமே “இருக்கலாம்” என சொல்வான்.

ஆனால் ஒரு டி+வடை நானே 350 க்கு வாங்கியுள்ளேன். வெள்ளை தோல் தேவையில்லை, பாட்டா வோடும், அயர்ன் பண்ணாத சேர்டோடும் போய் ஆனால் கொழும்பு பஸ்சில் இருந்து இறங்கி கேட்டா ஆட்டோ வழமைக்கு 200, 300 கூட. சரி நமக்கு சின்ன வித்தியாசம் தானே என ஏறிப்போவது.

ஒரு டி+வடை 600, 1000 கொத்து 1800 - களவுதான். ஆனால் இதை ஏதோ போபர்ஸ் ஊழல் மாதிரி எழுதுவது ?

அந்த பெல்ஜியன் கடைசியில் காசை கொடுத்தும் வாங்காமல் - இனி ஏமாத்தாதே என சொல்லி போகிறான்.

அவன் மனிதன்.

பட்டபகல் திருடர்களை பட்டாடைகள் மறைக்குது, ஒரு பஞ்சையைதான் எல்லாம் சேர்ந்து திருடன் என்றே உதைக்குது.

-பட்டுகோட்டை-

பிகு

அடுத்த தடவை இலண்டன் வரும் போது அந்த Black Cab Taxi யில் ஏறி ஒரு 20 மைல் பயணித்து பாருங்கள். ஓட்டுவது 99% மத்திய தர ஆங்கிலேயர் மட்டும்தான்.

உங்கள் கொலிடே பட்ஜெட்டில் 50% உருவி விட்டு அனுப்புவார்கள்.

அல்லது எந்த இத்தாலிய குறிப்பாக வெனிஸ் போய் நல்ல காசை வைத்து பின் பொக்கெட்டில் வைத்து அதே அனுபவத்தை அடையலாம்.

அறுவார் ஒண்டுமில்லாத எண்ட முதலாவது ஐடி கார்ட் படத்தை செண்டிமெண்டா வச்சிருந்த பேர்சையே லவட்டினவனுக.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
33 minutes ago, goshan_che said:

ஒரு டி+வடை 600, 1000 கொத்து 1800 - களவுதான். ஆனால் இதை ஏதோ போபர்ஸ் ஊழல் மாதிரி எழுதுவது ?

நானும் நீங்களும் இலங்கையில் இருந்து வந்தவர்கள். சுத்துமாத்து சமூகத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். எனக்கோ உங்களுக்கோ அது பெரிய விடயமல்ல.

ஆனால் இந்த நிகழ்வை வெளியிட்டவர் வேறொரு நாட்டை சேர்ந்தவர்.அதுவும் அவர் ஒரு யுரியூப்பாளர். அவர் வெளியிட்ட காணொளி அவர் தம் நாடுகளுக்கும்  அதன் தொடர்புடையவர்கள் வரைக்கும் சென்று நாறடிக்கும். அவர் தன் மீதி பணத்தையும் மீள கொடுத்து தனக்குத்தானே பெருமை சேர்த்தாரே தவிர......முதல் சொன்ன நாறடிப்பு என்றுமே மீள பெறப்பட மாட்டாது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 16/4/2024 at 04:54, பெருமாள் said:

நம் நாட்டின் மீதான நன் மதிப்பையும் பாதிக்கின்றன.

அடே... நம்நாட்டில் அப்படி ஒன்று இருக்கா?

8 hours ago, goshan_che said:

சரி விடுங்கோ…இலங்கையில் போய் இறங்கின உடன என்னை எல்லாத்தையும் உருவி போட்டு அம்மணாய் ஓட விட்டார்கள்…

மறந்து போயிருக்கும் எப்படி நம்மவர் சொந்த நாட்டுக்குள்ளேயே விரட்டப்பட்டனரென. இப்போ வெளிநாட்டு இங்கையர். இப்போ விமானநிலையத்திலேயே வரவேற்பு அவர்களுக்கு!

7 hours ago, goshan_che said:

உடுப்பில்லாமல் நாடு திரும்ப வெட்கப்பட்டு பல ரஸ்யர்களும் உக்ரேனியர்களும் அங்கேயே நீண்ட விசாவில் அல்லது ஓவர் ஸ்டேயில் தங்கி - சொந்தமாக ஓட்டல், உணவகங்கள் கூட நடத்துகிறார்கள்

வெளிநாட்டினர் தங்கலாம், வேண்டியதெல்லாம் செய்யலாம் இலங்கையில் ஆனால் தமிழர் மட்டும் விரட்டப்படவேண்டியவர்கள். நாடே கொந்தளிக்கும், எரியும், ரத்த ஆறு ஓடும்  தமிழர் உரிமை பெற்றால் இலங்கையில்.. எப்படி எல்லாம் முழுப்பூசணிக்காயை மறைக்க பாடுபடுகிறார்கள்!

10 hours ago, goshan_che said:

சொர்கம் அண்ணா இலங்கை - எங்க போனாலும் கிடைக்கும்.

நீங்கள் இலங்கையில் இருந்து இதை எழுதியிருந்தால் அதற்கு வரவேற்பு  அதிகமாக இருந்திருக்கும். 

10 hours ago, putthan said:

தமிழ் மக்கள் பொங்கி ஏழ வேண்டும் ஆனால் அதிகமாக பொங்கி எழக்கூடாதாம் ..அதன் விளைவு பலாலிக்குள் நாங்கள் இப்ப போக முடியாமைக்கு காரணமாம்...

டும்... டும்.... தேர்தல் வரப்போகுது, ஐயா பலாலிக்கு ராணுவத்தோட போட்டு வந்திட்டார். அதுதான் சரியான திசை, அவரோடு பயணியுங்கள், பிடுங்கினதெல்லாம் திரும்ப பறிச்சிடுவார். காலத்துக்கு காலம் அரங்கம், நாடகம், வசனம், மாறவேண்டாமோ? எத்தனை வருடங்களாக உறவுகளை தொலைத்தவர்கள் தெருவிலே அலைகிறார்கள் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கமுடியவில்லை அவர்களை சந்திக்க திராணியில்லை, இராணுவத்தினரோடு பவனி, யாரை ஏமாற்றுகிறார் தன்னையா?     

  • கருத்துக்கள உறவுகள்
Posted

food-2.jpg

வெளிநாட்டு சுற்றுலாப் பயணியிடம் கடுமையாக நடந்து கொண்டவர் கைது!

வெளிநாட்டு சுற்றுலாப் பயணியிடம்  கடுமையாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில்  நபரொருவரைக்  கைது செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் உள்ள உணவகமொன்றில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணியொருவருக்கு உணவக உரிமையாளர்  கொத்துரொட்டியொன்றினை 1900 ரூபாய்க்கு விற்பனை செய்ய  முற்பட்டதாகவும், இதன்போது விலை அதிகமாக இருப்பதாக  சுற்றுலாப் பயணி தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதன்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில் இதனை சுற்றுலாப் பயணி தனது கெமராவில் பதிவு  சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

குறித்த வீடியோவானது வைரலானதைத் தொடர்ந்து  சந்தேகநபரான உணவு விற்பனையாளர் கைது செய்யப்பட்டதாகப்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

https://athavannews.com/2024/1378503

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

வெளிநாட்டு சுற்றுலாப் பயணியை மிரட்டிய விவகாரம்: கைது செய்யப்பட்டவருக்குப் பிணை.

வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த உணவகத்தின் உரிமையாளர் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு அளுத்கடை பகுதியிலுள்ள உணவு ஒன்றிற்கு வருகை தந்திருந்த வெளிநாட்டவர் அச்சுறுத்தப்படுவதைப் போன்ற காணொளி நேற்யைதினம் சமூக ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து உணவகத்தின் உரிமையாளர்  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் 10 இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் அவர் இன்று விடுதலை செய்யப்பட்டார்.

https://athavannews.com/2024/1378587

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொழும்பில் முன்னர் வெள்ளைகள் வீதிகளில் நடமாட முடியாது. இரண்டு மூன்று ஓட்டோக்கள் அவர்களது பக்கத்தில் ஊர்ந்தபடி சிரமம் கொடுக்கும். தற்போதைய நிலை தெரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

spacer.png

அந்த முஸ்லீம் கடைக்காரர், அல்லா பாத்துக் கொண்டிருக்கிறான் என்று சொல்லித்தான் 1350 கொத்து ரொட்டியை, 1900 ருபாய்க்கு  விற்க முயற்சி பண்ணினவர்.

Edited by தமிழ் சிறி

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'தன் வினை தன்னைச் சுடும்..................' என்று கதை போகுதே...........🤣. இந்தப் பொறியியலாளர்கள் சிலர் அநுரவை தீவிரமாக ஆதரித்திருந்தனர். இளங்குமரன் கூட அங்கே தான் வேலையில், ஒரு ஊழியராக, இருந்தார்............. இந்த துறைக்கு பொறுப்பான அமைச்சர் கூட இவர்களில் சிலருடன் ஒன்றாக வகுப்பில் இருந்தவரே..........😜.
    • 👍...................... இங்கு பலவகையான பட்டம் வழங்கும் பல்கலைகள், நிறுவனங்கள், நீங்கள் சொல்வது போலவே, இருக்கின்றன.  அனுபவங்களை, வேறு ஆற்றல்களை பட்டங்களாக மாற்றும் விளம்பரம் ஒன்றை சில மாதங்களின் முன்னர் இலங்கையிலும் பார்த்தேன். உதாரணமாக, சில கவிதைகள் எழுதி, யாராவது நாலு பேர்கள் அதை ஒத்துக் கொண்டிருந்தால் கூட, ஒரு கலாநிதிப் பட்டம் அவர்களிடம் வாங்கிக் கொள்ளலாம். கௌரவப் பட்டங்கள் வேறு இருக்கின்றன. இதை தமிழ்நாட்டில் தாராளமாகவே கொடுப்பார்கள். இங்கிருக்கும் சில நடன ஆசிரியைகள் கலாநிதிகளே. 'டாக்டர்' என்றே அழைப்பிதழ்களில் போட்டுக் கொள்வார்கள். நேர்முகத் தேர்வுகளிற்கு வருகின்றவர்கள் எந்த நாடு என்றாலும், அவர்களின் விபரத்தை பார்க்கும் போது, அவர் எந்த பல்கலையில் இருந்து வருகின்றார் என்று தெரிந்தவுடனேயே, உள்ளுக்குள் ஒரு கணக்கு ஓடும். ஐஐடிக்கும், அண்ணா பல்கலைக்கும், ஆண்டாள் அழகர் கல்லூரிக்கும் பாரிய வேறுபாடுகள் இருக்கின்றன. ஹார்வார்ட்டிற்கும், கலிஃபோர்னியா பல்கலைக்கும், ஃபீனிக்ஸ் பல்கலைக்கும் அதே போலவே.  ஒரு சிலர் விதிவிலக்காகவும் இருப்பார்கள். நான் இங்கு படிக்கும் காலத்தில், ஜோர்டானில் இருந்து இங்கு வந்த ஒரு பாலஸ்தீனியனுடன் நல்ல நட்பு இருந்தது. அசத்தலான திறமையும், அர்ப்பணிப்பும் உள்ளவன். ஆனால் அவனால் அன்று பெரிய பல்கலை ஒன்றுக்குள் நுழைய முடியவில்லை. ஒரு சிறு பல்கலையிலேயே கலாநிதிப் பட்டம் பெற்றான். ஆனால் இன்று அவன் ஒரு பெரிய பல்கலையில் பேராசிரியராக நல்ல பெயருடன் இருக்கின்றான்...........👍.          
    • யாழ்ப்பாணத்தில் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் சோலார் அனுமதி வழங்கல் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் யாழ்ப்பாணப் பிராந்தியப் பொறியியலாளர் அலுவலகம் தவறிழைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, பாதிக்கப்பட்ட பாவனையாளருக்கு உடனடியாக நீதி வழங்குமாறும் பணித்திருக்கிறது. மேலும், பாவனையாளர் ஒருவருக்கு இணைப்பு அனுமதி வழங்குவதற்காகப் பாவனையாளரிடமிருந்து பணம் அறவிடப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்படும் உள்ளக சுற்று நிருபங்கள் அல்லது பொது நடைமுறைகள் மற்றும் ஆவணங்கள் ஏதுமிருப்பின் அது பற்றித் தங்களுக்கு அறியத்தருமாறும் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பாவனையாளர் விவகாரங்களுக்கான பணிப்பாளர் யசந்த ரதுவிதான இலங்கை மின்சார சபையின் பிரதம பொறியியலாளரைக் கடிதம் மூலம் கேட்டுள்ளார்.   யாழ்ப்பாணம் - சுன்னாகம் வாரியப்புலம் பகுதியைச் சேர்ந்த மின் பாவனையாளர் ஒருவர் 2023 ஆண்டு விண்ணப்பித்த போது,  அவருக்கு அனுமதி வழங்காமல், 2024 ஆம் ஆண்டு விண்ணப்பித்த அதே இடத்தைச் சேர்ந்த மற்றொருவருக்குச் செல்வாக்கின் அடிப்படையில் பூர்த்தி செய்யப்படாத கட்டடத்துக்கு அனுமதி வழங்கியமை தொடர்பாகச் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, அவருக்கு அனுமதியை வழங்குமாறு பணிக்கப்பட்ட பின்னரும், இணைப்புக்காக ரூபா 11 இலட்சம் செலுத்துமாறு கோரியமையை ஆதாரங்களுடன் மேன்முறையீடு செய்ததை அடுத்தே இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, யாழ்ப்பாணம் பிராந்திய மின் பொறியியலாளருக்கு இவ்வாறு பணித்திருக்கிறது.   சுன்னாகத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பிராந்திய மின் பொறியியலாளர் அலுவலகத்தில் சோலார் அனுமதி பெறுவதற்காக விண்ணப்பிப்பவர்களில் பலருக்கு அனுமதி வழங்கப்படாமை, அனுமதி வழங்கப்பட்டவர்களுக்கு மீற்றர் பொருத்துவதில் பாரபட்சம் காட்டுதல் போன்ற முறைகேடுகள் குறித்து இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்துக்கும், மின் சக்தி வலு அமைச்சுக்கும், இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கும் இது வரை பல முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.   எனினும், இலங்கை மின்சார சபை அவற்றைக் கண்டும் காணாமல், முறையற்ற விதத்தில் பல அனுமதிகள் வழங்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் கவனத்தக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக அனுமதியை வழங்குமாறு உத்தரவிடப்பட்ட போதும், பிராந்திய மின் பொறியியலாளர் அவை குறித்துக் சிறிதும் கவனமெடுக்காமல் தொடர்ந்தும் முறையற்ற விதத்தில் சோலார் அனுமதிகளை வழங்கி வந்துள்ளார். அதைவிட, அனுமதி வழங்கப்பட்டவர்களுக்கு மீற்றர்களைப் பொருத்துவதிலும் முறைகேடாக நடந்து கொண்டுள்ளார் என்று பாவனையாளர்கள் பலர் முறைப்பாடு செய்துமிருந்தனர். இதேநேரம் -  இணைப்புக்கான அனுமதி வழங்கல் தொடர்பில் சுயாதீன விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மின்வலுசக்தி அமைச்சரிடம் 11 ஆம் திகதி நேரடியாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில், அனுமதிக்கு விண்ணப்பித்த ஒழுங்கு, அனுமதிக்காகப் பணம் செலுத்திய ஒழுங்கு, அனுமதி வழங்கப்பட்ட ஒழுங்கு உட்பட முறைகேடுகள் நடந்துள்ளன என்பதை உறுதிப்படுத்தக் கூடிய தகவல்களை இலங்கை மின்சார சபையிடமிருந்து தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக வாடிக்கையாளர்கள் பலர் கேட்டிருந்த போதிலும், இது வரை அத்தகைய தகவல்கள் எவையும் வழங்கப்படவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கதாகும். https://tamil.adaderana.lk/news.php?nid=197232
    • நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகர்  மொஹமட் ரிஸ்வி சாலிஹ்இ தலைமைத்துவத்தில் நம்பிக்கை மற்றும் பொறுப்புக்கூறலின் முக்கியத்துவத்தை வலியுறுத்திஇ தனது தொழில்முறை தகுதிகள் பற்றிய விபரங்களைப் பகிர்ந்துள்ளார். அவரது உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்கில் அவர்இ சான்றிதழ்கள் மூலம்இ தமது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். பாகிஸ்தானின் முல்தானில் உள்ள நிஷ்தார் மருத்துவக் கல்லூரியில் 1986இல் பெற்ற ஆடீடீளு பட்டம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் லாரிங்கோ ஓட்டோரினோலஜி டிப்ளோமா (னுடுழு) உட்பட தனது தகுதிகளை அவர் கோடிட்டுக் காட்டியுள்ளார். https://tamilwin.com/article/deputy-speaker-of-parliament-s-qualifications-1734102374
    • 1. ஊழியர் இலஞ்சம் கொடுத்து வேலை வாங்கினால் - அதை வழக்கு போட்டு விலக்க வேண்டும். 2. பாராளுமன்ற உறுப்பினர் என்பதால் எங்கேயும் திறந்த வீட்டில் குதிரை நுழைவது போல் நுழைய முடியாது. பாராளுமன்ற உறுப்பினர்க்கு பொலிஸ் அதிகாரம் இல்லை. பொலிஸ் கூட சில நடைமுறைகளை பின்பற்றியே உள்ளே நுழையலாம். 3. இவர் ஒட்டு மொத்த யாழ் மாவட்டத்தின் பிரதிநிதி. சாவகச்சேரி தொகுதியில் அதிக வாக்குகளை பெற்றார். அவ்வளவே.  நாளைக்கு அருச்சுனா உங்கள் வீட்டு குளியறைக்குள் நுழைந்தால் - அவரை தடுப்பது மக்களை தடுப்பது போல் என நினைத்து அனுமதிப்பீர்களா? எல்லாத்துக்கும் ஒரு முறை இருக்கு.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.