Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பொது வேட்பாளர் குறுகிய அரசியல்

902322522.jpg

(மாதவன்) 

தெற்குடன் இணைந்த வேட்பாளர் சாத்தியம் - சட்டத்தரணி சுவஸ்திகா தெரிவிப்பு

அரச தலைவர் தேர்தலில் தமிழ் கட்சிகள் இணைந்து தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை  நிறுத்துவது என்பது குறுகிய அரசியல் நோக்கம் கொண்டது எனத் தெரிவித்த சட்டத்தரணியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான சுவஸ்திகா அருலிங்கம் தெற்கு சிங்கள அரசியல்வாதிகளுடன் இணைந்து பேசி தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவாராயின் சாத்தியமான நிலைமைகளை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.

தமிழ் மக்கள் எதிர்ப்பு வாக்கு அரசியலில் இருந்து மீள்வதுடன் தெற்கு மக்களுடன் இணைந்து எவ்வாறு எமது  உரிமைகளை பெற முடியும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என  சட்டத்தரணியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான சுவஸ்திகா அருலிங்கம் தெரிவித்தார்.

நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் வல்லமை அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட தமிழ் பேசும் மக்கள் தேர்தல் காலங்களில் எவ்வாறு அரசியல் செயற்பாட்டில் ஈடுபடுதல் தொடர்பான கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் பேசும் மக்கள் இவ்வளவு காலமும் எதிர்பாபு வாக்குகளில் கவனம் செலுத்தி வருகின்ற நிலையில் இனி வரும் காலங்களில் தெற்கு மக்களுடன் இணைந்து எவ்வாறு தமது உரிமைகளை பெற முடியும் என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும்.

எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டு வருகிறது நானும் அதை வரவேற்பேன்.

ஆனால் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை குறுகிய அரசியல் நோக்கத்துக்காக பொது வேட்பாளராக நிறுத்துவது தமிழ் மக்களுக்கு ஆரோக்கியமற்ற விடயம்.

ஏனெனில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் அரச தலைவர் தேர்தலில் வெற்றி பெற மாட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் ஆனால் அவர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பது கேள்வியே.

ஏனெனில் தமிழ் பொது வேட்பாளரை நியமிக்கும்  தமிழ் அரசியல் தலைமைகள் தெற்கு சிங்கள அரசியல்வாதிகளுடன் இணைந்து பேசி தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தினால் தமிழ் மக்களின்  அரசியல் பிரச்சனைகள் தொடர்பில் சாதகமான முன்னெடுப்புக்களை மேற்கொள்ள முடியும்

ஆகவே தமிழ் மக்கள் தொடர்ந்தும் எதிர்ப்பு வாக்கு அரசியலை முன்னெடுப்பதை நிறுத்தி தெற்கு மக்களுடன் இணைந்து தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவார்களாயின் தமிழ் மக்கள் சார்ந்து  பிரச்சினைகளின் சாதகமான நிலைப்பாட்டினை அடைந்து கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார். (

https://newuthayan.com/article/தமிழ்_பொது_வேட்பாளர்_குறுகிய_அரசியல்; 

  • கருத்துக்கள உறவுகள்

இவவையும் யாழ் களத்தில் சேர்த்துவிடுங்கோ....😎

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ப் பொதுவேட்பாளர் என்பது நடைமுறைச் சாத்தியமற்றதொன்று! 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாலி said:

தமிழ்ப் பொதுவேட்பாளர் என்பது நடைமுறைச் சாத்தியமற்றதொன்று! 

காலையில் சுவாஸ்டிகாவின் அறிக்கையை பார்த்ததும், நீங்கள் கருத்து எழுதுவீர்கள் என நினைத்தேன். அப்படியே ஆகிற்று🤣

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்வத்திக்கா தொடர்பாக ஒரு  தொடர் ஆய்வுக்கட்டுரை  ஒன்று எழுதுவோமென்று கூகிளை ஆராயத்தொடங்கினால் ஒன்றுமே வருகுதில்லை  ☹️

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற அனுமதியளிக்கப்பட்டு, பின்னர் மறுக்கப்பட்டவர்தானே இவர்? புலிகளைப் பயங்கரவாதிகள் என்று வெளிப்படையாகக் கூறியிருக்கிறார் என்று அறிந்தேன். 

தெற்கோடு இணைந்து தமிழர்கள் தமது உரிமைகளைப் பெற்றுக்கொள்வது சாத்தியமா? இதை எப்படிச் செய்யலாம் என்று யாராவது இங்கு விளக்கினால் நல்லது.

தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது, தமிழர்களுக்கிடையே பிளவுகள் உள்ளன என்பதை வெளிக்காட்டும் ஒரு முறையாக ஏனையோரால் பார்க்கப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன என நம்புகின்றேன்.

உதாரணத்துக்கு வடக்கில் இருந்து ஒருவரை நிறுத்தினால், அவருக்கு கிழக்கு மக்கள் குறைவாக வாக்களித்தாலோ, அல்லது கிழக்கில் இருந்து ஒருவரை நிறுத்தினால், அவருக்கு வடக்கு மக்கள் குறைவாக வாக்களித்தாலோ, அதனை சிங்களம் தனக்கு சாதகமாகவே எடுத்துக் கொள்ளும்.

வடக்கு கிழக்கில் இருந்து ஒருவரை நிறுத்தி, அவரை மலையக தமிழ் மக்கள் நிராகரித்தாலும் இதே நிலை தான் (அதற்கான சாத்தியங்கள் மிக அதிகம்)

அத்துடன், அவ்வாறு நிறுத்தப்படும் ஒருவரை விட, சிங்கள கட்சியில் இருந்து நிறுத்தப்படும் ஒருவருக்கு தமிழ் மக்கள் வாக்களித்தால் நிலமை மேலும் தலைகீழாக மாறி சிங்களத்துக்கு பெரும் வாய்ப்பைக் கொடுத்ததாகி விடும். என் கணிப்பு படி, தமிழ் மக்கள் அவ்வாறு தான் நடந்து கொள்வார்கள் என நம்புகின்றேன். சஜித்துக்கோ அல்லது ரணிலுக்கோ தான் அதிகமாக வாக்களிப்பார்கள் என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மனிதவுரிமைச் சட்டத்தரணி
பெண்ணுரிமைவாதி
மனிதவுரிமைச் செயற்ப்பாட்டாளர்
இறுதியுத்தகாலத்தில் மகிந்த அரசு நடத்திய போர்க்குற்றங்களைக் கடுமையாக விமர்சித்தவர்
தொழிற்சங்க உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர்
அரகலயப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்

2 minutes ago, நிழலி said:

உதாரணத்துக்கு வடக்கில் இருந்து ஒருவரை நிறுத்தினால், அவருக்கு கிழக்கு மக்கள் குறைவாக வாக்களித்தாலோ, அல்லது கிழக்கில் இருந்து ஒருவரை நிறுத்தினால், அவருக்கு வடக்கு மக்கள் குறைவாக வாக்களித்தாலோ, அதனை சிங்களம் தனக்கு சாதகமாகவே எடுத்துக் கொள்ளும்.

இதிலிருந்து நாம் வெளியே வரவேண்டும். பிரதேசவாதம் போதும். வடக்கும் கிழக்கும் என்று தனியே இருந்தால் அழிவோம். தமிழராக இருந்தால் மட்டுமே இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளலாம். ஜனாதிபதி பதவிக்காலத்தின் முதல் பங்கினை கிழக்கைச் சேர்ந்த ஒருவரும், இரண்டாம் பங்கினை வடக்கைச் சேர்ந்த ஒருவரும் வகிக்கலாம் என்று கோட்பாட்டளவில் இருவரை முன்னிறுத்தி இதனைச் செய்துபார்க்கலாம். வெற்றிபெறுகிறோமோ இல்லையோ, குறைந்தது எமக்குள் இருக்கும் வேறுபாட்டினைக் களைந்து முன்னிறுத்திப் பார்க்கலாம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
40 minutes ago, ரஞ்சித் said:

இதிலிருந்து நாம் வெளியே வரவேண்டும். பிரதேசவாதம் போதும். வடக்கும் கிழக்கும் என்று தனியே இருந்தால் அழிவோம். தமிழராக இருந்தால் மட்டுமே இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளலாம். ஜனாதிபதி பதவிக்காலத்தின் முதல் பங்கினை கிழக்கைச் சேர்ந்த ஒருவரும், இரண்டாம் பங்கினை வடக்கைச் சேர்ந்த ஒருவரும் வகிக்கலாம் என்று கோட்பாட்டளவில் இருவரை முன்னிறுத்தி இதனைச் செய்துபார்க்கலாம். வெற்றிபெறுகிறோமோ இல்லையோ, குறைந்தது எமக்குள் இருக்கும் வேறுபாட்டினைக் களைந்து முன்னிறுத்திப் பார்க்கலாம். 

நாங்கள் தமிழர் ஒன்றாக இணைந்திருப்போம் என்ற மந்திரங்கள் இனிவரும் காலங்களில் சரிப்பட்டு வராது என நினைக்கின்றேன்.

59 minutes ago, ரஞ்சித் said:

இதிலிருந்து நாம் வெளியே வரவேண்டும். பிரதேசவாதம் போதும். வடக்கும் கிழக்கும் என்று தனியே இருந்தால் அழிவோம். தமிழராக இருந்தால் மட்டுமே இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளலாம். ஜனாதிபதி பதவிக்காலத்தின் முதல் பங்கினை கிழக்கைச் சேர்ந்த ஒருவரும், இரண்டாம் பங்கினை வடக்கைச் சேர்ந்த ஒருவரும் வகிக்கலாம் என்று கோட்பாட்டளவில் இருவரை முன்னிறுத்தி இதனைச் செய்துபார்க்கலாம். வெற்றிபெறுகிறோமோ இல்லையோ, குறைந்தது எமக்குள் இருக்கும் வேறுபாட்டினைக் களைந்து முன்னிறுத்திப் பார்க்கலாம். 

நடைமுறையில் தமிழர் ஒருவர் சனாதிபதியாக சந்தர்ப்பம் தற்சமயம் அறவே இல்லை எனும் நிலையில் இவ்வாறான கோட்பாட்டை முன்வைத்தால், அது நகைப்புக்கிடமாகவே போகும். 

வடக்கு வேட்பாளருக்கு கிழக்கு மக்கள் வாக்களிக்காமல் விடுவதோ, அல்லது கிழக்கு வேட்பாளருக்கு வடக்கு மக்கள் வாக்களிக்காமல் விடுவதோ வெறுமனே பிரதேசவாதம் என்ற வகைக்குள் வராது (நீங்களும் கூட, வடக்கு கிழக்கு என்று மட்டுமே குறுக்கிக் கொண்டு மலையக தமிழர்களை குறிப்பிடாமல் விட்டு விட்டீர்கள்.). இரு தரப்பிலும் ஆதரவை பெருவாரியாகப் பெற்றுக் கொண்ட ஒருவர் இன்று யாரும் இல்லை, வேட்பாளராக  நிறுத்துவதற்கு. அதே போன்று, தமிழ் கட்சி ஒன்று கூட இல்லை. வடக்கிலும் கிழக்கிலும் ஜேவிபி உட்பட தேசிய கட்சிகளின் செல்வாக்கு வளர்ந்து வரும் இன்றைய நிலையில் அப்படியான ஒருவர் எவரும் இல்லை.

அத்துடன் முஸ்லிம் மக்கள் ஒரு போதும் தமிழ் வேட்பாளரை ஆதரிக்கப் போவதும் இல்லை. இரு இனங்களுக்கும் இடையில் இருக்கும் பிளவை மேலும் வெளிக்காட்டிக் கொள்வதில் பலனடையப் போவது தமிழ் பேசும் இனங்கள் அல்ல.

தமிழ் கட்சிகளின் அரசியல் எப்போதும் நடைமுறைச் சாத்தியமற்ற ஒன்றை செய்வதில் தான் தேங்கி நிற்கின்றது. அப்படியான ஒன்றுதான் இந்த தமிழ் வேட்பாளரை முன்னிறுத்துவதும். 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் வேட்பாளர் என்பதை விட தமிழர்கள் ஒருமித்த குரலில் ஒருமித்த கோரிக்கையை வைத்து ஒருவரை நிறுத்தலாம். ஆனால் இது எம் இனத்தில் கனவில் மட்டுமே சாத்தியம். 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நிழலி said:

நடைமுறையில் தமிழர் ஒருவர் சனாதிபதியாக சந்தர்ப்பம் தற்சமயம் அறவே இல்லை எனும் நிலையில் இவ்வாறான கோட்பாட்டை முன்வைத்தால், அது நகைப்புக்கிடமாகவே போகும். 

வடக்கு வேட்பாளருக்கு கிழக்கு மக்கள் வாக்களிக்காமல் விடுவதோ, அல்லது கிழக்கு வேட்பாளருக்கு வடக்கு மக்கள் வாக்களிக்காமல் விடுவதோ வெறுமனே பிரதேசவாதம் என்ற வகைக்குள் வராது (நீங்களும் கூட, வடக்கு கிழக்கு என்று மட்டுமே குறுக்கிக் கொண்டு மலையக தமிழர்களை குறிப்பிடாமல் விட்டு விட்டீர்கள்.). இரு தரப்பிலும் ஆதரவை பெருவாரியாகப் பெற்றுக் கொண்ட ஒருவர் இன்று யாரும் இல்லை, வேட்பாளராக  நிறுத்துவதற்கு. அதே போன்று, தமிழ் கட்சி ஒன்று கூட இல்லை. வடக்கிலும் கிழக்கிலும் ஜேவிபி உட்பட தேசிய கட்சிகளின் செல்வாக்கு வளர்ந்து வரும் இன்றைய நிலையில் அப்படியான ஒருவர் எவரும் இல்லை.

அத்துடன் முஸ்லிம் மக்கள் ஒரு போதும் தமிழ் வேட்பாளரை ஆதரிக்கப் போவதும் இல்லை. இரு இனங்களுக்கும் இடையில் இருக்கும் பிளவை மேலும் வெளிக்காட்டிக் கொள்வதில் பலனடையப் போவது தமிழ் பேசும் இனங்கள் அல்ல.

தமிழ் கட்சிகளின் அரசியல் எப்போதும் நடைமுறைச் சாத்தியமற்ற ஒன்றை செய்வதில் தான் தேங்கி நிற்கின்றது. அப்படியான ஒன்றுதான் இந்த தமிழ் வேட்பாளரை முன்னிறுத்துவதும். 

இப்படிச் செய்தால் என்ன? வடக்கில் இருந்து ஒருவரையும் கிழக்கில் இருந்து ஒருவரையும், மலையகத்திலிருந்து ஒருவரையும் வேட்பாளர்களாக ஒரு பொது முன்னணியில் நிறுத்தி, வேட்பாளர்களுக்கன்றி, பொதுவான முன்னணிக்கு மக்களை வாக்களிக்குமாறு கேட்கலாம். வெற்றிபெறும் பட்சத்தில், ஜனாதிபதிக் காலத்தை மூன்று சம பங்குகளாகப் பிரித்து ஒவ்வொருவரையும் ஆளச் சொல்லலாம். 

வெற்றிபெற்றால் நல்லது. வெற்றிபெறாதுவிட்டாலும், இதனைக் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டால், எதிர்காலத்தில் பொதுவான முன்னணியொன்றினை வைத்தே அரசியல் செய்யலாம்.

இந்த நடைமுறை சில வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் பரீட்சித்துப் பார்க்கப்பட்டது. ஒரு தேர்தலில் இரு பிரதமர்கள். ஒருவர் முதற்பாதியையும், மற்றையவர் இரண்டாவது பாதியையும் ஆட்சி செய்தனர். 

16 minutes ago, ரஞ்சித் said:

இப்படிச் செய்தால் என்ன? வடக்கில் இருந்து ஒருவரையும் கிழக்கில் இருந்து ஒருவரையும், மலையகத்திலிருந்து ஒருவரையும் வேட்பாளர்களாக ஒரு பொது முன்னணியில் நிறுத்தி, வேட்பாளர்களுக்கன்றி, பொதுவான முன்னணிக்கு மக்களை வாக்களிக்குமாறு கேட்கலாம். வெற்றிபெறும் பட்சத்தில், ஜனாதிபதிக் காலத்தை மூன்று சம பங்குகளாகப் பிரித்து ஒவ்வொருவரையும் ஆளச் சொல்லலாம். 

வெற்றிபெற்றால் நல்லது. வெற்றிபெறாதுவிட்டாலும், இதனைக் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டால், எதிர்காலத்தில் பொதுவான முன்னணியொன்றினை வைத்தே அரசியல் செய்யலாம்.

1. வெறுமனே தமிழர்களின் வாக்குகளை வைத்து இலங்கையில் சனாபதியாக வர முடியாது. 50 வீத வாக்குகள் பெற வேண்டும். 

2. இலங்கை அரசியலமைப்பின் படி சிங்கள பெளத்த சமூகத்தை / இனத்தைச் சேர்ந்த ஒருவர் தான் சனாதிபதியாக முடியும்.

எனவே தமிழர் ஒருவர் சனாதியாவது நடைமுறை சாத்தியமற்றது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது, தமிழர்களுக்கிடையே பிளவுகள் உள்ளன என்பதை வெளிக்காட்டும் ஒரு முறையாக ஏனையோரால் பார்க்கப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன என நம்புகின்றேன்.

உதாரணத்துக்கு வடக்கில் இருந்து ஒருவரை நிறுத்தினால், அவருக்கு கிழக்கு மக்கள் குறைவாக வாக்களித்தாலோ, அல்லது கிழக்கில் இருந்து ஒருவரை நிறுத்தினால், அவருக்கு வடக்கு மக்கள் குறைவாக வாக்களித்தாலோ, அதனை சிங்களம் தனக்கு சாதகமாகவே எடுத்துக் கொள்ளும்.

வடக்கு கிழக்கில் இருந்து ஒருவரை நிறுத்தி, அவரை மலையக தமிழ் மக்கள் நிராகரித்தாலும் இதே நிலை தான் (அதற்கான சாத்தியங்கள் மிக அதிகம்)

அத்துடன், அவ்வாறு நிறுத்தப்படும் ஒருவரை விட, சிங்கள கட்சியில் இருந்து நிறுத்தப்படும் ஒருவருக்கு தமிழ் மக்கள் வாக்களித்தால் நிலமை மேலும் தலைகீழாக மாறி சிங்களத்துக்கு பெரும் வாய்ப்பைக் கொடுத்ததாகி விடும். என் கணிப்பு படி, தமிழ் மக்கள் அவ்வாறு தான் நடந்து கொள்வார்கள் என நம்புகின்றேன். சஜித்துக்கோ அல்லது ரணிலுக்கோ தான் அதிகமாக வாக்களிப்பார்கள் என நினைக்கின்றேன்.

மிகவும் யோசிக்க வேண்டிய கோணம் இது.

பொது வேட்பாளரை முன்னிலை படுத்துவதாகின்:

1. கிழக்கில் இருந்து ஒருவர்

2. அத்தனை தமிழ் தேசிய கட்சிகளின் ஆதரவோடு இறங்கி

3. ஏன் இதை செய்கிறோம் என்பதை மக்களுக்கு தெளிவாக எடுத்து சொன்னால் ஒருவேளை மக்கள் ஆதரிக்கலாம்.

எப்படியும் வெல்ல போவதில்லை - ஆகவே ஒரு மதம், பிரதேச சார்பற்ற, இதுவரை அரசியல் சார்பில்லாது இருந்த ஒரு  சமூக சேவையாளரை நிறுத்தலாம். எமது கதிரை அரசியல்வாதிகளும் இதனால் பாதிப்படைவது குறைவு என்பதால் ஒத்து கொள்ள கூடும்.

மலையகமக்கள் - தவிகூ வில் இருந்து சேவல் பறந்த போதே அவர்கள், விதியும், வட-கிழக்கு தமிழர் விதியும் வேறாக பிரிந்து விட்டது. அப்படி அவர்களை தொண்டமான் பிரித்தது மிக சரியான முடிவும் கூட.

நாம் தனிநாட்டை அடைந்தால் கூட - அவர்கள் இலங்கை பிரசைகள்தான். எனவே அவர்கள் தம் நலனை கணித்தே வாக்களிப்பர், வாக்களிக்க வேண்டும்.

மில்லியன் டாலர் கேள்வி என்னவென்றால் - 1970 களில் மலையக தலைமை எடுத்த நிலைப்பாட்டை ஒத்த நிலைப்பாட்டை 2024 வடகிழக்கு தமிழ் மக்கள் (தலைவர்கள் அல்ல) எடுத்துள்ளார்களா? என்பதே.

அதாவது, இனப்பிரச்சனை, குடியேற்றம் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், நாடு நாசமானால் நாம் எல்லாரும்தான் ஆப்பு அடிபடுவோம், எனவே ரணிலை (அல்லது அனுரவை) வெல்ல வைப்போம் என்ற மனநிலைக்கு வடகிழக்கு மக்கள் வந்து விட்டார்களா?

இதை கணிப்பது மிக கஸ்டமாக இருக்கிறது. ஆனால் என் கருத்து 2005 இல் தமிழ்மக்களை பகிஸ்கரிக்குமாறு கேட்காமல் விட்டிருந்தால் ரணிலுக்கு பெருவாரியாக போட்டிருப்பர் என்பதே.

அதே போல் ஒரு மனநிலை (அப்போ தீர்வை தருவார் என்ற மாய நம்பிக்கை, இப்போ நாட்டை மீட்கிறார் என்ற நம்பிக்கை) இப்போதும் மக்களிடம் இருந்தால், பொது தமிழ் வேட்பாளர் நீங்கள் சொல்வது போல் பொல்லை கொடுத்து அடிவாங்கும் வேலையாகலாம்.

முதலில் பாராளுமன்ற தேர்தல் வந்தாலாவது ஓரளவு மக்கள் எண்ண ஓட்டத்தை பிடிக்கலாம்.  

இலங்கை அரசியலில் ஒரு paradigm shift (அடிகட்டுமான மாற்றம்) ஐ தரவல்ல பல நிகழ்வுகள் நடந்த பின் வரப்போகும் முதல் நாடளாவிய தேர்தல் இது. மக்கள், குறிப்பாக வடகிழக்கு மக்கள் நிலைப்பாட்டை நாடி பிடிப்பது, கிட்டதட்ட இயலாத காரியம்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காணொளியை 6 நிமிடத்திலிருந்து ஒரு நிமிடம் கேட்டுப் பாருங்கள்.

புலம் பெயர்த வியாபாரி ஒருவர் பொது வேட்பாளரை நியமித்தாலே ரணில் வெல்லுவார் என்று அடம் பிடிப்பதாக சொல்லுகிறார்.

எப்படி சாத்தியம் யாருக்காவது விழங்குதா?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

இப்படிச் செய்தால் என்ன? வடக்கில் இருந்து ஒருவரையும் கிழக்கில் இருந்து ஒருவரையும், மலையகத்திலிருந்து ஒருவரையும் வேட்பாளர்களாக ஒரு பொது முன்னணியில் நிறுத்தி, வேட்பாளர்களுக்கன்றி, பொதுவான முன்னணிக்கு மக்களை வாக்களிக்குமாறு கேட்கலாம். வெற்றிபெறும் பட்சத்தில், ஜனாதிபதிக் காலத்தை மூன்று சம பங்குகளாகப் பிரித்து ஒவ்வொருவரையும் ஆளச் சொல்லலாம். 

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் running mate இல்லை. நீங்கள் மூவரை ஓட சொல்லுகிறீர்கள்.

அத்துடன் வேட்பாளர் ஒரு கட்சியின்/முண்ணனி சார்பாக ஒருவர்தான் நிற்கமுடியும் (3 நபர்கள் அல்ல).

3 hours ago, நிழலி said:

2. இலங்கை அரசியலமைப்பின் படி சிங்கள பெளத்த சமூகத்தை / இனத்தைச் சேர்ந்த ஒருவர் தான் சனாதிபதியாக முடியும்.

இது தவறு என நினைக்கிறேன்.

11 minutes ago, goshan_che said:

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் running mate இல்லை. நீங்கள் மூவரை ஓட சொல்லுகிறீர்கள்.

அத்துடன் வேட்பாளர் ஒரு கட்சியின்/முண்ணனி சார்பாக ஒருவர்தான் நிற்கமுடியும் (3 நபர்கள் அல்ல).

இது தவறு என நினைக்கிறேன்.

நான் எழுதியது தவறு போலத்தான் தெரிகின்றது. ஆனாலும் தேடிப்பார்த்ததில்  எங்கும் தெளிவாக இல்லை.

Presidential Candidate Should Be A Parent To Be Eligible - A Response - Colombo Telegraph

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள பெளத்தராக இருக்கவேண்டும் என்று வெளிப்படையாகச் சொல்லப்படா விட்டலும், பெளத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. 

இலங்கையின் சனத்தொகையில் வெறும் 15 20 வீதம் மட்டுமே உள்ள தமிழர்களில் ஒருவர் ஜனாதிபதியாக வருவதற்கான‌ சந்தர்ப்பங்கள் இல்லை. ஆனால், தமிழர்களின் வாக்குகளைக் கொண்டு எந்தச் சிங்கள ஜனாதிபதி பதவிக்கு வருவார் என்பதை தீர்மானிக்கலாம், இதைத்தவிர ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்களின் வாக்குகளுக்கு இருக்கும் பலம் வேறில்லை. அதுகூட 2019 இல் தேவையற்றது என்பதை நிரூபித்துவிட்டார்கள். 

 எப்போதுமே சிங்களவர் ஒருவரே வருவார். அவர்கூட பெரும்பாலும் பெளத்தராக இருப்பார் அல்லது பெளத்தத்திற்கு மதம் மாற்றப்பட்ட கிறீஸ்த்தவச் சிங்களவராக இருப்பார். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

நான் எழுதியது தவறு போலத்தான் தெரிகின்றது. ஆனாலும் தேடிப்பார்த்ததில்  எங்கும் தெளிவாக இல்லை.

Presidential Candidate Should Be A Parent To Be Eligible - A Response - Colombo Telegraph

யாப்பில் எங்கும் சி-பெள ஆக இருக்க வேண்டும் என்பதாக இல்லை.

ஆனால் இலங்கை தேசமானது புத்த சாசனத்துக்கு முன்னுரிமை தரவேண்டும் என்கிறது அரசியலமைப்பின் சரத்து 9. 

20 minutes ago, ரஞ்சித் said:

இலங்கையின் சனத்தொகையில் வெறும் 15 20 வீதம் மட்டுமே உள்ள தமிழர்களில் ஒருவர் ஜனாதிபதியாக வருவதற்கான‌ சந்தர்ப்பங்கள் இல்லை. ஆனால், தமிழர்களின் வாக்குகளைக் கொண்டு எந்தச் சிங்கள ஜனாதிபதி பதவிக்கு வருவார் என்பதை தீர்மானிக்கலாம், இதைத்தவிர ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்களின் வாக்குகளுக்கு இருக்கும் பலம் வேறில்லை. அதுகூட 2019 இல் தேவையற்றது என்பதை நிரூபித்துவிட்டார்கள். 

 எப்போதுமே சிங்களவர் ஒருவரே வருவார். அவர்கூட பெரும்பாலும் பெளத்தராக இருப்பார் அல்லது பெளத்தத்திற்கு மதம் மாற்றப்பட்ட கிறீஸ்த்தவச் சிங்களவராக இருப்பார். 

இது நடைமுறையில்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காணொளியில் 6-7 நிமிடங்களில் புலம்பெயர்ந்த வியாபாரி ஒருவர் தமிழர் ஒருவர் பொது வேட்பாளராக இருந்தாலே ரணில் ஜனாதிபதியாக வரமுடியும் என்று பாடுபடுவதாக நிலாந்தன் கூறுகிறார்.

இது எப்படி சாத்தியமாகும்? யாருக்காவது விளக்கமிருக்கிறதா?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

இனப்பிரச்சனை, குடியேற்றம் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், நாடு நாசமானால் நாம் எல்லாரும்தான் ஆப்பு அடிபடுவோம், எனவே ரணிலை (அல்லது அனுரவை) வெல்ல வைப்போம் என்ற மனநிலைக்கு வடகிழக்கு மக்கள் வந்து விட்டார்களா?

சஜீத் அல்லது ரணிலுக்கு தான்  அனேகமாக வாக்களிப்பார்கள் என்றும் சொல்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

எப்படி சாத்தியம் யாருக்காவது விழங்குதா?

புலம்பெயர் வியாபாரியின் முகவர் என சொல்லி கொண்ட ஒருவர், வெளிப்படையாக ரணில் வெல்ல வேண்டும், அதற்கு பொது தமிழ் வேட்பாளரை போட வேண்டும் என சொல்லியதாக நிலாந்தன் சொல்கிறார்.

இது வழமையான வாக்கை பிரிக்கும் கணக்கு என நினைக்கிறேன்.

நாட்டை மீட்க, ரணில்தான் பொருத்தமானவர் என positive காரணங்களுக்காக ரணிலுக்கு போடும் தமிழ் வாக்காளர் எப்படியும் ரணிலுக்குத்தான் போடுவர். 

ஆகவே ரணிலுக்கு வர கூடிய தமிழர் வாக்கை, பொது தமிழ் வேட்பாளர் குறைக்க வாய்ப்பு குறைவு.

ஆனால் ரணில் எதிர் மனோநிலையில் இருக்கும் தமிழரை அனுர, சஜித் பக்கம் போக  விடாமல் பொ.த.வே பக்கம் திருப்பினால் - ரணிலின் வாய்ப்பு கூடும். குறிப்பாக முடிவுகள் கிட்ட, கிட்டவாக இருந்தால்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kapithan said:

ஸ்வத்திக்கா தொடர்பாக ஒரு  தொடர் ஆய்வுக்கட்டுரை  ஒன்று எழுதுவோமென்று கூகிளை ஆராயத்தொடங்கினால் ஒன்றுமே வருகுதில்லை  ☹️

பிரபல்யம் இல்லாதவர் நல்லதை சொன்னாலும் கூகிளில் தேடுவீர்கள்.
கூகிளில் தேடினால் வருகின்ற தமிழ் அரசியல் தலைவர்கள் சொன்னால் யுத்தத்தை நடத்திய இராணுவ உயர் அதிகாரிக்கும் வாக்கு போடுவீர்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

புலம்பெயர் வியாபாரியின் முகவர் என சொல்லி கொண்ட ஒருவர், வெளிப்படையாக ரணில் வெல்ல வேண்டும், அதற்கு பொது தமிழ் வேட்பாளரை போட வேண்டும் என சொல்லியதாக நிலாந்தன் சொல்கிறார்.

இது வழமையான வாக்கை பிரிக்கும் கணக்கு என நினைக்கிறேன்.

நாட்டை மீட்க, ரணில்தான் பொருத்தமானவர் என positive காரணங்களுக்காக ரணிலுக்கு போடும் தமிழ் வாக்காளர் எப்படியும் ரணிலுக்குத்தான் போடுவர். 

ஆகவே ரணிலுக்கு வர கூடிய தமிழர் வாக்கை, பொது தமிழ் வேட்பாளர் குறைக்க வாய்ப்பு குறைவு.

ஆனால் ரணில் எதிர் மனோநிலையில் இருக்கும் தமிழரை அனுர, சஜித் பக்கம் போக  விடாமல் பொ.த.வே பக்கம் திருப்பினால் - ரணிலின் வாய்ப்பு கூடும். குறிப்பாக முடிவுகள் கிட்ட, கிட்டவாக இருந்தால்.

யாருக்குமே 50 வீதம் கிடைக்கவில்லை என்றால் இரண்டாம் தடவை எண்ணும் போது தமிழர்கள் ரணிலை அல்லது சயித்தை இரண்டாவதாக போடுவார்கள் என எண்ணுகிறார்களோ?

  • கருத்துக்கள உறவுகள்

 தமது சொந்த மக்களுக்கே எந்த  பிரயோசனமும் அற்ற தேர்தல் பகிஷகரிப்பு போன்ற உதவாக்கரை   அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது தமிழ் அரசியல் செய்யும் தரப்பின் கடந்த கால வாடிக்கை. அதன் தொடர்சசியே இந்த பொது வேட்பாளர் என்ற பிரயோசனமற்ற தமிழரின் வாக்குகளை செல்லாக்காசாக்கும்  வழமையான விளையாட்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.