Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

28 MAY, 2024 | 04:10 PM
image
 
தமிழர்களின் உணர்வுகளை அவமானப்படுத்தவே  கார்த்திகைப் பூவினை பாதணிகளில் பதித்துள்ளதாகவும், அதனை தென்னிலங்கை அரசியல் சக்திகளின் சதித்திட்டமாகவே தான் பார்ப்பதாகவே தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே ஒரு அவ்வாறு தெரிவித்தார். 

தென்னிலங்கையில் செருப்பு உற்பத்தியை மேற்கொள்ளும் நிறுவனம் தமிழர்களின் பாரம்பரியமானதும், தனித்துவம் வாய்ந்த கார்த்திகைப் பூவினை பாதணிகளில் பதித்து அவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கியுள்ளனர்.

தமிழ் தேசிய பரப்பிலேயே கார்த்திகைப் பூ குறித்த ஒரு காலத்தில் மாத்திரம் பூக்கின்ற தனித்துவமான மலர் என்பதை கருத்தில் கொள்ளாது குறித்த நிறுவனம் கால்களுக்கு அணியும் பாதனைகளில் அதனைப் பதித்து தமிழர்களின் உணர்வுகளை அவமானப்படுத்தியுள்ளது. 

குறித்த விடயமானது தென்னிலங்கை அரசியல் சக்திகளின் சதித்திட்டமாகவே பார்க்கிறேன். குறித்த நிறுவனம் விற்பனைக்கு விட்டுள்ள பாதணிகளை மீள பெற வேண்டும். அத்துடன் அது தொடர்பாக தமிழர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என தெரிவித்தார். 

பாதணிகளில் கார்த்திகை பூ ; தமிழர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் - ஐங்கரநேசன் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திகைப் பூ பொறிக்கப்பட்ட செருப்புகளை சந்தையிலிருந்து அகற்ற வடக்கிலிருந்து கோரிக்கை

Published By: DIGITAL DESK 3   29 MAY, 2024 | 02:59 PM

image

வடக்கில் காட்சிப்படுத்தப்பட்ட போது பொலிஸாரால் கேள்வி எழுப்பப்பட்ட மலரான கார்த்திகைப் பூ, மிகப் பெரிய வர்த்தக நிறுவனத்தால், நாடு முழுவதும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு தடையின்றி பயன்படுத்தப்படுவது சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

நாட்டின் முதல்தர பாதணிகளை விளம்பரப்படுத்தும் வகையில் தெற்கில் உள்ள நிறுவனம் ஒன்று செருப்புகளில் தமிழ் தேசிய மலரான கார்த்திகை மலரின் உருவத்தை பொறித்துள்ளமையால்  தமிழர்கள் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.

செருப்பு விற்பனை நிறுத்தப்படாவிட்டால் அவற்றை தமிழர்கள் புறக்கணிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கார்த்திகை பூக்கள் பொறிக்கப்பட்ட செருப்புகளை சந்தையில் இருந்து உடனடியாக மீளப் பெறுமாறு காலணி தயாரிக்கும் நிறுவனத்திடம் தமிழ் அரசியல் கட்சி ஒன்றின் பேச்சாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

“தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள கார்த்திகைப் பூ பொறிக்கப்பட்ட  பாதணிகளை, உற்பத்தி நிறுவனம் அதனை மீளப்பெற வேண்டுமென விநயமாக வேண்டுகின்றோம்.” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரட்ணம் சுகாஸ் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு மீளப்பெறத் தவறும் பட்சத்தில், குறித்த நிறுவனத்தினுடைய உற்பத்திகளை புறக்கணிக்குமாறும் அவர் தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

“அவ்வாறு மீளப்பெறத் தவறும் பட்சத்தில், குறித்த நிறுவனத்தினுடைய உற்பத்திப் பொருட்களையும் அவற்றை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களையும் புறக்கணிக்குமாறு எம் உறவுகளைக் கோருகின்றோம்!”

வட மாகாணசபையின் முன்னாள் விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் செவ்வாய்க்கிழமை (மே 28) யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்தி, காலணியில் கார்த்திகை பூ பொறிக்கப்பட்டமை தமிழ் மக்களை மிதிக்கும் வகையிலான செயற்பாடு என விமர்சித்துள்ளார்.

“தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஒரு புனிதமான பூவாக போற்றுகின்ற இந்த பூவை, காலில் போட்டு மிதிக்கின்றோம் என அவர்கள் சொல்லத் தக்க வகையில் அவர்கள் கால் செருப்பில் பயன்படுத்தியிருக்கின்றார்கள். "

தமிழர்கள் அதிகம் வாழும் வெள்ளவத்தை பகுதியில் உள்ள செருப்பு கடை ஒன்றில் கார்த்திகை மலரின் உருவத்தை பொறித்து வடிவமைக்கப்பட்ட காலணி கண்டுபிடிக்கப்பட்டதாக பல தமிழ் செய்தி இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த காலணிகள் பிரபல தனியார் காலணி தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பு ஆகும். இது அதிக எண்ணிக்கையிலான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு காலணி தயாரிப்புகளை விற்பனை செய்யும் நாட்டின் மிகப்பெரிய காலணி வர்த்தக சங்கிலியாகும்.

ஒரு தேசத்தை அவமதிக்கும் வகையில் கார்த்திகை மலரை பகிரங்கமாக பயன்படுத்த தென்னிலங்கை  நிறுவனத்திற்கு எந்த தடையும் இல்லை என்றாலும், அதே பூவை மரியாதையுடன் பயன்படுத்தும்போது பாதுகாப்புப் படையினர் அதற்கு எதிராகச் செயற்பட்ட பல சந்தர்ப்பங்கள் உண்டு.

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டிக்காக மாணவர்கள் இல்லங்களை வடிவமைக்கும் போது, யுத்த தாங்கி மற்றும் கார்த்திகை பூ வடிவங்களை பயன்படுத்தி அலங்காரங்களை மேற்கொண்டமையைால் அவர்கள்  இராணுவம், பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

தெல்லிப்பளை பொலிஸார் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பொலிஸுக்கு அழைத்து அந்த படைப்புகள் தொடர்பில் விசாரணை நடத்தியிருந்தனர்.

போரில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைவு கூர்ந்து கார்த்திகை மலரை அலங்கரித்த பல சந்தர்ப்பங்களில் அந்த அலங்காரத்தை பொலிஸார் அழித்துள்ளதுடன், கார்த்திகை மலரை பேஸ்புக்கில் பகிர்ந்த சிலர் பொலிஸாருக்கும் பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கார்த்திகை பூவை பயன்படுத்தும் தமிழ் மாணவர்களை பொலிஸார் ஊடாக அடக்கும் பேரினவாத அரசாங்கம், கார்த்திகை பூ பொறிக்கப்பட்ட கால் செருப்புகளை அனுமதிக்கும் அந்த மனநிலையை தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டுமென வடமாகாணசபையின் முன்னாள் விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“வடக்கில் அவர்கள் கார்த்திகை பூவை, மாணவர்கள் பயன்படுத்தினால், இல்ல விளையாட்டுப் போட்டிகளில் இல்ல அலங்காரங்களுக்கு பயன்படுத்தினால் அதனை இரும்புக் கரம் கொண்டு பொலிஸாரின் கரத்தால் அடக்கும் அரசாங்கம் தென்னிலங்கையில் காழுக்கு கீழே மிதிபடுகின்ற அளவுக்கு இந்த கார்த்திகை பூ பொறிக்கப்பட்ட கால் செருப்புகளை அனுமதிக்கும் என்று சொன்னால் இந்த பேரினவாத அரசாங்கத்தின் மனநிலையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதனை உற்பத்திசெய்த நிறுவனம் கால் செருப்பை விற்பனையில் இருந்து மீளப்பெற்று இதுத் தொடர்பாக வருத்தம் தெரிவிக்கும் வரையில்  அந்த நிறுவனத்தின் உற்பத்திகளை புறக்கணிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்.”

https://www.virakesari.lk/article/184777

  • கருத்துக்கள உறவுகள்

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0nrrFCNAjFzogmRnSzUJY77Tfb56biB1q46RArNTz8mTyTueADUbZsKixmy2h7HAal&id=100080678851063

தமிழர்களின் தேசிய மலரை பாதணியில் பொறித்து

தமிழர்களை அவமானப்படுத்திய

DSI நிறுவன  உற்பத்திகளை கொள்வனவு

செய்வதை தவிர்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

வேண்டுமென்றே தமிழர்களை அவமானப்படுத்தும் நடவடிக்கை. ரனில் யாழ்ப்பாணம் வந்த போது  அதே செருப்பால் அடிக்க  ஒரு தமிழன் கூடவா இல்லை?

நான் இலங்கையில் வாழும் காலத்தில் இந்த நிறுவனத்தின் பொருட்களை வாங்குவதில்லை. கடும் இனவாத நிறுவனங்களில் ஒன்று இது.  தமிழர்களை வேலைக்கு எடுக்காததுடன், தமிழில் விளம்பரங்களோ, விளம்பரப் பலகைகளோ கொழும்பு போன்ற இடங்களில் வைப்பதும் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

Bild

  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திகை மலர் பொறிக்கப்பட்ட பாதணிகளை மீளப்பெற அதிகாரத்தை பயன்படுத்துவார்களா? - பொலிஸ் மா அதிபரிடம் வினவியுள்ள அருட்தந்தை மா.சத்திவேல்

Published By: DIGITAL DESK 3   30 MAY, 2024 | 03:24 PM

image
 
கார்த்திகை மலர் மிதிபடும் ஒன்றாக்கியதன் மூலம் தமிழர்களின் அரசியலை மிதித்தழிப்போம் என பகிரங்கமாகவே கர்ஜிப்பதாகவே உள்ளது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று வியாழக்கிழமை (30) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் பிரபல பாதணி உற்பத்தி நிறுவனமான டி.எஸ். ஐ கம்பெனி அண்மையில் சந்தைப்படுத்தியுள்ள தனது உற்பத்தி ஒன்றில் கார்த்திகை மலரை பதிவிட்டுள்ளது. இது இலங்கையின் பேரினவாத அரசியல் முதலாளித்துவத்தினையும் எந்த அளவிற்கு ஆக்கிரமித்துள்ளது என்பதை  காட்டுவதோடு தமிழர்களின் அரசியல் அடையாளங்களில் ஒன்றான கார்த்திகை மலரை மிதிபடும், மிதிக்கப்படும் ஒன்றாக்கியதன் மூலம் தமிழர்களின் அரசியலை மிதித்தழிப்போம் என பகிரங்கமாகவே கர்ஜிப்பதாக உள்ளது. இதனை வன்மையாக கண்டிப்பதோடு தமிழ் உணர்வு மிக்க தேசப்பற்றார்கள் இதற்கு தகுந்த பாடத்தை வெளிப்படுத்த வேண்டும்.

யாழ் தெல்லிப்பளையில் பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டி ஒன்றில் இம் மலர் அலங்காரத்துக்கு பாவிக்கப்பட்ட போது அப்பாடசாலையில் அதிபர் உட்பட ஆசிரியர்களை பொலிசார்  விசாரணைக்கு  உட்படுத்தினர். இதே போன்று மேற்படி குறித்த பாதணி கம்பனியின் திட்டமிடல் வடிவமைப்பு சந்தைபடுத்துனர்கள் விற்பனை முகவர்கள் என பலதரப்பினரையும் பொலிசார்  விசாரணைக்கு உட்படுத்துவார்களா? சந்தையில் விற்பனைக்கு விடப்பட்டுள்ள பாதணிகளை மீளப்பெற அதிகாரத்தை பயன்படுத்துவார்களா? என பொலிஸ் மா அதிரை கேட்கிறோம்.

கடந்த ஒரு கிழமைக்கு முன்னர் கிழக்கில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிரப்பட்ட போது சுகாதாரத்தை காரணம் காட்டி அதனை தடுத்து நிறுத்தி அடவாடித்தனம் புரிந்த பொலிசார் அதற்கடுத்து  கடந்த கிழமை விசாக பண்டிகை  காலத்தில் அதே சுகாதாரத்தை காரணம் காட்டி எந்த ஒரு உணவு பகிர்களையும் தடுத்து நிறுத்தியதாக அடவாடித்தனம் புரிந்ததாக செய்திகள் வரவில்லை. இது தமிழர்களுக்கு ஒரு நீதி சிங்கள பௌத்தர்களுக்கு ஒரு நீதி எனும் பௌத்த பேரனவாதத்தின் அரசியலை வெளிப்படுத்தியது.

ஒரு உற்பத்தி நிறுவனம் தன்னுடைய நீண்ட கால கள ஆய்வில் மக்களின் மனநிலையை அறிந்த பின்னரே உற்பத்தியினை வடிவமைக்கும். சந்தையில் விற்பனைக்கு விடும். அவ்வாறெனில் டி. எஸ்.ஐ கம்பெனி நீண்ட கால திட்டமிடலின் அடிப்படையில் காலனியில் கார்த்திகை மலரை அடையாளப்படுத்தி உற்பத்தி செய்து சந்தைப்படுதைக்கு விட்டுள்ளது எனில் இலாபத்திற்கு அப்பால் அதன் அரசியல் நோக்கம் தெளிவானது. தமிழர்களை அடக்கி ஒடுக்கி அரசியல் ரீதியாக துவம்சம் செய்வோம் எனும் பேரினவாத மனநிலையை மக்கள் மயப்படுத்தி தமது அரசியல் கூலித்தன்மையை  வெளிப்படுத்தி உள்ளது எனலாம்.

அரச திணைக்களங்கள், சிங்கள பௌத்த பிக்குகள் தமது பேரினவாத செயற்பாட்டுக்குள் இழுத்து தமிழர்களின் நிலைகளை பறித்து ஆக்கிரமிக்கும் ஆட்சியாளர்கள் தனியார் உற்பத்தி நிறுவனங்கள் வேலைத் தளங்கள் என்பவற்றையும் தமது அரசியலுக்கு பாவிக்க தொடங்கிவிட்டனர் என்பதையே டி. எஸ். ஐ கம்பெனி வெளிப்படுத்தி உள்ளது.

பேரினவாதம் பலம் வாய்ந்த ஒன்றாக கட்டமைக்கப்பட்டு  பல்வேறு முகங்களில் கிளைகளை பரப்பி சிங்கள பௌத்த அரச மரம் போல் வியாபித்திருக்கின்றது என்பதை நாம் உணர வேண்டும். இதற்கு தமிழர் தேசிய கொள்கை உருவாக்கிகள், பரப்புரையாளர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகத்தினர் எவ்வாறு பதில் அளிக்க போகின்றனர்? 

தமிழ்த் தேசிய சிந்தனையாளர்கள்  ஒன்றிணைய வேண்டும்,மக்கள் திரட்சி கொள்ள வேண்டும், அடுத்த தேர்தலுக்கு மக்களை ஆயத்தப்படுத்த வேண்டும் என்று கூறுவார்கள் உடனடியாக பாதணி விடயத்தில் தலையிட்டு அரசுக்கும் கம்பெனிக்கும் தமது எதிர்ப்பினை  வடகிழக்கு தழுவிய ரீதியில் வெளிக் காட்டுதல் வேண்டும்.

எமது எதிர்ப்பு பாதணிக்கும், பாதணி கம்பெனிக்கும் எதிரானது மட்டுமல்ல. அது அதற்குப் பின்னால் இருக்கும் அரசியலுக்கும் அதன் சக்திகளுக்கும் எதிரானதுமாகும். பல இலட்சம் உயிர்கள் எமது அரசியலுக்காக கொல்லப்பட்ட பின்னரும் எமது அரசியலை கைவிடாத  தேசமாக ஒன்று திரண்டு எதிர்ப்பு காட்ட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.இச் சந்தர்ப்பத்தில் அமைதி காப்போம் எனில் எமது அரசியலுக்கு நாமே எதிரிகளாவோம்.

https://www.virakesari.lk/article/184879

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஏராளன் said:

எமது எதிர்ப்பு பாதணிக்கும், பாதணி கம்பெனிக்கும் எதிரானது மட்டுமல்ல. அது அதற்குப் பின்னால் இருக்கும் அரசியலுக்கும் அதன் சக்திகளுக்கும் எதிரானதுமாகும். பல இலட்சம் உயிர்கள் எமது அரசியலுக்காக கொல்லப்பட்ட பின்னரும் எமது அரசியலை கைவிடாத  தேசமாக ஒன்று திரண்டு எதிர்ப்பு காட்ட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.இச் சந்தர்ப்பத்தில் அமைதி காப்போம் எனில் எமது அரசியலுக்கு நாமே எதிரிகளாவோம்.

அருட்தந்தை மா.சத்திவேல் அவர்களுக்கு தெரிந்தது,
தமிழ் அரசியல் தலைவர்களுக்கு தெரியாமல் போய் விட்டது.
அல்லது... இந்த விடயத்தில் கண்ணை  மூடிக்கொண்டு பால் குடிக்கும் திருட்டு பூனைகளாக இருக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

  தலிபான்கள், ISIS, RSS மட்டத்திற்கு நாங்கள்  இறங்கிவரத் தேவையில்லை என்பது என் அபிப்பிராயம். 

1) கார்த்திகைப் பூ எங்களுக்குத்தான் மரியாதைக்குரிய ஒரு அடையாளமே தவிர வேற்று இனத்தவருக்கல்ல. 

2) எங்கள் மரியாதைக்குரிய ஒரு அடையாளத்தை நீ மதிக்க வேண்டும் என்று பிறிதொரு இனத்திடம் நாம் வலியுறுத்த முடியாது. 

3) DSI உற்பத்திகளை புறக்கணிக்கும்படி எங்கள் மக்களை அறிவூட்டி அதன் தொடர்ச்சியாக மக்கள் DSI உற்பத்திகளைப் புறக்கணித்தால் DSI மட்டுமல்ல, வேறு எந்த நிறுவனங்களும் தமிழரின் உணர்வுகளைச் சீண்ட முன்னர் ஒரு முறைக்கு இருமுறை யோசிப்பார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kapithan said:

சரியான கருத்து..👍👍

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

ஒரு மக்கள் கூட்டத்தால் மானசீகமாக நேசிக்கப்படும் ஒன்றை காலால் மிதிக்க வேண்டும் என்று தோன்றும் ஒருவருடன் பேசி என்ன பலன்...?

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, விசுகு said:

ஒரு மக்கள் கூட்டத்தால் மானசீகமாக நேசிக்கப்படும் ஒன்றை காலால் மிதிக்க வேண்டும் என்று தோன்றும் ஒருவருடன் பேசி என்ன பலன்...?

யார் காலல் மிதிக்க என்று கூறுவது? 

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு திட்டமிட்ட செயலாக இருக்குமென்று தான் நான் கருதுகிறேன். கார்த்திகைப் பூ, இலங்கையில் மிகவும் பிரபலமான பூ அல்ல என நினைக்கிறேன். அது பொது வெளியில் பேசப்படுவதற்கு பிரதான காரணம் தமிழர்கள் தான். அதை தேர்வு செய்து செருப்பில் அலங்காரமாகப் பதித்தது தற்செயலான செயல் அல்ல. சிறி லங்காவின் தேசிய மலரான நீலோற்பலத்தை (Blue Water-Lily) இப்படி செருப்பில் பதித்திருந்தால், சிங்கள பௌத்தர் யாராவது வழக்குப் போட்டிருப்பர்.

ஒரு பிரிட்டன் பெண், உல்லாசப் பயணியாக இலங்கைக்கு வந்த போது மாலுமிச் சக்கரத்தை (Sailor's Wheel) தன் உடையில் பதித்திருந்தார். "அசோகச் சக்கரத்தை அவமானப் படுத்தி விட்டார்" என்று பொலிஸ் வழக்குப் போட்டது. பின்னர் "அசோகச் சக்கரம் இப்படி தான் இருக்கும்" என்று நீதி மன்றில் நிரூபிக்க இயலாமையால் வழக்குத் தள்ளுபடியானது.

 பௌத்த அடையாளங்களை உடலில் ஆடையாகக் கூட அணிய முடியாது என்ற பாரம்பரியம், முன்னுதாரணம் இருக்கும் பின்னணியில் தான் செருப்பில் கார்த்திகைப் பூ பதிக்கப் பட்டதையும் நாம் பார்க்க வேண்டும்.  

புலம்பெயர் நாட்டில் பாதணியில் சிங்கக் கொடியை வரைந்து விற்க எவராவது முன்வந்தால் நல்லது. அங்குள்ளவர்களால் இதனை செய்வது பிரச்சனையை அவர்களுக்கு தோற்றுவிக்கும்,  ஆனால் இங்கு எம்மால் பதிலுக்கு செய்ய முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, நிழலி said:

புலம்பெயர் நாட்டில் பாதணியில் சிங்கக் கொடியை வரைந்து விற்க எவராவது முன்வந்தால் நல்லது. அங்குள்ளவர்களால் இதனை செய்வது பிரச்சனையை அவர்களுக்கு தோற்றுவிக்கும்,  ஆனால் இங்கு எம்மால் பதிலுக்கு செய்ய முடியும்.

large.IMG_5652.jpeg.669a137bdcc4e7a62eac982b1ed2b6fe.jpeg

இவ்வாறான விடயங்களை உலகில் நாடுகள் கணக்கெடுப்பதே இல்லை. large.IMG_5646.jpeg.bd7cb48969174597fdbbf2a8e2b5a5d7.jpeglarge.IMG_5647.jpeg.a4f66d810d42454a3ba821fe55515454.jpeglarge.IMG_5648.webp.ba142053485ef0fbb4278f43e52f8cbe.webplarge.IMG_5649.webp.5b8caf459510dbf4e4678bedb12c1b12.webplarge.IMG_5650.jpeg.887a0aaa30900f5e47389146547c773c.jpeglarge.IMG_5651.jpeg.56a841b505bf68f3e2a56d69c032f4f1.jpeg 

1 hour ago, island said:

large.IMG_5652.jpeg.669a137bdcc4e7a62eac982b1ed2b6fe.jpeg

இவ்வாறான விடயங்களை உலகில் நாடுகள் கணக்கெடுப்பதே இல்லை.  

இன முரண்பாடுகள் கூர்மை இல்லாத, தேசங்களில் இது கணக்கெடுக்கப்படாமல் விடலாம்.

ஆனால் ஒரு பாடசாலை நிகழ்வின் போது தமிழ் இனம் சார்ந்த எந்த அடையாளத்தை வைத்தமைக்காக  வைத்தவர்களை கைது செய்து தண்டிக்க முனையும் இனவாத அரசு ஆளும் நாட்டில் இதை சாதாரணமாக கடந்து செல்ல முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

எதிர்ப்பை பதிவு செய்வதில் தவறில்லை. அதற்காக பாதணியில் சிங்க கொடியை வரைந்து இதை தொடர் சர்ச்சையாக்குவதில் எந்த பலனும் இல்லை என்பதையே கூறவந்தேன். ஏற்கனவே வரையப்பட்டு விட்டது.  சிறு சிறு  விடயங்ளை சர்சசையாக்கி இனமுரண்பாட்டை கூர்மையடைய வைக்கும் சூழ்சசிகளை கடந்து போவதே நன்று. 

  • கருத்துக்கள உறவுகள்

பாதணியை உருவாக்கும் நிறுவனத்திடம் கோரிக்கை வைக்கலாம்.

பாதணியை உருவாக்கிய டிசைனருக்கு கார்த்திகைப்பூ விடயம் தெரியுமா என்பதே கேள்விக்குறி. 

இதை ஒரு எதேச்சையான விடயமாகவே நான் பார்க்கின்றேன். 

அண்மைய காலங்களில் கொழும்பில் நான் பார்த்த கடைகளில் விற்கப்படும் காலணிகளில் மரம், செடி, கொடி, இயற்கை என பல புதிய அம்சங்களை நான் அவதானித்தேன். 

அவங்கள் மாவீரர் மயானத்தையே அடிமட்டமாக்கி உழுதவங்கள். இப்படி நுணுக்கமாக உங்கள் மனதை டிசைன் போட்டு துன்புறுத்துவார்கள் என்பது மிகையான கற்பனை என்பதே எனது அபிப்பிராயம். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

புலம்பெயர் நாட்டில் பாதணியில் சிங்கக் கொடியை வரைந்து விற்க எவராவது முன்வந்தால் நல்லது. அங்குள்ளவர்களால் இதனை செய்வது பிரச்சனையை அவர்களுக்கு தோற்றுவிக்கும்,  ஆனால் இங்கு எம்மால் பதிலுக்கு செய்ய முடியும்.

தல சொல்லிட்டிங்க அவ்வளவே ... சைனா காரனுக்கு இந்த அரசியல் புரியாது அவனுக்கு பண அரசியல்தான் .

கொஞ்ச நாளாகும் கப்பல் எல்லாம் சுத்தி வருது நாளாகும்  .

கனடாவுக்கு எத்தனை என்று குத்து மதிப்பாய் எடுத்து வையுங்க நட்டம் போனாலும் பரவாயில்லை .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

எதிர்ப்பை பதிவு செய்வதில் தவறில்லை. அதற்காக பாதணியில் சிங்க கொடியை வரைந்து இதை தொடர் சர்ச்சையாக்குவதில் எந்த பலனும் இல்லை என்பதையே கூறவந்தேன். ஏற்கனவே வரையப்பட்டு விட்டது.  சிறு சிறு  விடயங்ளை சர்சசையாக்கி இனமுரண்பாட்டை கூர்மையடைய வைக்கும் சூழ்சசிகளை கடந்து போவதே நன்று. 

இந்தபதில் உங்களிடம் இருந்து வராவிட்டால் பெரும் ஆச்சரியம் சிவ கங்கை காளைக்கு புரிந்த விடயம் உங்களுக்கு புரியாதது .😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சில விடயங்களில் நாம் அமைதியாக இருந்தாலே சம்பந்தப்பட்டவர்களுக்கு தோல்விதான்.. செருப்பில் பதியப்பட்ட கார்த்திகை பூ ....அதுவும் ஒருவகை பிரச்சாரம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

எதிர்ப்பை பதிவு செய்வதில் தவறில்லை. அதற்காக பாதணியில் சிங்க கொடியை வரைந்து இதை தொடர் சர்ச்சையாக்குவதில் எந்த பலனும் இல்லை என்பதையே கூறவந்தேன். ஏற்கனவே வரையப்பட்டு விட்டது.  சிறு சிறு  விடயங்ளை சர்சசையாக்கி இனமுரண்பாட்டை கூர்மையடைய வைக்கும் சூழ்சசிகளை கடந்து போவதே நன்று. 

இதுவரை காலமும் அமைதியாக இருந்து என்ன பெற்று கொண்டோம் ?

இந்த கேள்வி இங்கு மட்டும் அல்ல UN மெயிலில் கேட்டு உள்ளேன்  வரும் பதிலை இங்கு இணைகிறேன் .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

எதிர்ப்பை பதிவு செய்வதில் தவறில்லை. அதற்காக பாதணியில் சிங்க கொடியை வரைந்து இதை தொடர் சர்ச்சையாக்குவதில் எந்த பலனும் இல்லை என்பதையே கூறவந்தேன். ஏற்கனவே வரையப்பட்டு விட்டது.  சிறு சிறு  விடயங்ளை சர்சசையாக்கி இனமுரண்பாட்டை கூர்மையடைய வைக்கும் சூழ்சசிகளை கடந்து போவதே நன்று. 

இந்த பதினைந்து வருடத்தில் பச்சையாக கேட்கிறேன் என்ன புடுங்குநீர்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, பெருமாள் said:

இந்த பதினைந்து வருடத்தில் பச்சையாக கேட்கிறேன் என்ன புடுங்குநீர்கள் ?

உஸ்

இணக்க அரசியல்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

இந்த பதினைந்து வருடத்தில் பச்சையாக கேட்கிறேன் என்ன புடுங்குநீர்கள் ?

15 வருடத்தில் மட்டுமல்ல தமிழ் தரப்பில் இதுவரை எவருமே எதையும் புடுங்கவில்லை.  பறி கொடுத்ததை மட்டுமே செய்தார்கள். இனிமேலும் புடுங்குவார்கள் என்ற நம்பிக்கையும் இல்லை. இப்படியே இணையத்தில் வந்து ஆளையாள் திட்டிவிட்டு போய் சேரவேண்டியதே  தமிழ் தேசியம், என்ற நிலைக்கு கீழ் இறங்கி வந்து விட்டதே  சாதனை.    இந்த விஷயத்தில் நீங்கள் ரொம்பவே அசத்துறீங்க. 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.