Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தாவடியை சேர்ந்த எனது அப்பப்பா ராஜலிங்கமும் சிறியின் அப்பம்மா தையல்முத்துவும் சகோதரர்கள்.  அவர்களது தகப்பன் தாவை வாணன் அம்பலவாணர் நாவலர்(ஆறுமுக நாவலரின் மாணவர்). எனது அப்பம்மாவின் பூட்டன் தம்பு உடையார், அறுமுகநாவலரின் மூத்த சகோதரன்.

சிறியின் அப்பம்மாவையும், எனது அப்பாப்பாவையும் தவிர மற்றைய நான்கு சகோதரர்களும் 1880 அளவில் கப்பல் மூலம் மலேஷியா சென்றுள்ளார்கள். அதில் ஒருவர் மட்டும் அங்கேயே தங்கிவிட மற்ற மூன்று சகோதரர்களும் பணம் மற்றும் பொருள்களுடன் கப்பலில் யாழ்ப்பாணம் திரும்பும்போது கடல் கொள்ளையர்களால் கொல்லப்பட்டு விட்டார்கள். மலேசியாவில் தங்கிவிட்ட சகோதரனின் வம்சம் தற்போது அங்கு வாழ்கிறார்கள்.

சிறியின் குடும்பம் பெரும்பாலும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தாலும், எனது குடும்பம் மாத்தளை, நுவெரேலியா மற்றும் கொழும்பில் வாழ்ந்தததாலும் எனது அப்பாவின் சொந்தங்களுடன் கொண்டாட எனக்கு சந்தர்ப்பம் குறைவாகவே இருந்து.  நீண்ட காலத்துக்கு பிறகு யாழ் களத்தில் சிறியுடன் மீண்டும்சொந்தம் கொண்டாட சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் குடும்பத்துடன் ஜேர்மனியில் இருப்பது தெரியும் என்றாலும் தொடர்பு இருக்கவில்லை. சிறியின் சகோதரியுடனும் எப்படியாவது மீண்டும் பழகவேணும் என்றும் ஆர்வமாக இருந்தேன்.

எல்லாவற்றுக்கும் உதவும் விதமாக சிறியின் மகளின் கலியாணம் அமைந்தது. சிறியின் சகோதரி ஒருநாள் மெசேஜ் ஒன்று அனுப்பி இருந்தார். அதில், சிறியின் மகளின் கலியாணம் நடக்க இருப்பதாகவும் அப்பாவின் குடும்ப உறவினர் அனைவரும் ஜெர்மனி செல்வதாகவும் நான் வந்தால் எனது விருப்பத்தின்படி எல்லாரையும் சந்திக்க நல்ல சந்தர்ப்பம் என்றும் எழுதியிருந்தார். அத்துடன் சிறி யிற்கு எனக்கு அழைப்பு விடுக்க விருப்பம் இருந்தாலும் சிரமமாக இருக்குமோ என்று யோசிப்பார் என்றும் சொல்லியிருந்தார். மெஸேஜை வாசித்த கணமே, கல்யாணத்துக்கு போவது என்று தீர்மானித்தது விட்டேன்.

நான் இருக்கும் மெம்பிஸ் இலிருந்து தம்பி வீட்டுக்கு வெர்ஜினியா சென்று, அங்கு தங்கி விட்டு, வாஷிங்க்டன் மற்றும் போஸ்டன் வழியாக பிரான்க்பெர்ட் சென்றடைந்தேன். கல்யாண வேலைகளில்  மத்தியிலும், சிறியின் மகன் (எனது மருமகன்) விமான நிலையத்தில் என்னை வரவேற்க வந்திருந்தார். ஜெர்மனியிலேயே பிறந்து வளர்ந்து, மிகச்சிறிய வயதில் எலும்பு முறிவு அதிலும் முதுகெலும்பு சத்திரசிகிச்சை மருத்துவராக பணியாற்றுவது எனக்கு மிகவும் பெருமையாக இருந்து. அதைவிட ரெட்டிப்பு சந்தோசம் அவரது பணிவையும், சுத்தமான யாழ்பாணத்தமிழையும் கேட்டு. ஜெர்மனியில் இறங்கிய முதல் மணி நேரத்தில் இருந்தே எனது சந்தோஷமும், பிரமிப்பும், ஈர்ப்பும் தொடங்கிவிட்டது . உறவினர்கள் அநேகமானோர் ஒரே ஹோட்டலில் தான் தங்கினோம். எல்லோரும் பக்கத்த்து பக்க அறைகள். ஒன்றாக சாப்பிட்டு, வெளியில் சுற்றிப்பார்த்து மிகவும் சந்தோசமான நாலு நாட்கள்.

பாஞ் அண்ணாவையும் குசா அண்ணாவையும் சந்தித்து ஒரு யாழ்கள Gettogether வைப்பம் என்று பிளான் போட்டிருந்தேன். குசா அண்ணாவால் வேலை நிமித்தம் வரமுடியவில்லை. பாஞ் அண்ணாவை சந்தித்தது மிகுந்த. சந்தோசம். படத்தையும் இணைத்துள்ளேன்.

நீட்டுக்கு எழுதினால் வாசிக்க களைப்பாக இருக்கும், மிகுதி அடுத்த முறை தொடரும். 

Paanch-Anna.jpg

 
 
 
 

 

Edited by nilmini
Wording

  • Replies 55
  • Views 4.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    திருமண தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நில்மினி. 🙏 இப்போதைய அவசர உலகில் மற்றவர்களுக்கு சிரமம் கொடுக்காமல் திருமணத்தை ஜேர்மனியில் உள்ளவர்களுடன் மட்டுமே நடத்துவது  என நாம் யோசித்து இருந்தோம்.

  • சிறியின் அப்பம்மா தையல்முத்து (எனது அப்பப்பாவின் சகோதரி) திருமணம். அவரின் தகப்பன் சோதிட சங்கீத வித்வ சிரோன்மணி தாவை வான அம்பலவாண நாவலர். இந்த புகைப்படங்கள் 1900  ஆம் ஆண்டுக்கும் 1902 ஆம்  ஆண்டுக்

  • மாட்சிமை பொருந்திய ஐயன் நாவலர் பெருமான் தமிழை தலையில் சுமந்து திரிந்தார்........அவர்களை  முத்திரையில் இட்டு சிறப்பித்து மகிழ்ந்தோம் ........... ஐயகோ அவரின் சந்ததிகள் தட்டுவடை  பலகாரங்கள் எல்லாம் தட்டு

  • கருத்துக்கள உறவுகள்

https://postimages.org/

49 minutes ago, nilmini said:

ஜெர்மனியிலேயே பிறந்து வளர்ந்து, மிகச்சிறிய வயதில் எலும்பு முறிவு அதிலும் முதுகெலும்பு சத்திரசிகிச்சை மருத்துவராக பணியாற்றுவது எனக்கு மிகவும் பெருமையாக இருந்து

அப்பனுக்கு வைத்தியம் பார்க்கவென்றே படித்திருக்கிறார் போல.

Edited by ஈழப்பிரியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, nilmini said:

தாவடியை சேர்ந்த எனது அப்பப்பா ராஜலிங்கமும் சிறியின் அப்பம்மா தையல்முத்துவும் சகோதரர்கள்.  அவர்களது தகப்பன் தாவை வாணன் அம்பலவாணர் நாவலர்(ஆறுமுக நாவலரின் மாணவர்). எனது அப்பம்மாவின் பூட்டன் தம்பு உடையார், அறுமுகநாவலரின் மூத்த சகோதரன்.

ஆகா .....நீங்கள் ஆறுமுகநாவலர் வம்சாவழிகளா ?

சரி சரி இன்னும் எழுதுங்கோ .புதினங்களை வாசிப்பம் :cool:
 

Edited by குமாரசாமி
எழுத்துப்பிழை.

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் ......தொடர்ந்து வருகின்றோம்.......!  😁

  • கருத்துக்கள உறவுகள்

 

தொடருங்கள் ......தொடர்ந்து வருகின்றோம்.......!  இந்த ஜெர்மனியில் எவ்வளவு அதிசயங்கள்  நடக்குது..வாசிக்க வாசிக்க சந்தோசமாக இருக்குது...நாவலர் பரம்பரை என்றபடியால்..தமிழ் எழுதவும் பயமா இருக்கு....என்னங்க பலகாரக் கடத்தல் நடைபெறவில்லையோ..

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nilmini said:

ஆறுமுக நாவலரின் மாணவர்).

 

2 hours ago, குமாரசாமி said:

ஆகா .....நீங்கள் ஆறுமுகநாவலர் வம்சாவழிகளா ?

ஆறுமுகநாவலர் நம்மட ஊர் தான்.

படிக்க வந்தவர்.

  • கருத்துக்கள உறவுகள்

 

நாங்கள் ஆறுமுக நாவலரின் சிலையை அல்லது படத்தை  மட்டும் தான் பார்த்திருக்கின்றோம்.
அவருடைய வழி வந்தவர்களுடன் உரையாடும் தருணம் கிடைத்தது
எங்கள் பாக்கியம் தொடருங்கள் 🙏
 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

ஆகா .....நீங்கள் ஆறுமுகநாவலர் வம்சாவழிகளா ?

இதை முதலே சொல்லி இருந்தால்   குமாரசாமி அண்ணை   வேலைக்கு போகாமல்  வந்து சந்தித்திருப்பார்.  🤣

44 minutes ago, ஈழப்பிரியன் said:

 

ஆறுமுகநாவலர் நம்மட ஊர் தான்.

படிக்க வந்தவர்.

உங்கள் ஊரில் பாடசாலை. இருக்க  ??? 🤣🤣🤣

ஆறுமுகநாவலர். பற்றி வாசித்து உள்ளேன்   பலமுறை   ஆனால்  அவரின் சொந்தங்கள் பற்றி ஒருமுறை கூட வாசிக்கவில்லை    எழுதுங்கள்… வாசிக்க ஆவலுடன் உள்ளேன்    

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

அப்பனுக்கு வைத்தியம் பார்க்கவென்றே படித்திருக்கிறார் போல.

எனது மகனும் ஒரு வைத்தியர்தான். வேலை துவங்கி ஒருவருடமாகுது. லீவில வந்து நிற்கும் பொழுது தம்பி இந்த மெடிக்கல் றிப்போட்டைப்பாரடா என்றால் எல்லாம் பைன் என்று சொல்லுறான். தமிழ் சிறி குடுத்து வைத்தவர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, alvayan said:

என்னங்க பலகாரக் கடத்தல் நடைபெறவில்லையோ..

அடேய்.....அடேய்......அடேய்களா.  இந்த திரியாவது சுத்தம் சுகாதாரமாய் போகட்டுமன். ஏனடா போற வாற இடமெல்லாம் பலகார பையோட திரியுறியள்? 🤣

Edited by குமாரசாமி
எழுத்துப்பிழை.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

அடேய்.....அடேய்......அடேய்களா.  இந்த திரியாவது சுத்தம் சுகாராரமாய் போகட்டுமன். ஏனடா போற வாற இடமெல்லாம் பலகார பையோட திரியுறியள்? 🤣

பிரபல பலகாரக்க்கட்த்தல் மன்னன் கலியாண வீட்டுக்குப் போகாபடியால் பலகாரம் எக்கச்சக்கமா மிஞ்சி விட்டுதாம்

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, புலவர் said:

எனது மகனும் ஒரு வைத்தியர்தான். வேலை துவங்கி ஒருவருடமாகுது. லீவில வந்து நிற்கும் பொழுது தம்பி இந்த மெடிக்கல் றிப்போட்டைப்பாரடா என்றால் எல்லாம் பைன் என்று சொல்லுறான். தமிழ் சிறி குடுத்து வைத்தவர்.

தோட்டத்தில வேலை செய்து கொண்டு தம்பி இதைப் பார் என்றால் 

தம்பி பைலைப் பார்க்காமல் ஆiஒப் பார்த்துட்டே பதில் சொல்லுறார்.

மெதுவா நெஞ்சு நோவுது என்று சொல்லி படுத்துப் பாருங்கோ.

அப்புறம் தெரியும் டாக்ரரின் விளையாட்டை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

 

ஆறுமுகநாவலர் நம்மட ஊர் தான்.

படிக்க வந்தவர்.

இதுக்குள்ள தன்ர பவர் காட்ட வாறார்.

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Kandiah57 said:

உங்கள் ஊரில் பாடசாலை. இருக்க  ??

நான் படிக்கவில்லை என்பதால் ஊரில் பாடசாலை இல்லை என்று அர்த்தமா?

இருபாலையில் சேனாதிராச முதலியாரிடம் பாடம் படித்தார்.

Just now, குமாரசாமி said:

இதுக்குள்ள தன்ர பவர் காட்ட வாறார்.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:
4 hours ago, குமாரசாமி said:

ஆகா .....நீங்கள் ஆறுமுகநாவலர் வம்சாவழிகளா ?

இதை முதலே சொல்லி இருந்தால்   குமாரசாமி அண்ணை   வேலைக்கு போகாமல்  வந்து சந்தித்திருப்பார்

நல்லகாலம் எங்கடை வீட்டுத் திருமணத்துக்கு  @குமாரசாமிவரவில்லை என்று  @தமிழ் சிறி சந்தோசப்படுவார்.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ஈழப்பிரியன் said:

நல்லகாலம் எங்கடை வீட்டுத் திருமணத்துக்கு  @குமாரசாமிவரவில்லை என்று  @தமிழ் சிறி சந்தோசப்படுவார்.

ஏன் குமாரசாமி  அண்ணை   ஆயிரக்கணக்கில்.  மெய் எழுதி இருப்பார் ....இதில்  கவலைப்பட தான் முடியும்    🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நல்லகாலம் எங்கடை வீட்டுத் திருமணத்துக்கு  @குமாரசாமிவரவில்லை என்று  @தமிழ் சிறி சந்தோசப்படுவார்.

 

8 hours ago, nilmini said:

குசா அண்ணாவால் வேலை நிமித்தம் வரமுடியவில்லை.

சிறியர் வேண்டுமென்றே தனது வீட்டில் இந்த விபரீத விளையாட்டு வேண்டாம் என்று  சாமியாரை தவிர்த்தாரோ? அல்லது நண்பனைப்பற்றி அறிந்திருக்கிற படியினால் சிறியர் தன்னை மட்டுமே, ஹாஹா... கவனிப்பார், எதற்கு அவருக்கு சிரமம் என்று சாமியாரே ஒதுங்கிக்கொண்டாரோ? 

8 hours ago, nilmini said:

ரெட்டிப்பு சந்தோசம் அவரது பணிவையும், சுத்தமான யாழ்பாணத்தமிழையும் கேட்டு.

"கம்பன் வீட்டு கைத்தறியும் கவி பாடுமாம்." ஆறுமுக நாவலர் பூட்டன் தமிழ் பேசா  விட்டார்த்தான் ஆச்சரியம்!

1 hour ago, குமாரசாமி said:

இதுக்குள்ள தன்ர பவர் காட்ட வாறார்.

ஆறுமுக நாவலரைச்சாட்டி சிறியரோட சொந்தங்கொண்டாட ஆளாளுக்கு கிளம்ப போறார்கள். விழா எல்லாம் முடிந்தது. மகனின் கல்யாணத்தில் ஒன்று சேருவோம். இனி மகனுக்கு பெண் பார் படலத்தில் பிரச்சனை இல்லை சிறியருக்கு. நானும் ஆறுமுகநாவலரைப்பற்றி நிறைய வாசித்து அறிந்து வைத்திருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nilmini said:

படத்தையும் இணைத்துள்ளேன்

ஓ இவர்தான் பாஞ்ச் ஐயாவா. நான் இவர் தமிழ்சிறி என நினைத்தேன். 

9 hours ago, nilmini said:

அதில் ஒருவர் மட்டும் அங்கேயே தங்கிவிட மற்ற மூன்று சகோதரர்களும் பணம் மற்றும் பொருள்களுடன் கப்பலில் யாழ்ப்பாணம் திரும்பும்போது கடல் கொள்ளையர்களால் கொல்லப்பட்டு விட்டார்கள். மலேசியாவில் தங்கிவிட்ட சகோதரனின் வம்சம் தற்போது அங்கு வாழ்கிறார்கள்.

துயரமான சம்பவம். நினைத்து பார்க்க திகிலாக உள்ளது. கடற்கொள்ளையர்கள் இலங்கயரா இந்தியரா அல்லது வேறு நாட்டவரா?

எங்கள் ஆட்கள் இப்படி கடலில் கொலை செய்து கொள்ளை அடித்த சம்பவங்கள் ஊரில் சொல்ல கேட்டுள்ளேன். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

இருபாலையில் சேனாதிராச முதலியாரிடம் பாடம் படித்தார்.

ஆமாம் நீங்கள் சொல்வது உண்மை தான் 🙏

  • கருத்துக்கள உறவுகள்

திருமண தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நில்மினி. 🙏

இப்போதைய அவசர உலகில் மற்றவர்களுக்கு சிரமம் கொடுக்காமல் திருமணத்தை ஜேர்மனியில் உள்ளவர்களுடன் மட்டுமே நடத்துவது  என நாம் யோசித்து இருந்தோம்.

மகளின் திருமண நிச்சயதார்த்தம்   நடை பெற்ற  போது...  அதனை   ஒரு தகவலாக  அறிவிக்கும் வகையில்  உறவினர்களின் WhatsApp குழுமத்தில்  அந்தச் செய்தியை பகிர்ந்து கொண்டேன். செய்தி பகிர்ந்த அன்றும் அதற்கு அடுத்த நாளும்   எல்லோரும் திருமணம் எப்போ என்றும்... அதற்கு தாமும் நிச்சயம்  வருவதாக 16 குடும்பத்தினர் உலகின் பல பாகங்களில் இருந்தும்   தகவல் அனுப்பி இருந்தார்கள். 

நில்மினியும் வருவதாக தெரிவித்து இருந்தமை மகிழ்ச்சியாக இருந்தாலும்... வேலைகளுக்கு லீவு போட்டு, விமானத்தில்  இவ்வளவு தூரம் வந்து சிரமப்படப் போகின்றார்களே என்ற ஆதங்கமும் இருந்தாலும் எல்லா உறவினர்களையும் ஒரே இடத்தில் பல வருடங்களுக்குப் பின் சந்திக்கும் அருமையான சந்தர்ப்பத்தையும் தவறவிடக்கூடாது என்ற ஆசையும் மனதில் இருக்கத்தான் செய்தது. 

நில்மினியை ஊரில் சந்திக்கவில்லை என்றாலும்... அவரின் சித்தப்பா, மாமா போன்றோருடன் உறவினர் முறையைத்தாண்டி நட்புடன் பழகி வந்துள்ளதை மறக்க முடியாது. உறவினர்கள் பலரும் நில்மினியை...   சந்தித்த நிகழ்வுகளை  மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்கள். 

வந்தவர்களில் சிலரை தொலைபேசி மூலம் உரையாடி இருந்தாலும் அப்போதான் நேரில் சந்திக்கும் சந்தர்ப்பமும் கிடைத்தது. இருவரை 40 வருடங்களின் பின்பு சந்தித்து இருந்தேன். வந்தவர்களில் ஆறு மாத குழந்தையில் இருந்து 78 வயது வரை உள்ளவர்களும் இருந்தமை மகிழ்ச்சியாக இருந்தது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ஈழப்பிரியன் said:

ஆறுமுகநாவலர் நம்மட ஊர் தான்.

படிக்க வந்தவர்.

சோதிட சங்கீத வித்வ சிரோன்மணி தாவை வாண அம்பலவாண நாவலரின் தகப்பன் தாவடியில் மிகவும் புகழ் பெற்ற கச்சேரி சக்கடத்தார் தாவை சண்முகம்

சோதிட சங்கீத வித்வ சிரோன்மணி தாவைவாண அம்பலவாண நாவலர்- இவர்தான் சிறியின் பாட்டியினதும், எனது பாட்டனிதனும் தகப்பன். நாவலரின் மதிப்புக்குரிய மாணவராதலால் இவருக்கு நாவலர் பெயர் சூட்டப்பட்டது.

எனது அப்பம்மாவின் பூட்டன் தான் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்.

ஆக, எனக்கும், சிறியிக்கும் ஆறுமுகநாவலரும், அவரது முதன்மை மாணவரும் நேரடி சொந்தம்.

Edited by nilmini

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நியாயம் said:

துயரமான சம்பவம். நினைத்து பார்க்க திகிலாக உள்ளது. கடற்கொள்ளையர்கள் இலங்கயரா இந்தியரா அல்லது வேறு நாட்டவரா?

எங்கள் ஆட்கள் இப்படி கடலில் கொலை செய்து கொள்ளை அடித்த சம்பவங்கள் ஊரில் சொல்ல கேட்டுள்ளேன். 

ஒரு காலத்தில் காங்கேசன்துறை, பருத்தித்துறை துறைமுகங்கள் பிரசித்தி பெற்று இருந்தது எல்லோருக்கும் தெரிந்த விடயம். எத்தனயோ வெற்றிகரமான பயணங்கள், வியாபாரங்கள் நடை பெற்றிருந்தாலும் இப்படியான துயர சம்பவங்களும் நடந்திருக்கு. அதன் பின்பு எனதும் சிறியினதும், பூட்டி வேறு ஒரு குடும்பத்தவரையும் எத்தனயோ சந்தர்ப்பங்கள் கிடைத்தும் கடல் தாண்டி பயணிக்க விடவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Thaavai-Sanmugam.jpg

Thaiyalmuththu.jpg

சிறியின் அப்பம்மா தையல்முத்து (எனது அப்பப்பாவின் சகோதரி) திருமணம். அவரின் தகப்பன் சோதிட சங்கீத வித்வ சிரோன்மணி தாவை வான அம்பலவாண நாவலர்.

இந்த புகைப்படங்கள் 1900  ஆம் ஆண்டுக்கும் 1902 ஆம்  ஆண்டுக்கும் இடையில் எடுக்கப்பட்டது. 

Edited by nilmini

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, nilmini said:

பாஞ் அண்ணாவையும் குசா அண்ணாவையும் சந்தித்து ஒரு யாழ்கள Gettogether வைப்பம் என்று பிளான் போட்டிருந்தேன். குசா அண்ணாவால் வேலை நிமித்தம் வரமுடியவில்லை. பாஞ் அண்ணாவை சந்தித்தது மிகுந்த. சந்தோசம்

வணக்கம் நில்மினி. எதிர்பாராத யாழ்கள உறவுகளின் சந்திப்பு தரும் மகிழ்ச்சி என்றும் நினைவில் நிலைத்திருக்கும். அதனை ஏற்படுத்தித் தந்த தமிழ்சிறிக்கு நன்றிகள்.

உங்கள் எழுத்துக்கள் எல்லை தாண்டி நீண்டாலும் வாசிக்கத் தயாராகி உள்ளோம். சமீபத்தில் சந்தித்த மூன்று கள உறுப்பினர்களான எங்கள் தலைகள் இற்றைவரை யாழ்களத்தில் எப்படி உருட்டப்படுகிறது என்பதை அறிவீர்கள், நீங்களும் எங்களுடன் சேர்ந்தால் அது எங்களுக்கு ஒரு உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அள்ளித் தரும் என நம்பலாம். நிச்சயம் உங்களுக்கு ஒரு பலகாரப்பொதியைச் சிறித்தம்பி கட்டியிருப்பார் எனவும் நம்பலாம்.

ஏனென்றால் உங்களையும் என்னையும் அவர் சந்திக்கவைத்த பகுதி பலகாரம், உணவு உண்பதற்காக ஒதுக்கப்பட்ட பகுதி. 🤪🤤

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, nilmini said:

எனது அப்பம்மாவின் பூட்டன் தான் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்.

இதில் ஏதோ ஒரு தவறு இருக்கிறது.

நாவலர் பிறந்தது 1822. இறப்பு 1879.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.