Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

ராஜீவ் கொலைவழக்கில் விடுதலையான சாந்தனின் இழப்பிற்கும், 
ராஜீவின் நண்பரான சம்பந்தனின் இழப்பிற்கும் ஈழ தமிழ் மக்கள் தரும் பதில்...

-Livingston Edinborough-

தாயக உண்மை நிலை இது தான் ஆனால் இங்கே நீங்கள் யாராவது தாயக அரசியல்வாதிகளை விமர்சித்தால் அது எவராக இருந்தாலும் நாங்கள் புலிகளின் தவறுகளை இங்கே விதைப்போம் புலிகளை இழுத்து உங்களை அடிப்போம் என்று ஒரு தியரி இருக்கிறது. அது எந்த விதத்தில் தாயக மக்களின் அபிலாசைகளுடன் ஒத்துப்போகும் என்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது. எவ்வளவு வஞ்சம் தீர்க்கும் உணர்வு இது??

Edited by விசுகு

  • Replies 328
  • Views 28.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    தமிழர்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள சிங்களவர்களுக்கு மிகவும் விட்டுக்கொடுப்புடனும், கிழக்கு மாகாணசபையை முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுத்தும், பதிலுக்கு ஒரு துரும்பைத்தன்னும் பெறாமலேயே தோல்வியடைந

  • நிழலி
    நிழலி

    சம்பந்தர் ஒரு மூத்த தமிழ் அரசியல் வாதி. போராட்டத்துக்கு முற்பட்ட  அமைதி வழியிலான காலம், போராட்டம் இடம்பெற்ற காலம், போரட்டம் இனப்படுகொலை ஒன்றின் மூலம் முடித்து வைக்கப்பட்ட பின்னரான காலம் என, ஈழத்தமிழர்

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    கல்லோ தம்பி உலகமே போற்றக் கூடிய அளவுக்கு இரவோ பகலோ வயது வித்தியாசமில்லாமல் தன்னந்தனியாக பெண்கள் நடமாடக் கூடிய அளவுக்கு நாட்டையே வைத்திருந்தார் தலைவர். கருணாவோ பிள்ளையானோ தலைவருடன் இருக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, தமிழ் சிறி said:

சம்பந்தனின் அஞ்சலிக்கு...  இலவச பேரூந்தில், இலவச உணவு கொடுத்து..
அழைத்து செல்ல இருப்பதாக ஒரு விளம்பரம் பார்த்தேன். 
அப்படி இருந்தும்... ஒரு சனமும் ஆர்வம் காட்டவில்லை.

நல்ல தலைவனுக்கு இலவச விளம்பரம் தேவையில்லை.
மக்கள் தாமாகவே... முண்டியடித்து அஞ்சலி  செலுத்துவதுதான் தலைவனுக்கு அழகு. 

இறந்த பின் ஒருவனுக்கு கூடும் கூட்டத்தை வைத்து, அவன் எப்படிப் பட்டவன் என்பதை அறிந்து விடலாம். 

காலா காலமாக வாக்களித்தவர்கள் கூட அஞ்சலி செய்ய வரவில்லை போலிருக்கின்றது. உண்மையில் 2009க்கு பின்னர் மக்கள் வாக்களித்து தான் இவர்கள் பாராளுமன்றம் சென்றார்களா என்ற சந்தேகம் வருகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

தாயக உண்மை நிலை இது தான் ஆனால் இங்கே நீங்கள் யாராவது தாயக அரசியல்வாதிகளை விமர்சித்தால் அது எவராக இருந்தாலும் நாங்கள் புலிகளின் தவறுகளை இங்கே விதைப்போம் புலிகளை இழுத்து உங்களை அடிப்போம் என்று ஒரு தியரி இருக்கிறது. அது எந்த விதத்தில் தாயக மக்களின் அபிலாசைகளுடன் ஒத்துப்போகும் என்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது. 

உங்கள் மிகையான முறைப்பாட்டு மனநிலை அர்த்தமற்றது. இங்கே "ஆயுதங்களை விட ஆபத்தானது சம்பந்தன் போன்றோர் காத்த மௌனம்" என்று கூறி, வன்முறை வழிகளை விட சம்பந்தரை கீழாக இறக்கி வைக்க நீங்கள் முயன்றீர்கள். இப்படி முன்னரும் நீலன் திரியில் நடந்திருக்கிறது. இங்கேயும் , சுமந்திரன் பற்றி வரும் புலி நீக்க விமர்சனங்களிலும் பொதுக் காரணியாக இருப்பது புலிகள். அதனால் பேச வேண்டி வருகிறது. எனவே, புலிகளை இங்கே இழுத்து வந்தது புலிக்காய்ச்சல் இருப்போர் அல்ல, அளவுக்கதிகமாக புலிகள் பற்றிய பக்தி கண்ணை மறைக்க, ஏனையோரை போட்டுத் தாக்கும் உறவுகள் தான். இதைக் குறைத்தால், புலிகள் பற்றிய விமர்சனங்களும் இங்கே பேசப் படாது. இதை பல தடவைகள் எழுதியாகி விட்டது.

தாயக உண்மை நிலை தெளிவாக தேர்தல்களில் வெளிப்படுகிறது. மரண வீடுகளில் அல்ல. தேர்தல் முடிவுகளை ஒதுக்கி விட்டு தாயக மக்களைப் புரிந்து கொள்ள இயலாது!

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, குமாரசாமி said:

காலா காலமாக வாக்களித்தவர்கள் கூட அஞ்சலி செய்ய வரவில்லை போலிருக்கின்றது. உண்மையில் 2009க்கு பின்னர் மக்கள் வாக்களித்து தான் இவர்கள் பாராளுமன்றம் சென்றார்களா என்ற சந்தேகம் வருகின்றது. 

இவ‌ரின் இழ‌ப்பு த‌மிழ‌ர்க‌ள் ம‌த்தியில் சிறு தாக்க‌த்தை கூட‌ உண்டாக்கா வில்லை..............இவ‌ர் த‌மிழ‌ர்க‌ளுக்கான‌ ஆள் என்றால் இவ‌ரை சிங்க‌ள‌வ‌ன் எப்ப‌வோ போட்டு த‌ள்ளி இருப்பான் தாத்தா......................இவ‌ர் உயிருட‌ன் இருந்த‌ கால‌த்தில் காணொளிக‌ள் மூல‌ம் இவ‌ரை பார்க்கையில் க‌டும் கோவ‌ம் வ‌ரும்...................

இவ‌ர் சில‌ வ‌ருட‌த்துக்கு முத‌ல் யாழ்ப்பாண‌ம் வ‌ந்த‌ போது வாக‌ன‌த்தை விட்டு கீழ‌ இற‌ங்க‌ வில்லை. ம‌க்க‌ளின்  எதிர்பு அதிக‌மாய் இருந்த‌து....................

 யோசப் பரராஜசிங்கம் ஜ‌யா சிங்க‌ள‌ காட‌ய‌ர்க‌ளால் சுட்டு கொன்ற‌ போது த‌மிழ‌ர்க‌ள் க‌ண்ணீர் வ‌டித்தவை..................யோசப் பரராஜசிங்கம் ஜ‌யா ந‌ம்மோடு இல்லா விட்டாலும் ஜ‌யாவை அதிக‌ம் நினைக்கிற‌ நான்☹️😥

த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் யோசப் பரராஜசிங்கம் ஜ‌யாவுக்கு புலி கொடி போத்தி இறுதி அஞ்ச‌லி செய்த‌வ‌ர்.....................த‌மிழ் தேசிய‌ கூட்ட‌மைப்பில் இருந்த‌ நேர்மையான‌ ம‌னித‌ர் தான் யோசப் பரராஜசிங்கம் ஜ‌யா...........................

joseph-para.jpg

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் / யோசப் பரராஜசிங்கம் ஜ‌யா🙏🙏🙏.........

  • கருத்துக்கள உறவுகள்
On 3/7/2024 at 02:32, விசுகு said:

அவர்கள் தம்மால் முடிந்ததற்கும் அதிகமாக செய்து விட்டு போயிட்டார்கள். உங்களிடம் 2009 தொடக்கம் இன்றுவரை என்ன நிகழ்ச்சி நிரல் காணப்பட்டது. இனி என்ன உள்ளது?  என்று ஏன் இதுவரை புலிகளை தூற்றியவர்களை நீங்கள் கேட்கவில்லை.

ஆனாலும் நான் ஆயிரம் தடவைக்கு மேல் இதே கேள்வியை இங்கே கேட்டபோது ஏன் உங்கள் நியாயம் மௌனம் காத்தது??

2009 இன் பின் மக்கள் பல விடயங்களில் விழித்து விட்டார்கள். விடுதலை புலிகள் அமைப்பினை பாவித்து தங்கள் சொந்த லாபங்களை காண்பவர்கள் பற்றி இப்போது அதிக எச்சரிக்கை உள்ளது. 2009இன் பின் முன்பு போல் மக்கள் நிகழ்வுகளுக்கு ஒன்று கூடுவது இல்லை. காரணம் நிஜம் எது நிழல் எது என மக்கள் மட்டுக்கட்ட தொடங்கிவிட்டார்கள். கட்டுக்கோப்பாக இயங்கிய அமைப்பு, தலைவரையே பேக்காட்டலாம், சுத்தலாம் என்றால் இப்படிப்பட்ட வேலை பார்த்தவர்களின் நிகழ்ச்சி நிரல்களுக்கு பின்னால் ஆட்கள் அணி திரளுவது என்பது கடினமே.

நீங்கள் குறிப்பிடும்படியாக புலிகளை தூற்றியவர்கள் புலிகளுடன் சம்பந்தப்படாதவர்கள் என்று கூட அனுமானிக்க தேவை இல்லை. அவர்கள் தில்லாலங்கடிகளை உணர்ந்து எச்சரிக்கை அடைந்தவர்களாக காணப்படலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, நியாயம் said:

அப்படியா? அப்போ மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழர் கூட்டணியின் தலைவரின் பூத உடலை கூட தூக்க 4 பேர் கூடவா இல்லை? இப்போதும் மக்கள் விழித்து கொண்டார்கள் எனலாமா?? 

மக்கள் எச்சரிக்கை அடைந்து விட்டார்கள் என நான் சொல்கிறேன் நீங்கள் எப்படி??

2 hours ago, குமாரசாமி said:

காலா காலமாக வாக்களித்தவர்கள் கூட அஞ்சலி செய்ய வரவில்லை போலிருக்கின்றது. உண்மையில் 2009க்கு பின்னர் மக்கள் வாக்களித்து தான் இவர்கள் பாராளுமன்றம் சென்றார்களா என்ற சந்தேகம் வருகின்றது. 

"டேய் கள்ளா "என்பது பொய்யா??😁

2 hours ago, Justin said:

உங்கள் மிகையான முறைப்பாட்டு மனநிலை அர்த்தமற்றது. இங்கே "ஆயுதங்களை விட ஆபத்தானது சம்பந்தன் போன்றோர் காத்த மௌனம்" என்று கூறி, வன்முறை வழிகளை விட சம்பந்தரை கீழாக இறக்கி வைக்க நீங்கள் முயன்றீர்கள். இப்படி முன்னரும் நீலன் திரியில் நடந்திருக்கிறது. இங்கேயும் , சுமந்திரன் பற்றி வரும் புலி நீக்க விமர்சனங்களிலும் பொதுக் காரணியாக இருப்பது புலிகள். அதனால் பேச வேண்டி வருகிறது. எனவே, புலிகளை இங்கே இழுத்து வந்தது புலிக்காய்ச்சல் இருப்போர் அல்ல, அளவுக்கதிகமாக புலிகள் பற்றிய பக்தி கண்ணை மறைக்க, ஏனையோரை போட்டுத் தாக்கும் உறவுகள் தான். இதைக் குறைத்தால், புலிகள் பற்றிய விமர்சனங்களும் இங்கே பேசப் படாது. இதை பல தடவைகள் எழுதியாகி விட்டது.

தாயக உண்மை நிலை தெளிவாக தேர்தல்களில் வெளிப்படுகிறது. மரண வீடுகளில் அல்ல. தேர்தல் முடிவுகளை ஒதுக்கி விட்டு தாயக மக்களைப் புரிந்து கொள்ள இயலாது!

இல்லை. நீங்கள் புலிகளை நாசுக்காகவும் ,நேரடியாகவும் தாக்கும் ஒருவர் என நான் அடையாளம் காண்கிறேன். எனது நீண்ட கால அவதானிப்பு இது. இது பற்றிய உங்களின் நேர்மையான பதில் தேவை. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

அப்படியா? அப்போ மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழர் கூட்டணியின் தலைவரின் பூத உடலை கூட தூக்க 4 பேர் கூடவா இல்லை? இப்போதும் மக்கள் விழித்து கொண்டார்கள் எனலாமா?? 

மக்கள் எச்சரிக்கை அடைந்து விட்டார்கள் என நான் சொல்கிறேன் நீங்கள் எப்படி??

"டேய் கள்ளா "என்பது பொய்யா??😁

இல்லை. நீங்கள் புலிகளை நாசுக்காகவும் ,நேரடியாகவும் தாக்கும் ஒருவர் என நான் அடையாளம் காண்கிறேன். எனது நீண்ட கால அவதானிப்பு இது. இது பற்றிய உங்களின் நேர்மையான பதில் தேவை. 

சம்பந்தரின் தொகுதி யாழ்ப்பாணமா? திருகோணமலையில் உடலை காவிச்செல்ல நான்குபேர் வருவார்கள். நீங்கள் கவலைப்படாதீர்கள். 

சாந்தனின் மரணத்திற்கு வந்தவர்களை விட கில்மிசாவின் வெற்றிவிழாவை தேரில் இழுத்து கொண்டாட வந்தோர் அநேககர். எனவே கில்மிசாவை அடுத்த தேர்தலில் நிறுத்தலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, நியாயம் said:

சம்பந்தரின் தொகுதி யாழ்ப்பாணமா? திருகோணமலையில் உடலை காவிச்செல்ல நான்குபேர் வருவார்கள். நீங்கள் கவலைப்படாதீர்கள். 

சாந்தனின் மரணத்திற்கு வந்தவர்களை விட கில்மிசாவின் வெற்றிவிழாவை தேரில் இழுத்து கொண்டாட வந்தோர் அநேககர். எனவே கில்மிசாவை அடுத்த தேர்தலில் நிறுத்தலாம். 

யாழ்ப்பாணத்தில் சிங்களவர்கள் அநேகமாக வாழ்வதாக கேள்விப்பட்டுள்ளேன். நீங்கள்?

சாந்தனின் மரணத்துக்கு மக்கள் பயத்தில் வராமல் விட்டதே 1ஓ வீத உண்மை. 
நீங்கள் ஆமிக்கு புலிகள் அடித்ததால் தான் ஆமி மக்களை கொல்ல்கிறான் என்று சொன்னவராச்சே. கில்மிசா என்ன சச்சியையே நிறுத்தலாம். வசதி எப்படி???

தந்தை செல்வாவின் ஊர்வலத்துக்கு வந்தவர்களின் எண்ணிக்கையாவது தெரியுமா??

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விசுகு said:

தாயக உண்மை நிலை இது தான் ஆனால் இங்கே நீங்கள் யாராவது தாயக அரசியல்வாதிகளை விமர்சித்தால் அது எவராக இருந்தாலும் நாங்கள் புலிகளின் தவறுகளை இங்கே விதைப்போம் புலிகளை இழுத்து உங்களை அடிப்போம் என்று ஒரு தியரி இருக்கிறது. அது எந்த விதத்தில் தாயக மக்களின் அபிலாசைகளுடன் ஒத்துப்போகும் என்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது. எவ்வளவு வஞ்சம் தீர்க்கும் உணர்வு இது??

விசுகர், அது சிலரின் ரத்தத்தில் ஊறியுள்ள விஷம். ஆனால் கூர்ந்து கவனித்தீர்களானால் அந்த நால்வருக்கும் ஒரு ஒற்றுமை இருப்பதை காணலாம்!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Justin said:

உங்கள் மிகையான முறைப்பாட்டு மனநிலை அர்த்தமற்றது. இங்கே "ஆயுதங்களை விட ஆபத்தானது சம்பந்தன் போன்றோர் காத்த மௌனம்" என்று கூறி, வன்முறை வழிகளை விட சம்பந்தரை கீழாக இறக்கி வைக்க நீங்கள் முயன்றீர்கள். இப்படி முன்னரும் நீலன் திரியில் நடந்திருக்கிறது. இங்கேயும் , சுமந்திரன் பற்றி வரும் புலி நீக்க விமர்சனங்களிலும் பொதுக் காரணியாக இருப்பது புலிகள். அதனால் பேச வேண்டி வருகிறது. எனவே, புலிகளை இங்கே இழுத்து வந்தது புலிக்காய்ச்சல் இருப்போர் அல்ல, அளவுக்கதிகமாக புலிகள் பற்றிய பக்தி கண்ணை மறைக்க, ஏனையோரை போட்டுத் தாக்கும் உறவுகள் தான். இதைக் குறைத்தால், புலிகள் பற்றிய விமர்சனங்களும் இங்கே பேசப் படாது. இதை பல தடவைகள் எழுதியாகி விட்டது.

தாயக உண்மை நிலை தெளிவாக தேர்தல்களில் வெளிப்படுகிறது. மரண வீடுகளில் அல்ல. தேர்தல் முடிவுகளை ஒதுக்கி விட்டு தாயக மக்களைப் புரிந்து கொள்ள இயலாது!

நான் இந்த திரியில் எத்தனையாவது பக்கத்தில் முதல் முறையாக பதிந்தேன் என்றாவது பார்த்தால் புரிந்தால் என் புலி முகம் மட்டுமே கண்ணுக்கு தெரிய வராது. 

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்

9 பக்கம் வரை நீன்ட இந்த திரியில் உள்ள விடையங்கள் பற்றி தாயக மக்கள் எந்தவிதமான பிரதிபலிப்புகளையும் வெளிப்படுத்த வில்லை.அவர்களின் பிரச்சனைகள் அவர்களுக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நியாயம் said:

2009 இன் பின் மக்கள் பல விடயங்களில் விழித்து விட்டார்கள். விடுதலை புலிகள் அமைப்பினை பாவித்து தங்கள் சொந்த லாபங்களை காண்பவர்கள் பற்றி இப்போது அதிக எச்சரிக்கை உள்ளது. 2009இன் பின் முன்பு போல் மக்கள் நிகழ்வுகளுக்கு ஒன்று கூடுவது இல்லை. காரணம் நிஜம் எது நிழல் எது என மக்கள் மட்டுக்கட்ட தொடங்கிவிட்டார்கள். கட்டுக்கோப்பாக இயங்கிய அமைப்பு, தலைவரையே பேக்காட்டலாம், சுத்தலாம் என்றால் இப்படிப்பட்ட வேலை பார்த்தவர்களின் நிகழ்ச்சி நிரல்களுக்கு பின்னால் ஆட்கள் அணி திரளுவது என்பது கடினமே.

நீங்கள் குறிப்பிடும்படியாக புலிகளை தூற்றியவர்கள் புலிகளுடன் சம்பந்தப்படாதவர்கள் என்று கூட அனுமானிக்க தேவை இல்லை. அவர்கள் தில்லாலங்கடிகளை உணர்ந்து எச்சரிக்கை அடைந்தவர்களாக காணப்படலாம். 

அதாவது இனி என்ன செய்யலாம் என்ற உங்கள் கேள்விகளுக்கு உங்கள் பதில் நீங்கள் எச்சரிக்கை அடைந்து தள்ளி நிற்கிறீர்கள். அப்படியானால் மற்றவர்களுக்கு எதுக்கு நியாயம் அழப்பான்? 

உங்களை போன்றவர்களால் தான் எமது போராட்டம் அழிக்கப்படும் காட்டி கொடுக்கப்படும் என்பது என் போன்றவர்களுக்கு தெளிவாக தெரிந்து சகாப்தம் ஆகிவிட்டது.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, சுவைப்பிரியன் said:

9 பக்கம் வரை நீன்ட இந்த திரியில் உள்ள விடையங்கள் பற்றி தாயக மக்கள் எந்தவிதமான பிரதிபலிப்புகளையும் வெளிப்படுத்த வில்லை.அவர்களின் பிரச்சனைகள் அவர்களுக்கு.

அப்படி அல்ல சுவைப்பிரியரே! துஷ்டரைக் கண்டால் தூர விலகு. அவர்கள் தமிழர்கள் இத்திரியிலும் துஷ்டர்களைக் கண்டு விலகி நிற்கிறார்கள். 😔

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நியாயம் said:

--- சாந்தனின் மரணத்திற்கு வந்தவர்களை விட கில்மிசாவின் வெற்றிவிழாவை தேரில் இழுத்து கொண்டாட வந்தோர் அநேககர். எனவே கில்மிசாவை அடுத்த தேர்தலில் நிறுத்தலாம். 

நாங்கள்... சாந்தன், சம்பந்தனின் செத்த வீட்டுக்கு வந்த சனத்தைப் பற்றிக் கதைக்க,
நீங்கள் கில்மிசாவின் களியாட்ட நிகழ்ச்சியை பற்றி கதைக்கின்றீர்கள். 
அப்படி என்றால்... தமன்னாவுக்கு வந்த ஆட்களையும்  ஒப்பிட்டு  பார்க்க வேண்டியதுதானே.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, சுவைப்பிரியன் said:

9 பக்கம் வரை நீன்ட இந்த திரியில் உள்ள விடையங்கள் பற்றி தாயக மக்கள் எந்தவிதமான பிரதிபலிப்புகளையும் வெளிப்படுத்த வில்லை.அவர்களின் பிரச்சனைகள் அவர்களுக்கு.

ச‌ம்ப‌ந்த‌ர்  த‌மிழ‌ர்க‌ளுக்கு தேவை இல்லா ஆணி................யாழ்ப்பாண‌த்து இள‌ம் யூடுப்ப‌ர்க‌ள் கூட‌ இவ‌ரின் இறுதி ச‌ட‌ங்கை நேர‌டி ஒளிப‌ர‌ப்பு செய்ய‌ வில்லை.................யாரும் இவ‌ருக்காக‌ க‌ண் க‌ல‌ங்க‌ வில்லை சுவை அண்ணா...................ஊர் பேர் தெரியாம‌ இருந்த‌ சும‌த்திர‌ன‌ சூழ்ச்சி முறையில் அர‌சிய‌லுக்கு கொண்டு வ‌ந்து வெல்ல‌ வைச்ச‌ க‌போதி தான் இந்த‌ ச‌ம்ப‌ந்த‌ர் 

தானும் த‌ன்ர‌ குடும்ப‌மும் உல்லாச‌மாய் இருக்க‌ ச‌ம்ப‌ந்த‌ர்  எந்த‌ எல்லைக்கும் போய் சிங்க‌ள‌வ‌னுக்கு ந‌ல்லா முட்டு கொடுப்பார்...................ச‌ம்ப‌ந்த‌ர்  முக‌மூடி போடாத‌ லக்சுமன் கதிர்காமர்................அது தான் எம் இன‌த்தை அழித்த‌ ம‌கிந்தா ச‌ம்ம‌ந்த‌னின் இறுதி ச‌ட‌ங்கில் க‌ல‌ந்து கொண்டு இருந்தான்..................இவ‌ருக்கு ஓட்டு போட்ட‌ ம‌க்க‌ள் கூட‌ இவ‌ரின் இழ‌ப்பை நினைசு க‌வ‌லைப் ப‌ட்டு இருக்க‌ மாட்டின‌ம்.................2002ம் ஆண்டு த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் தான் பெரும்பாலான‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு ச‌ம்ம‌ந்த‌னை அறிமுக‌ம் செய்து வைச்ச‌வ‌ர்........................2009 போரால் பாதிக்க‌ ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு இவ‌ர் ஏதும் ந‌ல்ல‌து செய்த‌வ‌ரா........................

குடும்ப‌த்துட‌ன் உல்லாச‌மாய் வாழ்ந்து குடும்ப‌த்துக்கு சொத்து சேர்த்து வைத்து விட்டு போய் சேர்ந்து விட்டார்........................

இவ‌ர் ஒன்றும் த‌மிழ்செல்வ‌ன் அண்ணா . யோசப் பரராஜசிங்கம் ஜயா கிடையாது................யாரோ ஒருத‌ர் இற‌ந்து போய் விட்டார் என்ர‌ நிலையில் தான் ச‌ம்ப‌ந்த‌ரின் இற‌ப்பு .....................................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nunavilan said:

அப்படியா? அப்போ மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழர் கூட்டணியின் தலைவரின் பூத உடலை கூட தூக்க 4 பேர் கூடவா இல்லை? இப்போதும் மக்கள் விழித்து கொண்டார்கள் எனலாமா?? 

மக்கள் எச்சரிக்கை அடைந்து விட்டார்கள் என நான் சொல்கிறேன் நீங்கள் எப்படி??

"டேய் கள்ளா "என்பது பொய்யா??😁

இல்லை. நீங்கள் புலிகளை நாசுக்காகவும் ,நேரடியாகவும் தாக்கும் ஒருவர் என நான் அடையாளம் காண்கிறேன். எனது நீண்ட கால அவதானிப்பு இது. இது பற்றிய உங்களின் நேர்மையான பதில் தேவை. 

என் நேர்மையான பதில் இது:

புலிகளை நான் நேரடியாகவும், நாசூக்காகவும் தாக்குவதில்லை. ஆனால், புலிகள் செய்த தவறுகள் என்று நான் கருதுபவற்றை நான் நேரடியாகவே எழுதி "இது முட்டாள் தனம், இது தூர நோக்கில்லாத செயல், இது தவறு" என்று எழுதியிருக்கிறேன். இதை, சில வருடங்கள் முன்பு வரை உரிய திரிகளில் எழுதி வந்திருக்கிறேன். யாழ் நிர்வாகம் பகிரங்கமாக "புலிகளை குறை சொல்வது தேசியத்தை நலிவுறச் செய்யும்" என்று இதற்கு மறைமுகத் தடை விதித்த பின்னர் - அந்தக் கருத்தோடு உடன்பாடில்லா விட்டாலும் - தீவிரமாக புலிகளின் செயல்களை பற்றி நானாக எதுவும் எழுதவில்லை.

ஆனால், புலிகள் பற்றி எழுத வேண்டிய தேவையை தமிழ் மக்களின் தற்போதைய நிலைக்கு காரணமாக 196 நாடுகளையும், சம்பந்தரையும்  இன்ன பிற தரப்புகளையும் மட்டும் குற்றம் சாட்டும் "மடை மாற்றும்" உறவுகள் ஏற்படுத்துகிறார்கள். நேர்மை பற்றிப் பேசுகிறீர்கள், இதே நேர்மையை அந்த மடை மாற்றும் கள உறவுகளிடமும் எதிர்பாருங்கள், விளக்கம் கேளுங்கள்.

உதாரணமாக, இங்கே சம்பந்தன் செய்தது (இந்தியாவில் போய் நின்றது) வன்னி மக்களின் உயிரைப் பறித்ததா அல்லது தடுத்து வைக்கப் பட்டதும், அவர்கள் மேல் சிங்களவன் குண்டு போட்டதும் உயிரைப் பறித்ததா? இது ஒரு எளிமையான காரண காரியக் கேள்வி. இதற்கு நேரடியாகப் பதில் சொல்ல முடியாமல் , "சம்பந்தன் ஆயுதங்களை விட அழிவு செய்தார்"என்று எழுதும் விசுகரிடம், இதே நேர்மையான பதிலை எதிர்பாருங்கள். கிடைக்கிறதா என்று பாருங்கள்.

என்னுடைய அபிப்பிராயம்: புலிகளின் legacy இனை அடுத்த சந்ததிக்கு அப்படியே கடத்த வேண்டியதில்லை. அப்படிச் செய்வது முட்டாள் தனம். புலிகளின் தியாகம், நிர்வாகம், போர் ஓர்மம் எல்லாம் கடத்தப் பட வேண்டிய நல்ல விடயங்கள். தூர நோக்க அரசியல் உணர்வின்மை, ஒரு பிரச்சினைக்கு ஒற்றைப் படைத் தன்மையான தீர்வை மட்டும் நாடல், ஆகிய விடயங்கள் கடத்தப் படக் கூடாது.

பி.கு: இந்தப் பதில் நீங்களும் ஏனைய சில புலிகளின் பக்தியாளர்களும் விரும்பிய மாதிரி இல்லாமல் இருந்தால் மன்னியுங்கள். ஏனெனில், அவர்களைப் பொறுத்த வரை "முன்னாள் மாற்று இயக்கக் காரர், புலிகளிடம் தண்டனை பெற்றவர்கள், இந்திய/சிறிலங்கன் தரப்பிடம் கூலி வாங்குவோர்" ஆக நான் இருந்தால் அவர்களுக்கு திருப்தியாக இருக்கும்😎.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் இருந்து ஒரு அஞ்சலி: 

கருமங்கள் முடியாமல் கைவிட்டு சென்றாரே என கடை நிலை தொண்டன் எவனாச்சும் கதறி அழுதானா? 

தெருவெங்கும் சனம் திரண்டு பெரும் தரு ஒன்று சரிந்ததென்று மலர் துாவி மனமுடைந்து நின்றாரா? 

ஐயகோ என்செய்வேன் இனியெம்மை யார் காப்பார் எனச்சொல்லி எவரேனும் அழுது வடிந்தாரா?

இவையெல்லாம் இல்லாமல் ஒருதலைவன் சுடுகாடு சென்றால் அவன்தலைவன் ஆவானோ ?

இனியாச்சும் அறம் வழி நின்று அரசியல் செய்யுங்கள்! 

தனியாக நில்லாமல் மக்களுடன் நில்லுங்கள் அத்தனையும் வசமாகும்!

#அஞ்சலிப்பா

https://www.facebook.com/share/p/jEVuCZg8JCZJSChU/

16 hours ago, நியாயம் said:

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம்.

தமிரசுக் கட்சியின் மூத்த பெரும் தலைவர் இரா.சம்பந்தன்(Rajavarothiam Sampanthan) கடந்த 30ஆம் திகதி இரவு உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். 

அதனையடுத்து கொழும்பில் தனியார் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின்னர் கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 

சம்பந்தனின் இறுதி கிரியைகளிலும் அரசியல்

அதன் பின்னர், இன்று காலை உலங்கு வானூர்தி மூலம் திருகோணமலைக்கு சம்பந்தனின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு மக்களது அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

இந்தநிலையில், இடைப்பட்ட இந்த ஓரிரு நாட்களில்  சம்பந்தனின் மறைவு  தொடர்பிலும் அதனையடுத்து அவரது இறுதிக் கிரியைகள் தொடர்பிலும் பல்வேறு விமர்சனங்கள் ஏற்பட்டுள்ளன. 

யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம் | Sampanthan S Funeral

குறிப்பாக, சம்பந்தனின் இறுதி நிகழ்வை வைத்து ஒரு சிலர் அரசியல் செய்ய முயற்சிப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் செய்தித் தொடர்பாளரும், ஈழத்தமிழ் விவகாரங்களிற்கான தொடர்பாளராகவும் செயற்பட்ட மூத்த சட்டத்தரணி இராதாகிருஸ்னன், சம்பந்தனின் மறைவு தொடர்பிலும் இறுதி சமயத்தில் அவருக்கு ஏற்பட்ட நிலை தொடர்பிலும் தனது முகநூல் தளத்தில்  விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

அதில்,

“யாழில் மறைந்த இரா.சம்பந்தன் அவர்களுக்கு வந்த நிலை யாருக்கும் வரக்கூடாது. இலங்கை விமானப்படை உலங்கு வானூர்தி மூலம் பலாலி விமான நிலையம் ஊடாக யாழை வந்தடைந்தது சம்பந்தனின் சடலம். கட்சி தொண்டர்கள் விமான நிலையம் வருகை தராத காரணத்தால் இராணுவத்தினரால் சடலம் காவிச் செல்லப் பட்டது.

ஒரு வகையில் சம்பந்தனை வயது முதிர்ச்சியில், அரசியலில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்திய சுமந்திரன் உயிரற்ற சம்பந்தனின் உடலையும் நூறு வீதம் அசிங்கப்படுத்தி, தமிழர் வரலாற்றில் கருணாவிற்கு இணையாக சம்பந்தனை மக்கள் நினைக்கும் படி செய்து வழியனுப்பிய செயல் மிகவும் அருவருக்கத்தக்கது.

உலங்கு வானூர்தி மூலம் எடுத்துச் செல்லப்பட்ட உடல் தரை மார்க்கமாக எடுத்துச் சென்றால் தன் முக்கியத்துவம் குறைந்து விடும் என்பதால், சம்பந்தனை போன்று சுமந்திரன் கூறும் அத்தனைக்கும் தலையாட்டும் சம்பந்தன் வாரிசுகளை ஏமாற்றி சுமந்திரன் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளார்.

விமானத்தில் எடுத்து சென்றது ஒரு வகையில் காலச் சூழல் என்றாலும், தூக்குவதற்கு கட்சி தொண்டர்களை பயன்படுத்தாது இலங்கை படையினரை பயன் படுத்தியது மிக...மிக கவலையான செயல் என்பதை தவிர வேறு எதுவும் இல்லை.

சம்பந்தனை தூக்குவதற்கும் ஆட்கள் இல்லாத அவலம்..

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் இரா. சம்பந்தனது பூதவுடல் யாழ்ப்பாணத்தில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை (05) உலங்கு வானூர்தி மூலம் திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் சம்பந்தனின் பூதவுடலுக்கு நேற்று வியாழக்கிழமை (04) பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில் அஞ்சலி நிறைவுக்கு வந்த பின்னர் அனாதைப் பூதவுடல் போல அங்கே வைக்கப்பட்டது.

தந்தை செல்வா கலையரங்கில் இருந்து இன்றைய தினம் உடலை எடுத்துச் செல்வதற்கு தயாரான போது உடலை தூக்குவதற்கு ஆட்கள் இல்லை. பின்னர் பலத்த சிரமத்தின் மத்தியில் அங்கு வருகை தந்தவர்களை வைத்து காலையில் கார் மூலம் பலாலி விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து திருகோணமலைக்கு உலங்கு வானூர்தி மூலம் கொண்டு செல்லப்பட்டது.

சுமந்திரனின் பிடிவாதம் எப்படி எல்லாம் உயிரற்ற உடலையும் அசிங்கப்படுத்துகிறது என நினைத்துப் பாருங்கள். திருகோணமலையில் இரண்டு தினங்கள் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு அசிங்கப்படுத்திய பின்னர் ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கிரியை நடைபெற்று தகனம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுமந்திரனே உலகம் என இருந்த சம்பந்தன் நிலையை பாருங்கள், தந்தை செல்வநாயகத்தின் வயது முதிர்ச்சியிலும், அமிர்தலிங்கம் தந்தையை பராமரித்த விதம் இன்றும் மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்துள்ளது. எப்படி மாண்புடன் கடந்த காலங்களில் வளர்ந்த கட்சி இன்று கேள்விக் குறியாகியுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

என் நேர்மையான பதில் இது:

புலிகளை நான் நேரடியாகவும், நாசூக்காகவும் தாக்குவதில்லை. ஆனால், புலிகள் செய்த தவறுகள் என்று நான் கருதுபவற்றை நான் நேரடியாகவே எழுதி "இது முட்டாள் தனம், இது தூர நோக்கில்லாத செயல், இது தவறு" என்று எழுதியிருக்கிறேன். இதை, சில வருடங்கள் முன்பு வரை உரிய திரிகளில் எழுதி வந்திருக்கிறேன். யாழ் நிர்வாகம் பகிரங்கமாக "புலிகளை குறை சொல்வது தேசியத்தை நலிவுறச் செய்யும்" என்று இதற்கு மறைமுகத் தடை விதித்த பின்னர் - அந்தக் கருத்தோடு உடன்பாடில்லா விட்டாலும் - தீவிரமாக புலிகளின் செயல்களை பற்றி நானாக எதுவும் எழுதவில்லை.

ஆனால், புலிகள் பற்றி எழுத வேண்டிய தேவையை தமிழ் மக்களின் தற்போதைய நிலைக்கு காரணமாக 196 நாடுகளையும், சம்பந்தரையும்  இன்ன பிற தரப்புகளையும் மட்டும் குற்றம் சாட்டும் "மடை மாற்றும்" உறவுகள் ஏற்படுத்துகிறார்கள். நேர்மை பற்றிப் பேசுகிறீர்கள், இதே நேர்மையை அந்த மடை மாற்றும் கள உறவுகளிடமும் எதிர்பாருங்கள், விளக்கம் கேளுங்கள்.

உதாரணமாக, இங்கே சம்பந்தன் செய்தது (இந்தியாவில் போய் நின்றது) வன்னி மக்களின் உயிரைப் பறித்ததா அல்லது தடுத்து வைக்கப் பட்டதும், அவர்கள் மேல் சிங்களவன் குண்டு போட்டதும் உயிரைப் பறித்ததா? இது ஒரு எளிமையான காரண காரியக் கேள்வி. இதற்கு நேரடியாகப் பதில் சொல்ல முடியாமல் , "சம்பந்தன் ஆயுதங்களை விட அழிவு செய்தார்"என்று எழுதும் விசுகரிடம், இதே நேர்மையான பதிலை எதிர்பாருங்கள். கிடைக்கிறதா என்று பாருங்கள்.

என்னுடைய அபிப்பிராயம்: புலிகளின் legacy இனை அடுத்த சந்ததிக்கு அப்படியே கடத்த வேண்டியதில்லை. அப்படிச் செய்வது முட்டாள் தனம். புலிகளின் தியாகம், நிர்வாகம், போர் ஓர்மம் எல்லாம் கடத்தப் பட வேண்டிய நல்ல விடயங்கள். தூர நோக்க அரசியல் உணர்வின்மை, ஒரு பிரச்சினைக்கு ஒற்றைப் படைத் தன்மையான தீர்வை மட்டும் நாடல், ஆகிய விடயங்கள் கடத்தப் படக் கூடாது.

பி.கு: இந்தப் பதில் நீங்களும் ஏனைய சில புலிகளின் பக்தியாளர்களும் விரும்பிய மாதிரி இல்லாமல் இருந்தால் மன்னியுங்கள். ஏனெனில், அவர்களைப் பொறுத்த வரை "முன்னாள் மாற்று இயக்கக் காரர், புலிகளிடம் தண்டனை பெற்றவர்கள், இந்திய/சிறிலங்கன் தரப்பிடம் கூலி வாங்குவோர்" ஆக நான் இருந்தால் அவர்களுக்கு திருப்தியாக இருக்கும்😎.

இப்பொழுதும் சொல்கிறேன். ஆயுதத்தை விட மௌனமாக அனுமதித்தலே பேரழிவை தரும் தந்தது. இது எனது கணிப்பு. நன்றி.

இது கருத்துக்களம். இங்கு பல்வேறு விடயங்கள் பற்றி கருத்துக்களை பகிர்கின்றோம். 

சம்பந்தனை நையாண்டி செய்து ஒரு கருத்தை நானும் நீங்களும் வைத்துவிட்டு செல்லவில்லை. இல்லாவிட்டால் இரண்டு பக்கங்களில் இந்த உரையாடல் மற்றைய செய்திகளினுள் காணாமல் போயிருக்கும்.

சம்பந்தர் போனால் என்ன இனி துவம்சம் செய்யப்படுவதற்கு சுமந்திரன் உள்ளார். சுமந்திரனை தூற்றுவதுடன் இன்னும் பத்து பதினைந்து வருடங்கள் போய்விடும். 

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் கொலைவழக்கில் விடுதலையான சாந்தனின் இழப்பிற்கும், 
ராஜீவின் நண்பரான சம்பந்தனின் இழப்பிற்கும் ஈழ தமிழ் மக்கள் தரும் பதில்...

-Livingston Edinborough-
 
என்ன ஒப்பீடு இது? 

இதில் லிவிங்ரன் எடின்பரோவில் இருந்து கூறியிருப்பது என்னவென்றால்,  சம்பந்தரும் யாராவது  வெளிநாட்டு தலைவர் ஒருவரின் கொலைக்கு உடந்தையாக  இருந்து குற்றவாளியாக தீர்ப்பு பெற்றிருந்தால்  அவரது இறப்புக்கு  பெருமளவு மக்கள் தொகை கூடியிருக்கும் என.   

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ஈழப்பிரியன் said:

யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம்.

தமிரசுக் கட்சியின் மூத்த பெரும் தலைவர் இரா.சம்பந்தன்(Rajavarothiam Sampanthan) கடந்த 30ஆம் திகதி இரவு உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். 

அதனையடுத்து கொழும்பில் தனியார் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின்னர் கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 

சம்பந்தனின் இறுதி கிரியைகளிலும் அரசியல்

அதன் பின்னர், இன்று காலை உலங்கு வானூர்தி மூலம் திருகோணமலைக்கு சம்பந்தனின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு மக்களது அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

இந்தநிலையில், இடைப்பட்ட இந்த ஓரிரு நாட்களில்  சம்பந்தனின் மறைவு  தொடர்பிலும் அதனையடுத்து அவரது இறுதிக் கிரியைகள் தொடர்பிலும் பல்வேறு விமர்சனங்கள் ஏற்பட்டுள்ளன. 

யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம் | Sampanthan S Funeral

குறிப்பாக, சம்பந்தனின் இறுதி நிகழ்வை வைத்து ஒரு சிலர் அரசியல் செய்ய முயற்சிப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் செய்தித் தொடர்பாளரும், ஈழத்தமிழ் விவகாரங்களிற்கான தொடர்பாளராகவும் செயற்பட்ட மூத்த சட்டத்தரணி இராதாகிருஸ்னன், சம்பந்தனின் மறைவு தொடர்பிலும் இறுதி சமயத்தில் அவருக்கு ஏற்பட்ட நிலை தொடர்பிலும் தனது முகநூல் தளத்தில்  விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம் | Sampanthan S Funeral

அதில்,

“யாழில் மறைந்த இரா.சம்பந்தன் அவர்களுக்கு வந்த நிலை யாருக்கும் வரக்கூடாது. இலங்கை விமானப்படை உலங்கு வானூர்தி மூலம் பலாலி விமான நிலையம் ஊடாக யாழை வந்தடைந்தது சம்பந்தனின் சடலம். கட்சி தொண்டர்கள் விமான நிலையம் வருகை தராத காரணத்தால் இராணுவத்தினரால் சடலம் காவிச் செல்லப் பட்டது.

ஒரு வகையில் சம்பந்தனை வயது முதிர்ச்சியில், அரசியலில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்திய சுமந்திரன் உயிரற்ற சம்பந்தனின் உடலையும் நூறு வீதம் அசிங்கப்படுத்தி, தமிழர் வரலாற்றில் கருணாவிற்கு இணையாக சம்பந்தனை மக்கள் நினைக்கும் படி செய்து வழியனுப்பிய செயல் மிகவும் அருவருக்கத்தக்கது.

யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம் | Sampanthan S Funeral

உலங்கு வானூர்தி மூலம் எடுத்துச் செல்லப்பட்ட உடல் தரை மார்க்கமாக எடுத்துச் சென்றால் தன் முக்கியத்துவம் குறைந்து விடும் என்பதால், சம்பந்தனை போன்று சுமந்திரன் கூறும் அத்தனைக்கும் தலையாட்டும் சம்பந்தன் வாரிசுகளை ஏமாற்றி சுமந்திரன் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளார்.

விமானத்தில் எடுத்து சென்றது ஒரு வகையில் காலச் சூழல் என்றாலும், தூக்குவதற்கு கட்சி தொண்டர்களை பயன்படுத்தாது இலங்கை படையினரை பயன் படுத்தியது மிக...மிக கவலையான செயல் என்பதை தவிர வேறு எதுவும் இல்லை.

சம்பந்தனை தூக்குவதற்கும் ஆட்கள் இல்லாத அவலம்..

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் இரா. சம்பந்தனது பூதவுடல் யாழ்ப்பாணத்தில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை (05) உலங்கு வானூர்தி மூலம் திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் சம்பந்தனின் பூதவுடலுக்கு நேற்று வியாழக்கிழமை (04) பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில் அஞ்சலி நிறைவுக்கு வந்த பின்னர் அனாதைப் பூதவுடல் போல அங்கே வைக்கப்பட்டது.

தந்தை செல்வா கலையரங்கில் இருந்து இன்றைய தினம் உடலை எடுத்துச் செல்வதற்கு தயாரான போது உடலை தூக்குவதற்கு ஆட்கள் இல்லை. பின்னர் பலத்த சிரமத்தின் மத்தியில் அங்கு வருகை தந்தவர்களை வைத்து காலையில் கார் மூலம் பலாலி விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து திருகோணமலைக்கு உலங்கு வானூர்தி மூலம் கொண்டு செல்லப்பட்டது.

யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம் | Sampanthan S Funeral

சுமந்திரனின் பிடிவாதம் எப்படி எல்லாம் உயிரற்ற உடலையும் அசிங்கப்படுத்துகிறது என நினைத்துப் பாருங்கள். திருகோணமலையில் இரண்டு தினங்கள் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு அசிங்கப்படுத்திய பின்னர் ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கிரியை நடைபெற்று தகனம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுமந்திரனே உலகம் என இருந்த சம்பந்தன் நிலையை பாருங்கள், தந்தை செல்வநாயகத்தின் வயது முதிர்ச்சியிலும், அமிர்தலிங்கம் தந்தையை பராமரித்த விதம் இன்றும் மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்துள்ளது. எப்படி மாண்புடன் கடந்த காலங்களில் வளர்ந்த கட்சி இன்று கேள்விக் குறியாகியுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. 

வாசிப்பவர்கள் எல்லோரும் முட்டள்கள் என்று தமிழ்வின் நினைப்பதன் எதிரொலிதான் மேற்குறித்த செய்தியும் தலையங்கமும். 

வாசிப்பவர்களில் சிலருக்காவது பகுத்தறியும் தன்மை இருப்பது தமிழ்வின்னுக்குப் புரியாதது வியப்பைத் தரவில்லை. 

3 minutes ago, island said:

ராஜீவ் கொலைவழக்கில் விடுதலையான சாந்தனின் இழப்பிற்கும், 
ராஜீவின் நண்பரான சம்பந்தனின் இழப்பிற்கும் ஈழ தமிழ் மக்கள் தரும் பதில்...

-Livingston Edinborough-
 
என்ன ஒப்பீடு இது? 

இதில் லிவிங்ரன் எடின்பரோவில் இருந்து கூறியிருப்பது என்னவென்றால்,  சம்பந்தரும் யாராவது  வெளிநாட்டு தலைவர் ஒருவரின் கொலைக்கு உடந்தையாக  இருந்து குற்றவாளியாக தீர்ப்பு பெற்றிருந்தால்  அவரது இறப்புக்கு  பெருமளவு மக்கள் தொகை கூடியிருக்கும் என.   

எழுதியவர் நடிகர் லிவிங்ஸ்ரனாயிருக்குமோ 🤣

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, விசுகு said:

இப்பொழுதும் சொல்கிறேன். ஆயுதத்தை விட மௌனமாக அனுமதித்தலே பேரழிவை தரும் தந்தது. இது எனது கணிப்பு. நன்றி.

ஆனால், "ஆம்/இல்லை" என்று பதில் தரக்கூடிய "தடுத்து வைத்ததால் மக்கள் செத்தனரா?" என்ற கேள்விக்கு இன்னும் உங்களிடம் பதில் இல்லை. எனவே, உங்களுடைய கணிப்பு, ஏதோ ஒரு தரப்பிற்கு வெள்ளைப் பெயின்ற் அடிக்க நீங்களே உருவாக்கி வைத்திருக்கும் கற்பிதம் மட்டுமே என்பது என் அபிப்பிராயம்!

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு செய்திகள் பல "State Patronage" ஓடு சம்பந்தனின் இறுதிக் கிரியைகள் நடக்கவிருப்பதாகச் சொல்கின்றன. ஆனால், எடின்பரோவிலும், தாயகத்தில் குட்டிச் சுவரிலும் இருந்து வெளிவரும் "நம்பகமான😎" முகநூல் செய்திகள் தூக்க ஆளில்லாமல் விமானப்படை தூக்கி வந்தது என்று எழுதினால், இங்கே நம்பிக் குதூகலிக்கும் நிலையில் வாசகர்கள் இருக்கிறார்கள்.

"அரச ஆதரவு" என்றால் மரியாதை நிமித்தம் படையினர் தான் தூக்குவர். சம்பந்தர் என்ன தான் செத்தால் உடனே தீக்குளிக்கும் தமிழ் நாட்டு பாணி தொண்டர் படைக் கட்சியா நடத்தினார் "தொண்டர்கள்" வந்து மாரில் அடித்து அழ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Justin said:

ஆனால், "ஆம்/இல்லை" என்று பதில் தரக்கூடிய "தடுத்து வைத்ததால் மக்கள் செத்தனரா?" என்ற கேள்விக்கு இன்னும் உங்களிடம் பதில் இல்லை. எனவே, உங்களுடைய கணிப்பு, ஏதோ ஒரு தரப்பிற்கு வெள்ளைப் பெயின்ற் அடிக்க நீங்களே உருவாக்கி வைத்திருக்கும் கற்பிதம் மட்டுமே என்பது என் அபிப்பிராயம்!

அங்கே நடந்ததற்கு பல கதைகள் உண்டு. ஆனால் புலிகள் கூட்டமைப்பை கூட்டி பேசி வைத்து இருந்திருந்ததே இவ்வாறு ஒரு நிலை வந்தால் வெளியில் பேசத்தான். ஆனால் எல்லாவற்றையும் மூடிக்கொண்டு ஒழிந்து இருந்து  அனுமதித்து ஊக்கிவித்தது தான் அழிவை பல மடங்கு அதிகமாக்கியது. இது எனது கருத்து. 

Edited by விசுகு
எழுத்துப்பிழை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.