Jump to content

மக்கள் போராட்டத்தால்; வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

கோத்தபாயாவுக்கு ஏற்பட்ட நிலைமை… இந்த மனிசிக்கும் ஏற்பட்டு விட்டது. 😂
கெட்டவர்களுடன் சகவாசம் வைத்தால்… இப்பிடித்தான் நடக்கும் போலை. 🤣

 

12 hours ago, குமாரசாமி said:

Bild

Bild

Bild

பெரிய கூத்தெல்லாம் நடக்குது போல....

 

9 hours ago, alvayan said:

Bild

தேடித்தான் பிடித்திருகிறான்கள்... எத்தினை எடுத்தவையம்...என்றாலும் கோத்தாவின் மனுசி கெட்டிக்காரி...ஒன்றுகூட பிடிபடாமல் செய்துபோட்டுது🤣

 

இலங்கையில் நடக்கும் சம்பவங்களும், வங்கதேசத்தில் நடக்கும் சம்பவங்களும் கிட்டத் தட்ட ஒரே மாதிரி இருப்பதால்... இதன் கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு எல்லாம் பெரிய அண்ணரின் வேலையோ அல்லது பக்கத்து கிரகம் பிடித்த நாட்டின் வேலையாக இருக்குமோ என்ற சந்தேகம் வலுக்கின்றது.  

வங்காள தேசத்து பிரதமரின் உள்ளாடையை எடுத்தது போல்... 
கோத்தாவின் மனைவியின் உள்ளாடையை எடுத்த காணொளியையும் முன்பு பார்த்திருந்தேன். கண்டு பிடித்தால்... இணைத்து விடுகின்றேன்.
அது வரை கோத்தாவின் "ஜட்டி"யை, மீண்டும் பாருங்கள். 😂

Link to comment
Share on other sites

  • Replies 61
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, குமாரசாமி said:

ஒரு நாளில் 1000 இந்துக்கள் கொல்லப்பட்டு விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த படங்களை இங்கே இணைக்க முடியாத கொடூரம்.
தேவாலயங்களையும் தாக்கி சேதமாக்குகின்றார்கள்.

Bild

Bild

வங்காளதேசத்தில் இந்துக்களின் கடை மற்றும்  வீடுகளை கொள்ளை அடிக்கும் முஸ்லீம்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

GUP6niAWsAAdl8u?format=jpg&name=small

வங்காளதேசத்தில் மோசமான நிலை. 
நாடு முழுவதும் இந்துக்கள் தாக்கப்படுகிறார்கள். 
உள்ளூர் அதிகாரிகள் இடைக்கால பாணியில் அடித்துக் கொல்லப்பட்டனர், 
உடல்கள் கயிற்றில் கட்டி  தொங்கவிடப் படுகின்றன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்கள் ஆரம்பித்த போராட்டம் சரியானதே. மக்களின் சராசரி வாழ்க்கையை கணக்கெடுக்காமல் அரசியல்வாதிகளின் ஆடம்பரமான மற்றும் ஊழலுக்கு மக்களின் கொதிப்பு இதுவாகவே இருக்கும். இதில் சில நரிகள் புகுந்து விளையாடுவதும் இயற்கையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, தமிழ் சிறி said:

இலங்கையில் நடக்கும் சம்பவங்களும், வங்கதேசத்தில் நடக்கும் சம்பவங்களும் கிட்டத் தட்ட ஒரே மாதிரி இருப்பதால்... இதன் கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு எல்லாம் பெரிய அண்ணரின் வேலையோ அல்லது பக்கத்து கிரகம் பிடித்த நாட்டின் வேலையாக இருக்குமோ என்ற சந்தேகம் வலுக்கின்றது.

இத நான் நேற்று யோசிச்சனான். கிட்டத்தட்ட டப்பிங் படம் பார்த்த பீலிங்....😄

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பங்களாதேஷ் கலவர பின்னணியில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ: பிளிட்ஸ் ஆசிரியர் தலையங்கத்தில் சுட்டிக்காட்டு

பங்களாதேஷ் கலவரத்தின் பின்னணியில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பு இருப்பதாக பங்களாதேஷின் முன்னணி வார இதழான `பிளிட்ஸ்’ ஆசிரியர் சலா உதின் சோகிப் சவுத்ரி எழுதிய தலையங்க கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் மாணவர்கள் போராட்டத்தை 157 பேர் ஒருங்கிணைந்து நடத்தினர். இந்தப் போராட்டத்தில் அல்-காய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய பி.என்.பி கட்சிக்கு முக்கிய தொடர்பு உள்ளது. பி.என்.பி கட்சியின் மூத்த தலைவர் டேவிட் பெர்க்மான் போராட்டத்தை தூண்டினார். பிரிட்டனுக்கு தப்பியோடிய பி.என்.பி கட்சியின் தலைவர் தாரிக் ரகுமான், அங்கிருந்து கொண்டு பங்களாதேஷ் போராட்டத்தை வழிநடத்தினார். இவர் பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் ஆவார்.

பங்களாதேஷ் மாணவர் போராட்டத்தின் பின்னணியில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பு, அமெரிக்காவின் சி.ஐ.ஏ உளவு அமைப்பும் இருக்கிறது. மாணவர்களின் பெயர்களில் ஏராளமான தீவிரவாதிகளும் களமிறங்கி, போராட்ட களத்தை போர்க்களமாக மாற்றினர்.

பங்களாதேஷ் தற்போது செழுமையாக இருக்கிறது. இதை பாகிஸ்தான் போன்று திவாலான நாடாக மாற்ற பழமைவாத முஸ்லிம்களும், தீவிரவாதிகளும் சதி செய்து வருகின்றனர்.

இவ்வாறு அந்த தலையங்க கட்டுரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பங்களாதேஷில் கலவரத்தை தூண்டுவது தொடர்பாக லண்டனில் ஐ.எஸ்.ஐ உளவு அதிகாரிகள் சில மாதங்களுக்கு முன்பு ரகசிய கூட்டத்தை நடத்தினர். இதில் பங்களாதேஷை சேர்ந்த பல்வேறு தீவிரவாத குழுக்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

அப்போது கலவரத்தில் பலரை கொலை செய்தால் பல கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று ஐ.எஸ்.ஐ சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதன் காரணமாகவே பங்களாதேஷ் போராட்டத்தில் கணிசமான உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஷேக் ஹசீனா அண்மையில் கூறும்போது, “பங்களாதேஷ், மியான்மரின் சிலபகுதிகளை ஒன்றிணைத்து புதிய கிறிஸ்தவ நாட்டை அமைக்க அமெரிக்கா விரும்புகிறது. வங்கக் கடலில் புதிய கடற்படைத் தளம் அமைக்கவும் அந்த நாடு முயற்சி செய்கிறது. இதற்கு நான் சம்மதிக்கவில்லை. இதன் காரணமாகவே எனக்கு எதிராக சதி நடக்கிறது” என்று குற்றம் சாட்டினார்.

https://thinakkural.lk/article/307406

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் மியன்மாரிலிருந்து ரொகின்யோ இஸ்லாமிய மக்களுக்கெதிரான நடவடிக்கையின்போது என்னுடன் வேலை செய்த இஸ்லாமிய நண்பர் ஒருவர் மியன்மாரை சேர்ந்தவரிடம் கடுமை காட்டினார், தற்போது இந்துக்களுக்கெதிராக அதே வகையான செயலை இஸ்லாமியர்கள் செய்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஏராளன் said:

ஷேக் ஹசீனா அண்மையில் கூறும்போது, “பங்களாதேஷ், மியான்மரின் சிலபகுதிகளை ஒன்றிணைத்து புதிய கிறிஸ்தவ நாட்டை அமைக்க அமெரிக்கா விரும்புகிறது. வங்கக் கடலில் புதிய கடற்படைத் தளம் அமைக்கவும் அந்த நாடு முயற்சி செய்கிறது. இதற்கு நான் சம்மதிக்கவில்லை. இதன் காரணமாகவே எனக்கு எதிராக சதி நடக்கிறது” என்று குற்றம் சாட்டினார்.

இது ஒரு போலியான பொறுப்பற்ற குற்றச்சாட்டு இருக்க வாய்புகள் அதிகம், வங்க கடலில் அமெரிக்க புதிய கடற்தளம் அமைப்பதற்கு இலங்கை அல்லது மாலைதீவுதான் பூகோள ரீதியாக பொருத்தமாக இருக்கும் என கருதுகிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Kapithan said:

2) மனித சஞ்சாரம் அற்ற St. Martin தீவில் இராணுவத் தளம் அமைக்க மேற்குநாடு ஒன்று கேட்டதாகவும்

இது உண்மையாக இருபதற்கு வாய்ப்புக்கள் மிக அதிகம்.

ஏனெனில், ஆஸ்திரேலியா coco island இல், ஆஸ்திரேலியாவும், அமெரிக்காவும் சேர்ந்து தளம் அமைக்க முயற்சி எடுக்கப்படுகிரது.

எல்லாமே, பச்சையாகவே வெளியில் சொல்லப்டுகிறது, (யுத்தம் வந்தால்) சீனாவுக்கான வழங்கலை தடுப்பதற்கு உதவியாக என்று.


அனால், பங்களாதேஷ Chita Kong துறைமுகத்தை சீனா பங்கு தரராக அபிவிருத்தி செய்தது, அது  முழுமையாக இருப்பது பங்களாதேஷ் இடம்.

இந்த ஆர்ப்பாட்டம் நிச்சயமாக ஒழுங்குபடுத்தப்பட்டது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.   

  • Thanks 1
Link to comment
Share on other sites

3 hours ago, ஏராளன் said:

ஷேக் ஹசீனா அண்மையில் கூறும்போது, “பங்களாதேஷ், மியான்மரின் சிலபகுதிகளை ஒன்றிணைத்து புதிய கிறிஸ்தவ நாட்டை அமைக்க அமெரிக்கா விரும்புகிறது. வங்கக் கடலில் புதிய கடற்படைத் தளம் அமைக்கவும் அந்த நாடு முயற்சி செய்கிறது. இதற்கு நான் சம்மதிக்கவில்லை. இதன் காரணமாகவே எனக்கு எதிராக சதி நடக்கிறது” என்று குற்றம் சாட்டினார்

அது தானே பார்த்தேன். அவன் இல்லாமல் ஒரு அணுவும் அசையாது என. இத்திரியின் சாராம்சம் மேற் கூறிய சம்பவம் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம்; அஜித் தோவல் உடன் சந்திப்பு

பங்களாதேஷ் டாக்காவில் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அவர் இங்கிலாந்து செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

அங்கு அவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்தார். இங்கு அவர் ஒரு பாதுகாப்பான இடத்திற்கு தங்க வைக்கப்பட்டுள்ளார்.  ஷேக் ஹசீனா இங்கிலாந்து செல்ல உள்ளதாக ஆதாரங்கள் தெரிவித்தன.

பங்களாதேஷ் டாக்காவில் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அவரின் வெளியேற்றம் இந்தியாவை கவலையடையச் செய்துள்ளது.

திங்கள்கிழமை இரவு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவைக் குழு (சிசிஎஸ்) பங்களாதேஷின் நிலைமையை ஆய்வு செய்தார். உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் உளவுத்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஜெய்சங்கர் மோடியிடம் நிலைமையை விளக்கினார், மேலும் அண்டை நாட்டின் முன்னேற்றங்கள் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும் விளக்கினார்.

ஹசீனா, தனது சகோதரியுடன் திங்கள்கிழமை மாலை டெல்லிக்கு அருகிலுள்ள ஹிண்டன் விமான தளத்தில் தரையிறங்கிய நிலையில், அவர் இங்கிலாந்து செல்ல வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. “மாலை 5.15 மணியளவில், வங்காளதேச விமானப்படையின் C-130J இராணுவ போக்குவரத்து விமானத்தில் ஹசீனா ஹிண்டன் விமான தளத்தில் தரையிறங்கினார். தோவலுடனான அவரது உரையாடலின் போது, மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் புலனாய்வு அமைப்புகளின் அதிகாரிகளும் உடனிருந்தனர்.

ஹசீனா, டெல்லியில் வசிக்கும் தனது மகள் சைமா வசேதை சந்திக்க உள்ளார். சைமா வசேதை Wazed உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவிற்கான பிராந்திய இயக்குநராக பணியாற்றி வருகிறார்.

“இந்திய விமானப் படையின் இரண்டு விமானங்கள் ஹிண்டன் விமானப்படை தளத்தில் இருந்து அசாம் மற்றும் லக்னோவில் இருந்து மற்றொரு விமானம் எல்லைப் பகுதிகளைப் பாதுகாக்க பாதுகாப்புப் பணியாளர்களைக் கொண்டு செல்ல புறப்பட்டது” என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.

ஆதாரங்களின்படி, உயர்மட்ட அரசாங்க அதிகாரிகள் திங்கள்கிழமை மாலை ஆயுதப் படைகளுடன் கூட்டங்களை நடத்தி வெளியேற்றும் முயற்சிகளைத் திட்டமிடுகின்றனர். உயர் கமிஷன் அதிகாரிகள் உட்பட வங்கதேசத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை வெளியேற்ற இந்திய விமானப்படை (IAF) இணைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான முயற்சி செவ்வாய்க்கிழமை தொடங்கும் என்றும் தெரிகிறது.

இந்தியா ஒப்புதல் அல்லது விலகல் பற்றிய எந்த அறிக்கையும் வெளியிடாதபோதும், இது மாணவர்களின் எதிர்ப்பை “முழுமையான தவறாகக் கையாள்வதாக” டெல்லியால் பார்க்கப்பட்டது.

“இது பங்களாதேஷின் உள்விவகாரம்” என்று வெறுமனே கூறி, அதன் குடிமக்களை பங்களாதேஷில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வருவதில் கவனம் செலுத்தியது. கடந்த மாதம், சுமார் 4,500 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்.

ஹசீனாவின் வெளியேறிய உடன், டாக்காவின் புதிய அதிகார அமைப்புகளை மறுவரையறை செய்து, “இந்தியா-விரோத கூறுகள்” பலம் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை டெல்லி அஞ்சுகிறது.

https://thinakkural.lk/article/307400

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

spacer.png

 

சகோதரர் ஒரு ரவுண்ட் அடித்து விட்டு திரும்பி வந்து விட்டார்........ சகோதரி திரும்பி வரவே முடியாது போலத் தெரியுதே............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

FDk8rFaVkAIb3tm.jpg

EmIvZcOVgAAwYrK.jpg

220510%20Rajapaksa%20statue.jpeg

 

ஸ்ரீலங்காவில்  மகிந்தவின் தந்தை ராஜபக்சவின் சிலை உடைப்பும், 
வங்காளதேசத்தில் தற்போதைய பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் தந்தை.... முஜிபுர் ரஹ்மானின் சிலை உடைப்பும்...
மீண்டும்... ஸ்ரீலங்கா சம்பவத்துக்கும் , வங்காளதேச சம்பவத்துக்கும் உள்ள ஒற்றுமை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஷேக் ஹசீனா 

இந்த அம்மாவின் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு இந்தியா எவ்வளளோ முயன்றும் முடியவில்லை என்று கடந்த தேர்தல் வெற்றியின் போது ஒரு காணொளி பார்த்தேன்.

பல சவால்களையும் தாண்டி முன்னேறிக் கொண்டிருந்த நாடு மட்டுமல்ல

இலங்கை போன்ற நாடுகளுக்கு பெரும்தொகை பணத்தையும் கொடுத்திருந்தார்கள்.

பணம் திரும்ப செலுத்த வேண்டிய தவணை வந்த போதும் மீண்டும் தவணை கொடுத்து இலங்கைக்கு மூச்சுவிட இடம் கொடுத்தார்கள்.

இலங்கையில் இந்திய சார்பு அரசை எப்படி  அமெரிக்கா ஓடவைத்ததோ

அதே மாதிரி அமெரிக்க சார்பு வங்க அரசை இந்தியா ஓட வைத்துள்ளது போல.

அயல் நாடுகளை எப்போதும் கொதிநிலையில் வைத்திருக்கவே இந்தியா விரும்புகிறது.

இலங்கையில் நடக்கவிருக்கும் தேர்தலும்

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமான போட்டியே.

யார் வெல்கிறார்கள் என்று காத்திருந்து பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

May be an image of 9 people and text

 

454356675_971761054961638_64082815263265

 

453627618_1965325810605079_3586494713557

எல்லாம்... இவராலை தான்.  animiertes-gefuehl-smilies-bild-0119.gif  animiertes-gefuehl-smilies-bild-0090.gif

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

3 hours ago, ஈழப்பிரியன் said:

 

 

இலங்கையில் இந்திய சார்பு அரசை எப்படி  அமெரிக்கா ஓடவைத்ததோ

அதே மாதிரி அமெரிக்க சார்பு வங்க அரசை இந்தியா ஓட வைத்துள்ளது போல.

 

எதனை வைத்து இவ்வாறு அனுமானிக்கின்றீர்கள் எனத் தெரியவில்லை.

ஹசீனா வங்க தேசத்தின் தந்தையான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மகள் இவர். ஷேக் முஜிபுர் ரஹ்மான் இன் குடும்பத்தில் ஹசீனாவையும், அவர் சகோதரியையும் தவிர மிச்ச எல்லாரையும் இராணுவப் புரட்சி ஒன்றில் வாங்காள தேசத்தின் இராணுவம் கொன்றழித்து விட்டது. அதன் பின் வெளி நாட்டில் வாழ்ந்து வந்த ஹசீனா பின்னர் 6 ஆண்டுகள் இந்தியாவில் இருந்து கொண்டு தான் வங்காளத்தின் சனநாயகத்துக்காக போராடி, பின் தன் தேசம் சென்று தேர்தலில் வென்று முதல் முறையாக ஆட்சி அமைத்தார்.

அவர் ஒரு இந்திய அனுதாபி. வங்காளத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளான ஐ.எஸ் இயக்கத்தின் செல்வாக்கு அதிகரித்து கொண்டு சென்றாலும் அது இந்தியாவை ஆபத்தில் தள்ளும் நிலை வரை எட்டாது அடக்கியவர்.

சும்மா இருக்காமல் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்துக்கு வேலை வாய்ப்புகளில் 30 சத வீதம் இட ஒதுக்கீடு கொடுக்கப் போய் இந்த நிலைக்கு ஆளாகியுள்ளார் (உயர் நீதிமன்றம் அதை 5 வீதமாக பின்னர் குறைத்தது). சுதந்திரப் போராட்ட தியாகிகளில் அனேகமானோர் இவரது கட்சி ஆட்கள் தான் என்பதால், இவரது முயற்சியை மாணவர்கள் எதிர்த்தனர்.

இனி ஆட்சிக்கு வரப் போகின்றவர்கள் பாகிஸ்தான் ஆதரவாளர்களாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். இதனால் பாதிக்கப்படப் போவது இந்தியாதான்.

//இலங்கையில் இந்திய சார்பு அரசை எப்படி  அமெரிக்கா ஓடவைத்ததோ//

 

கோத்தாவின் அரசு இந்திய அரசு சார்பானதாக இருக்கவேயில்லை. அது சீன சார்பு அரசு. மகிந்தவின் அரசும் சீன சார்பு அரசாகவே இருந்தது. இதனால் தான் கொவிட் காலத்தில் சீனா தான் தயாரித்த தடுப்பூசியை இலங்கைக்கு இலவசமாக கொடுக்க முன்வந்தது.

மகிந்த / கோத்தா காலத்தில் சீனாவின் பிடிக்குள் இலங்கை முற்றாக சிக்கிக் கொண்டு இருந்தது (இன்று இந்தியா இந்த நிலையை கூடியளவுக்கு மாற்றி விட்டது)

அரகலய வின் அனுசரனையாளர்களாக அமெரிக்காவும் சில முஸ்லிம் நாடுகளும் தான் இருந்தன. அமெரிக்க தூதுவர் நேரடியாகவே அரகலயவுக்கு ஆதரவை கொடுத்தும் இருந்தார். 

பைடன் காலத்தில் இந்திய அமெரிக்க உறவு நன்றாகத்தான் உள்ளது. தென்னாசியாவில் இந்தியாவின் நலன்களுக்கு எதிராக அமெரிக்கா இன்றைய நிலையில் இயங்காது, அது இந்தியாவின் மீது எதிர்ப்புணர்வு உள்ள ட்றம் அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் கூட இந்த நிலை மாறாது. இந்தியா ரஷ்யா சார்பான நிலைப்பாடில் இருப்பினும் கூட, அமெரிக்க தன் வர்த்தக நலன்களுக்கு எதிராகவும், சீன எதிர்ப்பிற்காகவும் இந்தியாவின் நலனுடன் முரண்படாது.

Edited by நிழலி
பிழை திருத்தம்
  • Like 3
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க அரசும் அதன் அடிப்படை அரசியல் கொள்கைவாதிகளும் இனி வரும் காலங்களில் இந்திய கொள்கையை எதிர்க்கப்போவதுமில்லை.எதிர்த்து நிற்கப்போவதுமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, குமாரசாமி said:

அமெரிக்க அரசும் அதன் அடிப்படை அரசியல் கொள்கைவாதிகளும் இனி வரும் காலங்களில் இந்திய கொள்கையை எதிர்க்கப்போவதுமில்லை.எதிர்த்து நிற்கப்போவதுமில்லை.

இலங்கை மேற்காகச் சாய்ந்தால் மேற்குலகுக்கு நாங்கள் தேவையே இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

 

சிறியர்...இதைப்பார்த்து நம்ம காத்தான்குடி முசுலிமுகள்  பொங்கப்போகினம்...முகம்தெரியாதபடியே எங்களினப் பெண்களை வளற்பவர்கள்... எம்மினப் பெண்ணின் உள்ளாடையை எப்படி மற்றவர் பார்க்க

காட்டித்திரியமுடியும்... தூக்கித்திரிபவரின் தலைக்கு நம்ம சம்மேளனம் 20  லட்சம் சன்மானம் வழங்கப்படும்..😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வங்கதேசத்தில் இந்துக்களின் நிலை என்ன? இந்துக்களுக்கு அரணாக நின்ற உள்ளூர் முஸ்லிம்கள்- கள நிலவரம்

அவிரூப் சர்க்கார்
படக்குறிப்பு,"வங்கதேச இந்துக்கள் எளிதாக குறிவைக்கப்படுகின்றனர்," என்கிறார் மேம்பாட்டுத் துறை வல்லுனரான அவிரூப் சர்க்கார் கட்டுரை தகவல்
  • எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த திங்களன்று வெகுஜன எதிர்ப்புகளைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறினார்.

இது நடந்து சில மணி நேரங்களுக்குப் பிறகு, தலைநகர் டாக்காவில் வசிக்கும் மேம்பாட்டுத் துறை வல்லுனரான அவிரூப் சர்க்காருக்கு அவரது உறவினரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசியவர் மிகுந்த பதற்றத்தில் பேசினார்.

அவிரூப் சர்க்கார் ஒரு வங்கதேச இந்து, 90% முஸ்லிம்கள் வாழும் ஒரு நாட்டில் வாழ்கிறார். அவிரூப் சர்க்காரின் அந்த உறவினர், டாக்காவுக்கு வடக்கே, சுமார் 100 கிமீ (62 மைல்) தொலைவில் உள்ள நெட்ரோகோனா என்ற மாவட்டத்தில் வசிக்கிறார்.

கணவரை இழந்த பெண்ணான அவர், ஒரு கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்து வருகிறார்.

"அவர் பயத்துடன் பேசினார். வீட்டை ஒரு கும்பல் தாக்கி கொள்ளையடித்ததாக அவர் கூறினார்" என்று அவிரூப் சர்க்கார் டாக்காவிலிருந்து தொலைபேசியில் பிபிசியிடம் தெரிவித்தார்.

'அவாமி லீக்கின் வழித்தோன்றல்கள்'

'அவாமி லீக்கின் வழித்தோன்றல்கள்'

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கோப்புப் படம்

சுமார் 100 பேர் கொண்ட கும்பல், ஆயுதங்களுடன், வீட்டிற்குள் நுழைந்து, வீட்டுப் பொருட்கள் மற்றும் ஜன்னல், கதவுகளை அடித்து நொறுக்கியதாகவும்,. கிளம்பும் முன் பணம், நகைகள் அனைத்தையும் எடுத்து சென்றதாகவும் அவரது உறவினர் கூறியுள்ளார்.

அங்கு வாழ்ந்த ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 6 குழந்தைகள் உட்பட 18-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களில் யாரையும் அவர்கள் தாக்கவில்லை.

“நீங்கள் அவாமி லீக்கின் வழித்தோன்றல்கள்! உங்களால் இந்த நாடு மோசமான நிலையில் உள்ளது. நீங்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்” என்று அந்த கும்பல் கொள்ளையடித்து கொண்டு கிளம்பும் முன் குடியிருப்பாளர்களை நோக்கி சத்தம் போட்டது.

சர்க்கார் பிபிசியிடம், ‘தான் அதிர்ச்சியடைந்ததாகவும், ஆனால் இந்த சம்பவத்தால் முற்றிலும் ஆச்சரியப்படவில்லை என்றும்’ கூறினார்.

வங்கதேசத்தில் உள்ள இந்து சிறுபான்மையினர், ஷேக் ஹசீனாவின் மதச்சார்பற்ற அவாமி லீக் கட்சியின் ஆதரவாளர்களாகவே பார்க்கப்படுகின்றனர் என்றும், இஸ்லாம் அரசு மதமாக இருக்கும் நாட்டில் அவாமி லீக் கட்சியின் போட்டியாளர்களால் அடிக்கடி அவர்கள் தாக்கப்படுகிறார்கள் என்றும் சர்க்கார் கூறுகிறார்.

ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய பிறகு, சமூக ஊடகங்களில் இந்து சொத்துக்கள் மற்றும் கோவில்கள் தாக்கப்படுவதாக செய்திகள் அதிகமாக உலாவுகின்றன.

'அவாமி லீக் ஆட்சியை இழக்கும் போது நடக்கும் தாக்குதல்கள்'

சர்க்கார்
படக்குறிப்பு,திங்கள்கிழமை மாலை தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பிற்குள் ஒரு கும்பல் நுழைய முயன்றதாக சர்க்கார் கூறுகிறார்

இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் செவ்வாயன்று இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசியபோது, "மிகவும் கவலைக்குரியது என்னவென்றால், சிறுபான்மையினர், அவர்களது வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் கோயில்கள் பல இடங்களில் தாக்குதலுக்கு உள்ளானதுதான். சேதத்தின் முழு அளவு இன்னும் தெளிவாகத் தெரியவில்லை." என்றார்.

இருப்பினும், இளம் முஸ்லீம் குழுக்கள், இந்த செயல்களைத் தடுக்க இந்து வீடுகள் மற்றும் கோவில்களைப் பாதுகாத்து வருகின்றனர்.

"வங்கதேச இந்துக்கள்தான் எளிதான இலக்கு. ஒவ்வொரு முறையும் அவாமி லீக் ஆட்சியை இழக்கும் போது, அவர்கள் தாக்கப்படுகிறார்கள்" என்று சர்க்கார் கூறினார்.

தனது உறவினரின் வீடு தாக்கப்படுவது இது முதல் முறையல்ல என்று சர்க்கார் கூறுகிறார். 1992ஆம் ஆண்டு இந்திய நகரமான அயோத்தியில் உள்ள பாபர் மசூதியை இந்து கும்பல் இடித்ததை அடுத்து வங்கதேசத்தில் சிறுபான்மையினர் குறிவைக்கப்பட்டனர். சர்காரின் சகோதரியின் வீடு ஒரு கும்பலால் சூறையாடப்பட்டது.

அதற்கடுத்து இந்துக்கள் மீது பல மதத் தாக்குதல்கள் நடந்துள்ளன. வங்கதேச மனித உரிமைக் குழுவான ‘ஐன் ஓ சலிஷ் கேந்திரா’, ஜனவரி 2013 முதல் செப்டம்பர் 2021 வரை இந்து சமூகத்தின் மீது குறைந்தது 3,679 தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அறிவித்தது. இதில் பொருட்களைச் சேதப்படுத்துதல், தீவைப்பு மற்றும் இலக்கு வன்முறை ஆகியவை அடங்கும்.

'சிறுபான்மையினரைப் பாதுகாக்க அரசு தவறிவிட்டது'

'சிறுபான்மையினரைப் பாதுகாக்க அரசு தவறிவிட்டது'

பட மூலாதாரம்,GETTY IMAGES

2021ஆம் ஆண்டில், நாட்டின் மிகப்பெரிய இந்து பண்டிகையான துர்கா பூஜையின் போது மற்றும் அதற்குப் பிறகு வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினரின் வீடுகள் மற்றும் கோயில்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

"பல ஆண்டுகளாக, தனிநபர்களுக்கு எதிரான இதுபோன்ற தொடர்ச்சியான தாக்குதல்கள், வகுப்புவாத வன்முறைகள் அரங்கேறுகின்றன, வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்படுகின்றன. வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரைப் பாதுகாக்க அரசு தவறிவிட்டதை இது காட்டுகிறது." என மனித உரிமைகள் குழுவான அம்னஸ்டி இன்டர்நேஷனல் கூறியது.

திங்களன்று, சர்க்கரின் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களும் வன்முறைத் தாக்குதலுக்கான அபாயத்தை எதிர்கொண்டனர். டாக்காவில் இருந்து 120 கிமீ தொலைவில் உள்ள கிஷோர்கஞ்சில் உள்ளது அவரது பெற்றோரின் வீடு.

"நாங்கள் அக்கம் பக்கத்தில் நன்கு அறியப்பட்ட குடும்பம் மற்றும் அனைவருக்கும் தெரிந்தவர்கள் என்பதால் தாக்குதல் நடக்கவில்லை.” என்கிறார் சர்க்கார்.

சர்க்காரின் தாயார், உள்ளூரில் ஒரு பள்ளியை நடத்தி வருகிறார். அவரது நண்பரிடமிருந்து அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது, ‘யாரையெல்லாம் தாக்கவேண்டும் என்ற பட்டியலை உருவாக்குகிறார்கள்’ என்று அவர் கூறினார்.

மேலும் அந்த நண்பர், "உங்கள் பெயர் பட்டியலில் இல்லை. ஆனால் தயவுசெய்து கவனமாக இருங்கள்" என்று கூறியுள்ளார்.

அதன் பிறகு, சர்க்காரின் குடும்பத்தினர் வீட்டைப் பூட்டிக்கொண்டு உள்ளே இருந்துள்ளனர். வீட்டின் இரும்பு கேட்டிற்கு வெளியே ஒரு சிறிய கூட்டம் கூடுவதைக் கண்டார் சர்க்காரின் தந்தை.

“யாரோ கூட்டத்தினரிடம் வந்து, 'இங்கே எதுவும் செய்யாதீர்கள், இங்கே வேண்டாம்' என்று சொல்வதை என் தந்தை கேட்டார். கும்பல் கலைந்து சென்றது." என்கிறார் சர்க்கார்.

ஆனால் சிறிது தொலைவில், கிஷோர்கஞ்சில் உள்ள நோகுவா பகுதியில், இந்து வீடுகள் சூறையாடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

“அங்கு 20-25 வீடுகள் தாக்கப்பட்டதாக கேள்விப்பட்டேன். எனது இந்து நண்பரின் தங்கக்கடை உடைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவர்களால் நகைப் பெட்டகத்தை உடைக்கவோ அல்லது எடுத்துச் செல்லவோ முடியவில்லை”, என்று சர்க்கார் கூறினார்.

 

அரணாக நின்ற உள்ளூர் முஸ்லிம்கள்

அரணாக நின்ற உள்ளூர் முஸ்லிம்கள்

பட மூலாதாரம்,CASTAWAY ON THE MOON

படக்குறிப்பு,வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையால், முஸ்லிம்கள் இந்து கோவில்களை பாதுகாத்து வருகின்றனர்

டாக்காவில் இருந்து வடக்கே 200 கிமீ தொலைவில், ஷெர்பூர் மாவட்டத்தில் உள்ள சர்க்கரின் மனைவியின் வீடும் தாக்கப்படும் அபாயத்தில் இருந்தது.

பின்னர் அந்த வீடு தாக்குதலில் இருந்து தப்பித்தாலும், ஒரு கும்பல் பக்கத்து இந்து வீட்டை சூறையாடியது.

ஆனால், இதில் ஒரு நேர்மறையான விஷயம் என்னவென்றால், வன்முறை பற்றிய செய்தி பரவியதும், உள்ளூர் முஸ்லிம்கள் ஒன்று திரண்டு இந்து வீடுகள் மற்றும் கோவில்களைச் சுற்றி பாதுகாப்பு வளையங்களை உருவாக்கினர்.

"இது வங்கதேசம் முழுவதும் நடந்துள்ளது. முஸ்லிம்களும் இந்துக்களின் சொத்துக்களைப் பாதுகாத்துள்ளனர்" என்கிறார் சர்க்கார். ஆனால் விஷயங்கள் இதோடு முடிவடையவில்லை.

திங்கட்கிழமை இரவில், டாக்காவில் சர்க்கார் தங்கியுள்ள 10 மாடி அடுக்குமாடி கட்டிடத்திற்கு வெளியே ஒரு கும்பல் கூடத் தொடங்கியது. இங்கு தனது மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் வசிக்கிறார் சர்க்கார். அதே கட்டிடத்தில் வசிக்கும் அவாமி லீக்கின் கவுன்சிலரைத் தேடி அக்கும்பல் வந்ததாக அவர் கணித்தார்.

"நான் எனது ஆறாவது மாடி பால்கனியில் இருந்து வெளியே வந்தபோது, கூட்டத்தினர் கட்டிடத்தின் மீது கற்களை எறிந்து உடைக்க முயற்சிப்பதைப் பார்த்தேன். கதவுகள் சரியாகப் பூட்டப்பட்டிருந்தன, அதனால் அவர்களால் நுழைய முடியவில்லை. பார்க்கிங்கில் இருந்த சில கார்கள் மற்றும் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன” என்று சர்க்கார் கூறுகிறார்.

நெட்ரோகோனாவுக்குத் திரும்பிய சர்க்காரின் உறவினர், குடும்பம் மேலும் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாகக் சர்க்காரிடம் கூறினார்.

சர்க்கார், ராணுவத்தில் உள்ள தனது நண்பரை அழைத்து, ராணுவ வேன் ஒன்று அக்கம் பக்கத்தில் தொடர்ந்து ரோந்து வருமாறு கேட்டுக் கொண்டார்.

"இது ஒரு மோசமான காலகட்டம். சட்டம் ஒழுங்கு இல்லை. நாங்கள் மீண்டும் குறிவைக்கப்படுகிறோம்," என்று அவர் கூறுகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kapithan said:

இலங்கை மேற்காகச் சாய்ந்தால் மேற்குலகுக்கு நாங்கள் தேவையே இல்லை. 

 சீனாவும் இந்தியாவும் என்ன வெள்ளி பார்க்கினமே? 😂

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.