Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!

adminAugust 8, 2024
Tamil-candidate6-1170x658.jpg

தமிழ் பொது வேட்பாளராக இலங்கைத்தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பா. அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்.

சிவில் அமைப்புகளின் ஒருங்கிணைவுடன் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பொதுச்சபையின் ஏழு பிரதிநிதிகளும் தமிழ்த் தேசிய அரசியல்கட்சிகள் ஏழினது பிரதிநிதிகளும் கூட்டிணைந்து தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பை உருவாக்கியிருந்தனர்.

அவ்வாறு உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை (08.08.24) கூடி தமிழ் பொது வேட்பாளரை அறிவித்துள்ளனர்.

அதேவேளை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் ஆகியோரது பெயர்களும் இறுதிப் பட்டியலில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamil-candidate1-800x450.jpgTamil-candidate2-800x450.jpgTamil-candidate3-800x450.jpgTamil-candidate4-800x450.jpgTamil-candidate5-800x450.jpg

https://globaltamilnews.net/2024/205696/

  • Replies 77
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நிழலி

இதைத்தான் மக்களை ஏமாற்றும், புளுத்துப் போன, பழைய அரசியலின் நீட்சி என்கின்றேன். இவ்வாறு நீங்கள் சொல்லும் உறுதிப்படும், வட்டுக்கோட்டை தீர்மானத்திலேயே உறுதியாக நிற்கின்றார்கள் என்று சர்வதேசத்துக்கு

island

அதி உத்தம  ஜனாதிபதி  பா. அரியநேந்திரன் நிச்சயமாக தமிழர் பிரச்சனைக்கு நீதியான தீர்வை காண்பார்.  இவரே முப்படைகளின் பிரதம தளபதியாகவும் எதிர்காலத்தில் இருக்க போவதால் முப்படைகளையும் உபயோகித்து அதிரடியாக சு

பாலபத்ர ஓணாண்டி

லூசுக்கேனையள்.. ஒண்டில் வீராவசனம் பேசுவாங்கள் இல்லாட்டி இப்பிடி ஏதாவது விளங்காத வேலை செய்வாங்கள்.. இவங்கள் செய்ததில் ஒரு வெளிநாடாவது எங்களுக்கு ஏதாவது செய்ததா தீர்வை நோக்கி இத்தனை தேர்தல்களில் நின்றிர

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதி உத்தம  ஜனாதிபதி  பா. அரியநேந்திரன் நிச்சயமாக தமிழர் பிரச்சனைக்கு நீதியான தீர்வை காண்பார்.  இவரே முப்படைகளின் பிரதம தளபதியாகவும் எதிர்காலத்தில் இருக்க போவதால் முப்படைகளையும் உபயோகித்து அதிரடியாக சுயாட்சியுடனான அரசியல் தீர்வை காண்பார். 

  • Haha 3
  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, island said:

இது தான் தமிழரின் சாபம்.

எதையாவது ஒருவர் செய்ய முனைந்தால் ஆமாம் இவர் கிழிச்சுடுவார். எங்களுக்கு தெரியாததா?? என்று முளையிலேயே ......???

  • Like 2
  • Thanks 1

லூசுக்கேனையள்.. ஒண்டில் வீராவசனம் பேசுவாங்கள் இல்லாட்டி இப்பிடி ஏதாவது விளங்காத வேலை செய்வாங்கள்.. இவங்கள் செய்ததில் ஒரு வெளிநாடாவது எங்களுக்கு ஏதாவது செய்ததா தீர்வை நோக்கி இத்தனை தேர்தல்களில் நின்றிருக்கிறார்கள்.. தீர்வை நோக்கி அல்லது மக்கள் வாழ்வாதார அன்றாட பிரச்சினைகள் சம்பந்தமாக ஏதாவது செய்தோம் என்று இவர்களால் ஒன்றை சொல்ல முடியுமா..? மக்களுக்கு நல்லது செய்தால் அதை பேசி மக்களிடம் ஓட்டு கேட்கலாம் அதை செய்யாததால்தான் காசுகுடுத்து ஓட்டு போடவைக்கின்றனர் தமிழ்நாட்டில்.. இவர்கள் தீர்வை பெற்றுதருவதாக பேய்க்காட்டி ஓட்டு வாங்குகின்றனர்.. கஞ்சன் ஊறுகாய் முடிந்துபோம் என்று சாப்பிடும் இடத்தில் ஒரு நூலில் ஊறுகாய்ப்பையை கட்டித்தூக்கிவிட்டு அதை பார்த்து பார்த்து ஊறும் எச்சிலில் சாப்பிட்டானாம் அதைப்போல் தீர்வை சொல்லியே வயிறுவளர்க்கும் கூட்டம் இது.. இவர்களைவிட கொலைகாரன் டக்ளசிடம் மக்களிற்கு செய்தேன் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்ல நிறைய இருக்கு.. ஆனால் இவர்கள் மக்களுக்காக ஒரு குண்டூசியைகூட தூக்கிப்போட்டதில்லை இன்றுவரை.. ஒருத்தன் கொலைகாரன் என்றால் மற்றவன் ஏமாற்றுப்பேர்வழி.. இரண்டுமே தமிழர் தேசத்துக்கு தேவையற்ற ஆணிகள்.. அர்ச்சனாபோல பல புதிய இளைஞர்கள் புதியகட்சிகள் வரவேணும்.. அவர்களின் சரிபிழைகளை அப்புறம் பேசலாம்.. ஆனால் இந்த பழைய பஞ்சாங்கங்களை அடித்து துரத்தவேணும்…

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ் தேசியத்தின் குறியீடாக நான் இருப்பேன்; தமிழ் தேசியத்திற்காக மக்கள் வாக்களிக்க வேண்டும் - தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன்

Published By: DIGITAL DESK 3   08 AUG, 2024 | 04:26 PM

image

(எம்.நியூட்டன்)

தமிழ்தேசியத்தின் குறியீடாக நான் இருப்பேன் தமிழ்தேசியத்திற்காக மக்கள் வாக்களிக்க வேண்டும் என தமிழ் பொதுவேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

தமிழ்தேசியபொதுக்கட்டமைப்பின் பெதுவேட்பாளரை  அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு  யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இன்று வியாழக்கிழமை (08) இடம்பெற்ற போது அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த்தேசியத்தின் குறியீடாக மாத்திரமே நான் இருப்பேன் இலங்கை சோசலிச குடியரசின் ஜனாதிபதியாக வருவதற்காக அல்ல. தமிழ்த்தேசிய மண்ணில் இனப்படுகொலை செய்யப்பட்ட இனமாக நாங்கள் இருக்கின்றோம் எங்களுக்கான உரிமை கிடைக்கவேண்டும் என்பதற்காக சர்வதேசத்திற்கும் தென்னிலங்கைக்கும் வலியுறுத்துகின்ற அடையாளமாக இந்தத் தேர்தலில் பொது வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளேன். எனது பணி செப்டம்பர் 22 ஆம் திகதி மட்டுமே இருக்கும் அதற்கு பிற்பாடான பணிகளை தமிழ் பொதுக்கட்டமைபே எடுக்கும்.

தந்தை செல்வா காலம் தலைவர் பிரபாகரன் காலம் அதற்குப் பின்னர் சம்பந்தன் தலைமையின் கீழ் வழிநடத்தப்பட்டோம். இதில் பலர் இருந்திருந்தாலும் தந்தை செல்வாவின் போராட்டம் அகிம்சை ரீதியாக பல ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருந்தாலும் பல ஏமாற்றங்களை கண்டிருந்தது பின்னர் ஆயுதப்போராட்டம் அது மௌனிக்கப்பட்ட பின்னர் மீண்டும் ஜனநாயக ரீதியான போராட்டங்கள் நடைபெற்று வந்தபோதும் ஏமாற்றங்களே எமக்கு மிஞ்சியது.

சர்வதேச ரீதியாக நாங்கள் பேச்சுவார்த்தைக்குச் செல்லுகின்றபோது சர்வதேசம் ஒரு குரலில் வரவேண்டும் என்பதைத்தான் நமக்கு கூறியது இவ்வாறாக அனைத்து விடையங்களை நாங்கள் சீர்தூக்கிப் பார்க்கும் போது ஒரு குரலில் ஒருமித்த கருத்துக்களை முன்கொண்டு செல்வதற்காக நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக அடையாளப்படுத்தப்பட்டு அதற்கான ஆதரவை வாக்குகளாக செலுத்துகின்றபோது தமிழ் மக்களின்  இனப்பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாது உள்ளது அவை  தீர்க்கப்படவேண்டும் என்பதை வெளிக்காட்டுகின்ற முயற்சியே இந்த பொதுவேட்பாளர்  முயற்சியாகும்.

பொதுக் கட்டமைப்பு சார்பில் பலரையும் ஆராய்ந்த பின்னர் இறுதியாக சட்டத்தரணி தவராசாவும் எனது பெயரையும் இறுதித் தெரிவில் இருந்தது. நாங்கள் இருவரும் நண்பார்களாகவே இருக்கின்றோம். எவ்வாறாயினும் நானே அவரோ எவ்விதமான சர்ச்சைகளும் இல்லாமல் என்னை தெரிவு செய்தார்கள். இதனால் தமிழ்தேசியத்தின் அடையாளமாக நான் இருப்பேன்.  இவ்வாறான சூழலில் இந்த ஜனாதிபதித் தேர்தலில் எத்தகையவர்கள் போட்டடியிடுகின்றார்கள் என்பது அனைவரும் அறிந்த விடையம் மிக முக்கியமாக போட்டியிடுகின்ற ஜனாதிபதி வேட்பாளராக இருக்கின்றவர்கள் விடுதலைப்புலிகளை நான் தான் பிரித்தேன், கட்சிகளை  பிரித்தேன்,என்னை மாற்றமாட்டேன்  என்று போட்டிபோட்டு செல்லும் நிலையே காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் மக்களை பிரித்தாளுகின்றவர்களுக்கு வாக்குகளை வழங்கப்போகின்றோமா? வடக்கில் ஒன்று தெற்கில் ஒன்று கதைப்பவர்களுக்கு வாக்குகளை வழங்கப்போகின்றோமா? வடக்கு கிழக்கை பிரித்தவர்களுக்க வாக்குகளை வழங்கப்போகின்றோமா? என்பதை தமிழ் மக்கள் சிந்திக்கவேண்டும். தமிழ்த்தேசிய இனத்தின் விடிவுக்காக பல இலட்சம் மக்களையும் போராளிகளையும் இழந்துள்ள நாம் உரிமையற்றவர்களாக இருக்கும் நிலையில் பல ஜனாதிபதிகளைக் கண்டு ஏமாற்றம் அடைந்துள்ள நிலையில் இன்னும் பேரம் பேசத்தான் போகின்றோமா? இவை தொடர்பில் சிந்திக்கவேண்டும். இவற்றுக்காகத்தான் பொது வேட்பாளராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளேன். எனவே ஒட்டுமொத்த தமிழ் மக்களும் எங்கள் விடிவுக்காக வாக்களிக்கவேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/190586

  • கருத்துக்கள உறவுகள்
Posted
31 minutes ago, ஏராளன் said:

தந்தை செல்வா காலம் தலைவர் பிரபாகரன் காலம் அதற்குப் பின்னர் சம்பந்தன் தலைமையின் கீழ் வழிநடத்தப்பட்டோம்.

சம்பந்தன் தலைமையின் கீழ் வழிநடாத்திய விடயங்களையும் கொஞ்சம் எடுத்துவிடலாமே?

சம்பந்தரை வெளிநாடுகளும் உள்நாட்டுக்காரரும் தான் வழிநடாத்தினார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, ஏராளன் said:

குறியீடு என்று அவர் கூறுவது இருக்கலாம், 😁

18 hours ago, விசுகு said:

இது தான் தமிழரின் சாபம்.

எதையாவது ஒருவர் செய்ய முனைந்தால் ஆமாம் இவர் கிழிச்சுடுவார். எங்களுக்கு தெரியாததா?? என்று முளையிலேயே ......???

அது என்ன ""முளையிலேயே""??????

தமிழ்ப் பொது வேட்பாளர் எனும் முயற்சி, முளைக்காத, நாட்பட்ட, சப்பை  விதை என்று தெரிந்தே விதைக்கப்படும் ஒரு பதரை எப்படித் தாங்கள் முழைத்ததுபோல காட்டலாம்?

🤨

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Kapithan said:

குறியீடு என்று அவர் கூறுவது "தற்குறி" த்தனத்தையாக இருக்கலாம், 😁

அது என்ன ""முளையிலேயே""??????

தமிழ்ப் பொது வேட்பாளர் எனும் முயற்சி, முளைக்காத, நாட்பட்ட, சப்பை  விதை என்று தெரிந்தே விதைக்கப்படும் ஒரு பதரை எப்படித் தாங்கள் முழைத்ததுபோல காட்டலாம்?

🤨

சிங்களம் பலமிழந்து தமக்குள் பிரிந்து நிற்கும் இன்றைய சூழலில் தமிழர் ஒற்றுமையாக தமது பலத்தை காட்டுவதற்கு சரியான சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது என்று அங்குள்ளவர்கள் ஒன்று கூடி முடிவு செய்திருக்கிறார்கள். அதனை தமிழர்கள் ஒற்றுமையாக வழி மொழிதல் நடைபெற்றால் மட்டுமே அதன் பயனை அடைய முடியும். ஆனால் எம்மவர் எந்த பொறுப்பும் அற்று எடுத்தவுடன் கவுட்டுப்போடுவது எமது சாபக்கேடே. 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விசுகு said:

1) சிங்களம் பலமிழந்து தமக்குள் பிரிந்து நிற்கும் இன்றைய சூழலில் தமிழர் ஒற்றுமையாக தமது பலத்தை காட்டுவதற்கு சரியான சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது

என்று அங்குள்ளவர்கள் ஒன்று கூடி முடிவு செய்திருக்கிறார்கள். அதனை தமிழர்கள் ஒற்றுமையாக வழி மொழிதல் நடைபெற்றால் மட்டுமே

2) அதன் பயனை அடைய முடியும்.

3) ஆனால் எம்மவர் எந்த பொறுப்பும் அற்று எடுத்தவுடன் கவுட்டுப்போடுவது எமது சாபக்கேடே. 

1) ஒற்றுமையாக எமது பலத்தை காட்டி என்ன பயன்? 

2) என்ன பலன்? ⁉️

3) ஒற்றுமை இன்மை எமது சாபக்கேடே  100%

  • கருத்துக்கள உறவுகள்
Posted
45 minutes ago, Kapithan said:

1) ஒற்றுமையாக எமது பலத்தை காட்டி என்ன பயன்? 

2) என்ன பலன்? ⁉️

3) ஒற்றுமை இன்மை எமது சாபக்கேடே  100%

1) சிங்கள அரசியல்வாதிகளை ஆதரித்து இதுவரை என்ன பயன்?

2) அந்த சாபக்கேட்டை போக்க மட்டுமாவது இதனை பாவித்தால் என்ன குறைந்து போய் விடும்??

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, விசுகு said:

1) சிங்கள அரசியல்வாதிகளை ஆதரித்து இதுவரை என்ன பயன்?

2) அந்த சாபக்கேட்டை போக்க மட்டுமாவது இதனை பாவித்தால் என்ன குறைந்து போய் விடும்??

1) முஸ்லிம்களுக்கு முடியும் என்றால்  ஏன் எங்களால்  முடியாது?

2) உந்தத் தேர்தலில் நிற்பதால் ஏதாவது பயனைத்தானும் நாம் பெறுவோம் என்று உங்களால் கூற முடியுமா? 

யார் சொல்லி இந்தத் தேர்தலில் நிற்கிறார்கள்? இந்தியாதானே? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kapithan said:

1) ஒற்றுமையாக எமது பலத்தை காட்டி என்ன பயன்? 

2) என்ன பலன்? ⁉️

3) ஒற்றுமை இன்மை எமது சாபக்கேடே  100%

என்ன சொல்ல வருகிறீர்கள்??   

ஒற்றுமை. இல்லை என்றால் சாபக்கேடு.   உண்மை தான்   அதேநேரம்  ஒற்றுமையால்.  எனபலன்  ?? என்றும் கேட்கிறீர்கள்     

24 minutes ago, விசுகு said:

1) சிங்கள அரசியல்வாதிகளை ஆதரித்து இதுவரை என்ன பயன்?

2) அந்த சாபக்கேட்டை போக்க மட்டுமாவது இதனை பாவித்தால் என்ன குறைந்து போய் விடும்??

உண்மை நிச்சியமாக   சிறந்த கேள்விகள் 

3 minutes ago, Kapithan said:

2) உந்தத் தேர்தலில் நிற்பதால் ஏதாவது பயனைத்தானும் நாம் பெறுவோம் என்று உங்களால் கூற முடியுமா? 

பலன் இல்லை  போட்டி இட்டாலும். அல்லது போட்டு இடா. விட்டாலும்      இரண்டுமே ஒன்று தான்    எதை செய்தாலும் ஒன்று தான்     எனவேதான் போட்டு இடுவதை குறை கூற முடியாது  

  • Confused 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

பல கட்சிகள் ஒன்று சேர்ந்து பொது வேட்பாளரை நிறுத்தியிருக்கிறார்கள். இவ்வளவு காலமும் சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களித்து என்ன பயனை தமிழர்கள் பெற்றுக் கொண்டார்கள். அவர்களுக்கு போடும் வாக்கு வீணான வாக்குகள்தானே . இந்த முறை தமிழ்ப் பொது வேட்பாளருக்குப் போடுவதால்  புதியதாக நாம் எதனையும் இழந்து விடப்போவதில்லை. ஆனால் தமிழ்மக்கள் ஒரு வாக்கை மட்டும்.பொது வேட்பாளர்களுக்கு அளிக்க வேண்டும். 2வது 3வது தெரிவைச் செய்வது பொது வேட்பாளர் நிறுத்தியதற்கு அர்த்தமில்லாமல் செய்து விடும். இதுபற்றி இன்னும் இந்த பொதுவேட்பாளரை நிறுத்திய குழுவினர் இது தொடர்பாக கள்ள மெளனம் சாதிப்பது நல்லதல்ல.

Edited by புலவர்
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, புலவர் said:

ஆமாம் ... ஒரு வாக்கு மட்டுமே போட வேண்டும்    நல்ல கருத்துகள் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kapithan said:

) ஒற்றுமையாக எமது பலத்தை காட்டி என்ன பயன்? 

2) என்ன பலன்? ⁉️

இவருக்கு கொர்னோ போல் சுமத்தி வைரஸ் காய்ச்சல் பிடித்து விட்டது யாழ் வாசகர்கள் குழம்ப வேண்டாம் தேர்தல் முடியமுன் அமரிக்காவில் இருந்து வைத்தியர்களை கொண்டு அவரின் காய்ச்சல் இல்லாமல் ஆக்கப்படும் .😃

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, விசுகு said:

சிங்களம் பலமிழந்து தமக்குள் பிரிந்து நிற்கும் இன்றைய சூழலில் தமிழர் ஒற்றுமையாக தமது பலத்தை காட்டுவதற்கு சரியான சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது என்று அங்குள்ளவர்கள் ஒன்று கூடி முடிவு செய்திருக்கிறார்கள். அதனை தமிழர்கள் ஒற்றுமையாக வழி மொழிதல் நடைபெற்றால் மட்டுமே அதன் பயனை அடைய முடியும். ஆனால் எம்மவர் எந்த பொறுப்பும் அற்று எடுத்தவுடன் கவுட்டுப்போடுவது எமது சாபக்கேடே. 

இதுக்கு நான் 100 வீத ஆதரவு...இங்குள்ள சிலர் எப்பவுமே சகுனப் பிழைகாரர்தான்...வென்று சனாதிபதி ஆகமுடியாது... என்பது உண்மை.. எம்முடைய நிலையில் சாண் போனாலென்ன முழம்போனாலென்ன..

  • Thanks 1
Posted

என்னிடம் இருக்கும் மூன்று கேள்விகள்:

1. இவ்வாறு தமிழ் மக்கள் இவருக்கே பெருமளவுக்கு வாக்களித்தால் (ஏனைய சிங்கள வேட்பாளர்களுக்கு தமிழ் மக்கள் போடும் வாக்குகளின் மொத்த எண்ணிக்கையை விட),  அதனால் சர்வதேச சமூகம் என்ன வகையில் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியில் உதவும்?

2. அவ்வாறு உதவுமா அல்லது, வெற்றியடைந்த சிங்கள வேட்பாளருடன் / சனாதிபதியுடன் இணைந்து பணியாற்றி,  இலங்கை அரசினால் அடையக்கூடிய தம் நலன்களை தொடர்ந்து பேண முயலுமா?

3. ஒரு வேளை தமிழ் மக்களின் வாக்குகளில் சொற்ப வீதமே இவருக்கு கிடைப்பின், தமிழ் மக்கள் தமிழ் தேசியத்தை நிராகரிக்கின்றார்கள் என அது எடுத்துக் கொள்ளப்படுமா?

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Kandiah57 said:

என்ன சொல்ல வருகிறீர்கள்??   

ஒற்றுமை. இல்லை என்றால் சாபக்கேடு.   உண்மை தான்   அதேநேரம்  ஒற்றுமையால்.  எனபலன்  ?? என்றும் கேட்கிறீர்கள்     

உண்மை நிச்சியமாக   சிறந்த கேள்விகள் 

பலன் இல்லை  போட்டி இட்டாலும். அல்லது போட்டு இடா. விட்டாலும்      இரண்டுமே ஒன்று தான்    எதை செய்தாலும் ஒன்று தான்     எனவேதான் போட்டு இடுவதை குறை கூற முடியாது  

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்,......கண்ணைக் கட்டுதே 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, Kapithan said:

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்,......கண்ணைக் கட்டுதே 

🤣

வயோதிபர்களுக்கு   அப்படி தான் இருக்கும் 🤣🤣🤣🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, பெருமாள் said:

இவருக்கு கொர்னோ போல் சுமத்தி வைரஸ் காய்ச்சல் பிடித்து விட்டது யாழ் வாசகர்கள் குழம்ப வேண்டாம் தேர்தல் முடியமுன் அமரிக்காவில் இருந்து வைத்தியர்களை கொண்டு அவரின் காய்ச்சல் இல்லாமல் ஆக்கப்படும் .😃

பெருசு, 

ஏதாவது ஒரு வகையில் சிறிதேனும் பலனளிக்கக்கூடிய ஒரு MP தேர்தல்  அல்லது மாகாண சபைத் தேர்தல்  போன்றவைகளில் ஒற்றுமையாகப் போட்டியிட்டு கூரையேற முடியாத ஊனமுற்றவர்கள், எந்தப் பிரயோசனமும் அற்ற வைகுண்டம் போகும் வழியைப் பற்றி பீத்தினால் பின்பக்கக்கத்தால் சிரிக்கத்தான் முடியும். 🤣

உந்தக் கூத்தை நீங்கள், அல்வாயன், விசுகர் போன்ற முரட்டுக் காளைகள் எல்லோரும்  பார்த்து ரசியுங்கள் என்னால் முடியாது.

Edited by Kapithan
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, Kapithan said:

பெருசு, 

ஏதாவது ஒரு வகையில் சிறிதேனும் பலனளிக்கக்கூடிய ஒரு MP தேர்தல்  அல்லது மாகாண சபைத் தேர்தல்  போன்றவைகளில் ஒற்றுமையாகப் போட்டியிட்டு கூரையேற முடியாத ஊனமுற்றவர்கள், எந்தப் பிரயோசனமும் அற்ற வைகுண்டம் போகும் வழியைப் பற்றி பீத்தினால் பின்பக்கக்கத்தால் சிரிக்கத்தான் முடியும். 🤣

உந்தக் கூத்தை நீங்கள், அல்வாயன், விசுகர் போன்ற முரட்டுக் காளைகள் எல்லோரும்  பார்த்து ரசியுங்கள் என்னால் முடியாது.

உங்களுக்கு விளங்கவில்லை என்றால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது,.......

இந்த பொது வேட்பாளர் நியமனம் மூலம்   .....போர் குற்ற விசாரணை செய்கிறோம். 

காணமால். ஆக்கப்பட்டோரை தேடுகிறோம்.  

பறிகொடுத்த. நிலத்தை காணி கோருகிறோம்.  

சிறையில். 20ஆண்டுகள் 30 ஆண்டுகளுக்கு மேலாக இருப்போரை. விடுவிக்க கோருகுறோம் 

மாகாண சபை தேர்தலை நடத்த வலி உறுத்துகிறோம் 

சுயாட்சி கோருகிறோம்.  

ஐனதிபதி பதவிக்காக தேர்தலில் போட்டி இடவில்லை 

  • Thanks 3
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, Kandiah57 said:

உங்களுக்கு விளங்கவில்லை என்றால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது,.......

இந்த பொது வேட்பாளர் நியமனம் மூலம்   .....போர் குற்ற விசாரணை செய்கிறோம். 

காணமால். ஆக்கப்பட்டோரை தேடுகிறோம்.  

பறிகொடுத்த. நிலத்தை காணி கோருகிறோம்.  

சிறையில். 20ஆண்டுகள் 30 ஆண்டுகளுக்கு மேலாக இருப்போரை. விடுவிக்க கோருகுறோம் 

மாகாண சபை தேர்தலை நடத்த வலி உறுத்துகிறோம் 

சுயாட்சி கோருகிறோம்.  

ஐனதிபதி பதவிக்காக தேர்தலில் போட்டி இடவில்லை 

முதலில் கூரை ஏறுங்கள் மிகுதியை பின்னர் பார்ப்போம்,..😏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, Kapithan said:

முதலில் கூரை ஏறுங்கள் மிகுதியை பின்னர் பார்ப்போம்,..😏

ஒரே ஒருவர் தான் ஐனதிபதி     இல்லையா?? அப்படியென்றால்  ஏன் பல சிங்களவர் போட்டிஇடுகிறார்கள்.......???  இந்த அரியேத்திரன். ஒரு சிங்களவன்.  என்று கற்பனையில் இருங்கள்’  உங்கள் வருத்தம் தீர்ந்து விடும்    தேர்தலில் எவரும் போட்டி இடலாம்  நீங்கள் வெல்ல முடியாது   போட்டி இடாதீர்கள்  என்பது   அடிப்படை உரிமை மீறிய செயல் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kapithan said:

பெருசு, 

ஏதாவது ஒரு வகையில் சிறிதேனும் பலனளிக்கக்கூடிய ஒரு MP தேர்தல்  அல்லது மாகாண சபைத் தேர்தல்  போன்றவைகளில் ஒற்றுமையாகப் போட்டியிட்டு கூரையேற முடியாத ஊனமுற்றவர்கள், எந்தப் பிரயோசனமும் அற்ற வைகுண்டம் போகும் வழியைப் பற்றி பீத்தினால் பின்பக்கக்கத்தால் சிரிக்கத்தான் முடியும். 🤣

உந்தக் கூத்தை நீங்கள், அல்வாயன், விசுகர் போன்ற முரட்டுக் காளைகள் எல்லோரும்  பார்த்து ரசியுங்கள் என்னால் முடியாது.

என்னென்டு அய்யா முடியும்...ஒருநாளும் எந்த விசயத்தையும் ஆதரிப்பதில்லையே..ஏனென்றால்.....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எறும்பூர கற்குழியும். 🙂

  • Like 4

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பேச்சு நன்றாக இருந்தது ஐயா
    • உக்ரைனின் மீதான ரஷ்ய பூட்டினின் ஆக்கிரமிப்பு போர் தாக்குதல்களால் மூன்றாவது கடும் குளிர்காலத்தை மின் தடைகள் வெப்பமூட்டும் பாதிப்புகளுடன் உக்ரேனிய மக்கள் அனுபவித்து வருகின்றனர். ஆனால் இங்கே செய்யபடும் ரஷ்ய பிரசாரம் மேற்குலகால் நடத்தப்படும் உக்ரேன் அழிவிற்கு
    • அந்த கூட்டம் தொடர்பான காணொலி  ============ வடக்கில் நீங்கள் பெரிய வசந்தம் கொண்டு வராவிட்டாலும் பரவாயில்லை,  நீர் வடிகாலமைப்பு, கிராமிய அளவில் வேலை வாய்ப்பு, எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் பற்றி கரிசனை,விவசாயிகளின் தன்னிறைவு உற்பத்திக்கான ஊக்குவிப்பு போன்ற விடயங்களில் அக்கறை  எடுத்தாலே போதும் அங்குள்ள மக்கள் தமது வசந்தத்தை தாமே ஏற்படுத்திக்கொள்வார்கள். ஏனென்றால் எந்த அரசாங்கமும் தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட வடக்கிலோ கிழக்கிலோ பாலாறும் தேனாறும் ஓட வைக்கும் என்பதில் எப்போதுமே நம்பிக்கை கொண்டதில்லை. எந்த ஒரு நாட்டிலும் போர் முடிவுக்கு வந்தால் நிவாரணம், மீள் கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கத்தான் முண்டியடித்து வருவார்கள். ஆனால் யாழ்ப்பாணத்தில் முற்றுமுழுதான சிங்கள ஆக்கிரமிப்பின் பின்னரும், யுத்த முடிவின் பின்னரும் முதலில் ஓடி வந்தது சிங்கள வங்கிகளும், நிதி நிறுவனங்களும், தனியார் வியாபார நிறுவனங்களுமே.. நடைபாதையில் மயங்கி வீழ்ந்து கிடப்பவனின் பொக்கற்றுக்குள் கையைவிட்டு இருப்பதையும் புடுங்கும் அரசுகளை கடந்து வந்த எமக்கு இனி நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். நீங்கள் நல்லது செய்துவிட்டால் ஆச்சரியம், நல்லது செய்யாவிட்டால் அதிர்ச்சியில்லை, வழமையானதுதான்.
    • சீமானை  எல்லா இடங்களிலும் நான் வரவேற்பதில்லை. ஆனாலும் திராவிட பொய்கள்,சுத்துமாத்துகளை விட அவர் பரவாயில்லை.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.