Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sangu-e1723712841656.jpg?resize=320,180&

தமிழ் வேட்பாளருக்கு சங்கு.

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு தேர்தல் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி தேர்தலில் ரணில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் பொது வேட்பாளரான பா.அரியநேந்திரன் போட்டியிடும் சின்னம் சங்கு என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சங்கு சின்னத்தில் அவர் போட்டியிடவுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தமது ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

அதன்படி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார், மொனராகலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த கலாநிதி கயாஷான் நவனந்த, திகாமடுல்ல மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.யும் முன்னாள் அமைச்சருமான ஸ்ரீயானி விஜேவிக்ரம, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குணசேகரம் சங்கர், ஐக்கிய மக்கள் கட்சியின் தலைவர் கலாநிதி சிறிமசிறி ஹப்புஆராச்சி உட்பட பல்வேறு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  ரணிலுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

https://athavannews.com/2024/1395872

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பொது வேட்பாளருக்கு சங்கு சின்னம் நல்ல பொருத்தமாக உள்ளது.  😂. Super

தேர்தல் ஆணையகம் இவருக்கு சின்னமாக ஆணுறையைக் கொடுப்பார்கள் என நம்பியிருந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, நிழலி said:

தேர்தல் ஆணையகம் இவருக்கு சின்னமாக ஆணுறையைக் கொடுப்பார்கள் என நம்பியிருந்தேன்.

கொடுத்து இருந்தால்,.அவர் தான் ஐனதிபதி   ஆகியிருப்பார்    🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

தமிழ் வேட்பாளருக்கு சங்கு.

அரியநேந்திரனுக்கு சங்கூதச் சொல்லி மக்கள் கையில் கொடுக்கிறார்களோ?

இது வேண்டுமென்றே செய்த செயலாகவே கருதுகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

அரியநேந்திரனுக்கு சங்கூதச் சொல்லி மக்கள் கையில் கொடுக்கிறார்களோ?

இது வேண்டுமென்றே செய்த செயலாகவே கருதுகிறேன்.

அதுதானே…. 39 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள்.
இவருக்கு மட்டும் சங்கு கிடைத்தது, தற்செயலான செயலாக தெரியவில்லை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

455464635_8704125919616392_7970289472559

    1648639141shankh.jpg

"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு"
- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.-

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

அரியநேந்திரனுக்கு சங்கூதச் சொல்லி மக்கள் கையில் கொடுக்கிறார்களோ?

இது வேண்டுமென்றே செய்த செயலாகவே கருதுகிறேன்.

52 minutes ago, தமிழ் சிறி said:

அதுதானே…. 39 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள்.
இவருக்கு மட்டும் சங்கு கிடைத்தது, தற்செயலான செயலாக தெரியவில்லை. 

அண்ணைமார் தேர்தல் திணைக்களத்திற்குள் தமிழர்களும் பணியாற்றுவினம் தானே? அதில யாரோ ஒரு குறும்பர் செய்த வேலையா இருக்கும்!

ரணில் ஐயாவுக்கு சிலிண்டர் கொடுத்ததும் திட்டமிட்டோ தெரியல!

  • கருத்துக்கள உறவுகள்

சங்கூதிற வயசுல சங்கீதா!😂🤣

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சகுனமே சரியில்லை... அப்போ அரியத்தின் ஆட்சியை பார்க்க முடியாதா..?🥲

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் ஆணையகம் சங்கைச் சின்னமாக தமிழ் தமிழ் பொது வேட்பாளருக்கு அளித்தது நன்மைக்கனதே!🙌

ங்கு, தமிழர் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்தது. 'மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும், விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே' என்று பக்திபாவத்தோடு ஆண்டாளும், 'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு' என்று பாவேந்தரும் பாடுவது அதன் அன்றாடப் பயன்பாட்டில் இருந்த முக்கியத்துவத்தின் காரணமாகத்தான்.

மங்கலச் சடங்குகளின்போதும் அமங்கலச் சடங்குகளின்போதும், சங்கின் பயன்பாடு தவிர்க்க இயலாதது.

கடலிலிருந்து கிடைக்கும் சங்குப்பூச்சியின் உடற்கூட்டினையே சங்காகப் பயன்படுத்திவருகிறோம். சங்கில் மணி, துவரி, பாருதம், பூமா, துயிலாசங்கு, வெண்சங்கு, வைபவ சங்கு, திரிசங்கு எனச் சங்கில் பல வகைகள் உண்டு. சங்க காலத்தில் நம் முன்னோர்கள், தங்களின் செல்வங்களை இரண்டாக வகைப்படுத்தினர். அதில் ஒன்று, 'பத்ம நிதி' மற்றொன்று 'சங்க நிதி (வலம்புரிச் சங்கே அதன் அடையாளம்)'. இந்த இரண்டையும் கொண்டோரை 'இருநிதிக்கிழவன்' என்றழைத்தனர். இதன்மூலம் அவர்கள் சங்கைத் தங்களது தலையாய செல்வமாகக் கருதினர் என்பது தெளிவாகிறது. மேலும், கடவுளை பூஜிக்கும் ஒரு பொருளாக சங்கைப் பயன்படுத்திவந்தனர்.

நீரிலிருந்து கிடைக்கும் பொருள்கள் எல்லாம் புனிதமானவை என்ற நம்பிக்கை நம் மரபில் உண்டு. பாற்கடலை, அமிர்தத்திற்காக தேவர்களும் அசுரர்களும் கடைந்தபோது கிடைத்த பொருள்களில் ஒன்று சங்கு என்பது ஐதிகம். எனவே, இது மங்கலப் பொருள்களில் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. சங்கில் நான்கு வகைகள் உண்டு. முதல்வகை 'இடம்புரிச் சங்கு'. இது, ஆயிரம் சிப்பிகள் கூடும் இடத்தில் கிடைக்கும். இரண்டாம் வகை, 'வலம்புரி'. ஆயிரம் இடம்புரி சங்குகள் கூடும் இடத்தில் இது கிடைக்கும். வலம்புரிச்சங்குதான் கோயில் பூஜைகளில் முதன்மைபெறுகிறது. மூன்றாவது 'சலஞ்சலம்'. ஆயிரம் வலம்புரிகள் சங்கு கூடும் இடத்தில் ஒரு சலஞ்சலம் கிடைக்கும். இது, அபூர்வ வகை. நான்காவது 'பாஞ்சஜன்யம்'. இது, ஆயிரம் சலஞ்சலங்கள் கூடும் இடத்தில் கிடைக்கும். கிருஷ்ணபகவானின் கையில் இருக்கும் சங்கு இதுதான்.
 
சங்கு, மிகச்சிறந்த மருத்துவ குணங்கள் நிறைந்த பொருள். சங்கிலிருந்து தயாரிக்கப்படும் 'சங்கு பஸ்பம்' குழந்தைகளுக்கு நுண்ணுயிரிகளால் தொண்டையில் ஏற்படும் டான்சில்ஸ் தொற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

இது கூகுள் ஆண்டவரிடம் சங்குபற்றிக் கிடைத்த செய்தி.😌🙏

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Paanch said:

எவ்ளா பெரிய முட்டு..😂😂

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

எவ்ளா பெரிய முட்டு..😂😂

இது எந்தக் கண்டத்தில், எந்தநாட்டில், எந்த ஊரில் பேசப்படும் மொழி.????🤔

  • கருத்துக்கள உறவுகள்

பொது வேட்பாளரை நிறுத்திப் போட்டு கொஞ்சம் கூட  கூச்சமில்லாமல் ரணிலிடம் பெட்டி வாங்கப் போன செல்வமும் சித்தார்த்தனும் எப்பவோ சங்கு ஊதிப் போட்டார்கள். இப்ப பெட்டி வாங்கிறதில சுமத்திரனுக்கு போட்டியாக  நிற்கிறதால சுமத்திரனுக்கு கொஞ்சம் கவலைதான்.பொதுவேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கிறதா சொல்லிக் கொண்டிருந்த மாவையும் சிறதரனும் ஆமை  தலையை உள்ளுக்கு இழுத்த மாதிரி சத்தமில்லாமல் அமைதியாய் இருக்கிறதும் கடைசி கட்ட பெட்டி பேரத்துக்காகத்தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் சரித்திரத்தில் சங்கு என்பது ஒரு பாரம்பரிய சின்னம்,பொருள்,அடையாளமாகவே பார்க்கப்பட்டது.
கேவலம் நிறைந்த உலகில்  சங்கிற்கு அர்த்தமே தெரியாமல் என்னென்னமோ எல்லாம் எழுதுகின்றார்கள்.

இது அரசியல் கருத்து அல்ல.  👈

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

தமிழ் சரித்திரத்தில் சங்கு என்பது ஒரு பாரம்பரிய சின்னம்,பொருள்,அடையாளமாகவே பார்க்கப்பட்டது.
கேவலம் நிறைந்த உலகில்  சங்கிற்கு அர்த்தமே தெரியாமல் என்னென்னமோ எல்லாம் எழுதுகின்றார்கள்.

இது அரசியல் கருத்து அல்ல.  👈

மிகப் பெரும் மதிப்பு மிக்க  வலம்புரிச் சங்கு...

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

என்ன சகுனமே சரியில்லை... அப்போ அரியத்தின் ஆட்சியை பார்க்க முடியாதா..?🥲

எங்களைவிட அவரின் ஆட்சியை பார்க்க முடியாதே என்ற பெரிய கவலை சர்வதேசத்திற்கு

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

இது எந்தக் கண்டத்தில், எந்தநாட்டில், எந்த ஊரில் பேசப்படும் மொழி.????🤔

என்ன கந்தையாண்ணைக்கே போட்டியா... நான் கந்தையாண்ணை மட்டுந்தான் யாழில எழுதுற ஒரே ஒரு வெள்ளைகாரன்னு நினச்சிட்டு இருந்தன்..🤣

17 minutes ago, விளங்க நினைப்பவன் said:

எங்களைவிட அவரின் ஆட்சியை பார்க்க முடியாதே என்ற பெரிய கவலை சர்வதேசத்திற்கு

ஆமால்ல..அதிபர் ஆனதும் அரியத்துக்கு நான்தான் வாழ்த்து சொல்லுவேன், நான்தான் வாழ்த்து சொல்லுவேன்னு டிரெம்ப்பும் கமலா கரிசும் அடிபட்டு கொண்டு இருக்கிறாங்கள்...அவிங்க வாயில மண்ணுதான்..பாவத்த...😂

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

என்ன கந்தையாண்ணைக்கே போட்டியா... நான் கந்தையாண்ணை மட்டுந்தான் யாழில எழுதுற ஒரே ஒரு வெள்ளைகாரன்னு நினச்சிட்டு இருந்தன்..🤣

எங்கே போகிறீர்கள்?? என்பதற்கு  பையில் நாலு தேங்காய் என்று சொன்னார் ஒருவர்,......... அதேபோல இருகிறது உங்கள் பதில்,.....இதற்குள்.  என்னை ஏன்   இழுக்கிறீர்கள்.   ??  

இவ்வண்ணம். ...வெள்ளை ஜேர்மன்காரன்.   கந்தையா    😂🤣

குறிப்பு.. ......தமிழர்கள் அனைவரும் கருப்பு இல்லை   

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
25 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

என்ன கந்தையாண்ணைக்கே போட்டியா... நான் கந்தையாண்ணை மட்டுந்தான் யாழில எழுதுற ஒரே ஒரு வெள்ளைகாரன்னு நினச்சிட்டு இருந்தன்..🤣

ஓணாண்டியார் ஊரிலை இருக்கிற வெள்ளைமாப்பிளையளை இன்னும் காணேல்ல போல.... 😂

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

ஓணாண்டியார் ஊரிலை இருக்கிற வெள்ளைமாப்பிளையளை இன்னும் காணேல்ல போல.... 😂

வெளிநாட்டில வெள்ளை தவிர மற்ற எல்லாரும் கரிமுண்டம்தான்..😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

வெளிநாட்டில வெள்ளை தவிர மற்ற எல்லாரும் கரிமுண்டம்தான்..😂

ஆரை சொல்ல வாறியள்? 😄

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

தமிழ் சரித்திரத்தில் சங்கு என்பது ஒரு பாரம்பரிய சின்னம்,பொருள்,அடையாளமாகவே பார்க்கப்பட்டது.
கேவலம் நிறைந்த உலகில்  சங்கிற்கு அர்த்தமே தெரியாமல் என்னென்னமோ எல்லாம் எழுதுகின்றார்கள்.

இது அரசியல் கருத்து அல்ல.  👈

உண்மை👍.....................

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

ஆரை சொல்ல வாறியள்? 😄

பொதுவா சொன்னன்..😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, பாலபத்ர ஓணாண்டி said:

பொதுவா சொன்னன்..😀

நீங்கள் பேய்க்காய் எண்டது எனக்கு எப்பவோ தெரியும் 😂 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.