Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, நிழலி said:

பொது வேட்பாளர் தெரிவு என்பது, வென்றாலும் (தமிழ் மக்கள் 100 வீதம் அவருக்கு வாக்களிப்பினும்) பூச்சிய விளைவை தருகின்ற, அதே நேரம் தோற்றால் பாதகமான சூழ் நிலையை தோற்றுவிக்கின்ற ஒன்று என இங்கு பல தடவை எழுதியுள்ளேன்.

பாதகமான விளைவுகளை சொல்லுங்கள் நாங்களும் அறிந்து கொள்ளலாம்.

பொது வேட்பாளரை விட்டால் அடுத்து பேரினவாத தலைவர்களுக்குத் தான் வாக்களிக்க வேண்டுமென்பதை நாசூக்காக சொல்கிறீர்கள்.

சரி அவர்களுக்கு வாக்களித்து எதைக் கண்டோம்.

இனி எதைக் காணப் போகிறோம்?

இதைத் தானே மீண்டும் மீண்டும் நானும் கேட்கிறேன்.

  • Replies 62
  • Views 3.8k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    வரி வரியாய் எழுதியும் உங்களுக்கு புரியாவிடின், சத்தியமா, அம்மான என்னால முடியல.

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    அரிய நேந்திரனுக்கு வாக்குப்போடாதவன் தமிழன் இல்லையாம் சிங்களவனுக்கு பிறந்தவனாம்.. இப்ப புதிசா ஆரம்பிச்சிருக்கிறாங்கள்..  இதை சங்கே முழங்கு என்டு கொஞ்சம் செயார் பண்ணீட்டு திரியுதுகள்.. வெளிநாட

  • நிழலி
    நிழலி

    முதலாவது மைத்திரியை ஆதரித்தமை பிழையான முடிவு அல்ல. மகிந்தவின் தமிழர்களுக்கு எதிரான மகிந்தவின் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து விலகி தமிழர்கள் மூச்சு விடக்கூடிய சூழ் நிலையை உருவாக்குவதற்காக எடுத்த முடிவு

4 minutes ago, ஈழப்பிரியன் said:

பாதகமான விளைவுகளை சொல்லுங்கள் நாங்களும் அறிந்து கொள்ளலாம்.

 

வரி வரியாய் எழுதியும் உங்களுக்கு புரியாவிடின், சத்தியமா, அம்மான என்னால முடியல.

  • கருத்துக்கள உறவுகள்

459820932_8256770077772254_4790331205442

 

459640743_507567938895520_64094014631397

 

May be an image of 2 people, speaker and crowd

 

459656066_122174746256210375_56887491975

 

459749332_122174746322210375_56764555512

 

May be an image of one or more people and crowd

கிளிநொச்சியில் தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரச்சார கூட்டம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

பொது வேட்பாளர் தெரிவு என்பது தமிழ் மக்களின் ஒற்றுமையை அல்ல, பிளவுகளை உலகுக்கு வெளிப்படையாக தெரிவுக்கும் ஒரு முறை என்பதால் தான், இதுபற்றி ஊடகங்களில் வர ஆரம்பித்த நாளில் இருந்து நான் எதிர்க்கின்றேன்.

இன்றிருக்கும் சூழ்நிலையில், முக்கியமாக வடக்கு கிழக்கு என்பது ஒன்றிணைந்து முடிவெடுக்கும் சூழ்நிலை இல்லாத போது, தமிழ் பேசும் மக்களுக்கிடையில் அடிப்படை புரிந்துணர்வு கூட கட்டமைக்கப்படாத சூழ் நிலையில், இது ஒரு விசப் பரீட்சை.

பொது வேட்பாளருக்கு 100 வீதம் தமிழ் மக்கள் வாக்களிப்பினும் கூட, அதன் விளைவுகள் பூச்சியம். வென்ற சனாதிபதியின் ஆட்சி தான் நிலவும். சர்வதேசமும் அவருடன் தான் கைகுலுக்கி தன் அலுவல்களைப் பார்க்கும்.

ஆனால் 50 வீதம் கூட பொது வேட்பாளருக்கு வடக்கு கிழக்கில் இருந்து கிடைக்கப் போவதில்லை. அதனால் அதன்  விளைவு தமிழ் தேசிய அரசியலில் கடும் செல்வாக்கு செலுத்தும். வடக்கு கிழக்கு இணைந்த தாயகம் எனும் அடிப்படையை தமிழ் பேசும் மக்களே நிராகரித்தனர் எனும் விதத்தில் இந்த விளைவு மற்றவர்களால் எடுக்கப்படும். 
தமிழ் தேசிய அரசியலை தமிழ் மக்களில் 50 வீதத்தினர் கூட ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை  வாக்களிப்பின் மூலம் உலகுக்கு அறிவித்த பின், அங்கு எந்த அரசியல் மிச்சமிருக்க போகின்றது?

தமிழ் தேசிய அரசியல் வடக்கு கிழக்கு என்று இருந்து, பின் வடக்குக்கு மட்டும் என்று ஆகி, ஈற்றில் யாழ்ப்பாணத்துக்கு மட்டுமே என்று குறுகப் போகின்றது. 

 

நான் அவதானித்தவரை தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்கும் வெளிநாட்டவர்  நாமல் ஆட்சிக்கு வருவதை நமட்டுக்குள் விரும்புகிறவர்களாக இருக்கிறார்கள்.. இதன் மூலம் இலகுவாக உறவினர்களுக்கு அசைலம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.. ஊரிலும் வெளிநாட்டுக்கு போய் அசைலம் அடிக்கும் ஜடியாவில் உள்ளோர் சங்குக்கு போட்டு நாமலை ஆட்சியில் இருத்த விரும்புகிறார்கள்.. இதன் மூலம் இலங்கையை பதற்ற நிலையில் வைத்திருந்து வெளிநாட்டுக்கு போகலாம் என்று நம்புகிறார்கள் பொதுவேட்பாளரை ஆதரிக்கும் பலர்..

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தேர்தலுக்கு கனடாவில் ஏன் சங்கூதுராங்கள்..?😂

என்ன என்ன கம்பிகட்டிற கதை எல்லாம் சொல்லுறாங்கள் ஆரோ நாலுபேற்ற விசர்க்கூத்துக்கு தமிழ்தேசியத்தை இழுத்து..😂

நீங்கள் அரியத்துக்கு காவடிதூக்குங்கோ இல்லா ஆட்டுக்குட்டிக்கு காவடி தூக்குங்கோ ஆனா தயவுசெய்து தமிழ்தேசியத்தை விட்டிடுங்கோ.. அதை உன்மையான தமிழையும் மக்களையும் நேசிக்கும் தமிழ்தேசியவாதிகள் நாங்கள் பாத்துக்கொள்ளுறம்..

நாளைக்கு அரியத்துக்கு எலெக்சன் நக்கீட்டு போச்சுதெண்டா அசிங்கம் நமக்குத்தான்.. உங்கட கட்ட வேகுறதுக்கு நாங்கள் எதுக்குடா எங்கட கவட்டைய வேகவைக்கோணும்..

 

 

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு புள்ளடியும் உங்கள் தலையெழுத்தை தீர்மானிக்கும் - தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன்

16 Sep, 2024 | 03:56 PM
image
 

ஜனாதிபதித் தேர்தலில் வாக்கு கேட்கும் வேட்பாளர்கள் எமது திருகோணமலை மண்ணை பறித்தவர்களே என தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

அரியநேந்திரனுக்கு அளிக்கும் வாக்குகள் எனக்கல்ல, அது உங்களுக்கானது. ஒவ்வொரு புள்ளடியும் உங்கள் தலையெழுத்தை தீர்மானிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

திருகோணமலை வெலிக்கடை தியாகிகள் கடற்கரை அருகில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்து கூறுகையில், 

நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது ரணில், அநுர, சஜீத் போன்றவர்களின் ஆசனத்தை பெறுவதற்கல்ல. சமஷ்டி தீர்வு கோரியும் 75 வருட கால பிரச்சினைக்கான தீர்வுகளை முன்வைத்துமே ஆகும். 

திருகோணமலை மண்ணுக்கு பல வரலாறுகள் உண்டு. இலங்கைக்கு சுதந்திர தினத்தன்று சிங்கக் கொடிக்கு பதிலாக கறுப்புக்கொடி ஏற்றிய 22 வயது இளைஞன் நடராசா சுட்டுக் கொல்லப்பட்டார். 

1956இல் இலங்கை தமிழ் அரசு கட்சியின் மாநாடு தந்தை செல்வாவினால் இங்கு தான் நடாத்தப்பட்டது. அதன்போது இணைந்த வடகிழக்கின் தலைநகரமாக திருகோணமலையை அறிவித்திருந்தார்.

அப்போது கூட சமஷ்டியை வலியுறுத்தியே பேசியிருந்தார். 1977க்கு முன்பு பெரும்பான்மை இன பாராளுமன்ற உறுப்பினர் இருக்கவில்லை. 1977க்கு பின்பு சேருவில எனும் தொகுதியை உருவாக்கி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் லீலாரத்ன என்னும் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

2009 மே 18இல் நடைபெற்ற போரின்போது நடந்த சம்பவம் பற்றி பல சர்வதேச நாடுகளுடனும் இந்தியாவுடனும் பேசியிருந்தோம். ஒன்றும் நடக்கவில்லை. இவ்வாறு ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் தடுத்தவர்களே வெட்கமில்லாமல் வாக்கு கேட்கின்றார்கள். அதற்கு சில தமிழ் தேசியத்தில் உள்ளவர்கள் சோரம் போகின்றார்கள்.

அரியநேந்திரனுக்கு அளிக்கும் வாக்குகள் எனக்கல்ல, அது உங்களுக்கானது. ஒவ்வொரு புள்ளடியும் உங்கள் தலையெழுத்தை தீர்மானிக்கும். சங்கு சின்னத்துக்கு மாத்திரம் வாக்களியுங்கள். ஏனையவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம். இன்னும் சில நாட்களில் பொய் வதந்திகள் வரலாம். அதனை நம்பி ஏமாற வேண்டாம். செயற்கை நுண்ணறிவு மூலமாக எனது படத்தை பயன்படுத்தி போலியான பிரச்சாரங்களை முன்வைத்து செயற்படுவார்கள். எதையும் நம்ப வேண்டாம் என்றார்.

ஒவ்வொரு புள்ளடியும் உங்கள் தலையெழுத்தை தீர்மானிக்கும் - தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, MEERA said:

IMG-2634.jpg

இது எப்படி இருக்கு?


மாவை
1. காலை சஜித் ஆதரவு 
2. மாலை பொதுவேட்பாளர் ஆதரவு 
3. இரவு ரணில் ஆதரவு… 😂

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இலங்கையில் தேர்தலுக்கு கனடாவில் ஏன் சங்கூதுராங்கள்..?😂

 

 

 

சங்கையும் சரியா ஊத மாட்டனென்கிறாங்கள்: அதென்ன "பேரிழுச்சி"😂?

32 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நான் அவதானித்தவரை தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்கும் வெளிநாட்டவர்  நாமல் ஆட்சிக்கு வருவதை நமட்டுக்குள் விரும்புகிறவர்களாக இருக்கிறார்கள்.. இதன் மூலம் இலகுவாக உறவினர்களுக்கு அசைலம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.. ஊரிலும் வெளிநாட்டுக்கு போய் அசைலம் அடிக்கும் ஜடியாவில் உள்ளோர் சங்குக்கு போட்டு நாமலை ஆட்சியில் இருத்த விரும்புகிறார்கள்.. இதன் மூலம் இலங்கையை பதற்ற நிலையில் வைத்திருந்து வெளிநாட்டுக்கு போகலாம் என்று நம்புகிறார்கள் பொதுவேட்பாளரை ஆதரிக்கும் பலர்..

இல்லை, நீங்கள் எழுதும் காரணங்களுக்காகத் தான் புலம்பெயர் தமிழ் மக்களில் ஒரு பிரிவினர், பொது வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்கின்றார்கள் என எண்ணவில்லை. அவர்கள் எவரும் நாமல் வருவதை விரும்பக் கூடியவர்கள் அல்ல. அந்தளவுக்கு சுயநலமிகளும் அல்ல.

போர், சுனாமி, கொவிட் தொற்று நோய்க்காலம் என்று தாயக மக்களை கடும் துன்பத்தில் ஆழ்த்திய பொழுதுகளில் எல்லாம் புலம்பெயர் மக்களின், அமைப்புகளின், சங்கங்களின் பொருளாதார, தார்மீக உதவிகள் இல்லாமல் விட்டிருந்தால் தாயக மக்கள் இன்னும் கடும் துன்பத்தை எதிர் நோக்கியிருப்பர். அவ்வாறானவர்களை இவ்வாறு குற்றம் சொல்வது ஒட்டுமொத்தமாக அவமானப்படுத்துவதாகும்.

ஆனால், பொதுவாக உணர்ச்சி வசப்பட்ட நிலையில், வெற்றுக் கோசங்களுக்கு மயங்கும் தன்மை புலம்பெயர் தமிழ் மக்களின் அமைப்புகளின் பொதுவான பண்பு. அதன் வழிதான் சீமானை ஆதரிப்பதும், பொது வேட்பாளாரை ஆதரிப்பதும், முன்னர் சைக்கிள் அணியை ஆதரித்ததும்.

தாம் வாழும் தேசங்களின் முன்னேற்றத்துக்கு வழிசமைக்கும் அரசியல் கட்சிகளையும், அமைப்புகளையும் ஆதரிப்பதில் சரியான முடிவுகளை எடுக்கும் இவர்கள், தாயக அரசியல் என்று வரும் போது, தம் இருப்பை பேணுவதற்கு ஏற்ப, நடைமுறை சாத்தியமற்ற வெற்றுக் கோசங்களுக்கு ஆதரவை வழங்குவது ஒரு முரண் நகை.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Justin said:

சங்கையும் சரியா ஊத மாட்டனென்கிறாங்கள்: அதென்ன "பேரிழுச்சி"😂?

சும்மா விசர்க்கதை கதையாதேங்கோ.. செப்டெம்பர் 22 ஆம் திகதி சிங்கள தலைவர்களுக்கு வேணுமெண்டால் கதிரையை பிடிக்குர நாளா இருக்கலாம், ஆனா எங்கட சங்கு தோழர்களுக்கு இவ்வளவு நாழும் கழுத்து புடிப்பில இருந்த சர்வதேசம் திரும்பி பார்க்கபோறநாள்..😂

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனை ஆதரித்து மேடையேறிய மாவை

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரனை ஆதரித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மேடையேறி உரையாற்றியுள்ளார்.

தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்கும் கூட்டம் கிளிநொச்சியில் இன்று பிற்பகல் இடம்பெற்றது.

தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனை ஆதரித்து மேடையேறிய மாவை | Mavai Senathiraja Support In Ariyanendren

தமிழரசுக்கட்சியின் தீர்மான அறிக்கை

இந்த கூட்டத்தில் மேடையேறிய தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றியுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கும் தமிழரசுக் கட்சியின் தீர்மான அறிக்கையை வவுனியாவில் இன்று முற்பகல் நடைபெற்ற கட்சியின் விசேட குழு கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்கள் முன்னிலையில் மாவை சேனாதிராஜா வாசித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://tamilwin.com/article/mavai-senathiraja-support-in-ariyanendren-1726495223#google_vignette

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்கும் பரப்புரைக் கூட்டத்தில்; தமிழின விடுதலைக்கான இலட்சியத்துக்காக அணிதிரண்டுள்ள உங்களைப்போன்று என்னுடைய வாக்கினையும் அளிப்பேன் - மாவை.சோ.சேனாதிராஜா

Published By: VISHNU   16 SEP, 2024 | 10:28 PM

image
 

தமிழின விடுதலைக்கான இலட்சியத்துக்கான பயணத்தில் அணிதிரண்டுள்ள பெருந்தொகையான உங்களைப்போன்று என்னுடைய வாக்கினையும் அளிப்பேன் என்ற உறுதிப்பாட்டுடன் தெரிவிக்கின்றேன் என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்தார்.

கிளிநொச்சி பசுமைப்பூங்கவில் திங்கட்கிழமை (16) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் ஏற்பாட்டில் நடைபெற்ற தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனை ஆதரித்து ‘தமிழ்த் தேசிய இனத்தின் எழுச்சியே தமிழ்த் தேசத்தின் மீட்சி’ எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 

தமிழர்களின் எழுச்சி நிகழ்வான நாளாகவும் தமிழனம் விடுதலை பெறதாத நிலையில் நடைபெறுகின்ற மற்றொரு ஜனாதிபதி தேர்தலாகவும் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறுகின்ற தேர்தல் அமைகின்றது. 

அவ்விதமான தேர்தலில் எமது விடுதலையையும், அதற்கான இலட்சியப் பயணதுக்காகவும் எங்களுடைய வாக்குகளை பயன்படுத்துவோம் என்ற உறுதியோடு இந்த எழுச்சி நிகழ்வில் பங்கெடுத்துள்ளீர்கள்.

விடுதலைக்கான போராட்டத்தில் மக்களையும், போராளிகளையும் பலிகொடுத்துள்ளோம். அந்த வகையில் நாம் எமது பயணத்திலே உறுதியாக இருக்கின்றோம், அந்தப் பயணத்தினை வலுவானதாக மேற்கொள்ள வேண்டும் என்ற இலட்சியத்துடன் இருக்கும் உங்கள் முன்னிலையில் அந்த இலட்சியத்துக்காக என்னுடைய வாக்கினையும் அளிப்பேன் என்ற உறுதிப்பாட்டுடன் வருகைதந்துள்ளேன்.

அது மட்டுமன்றி, நீங்கள் அனைவரும், தமிழர்களின் இட்சியத்துக்கான எழுச்சியை வெளிப்படுத்தும் வகையில் உங்களது வாக்குகளை எதிர்வரும் 21ஆம் திகதி உங்களுடைய வாக்குகளை அளிக்க வேண்டும் என்றும் நான் வலியுறுத்துகின்றேன்.

கடந்த காலத்தில் எமது விடுதலைக்காக அர்ப்பணிக்கப்பட்ட உயிர்களை நெஞ்சில் நிறுத்தியவனாக , அதற்காக பயணிக்கும் எமது உயிர்களும் எப்போது வேண்டுமானாலும் போகலாம், பணயம் வைக்கப்படலாம் என்பதை நினைவு படுத்தியவனாக, எதிர்கால எமது இலட்சியத்துக்கான பயணத்தில் அர்ப்பணிப்புச் செய்வதற்கு தயாராக உள்ள மக்களுக்கும் நன்றி உடையவனாக தேசமாக எழுச்சி அடைவோம். அதற்காக உழைப்போம் என்று உரைத்து விடைபெறுகின்றேன் என்றார்.

https://www.virakesari.lk/article/193882

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியத்திற்கு துரோகம் இழைக்கும் வடக்கு - கிழக்கு அரசியல் தலைமைகள்: கருணாகரம் எம்.பி குற்றச்சாட்டு

புதிய இணைப்பு

வடக்கு - கிழக்கில் சில தமிழ் அரசியல் தலைவர்கள் சிங்கள பேரினவாத அரசுக்கும் சிங்கள பேரினவாத ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் வாக்குச் சேர்ப்பதாக தெரிவித்துக் கொண்டு தமிழ் தேசியத்திற்கும் தமிழ் மக்களுக்கும் துரோகம் இழைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

 

தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவளிக்கும் வகையிலான பிரசார நடவடிக்கைகள் இன்று(16.09.2024)மட்டக்களப்பு நகரில் முன்னெடுக்கப்பட்டது.

கோவிந்தன் கருணாகரம் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த பிரசார நடவடிக்கைகளில் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார்,இரா.துரைரெட்னம் உட்பட கட்சி ஆதரவாளர்கள்,தமிழ் தேசிய கட்டமைப்பின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

“இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் சனிக்கிழமை 21 ஆம் திகதி இந்த நாட்டில் நடைபெற இருக்கின்றது.

 

உரிமை கோரிக்கை

கடந்த காலங்களில் 8 ஜனாதிபதி தேர்தல்கள் இடம்பெற்று மக்களினால் தெரிவு செய்யப்பட்ட 6 ஜனாதிபதிகளும் இலங்கையின் பூர்விக குடிகளான தமிழ் மக்களை இரண்டாம் தர பிரஜைகளாகவே இன்று வரை நினைத்துக் கொண்டு தங்களது ஆளுமைக்கு கீழ் தங்களது அடிமைகளாக வழிநடத்திக் கொண்டு வருகின்றார்கள்.

தமிழ் தேசியத்திற்கு துரோகம் இழைக்கும் வடக்கு - கிழக்கு அரசியல் தலைமைகள்: கருணாகரம் எம்.பி குற்றச்சாட்டு | Election Campaign Batticaloa General Candidate

 

அந்த வகையில் நீண்ட காலமாக அகிம்சை ஆயுத ரீதியிலே எமது உரிமைகளை பெறுவதற்காக நாங்கள் போராடியாக ஆயிரக்கணக்கான இலட்சக்கணக்கான உயிர்களை இழந்து இருக்கின்றோம்.

பெருமளவான சொத்துக்கள் எங்களுடைய கலை கலாச்சாரங்களை எல்லாம் இழந்து இன்று நாங்கள் நிற்கதியான நிலையில் நடு சந்தியில் நிற்கும் ஒரு நிலை தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது” என்றார்.

செய்தி - குமார்

முதலாம் இணைப்பு

மட்டக்களப்பு கல்லடியில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரியேந்திரனின் கூட்டத்திற்கு ஆதரவு தேடி நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரன் தலைமையில் கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் இரா. துரைரெட்ணம் உட்பட குழுவினர் பிரசார நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த பிரசார நடவடிக்கையானது இன்று (16) மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து விநியோகிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாளை (17) பிற்பகல் 3 மணிக்கு கல்லடியில் உள்ள மீன் பூங்காவிற்கு அருகிலுள்ள மைதானத்தில்  ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரியேந்திரனின் மாபெரும் பிரசார கூட்டம் இடம்பெறவுள்ளது.

துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்

இந்த கூட்டத்திற்கு மக்களை வருமாறு அழைப்பு விடுத்து இந்த பிரசார நடவடிக்கையை இன்று ரேலோ கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கோ.கருணாகரன். ஈ.பிஆர்.எல்.எப் கட்சி முக்கியஸ்தரும் கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினருமான இரா, துரைரெட்ணம், கிழக்கு மாகாண முன்னாள் பிரதி தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா மற்றும் கட்சி ஆதரவாளர்கள் கொண்ட குழுவினர் பொது வேட்பாளரின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து பிரசார நடவடிக்கையினை ஆரம்பித்து வைத்தனர்.

election-campaign-batticaloa-general-candidate-

இதனை தொடர்ந்து மக்களிடம் சங்கு சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கோரியும் நாளை இடம்பெறவுள்ள கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து துண்டுப்பிரசுரங்களை மக்களுக்கு விநியோகித்தனர்.

பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் 

மேலும், தமிழ் மக்கள் சங்குச் சின்னத்துக்கே வாக்களிக்க வேண்டும் என  துணுகாய் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் சுயன்சன் தெரிவித்துள்ளார்.

இகு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், 

https://www.facebook.com/LankasriTv/videos/490666260501955/?ref=embed_video&t=0

Gallery

Gallery

Gallery

https://tamilwin.com/article/election-campaign-batticaloa-general-candidate-1726482719?itm_source=parsely-api

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரனை ஆதரித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மேடையேறி உரையாற்றியுள்ளார்.

large.IMG_7035.jpeg.dbfd42ce7f7a62483b6a

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிழம்பு said:

நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது ரணில், அநுர, சஜீத் போன்றவர்களின் ஆசனத்தை பெறுவதற்கல்ல. சமஷ்டி தீர்வு கோரியும் 75 வருட கால பிரச்சினைக்கான தீர்வுகளை முன்வைத்துமே ஆகும். 

ஆயுதம் ஏந்தி போராடி அழிவுகளைத்தான் கண்டோம். அரியத்தாருடைய சிந்தனை அன்று யாருக்கும் வராமல் போயிற்றே. அப்பொழுதே பொது வேட்பாளரை நிறுத்தி சிங்களத்தை அதிரவிட்டு சர்வதேசத்துக்கும் செய்தி சொல்லியிருக்கலாமே. காலம் கடந்து வந்து சங்கெடுத்து ஊதிக் கொண்டிருக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

மாவை
1. காலை சஜித் ஆதரவு 
2. மாலை பொதுவேட்பாளர் ஆதரவு 
3. இரவு ரணில் ஆதரவு… 😂

தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை என்பவர் மோசமான சந்தர்பவாதி

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

தாம் வாழும் தேசங்களின் முன்னேற்றத்துக்கு வழிசமைக்கும் அரசியல் கட்சிகளையும், அமைப்புகளையும் ஆதரிப்பதில் சரியான முடிவுகளை எடுக்கும் இவர்கள், தாயக அரசியல் என்று வரும் போது, தம் இருப்பை பேணுவதற்கு ஏற்ப, நடைமுறை சாத்தியமற்ற வெற்றுக் கோசங்களுக்கு ஆதரவை வழங்குவது ஒரு முரண் நகை.

இது முழுக்க முழுக்க உண்மை. தங்கள் நாடுகளில் அதன் நலன்களுக்காக தங்கள் நலன்களுக்காக எவ்வளவு புத்திசாலிதனமாக செயல்படுகின்றார்கள் ஆனால் இலங்கை என்று வந்ததும் கோமாளிதனமான தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கும்படி துண்டிவிடுகின்ற செயல்களையே செய்கின்றனர் தாங்கள் விரும்பி பார்க்கின்ற ஒரு சீரியல் தங்கள் விருப்பபடி தான் நடைபெற வேண்டும் என்கின்ற எதோச்சதிகார போக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இது முழுக்க முழுக்க உண்மை. தங்கள் நாடுகளில் அதன் நலன்களுக்காக தங்கள் நலன்களுக்காக எவ்வளவு புத்திசாலிதனமாக செயல்படுகின்றார்கள் ஆனால் இலங்கை என்று வந்ததும் கோமாளிதனமான தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கும்படி துண்டிவிடுகின்ற செயல்களையே செய்கின்றனர் தாங்கள் விரும்பி பார்க்கின்ற ஒரு சீரியல் தங்கள் விருப்பபடி தான் நடைபெற வேண்டும் என்கின்ற எதோச்சதிகார போக்கு.

சரியாக சொன்னீர்கள் புலம் பெயர் நாடுகளில்  தமிழ் தேசியவாதிகள் என தம்மை அழைத்துக் கொள்ளுபவர்கள் ஒரு சீரியலை டெலிவிசனில் பார்ப்பது போலவே தாயக அரசியலை நோக்குகின்றனர். அவர்களுக்கு நாளாந்தம் பொழுது போக ஒரு  Thriling  அரசியல் வேண்டும். யுத்த காலங்களில் அவர்களுக்கு  இருந்த,  அவர்கள் ரசித்த அந்த சுவாரசியம் இப்போது இல்லாமல் தவிக்கிறார்கள் பாவம்.  

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்

0-1-1.jpg?resize=750,375

யாழ். வணிகர் கழகத்தினருடன் அரியநேத்திரன் விசேட சந்திப்பு!

யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தினருக்கும் தமிழ்ப் பொதுவேட்பாளர் அரியநேத்திரனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று கழக காரியாலத்தில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 75 வருடங்களாக தமிழர்கள் தங்கள் உரிமைக்காக பலவகையில் போராடி இலங்கை அரசு தமிழ் மக்களுக்கான எந்த தீர்வையும் இதுவரை வழங்கவில்லை எனவும் பல ஒப்பந்தங்கள், பல வட்டமேசை மாநாடுகள் பல பேச்சுவார்த்தைகள், பல வாக்குறுதிகள் நடைபெற்றும் எதையும் நிறைவேற்றவில்லை எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்திய, இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற ஆகக்குறைந்த அதிகாரமான 13 ஆம் அரசியலமைப்பு திருத்தத்தைக் கூட முழுமையாக நடைமுறைப்படுத்தாது, அனைவரும் ஏமாற்றப்பட்டதாகவும், எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை தீர்வுக்கான புதிய அணுகுமுறையாக அணுகி ஒவ்வொரு தமிழ் மக்களும் சங்குச் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1399716

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாக எழுச்சி கொண்ட மலைநாடு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கு (Ariyanethran) ஆதரவு தெரிவித்து மத்திய மலைநாட்டிலும் பிரசார கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பரப்புரை கூட்டமானது, இன்று (17.09.2024) இடம்பெற்றுள்ளது.

2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் இணைந்து பா. அரியநேத்திரனை தமிழ் பொதுவேட்பாளராக களமிறக்கினர்.

பிரசார கூட்டம்

செப்டெம்பர் 21ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் உட்பட பல்வேறு தரப்பினராலும் தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, சில தமிழ் கட்சிகள், அமைப்புக்கள் மற்றும் தமிழ் தலைவர்கள் பொதுவேட்பாளர் தெரிவுக்கு ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாக எழுச்சி கொண்ட மலைநாடு | Ariyanethran Lobby Meeting At Upcountry

இந்நிலையில், இன்றைய தினம் மத்திய மலைநாட்டில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் அனந்தி சசிதரன் சிறப்பு பேச்சாளராக பங்கேற்றதுடன் ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Gallery

Gallery

Gallery

Gallery

https://tamilwin.com/article/ariyanethran-lobby-meeting-at-upcountry-1726587545#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்

tna.jpg?resize=750,375

தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதாித்து கொழும்பில் பொதுக்கூட்டம்!

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கியுள்ள பா.அரியநேத்திரனை ஆதரித்து கொழும்பில் இன்று பொதுக் கூட்டமொன்று நடத்துவதற்குத் தீர்மானிக்ப்பட்டுள்ளது.

குறித்த பொதுக் கூட்டமானது பம்பலப்பிட்டியில் உள்ள ஹோட்டல் வெஸ்ற்றேனில் மாலை 05.30 மணியளவில் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழரசுக்கட்சியின் கொழும்புக் கிளையின் செயலாளா் மிதிலைச்செல்வி ஸ்ரீபத்மநாதன் தலைமையில் நடைபெறவுள்ள குறித்த கூட்டத்தில் கௌரவ நீதியரசரரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன், சிரேஷ்ட சட்டத்தரணி வி. புவிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp-Image-2024-09-18-at-8.48.22-AM.

https://athavannews.com/2024/1399857

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கிய தண்டனை தான் 2005ஆம் ஆண்டு தேர்தல் புறக்கணிப்பு

தமிழீழ விடுதலைப்புலிகள் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கிய தண்டனை தான் 2005ஆம் ஆண்டு தேர்தலை புறக்கணிக்க செய்தமை என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தினை இரண்டாக பிளவு படுத்தியதற்காக ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்ட தண்டனை தான் அது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் நேற்று  மட்டக்களப்பு – கல்லடி மீனிசை பூங்காவில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேத்திரன் கொண்டுள்ளார்.

சிறப்பு பேச்சாளர்களாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுமான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன் ஆகியோரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரட்ணமும் பங்கேற்றிருந்தனர்.

அத்துடன் தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பின் உறுப்பினர்களான வசந்தராஜா, எஸ்.சிவயோகநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

இன்றைய கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

17266301630.png

17266301631.png

17266301632.png

17266301633.png

17266301634.png

https://thinakkural.lk/article/309483

  • கருத்துக்கள உறவுகள்

மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் தாயக மக்கள் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்களும் மிகத் தெளிவாக உள்ளனர் தமது கருத்தை மக்கள் முன் வைக்கின்றனர். 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

விடுதலைப் புலிகள் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கிய தண்டனை தான் 2005ஆம் ஆண்டு தேர்தல் புறக்கணிப்பு

 

 

இது மிகவும், தூர நோக்கும் இராஜதந்திரமும் மிக்க புலிகளின் செயல்களுள் ஒன்று என்பேன்!

புலிகளின் தண்டனையால் ரணில் படு தோல்வி அடைந்தார். மகிந்த பதவிக்கு வந்து, யுத்தம் மீண்டும் ஆரம்பித்து, முள்ளி வாய்க்காலில் பத்தாயிரக் கணக்கான தமிழர்கள் இறந்தார்கள். சர்வதேச நாடுகள் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து தமிழர் பக்க நியாயத்தை ஏற்றுக் கொண்டு இப்போது தமிழர் பக்கமே நிற்கின்றன. இனப்படுகொலையாளிகளான பக்சாக்கள் ஹேக் நகரில் சிறையில் இருக்கிறார்கள்! ரணில், இன்னும் தோல்வியில் இருந்து மீள இயலாமல் வீழ்ந்து கிடக்கிறார்!

பி.கு: முடிவிலி எண்ணிக்கையான சமாந்தர அகிலங்கள் (parallel universe) இருக்கின்றன, அந்த சமாந்தர அகிலங்களில் ஒன்றில் 👆 இது நடக்கிறது என்ற நம்பிக்கையோடு வாசிக்கவும்!

  • கருத்துக்கள உறவுகள்

Jaffna.jpg?resize=750,375

என்னைப் பற்றி தவறான தகவல்கள் பரப்பப் படலாம்! -பா. அரியநேந்திரன்.

தமிழ் பொது வேட்பாளர் பற்றிய தவறான தகவல்களைப் பரப்ப பல்வேறு தரப்புகள்  திட்டமிட்டு வருவதாகவும், எனவே மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி வேட்பாளர் பா. அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ் . ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களியுங்கள். சிலர் விருப்பு வாக்குகளை ஏனைய வேட்பாளர்களுக்கு அளிக்குமாறு கூறுகின்றார்கள். அவ்வாறு செய்யாது தனியே தமிழ் பொது வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களியுங்கள். அதான் ஒவ்வொரு தமிழ் மக்களின் வரலாற்று கடமையாகும்.

கடந்த 23ஆம் திகதி ‘நமக்காக நாம்’ என்ற பிரச்சார பணியை நாம் யாழ்ப்பாணத்தில் பொலி கண்டியில் ஆரம்பித்து ,எட்டு மாவட்டங்களிலும் பிரச்சார பணிகளை முன்னெடுத்தோம். அதனூடாக மக்கள் மத்தியில் பொது வேட்பாளருக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது.

வேட்பாளர்களின் பிரச்சார நடவடிக்கைகள் இன்றைய தினம் புதன்கிழமை நள்ளிரவுடன் முடிவுக்கு வருகின்றது.

அதன் பின்னர் பொது வேட்பாளர் பற்றி வதந்திகளை பொய்யான தகவல்களை பரப்ப சிலர் திட்டமிட்டுள்ளனர் என எமக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. AI  தொழிநுட்பத்தை பயன்படுத்தி பொய்யான தகவல்களைப்  பரப்பவுள்ளதாக எமக்கு அறியக் கிடைத்துள்ளது.

எனவே மக்கள் விழிப்பாக இருந்து 21ஆம் திகதி காலை வேளைகளிலையே வாக்கு சாவடிகளை சென்று சங்கு சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு பா. அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1400036

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.