Jump to content

யாழில் சஜித்தின் மேடையில் பொது வேட்பாளருக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் சுமந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதானது மக்கள் தங்கள் ஜீவிய உரித்தான வாக்கை அவர்களே குழி தோண்டி புதைக்கின்ற ஒரு செயல் என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பனர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் (Jaffna) இன்றையதினம் (15) இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) தேர்தல் பரப்புரையில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

“ஜனநாயகத்திலே ஒவ்வோரு தருணத்திலும் வாக்களிக்கும் சந்தர்ப்பம் வரும் போது, ஒரு பிரஜைக்கு தான் அளிக்கின்ற அந்த புள்ளடி நாட்டிலே மாற்றத்தையும், விருப்பமான ஆட்சியாளனை தேர்ந்தடுக்கின்ற உரித்தை வழங்குகிறது.

அவ்வாறானதொரு உரித்தை வீணடிப்பதற்கான பல விதமான மோசடிகளிலே ஒன்று தான் இந்த தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயம்”  

தொடர்ந்தும் அவர் கூறுகையில்,

https://ibctamil.com/article/tamil-candidate-presidential-election-sumanthiran-1726410417

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கபடதாரியின்  அரசியல் அஸ்தமனம் இதுவாக
கூட இருக்கலாம் 

Link to comment
Share on other sites

6 minutes ago, Sasi_varnam said:

இந்த கபடதாரியின்  அரசியல் அஸ்தமனம் இதுவாக
கூட இருக்கலாம் 

வடக்கில் 25 வீதத்திற்கு மேல் சஜித்திற்கு கிடைக்கவிருந்த வாக்குகளை குறைத்து ரணிலுக்கு மடைமாற்றும் முயற்சியில் தீயாய் வேலை செய்கின்றவரை இப்படி சொல்லக் கூடாது.

  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, நிழலி said:

வடக்கில் 25 வீதத்திற்கு மேல் சஜித்திற்கு கிடைக்கவிருந்த வாக்குகளை குறைத்து ரணிலுக்கு மடைமாற்றும் முயற்சியில் தீயாய் வேலை செய்கின்றவரை இப்படி சொல்லக் கூடாது.

ரணிலே பெட்டிகளை கொட்டி கொடுத்து சஜித்தை ஆதரிக்க சொல்லி இருப்பார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Sasi_varnam said:

இந்த கபடதாரியின்  அரசியல் அஸ்தமனம் இதுவாக
கூட இருக்கலாம் 

சுமத்திரன்  அரசியலில் பணம் கண்ட  பிணம் லேசிலை அந்த பேய் போகாது ஜோம்பிஸ் பேய் போல தமிழருக்கு தீங்கு விளைவித்தபடி இருக்கும் .

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டமில் பொது வேட்பாளர்  எனும் பூச்சாண்டி வேலை, தமிழ்த் தேசியத்தை பாடையில் ஏற்றும் கடைசிச் செயற்பாடாக இருக்கும். 

😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் சஜித்தின் மேடையில் பொது வேட்பாளருக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் சுமந்திரன்

அரசியல் என்றால் முதலில்  எதிராளியை இழுத்து வைத்துத்தான் பேசுவார்கள். அதற்குப் பிறகுதான் மற்றவை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

டமில் பொது வேட்பாளர்  எனும் பூச்சாண்டி வேலை, தமிழ்த் தேசியத்தை பாடையில் ஏற்றும் கடைசிச் செயற்பாடாக இருக்கும். 

😏

தமிழ் தேசியத்தை எப்போவோ உங்க ஆள் சுமத்திரன் பாடையில் ஏற்றி விட்டார் . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, பெருமாள் said:

ரணிலே பெட்டிகளை கொட்டி கொடுத்து சஜித்தை ஆதரிக்க சொல்லி இருப்பார் .

சுமந்திரனுக்கு 5 கோடி கொடுத்தார்.

சயித்துக்கு ஆதரவு தெரிவித்த பின்பு

இன்னும் 5 கோடி கொடுத்துள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, பெருமாள் said:

தமிழ் தேசியத்தை எப்போவோ உங்க ஆள் சுமத்திரன் பாடையில் ஏற்றி விட்டார் . 

"ஆடத் தெரியாத மூடன், மேடை தோதாக இல்லை" என்கிற கதையாக இருக்கிறது தங்களின் கூற்று. 

😁

நாட்டில்  சிறுபான்மையைச் சேர்ந்த ஒருவர் பிரதமராகும் காலம் நெருங்குகின்றது - நஸீர் அஹமட்

 

வேட்டையாடியவன் யாரோ, தலைப் பங்கு கொண்டுபோபவன் யாரோ,..

உது உந்த முட்டாள் புலம்பெயர்ஸ் களுக்கும,  போலித் டமில் தேசியவாதிகளுக்கும் புரியுமோ ? 

😡

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக் கட்சியின் காலைச் சுற்றிய பாம்பு போன்றவர்தான் சுமந்திரன், கடித்துக் குதறாமல் விடாது. அதற்குப் பாலூற்ற யாழ்களத்திலும் ஆள் உண்டு.😳

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Paanch said:

தமிழரசுக் கட்சியின் காலைச் சுற்றிய பாம்பு போன்றவர்தான் சுமந்திரன், கடித்துக் குதறாமல் விடாது. அதற்குப் பாலூற்ற யாழ்களத்திலும் ஆள் உண்டு.😳

எழுதத் தெரிந்த தங்களுக்கு வாசிக்கவும் தெரிந்திருக்க வேண்டுமே,....

அப்படி வாசிக்கத் தெரியுமென்றால் நசீர் அஹமட் கூறிய மேலேயுள்ள செய்தியை வாசிக்கவும். 

வாசித்தால் மட்டும் போதாது அதைக் கிரகிக்கவும் வேண்டும். 

😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த  சும்மை நோக்கி கம்பவாரிதி ஜெயராஜ் ஒரு வேண்கோளொன்றை 30.11.2018இல் முன்வைத்துத் தெளிவாக எழுதப்பட்ட கடிதமென்றை எதேச்சையாகப் படித்தேன். உண்மையில் அதை இவன்போன்றோர் படித்துப் பார்க்க வேண்டும். மற்றுமொரு கதிர்காமர் தயார். அடுத்த வெளிநாட்டமைச்சர் தயார்.

Edited by nochchi
திருத்தம்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதிர்காமரை ஏன்  கொன்றார்கள்? 

யாராவது, ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்ல முடியுமா? 

(குறிப்பு: லக்ஸ்மன் கதிர்காமரை விபு க்கள் கொல்வதற்கு எந்தக் காரணமும் இல்லை, அவரைக் கொன்றதற்குப் பின்னணியில் இந்தியா  என்பது எனது தனிப்பட்ட கருத்து)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

கதிர்காமரை ஏன்  கொன்றார்கள்? 

யாராவது, ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்ல முடியுமா? 

(குறிப்பு: லக்ஸ்மன் கதிர்காமரை விபு க்கள் கொல்வதற்கு எந்தக் காரணமும் இல்லை, அவரைக் கொன்றதற்குப் பின்னணியில் இந்தியா  என்பது எனது தனிப்பட்ட கருத்து)

நல்லது. இது பற்றி ஏலவே யாழில் அலசப்பட்டுள்ளது. தேடிப்பாருங்கள்! . அல்லது உங்கள் வினாவுக்குத் தனியான ஒரு திரியைத் திறந்து கேட்டால் அறிந்தவர்கள் எழுதுவார்கள். நன்றி!
 இந்த சும் என்ற நரியினது தமிழினச் சீரழிவு அரசியலை முன்னெடுப்பதை கோடிட்டுக்காட்டவே கதிர்காமர்.  

நன்றியுடன் 
நொச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Kapithan said:

கதிர்காமரை ஏன்  கொன்றார்கள்? 

யாராவது, ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்ல முடியுமா? 

(குறிப்பு: லக்ஸ்மன் கதிர்காமரை விபு க்கள் கொல்வதற்கு எந்தக் காரணமும் இல்லை, அவரைக் கொன்றதற்குப் பின்னணியில் இந்தியா  என்பது எனது தனிப்பட்ட கருத்து)

வெளிநாடுகளில் புலிகளைத் தடைசெய்ய காரணமா இருந்தவர் என எண்ணுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, ஈழப்பிரியன் said:

வெளிநாடுகளில் புலிகளைத் தடைசெய்ய காரணமா இருந்தவர் என எண்ணுகிறேன்.

வெளிநாடுகளுக்கு கதிர்காமர் சொல்லித்தான் விபு க்களைத் தடை செய்ய வேண்டிய நிலை இருந்தது என்கிறீர்களா?  

சரி அப்படியே வைத்துக்கொண்டாலும் தற்ப்போதுதான் கதிர்காமரும் இல்லை, விபு க்களும் இல்லையே? தடையை நீக்கலாமே,....

அத்துடன் சீப்பை ஒழித்துவைத்தால் கல்யாணம் நின்றுவிடும் என நினைக்கும் அளவில் விபு க்கள் இருந்தனர் என்கிறீர்களா?   

ஆகவே விபுக்களின் மீதான தடை என்பது கொள்கை ரீதியான முடிவு என்பதாகவே நோக்கப்பட வேண்டும். 

கதிர்காமரைக் கொல்வதால் யாருக்கு இலாபம்?  அவர்கள்தான் கதிர்காமரின் படுகொலைக்குப் பின்னால் இருப்பவர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

நல்லது. இது பற்றி ஏலவே யாழில் அலசப்பட்டுள்ளது. தேடிப்பாருங்கள்! . அல்லது உங்கள் வினாவுக்குத் தனியான ஒரு திரியைத் திறந்து கேட்டால் அறிந்தவர்கள் எழுதுவார்கள். நன்றி!
 இந்த சும் என்ற நரியினது தமிழினச் சீரழிவு அரசியலை முன்னெடுப்பதை கோடிட்டுக்காட்டவே கதிர்காமர்.  

நன்றியுடன் 
நொச்சி.

உங்களுக்கு ஆடத் தெரியவில்லை. அதனால் சுமந்திரனை வசை பாடுகிறீர்கள். சுமந்திரன் இல்லாத வெற்றிடம் ஒன்று உருவாகும்போது பழிபோடுவதற்காக நீங்கள் நாளை இன்னொருவரைத் தேடுவீர்கள். 

இனப்பிரச்சனைக்கு நடைமுறையில் சாத்தியமான வகையில்  முடிவு காணப்பட  வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தும் ஒரு இலங்கைத் தமிழ் அரசியல்வாதியை உங்களால் அடையாளம் காட்ட முடியுமா? 

யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறிய சிறீதரன் TNA யின் தலைவர். அவர் எங்களுக்கு தமிழீழம் புடிச்சுத் தருவார் என்று நம்பச் சொல்கிறீர்கள்,.... 

இலங்கையின் அமைதிக்காக உழைக்கும் எல்லோருமே கொல்லப்படுவார்கள். இதுதான் உண்மை. 

அது அனுர குமாரவாகவும் இருக்கலாம் அல்லது சஜித் பிறேமதாசாவாகக் கூட இருக்கலாம். 

இலங்கையில் அமைதியை விரும்பும் எல்லோருக்கும் மரணம் மட்டும்தான் பரிசு. 

 

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

சரி அப்படியே வைத்துக்கொண்டாலும் தற்ப்போதுதான் கதிர்காமரும் இல்லை, விபு க்களும் இல்லையே? தடையை நீக்கலாமே,..

தடையை நீக்கினால் சின்னவீடு கோபித்துக் கொள்ளாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா..... ஒவ்வொரு  ஜனாதிபதி தேர்தலின் போதும் இவ்வாறுதான் கூவிக்கூவி மக்களின்  வாக்கை வாங்கி கொட்டினார், ஏதாவது சொன்னதை மக்களுக்கு பெற்றுக்கொடுத்தாரா? இதோ இனப்பிரச்சினைக்கான தீர்வு வரையப்பட்டாயிற்று என்றாரே, அதுக்கு என்னாயிற்று? ரணில் பிரச்சனையை தீர்ப்பதாக உறுதியளித்துள்ளார் என்றாரே, அது எங்கே போனது? ஏதோ தமிழர் அயல்நாட்டுக்கு வாக்களிப்பதுபோல் துள்ளுகிறார். வாக்கு என்பது அவரவர் உரிமை, அதை அவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம், இவர் யார் அதை தடுப்பது? முதலில் தமிழரசுக்கட்சியை ஒழுங்காக இயங்க விடவேண்டும். இவர் தன்னிச்சினையாக, தான்தோன்றித்தனமாக கருத்துக்களை வெளியிடும்போது இவருக்கெதிராக நடவடிக்கை எடுத்து, கட்சியிலிருந்து நீக்கியிருந்தால் இன்று தமிழரசுக்கட்சி இந்தளவுக்கு சிதறுண்டிருக்காது. யோசிக்க தெரியாத ஆள். எழுபத்தைந்து ஆண்டுகளாக சிங்களத்துக்கு வாக்களித்து என்ன கண்டோம்? வாக்கு வாங்கி கதிரை ஏறும்வரை ஒன்று சொல்வார்கள், அதன்பின் வந்தேறு குடிகள், உரிமை ஏதும் கோர முடியாது என்கிறார்கள். சரி... வாக்கு வாங்கி ஏமாற்றியது போதும், இனிமேல் சொன்னதை நிறைவேற்றியபின் வாக்கு வழங்கப்படும் மறு தேர்தலில். எந்த சிங்கள கட்சிக்கு வாக்களித்தாலும் நமக்கு ஏதும் தரப்போவதில்லை என்பது தெரியும், ஆனால் நாம் ஏதோ ஒன்றுக்குத்தான் வாக்களிக்க முடியும் என்பதாலேயே இந்த நாடகம் தொடருது. நாங்கள் ஜனாதிபதியாக வரப்போவதில்லை, ஆனால் இனியும் சிங்களத்துக்கு எங்கள் வாக்கு இல்லை, நாங்களும் ஒரு தேசிய இனம், எங்களுக்கும் உரிமை, வேணவா உண்டு, எமக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உரிமை உண்டு என்பதை தெளிவு படுத்துவதே இதன் நோக்கம். இது வருங்காலத்திலும் தொடர வேண்டும், இது முதல் நடவடிக்கை!

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொந்தப் பெயரில் பத்திரிகை வேறு நடத்த வெளிகிட்டிருக்கிறார். சுமத்திரனின் கோமாளிக் கூத்துகள் தொடர்கின்றன.இந்த ஜனாதிபதித் தேத்தலில் தமிழ்மக்கள் அவருக்கு பாடம் புகட்ட வேண்டும். உதயன் .காலைக்கதிர் எல்லாம் கையை விரித்து விட்டார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

தடையை நீக்கினால் சின்னவீடு கோபித்துக் கொள்ளாதா?

அதை சின்ன வீட்டிடம்தான் கேட்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:
11 hours ago, ஈழப்பிரியன் said:

தடையை நீக்கினால் சின்னவீடு கோபித்துக் கொள்ளாதா?

அதை சின்ன வீட்டிடம்தான் கேட்க வேண்டும்

என்றுமில்லாத அளவுக்கு சின்னவீடு அமெரிக்கா சீனா இந்தியாவுக்காக ஒண்ணொண்ணா கழட்டிக் கொண்டிருக்குது.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஆலோசனைகளுக்கு. நன்றி    எல்லாமே தெரிந்த விடயங்கள் தான்   ஏதாவது புதிதாக சொல்லுங்கள்     அதிபர்  புட்டினின்.  ஆலோசனைகள் தான் எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது 🙏🤣.  அது சரி கத்தரிக்கோலை   எடுத்துக் கொண்டு போய்   கொஞ்சம் தூரத்தில் நின்று கொடுங்கள்     கவனம்   பிறகு  இருப்பதும் இல்லாமல் போய்விடும்   
    • நவீன கவிதை / "விடுதலையின் வித்து"     "சரியான நேரத்தில், சரியான மண்ணில் சரியான விதை போட்டால், உரம் இட்டால் கிருமி நாசினி தெளித்தால், மரம் வளரும் பூ பூத்து பயன் தரும்! ஆனால் வித்து மண்ணோடு மண்ணாக போய்விடும்!!"     "நாம் வாழ்ந்தோம் இருந்தோம் என்று இல்லாமல், எங்கு வாழ்கிறோம், எப்படி இருந்தோம், எப்படி வாழ்கிறோம் சற்று சிந்தி உன் வரலாறு புரியும் உன் பெருமை தெரியும் உன் இன்றைய வாழ்க்கைக்கான விடுதலையின் வித்து அறிவாய்!"     "உலகத்தை தூக்கத்திலிருந்து ஒரு வித்து கிழித்தெறிந்தது அனைத்து உண்மை இதயங்களிலும் இரத்தம் சிந்தியது ஒருமுறை போராடி தெருவுக்கு கொண்டு சென்றான் விதையை விதைத்தான் திணை விதைத்தவன் திணை அறுப்பான் இவன் தான் மாண்டு தன் இனத்துக்கு மனிதனுக்கு தினை கொடுத்தான்! விடுதலையின் வித்தாக வீழ்ந்த இவன்!"     "ஒருமுறை நீங்கள் கொடுக்க வேண்டிய அனைத்தையும் கொடுத்தீர்கள், பெருமையுடன் அனைத்தையும் கொடுத்தீர்கள் அது தேர்தல் காலம்! ஒருமுறை எடுக்கக்கூடிய அனைத்தையும் நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள் அது அரசு அமைத்த காலம்!! அச்சமும் வெறுப்பும் எங்கும் கூத்தாடுகிறது! விதை விதைக்க விடுதலையின் வித்தாக இனி யார் வருவார்?"     "நாம் வாழ்ந்தோம் விதை விதைத்தோம் அது கனவாகி விட்டது நாங்கள் முடிக்கவில்லை என்பதை நீங்கள் காண்பீர்கள் இன்னும் சிலர் எரிகின்றனர் இன்னும் சில இதயங்களில் இரத்தம் வழிகிறது!!"     "நான் இந்த பூமிக்கு ஏக்கத்துடன் வந்தேன் ஏன் எதுக்கு, என்ன தேவை என்று தெரியாது? என்னைத் தாண்டிய ஒரு இணைப்புக்காக பசியோடு வருகிறேன் ஆன்மீக அம்சங்களுக்காக திறமையான வாழ்க்கை முறைக்காக விடுதலை உணவுகளுக்காக துக்கத்திலும் குற்ற உணர்ச்சியிலும் உள்ள ஒரு நாட்டுக்கு வருகிறேன் இழந்ததும் திருடப்பட்டதும் மறுக்கப்பட்டதும் அனைத்திற்கும் விதையாக விடுதலையின் வித்து ஆக வருகிறேன்!"     "சுரண்டப்படும் தொழிலாளர்களுக்கு விதையாக சுரண்டி வாழ்க்கை வாழ்பவருக்கு அம்பாக உடைந்த இணைப்புகளுக்கு பூணாக உங்கள் இதயத் துடிப்பை என்னால் கேட்க முடிகிறது உங்கள் வேதனையும் உங்கள் கண்ணீரும் என்னை மண்ணுக்கு இழுக்கிறது விடுதலையின் வித்தாக!!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]          
    • விசுகு… நிழலி வந்திட்டார். குட் நைற். நாளை சந்திப்போம். 🤗
    • நாங்கள் வித்தியாசமாக கதைக்கவில்லையே…  😂 கந்தையா அண்ணைக்கு, நட்பு ரீதியிலை அட்வைஸ் தானே பண்ணினாங்கள். 🤣
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.