Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா: டிரம்ப்பை கொல்ல மீண்டும் முயற்சி...? துப்பாக்கி சூட்டால் பரபரப்பு

spacer.png

 

சர்வதேச கோல்ப் கிளப்புக்கு சென்று, டிரம்ப் கோல்ப் விளையாடி கொண்டு இருந்தபோது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.

 

வாஷிங்டன் டி.சி. அமெரிக்கா

அமெரிக்காவில் வருகிற நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் குடியரசு கட்சியின் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு உள்ளார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

https://www.dailythanthi.com/News/World/usa-suspects-shoot-at-trumps-golf-course-1122421

 

  • Replies 56
  • Views 3.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    இந்தப் பாடல் நல்லா இருக்குது...... கமலா ஹாரீஸின் ரியாக்‌ஷன்..........🤣.         

  • இவர் என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் இந்த முறை வெல்ல முடியாது. என் ஒரேயொரு வாக்கு எங்கள் அக்காவுக்குத்தான் 🤪

  • புலவர்
    புலவர்

    2 முறை முயற்சி ஆனால் ட்ரம்ப் எந்தவித பாரதூரமான விளைவுகளும் இன்றி தப்பியிருக்கிறார். னகுறி தப்பியதா அல்லது ட்ரம்புக்கான அனுதாப அலையை உருவாக்குவதற்கான நாடகமா?கமலா அமெரிக்க ஜனாதிபதி ஆவதை ட்ரம்பால் தடுக்க

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

சர்வதேச கோல்ப் கிளப்புக்கு சென்று, டிரம்ப் கோல்ப் விளையாடி கொண்டு இருந்தபோது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.

மனுசனை ஒரு வழி பண்ணாமல் விடமாட்டாங்கள் போலே

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கத்திற்கும் கமலா அக்காவிற்கும் இடையிலான போட்டியில் சிங்கத்தின் நிலையை மேலும் ஸ்திரப்படுத்துவதற்கு இந்த கொலை முயற்சி உதவப்போகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kavi arunasalam said:

மனுசனை ஒரு வழி பண்ணாமல் விடமாட்டாங்கள் போலே

தனக்கு தானே செய்கிறாரோ?

விவாதத்திலும் தோல்வியாக போய்விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

ட்ரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு!

ட்ரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு!

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி டொனாலட் ட்ரம்ப் மீது, மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நிலையில், குடியரசுக் கட்சி சார்பாக வேட்பாளராக களமிறங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நேற்று, புளோரிடா மாநிலம், மேற்கு பாம் பீச் பகுதியில் அமைந்துள்ள டிரம்ப் சர்வதேச கோல்ப் கிளப்புக்கு சென்று, கோல்ப் விளையாடி கொண்டு இருந்துள்ளார்.

இதன்போது அவரை இலக்குவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. எனினும், இதனால் அவருக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தையடுத்து சந்தேக நபரான 53 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அவரிடமிருந்து ஏ.கே. 47 துப்பாக்கி, ஒரு கோ ப்ரோ கமெரா உள்ளிட்ட சில பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பாம் பீச் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி  டிரம்ப் மீதான கொலை முயற்சி என சந்தேகிக்கப்படும் இந்த துப்பாக்கி சூடு குறித்து மத்திய சட்ட அமலாக்கப் பிரிவினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் ட்ரம்ப் மற்றும் அவரைச் சூழவுள்ளனர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சட்ட அமலாக்கப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஏற்கனவே, கடந்த ஜுலை மாதம் பென்சில்வேனியாவின் பட்லர் பகுதியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பரப்புரையில் பங்கேற்றிருந்த ட்ரம்ப் மீது, துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதன்போது துப்பாக்கி குண்டு அவருடைய வலது காதின் மேல் பகுதியை துளைத்து சென்றதோடு, இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அங்கு ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையிலேயே மீண்டும் ட்ரம்ப்பை இலக்குவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்களின் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பாக கேள்வியை எழுப்புவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

https://athavannews.com/2024/1399550

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் டிரம்பை கொல்ல மீண்டும் முயற்சியா? துப்பாக்கியால் சுட்ட நபர் பிடிபட்டார்

அமெரிக்கா, டிரம்பை கொல்ல முயற்சி

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீது தாக்குதல் நடத்த முயற்சி நடந்துள்ளது. கட்டுரை தகவல்
  • எழுதியவர், மெடலின் ஹால்பெர்ட் மற்றும் லாரன்ஸ் பீட்டர்
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 16 செப்டெம்பர் 2024, 02:56 GMT
    புதுப்பிக்கப்பட்டது 25 நிமிடங்களுக்கு முன்னர்

அமெரிக்காவின் முன்னாள் அதிபரும், தற்போதைய அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் மீது தாக்குதல் நடத்த மீண்டும் முயற்சி நடந்துள்ளது. புளோரிடாவில் உள்ள அவரது கோல்ப் மைதானத்தில் நடந்த தாக்குதல் முயற்சியில் இருந்து தப்பி அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும், சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

புதரில் மறைந்திருந்தபடி டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக அமெரிக்க ரகசிய சேவைப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நேரத்தில் டிரம்ப் சுமார் 275 முதல் 455 மீட்டர் தொலைவில் இருந்ததாக எஃப்.பி.ஐ. கூறுகிறது.

ஏகே-47 துப்பாக்கி, ஸ்கோப், கோ-புரோ கேமரா மற்றும் 2 பைகள் அந்த இடத்தில் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டன.

 
 

ரகசிய சேவை ஏஜெண்டுகள் தன்னை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதால், சந்தேகத்திற்குரிய அந்த நபர் புதரை விட்டு ஓடி, கருப்பு நிற நிசான் காரில் ஏறித் தப்பிச் சென்றுவிட்டதாக அதனை நேரில் பார்த்த சாட்சி கூறியுள்ளார். அத்துடன், கார் மற்றும் அதன் நம்பர் பிளேட்டை அவர் புகைப்படமும் எடுத்துள்ளார். பின்னர் அந்த கார் மார்ட்டின் கவுண்டியில் தடுத்து நிறுத்தப்பட்டது.

"மார்ட்டின் கவுண்டி ஷெரீஃப் அலுவலகத்தை தொடர்பு கொண்டு அவர்கள் உஷாராக இருக்குமாறு கேட்டுக் கொண்டோம். அவர்கள் அந்த கார் இருந்த இடத்தை கண்டுபிடித்து அந்த நபரை பிடித்தனர்" என்று பாம் பீச் கவுண்டி ஷெரீஃப் ரிக் பிராட்ஷா தெரிவித்தார்.

"அதன் பிறகு சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்றோம். புதரில் இருந்து ஓடி, காருக்குள் ஏறிய நபர் அவர்தான் என்று அந்த சாட்சி உறுதிப்படுத்தினார்" என்று ரிக் பிராட்ஷா கூறினார்.

 
அமெரிக்கா, டிரம்பை கொல்ல முயற்சி

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு, புதரில் ஆயுததாரி மறைந்திருந்த இடத்தில் ஏகே-47 துப்பாக்கி, ஸ்கோப், கோ-புரோ கேமரா மற்றும் 2 பைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

டிரம்ப் இல்லத்திற்கு கூடுதல் பாதுகாப்பு

டிரம்ப் தான் பாதுகாப்பாகவும், நலமாகவும் இருப்பதாக இமெயில் மூலம் தனது ஆதரவாளர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

"எதுவும் என் வேகத்தை மட்டுப்படுத்த முடியாது. நான் ஒருபோதும் சரணடைய மாட்டேன்" என்று அவர் கூறியுள்ளார்.

பென்சில்வேனியாவில் கூட்டம் ஒன்றில் டிரம்பை ஒருவர் துப்பாக்கியால் சுட முயன்றதற்கு 2 மாதங்கள் கழித்து மீண்டும் ஒரு தாக்குதல் முயற்சி சம்பவம் நடந்துள்ளது.

டிரம்பை தாக்க முயற்சி நடந்தது பற்றி விசாரித்து வருவதாக ரகசிய சேவைப் பிரிவு தனது எக்ஸ் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.

"கோல்ப் மைதானத்தில் இருந்த ரகசிய சேவைப் பிரிவு ஏஜெண்ட் சிறப்பான பணி செய்துள்ளார்" என்று ஷெரீஃப் பிராட்ஷா தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, புளோரிடாவில் உள்ள டிரம்பின் மார்-அ-லாகோ இல்லத்தைச் சுற்றிலும் உள்ள சாலை மற்றும் நீர் நிலைகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேற்கு பாம் பீச்சில் உள்ள கோல்ஃப் மைதானத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அமெரிக்கா, டிரம்பை கொல்ல முயற்சி

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, டிரம்பின் மார்-அ-லாகோ இல்லத்தைச் சுற்றிலும் உள்ள சாலை மற்றும் நீர் நிலைகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிடிபட்ட நபர் யார்?

பிடிபட்ட நபரின் பெயர் ரியான் வெஸ்லி ரூத், 58 வயதான அவர் ஹவாயைச் சேர்ந்தவர் என்று பெயர் கூற விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சமூக ஊடகங்களில் கணக்குடன் அந்த பெயர் பொருந்திப் போவதை பிபிசி வெரிஃபை கண்டறிந்துள்ளது. ரஷ்யாவுக்கு எதிராக போரிட வெளிநாட்டு வீரர்கள் யுக்ரேனுக்கு செல்ல வேண்டும் என்று ரூத் அழைப்பு விடுப்பதை அந்த சமூக ஊடகக் கணக்கு காட்டுகிறது.

 
அமெரிக்கா, டிரம்பை கொல்ல முயற்சி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கமலா ஹாரிஸ்

கமலா ஹாரிஸ் கருத்து

டிரம்ப் மீதான தாக்குதல் முயற்சி சம்பவம் குறித்து அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகிய இருவரிடமும் விவரிக்கப்பட்டிருப்பதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

"டிரம்ப் பாதுகாப்பாக இருக்கிறார் என்ற செய்தியை அறிந்து அவர்கள் நிம்மதியடைந்தனர். இதுகுறித்த விவரங்கள் உடனுக்குடன் குழுவினரால் அவர்களுக்கு தெரியப்படுத்தப்படும்" என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

டிரம்ப் மீதான தாக்குதல் முயற்சி பற்றி தனக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், டிரம்ப் காயமின்றி தப்பியது குறித்து மகிழ்ச்சி அடைவதாகவும் கமலா ஹாரிஸ் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் வன்முறைக்கு இடமே இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 
அமெரிக்கா, டிரம்பை கொல்ல முயற்சி

பட மூலாதாரம்,AFP

படக்குறிப்பு, ஜூலை 13-ஆம் தேதியன்று பென்சில்வேனியாவின் பட்லர் நகரில் நடந்த கொலை முயற்சியின் போது டிரம்ப் காயமடைந்தார்.

பட்லர் நகரில் என்ன நடந்தது?

கடந்த ஜூலை 13-ஆம் தேதியன்று பென்சில்வேனியாவின் பட்லர் நகரில் நடந்த கொலை முயற்சியின் போது டிரம்ப் காயமடைந்தார். அருகில் இருந்த கட்டடத்தின் மேற்கூரையில் இருந்தபடி தாமஸ் மேத்யூ குரூக்ஸ் என்ற நபர் ஏஆர்15 துப்பாக்கியைப் பயன்படுத்தி டிரம்பை சுட்டார்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் பார்வையாளர் ஒருவர் உயிரிழந்தார். துப்பாக்கிச் சூடு நடத்திய 20 வயதான குரூக்சும் ரகசிய சேவை படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். டிரம்பை 200 மீட்டர் அளவுக்கு நெருங்கி அவரால் துப்பாக்கிச் சூடு நடத்த முயன்றது எப்படி என்று ரகசிய சேவைப் பிரிவினர் மீது அப்போதே சர்ச்சைகள் எழுந்தன. அடுத்த இரண்டே வாரங்களில் ரகசிய சேவைப் பிரிவு இயக்குநர் கிம்பர்லி பதவியை ராஜினாமா செய்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

தனக்கு தானே செய்கிறாரோ?

விவாதத்திலும் தோல்வியாக போய்விட்டது.

பிடிபட்ட ஆள் பைடன் கமலா அக்காவின் அடிப்பொடி போல உள்ளதே. பைடன் இடதுசாரிகளுக்கு தோற்கப்போகின்றோம் என்று பயம் வந்து விட்டதோ?

  • கருத்துக்கள உறவுகள்

இவர் என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் இந்த முறை வெல்ல முடியாது. என் ஒரேயொரு வாக்கு எங்கள் அக்காவுக்குத்தான் 🤪

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, theeya said:

இவர் என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் இந்த முறை வெல்ல முடியாது. என் ஒரேயொரு வாக்கு எங்கள் அக்காவுக்குத்தான் 🤪

தங்கச்சிக்கு உலகம் முழுக்க சண்டை சச்சரவுகள் எண்டால் கொள்ளை விருப்பம் போல 🤣

  • கருத்துக்கள உறவுகள்

டிரம்பை கொலை செய்ய முயற்சித்தவர் உக்ரைன் ஆதரவு செயற்பாட்டாளர் – அமெரிக்க ஊடகங்கள் தகவல்

16 SEP, 2024 | 11:47 AM
image

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினை கொலை செய்ய முயற்சித்தவர் உக்ரைன் ஆதரவு செயற்பட்டாளர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரயான் வெஸ்லே ரூத் என்ற 58 வயது நபரே டிரம்பினை கொல்வதற்கு திட்டமிட்டார் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ZmEZgnSu.jpg

உக்ரைனின் சார்பில் போரிடுவதற்காக வெளிநாட்டவர்களை சேர்க்க முயன்றார் உக்ரைனிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

புளோரிடாவின் கோல்ப் மைதானத்தில் டிரம்பினை கொலை செய்வதற்கு இந்த நபர் முயற்சிசெய்தார் என எவ்பி ஐ அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மைதானத்தில் புதர்கள் காணப்பட்ட பகுதிக்குள் ஏகே 47 துப்பாக்கி தெரிவதை பார்த்த இரகசிய சேவை பிரிவினர் உடனடியாக துப்பாக்கிபிரயோகத்தில் ஈடுபட்டனர்.

சந்தேகநபர் காரில் தப்பியோடினார் அவரை துரத்திச்சென்ற இரகசிய சேவை பிரிவினர் 38 மைல்களிற்கு அப்பால் அவரை கைதுசெய்தனர்.

https://www.virakesari.lk/article/193831

  • கருத்துக்கள உறவுகள்

எவர் என்ன சொன்னாலும் அடுத்த அதிபர் நம்மாள் தான்। 

ட்ரம்ப் மகத்தாட்ட ஜயவேவா!

மென்ன பபோ அப்பி எனவா!

  • கருத்துக்கள உறவுகள்

2 முறை முயற்சி ஆனால் ட்ரம்ப் எந்தவித பாரதூரமான விளைவுகளும் இன்றி தப்பியிருக்கிறார். னகுறி தப்பியதா அல்லது ட்ரம்புக்கான அனுதாப அலையை உருவாக்குவதற்கான நாடகமா?கமலா அமெரிக்க ஜனாதிபதி ஆவதை ட்ரம்பால் தடுக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, புலவர் said:

2 முறை முயற்சி ஆனால் ட்ரம்ப் எந்தவித பாரதூரமான விளைவுகளும் இன்றி தப்பியிருக்கிறார். னகுறி தப்பியதா அல்லது ட்ரம்புக்கான அனுதாப அலையை உருவாக்குவதற்கான நாடகமா?கமலா அமெரிக்க ஜனாதிபதி ஆவதை ட்ரம்பால் தடுக்க முடியாது.

உண்மை 

2 hours ago, குமாரசாமி said:

தங்கச்சிக்கு உலகம் முழுக்க சண்டை சச்சரவுகள் எண்டால் கொள்ளை விருப்பம் போல 🤣

15 வருடமாய் யாழ் காலத்தில் வேட்பாளராய் இருக்கிற என்னைத் தங்கச்சியோ தம்பியோ எண்டு தெரியேல்லை, இதுக்குள்ள உலக நடப்பு வேற 🤪

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, புலவர் said:

2 முறை முயற்சி ஆனால் ட்ரம்ப் எந்தவித பாரதூரமான விளைவுகளும் இன்றி தப்பியிருக்கிறார். னகுறி தப்பியதா அல்லது ட்ரம்புக்கான அனுதாப அலையை உருவாக்குவதற்கான நாடகமா?கமலா அமெரிக்க ஜனாதிபதி ஆவதை ட்ரம்பால் தடுக்க முடியாது.

உண்மையில் தனக்கான அனுதாப அலையை உருவாக்க படாத பாடு படுகிறார் .

ஒரு பக்கம் கமால வென்றால் பக்கத்து நாட்டுகாரங்களின் அலப்பறை தாங்க முடியாது .

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நியாயம் said:

பிடிபட்ட ஆள் பைடன் கமலா அக்காவின் அடிப்பொடி போல உள்ளதே. பைடன் இடதுசாரிகளுக்கு தோற்கப்போகின்றோம் என்று பயம் வந்து விட்டதோ?

ரம்புக்கு தோல்வியே பிடிக்காது

அதுவும் பெண்களிடம் தோற்பது அறவே பிடிக்காக நிலையில்

எந்த ஒரு கட்டத்துக்கும் கீழிறங்கி வருவார்.

கடந்த தேர்தல் முடிந்து தை 6ம் திகதி கறைபடிந்த கதைகளை பார்த்திருப்பீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Kavi arunasalam said:

மனுசனை ஒரு வழி பண்ணாமல் விடமாட்டாங்கள் போலே

பூனையை கொன்று சாப்பிடுகின்றார்கள், நாயைக் கொன்று சாப்பிடுகின்றார்கள் என்று ட்ரம்ப் அவருடைய எழுத்தாளர்கள் எழுதிக் கொடுக்காததை தன் இஷ்டப்படி மேடையில் பேசி இருக்கக்கூடாது. இப்ப அந்தப் பக்கத்தாலேயும் விசாரணையை நடத்த வேண்டியிருக்கின்றது. எவ்வளவு இனவாதம், மதவாதம், சதிகள் என்று எல்லா வாதங்களையும் பேசலாம், ஆனால் நாய், பூனையை அமெரிக்காவில் தொடக்கூடாது...........

ஒரு சிங்கம் பூனையால் தோற்ற புதுக்கதை உருவாகுது போல.......... 

  • கருத்துக்கள உறவுகள்

டிரம்பை கொல்ல முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் நபர் யார்? அவர் பின்னணி என்ன?

டிரம்பை கொல்ல முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் நபர் யார்

பட மூலாதாரம்,AFP

படக்குறிப்பு, ரியான் வெஸ்லி ரூத் கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஆன் பட்லர்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 24 நிமிடங்களுக்கு முன்னர்

அமெரிக்காவின் முன்னாள் அதிபரும், அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் மீது தாக்குதல் நடத்த மீண்டும் முயற்சி நடந்துள்ளது.

புளோரிடாவில் நடந்த இந்த கொலை முயற்சி சம்பவத்தைத் தொடர்ந்து, ரியான் வெஸ்லி ரூத் என்பவரை சந்தேகத்துக்குரிய நபராக அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன.

புளோரிடாவில் உள்ள கோல்ப் மைதானத்தில் நடந்த தாக்குதல் முயற்சியில் இருந்து டிரம்ப் தப்பிவிட்டார் என்றும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் சந்தேகிக்கப்படும் 58 வயதான ரியான் வெஸ்லி வட கரோலினாவைச் சேர்ந்தவர். அவரது சொத்து பதிவுகளின்படி, அவர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை வட கரோலினாவில் கழித்தார். ஆனால், அவர் சமீபத்தில் ஹவாயில் வசித்து வந்தார்.

 

ரியான் வெஸ்லியின் சில செயல்பாடு, அவரது அரசியல் நிலைப்பாட்டின் கலவையான பிம்பத்தை பிரதிபலிக்கிறது.

யுக்ரேன் ரஷ்யா போரில் தீவிர யுக்ரேனின் ஆதரவு நிலைப்பாட்டையும் அவர் கொண்டிருப்பதாக தெரிகிறது. அவர் பல சட்ட சிக்கல்களையும் எதிர்கொண்டுள்ளார்.

மேலும் அவரைப் பற்றி நமக்கு கிடைத்த சில தகவல்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.

 
கொலை முயற்சி நடந்த இடத்தில் ரெளத் ஆயுதம் மற்றும் ஸ்கோப்பை விட்டுச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

பட மூலாதாரம்,PALM BEACH COUNTY SHERIFF'S OFFICE/REUTERS

படக்குறிப்பு, புதரில் ரூத் மறைந்திருந்த இடத்தில் ஏகே-47 துப்பாக்கி, ஸ்கோப், கோ-புரோ கேமரா மற்றும் 2 பைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

ரியான் வெஸ்லி ரூத் என்ன செய்தார்?

ஞாயிற்றுக்கிழமை அன்று புளோரிடாவில் உள்ள டிரம்ப்பின் சர்வதேச கோல்ஃப் மைதானத்திற்கு ரூத், ஏகே 47 ரக துப்பாக்கியுடன் சென்றதாக சந்தேகிக்கப்படுகிறது.

அந்த நபர் ஒரு புதரில் மறைந்திருந்ததாக எஃப்.பி.ஐ(FBI) சந்தேகிக்கிறது. அந்த புதரில் இருந்து ஆயுதம், ஸ்கோப்,கோ-புரோ கேமரா மற்றும் 2 பைகள் ஆகியவற்றை எஃப்.பி.ஐ மீட்டுள்ளது.

ரூத் தனது காரில் தப்பிச் சென்ற போதிலும், அவர் ஓட்டிச் சென்ற கருப்பு நிற நிசான் காரை ஒரு நபர் புகைப்படம் எடுத்தார். அவர்தான் இந்த விவகாரத்தின் முக்கிய சாட்சி.

அந்த காரின் அடையாளம் வெளியிடப்பட்டு அவசர எச்சரிக்கை விடப்பட்டது.

கோல்ஃப் மைதானத்தில் துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட 45 நிமிடங்களுக்குப் பிறகு இரண்டு அதிகாரிகள் ரூத்தின் வாகனத்தை பின்தொடர்ந்ததாக பாம் பீச் கவுண்டியின் காவல் உயர் அதிகாரி ரிக் பிராட்ஷா கூறினார்.

அந்த நபர் இறுதியில் இன்டர்ஸ்டேட் 95 சாலையில் நிறுத்தப்பட்டு, காவலில் வைக்கப்பட்டார்.

 

ரூத்தின் சமூக ஊடகங்கள் வெளிப்படுத்துவது என்ன?

பிபிசி வெரிஃபை ரூத்தின் பெயருடன் பொருந்தும் சமூக ஊடக கணக்குகளை கண்டறிந்தது.

ரஷ்யாவுக்கு எதிராக போரிட வெளிநாட்டு வீரர்கள் யுக்ரேனுக்கு செல்ல வேண்டும் என்று ரூத் அழைப்பு விடுப்பதை அந்த சமூக ஊடகக் கணக்கு காட்டுகிறது.

"உங்கள் குழந்தைகள், குடும்பம் மற்றும் ஜனநாயகத்திற்காக நான் ஹவாயில் இருந்து யுக்ரேனுக்கு வருகிறேன். உங்களுக்காக நான் உயிரையும் கொடுப்பேன்." என்று எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு கூறுகிறது என்று பிபிசியின் அமெரிக்க கூட்டு செய்தி நிறுவனமான சிபிஎஸ் கூறுகிறது.

அவரது சமூக ஊடக கணக்குகளில் பாலத்தீன ஆதரவு, தாய்வான் ஆதரவு மற்றும் சீனாவுக்கு எதிரான பதிவுகளும் உள்ளன. சீன "உயிரியல் போர்" பற்றிய குற்றச்சாட்டுகள் மற்றும் கோவிட்-19 வைரஸை "தாக்குதல்" என்று குறிப்பிடும் விமர்சனமும் உள்ளது.

ஒரு கட்டத்தில் அதிபர் டிரம்ப்பை ஆதரித்த ரூத், "2016-ஆம் ஆண்டில் குடியரசுக் கட்சிக்கு நான் ஆதரவளித்தேன்" என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆனால் அவர் நடவடிக்கைகள் "மோசமடைந்து, வலுவிழந்தது" "நீங்கள் இல்லை என்றால் நான் மகிழ்ச்சியடைவேன்" என்று அவர் பதிவிட்டதாக சிபிஎஸ் தெரிவித்துள்ளது.

ஜூலை மாதம் டிரம்பின் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதும் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். பென்சில்வேனியாவில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்குமாறு அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரை ரூத் வலியுறுத்தி பதிவிட்டுள்ளார்.

 
டிரம்பை கொல்ல முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் நபர் யார்

பட மூலாதாரம்,MARTIN COUNTY SHERIFF'S OFFICE

படக்குறிப்பு, காவல்துறையால் வெளியிடப்பட்ட புகைப்படம்

ரூத்துக்கும் யுக்ரேனுக்கும் என்ன தொடர்பு?

ரூத் 2023 இல் நியூயார்க் டைம்ஸிடம் யுக்ரேனில் போர் முயற்சிகளுக்கு உதவ விரும்புவதாகவும், தாலிபன்களிடம் இருந்து தப்பி ஓடிய ஆப்கானிஸ்தான் வீரர்களை பணியில் அமர்த்த விரும்புவதாகவும் கூறினார்.

தொலைபேசி வாயிலாக அவர் அந்த அளித்தப் பேட்டியில், 10க்கும் மேற்பட்ட வீரர்கள் ஆர்வமாக இருப்பதாகவும், அவர்களை பாகிஸ்தான் மற்றும் இரானில் இருந்து யுக்ரேனுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் இதனை சட்டவிரோதமாக செய்யவும் தயார் என்று பேட்டியளித்தார்.

"பாகிஸ்தான் ஊழல் நிறைந்த நாடு என்பதால் நாங்கள் சில பாஸ்போர்ட்டுகளை பாகிஸ்தான் மூலம் வாங்க முடியும்" என்று அவர் கூறினார்.

யுக்ரேனுக்கு கூடுதல் ஆதரவை வழங்கி உதவுவதற்காக, ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமெரிக்க ஆணையத்தை சந்திக்க தான் வாஷிங்டனில் இருப்பதாகவும் ரூத் பேட்டியில் கூறியிருந்தார்.

ஜூலை மாதம் வரை ஆட்சேர்ப்பு முயற்சிகளில் ரூத் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

ஜூலை மாதத்தில் அவர் பதிவிடப்பட்ட ஒரு முகநூல் பகிர்வில் , “வீரர்களே, தயவுசெய்து என்னை அழைக்காதீர்கள். ஆப்கானிஸ்தான் வீரர்களை யுக்ரேன் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்காக முயற்சிகளை செய்து வருகிறோம், வரும் மாதங்களில் பதில்கள் கிடைக்கும் என்று நம்புகிறோம். தயவுசெய்து பொறுமையாக இருங்கள்." என கூறப்பட்டுள்ளது

யுக்ரேனின் சர்வதேச வெளிநாட்டு தன்னார்வலர்களின் அமைப்பு, ரூத்தின் பதிவுக்கும் அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ளது. .

இந்த அரசியல் வன்முறைக்கு யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் மேற்கோள் காட்டப்பட்ட கருத்துக்களில், "நெருப்புடன் விளையாடுவது அதன் விளைவுகளை ஏற்படுத்தும்" என்று ரஷ்ய அரசாங்க செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார்.

ரூத் மீது குற்றப் பதிவு உள்ளதா?

சிபிஎஸ் செய்தியின்படி, 1990 களில் காசோலை மோசடி உட்பட ரூத் சில சட்ட சிக்கல்களை எதிர்கொண்டதாக பதிவுகள் காட்டுகின்றன.

ரூத் 2002 மற்றும் 2010க்கு இடையில் வட கரோலினாவில் உள்ள கில்ஃபோர்ட் கவுண்டியில் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்டார் என்றும் சிபிஎஸ் தெரிவித்துள்ளது.

2002 இல், மிக ஆபத்தான முழு தானியங்கி துப்பாக்கி வைத்திருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றது, கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தல், ஆயுத விதிமீறல்களை மறைத்தது போன்ற செயல்களில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டதாக பதிவுகள் காட்டுகின்றன.

ரத்து செய்யப்பட்ட ஓட்டுநர் உரிமத்துடன் வாகனம் ஓட்டுதல், திருடப்பட்ட சொத்தை வைத்திருந்தல் ஆகிய குற்றச்சாட்டுகளும் அவர் மீது உள்ளது.

ரூத்தின் முன்னாள் பக்கத்து வீட்டார் கிம் முங்கோ, ரூத் "அன்பானவர்" என்று விவரிக்கிறார், பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஒருமுறை ரூத்தின் சொத்துக்களை சோதனையிட்டதாகக் கூறினார்.

அவர் தனது வீட்டில் "திருடப்பட்ட சொத்துக்கள் மற்றும் பொருட்களை" வைத்திருந்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும் ரூத் மற்றும் அவரது குடும்பத்தினர் திறந்த வெளியில் துப்பாக்கியால் சுடுவதைக் கண்டதாகவும் அவர் கூறினார்.

 

அவரது அரசியல் நிலைப்பாடு என்ன?

2024-ம் ஆண்டு வட கரோலினாவில் கட்சிகளுக்குள் யாரை வேட்பாளரை முன்னிறுத்து என்பதை முடிவு செய்வதற்காக நடத்தப்படும் முதற்கட்ட தேர்தலில், இவர் நேரடியாக வந்து ஜனநாயக கட்சிக்கு வாக்களித்ததாக மாகாண தேர்தல் வாரிய தரவுகள் கூறுவதாக சிபிஎஸ் தெரிவித்துள்ளது.

அவர் 2016-ஆம் ஆண்டு டிரம்ப்பை ஆதரித்ததாக அவரது சமூக ஊடகப் பதிவுகள் இருந்தபோதிலும், அவர் எந்த கட்சியிலும் சாராத வாக்காளர் என பதிவு செய்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

டிரம்ப்  மீது தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரின் சமூக ஊடக பதிவுகள் வெளிப்படுத்தும் உண்மைகள் ?

பட மூலாதாரம்,REUTERS

ரெளத்தின் குடும்பம் பற்றி

ரூத் மகன் அவரை "அன்பான மற்றும் அக்கறையுள்ள தந்தை. நேர்மையான கடின உழைப்பாளி" என்று கூறியுள்ளார்.

அவரது மூத்த மகன் ஓரான், குறுஞ்செய்தி மூலம் சிஎன்என் உடன் பேசினார். "புளோரிடாவில் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை, எதிர்பார்க்காத விஷயங்கள் நடந்திருப்பதாக நான் நம்புகிறேன், ஏனென்றால் நான் சிறிய வயதில் இருந்த பார்த்த நபர் அப்படியானவர் இல்லை. எனக்குத் தெரிந்த மனிதர் மிகவும் ஆக்ரோஷமானவர் இல்லை” என கூறியுள்ளார்.

 

அடுத்து என்ன நடக்கும்?

ரூத் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக அதிகாரப்பூர்வ குற்றச்சாட்டுகள் எதுவும் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை.

அவர் திங்கட்கிழமை பாம் பீச் கவுண்டி நீதிமன்றத்தில் நீதிபதியின் முன் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பவத்தின் போது அவர் தனது ஆயுதத்தை பயன்படுத்தி உண்மையில் துப்பாக்கி சூடு நடத்தினாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

''ஒரு தனிநபரால் எங்களது அதிகாரிகளை சுடமுடியுமா என்பது எங்களுக்கு தெரியவில்லை. ஆனால், நிச்சயமாக சந்தேக நபரிடம் எங்கள் அதிகாரிகள் பதில் தாக்குதல் நடத்தியிருப்பார்கள்'' என்று ரகசிய சேவையின் மியாமி கள அலுவலகத்தின் ரஃபேல் பாரோஸ் கூறினார்.

பென்சில்வேனியாவில் டிரம்ப் மீதான முந்தைய கொலை முயற்சிக்குப் பிறகு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும், "அச்சுறுத்தல் அளவு அதிகமாக உள்ளது" என்றும் அவர் கூறினார்.

எஃப்பிஐ தனது விசாரணையை அறிவித்துள்ளது, மேலும் உள்ளூர் சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதாகக் கூறுகிறது.

ரகசிய சேவை மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் வட கரோலினாவின் கிரீன்ஸ்போரோவில் ரூத் முன்பு தங்கியிருந்த வீட்டையும் சோதனை செய்துள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஏராளன் said:

 

ஒரு கட்டத்தில் அதிபர் டிரம்ப்பை ஆதரித்த ரூத், "2016-ஆம் ஆண்டில் குடியரசுக் கட்சிக்கு நான் ஆதரவளித்தேன்" என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆனால் அவர் நடவடிக்கைகள் "மோசமடைந்து, வலுவிழந்தது" "நீங்கள் இல்லை என்றால் நான் மகிழ்ச்சியடைவேன்" என்று அவர் பதிவிட்டதாக சிபிஎஸ் தெரிவித்துள்ளது.

 

🤣............

இவர் முன்னர் ஒரு தடவை ட்ரம்பிற்கு வாக்களித்திருக்கின்றார், அதனாலேயே இப்போது ட்ரம்பை சுட வந்தார் என்ற செய்தி மற்ற தலைவர்களுக்கும் வயிற்றுக்குள் புளியைக் கரைத்து ஊற்றினது போல இருக்கும்..........

எங்கள் நாட்டிலும் 69 இலட்சம் பேர்கள் கோதபாயவிற்கு வாக்களித்தார்களே........ ஒருவர் கூட பின்னர் இப்படி முயற்சிக்கவில்லை........... 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரேயொரு கவலை, வாழ்க்கையில் எனக்கு முதன் முதலில் கிடைத்த ஓட்டளிக்கும் உரிமையை பாவித்து 2016இல் இந்த நபருக்கு வாக்களித்து விட்டேன். இதற்கு முதல் இலங்கையில் கூட வாக்களித்ததில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நீர்வேலியான் said:

எனக்கு ஒரேயொரு கவலை, வாழ்க்கையில் எனக்கு முதன் முதலில் கிடைத்த ஓட்டளிக்கும் உரிமையை பாவித்து 2016இல் இந்த நபருக்கு வாக்களித்து விட்டேன். இதற்கு முதல் இலங்கையில் கூட வாக்களித்ததில்லை.

இதில் கவலைப்பட என்ன இருக்கின்றது! ட்ரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது அமெரிக்கா சிறப்பாக இருந்ததுதானே! உலகில் அவர் யுத்தம் எதனையும் ஆரம்பிக்கவில்லையே!

இந்தமுறையும் அவருக்கு ஒரு வாக்கைச் செலுத்துங்கள்! நீங்கள் இருக்குமிடம் நீலம் என்றாலும் சிவப்பு வெல்லும்போது ஒரு மிதப்பு வரும்😃

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

இதில் கவலைப்பட என்ன இருக்கின்றது! ட்ரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது அமெரிக்கா சிறப்பாக இருந்ததுதானே! உலகில் அவர் யுத்தம் எதனையும் ஆரம்பிக்கவில்லையே!

இந்தமுறையும் அவருக்கு ஒரு வாக்கைச் செலுத்துங்கள்! நீங்கள் இருக்குமிடம் நீலம் என்றாலும் சிவப்பு வெல்லும்போது ஒரு மிதப்பு வரும்😃

இவர் பொருளாதாரத்தில் பெரிதாக ஒன்றுமே செய்ததில்லை. ஒபாமா காலத்தில் இருந்த பொருளாதர வளர்ச்சியின் தொடர்ச்சியில் காலத்தை ஒட்டினவர். இவரின் காலத்திலத்தான் இரான் உடனான உறவுகள் மோசமாகின, இரானுடனான ஒப்பந்தத்தை முறித்தார், தளபதி சுலைமானியை கொன்றார். ஜெருசலேம் நகரம் இஸ்ரேலின் தலைநகரம் என அங்கீகரித்து அமெரிக்க தூதரகத்தை அங்கு மாற்றினவர். அதுவரை எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளும் இதை கிடப்பில் போட்டு வைத்திருந்தார்கள். பாலஸ்தீனினியர்களின் கடும் எதிர்ப்பாளர். மத்தியகிழக்கில் இன்று நடக்கும் பல பிரச்சனைகளுக்கான விதை இவரது ஆட்சில் போடப்பட்டது. இவரது நண்பர்கள் புடின், மோடி, கிம் யங், துருக்கி மற்றும் பிரேசில் தலைவார்கள், சொல்லி வேலையில்லை

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாடல் நல்லா இருக்குது...... கமலா ஹாரீஸின் ரியாக்‌ஷன்..........🤣

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கொலை முயற்சியில் ஈடுபட்டவர் பற்றி பல புதிய தகவல்கள் கூறப்படுகின்றன. போகுற போக்கை பார்த்தால் இதன் பின்னால் உள்ளவர் செலன்ஸ்கியோ என்று முடியப்போகுதோ? ஆக மொத்தத்தில் அமெரிக்காவுக்கு வளர்த்த கடாய் மார்பில் பாய்ந்த கதைதானோ. 

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, நீர்வேலியான் said:

இவர் பொருளாதாரத்தில் பெரிதாக ஒன்றுமே செய்ததில்லை. ஒபாமா காலத்தில் இருந்த பொருளாதர வளர்ச்சியின் தொடர்ச்சியில் காலத்தை ஒட்டினவர். இவரின் காலத்திலத்தான் இரான் உடனான உறவுகள் மோசமாகின, இரானுடனான ஒப்பந்தத்தை முறித்தார், தளபதி சுலைமானியை கொன்றார். ஜெருசலேம் நகரம் இஸ்ரேலின் தலைநகரம் என அங்கீகரித்து அமெரிக்க தூதரகத்தை அங்கு மாற்றினவர். அதுவரை எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளும் இதை கிடப்பில் போட்டு வைத்திருந்தார்கள். பாலஸ்தீனினியர்களின் கடும் எதிர்ப்பாளர். மத்தியகிழக்கில் இன்று நடக்கும் பல பிரச்சனைகளுக்கான விதை இவரது ஆட்சில் போடப்பட்டது. இவரது நண்பர்கள் புடின், மோடி, கிம் யங், துருக்கி மற்றும் பிரேசில் தலைவார்கள், சொல்லி வேலையில்லை

 

1 hour ago, கிருபன் said:

இதில் கவலைப்பட என்ன இருக்கின்றது! ட்ரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது அமெரிக்கா சிறப்பாக இருந்ததுதானே! உலகில் அவர் யுத்தம் எதனையும் ஆரம்பிக்கவில்லையே!

இந்தமுறையும் அவருக்கு ஒரு வாக்கைச் செலுத்துங்கள்! நீங்கள் இருக்குமிடம் நீலம் என்றாலும் சிவப்பு வெல்லும்போது ஒரு மிதப்பு வரும்😃

கிருபன் பகிடிக்குச் சொல்லியிருப்பாரென நினைக்கிறேன்😎.

சிவப்புக் கட்சியின் பழமை வாதக் கொள்கைகளுக்காக அந்தக் கட்சியை ஆதரிப்பது வேறு (அப்படியொரு "பழமை வாத சிவப்புக் கட்சி" இப்போது இல்லை என்பது வேறு கதை!). 

"ட்ரம்பை 2020 இற்குப் பின்னர் ஆதரித்து வாக்குப் போடுவது" என்பது சீரியசான பிரச்சினையிருக்கும் ஆட்களால் தான் முடியுமான காரியம். அதுவும், குடியேறிகளாக வந்தவர்கள் இப்போது ட்ரம்பிற்கு வாக்களித்து ஆதரிப்பது, குந்தியிருக்கிற மரத்தின் கிளையை வெட்டுவது போன்ற செயல்.

ஒஹையோவில் சட்ட பூர்வ குடியேறிகளாக வசிக்கும் ஹெயிற்றி மக்களைப் பற்றிய ட்ரம்ப் கூட்டத்தின் வெறுப்புப் பேச்சின் பின்னரும், ஏனைய நாட்டுக் குடியேறிகள் சிலர் ட்ரம்பை விரும்புகிறார்கள் - மிகவும் ஆச்சரியமான விடயம்!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சதித்திட்டத்தின் பின்னணியில் இரஸ்சியா இருக்கவே வாய்ப்புக்கள் அதிகம்! ட்ரம்ப் அனுமானிக்க முடியாதவர், அவர் என்ன செய்யப்போகிறார் என்பது அவருக்குத்தான் தெரியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.