Jump to content

கட்சி பெயரை திருடியவர்கள் சின்னத்தையும் திருடி விட்டார்கள் : எம்.ஏ.சுமந்திரன் !

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கட்சி பெயரை திருடியவர்கள் சின்னத்தையும் திருடி விட்டார்கள் - பிரதான தமிழ் கட்சியாக இருப்பது இலங்கை தமிழரசு கட்சி மட்டுமே : எம்.ஏ.சுமந்திரன் !

kugenOctober 14, 2024
 
sumanthiran.jpeg

ஒரு காலகட்டத்தில் திருடர்களாக, கப்பம் பெற்றவர்களாக, கடத்தல்காரர்களாக, கொள்ளையர்களாக, கொலையாளிகளாக இருந்தவர்கள் திருந்திவிட்டார்கள் என்று நம்பி சேர்த்து வைத்திருந்தோம். ஆனால் அவர்கள் திருந்தவில்லை. முன்னர் கட்சிப் பெயரை திருடினார்கள் இப்போது சின்னத்தையும் திருடியுள்ளார்கள்.
இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் அறிமுகவிழா நேற்று (13) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
1956 ஆம் ஆண்டு முதல் இன்று வரை பிரதான தமிழ்க் கட்சியாக இருப்பது இலங்கைத் தமிழரசுக் கட்சி மட்டுமே. வேறு எவருக்கும் எங்களுடைய மக்கள் ஜனநாயக ஆணையைக் கொடுக்கவில்லை. இனியும் கொடுக்கப் போவதுமில்லை.

தமிழ் மக்கள் ஒரு தனித் தேசம் என்று அறிவித்து இதுவரை காலமும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்ற கட்சி தான் பலமான அணியாக பாராளுமன்றத்திற்குள் செல்லவேண்டும்.

மத்தியிலே ஆட்சி அமைத்திருக்கக்கூடிய கட்சிக்கு யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திலே ஒரு ஆசனம் கிடைக்குமாக இருந்தால் அவர்கள் இங்கிருக்கும் மக்கள் எங்களையும் பிரதிநிதியாக ஏற்றி இருக்கிறார்கள் என்று சொல்லுவார்கள். அதற்கு நாம் இடமளிக்கக்கூடாது.

ஜனாதிபதித் தேர்தலோடு ஒரு ஆபத்து வந்திருக்கின்றது. பல தடவைகள் நாங்கள் அபாய சங்கை ஊதினோம் அது கைமீறிவிட்டது. பொதுவான சின்னத்தையும் திருடி விட்டார்கள். சின்னத்தை திருடியவர்கள் அதற்கு முன்னர் எங்களுடைய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரை திருடினார்கள்.

ஒரு காலகட்டத்தில் திருடர்களாக, கப்பம்பெற்றவர்களாக, கடத்தல்காரர்களாக, கொள்ளையர்களாக, கொலையாளிகளாக இருந்தவர்கள் திருந்திவிட்டார்கள் என்று நம்பி கூட்டமைப்பிற்குள் சேர்த்து வைத்திருந்தோம். ஆனால் அவர்கள் திருந்தவில்லை.

கட்சிப் பெயரை திருடினார்கள். மக்களுக்கு பொய்யான நம்பிக்கையை ஊட்டி அந்த சின்னத்தையும் திருடி விட்டார்கள். 23ஆம் திகதி நள்ளிரவில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. அதற்கு முன்னர் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த சின்னத்தை நாம் பயன்படுத்த மாட்டோம் என்று. அவர்களுக்கு தங்களின் கையெழுத்தின் பெறுமதி தெரியவில்லை.

சின்னத்தை திருட மாட்டோம் என்று கையெழுத்திட்டவர்கள் ஒரு சில மணித்தியாலங்களுக்கு உள்ளேயே குத்துவிளக்கை கைவிட்டு சங்கைத் தருமாறு தேர்தல் திணைக்களத்திற்கு கடிதம் கொடுத்தார்கள். இவ்வாறான கள்ளருக்கு இம்முறை மக்கள் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்.

மாம்பழ திருடர்களுக்கும் மக்கள் பாடம் புகட்ட வேண்டும். எங்கள் கட்சியிலிருந்து வெளியேறிய ஒருவர் அபலைப் பெண்ணுக்கு மதுபானசாலை உரிமம் கொடுத்தேன் என்று வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.

ஊழலுக்கு எதிரான அரசாங்கம் என்று சொல்லிக் கொண்டிருக்கக் கூடிய இந்த அரசாங்கம் இரண்டு விடயங்களில் தடுக்கி விழுந்து கொண்டிருக்கின்றது. ஒன்று ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமான செலவீனங்களை தேர்தல் திணைக்களத்திற்கு இதுவரை கொடுக்கவில்லை. மற்றையது மதுபான அனுமதி பத்திரங்களை பெற்றவர்களின் பெயர் விவரங்களை மூன்று நாட்களுக்குள் வெளிப்படுத்துவோம் என கூறினார்கள். மூன்று வாரமாகிவிட்டது இன்னும் வெளிப்படுத்தவில்லை.

நான் பகிரங்கமாக அரசாங்கத்துக்கு சவால் விடுகிறேன் மதுபான அனுமதிப் பத்திரத்தை பெற்றவர்களின் விபரங்களை வெளிப்படுத்துங்கள். எங்களுடைய கைகள் சுத்தமாக உள்ளது. எங்களை விட்டு வெளியேறிச் சென்றவர்களின் உண்மை முகத்தை மக்களிடம் வெளிக்காட்ட உதவியாக இருக்கும். ஏன் எங்களை விட்டு வெளியேறினார்கள் என்பதற்கு அது ஒரு காரணமாக இருக்கும்.

தமிழரசு கட்சியின் உடைய வேட்பாளர் தெரிவிலே நாங்கள் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றோம். இளையவர்களுக்கு நாங்கள் முன்னுரிமை வழங்கியிருக்கின்றோம். மக்கள் கேட்கின்ற மாற்றத்திற்கு நாங்களிடம் கொடுத்திருக்கின்றோம். அதற்கு ஈடுகொடுக்கமுடியாதவர்கள் கட்சியை விட்டு வெளியேறியிருக்கிறார். தேர்தலில் ஆசனங்கள் கிடைக்கவில்லை என்பதற்காக தேர்தல் காலங்களில் வெளியேறியிருக்கிறார்கள்.

கொள்கைப்பிடிப்பில் வெளியேறுவதெனில் தேர்தல் காலத்தில் வெளியேறாமல் வேறு நேரத்தில் வெளியேறிருக்கலாம். தேர்தல் காலங்களில் வெளியேறுவர்களை குறித்து மக்களுக்கு அவதானம் இருக்கின்றது. அதனை நாம் மக்களுக்கு சொல்லத் தேவையில்லை. அவர்களை எல்லாம் ஒரு பொருட்டாக கருத தேவையில்லை என தெரிவித்தார்.

https://www.battinews.com/2024/10/blog-post_756.html

Edited by கிருபன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

நான் பகிரங்கமாக அரசாங்கத்துக்கு சவால் விடுகிறேன் மதுபான அனுமதிப் பத்திரத்தை பெற்றவர்களின் விபரங்களை வெளிப்படுத்துங்கள். எங்களுடைய கைகள் சுத்தமாக உள்ளது. எங்களை விட்டு வெளியேறிச் சென்றவர்களின் உண்மை முகத்தை மக்களிடம் வெளிக்காட்ட உதவியாக இருக்கும். ஏன் எங்களை விட்டு வெளியேறினார்கள் என்பதற்கு அது ஒரு காரணமாக இருக்கும்.

 வெய்ட்பண்ணுங்க சார் இப்ப என்ன அவசரம் கிடக்கு! எலக்சனுக்கு இன்னும் ஒரு மாசம் இருக்கு. அதுக்குள்ள வெளியிடுவம் தானே! 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் பொறுங்கோ மக்கள் உங்கள் எல்லாருக்கும் சங்கு ஊதுவார்கள்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும் இன் செம்புகள் மேடைக்கு வரவும்….

தேர்தல் வந்தவுடன் தமிழ் தேசியம் வந்துவிட்டது சும் இற்கு….

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, கிருபன் said:

ஒரு காலகட்டத்தில் திருடர்களாக, கப்பம் பெற்றவர்களாக, கடத்தல்காரர்களாக, கொள்ளையர்களாக, கொலையாளிகளாக இருந்தவர்கள் திருந்திவிட்டார்கள் என்று நம்பி சேர்த்து வைத்திருந்தோம். ஆனால் அவர்கள் திருந்தவில்லை. முன்னர் கட்சிப் பெயரை திருடினார்கள் இப்போது சின்னத்தையும் திருடியுள்ளார்கள்.

இரண்டு கிழமைக்கு முன்னர்   தமிழரசு கட்சியுடன்  இணையுங்கள். என்று அழைத்தது இவர்களை தானா?????????? 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறு எல்லோரையும் கள்ளர் என்றபடி யாருடன் இவர் ஒற்றுமை வளர்க்க முடியும்????

யாவும் நாசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, விசுகு said:

இவ்வாறு எல்லோரையும் கள்ளர் என்றபடி யாருடன் இவர் ஒற்றுமை வளர்க்க முடியும்????

யாவும் நாசம்.

அவருக்கு அடங்கி. நடப்பவர்களுடன்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேசியம் என்ன புலம்பெயர்ஸ் வியாபாரிகளின் ஏகபோக உரிமையா ? 

தேசியத்தைக் கூறி புலம்பெயர்ஸ் திருடர் கூட்டம் மட்டும்  வயிறு வளர்த்தால் மட்டும் போதுமா,.? 

அங்குள்ளவர்களும் சிறிது பசியாறட்டுமே. என்ன வந்துவிடப்போகிறது,....🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும் திருடன் என்று சும் இன் அல்லக்கைகளே ஏற்றுக் கொண்டாச்சு…🤣🤣

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, MEERA said:

சும் திருடன் என்று சும் இன் அல்லக்கைகளே ஏற்றுக் கொண்டாச்சு…🤣🤣

சும்முக்கு அல்லகைகள் உண்டா? 😅அவர்தான் சுத்தமானவராச்சே ...அவருக்கு அல்லகைகளும்மில்லை,ஆதரவுகையும் இல்லை .என நினைத்தேன் ..அவர் சுயம்பு கை

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ஸ் டமில் தேசியவாதிகள் திருடர் கூட்டமென்றும் RSS ன் கோமியக் கூட்டம் என்றும் RSS ன் அடி வருடிகளென்று  ஏற்றுக்கொண்டாயிற்றா,..? 

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Kapithan said:

புலம்பெயர்ஸ் டமில் தேசியவாதிகள் திருடர் கூட்டமென்றும் RSS ன் கோமியக் கூட்டம் என்றும் RSS ன் அடி வருடிகளென்று  ஏற்றுக்கொண்டாயிற்றா,..? 

🤣

ஒரு கூட்டம் அமெரிக்கா பின்னால்

இன்னொரு கூட்டம் இந்தியா பின்னால்.

Link to comment
Share on other sites

யாழ் தேர்தல் மாவட்ட தமிழ் அரசுக் கட்சி வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் முன்னாள் தவிசாளர், இந்நாள் வேட்பாளர் பிரகாஷ் பேசுகிறார் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ஈழப்பிரியன் said:

ஒரு கூட்டம் அமெரிக்கா பின்னால்

இன்னொரு கூட்டம் இந்தியா பின்னால்.

மேற்கின் பின்னால் போவதற்கு ஆயிரம் காரணங்களைச் சொல்லலாம். ஆனால் இந்தியாவின் பின்னால் செல்வதற்கு சமயத்தையும் சாதியையும் தவிர வேறு என்னத்தைச் சொல்ல முடியும்?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

மேற்கின் பின்னால் போவதற்கு ஆயிரம் காரணங்களைச் சொல்லலாம். ஆனால் இந்தியாவின் பின்னால் செல்வதற்கு சமயத்தையும் சாதியையும் தவிர வேறு என்னத்தைச் சொல்ல முடியும்?  

அமெரிக்காவும் மேற்கும் இலங்கைப் பிரச்சனையில் இந்தியாவின் பின்னாலேயே நின்றது.

தமிழர்கள் எம்மாத்திரம்?

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

அமெரிக்காவும் மேற்கும் இலங்கைப் பிரச்சனையில் இந்தியாவின் பின்னாலேயே நின்றது.

தமிழர்கள் எம்மாத்திரம்?

தாய்வான் பிரச்சனையில் இந்தியா அமேரிக்கா பின்னால் நிற்கினம்...

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, putthan said:

தாய்வான் பிரச்சனையில் இந்தியா அமேரிக்கா பின்னால் நிற்கினம்...

சீனாக்காரன்…. இந்திய எல்லைப் பகுதிகளில் புதிய குடியிருப்புக்களை அமைக்கின்றானாம். 😂
தனது கொல்லைப் புறத்தில் நடப்பதை தடுக்க வழி இல்லை, தாய்வான் பிரச்சினையில் அக்கறை செலுத்துது இந்தியா. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

சீனாக்காரன்…. இந்திய எல்லைப் பகுதிகளில் புதிய குடியிருப்புக்களை அமைக்கின்றானாம். 😂
தனது கொல்லைப் புறத்தில் நடப்பதை தடுக்க வழி இல்லை, தாய்வான் பிரச்சினையில் அக்கறை செலுத்துது இந்தியா. 🤣

அதென்றால் உண்மை தான் ....உந்த கச்சதீவு பிரச்சனையே தீர்க்க வக்கில்லை ,,,, 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

அமெரிக்காவும் மேற்கும் இலங்கைப் பிரச்சனையில் இந்தியாவின் பின்னாலேயே நின்றது.

தமிழர்கள் எம்மாத்திரம்?

மேற்குலகு இலங்கைத் தமிழருக்கு எழுத்தையும் கொடுத்து,  பணத்தையும்  கொடுத்தபோதும்,   புலம்பெயர்ஸ் இந்தியாவிற்கும் RSS ன் கோமியத்தைக் குடித்தால் ,  மேற்கு  எங்களுக்குப் பின்னால் நிற்குமா ?  இல்லையே,..? 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kandiah57 said:

இரண்டு கிழமைக்கு முன்னர்   தமிழரசு கட்சியுடன்  இணையுங்கள். என்று அழைத்தது இவர்களை தானா?????????? 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

போனவருடம், உள்ளூராட்சி தேர்தல் நடைபெறப்போகிறதென்று ரணில் அறிவித்தவுடன் ,தமிழ் தேசிய கூட்டமைப்பை கழட்டி  விட்டு தமிழரசுக்கட்சி தனித்து போட்டியிடுவதாக இந்த சட்டாம்பி முடிவெடுத்தார். ஆனால் அந்த முடிவை அங்கத்துவ கட்சிகளுக்கு அறிவிக்கவில்லை. அவர்கள் வழமைபோல தங்கள் செயற்பாடுகளை கவனித்துக்கொண்டிருந்தார்கள், ஆனால் பத்திரிகைகளில் இதை அறிவித்துள்ளார் இந்த மேதை. இதையறிந்த கட்சிகள் இதுபற்றி இவரிடம் வினவியபோது; இந்த அரிச்சந்திரன் சொன்னார், கூட்டமைப்பு தேர்தலில் கூடுதலான ஆசனங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு, ஆகவே தனித்து போட்டியிடும் தீர்மானம் இல்லை என்று சமாளித்தார். அவர்களும் உண்மையென நம்பி இருக்கும்போது, இந்த ஒரு மனநிலை இல்லாதவர் சொன்னார், வேறு கட்சிகளுக்கு போகும் வாக்குகளை தடுப்பதற்காக நாங்கள் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம், பின் மீண்டும் ஒன்று சேருவோம். என்று விட்டார் பாருங்கோ ஒரு விடுகை. அவர் அப்பவே  போட்ட திட்டம் தமிழரசுக்கட்சியை பிரித்து மற்றவர்களை விரட்டுவதென்று. காரணம் சரியென்றால் ஏன் அதை அவர்களுக்கு விளக்கி கூறியிருக்கலாமே? மனதில் நெல்லெண்ணம் இல்லை, எப்போ, யாரை எப்படி விரட்டுவேன், எதை கைப்பற்றுவேன் என்பதே அவர் சிந்தனை. வாக்களித்த மக்களின் கோரிக்கை என்ன, தனது பணி என்ன என்று யோசிப்பதில்லை. ஏனெனில் அவர் செயல் வீரரல்ல, ஆட்களை சேறடித்து விரட்டி அதை சாகசம் எனக்காட்டி எப்படியோ நுழைந்து விடுவார். இதற்கெல்லாம் வைப்பார் ஆப்பு அநுர.  இப்போ சேர்ந்திருப்பவர்களுக்கு எப்போ பிரியாவிடை கொடுப்பாரோ தெரியவில்லையே. சரி.... யாரின் கட்சியையும் சின்னத்தையும் யார் திருடினார்களாம்? அவையும் அவர் சொத்துக்களா? அவர்கள் கட்சி, அவர்கள் சின்னம், இவர் ஏன் அந்தரப்படுகிறார்? எல்லாம் வேண்டுமாமோ தெரியவில்லை. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

சீனாக்காரன்…. இந்திய எல்லைப் பகுதிகளில் புதிய குடியிருப்புக்களை அமைக்கின்றானாம். 😂
தனது கொல்லைப் புறத்தில் நடப்பதை தடுக்க வழி இல்லை, தாய்வான் பிரச்சினையில் அக்கறை செலுத்துது இந்தியா. 🤣

சீனா தனது நாட்டுக்குள் குடியிருப்புக்களை அமைக்க முடியும்  இதை   இந்தியா எப்படி தடுக்க முடியும்?? 

ஒரு வீடு  இரண்டு நாட்டில் இருக்கிறது என்று வாசித்த ஞாபகம் 

அந்த நாடுகள்  ஜேர்மனி Nietharland.   ஆகும்    

நீங்கள் ஜேர்மனியிலா  ?? இருக்கிறீர்கள்??🤣😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ஸ் டமில் RSS வாதிகள் VS சுமந்திரன். 

உள்ளூர் RSS  சந்தர்ப்பவாதிகள் vs சுமந்திரன் 

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

சீனா தனது நாட்டுக்குள் குடியிருப்புக்களை அமைக்க முடியும்  இதை   இந்தியா எப்படி தடுக்க முடியும்?? 

ஒரு வீடு  இரண்டு நாட்டில் இருக்கிறது என்று வாசித்த ஞாபகம் 

அந்த நாடுகள்  ஜேர்மனி Nietharland.   ஆகும்    

நீங்கள் ஜேர்மனியிலா  ?? இருக்கிறீர்கள்??🤣😂

Hey Mr. Taliban! on Make a GIF

நான் வாசிப்பது ஆப்கானிஸ்தான். 😂
நீங்கள் சொன்ன விஷயங்கள்  எல்லாம் எனக்கு புதுசாய் இருக்குது. 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, தமிழ் சிறி said:

Hey Mr. Taliban! on Make a GIF

நான் வாசிப்பது ஆப்கானிஸ்தான். 😂
நீங்கள் சொன்ன விஷயங்கள்  எல்லாம் எனக்கு புதுசாய் இருக்குது. 🤣

முஸ்லிம் தோற்றுப்போவன். நீங்கள் தான் அசலான முஸ்லிம்   உடனாடியாக  சுன்னத்து செய்யவும்   😂😂😂

உதவி தேவையெனின்   கு.  .....ய.   ...ஈ.       உடன் தொடர்பு கொள்ளுங்கள் 🙏

  • Haha 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.