Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதிய அரசாங்கத்தில் சுமந்திரன் வெளிவிவகார அமைச்சர்: கம்மன்பில கூறும் கதை!

பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் அமையவுள்ள புதிய அரசாங்கத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி இணையும் என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

தேர்தலின் பின்னர் அமையவுள்ள புதிய அரசில் வெளிவிவகார அமைச்சுப் பதவி, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனுக்கு வழங்கப்படவுள்ளது என எனக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. எனக்குக் கிடைத்த தகவலைத்தான் வெளிப்படுத்துகின்றேன். இதற்கு சான்று இல்லை. நான் பிழையெனில் அதனை ஜனாதிபதி சரி செய்யலாம்.

தேர்தலின் பின்னர் தமிழரசுக் கட்சி அரசுடன் இணையும், சுமந்திரனுக்கு வெளிவிவகார அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளது என்பதுதான் எனக்குக் கிடைத்துள்ள தகவல். இதற்காக இரு நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை இரண்டுக்கும் ஜனாதிபதி உடன்பட்டுள்ளார்.

இவ்வாறு இணக்கம் தெரிவிக்கவில்லையெனில் அதனையும் ஜனாதிபதி மறுக்கலாம். 2015 இல் ஆரம்பமான சமஷ்டி அரசமைப்பு பணியை முன்னோக்கி கொண்டு செல்லுதல் என்பது முதலாவது நிபந்தனை.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 2015 இல் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்தல் என்பது இரண்டாவது நிபந்தனை. அதனை மீள நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

இவற்றுக்கு ஜனாதிபதி உடன்பட்டுள்ளார். இதற்கு என்னிடம் சாட்சி இல்லை. தகவல்களை வெளிப்படுத்துகின்றேன். இல்லையெனில் ஜனாதிபதி அது பற்றி தெளிவுபடுத்தலாம் என கூறியுள்ளார்.
-(3)

http://www.samakalam.com/புதிய-அரசாங்கத்தின்-சுமந/

  • Replies 57
  • Views 3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    அண்ணை, இந்தப்பட்டியலில இருக்கிற இரண்டுபேர் பற்றி மட்டும் ஒரு விடயம் சொல்லவேணும். கதிர்காமர் ‍ துரோகியல்ல, எதிரி. சமாதானம் யுத்தம் என்கிற பெயரில சந்திரிக்கா செய்த இனக்கொலை யுத்தத்தில சந்திரிக

  • குட்டையை குழப்பி மீன்பிடிக்க நினைக்கிறார் கம்மன்பில, இல்லை என்று சொன்னால் தமிழரின் வாக்கு, ஆதரவு குறையும் அனுராவுக்கு. ஆம் என்று சொன்னால் சிங்களவரின் வாக்கு குறையும். அதனாலேயே  ஜனாதிபதி தெளிவுபடுத்தட்

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    அண்ணன் எப்ப சாவான், திண்ணை எப்ப காலியாகும் என்று பார்த்துக் கொண்டிருந்த சுமந்திரனுக்கு.... சம்பந்தன் செத்துப் போனது, "ரூட் கிளியர்" ஆகி இருக்கு.  சம்பந்தன் உயிருடன் இருந்திருந்தால் இந்தப் பதவியைய

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

2015 இல் ஆரம்பமான சமஷ்டி அரசமைப்பு பணியை முன்னோக்கி கொண்டு செல்லுதல் என்பது முதலாவது நிபந்தனை.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 2015 இல் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்தல் என்பது இரண்டாவது நிபந்தனை. அதனை மீள நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

சுமந்திரனுக்கு ஆதரவாக கம்மன் பில பிரச்சாரம் செய்ய வெளிக்கிட்டாரா?

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கிருபன் said:

தேர்தலின் பின்னர் அமையவுள்ள புதிய அரசில் வெளிவிவகார அமைச்சுப் பதவி, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனுக்கு வழங்கப்படவுள்ளது

யாழிணையத்திலே ஏற்கனவே பல்வேறு திரிகளில் சும் வெளிநாட்டமைச்சர் பதவியை இலக்குவைத்து இன்னொரு கதிர்காமராவோ அல்லது நீலனகாவோ சிங்களத்துக்குத் தொண்டாற்ற ஆவலோடு திரிவதாக எழுதப்பட்டவையே. ஆனால், அனுராவைச் சந்தித்து அதைதான் ஆள் கேட்டிருக்குமோ. யாரறிவார்.
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி
 
  • கருத்துக்கள உறவுகள்

கம்மன்பில கூறுவது உண்மையான தகவல் என்றால் 

1) சமஸ்டி அரசமைப்புப் பணியும் 

2) UN  தீர்மானம் 30/1 நடைமுறைப் படுத்துதல் 

என இரண்டு முக்கிய விடயங்கள் நடைமுறைக்கு வருவது நன்மையான விடயங்களே.

கமன்பிலவை வடக்கு கிழக்கில் தமிழரசுக் கட்சி சார்பாகப் பிரச்சாரத்திற்கு அழைக்கலாம்  🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

இவற்றுக்கு ஜனாதிபதி உடன்பட்டுள்ளார். இதற்கு என்னிடம் சாட்சி இல்லை. தகவல்களை வெளிப்படுத்துகின்றேன். இல்லையெனில் ஜனாதிபதி அது பற்றி தெளிவுபடுத்தலாம் என கூறியுள்ளார்.

குட்டையை குழப்பி மீன்பிடிக்க நினைக்கிறார் கம்மன்பில, இல்லை என்று சொன்னால் தமிழரின் வாக்கு, ஆதரவு குறையும் அனுராவுக்கு. ஆம் என்று சொன்னால் சிங்களவரின் வாக்கு குறையும். அதனாலேயே  ஜனாதிபதி தெளிவுபடுத்தட்டும் என்கிறார். தானே இனப்பிரச்சினையை கிழப்பாமல், யோசனை கொடுக்கிறாராம். இறுதியில் சிறைக்குத்தான் போகப்போகிறார். ஆளான ஆளெல்லாம் வாய் மூடி இருக்கினம், இவர் துள்ளுவதைப்பார்த்தால்; நிறைய ஊழலில் சிக்கப்போகிறார் போலுள்ளது. ஏற்கெனவே வெளிநாட்டுக்காரர் ஒருவரின் காணியை கள்ள உறுதி முடித்து விற்பனை செய்த வழக்கு உள்ளது இவர்மேல்.

3 hours ago, கிருபன் said:

2015 இல் ஆரம்பமான சமஷ்டி அரசமைப்பு பணியை முன்னோக்கி கொண்டு செல்லுதல் என்பது முதலாவது நிபந்தனை.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 2015 இல் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்தல் என்பது இரண்டாவது நிபந்தனை. அதனை மீள நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

சுமந்திரன் இதை செய்ய நினைத்திருக்க மாட்டார், ஒருவேளை கம்மன் பில செய்யும் காமெடியில் நடந்தாலும் நடக்கலாமே தவிர சுமந்திரனுக்கு உந்த உணர்வு தவறியும் வராது. இப்போ நாட்டில் ஒரு குழப்பம் வெடிக்க வேணும், அதில் கம்மன் பில வாக்கு அள்ள வேண்டும்! பரவணிக்குணம்.  

  • கருத்துக்கள உறவுகள்

முதலில்... சுமந்திரனுக்கு, மக்கள் வாக்களித்து பாராளுமன்றம் அனுப்ப வேணுமே. 😎

கட்டுக்காசு கூட... சுமந்திரனுக்கு கிடைக்குமோ என்ற திரிசங்கு  நிலையில்..
அமைச்சர் பதவி எல்லாம்... எட்டாக் கனியே. 

அப்படி சுமந்திரன்... பின் கதவால் வந்து  பாராளுமன்றம் போனால் மட்டுமே,  
சின்னக் கதிர்காமர்... சுமந்திரனின்   வாழ் நாள் கனவு நிறைவேறும். 😂

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, தமிழ் சிறி said:

முதலில்... சுமந்திரனுக்கு, மக்கள் வாக்களித்து பாராளுமன்றம் அனுப்ப வேணுமே. 😎

கட்டுக்காசு கூட... சுமந்திரனுக்கு கிடைக்குமோ என்ற திரிசங்கு  நிலையில்..
அமைச்சர் பதவி எல்லாம்... எட்டாக் கனியே. 

அப்படி சுமந்திரன்... பின் கதவால் வந்து  பாராளுமன்றம் போனால் மட்டுமே,  
சின்னக் கதிர்காமர்... சுமந்திரனின்   வாழ் நாள் கனவு நிறைவேறும். 😂

சம்பந்தன்.  இல்லாமல் எப்படி பின்கதவால்.  வருவது????   

தமிழ் பகுதிகளில்  கிராமத்துக்கு ஒரு கட்சி போட்டியிடுகிறார்கள் 

இந்த நிலையில் தேசிய பட்டியலும் கிடையாது   பேசாமல்   வரும் வழக்குகளை இழுத்து அடித்து பேசினால்   நிறைய உழைக்கலாம்.    🤣

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kandiah57 said:

சம்பந்தன்.  இல்லாமல் எப்படி பின்கதவால்.  வருவது????   

தமிழ் பகுதிகளில்  கிராமத்துக்கு ஒரு கட்சி போட்டியிடுகிறார்கள் 

இந்த நிலையில் தேசிய பட்டியலும் கிடையாது   பேசாமல்   வரும் வழக்குகளை இழுத்து அடித்து பேசினால்   நிறைய உழைக்கலாம்.    🤣

தேர்தலில் தோற்றவர்கள்..  தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் போவதும், 
ஒரு வகையில் பின்கதவு தான். 

சுமந்திரனுக்கு... இப்போது இருக்கும் தெரிவு, தேசியப் பட்டியல் மட்டுமே.
அதைத்தான்... பிடித்து தொங்கிக் கொண்டு பாராளுமன்றம் போவார்.
நவம்பர் மாதம் மட்டும் பொறுத்து இருங்கள், அப்போ தெரியும் அவரின் வண்டவாளம். 🙂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nochchi said:

யாழிணையத்திலே ஏற்கனவே பல்வேறு திரிகளில் சும் வெளிநாட்டமைச்சர் பதவியை இலக்குவைத்து இன்னொரு கதிர்காமராவோ அல்லது நீலனகாவோ சிங்களத்துக்குத் தொண்டாற்ற ஆவலோடு திரிவதாக எழுதப்பட்டவையே. ஆனால், அனுராவைச் சந்தித்து அதைதான் ஆள் கேட்டிருக்குமோ. யாரறிவார்.
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி
 
அண்ணன் எப்ப சாவான், திண்ணை எப்ப காலியாகும் என்று பார்த்துக் கொண்டிருந்த சுமந்திரனுக்கு.... சம்பந்தன் செத்துப் போனது, "ரூட் கிளியர்" ஆகி இருக்கு. 

சம்பந்தன் உயிருடன் இருந்திருந்தால் இந்தப் பதவியையம் தனக்கே வேணும் என்று அழுது அடம் பிடித்து எடுத்திருப்பார்.   இப்போ.... சுமன் காட்டில் அடை மழை பெய்யப் போகுது.

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையான், கருணா, டக்ளஸ்... போன்ற பிரபல காட்டிக் கொடுப்பாளர்களுக்கே  அமைச்சர் பதவி கிடைக்கும் போது... 😎
முட்டுக் கொடுப்பாளர் சுமந்திரன்... உள்நாட்டு  விசாரணை போதும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் சொல்லி,  சிங்கள அரசாங்கத்துக்கு முட்டுக் கொடுத்து... போர்க் குற்ற விசாரணையில் இருந்து அரசாங்கத்தை காப்பாற்றியமைக்கு,  வெளிநாட்டு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்ப்பதுதான் நியாயமானது.  😂 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, கிருபன் said:

புதிய அரசாங்கத்தில் சுமந்திரன் வெளிவிவகார அமைச்சர்: கம்மன்பில கூறும் கதை!

ஐயையோ சின்னக்கதிர்காமர் எண்டு  சொன்னது சரியாத்தான் போச்சுது 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

ஐயையோ சின்னக்கதிர்காமர் எண்டு  சொன்னது சரியாத்தான் போச்சுது 🤣

சுமந்திரன்... சிங்களத்துக்கு ஆற்றும் சேவையை வைத்து,
ஊரில் உள்ளவர்களும், யாழ் களத்தில் உள்ளவர்களும்  10 வருடத்துக்கு முன்பே..
அவரை.. சின்னக் கதிர்காமர் என்று கணித்த கணிப்பு... 100 வீதம் பலிக்கப் போகுது.  🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, தமிழ் சிறி said:

சுமந்திரன்... சிங்களத்துக்கு ஆற்றும் சேவையை வைத்து,
ஊரில் உள்ளவர்களும், யாழ் களத்தில் உள்ளவர்களும்  10 வருடத்துக்கு முன்பே..
அவரை.. சின்னக் கதிர்காமர் என்று கணித்த கணிப்பு... 100 வீதம் பலிக்கப் போகுது.  🤣

தமிழருக்கு ஒரு பிரச்சனையும் இல்லை எண்டு உலகத்துக்கு சொல்ல சுமந்திரனை விட்டால் வேற ஆக்கள் இல்லை கண்டியளோ?
சுமந்திரனும் பக்காவா அந்த வேலையை செய்யக்கூடிய ஆள். பொய் சொல்லுறது அவருக்கு கை வந்த கலை....😎

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

தமிழருக்கு ஒரு பிரச்சனையும் இல்லை எண்டு உலகத்துக்கு சொல்ல சுமந்திரனை விட்டால் வேற ஆக்கள் இல்லை கண்டியளோ?
சுமந்திரனும் பக்காவா அந்த வேலையை செய்யக்கூடிய ஆள். பொய் சொல்லுறது அவருக்கு கை வந்த கலை....😎

பொய் சொல்லி... சிங்கள  எஜமானை திருப்திப் படுத்தினால்தானே,
ஊர் வெக்கைக்குள்ளும்... கோட்டும், சூட்டும் போட்டுக் கொண்டு 
அல்லக்கைகளுக்கும், செம்புகளுக்கும்... பெரிய ஆள் மாதிரி "பிலிம்"  காட்டலாம்.

இந்த முறை... அவர் தலைப்பாகை கட்டிக் கொண்டு, 
ட்ராக்கரில் வயல் உழவுக்கு போகவில்லையோ... 😂

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, தமிழ் சிறி said:

பொய் சொல்லி... சிங்கள  எஜமானை திருப்திப் படுத்தினால்தானே,
ஊர் வெக்கைக்குள்ளும்... கோட்டும், சூட்டும் போட்டுக் கொண்டு 
அல்லக்கைகளுக்கும், செம்புகளுக்கும்... பெரிய ஆள் மாதிரி "பிலிம்"  காட்டலாம்.

இந்த முறை... அவர் தலைப்பாகை கட்டிக் கொண்டு, 
ட்ராக்கரில் வயல் உழவுக்கு போகவில்லையோ... 😂

அமெரிக்கா  கனடாகாரர்.  ஒருவரையும் காணவில்லை 🤣

இரண்டு ஜேர்மனியார்.  பிச்சு.    வேண்டுகிறார்கள். 🙏

நல்லாக. நடக்கட்டும்”   நான்   கொஞ்சம் நித்திரை. செய்து விட்டு   ஒழும்பி    பார்ப்பேன் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

சுமந்திரன்... சிங்களத்துக்கு ஆற்றும் சேவையை வைத்து,
ஊரில் உள்ளவர்களும், யாழ் களத்தில் உள்ளவர்களும்  10 வருடத்துக்கு முன்பே..
அவரை.. சின்னக் கதிர்காமர் என்று கணித்த கணிப்பு... 100 வீதம் பலிக்கப் போகுது.  🤣

ஒரு துப்பாக்கியையும் ஒரு  தோட்டாவையும் ஆயத்தம் செய்ய வேண்டியதுதான் மிச்சமாய் இருக்கிறது.  அதையும் ஆயத்தப்படுத்துங்கோ,....😁

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

இவற்றுக்கு ஜனாதிபதி உடன்பட்டுள்ளார். இதற்கு என்னிடம் சாட்சி இல்லை. தகவல்களை வெளிப்படுத்துகின்றேன். இல்லையெனில் ஜனாதிபதி அது பற்றி தெளிவுபடுத்தலாம் என கூறியுள்ளார்.

🤣.............

முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன அரசியலைத் துறந்து சினிமா எடுக்க போய்விட்டார். உதய கம்மன்பில பந்துல எடுக்கப் போகும் படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதலாம். ஈஸ்டர் குண்டுவெடிப்பு கதை, சமஷ்டி கதை என்று ஒவ்வொரு வாரமும் தூள் கிளப்புகின்றார் கம்மன்பில............ 

சமஷ்டியா.............. ஒரு சட்டி கூட எங்களுக்கென்று தனியாக கொடுக்க மாட்டார்கள் எந்த பெரும்பான்மை கட்சிகளும், அரசியல்வாதிகளும்...........

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

ஒரு துப்பாக்கியையும் ஒரு  தோட்டாவையும் ஆயத்தம் செய்ய வேண்டியதுதான் மிச்சமாய் இருக்கிறது.  அதையும் ஆயத்தப்படுத்துங்கோ,....😁

முன்னர் அதற்கு எதிராக இருந்தவர்கள்.

இப்படியான ஆட்கள் இப்போது இல்லையே என்று கவலைப்படுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினி திரணகம துரோகி 

கதிர்காமர் துரோகி

நீலன் துரோகி 

ரட்ன ஜீவன் கூல் துரோகி 

சம்பந்தன் துரோகி 

கருணாநிதி துரோகி 

ப சிதம்பரம் துரோகி 

இப்போது சுமந்திரனும் துரோகி 

ஆக பாலசிங்கம் கொஞ்ச நாள் உயிரோடு இருந்து இருந்தால் அவரும் துரோகி 

ஆக யாரெல்லாம் தமிழ் மக்களுக்குள் உலக ஒழுங்கை மனதில் கொண்டு கொஞ்சம் நிதானமாக சிந்திக்கின்றார்களோ அவர்கள் எல்லாம் துரோகி. 

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் எதிர் பட்டாசு ரெஜிமென்ற்றின் "தோசை, இட்லி, குண்டு தோசை" என்று, ஒரே சரக்கை நேரத்திற்கேற்ப மாற்றிப் போடும் நிலையில்லா மூளைக்கு, இந்த செய்திக்கு அவர்கள் இட்டிருக்கும் பதில்கள் நல்ல உதாரணம்😂. இதே சுத்த இனவாதியான கம்மன்பில, 2016 இல் இருந்து புலிகள் பற்றியும், தமிழ் தேசியம் பற்றியும் சொல்லியிருப்பவை பொய் என்பார்கள், ஆனால் சுமந்திரன் பற்றி அவர் இப்பொது சொல்வது உண்மை என்கிறார்கள்!

இந்த பட்டாசு படையணியை தாயக மக்கள் கண்டுகொள்ளாமல் விட்டு 10 ஆண்டுகள் ஆகி விட்டன! புலத்தில் மட்டும் தான் இந்த சத்தம்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பகிடி said:

ரஜினி திரணகம துரோகி 

கதிர்காமர் துரோகி

நீலன் துரோகி 

ரட்ன ஜீவன் கூல் துரோகி 

சம்பந்தன் துரோகி 

கருணாநிதி துரோகி 

ப சிதம்பரம் துரோகி 

இப்போது சுமந்திரனும் துரோகி 

ஆக பாலசிங்கம் கொஞ்ச நாள் உயிரோடு இருந்து இருந்தால் அவரும் துரோகி 

ஆக யாரெல்லாம் தமிழ் மக்களுக்குள் உலக ஒழுங்கை மனதில் கொண்டு கொஞ்சம் நிதானமாக சிந்திக்கின்றார்களோ அவர்கள் எல்லாம் துரோகி. 

நிதர்சனம் 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kavi arunasalam said:

சுமந்திரனுக்கு ஆதரவாக கம்மன் பில பிரச்சாரம் செய்ய வெளிக்கிட்டாரா?

அனுராவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய தொடங்கிவிட்டார் ...பாராளுமன்ற கண்டீனில் என்னொட இருந்து சாயா குடிச்சவன் ஜனாதிபதியா வந்திட்டானே...ஏன் நான் வரமுடியாது என்ற ஆசை தான் ...இன்னும் ஐந்து வருடத்த்தில் இவர் சிங்கள மக்களிடையே இனவாதம் பேசி ஒர் அலையை உருவாக்குவார்....

ஜனாதிபதி இப்ப சகல மேடைகலிலும் புத்த பிக்குவ்ன் காலில் விழுகின்றார்....

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

முதலில்... சுமந்திரனுக்கு, மக்கள் வாக்களித்து பாராளுமன்றம் அனுப்ப வேணுமே. 😎

கட்டுக்காசு கூட... சுமந்திரனுக்கு கிடைக்குமோ என்ற திரிசங்கு  நிலையில்..
அமைச்சர் பதவி எல்லாம்... எட்டாக் கனியே. 

அப்படி சுமந்திரன்... பின் கதவால் வந்து  பாராளுமன்றம் போனால் மட்டுமே,  
சின்னக் கதிர்காமர்... சுமந்திரனின்   வாழ் நாள் கனவு நிறைவேறும். 😂

வழமையாக சிங்கள ஆட்சியாளர்கள் செய்யும் செயல் ...இது புதிதல்ல தோல்வியடையும் அரசியல் வாதிகளை
அரவணைத்து அமைச்சு பதவி கொடுத்து  தேசிய அரசாங்கம் என பிரச்சாரம் செய்வது அவர்களின் கொள்கை...

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kandiah57 said:

சம்பந்தன்.  இல்லாமல் எப்படி பின்கதவால்.  வருவது????   

தமிழ் பகுதிகளில்  கிராமத்துக்கு ஒரு கட்சி போட்டியிடுகிறார்கள் 

இந்த நிலையில் தேசிய பட்டியலும் கிடையாது   பேசாமல்   வரும் வழக்குகளை இழுத்து அடித்து பேசினால்   நிறைய உழைக்கலாம்.    🤣

அனுரா தன்னுடைய ஆட்களில் ஒருவரை ராஜினாம பண்ண வைத்து சுமத்திரனை அமைச்ச்ராக்குவார்...இலங்கையன்,சகோதரன்,பிரிவினையற்றதேசம் என்று சொன்னால் நம்ம பாடு திண்டாட்டம் தான்....

தமிழ் தேசியம்வாழ்க வளர்க‌  

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட தமிழ் அரசியல்..?
சிவனிடம் சில நாய்கள் முறைப்பாடு ஒன்றை முன் வைத்தன.
அது என்னவென்றால்,
''தங்களை யாரும் மதிப்பது இல்லை, எங்கே போனாலும் தங்களை எல்லாரும் 'அடிக்' என்பதும் 'கல்லால் எறிந்து துரத்துவது' மட்டுமல்லாமல் இந்த மனிதர்கள் எங்கள் உரிமைகளை அவமானம் செய்கின்றனர். நாங்கள் அவர்களை வீட்டில் அவர்களையும், அவர்களின் உடைமைகளையும் பாதுகாத்து வந்தும் பலன் எதுவும் இல்லை'' என்றன.
சிவன் அவர்களிடம் சென்னார்,
'நீங்கள் எல்லாரும் நாளை வாருங்கள்' என்று. அதற்கு சம்மதித்து, நாய்கள் மறுநாள் சென்றன.
அங்கே பெரிய குவியல் சோறு இறைச்சியுடன் குழைத்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிவன் அவர்களிடம்,
'முதலில் சாப்பாட்டினை சாப்பிடுங்கள் பின் கதைப்பம்' என்றார்.
நாய்கள் சாப்பிட சென்றன. அங்கே, அவைகள் சாப்பிடுவதற்குப் பதிலாக ஒன்றுக்கொன்று பெரும் சண்டை பிடித்து, கடிபட்டன. அவை சோற்று குவியலில் விழுந்து சண்டை செய்தன. சாப்பிட முடியாமலும் சோறும் இல்லாமலும் போக சிவனிடம் அவை மீண்டும் சென்றன.
'சாப்பாடு எப்படி இருந்தது? எல்லாரும் சாப்பிட்டீர்களா?, என்று சிவன் கேட்டார்.
'நாங்கள் எங்கே சாப்பிட்டோம்..? எங்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் சோறு எல்லாம் சிதறி  விட்டது' என்றன.
'இதனால்தான் உங்களை யாரும் மதிப்பது இல்லை. உங்கள் பிரச்சனையை
தீர்க்க முடியாத நீங்கள் எப்படி உங்கள் இனத்தின் பிரச்சினையை தீர்க்க வெளிக்கிட்டீர்கள்..? போங்க போங்க போய் உங்கள் வேலையை பாருங்கள்' என்றார், சிவன்.
(கதை முடிஞ்சிது)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.