Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, goshan_che said:

நீங்கள் எப்போதும் ஏழை, பணக்காரன் என்ற வர்க்க பார்வையோடு பல விடயங்களை அணுகியதை பல தடவை யாழில் கண்டுள்ளேன்.

காமாலைக்கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சசலாம். இது நீங்கள் என்மேல்கொண்டுள்ள தப்பபிப்பிராயம். தனிப்பட்ட முறையில் நாம் ஒருவரை ஒருவர் அறியோம், களத்தில் நான் எழுதிய பதிவுகளை கொண்டு அனுமானிக்கிறீர்கள். ஆனால் வேறொரு கள உறவும் இப்படி என்னை அனுமாய்க்கவில்லை. ஆகையால் இது உங்களின் தனிப்பட்ட கருத்து. இதற்கு நான் பொறுப்பாளியல்ல.  

  • Replies 804
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நிழலி

வெறும் சமூகவலைத்தளங்களில் லூசு ஆட்டம் போட்டால் கூட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுக்கும் அளவுக்கு எம் மக்களில் 10 வீதத்தினர் உள்ளார்கள். மிகவும் வெட்ககேடான, கவலைக்குரிய விடயம் 

ரஞ்சித்

அருச்சுணாவைச் சொல்கிறீர்களா? தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கும், அரசியல் பிரச்சினைக்கும், தாயக கோட்பாட்டிற்கும் எதிராக இன்றுவரை இயங்கிவரும் அநுர எனும் சிங்கள இனவாதியின் கட்சிக்கு வாக்களித்ததைக் காட்டில

பாலபத்ர ஓணாண்டி

லூசுமாதிரி கத்திக்கொண்டிருக்காதை அண்ணை சுமந்திரன் சுமந்திரன் எண்டு.. அடிக்கிற அனுர அலையில சுமந்திரனாவது மயிராவது.. ஆனாலும் இவ்வளவு ஆவது தாக்குப்பிடிக்கிறது அந்தகட்சிதான்.. ஓரளவாவது தமிழற்ற மானத்தை காத

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, goshan_che said:

நாதாயோ…

நாதாயோ….

அபி லங்கா பெள ழே 

நாதாயோ 🤣

————-

@Nathamuni எங்க சாமி போய்டீங்க…

யாழில் 90% ஆட்கள் உங்கள் வழிக்கு வந்து விட்ட இந்த அரிய காட்சியை வந்து பாருங்க தெய்வமே.

———

சிறு வயதில் பைபிளை பிரட்டும் போது வாசித்த ஒரு விடயம் பசுமரத்தாணி போல் மனதில் பதிந்தது.

தனது கைதுக்கு முன் யேசு தன் 12 சீடரையும் பார்த்து சொல்வாராம்…

நீங்கள் ஒவ்வொருவரும் அடுத்து வரும் நாட்களில் என்னை 3 தரம் மறுதலிப்பீர்கள் என.

இது தமிழ்தேசியத்தின் மறுதலிப்பு காலம் போலும்.

இதுவும் கடந்து போகும். 

🤣புரூடாஸ் நீயுமா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

348 வாக்குகளால் பாராளுமன்ற ஆசனத்தை தவறவிட்ட மஹிந்தானந்த : அரசியலிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவிப்பு

image

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே 348 வாக்குகளால் பாராளுமன்ற ஆசனத்தை தவறவிட்டதையடுத்து, தான் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். 

கண்டி மாவட்ட தேர்தல் முடிவுகளின்படி, சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட மகிந்தானந்த அலுத்கமகேயை விட 348 வாக்குகளை அதிகமாக பெற்று அனுராத ஜயரத்ன பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளார்.

இத்தோல்வியை அடுத்து மஹிந்தானந்த அலுத்கமகே அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

நாவலப்பிட்டியில் நேற்று சனிக்கிழமை (16) தமது கட்சி ஆதரவாளர்களுக்கு மத்தியில் உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார்.

நாவலப்பிட்டிய தொகுதியில் இருந்து மத்திய மாகாண சபை மற்றும் பாராளுமன்றம் என்பவற்றுக்கு பல முறை தெரிவான இவர் மாகாண சபை அமைச்சராகவும், மத்திய அரசின் பல்வேறு அமைச்சுக்களுக்குப் பொறுப்பான அமைச்சராகவும் பல முறையும் தெரிவான ஒருவர். நாவலப்பிட்டிய பிரதேசத்தில் அலுத்கமகே குடும்பம் நீண்டகால அரசியல் செய்ததாகவும் தற்போது பொதுமக்கள் தம்மை நிராகரித்துள்ளதால் தாம் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்துள்ளார்.

கடந்த ஆட்சியில் விவசாய அமைச்சராக இருந்து பாரிய அளவில் பேசப்பட்டவரும் விமர்சிக்கப்பட்டவருமான மஹிந்தானந்த அலுத்கமகே இரசாயனப் பசளை தடை தொடர்பாக அதிகளவு உருவப் பொம்மை எரிக்கப்பட்ட ஒருவராகவும் பேசப்பட்டவர் ஆவார்.

மேலும், கடந்த காலத்தில் இரண்டு முறை பாராளுமன்றம் சென்ற வேலுகுமாரின் வாக்கு வங்கி 7539ஆக வீழ்ச்சியடைந்து அவரும் தோல்வியடைந்தார்.

அதேவேளை முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஜெய்னுல் ஆப்தீன் லாபிர் ஹாஜியாருக்கு 3442 விருப்பு வாக்குகள் மட்டுமே கிடைத்து அவரும் தோல்வியடைந்தார்.

https://www.virakesari.lk/article/198967

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, நிழலி said:

மிகவும் ஆச்சரியப்படுத்தும், சந்தோசமான விடயம் இது. உண்மையிலேயே இலங்கை சனம் திருந்த தொடங்கி விட்டதா என நினைக்க வைக்கும் நிகழ்வு.

கடும் சிங்கள தேசிய உணர்வு கொண்ட, ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை படைக்கு அனுப்பிய, ஆயிரக்கணக்கான இராணுவத்தினரின் மரணங்களை கண்ட மண் மாத்தறை. தமக்குள் சிங்ஹ ரத்தம் ஓடுகின்றது, கண்டிச் சிங்களவர்களை விட அது அதிகம் என்று மார்தட்டி தம் இனத்தின் மீது extra flavor கொண்டு வாழ்கின்ற மண் அது.

அங்கு ஒரு தமிழ் வேட்பாளரை, அதுவும் பெண் வேட்பாளரை களமிறக்க துணிந்த தேசிய மக்கள் கட்சியின் முடிவும், அவ் முடிவை ஆசீர்வதித்து வெல்ல வைத்த மாத்தறை மாவட்ட சிங்கள மக்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

 

சரோஜா பால்ராஜ் மிகவும் பிரபலமும் பரிட்சயமுமான ஒரு தொழில் சங்கவாதி 20 வருடங்களாகளுக்கு மேலாக மக்கள் பிரச்சினைகளை பேசிவருபவர். 

மாத்தறை தமிழர்கள் குறைந்த அளவில் வாழ்ந்தாலும்,  அனுரா அலையில்  இன வேறுபாடின்றி ஓட்டுகள் வழங்கப்பட்டு இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

பாராளுமன்ற உறுப்பினர்களாக இலங்கை முழுவதும் தெரிவு செய்யப்பட்ட பெண்களின் விபரம். 

 

 தமிழ் பிரதேசங்களில் எல்லாக் கட்சிகளிலும் பெண்கள் போட்டியிட்ட போதிலும்  அக்கட்சிகளுக்கெல்லாம் வாக்களித்த மக்கள் பெண்களை தெரிவு செய்ய வில்லை.  வன்னி மாவட்டதில் சங்கு சின்னத்தில் போட்டியிட்ட  யுத்ததில் அங்கவீனமுற்ற பெண் போராளியை கூட மக்கள் தெரிவு செய்ய வில்லை. 

யுத்தத்தில் களப்பலியாகவும் கரும்புலியாகவும் போக  பெண்கள் தேவைப்பட்ட தமிழ் மக்களுக்கு தலைமை வகிக்க பெண்கள் தேவையில்லை போல் உள்ளது. 

Edited by island



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.