Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, satan said:

ஏன்? இதுவரை கட்டி முடித்து அபிஷேகம் செய்த விகாரைகளை அடித்து நொறுக்கி விட்டீர்களாக்கும். கூரை மீதேறி கோழி பிடிக்க தெரியாதவர் வானமேறி வைகுண்டம் போனாராம்.

இதுவரை கட்டினதை எவரும் தடுக்க முடியவில்லை.

ஆனால் இனித்தான் உங்கள் நவீன கெளதம புத்தன் அனுரவின் 2/3 ஆட்சியாயிற்றே…

இனி நீங்கள் எப்படி கோழி பிடிக்கிறீர்கள் என்பதை பார்க்க நாங்கள் ரெடி.

  • Replies 764
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நிழலி

வெறும் சமூகவலைத்தளங்களில் லூசு ஆட்டம் போட்டால் கூட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுக்கும் அளவுக்கு எம் மக்களில் 10 வீதத்தினர் உள்ளார்கள். மிகவும் வெட்ககேடான, கவலைக்குரிய விடயம் 

ரஞ்சித்

அருச்சுணாவைச் சொல்கிறீர்களா? தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கும், அரசியல் பிரச்சினைக்கும், தாயக கோட்பாட்டிற்கும் எதிராக இன்றுவரை இயங்கிவரும் அநுர எனும் சிங்கள இனவாதியின் கட்சிக்கு வாக்களித்ததைக் காட்டில

பாலபத்ர ஓணாண்டி

லூசுமாதிரி கத்திக்கொண்டிருக்காதை அண்ணை சுமந்திரன் சுமந்திரன் எண்டு.. அடிக்கிற அனுர அலையில சுமந்திரனாவது மயிராவது.. ஆனாலும் இவ்வளவு ஆவது தாக்குப்பிடிக்கிறது அந்தகட்சிதான்.. ஓரளவாவது தமிழற்ற மானத்தை காத

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, goshan_che said:

பியதாசவுக்கு போடேக்கையே அலர்ட் ஆகி இருக்கோணும்🤣

யாழ்ப்பாணத்தவர்கள் பெரும் கட்சிகளுக்கு வாக்களிக்கா விட்டாலும்    தமிழ் சுயேட்சை வாக்காளருக்கு வாக்களித்து தமது அதிருப்தியை தெரிவித்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, குமாரசாமி said:

யாழ்ப்பாணத்தவர்கள் பெரும் கட்சிகளுக்கு வாக்களிக்கா விட்டாலும்    தமிழ் சுயேட்சை வாக்காளருக்கு வாக்களித்து தமது அதிருப்தியை தெரிவித்திருக்கலாம்.

மாத்தையா எனக்கும் சிங்களம் டிக்கக் டிக்கக் புழுவாங்..

வெளிக்கிடடி வீரெகெட்டியவுக்கு🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, goshan_che said:

இனி எங்கயாவது விகாரை கட்டுறான் எண்டு தூக்கி கொண்டு வந்தியள் எண்டா கெட்ட

😂

அனுரகுமார திசநாயக்க என்றால் தாராளமாக விகாரை கட்டலாமே
அவர் கட்டினா அது இலங்கையில் மதநல்லிணக்கத்தை அல்லவா பிரதிபலிக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, விளங்க நினைப்பவன் said:

😂

அனுரகுமார திசநாயக்க என்றால் தாராளமாக விகாரை கட்டலாமே
அவர் கட்டினா அது இலங்கையில் மதநல்லிணக்கத்தை அல்லவா பிரதிபலிக்கும்

🤣 கேட்டால் இதுவரை கட்டினதை தடுத்தீர்களா என்கிறார்.

இல்லை…ஆனால் கட்டியவனுக்கு எதிராக வாக்களித்தோம்..

நீங்கள் வாக்களித்தவனே கட்டினால்?

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, goshan_che said:

மாத்தையா எனக்கும் சிங்களம் டிக்கக் டிக்கக் புழுவாங்..

அப்ப இனி டிக்கக் டிக்கக் புளுவாங் இல்லாட்டி கோவிந்தா தான்.....
எண்டாலும் எங்கட இண்டிஷ் கோவிந்தன் கைவிட மாட்டான் 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஒரு விடயம் சொல்ல வேண்டும்.

இங்கே அருச்சுனாவின் லூசு கதைகளால் அவர் எம் பி யாக பொருத்தம் இல்லை என நக்கல் அடிக்கும் @கிருபன்@நிழலி க்கு தெரியுமோ தெரியாது…..

அனுர குமாரவின் உண்மையான பெயர் அரவிந்த திசாநாயக்க….இவர் தனது தாயின் இளைய சகோதரியைத்தான் மணம் முடித்துள்ளார் ( எங்கேயும் கூட்டி வருவதும் இல்லை).

இப்படி லூசு வேலை செய்தவர் ஜனாதிபதி ஆகும் போது, லூசு மாரி கதைக்கும் அருச்சுனா எம்பி ஆகலாம்தானே.

Edited by goshan_che
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, goshan_che said:

அனுர குமாரவின் உண்மையான பெயர் அரவிந்த திசாநாயக்க….இவர் தனது தாயின் இளைய சகோதரியைத்தான் மணம் முடித்துள்ளார் ( எங்கேயும் கூட்டி வருவதும் இல்லை).

இந்த விடயம் வெளியே அரசியல் ரீதியாக வெளியே தெரியமாட்டாது என நான் நினைத்திருந்தேன்.

11 minutes ago, goshan_che said:

இங்கே அருச்சுனாவின் லூசு கதைகளால் அவர் எம் பி யாக பொருத்தம் இல்லை என நக்கல் அடிக்கும்

அப்படி பார்த்தால் நாங்கள் பழம்பெரும் அரசியல்வாதிகளின் பெயர்களை வெளியே இழுக்கவேண்டி வரும் கண்டியளோ 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
26 minutes ago, goshan_che said:

 

அனுர குமாரவின் உண்மையான பெயர் அரவிந்த திசாநாயக்க….இவர் தனது தாயின் இளைய சகோதரியைத்தான் மணம் முடித்துள்ளார் ( எங்கேயும் கூட்டி வருவதும் இல்லை).

இப்படி லூசு வேலை செய்தவர் ஜனாதிபதி ஆகும் போது, லூசு மாரி கதைக்கும் அருச்சுனா எம்பி ஆகலாம்தானே.

அரவிந்த என்பது அநுரவின் இயக்க பெயராகும், முதியன்சலாகேநுர குமார திசாநாயக்க என்பது அவரது முழு இயற்பெயராகும். ஜேவிபி உறுப்பினர்கள் தமது குடுப்ப உறுப்பினர்களை முதன்மை படுத்துவதில்லை குறிப்பாக அவர்களின் மனைவிமாரை, அநுர மாத்திரம் அல்ல ஜேவிபி எவருமே தமது மனைவிமாரை பொது வைபவங்களுக்கு அழைத்து செய்வதில்லை. அநுர தனது தாயாரின் இளைய சகோதரியை மணம் முடித்துள்ளார் என்பது இட்டுக் கட்டிய கதையாகும்.

அவரின் சின்னம்மாவின் உண்மையான கதையை கீழுள்ள காணொளியில் அநுர கூறியதை கேக்கலாம்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

இதுவரை கட்டினதை எவரும் தடுக்க முடியவில்லை.

ஆனால் இனித்தான் உங்கள் நவீன கெளதம புத்தன் அனுரவின் 2/3 ஆட்சியாயிற்றே…

இனி நீங்கள் எப்படி கோழி பிடிக்கிறீர்கள் என்பதை பார்க்க நாங்கள் ரெடி.

உங்களிடம் முறையிட வர மாடடோம் அதுமட்டும் நிட்சயம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, goshan_che said:

யாழில் 1, வன்னியில் 1, மட்டு 1

இதுதான் ஆக கூடியது என நினைத்தேன்.

யாழில் 3, அதுவும் தேர்தல் மாவட்டமே போச்சு எண்டதும்….

“தலை சுத்திடிச்சு”…..

பியதாசவுக்கு போடேக்கையே அலர்ட் ஆகி இருக்கோணும்🤣

உங்கடை கொதி விழங்குது.😄ஆனால் உண்மையில் எனக்கு விழங்காதது தமிழ் அரசியல் வாதிகளால் தான் எமக்கு இந்த அவலங்கள் இவங்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று சொன்னது சரி.அப்படி வீட்டுக்கு அனப்பினாலும் ஏச்சு விழுகுது.🤐

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, goshan_che said:

பின்வருவனவற்றில் உங்கள் நிலைப்பாடு பற்றி சொல்லுங்கோ.

1. காணாமல் போனோர் விடயம். 

2. போர் குற்ற விசாரணை

3. மாகாண சபைக்கு காணி அதிகாரம்

4. மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம்

5. மாகாண சாபைக்கு நேரடி வெளிநாட்டு முதலீட்டை இணைக்க கூடிய நிதியம் (இலங்கை திறைசேரி கண்காணிப்பில்).

6. தமிழர் நிலத்தில் புத்த கோவில்

இந்த 6 இல் எதை நீங்கள் இப்போ கை விட்டு விட்டீர்கள்?

இந்த 6 இல் எதை ஐ அனுர தருவார் என நினைக்கிறீர்கள்?

 

இவற்றில் எதையும் தருவேன் என்று அனுரா சொல்லவில்லை, தரமாட்டேன் என்று உறுதியளிக்கவுமில்லை. இதை தாருங்கள் அதை கைவிடுகிறோமென மக்கள் கூறவுமில்லை, எதிர்பார்க்கவுமில்லை. இலங்கை முழுக்க உள்ள எத்தனையோபேர் எச்சரித்திருந்தும் மக்கள் அவரை தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்கள் மாற்றத்தை எதிர்பார்த்து அனுராவை நம்பி தெரிந்தெடுத்தார்கள். அவர்களின் வேணவா அனுராவுக்கு புரியும், தன்னாலியன்றதை முயற்சித்து செய்வார். முன் இருந்த ஆட்சியாளர்கள் எத்தனையோ சொன்னார்கள், செய்தார்களா? சொல்பவர் செய்வதில்லை செய்பவர் சொல்வதில்லை. பொறுத்திருங்கள், மக்களின் தெரிவை எள்ளி நகையாடாதீர்கள். இதெல்லாம் சுமந்திரனை தூக்கியெறிந்த மக்கள் மேல் உள்ள வக்கிரம் அனுராவை வசை பாடுகிறார்கள். சரி அனுராவை தெரிந்தது பிழையென்றால், உங்கள் தெரிவு யாராக இருந்திருக்க வேண்டுமென்று சொல்லித்தான் தொலையுங்களேன்! இன்னொரு சிங்களவர்தானே, அரியம் நின்றபோதும் நகைத்தீர்கள். அனுராவை தெரிந்தபோதும் வசை பாடுகிறீர்கள். இதைத்தான்  மனதுக்குள் உள்ளதை வெளியிட விரும்பாமல் வெதும்புவது என்பது.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வன்னியில் புதிய முகங்கள் மூவர்: மிக குறைந்த வாக்கு பெற்ற செல்வம்

image

பாராளுமன்றத் தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியில் புதிய முகங்களாக மூவர் பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கின்றார்கள்.

தேசிய மக்கள் சக்தி சார்பில் செ.திலகநாதன் எனப்படுகின்ற சக்தி டொக்டர் மிருக வைத்தியராவார்.

கடந்த முறை இவர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஊடாக தேர்தலில் பங்கேற்று அதிக விருப்பு வாக்குகளை பெற்றிருந்த போதிலும் பாராளுமன்றத்துக்கு செல்ல முடியாத நிலை காணப்பட்டிருந்தது. இவர் தற்போது தேசிய மக்கள் சக்தியின் ஊடாக தேர்தலில் போட்டியிட்டு 10652 விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகி இருக்கின்றார்.

இதேவேளை தேசிய மக்கள் சக்தியின் ஊடாக பாராளுமன்றத்துக்கு தெளிவாகியுள்ள ம.ஜெகதீஸ்வரன் ஆசிரிய சேவா சங்கத்தின் வடமாகாண தலைவராகவும் தேசியமட்ட உப தலைவராகவும் செயற்பட்ட நிலையில் கடந்த அரசாங்கங்களுக்கு எதிராக ஆசியர்கள் சார்பான பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று ஆசிரியர்களுடைய கோரிக்கைகளை முன் வைத்து இருந்தார். இவர் தற்போது 9280 விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெளிவாகியுள்ளார்.

மற்றையவர் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரவிகரன். இவர் பல்வேறு மக்கள் சார் போராட்டங்களில் பங்கேற்று இருந்ததோடு குருந்தூர்மலை உட்பட வடக்கில் மேற்கொள்ளப்பட்ட பல போராட்டங்களில் முன்னின்று செயல்பட்ட ஒருவராக காணப்பட்ட நிலையில் பல தடவை பாதுகாப்பு தரப்பினரோடு முரண்பட்டு பல வழக்குகளையும் சந்தித்து இருக்கின்றார். இவர் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினராகவும் செயல்பட்டிருந்தார். இம்முறை பாராளுமன்ற தேர்தலில் 11215 விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளார்.

இதேவேளை பழைய முகங்களாக ரிசார்ட் பதியுதீன் இம்முறை 21,018 விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகி இருந்த போதிலும் கடந்த முறை 28 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகளை பெற்று பாராளுமன்றத்துக்கு சென்றிருந்தார். இவரின் தற்போதைய வாக்கு வீதம் சரிந்து இருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

கே. கே மஸ்தான் கடந்த இரண்டு தடவைகள் பாராளுமன்றத்திற்கு சென்று ராஜாங்க அமைச்சராக இருந்த போதிலும் தற்போது புதிய சின்னமாக இலங்கை தொழிலாளர் கட்சியினூடக கங்காரு சின்னத்தின் ஊடாக போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவாகி இருக்கின்றார். 

மஸ்தானை பொறுத்தவரை குறித்த கட்சியையும் சின்னத்தையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு பாரிய சிரமத்தை எதிர்கொண்ட நிலையிலும் கூட அவருடைய பிரசாரத்தின் யுக்தியின் அடிப்படையில் அவர் வெற்றி வாய்ப்பை அடைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை 13511 க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று அவர் பாராளுமன்றத்துக்கு தெரிவாக இருப்பதோடு கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் அவர் இதே அளவான விருப்பு வாக்குகளை பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அடுத்து செல்வம் அடைக்கலநாதன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினூடாக போட்டியிட்டு வடக்கு கிழக்கில் ஒரே ஒரு ஆசனத்தின் ஊடாக பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கின்றார்.

இவர் 25 வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து தற்போது மீண்டும் 5 வருட பாராளுமன்ற உறுப்புரிமையை அலங்கரிப்பதற்காக செல்கின்றார்.

எனினும் சடுதியான வாக்கு சரிவை சந்தித்து 5695 வாக்குகளை பெற்று இம்முறை பாராளுமன்றம் செல்லும் இவர், அகில இலங்கை ரீதியில் இம்முறை பாராளுமன்றத்துக்கு தெரிவானோரில் மிகக் குறைந்த வாக்குகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/198892

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, goshan_che said:

இப்படி லூசு வேலை செய்தவர் ஜனாதிபதி ஆகும் போது, லூசு மாரி கதைக்கும் அருச்சுனா எம்பி ஆகலாம்தானே.

எதுக்கெடுத்தாலும் Facebook Live இல் போகும் பைத்தியருக்கு புலம்பெயர் அபிமானிகள் பலர் உள்ளனர். அதிலும் பெண்கள் அதிகம்! சீரியல் பார்த்தும், கொசிப் கதைத்தும் சந்தோசத்தை அடைபவர்களுக்கு அருச்சுனா ஒரு தெரிவுதான்! இவர் தன்னை மாற்றாவிட்டால், காலம்பூராவும் வழக்குகளில் இழுபட்டுக்கொண்டிருப்பார். அவற்றை விடுப்புப் பார்க்கும் கூட்டத்திற்கு நல்ல தீனி கிடைக்கும்!

 




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வாட்ஸப்பில் இருந்து..   சுமந்திரனுக்கு எதிரான மக்களின் ஆணை தெளிவானது. அவர், அடுத்த ஐந்து ஆண்டுகள் பிரதிநிதித்துவ அரசியலுக்கு அவசியமில்லாதவர் என்ற தீர்ப்பு எழுதப்பட்டிருக்கின்றது. அதனை தலை வணக்கி ஏற்பதுதான் அறமுள்ள அரசியல்வாதியாக அவர் செய்ய வேண்டியது. தேசியப் பட்டியல் ஆசனம் தொடர்பிலான உரையாடல்களில் தன்னுடைய பெயர் வருவதை அவர் ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில், தேர்தலொன்றில் போட்டியிட்டு தோற்கடிக்கப்பட்ட ஒருவர், தேசியப் பட்டியலைக் கோருவது ஜனநாயக முரண் என்று தொடர்ச்சியாக பேசி வந்திருக்கின்ற சுமந்திரன், அந்த வாதம் தனக்கும் பொருந்தும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். தேசியப் பட்டியலுக்காக இளைஞர்- குறிப்பாக ஆற்றலுள்ள பெண் ஒருவரை நியமித்து, பெண் பிரதிநிதித்துவத்தை காப்பதுதான், தமிழரசுக் கட்சி முன்னுள்ள மிகப்பெரும் கடப்பாடு. அந்தக் கடப்பாட்டினை உறுதி செய்வதில் மத்திய குழு, அரசியல் குழு மற்றும் நியமனக்குழு உறுப்பினராக சுமந்திரன் அர்ப்பணிப்போடு செயற்பட வேண்டும். சுமந்திரன் பிரதிநிதித்துவ அரசியலில் ஆளுமை செலுத்தாத தமிழ்த் தேசிய அரசியல் களம், புதிய பரீட்சார்த்தங்கள் பக்கத்துக்கு நகர வேண்டும். கடந்த பத்து ஆண்டுகளாக சுமந்திரனை மையப்படுத்திய தமிழ்த் தேசிய அரசியல் களம் இனியாவது, அதனைக் கடந்து பரந்துபட்ட பார்வை - செயற்பாட்டுத் தளத்துக்குள் செல்ல வேண்டும். சற்று ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் சுமந்திரன்... நீங்கள் கடந்த காலத்தில் அளவுக்கு அதிகமாக ஓடிக் களைத்து விட்டீர்கள். எல்லாமும் உங்களைச் சுற்றியும் இயங்கி விட்டது. அந்த இயக்கத்துக்கும் ஓர் இடைவெளி அவசியம். Purujoththaman Thangamayl Copied from FB
    • எதுக்கெடுத்தாலும் Facebook Live இல் போகும் பைத்தியருக்கு புலம்பெயர் அபிமானிகள் பலர் உள்ளனர். அதிலும் பெண்கள் அதிகம்! சீரியல் பார்த்தும், கொசிப் கதைத்தும் சந்தோசத்தை அடைபவர்களுக்கு அருச்சுனா ஒரு தெரிவுதான்! இவர் தன்னை மாற்றாவிட்டால், காலம்பூராவும் வழக்குகளில் இழுபட்டுக்கொண்டிருப்பார். அவற்றை விடுப்புப் பார்க்கும் கூட்டத்திற்கு நல்ல தீனி கிடைக்கும்!  
    • பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், நிஹாரிகா ராம ராவ் பதவி, பிபிசி செய்தியாளர் பல்வேறு நாடுகளில் பெண்ணுரிமைகள் மீதான தாக்குதல் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகள் போன்றவை அவர்களை ஒரு இயக்கம் அமைக்க வழிவகுத்துள்ளது. தென் கொரியாவில் உருவான 4B இயக்கத்தினால் (4B Movement) இந்த இயக்கம் உந்துதல் பெற்றிருக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனல்ட் டிரம்ப் வெற்றிபெற்ற அடுத்த நாள், 4B இயக்கத்தைப் பற்றி கூகுளில் 2 லட்சம் நபர்களுக்கு மேல் தேடியுள்ளனர். சில பெண்கள் இந்த 4B இயக்கத்தில் பங்கேற்கப் போவதாகவும் அறிவித்தனர். இந்த இயக்கத்தைப் பின்பற்றும் பெண்கள் ஆண்களோடு உடலுறவு கொள்வதில்லை என்று கூறுகின்றனர். இந்த இயக்கத்தின் மூலம் அமெரிக்கப் பெண்கள் ஏன் ஈர்க்கப்படுகின்றனர்? இந்த இயக்கத்தின் எந்தெந்த நோக்கங்கள் தற்போது விவாதப் பொருளாகியுள்ளன?   4B இயக்கம் என்றால் என்ன? 4B இயக்கம் தென்கொரியாவில் தொடங்கியது. இந்த இயக்கம், அந்த நாட்டில் ‘மீ டூ’ (Me Too) இயக்கத்திலிருந்து உருவானது. தென் கொரியாவில் காணப்படும் பாலினச் சமத்துவமின்மைக்கு எதிராகப் பெண்ணியச் செயற்பாட்டாளர்கள் இந்த இயக்கத்தை முன்னெடுத்தனர். 4B இயக்கத்தில் உள்ள 4B என்பது எதைக் குறிக்கின்றன? பி ஹான் (திருமணம் வேண்டாம்) பி யேனி (டேட்டிங் வேண்டாம்) பி செக்ஸ் (உடலுறவு வேண்டாம்) பி சுல்சன் (குழந்தைகள் வேண்டாம்) அதாவது, இந்த இயக்கத்தின் நோக்கம், திருமணம், டேட்டிங், உடலுறவு, குழந்தை பெற்றுக் கொள்வது போன்றவற்றில் ஈடுபடாமல் இருப்பது. இத்தகைய தீவிரமான முடிவை தென் கொரியப் பெண்கள் எடுப்பதற்கு என்ன காரணம்? அவர்களை இப்படி முடிவெடுக்க வைத்த காரணிகள் என்ன? இந்த இடத்தை அடைய அவர்களை எது ஊக்கப்படுத்தியது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 4B இயக்கம் தென்கொரியாவில் தொடங்கியது அமெரிக்கப் பெண்களுக்கு இருக்கும் அச்சம் என்ன? அமெரிக்காவில் 4B இயக்கம் வேகமெடுக்க, அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பின் வெற்றி முக்கியக் காரணமாக உள்ளது. அவருடைய தேர்தல் பிரசாரத்தின் போது, கருக்கலைப்புக்கான உரிமையைக் கூட்டாச்சி அந்தஸ்திலிருந்து நீக்குவதாக அறிவித்திருந்தார். அவருடைய இந்த அறிவிப்பு பெண்களுக்கு கருக்கலைப்பு உரிமையை வழங்குகிறதா? அல்லது நீக்குகிறதா? அதனை அந்தந்த மாகாணங்கள் தீர்மானிக்கும். குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கருக்கலைப்பை வெளிப்படையாக எதிர்க்கின்றனர். டிரம்ப் வெற்றி பெற்ற மாகாணங்கள் கூட கருக்கலைப்பு உரிமைக்கு எதிராக உள்ளன. டிரம்பிற்கு வாக்களித்த ஆண்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ள மாட்டோம் என்று சில பெண்கள் அறிவித்திருந்தனர். அவர்களது உரிமையை அங்கிகரிக்காத ஆண்களுடனான காதல் உறவுகளிலிருந்து அவர்கள் விலகப் போவதாகக் கூறுகின்றனர். ‘டிக்டாக்’ போன்ற சமூக வலைதளச் செயலிகளிலும் இந்தப் போக்குப் பரவியுள்ளது. இதற்கு மேலும் வலிமை சேர்க்கும் விதமாகச் சமூக வலைதளத்தில் செல்வாக்கு உடையவரான நிக் ஃபண்டெஸ் தனது எக்ஸ் வலைதளத்திப் பக்கத்தில் ஒரு பதிவு செய்துள்ளார். அதில் அவர், ‘உங்கள் உடல் மீது எங்களுக்கு எப்போதும் அதிகாரம் உள்ளது,’ என அதில் குறிப்பிட்டுள்ளார். நிக் ஃபண்டெஸ் டிரம்பின் மிகப்பெரிய ஆதரவாளர். அவர் தனது சமூக வலைதளத்தில் டிரம்பிற்காகப் பிரசாரங்களையும் மேற்கொண்டார். நிக்கின் பதிவு பல இளைஞர்களால் ஆதரிக்கப்பட்டது. அந்தப் பதிவு 35,000 முறை மறுபதிவு செய்யப்பட்டுள்ளது. 26 வயதான அலெக்ஸா, இந்த இயக்கம் பற்றி டிரம்பின் வெற்றிக்குப் பிறகு பல காணொளிகளை உருவாக்கியுள்ளார். அமெரிக்காவில் உள்ள பெண்களை அவர்களது உரிமைக்காக இந்த இயக்கத்தில் இணைய அவர் அழைப்பு விடுத்துள்ளார். என்.பி.சி செய்தி முகமையுடனான நேர்காணலில், உங்கள் வாழ்நாள் முழுவதும் இந்த இயக்கத்தில் பங்கேற்கப் போகிறீர்களா? என்று கேட்டபோது, அவர், "இல்லை. நாங்கள் எங்கள் உரிமை மீறப்படுவதற்கு எதிராகப் போராட விரும்புகிறோம். எங்களுக்கு கருக்கலைப்பு உரிமை இல்லையெனில், நாங்கள் உடலுறவு கொள்ள ஒப்புக்கொள்ள மட்டோம். டிரம்பின் வெற்றிக்குப் பின், நாங்கள் இந்த நாட்டில் பாதுகாப்பாக உணரவில்லை," என்கிறார். இதுகுறித்துப் பேசிய பெண்ணியச் செயற்பாட்டாளர், சுனிதா, “பெண்களின் குழந்தை பெற்றுக்கொள்ளும் உரிமை அமெரிக்காவில் அரசியலாக்கப்படுவது புதிதல்ல. பல தசாப்தங்களாக நடந்துகொண்டிருக்கும் அரசியலின் ஒரு பரிமாணமே. இருப்பினும், ஆண்களுடனான உறவை முற்றிலுமாகத் துண்டிப்பது தற்காலத்தில் ஒரு புதிய செய்தி. இந்த இயக்கம் தன்னிச்சையாக உருவாகவில்லை. இது பெண்ணுரிமைகள் மறுக்கப்பட்டதற்கான எதிர்வினை. அது இணையத்தின் மூலம் நடைபெறுவதால் அதனுடைய தாக்கத்தை அறியமுடியவில்லை. ஆனால், இந்தச் செயற்பாட்டாளர்கள் இணையத்தில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர்,” என்கிறார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 4B இயக்கத்தில் பங்குபெறும் பெண்கள், நாடு முழுவதும் தங்கள் உரிமைகளுக்கு எதிராக வளர்ந்துவரும் சமூக மற்றும் அரசியல் ரீதியான அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடுகின்றனர் 4B இயக்கம் உருவானது எப்படி? 2019-ஆம் ஆண்டு பர்னிங் சன் (Burning Sun) அவதூறு தென் கொரியாவை உலுக்கியது. கங்னம் மாவட்டத்தில் (Gangnam) உள்ள பெண்களுக்குப் போதை வஸ்துக்கள் கொடுக்கப்பட்டு, அவர்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, அதைப் படம்பிடித்து, அவர்கள் துன்புறுத்தப்பட்டது காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது. இந்தப் பாலியல் குற்றத்தில் பல தென் கொரிய பிரபலங்களின் பங்கு இருந்தது, அந்த நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பெண்களுடன் உடலுறவு கொள்ளும்போது, அவர்களுக்குத் தெரியாமல் தனிப்பட்ட முறையில் அவர்களைப் படம் எடுக்கும் செயல்முறை தென் கொரியாவில் 'மோல்கா' (molka) என்று அழைக்கப்படுகிறது. இது தென் கொரியா முழுவதும் அடிக்கடி நிகழும் குற்றமாகும். பல குற்றவாளிகள் பொது ஓய்வறைகள், தங்கும் விடுதிகள், மற்றும் வேறு பல இடங்களில் ரகசிய கேமராக்களைப் பொருத்திப் பெண்களை அவர்களுக்குத் தெரியாமல் படம்பிடித்து அவற்றை இணையத்தில் வெளியிட்டனர். இந்தக் குற்றம் வெளிச்சத்துக்கு வந்ததும், மோல்காவால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பெண்கள் வீதிகளில் இறங்கி ‘மீ டூ’ என்ற பெயரில் போராட்டம் நடத்தினர். இந்த குற்றச் செயல்களைத் தடுக்க அந்நாட்டு அரசு சட்டம் கொண்டு வந்தது. தென் கொரியாவில், ஆண்களது ஊதியத்தைவிட பெண்களுக்கான ஊதியம் மூன்றில் ஒரு பங்கு குறைவு. தென் கொரியா தான் ஆண்-பெண் ஊதியத்தில் இவ்வளவு வித்தியாசம் உள்ள பணக்கார நாடு. இந்த இடைவெளியைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், மாற்றங்கள் மிகவும் மெதுவாகவே நடந்து வருகின்றன.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 4B இணையத்தை முதன்மையாகக் கொண்ட ஒரு இயக்கம். இந்த இயக்கத்தில் இயங்குபவர்கள் அவர்களைப் பற்றிய தகவல்களை வெளியிடுவதில்லை மாற்றம் சாத்தியமா? தேர்தலுக்கு முன்னதாக, தென் கொரியாவின் தற்போதைய அதிபர், யூன் சுக் யோல், பாலியல் சமத்துவத்திற்காக அமைக்கப்பட்டுள்ள அமைச்சகத்தை நீக்குவதாகவும், அரசாங்கத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதாகவும் பல முறை தெரிவித்திருந்தார். அந்நாட்டில் குறைந்து வரும் மக்கள்தொகைக்கு பெண்ணியவாதிகளே காரணம் என அவர் குற்றம் சாட்டினார். ஆனால், 4B இயக்கத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள், அரசாங்கம் அவர்களைக் குழந்தை பெற்றெடுக்கும் இயந்திரமாகக் கருதுவதாகக் கூறுகின்றனர். தென் கொரியாவில், பெண்ணியத்திற்கு எதிரான ஆணாதிக்கம் வேரூன்றி இருப்பதாகத் தென்கொரியாவின் பிபிசி செய்தியாளர் ரேச்சல் லீ தெரிவிக்கிறார். 4B இயக்கத்தில் பங்குபெறும் பெண்கள், நாடு முழுவதும் தங்கள் உரிமைகளுக்கு எதிராக வளர்ந்துவரும் சமூக மற்றும் அரசியல் ரீதியான அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடும் விதமாக ஆண்களுடனான பாலியல் உறவை முற்றிலும் தவிர்ப்பதாகக் கூறுகின்றனர். 4B இணையத்தை முதன்மையாகக் கொண்ட ஒரு இயக்கம். இந்த இயக்கத்தில் இயங்குபவர்கள் அவர்களைப் பற்றிய தகவல்களை வெளியிடுவதில்லை. இது ‘மீ டூ’ (MeeToo) இயக்கத்திலிருந்து உருவான ஒரு சிறிய இயக்கமாகும். இது தென்கொரியாவில் 2010 முதல் 2016 வரை வலுவாகப் பரவியது. கூடுதலாக, ‘எஸ்கேப் தி கார்செட்’ (Escape the Corset) என்ற பெயர் கொண்ட இயக்கமும் அந்நாட்டில் பிரபலமடைந்தது. தென் கொரியப் பெண்களுக்கு விதிக்கப்பட்டக் கடுமையான அழகு சார்ந்த நிபந்தனைகளுக்கு எதிராக இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்திற்கு எதிரானவர்கள், தென் கொரியாவில் இந்த இயக்கத்தின் முக்கியத்துவம் மிகச் சொற்பமானது என்றும், பாலினச் சமத்துவத்தை அடைவதில் அதன் இலக்கை இது அடையவில்லை எனவும் கூறுகின்றனர். ஆண்களுடன் உறவுகொள்ளாமல், ஆனால் சமூகத்தில் அவர்களுடன் தங்களுக்கான உரிமைகளை கோருவதற்கு போராடுவதன் மூலம் சமத்துவதிற்கான மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என அவர்கள் கூறுகின்றனர். https://www.bbc.com/tamil/articles/c36p8zg2dnjo
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.