Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசின் அரசியல் குழுக்கூட்டம் இன்று; தேசியப் பட்டியல் ஆசனம் தனக்கு வேண்டும் என மாவை எழுத்து மூலம் கோரிக்கை !

mavai.jpg

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பி. விவகாரத்தைத் தீர்மானிப்பதற்காக இன்று தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூடுகின்றது.

வவுனியாவில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் அரசியல் குழுவில் அங்கம் வகிக்கும் மாவை சேனாதிராஜா, சி.வி.கே.சிவஞானம், ப.சத்தியலிங்கம், சிவஞானம் சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், கி.துரைராஜசிங்கம், தவராசா கலையரசன், கவீந்திரன் கோடீஸ்வரன், சண்முகம் குகதாசன் மற்றும் குலநாயகம் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி, ஒரு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையைப் பெற்றிருந்தது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியலில் முதலாவது பெயராக மாவை சேனாதிராஜா குறிப்பிடப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தன்னை நியமிக்குமாறு கட்சியின் பதில் செயலாளர் ப.சத்தியலிங்கத்திடம், மாவை சேனாதிராஜா எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த சிலரும் தமக்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமை வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளனர்.

இந்த விவகாரத்துக்குத் தீர்வு காணும் வகையில் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு இன்று கூடுகின்றது.
 
https://akkinikkunchu.com/?p=299504

  • கருத்துக்கள உறவுகள்

//தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு ஏற்கனவே கட்சிகளால் பரிந்துரைக்கப்பட்டவர்கள் அல்லது சமீபத்திய பொதுத் தேர்தலில் தேர்தலில் வேட்பாளர் பட்டியலில் உள்வாங்கப்பட்டு தெரிவு செய்யப்படாதவர்கள் மட்டுமே தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களாக பாராளுமன்றத்திற்கு பெயரிட முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.//

மாவைக்கு அந்தச் சந்தர்ப்பம் கிடைக்காது என நினைக்கின்றேன்.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக்கட்சி அரசியல் குழுக்கூட்டம் ஆரம்பம்!

November 17, 2024  11:59 am

தமிழரசுக்கட்சி அரசியல் குழுக்கூட்டம் ஆரம்பம்!

தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா, ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தற்போது இடம்பெற்று வருகின்றது.

கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்று வரும் இக்கூட்டத்தில், சி.வி.கே.சிவஞானம், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், குகதாசன், இரா.சாணக்கியன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எ.சுமந்திரன், த.கலையரசன் மற்றும் துரைராஜசிங்கம், குலநாயகம் செயலாளர் ப.சத்தியலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதேவேளை குறித்த கூட்டத்தில் தமிழரசுக் கட்சிக்கு பாராளுமன்றத் தேர்தலில் கிடைக்கப்பெற்ற தேசிய பட்டியல் ஆசனம் யாருக்கு வழங்க வேண்டும் என்பது தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
https://tamil.adaderana.lk/news.php?nid=196018

  • கருத்துக்கள உறவுகள்

hq720.jpg?sqp=-oaymwEhCK4FEIIDSFryq4qpAx

இன்று ...
எத்தனை தலை உருளப் போகுதோ... 
எத்தனை சட்டை  கிழியப்  போகுதோ...
எத்தனை வேட்டி அவிழப்   போகுதோ...
எத்தனை கோவணம் உருவப்படப் போகுதோ...
ஞாயிற்றுக்கிழமை நமக்கு.. "என்ரரெய்ன்மென்ட்" இருக்கு.  😂  🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பின்கதவால் மறுபடியும் சுமந்திரன்? அம்பலமாகும் சதி!

Vhg நவம்பர் 17, 2024
1000377803.jpg

தமிழ் மக்களால் ஜனநாயகரீதியாகப் புறக்கணிக்கப்பட்ட சுமந்திரனை மறுபடியும் மக்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றம் அனுப்ப சதிகள் நடைபெற்றுவருவதாக தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் குற்றம் சுமத்துகின்றார்கள்.

தமிழரசுக் கட்சிக்குள் திட்டமிட்டு சுமந்திரனால் புகுத்தப்பட்ட நபர்களை வைத்து சுமந்திரனுக்கே தேசியப் பட்டியல் ஆசணம் வழங்கப்படவேண்டும் என்று அழுத்தங்களை அவர் வழங்கிவருவதாகவும் கட்சி உறுப்பினர்கள் கூறுகின்றார்கள்.

மக்கள் ஆணை வழங்காமல் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லமாட்டேன் என்று சுமந்திரன் ஊடகங்களிடம் கூறியிருந்தபோதும், கட்சி முடிவுசெய்தால் கட்சியின் முடிவுக்குக் கட்டுப்படுவேன் என்றும் கூறி, தேசியப்பட்டியல் நியமனத்திற்கான தனது நகர்வை வெளிப்படுத்தியும் இருந்தார்.

அதேவேளை, மாவை சேனாதிராஜா, சத்தியலிங்கம் போன்ற தமிழ் மக்கள் மத்தியில் பிரபல்யம் இல்லாத, தமிழ் மக்களுக்கு எந்தவிதத்திலும் பிரயோஜனம் இல்லாத நபர்களின் பெயர்களை தேசியப்பட்டியலுக்கு முன்மொழிந்து, இவர்களைவிட சுமந்திரனே மேல் என்ற எண்ணப்பாட்டை ஏற்படுத்தும் சதிகளும் நடந்துகொண்டிருக்கின்றன.

இவை அனைத்தையும் விட, தமிழசுக் கட்சி தயாரித்த தேசியப் பட்டியல் பெயர்விபரக் கடிதத்தை தேர்தல் ஆணையாளருக்கு தமிழரசுக் கட்சியின் செயலாளர் அனுப்பவேயில்லை என்று தற்பொழுது தெரியவந்துள்ளது.

பட்டியலைத் தயாரித்து கடிதத் தலைப்பில், செயலாளர் சத்தியலிங்கம் கையொப்பம் இட்டு அந்தக் கடிதம் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டனவே தவிர, அந்தக் கடிதத்தை அவர் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பிவைக்கவேயில்லை.

இது கூட சுமந்திரனை தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் அனுப்புவதற்கான சதி என்றே கூறுகின்றார்கள் கட்சி உறுப்பினர்கள்.

யாழ்மக்கள் இத்தனை தண்டணை கொடுத்தும் தமிழரசுக் கட்சி இன்னமும் திருந்தவில்லை என்பது கவலையளிப்பதாகக் கூறுகின்றார் ஒரு முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர்.
 
https://www.battinatham.com/2024/11/blog-post_310.html

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, கிருபன் said:

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியலில் முதலாவது பெயராக மாவை சேனாதிராஜா குறிப்பிடப்பட்டுள்ளார்.

large.IMG_7557.jpeg.f7ab2029971ef23ff4c4

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, கிருபன் said:

தமிழரசின் அரசியல் குழுக்கூட்டம் இன்று; தேசியப் பட்டியல் ஆசனம் தனக்கு வேண்டும் என மாவை எழுத்து மூலம் கோரிக்கை

எனக்கு ஒண்டுமே வேண்டாம். இந்தத் தலைவர் பதவியும் வேண்டாம் என்று தூக்கி எறிஞ்சு  போட்டு  ஆஸ்பத்திரியிலே போய்ப் படுத்த மனுசன் இப்ப எதுக்கு திரும்பி வந்திருக்கு?

புரியுது. சுமந்திரனுக்கு எப்பிடியும்  இந்தத் தடவை ஆப்பு அடிச்சே தீருவேன் என்று மனுசன் வந்திருக்குது போலே. 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் புடுங்குப்பாடுகள் எல்லாம் மட்டக்களப்பு மக்களுக்கு தெரியுமோ.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, சுவைப்பிரியன் said:

இந்தப் புடுங்குப்பாடுகள் எல்லாம் மட்டக்களப்பு மக்களுக்கு தெரியுமோ.

மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு சேரவேண்டிய, 
தேசியப் பட்டியல் ஆசனத்தை  எடுத்து விட்டு... 
மக்களால் நிராகரிக்கப் பட்டவர்கள் 
அதனை திருடி... சுகபோகம் அனுபவிக்க அடிபடுகிறார்கள்.

அதனை ஒரு பெண் உறுப்பினருக்கோ, 
மட்டக்களப்பு  மைந்தனுக்கோ கொடுப்பதுதான்... நியாயமானது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, சுவைப்பிரியன் said:

இந்தப் புடுங்குப்பாடுகள் எல்லாம் மட்டக்களப்பு மக்களுக்கு தெரியுமோ.

என்ன பிரதேச வாத்ததை இழுத்து விடலாம் என்று யோசிக்கிறீயள் போல‌😅

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, putthan said:

என்ன பிரதேச வாத்ததை இழுத்து விடலாம் என்று யோசிக்கிறீயள் போல‌😅

 சுவைப்பிரியன் பிரதேச வாதத்தை மனதில் வைத்து  எழுதியிருப்பார் என நினைக்கவில்லை.  
இந்த  தேசியப் பட்டியல் ஆசனம்... மட்டக்களப்பு மக்கள் போட்ட வாக்குகளால் தமிழரசு கட்சிக்கு  கிடைத்தது.
அதுதான், சுவைப்பிரியன்... இது மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு தெரியுமோ என்று கேட்டவர் என நினைக்கின்றேன்.    

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

 தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தன்னை நியமிக்குமாறு கட்சியின் பதில் செயலாளர் ப.சத்தியலிங்கத்திடம், மாவை சேனாதிராஜா எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த சிலரும் தமக்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமை வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளனர்.

என்னதொரு ஈனப்பிறவிகள்? பட்டும் திருந்தவில்லை. இனத்தின் பெயரால் சுகபோக வாழ்க்கை வாழ்த்துடிக்கும் சூடு சுரணை இல்லாத கூட்டம்.😡
உங்களைப்போன்றவர்களால்த்தான்  மக்கள் மாற்றான் கட்சி தலைவர்களை தேர்ந்தெடுக்கின்றார்கள்.

நியாயப்படி பார்த்தால் கிழக்குமாகாணத்திற்கே அனைத்து நியமனங்களும் செல்ல வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கூத்துக்களை பார்த்தால் அடுத்த தேர்தலில் மட்டக்களப்பும் சிங்களவனிடம் பறி போகும்.

இந்த கேவலங்களுடன் ஒப்பிடும்போது சிங்களவர்களுக்கு என்ன குறை என்று சொல்லி இவர்கள் மேல் உள்ள வெறுப்பிலேயே தமிழர்கள் சிங்களவர்களுடன் ஒட்டியுறவாட போகிறார்கள்.

இலங்கையில் தமிழர்களையும் சிங்களவர்களையும் சேர்த்து வைத்து இன நல்லிணக்கத்தை ஏற்படுத்திய பெருமை கண்டிப்பா அநுரவுக்கு போகாது தமிழரசு கட்ச்சிக்கே அந்த அந்த வரலாற்று பெருமை போய்சேரும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kavi arunasalam said:

large.IMG_7557.jpeg.f7ab2029971ef23ff4c4

நிலத்தில் வடிந்திருக்கும்  இரத்தத்த, (புலம்பெயர்ஸ் போலித்  டமில் தேசிய வியாபார) நாய்கள் நக்குவதாகப் போட்டிருந்தால் இன்னும் சிறப்பு.  

5 hours ago, valavan said:

இந்த கூத்துக்களை பார்த்தால் அடுத்த தேர்தலில் மட்டக்களப்பும் சிங்களவனிடம் பறி போகும்.

இந்த கேவலங்களுடன் ஒப்பிடும்போது சிங்களவர்களுக்கு என்ன குறை என்று சொல்லி இவர்கள் மேல் உள்ள வெறுப்பிலேயே தமிழர்கள் சிங்களவர்களுடன் ஒட்டியுறவாட போகிறார்கள்.

இலங்கையில் தமிழர்களையும் சிங்களவர்களையும் சேர்த்து வைத்து இன நல்லிணக்கத்தை ஏற்படுத்திய பெருமை கண்டிப்பா அநுரவுக்கு போகாது தமிழரசு கட்ச்சிக்கே அந்த அந்த வரலாற்று பெருமை போய்சேரும்.

100%

  • கருத்துக்கள உறவுகள்

இனி சும் அல்லக்கைகள் பலாக்காய்கள் நக்க வேண்டியது தான்

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் ஒரு பெண் உறுப்பினருக்கு போனால் நன்று. 
 இவர்களின் குதறலை அடுத்த தேர்தல்களில் தமிழ் மக்கள் வாக்குகள் மூலம் பதில் சொல்ல வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

 சுவைப்பிரியன் பிரதேச வாதத்தை மனதில் வைத்து  எழுதியிருப்பார் என நினைக்கவில்லை.  
இந்த  தேசியப் பட்டியல் ஆசனம்... மட்டக்களப்பு மக்கள் போட்ட வாக்குகளால் தமிழரசு கட்சிக்கு  கிடைத்தது.
அதுதான், சுவைப்பிரியன்... இது மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு தெரியுமோ என்று கேட்டவர் என நினைக்கின்றேன்.    

அதுதான் சிரிப்பு அடையாளம் போட்டேன் அவர் அப்படி சொல்லியிருக்க மாட்டார் 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, putthan said:

அதுதான் சிரிப்பு அடையாளம் போட்டேன் அவர் அப்படி சொல்லியிருக்க மாட்டார் 

ஓ…. அப்பிடியா. நான் தான் தவறாக புரிந்து விட்டேன் புத்தன். 👍🏽🙂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

இனி சும் அல்லக்கைகள் பலாக்காய்கள் நக்க வேண்டியது தான்

கவி அருணாசலத்தின் காட்டூனிற்கு நான் எழுதிய   பதில் மீராவுக்குச் சுட்டுவிட்டது . 

 ஐ யாம் சாரி பிறதர்  மீரா,.... அது பொதுவாக எழுதப்பட்டது. தாங்கள் அதைத் தூக்கி தங்களின் தலையில் போட்டால் அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது.  😁

Edited by Kapithan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

@MEERA   @Kapithan இரண்டு பேரையும் எங்கட டாக்குத்தர் அர்ச்சனாவிட்ட ஒருக்கால் கூட்டிக்கொண்டு போய் ஃபுல் பொடி செக்கப் செய்ய சொல்லோணும் 😂

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

தமிழரசின் அரசியல் குழுக்கூட்டம் இன்று; தேசியப் பட்டியல் ஆசனம் தனக்கு வேண்டும் என மாவை எழுத்து மூலம் கோரிக்கை !

mavai.jpg

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பி. விவகாரத்தைத் தீர்மானிப்பதற்காக இன்று தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூடுகின்றது.

வவுனியாவில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் அரசியல் குழுவில் அங்கம் வகிக்கும் மாவை சேனாதிராஜா, சி.வி.கே.சிவஞானம், ப.சத்தியலிங்கம், சிவஞானம் சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், கி.துரைராஜசிங்கம், தவராசா கலையரசன், கவீந்திரன் கோடீஸ்வரன், சண்முகம் குகதாசன் மற்றும் குலநாயகம் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி, ஒரு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையைப் பெற்றிருந்தது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியலில் முதலாவது பெயராக மாவை சேனாதிராஜா குறிப்பிடப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தன்னை நியமிக்குமாறு கட்சியின் பதில் செயலாளர் ப.சத்தியலிங்கத்திடம், மாவை சேனாதிராஜா எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த சிலரும் தமக்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமை வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளனர்.

இந்த விவகாரத்துக்குத் தீர்வு காணும் வகையில் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு இன்று கூடுகின்றது.
 
https://akkinikkunchu.com/?p=299504

அடுத்த பொது தேர்தல் நடைபெறும்போது மாவையர் இருப்பாரோ தெரியாது. பெருந்தலைவர் சம்பந்தர் போல் மாவையருக்கு பாராளுமன்ற உறப்பினர் எனும் கெளரவ பட்டத்துடன் சாவை அணைக்க ஆர்வமோ யார் அறிவார். ஆசை யாரை விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

@MEERA   @Kapithan இரண்டு பேரையும் எங்கட டாக்குத்தர் அர்ச்சனாவிட்ட ஒருக்கால் கூட்டிக்கொண்டு போய் ஃபுல் பொடி செக்கப் செய்ய சொல்லோணும் 😂

அர்ச்சுனாவின் புண்ணியத்தால் சாவகச்சேரி வைத்தியசாலை 24 மணி நேரமும் இயங்குகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
25 minutes ago, ஈழப்பிரியன் said:

அர்ச்சுனாவின் புண்ணியத்தால் சாவகச்சேரி வைத்தியசாலை 24 மணி நேரமும் இயங்குகிறது.

அர்ச்சுனா ஒரு வெளிப்படையான மனிதர் போல் தெரிகின்றது. நல்லது நடக்கவேண்டும்.
அர்ச்சுனாவை தெரிவு செய்த மக்களுக்கு  என் வாழ்த்துகள். உங்கள் அபிலாசஷைகளை சோரம்போக விடமாட்டார் என நம்புகின்றேன்.
 
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

அர்ச்சுனா ஒரு வெளிப்படையான மனிதர் போல் தெரிகின்றது. நல்லது நடக்கவேண்டும்.
அர்ச்சுனாவை தெரிவு செய்த மக்களுக்கு  என் வாழ்த்துகள். உங்கள் அபிலாசஷைகளை சோரம்போக விடமாட்டார் என நம்புகின்றேன்.
 
அவருடைய பதவிக்கு வேட்டு வைக்க முயல்கிறார்களாம்.

பதவியை துறக்காமல் தேர்தலில் நின்றது பிழையாமே?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

@MEERA   @Kapithan இரண்டு பேரையும் எங்கட டாக்குத்தர் அர்ச்சனாவிட்ட ஒருக்கால் கூட்டிக்கொண்டு போய் ஃபுல் பொடி செக்கப் செய்ய சொல்லோணும் 😂

யாழ் களத்தில் ஒருவரையும் நான் குறிப்பிட்டு  இழிவுபடுத்தி எழுதுவதில்லை என்பதை தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். 

Edited by Kapithan

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.