Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் மாவீரர் வாரத்தை அனுஷ்டிப்பதற்கு எந்த வித தடையும் கிடையாது, அவர்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியும் என கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்தார்.

யாழில் தொலைக்காட்சி ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் மாவீரர் தினத்தை இம்முறை எவ்விதமான கெடுபிடிகளும் அடக்குமுறைகளும் இல்லாமல் அனுஷ்டிக்க முடியும்.

நினைவேந்தல் நிகழ்வு

அதற்கு எந்தவிதமான தடையும் கிடையாது. மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்பவர்களை ஒளிப்படம் எடுக்க வேண்டாம் என பாதுகாப்புத் தரப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க அநுர அரசு அனுமதி : அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு | Anura Govt Allowed To Commemorate Maaveerar Naaal

எனவே மக்கள் சுதந்திரமான முறையில் மாவீரர் வாரத்தை அனுஷ்டிக்க முடியும். அது அவர்களின் உரிமை. அதற்கு அரசு தடை எதுவும் போடாது“ என தெரிவித்தார்

இதேவேளை தமிழின விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு தமிழர் தாயகமெங்கும் மாவீரர் வாரத்தின் இறுதி நாளான கார்த்திகை 27ஆம் நாள் உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

https://ibctamil.com/article/anura-govt-allowed-to-commemorate-maaveerar-naaal-1732445376#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்

வியாபாரிகளின் நிலைதான் கவலைக்கிடமாகப் போகின்றது…,..🤣

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் மனங்களை வெல்லவேண்டும் என் நீண்டகாலத் திட்டத்துடன் செயற்படும் என்பிபி அரசு மாவீரர் தினத்தை கடைப்பிடிப்பதைத் தடைசெய்ய  ஒன்றும் முட்டாள் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

வியாபாரிகளின் நிலைதான் கவலைக்கிடமாகப் போகின்றது…,..🤣

வியாபாரிகள் மாறினாலும் நீங்கள் மாற மாட்டியல் போல கிடக்கு 😅கொண்ட கொள்கையில் இலட்சியத்துடன் செயல் பட வேண்டும்😅

3 hours ago, ஏராளன் said:

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்பவர்களை ஒளிப்படம் எடுக்க வேண்டாம் என பாதுகாப்புத் தரப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்னும் இர்ண்டு புள்ளிகள் அனுராவுக்கு எனது சார்பாக கொடுக்கின்றேன் தமிழ் தேசியம் வளர இதுவும் உதவும் ...ஆயுத போராட்டத்தின் ஊடாக அரசியல் செய்து முன்வந்த அரசாங்கம் ....என்பதால் வலிகள் புரிகின்றது அவ்ர்களுக்கு ....

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, putthan said:

வியாபாரிகள் மாறினாலும் நீங்கள் மாற மாட்டியல் போல கிடக்கு 😅கொண்ட கொள்கையில் இலட்சியத்துடன் செயல் பட வேண்டும்😅

என்ன புத்தரே அவரின் வியாபார டிசைன் அப்ப😁டித்தான்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, alvayan said:

என்ன புத்தரே அவரின் வியாபார டிசைன் அப்ப😁டித்தான்

மற்றவர்கள் டிசைனை மாற்ற வேணும் நாங்கள் மாற்ற மாட்டோம் ...இன்னும் "ஏ 40,சோமசெர்ட்"டிசைன்களில் தான் நிற்போம் கண்டியளோ டெஸ்லாவுக்கு மாற மாட்டோம்😅

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, putthan said:

மற்றவர்கள் டிசைனை மாற்ற வேணும் நாங்கள் மாற்ற மாட்டோம் ...இன்னும் "ஏ 40,சோமசெர்ட்"டிசைன்களில் தான் நிற்போம் கண்டியளோ டெஸ்லாவுக்கு மாற மாட்டோம்😅

எதுவோ ஓடினால் சரிதான்...பொழைச்சுப் போகாட்டும்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

வியாபாரிகள் மாறினாலும் நீங்கள் மாற மாட்டியல் போல கிடக்கு 😅கொண்ட கொள்கையில் இலட்சியத்துடன் செயல் பட வேண்டும்😅

இன்னும் இர்ண்டு புள்ளிகள் அனுராவுக்கு எனது சார்பாக கொடுக்கின்றேன் தமிழ் தேசியம் வளர இதுவும் உதவும் ...ஆயுத போராட்டத்தின் ஊடாக அரசியல் செய்து முன்வந்த அரசாங்கம் ....என்பதால் வலிகள் புரிகின்றது அவ்ர்களுக்கு ....

1 hour ago, alvayan said:

என்ன புத்தரே அவரின் வியாபார டிசைன் அப்ப😁டித்தான்

வியாபாரிகள் வாயில் மண்,...🤣

1 hour ago, putthan said:

மற்றவர்கள் டிசைனை மாற்ற வேணும் நாங்கள் மாற்ற மாட்டோம் ...இன்னும் "ஏ 40,சோமசெர்ட்"டிசைன்களில் தான் நிற்போம் கண்டியளோ டெஸ்லாவுக்கு மாற மாட்டோம்😅

பாரடா,....

எவ்வளவு வேகமாக குத்துக்கரணம் அடிக்கிறாங்கள்,.....🤣

முஸ்லிம்கள் புலம்பெயர்ஸ்ஸிடம் பிச்சை வேண்ட வேண்டி ஏற்படும் போல,...🤣

58 minutes ago, alvayan said:

எதுவோ ஓடினால் சரிதான்...பொழைச்சுப் போகாட்டும்

👉

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

ஆயுத போராட்டத்தின் ஊடாக அரசியல் செய்து முன்வந்த அரசாங்கம் ....என்பதால் வலிகள் புரிகின்றது அவ்ர்களுக்கு ....

நான் ரஞ்சித் அண்ணாவின் தேசிய மக்கள் சக்தியினரால் பாராளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மை வெற்றியென்பது தமிழர்களுக்கு எவ்வாறான மாற்றத்தைக் கொண்டுவரும்? கட்டுரைகளை முழுமையாக படித்து முடித்தேன். பலதை அறிந்தும் கொண்டேன். ஜேவிபியினர்களுக்கு வலிகள் புரியவிலலையே வலிகள் மேலும் தமிழர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று தானே கடந்த பாலங்களில் பாரளுமன்றம் வந்த போதும்  நின்று இருக்கின்றார்கள்.

1 hour ago, putthan said:

இன்னும் "ஏ 40,சோமசெர்ட்"டிசைன்களில் தான் நிற்போம் கண்டியளோ டெஸ்லாவுக்கு மாற மாட்டோம்

அவர்கள் தேர்தல் யாழ்பாண வெற்றியோடு தங்களது டிசைனுக்கு மாற்ற தொடங்கிவிட்டனர்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

அது அவர்களின் உரிமை

சரி ஈழத் தமிழர்களுக்கு ஒரு திடமான தீர்வை தர  அனுரவிற்கு ஒரு விருப்பம் இருந்தால்....
அதை அவருடைய கட்சி ஏற்றுக்கொள்ள வேண்டும்....
பின்னர் அதை பௌத்த மத தலைவர்களிடம்  தெரிவித்து ஆசி பெற வேண்டும்...
அதன் பின்னர் சர்வ ஜன வாக்கெடுப்பிற்கு சிங்கள மக்களிடம் செல்ல வேண்டும்....
அதுவும் கிடைத்தால் உயர் நீதி மன்றில் அனுமதி பெற வேண்டும்....

பாராளு மன்றத்திலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை   பெற வேண்டும்... 
இப்படிப் பல சிக்கல்களை அவிழ்த்து தீர்வு கிடைப்பது கடினம்
JR   தமிழர்களுக்கு இலங்கையில் ஒரு தேசம்... இல்லை.... ஒரு பிடி மண் கூடச் சொந்தமாக இருக்கக் கூடாது...... என நினைத்து நிறைவேற்றிய
சட்டமூலம் 78  இல்...

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

இன்னும் இர்ண்டு புள்ளிகள் அனுராவுக்கு எனது சார்பாக கொடுக்கின்றேன் தமிழ் தேசியம் வளர இதுவும் உதவும் ...ஆயுத போராட்டத்தின் ஊடாக அரசியல் செய்து முன்வந்த அரசாங்கம் ....என்பதால் வலிகள் புரிகின்றது அவ்ர்களுக்கு ....

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

நான் ரஞ்சித் அண்ணாவின் தேசிய மக்கள் சக்தியினரால் பாராளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மை வெற்றியென்பது தமிழர்களுக்கு எவ்வாறான மாற்றத்தைக் கொண்டுவரும்? கட்டுரைகளை முழுமையாக படித்து முடித்தேன். பலதை அறிந்தும் கொண்டேன். ஜேவிபியினர்களுக்கு வலிகள் புரியவிலலையே வலிகள் மேலும் தமிழர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று தானே கடந்த பாலங்களில் பாரளுமன்றம் வந்த போதும்  நின்று இருக்கின்றார்கள்.

அது தான் பெயரை மாற்றியுள்ளார்கள்.

இலங்கை பாராளுமன்றில்

பிரதமருக்கு அதிகாரமிருக்கும் போதா

ஜனாதிபதிக்கு அதிகாரமிருக்கும் போதா

தமிழருக்கு எதிராக அதிகளவான சட்டங்கள் வந்தன.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

வியாபாரிகளின் நிலைதான் கவலைக்கிடமாகப் போகின்றது…,..🤣

சுமா இன்னும் கிளம்பலையா ... மண் சோறு அல்லது வேற என்று படம் காட்ட .. மாவீரரர் நாளில் நடிப்பின் திறமையை பார்க்கலாம் ....

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழன்பன் said:

சுமா இன்னும் கிளம்பலையா ... மண் சோறு அல்லது வேற என்று படம் காட்ட .. மாவீரரர் நாளில் நடிப்பின் திறமையை பார்க்கலாம் ....

சுமா வைக் கிண்டலடித்து எனக்கு கோபத்தை உண்டாக்கலாம் என்று நினைக்கிறீர்களா? 

😁

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

அது தான் பெயரை மாற்றியுள்ளார்கள்.

ஓம்.

ஜனாதிபதி ஆட்சி முறை வந்த பின்பு தான் தமிழருக்கு அதிக அநியாயங்கள் நடக்க தொடங்கியுள்ளது 😟

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 hours ago, nunavilan said:

இணைப்பிற்கு நன்றி நுணாவிலான்.👈

இந்த அரசியல்வாதி இப்படியே போவார் எனில் தமிழ்,சிங்கள போலி அரசியல்வாதிகளுக்கு சங்குதான்.😎
இருந்தாலும் இவரின் அரசியல் போக்கு இந்தியாவுக்கு உகந்ததல்ல. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, nunavilan said:

இந்த பேட்டியை முழுமையாக பார்க்கவில்லை, நேரம் கிடைக்கும் போது பார்ப்பேன்.

ஆனால் இதில் தொடக்கத்தில் அனுர சொல்வதில் ஒரு தர்க்க உண்மை உள்ளது.

இதே விடயத்தை 1995/6 காலத்தில் TNL டீவி நிகழ்சிகளில் குமார் பொன்னம்பலம், எஸ் எல் குணசேகர, லசந்த விக்ரமதுங்க விவாதித்துள்ளனர்.

அந்த தர்க்கம் இதுதான்.

1. தமிழர்கள் 1948 இல் ஒற்றையாட்ச்சிக்கு உடன்பட்டார்கள்.

2. தனி சிங்களம், சிறீ, தொடர் இன வன்முறைகள், இன ஒதுக்கல், குடியேற்றம் போன்றவையே - தமிழரை திம்பு நோக்கித்தள்ளியது.

3. மேலே 2 இல் சொன்னவற்றை இல்லாமல் ஆக்கினால் - தமிழர்கள் திம்புவை கைவிடுவது நியாயமாக இருக்கும்.

அனுர அரசின் நிலைப்பாடும் கிட்டதட்ட இதுதான்.

மேலே சொன்ன லிஸ்டில் கடந்த 30 வருடத்தில் மொழி, இன வன்முறை பிரச்சனைகள் இல்லாது ஆகி விட்டன (மீள வரலாம்).

காணி/குடியேற்ற விடயத்தல்தில் - தமிழருக்கு சுய உரிமையதராவிடிலும், ஒரு நியாயமான காணிப் பங்கீடு பொறிமுறையை முன்வைத்தால் - திம்புவுக்க்கான தேவை இனி இல்லை என்ற நிலைப்பாட்டை நோக்கி தமிழரை உந்த ஜேவிபி முனையலாம்.

ஆனால் - காணி விடயத்தில் இம்மியளவும் நகர மஹா சங்கம் அனுமதிக்காது என்றே நினைக்கிறேன்.

திம்புவை கைவிடுவது, நாம் தேசிய இனமில்லை, நாம் ஒரு சிறுபான்மை இன குழு என நாமே ஏற்பதற்க்குச் சமன். 

தமிழ் கட்சிகளை தவிர்த்து, ஜேவிபி நேரடியாக தமிழ் வாக்காளர் மத்தியில் பிரபல்யம் ஆவது….இந்த நிலையை விரைந்து உருவாக்க கூடும்.

38 minutes ago, குமாரசாமி said:

இணைப்பிற்கு நன்றி நுணாவிலான்.👈

இந்த அரசியல்வாதி இப்படியே போவார் எனில் தமிழ்,சிங்கள போலி அரசியல்வாதிகளுக்கு சங்குதான்.😎
இருந்தாலும் இவரின் அரசியல் போக்கு இந்தியாவுக்கு உகந்ததல்ல. 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, goshan_che said:

இந்த பேட்டியை முழுமையாக பார்க்கவில்லை, நேரம் கிடைக்கும் போது பார்ப்பேன்.

தயவு செய்து பேட்டியை முழுமையாக பார்க்கவும். நுனிப்புல் மேயும் சிஷ்டம் இனிவரும் காலங்களில் எடுபடாது. 😂

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

தயவு செய்து பேட்டியை முழுமையாக பார்க்கவும். நுனிப்புல் மேயும் சிஷ்டம் இனிவரும் காலங்களில் எடுபடாது. 😂

🤣 வார இறுதியில் பார்ப்பதாக இருக்கிறேன்.

ஆனால் AKD, JVP யின் நிலைப்பாடு இதுதானே? பேட்டியில் அதற்கு மாற்றாக சொல்லி இருப்பார் எம நினைக்கவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 minutes ago, goshan_che said:

🤣 வார இறுதியில் பார்ப்பதாக இருக்கிறேன்.

சரி...சரி விரதம் முடித்து விட்டு அந்த காணொளியை பாருங்கள் 😂

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, குமாரசாமி said:

தயவு செய்து பேட்டியை முழுமையாக பார்க்கவும். நுனிப்புல் மேயும் சிஷ்டம் இனிவரும் காலங்களில் எடுபடாது. 😂

பேட்டியை முழுமையாக பார்த்தேன்.

1. நான் சொன்னது போலவே - தமிழர்களின் அடிப்படை அபிலாசையை பற்றி கதைக்கும் போது - அதை சிறுபான்மை குழு ஒன்றின் கோரிக்கைகள் என்ற அளவில்தான் இங்கே அனுர அணுகுகிறார்.

2. இதில் அவர் அதிகம் பேசிய இந்தியாவின் வகிபாகம், புவிசார் அரசியல் நாம் அனைவரும் அறிந்ததே.

3. எதிர்கட்சியில் இருக்கும் சமயம் மிக உருக்கமாக, காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதிகள், இராணுவ பிரசன்னம் இட்டு கதைக்கிறார். ஆனால் இவர் ஜனாதிபதியாகி மூன்று மாதம் ஆகிறது. 2/3 பெரும்பான்மை அரசு அமைந்து விட்டது. ஹிரிணிக்கும், டில்வினுக்கும் மவுண்ட்லவேனியா ஓட்டலில் ABBA Tribute நிகழ்ச்சிக்கு போக நேரம் இருக்கிறது. பலாலி வீதியில் 800 மீட்டர் தூரத்தை (இரு மருங்கிலும் உள்ள நிலத்தை அல்ல) விட்டமை மட்டுமே இப்போதைக்கு சாதனைகள்.

நேற்று அமைச்சர் ஒருவர் காணாமல் போனோர் எல்லாம் இறந்தோர்தான் என போகிற போக்கில் சொல்லி விட்டு போகிறார்.

குறைந்த பட்சம் - அந்த பட்டியலில் உள்ள பெயர்களை வாங்கி, அரசிடம் கைதியாக இருப்போர் அந்த லிஸ்டில் உள்ளனரா என பார்த்து, இல்லை என சொல்லி, அவர்கள் மரணித்தவர்கள் என கருதப்படுவோர் (presumed dead) - என குடும்பங்களுக்கு கண்ணியமாக அறிவிக்க கூட இவர்களால் முடியவில்லை.

5 minutes ago, குமாரசாமி said:

சரி...சரி விரதம் முடித்து விட்டு அந்த காணொளியை பாருங்கள் 😂

  • கருத்துக்கள உறவுகள்
On 25/11/2024 at 12:03, nunavilan said:

இதில சொல்வது எல்லாம் எங்களை போன்றகிழசுகளுக்கும் தெரியும் ....பதவியில் இல்லாத பொழுது எல்லாம் சொல்ல முடியும் ...பத்வியில் இருக்கும் பொழுது இதெல்லாத்தை செய்ய முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
On 24/11/2024 at 19:19, Kapithan said:

வியாபாரிகளின் நிலைதான் கவலைக்கிடமாகப் போகின்றது…,..🤣

வடகிழக்கில் உள்ள பழைய தோத்தான் குரங்கு அரசியல்வாதிகள் யாராவது தாயகத்தில் நடை பெற்ற மாவீரர் நினைவு தினம்களில் கலந்து கொள்ளவில்லையே ? நானும் தேடி தேடி பார்க்கிறேன் செய்தி கிடைக்கவில்லை இப்படியே விட்டால் அனுரா கூட்டம் ஒரு தும்பு கட்டையை யாழில் நிறுத்தினாலும் சனம் வோட்டு போட்டு தள்ளும் என்ற அறிவாவது இல்லையா அல்லது வேறு முக்கியமானவரை தூக்குவம் என்று சொன்ன இ...... என்பவர்களின் வார்த்தை நம்பிக்கையா? 

  • கருத்துக்கள உறவுகள்
On 24/11/2024 at 21:33, nunavilan said:

நான் நினைக்கின்றேன் இப்பேட்டியானது 10 வருடங்கள் பழமையானது. கீழ் உள்ள பேட்டியானது ஜனாதிபதித் தேர்தல் 2024 சற்று முன்னர் அளிக்கப்பட்ட்து ஆகும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.