Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு உண்மையான நண்பனாக இருப்பது தமிழீழம் மட்டுமே – பழ. நெடுமாறன்

இந்தியாவுக்கு உண்மையான நண்பனாக இருப்பது தமிழீழம் மட்டுமே – பழ. நெடுமாறன்.

தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழீழப் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கான மாவீரர் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

உலக தமிழர் பேரமைப்புத் துணைச் செயலர் தமிழ்மணி தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் அய்யனாபுரம் முருகேசன், ராமன், துணைச் செயலர்கள் வழக்குரைஞர் பானுமதி, பொறியாளர் கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் கலந்து கொண்டு உரையாற்றுகையில், பாலஸ்தீன மக்களைத் தொடர்ந்து படுகொலை செய்து வரும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை போர்க் குற்றவாளி என சர்வதேச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதுபோல, பங்களாதேஷ் உள்பட பல நாடுகளில் போர்க் குற்றவாளிகள் அறிவிக்கப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய யூதர்களைப் படுகொலை செய்த ஹிட்லரின் தளபதியை அர்ஜென்டினா நாட்டில் மறைந்து வாழ்ந்தாலும், அவரைத் தேடிப் பிடித்து தூக்கிலிட்டுக் கொன்றனர்.

ஆனால், 1.50 லட்சத்துக்கும் அதிகமான மக்களைப் படுகொலை செய்த ராஜபக்ஷ கும்பலை எந்த நாடும் கண்டிப்பதற்கு முன் வரவில்லை. ஐ.நா. சபையும் மௌனம் சாதிக்கிறது. ராஜபக்ச குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர் என ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் ஆணையராக இருந்த நவநீதம் பிள்ளை கூறியும் கூட, இந்தியா உள்பட எந்தவொரு நாடும் முன் வரவில்லை.

தமிழீழ மக்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் விடுதலை புலிகளின் தலைவர் விடிவெள்ளியாகத் திகழ்கிறார். அவர் தலைமையில் உலகத் தமிழினத்துக்கு விடிவு பிறக்க வேண்டும். அதற்கு தாய்த் தமிழகம் துணையாக இருக்க வேண்டும்.

இலங்கையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி அங்கு வாழும் தமிழர்களுக்கு மட்டுமல்லாமல், இந்தியாவுக்கும் எதிரி என்பதை டில்லியில் (மத்திய அரசு) உள்ளவர்கள் உணர வேண்டும். ஈழ மற்றும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு உள்ள அபாயத்தை விட, இந்தியாவுக்கு பேராபயம் உள்ளதை டில்லியில் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருப்பவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இந்தியாவுக்கு உண்மையான நண்பனாக இருப்பது தமிழீழம் மட்டுமே. எனவே, தமிழீழம் உருவானால்தான் இந்தியாவுக்கு அபாயம் இருக்காது. இல்லாவிட்டால் தெற்கு எல்லையைப் பாதுகாக்க முடியாத நிலை ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1410186

  • கருத்துக்கள உறவுகள்

இதை ஜ‌யா ப‌ல‌ த‌ட‌வை சொல்லி விட்டார்

ஏதும் மாற்ற‌ம் வ‌ந்த‌தா.............................

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

இலங்கையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி அங்கு வாழும் தமிழர்களுக்கு மட்டுமல்லாமல், இந்தியாவுக்கும் எதிரி என்பதை டில்லியில் (மத்திய அரசு) உள்ளவர்கள் உணர வேண்டும். ஈழ மற்றும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு உள்ள அபாயத்தை விட, இந்தியாவுக்கு பேராபயம் உள்ளதை டில்லியில் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருப்பவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

அநுரவின் அரசாங்கம் ஈழத் தமிழருக்கு எதிரியா இல்லையா என்பதை ஈழத்தில் வாழும் மக்கள்தான் சொல்லவேண்டும். அதனை வரலாறு தெளிவாகப் பதியும்.  சும்மா விசர்க் கதைகதைச்சுக்கொண்டு திரியத்தான் பழ. நெடுமாறன் போன்றோர் லாயக்கு. 

அநுர அரசில் எல்லை தாண்டிவந்து மீன்கொள்ளையில் ஈடுபடும் இந்தியக் கடற்கொள்ளையருக்கு ஆபத்து என்பதைத்தான் அய்யா சொல்லியிருக்கின்றார் என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, வாலி said:

இந்தியாவுக்கு எதிரான அரசு இலங்கையில் அமைந்தால் ஐயாவின் வீரவேச அறிக்கைகள் பாய்ந்து வரும் ஊடகங்களில் இது வழக்கமான ஒன்றுதான் .

முள்ளி வாய்காலில் ஒன்றரை லட்சம் சனத்தின் அழிவுக்கு நீலி கண்ணீர் விடுவோர் இந்திரா காந்தியின் தவறான வழிகாட்டல் என்பதை இலகுவாக மறைத்து விடுகினம் .

கண்ட கண்ட யாழ் சண்டியர்களுக்கும் இராணுவ பயிற்சியை கொடுத்து இலங்கையை குழப்ப நிலைக்கு கொண்டு சென்றவர்களில் அவரும் ஒருவர் .

பலர் நினைக்கினம் இந்திரா இருந்து இருந்தால் தமிழ் ஈழம் கிடைத்து இருக்கும் என்று அவர் உயிருடன் இருந்தாலும் முள்ளி வாய்க்கால் நடந்து இருக்கும் .

கொஞ்சம் முன்னாடியே நடந்து இருக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

இந்தியாவுக்கு உண்மையான நண்பனாக இருப்பது தமிழீழம் மட்டுமே – 

இதைத் தான் எமது தேசியத் தலைவர் திரும்பத் திரும்ப சொன்னார்.

ஆனாலும் இந்தியனின் செவிட்டு காதில் ஒருபோதும் விழுந்ததில்லை.

இப்போ அமெரிக்கா ஓரளவுக்க காலூன்றிவிட்டது.

இனித்தான் பேந்தபேந்த முழிப்பார்கள்.அப்போது காலம் கடந்துவிட்டிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒஸ்லோ பிரகடனத்தை அடிப்படையாக வைத்து உலக அரசியல் நிலையை கணிப்பிட்டு பேச்சுகளை தொடர்ந்திருந்தாலும் முள்ளிவாய்க்கால் நடந்திருக்காது.

 அல்லது யுத்த நிலையை முன்னரே கணிப்பிட்டு மக்களின் பாதுகாப்பில் பொறுப்புணர்சியுடன் நடந்து  முன் கூட்டியே உரிய காலத்தில் ஆயுதத்தை மௌனித்திருந்தாலும் முள்ளிவாய்க்கால் நடந்திருக்காது. 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, island said:

ஒஸ்லோ பிரகடனத்தை அடிப்படையாக வைத்து உலக அரசியல் நிலையை கணிப்பிட்டு பேச்சுகளை தொடர்ந்திருந்தாலும் முள்ளிவாய்க்கால் நடந்திருக்காது.

ஒஸ்லோ பிரகடனத்தை இங்கு யாழ் வாசகர்களுக்கு விளக்கமா சொன்னால் நல்லது எனக்கும் விளங்கவில்லை ?

இந்திரா காந்தி இருந்து இருந்தால் தமிழ் ஈழம் கிடைத்து இருக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, பெருமாள் said:

ஒஸ்லோ பிரகடனத்தை இங்கு யாழ் வாசகர்களுக்கு விளக்கமா சொன்னால் நல்லது எனக்கும் விளங்கவில்லை ?

இந்திரா காந்தி இருந்து இருந்தால் தமிழ் ஈழம் கிடைத்து இருக்குமா?

தமிழ் ஈழம் கடைசிவரைக்கும் கிடைத்திருக்காது. அதற்கான சாத்தியம் எந்த காலத்திலும் இருக்கவில்லை.  விடுதலைப்புலிகள் ஆயுத ரீதியில் பலமாக இருந்த போது கூட  புவிசார் உலக அரசியலில் தமிழீழம் சாத்தியமற்றதாகவே இருந்தது. 

ஆனால் ஒஸ்லோ இணக்கப்பாட்டின் படியான உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஸ்சி தீர்வை பரிசீலிக்க இணங்கி பேச்சுவார்ததையை தொடர்ந்திருந்தால் என்ன வகையான மீர்வு கிடைத்திருக்கும் என்று கூற முடியாது. ஆனால், இன்றைய நிலையை விட பல மடங்கு சிறந்த நிலையில் தமிழர்கள் வாழ்ந்திருப்பார்கள் என்பதை கூற பெரிய அரசியல் ஆய்வாளனாக இருக்க  தேவையில்லை.  இயல்பான சாதாரண பொது அறிவு இருந்தாலே அதை விளங்கிக் கொள்ள முடியும். 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, island said:

அதை புலிகளும் ஒத்து இருந்தார்களே அப்ப யார் குழப்பினது ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

இதைத் தான் எமது தேசியத் தலைவர் திரும்பத் திரும்ப சொன்னார்.

ஆனாலும் இந்தியனின் செவிட்டு காதில் ஒருபோதும் விழுந்ததில்லை.

இப்போ அமெரிக்கா ஓரளவுக்க காலூன்றிவிட்டது.

இனித்தான் பேந்தபேந்த முழிப்பார்கள்.அப்போது காலம் கடந்துவிட்டிருக்கும்.

ஈழத்தமிழர்கள்  கேட்டதை கிந்தியா செய்து கொடுத்திருக்குமேயானால்......!
சிங்களவர்களும் நிம்மதியாக வாழ்ந்திருப்பார்கள்-
ஈழத்தமிழர்களும் சகல சுக போகங்களுடனும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்-
கிந்தியனின் தென்பகுதிக்கு அரணாகவும் இருந்திருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 28/11/2024 at 23:17, குமாரசாமி said:

ஈழத்தமிழர்கள்  கேட்டதை கிந்தியா செய்து கொடுத்திருக்குமேயானால்......!
சிங்களவர்களும் நிம்மதியாக வாழ்ந்திருப்பார்கள்-
ஈழத்தமிழர்களும் சகல சுக போகங்களுடனும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்-
கிந்தியனின் தென்பகுதிக்கு அரணாகவும் இருந்திருப்பார்கள்.

உண்மை...............ராஜிவ் காந்தி எல்லாத்தையும் கெடுத்தார்................................

  • கருத்துக்கள உறவுகள்
On 28/11/2024 at 08:49, பெருமாள் said:

இந்தியாவுக்கு எதிரான அரசு இலங்கையில் அமைந்தால் ஐயாவின் வீரவேச அறிக்கைகள் பாய்ந்து வரும் ஊடகங்களில் இது வழக்கமான ஒன்றுதான்

உண்மை!

இந்திய உளவுத்துறையின் ஏவல் ஆட்கள் இந்த நெடுமாறான், சீமான் போன்றவர்கள். 

இலங்கை தமிழரை எப்பொழுதும் தீ கக்கும் நெருப்பு நிலையிலேயே வைத்திருக்க இந்தியாவின் கருவிகளாகப் பயன்படுத்தப் படுபவர்கள் இவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 28/11/2024 at 11:03, island said:

ஒஸ்லோ பிரகடனத்தை அடிப்படையாக வைத்து உலக அரசியல் நிலையை கணிப்பிட்டு பேச்சுகளை தொடர்ந்திருந்தாலும் முள்ளிவாய்க்கால் நடந்திருக்காது.

 அல்லது யுத்த நிலையை முன்னரே கணிப்பிட்டு மக்களின் பாதுகாப்பில் பொறுப்புணர்சியுடன் நடந்து  முன் கூட்டியே உரிய காலத்தில் ஆயுதத்தை மௌனித்திருந்தாலும் முள்ளிவாய்க்கால் நடந்திருக்காது. 

அந்த மெளனிக்க வேண்டிய சரியான நேரம் என்ன என சொல்ல முடியுமா?

முள்ளி வாய்க்கால் நடந்திருக்காது என்பதற்கான எடுகோள்கள் என்ன?

On 28/11/2024 at 12:29, island said:

தமிழ் ஈழம் கடைசிவரைக்கும் கிடைத்திருக்காது. அதற்கான சாத்தியம் எந்த காலத்திலும் இருக்கவில்லை.  விடுதலைப்புலிகள் ஆயுத ரீதியில் பலமாக இருந்த போது கூட  புவிசார் உலக அரசியலில் தமிழீழம் சாத்தியமற்றதாகவே இருந்தது. 

ஆனால் ஒஸ்லோ இணக்கப்பாட்டின் படியான உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஸ்சி தீர்வை பரிசீலிக்க இணங்கி பேச்சுவார்ததையை தொடர்ந்திருந்தால் என்ன வகையான மீர்வு கிடைத்திருக்கும் என்று கூற முடியாது. ஆனால், இன்றைய நிலையை விட பல மடங்கு சிறந்த நிலையில் தமிழர்கள் வாழ்ந்திருப்பார்கள் என்பதை கூற பெரிய அரசியல் ஆய்வாளனாக இருக்க  தேவையில்லை.  இயல்பான சாதாரண பொது அறிவு இருந்தாலே அதை விளங்கிக் கொள்ள முடியும். 

உண்மையாகவா? ரனில் , எரிக் போன்ற சுத்துமாத்துகளுடன்? 

33 minutes ago, பகிடி said:

உண்மை!

இந்திய உளவுத்துறையின் ஏவல் ஆட்கள் இந்த நெடுமாறான், சீமான் போன்றவர்கள். 

இலங்கை தமிழரை எப்பொழுதும் தீ கக்கும் நெருப்பு நிலையிலேயே வைத்திருக்க இந்தியாவின் கருவிகளாகப் பயன்படுத்தப் படுபவர்கள் இவர்கள்.

இந்த இரண்டு பேரும் ஈழ தமிழர்களின் தீர்வுக்குள் இன்றி அமையாதவர்களாக அப்போ (2009)இருந்தார்களா??

  • கருத்துக்கள உறவுகள்
On 28/11/2024 at 17:17, குமாரசாமி said:

ஈழத்தமிழர்கள்  கேட்டதை கிந்தியா செய்து கொடுத்திருக்குமேயானால்......!
சிங்களவர்களும் நிம்மதியாக வாழ்ந்திருப்பார்கள்-
ஈழத்தமிழர்களும் சகல சுக போகங்களுடனும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்-
கிந்தியனின் தென்பகுதிக்கு அரணாகவும் இருந்திருப்பார்கள்.

அமெரிக்கா எப்படி உக்ரேனுக்கோ அதே போல் தமிழ் மக்களுக்கு கிந்தியா?

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அரசியல்வாதிகளில் ஆரம்பம்முதல் இறுதிவரை விசுவாசமாக புலிகள் பக்கம் நின்ற அரசியல்வாதிகள் இரண்டுபேர் மட்டுமே

ஒன்று எம்ஜிஆர் , மற்றையது திரு.பழநெடுமாறன் அவர்கள்

மீதமுள்ள ராமதாஸ் , திருமாவளவன், வைகோ போன்றவரெல்லாம் புலிகளுக்கும் பாடிவிட்டு பின்பு கருணாநிதியுடனும் சேர்ந்து கூத்தடிச்சவர்களே.

பாண்டிபஜார் கைதிலிருந்து ,ஆயுதங்கள் தொலைதொடர்பு சாதனங்கள் பறிமுதல், கிட்டண்ணா பயணித்த கப்பல் மீதான இந்திய கடற்படை தாக்குதல், ஜூலை கலவரத்தின்போது தமிழக எழுச்சி, தமிழீழத்திற்கு சிலமுறை உயிரை பணயம் வைத்து பயணம் என்று முள்ளிவாய்க்கால்வரை அவர் காட்டிய புலிகள்மீதான பற்று சந்தேகத்திற்கப்பாற்ப்பட்டது.

பின்னாளில் அவர் வயது முதுமை காரணமாக யாரோ அடிச்சுவிட்டதையெல்லாம் நம்பி தலைவர் உயிருடன் இருக்கிறார் என்று பேசபோனது அவர் தள்ளாமையின் பிரதிபலிப்பு

ஆனாலும் 

On 28/11/2024 at 03:03, தமிழ் சிறி said:

இந்தியாவுக்கு உண்மையான நண்பனாக இருப்பது தமிழீழம் மட்டுமே. எனவே, தமிழீழம் உருவானால்தான் இந்தியாவுக்கு அபாயம் இருக்காது. இல்லாவிட்டால் தெற்கு எல்லையைப் பாதுகாக்க முடியாத நிலை ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழீழம் உருவாக இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது  என்பது இந்தியாவிடம் பயிற்சிபெற்ற இயக்கங்களுக்கும் தெரியும், இலங்கைக்கும் தெரியும் இலங்கை தமிழருக்கும் தெரியும், இந்திய வெளியுறவு கொள்கை வகுப்பாளர்களுக்கும் தெரியும்.

இந்திய உதவியுடன் தமிழர்கள் கை ஓங்கியிருந்த அக்காலத்திலேயே தமிழீழத்தை நினைத்தும் பார்க்க அனுமதிக்காத இந்தியா இனிமேல் அது உருவாக அனுமதிக்கும் உதவி செய்யும்  என்று ஐயா எதிர்பார்ப்பது இதுவும் அவர் தள்ளாத வயதின் பிரதிபலிப்பே.

இந்தியாவின் நோக்கமெல்லாம்அன்றும் இன்றும்  இலங்கை தமிழருக்கு நாடு பெற்று தருவதல்ல, சிங்கள அரசை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே என்பது ஐயாவுக்கு நன்றாக தெரியும், ஆனாலும் பேசுகிறார் என்றால் அதுவும் தள்ளாமையின் ஒரு அம்சமே.

  • கருத்துக்கள உறவுகள்

இது அடிபட்டு போன வாதம்.

கிந்தியவுடன் மயிலே இறகு  போடு என்பது சரி வராது.

ஆக குறைந்தது சொல்வதை, கொஞ்சம் கறாராக, இலங்கையின் வடக்கு  கிழக்ல் தமிழிரிடம் இறைமை இல்லாவிட்டால், கிந்தியவுக்கு நீண்ட கால  ஆபத்து (எம் கண்முன்னே தெரிகிறது). 

இறைமை பலவழிகளில் ,பலவடிவங்களில் யதார்த்தத்தில் இருக்கலாம்.  

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, valavan said:

இந்திய அரசியல்வாதிகளில் ஆரம்பம்முதல் இறுதிவரை விசுவாசமாக புலிகள் பக்கம் நின்ற அரசியல்வாதிகள் இரண்டுபேர் மட்டுமே

ஒன்று எம்ஜிஆர் , மற்றையது திரு.பழநெடுமாறன் அவர்கள்

மீதமுள்ள ராமதாஸ் , திருமாவளவன், வைகோ போன்றவரெல்லாம் புலிகளுக்கும் பாடிவிட்டு பின்பு கருணாநிதியுடனும் சேர்ந்து கூத்தடிச்சவர்களே.

பாண்டிபஜார் கைதிலிருந்து ,ஆயுதங்கள் தொலைதொடர்பு சாதனங்கள் பறிமுதல், கிட்டண்ணா பயணித்த கப்பல் மீதான இந்திய கடற்படை தாக்குதல், ஜூலை கலவரத்தின்போது தமிழக எழுச்சி, தமிழீழத்திற்கு சிலமுறை உயிரை பணயம் வைத்து பயணம் என்று முள்ளிவாய்க்கால்வரை அவர் காட்டிய புலிகள்மீதான பற்று சந்தேகத்திற்கப்பாற்ப்பட்டது.

பின்னாளில் அவர் வயது முதுமை காரணமாக யாரோ அடிச்சுவிட்டதையெல்லாம் நம்பி தலைவர் உயிருடன் இருக்கிறார் என்று பேசபோனது அவர் தள்ளாமையின் பிரதிபலிப்பு

ஆனாலும் 

தமிழீழம் உருவாக இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது  என்பது இந்தியாவிடம் பயிற்சிபெற்ற இயக்கங்களுக்கும் தெரியும், இலங்கைக்கும் தெரியும் இலங்கை தமிழருக்கும் தெரியும், இந்திய வெளியுறவு கொள்கை வகுப்பாளர்களுக்கும் தெரியும்.

இந்திய உதவியுடன் தமிழர்கள் கை ஓங்கியிருந்த அக்காலத்திலேயே தமிழீழத்தை நினைத்தும் பார்க்க அனுமதிக்காத இந்தியா இனிமேல் அது உருவாக அனுமதிக்கும் உதவி செய்யும்  என்று ஐயா எதிர்பார்ப்பது இதுவும் அவர் தள்ளாத வயதின் பிரதிபலிப்பே.

இந்தியாவின் நோக்கமெல்லாம்அன்றும் இன்றும்  இலங்கை தமிழருக்கு நாடு பெற்று தருவதல்ல, சிங்கள அரசை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே என்பது ஐயாவுக்கு நன்றாக தெரியும், ஆனாலும் பேசுகிறார் என்றால் அதுவும் தள்ளாமையின் ஒரு அம்சமே.

எத்த‌னை பேர் சேர்ந்து அடிச்சாலும் வ‌லிக்காது போல் ந‌டிக்கும் த‌மிழ‌ன் த‌மிழ் நாட்டில் இருக்கும் வ‌ரை த‌மிழ‌ர்க‌ளால் பெரிசா ஒன்றும்  சாதிக்க‌ முடியாது🫤.............

ப‌ஞ்சாப் சீக்கிய‌ர்க‌ளுக்கு இருக்கும் துணிவும் வீர‌மும் த‌மிழ் நாட்டு த‌மிழ‌ர்க‌ளுக்கு இல்லாம‌ போன‌து வ‌ருத்த‌ம் அளிக்குது..............................

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, nunavilan said:

அந்த மெளனிக்க வேண்டிய சரியான நேரம் என்ன என சொல்ல முடியுமா?

முள்ளி வாய்க்கால் நடந்திருக்காது என்பதற்கான எடுகோள்கள் என்ன?

அந்த சரியான நேரத்தை தீர்மானித்திருக்க வேண்டியது தீர்க்கதரிசனமான என்று கூறப்படும் தலைமையே தவிர எம்மை போன்ற சாமான்யர்கள் அல்ல. 

 இவ்வுலகில் வாழும்  சாமான்ய மக்கள் எப்படி தம் வாழ்வில் தமது இயலுமைகளை கணக்கிட்டுத் தீர்மானங்களை எடுத்து தமது வாழ்வை நடத்துகிறார்களோ, தம் வாழ்க்கைப் பயணத்தில் தமது இயலுமைகளை தாண்டி தம்மால் எடுக்கப்படும் ரிஸ்க் என்பது  தமது குடும்பத்தையோ, தமது பிள்ளைகளையோ காவு கொள்ளுமென தமது உள்ளுணர்வாலோ அறிவாலோ உணர்ந்தால் அதை தவிர்தது எப்படி பொறுப்புணர்வுடன் வருமுன் காப்போனாக  தமது பிள்ளைகளுக்கோ, குடும்பத்திற்கோ ஆபத்துவராமல் நடந்து கொள்கிறார்களோ அதை விட அதிகமான  பொறுப்புணர்வு பெரும் மக்கட்கூட்டத்தை முழுமையாக  பொறுப்பெடுத்து அரசியல் செய்யும் அரசியல் தலைமைக்கும் உண்டு. 

16 hours ago, nunavilan said:

உண்மையாகவா? ரனில் , எரிக் போன்ற சுத்துமாத்துகளுடன்

இவ்வாறு சுலபமாக மற்றயவர்களுக்கு “சுத்துமத்து” என்று  எம்மால்  ஒரு “பிராண்ட்”  கொடுத்து விட்டு அதை அடிப்படையாக  வைத்து அரசியல் தீர்மானங்களை எடுக்க   முடியுமென்றால் எமக்கு சர்வதேச நாடுகள் கொடுத்த “ பயங்கரவாதி “ என்ற  “பிராண்ட்” ஐ  ஏற்கத்தான் வேண்டும்.  நாம் மற்றயவர்களுக்கு கொடுத்த “பிராண்ட்” என்பது எமக்குள் மட்டும் பேசி பொழுது போக்க மட்டுமே எமக்கு உதவும். ஆனால் உலகம் எமக்கு கொடுத்த “பிராண்ட்” எமது நியாயமான அரசியல் கோரிக்கைகளை கூட வலுவிழக்க வைத்துவிட்டது.  

எரிக் சோல்ஹைம்  வந்தது சமாதான பேச்சுவார்ததைக்கு அனுசரணை வழங்க மட்டுமே. எப்போது இருதரப்பும் பேச்சுவார்ததையை முறித்து யுத்தத்தை தொடங்கினார்களோ அத்துடன் அவரின் பணியும் முடிந்துவிட்டது. மீள பேச்சுவார்ததை மேசைக்கு இருதரப்பையும் கொண்டுவர அவர் பல தடவை முயற்சித்ததை பத்திரிகைகளில்  பார்ததோம. தானே. இருவரும் அதை உதாசீனம் செய்தால் அவரால் என்ன செய்ய முடியும்?   புண்ணுக்கு வலியா? மருந்துக்கு வலியா? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, nunavilan said:

அமெரிக்கா எப்படி உக்ரேனுக்கோ அதே போல் தமிழ் மக்களுக்கு கிந்தியா?

ஹிந்தியா நமக்கு அயல்நாடு அதனால் அவர்கள் அரசியல் நலன் சம்பந்தமான பிரச்சனை அது...
உக்ரேன் ரஷ்ய அயல் நாடு அதனால் அவர்கள் அரசியல் நலன் சம்பந்தமான பிரச்சனை அது....

இதில் அமெரிக்கனுக்கு உக்ரேனில் என்ன வேலை?

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, valavan said:

இந்தியாவின் நோக்கமெல்லாம்அன்றும் இன்றும்  இலங்கை தமிழருக்கு நாடு பெற்று தருவதல்ல, சிங்கள அரசை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே என்பது ஐயாவுக்கு நன்றாக தெரியும், ஆனாலும் பேசுகிறார் என்றால் அதுவும் தள்ளாமையின் ஒரு அம்சமே.

பெரியவருக்கு அது  நன்றாக தெரிந்திருச்தும் அன்று  ஆரம்பித்து  இன்றும் இடைக்கிடை புலுடாவிட்டு கொண்டிருக்கின்றார்.

----------------

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போரை நியாயபடுத்துவதற்காக இந்தியாவின் செயல்களும் நியாயபடுத்தபடுகின்றது

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.