Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, zuma said:

மதுபானசாலைகள் (பார்) அனுமதி பட்டியலை கீழுள்ள லிங்கில் பார்க்க முடியும், சிங்கள மொழியில் உள்ளது. பல அனுமதிகள் தனியார் பெயரில் இல்லாது நிறுவனங்களின் பெயரில் பெறப்பட்டுள்ளது.

https://cdn.newsfirst.lk/sinhala-uploads/2024/12/Surapath.pdf

ஏன் சார் ரஜனி ,விஜய் படம் மாதிரி இழுத்தடிக்கிறீங்க...சட்டென்று மொழிபெயர்ப்பை போடவேண்௶இயதுதானே...சாரி தமிழ்ப் பத்திரிகைகள்  போல  உங்களூக்கும் சம் திங் கிடைச்சுட்டுதா😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிளிநொச்சியில் மட்டும் 16 பாராம்.. யாழ் 5.. மற்ற இடங்களில் 2

பார்சிறி பார்சிறி தான்.

ஒரு நாளைக்கு சங்கு 
இன்னொரு நாளைக்கு சைக்கிளோட பேச்சுவார்த்தை 
இன்னொருநாள் பார் லைசென்ஸ் புரோக்கர் 
மற்ற நாள் வாகன பெர்மிட் விற்பனை 
கார்த்திகையில தியாக புராணம் 

போற போக்கில கமலஹாசன மிஞ்சிடுவார்.
தமிழ்த்தேசிய அரசியலின் தலைசிறந்த போலித் தமிழ் தேசியவாதி நசுக்கிடாக்கள்ளன் பார்சிறி..

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் : ஒரு நாடு இரு தேசம்..

சுமந்திரன் : ஒன்றுபட்ட இலங்கையில் மாண்புமிக்க, சமத்துவமான, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய உடனிருப்பு..

சிறிதரன் : போதையின் பாதையில் தமிழ்த்தேசியம்..

  • Haha 8
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, nunavilan said:

பார் அனுமதியை சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் யாரும் எடுக்க கூடாது என்பது  எந்த வகையில்
நியாயம்?
சிறிதரன் போன்றவர்களின் பேர்கள் எப்படியும் வராது?
 அடுத்து என்ன???

வெளிவராவிட்டால்....

ஆட்டம் காணப்போவது மிஸ்டர் சுத்தம் என்ற அனுராவின் கால்களே....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் நினைத்தது சட்ட துறையில்  உள்ள bar என்று.

பின்பு அனுமதி என்பதை பார்த்து ஆம் இது அதுவல்ல, மதுபானம்  விற்கும் bar க்கு அனுமதி என்று.  

( ஏனெனில் சட்ட துறையில்  உள்ள bar  க்கு (தகமை பெற்றவர்களை) அழைப்பது என்பதே மரபு)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்.

ஆனால் சிபார்சு செய்தவர்களின் பெயர்கள் என்றுமே வெளிவராது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அரசியல் இலஞ்சமாக வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் இரத்துச் செய்யப்படுமா ? - சாணக்கியன் கேள்வி

05 Dec, 2024 | 06:18 PM
image
 
(எம்.ஆர்.எம். வசீம்,  இராஜதுரை ஹஷான்)

கடந்த அரசாங்கத்தில்  அரசியல் இலஞ்சமாக வழங்கப்பட்ட 361 மதுபானசாலை அனுமதிகளின் உரிமையாளர்கள், சிபார்சு செய்தவர்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுமா, வழங்கப்பட்ட  அனுமதி பத்திரங்கள் இரத்துச் செய்யப்படுமா   என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற  உறுப்பினர்   இரா. சாணக்கியன் அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05)  நடைபெற்ற  அமர்வின் போது  ஒழுங்குப்பிரச்சினை    முன்வைத்து  மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

கடந்த அரசாங்கத்தால்  அரசியல்    இலஞ்சமாக   மதுபானசாலைகளுக்கான அனுமதிகளை பெற்றவர்களின் விபரங்களை அரசாங்கம்  சபையில் சமர்ப்பித்தமை பாராட்டுக்குரியது.

அதேவேளை இந்த மதுபானசாலைகளின் உரிமையாளர்கள்,  இவற்றுக்கான அனுமதிகளுக்கு  சிபார்சு செய்தவர்கள் தொடர்பில் அரசு விசாரணை நடத்துமா? அத்துடன் அரசியல் இலஞ்சமாக வழங்கப்பட்ட இந்த மதுபான சாலைகளுக்கான அனுமதிகளை அரசாங்கம்  இரத்துச் செய்யுமா ,

இந்த 361 மதுபானசாலைகளுக்கான அனுமதிகள் தொடர்பில் அரசாங்கம்  ஏனெனில்  பொதுமக்கள் எம்மிடம் இவ்விடயம் குறித்து வினவுகிறார்கள்  ஆகவே  அரசாங்கம்  அடுத்தக்கட்ட  நடவடிக்கை குறித்து  விளக்கமளிக்க வேண்டும் என சபைமுதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்னாயக்கவிடம் கோரினார். எனினும் அரச  தரப்பில்  இருந்து   எவரும் பதிலளிக்கவில்லை.

அரசியல் இலஞ்சமாக வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் இரத்துச் செய்யப்படுமா ? - சாணக்கியன் கேள்வி | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த திரியை........பார்...பார் ....என்று பார்த்துக் களைத்துப் போனன்..

  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, vanangaamudi said:

இலங்கை மதுபான இலாகாவின் இணையத்தளத்தில் பல விபரங்கள் தரப்பட்டுள்ளன.

2019 ஆம் ஆண்டு  வரையிலான மதுபான அனுமதி பெற்றவர்களின் பெயர் விபரங்களுடன் பல்வேறு தரப்பட்ட மதுபான லைசென்சுகளும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

புதிய விபரங்கள் எதுவும் தரவேற்றப்படவில்லை.

https://www.excise.gov.lk

1 hour ago, RishiK said:

பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்.

ஆனால் சிபார்சு செய்தவர்களின் பெயர்கள் என்றுமே வெளிவராது. 

சரியான தகவல். சிபாரிசு செய்தவர்கள் பெயரை RIA மூலம் தான் பெற முடியும்.  

நேற்று வணங்காமுடி இணைத்திருந்த இலங்கை மதுவரித் திணைக்கள இணைப்பை எல்லோரும் கடந்து போய் விட்டு இன்னும் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள். அந்த இணைப்பில்  போய் ஒருவர் மது விற்பனை அனுமதிக்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் என்னவென்று பார்த்தால் அதில் பா.உ அல்லது உள்ளூர் அதிகாரிகள் சம்பந்தமாக எதுவும் இல்லை.

விண்ணப்ப தாரி குற்றவரலாறு இல்லாதவர் என்று விண்ணப்பதாரி சத்தியக் கடதாசி (affidavit) முடிக்க வேண்டுமென்று மட்டும் தான் இருக்கிறது. இலங்கையில் சத்தியக் கடதாசி முடிக்க சமாதான நீதவான் போதும். பா. உ அவசியமில்லை.  

என் கேள்வி: வேலை வாய்ப்பு, வெளிநாட்டில் அகதி அந்தஸ்து போன்றவற்றில் இருப்பது போல பா. உக்கள் சிபார்சுக் கடிதம் கொடுக்கும் நடைமுறை ஏதாவது அலுவலக ரீதியாக இல்லாமல் மேசைக்குக் கீழ் நடக்கும் பரிமாற்றமாக  நடக்கிறதா?  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிபாரிசு செய்த அரசியல்வாதிகளின் பெயர்கள் விசாரணையின் பின்னர் வெளியிடப்படும் என்று அரசு இன்று அறிவித்திருக்கின்றது:

https://www.dailymirror.lk/breaking-news/Government-assures-to-release-names-of-politicians-who-recommended-issuing-of-liquor-licenses/108-297490

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 4/12/2024 at 08:30, தமிழ் சிறி said:

யாழ்ப்பாணம் 5,
கிளிநொச்சி 16,
வவுனியா 2,
மன்னார் 2,
திருகோணமலை 4,
மட்டக்களப்பு 1,
அம்பாறை 5,

இலங்கையின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும்போது தமிழர் பகுதிக்கு அதிக தவறணைகள்.

இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் தமிழர் பகுதிக்கு அதிக சலுகைகள் தந்தது இதுவே முதல் தடவை.

தமிழர் பகுதிகளுக்கு அதிக அதிகாரங்கள் தரப்படவில்லையென்று சொல்லப்படுவது தவறான பிரச்சாரம்.

ரணில் தமிழருக்கு அதிக உரிமைகள் தந்த ஒரு தெய்வ திருமகன்.

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Justin said:

என் கேள்வி: வேலை வாய்ப்பு, வெளிநாட்டில் அகதி அந்தஸ்து போன்றவற்றில் இருப்பது போல பா. உக்கள் சிபார்சுக் கடிதம் கொடுக்கும் நடைமுறை ஏதாவது அலுவலக ரீதியாக இல்லாமல் மேசைக்குக் கீழ் நடக்கும் பரிமாற்றமாக  நடக்கிறதா?  

இதுதான் குற்றச்சாட்டின் சாராம்சம்.

ரணில் அரசை மகிந்தவின் ஆட்கள் கவிழ்க்க முயன்றாலும், கவிழாதபடி ஏந்தி பிடிக்க என கடந்த பாராளுமன்றத்தில் எதிர் கட்சி வரிசையில் இருந்த எம்பிகளுக்கு ஒரு அட்வான்ஸ் இலஞ்சம் வழங்கப்பட்டதாம்.

இதற்கு கடிதமோ வேறு எந்த ஆதாரபூர்வ சிபாரிசுமோ தேவை இல்லையாம்.

குறித்த எம்பிகள் கைகாட்டும் ஆள், வழமை போல் அனுமதியை கோர வேண்டும், அவருக்கு தடங்கல் இன்றி அனுமதி கிடைக்கும்.

அனுமதிக்கான இலஞ்சத்தை பார் உரிமையாளர் எம்பிக்கு செட்டில் செய்வார்.

எம்பி ரணிலுக்கு விசுவாசமாக இருப்பார்.

எங்கோ ஒரு லேப்டப்பில் ஏதோ ஒரு ஸ்பிரெட்ஷீட்டில் யார் யாருக்கு சிபாரிசு செய்தார் என்ற தகவல் இருக்கலாம்.

ஆனால் அது அனுர அரசின் கையில் கிட்டுமா?

கிட்டினாலும் அதுதான் உண்மையான லிஸ்ட் என எப்படி நம்புவது?

ஆகவே இதில் எந்த எம்பியையும் கையும் களவுமாக பிடிப்பது கஸ்டம்.

ஒன்றில் ரணில், அல்லது அவர் சார்பில் சிபாரிகளை டீல் செய்தவர் சொல்ல வேண்டும், அல்லது சிபாரிசு கொடுத்த எம்பிகள் சொல்ல வேண்டும்.

விக்கி ஒரு சிபாரிசு செய்ததை ஏற்றுகொண்டுள்ளார்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
24 minutes ago, valavan said:

இலங்கையின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும்போது தமிழர் பகுதிக்கு அதிக தவறணைகள்.

இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் தமிழர் பகுதிக்கு அதிக சலுகைகள் தந்தது இதுவே முதல் தடவை.

தமிழர் பகுதிகளுக்கு அதிக அதிகாரங்கள் தரப்படவில்லையென்று சொல்லப்படுவது தவறான பிரச்சாரம்.

ரணில் தமிழருக்கு அதிக உரிமைகள் தந்த ஒரு தெய்வ திருமகன்.

கிளிநொச்சி பகுதி பிந்தங்கிய பகுதி என்பதால் 16 பெர்மிட்டை போராடி பெற்றுள்னர் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, goshan_che said:

ஒன்றில் ரணில், அல்லது அவர் சார்பில் சிபாரிகளை டீல் செய்தவர் சொல்ல வேண்டும், அல்லது சிபாரிசு கொடுத்த எம்பிகள் சொல்ல வேண்டும்.

👍................

2024ம் ஆண்டில் அனுமதி கொடுக்கப்பட்ட ஒவ்வொருவரையும் விசாரித்தும் பார்க்கலாம் தானே............ ஒவ்வொரு மாவட்ட அளவிலும் விசாரணையை நடத்தலாம். உதாரணமாக, கிளிநொச்சியில் 16 விசாரணைகள்...........

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, goshan_che said:

இதுதான் குற்றச்சாட்டின் சாராம்சம்.

ம்..அப்ப நான் தான் எரிஞ்சு போன LED மாதிரி இது விளங்காமல் இருந்திருக்கிறன் போல!

ஆனால், இந்த விசாரணையெல்லாம் இவர்களின் அரசு செய்யாதென ஊகிக்கிறேன். இப்படி ஒரு வதந்தி நிலையிலேயே எல்லாரையும் வைத்திருப்பது இவர்களுக்கு இலாபம். எனவே, செய்ய மாட்டார்கள். எல்லோரும் "பார் மகளே பார்..." என்று அல்லாடிக் கொண்டிருக்க அடுத்த தேர்தலும் வந்து விடும்😂!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, ரசோதரன் said:

👍................

2024ம் ஆண்டில் அனுமதி கொடுக்கப்பட்ட ஒவ்வொருவரையும் விசாரித்தும் பார்க்கலாம் தானே............ ஒவ்வொரு மாவட்ட அளவிலும் விசாரணையை நடத்தலாம். உதாரணமாக, கிளிநொச்சியில் 16 விசாரணைகள்...........

செய்யலாம்…ஆனால் பார் உரிமையாளர்கள் ஏன் எம்பியை மாட்டி விட போகிறார்கள்?

சிபாரிசு மூலம்தான் பெற்றேன் என சொன்னால் இலஞ்சம் கொடுத்த வகையில் அவர்களுக்கு பிரச்சனை. அதே போல் லைசன்சும் காலியாகும்.

ஆகவே நான் வழமை போல அப்பிளை பண்ணினேன் கிடைத்தது என்று சொல்வதே அவர்களுக்கு சேப்டி.

4 minutes ago, Justin said:

ஆனால், இந்த விசாரணையெல்லாம் இவர்களின் அரசு செய்யாதென ஊகிக்கிறேன். இப்படி ஒரு வதந்தி நிலையிலேயே எல்லாரையும் வைத்திருப்பது இவர்களுக்கு இலாபம். எனவே, செய்ய மாட்டார்கள். எல்லோரும் "பார் மகளே பார்..." என்று அல்லாடிக் கொண்டிருக்க அடுத்த தேர்தலும் வந்து விடும்😂!

ஓம்….

இதில் செய்தவன் செய்யாதவன் எல்லாரையும் அடிக்கலாம்.

அடிக்க முடியாத ஒரே ஆட்கள் முந்தைய 3 ஜேவிபி எம்பிகள் மட்டுமே.

ஆகவே இதை ஜேவிபி நல்லா இழுத்து இழுத்து படம் காட்டும்.

அதே போல் நாமும் எமக்கு விருப்பமில்லாத எம்பியை குற்றம்சாட்டியபடியே எமக்கு விருப்பமான எம்பி, ஆதாரம் கேட்டார் இல்லையாம் என பபா மாதிரி யாழில் எழுதி இன்பம் அடையலாம் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
34 minutes ago, goshan_che said:

இதில் எந்த எம்பியையும் கையும் களவுமாக பிடிப்பது கஸ்டம்.

ஒன்றில் ரணில், அல்லது அவர் சார்பில் சிபாரிகளை டீல் செய்தவர் சொல்ல வேண்டும், அல்லது சிபாரிசு கொடுத்த எம்பிகள் சொல்ல வேண்டும்.

large.IMG_7853.jpeg.080bbf8ce503e4f6b129

  • Like 2
  • Haha 7
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, goshan_che said:

ஆகவே நான் வழமை போல அப்பிளை பண்ணினேன் கிடைத்தது என்று சொல்வதே அவர்களுக்கு சேப்டி.

ஆரம்பம் இப்படித்தான் இருக்கும். ஆனால் தொடர்ந்து நாலு பக்கங்களாலும் வளைத்தால், சிலர் மாட்டுப்பட்டு உண்மையைச் சொல்லக்கூடும். பின்னர் அவர்களே 'நான் மட்டுமா....... ஏன் அவனும் தானே............' என்று கைகாட்டவும் கூடும். 

தேசிய மக்கள் சக்தி இப்பொழுது இவை போன்றவற்றில் தான் மும்முரமாக இருக்கின்றது. ஒரு சில மாதங்களில் இவற்றை ஒரு பக்கம் போட்டு விட்டு, மற்ற முக்கிய திட்டங்களில் கவனம் செலுத்தவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, Kavi arunasalam said:

large.IMG_7853.jpeg.080bbf8ce503e4f6b129

🤣. நாளைக்கு வந்து கட்டாயம் பச்சை குத்துவேன் ஐயா. வேற லெவல் கார்ட்டூன்.

2 minutes ago, ரசோதரன் said:

ஆரம்பம் இப்படித்தான் இருக்கும். ஆனால் தொடர்ந்து நாலு பக்கங்களாலும் வளைத்தால், சிலர் மாட்டுப்பட்டு உண்மையைச் சொல்லக்கூடும். பின்னர் அவர்களே 'நான் மட்டுமா....... ஏன் அவனும் தானே............' என்று கைகாட்டவும் கூடும். 

தேசிய மக்கள் சக்தி இப்பொழுது இவை போன்றவற்றில் தான் மும்முரமாக இருக்கின்றது. ஒரு சில மாதங்களில் இவற்றை ஒரு பக்கம் போட்டு விட்டு, மற்ற முக்கிய திட்டங்களில் கவனம் செலுத்தவேண்டும். 

மாட்டினால் சந்தோசம். அப்போதும் எம்பிகள் பொய்குற்றசாட்டு, வழக்கு போடுவேன் என சொல்லிவிட்டு கடந்து போய்விடுவார்கள்.

ஏலவே எம்பி ஒருத்தர் இப்படி ஒரு அறிக்கை விட்டு, அதை யாழிலும் ஒருவர் காவித்திரிகிறார்.

பணபரிமாற்றம் அல்லது குறுஞ்செய்திகள் என தக்க ஆதாரத்தோடு மாட்டினால்தான் உண்டு.

இல்லை என்றால் ஆதாரம் இருக்கா? என பழைய டிவி விளம்பரம் மாதிரி எம்மையே திருப்பி கேட்பார்கள்🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, goshan_che said:

மாட்டினால் சந்தோசம். அப்போதும் எம்பிகள் பொய்குற்றசாட்டு, வழக்கு போடுவேன் என சொல்லிவிட்டு கடந்து போய்விடுவார்கள்.

ஏலவே எம்பி ஒருத்தர் இப்படி ஒரு அறிக்கை விட்டு, அதை யாழிலும் ஒருவர் காவித்திரிகிறார்.

பணபரிமாற்றம் அல்லது குறுஞ்செய்திகள் என தக்க ஆதாரத்தோடு மாட்டினால்தான் உண்டு.

இல்லை என்றால் ஆதாரம் இருக்கா? என பழைய டிவி விளம்பரம் மாதிரி எம்மையே திருப்பி கேட்பார்கள்🤣

🤣..............

எங்களின் களத்து பஞ்சாயத்து எல்லாவற்றையும் விட பெரிய பஞ்சாயத்து...............

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, goshan_che said:

🤣. நாளைக்கு வந்து கட்டாயம் பச்சை குத்துவேன் ஐயா. வேற லெவல் கார்ட்டூன்.

மாட்டினால் சந்தோசம். அப்போதும் எம்பிகள் பொய்குற்றசாட்டு, வழக்கு போடுவேன் என சொல்லிவிட்டு கடந்து போய்விடுவார்கள்.

ஏலவே எம்பி ஒருத்தர் இப்படி ஒரு அறிக்கை விட்டு, அதை யாழிலும் ஒருவர் காவித்திரிகிறார்.

பணபரிமாற்றம் அல்லது குறுஞ்செய்திகள் என தக்க ஆதாரத்தோடு மாட்டினால்தான் உண்டு.

இல்லை என்றால் ஆதாரம் இருக்கா? என பழைய டிவி விளம்பரம் மாதிரி எம்மையே திருப்பி கேட்பார்கள்🤣

போன மாதம் வரையில் யாழ் திரிகளில் "ஆதாரம்" கேட்பது ஓரிருவர் தான்! இப்ப எல்லாரும் "ஆதார புருஷர்களாக" 😎மாறி விட்டார்கள்.

மகிழ்ச்சியடைவதா அல்லது "இனி நம் தொழில் என்னவாகிறது?" என்று அச்சமைடைவதா? என்று தெரியவில்லை!😂

  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
24 minutes ago, goshan_che said:

அதே போல் நாமும் எமக்கு விருப்பமில்லாத எம்பியை குற்றம்சாட்டியபடியே எமக்கு விருப்பமான எம்பி, ஆதாரம் கேட்டார் இல்லையாம் என பபா மாதிரி யாழில் எழுதி இன்பம் அடையலாம் 🤣

இதைத் தான் ராசா நான் வேண்டாம் என்று தொடர்ந்து எழுதுகிறேன். அவர்களின் வலையில் நாம் விழுதல் தகுமோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மதுபான அனுமதிப்பத்திரம் – சிபாரிசு செய்தவர்களின் பெயர் பட்டியலும் வெளியிடப்படும்!

adminDecember 5, 2024
nalintha.jpg

மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு சிபாரிசு செய்த அரசியல்வாதிகளின் பெயர் பட்டியல் விசாரணைகளின் பின்னர் வெளியிடப்படும் என அரசாங்கம் இன்று (05.12.24) உறுதியளித்துள்ளது.

மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் நிதியமைச்சு விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு பரிந்துரைத்த அரசியல்வாதிகளின் பெயர்ப்பட்டியல் அனைத்து மக்களுக்கும் தெரியும் வகையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் அமைச்சருமான டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ ளுமன்றத்தில் தெரிவித்தார்.

அனுமதிப் பத்திரம் பெற்றவர்களின் பெயர்களைப் போல் மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு சிபாரிசு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அல்லது மக்கள் பிரதிநிதிகளின் பெயர்களை வெளியிடுமாறு அமைச்சரிடம் வலியுறுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை வலியுறுத்தி உள்ளார்.

https://globaltamilnews.net/2024/209031/

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, goshan_che said:

ஏலவே எம்பி ஒருத்தர் இப்படி ஒரு அறிக்கை விட்டு, அதை யாழிலும் ஒருவர் காவித்திரிகிறார்.

சாணக்கியன் , விபரங்களை வெளியிடுங்கள் என்று பாராளுமன்றத்தில் கேட்கிறார். அருகிலே அமர்ந்திருக்கும் ‘பார்’ போற்றும் தமிழரசுக் கட்சித் தலைவர் ஏதும் நடக்காதது போல் தன் வேலையில் கவனத்தை வைத்திருக்கிறார். ஆசாமி ஒன்றும் லேசுப்பட்ட ஆள் இல்லை.

14 minutes ago, goshan_che said:

நாளைக்கு வந்து கட்டாயம் பச்சை குத்துவேன்

இல்லாவிட்டில் பரவாயில்லை. நீங்கள் பச்சை குத்தியதாக எடுத்துக் கொள்கிறேன்.😃

  • கருத்துக்கள உறவுகள்
Posted
51 minutes ago, Justin said:

மகிழ்ச்சியடைவதா அல்லது "இனி நம் தொழில் என்னவாகிறது?" என்று அச்சமைடைவதா? என்று தெரியவில்லை!😂

🤣 இதுவாவது பரவாயில்லை.

அங்கால அண்ணன் சீமானை, துரைமுருகனை எல்லாம் தம்பிகளே விமர்சிக்க வெளிக்கிட்டார்கள்.

இனி யாழில் வந்து “காசி யாத்திரை போகும் முன் கவனிக்க வேண்டிய விடயங்கள்” என்ற வகையில் எழுதினால்தான் பொழைக்க முடியும் போல இருக்கு🤣.

55 minutes ago, ரசோதரன் said:

🤣..............

எங்களின் களத்து பஞ்சாயத்து எல்லாவற்றையும் விட பெரிய பஞ்சாயத்து...............

🤣 எல்லாரும் நாட்டாமை எல்லோ…அப்படித்தான் இருக்கும்🤣

54 minutes ago, விசுகு said:

இதைத் தான் ராசா நான் வேண்டாம் என்று தொடர்ந்து எழுதுகிறேன். அவர்களின் வலையில் நாம் விழுதல் தகுமோ?

ஓம் அண்ணை. 

இதில் ரணில் போன்ற இனவாதிகளுக்கு இரெட்டை இலாபம்.

1. இலஞ்சம் கொடுத்து ஆதரவையும் பெற்றாயிற்று.

2. இனி நாம் பையில் போட்ட எலிகள் போல இதைவைத்தே அடிபடுவோம். 

54 minutes ago, Kavi arunasalam said:

சாணக்கியன் , விபரங்களை வெளியிடுங்கள் என்று பாராளுமன்றத்தில் கேட்கிறார். அருகிலே அமர்ந்திருக்கும் ‘பார்’ போற்றும் தமிழரசுக் கட்சித் தலைவர் ஏதும் நடக்காதது போல் தன் வேலையில் கவனத்தை வைத்திருக்கிறார். ஆசாமி ஒன்றும் லேசுப்பட்ட ஆள் இல்லை.

இல்லாவிட்டில் பரவாயில்லை. நீங்கள் பச்சை குத்தியதாக எடுத்துக் கொள்கிறேன்.😃

கவனித்தேன்.

———

நன்றி

  • Thanks 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.