Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நடை முறைகளெல்லாம் நடை முறையில் இருக்கிறதா?

மது போதையில் நடுச்சாமத்தில் ஒரு அமைச்சர் சிறைச்சாலைக்குள் போய் தமிழ் கைதிகளை துப்பாக்கியைக் காட்டி பயமுறுத்தியும் சப்பாத்தை நக்கச் சொன்னதெல்லாம் நடை முறையில் உள்ளதா?

இலங்கையில் அதிகாரமே முக்கியம்.

  • Replies 140
  • Views 8.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    யானை... தனக்கு தீங்கு செய்தவர்களை, எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்...   நினைத்து வைத்து பழிவாங்குமாம். 😂 அதே குணம் கொண்டவர்தான்,  வைத்தியர் அர்ச்சுனா...  என்று சொல்கிறார்கள். 🤣 ஆக... சத்தியமூர்த்திக்

  • அர்ச்சுனாவை இன்னும் ஆதரிக்கும், அவர் மீது நம்பிக்கை வைக்கும் வாக்காளர்கள் இருந்தால் அவர்களுக்கு இது சமர்ப்பணம். சத்தியமூர்த்தி, எந்த ஒரு பா.உ வின் கீழும் இருக்கும் ஊழியர் அல்ல. பா.உ வுக்கு முறைப்

  • கருத்துக்கள உறவுகள்

சத்தியமூர்த்திக்கு தன் பதவிக்கேற்ற மாதிரி நடந்து கொள்ள தெரியாது...பப்ளிக்காய் தனது மு.புத்தகத்தில் அர்ஜுனாவுக்கு வோட்டு போட தனக்கு என்ன விசரோ😎 என்று தேர்தலுக்கு முன்பு எழுதினவர் ...சும் தான் இந்த தடவையும்  வெல்லுவார்...தன்னுடைய ராஜ்ஜியம் என்று நினைச்சிருப்பார்...எல்லாம் பூச்சியமாயிட்டுது😬...உடனே பிரதேசவாதத்தை கையில் எடுத்து கொண்டு கோசம் போடுகிறார்.

எனக்கு முதலில் சத்தியமூர்த்தி மேல் நல்ல அபிப்பிராயம்,நம்பிக்கை இருந்தது....யாழிலும் முன்பு ஆதரவாய் எழுதியிருந்தேன் ...ஒரு சில கட்டுரைகள் துறை சார்ந்த நிபுணர்களால் எழுதப்பட்டதை வாசித்தவுடன்,அதை விட அங்கிருந்து வரும் தகவல்கள் அவருக்கு நல்லதொரு பாடம் படிப்பிக்க வேண்டும்...அது யார் படிப்பித்தாலும் சரி😧
 
On 9/12/2024 at 16:57, ரசோதரன் said:

🤣....................

மக்கள் தேவை இருந்தால் கடவுளாகப் பார்ப்பார்கள். தேவை முடிந்தவுடன், கோவில் கதவையே உடைத்தும் விடுவார்கள்....................

இங்கே என்ன வெற்றியும், தோல்வியும்................. முடிவில்லாத அஞ்சலோட்டம் போல தடியை மாற்றி மாற்றிக் கொடுத்து ஓடிக் கொண்டேயிருப்பார்கள்.........

சும்மா இருந்த கேதீஸ்வரன் மீதே போதைப் பொருட்களை மாணவர்களுக்கு விற்றார் என்று போகிற போக்கில் ஒரு குண்டைத் தூக்கிய வீசிய அர்ச்சுனா (அதையும் பலர் நம்பி சமூக ஊடகங்களில் கொண்டு திரிந்தனர்..............🫣), இன்னும் ஏன் சத்தியனை மட்டும் விட்டு வைத்திருகின்றார், இத்தனைக்கும் சத்தியன் மீது பல குற்றச்சாட்டுகள் ஏற்கனவே இருக்கின்றன................

சத்தியமூர்த்தி தானே கேதீஸ்வரன்  போதைப் பொருள் விற்றதாக சொன்ன நினைவு....இருவருக்கும் இடையிலும் பிரச்சனை அல்லவா .
 
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

யாழ்ப்பாண பா.உ யாழ் மருத்துவமனைகளுக்குள் வரலாம். பா.உ மட்டுமல்ல, எவரும் வெளிநோயாளர் போகக் கூடிய இடம் வரை வரலாம். ஆனால், மருத்துவமனைப் பொறுப்பாளரின் அனுமதியில்லாமல் விடுதியுட்பட்ட உள் பகுதிகளுக்கு யாரும் போக முடியாது. ஏன்? அந்தக் கட்டிடத்திற்குள் இருப்போரின் நலனுக்கு பொறுப்பாளர் தான் பொறுப்பு. "சந்திப்பு நேரம் நியமித்த பின்னர் வாருங்கள்" என்கிறார் சத்தியமூர்த்தி. அதுவே முறை.

சாதாரண மக்களை விட, பா.உக்களுக்கு ஏராளமான சலுகைகள் (privileges) பாராளுமன்றத்தின் உள்ளேயும், பா. உ கடமையை செய்யும் போது பாராளுமன்றத்திற்கு வெளியேயும் இருக்கின்றன. சும்மா திறந்திருக்கும் கட்டிடங்களுக்குள் நுழைந்து பா.உக்கள் "கடமை செய்கிறேன்" என்று "சலுகை" கேட்க முடியாது.

உண்மையில், அர்ச்சுனாவைப் பாராளுமன்றம் அனுப்பிய வாக்காளர்கள் இதையெல்லாம் எதிர்பார்த்திருக்க வேண்டும். Elections have consequences😎!

சத்தியமூர்த்தி அவர்கள் சுகாதார அமைச்சின் அனுமதி பெற்றா அல்லது பெறாமலா ஊடகவியலாளர் சந்திப்பு செய்கின்றார்? நாட்டின் வைத்தியசாலைகளின் பணிப்பாளர்கள் தம்பாட்டுக்கு ஊடகவியலாளர் சந்திப்பு செய்யலாமா? இவர் ஒரு அரசியல்வாதிபோல் அல்லவா செயற்படுகின்றார்? 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ரதி said:

சத்தியமூர்த்தி தானே கேதீஸ்வரன்  போதைப் பொருள் விற்றதாக சொன்ன நினைவு....இருவருக்கும் இடையிலும் பிரச்சனை அல்லவா .
 
இல்லை, கபிடல் டெலிவிஷன் என்பவர்களுக்கு அர்ச்சுனா ஒரு நீண்ட பேட்டி கொடுத்திருந்தார். அதில் தான் இந்தக்  குற்றச்சாட்டை அவர் சுமத்தியிருந்தார் என்று நினைக்கின்றேன். இது வவுனியாவில் உள்ள சில மருந்துக்கடைகளினூடாக நடைபெற்றது என்றும் அவர் சொல்லியிருந்ததாக ஞாபகம்.

தனிமனிதர்களை இப்படியாக எழுந்தமானத்தில், ஆதாரங்கள் இன்றி பொதுவெளியில் குற்றம் சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதுவே தான் குருநாகலில் மருத்துவர் மொகமட் ஷாஃபிக்கும் நடந்தது, வேறொரு தீவிர குற்றச்சாட்டை அவர் மேல் அவருடன் வேலை செய்த பெரும்பான்மை இனத்தவர் ஒருவர் சுமத்தியிருந்தார். பின்னர் அது நாடெங்கும் பற்றியெரிந்தது. ஷாஃபியின் குடும்பமே அழிந்தது என்று தான் நினைத்தேன், ஆனால் அவர் இறுதிவரை போராடி தான் ஒரு நிரபராதி என்று நிரூபித்தார்................

கேதீஸ்வரனுக்கும், சத்யனுக்கும் பிரச்சனைகள் இருக்கலாம். அது பதவிப் போட்டியாகவும் இருக்கலாம். ஆனால் சத்யன் இந்த ஆதாரமில்லா, அபாண்டமான குற்றச்சாட்டை கேதீஸ்வரனின் மேல் வைக்கவில்லை என்றே என் ஞாபகம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரசோதரன் said:

தகவலுக்கு நன்றி ...கேதீஸ்வரன் மேல் பிழை இல்லை என்றால் ஏன் அவர் அர்ஜுனா மீது மான ,நஷ்ட வழக்கு போடவில்லை?
சத்தியமூர்த்தி உங்கள் நண்பரா 😜

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, நியாயம் said:

சத்தியமூர்த்தி அவர்கள் சுகாதார அமைச்சின் அனுமதி பெற்றா அல்லது பெறாமலா ஊடகவியலாளர் சந்திப்பு செய்கின்றார்? நாட்டின் வைத்தியசாலைகளின் பணிப்பாளர்கள் தம்பாட்டுக்கு ஊடகவியலாளர் சந்திப்பு செய்யலாமா? இவர் ஒரு அரசியல்வாதிபோல் அல்லவா செயற்படுகின்றார்? 

இதை சத்தியமூர்த்தியிடம் கேட்க வேண்டும். பணிப்பாளர் தரத்தில் இருப்பவர் அமைச்சு அனுமதி பெற்றுப் பேச வேண்டுமென்று விதி இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால், இதே ஊடகவியலாளர் சந்திப்பில் வடக்கில் தற்போது நடந்து வரும் காய்ச்சல் மரணங்கள் தொடர்பிலும் பேசுகிறார், எனவே "மருத்துவமனையைப் பாதிக்கும் எல்லாம் பற்றி  மக்களுக்குத் தெளிவு படுத்தினேன்" என்று அவர் சொன்னால் அமைச்சும் எதுவும் செய்யாது.

நிற்க. இப்ப அர்ச்சுனா விசர்கூத்தாடினதை மறைக்க சத்தியமூர்த்தியின் இந்த நடவடிக்கையைப் பெரிய கோடாகக் காட்ட முயல்கிறீர்களா😂?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

தகவலுக்கு நன்றி ...கேதீஸ்வரன் மேல் பிழை இல்லை என்றால் ஏன் அவர் அர்ஜுனா மீது மான ,நஷ்ட வழக்கு போடவில்லை?
சத்தியமூர்த்தி உங்கள் நண்பரா 😜

🤣...............

சத்யன் என்று எழுதுவதை வைத்துச் சொல்லுகிறீர்கள் போல.............

கேதீஸ் என்றும் எழுதி விடுகின்றேன்................😜.

வயதில் இவர்கள் இருவருக்கும் இடையில் நான் வருகின்றேன்........... இல்லை, இவர்கள் இருவரும் என் நண்பர்கள் இல்லை. ஆனால் இவர்களை ஓரளவிற்கு நன்றாகவே எனக்கு சில தொடர்புகள் மூலம் தெரியும்.

அர்ச்சுனா மீது வழக்குப் போடலாம் தான்......... கேதீஸ் ஏன் தயங்குகின்றார் என்று தெரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

ஊசி அருச்சுனா தன்னிடம் சத்திய மூர்ததிக்கு எதிராக ஆதாரங்கள் இருந்தால் அதை அரசாங்கத்திடம் சமர்பிக்க வேண்டும். அல்லது முறைப்படி பொது நல வழக்கு தாக்கல் செய்து இவ்விடயத்தை அணுக வேண்டும். அதை விடுத்து இப்படி அதாகரிகமாக ஒரு வைத்தியசாலை பணிப்பாளரின் அலுவலகத்துக்குள் நுழைவது. பேசுவதை பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது எல்லாம் அவரது பண்பாடற்ற  செயல்கள். 

 ஒருவருடன் உரையாடுவதை அவரின் அனுமதி இன்றி பதிவு செய்வதே குற்றம். அதை பொது வெளியில் வெளியிடுவதும் குற்றம். மேற்கு நாடுகளில் வாழ்ந்திருந்தால் இந்த அர்சுனாவுக்கு  எப்போதோ கடும  தண்டனை வழங்கப்பட்டிருக்கும். 

தான் ஒரு ஹீரோ என்ற நினைப்பில் அதிகமாக ஆட்டம் போடுகிறார். விரைவில் விளைவுகளை சந்திப்பார் என நினைக்கிறேன்.  

மக்களுக்கு ஹீரோயிசம் காட்டுவதே இவரது நோக்கமே தவிர மருத்துவ ஊழல்களை கண்டுபிடிப்பதல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ஒருவரின் அனுமதியின்றி உரையாடுவதை பதிவு செய்யலாம் & வெளியிடலாம்.

இந்த டாக்குத்தர் பெரிய குடைச்சல் எல்லாருக்கும். ஆனால் இவரின்  முதிர்ச்சியற்ற செயல்களால் மக்களின் வெறுப்பபை சம்பாதிக்க போகின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

இதை சத்தியமூர்த்தியிடம் கேட்க வேண்டும். பணிப்பாளர் தரத்தில் இருப்பவர் அமைச்சு அனுமதி பெற்றுப் பேச வேண்டுமென்று விதி இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால், இதே ஊடகவியலாளர் சந்திப்பில் வடக்கில் தற்போது நடந்து வரும் காய்ச்சல் மரணங்கள் தொடர்பிலும் பேசுகிறார், எனவே "மருத்துவமனையைப் பாதிக்கும் எல்லாம் பற்றி  மக்களுக்குத் தெளிவு படுத்தினேன்" என்று அவர் சொன்னால் அமைச்சும் எதுவும் செய்யாது.

நிற்க. இப்ப அர்ச்சுனா விசர்கூத்தாடினதை மறைக்க சத்தியமூர்த்தியின் இந்த நடவடிக்கையைப் பெரிய கோடாகக் காட்ட முயல்கிறீர்களா😂?

நடப்பு அரசின் கட்சியை சேர்ந்த யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களையும் வைத்தியசாலைக்கு நிலவரம் அறிய சென்றால் வாசலில் வைத்து பிடித்து போலிசாரிடம் ஒப்படைப்பாரோ? 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பழைய மாணவன் தனது முன்னாள்  பாடசாலைக்குப் போவதானாற்கூட , வாசலில் நிற்கும் காவளாளியிடம் அனுமதி பெற வேண்டும். பின்னர் அலுவலகப்   பியோனிடம் அனுமதி பெற்று தலைமையாசிரியரையோ அல்லது பொறுப்பாசிரியரையோ சந்தித்து அனுமதி பெற்றுத்தான் தனது பாடசாலையச் சுற்றிப்பார்க்க முடியும்.

இது பாடசாலைகளுக்கு அல்லது கல்லூரிகளுக்குச் சென்ற பழைய மாணவர்களுக்குப் புரியும். 

😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

இதை சத்தியமூர்த்தியிடம் கேட்க வேண்டும். பணிப்பாளர் தரத்தில் இருப்பவர் அமைச்சு அனுமதி பெற்றுப் பேச வேண்டுமென்று விதி இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால், இதே ஊடகவியலாளர் சந்திப்பில் வடக்கில் தற்போது நடந்து வரும் காய்ச்சல் மரணங்கள் தொடர்பிலும் பேசுகிறார், எனவே "மருத்துவமனையைப் பாதிக்கும் எல்லாம் பற்றி  மக்களுக்குத் தெளிவு படுத்தினேன்" என்று அவர் சொன்னால் அமைச்சும் எதுவும் செய்யாது.

நிற்க. இப்ப அர்ச்சுனா விசர்கூத்தாடினதை மறைக்க சத்தியமூர்த்தியின் இந்த நடவடிக்கையைப் பெரிய கோடாகக் காட்ட முயல்கிறீர்களா😂?

சத்தியமூர்த்திக்கு எதிராக இதுவரை யாராவது

கதைத்தவரகளா. ??  இல்லை   .....ஏன்???

சத்தியமூர்த்தி குற்றமற்றவர்.    அல்லது அவருக்கு பயப்படுகிறார்கள் .....இன்றைய நிலையில் அர்ச்சுனா  தேவை    

சரி பிழை  என்பதற்கு அப்பால்.  இப்படி துணிவு உள்ளவன் யாழ்ப்பாண மக்களுக்கு தேவை   

இலங்கையில் மருத்துவமனையில் மருத்துவர்கள் நோயாளிகளுடன்  நடத்து. கொள்ளும்முறை   

ஏதோ ஏஞைமான்.  அடிமை  போன்றது  தங்கள் இலவசமாக மருத்துவம் செய்கிறோம் என்ற நினைவு   

அரச வைத்தியசாலையில் வேலை செய்வோர் தனியார் வைத்தியசாலை நடத்தக்கூடாது   சட்டம் மூலம் தடுக்கப்படவேண்டும்  இலவச மருத்துவம் நிறுத்தப்பட்டு  அந்த பணம்  மருத்துவக் காப்பீட்டு அட்டைகளில். மக்களின் பெயரில் வைப்பிலிடப்படவேண்டும்.   

மக்கள் விரும்பிய வைத்தியரிடம்  மருத்துவம் பெறலாம்   

படிப்பு இலவசம் 

மருத்துவம் இலவசம் 

பட்டப்படிப்பு இலவசம் 

இப்படி எல்லாம் இலவசம் என்கிறார்கள்  அரசாங்கம் எங்கிருந்து பணம் வருகிறது???? இது மக்கள் பணம் இல்லையா?? 

இலவசம் என்ற கதையை   இலங்கையிலிருந்து துக்கி. ஏறிய வேண்டும்   🙏

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kandiah57 said:

இலவசம் என்ற கதையை   இலங்கையிலிருந்து துக்கி. ஏறிய வேண்டும்   🙏

நீங்கள் இப்போது ஒரு அதிதீவிரவாதியாகி விட்டீர்கள்.....................🤣.

வளர்ந்து வரும் நாடுகளில், வளர்ந்த நாடுகளில் கூட சில பிரிவினருக்கு, சமூக நலத்திட்டங்கள் தேவை, கந்தையா அண்ணா. இந்த நலத்திட்டங்கள் இலவசமாகவோ அல்லது மிகக்குறைந்த ஒரு செலவிலேயே தேவையான மக்களை சென்றடையவும் வேண்டும்.

அரச ஊழியர்களின், சில அல்லது பல ஆசிரியர்கள், மருத்துவர்கள் போன்றவர்கள் உட்பட, தான்தோன்றித்தனமான எஜமான மனப்போக்கை இல்லாதொழிக்க இலவச நலத்திட்டங்களை தொடரக் கூடாது என்பது சரியான ஒரு வழியாகத் தெரியவில்லை. எலித் தொல்லை போக வேண்டும் என்று வீட்டைக் கொளுத்தலாமா..............  

  • கருத்துக்கள உறவுகள்

அருச்சுனா ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் - அவருக்கு விழுந்த வாக்குகளில் கணிசமானவை protest votes.  தமிழ் கட்சிகளுக்கும் போட முடியாமல், என்பிபிக்கும் போட முடியாமல் இருந்தவர்கள் போட்ட வாக்குகள்.

அவரிடம் வாக்காளர் எதிர்பார்ப்பது reality show வை அல்ல. அதற்கான காலம் முடிந்து விட்டது.

ஊழலை விசாரிக்க ஒரு எம்பிக்கு ஏனையோருக்கு இல்லாத பல சிறப்பு வழிகள் உள்ளன - ஏற்கனவே பிரச்சனையான மனிதரை நானே போய் விசாரிப்பேன் என்பது சரியான அணுகுமுறை அல்ல.

With great power comes great responsibility அருச்சுனா இதை உணர்ந்து நடக்க வேண்டும்.

தமிழ் தேசியத்துக்கு இதுதான் கடைசிச்சந்தர்பம் என தேர்தல் முடிவின் பி  கூறிய அருச்சுனா - அதை உணர்ந்து நடக்க வேண்டும்.

அவருக்கு வாக்கு போட்டவர்களை அவரே அடுத்த முறை என்பிபி க்கு அனுப்பிவிட கூடாது.

25 minutes ago, Kandiah57 said:

இலவசம் என்ற கதையை   இலங்கையிலிருந்து துக்கி. ஏறிய வேண்டும்

ம்ம்ம்ம்….முதலில் நீங்கள் வாழும் நாட்டில் சோசல் காசு கொடுப்பதை நிறுத்துங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

With great power comes great responsibility அருச்சுனா இதை உணர்ந்து நடக்க வேண்டும்.

இந்த விசுக்கோத்து எம்பிக்கு வாக்குப்போட்டு அனுப்பின பனிக்கூட்டத்திற்கு இன்னும் ஷோ காட்டுவார்!

He clearly abused his power and violated the law/act.
https://parliament.lk/files/pdf/powers-privileges-act-en.pdf

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரசோதரன் said:

நீங்கள் இப்போது ஒரு அதிதீவிரவாதியாகி விட்டீர்கள்.....................🤣.

வளர்ந்து வரும் நாடுகளில், வளர்ந்த நாடுகளில் கூட சில பிரிவினருக்கு, சமூக நலத்திட்டங்கள் தேவை, கந்தையா அண்ணா. இந்த நலத்திட்டங்கள் இலவசமாகவோ அல்லது மிகக்குறைந்த ஒரு செலவிலேயே தேவையான மக்களை சென்றடையவும் வேண்டும்.

அரச ஊழியர்களின், சில அல்லது பல ஆசிரியர்கள், மருத்துவர்கள் போன்றவர்கள் உட்பட, தான்தோன்றித்தனமான எஜமான மனப்போக்கை இல்லாதொழிக்க இலவச நலத்திட்டங்களை தொடரக் கூடாது என்பது சரியான ஒரு வழியாகத் தெரியவில்லை. எலித் தொல்லை போக வேண்டும் என்று வீட்டைக் கொளுத்தலாமா..............  

யேர்மனியில் வசிக்கும் அவருக்கு இது நன்றாகவே தெரியும். 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரசோதரன் said:

கொடுக்கலாம்  ஆனால் இலவசம் இல்லை   இங்கே ஜேர்மனியில் 

சமூக நலத்திட்டங்களில்.  இருந்த அத்தனை பேரின். பிள்ளைகளும்   கிட்டத்தட்ட மாதம் 500 யூரோ வரி மட்டுமே செலுத்துறார்கள்.    இது ஒரு வாழ்க்கை வட்டம் போன்றது    பெறுவது கொடுப்பது சுழற்சி முறையானது    அதாவது மக்கள் பணத்தை மக்களுக்கு கொடுப்பது   இதில் எங்கே இலவசம்??? 

8 minutes ago, விசுகு said:

யேர்மனியில் வசிக்கும் அவருக்கு இது நன்றாகவே தெரியும். 

நான் சொன்னது இலவசம் என்ற போச்சே இருக்கக்கூடாது  

இது மக்கள் பணம்   எங்கள் பணம்  எங்களுக்கு தாருகிறீர்கள். மக்களுக்கு தாருகிறீர்கள்.  🙏🤪

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, கிருபன் said:

இந்த விசுக்கோத்து எம்பிக்கு வாக்குப்போட்டு அனுப்பின பனிக்கூட்டத்திற்கு இன்னும் ஷோ காட்டுவார்!

70 வருடமாக வெள்ளை வேட்டி  கோஷ்டிகளுக்கு வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பிய மக்கள் பெற்ற பிறவிப்பலன் காரணமாகவே இந்த முறையாவது இப்படியான அரசியல்வாதிக்கு வாக்களித்து பாரளுமன்றம் அனுப்பியுள்ளார்கள்.

50 வருட தமிழ் அரசியல்வாதிகள்  இதுவரைக்கும் செய்தது சரியென்றால் அர்சுனா அரசியல் செய்வதும் சரியே. 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கிருபன் said:

இந்த விசுக்கோத்து எம்பிக்கு வாக்குப்போட்டு அனுப்பின பனிக்கூட்டத்திற்கு இன்னும் ஷோ காட்டுவார்!

He clearly abused his power and violated the law/act.
https://parliament.lk/files/pdf/powers-privileges-act-en.pdf

நீங்க மாம்பழ வாக்காளர்தானே? 

முன்பே சொன்னதுதான் - அருச்சுனா பனி என தெரிந்தும் நான் போட்டிருப்பேன் ஏன் எண்டால் மிச்சம் எல்லாம் ஏழரை நாட்டுச் சனி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, Kandiah57 said:

கொடுக்கலாம்  ஆனால் இலவசம் இல்லை   இங்கே ஜேர்மனியில் 

சமூக நலத்திட்டங்களில்.  இருந்த அத்தனை பேரின். பிள்ளைகளும்   கிட்டத்தட்ட மாதம் 500 யூரோ வரி மட்டுமே செலுத்துறார்கள்.    இது ஒரு வாழ்க்கை வட்டம் போன்றது    பெறுவது கொடுப்பது சுழற்சி முறையானது    அதாவது மக்கள் பணத்தை மக்களுக்கு கொடுப்பது   இதில் எங்கே இலவசம்??? 

கந்தையர் நீங்கள் சொல்வது சரியே. ஜேர்மனிய சோசல் சிஸ்டம் வேற்று நாட்டவர்களுக்கு புரிவதில்லை. அதை நீங்கள் விளங்கப்படுத்தினாலும் விளங்கும் தன்மை அவர்களுக்கு அறவே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kandiah57 said:

இது ஒரு வாழ்க்கை வட்டம் போன்றது    பெறுவது கொடுப்பது சுழற்சி முறையானது    அதாவது மக்கள் பணத்தை மக்களுக்கு கொடுப்பது   இதில் எங்கே இலவசம்??? 

நான் சொன்னது இலவசம் என்ற போச்சே இருக்கக்கூடாது  

இது மக்கள் பணம்   எங்கள் பணம்  எங்களுக்கு தாருகிறீர்கள். மக்களுக்கு தாருகிறீர்கள்.  🙏🤪

நீங்கள் சொல்லும் இந்த வட்டத்தை, சுழற்சியை நோக்கித் தான் இலவசங்கள் வழங்கும் நாடுகள் போய்க் கொண்டிருக்கின்றன. அவர்களின் எதிர்கால நம்பிக்கையையும், திட்டமும் அதுதான். என்றோ ஒரு நாள் அதை அடைந்து விடுவோம் என்ற திட்டங்களே இன்றைய இலவச சமூகநலத் திட்டங்கள்.

ஆனால், ஒரு நாட்டில் மொத்த தேசிய உற்பத்தி போதுமானதாக இல்லாத போது, வட்டம் முழுமையாகது. அங்கே தான் அந்நியக் கடன்கள் வந்து இடைவெளியை நிரப்புகின்றன. 

தமிழ்நாடு மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது மிக விரைவாக முன்னுக்கு போய் நிற்கின்றது. இலவச அரிசி, குறைந்த விலை ரேஷன் அரிசி, பாடசாலைகளில் இலவச உணவு, புத்தகங்கள், அரச கல்லூரிகள்.......... இவை தான் அதற்கான காரணங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சம்பந்தப்பட்ட இருவருமே சமூகத்தில் அதிகூடிய பொறுப்புள்ளவர்கள், மக்களுக்கு பொறுப்பு சொல்ல வேண்டியவர்கள். உண்மையில் வைத்தியர் சத்திய மூர்த்தி கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவை, பிழையாக இருந்தாலும். அவரின் வீட்டுக்கு போயும் கதைக்க முடியாது. ஆகவே அவருக்கு உரிய முறையில் அழைத்து விசாரித்திருக்கலாம். உண்மையில் போலீஸார்கூட செய்யும் அக்கிரமங்களை யாராவது  தட்டிக்கேட்டால் தமது கடமைக்கு இடையூறு விளைவித்ததாக கூறி சுட்டுக்கொன்று விடுகிறார்கள், அதையும் சட்டம் சரியென ஏற்றுக்கொள்கிறது. இந்த இருவருக்கும் பஞ்சாயத்து தீர்ப்பதிலேயே ஐந்து வருடங்கள் ஓடி மறைந்து விடும். இருவரில் ஒருவரின்  பதவி பறிக்கப்பட வாய்ப்புண்டு. தமது பிரச்சனைகளை தீர்ப்பார் என்று நம்பி வாக்களித்த மக்களும், இந்த தொண்டர் சேவையாளர்களுமே பாதிக்கப்படுவர் இவர்களின் பொறுப்பற்ற செயலால்.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, விசுகு said:

அவருக்கு இது நன்றாகவே தெரியும். 

தெரிந்து கொண்டுமா🙄

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, கிருபன் said:

He clearly abused his power and violated the law/act.
https://parliament.lk/files/pdf/powers-privileges-act-en.pdf

I am not even sure he has any powers here to abuse. 

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பிரின் சிறப்புரிமைகள் பெருமளவில் பாராளுமன்ற வளாகத்துக்குள்தான். சம்மன் பண்ணும், விசாரிக்கும் அதிகாரம் பாராளுமன்ற தனி உறுப்பினர்களால் அன்றி தேர்வு குழுக்கள் வழியாகவே பிரயோகிக்க படும்.

ஒரு வாக்காளரின் விடயம் சம்பந்தமாக ஒரு எம்பி கடிதம் மூலம் கேள்வி கேட்டால், குறித்த கால அவகாசத்தில் பதில் போட வேண்டும்.

இலங்கையிலும் இப்படித்தான் என நினைக்கிறேன்.

இங்கே கடிதம் போடாமல் அருச்சுனா நேரில் போயுள்ளார்.  பணிப்பாளர் முறையாக ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்கிறேன் என்றால் ஒத்து கொள்வதுதான் முறை.

சேர் என அழைக்கவேண்டும் என அடம்பிடிப்பது எல்லாம் லுச்சாத்தனம்.

 திரு அருச்சுனா இராமநாதன் கெளரவ பா உ அவர்களே என அழைத்தால் போதும் என நினைக்கிறேன்.

இவர் இதை பாராளுமன்றில் சிறப்புரிமை மீறலாக எழுப்பும் போது - சபாநாயகர் என்ன செய்கிறார் என பார்போம்.

அருச்சுனா விதிகளை படித்து விட்டு போய் இருந்தால் - இலங்கை பாராளுமன்ற விதிகளின் படி அவர் சரியாக இருக்கவும் வாய்புள்ளது. 

என்னால் நீங்கள் தந்த இணைப்பில் அப்படி எதையும் காணமுடியவில்லை. ஆனால் மிக மேம்போக்காகவே வாசித்தேன்.

39 minutes ago, Kandiah57 said:

சமூக நலத்திட்டங்களில்.  இருந்த அத்தனை பேரின். பிள்ளைகளும்   கிட்டத்தட்ட மாதம் 500 யூரோ வரி மட்டுமே செலுத்துறார்கள்.    இது ஒரு வாழ்க்கை வட்டம் போன்றது    பெறுவது கொடுப்பது சுழற்சி முறையானது    அதாவது மக்கள் பணத்தை மக்களுக்கு கொடுப்பது   இதில் எங்கே இலவசம்???

சோசல் காசு எடுத்த பிள்ளை பெறாதவரின் காசை பக்கத்து வீட்டு பிள்ளையா கட்டும்?

அது இலவசம் தானே?

22 minutes ago, குமாரசாமி said:

கந்தையர் நீங்கள் சொல்வது சரியே. ஜேர்மனிய சோசல் சிஸ்டம் வேற்று நாட்டவர்களுக்கு புரிவதில்லை. அதை நீங்கள் விளங்கப்படுத்தினாலும் விளங்கும் தன்மை அவர்களுக்கு அறவே இல்லை.

டீடெயில் நாட்டுக்கு நாடு வேறுபடலாம்.

ஆனால் welfare state இன் அடிப்படை தத்துவம் எங்கும் ஒன்றேதான்.

அது…

உழைக்கும் போது வரி அல்லது, காப்புறுதியாக செலுத்துங்கள். உழைக்கமுடியாவிட்டால் அரசு உங்களுக்கு மினிமம் பாதுகாப்பை தரும்.

Edited by goshan_che

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.