Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, satan said:

யாரது?

யாரை கோட் பண்ணி பத்தி பத்தியாக எழுதினேன்? அக்னிக்கு.

 

11 hours ago, goshan_che said:

ஆனால் உங்களை போல அல்ல இவர்கள். புத்தர் சிலை முளைத்தாலும் கெம்புகிறார்கள், அனுர இனவாதியாக செயல்பட்டார் என்பதையும் ஏற்கிறார்கள்.

ஆனால் புதிதாக முயல்வோம் என்கிறார்கள். அவகாசம் கொடுப்போம் என்கிறார்கள்.

👆 இது உங்களுக்கு.

  • Replies 195
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

தமிழ் சிறி

இரண்டு பார்ட் டைம் வேலை செய்யும் போது.... இரண்டிலிலும் எங்கை விட்டது, எங்கை தொட்டது... என்பதில்,  வலு  அவதானமாக இருக்க வேண்டும்.    ஒன்றில் சறுக்கினால்... மற்றது, சொதப்பி விட்டு விடும். 😂 

கிருபன்

அசாத் பூட்டினின் விருந்தாளி என்பதால் பூட்டின் விசுவாசிகளுக்கு அவர் நல்லவர்! சொந்த நாட்டு மக்களையே இரசாயன ஆயுதம் பாவித்து அழித்தவரை, பல்லாயிரம் பேரை சித்திரவதைக்குள்ளாக்கி படுகொலை செய்தவரை வெள்ளையடிக்க

ரஞ்சித்

புலிகளையும் அசாத்தையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கவோ அல்லது தலைவர் பிரபாகரனுக்கு அச்சுருத்தலாக இருந்ததால்த்தான் மாற்று இயக்க உறுப்பினர்களைப் புலிகள் கொன்றார்கள் என்று கூறுவதோ எல்லாம் ஒரே நோக்கத்திற்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, விளங்க நினைப்பவன் said:

உங்கள் புதிய ஜனாதிபதி  டொனால்ட்  ரம்பும் எங்களுக்கு சொந்தம் தானே

டிரம்ப் வரமுதலே சும்மா லகலகலகலகலக ... என்று அதிருதல்ல, தூள் பறக்குதில்ல  

ஹொந்தாய் வேணும் என்றால் ரம்ப் சொந்தத்தில் இருக்க வேண்டும்.  

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அவுஸ்ரேலிய பழங்குடியினரே எங்களுக்கு சொத்தம் என்றாகிவிட்ட போது உங்கள் புதிய ஜனாதிபதி  டொனால்ட்  ரம்பும் எங்களுக்கு சொந்தம் தானே

🙆‍♂️...............

ட்ரம்பும் சொந்தம் தான் என்ற விசயம் வெளியே தெரியக்கூடாது என்று நினைத்தேன்.......... இப்ப அதுவும் தெரிந்துவிட்டது. அவரைச் சொந்தம் என்று சொல்ல கொஞ்சம் வெட்கமாக இருக்கின்றது...........😜.

பல தலைமுறைகளாக எங்கள் குடும்பத்திற்கும், அவரின் குடும்பத்திற்கும் பேச்சுவார்த்தை எதுவும் இல்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்................

ஆஸ்திரேலியாப் பழங்குடிகளை முதன் முதலில் நேரே பார்த்த போது, 'காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்....................' என்று தான் தோன்றியது. அவர்கள் நாங்களே தான்.......... அவர்களின் சடாமுடிகளும், சாம்பல் பூச்சுகளும், குழாய் இசைக்கருவிகளும்,................ அநியாயமாக நம் மக்களை அங்கேயும் அழித்துவிட்டார்கள்.................. 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, vasee said:

இதனை பற்றி பேசுவதில் பிரயோசனம் இல்லை, அது ஒரு தவிர்க்க முடியாத இயற்கையியல் விதி, அதில் பெயர்கள் மட்டுமே வித்தியாசமாக இருக்கும்.

பேசுவதில் பயனிருந்த ஒரு காலம் இருந்தது. கந்தன் கருணை முதல், அருணா, நாவாலி கண் நோய் டெலோ போராளிகள், மாத்தையா குரூப் போராளிகள் என பலதை இதே யாழில் எழுதி, வாதிட்டு பத்து வருடத்துக்கும் மேல் ஆகிறது.

இதற்கான தேவையும், காலமும் இப்போ முடிந்தே விட்டது.

இல்லை என்றால் சங்கிலியன் 600 பேரை கொண்டது தவறா இல்லையா என வாதடலாம்.

பிரித்தானியாவில் 30 வருடம் கழிய பெரும்பாலான அரச ரகசியங்களையே வெளியிடுவார்கள்.

2024-1986 =38 வருடங்கள்.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 hours ago, goshan_che said:

இப்போ நீங்கள் எமது மக்களுக்கு பரிதுரைக்கும் “நடக்க வேண்டியது வேலை” என்ன?

இன்றைய உலக அரசியல் நிலையில் ஒரு விடயத்தை பரிந்துரைக்க யாராலும் முடியாது. அதற்குரிய பலமும் எம் அரசியலில் அறவே இல்லை.

நடக்க வேண்டிய வேலை சிங்களத்துடன் மட்டுமே நம்மவர்கள் கதைக்க வேண்டும்.

நிற்க...

நடந்தவைகளை கிளறிக்கொண்டிருந்தால் எந்த விமோசனமும் இல்லை. எந்த முன்னேற்பாடுகளும் வராது.

நடந்தவைகளை கனவாக மறக்க வேண்டும். இல்லையேல் அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருக்க வேண்டும்.

எது சரி என்பதை நீங்களே தீர்மானியுங்கள்.

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, Justin said:

இது ஏன் உங்களுக்குப் புதிராக இருக்கிறதென விளங்கவில்லை😂. புலிகளுக்கே டிமிக்கி கொடுத்த ஒருவரை "இவர் தான்" என்று சுட்டிக் காட்டும் ஒருவர் ஊர் போய் பாதுகாப்பாகத் திரும்ப இலங்கை, அவுஸ், அமெரிக்கா போல இன்னும் வளர்ந்து விடவில்லை. ஆனாலும், அவர் ஒரு துப்பு தந்திருக்கிறார் என நினைக்கிறேன். மகளை அறிந்தால், தகப்பனை அறிவது கஷ்டமா ஐயா?

 

6 hours ago, அக்னியஷ்த்ரா said:

யாழ் கள உறவுகள் சில பேருக்கு நான் யாரென்று தெரியும்

ஜஸ்டின்,

ஒரு இணையதளத்தில் உரையாடும் அக்னியை ஒரு சிலருக்கு தெரியும் என்ற நிலை இருக்கும்போது, 

புலிகளின் பணத்தை கையாடி வியாபார நிலையங்கள் , நிறுவனங்கள் என வைத்து கொழித்திருக்கும் நபர்  இவர்தான் என்று பொதுவெளிதளத்தில் துப்பு கொடுக்கும் அக்னியை குறிப்பிட்ட அந்த பணம் அரசியல் செல்வாக்குள்ள அந்த கொழித்த நபர் எந்தகாலமும் யாரென்று கண்டுபிடிக்க முடியாது என்று சொல்ல வருகிறீர்களா?

முகம் தெரியா இணையத்தில் தலை வரை ஒருவரை வெட்ட முடியும் ஆனால் முடியை வெட்டினால் அது பாதுகாப்பு பிரச்சனை என்று உங்களால் மட்டுமே சொல்ல முடியும்.

----------------------------------------------------------------------------------------

முடிவாக, முன்னாள் போராளிகளின் குடும்பத்தை புலிகள் கடத்தி சென்றார்கள் என்று கருத்து பகிர்ந்தார்கள், பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் பெயரைவாது பகிருங்கள் என்று கேட்டால் அதை தவிர்த்து வேறு எது எல்லாமோ பேசிக்கொண்டு போகிறார்கள்,

பணம் வசூலித்த போராளியை கொடூரமாக கொன்று சிங்களவன்  வாகனத்தில் கட்டி இழுத்து சென்றபோது ஊரே ஆரவாரித்து மகிழ்ந்தது என்கிறார்கள், பின்பு நானும் புலிகளின் ஆதரவாளர் என்கிறார்கள்.

அந்த போராளி வசூலித்த பணத்தை மூட்டை மூட்டையாக கட்டி வைத்தார் அதை இன்னொருவர் ஆட்டைய போட்டு இன்று ஆஹா ஓஹோ என்று இருக்கிறார் என்று பதிவிடுகிறார்கள், 

புலிகளின் சேமிப்புக்கள், களஞ்சிய படுத்தல்கள், நடவடிக்கைகள்,தங்குமிடங்கள்  பல கூட இருக்கும் தளபதிகள் போராளிகளுக்கே தெரிவதில்லை. ஆனால் புலிகள் அறவிட்ட பணத்தை ஒரு இடத்தில் மூட்டை மூட்டையாக கட்டி வைத்திருந்தார்கள் என்பது துல்லியமாக தெரிந்திருக்கிறது.

பொதுமக்களிடம் பணம் வசூலித்த போராளியின் சாவில் மகிழ முடியுமென்றால், அப்படி அறவிட்ட பணத்தை அப்படியே முழுங்கிய தனிநபரை பொது வெளியில் சொல்ல என்ன தயக்கம்?

யாரினால் பாதுகாப்பு அச்சுறுத்தல் வரும், புலிகளாலா? அரச படைகளாலா? அல்லது முன்னாள் ஆயுத குழுக்களாலா அல்லது பணத்தை களவாடிய அந்த நபரினாலா?

இன்றுள்ள ஆட்சி மாற்ற நிலவரத்தில் புலிகளின் நிதி சேகரிப்பு நடவடிக்கைகளில்பங்கெடுத்தவர்கள் மட்டுமல்ல, புலிகளின் நிதியை கொள்ளையடித்து  செழித்து நிற்கும் தனிநபர்கள்மீதும் சட்டம் பாய வாய்ப்பிருக்கு ,பெரும் சிங்கள தலைகளே அதில் உருளும் நிலை இருக்கும்போது  அந்த தனிநபர்களின் தலை எம்மாத்திரம்? அந்த   தனிநபர்களின் ஆதாரங்களை தர எது மறுக்கிறது?

எதிர்கருத்துக்களை விதைத்தே ஆகவேண்டுமென்ற முடிவுக்கு வந்துவிட்டால்..

எதுவேண்டுமென்றாலும் சொல்லிக்கொண்டுபோகலாம் என்ற நிலை எடுத்துவிட்டால், பொத்தாம் பொதுவாய் கருத்தை விதைத்துக்கொண்டே போகலாம், ஆனால் பொட்டில் அடித்தமாதிரி இதுதான், இவர்தான், இப்படித்தான் என்று சொல்லி முடிக்க முடியாது. 

ஒரு இனத்தின் இருப்புக்காக உயிரை தவிர வேறு எதையும் விட்டு கொடுக்காமல் வாழ்ந்த ஒரு அமைப்பின்மீது போறபோக்கில் சேறு வீசி செல்வதை எதிர்வினையாற்றாமல் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

அப்படி இருந்துவிட்டால் எம் வாழ்வுக்காகவும் சேர்த்தே தம் வாழ்வை அழித்த அந்த போராளிகூட்டம் பிறந்த மண்ணில் உயிராக பிறந்தது மட்டுமல்ல, ஒரு மயிராக காற்றில் பறந்தால் கூட அது பெரும் பாவம்.

இங்கே புலிகளுக்காக முக்கி முக்கி பேசுவதால் போன புலிகள் வரபோவதில்லை, அல்லது புலிகளுக்கு சார்பாக பேசிவிட்டால் நீ மட்டும்தான் புலிகள் விசுவாசி என்று யாரும் முண்டாசு கட்டிவிட போவதுமில்லை, மாறாக மனசில் உள்ளதெல்லாம்

புலிகள் வாழ்ந்தபோது எம் இனத்துக்காக அவர்கள் இறந்தது எம் இனத்திற்கான நன்றிக்கடன். அவர்கள் இல்லாதபோது

அவர்களுக்காக நாங்கள் பேசுவது ,,அவர்கள் நினைவாகவே இருப்பது  எமக்காக எல்லாம் செய்த பாவத்திற்காக இல்லாமலே போய்விட்ட புலிகளுக்கான எம் நன்றிக்கடன்.

இதுகூட ஒரு இனம் செய்யவில்லையென்றால், எமக்காக அந்த போராளி கூட்டம், பிறக்காதும் போயிருக்கலாம், பிறந்து இறக்காதும் போயிருக்கலாம்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
27 minutes ago, valavan said:

இன்றுள்ள ஆட்சி மாற்ற நிலவரத்தில் புலிகளின் நிதி சேகரிப்பு நடவடிக்கைகளில்பங்கெடுத்தவர்கள் மட்டுமல்ல, புலிகளின் நிதியை கொள்ளையடித்து  செழித்து நிற்கும் தனிநபர்கள்மீதும் சட்டம் பாய வாய்ப்பிருக்கு ,பெரும் சிங்கள தலைகளே அதில் உருளும் நிலை இருக்கும்போது  அந்த தனிநபர்களின் தலை எம்மாத்திரம்? அந்த   தனிநபர்களின் ஆதாரங்களை தர எது மறுக்கிறது?

தமிழர்களின் தாகம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

நடக்க வேண்டிய வேலை சிங்களத்துடன் மட்டுமே நம்மவர்கள் கதைக்க வேண்டும்.

அனைவருடனும் கதைக்க வேண்டும், 

சிங்களத்துடன் உடன்பாடு எட்டப்படும் போது மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் வேண்டும், சிங்களம் எப்போதும் ஒப்பந்தங்களை சின்னப்பிள்ளைகள் பேப்பரை கிழிப்பது போல கிழித்துவிடுவார்கள், அப்படி கிழிக்கும் போது யாராவது பக்கத்திலிருந்து ஒரு போடு போடுவதற்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் இருக்க வேண்டும்.

தற்போது இலங்கை அதிபர் இந்தியாவிற்கு ஓடோடி போய் இந்திய பாதுகாப்பிற்கு எதிராக செயற்படமாட்டோம் என கூறி இந்தியாவினை மகிழ்விக்க இந்திய நலத்திட்டத்தினை இலங்கையில் செயல்படுத்துவதிற்கு தயாரக உள்ளோம் என கூறியுள்ளார், பொதுவாக எமது நலனிற்காக மற்றவர்களை நாடி செல்லுகின்ற நிலையில்  இந்திய நலனிற்க்காக இந்தியாவிற்கு ஓடிப்போன இலங்கை அதிபரை வழிக்கு கொண்டுவர இந்தியா போன்ற மூன்றாம் தரப்பு வேண்டும்.

உக்கிரேன் இரஸ்சிய போரில் சம்பந்தப்பட்ட இரண்டாம் தரப்பான இரஸ்சியாவினை விட்டு விட்டு அமைதி முயற்சியில் ஈடுபடுகின்ற உலகில் சிங்களத்துடன் மட்டுமே பேசுவோம் என இருந்தால் எமக்கு எதுவும் கிடைக்காது. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, valavan said:

ஜஸ்டின்,

ஒரு இணையதளத்தில் உரையாடும் அக்னியை ஒரு சிலருக்கு தெரியும் என்ற நிலை இருக்கும்போது, 

புலிகளின் பணத்தை கையாடி வியாபார நிலையங்கள் , நிறுவனங்கள் என வைத்து கொழித்திருக்கும் நபர்  இவர்தான் என்று பொதுவெளிதளத்தில் துப்பு கொடுக்கும் அக்னியை குறிப்பிட்ட அந்த பணம் அரசியல் செல்வாக்குள்ள அந்த கொழித்த நபர் எந்தகாலமும் யாரென்று கண்டுபிடிக்க முடியாது என்று சொல்ல வருகிறீர்களா?

முகம் தெரியா இணையத்தில் தலை வரை ஒருவரை வெட்ட முடியும் ஆனால் முடியை வெட்டினால் அது பாதுகாப்பு பிரச்சனை என்று உங்களால் மட்டுமே சொல்ல முடியும்.

----------------------------------------------------------------------------------------

முடிவாக, முன்னாள் போராளிகளின் குடும்பத்தை புலிகள் கடத்தி சென்றார்கள் என்று கருத்து பகிர்ந்தார்கள், பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் பெயரைவாது பகிருங்கள் என்று கேட்டால் அதை தவிர்த்து வேறு எது எல்லாமோ பேசிக்கொண்டு போகிறார்கள்,

பணம் வசூலித்த போராளியை கொடூரமாக கொன்று சிங்களவன்  வாகனத்தில் கட்டி இழுத்து சென்றபோது ஊரே ஆரவாரித்து மகிழ்ந்தது என்கிறார்கள், பின்பு நானும் புலிகளின் ஆதரவாளர் என்கிறார்கள்.

அந்த போராளி வசூலித்த பணத்தை மூட்டை மூட்டையாக கட்டி வைத்தார் அதை இன்னொருவர் ஆட்டைய போட்டு இன்று ஆஹா ஓஹோ என்று இருக்கிறார் என்று பதிவிடுகிறார்கள், 

புலிகளின் சேமிப்புக்கள், களஞ்சிய படுத்தல்கள், நடவடிக்கைகள்,தங்குமிடங்கள்  பல கூட இருக்கும் தளபதிகள் போராளிகளுக்கே தெரிவதில்லை. ஆனால் புலிகள் அறவிட்ட பணத்தை ஒரு இடத்தில் மூட்டை மூட்டையாக கட்டி வைத்திருந்தார்கள் என்பது துல்லியமாக தெரிந்திருக்கிறது.

பொதுமக்களிடம் பணம் வசூலித்த போராளியின் சாவில் மகிழ முடியுமென்றால், அப்படி அறவிட்ட பணத்தை அப்படியே முழுங்கிய தனிநபரை பொது வெளியில் சொல்ல என்ன தயக்கம்?

யாரினால் பாதுகாப்பு அச்சுறுத்தல் வரும், புலிகளாலா? அரச படைகளாலா? அல்லது முன்னாள் ஆயுத குழுக்களாலா அல்லது பணத்தை களவாடிய அந்த நபரினாலா?

இன்றுள்ள ஆட்சி மாற்ற நிலவரத்தில் புலிகளின் நிதி சேகரிப்பு நடவடிக்கைகளில்பங்கெடுத்தவர்கள் மட்டுமல்ல, புலிகளின் நிதியை கொள்ளையடித்து  செழித்து நிற்கும் தனிநபர்கள்மீதும் சட்டம் பாய வாய்ப்பிருக்கு ,பெரும் சிங்கள தலைகளே அதில் உருளும் நிலை இருக்கும்போது  அந்த தனிநபர்களின் தலை எம்மாத்திரம்? அந்த   தனிநபர்களின் ஆதாரங்களை தர எது மறுக்கிறது?

ஆபத்து எந்தவடிவில் வந்தாலும் இந்தவிடயத்தில் உங்களுடன் களமிறங்க தயார்.
அதற்க்கு முன் உங்களிடமிருந்து ஒரு உறுதி மொழி வேண்டும். எந்த அளவிற்கு போயும் குறிப்பிட்ட நபருக்கு எதிராக  சட்டத்திற்குட்பட்ட அதிகபட்ச தண்டனையை நீங்கள் உறுதிப்படுத்தவேண்டும் நான் முயற்சித்தேன் முடியவில்லை என்ற சால்ஜாப்புகளுக்கெல்லாம் இடமில்லை. அதாவது பூனைக்கு மணியை கட்டுவது உங்கள் பொறுப்பு மணியை எடுத்து தருவது எனது பொறுப்பு. அதைவிடுத்து சும்மா பொதுஅறிவுக்காக கேட்கிறேன் 
மக்களுக்கு அறிவூட்டுவதற்காக கேட்கிறேன் என்ற இந்த சடையல்களுக்கு  எனக்கு நேரமில்லை. 
கோதாவில் இறங்கத்தயாரா ...?
டிஸ்கி2: இறுதியுத்தத்தில் 53,58,59 ம் டிவிஷன் உட்பட முன்னரங்கில் போர்புரிந்த பல பட்டாலியன்களின்   அதிகாரிகளாக இருந்த பல சிங்களவர்கள் திடீர் கோடீஸ்வரர்களாக மாற்ற உதவாமல் ஒரு தமிழன் கோடீஸ்வரனாக ஆகுவதற்காவது இந்த உலையில் போட்ட பண மூட்டைகள் உதவியதே என்று இதை நான் கடந்து செல்கிறேன் நீங்கள் எப்படி...? இல்லை அடி முடி கண்டேயாகவேனும் என்று நீங்கள் முடிவெடுத்தால் 
தேவையான அனைத்துத்தகவல்களும் உங்கள் இல்லம் வந்து சேரும் but only if you agreed upon above condition .
இல்லை 
ஒரு ஹைகோர்ட்டுக்கும் உதவாத மக்களை அறிவூட்டும் உங்கள் செயல்திட்டங்களை நீங்கள் தனியாக முன்னெடுக்கலாம். அது  என்னுடைய வேலை அல்ல  

Edited by அக்னியஷ்த்ரா
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
31 minutes ago, அக்னியஷ்த்ரா said:

பல சிங்களவர்கள் திடீர் கோடீஸ்வரர்களாக மாற்ற உதவாமல் ஒரு தமிழன் கோடீஸ்வரனாக ஆகுவதற்காவது இந்த உலையில் போட்ட பண மூட்டைகள் உதவியதே என்று இதை நான் கடந்து செல்கிறேன் நீங்கள் எப்படி...? இல்லை அடி முடி கண்டேயாகவேனும் என்று நீங்கள் முடிவெடுத்தால் 

 

14 hours ago, அக்னியஷ்த்ரா said:

புலிகளுக்கே தெரியாது அவர் புலிகளின் பணத்தை தான் ஏப்பம் விட்டு சுத்தலில் விடுகிறார் என்று அப்படியான எமகாதகன்.

பல சிங்களவர்கள் திடீர் கோடீஸ்வரர்களாக மாற்ற உதவாமல் ஒரு தமிழன் கோடீஸ்வரனாக ஆகுவதற்காவது இந்த உலையில் போட்ட பண மூட்டைகள் உதவியதே என்று இதை நான் கடந்து செல்கிறேன் என்று குறிப்பிடும் நீங்கள் அப்புறம் எதுக்கு அவரை எமகாதகன் என்றீர்கள்?

இப்போ அவரு உங்கள் பார்வையில் தமிழனா எமகாதகனா?

34 minutes ago, அக்னியஷ்த்ரா said:

ஆபத்து எந்தவடிவில் வந்தாலும் இந்தவிடயத்தில் உங்களுடன் களமிறங்க தயார்.
அதற்க்கு முன் உங்களிடமிருந்து ஒரு உறுதி மொழி வேண்டும். எந்த அளவிற்கு போயும் குறிப்பிட்ட நபருக்கு எதிராக  சட்டத்திற்குட்பட்ட அதிகபட்ச தண்டனையை நீங்கள் உறுதிப்படுத்தவேண்டும் நான் முயற்சித்தேன் முடியவில்லை என்ற சால்ஜாப்புகளுக்கெல்லாம் இடமில்லை.

என்னுடன் எதுக்கு களமிறங்க தயாராக இருக்கிறீர்கள்? அல்லது மூட்டை மூட்டையாக கொள்ளையடித்தவர்பற்றி முன்பே நான் அறிந்திருந்து தகவல் இங்கு பகிர்ந்தேனா? 

நானா இப்படி ஒருவர் மூட்டை மூட்டையாக இருந்த புலிகள் பணத்தை கொள்ளையடித்து பெட்ரோல் ஸ்ரேஷன் கடைகள் எல்லாம் போட்டு பண முதலையா இருக்கிறார் என்று சொன்னேன்?

ஆரம்பித்தது நீங்கள், அவர் முழு விபரங்களை வெளியில் சொன்னால்  உங்களுக்கு ஆபத்து வருமென்று பயப்பிடுகிறீர்களா?  அப்புறம் ஏன் ஆரம்பித்தீர்கள்? உயிருக்கு பயமில்லையா அப்படியென்றால் ஏன் சொல்ல மறுக்கிறீர்கள்? 

39 minutes ago, அக்னியஷ்த்ரா said:

ஒரு ஹைகோர்ட்டுக்கும் உதவாத மக்களை அறிவூட்டும் உங்கள் செயல்திட்டங்களை நீங்கள் தனியாக முன்னெடுக்கலாம். அது  என்னுடைய வேலை அல்ல

சரி அவர் அப்படி செய்தார் என்று நீங்கள் ஒரு தகவலை வெளிக்கொண்டுவந்தது எந்த ஹைகோர்ட்டுக்கு  அறிவூட்டும் செயல் திட்டம்  என்று அறிந்து கொள்ளலாமா?

பந்தாவாக ஆரம்பித்தீர்கள், இப்போது பந்தை வேறு பக்கம் திருப்பிவிட முயற்சிக்கிறீர்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, valavan said:

இப்போ அவரு உங்கள் பார்வையில் தமிழனா எமகாதகனா?

எமகாதக தமிழன்

1 hour ago, valavan said:

சரி அவர் அப்படி செய்தார் என்று நீங்கள் ஒரு தகவலை வெளிக்கொண்டுவந்தது எந்த ஹைகோர்ட்டுக்கு  அறிவூட்டும் செயல் திட்டம்  என்று அறிந்து கொள்ளலாமா?

சார் பொதுமக்களை அறிவூட்டும் செயற் திட்டத்தை முன்னெடுத்தது நீங்கள் நானல்ல  

👇

17 hours ago, valavan said:

ஆக குறைந்தது  பொதுவெளியில் அறிவித்தால் பொதுமக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

 

1 hour ago, valavan said:

அல்லது மூட்டை மூட்டையாக கொள்ளையடித்தவர்பற்றி முன்பே நான் அறிந்திருந்து தகவல் இங்கு பகிர்ந்தேனா? 

நானா இப்படி ஒருவர் மூட்டை மூட்டையாக இருந்த புலிகள் பணத்தை கொள்ளையடித்து பெட்ரோல் ஸ்ரேஷன் கடைகள் எல்லாம் போட்டு பண முதலையா இருக்கிறார் என்று சொன்னேன்?

ஆரம்பித்தது நீங்கள், அவர் முழு விபரங்களை வெளியில் சொன்னால்  உங்களுக்கு ஆபத்து வருமென்று பயப்பிடுகிறீர்களா?  அப்புறம் ஏன் ஆரம்பித்தீர்கள்? உயிருக்கு பயமில்லையா அப்படியென்றால் ஏன் சொல்ல மறுக்கிறீர்கள்? 

சொல்வதை அறிந்து  உங்களால் என்ன புடுங்கமுடியும் என்பதை முதலில் சொல்லுங்கள் அதன் பிறகு சொல்வது வெர்த்தா இல்லையா என்பதை நான் முடிவெடுக்கிறேன். இதை அறிவதால் உங்களுக்கு its just another case இல்லை இப்படியொன்று நடக்கவில்லை, புலிகள் தவறே செய்யாத உத்தமர்கள் என்று நிறுவ வேண்டிய கட்டாயம் மட்டுமே. ஆனால் அவரை அடையாளம் காட்டுவதால் வரக்கூடிய நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டியது நான் மட்டுமே.ஏற்கனவே ஒரு திரியில் குறிப்பிட்டிருந்தேன் என் நிலையறிந்து நான் எப்போதும் பயர் விட்டதே கிடையாது என்று. பயர் மட்டும் விடமாட்டேனே தவிர உண்மையை பேசாமல் இருக்கமாட்டேன்.  

 

1 hour ago, valavan said:

பந்தாவாக ஆரம்பித்தீர்கள், இப்போது பந்தை வேறு பக்கம் திருப்பிவிட முயற்சிக்கிறீர்கள்.

இல்லையே அதிகபட்ச பனிஷ்மென்ட் வரை கொண்டுபோவோம். முன்னெடுக்க நீங்கள்  தயாரா என்று தான்   கேட்டேன். எங்களுக்கு இந்த புலம்பெயர்சை பற்றி அக்கு வேறு ஆணி வேறாக தெரியும். பொருமிக்கொண்டு பொங்கியெழுப்பவர்கள் எல்லோரிடமும் பொறுப்பை கொடுத்து முன்னாள் விட்டால் எப்படி பம்மிக்கொண்டு படங்கினுள் பதுங்குவார்கள் என்று.

சாராம்சம்: புலிகள் உமது  பிராந்தியத்தில் மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்டார்களா....? 
                       ஆம் ஈடுபட்டார்கள் (கடத்தல் , போராட்டத்திற்கான பங்களிப்பென்ற  பெயரில் கப்பம்  பெற்றார்கள்)   

                      புலிகளினால் சேகரிக்கப்பட்ட பணம் தப்பாக உபயோகிக்கப்பட்டதா ...?
                       ஆம் தப்பாக உபயோகிப்பட்டது , கண்முன்னே சாட்சியம் உண்டு

                      அப்படியெனில் ஏன் நீங்கள் கையாடல் செய்த  நபருக்கு தண்டனை வாங்கிக்கொடுக்கவில்லை ...?
                      மன்னிக்கவும் அது என்னுடைய வேலை இல்லை.  

                       அது உங்கள் வேலை இல்லை எனும்போது ஏன் புலிகளை பற்றி தவறாக பேசுகிறீர்கள் ..?
                       தண்டனை வாங்கிக்கொடுக்கும் ஒருவர் தான் தனது அனுபவத்தை வெளியே  பேசவேண்டும் என்ற அவசியம் உள்ளதா...?

                      இவர் தண்டிக்கப்படவேண்டும் என்று கருதும் ஒருவருடன் நீங்கள் ஒத்துழைப்பீர்களா...?
                       நிச்சயமாக , ஆனால் அது தண்டனையின் கடுமையை பொறுத்தது யாழ் இணையத்தளத்தில் அவரது தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து வழங்கும் அதியுச்ச கொடுந்தண்டனையை அவருக்கு வழங்கவேண்டாமே என்று யோசிக்கிறேன். அதைவிடுத்து இலங்கை அரசு மூலம் அவருடைய வியாபார முதலீட்டிற்கான Source of income தொடர்பான புலனாய்வு முதல் புலிகளின் ஸ்டைலில் சாம தான பேத தண்ட 
முறையில் பணிய வைப்பதென்றாலும் சரி, இல்லை ஒரு படி மேல் போய் பொட்டு வைப்பதென்றாலும் சரி 

டிஸ்கி3: நம்ம எமகாதகன் தான் மூன்று பேரோட இறப்புக்கும் காரணம் என்றும் ஒரு உத்தியோகபூர்வமற்ற தகவல் அந்த நாட்களில் பரவியது. ஆதாவது சொல்லிவைத்தாற்போல் ஒன்றுசேர்க்கப்பட்ட மூட்டைகளை கைமாற்றும் நாளுக்கு முந்தைய நாள் இரவு மூவரையும் கொத்தாக ஒரே இடத்தில் அள்ள வைத்த அம்புஷ்
தற்ச்செயலாக இருக்கும் என்று ஒருவரும் நம்பவில்லை 

 

Edited by அக்னியஷ்த்ரா
diski added
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, அக்னியஷ்த்ரா said:

சொல்வதை அறிந்து  உங்களால் என்ன புடுங்கமுடியும் என்பதை முதலில் சொல்லுங்கள்

என்ன புடுங்கி என்று போகிறீர்கள் ரொம்ப பதட்டமாயிருக்கிறீர்களா?

சரி உங்கள் பாஷையில் பதிவிடுவதே பொருத்தமானதாயிருக்கும்.

இப்படி ஒருத்தர் இருக்கிறார் என்று நீங்களாவே வாயை கொடுத்து அவர் யாரென்று கேட்டால் அது சொல்லமுடியாதென்று நீங்களே உருட்டி என்ன புடுங்க முனைந்தீர்களோ அதேபோல மற்றவர்களும் ஏதும் புடுங்க முடியும் என்று எடுத்துக்கொள்ளுங்களேன்.

அவர்பற்றி சொன்னால் பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டியது நீங்கள் மட்டுமே என்று  தெரிந்தும் எதுக்கு அவர்பற்றி ஆரம்பித்தீர்கள்? 

அவர்பற்றி நீங்கள் எதுவும் எழுதாதுவிட்டால் எவருக்காவது இங்கு அதுபற்றி தெரிந்திருக்குமா? அப்போ மக்களுக்கு அவர்பற்றி தெரிவித்தது யார்? 

சரி அதெல்லாம் ஒரு ஓரமாய் வைப்போம்,

அப்புறம் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் திசைமாற்றி பந்தி பந்தியாக எழுதுகிறீர்களே 

இப்போவாவது அந்த நபர் யாரென்று சொல்லிவிடுவீர்களா?

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, valavan said:

இப்படி ஒருத்தர் இருக்கிறார் என்று நீங்களாவே வாயை கொடுத்து அவர் யாரென்று கேட்டால் அது சொல்லமுடியாதென்று நீங்களே உருட்டி என்ன புடுங்க முனைந்தீர்களோ அதேபோல மற்றவர்களும் ஏதும் புடுங்க முடியும் என்று எடுத்துக்கொள்ளுங்களேன்.

அவர்பற்றி சொன்னால் பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டியது நீங்கள் மட்டுமே என்று  தெரிந்தும் எதுக்கு அவர்பற்றி ஆரம்பித்தீர்கள்

இல்லையே அவரை கப்பென்று தூக்கும் அளவுக்கு துப்பு கொடுத்திருக்கிறேனே. ஐஸ்டின் அண்ணை கற்பூரம் மாதிரி கப்பென்று பிடித்துவிட்டார்.

உங்கள் புலநாய்வு அமைப்பு வீக்காக இருப்பதற்கு நான் என்ன செய்வது. உங்கள் புலநாய்வு அமைப்பால் ஆளை கொண்டு வந்து நான் முன்னே நிறுத்தினாலும் எதுவும் புடுங்க முடியாது என்பது தான் உண்மை.

எமது போராட்டத்தின் தவறுகளை sweeping under the rug  செய்வதாலும் எதுவும் புடுங்க முடியாது

சிம்பிள் Output எப்படியிருக்கும் என்று சொல்லுங்கள் Input சிந்தாமல் சிதறாமல் வரும். 

இன்னும் ஒரு படிமேல் போய் நீங்கள் ஒருவர் மட்டும் புலிகளுக்காக குய்யோ முறையோ என்று இங்கே ஒப்பாரி வைப்பதால் நான் மசியவேண்டியதில்லை என்றும் எடுத்துக்கொள்ளுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
49 minutes ago, valavan said:

சரி அதெல்லாம் ஒரு ஓரமாய் வைப்போம்,

இனி எல்லாவற்றையும் ஓரமாய் வைப்பது உங்களுக்கும் எனக்கும் விடுதலைப்புலிகளுக்கும் நல்லது

டிஸ்கி4: நானும் மாவீரர் குடும்பம் தான்

போனது ஹைகோர்ட் என்று என்னிடம் உள்ள எல்லா ஆதாரங்களையும் என் அடையாளத்தையும் வெளிப்படுத்தி எழுத ஆரம்பித்தேன் என்றால் திரி திரியாக திறந்து நீங்கள் ஒப்பாரி வைக்கும் நிலை வரும். வேண்டாமே

  • கருத்துக்கள உறவுகள்
Posted

@அக்னியஷ்த்ரா @valavan

இதற்கு இவ்வளவு பெரிய விவாதம் எதற்கு?  புலம் பெயர் நாடுகளில் புலிகளின் நேரடி உறுப்பினர்களாக நீண்ட காலம் இருந்தவர்களே இப்படியான எமகாதகர்களாக இருந்திருக்கும் போது ஊரில் ஒரு உதவியாளர் அப்படி இருந்தது புரிந்து கொள்ளக்கூடிய விடயமே.  அதாவது யுத்த காலத்தில் ஊரில் குடும்ப உறுப்பினரை பிடித்தை வைத்து வெளி நாட்டில் காசு அறவிட்ட பின்னர் அந்த குடும்ப உறுப்பினர் விடுதலை செய்யப்பட்ட சம்பவங்களின் போது   அப்படி காசு அறவிட்டு அதை ஊருக்கு உறுதிப்படுத்திய நீண்ட கால உறுப்பினரே  எப்படிப்பட்ட எம காதகர்கள் என்பது யுத்த முடிவில் தெரியவந்தது.  அப்படியிருக்க அக்னியேஷரா  கூறிய இந்த தமிழர்கள் அனைவராலும் சுலபமாக புரிந்து கொள்ளக்கூடிய  சிம்பிள் மற்றர்.   

12 minutes ago, அக்னியஷ்த்ரா said:

இனி எல்லாவற்றையும் ஓரமாய் வைப்பது உங்களுக்கும் எனக்கும் விடுதலைப்புலிகளுக்கும் நல்லது

டிஸ்கி4: நானும் மாவீரர் குடும்பம் தான்

போனது ஹைகோர்ட் என்று என்னிடம் உள்ள எல்லா ஆதாரங்களையும் என் அடையாளத்தையும் வெளிப்படுத்தி எழுத ஆரம்பித்தேன் என்றால் திரி திரியாக திறந்து நீங்கள் ஒப்பாரி வைக்கும் நிலை வரும். வேண்டாமே

உண்மை, புலிகள் உட்பட அனைத்து ஆயுத இயக்கங்களும் போராட்டம், புனிதம் என்ற பெயரில் செய்த   இவ்வாறான வேலைகள் பல. இதை மறுக்க நாம் ஒன்றும் செவ்வாய் கிரகத்தில் இருந்து நேற்று தான் வந்து பூமியில் குதித்தவர்கள் அல்ல.  

  • Downvote 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
8 hours ago, valavan said:

முடிவாக, முன்னாள் போராளிகளின் குடும்பத்தை புலிகள் கடத்தி சென்றார்கள் என்று கருத்து பகிர்ந்தார்கள், பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் பெயரைவாது பகிருங்கள் என்று கேட்டால் அதை தவிர்த்து வேறு எது எல்லாமோ பேசிக்கொண்டு போகிறார்கள்,

நான் சொன்ன குடும்பங்கள்  இதை மூடி, கடந்து விட்டன.

பெயர் சொல்லலாம் என்றாலும், எழுத்தில் பதிவதை தவிர்க்கிறேன்.

ஏனெனில், என்ன விளைவுகள் ஏற்படலாம் அல்லது பிரச்சனைக்குள் சிக்கலாம் என்பதை எதிர் கூற முடியாது   


குறிப்பிட்ட நபர்களை தவிர, வேறு எவருக்கும் நான் சொன்னது தெரியாது.

இப்போது, அவர்களை பொறுத்தவரையில், இயக்க பின்னணி அவர்களுக்கு கிட்டத்தட்ட இல்லை.

இங்கே பதியப்போனால், இயக்க பின்னணியை உருவாக்குவதாக  முடியும்.


ஒருமுறை சிந்திக்கவும், அந்த பிள்ளைகளில் (அல்லது மூத்த 1-2 பிள்ளைகளின் பிள்ளைகள்) ஒருவர் அரச வேலைக்கு விண்ணப்பித்து, பின்னணியை தேடும் போது இங்கே பதியப்பட்டதை பின்ணணி தேடும் மென்பொருள் பிடிக்கும் என்றால் (அனால் நிச்சயம் பிடிக்கும்), அவரின் விண்ணப்பம் அதோடு சரி.  

அப்படியே, வெளிநாட்டு விசா, புலமைப்பரிசில் போன்றவையும். 

சிலவேளை பயங்கராயத்தை பிரிவு வந்தாலும் ஒரு புதினமும் இல்லை. 


அதனால் எவர் என்றாலும், கடந்த காலா வரலாற்றில் நடந்ததை இங்கு பதியும் போது மிக ஆழமாக சிந்தித்து பெயர்கள், இடம் போன்றவற்றை  பதிவதை தவிர்க்கவும்..

 

(

ஏனெனில், முன்பு பதிவு (record) என்பது, சிங்கள படைகளுக்கு தெரிய வந்தாலே.

இப்பொது பதிவு (record) என்பது ... 

அதுகுதானே ibm மென்பொருள் செய்கிறது  (i2 என்ற மென்பொருளின் விபரத்தை தேடி பார்க்கவும்.)

வேறு மென்பொருளும்  இருக்கிறது.

)

Edited by Kadancha
add info.
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, அக்னியஷ்த்ரா said:

இனி எல்லாவற்றையும் ஓரமாய் வைப்பது உங்களுக்கும் எனக்கும் விடுதலைப்புலிகளுக்கும் நல்லது

டிஸ்கி4: நானும் மாவீரர் குடும்பம் தான்

இதை முதலிலேயே சொல்லி இருந்தால் இத்தனை பக்கம் மற்றும் இத்தனை வதை இல்லாமல் இருந்திருக்கும். இதை வைத்தே குளிர்காயும் கூட்டத்திற்கு இனி இங்கே வாந்தி எடுக்க வயிறு நிரம்பாதிருந்திருக்கும் 😭

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, விசுகு said:

இதை முதலிலேயே சொல்லி இருந்தால் இத்தனை பக்கம் மற்றும் இத்தனை வதை இல்லாமல் இருந்திருக்கும். இதை வைத்தே குளிர்காயும் கூட்டத்திற்கு இனி இங்கே வாந்தி எடுக்க வயிறு நிரம்பாதிருந்திருக்கும் 😭

யாரும் வாந்தி எடுக்கவில்லை என்றால் - அந்த வாந்தியை induce பண்ணி வரவழைக்க மாத்திரைகள் இருக்கிறது.

இந்த திரியில் பாவிக்கப்பட்ட மாத்திரை…

விடுதலை புலிகள் - மாற்று இயக்க போராளிகளின் குடும்பங்களை கைது செய்தார்கள்….அவர்களது தலைவரின் இருப்பு பற்றிய paranoia வால் அவதிபட்டார்கள்….இவற்றால் அவர்களும் அசாத் போல நடந்து கொண்டார்கள்….

இது பொய் என எப்பவோ இந்த திரியில் நிறுவபட்டு விட்டது.

ஆனால் இந்த மாத்திரை தனது induce பண்ணும் வேலையை செவ்வனே செய்துள்ளது.

 

13 hours ago, Kadancha said:

அப்போது, எனது உறவின் அம்மாவும், மதிவதனின் தகப்பனும் (ஏரம்பு) கிட்டத்தட்ட ஒரேநேரத்தில்  ஒருவரை ஒருவர் குறுக்கிட்டு மதிவதனியை  சுட்டி சொல்கிறார்கள், இது உன் வீடு எப்போதும் வந்து போகலாம், ஏரம்பு சொல்கிறார் நீ  (மவதனியை  சுட்டி) என்னிடம் எதுவும் சொல்லவேண்டியதில்லை இங்கு வரும் போது என்று .

படம் அல்லவா?  

நீங்கள் காட்டிய படம் பிளாக்பாஸ்டர் ரேஞ்சில் இருந்தது.

மதிவதனி உங்கள் உறவின் சகோதரி என்றால்….

அருணா அன்ரியும் உங்கள் உறவின் சகோதரிதான்….சரிதானே?

ஒரு ஜெனரல் நாலேஜுக்காக கேட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, ரசோதரன் said:

ட்ரம்பும் சொந்தம் தான் என்ற விசயம் வெளியே தெரியக்கூடாது என்று நினைத்தேன்.......... இப்ப அதுவும் தெரிந்துவிட்டது. அவரைச் சொந்தம் என்று சொல்ல கொஞ்சம் வெட்கமாக இருக்கின்றது...........😜.

பல தலைமுறைகளாக எங்கள் குடும்பத்திற்கும், அவரின் குடும்பத்திற்கும் பேச்சுவார்த்தை எதுவும் இல்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.........

🤣

 சிரித்து முடியவில்லை 👍

சொந்தம் கொண்டாடும் எமது நிலை 🙆‍♂️

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, goshan_che said:

இது பொய் என எப்பவோ இந்த திரியில் நிறுவபட்டு விட்டது.

 

பின்பு கதைக்கலாம்  என்று தான் இருந்தேன். சுருக்கமாக சொல்கிறேன் 

நான் பாவித்த வார்த்தைகள் நிலைமைக்கு வேண்டியதை விட கனதியாக இருக்கலாம், அனால் அது அடிப்படையை மாற்றாது. 

(அசாத்தை கொண்டுவர வேண்டாம். அதை பின்பு கதைப்போம்.)

1. அப்போது tna இல் எந்த அடிப்படையில் மற்ற இயக்கங்கள் சேர்த்து கொள்ளப்பட்டது?

மற்ற இயக்கங்கள் , சிங்களத்தின் யாப்பை ஏற்று, சிங்கள பாதுகாப்பில் அல்லவா?

அது போராட்டத்தை ...

அனால், அநாத நிலையில் அவர்கள் புலிகளுக்கு இராணுவ அச்சுறுத்தல் இல்லை (அல்லது மிக குறைவு).

ஆக குறைந்தது, புலிகள் சொன்னதுக்கு முரண் அல்லவா?

2. அனால், பாலசிங்கம் சொன்னதில் கூட effect ஐ  எடுத்து விட்டு, cause தவிர்த்து விட்டீர்கள். 

 ஏன் என்று சிந்தித்து பார்க்கவும்.

மற்ற போராட்டங்களிலும் இப்படி நடந்து இருக்கிறது (big fish .. small fish விழுங்கி இருக்கிறது) என்பதும் விளைவே தவிர ....

வேறு எவரும் big fish ... ஏன் முழுங்க எத்தனிக்கிறது என்பதை  அதில் பொதிந்து உள்ள அர்த்தத்தை விட மாட்டார்கள் (சுருக்கமாக 1. வெளிப்படையாக உணவு சங்கிலி 2. முன்பே சொன்னது, இரண்டுமே சுட்டுவது big fish இன் survival)  


3. எத்தனையோ அரசியல் மற்றும் தத்துவ அறிஞர்கள் theoretical, மற்றும் practical ஆக அவதானித்து, ஆய்வு செய்து அடைந்த முடிவை (அதாவது இருப்பே அடிப்படை காரணம்), புலிகள் முறித்து உள்ளார்கள் என்றால், புலிகள் மனித  வர்க்கத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்று வரும் (இது நான் சொல்வது)  

4. மாறாக, அப்படி புலிகள் செய்து இருந்தால், அது அது அரசு சாரா (ஆயுத மற்றும் ஆயுதம் அற்ற) ஒழுங்குபடுத்தப்ட்ட அமைப்பு அரசியலில் ஓர் paradigm shift. நிச்சயம்  பதிவு செய்யப்பட்டு இருக்கும்.


5. புலிகள் வெளியில் சொன்னது அவர்களுக்கு வசதி. (பொய்  என்ற வார்த்தையை பாவிக்கவில்லை). புலிகள் அதை நம்பியும் இருக்கலாம்.


6. புலிகள் இதை சுகந்திரமாக ஆய்ந்து பார்க்கவில்லை. 

 

7. புலிகள் செய்தது  - பாட்டும் நானே, பாவமும் நானே, பாடும் உனை நான் பாடவைத்தானே  ... நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே என்ற போக்கு.

 

8. இதனால் தான் ஆகக்குறைந்தது முரண்பாடு எழுகிறது.

   

உணர்ச்சிகளை தள்ளி வைத்து பார்க்கவும்.

 

இதனால் போராட்டம் மீது புலிகள் வைத்து இருந்த பற்றுறுதியை நான் மறுக்கவில்லை.

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

அருணா அன்ரியும் உங்கள் உறவின் சகோதரிதான்….சரிதானே?

 

நான் சொன்னேன் அல்லவா இரத்த அல்லது தூர  உறவு அக்கா - தம்பி அல்ல என்று.

2 உறவும்,  எரம்பு - எனது உறவின் அம்மா , மதிவதனி - எனது உறவு , அறிமுகமாகி, நட்பு வளர்ந்து, அக்கா - தம்பி என்ற நிலைக்கும், இணைபிரியா சகோதரிளுக்கு (உணர்திறன் மிக்க விடயங்களை சொல்லுவூ சரி அல்ல) இடையில் இருக்கும் நட்பான உறவாக  உருமாறியது என்று.

இதில் அறிமுகம் என்பது முக்கியம்.

இப்படியான  கருத்து வெளியில் வந்திருக்காவிட்டால் மன்னிக்கவும்.

அருணா மதிவதனியின் சகோதரியாக இருந்தால் - ஆம் அருணா மஹிவதானியின் சகோத்தாரி என்ற எல்லை வரைக்கும் . அதன் மேல் அன்னியோன்னியம் இல்லை. 




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "Historical truth of New Year / புத்தாண்டு வரலாற்று உண்மை" [ஆங்கிலத்திலும் தமிழிலும்]   One of the earliest recorded New Year celebrations dates back around 4,000 years ago in ancient Babylon, where the Babylonians celebrated the New Year during the spring equinox began with the new moon (mid-March). They held a festival called Akitu, which lasted 11 days and involved various religious rituals and ceremonies to ensure a prosperous new year and in Assyria with the new moon nearest the autumn equinox (mid-September). The practice of celebrating the New Year has evolved over time and varied among different cultures. The ancient Egyptians, for instance, celebrated the New Year in conjunction with the annual flooding of the Nile River, which marked the beginning of their agricultural season. The Romans celebrated the New Year in March, but in 46 B.C., Julius Caesar introduced the Julian calendar, which moved the beginning of the year to January 1st in honor of Janus, the Roman god of beginnings and transitions. This change marked the start of the year in alignment with the cycle of nature and the winter solstice. The Romans derived the name for the month of January from their god Janus, who had two faces, one looking backward and the other forward. The practice of making resolutions to rid oneself of bad habits and to adopt better ones also dates to ancient times. Throughout history, various societies have celebrated the New Year with feasts, religious observances, and customs specific to their cultures. Many traditions associated with New Year's celebrations, such as making resolutions, exchanging gifts, and holding festivities, have endured through time and have been adopted by different civilizations around the world. Today, the celebration of the New Year is a global event marked by diverse customs and traditions, reflecting a blend of ancient practices and modern influences. It symbolizes new beginnings, hope, and the opportunity for a fresh start as people welcome the coming year. மிகப் பழைய பதிவு செய்யப்பட்ட புத்தாண்டு கொண்டாட்டம் சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய பாபிலோனில் இருந்தது இன்று தெரிய வருகிறது, அங்கு பாபிலோனியர்கள் வசந்த உத்தராயணத்தின் போது புத்தாண்டைக் கொண்டாடினர். அவர்கள் அகிடு என்று அழைத்து இந்த திருவிழாவை நடத்தினர், இது 11 நாட்கள் நீடித்தது மற்றும் வளமான புத்தாண்டை உறுதி செய்வதற்காக பல்வேறு மத சடங்குகள் மற்றும் சடங்குகளை இது உள்ளடக்கியது. வசந்த உத்தராயணம் என்றால் என்ன?  இரவும் பகலும், சமமாக இருப்பதால், மார்ச் மாதம் வசந்த காலம் என்று கூறப்படுகிறது. இது வசந்த காலம் அல்லது வடக்கு நோக்கிய உத்தராயணம் என்று அழைக்கப்படுகிறது. சூரியன் பூமத்திய ரேகை முழுவதும் கடந்து, வடக்கு நோக்கி நகர்ந்து, வடக்கு அரைக்கோளத்தில் நீண்ட (அதனால் வெப்பமான) நாட்களையும், தெற்கு அரைக்கோளத்தில் குறுகிய (மற்றும் குளிரான) நாட்களையும் கொண்டு வரும் நிகழ்வைக் குறிக்கிறது. புத்தாண்டைக் கொண்டாடும் பழக்கம் காலப்போக்கில் பரிணாம வளர்ச்சியடைந்து பல்வேறு கலாச்சாரங்களிடையே வெவ்வேறாக மாறுபட்டது. உதாரணமாக, பண்டைய எகிப்தியர்கள், நைல் நதியின் வருடாந்த வெள்ளப் பெருக்குடன் இணைந்து புத்தாண்டைக் கொண்டாடினர், இது அவர்களின் விவசாய பருவத்தின் தொடக்கத்தைக் குறித்தது. ரோமானியர்களும் மார்ச் மாதத்தில் புத்தாண்டைக் கொண்டாடினர், ஆனால் கிமு 46 இல், ஜூலியஸ் சீசர் ஜூலியன் நாட்காட்டியை அறிமுகப்படுத்தினார், இது ஆரம்பம் மற்றும் மாற்றங்களின் ரோமானிய கடவுளான ஜானஸின் நினைவாக ஆண்டின் தொடக்கத்தை ஜனவரி 1 ஆம் தேதிக்கு மாற்றியது. இந்த மாற்றம் இயற்கையின் சுழற்சி மற்றும் குளிர்கால சங்கிராந்தியுடன் இணைந்து ஆண்டின் தொடக்கத்தைக் குறித்தது. ரோமானியர்கள் ஜனவரி மாதத்திற்கான பெயரை தங்கள் கடவுளான ஜானஸிலிருந்து பெற்றனர், அவர் இரண்டு முகங்களைக் கொண்டிருந்தார், ஒன்று பின்னோக்கி மற்றொன்று முன்னோக்கிப் பார்க்கிறார். தீய பழக்கங்களில் இருந்து விடுபடவும், சிறந்த பழக்கங்களை கடைப்பிடிக்கவும் தீர்மானங்களை எடுக்கும் பழக்கமும் பழங்காலத்திலிருந்தே இருந்து வருகிறது என்பது இதில் இருந்து புலப்படுகிறது குளிர்கால சங்கிராந்தி என்றால் என்ன? குளிர்கால சங்கிராந்தி என்பது பெரும்பாலும் "ஆண்டின் குறுகிய நாள்" என்று அழைக்கப்படுகிறது. இது வடக்கு அரைக்கோளத்தில் குளிர்காலத்தின் முதல் நாளைக் குறிக்கிறது. இந்த குளிர்கால சங்கிராந்தி பொதுவாக ஆண்டுதோறும் டிசம்பர் 20 அல்லது 21 ல் நடைபெறுகிறது. மிகவும் அரிதான காலங்களில் டிசம்பர் 23 ல் நடைபெறுகிறது. வரலாறு முழுவதும், பல்வேறு சமூகங்கள் புத்தாண்டை விருந்துகள், மத அனுசரிப்புகள் மற்றும் தங்கள் கலாச்சாரங்களுக்கே உரிய  குறிப்பிட்ட பழக்கவழக்கங்களுடன் கொண்டாடியுள்ளன. புத்தாண்டு கொண்டாட்டங்களுடன் தொடர்புடைய தீர்மானங்கள், பரிசுகளை பரிமாறிக் கொள்வது மற்றும் பண்டிகைகளை நடத்துவது போன்ற பல மரபுகள் காலப்போக்கில் நிலைத்தது மட்டும் அல்ல உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாகரிகங்களால் அது ஏற்றுக்கொள்ளப்பட்டும் உள்ளன. இன்று, புத்தாண்டு கொண்டாட்டம் என்பது பல்வேறு பழக்க வழக்கங்கள் மற்றும் மரபுகளால் குறிக்கப்பட்ட உலகளாவிய நிகழ்வாகும், இது பண்டைய நடைமுறைகள் மற்றும் நவீன தாக்கங்களின் கலவையாக இன்று பிரதிபலிக்கிறது. புதிய தொடக்கத்திற்கான வாய்ப்பாக வரவிருக்கும் ஆண்டு மனித வாழ்வின் புதிய தொடக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள் போன்றவற்றை ஏற்படுத்தும் என மகிழ்வாக அதை வரவேற்கின்றனர்.  (கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna)     
    • "பெண்ணே புயலாகு”    இலங்கைத் தீவானது, தொன்மை வாய்ந்த இரு நாகரீகங்களின் வரலாற்றுத் தாயகமாகும். வேறுபட்ட மொழிகள், பாரம்பரியங்கள், பண்பாடுகள், வேறுபட்ட நிலப்பரப்புகள், வெவ்வேறான வரலாறுகளைக் கொண்ட இரு தனித்துவமான தேசிய இனங்களாக அது விளங்கின என்பது வரலாற்று உண்மையாகும். என்றாலும் சிங்களப் பெரும்பான்மையினரிடம் அரசியல் அதிகாரம் கைமாறியதை அடுத்து, சிங்களப் புத்த பேரினவாதம் மேலாண்மை பெற்றது. இதனால் தமிழர்களுக்கு எதிரான அரச அடக்குமுறை குரூரமான வன்முறை வடிவமாக, கொஞ்சம் கொஞ்சமாக 1956, 1958, 1966, 1977, 1981, 1983, 1985, கலவரமாக மாறத் தொடங்கி, அது 2009 உச்சகட்டத்தை அடைந்தது வரலாறு ஆகும்.   வன்னி அடிப்படையில் நீர் மேலாண்மைக் குடியிருப்பு ஆகும். ஆறுகளும், கடல்களும், குளங்களும், நீரிணைகளும், வாய்க்கால்களும், ஓடைகளும், நீரேரிகளும் அதனை வடிவமைத்தன. நீராலேயே அதன் ஊர்கள் பலவும் பெயரிடப் பட்டன. அதைவிட அங்கு வயல்கள், தோட்டங்கள், சதுப்புக்கள், சிறுகுன்றுகள், பெருமரங்கள், காடுகள் என்பனவற்றுடன் பறவைகள், விலங்குகள் முதலான அப்பிராந்தியத்திற்கே சிறப்பாகவுள்ள மரபுரிமைச் சொத்துக்களைக் கொண்டுள்ளன.  ஆனால் 2008 / 2009 ஆண்டில் அங்கு ஏற்பட்ட  கொந்தளிப்பான சூழலில், போர் ஆழமான வடுக்களைச் செதுக்கி, அமைதி தொலைதூர கனவாக மாறிய அந்த தருணத்தில், 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி இலங்கையில் 30 வருடங்கள் தொடர்ந்த ஆயுதம் ஏந்திய விடுதலைப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட அந்த தருணத்தில், அன்னக்கொடி என்ற இளம் தாயும் அவளது மகள் மலர்மேனியும் முல்லைத்தீவில் வாழ்ந்து கொண்டு இருந்தனர்.  முல்லைத்தீவில் நடந்த மோதலில், இதயத்தை உலுக்கும் கடைசி நாட்களில், ஒவ்வொரு சாத்தியமான வழியிலும் தப்பிப் பிழைத்து உள்நாட்டு அகதிகளாக, தங்கள் வீட்டை மட்டும்மல்ல, தங்கள் குடும்பத்தின் தலைவன், அன்னக்கொடியின் கணவன் மற்றும் அவளது மகனையும் காணாமலாக்கப்பட்டதால், வன்முறை மற்றும் அவநம்பிக்கையின் எச்சங்கள் நிழல்கள் போல நீடித்திருக்கும் அந்த மண்ணில் இருந்து இருவரும், களப்பு வழியாக, சிறிய நீர்ப்பகுதி, சேற்றுப்பகுதி ஊருக்குள்ளாலும் காட்டு வழிகளினாலும் செத்தவர் போக மிஞ்சியவர்கள், காயப்பட்டவர்கள் என பல பேருடன் இடம் பெயர்ந்து தற்காலிக குடிகளில், வாழ அவர்களை விட்டுவிட்டது.    இடம் பெயர்ந்த மக்களாக, வன்னியில் அவர்களது வாழ்க்கை கடுமையானதாக, அவர்களுக்கு நிலையான தங்குமிடம் இல்லாமலும் எந்த நிரந்தர வருமானம் இல்லாமலும் இருந்தது. உணவைத் தேடுவதற்கும் பாதுகாப்பான சூழலில் வாழ்வதற்கும் அவர்களின் வாழ்க்கை முடிவில்லாத போராட்டங்களாக இருந்தன. அவர்களின் தற்காலிக குடியிருப்புக்கு அருகிலுள்ள இராணுவ முகாம் அவளுக்கு போரையும் அதன் பின்விளைவுகளையும் நினைவூட்டிக்கொண்டு இருந்தது. ஒவ்வொரு இரவும், அன்னக்கொடி ஒழுங்காக நித்திரை கொள்ளவில்லை. எந்த சத்தமும் அவளுக்கு ஒரு பயத்தைக் கொடுத்துக் கொண்டே இருந்தது. உடுத்த உடையைத் தவிர வேறு வேறெதுவும் எடுத்துச் செல்ல முடியாமல் வந்தவர்கள் இவர்கள். வெள்ளப் பாதிப்பினாலோ புயலின் தாக்கத்தினாலோ அகதியானவர்களல்ல. இரத்தம், தீ, காயம், வலி என்ற ஏராளமான வதைகளிலிருந்து, மரணப் பொறிகளிலிருந்து தப்பியவர்கள்; தப்ப முனைந்தவர்கள் தான் இவர்கள். யுத்தம் முடிந்து விட்டதாகச் சொல்லப்பட்டாலும் அவர்களைப் பொறுத்தவரை அது எதோ ஒரு வகையில் தொடர்வதாகவே இருந்தது. குண்டு வீச்சில்லை, துப்பாக்கி வேட்டுகள் இல்லை, மரணம் இல்லை, மற்றபடி அத்தனை துன்பங்களும் வலிகளும் துயரங்களும் அலைச்சல்களும் இன்னும் இருந்து கொண்டே அவர்களுக்கு இருந்தது. அதிலும், முல்லைத்தீவில் இத்தனை இடையூறுகளுக்கிடையிலும் அவர்கள் கண்டிராத கொடுமை இப்ப அவர்களுக்கு நேரும் அங்கொன்றும் இங்கொன்றுமாக மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ நேரிடும் பாலியல் வன்கொடுமை தான்!  அன்னக்கொடிக்கு ஒரு நாற்பது அகவை தான் இருக்கும். அவளின் கண்கொள்ளா அழகும் இனிமை நிறைந்த வார்த்தைகளும், அதற்கு ஈடான, ஆனால் இளம் பருவத்தின் பூரிப்பில் தவழும் வஞ்சிக்கொடி போன்று மெல்லிய இடையினையும் மலர் போன்ற மென்மையான வண்ண மேனியையும் கொண்ட பதினெட்டு அகவை மலர்மேனிக்கும், அவர்களின் நிறமும் தோற்றமும் தான் எதிரியாகியது அங்கே. அவர்கள் வறுமையிலும் துன்பத்திலும் படும் வேதனையை சாதகமாக்கி,  தங்கள் காம பசிக்கு அவர்களை இரையாக்குவதிலேயே சிலரின் கண்கள் மேய்ந்து கொண்டு இருப்பது அவர்களுக்குத் தெரியவில்லை. பாலியல் வன்முறைகள் என்பது வெறும் பாலியல் வன் புணர்வு அல்ல. அதற்கும் மேலாக, பாலியல் நோக்கத்துடன் கூடிய பேச்சுக்கள், சீண்டல்கள், பார்வைகள், அடக்குமுறைகள், மிரட்டல்கள் போன்ற எல்லாமே அடங்கும். எனவே எடுத்தவுடன் ஒருவனின் வெளிப்படையான நடவடிக்கைகளை வைத்து எடை போடுவது கடினம்.            அவளின் குடியிருப்புகளில் வாழும் பழக்கமான சில ஆண்கள், சில சமயங்களில், அவள் படும் கஷடங்களைப் பார்த்து கருணை என்ற போர்வையில் அவளை அணுகி உதவியும் செய்தார்கள். ஆனால், அதைச் சாட்டாக வைத்து நெருங்கிப் பழக முயன்றாலும், அன்னக்கொடி அதைச் சமாளித்து, தன்னைச் சுற்றியுள்ள கடுமையான யதார்த்தத்திலிருந்து பாதுகாக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வாழ்க்கையைச் நகர்த்தினாள்.  "பெண்கட்குக் கல்வி வேண்டும்      குடித்தனம் பேணுதற்கே! பெண்கட்குக் கல்வி வேண்டும்      மக்களைப் பேணுதற்கே! பெண்கட்குக் கல்வி வேண்டும்      உலகினைப் பேணுதற்கே! பெண்கட்குக் கல்வி வேண்டும்      கல்வியைப் பேணுதற்கே!" என்ற பாரதிதாசன் அடிகளை நன்கு உணர்ந்த மலர்மேனி, கற்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவளாக, தன் தாயின் கனவுகளையும் தன் கனவுகளையும் சுமந்து இடம்பெயர்ந்த குடியிருப்பின் வரம்புகளுக்கு அப்பால், ஒரு வாழ்க்கையை செதுக்க வேண்டும் என்ற நம்பிக்கையில், அறிவியல் பாடத்தில் உயர்தரப் பரீட்சைக்கு உட்கார வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள். ஆனால் அந்தக் குடியிருப்பில் தாயும் மகளுமாக இரு பெண்கள் தனிய வாழ்வது, இளம் பெண்ணான மலர்மேனிக்கு பெரும் சவாலாகவும் இருந்தது. "தீரத் தறைந்த தலையும், தன் கம்பலும், காரக் குறைந்து, கறைப்பட்டு வந்து, நம் சேரியின் போகா முட முதிர் பார்ப்பானை, தோழி! நீ போற்றுதி என்றி அவன் ஆங்கே,"  ஒரு நாள் மாலை, குடியிருப்பின் மீது சூரியன் நீண்ட நிழல்களைப் பரவிய போது, மலர்மேனி மாலை வகுப்புகளில் இருந்து வீடு திரும்பி வந்து கொண்டிருந்தாள். அந்த குடியிருப்பை சேர்ந்த, ஆண்டில் முதிர்ந்த ஒருவன், அவளை ஒரு மூலையில் வழி மறித்தான். உச்சிக் குடுமி வைத்து மொட்டையடித்த தலையை உடையவன் அவன். தன் காதில் கடுக்கன் அணிந்திருந்தான். கிழிந்த கறை பட்ட ஆடை அணிந்திருந்தான். அவன் நம் தெருவை விட்டு எங்கும் செல்லாதவன். அவன் என்ன செய்தான் தெரியுமா?  "பாரா, குறழா, பணியா, ‘பொழுது அன்றி,   யார், இவண் நின்றீர்?’ எனக் கூறி, பையென, வை காண் முது பகட்டின், பக்கத்தின் போகாது, ‘தையால்! தம்பலம் தின்றியோ?’ என்று, தன் பக்கு அழித்து, ‘கொண்டீ’ எனத் தரலும் யாது ஒன்றும்" அவன் அங்கே என்னைப் பார்த்தான். அவன் குள்ளன். பணிவில்லாமல் பேசினான். "பொழுதல்லாப் பொழுதில் இங்கே நிற்கிறாயே, நீ யார்" என்று கேட்டுக் கொண்டே மெதுவாக நெருங்கினான். வைக்கோலைக் கண்டு கிழட்டு எருது வருவது போல வந்தான். அங்குமிங்கும் ஒதுங்கவில்லை. "பெண்ணே! வெற்றிலைப் பாக்குப் போட்டுகொள்கிறாயா" என்று கேட்டான். (வெற்றிலைப் பாக்குப் போட்டுக் கொள்கிறாயா என்றால் என்னுடன் கூடியிருக்க ஒப்புகிறாயா என்பது காமுகர் பேசும் பேச்சு) இருவருக்கும் இடையே இருக்கும் இடை வெளியைக் குறைத்துக் கொண்டு என் பக்கம் வந்து "வாங்கிக்கொள்" என்று வெற்றிலைப் பாக்கைக் கொடுத்தான்.  "வாய்வாளேன் நிற்ப கடிது அகன்று கைமாறி,    ‘கைப்படுக்கப்பட்டாய், சிறுமி! நீ' ‘மற்று யான்" நான் வாய் திறந்து எதுவும் கூறவில்லை. சும்மா நின்று கொண்டிருந்தேன். சற்றே அகன்று நின்றான். "சிறுமியே, நீ என் கையில் அகப்பட்டுக் கொண்டாய்" என்றான். அவள் ஒருவாறு அங்கிருந்து தப்பி வீடு வந்தாள். அன்னக்கொடி தன் மகளின் கண்களில் இருந்த பயத்தைப் பார்த்தாள். அன்று இரவு, தாயும் மகளும் தங்கள் பயத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேசினர்.  “காதலுக்கு நான்கு கண்கள் கள்வனுக்கு இரண்டு கண்கள் காமுகனின் உருவத்தில் கண்ணுமில்லை காதுமில்லை” அன்னக்கொடி முணுமுணுத்தாள். அவர்கள் போரில் தப்பிப்பிழைத்தாலும் தொந்தரவுகள் மட்டும் நின்றபாடில்லை. அவர்கள் இடம்பெயர்ந்தனர், வீடு மற்றும் குடும்பத்தை இழந்தனர், இந்த பலவீனமான இருப்பில், அன்னக்கொடி தனது மகளை அவர்களைச் சுற்றியுள்ள கடுமையான உலகத்திலிருந்து பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்று கடுமையாக அன்று இரவு முழுவதும் சிந்தித்தாள்.  காம வெறியர்களுக்கு நீதி, நேர்மை, நியாயம், அறம், மனித நேயம், கண்ணியம், கட்டுப்பாடு, அன்பு, நல்லொழுக்கம் முதலிய மனிதப் பண்புகளில் நாட்ட மில்லை. இவர்களின் நோக்க மெல்லாம் உடல் மற்றும் உள்ள இச்சைகளைத் தணிப்பதேயாகும். இவர்களுக்கு அறம் பேசுவதால் ஒரு பயனும் இல்லை. அப்படி எனறால்,  "தீ என்னை வாட்டிடினும் கையைத் தொடாதேயடா - இந்த முத்தமிழ் நாட்டுக்கு மானம் பெரிதன்றி மூச்சுப் பெரிதில்லை காண்" என்று வலிமையை நெஞ்சில் ஏற்றி "நான் ஒரு துர்கா.” என்று எழவேண்டும் என்று முடிவெடுத்து, அதை மகளிடம் தக்க தருணத்தில் சொல்ல முடிவெடுத்தாள்.    ஒரு நாள் மாலை, அன்னக்கொடி எண்ணெய் விளக்கின் மங்கலான ஒளியில் அமர்ந்து, மலர்மேனியின் ஒரே பள்ளி உடையில் கிழிந்த ஒரு பகுதியை தைத்துக் கொண்டு இருந்தாள். அவள் விரல்கள் கவனமாக நகர்ந்தன, ஆனாலும் அவளது அசைவுகளில் உறுதியான வலிமை இருந்தது. அருகில் வீட்டுப் பாடங்களை முடித்துக் கொண்டிருந்த மலர்மேனி, அம்மாவின் முகபாவத்தைக் கவனித்து அமைதியாகப் பேசினாள். "அம்மா, சில சமயங்களில் விட்டுக்கொடுக்கணும்னு தோணுது, இளைஞர்கள், நடுத்தர ஆண்கள்  முறைத்துப் பார்க்கும் விதம் ... அவர்கள் சொல்லும் விடயங்கள் ... மற்றும் ராணுவ வீரர்கள்..." அவள் கொஞ்சம் நிறுத்தினாள், வலியால் அவள் கண்கள் இருண்டன. "நான் சிக்கிக் கொண்டது போல் உணர்கிறேன்." என்றாள்.  அன்னக்கொடி தைத்துக் கொண்டு இருந்த  ஆடையைக் கீழே போட்டு விட்டு மகளின் கண்களை ஆழமாகப் பார்த்தாள். அவள் மலர்மேனியின் கையை இறுக்கிப் பிடித்தாள். "மலர்மேனி," தாயின் குரல் மென்மையாக ஆனால் உறுதியாக இருந்தது  "புயல் என்றால் என்ன என்று உனக்குத் தெரியுமா?" என்று கேட்டாள். தாய் என்ன சொல்கிறாள் என்று புரியாமல் அவள் தலையை ஆட்டினாள். “என் மகளே, புயல் பயங்கரமானது, அது மலைகளை நகர்த்துகிறது, பூமியை அசைக்கிறது, அதன் பாதையில் உள்ள அனைத்தையும் மாற்றுகிறது. மக்கள் அதைக் கட்டுப்படுத்த அல்லது கட்டுப்படுத்த முயற்சி செய்யலாம், ஆனால் அவர்களால் முடியாது. நாமும் புயல்களாக இருக்க வேண்டும். நாம் அவர்களுக்குத் தீங்கு செய்ய முற்படுவதால் அல்ல, ஆனால் நம்மை அசைக்க முடியாது என்பதை உலகுக்கும் அவர்களுக்கும் காட்ட வேண்டும் என்பதற்காக." என்றாள்.   அவளின் கண்ணீரைத் தன் கையால் துடைத்துவிட்டு, "பெண்ணே புயலாகு” என்று மகளைக்  தட்டிக்கொடுத்தாள்.  "வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,      இன்னாது என்றலும் இலமே; 'மின்னொடு வானம் தண் துளி தலைஇ, ஆனாது கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று" போல்  “இதை நினைவில் கொள் மலர்மேனி. எமக்கு கிடைத்திருக்கும் வாழ்க்கையை இனிது என்று மகிழத் தேவையும் இல்லை அல்லது வெறுப்பில் ‘வாழ்க்கை துன்ப-மயம்’ என்றும் கூறத்தேவையும் இல்லை, நாங்கள் நதியைப் போன்றவர்களும் கூட , வானம் மின்னி மழை பொழிந்து கல்லை உருட்டிக்கொண்டு இரைச்சலுடன் பாயும் ஆறு போல், எந்தப் பாறையையும் அறுத்துச் செல்லும் சக்தி வாய்ந்தவர்கள்.  இந்த அவர்களின் அத்துமீறல்கள் ... நம்மைத் தடுக்க முயற்சி செய்யலாம், ஆனால் நாம் தொடர்ந்து பாய்ந்து கொண்டே இருப்போம். நாங்கள் பயப்படவோ அல்லது பதுங்கவோ இங்கு வரவில்லை. எங்கள் பாதையை செதுக்க நாங்கள் இங்கு வந்துள்ளோம். இதை உணர் மலர்மேனி, என் அன்பு மகளே !, 'பெண்ணே புயலாகு', நீ துர்காவாக எழுந்து நில்!!, ஆறாக பாய் !!!" என்றாள்.  மறுநாள் காலை, மலர்மேனி பள்ளிக்குச் செல்லும்போது, அம்மாவின் வார்த்தைகளை கவசம் போல சுமந்தாள். இளைஞர்கள் மற்றும்  நடுத்தர ஆண்கள் ஏளனம் செய்வார்கள், சிப்பாய்கள் ஏளனம் செய்வார்கள் என்று அவளுக்குத் தெரியும், ஆனால் அவள் இனி ஒரு புயல், அவள் ஒரு துர்கா!  அவள் எதிர்பார்த்தது போலவே, உள்ளூர் கூட்டம் சாலையோரம் நின்றும் மதகில் குந்தி இருந்தும், அவள் அவர்களை கடந்து செல்லும் பொழுது அவளுக்கு பாலியல் சார்ந்த கேலி மற்றும் மிரட்டல்கள் செய்தார்கள். ஆனால் இந்த முறை அவள் பயந்து விரைவாக நடக்கவில்லை, முகத்தை மறைக்கவில்லை, ஆனால்  "ஏன் என்னை முறைக்கிறாய்?" அவள் துணிந்து கேட்டாள், அவள் குரல் உறுதியாக, கடினமாக இருந்தது. அவளின் பார்வை, கண்ணகி போல,  அவர்களை எரித்துவிடும் போல இருந்தது.  அந்த ஆண் கூட்டம்  அதிர்ச்சியடைந்தனர். அவள் அவர்களைத் தவிர்ப்பாள், தங்கள் பார்வையில் குறுகிவிடுவாள் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். அவர்களில் ஒருவன், தங்கள் கட்டுப்பாட்டை மீட்டெடுக்க முயன்றான், மீண்டும் கேலி செய்தான். "எங்களிடம் அப்படிப் பேசும் நீங்கள், நாம் யார் என்று நினைக்கிறீர்கள்?" என்று மிரட்டலாக கேட்டான்.  மலர்மேனி தலை நிமிர்ந்து நின்றாள். “நான் அன்னக்கொடியின் மகள் மலர்மேனி. நான் இங்கு படிக்க வந்திருக்கிறேன், எதுக்கும் தகுதியற்ற, தெரு நாய்களிலும் கேவலமான உன்னுடைய பேச்சைக் கேட்க அல்ல." ஆணித்தரமாகச் சொன்னாள். “மலரினும் மெல்லிது காமம் சிலர் அதன் செவ்வி தலைப்படு வார்” "இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உனக்கு வள்ளுவர் சொல்லியது . இதெல்லாம் உனக்கு எங்கே விளங்கப்போகுது?" என்றாள்.    அவளுடைய எதிர்ப்பானது அந்த கூட்டத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.  "அஞ்சினன் ஆதல் அறிந்து, யான், எஞ்சாது,   ஒரு கை மணல் கொண்டு, மேல் தூவக் கண்டே, கடிது அரற்றிப் பூசல் தொடங்கினன், ஆங்கே," அவன் பயந்துவிட்டான். அதனை அறிந்து கொண்ட அவள், மேலும் ஒரு கை மண்ணை அள்ளி அவன் மேல் தூவினாள். அவன் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி வேகமாக கத்த ஆரம்பித்தான். அவள் புயலாக  நடந்து செல்லும் போது அவர்கள் தங்களுக்குள் முணுமுணுத்துக்கொண்டு அமைதியாகிவிட்டனர். மலர்மேனி தனக்குள் சிரித்துக் கொண்டாள். இது ஒரு சிறிய வெற்றிதான், ஆனால் அது அவளுடைய கண்ணியத்தை மீட்டெடுப்பதற்கான முதல் படியாகும். அன்று மாலை அன்னக்கொடி தங்களின் எளிய உணவை தயார் செய்த போது மலர்மேனி தன் தாயிடம் நடந்த சம்பவத்தை கூறினாள். அன்னக்கொடியின் கண்கள் பெருமிதத்தாலும் சோகத்தாலும் நிறைந்தன. மலர்மேனியின் பயணம் எளிதானது அல்ல என்பதை அவள் அறிந்திருந்தாள், ஆனால் அவள் மகளின் இந்த உள் வலிமையை ஒரு ஆரம்ப வெற்றியாகக் கண்டு மகிழ்ந்து, அவளை அணைத்து தட்டிக்கொடுத்தாள்.  "பெண்ணே புயலாகு” நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] "பெண்ணே புயலாகு” [சுருக்கம்] இலங்கையில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட தருணத்தில், அன்னக்கொடி என்ற இளம் தாய், தனது கணவன், மகன் இருவரும் முல்லைத்தீவில் காணாமலாக்கப்பட்டதால், மகள் மலர்மேனியுடன் தப்பிப் பிழைத்து உள்நாட்டு அகதிகளாக, அவர்களது வாழ்க்கை கடுமையானதாக, எந்த நிரந்தர வருமானம் இல்லாமலும் இருந்தது. யுத்தம் முடிந்து விட்டதாகச் சொல்லப்பட்டாலும் அவர்களைப் பொறுத்தவரை அது எதோ ஒரு வகையில் தொடர்வதாகவே இருந்தது. அதிலும், முல்லைத்தீவில் இத்தனை இடையூறுகளுக்கிடையிலும் அவர்கள் கண்டிராத கொடுமை இப்ப அவர்களுக்கு மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ நேரிடும் பாலியல் வன்கொடுமை தான்! அன்னக்கொடிக்கு ஒரு நாற்பது அகவை தான் இருக்கும். அவளின் கண்கொள்ளா அழகும் இனிமை நிறைந்த வார்த்தைகளும், அதற்கு ஈடான, ஆனால், இளம் பருவத்தின் பூரிப்பில் தவழும் வஞ்சிக்கொடி போன்று, மெல்லிய இடையினையும் மலர் போன்ற மென்மையான வண்ண மேனியையும் கொண்ட, பதினெட்டு அகவை மலர்மேனிக்கும், அவர்களின் நிறமும் தோற்றமும் தான் எதிரியாகியது அங்கே. அவளின் குடியிருப்புகளில் வாழும் பழக்கமான சில ஆண்கள், சில சமயங்களில், அவள் படும் துன்பங்களைப் பார்த்து, கருணை என்ற போர்வையில், அவளை அணுகி, உதவியும் செய்தார்கள். ஆனால், அதைச் சாட்டாக வைத்து நெருங்கிப் பழக முயன்றாலும், அன்னக்கொடி அதைச் சமாளித்து, வாழ்க்கையை நகர்த்தினாள். மலர்மேனி, கற்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவளாக, ஒரு வளமான வாழ்க்கையைச் செதுக்க வேண்டும் என்ற நம்பிக்கையில், உறுதியாக இருந்தாள். ஆனால் அந்தக் குடியிருப்பில் தாயும் மகளுமாக இரு பெண்கள் தனிய வாழ்வது, பெரும் சவாலாகவும் இருந்தது. ஒரு நாள் மலர்மேனி மாலை வகுப்புகளில் இருந்து வீடு திரும்பி வந்துகொண்டிருந்தாள். ஆண்டில் முதிர்ந்த ஒருவன், "இருட்டில் போகிறேயே, துணைக்கு வரவா?" என்று கேட்டுக் கொண்டே மெதுவாக நெருங்கினான். "களைத்திருப்பாய், இதை வாங்கிக்கொள்" என்று எதோ ஒன்றைக் கொடுத்தான். என்றாலும், அவள் ஒருவாறு அங்கிருந்து தப்பி வீடு வந்தாள். அன்னக்கொடி தன் மகளின் கண்களில் இருந்த பயத்தைப் பார்த்தாள். அன்று இரவு, தாயும் மகளும் தங்கள் பயத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேசினர். காம வெறியர்களுக்கு நீதி, நேர்மை, நியாயம், அறம், மனித நேயம், கண்ணியம், கட்டுப்பாடு, அன்பு, நல்லொழுக்கம் முதலிய மனிதப் பண்புகளில் நாட்ட மில்லை. இவர்களின் நோக்கமெல்லாம் உடல் மற்றும் இச்சைகளைத் தணிப்பதேயாகும். இவர்களுக்கு அறம் பேசுவதால் ஒரு பயனும் இல்லை. மகளே, வலிமையை நெஞ்சில் ஏற்றி "நான் துர்கா என எழுந்து, 'பெண்ணே புயலாகு' " என்றாள். "அம்மா, சில சமயங்களில் விட்டுக்கொடுக்கணும்னு தோணுது, இளைஞர்கள், நடுத்தர ஆண்கள் முறைத்துப் பார்க்கும் விதம் ... அவர்கள் சொல்லும் விடயங்கள் ... மற்றும் ராணுவ வீரர்கள்..." அவள் கொஞ்சம் நிறுத்தினாள், வலியால் அவள் கண்கள் இருண்டன. "நான் சிக்கிக்கொண்டது போல் உணர்கிறேன்." என்றாள். “என் மகளே, புயல் பயங்கரமானது, அது மலைகளை நகர்த்துகிறது, பூமியை அசைக்கிறது, அதன் பாதையில் உள்ள அனைத்தையும் மாற்றுகிறது. மக்கள் அதைக் கட்டுப்படுத்த அல்லது கட்டுப்படுத்த முயற்சி செய்யலாம், ஆனால் அவர்களால் முடியாது. நாமும் புயல்களாக இருக்க வேண்டும். நாம் அவர்களுக்குத் தீங்கு செய்ய முற்படுவதால் அல்ல, ஆனால் நம்மை அசைக்க முடியாது என்பதை உலகுக்கும் அவர்களுக்கும் காட்ட வேண்டும் என்பதற்காக." என்றாள். அவளின் கண்ணீரைத் தன் கையால் துடைத்துவிட்டு, "பெண்ணே புயலாகு” என்று மீண்டும் மகளைக் தட்டிக்கொடுத்தாள். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • How you can help   Donate AU$ 50 per month to Mahalirillam to support a life change by empowering a female child with the gift of education.     TO DONATE PLEASE CLICK HERE ->  Donation Via Bank Direct Debit      "Fund for Mahalirillam” (ABN 47 467 887 194)       Commonwealth Bank of Australia, Hay Market Branch, Sydney, NSW 2000.       Account No: 06 2006 1103 3596 Via PayPal, using either a debit or credit card         Support Mahalirillam by visiting and engaging with us on following social media  https://www.facebook.com/pages/Mahalirillam/143589209051620 https://www.youtube.com/user/Mahalirillam/videos   Please circulate our newsletter with your family & friends while engaging with them in spreading our vision, inspiring them to join our Mahalirillam family.    If you have an enquiry or wish to provide you feedback  Please click here ->  https://mahalirillam.org/au/ contact-us/
    • ஐக்கியத்துள் இனங்களின் தனித்துவத்தை அழித்துவரும் உலகினது வாய்ப்பாட்டைக் கையிலெடுத்து குர்துகளின் அரசியல் விடுதலையை மறுதலிக்கும் நிலைப்பாடாகவே தோன்றுகிறது. ஆனால், சிரியா கடந்து செல்லவேண்டியவை கடினமான திசைநோக்கியாதாகவே இருக்கும்.  
    • பெரும்பாலும் மகனுக்காக மகிந்த தலையைக்குடுப்பார் என்று தான்நினைக்கிறன் அல்லது தலையைக்குடுக்க வைப்பினம்
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.