Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, குமாரசாமி said:

காவோலையை நிமிர்த்துவதற்கும் படிமனவாக்குவதற்கும் வேறு வழிகள் உள்ளது.:cool:

குழைக்காட்டார் இல்லையென்றால் நகரத்தாரின் வண்டியும் குண்டியும் வற்றிப்போகும்😎

குழைக்காட்டார் என்பதன் உண்மையான அர்த்தம் என்ன? அது ஒரு வசைச் சொல்/குறைத்து மதிப்பிடும் சொல்லாக எப்படி அர்த்தப்படுத்தப்படுகிறது? 

(காவோலையை நிமிர்த்துவதற்கு உழக்குதல்/மிதித்தல் என்றும் கூறுவர். 1995 இடம்பெயர்வு நேரம்  வன்னியில் தென்னோலை  அல்லது கிடுகு மிகவும் தட்டுப்பாடான நேரம், பூநகரி ஜெயபுரம்  முழங்காவில்  பகுதியில் ஒரு  இளைஞனூடாக காட்டின் நடுவேயிருந்த பனைகளில் ஓலைகளை வெட்டி அந்த இளைஞரே அவற்றினை மிதித்தும் தந்தார். அதனைக் கொண்டே கொட்டில் களை வேய்ந்தோம். வேதனையான ஆனால் மகிழ்வாக வாழ்ந்த நாட்கள் அவை.

ஊரோடு உறவு போம். உறவோடு சொந்தம் போம்,.......... .😭)

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

2-5-1170x878.jpg

 

2-1-1-800x600.jpg

 

2-2-1-800x450.jpg

 

2-3-1-800x600.jpg

யாழ்ப்பாணத்தில்... குடிசை கைத்தொழில் மாதிரி, You Tube நடாத்தும் அன்பர்களே....
இந்த...
"காவோலைகளுக்கு மேல் காப்பற்   வீதியை" போட்ட... 
எஞ்சினியரையும், ஓவசியரையும்  ஒருக்கால் பேட்டி எடுத்து போடுங்கோப்பா... 😀
உங்களுக்கு புண்ணியமாக போகும். 
அவர்கள் என்ன சொல்ல வருகின்றார்கள் என்று எங்களுக்கும் கேட்க ஆசையாக உள்ளது. 😂

நீங்கள் அந்த "யூ ரியூப்" காணொளியை போட்டால்...   
நான்  உங்களுக்கு...
பெல் பட்டனை அமத்தி, சப்ஸ்கிரைப் பண்ணி, "லைக்".. பண்ணி விடுவன்.  🤣



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்ப்பாணத்தில்... குடிசை கைத்தொழில் மாதிரி, You Tube நடாத்தும் அன்பர்களே.... இந்த... "காவோலைகளுக்கு மேல் காப்பற்   வீதியை" போட்ட...  எஞ்சினியரையும், ஓவசியரையும்  ஒருக்கால் பேட்டி எடுத்து போடுங்கோப்பா... 😀 உங்களுக்கு புண்ணியமாக போகும்.  அவர்கள் என்ன சொல்ல வருகின்றார்கள் என்று எங்களுக்கும் கேட்க ஆசையாக உள்ளது. 😂 நீங்கள் அந்த "யூ ரியூப்" காணொளியை போட்டால்...    நான்  உங்களுக்கு... பெல் பட்டனை அமத்தி, சப்ஸ்கிரைப் பண்ணி, "லைக்".. பண்ணி விடுவன்.  🤣
    • சுட்டிக்காட்டியதற்கு நன்றி!  ஒருதலைக்காதலென்றால் கடத்தல், கொலையில் முடியும். இருதலைக்காதல் என்றால் இருவரும் சேர்ந்து  தப்பியோடிவிடுவார்கள் சமூகத்திலிருந்து.
    • (இது எல்லோருக்கும் தான்.) புலிகளையும், அசாத்தையும் அல்ல. அவர்களின் பார்வையில், அவர்களுக்குத் தெரிந்த அச்சுறுத்தல்களும், அவற்றை எதிர்  கொண்ட (அழித்த) விதமும்  (வன்முறை பிரயோகம்). எவ்வாறாயினும், அது நான் சொல்லியதை மாற்றவில்லை. அதாவது,  அவர்களின் (அசாத், புடினும் நீங்கள் விரும்பினால் சேர்த்து கொள்ளுங்கள்) பார்வையில் இருப்புக்கான அச்சுறுத்தல்,  இருப்புக்கான அச்சுறுத்தலை அகற்றுவது. நீங்கள் உட்பட, எல்லோரும் அவர்களை அறியாமலே நான் சொல்லும் நிலைக்கு வந்துள்ளனர். அதை தவிர்ப்பதற்கு, அவர்கள் கின்டியா, மேற்கு, மூளைச்சலவை, டெல்லி அழைப்பு என்று மதி, மனம் போன போக்கில் சுற்றிவளைத்தும், நியாயப்படுத்தியும் அவர்களால் அவர்களை அறியாமல் நான்  சொல்லும் நிலைக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.  அதன் சுருக்கமான காரணம், விளக்கம் - பாலசிங்கம் சொல்லியத்தில்  தான். அனால், அதற்கு வசதிக்கு ஏற்ற விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பாலசிங்கம் துறைசார் அரசியல் புலமை உள்ளவர் - அந்த புலமையின் அடிப்படையில் அவர் சொன்னதின்  (big fish ... ) என்பதன் கருத்து அரசியலுக்கும், அரசுக்கும்  பொருந்தி வருவது. அரசியலில், big fish .. என்பது ஓர் குறிப்பிட்ட உட்கருத்து வலியது இருப்புக்கு வாய்ப்பு கூடிய (ஆயுத) அரசியல் எனும் விதியில்லா காட்டில் அல்லது ஆட்டத்தில்,  (big fish ... என்பது) எவ்வாறு அச்சுறுத்தல்களை  விதியில்லாது (அழித்து) நீக்குவது, ஏனெனில் விதியில்லா காட்டில் ஒவ்வொன்றும் மற்றதுக்கு அச்சுறுத்தல், அவை ஒவ்வொன்றின் பார்வையிலும், இது பின் (பலம் ஓங்கியவுடன்) அமைக்கப்படும் அரசு என்பதோடு ஒத்துப்போவது.  state (அரசு) என்பதன் பொருள் என்ன - state of mind. பலவேறு அச்சுறுத்தல் மத்தியில் மதி தடுமாறாமல், ஒருமுகப்படுத்தி,  இருப்பை எந்தவழியேனும் (வேண்டுமாயின் அதன் விதிகளை கூடி புறந்தள்ளி)  தக்கவைப்பது. இதுவே தமிழ் அரசு, ஆங்கிலத்தில் state என்பதன் கருத்து.     (பாலசிங்கம் சொன்னதுக்கு அவரவர் தமக்கு விரும்பிய தொப்பியை போடலாம்.) ஆனால், ஒரு தொப்பி தான் அரசோடு, அதன் தன்மையோடு  ஒத்து வரும். புலிகள் செய்த அழிப்பை, பாலசிங்கத்துக்கு நியாயப்படுவதில் வேறு பல சொல்லாடல்கள் இருந்தும், குறிப்பிட்ட big fish ... என்பதையே பாவித்து உள்ளார் என்பதும்.   அரசியல் துறை சார் புலமை உள்ள பாலசிங்கம் சரியாகவே பாவித்து உள்ளார் (அனால் இங்கே பாலசிங்கதுக்கு இங்கே பாடம்  எடுக்கப்படுகிறது என்பது வேறு விடயம்). பாலசிங்கம் எதை  சொல்லி இருப்பார் என்பதை  வாசகர்கள் கணித்து பார்க்கலாம். தவிர, எமது இடத்தில், புலிகளும் அதையே செய்தனர், பிரயோக தன்மையே வேறுபாடு.   அதே  போல , மற்ற இயக்கங்கள் ஆயுத எதிர்ப்பு தொடர்ந்து இருந்தால், புலிகளின் வன்முறை  பிரோயோகம் பரவி இருக்கும்.  மாறாக, பகுதி மக்கள் (மற்ற இயக்கங்கள்) மீது குழுமமாக  வன்முறை பிரோயோகித்த பின், தொடருமாயின், எல்லை எது? இருப்பை தக்கவைத்தல்.  வேடிக்கை, அரசியல் துறை சார் புலமை பெற்ற பாலசிங்கம் சொல்லுவதை, வளைக்க முயற்சித்தும்  சூழ்நிலை என்பதை தவிர்க்க முடியவில்லை. பாலசிங்கத்துக்கு பாடம் எடுக்கப்படுகிறது. இங்கே தார்மீகம், நீதி ... போன்றவை பொருட்டு அல்ல இருப்புக்கு அதிகாரத்தை பிரயோகிக்கும் போது. (இது அரசியலிலிருந்து வர்த்தக உலகத்துக்கும் தொத்தி கொண்டுள்ளது என்பதும், குறிப்பாக swot இல், வர்த்தக உலகின் அரசியல் என்று அழைக்கலாம்). ஆனால், இதை முதலில்  எழுதும் போது பாலசிங்கம் சொன்னது எனது நினைவில் வரவில்லை, ஆனால் வசித்து இருக்கிறேன்  நான் சொன்னது. ... சைரஸ்  ... அலெக்சாண்டர் ... ... சோழர் ... (சோழர் கடைசியில்  இதில் பிழை விட்டு விட்டனர் அரசின் தந்தையான ஒட்டக்கூத்தர் சொல்லைத் தட்டி. விக்கிரம சோழனின் தகப்பன் இழவு படுக்கையில் இருக்கும் போது அரசின் தந்தையான  ஒட்டக்கூத்தரின் கையை பிடித்து, பாண்டியருக்கு சுயாட்சி கொடுத்து, பாண்டிய இளவரசியை விக்கிரம சோழன் மணம் முடிக்க அனுமதிக்கும் படி, அதுவே சோழ இராச்சியத்தின் முடிவின் தொடக்கம்) ஆங்கிலேயர்... ... என்று எல்லோரும் அவரவர்  சூழ்நிலை அடிப்படையில் வன்முறையை உள்ளுக்குள் இருப்புக்கு பிரயோகித்தனர். அதெ போன்று, உள்ளுக்குள் இருப்புக்கு வன்முறையையை பிரயோகித்த பின், எல்லை  எது புலிகளுக்கு சூழ்நிலையே தீர்மானிக்கும். இருப்பே அடிப்படை காரணமும் உந்துதலும். இங்கே புலிகள் விதிவிலக்கு என்பதே  மற்றவர்கள் சொல்லுதுவது. அப்படி இல்லை என்று, பாலசிங்கம் முற்றுப்புள்ளி வைத்தார், அதாவது  புலிகளே முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். (பாலசிங்கம் சொல்லுவதை  வளைப்பது அவர்களின் பிரச்சனை).  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.